விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா நோக்கிய விமர்சனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கிப்பீடியா திட்டம் நோக்கியும் தமிழ் விக்கிப்பீடியா நோக்கியும் பலதரப்பட்ட விமர்சனங்கள் உண்டு. அவற்றை அடையாளம் கண்டு, தகுந்தவற்றை ஏற்று, திருந்தி முன்னேற்ற பாதையில் செல்லவே விக்கிப்பீடியா விரும்புக்கின்றது. அதற்கு இப்பக்கம் உதவும்.


விக்கிப்பீடியாவும் தமிழ்ச்சொற்களும்[தொகு]

தற்போது இனையத்தில்கூட கிரந்த எழுத்துக்களின் பாவனையை அடியோடு நீக்கவேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு ஒரு குழு செயல்படுகிறது. அவர்களின் கூற்றுப்படி இந்த அரை டஜன் கிரந்த எழுத்துக்கள் தமிழை அறவே அழித்துவிடுமாம்! இவர்கள் தமிழுக்குத் தெவையான பிராணவாயுவை அளிக்கிறார்களாம். அதற்காக Tam-99 விசைப் பலகையிலுள்ள “ஜ,ஸ,ஷ” போன்ற எழுத்துக்களை மிகப்பாடுபட்டு நீக்கிவிட்டு, ஒரு சோப்புப் போட்டுத் துவைத்த “தூயதமிழ்” விசைப்பலகையை உருவாக்கி, தமிழுக்கு ஒரு மாபெரும் சேவை புரிந்துவிட்டதாக மார்தட்டிக் கொள்கின்றனர்!

தமிழ் விக்கிபீடியாவில் கணித மேதை இராமானுஜன் பெயரை “இராமானுசன்” என்றுதான் எழுதவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் இந்த நபர்கள், ஜோசப் ஸ்டாலினை “சோசப் சுடாலின்” என்றோ, எம்.ஜி.ஆரை “எம்.சி.ஆர்” என்றோ, ஜெயலலிதாவை “செயலலிதா” என்றோ மாற்றத் துணிவில்லாதவர்கள்.

இன்னும் இந்த கோஷ்டியினர் இணையத்தில் உலவ விட்டுள்ள சில சொற்களைப் பாருங்கள்:- —————————

ஆதாரக்கிடப்புகளை முகாமைப்படுத்து

மீயுரை சீர்திருத்து

எடுநிலை அடைப்பலகையை விரி

புகுபதிகை

விடுபதிகை —————–

ஏதாவது புரிகிறதா?

தமிழுக்கு எதிரிகள் வெளியிலிருந்து வரவேண்டியதில்லை!

எஸ்.கே


தமிழ் படும் பாடு!

--Natkeeran 17:07, 24 செப்டெம்பர் 2008 (UTC)

தமிழுக்கு எதிரிகள் வெளியிலிருந்து வரவேண்டியதில்லை! உண்மை தான், எஸ்.கே போன்றோரே போதும் :-) ஒரு கூட்டம் தேவையில்லாமல் கிரந்த எழுத்துக்களை தமிழில் திணிக்கப்பார்க்கிறது. சிலர் தேவையில்லாமல் கிரந்த எழுத்துக்களை திணிக்காதே என்கின்றனர். அவ்வளவு தான் வேறுபாடு --குறும்பன் 20:31, 24 செப்டெம்பர் 2008 (UTC)

நடுநிலைமையாளராக கருதப்படக் கூடிய ஜெயமோகனின் கருத்து இந்த விமர்சனத்துக்கு நன்கு பொருந்தும். முழுக் கட்டுரை: தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா?


