விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு65

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை - கண்டி[தொகு]

விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை ஒன்றை கண்டியில் நடாத்துவது பற்றி புன்னியாமீன் பேசியிருக்கிறார். பெரும்பாலும் திசம்பர் அல்லது சனவரியில் நடாத்தமுடியும். தமிழ் விக்கி ஊடகப் போட்டி பற்றியும் பரப்புரை செய்யவசதியாயிருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் 06:11, 21 நவம்பர் 2011 (UTC)

நல்ல விடயம். நிகழ்வு நன்றாக நடக்க வாழ்த்துக்கள். கண்டியில் என்றதும், அங்கே இப்போது நாமும் இருக்கக் கூடாதா என்று தோன்றுகின்றது :).--கலை 22:47, 21 நவம்பர் 2011 (UTC)
விருப்புரைக்கு நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 16:01, 22 நவம்பர் 2011 (UTC)

கண்டியில் விக்கி அறிமுகப் பட்டறையை சனவரி மாதத்தில் நடத்தக்கூடியதாக இருக்கும். இது நவம்பர் மாத இறுதிப் பகுதி ஆகையால் இலங்கைப் பாடசாலைகளில் ஆண்டிறுதிப் பரீட்சை நடைபெறும் காலமாகும். தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதுடன், இப்பட்டறையை ஒழுங்குசெய்துள்ள பாடசாலையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான இணைப்பு மத்திய நிலையமாக தொழில்படுவதால் டிசம்பர் மாதத்திலும் முடியாதுள்ளது. எனவே தற்போதைக்குத் திட்டமிடலில் சில சிரமங்கள் உள்ளன. டிசம்பர் மாத இறுதியில் இது சம்பந்தமான விரிவான திட்டமிடல் ஏற்பாடுகளை அறியத் தருவேன். இப்பட்டறையை சிவக்குமாருடன் இணைந்து (வசதிபடுமிடத்து ஏனைய சில இலங்கைப் பயனர்களையும் இணைத்து) முழுநாள் பட்டறையாக நடத்துவதும், கூடிய பயனர்களையும் தொடர்ச்சியான பங்களிப்பாளர்களையும் பெற்றுக்கொள்ள விளைவதுமே எனது அடிப்படை திட்டமாகும். --P.M.Puniyameen 05:22, 23 நவம்பர் 2011 (UTC)

விக்கி மாநாடு இந்தியா[தொகு]

இந்திய விக்கி மாநாடு சிறப்புற நடந்தேறிட வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 16:46, 22 நவம்பர் 2011 (UTC)

ஊடகப்போட்டி - ஒரு கிழமை நிறைவு[தொகு]

ஊடகப்போட்டி ஆரம்பித்து ஒரு கிழமை நிறைவடைந்துள்ளது. பல வழிகளிலும் பரப்புரைகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்விக்கித் திட்டங்கள், அச்சு ஊடகங்கள், மின் இதழ்கள், வானொலிகள், வலைத்திரட்டிகள், நிறுவனங்களின் இணையத்தளங்கள், போன்ற பொதுவான தளங்களிலும், தனிப்பட்டவர்களது வலைப்பதிவுகள் மூலமும் பரப்புரை செய்யப்படுகின்றது. அத்துடன் சமூக தளங்களான முகநூல், டிவிட்டர் மூலமும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. மேலும் நண்பர்கள், உறவினர், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் :) என அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமும் பரப்புரை செய்யும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விக்கிப்பீடியர்கள் அனைவரும் இணைந்து அனைத்து வழிமுறைகளிலும் பரப்புரை செய்து உதவினால் நன்று. வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் துண்டறிக்கையை தமது வலைப்பதிவுகளில் இணைக்கலாம். மேலும் முகநூல், டிவிட்டர், கூகிள் +, கூகிள் பஸ் போன்ற அனைத்து வழிகளிலும் அறிவிப்பைச் செய்து உதவலாம்.

