விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு11

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1,000 நாட்களில் 1,00, 000 கட்டுரைகள் வரையும் திட்டம்[தொகு]

1,000 நாட்களில் 1,00, 000 கட்டுரைகள் --ரவி 15:06, 22 பெப்ரவரி 2008 (UTC)


நல்ல செய்தி. ஆனால் எண்ணிக்கையைத் தரத்துடன் சேர்த்தே உயர்த்துவது சாத்தியப்படுமா? த.வி.யில் மொழிபெயர்ப்பு வார்ப்புருவுடன் நூற்றுக்கும் அதிக கட்டுரைகள் மூன்றாண்டுகளாக இருக்கின்றன. அவற்றைத் துப்பரவாக்க வேண்டும். ஏற்கனவே விரிவாக எழுதப்பட வேண்டிய தலைப்புக்களில் பெருமளவில் குறுங்கட்டுரைகள் இருக்கின்றன. புதுக் கட்டுரையாக்கத்தில் செலுத்தும் கவனத்தை குறுங்கட்டுரை விரிவாக்கத்திலும் செலுத்த வேண்டும். நன்றி. கோபி 02:41, 23 பெப்ரவரி 2008 (UTC)


உண்மைதான். புதிய கட்டுரைகளை உருவாக்கும் வேலைகளோடு ஏராளமான விரிவாக்கம், மொழிபெயர்ப்பு மற்றும் துப்புரவு வேலைகள் நிறைய உள்ளன. வேகமாகக் கூடிய எண்ணிக்கையில் கட்டுரைகளை உருவாக்க முயலும்போது இப் பிரச்சினை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. எனவே கட்டுரைகள் அதிகரிப்பிற்கான எந்தத்திட்டமும் அதிலும் கூடிய வேகத்தில் முனைப்பாகப் பங்களிப்பவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் வழிமுறைகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். மேற்படி திட்டம் குறித்த எனது கருத்துக்களையும் ரவி மேலே சுட்டியுள்ள தளத்தில் எழுதியுள்ளேன். மயூரநாதன் 03:39, 23 பெப்ரவரி 2008 (UTC)


நன்றி கோபி, மயூரநாதன், மேலேயுள்ள கருத்துடன் உங்களின் கருத்தை வேட்பிரஸ் தளத்திலும் கண்டேன். உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். இலங்கையில் இடங்கள் தொடர்பான தொடர்பான கட்டுரைகளை சேர்பதாகவே உள்ளேன் இவற்றில் பெரும்பாலானவை குறுங்கட்டுரைகள் வகையிலேயே அமைந்து கட்டுரை எண்ணிக்கையைத் தேவையற்ற முறையில் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கின்றேன். --உமாபதி \பேச்சு 04:52, 23 பெப்ரவரி 2008 (UTC)


மயூரனாதன், நான் சொல்ல நினைத்த கருத்துக்களை நீங்கள் தெளிவாக, விளக்கமாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள். எந்த பெரும் எடுப்பிலான திட்டம் என்றாலும், அது வெறும் கட்டுரைகளை, உரைகளைக் குவிக்கும் திட்டமாக இல்லாமல், விக்கி செயற்பாடுகள், பண்புகளை உள்வாங்கி ஒன்று சேர்ந்து பங்களிக்கும் பங்களிப்பாளர்களைக் கொண்ட, உருவாக்கும் திட்டமாக இருக்க வேண்டும். விக்கிப்பீடியாவின் இயங்கு தன்மையைப் புரிந்து செயற்படும் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையை உயர்த்தாமல் கட்டுரைகள் எண்ணிக்கையை உயர்த்துவது விக்கியாக்கத்தில் பெரும் சிரமங்களையும் குழப்பங்களையும் தரும். எடுத்துக்காட்டுக்கு, விக்கி நற்பண்புகளை விளங்கிக் கொள்ள இயலாத பலர் ஒரே நேரத்தில் புகுந்தால் உரையாடல் பக்கங்களில் பிரச்சினை எழலாம். கட்டுரை எண்ணிக்கை, பயனர்கள் வருகை இவை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாக தானாக நிகழ்வதே விக்கி இயங்கியலைப் பேண உதவும். ஒரு வேளை இந்த இயங்கியலுக்குப் பொருந்தாத பெருந்திட்டங்கள் என்றால் கிடைக்கும் உரைத் தொகுப்புகளை விக்கிப்பீடியாவுக்கு வெளியே இன்னொரு தளத்தில் குவித்து தேவைப்பட்ட போது அங்கிருந்து ஆக்கங்களை நாம் எடுத்தாள்வது போல் செய்யலாம். தமிழ் இணையத்தில் தமிழ் உள்ளடக்கம் தேவை என்பதே நம் கவலை. அவை அனைத்தையும் விக்கிப்பீடியாவுக்குள்ளேயே குவிக்க வேண்டும் என்று கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டாம். நற்கீரன் ஒரு முறை எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பெற்று விக்கிமூலத்தில் சேர்க்கும் பணியை முன்னெடுத்தார். ஆனால், தனிப்பட்ட முறையில் எனக்கு அதில் ஆர்வம் குறைவே. ஏனெனில், அவற்றை விக்கியாக்கப் புகுந்தால் குமாஸ்தா வேலை செய்வது போல் ஆகிவிடுகிறது. ஒரு இலட்சம் கட்டுரை திட்டம் குறித்து நானும் ஆவலாக உள்ளேன். ஆனால், அதில் இணைந்து செயற்படும் போது, கட்டுரை எண்ணிக்கை, அளவுக்கு முக்கியத்துவம் தராமல், நேரடியாக விக்கிப்பீடியாவுக்கு வந்து தாங்களே அன்றாடம் தொகுத்துப் பங்களிப்பவர்கள் எண்ணிக்கை, தரம், பரப்பு, புரிதல் குறித்து நாம் கூடுதலாக எடுத்துச் சொல்ல வேண்டும். விக்கி நடை, இயங்கியல் புரியாமல் வெறும் உரைத்தொகுப்புகளைப் பெற்றுக் குவிப்பது போல் ஆகி விடக்கூடாது.--ரவி 10:47, 23 பெப்ரவரி 2008 (UTC)


உங்கள் கவலைகளை நானும் பகிர்கிறேன் என்றாலும் இது த.வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல ஒரு வாயப்பாக அமையக்கூடும். உடனடியாக தகுந்த கொள்கைப்பக்கங்களையும் வழிகாட்டல் பக்கங்களையும் எழுதத்துவங்க வேண்டும். ஏற்கெனவே உள்ள கதையாடல்களை பகுப்புகளிலும் கொள்கைப்பக்கங்களிலும் தொகுக்கவேண்டும். -- சுந்தர் \பேச்சு 12:47, 23 பெப்ரவரி 2008 (UTC)


உங்கள் அனைவரின் கருத்துக்களுடனும் பெரிதும் ஒத்துப்போகிறேன். இது ஒரு நல்ல வாய்ப்பு. அதேவேளை விக்கி இயங்கியலை புரிந்து பங்களிப்பவர்களாலேயே ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியை பேண முடியும். நாம் இதுவரை ஒரு நல்ல அடித்தளத்தை கட்டமைத்துள்ளதாகவே நம்புகிறேன், அவற்றை மேலும் செழுமையாக்குவதன் மூலம் இந்த ஆற்றலை சிறப்பாக ஆக்கப்படுத்த முடியும். --Natkeeran 14:28, 23 பெப்ரவரி 2008 (UTC)


விக்கிபீடியாவின் 1000 நாள்களில் 1,00,000 கட்டுரைகள் திட்டம் குறித்து இரண்டொரு நாள்களில் ஒரு நகல் திட்டத்தை வெளியிடுகிறேன். மார்ச் 2 இல் இது தொடர்பான ஒரு கூட்டம் இருக்கிறது. விரைவில் இது தொடர்பான தகவல்களை ஆலமரத்தடியிலேயே தொடர என்ன செய்யவேண்டும் எனப் பார்ப்போம்: செ.ச.செந்தில்நாதன், zsenthil@gmail.com; பிப்ரவரி 29, 2008.


தமிழ் விக்கிபீடியா முன்னோடிகள் அனைவரிடமும் எனது அன்பான வேண்டுகோள்: உங்கள் கவலைகளை முழுவதுமாக நானும் பகிர்ந்துகொள்கிறேன். இந்த திட்டம் குறித்து நீண்டகாலம் யோசித்துவிட்டுதான் அறிவித்தேன்.

விக்கி கலாச்சாரத்தை அவ்வளவு சுலபமாக தமிழ்நாட்டில் பரப்பிவிடமுடியாது. அதே சமயம் அதைக் காரணம் காட்டி விக்கிப்பீடியாவின் எல்லைகளை சுருக்கவும் முடியாது. உள்ளிடும் முறை, உள்ளடக்கத்தரம் போன்றவை குறித்த விழிப்புணர்வை, பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்டே இந்த இயக்கத்தை மேற்கொள்ளவேண்டும். ஆனால், பெருவாரியான தகவல்களை விக்கியேற்றுவதற்கான முயற்சியின் முதல் பலனாக நாம் எதிர்பார்ப்பது தமிழர்கள் தங்கள் முதல் தகவல் ஆதாரமாக தமிழ் விக்கிப்பீடியாவை நாட வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவதுதான். தமிழ் விக்கிப்பீடியாவின் செழுமையும் முழுமையும் 1000 நாள்களில் சாத்தியமாகக்கூடிய விஷயம் அல்ல. அப்படி நினைத்தால், விக்கிப்பீடியா என்கிற கருத்தாக்கமே தோன்றியிருக்கவோ நிலைபெற்றிருக்கவோ முடியாது.

வெறும் குவிப்பாக இந்த முயற்சி சீரழியாமல் இருக்கவேண்டுமானால், தமிழ் விக்கி முன்னோடிகள் எங்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்து செயல்படவேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம். விக்கியில் பங்கேற்கும் போது கவனம் கொள்ளவேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து ஒரு சிறு வெளியீட்டை இலவசமாக வெளியிட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள பல்துறை அறிஞர்களுக்கும் இணையத்துக்கும் இடையிலுள்ள இடைவெளி, விக்கி கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வின்மை, அரைகுறை பதிவுகள் நிறைய வருவதற்கான அபாயம், தொகுத்தல், மொழிபெயர்த்தல், கலைச்சொல்லாக்கம் குறித்த வேறுபாடுகள் உள்பட எந்த ஒரு பிரச்னையையும் எதார்த்தம் என ஏற்றுக்கொண்டு அதற்கு தீர்வு என்ன என்பது குறித்து செயல்படாவிட்டால், விக்கிப்பீடியா பெரும் அறிவியக்கமாக மாறுவதற்கான வாய்ப்பு இல்லை.

விக்கிப்பீடியா எனக்குமே புதுசுதான். நானும் நிறைய அறிய வேண்டியிருக்கிறது. கடந்த ஞாயிறன்று பேராசிரியர் செல்வக்குமாரை சென்னையில் சந்தித்துப் பேசினேன். மிகவும் பயனுடையதாக இருந்தது. மயூரநாதன், கோபி, புருனோ உள்ளிட்டோரின் எதிர்வினைகளும் நன்றிகூறத்தக்கன.

>>>:உங்கள் கவலைகளை நானும் பகிர்கிறேன் என்றாலும் இது த.வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல ஒரு வாயப்பாக >>>அமையக்கூடும். உடனடியாக தகுந்த கொள்கைப்பக்கங்களையும் வழிகாட்டல் பக்கங்களையும் எழுதத்துவங்க வேண்டும். ஏற்கெனவே >>>உள்ள கதையாடல்களை பகுப்புகளிலும் கொள்கைப்பக்கங்களிலும் தொகுக்கவேண்டும். -- சுந்தர் \[[User >>>talk:Sundar|பேச்சு]] 12:47, 23 பெப்ரவரி 2008 (UTC)

ப்ளீஸ் சுந்தர். இதை உடனே செய்யுங்கள். காத்திருக்கிறோம். உங்கள் அனைவரின் மின்னஞ்சல் முகவரிகளையும் zsenthil@gmail.com க்கு அனுப்புங்கள். புதிதாக உருவாக்கிவரும் கூகிள் குழுவில் இணைத்துவிடுகிறோம்.