--Natkeeran 18:20, 27 செப்டெம்பர் 2008 (UTC)

இது போன்ற களங்களில் வாதிடத் துவங்கினால் ஒரு முடிவே இராது. அதனால் மறுமொழி இட வேண்டாமென்று நினைத்திருந்தேன். இருந்தும் இருப்புக்கொள்ளாமல் சில இடுகைகளை அந்த வலைப்பதிவில் மறுமொழிகளாகப் பதிந்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 18:09, 6 அக்டோபர் 2008 (UTC)

குறிப்பில்வழிப்பக்கங்களூடாக நகர்கையில் ஒவ்வொரு ஐந்து பக்கங்களில் ஒன்று ஆங்கிலச் சொற்களை ஆங்கில எழுத்துக்களில் கட்டுரைப் பகுதியில் கொண்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மொழிபெயர்க்கப்படாத பக்கங்கள் பல. இவற்றை எந்த உறுத்தலுமின்றி இயல்பாக ஏற்றுக் கொள்கிறோம். இதுவே பல்லாண்டுகள் தொடருமானால்.... ஆங்கில எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்கள் தான், இல்லையா? கோபி 04:35, 7 அக்டோபர் 2008 (UTC)

கோபி, உங்கள் உணர்வு புரிகிறது. மொழிபெயர்க்காத பக்கங்களில் நான் அக்கறை செலுத்துவேன். புதிய கட்டுரைகளைத் துவக்குவதை அதுவரை குறைத்துக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:32, 7 அக்டோபர் 2008 (UTC)
சுந்தர், அக்கருத்தை உங்களுக்கென நான் எழுதவில்லை. சுயவிமர்சனமாகவே எழுதினேன். மணிப்பிரவாள நடையையும் இன்றைய ஆங்கிலங் கலந்த நடையையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். நானுங் கூட மொழிபெயர்க்கையில் ஆங்காங்கே ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளேன். ஆங்கிலங் கலந்த நடையை இப்பொழுது இலங்கையிலுங் கூட சில இதழ்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. காலப்போக்கில் இதனைக்கூட மாற்ற முயல்வோர் தமிழுக்கு எதிரிகளாக" சித்திரிக்கப்படும் காலம் வரலாம். கோபி 08:44, 7 அக்டோபர் 2008 (UTC)
வானொலி என்பது தமிழ் சொல்லா, அல்லது ரோடியோ என்பது தமிழ் சொல்லா என்று அந்த அன்பர் குழம்பி போய் உள்ளார். வான்+ஒலி= வான் ஊடாக பயனிக்கு ஒலி அலைவரிசை..எனக்கு நல்ல சொல்லாகவே தெரிகிறது. அவர் அறியவில்லை, அவர் பயன்படுத்த மறுக்கிறார் என்பதற்காக பிறரைக் குறைசொல்வது அவ்வளவு சரியல்ல. இலங்கையில் வானொலி என்ற சொல் மிகப் பரவலனான பயன்பாட்டில் இருக்கிறது.
கார், பஸ் என்று பயன்படுத்தலாம் என்கிறார். ஆனால் அவர் automobile என்பதயைம் அப்படியே ஆட்டோமொபைல் என்று பயன்படுத்த விரும்புவாரா? அது நல்ல தமிழா. automobile என்பது தானுந்து என்று நன்றாக தமிழில் வருகிறது. தானுந்தில் இருந்து பேருந்து, தொடரூந்து, மகிழுந்து என்று சொற்கள் வருகின்றன.
கேள்விகுட்படுத்தப்படும் எல்லா சொற்களை ஒரு பட்டியலில் இட்டு (இது சாத்தியமே), அவற்றின் பொருத்தப்பாடு பற்றி சிறு குறிப்பு தயாரித்தால் நன்று. தயாரிப்பு துருக்கி சொல் என்று நினைக்கிறேன். அது தமிழுக்கு வழமே. எங்கே பிரச்சினை என்றால் திட்டமிட்டு சமஸ்கிருதத்தை திணிப்பது. ஆங்கில மேகத்தை முழுதாக ஏற்றுக் கொள்வது.