ஊடகப் போட்டிக்கான முகநூல் பக்கம் அடிக்கடி இற்றைப்படுத்தப்பட்டு வருகின்றது. அவற்றையும் ஒவ்வொருவரும் தத்தமது பக்கங்களில் பகிர்ந்து கொள்வதன்மூலம் போட்டி அறிவிப்பு மேலும் பலரைச் சென்றடைய வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இதனை உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள - Share with Facebook

இந்நிலையில் இது தொடர்பான சில புள்ளிவிபரங்கள் கீழே உள்ளன.

பரப்புரையில்[தொகு]

 • போட்டி வலைவாசல் சுமார் 1000 முறை தினம் பார்வையிடப்படுகிறது
 • போட்டி ஆங்கில வலைவாசல் சுமார் 50 முறை தினம் பார்வையிடப்படுகிறது. அங்கே வரவு அதிகரித்து வருகின்றது.
 • முகநூல் பக்கம் 1200 தனி நபர்களைச் சென்றடைந்துள்ளது, சுமார் 12,000 பார்வைகள் கிடைத்துள்ளது. 182 பேர் பக்கத்தை விரும்பியுள்ளனர்.

பதிவேற்றப்பட்ட கோப்புக்கள்[தொகு]

 • 2291 கோப்புகள் வந்துள்ளன
 • 18 புதிய பயனர்கள் பதிவேற்றியுள்ளனர்.
 • 17 விக்கியர்கள் பதிவேற்றியுள்ளனர்
 • ஏற்கனவே பதிவேற்றப்பட்ட படங்கள், விக்கித் திட்டங்களில் பயன்படத் தொடங்கியுள்ளன. சுமார் 50 கோப்புகள் விக்கித் திட்டங்களில் இதுவரை பயன்பட்டுள்ளன.
 • போட்டியில் பங்கேற்ற பயனர்:Anton தற்போது விக்கியிலும் பங்களிக்கத் தொடங்கியுள்ளார்.

போட்டிக்காகப் பதிவேற்றப்பட்ட சில படங்கள்[தொகு]

மிக மிக மிகச் சிறப்பாகவும் துல்லியமாகவும் திட்டமிட்டு போட்டியை நடத்தி வரும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இப்போதே பல அருமையான, அழகான படங்கள் கிடைத்து உள்ளன. இன்றைய சிறப்புப் படத்துக்கான பஞ்சம் தீரும் :)--இரவி 12:39, 24 நவம்பர் 2011 (UTC)

WebFonts scheduled to go live on December 12[தொகு]

Looking at a website, only to be presented with little squares is the result of a computer not having the fonts necessary to show the characters used for a language. There is a modern method of providing people with a missing font; this is done by sending a font together with the text that is to be displayed.

The Localisation team of the Wikimedia Foundation is working hard to finish the WebFonts functionality. This will serve you with freely licensed fonts when these fonts are not present on your system. For regular users, there will be multiple fonts to choose from or to select none at all.

At translatewiki.net, we run the latest version of the WebFonts software at all times. This allows you to get familiar with the look and feel and follow its progress. To make it easy for you, we will copy the text of the article on your language from your wiki to the Portal:**/Webfonts page at translatewiki. The fonts that we use are the best Freely Licensed fonts we can find. For the Indic languages this is typically the Lohit font that is used in many Linux distributions.

The agenda of the localisation team is that WebFonts will go live on Monday December 12. At the India hackathon we learned about issues with some of the fonts and several issues we were able to resolve and others resulted in the filing of bugs at Red Hat. We are looking into having a triage meeting with Red Hat engineers to assess and address any and all issues.

When there are real issues that prevent the reading of the text, we may consider to postpone the WebFonts implementation for a particular language. We are open to technical solutions that improve the usability or acceptance. Apart from that, Wikipedia exist to bring information to everybody and WebFonts allows us to increase out audience.

We urge you to become part of the language support team for your language; language support teams are what we need because we cannot and do not know all the technical details of each language. Thanks, Gmeijssen 06:11, 25 நவம்பர் 2011 (UTC)

>>When there are real issues that prevent the reading of the text, we may consider to postpone the WebFonts implementation for a particular language. We are open to technical solutions that improve the usability or acceptance. Apart from that, Wikipedia exist to bring information to everybody and WebFonts allows us to increase out audience.