வலைக்களஞ்சிய திட்டம் விக்கிப்பீடியாவின் துணைத்திட்டம் அல்ல. அது விக்கிப்பீடியா ஆதரவு - பிரச்சார திட்டம். அந்த திட்டத்துக்கு உள்ளும் வெளியிலும் நாம் செயல்படலாம். - செ.ச.செந்தில்நாதன்

நன்றி செந்தில்நாதன். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கான எந்தத் திட்டத்தையும் தமிழ் விக்கிப்பீடியர்கள் முழு மனதோடு ஆதரிப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இருக்க வேண்டியதில்லை. இது தொடங்கப்பட்டு நான்கரை ஆண்டுகளை அண்மித்துக்கொண்டிருக்கும் வேளையில், இது குறித்த பரவலான விழிப்புணர்வும், சிந்தனைகளும் தமிழ் இணையப் பயனாளர்கள் மத்தியிலும், தமிழ் அபிமானிகள் மத்தியிலும் ஏற்பட்டு வருவதையிட்டு நாம் மகிழ்ச்சி கொள்ளலாம். தமிழ் விக்கியில் முனைப்பாகப் பங்களிப்பவர்களில் மிகப் பெரும்பான்மையோர் தமிழ் நாட்டுக்கு வெளியே உள்ளவர்களே. அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, இலங்கை என்று உலகின் பல பகுதிகளிலிருந்தும் இங்கே தீவிர பங்களிப்பாளர்கள் இருக்கிறார்கள். இணைய வசதிகள் இலகுவாகக் கிடைப்பதும், அவர்கள் தமிழ் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கு இணையமே முக்கியமான வழியாக இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். எனினும் தமிழ் நாட்டு ஆர்வலர்களை ஊக்குவித்துப் பெருமளவில் தமிழ் விக்கியில் பங்களிப்பாளர்களாக ஆக்குவது மிகவும் முக்கியம். செந்தில் முன்வைத்துள்ள திட்டம் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இதற்காக ஏற்கெனவே அங்கு உள்ள பங்களிப்பாளர்களுடன் இணைந்து செயல்படுங்கள். தமிழ் விக்கியுடனும், ஆங்கில விக்கியுடனும் நீண்டகாலத் தொடர்பு கொண்டுள்ளவர்களான சுந்தர் போன்றவர்கள் இதற்குப் பெரிதும் உதவக்கூடும். உங்கள் நடவடிக்கைகள் பற்றித் தவறாமல் ஆலமரத்தையிலும், கலந்துரையாடுங்கள். அது வெளியில் இருந்து பங்களிக்கும் என் போன்றவர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தமிழ் நாட்டில் பெரும்பாலானவர்கள் இணைய வசதிக்காக Internet cafe களை நாடுகின்றனர். ஆனால் பெருமளவு இவ்வாறான நிலையங்களில் தமிழைப் பயன்படுத்தும் வசதிகள் இருப்பதாகத் தெரியவில்லை. இது குறித்தும் நடவடிக்கைகள் அவசியம். இத்தகைய நிலையங்கள் மூலமும் விக்கி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமா எனச் சிந்திக்கலாம். தமிழ் நாட்டில் இருக்கும், தமிழில் கட்டுரைகளை எழுதமுடியாதவர்கள் தமிழ் நாடு தொடர்பான கட்டுரைகளுக்குப் படிமங்களை எடுத்துப் பதிவேற்றலாம். தமிழ் நாட்டுக் கோயில்கள், ஊர்கள் பற்றிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளுக்குப் படிமங்கள் தேவைப்படுகின்றன.
தவிர, தமிழ் நாட்டில் ஆர்வமுள்ள பலருக்கு இன்னும் இணைய வசதிகள் இல்லாததால், இணையத்துக்கு வெளியேயும் உங்கள் திட்டம் ஒரு தொடர்பு மையமாகச் செயற்பட வாய்ப்புக்கள் உண்டு. எங்களைப் போன்றவர்களும் தமிழ் நாட்டுக்கு வரும் வாய்ப்புக் கிடைக்கும்போது ஆர்வலர்களோடு தொடர்பு கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். மயூரநாதன் 04:51, 29 பெப்ரவரி 2008 (UTC)

2008 'சனவரி-பிப்ரவரி மாதங்களில் நான் சென்னையில் இருந்தபொழுது, முனைவர் வா.செ.குழந்தைசாமி, தமிழ் இணையப் பல்கலையின் இயக்குநர் நக்கீரன், ஆண்டோ பீட்டர் மற்றும் பலரையும் சந்தித்தேன். திருச்சியில் பாரதிதாசன் பல்கலையின் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோவையும் கண்டு உரையாடினேன். நண்பர்கள், உற்றார் உறவினரிடமும் உரையாடினேன். சுந்தருடன் ஒருமுறை அலைபேசியில் சிறிது உரையாட இயன்றது. ஒரு சிலரைத்தவிர மிகப்பலரும் தமிழ் விக்கிபீடியாவைப் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆண்டோபீட்டர் பரிந்துரையால் செந்தில்நாதன் அவர்கள் சைதாப்பேட்டையில் என்னை சந்தித்தார்கள். செந்தில்நாதன் அவர்கள் தன்னுடைய முயற்சிகளைப்பற்றி விளக்கமாகச் சொன்னார்கள். பதிப்பகத் துறையிலும், மொழிபெயர்ப்புத் துறையிலும் பட்டறிவும் துய்ப்பறிவும் இருப்பதாலும் தமிழார்வம், மற்றும் தமிழக எழுத்தாளர் பங்களிப்பாளர்கள் துணையும், தொடர்பும் இருப்பதாலும், செந்தில்நாதன் நல்ல முறையில் ஆக்கம் தரவல்லவர் என நினைக்கிறேன். சுந்தருடன் தொடர்பு கொள்ள பரிந்துரைத்தேன். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் முனைந்து பங்கு கொண்டால் நூறாயிரம் கட்டுரைகளை 1000 நாட்களில் எழுதுவது கட்டாயம் கூடும். எண்ணிக்கையை விட எவ்வெவ் குறிப்புகள், கட்டுரைகள் இருந்தால் பயன் அதிகம் (முதல் கட்டத்தில்) என்று எண்ணியும், தரம் குறையாமல் (தரம் கூடுமாறும்), பரட்சி குறையாமலும் எழுதி வளர்த்தெடுப்பது பற்றி கருத்தில் கொள்ளவேண்டும். --செல்வா 14:58, 29 பெப்ரவரி 2008 (UTC)

சில கருத்துக்கள்[தொகு]

வலைக்களஞ்சிய முயற்சி தொடர்பில் திண்ணையில் சிறு குறிப்பொன்றை எழுதியிருக்கிறேன். எனது வேண்டுகோள் யாதெனில் 100,000 கட்டுரைகளை த.வி.யில் இணைத்து விக்கியாக்கம் செய்வதற்கான மனித வளங்களை இன்னும் வினைத்திறனாகப் பயன்படுதுவத முயல வேண்டும் என்பதாகும்.

தமிழகத்தில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரை இணைத்து அவர்களுக்கு விக்கிப் பயிற்சியளித்து விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை எழுத வைப்பதைவிட அவர்களைக் கொண்டு நம்பகமான தகவல் மூலங்களை அடையாளங் காண்பதும் அவற்றை இணையமேற்ற அனுமதி பெறுவதும் அதிக வினைத்திறனுள்ளதாக இருக்கலாம்.

தஞ்சைப் பல்கலைக்கழக கலைக்களஞ்சியங்கள் உட்பட ஏற்கனவே பல்லாயிரம் தகவல்கள் தமிழில் அச்சில் உள்ளன. அதே வேளை புதிய பல்லாயிரம் தகவல்கள் இல்லை. விக்கிப்பீடியாவில் நாம் புதிய தகவல்களை விரிவாக எழுதுவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

திருக்குறளை, அகத்தியரைப் பற்றி விரிவான கட்டுரையொன்றை இங்கே எழுதுவதை விட சிறு அறிமுகமொன்றை எழுதிவிட்டு ஏற்கனவே அச்சிலுள்ள நல்ல கட்டுரைகளைத் தெரிந்தெடுத்து இணையமேற்றி விட்டு அக்கட்டுரைக்கு/கட்டுரைகளுக்கு வெளியிணைப்புக் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும்.

விக்கிப்பீடியாவில் 171 ஈழத்து எழுத்தாளர்களைப் பற்றிய சிறு கட்டுரைகள் உள்ளன. நூலகத் திட்டத்தில் உள்ள அவர்களது நூல்களுக்கு இணைப்புக்களும் உள்ளன. விக்கிப்பீடியாவில் சங்க நூல்களைப் பற்றிய கட்டுரைகள் உள்ளன. மதுரைத்திட்டத்தில் உள்ள அந்நூல்களுக்கு இணைப்புக்களும் உள்ளன. விக்கிப்பீடியாவில் 275 பாடல்பெற்ற தளங்கள் பற்றிய கட்டுரைகள் உள்ளன. அத்தலங்கள் தொடர்பான தகவல்களுடன் 3 இணையத்தளங்கள் உள்ளன. அத்தகவல்களைப் பயன்படுத்தி விக்கிப்பீடியாக் கட்டுரையை விரிவாக்குவதை விட இணைப்புக்கள் கொடுப்பது போதுமானது.

தஞ்சைப் பல்கலைக்கழகக் கலைக்களஞ்சியக் கட்டுரைகள், யுனெஸ்கோ கூரியர் கட்டுரைகள் போன்ற பலவற்றை இணையத்துக்குக் கொண்டுவந்தால் பல நம்பகமான தகவல் மூலங்களுக்கான இணைப்புக்களைக் கொண்டதாக த.வி வளர்ச்சியடைந்து தமிழர்கள் தங்கள் முதல் தகவல் ஆதாரமாக தமிழ் விக்கிப்பீடியாவை நாடும் நிலை ஏற்படும்

த.வி.யைத் தகவல்களைக் குவிக்கும் இடமாகப் பயன்படுத்துவதை விடத் தகவல்கள் பற்றிய தகவல்களைக் குவிக்கும் இடமாக வளரச் செய்வது தமிழறிந்த எல்லோருக்கும் பயனுடையதாகும். எல்லாத் தமிழரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து இணைய உள்ளடக்க உருவாக்கத்தை நாம் முன்கொண்டு செல்வது நடைமுறைச் சாத்தியமில்லை. இன்று வலைக்களஞ்சியத் திட்டம் உருவானது போல நாளை இணையக் களஞ்சியத் திட்டம் என்ற பெயரில் ஒன்று உருவாகலாம். இதனால் ஒரே வேலை இருதடவை நிகழ வாய்ப்புள்ளது. இதற்கு நல்ல எழுத்துக்காட்டு மதுரைத்திட்டமும் சென்னை நூலகமும். ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவை மையமாகக் கொண்டு செயற்பட்டால் வளங்களிலிருந்து உச்சப்பயன் பெறலாம்.

தகவற் பகுத்தறிவு (Information Literacy) என்பதை "மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் அவர்களது தனிப்பட்ட, சமூக, தொழில்ரீதியான, கல்விசார்ந்த இலக்குகளை அடைவதற்குத் தகவல்களை வினைத்திறனாக நாடவும் சீர்தூக்கிப் பார்க்கவும் பயன்படுத்தவும் உருவாக்கவும் வாய்ப்பளிக்க உதவும் ஒரு வழிவகை" என அலெக்சாந்திரியாப் பிரகடனம் வரையறுக்கிறது.

தமிழர் வாழ்வின் எல்லா நிலைகளுக்குமான போதிய தகவல்கள் தமிழில் இருக்கின்றனவா?

தேவையான தகவல்கள் என்ன என்பதை அடையாளங்காணத் தமிழ் விக்கிப்பீடியா மிகவும் பொருத்தமான இடமாகும். ஆனால் எல்லா விக்கிப்பீடியாக்களிலும் இருக்க வேண்டிய கட்டுரைகளில் அரைவாசியையே நாம் இதுவரை எழுதியிருக்கிறோம். அவைகூடப் பெரும்பாலும் குறுங்கட்டுரைகளே. வாழ்வியல் தேவைகளுக்கான தகவல்களில் அடைப்படையானவற்றைக்கூட நாம் இன்னமும் இணையமேற்றவில்லை. ஆனால் உலக அளவில் தகவல்களும் அறிவும் மிக வேகமாக வளர்ந்து செல்கின்றன.

தன்னார்வத் திட்டங்கள் மேற்குநாடுகளில் பெற்ற வெற்றியைத் தமிழில் நாம் எதிர்பார்க்க முடியாது. கணினி, இணைய இணைப்பு, ஆர்வம், நேரம் எல்லாம் கிடைப்பது அபூர்வமான சூழலில் ஆங்கில விக்கிப்பீடியா போன்றோ குட்டன்பேர்க் போன்றோ தமிழில் தன்னார்வத் திட்டங்கள் வளர வாய்ப்பில்லை. குட்டன்பேர்க்கில் distributed proof readers பயன்படுத்தும் அதே தொழிநுட்பத்தை மதுரைத்திட்டம் பல்லாண்டுகளாகப் பயன்படுத்தியும் அதனால் இணையமேறிய நூல்கள் மிகச்சில. அரச தனியார் நிதியுதவிகளைப் பயன்படுத்தி தமிழ் நூல்களைத் தட்டெழுதியிருந்தால் மதுரைத்திட்டம் எவ்வளவோ வளர்ந்திருக்கும்.