--Natkeeran 13:05, 7 அக்டோபர் 2008 (UTC)

தமிழ் இணையம் / விக்கிப்பீடியாவில் தனித்தமிழ்ப் போக்கு[தொகு]

அதீத தனித்தமிழ்ப் போக்கு --ரவி 00:34, 27 ஏப்ரல் 2008 (UTC)

ரவி, வேறு ஒரு நண்பர் சுட்டிக் காட்டினார். படித்தேன். சில கருத்துக்களை இங்கு வைக்க விரும்புகிறேன். விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் வினோத், "நாசிசம்" "மொழி நாசிசமே அன்றி வேறில்லை." என்றெல்லாம் மிகக்கடுமையாக தாக்கியுள்ளார்.

  • விக்கிப்பீடியா ஒரு அற்புதமான வரலாற்றுப் பதிவு. யார், எப்பொழுது, என்ன மாற்றம் செய்தார் என்னும் குறிப்புகள் துல்லியமாய் பதிவாகி இருக்கும் இடம். யாரும் பார்த்து ஆய்வு செய்யலாம்.
  • விக்கிப்பீடியாவில் பிறமொழிச்சொற்கள் ஏராளமாக உள்ளன. அதீத தனித்தமிழ் போக்கு என்றால் எனக்கு வியப்பாக உள்ளது. நன்றாக கிளைத்து வளரும் சொற்களை நாம் இங்கு தேர்ந்து இயன்ற இடங்களில் ஆளப்பரிந்துரைப்பது தவறென்று நினைக்கவில்லை. அவை பெரும்பாலும் நல்ல தமிழாக இருப்பது தவறா? நல்ல தமிழாக இருப்பது ஏன் நல்லது என்பது பற்றி எத்தனையோ இடங்களில் விளக்கி உள்ளேன். அவற்றையும் ஓரிடத்தில் தொகுத்து வைப்பது நல்லது எனத் தோன்றுகின்றது. சுருங்கச்சொன்னால் நல்ல தமிழ்ச்சொற்கள் கிளைத்து வளரும், பிற சொற்களோடு இணக்கமாக இயங்கும். எனவே எங்கெல்லாம் இயலுமோ அங்கெல்லாம் நல்ல தமிழ்ச்சொற்கள் ஆள்தல் நல்லது. இது எளிதாக உணரக்கூடிய ஓர் உண்மை.
  • விக்கிப்பீடியாவில் வினோ'த் வரும் முன்னரே ஏராளமாக கிரந்த எழுத்துக்கள் இருந்தன. ஏதோ அவர் வந்து போராடி கிரந்தத்தை நிலைநிறுத்தியது போல பேசி இருப்பது சரியல்ல. விக்கிப்பீடியா வரலாற்றுப் பதிவு. யாரும் உண்மையைப் பார்க்கலாம்.
  • வினோத் தன்னுடைய மறுமொழியில் "தமிழ் விக்கிப்பீடியா பிரபலம் ஆகாததற்கு அதன் மிக கடுமையான மொழி நடையும் இதுவும் ஒரும காரணம்" என்னும் கருத்தை வைத்துள்ளார். தமிழ் விக்கி மட்டுமல்ல, இந்திய மொழி விக்கிகள் யாவுமே பின் தங்கிய நிலையில் உள்ளன, போதிய பரவலம் அடையவில்லை. . தமிழ் விக்கிப்பீடியா பரவலம் அடையாததற்கு அதன் "மிக கடுமையான மொழி நடை" என்பதை எப்படிக் கண்டு பிடித்தார் என்று தெரியவில்லை. இந்தி, கன்னட, விக்கிப்பீடியாக்களைப் போய்ப் பாருங்கள். குறிப்பாக கன்னட விக்கியில் பாருங்கள். அவர்கள் ஏராளமான சமசுகிருத மற்றும் ஆங்கில சொற்களைப் பொழிந்து எழுதி உள்ளார்கள். அவையெல்லாம் ஏன் இந்த பரவலம் அடையா நிலையில் உள்ளன?
  • கடைசியாக ஒன்றைச் சொல்ல விழைகிறேன். தமிழ் மொழி விக்கியின் ஆக்கங்கள் வருங்காலத்தில் எத்தனை புகழ் ஈட்டுகின்றது என்று பாருங்கள். நல்ல மொழி நடையில், செறிவான கருத்துக்களை, பரந்த தலைப்புகளில் இடையறாது ஆக்கி வாருங்கள், பின்னர் நாம் எங்கு நிற்கிறோம், எங்கு செல்லுகிறோம் என்று பாருங்கள். எந்தத் தலைப்பை எடுத்தாலும் தரமான கருத்துகள் தமிழ் விக்கியில் கிடைக்கும் என்னும் நிலை கட்டாயம் வரும். இன்னும் மிக நிறைய பேர் வந்து ஆக்கம் தருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இப்பொழுதே தமிழில் வேறு எங்கும் இல்லாத பல்லாயிரக்கணக்கான கருத்துகள் செய்திகள் தமிழ் விக்கியில் உள்ளன.
  • மொழி நாசிசம் என்று தாக்குபவர்களுக்கும் இங்கு மறு மொழி இடுகிறேன் என்பதைப் படிப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறேன். தமிழ் விக்கியில் ஒரு "நிர்வாகி" பொறுப்பில் இருப்பவர் இப்படி கூறுவது சரியா என்றும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