விக்கி என்ற மென்பொருளை எமது சூழல், தேவைகள், வளங்கள் ஆகியவற்றுக்குப் பொருத்தமான விதத்தில் வினைத்திறனுடன் பயன்படுத்துவதே காலத்தின் தேவை. நன்றி. கோபி 02:38, 1 மார்ச் 2008 (UTC)

விக்கிபீடியா கட்டுரைகளில் கொடுக்கப்பட்டுள்ள வெளி இணைப்புக்களில் பல முறிந்த நிலையில் உள்ளன. பல வெளி இணைப்புகள் காணாமலே போய்விட்டன. அல்லது அவற்றின் தள முகவரிகள் மாறி விட்டன. இந்த நிலை ஒரு கலைக்களஞ்சியத்துக்கு உகந்ததல்ல. எனவே வெளி இணைப்புகளை மட்டும் நம்பியிராமல் முடிந்தளவு விரிவாக எழுதுவது சிறந்தது என்பது எனது கருத்து.--Kanags \பேச்சு 02:56, 1 மார்ச் 2008 (UTC)
இணைய தளங்கள் மறைந்து போகு, நிலையில், Internet Archive இல் இல் நிச்சயமாக, அந்த இணைய தளத்தின் ஒரு பிரதி இருக்கும்(இது மிகப்பெரும்பாண்மையான இணைய தளங்களுக்கு பொருந்தும். Archive செய்வதை தடுக்கும் இணைய தளங்கள் மிகச்சில). தானியங்கி மூலம் உடைந்த இணைப்புகளுக்கு பதில், Internet Archiveஇல் உள்ள பக்கத்துக்கு இணைப்பு தந்து விடலாம். எனவே வெளி இணைப்புகளை உடைவது குறித்து அவ்வளவாக கவலைக்கொள்ளத் தேவையில்லை.
எனவே, கோபி கூறுவது போல, ஏற்கனவே எங்கோ எழுதியுள்ளதை இங்கே மீண்டும் பிரதி செய்வதை விடுத்து, புதிதான தகவல்களை எழுத முனைவது தான் சிறந்த வழி என நான் எண்ணுகிறேன்  வினோத் 03:08, 1 மார்ச் 2008 (UTC)

கனக்ஸ் நீங்கள் குறிப்பிடுவது உண்மை. ஆனால் த.வி.யுடன் இணைந்து இணையத்தளங்கள் உருவாகும்போது இணைப்புக்கள் முறியாமலிருப்பதை உறுதிசெய்யலாம் என நம்புகிறேன். விரிவான கட்டுரைகள் கட்டாயம் தேவை. ஆனால் எழுதப்பட வேண்டியவையோ ஏராளம். அந்த வகையில் புதிய தகவல்களைத் த.வி.யில் எழுதுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். பழைய தகவல்களுக்கு ஏற்கனவே உள்ள தகவல் மூலங்களை இணையத்துக்கு கொண்டுவர வேண்டும். இங்கே சிறு அறிமுகம் போதுமாயிருக்கும். கடந்த ஓராண்டாக தினம் பத்துக் கட்டுரைகளே உருவாகின்றன. ஆனால் எழுதப்படவேண்டியவையோ பல்லாயிரம். வெளியிணைப்புக்களை மட்டும் நம்பியிருக்க முடியாதுதான். ஆனால் வளங்கள் குறைவாக இருப்பதுதான் நடைமுறைச் சிக்கலாக உள்ளது. நன்றி. கோபி 03:22, 1 மார்ச் 2008 (UTC)

கோபி, உங்கள் கருத்துக்களுடன் ஓரளவு உடன்படுகிறேன். இருப்பினும் ஏற்கெனவே இணையத்திலுள்ள தகவல்களை விக்கி நடையில் தருவதில் பயன் உள்ளது. பிற கட்டுரைகளில் உள்ளிணைப்புகளாகவேனும் இவை பயன்படும். அப்பொருட்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஊக்கம் தரும். தனிப்பட்ட வகையில் நான் தமிழில் அரிதாகக் கிடைக்கும் தகவல்களையே எழுத முனைகிறேன். -- சுந்தர் \பேச்சு 03:32, 1 மார்ச் 2008 (UTC)

சுந்தர், விக்கிநடையிலமைந்த தகவற்செறிவான கட்டுரைகளின் பயன் அதிகந்தான். ஆனால் எம்மில் எத்தனைபேரால் நேரடியாகத் தொடர்ச்சியாகப் பங்களிக்க முடிகிறது? மயூரநாதன், கனக்ஸ், நற்கீரன் ஆகியோரே நாள் தவறாமல் பங்களிக்கிறார்கள்.

தமிழக அரச செலவில் விரிவான கலைக்களஞ்சியங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதே தகவல்களை மீண்டும் எழுதுவதற்கு இங்கே செலவளிக்கும் நேரத்தை நாம் புதிய தகவல்களுக்கு வழங்கலாமே... மன்மோகன் சிங்கைப் பற்றிக் கட்டுரை விரிவாக எழுதத்தான் வேண்டும். ஆனால் நேருவைப் பற்றிய ஏனைய கட்டுரைகளை இணையமேற்றி விட்டு சிறு அறிமுகத்துடன் வெளியிணைப்புத் தரலாமல்லவா...

தமிழகத்துக்கு வெளியேயிருந்து பங்களிப்போர் நேரடியாக விக்கியிலேயே பங்களிக்க வேண்டியுள்ளது. ஆனால் தமிழகத்தில் புதிதாகத் தொடங்கும் முயற்சி ஏற்கனவே உள்ள உள்ளடக்கத்தை மையப்படுத்தியதாக அமையலாம். இவை எனது தனிப்பட்ட கருத்துக்களே. நன்றி. கோபி 03:42, 1 மார்ச் 2008 (UTC)

முன்னுரிமை தருவதில் உடன்படுகிறேன். இருந்தாலும் இதை நாம் ஒரு பொதுக்கருத்தாகத்தான் முன்வைக்கமுடியும். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் ஈடுபாடுகள் மாறுபடும்.
அரசு வெளியீடுகளைப்பொருத்தமட்டில் உங்கள் கருத்துடன் முழுவதும் உடன்படுகிறேன். -- சுந்தர் \பேச்சு 03:53, 1 மார்ச் 2008 (UTC)

கோபி தனது விரிவான குறிப்பில் பல விடயங்களைச் சுட்டிக் காட்டியுள்ளார். அடிப்படையில், இருக்கக்கூடிய வளங்களைச் செயற்றிறனுடன் பயன்படுத்துவது என்பதே பொதுவான பிரச்சினையாக இருப்பது புரிகிறது. இந்த அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எப்படியிருக்கலாம் என்பது பற்றிய சில கருத்துக்களையும் அவர் குறித்துள்ளார்.

விரிவான கட்டுரையொன்றை இங்கே எழுதுவதை விட சிறு அறிமுகமொன்றை எழுதிவிட்டு ஏற்கனவே அச்சிலுள்ள நல்ல கட்டுரைகளைத் தெரிந்தெடுத்து இணையமேற்றி விட்டு அக்கட்டுரைக்கு/கட்டுரைகளுக்கு வெளியிணைப்புக் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும்.

என்பது ஒரு கருத்து. ஆனால், இந்த அணுகுமுறையில் பல சிக்கல்கள் உள்ளன. நல்ல கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து இணையமேற்றுதல் என்பது இலகுவான விடயமல்ல. அது அதற்கே உரிய நுணுக்கங்களை உள்ளடக்கிய ஒரு தனியான செயற்பாடு. நல்ல கட்டுரைகளை அடையாளம் காணல், அநுமதி பெறுதல், அவற்றை இணையமேற்றுதல் என்பன மிகவும் நல்ல, செய்ய வேண்டிய முயற்சிகள். ஆனால், இதுவும் நிறைய நேரம், உழைப்பு என்பவற்றைச் செலவு செய்யவேண்டியிருக்கும் ஒரு முயற்சிதான். தவிரவும், இணையம் ஏற்றக்கூடிய நூல்களிற் பல (அவை அகத்தியரைப் பற்றியவையாக இருந்தால் கூட) புதிய தகவல்களையும், அவ் விடயம் தொடர்பான புதிய ஆய்வுப் போக்குகளையும் உள்ளடக்கியிருக்கும் என்று சொல்ல முடியாது. இவ்வாறான தகவல்களைத்தரும் நூல்களை இணையமேற்றுவதும் பெரும்பாலும் முடியாததாகவே இருக்கும். எனவே விக்கிப்பீடியாக் கட்டுரைகள் முழுமையாக இருப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதே நல்லது.

தவிர, விக்கிப்பீடியாவின் பங்களிப்பாளர்கள், ஒரு ஒழுங்கமைந்த ஒரு குழுவினர் அல்ல. அவரவர் தனக்குத் தெரிந்தவற்றை எழுதுகிறார்கள், மற்றவர்கள் எழுதியவற்றிலுள்ள பிழைகளைத் திருத்துகிறார்கள். இதனால், தமக்குக் கிடைக்கக் கூடிய குறைந்த அளவு நேரத்தையும் அவர்கள் பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது. விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கருத்துருவும் இதுதான். நல்ல நூல்களை இணையமேற்றுதல் போன்ற தனியான செயற்பாட்டுடன் ஒருங்கிணைந்து செயற்படும் ஒழுங்கமைப்பு அவர்களுக்கு இல்லை.

ஒரு விடயம் குறித்து வெளியிடப்படும் நூல்களும், கட்டுரைகளும் பெரும்பாலும் எழுதுபவரின் கருத்தையே பிரதிபலிக்கின்றன. எனவே விக்கிப்பீடியாவின் கொள்கைப்படி நடுநிலையைப் பேணுவதற்குப் பல்வேறுபட்ட கருத்துக்களையும் வெளிப்படுத்துகின்ற ஏராளமான கட்டுரைகள் இணையமேற்றப்பட வேண்டியிருக்கும். இது நிச்சயமாக உடனடிச் சாத்தியமானதல்ல.

நிச்சயமாக விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் நல்ல நூல்களுக்கும், கட்டுரைகளுக்கும் இணைப்புகள் கொடுத்துத் தான் வருகிறோம். இவ்வாறான நூல்களும் கட்டுரைகளும் இணையமேற்றப்படும்போது விக்கிப்பீடியாக் கட்டுரைகளும் கூடிய நம்பகத் தன்மையைப் பெறும். ஆனால், விக்கிப்பீடியாக் கட்டுரைகள் முழுமை பெறுவதற்கு வெளியிணைப்புக்களில் தங்கியிருப்பது நல்லதல்ல என்பதுடன் விக்கிப்பீடியாவின் அடிப்படைச் செயற்பாட்டு முறைக்கும் ஒத்துவரக்கூடியதல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து. மயூரநாதன் 06:00, 1 மார்ச் 2008 (UTC)

இதே போல் 2007 ஆண்டு அறிக்கையிலும் உரையாடப்பட்டது. கோபி கூறிய கருத்துக்களுடன் பெரிதும் உடன்படுகிறேன். பழம் அறிவு மூலங்களுக்கு வெளியிணைப்புகளைக் கொண்டு குறுங்கட்டுரைகளை ஆக்குவதை உடனடிச் செயல்பாடாகவும், முழுமையான கட்டுரைகளை உருவாக்குவதைத் தொலைநோக்குச் செயற்பாடாகவும் கொள்ளலாம். புதிய அறிவுத் துறைகளை முன்னுரிமை கொடுத்து முழுமையாக உடனடியாக ஆக்கலாம். இதை எப்படிச் செயற்படுத்துவது என்பதில் தான் அணுகுமுறைகள் மாறுகின்றன. நிச்சயம் இதை ஒரு விக்கிப்பீடியா கொள்கையாகவோ,வழிகாட்டலாகவோ கொள்ள இயலாது. மயூரனாதன் கூறியது போல் எல்லா துறைகளிலும் விக்கி நடை, விக்கி நடுநிலையுடன் விக்கிப்பீடியாவிலேயே முழுமையான கட்டுரைகளை உருவாக்குவதற்கான தேவை உண்டு. எனவே, ஒவ்வொரு பங்களிப்பாளரின் ஆர்வம், முன்னுரிமையின் அடிப்படையில் இதை அவரவர் முடிவுக்கே விட்டு விடலாம். எடுத்துக்காட்டுக்கு, கோபி சொல்வதில் நியாயத்தை நான் உணர்கிறேன். எனவே, திருக்குறள் கட்டுரையை எழுதிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், நானோநுட்பம் குறித்து முன்னுரிமை கொடுத்து எழுதத் தலைப்படுவேன். மற்றவர்கள் பழசோ புதுசோ ஏற்கனவே இணையத்தில், அச்சில் இருக்கிறதோ இல்லையோ தங்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் முழுமையான விக்கிப்பீடியா கட்டுரைகளை உருவாக்கலாம். இரண்டு அணுகுமுறைகளுமே சரியானதும் நடைமுறைக்கு ஒத்து வருவதும் ஆகும். அனைத்து விக்கிப்பீடியர்களும் ஒரே செயல் திட்டத்துடன் செயல்படுவது இயலாதது. அவசியமும் இல்லை. இந்த உரையாடலின் சாரத்தை ஓரிடத்தில் தொகுத்து வைக்கலாம். புதிய பங்களிப்பாளர்ள் யாரும் பழைய தமிழில் ஆவணப்படுத்தப்பட்ட அறிவுத் துறைகள் குறித்து விரிவான கட்டுரைகள் குறித்து எழுத முற்படும் போது ஒரு முறை இதைச் சுட்டிக்காட்டி விடலாம். --ரவி 12:47, 1 மார்ச் 2008 (UTC)