--செல்வா 02:46, 27 ஏப்ரல் 2008 (UTC)


செல்வா கூறியவற்றுடன் முற்றிலும் உடன்படுகிறேன். கிரந்த எழுத்துக்கள் தொடர்பாக எனது கருத்துக்கள் நான் யப்பானிய மொழி கற்றபின்பு மாறுதல் கண்டது இங்கே அவர்கள் கடன்வாங்கி பெயர்களை உச்சரிப்பதில்லை மாறாக தமது மொழியில் உள்ள ஒலியன்களைக் கொண்டே அதைச் செய்கிறார்கள். எனது பெயரை தெரன்சு என்று எழுதுகிறாகள். இப்படியிருக்க ஏன் தமிழில் மட்டும் கடன்வாங்கி எழுதவேண்டும். ரவி எங்கேயோ ஒரு பதிவில் எழுதியிருநததைப்போல அழிந்துப்போன மொழியின் எழுத்துக்களைக் கொண்டு அழியா தமிழை காக்கவிளைகிறார்கள்.

இங்கே நிர்வாக பொறுப்பிலிருக்கும்ஒருவர் தவியை நாசிசமாக எடுத்துகூறியிருப்பது வேதனைக்குறியதாக உள்ளது. இணையத்தில் தவியைப் போன்ற மக்களாட்சி நிலவும் இடத்தை காண்பது அறிது. பொது இணக்கப்பட்டுடனேயே எல்ல விதயங்களையும் மேற்கொள்கிறோம். இது அவருக்கும் தெரியும். தெரியாதவருக்கு விளங்கப்படுத்தலாம் தெரியாததைப் போல நடிப்பவருக்கு என் செய்ய?

நல்ல தமிழ்ச் சொற்களை ஆக்கி ஆளவேண்டியது காலத்தின் கட்டாயம். இது தமிழ் வரலாற்றில் தொடர்ந்து எற்பட்டுவந்த ஒன்றாகும். முன்னர் அரசவையிலும் தமிழ்ச்சங்களிலும் செய்தவற்றை இங்கே செய்கிறோம். தன்னை வளர்த்துக்கொள்ளாத எந்த மொழியும் அழிந்துவிடும் என்பதில்சந்தேகமில்லை. --Terrance \பேச்சு 03:34, 27 ஏப்ரல் 2008 (UTC)