இங்கு கூறிய பல கருத்துக்கள் எனக்கும் உடன்பாடே. ஆனால், அறிவு என்பது வாழும் ஒன்று. ஏதோ எங்கோ யாரோ எழுதி வைத்துவிட்டால் அது வாழும் அறிவாகாது. ஆங்கில விக்கியில் ஏன் அவர்கள் ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளுக்கு இணைப்பு தந்து மட்டும் அமர்வதில்லை என்று எண்ணிப்பாருங்கள். நன்றாக அறிந்த கருத்தாக இருந்தாலும், அது பலரால் பல இடங்களில் பலவாறு எழுதியும், பேசியும், கற்றும் கற்பித்தும் வருவது தேவை. இதுதான் மனித வளர்ச்சிக்கு அடிப்படை. ஒருவர் ஒரு பாட புத்தகத்தை எழுதிவிட்டால், யாரும் தேவை என்றால் அதனை படித்துக்கொள்ளலாமே, ஏன் கல்லூரிகள் உள்ளன, மேலும் மேலும் நூல்களும், கட்டுரைகளும், செய்தி ஊடகங்களில் எழுதியும் வருகிறார்கள்? அதாவது அறிவெனபடுவது ஒரு உயிர்ப்புடன் இருக்கும் ஒரு வாழ்கலை அல்லது வாழ்கல்வி, வாழ்பண்பாடு ஆகும். இப்படி கலைக் களஞ்சியம் (அதுவும் பலரும் உரையாடி, கருத்தாடி) ஆக்குவது தமிழ் உலகில் நிகழும் ஒரு புதுநிகழ்வு. பயன்பெருக்கும் புத்தாக்கம். த.வியில் மீசுட்டு (hypertext) இருப்பதும், தொடர்ந்து கருத்துக்களையும், படங்களையும் யாரும் மேம்படுத்த வாய்ப்பிருப்பதும், எல்லாத்துறைகளைப் பற்றியும் கருத்தும், உள்ளிணைப்பும் இருக்குமாறு செய்யும் வசதியும் என்று பற்பல நன்மைகள் உள்ளன. இன்றைய பார்வையில் இது பெரும் பணியாக இருக்கலாம், ஆனால் போதிய அளவு த்ரமான பங்களிப்பாளர்கள் வந்து உதவினால், இதுகாறும் தமிழில் எங்கும் இல்லா அளவு பெருங்களஞ்சியமாக, உலக மொழிகளில் சிறந்துள்ள மொழிவழிக் களஞ்சியங்கள் எதற்கும் இளைத்ததாக இல்லாமல் இது உருவாகி பயன் தர வாய்ப்புள்ளது. ஆங்கிலத்தில் 4-5 ஆண்டுகளில் ஆக்கி முடித்ததை நாம் 10 ஆண்டுகள் கடந்து ஆக்கினாலும் தவறில்லை, ஆனால் நல்ல விக்கி நடையில், பொது மக்களுக்குப் புரியுமாறு, அழகான பலவகையான படங்களுடன், மீசுட்டுடன், தகுந்த வெளி இணைப்புகளுடன் த.வி சிறப்பாக உருவானால் பயன் மிக்கதாக இருக்கும். வெணியிணைப்புகள் வழி மட்டுமேயோ, அல்லது அதுவே பெரும்பாலுமான கருத்துவாய் ஆகவோ இருப்பது சரியான வழிமுறையாக இருக்காது என்பது என் கருத்து.--செல்வா 14:48, 1 மார்ச் 2008 (UTC)

மயூரநாதன், ரவி. செல்வா, உங்கள் மேலான கருத்துக்களை வாசித்தேன். த.வி.யில் பங்களித்துவரும் பயனர்கள் எப்படிப் பங்களிக்க வேண்டுமென நான் கூறவரவில்லை. புதிய உள்ளடக்கத்துக்கான முயற்சிகளை வினைத்திறனுடன் பயன்படுத்த வேண்டும் என்பதே என் வேண்டுகோள். தனிப்பட்ட கருத்துக்கள்தான். எனது யோசனையின் நடைமுறைச் சாத்தியத்தைச் சோதித்துப் பார்க்க விருப்பமிருப்பினும் தற்போதய எனது சூழலில் சாத்தியமில்லை. மிக்க நன்றி. கோபி 01:44, 2 மார்ச் 2008 (UTC)

வழுக்கள்[தொகு]

விக்கிபீடியா:வழு நிலவரங்கள் தொடர்பில் நம்மில் சிலர் பொறுப்பேற்க வேண்டும். விக்கியில் எந்தப்பணியும் ஓரிருவரை நம்பி இருக்கக்கூடாது. நற்கீரன் பல்வேறு பணிகளில் பங்களித்து வருவதால் அவருக்கு நேரம் கிடைப்பது அரிது. எனக்கும் முன்புபோல் நேரம் கிடைப்பதில்லை. ரவி கொ.ப.செ. முதலான பல பணிகளில் மூழ்கியுள்ளார். வினோத், டெரன்சு, உமாபதி ஆகியோர் இனி இதில் கூடுதலாக பங்களித்தால் நன்று. நான் ஓரிரு நாட்களில் இரு வழுக்களைப்பதியவுள்ளேன். உங்கள் மின்னஞ்சல் முகவரிகளையும் அதில் சேர்க்கிறேன். அதன்பின் நீங்கள் தனித்து வழுக்களை கண்காணியுங்கள், ஐயங்களிருப்பின் கேளுங்கள். தெளிவுபடுத்தல்களை ஓரிடத்தில் தொகுத்து ஆவணப்படுத்த வேண்டும்.

இதேபோல் விக்கிமென்பொருள் மொழிபெயர்ப்பில் அனைவரும் பங்கேற்று விரைந்து முடிக்கவேண்டும். -- சுந்தர் \பேச்சு 03:47, 1 மார்ச் 2008 (UTC)

வழு நிலவரங்களை பொருத்தவரையில் முடிந்த வரை நான் பங்களிக்கின்றேன். வழு நிலவரங்களை கண்கானிப்பதை தவிர வேறென்ன செய்ய வேண்டும் என தெளிவுப்படுத்தினால், உதவிகரமாக இருக்கும்  வினோத் 04:59, 1 மார்ச் 2008 (UTC)

கடந்த ஒரு வாரக்காலமாக இங்கே அதிக பங்களிப்புக்களைச் செய்யமுடியாமைக்கு பீட்டாவிக்கித் தளத்தில் தமிழாக்கங்களைச் செய்து வந்தது தான் காரணம். பீட்டாவிக்கியின் மொழிப்பெயர்ப்புகள் மீடியாவிக்கிக்கு இணைக்கப்பட்டு 2-3 நாட்களில் இங்கே மற்றும் தமிழ் விக்கிகள் அனைத்திலும் (விக்சனரி,விக்கிமூலம்...) தோன்றிவிடும். மொழிபெயர்பில் அங்கே 3 மைல்கற்களைக் கொடுத்துள்ளார்கள் அதில் 1 மைல்கல் முடிந்து இரண்டாவது கட்டத்தில் 60% முடிவடைந்துள்ளது. பல பிழைகள் உள்ளன எனினும் இதை ஒரு தொடக்கமாக கருதி பிழைகளை திருத்துவோம்.Wikipedia:விக்கிமீடியா தமிழாக்கத் திட்டம் என்ற பக்கத்தில் பிழைகளை குறிப்பிட்டால் நான் அவற்றை அங்கே திருத்த முஅல்கிறேன். இன்னும் ஓரிருவர் அங்கே கணக்குகளை தொடங்கினால் வேலை விரைவாக முடியும்.

வழு நிலவரகளில் கடப்பிடிக்கவேண்டிய நடைமுறையை விளக்கினால் அதையும் செய்யலாம்.--Terrance \பேச்சு 14:52, 1 மார்ச் 2008 (UTC)

நாளை காலை இது தொடர்பில் பதிகிறேன். -- சுந்தர் \பேச்சு 17:37, 1 மார்ச் 2008 (UTC)

ஆட்சியர்களுக்கு (நிர்வாகிகளுக்கு) வேண்டுகோள்[தொகு]

அண்மையில் பீட்டர் டிரக்கர் என்னும் பக்கத்துக்கு ஒரு பயனர் (பயனர்:Jaekay) வேறொரு பக்கத்தில் எழுதியிருந்ததை நகர்த்தினேன். அவருடைய பங்களிப்புகளை வரலாற்றுப் பக்கத்தில் சேர்க்க வேண்டுகிறேன்.--செல்வா 15:47, 2 மார்ச் 2008 (UTC)

en:WP:CUTPASTE - இங்கு தரப்பட்டுள்ள முறையில் சரி செய்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 11:32, 3 மார்ச் 2008 (UTC)
நன்றி சுந்தர்.--செல்வா 15:28, 3 மார்ச் 2008 (UTC)

முதற்பக்கக் கட்டுரை[தொகு]

முதற்பக்கக் கட்டுரையாக அறிவிக்க பரிந்துரைகள் தருவது எங்ஙணம்? சிறப்புக்கட்டுரைகளுக்கான பரிந்துரைகள் பக்கம் இருப்பதைப் பார்த்தேன். பலாப்பழம் என்னும் கட்டுரை அருமையாக உள்ளது. அது மட்டுமல்லாமல், ஆங்கில விக்கி உட்பட வேறு எந்த விக்கியிலும் தமிழ் விக்கியில் உள்ள அளவு செறிவான செய்திகள் இல்லை (நான் பார்த்த அளவிலே). போதிய வளர்ச்சி அடையாத பொறியியல் கட்டுரையை முதல் பக்கக் கட்டுரையாக அறிவித்திருப்பதைக் காட்டிலும், பலாப்பழம் போன்ற கட்டுரைகளை முதற்பக்கக் கட்டுரையாக அறிவித்திருக்கலாம். பொறியியல் கட்டுரை மிகவும் முக்கியமானதே, ஆனால் அது அடைந்துள்ள வளர்ச்சி போதாது, அதற்குள் முதற்பக்கக் கட்டுரையாக அறிவித்தது தேவை இல்லாதது என்று நினைக்கிறேன். நேற்றே பொறியியல் கட்டுரையை சற்றேனும் விரித்து எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன், இயலவில்லை. இன்று-நாளைக்குள்ளேனும் சற்றேனும் விரிவாக்க முயல்கிறேன். --செல்வா 12:51, 4 மார்ச் 2008 (UTC)

இதற்கான பரிந்துரைப்பக்கம் இருப்பதாக நினைவில்லை. புதிதாக ஒரு பக்கம் உருவாக்கலாம்.--சிவகுமார் \பேச்சு 13:15, 7 மார்ச் 2008 (UTC)


வலைப்பதிவுகள் - மேற்கோளாகப் பயன்படுத்தல்[தொகு]

வலைப்பதிவுகளை மேற்கோளாகப் பயன்படுத்தலாமா? இது பற்றி இப்போதே விக்கிப்பீடியா கொள்கை முடிவு எடுத்தல் நல்லது.--சிவகுமார் \பேச்சு 13:15, 7 மார்ச் 2008 (UTC)

பொதுவாகச் சொல்வதாயின் வலைப்பதிவுகளை மேற்கோளாகப் பயன்படுத்துவது நல்லது அல்ல. ஆனாலும், வலைப்பதிவின் தன்மையைத் தனித்தனியாக ஆரய்ந்து முடிவு எடுக்கலாம். என்பது எனது கருத்து. மயூரநாதன் 14:23, 7 மார்ச் 2008 (UTC)
தனித்தனியாய் ஆய்வது கூட எவ்வளவு நடைமுறைக்கு சாத்தியம் எனது கேள்விக்குறியே. இது ஆய்வு செய்பவரை பொருத்து இருப்பதால், இந்த ஆராய்விலும் நடுநிலை பிறழ்வு ஏற்பட வாய்ப்புண்டு. வாக்களிப்பு என எடுத்துக்கொண்டாலும், இதனால் வீண் விவாதங்கள் எழவே வாய்ப்புண்டு. எனவே, விக்கி கொள்கையாக, குறைந்தது சமூகம் மற்றும் தனிநபர் சார்ந்த கட்டுரைகளில் வலைப்பதிவுகளை நிச்சயமாக மேற்கோளாக காட்டுவதை தவிர்க்கலாம். எனினும் தற்காலிகமாக, பிற துறைகளில் குறைந்த அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வலைப்பதிவுகளை பயன்படுத்தலாம் என நான் கருதிகிறேன் వినోద్  வினோத் 14:54, 7 மார்ச் 2008 (UTC)
தமிழில் இணைய உள்ளடக்கம் குறைவாக இருப்பதால், கருத்துக்கள் அல்லாத சரி பார்க்கக்கூடிய தகவல்களைத் தரும் சில நடுநிலையான (??!!) வலைப்பதிவுகளையாவது பயன்படுத்தலாம்.--ரவி 15:12, 7 மார்ச் 2008 (UTC)
வலைப்பதிவுகளைத் தவிர்ப்பது நல்லது. அறிவியல்-பொறியியல் சார்ந்த கருத்துகள் சிலர் எழுதுகின்றனர், ஆனால் அங்கும் கூட கருத்து சரிதானா என்று அறியாமல் இணைப்பு தருவது தவறான வழிகளில் இட்டுச் செல்வதாக இருக்கும். வலைப்பதிவுகளில் உள்ளதை ஓரளவிற்கேனும் இணைக்கும் முகமாக ஏதேனும் செய்ய வேண்டின் பேச்சுப் பக்கத்தில் பதிவு செய்யலாம். குறிப்பாக உவத்தல் காய்தல் இன்றி இருக்கும் பதிவுகளை. அண்மையில் இடப்பட்ட சில வலைப்பதிவு இணைப்புகள் மிகவும் கவலை ஊட்டுகின்றன (அத்தகு இணைப்புகள் இடுதல் கட்டாயம் தவறு). இவை என் தனிப்பட்ட கருத்துதான்.-செல்வா 16:59, 7 மார்ச் 2008 (UTC)
வலைப்பதிவினை விமர்சன நோக்கில் பயன்படுத்தல் நல்லதாக அமையும் இதுவே என் கருத்து--கலாநிதி 17:30, 7 மார்ச் 2008 (UTC)
"எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு". தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் இணையத்தில் வலைப்பதிவுகள் ஒரு முக்கிய ஊடகம். தனிதனியே ஆய்வது சாத்தியமானதே. தகவலை எங்கிருந்து பெற்றோம் என்பதை குறிப்பதே மேற்கோளின் ஒரு நோக்கம். தகவல் பிழை என்றால் நீக்கலாம், அவ்வாறு ஆயாமல் ஊடகம் ஒன்றை ஒதுக்கி வைப்பது நல்லதல்ல.
வலைப்பதிவுகள் பக்க சார்பாக இருக்கும் என்பது உண்மையே. ஆகையால் அவற்றை தவிர்க்க வேண்டும் என்று கூறுவது பொருத்தமல்ல. அனைத்து பக்கங்களையும் ஆய இது தேவையாகிறது. இருப்பினும், கலாநிதி சுட்டியபடி வலைப்பதிவுகளை விமர்சன பகுதியில் கூடுதலாக்க் பயன்படுத்தலாம். --Natkeeran 23:01, 7 மார்ச் 2008 (UTC)

சர்ச்சையான விடயங்களைத் தவிர்த்தல்[தொகு]

சற்று மோலாட்டமாக, சர்சையான தலைப்புகளில் நான் எழுதிய சிறுகட்டுரைகளை நீக்கியுள்ளேன். பொறுப்பாக தகுந்த ஆதாரங்களோடு சர்சையான விடயங்களை அணுகுவதே தகும். --Natkeeran 03:49, 8 மார்ச் 2008 (UTC)

முதற்பக்க கட்டுரைகளை காப்பு செய்தல்[தொகு]

ஒரு அநாமதேய பயனர் முதற்பக்க கட்டுரையான பொறியியல் கட்டுரையின் உள்ளடக்கத்தை முழுவதும் நீக்கி விட்டு குப்பையான எழுத்துக்களை உள்ளீடு செய்திருந்தார். நான்காவது நிமிடத்திலேயே கட்டுரை முன்நிலையாக்கப்பட்டிருப்பினும், ஒரு நான்கு நிமிடங்களுக்கு முதல் பக்கத்தில் இருந்து ஒரு வெற்றுக்கட்டுரைக்கு இணைப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே இரு முதற்பக்க கட்டுரைகளையும் அனாமதேய தொகுப்புகளில் இருந்து காப்பு செய்துள்ளேன். அந்த ஐ.பி முகவரியையும் ஒரு நாள் தடை செய்துள்ளேன்.

இனி, அனைத்து முதற்பக்க அனாமதேய தொகுப்புகளில் இருந்தாவது காப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிரேன்--వినోద్  வினோத் 14:41, 9 மார்ச் 2008 (UTC)

I have enabled cascade anonymous protection to all pages that transclude main page--వినోద్  வினோத் 14:47, 9 மார்ச் 2008 (UTC)

அப்படியே செய்யலாம். நன்றி. --Natkeeran 16:55, 9 மார்ச் 2008 (UTC)

கணித்தல் ஆதார உதவி[தொகு]

நம்மில் தானியங்கிகளை இயக்கும் யாருக்கும் 24 x 7 கணினி / இணைய இணைப்பு பிரச்சினை இருந்தால், உங்கள் தானியங்கிக் கோப்புகளை அனுப்பி வைத்தால், என் கணினியைக் கொண்டு உங்கள் தானியங்கிகளை இயக்கித் தந்து உதவ முடியும்--ரவி 22:20, 11 மார்ச் 2008 (UTC)

கேள்வி- பயனர் கனக்கு பதிவு செய்யும் பொழுது நிகழும் பிழை பற்றி[தொகு]

பயனர் கணக்கு ஒன்றை முதன்முறையாக பதிவு செய்யும் ஒருவர் தன் தொடர்பு மின்னஞ்சல் முகவரியைத் தவறாக கொடுத்திருந்தால், அதனை எப்படிச் சரி செய்வது? அண்மையில் பதிவு செய்தவர் ஒருவர் கேட்டிருந்தார். நன்றி--செல்வா 17:56, 12 மார்ச் 2008 (UTC)

மேலே வலதுபுறம் உள்ளவற்றில் 'என் விருப்பத்தேர்வுகள்' என்றுள்ள சிறப்பு:Preferences என்ற இணைப்பின்வழி சென்றால் அதற்கான படிவம் இருக்கும். -- சுந்தர் \பேச்சு 03:48, 14 மார்ச் 2008 (UTC)
நன்றி, சுந்தர். நான் மறந்தே விட்டேன்!!--செல்வா 02:28, 16 மார்ச் 2008 (UTC)

விக்கிப்பீடியா படையெடுப்பு[தொகு]

வேறு ஒரு பொது திட்டத்தில் (http://en.citizendium.org/wiki/Main_Page) ஒரு நாளை அறிவித்து, அந்த நாள் அனைத்து பயனர்களையும் ஒரே சமயம் பங்களிக்க உந்துவார்கள். ஒரு குறிப்பிட்ட துறையை அல்லது தலைப்புகளை தேர்ந்தெடுப்பார்கள். இது உற்சாகம் தரக்கூடும். புதுப் பயனர்களை ஈர்க்கவும் உதவக்கூடும். --Natkeeran 04:22, 18 மார்ச் 2008 (UTC)

விக்கிபீடியாவுக்கு ஒரு பொது மின் அஞ்சல்[தொகு]

விக்கிபீடியாவுக்கு ஒரு பொது மின் அஞ்சல் ஒன்றை ஏற்படுத்தி அதை முதற்பக்கத்திலும் பொது ஊடகங்களிலும் தெரியப்படுத்தலாம். ஏற்ற நடையில் பயனர்கள் கட்டுரைகளை அனுப்ப தூண்டலாம். இதில் செயற்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. பொருத்தமற்ற கட்டுரைகளை மாற்ற கடினமாக இருக்கலாம். அதிகமான பயனர் அந்த முறையை பயன்படுத்தினால், பணி சுமை அதிகரிக்கும்.

--Natkeeran 04:22, 18 மார்ச் 2008 (UTC)

தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள்[தொகு]

http://tamilwiktionary.blogspot.com/2008/03/blog-post.html --ரவி 20:32, 18 மார்ச் 2008 (UTC)

விக்கிப்பீடியா - விக்சனரி ஒருங்கிணைவு[தொகு]

விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள் ஏற்றப்பட்டுள்ளதை அடுத்து, விக்கிப்பீடியர்களை இயன்ற அளவு அதைப் பயன்படுத்த நினைவு கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தெரியாத சொற்களுக்கு த.இ.ப - இல் பொருள் பார்ப்பதோடு விக்சனரியிலும் பார்த்து தெளிவதோடு தென்படும் பிழைகளைத் திருத்தியும் கூடுதல் தகவல்களைச் சேர்த்தும் உதவ வேண்டுகிறேன். விக்கிப்பீடியா கட்டுரைகளில், அடைப்புகுறிகளில் ஆங்கிலச் சொல் தருவது, கட்டுரை இறுதியில் அருஞ்சொற்பட்டியல் தருவதை விடுத்து, நேரடியாக அச்சொற்களுக்கான விக்சனரி பக்கங்களுக்கு தொடுப்பு கொடுத்து எழுதுவது நல்ல செயல்பாடாக இருக்கும். வாசகர்களையும் புரியாத சொற்களுக்கு விக்சனரியை நாடத் தூண்டும்--ரவி 14:35, 21 மார்ச் 2008 (UTC)

வாழ்த்துக்கள் ரவி. விக்சனரி பக்கங்களுக்கு எப்படி உள்ளிணைப்புத் தருவது என்று விளக்குவீர்களா? மறந்து விட்டேன். நன்றி. (உ+ம்: hijack).--Kanags \பேச்சு 21:47, 21 மார்ச் 2008 (UTC)

[[:wikt:hijack|hijack]] என்று கொடுத்தால் hijack வரும்--ரவி 22:55, 21 மார்ச் 2008 (UTC)

அவசரம்: படிமங்கள் குறித்த கொள்கை தேவை[தொகு]

மேல் விக்கியில் இருந்து தமிழ் விக்சனரியில் ஒரு அவசரத் தகவல் இட்டிருக்கிறார்கள். பார்க்க - [1] உடனடியாக படிமங்கள் பயன்பாடு குறித்த நம்முடைய கொள்கையை இறுதி செய்து அறிவிக்கி வேண்டி இருக்கிறது. தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அனைத்துக்கும் ஒரே கொள்கையாய் அறிவிக்கலாம். சுந்தர், வினோத், நற்கீரன், டெரன்ஸ் - இது குறித்து வேண்டிய நடவடிக்கைகள், மேல் விக்கியில் மறுமொழிகள் தெரிவிக்க இயலுமா? [2] பக்கத்தில் மறுமொழி அளித்திருக்கிறேன். ஆனால், அவர் அதிகாரப்பூர்வமாகச் செயல்படுபவர் அல்ல--ரவி 23:36, 24 மார்ச் 2008 (UTC)

கட்டற்ற படிமங்களை விக்கிமீடியா காமன்சிலும் பதிவேற்றப்படவேண்டும் என்றும் நியாய பயன்பாட்டு படிமங்களை மட்டும் த.வி.யில் பதிவேற்றப்பட வேண்டும் என கொள்கை வகுக்கலாம். இதனால் த.வி. Serverஇன் Load குறையும், படிமங்களை நெறிப்படுத்துதலும் சுலபமாகிவிடும்.
நியாய பயன்பாட்டு படிமங்கள் குறித்த கொள்கைகளை பொருத்த வரை ஒன்று ஆ.வி.யை நாம் அவ்வாறு வழிமொழியலாம் அல்லது நமக்குள் உரையாடி நாமே கொள்கைளை வழிமொழியலாம். முன்னது ஒரு நிமிட வேலை பின்னது ஒரு வாரம் ஆகும். என்னைப்பொருத்த வரையில் தெற்காசிய சூழ்நிலைக்கு ஏற்றார்போல் நாமே Specifiஆக கொள்கைகளை உருவாக்குவதுதான் நல்லது என தோன்றுகிறது వినోద్  வினோத் 02:07, 25 மார்ச் 2008 (UTC)

For the projects which currently do not have an EDP in place, the following action shall be taken: As of March 23, 2007, any newly uploaded files under an unacceptable license shall be deleted. The Foundation resolves to assist all project communities who wish to develop an EDP with their process of developing it. By March 23, 2008, all existing files under an unacceptable license as per the above must either be accepted under an EDP, or shall be deleted.