வினோத்-இன் காரமான கருத்துக்களுக்கு ஒருவகையில் நானும் காரணம் என்று நினைக்கிறேன். அவருடைய கட்டுரையில் தெறும, ஏந்தம், செலுத்தம், கட்டுறுத்தல் போன்ற மாற்றங்களை நான் செய்திருந்தது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது மேற்சுட்டிய பதிவிடுகையில் இருந்து தெரிகிறது. வேதிப்பொறியியல் துறையில் பெருமளவிற்குக் கட்டுரைகள் த.வி.யிலோ வேறு எங்கேனுமோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்நிலையில் ஆரம்பம் முதலே நல்ல தமிழ் சொற்களை வைத்துக் கட்டுரைகள் எழுதினால் அவை நிலைத்து நிற்கும் என்று நான் எண்ணுகிறேன். இதற்காக இன்னொரு வேதிப்பொறிஞராகவும் தமிழறிஞராகவும் இருக்கும் இராம.கி அவர்களின் கட்டுரைகளை நான் விரும்பிப் படிக்கிறேன். பல சொற்களை அவரிடம் இருந்து எடுத்தாள்கிறேன். சிலசமயம் அது பலருக்கும் ஏற்புடையதாய் இல்லாதிருக்கலாம். எனக்கும் கூடச் சில சொற்கள் ஒவ்வாது போகின்றன. அதே சமயம், எனக்குப் பிடித்திருந்தாலும், தெறும போன்ற சொற்களை இங்கு பிறர் பெரும்பான்மையாக மறுக்கும் போது அவற்றை மாற்றிக் கொள்ள நான் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. த.விக்கு வெளியே நான் தெறும என்பதைப் பயன்படுத்துவேன். ஆனாலும், விக்கி ஒரு கூட்டு முயற்சி என்பதால், அந்தச் சொற்களை முன்வைப்பதில் எனக்கும் உரிமை உண்டு என எண்ணுகிறேன். இப்போதும் கூட refinery என்பதற்கு விள்ளெடுப்பாலை சரியாக இருக்குமா என்று இன்னொரு இழையில் விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு வேளை அந்தச் சொற்களை மாற்றும் முன் பேச்சு பகுதியில் முன் வைத்திருக்க வேண்டுமா என்று தெரியவில்லை. த.வி யின் பொள்ளிகை அதுவா என்று நான் அறியாதிருந்தால் யாரேனும் தெளிவுபடுத்தவும். குறிப்பிட்ட இந்த இடுகையில் இந்த மாற்றங்கள் சரிதானா என்று கருத்துக்கள் வேண்டும் என்றும் நானே விவாதத்தைத் தொடங்கி வைத்திருந்தேன் என்பதையும் கவனிக்கவும்.

--இரா. செல்வராசு 04:30, 27 ஏப்ரல் 2008 (UTC)

செல்வராசு, பொள்ளிகை என்பது policy என்னும் சொல்லோடு ஒத்திருக்குமாறும், தெறும என்பது thermal என்பதுடன் ஒத்திருக்குமாறும் நண்பர் இராம.கி அவர்கள் ஆக்கிய சொற்களாக இருக்கலாம். அவை இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பச் சொற்களுடன் பயனுடைய தொடர்பு காட்டும் கருத்தாடல்கள்கள் மறுக்கவில்லை. என் நண்பர் இராம.கியை அதற்காக பாராட்டுகிறேன். ஆனால், அத்தகைய பல சொற்கள் பொதுப் பயன்பாட்டுக்குப் பொருந்தாதவை, சில அறுதியாக தேவை இல்லாதவை. இவை இராம.கி மீது மதிப்பு வைத்திருக்கும் என் தனிக்கருத்துகள். வெப்பம், சூடு, சுர, காய், கொதி, வெது, வே என்று பற்பல வேர்ச்சொற்கள் இருக்கும் பொழுது தெறும என்று கூறுவது தேவையா என்று எண்ண வேண்டும். இந்திய-ஐரோப்பிய மொழிக்கு நெருக்கமான சொல்லாக இருக்கவேண்டும் என்பது தேவை இல்லாத முயற்சி என்பது என் தனிக்கருத்து. தொடர்பை புரிந்து கொள்ளுவது வேறு அதற்காக சொல்லையே எடுத்தாளவேண்டும் என்று நினைப்பது வேறு. வேறு சொல் இல்லாத நிலையில், பொருத்தம் இருந்தால் எடுத்தாளலாம். இது பற்றி மேலும் இங்கு உரையாடுவதற்கு மாறாக தனியான ஓர் இழையில் கட்டாயம் கருத்தாடலாம். --செல்வா 05:02, 27 ஏப்ரல் 2008 (UTC)
செல்வராசு, கட்டுரையின் முதன்மைத் தலைப்பைத் தவிர பயன்பட்டிருக்கும் மற்ற சொற்களை நல்ல தமிழ் சொற்களாக மாற்றுதற்கு பேச்சுப்பக்கத்தில் கேட்க வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் மாற்றும் சொல் மிகுதியான பொதுப்பயன்பாட்டில் இருந்தால் அதை அடைப்புக்குறிகளுள் இடுவது நலம். தகவல் உண்மையோடு கலைக்களஞ்சியத்திற்கென தனிநடை எதற்காக வலியுறுத்தப்படுகிறதோ, அதற்காகத்தான் நல்ல தமிழ் சொற்களும் பரிந்துரைக்கப்படு்கின்றன. ஆங்கில விக்கியில் "brilliant prose" என்பது சிறப்புக் கட்டுரைகளுக்கான தேர்வில் முதன்மையானதொரு தேவை. மற்ற கட்டுரைக்ளையும் இத்தேவை பொருட்டு வேறு யாரும் கட்டுரையைத் திருத்தினால் அதில் தவறில்லை. அதேபோலத்தான் தமிழ் விக்கியிலும் நல்ல தமிழ்ச்சொல்லை எவர் வேண்டுமானாலும் "புகுத்தலாம்". ஆனால் எழுதுபவர்கள்மீது எந்தவிதக் கட்டாயமுமில்லை. இக்கொள்கை குறித்து விவாதிக்க விரும்பினால் வினோத் இங்கு செய்யட்டும். மற்றபடி வெளியில் போய் விக்கியைப் பற்றிய அறிமுகமில்லாதவர்களிடம் தெரிவிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதுதொடர்பில் வினோத்திடம் எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. -- சுந்தர் \பேச்சு 06:59, 27 ஏப்ரல் 2008 (UTC)

அனைவருக்கும், வினோத் விக்கிப்பீடியாவுக்கு வெளியில் இதைப் பற்றி எழுதியதில் தவறில்லை. தவிர, இதை தமிழ் விக்கிப்பீடியா குறித்த விமர்சனமாக கருதாமல் பொதுவாக தமிழ் இணையத்தில் பெருகி வரும் நல்ல தமிழ்ப் போக்கு, தனித்தமிழ்ப் போக்கு குறித்த விமர்சனமாக கொள்வோமே? எதைப் பற்றியும் தன்னுடைய கருத்துகளை தன் வலைப்பதிவில் அவர் எழுதலாம். அங்கு தனக்கு இயல்பான நடையில் அவரால் எழுத இயலும். என்னால் இயன்ற அளவு தமிழ் விக்கிப்பீடியாவின் உண்மை நிலையை அங்கு விளக்க முற்பட்டுள்ளேன். அதை மட்டுமே நம்மால் செய்ய இயலும்.