மேல் விக்கியில் EDP இன் டெவலெப்மெண்ட் என்ற Status Messagஐ இட்டு விட்டேன் వినోద్  வினோத் 02:50, 25 மார்ச் 2008 (UTC)

ரவி, நீங்கள் இணைப்புக் கொடுத்துள்ள விக்சனரி முதற்பக்கப் பேச்சுப் பக்கத்தில் தகவல் எதுவும் இல்லையே. இந்த அவசர அறிவித்தல் குறித்த முழுமையான தகவல்கள் எங்கே உள்ளன? தவிக்கு எனபடிமங்களின் காப்புரிமை பற்றிய கொள்கைகள் வகுக்கப்படும்போது இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலுள்ள காப்புரிமைச் சட்டங்களையும் கவனத்துக்கு எடுத்துக்கொள்வது நல்லது. இது குறித்த தகவல்களை எங்கே பெறலாம் என்று யாருக்காவது தெரியுமா? எல்லாக் கட்டற்ற படிமங்களையும் விக்கி காமன்சில் பதிவேற்றுவது அப்படிமங்கள் மீது எங்களுக்கு உள்ள கட்டுப்பாட்டைக் குறைத்துவிடுகிறது. என்பது எனது கருத்து. மயூரநாதன் 03:09, 25 மார்ச் 2008 (UTC)

இங்கே காண்க. ஸ்பானிஷ் விக்கிப்பீடியா Local Uploadஐ முற்றிலும் நிறுத்திவிட்டது. இது போல் Extremeஆக கொள்கை முடிவுகள் எடுக்கத்தேவையில்லை, எனினும் கட்டற்ற படிமங்களை காமன்ஸில் ஏற்றுவதால் Server Load குறையும். கட்டற்ற படிமங்கள் மீது உங்களுக்கென்ன கட்டுப்பாடு ? புரியவில்லை! பொதுவாக காப்புரிமை சட்டங்கள் பொருத்த வரையில் காமன்ஸில் மிகவும் கவனமாக இருக்கின்றனர், எனவே யாரும் பொய்யாக காப்புரிமை வார்ப்புருக்களை அங்கே இணைத்தல் இயலாது. படிமங்களின் காப்புரிமைகளை சரிப்பார்த்துக்கொண்டே இருப்பர். நமது வேலைப்பளுவும் குறைந்து விடுகிறது. எனவே கட்டற்ற படிமங்களை காமன்ஸிலும் நியாய பயன்பாட்டு படிமங்களையும் இங்கே பதிவேற்றுவதை கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்பது எனது கருத்து. వినోద్  வினோத் 03:27, 25 மார்ச் 2008 (UTC)

//பதிவேற்றுவது அப்படிமங்கள் மீது எங்களுக்கு உள்ள கட்டுப்பாட்டைக் குறைத்துவிடுகிறது.// விளக்க முடியுமா?

உள்ளக பதிவேற்றலை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. பொதுவில் ஏற்றக் கூடியவற்றை அங்கே ஏறுவது சரி.

கட்டற்றப் படிமங்களை பொதுவில் பதிவேற்றுவது நன்று. அதற்கான கருவிகளும் உள்ளன. கட்டற்ற படிமங்களை ஆங்கில விக்கியிலிருந்து எடுத்து இங்கே பதிவேற்றுவதை விட அவற்றை நேரடியாக பொதுவில் பதிவேற்றலாம்
  • இதற்கான கருவி
  • இதன்போது ஆங்கில விக்கியிலுள்ள (எந்த விக்கியானாலும்) காப்புரிமைத் தகவல்களை தானியக்கமாக பெறும் கருவி

ஆனால் அவர்களது கேள்வி அதைப்பற்றியதில்லை அது காப்புரிமைகுட்பட்ட படிமங்கள் பற்றியதாகும் இது பற்றிய கொள்கை வரைவுகளைத் தருகிறேன் மாற்றங்களை முன்மொழியவும்.

  • கொள்கை வரைவு 0:
    • ஏப்ரல் 6க்குள்ளாக காப்புரிமை நிலை அறியப்படாத படிமங்கள் நீக்கப்படும்.
    • கொள்கை வரைவு நிலையானதல்ல பயனர் ஒருகிணைவின் மூலம் மாற்றப்படலாம்.
    • கொள்கை வரைவை அனத்து பயனர்களும் மதித்து நடக்கவேண்டும்.
  • கொள்கை வரைவு 1: காப்புரிமைகுட்பட்ட நபர்களின் படிமங்கள்
    • கொள்கை வரைவு 1 அ: நபர் இறந்திருப்பின் அவரது கட்டற்ற படிமங்கள் இல்லையாயின் குறைந்த தரத்திலான ஒரு படிமத்தைப் பயன்படுத்தலாம்.
    • கொள்கை வரைவு 1 ஆ: தற்காலத்திலுள்ளவர்களுக்கு பாதுகாப்புக் காரணங்களால் அவரை படம்பிடிப்பது சாத்தியமில்லாவிட்டால் குறைந்த தரத்திலான ஒரு படிமத்தைப் பயன்படுத்தலாம்.(நாட்டுத்தலைவர்கள்,
  • கொள்கை வரைவு 2:காப்புரிமைகுட்பட்டத் திரைக்காட்சிகள்
    • கொள்கை வரைவு 2 அ: குறித்த திரைக்காட்சியுடன் தொடப்புடைய கட்டுரையில் மட்டுமே பயன்படுத்தலாம்.(திரைப்படத்தில் இருந்துப் பெற்றத் திரைக்காட்சியாயின் திரைப்படம் பற்றிய கட்டுரையில் பயன்படுத்தலாம். அந்தக் காட்சியைப் பற்றிய விளக்கம் நடிகரின் கட்டுரையில் வந்தால் அன்றி நடிகரின் கட்டுரையில் பயன்படுத்தக் கூடாது.)
    • கொள்கை வரைவு 2 ஆ: குறைந்த தரத்திலான ஒரு படிமத்தை மட்டுமே பயன்படுத்தலாம்.
  • கொள்கை வரைவு 3: சின்னங்கள்
    • கொள்கை வரைவு 3 அ:சின்னங்களை சின்னம் பற்றிய கட்டுரையிலும் சின்னத்தையுடைய நிறுவனத்தின், நாட்டின் கட்டுரையிலும் பயன்படுத்தலாம்.
  • கொள்கை வரைவு 4:மேற்கூறிய கொள்கைகளில் அடங்காத காப்புமைக்குட்பட்ட படிமங்கள் பயன்படுத்தல் கூடாது.--Terrance \பேச்சு 03:47, 25 மார்ச் 2008 (UTC)
ஆம், நான் முன்னரிருந்தே விரும்பியது 'கட்டற்ற படிமங்கள் பொதுவில் மட்டும், நியாயப் பயன்பாட்டுப் படிமங்கள் மட்டும் இங்கு' என்ற நிலைப்பாடே. டெர்ரன்சு, உங்கள் வரைவுகள் நன்று, விக்கிபீடியா பேச்சு:காப்புரிமைக் கொள்கை போன்றவொரு பக்கத்தில் முன்வையுங்கள். வினோத் மேல்விக்கியில் செய்தி விடுத்தது நன்று. -- சுந்தர் \பேச்சு 06:49, 25 மார்ச் 2008 (UTC)

வினோத், விக்சனரிப் பக்கச் செய்தியில் தெளிவாக ஒன்றையும் காணோம். நானும் தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

கட்டற்ற படிமங்களைப் பொதுவில் மட்டும் ஏற்ற வேண்டும் என்ற விதியில் எனக்கு சில தயக்கங்கள் உள்ளன:

  • புதுப்பயனர்கள் இங்கு படிமங்களை ஏற்றி காப்புரிமை தகவல்களைத் தரவே தடுமாறுகின்றனர். அவர்களைப் பொதுவுக்குப் போகச் சொன்னால் அங்கு இன்னும் கடுமையான சூழல் நிலவும் நிலையில் எந்த வார்ப்புருவை இடுவது என்று குழம்பக்கூடும். தவிர, அங்கு தமிழில் உதவி கிடைக்காது. ஆங்கில அறிவில்லா பயனர்களுக்கு இது சிரமமாக இருக்கும். இங்கு என்றால் நாம் பல வகையிலும் புதுப்பயனர்களுக்கு உதவ முடியும்.
  • தமிழ் விக்கியில் பல படிமங்களின் பெயர்களைத் தமிழிலேயே இட்டிருக்கிறோம். இது போல் பொதுவில் தமிழில் பெயரிட முடியுமா? படிமங்களுக்குத் தமிழில் பெயரிடுவதில் சில வசதிகள் உண்டு. கூகுள் படிமத் தேடல் போன்றவற்றில் சிக்கலாம். கட்டுரைகள் பயன்படுத்தும் வார்ப்புருப் பெயர்கள் தமிழில் இருப்பது போல் படிமப் பெயர்கள் தமிழில் இருப்பதும் பல வகையிலும் உதவும் தானே? தவிர, படிமப்பக்கங்களில் விவரிப்புகளையும் முழுக்கத் தமிழில் தரலாம். அங்கு அப்படி தமிழில் விவரிப்பு தர இயன்றாலும் அது முதன்மை விவரிப்பாக நிலைத்திருக்குமா?
  • மயூரனாதன் குறிப்பிட்டது போன்ற தயக்கமும் உண்டு. இங்கு என்றால் எந்தப் படிமம் என்ன காரணத்துக்காக நகர்த்தப்படுகிறது, நீக்கப்படுகிறது என்று அறிய உதவும். தேவையான சமயங்களில் அவகாசம் கோரலாம். அங்கு இப்படி கண்காணிப்பது சிரமமாக இருக்கலாம். இறுக்கமான விதிகள், தானியங்கிகள் அவகாசம் தராமல் செயல்படலாம்.
  • அசுரத்தனமாக வளர்ந்து வரும் விக்கிமீடியாவுக்கு நாம் பதிவேற்றும் ஒரு சில கூடுதல் படங்கள் வழங்கிச் சுமையை ஏற்படுத்துமா என்று புரியவில்லை.

என்னுடைய பரிந்துரை என்னவென்றால்,

  • எல்லா படிமங்களையும் இங்கே பதிவேற்றலாம். கட்டற்ற படிமங்களின் ஒரு படியை பொதுவிலும் ஏற்றி வைக்கலாம். அவர்கள் அனுமதித்தால் தமிழ் பெயருடன் ஒரு படியும் ஆங்கிலப் பெயருடன் ஒரு படியும். (ஆனால், இதில் உள்ள குழப்பம் - ஒரே பெயரில் பொதுவிலும் இங்கும் படிமம் இருந்தால் தானியங்கிகள் இங்குள்ள படியை அழித்து விட்டுப் போய் விடும், பிறகு, திரும்ப நம் படிமங்கள் மீதான கட்டுப்பாட்டை நேரடிக் கட்டுப்பாட்டை இழக்க நேரிடலாம். இந்தச் சூழ்நிலையில் ஆங்கிலப் பெயர் படிமத்தை மட்டும் அங்கு ஏற்றி வைக்கலாம். பிற தமிழ் விக்கிமீடியா திட்டங்களுக்கு அந்த ஆங்கிலப் படிமங்களையோ தேவையெனில் அந்தத் திட்டங்களில் திரும்பத் தமிழ்ப் படிமங்களை ஏற்றியோ பயன்படுத்திக் கொள்ளலாம்)--ரவி 11:56, 25 மார்ச் 2008 (UTC)

கொள்கையில் விடுபட்டவை[தொகு]

காமிக்ஸ் படிமங்களின் நியாய பயன்பாடு, தொலைக்காட்சி திரைக்காட்சிகளின் நியாய பயன்பாடு, நாணயம் மற்றும் தாள்களின் நியாய பயன்பாடு

பொதுவிக்கியை பயன்படுத்துதல்[தொகு]

ரவி, ஒரே பெயரில் இரு படிமங்களை வைத்திருத்தல் சரியன்று. இது வழங்கியின் சுமையை தேவையற்று அதிகரிப்பதே அன்றி வேறன்று. த.வியில் இருந்து நானே கிட்டத்தட்ட 60 படிமங்களை காமன்ஸில் அதே படிமம் உள்ள காரணத்துக்காக நீக்கியுள்ளேன்(நிர்வாகி தரம் கிடைத்தவுடன் செய்த முதல் பணி :-)) ). டெரென்ஸும் இதே போல் பல மடங்கு படிமங்களை நீக்கியுள்ளார்.

தமிழில் பெயரிடுவது பல தொழில்நுட்ப சிக்கல்களுக்கு வழிவகுக்கும். தமிழ்ல் பெயரிருந்தால் யூனிகோடு ஆதரவற்ற கணினிகளில் பயன்படுத்துதல் முடியாத காரியம் ஆகிவிடும். இக்கோப்புகளை Console மூலம் கட்டுப்படுத்துதல் இயலாது போய் விடும். இன்னும் யூனிகோடு பெயர்களை அடோப் போன்ற பல நிறுவனத்தின் மென்பொருட்கள் ஆதரவளிக்கவில்லை.யூனிகோடு பெயர் இருந்தால் அந்த கோப்புகளை zip செய்தல் முடியாது. இது போல பல சிக்கல்கள் யூனிகோடை ஆதரிக்கு OSகளிலேயே உள்ளன.இன்னும் இந்தியாவில் பல இடங்களில் விண்டோஸ் 98 பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கூகிள் தேடலில் வேண்டுமெனில், படிமத்தை பதிவேற்றும் போது டிஸ்கிரிப்ஷன் பகுதியில் தமிழ் விளக்கம் தரலாம் ஆங்கில விளக்கத்தோடு. மேலும் ஒரே கோப்பு இரு வேறு பெயரில் இருந்தாலும் தானியங்கி மூலம் அவற்றை ஒப்புநோக்கி அழிக்கலாம் :-))

பயனர்கள், அங்கே பதிவேற்றும் போது அரண்டு விடுவார்கள் என்பதெல்லாம் தேவையில்லாதது. அங்கும் கனிவாய் பேசக்கூடிய நம்மை போல் பல பயனர்கள் இருக்கும் போது, தேவையெனில் அவர்களே வழி காட்டுவர் உதவி தேவைப்பட்டால் உதவியும் செய்வர். அதுவும் விக்கித்தளம் தானே :-)). இங்கே தெளிவாக விளக்கங்கள் இட்டுவிட்டால் எந்த குழப்பமும் நேராது.

వినోద్  வினோத் 13:36, 25 மார்ச் 2008 (UTC)

தமிழில் பெயரிடுவது குறித்த தொழில்நுட்பச் சிக்கல்களை ஏற்றுக் கொள்கிறேன். ஏற்கனவே பல படிமங்கள் தமிழில் பெயரிடப்பட்டு இருக்கின்றன. இது குறித்து முன்னமே ஒரு முறை சுட்டி காட்டி இருந்தேன். அப்போது போதிய கருத்துக்கள் வரவில்லை. இது குறித்தும் பெயரிடல் கொள்கை வகுப்பது நன்று. --ரவி 17:44, 25 மார்ச் 2008 (UTC)

பொதுவின் இடைமுகம் ஆங்கிலத்தில் இருப்பதும் அங்கு தமிழில் உரையாடி உதவுவதற்கு பயனர்கள் குறைவு என்பதும் ரவியின் நியாயமான கவலைகள். இடைமுகத்தை அங்கும் நம்மால் மொழிபெயர்க்க இயலும். தவிர அங்கு த.வி. தூதரகம் ஒன்றையும் துவக்கலாம். -- சுந்தர் \பேச்சு 07:28, 26 மார்ச் 2008 (UTC)

சுந்தர், முதல் முறை பொது விக்கிக்குப் போகையில் ஆங்கிலத்தில் இடைமுகப்பு இருக்கும். அதன் பிறகு விரும்பினால் preferences போய் இடைமுகப்பு மொழியைத் தமிழுக்கு மாற்றிக் கொள்ள முடியும். --ரவி 12:54, 26 மார்ச் 2008 (UTC)

ஓ, தமிழ் இடைமுகம் இற்றைப்படுத்தப்பட்டுள்ளதா, நல்லது. -- சுந்தர் \பேச்சு 05:11, 27 மார்ச் 2008 (UTC)

கொள்கை வரைவு பற்றி[தொகு]

//ஏப்ரல் 6க்குள்ளாக காப்புரிமை நிலை அறியப்படாத படிமங்கள் நீக்கப்படும்//

இது மிகக் குறுகிய கால அவகாசம். தவியில் ஆயிரக்கணக்கில் படிமங்கள் உள்ளன. இவற்றில் நூற்றுக்கணக்கில் காப்புரிமை பற்றிக் குறிப்புக்கள் இல்லாத பக்கங்கள் இருக்கக்கூடும். ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள்ளாக இவற்றை எல்லாம் சரிசெய்துவிட முடியாது. இத்தகைய படிமங்களிற்பல ஆங்கில விக்கியிலிருந்து எடுக்கப்பட்ட கட்டற்ற படிமங்களாகவே இருக்கக்கூடும். இவைகளைப் பதிவேற்றிய பயனர்கள் இப்போது தவியில் பங்களிக்காமலும் இருக்கக்கூடும். எனவே இவற்றை எவ்வாறு சரி செய்வது எனச் சிந்திப்பது முக்கியமேயன்றி எவ்வளவு விரைவாக அவற்றை நீக்கிவிடலாம் என்று எண்ணுவது அல்ல. படிமமானாலும், கட்டுரையானாலும், இருப்பவற்றை மேம்படுத்துவதற்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும் என்பது எனது கருத்து. கால அவகாசம் கொடுத்து எச்சரிக்கை விடும்போது யாருக்கு எச்சரிக்கை என்று எனக்குப் புரியவில்லை. இது எங்கள் எல்லாருடையதுமான விக்கிப்பீடியா. குறைபாடுகளை எல்லோரும் சேர்ந்து நீக்க முயலவேண்டும். இது தொடர்பில் நம்முடைய அணுகுமுறையில் மாற்றம் தேவை. காப்புரிமை காட்டப்படாத படிமங்களில் ஒரு 50 ஐ முதலில் இனங்கண்டு பட்டியல் இடுவோம். அவற்றைப் பார்த்து சரிசெய்யக்கூடியவற்றைச் சரி செய்தபின் உண்மையில் காப்புரிமை மீறுவனவற்றை அழித்துவிடலாம். இப்படிப் படிப்படியாகக் குறைபாடுகளைச் சரிசெய்ய முடியும். இதற்குப் போதிய கால அவகாசம் வேண்டும். புதிய பதிவேற்றங்களுக்கு வேண்டுமானால் இத்தகைய காலக்கெடு விதிக்கலாம்.
இது தவிர கொள்கை வரைவின் ஏனைய பகுதிகள் நன்று. மயூரநாதன் 17:12, 25 மார்ச் 2008 (UTC)

//த.வியில் இருந்து நானே கிட்டத்தட்ட 60 படிமங்களை காமன்ஸில் அதே படிமம் உள்ள காரணத்துக்காக நீக்கியுள்ளேன்//

வினோத். காமென்சிலும், தவியிலும் ஒரே படிமம் என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? ஏனெனில், காமென்சிலிருந்து எடுத்தபடிமங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு அதே பெயரில் தவியில் பதிவேற்றம் செய்யப்பட்ட சந்தர்ப்பங்கள் பல உண்டு. நானும் இவ்வாறான படிமங்கள் பலவற்றை ஒவ்வொன்றுக்கும் பல மணிநேரம் செலவு செய்து தமிழாக்கிப் பதிவேற்றியிருக்கிறேன். பெயரை மட்டும் வைத்துக்கொண்டு தானியங்கிகள் மூலம் படிமங்களை நீக்கியிருந்தால் பல நாட்கணக்கில் செலவிட்டு உருவாக்கிய படிமங்கள் பல இல்லாது போயிருக்க வாய்ப்பு உள்ளது. தானியங்கிகள் மூலம் நீக்கும்போது என்ன நடைபெறுகிறது என்று அறியும் வாய்ப்பும் மற்றவர்களுக்குக் கிடையாது. பல நூற்றுக் கணக்கில் படிமங்கள் நீக்கப்பட்டிருப்பது இன்றுதான் எனக்குத் தெரிகிறது. தயவு செய்து பழைய படிமங்களை நீக்கும்போது கவனமாகச் செயற்படுங்கள். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள், எப்படிச் செய்யப்போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே அறிவியுங்கள். இதன்மூலம் இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை ஆராய முடியும். மயூரநாதன் 17:33, 25 மார்ச் 2008

(UTC)

மயூரனாதன், உங்கள் இரு கருத்துக்களையும் வழிமொழிகிறேன். ஆனால், இது போன்று படிமத்தை மேம்படுத்தி / தமிழாக்கி செய்யும் போது அதன் பெயரையும் மாற்றி பொதுவிலோ இங்கோ ஏற்றி விட்டு தத்தம் கணினியிலும் சேமித்துக் கொள்ள அனைவரையும் வேண்டுகிறேன். ஏனெனில் தமிழ் விக்கிப்பீடியர்களின் தானியங்கிப் பணிகளை நாம் உறுதி செய்யலாம். ஆனால், விக்கியிடை திட்டங்களில் இப்படி பொதுவிக்கி படிமங்களை அழிப்பதற்கென பல விக்கியிடை தானியங்கிகள் உலவிக் கொண்டிருக்கின்றன. அவற்றை நம்மால் கட்டுப்படுத்த இயலாது.

பொது விக்கி குறித்த ஒரு ஐயம் - பொது விக்கியில் நான் india.jpg என்று படிமத்தை ஏற்றி வைக்கிறேன். அதை விட சிறந்த படிமம் என்ற நோக்கில் இன்னொரு பயனர் அதே பெயரில் இன்னொரு படிமத்தை மாற்றிப் பதிவேற்ற அனுமதிக்கப்படுவாரா? ஆம் எனில், இது சில குழப்பங்களுக்கு வழி வகுக்கலாம். இரண்டாவது படிமம் சிறந்ததா என்பதை விட என்னுடைய படிமத்தை முதலில் நான் பதிவேற்றியதற்கு ஒரு காரணமும் அது நான் எழுதிய கட்டுரைக்கு பொருத்தமாகவும் இருப்பதாக கருதி இருக்கலாம். tamilnadu-map.jpg என்ற வரைபடத்தைத் தமிழில் சேர்க்கிறேன். இன்னொரு பயனர் அதே பெயரில் ஆங்கிலப் படிமத்தை ஏற்றினால் மயூரனாதன் சொன்னது போல் தமிழில் மாற்றி மெனக்கெட்டது எல்லாம் வீணாகப் போகும். இது போன்ற சிக்கல்கள் வரக்கூடுமானால், பிற மொழி விக்கியினர் இப்படி நம் படிமங்களை மாற்றி விடாமல் இருக்கு நாம் பதிவேற்றும் படிமங்களுக்குப் பின்னொட்டாக -tw போன்றவற்றைச் சேர்ப்பதை ஒரு கொள்கையாக கருதலாம். எடுத்துக்காட்டுக்கு, tamilnadu-map-tw.jpg --ரவி 17:57, 25 மார்ச் 2008 (UTC)