வினோத், நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள "தமிழ் விக்கிப்பீடியா - இவை அன்று" கொள்கைகளை எழுதியதே நான் தான். 2 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியவை. அதற்குப் பிறகான தமிழ் இணைய அனுபவத்திலும் எண்ண வளர்ச்சியிலும் அந்தக் கொள்கைகளில் இறுக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நல்ல தமிழ் எதிர்ப்பாளர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்: ஆங்கிலம் முதன்மையாகப் பேசப்படாத நாடுகளில் ஓரிரு ஆண்டுகளாவது படித்து /பணியாற்றிப் பாருங்கள். உங்கள் கருத்துகளில் பெருமளவு மாற்றம் வரும் என்று உறுதியாக நம்புகிறேன். --ரவி 11:07, 27 ஏப்ரல் 2008 (UTC)

விக்கிப்பீடியா தனித்தமிழ் காரர்களின் கட்டுபாட்டில் இருக்கிறது[தொகு]

ஒரு ஆவணப்படுத்தலுக்காகப் பதிந்து வைக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியர்கள் யாரும் தயவு செய்து இதற்கு மறுமொழி அளித்து நேரம் வீணாக்க வேண்டாம் :) --ரவி 15:16, 27 ஆகஸ்ட் 2008 (UTC)
தமிழர்கள் தமிழைத் தமிழாக வளர்த்தெடுப்பதற்கு முட்டுக்கடைகள் போடுபவர்கள் இருக்கிறார்கள் என்று தான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், இவ்வளவு தீவிரமான எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது நெருடலாகத்தான் இருக்கிறது. நாம் இன்னும் கூடுதலாக வேலை செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. மயூரநாதன் 15:57, 27 ஆகஸ்ட் 2008 (UTC)
தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான் என்ற மாதிரியான குணாதியம் கொண்ட சிலர் அல்ல பலர் இருக்கின்றார்கள். இதனால்தான் தமிழ் விக்கிபீடியா மாத்திரம் அல்ல தமிழர்களே முன்னேற்றக் குறைவாக இருப்பதற்கு முதன்மையான காரணம். தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் என்று தவம் செய்வா தம் கருமம் செய்வார் என்றவாறு நாம் நமது திட்டத்தை முன்னேடுப்பதே நல்லது. வேலை எதுவும் செய்யாமல் விமர்சிப்பவர்கள் விக்கிபீடியாவிற்கு வெளியே மாத்திரம் அல்ல அலுவலங்களிலும் இருக்கவே செய்கின்றார்கள். இவற்றையிட்டு நாம் மனவிரக்கி அடையவேண்டியதில்லை. Broad band இணைப்பு ஒருமாதத்திற்குள் கிடைத்துவிடும் என நினைக்கின்றேன். நிச்சயமாக எம்மால் இயன்றவரை முன்னேடுப்போம். --உமாபதி \பேச்சு 16:55, 27 ஆகஸ்ட் 2008 (UTC)

தொடரும் திருபுகள் - தப்பிக்குமா விக்கிப்பீடியா[தொகு]

நான் ஒன்றைச் சொல்லிக்கொள விரும்புகிறேன். தமிழ் விக்கிப்பீடியா இன்னும் மிகுந்த சீரோடும் சிறப்போடும் மிக நன்றாகவும் விரைவாகவும் கட்டாயம் வளரும். விக்கிப்பீடியாவின் தொழில்நுட்பம் இதுகாறும் இல்லாதவாறு மிகவிரிவாயும் துல்லியமாகவும் வரலாற்றுப் படிவுகளைக் காட்டும் ஒன்று. எனவே பொய்யுரைகள் ஒருபோதும் செல்லுபடியாகாது. எல்லோருக்கும் புரியும் வகையில் நல்ல தமிழில், கூடியமட்டிலும் எளிய நடையில் நாம் தொடர்ந்து எழுதிவருவோம். காலம் சொல்லும் இதன் பயனை, விளைவை. உமாபதி சொல்வதுபோல தவம் செய்வர் தம் கருமம் செய்வார் என்றவாறு நாம் நமது திட்டத்தை முன்னேடுப்பதே நல்லது. இன்முகத்துடன் இயன்றவாறு நாம் இதனைச் செய்வோம்! --செல்வா 17:26, 27 ஆகஸ்ட் 2008 (UTC)


இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]