ஆ.வி.யில் இருந்து இங்கு பதிவேற்றம் செய்த பிறகு அந்த படிமம் அங்கு காமன்ஸுக்கு நகர்த்தப்பட்ட பிறகும் அதே படிமம் இங்கு இருக்குமியின், இங்குள்ள படிமம் காமன்ஸ் படிமத்தை Shadow செய்து விடும். காமன்ஸ் படிமங்களை Shadow செய்யும் படிமங்களை காட்ட கருவி உள்ளது.காண்க என் பயனர் பக்கம்.
தானியங்கியை நான் பயன்படுத்தவில்லை. காமன்ஸ் படிமத்தையும் இங்குள்ள படிமத்தையும் ஒப்புநோக்கிய பிறகே நீக்கினேன். நான் நீக்கிய அனைத்தும் காமன்ஸில் உள்ள படிமத்தின் நகல்.நீக்கள் பதிவுகள்.சரி பார்த்துக்கொள்க. அப்படியே தானியங்கியை பயன்படுத்தினாலும், அது பெயரை மட்டும் கொண்டு படிமங்களை நீக்காது. கோப்புகளை ஒப்புநோக்கிய பிறகே நீக்கும். காமன்ஸ் நகல் படிமங்கள் இங்கு இருக்க வேண்டிய தேவையே இல்லை. தானியங்கியை ஏவி காமன்ஸ் படிமங்களை Shadow செய்யும் நகல் படிமங்களை நீக்க பரிந்துரைக்கின்றேன்
டெரென்ஸ் கிட்டத்தட்ட அனைத்து படிமங்களும் காப்புரிமை வார்ப்புருக்கள் இட்டு விட்டார். காப்புரிமை விவரங்கள் இல்லா படிமங்களை பதிவேற்றியவர்களுக்கு தானியங்கி மூலம் அவர் விடுத்த எச்சரிக்கையினால் ஏற்கனவே படிமங்களை காப்புரிமை அற்ற படிமங்கள் என ஒரு தனி பகுப்பாகவே இட்டிருக்கிறது. காண்க பகுப்பு:காப்புரிமை நிலைமை அறியப்படாத அனைத்து படிமங்கள் மொத்தம் 56 படிமங்களே இதில் உள்ளன. இவற்றை காப்புரிமை விவரங்கள் ஏப்ரல் 6க்குள் சேர்ப்பது சுலபமே. விவரங்கள் தெரியாத பட்சத்தில் நீக்கி விடலாம்.
காமன்ஸில் ஏனோ தானோ என்றெல்லாம் உடனே படிமங்களை நீக்குவதில்லை(தெள்ளத்தெளிவாக அது காப்புரிமை மீறியது என தெரிந்தால் ஒழிய). படிமங்களை நீக்க முனைந்தால் தானியங்கி மூலம் எச்சரிக்கை விடுத்து கால அவகாசம் தந்து பிறகே நீக்குவர்.
எப்படியும் ஒரே பெயரில் படிமங்களை பதிவேற்றும் போது எச்சரிக்கை விடுக்கும், அந்த எச்சரிக்கையை கொண்டே பதிவேற்றுபவர் வேறு பெயரை மாற்றி விடுவார். அப்படியும் தவறுதலாக அதை Replace செய்தாலும், கோப்பை முன்நிலையாக்கும் வசதி காமன்ஸில் உண்டு. உழைப்பு வீணாக போகும் என்ற அச்சம் ஏதும் தேவையில்லை.
காமன்ஸ் கண்டு இவ்வளவு அச்சம் கொள்வது ஏன் என எனக்கு புரியவில்லை :-( వినోద్  வினோத் 18:51, 25 மார்ச் 2008 (UTC)
பொதுவிலும் இங்கும் உள்ளப் படிமனகளை நீக்குவதற்கு MD5SUMஐ ஒப்பிட்டு அது ஒன்றாயின் மட்டுமே நீக்கப்படுகிறது. படிமத்தில் தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தால் அல்லது ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் MD5SUM ஒன்றாக வராது. எனவே ஒரே base படிமத்தைப் பயன்படுத்தியிருந்தாலும் தானியிக்கு அவை இரண்டு வேறு படிமங்களே.
ரவி பொதுவில் நீங்கள் பதிவேற்ற்றும் போது பெயரீ முக்கியமாகும். அதாவது india.jpg என்பதை விட india with bla bla.jpg என்றவாறு பெயரிட்டால் அதை மாற்ற எத்தனிக்க மாட்டார்கள். இடங்களின் படிமங்களை பதிவேற்றுபவர்கள் எ+கா: Kandy market 2008 march.jpg என்றவாறு பெயரிட்டால் கண்டி மார்கெட்டின் இன்னொரு படிமத்தை வேறொருவர் Kandy market spice shop.jpg என்றவாறு பெயரிடலாம்.
--Terrance \பேச்சு 03:36, 26 மார்ச் 2008 (UTC)

803 படிமங்கள் வகைப்படுத்தப்படாமல் உள்ளன. அவையனைத்தும் காப்புரிமை நிலை அறியப்படாதவை என்றே படுகிறது. கோபி 04:11, 26 மார்ச் 2008 (UTC)

Encyclopedia of Life[தொகு]

--Natkeeran 23:18, 26 மார்ச் 2008 (UTC)

நிர்வாகிகள் கவனிக்க:பயனர் கணக்குகள் ஒருங்கிணைவு[தொகு]

நீங்கள் ஏதேனும் ஒரு விக்கிமீடியா திட்டத்தில் நிர்வாகியாக இருந்தால் அனைத்து விக்கிமீடியா திட்டங்களிலும் ஒரே பயனர் பெயரைப் பெற்றுக் கொள்ள இயலும். பார்க்க - சிறப்பு:MergeAccount --ரவி 06:15, 27 மார்ச் 2008 (UTC)

ஆம், நான் என் கணக்குகளை இணைத்துக்கொண்டேன். -- சுந்தர் \பேச்சு 06:54, 27 மார்ச் 2008 (UTC)
தகவலுக்கு நன்றி. நானும் கணக்குகளை இணைப்பித்துக் கொண்டேன். மயூரநாதன் 20:22, 29 மார்ச் 2008 (UTC)

சொல் உதவி தேவை[தொகு]

  • brand - வணிகச் சின்னம் ? சரிதானே?
  • boycott - புறக்கணிப்பு ?
  • transnational ?
வணிக நோக்கம் இல்லாதவற்றுக்கும் brand உண்டு. brand name, brand value என்பவற்றை நோக்கினால் சின்னம் என்பதும் பொருந்தாது. transnational = நாட்டிடை?--ரவி 20:20, 31 மார்ச் 2008 (UTC)
transnational - நாடுசாரா/நாடுதாண்டிய/நாடுகடந்த? international என்பதற்கு நாட்டிடை என்பது கூடுதல் பொருத்தமல்லவா? brand என்பதை நிறுவன அடையாளம் எனக் கொள்ளலாமா? ஏனெனில், சின்னம் மட்டுமல்ல brand என்பது சந்தையில் ஒரு நிறுவனத்தின் உருவமற்ற மதிப்பையும் அது குறிக்குமல்லவா? -- சுந்தர் \பேச்சு 05:15, 1 ஏப்ரல் 2008 (UTC)
International என்பதும் சொல்லளவில் நாட்டிடை என்றுதான் பொருள் தரும், ஆனால் அச்சொல் சுட்டும் பொருள் பன்னாட்டு அல்லது எல்லாநாட்டு (உலகளாவிய) என்று பொருள். Transnational என்பது நாடுகடந்த, ஒருநாட்டுக்கு மட்டும் இல்லாமல், என்பது பொருள். அதாவது பன்னாட்டு என்பதே பொருள். Multinational என்பது தெளிவாக பன்னாட்டு என்று பொருள்தருவது. மூன்று வேறு சொற்களாக ஆங்கிலத்தில் தென்பட்டாலும், சிறு சிறு நுட்ப வேறுபாடுகள் இருப்பது போல உணர்ந்தாலும், இடத்துக்கு இடம் மாறுபட்டாலும், அவை மூன்று ஆங்கிலச் சொற்களும் சுட்டும் பொருள் ஒன்றே - பன்னாட்டு என்பதே. எனவே நாம் பொருளை மட்டுமே கருத்தில் கொண்டு பன்னாட்டு அல்லது அனைத்துலக அல்லது உலக அல்லது உலகளாவிய என்று எழுதலாம். ஆங்கிலச்சொற்களோடு எந்தவிதமான சீரான சொல்லிணைகளும் இட வேண்டும் என்பதில்லை. பொருள் பொருத்தமாக இருந்து வெவ்வேறான சொல்லிணைகள் இருந்தால் இடலாம். கடற்கரை, ஆற்றங்கரை என்பதை ஆங்கிலேய மொழியில் beach, bank என்கிறார்கள். நாம் கனி, பழம் காய், பிஞ்சு என்பதை ஆஙகிலத்தில் fruit, fruit, unripe fruit, babyfruit (?) என்கிறார்கள். நாம் தமிழில் ஆக்கும்பொழுது நமக்குப் பொருள் ஏற்றதாக உள்ளதா என்பதைத்தான் பார்க்க வேண்டும். ஆங்கிலத்திலோ, பிறமொழிகளிலோ உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் நமக்கும் வெவ்வேறான சொற்கள் இருக்க வேண்டும் என்று தேட வேண்டியதில்லை (பொருள் வேறுபாடுகள் இருப்பின், அதனைக்குறிக்குமாறு சொல் ஆக்கலாம்). --செல்வா 14:10, 4 ஏப்ரல் 2008 (UTC)

Svg படிமங்களின் மொழிப்பெயர்ப்பு[தொகு]

மொழிபெயர்ப்பின் போது font-family:Lohit Tamil என்பதை பயன்படுத்தினால் rendering பிரச்சினைகள் குறையலாம். Image:ChristianityBranches ta.svg என்பதில் இதைக் கையாண்டேன். :Lohit Tamil என்ற எழுத்துருவைத்தான் பொதுகோப்பகத்தின் rendering கருவி தமிழுக்கு பயன்படுத்துகிறது. எழுத்துருவின் அளவு ம் ஏதோவகையில் rendering இல் பாதிப்பை செலுத்துவதுப் போலத் தெரிகிறது யாருக்காவது இது பற்றித் தெரியுமா?--Terrance \பேச்சு 14:45, 3 ஏப்ரல் 2008 (UTC)

ஆம், டெர்ரன்சு. நீங்கள் தந்த தகவலுக்கு நன்றி. இலதா எழுத்துருவைப் பயன்படுத்தினால் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. -- சுந்தர் \பேச்சு 08:38, 13 ஏப்ரல் 2008 (UTC)

பகுப்பு[தொகு]

கட்டுரைகளின் கீழ் வரும் categories என்பது பகுப்புக்கள் என்று வருகிறது. பகுப்புகளா அல்லது பகுப்புக்களா, எது சரி?--சிவகுமார் \பேச்சு 12:29, 4 ஏப்ரல் 2008 (UTC)

பகுப்புகள், வகுப்புகள் என்பன சரியானது.--செல்வா 13:42, 4 ஏப்ரல் 2008 (UTC)

System = ஒருங்கியம்[தொகு]

Control System என்பதற்கு கட்டுறுத்தியம் என்று சொல்லலாம். தனித்தனி சொற்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. System என்பதை அமைப்பு அல்லது அமையம் எனலாம். System என்பதற்கு ஒருங்கியம் என்ற சொல் மிகப் பொருத்தமானது. ஒருங்குதல் என்றால் பல்வேறு உறுப்புகளோ, கருத்துகளோ, அமைப்புகளோ ஒன்றோடு ஒன்று இணக்கமுற ஒன்றாக சேர்ந்து இயங்குதல். உடங்குதல் என்றாலும் இணக்கமுற இயங்குதல்/ஒன்றுதல் (harmonious) என்றே பொருள்படும். எனவே ஒருங்கியம் அல்லது உடங்கியம் என்றால் ஒத்து இயங்கும் ஓர் அமைப்பு முறை என்று பொருள்படும். Control System என்பதற்கு கட்டுப்பாட்டு ஒருங்கியம், கட்டுறுத்து ஒருங்கியம் எனலாம். Electrical system என்பதையும் அது ஒரு மின்னியல் ஒருங்கியம் எனலாம். ஒருங்கியம் என்னும் சொல்லின் அடிப்படை, பலவும் ஒன்று சேர்ந்து ஒன்றாக இயங்குவது என்பதுதான். --செல்வா 02:57, 5 ஏப்ரல் 2008 (UTC)

System என்பதற்கு சமைதியம் என்றும் சொல்லலாம். சமை என்றால் ஒரு சேர சேர்ந்து ஆக்குதல் என்று பொருள்படும்.--செல்வா 20:25, 5 ஏப்ரல் 2008 (UTC)

ஒருங்கியம் நன்றாக உள்ளது. சமைதியம் இயலுறு ஒருங்கியங்களுக்குப் பொருந்தாது, எனினும் செயற்கை ஒருங்கியங்களுக்குப் பயன்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 07:01, 14 ஏப்ரல் 2008 (UTC)

விக்சனரி தானியங்கித்திட்டம்[தொகு]

பயனர்:Sundar/விக்சனரி தானியங்கித்திட்டம் - இதை சரியான இடத்திற்கு நகர்த்தி விக்கிப்படுத்துங்கள் (குறிப்பாக படர்க்கையில் எழுத வேண்டும்.). பங்களிப்பாளர்களை வரவேற்கிறோம். -- சுந்தர் \பேச்சு 09:32, 6 ஏப்ரல் 2008 (UTC)

இணைப்பிலா நிலையில் விக்கிப்பீடியா மற்றும் விக்சனரி[தொகு]

http://www.blindedbytech.com/2006/08/31/how-to-install-wikipedia-for-offline-access/

http://users.softlab.ece.ntua.gr/~ttsiod/buildWikipediaOffline.html

--వినోద్  வினோத் 10:50, 6 ஏப்ரல் 2008 (UTC)