Gerard, We have already clearly indicated our position. There are "real issues" in Tamil with Lohit Tamil rendering. Unless it is fixed, we are not going to ask for a webfonts release for Tamil.--சோடாபாட்டில்உரையாடுக 06:24, 25 நவம்பர் 2011 (UTC)

சிறுகதைகள் ஒலிப்பதிவாக்கம்[தொகு]

பால்வண்ணம் பிள்ளை
(ஒலிவடிவ சிறுகதை)

பயனர்கள் Booradleyp மற்றும் Sodabottle ஆகியோர் சேர்ந்து புதுமைப்பித்தனின் கதை ஒன்றை ஒலிப்பதிவாக்கம் செய்து பதிவேற்றி உள்ளார்கள். நல்ல கதைத் தெரிவு. மிகவும் தெளிவான உச்சரிப்பு, ஒலிப்பதிவு. மிகவும் ரசித்துக் கேட்டேன். அ. முத்துலிங்கம் அவர்களும் அவரின் சிறுகதைகளின் ஒலிப் பதிவுகளை எனக்குத் தந்துள்ளார். அவற்றை விரைவில் பதிவேற்றுகிறேன். --Natkeeran 05:23, 27 நவம்பர் 2011 (UTC)

நன்றி நக்கீரன். ஒரு சோதனை முயற்சியாக செய்தோம். ஆனால் அதிக உழைப்பு தேவைப்படுகிறது. மூன்று பக்கங்களை பதிவு செய்து, சுத்தம் செய்து வலைப்பதிவேற்ற சுமார் ஒன்றரை மணி நேரமாகிவிட்டது. --சோடாபாட்டில்உரையாடுக 11:18, 27 நவம்பர் 2011 (UTC)
கேட்டேன்.அக மகிழ்ந்தேன்.சீரியப்பணி.சிறுகதைகளின் தந்தையான புதுமைப்பித்தனின் கதையை தெரிவு செய்தது இன்னும் சிறப்பு. அலைப்பேசியின் பயன்பாடு அதிகரித்து விட்டபடியால்,3gவடிவத்தில் பெற என்ன செய்யவேண்டும்?அதனை காமன்சில் பதிவேற்ற இயலுமா? 05:38, 28 நவம்பர் 2011 (UTC)உழவன்+உரை..


3gp பதிப்புரிமை கொண்ட கோப்பு முறையாகையால், காமன்சில் ஏற்ற இயலாது. காம்ன்சு கட்டற்ற கோப்பு முறைகளை மட்டுமே ஏற்றுக் கொள்கிறது. .ogg -.3gp மாற்றம் செய்யும் மென்பொருட்களும், கைபேசியில் ogg இனைக் கேட்கும் மென்பொருட்களும் சில இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன.--சோடாபாட்டில்உரையாடுக 06:20, 28 நவம்பர் 2011 (UTC)
எர்ர்.. சோடா, த.உழவன் 3 ஆம் தலைமுறை தொலைபேசி இணையத்தை குறிக்கிறார் என எண்ணுகிறேன் 3gp அல்ல. கைபேசிக்கென நாம் ஒரு தளத்தை உருவாக்கி இவற்றை "showcase" செய்யலாம். ஸ்ரீகாந்த் 09:05, 28 நவம்பர் 2011 (UTC)
கணினியை விட, கைப்பேசியின் ஆளுமை ஓங்குகிறது. எனவே, திட்டமிடக் கோருகிறேன். தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.வணக்கம்.03:39, 29 நவம்பர் 2011 (UTC)உழவன்+உரை..


கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா அறிமுகம் (நவம்பர் 26, 2011)[தொகு]

நவம்பர் 26, 2011 கோவை வேளாண்மைப் பல்கலையில் ஏறத்தாழ 260 இளம் பேராசிரியர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

நவம்பர் 26, 2011 அன்று மாலை தமிநாட்டில் கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ 260 இளம் பேராசிரியர்கள் அறிவியலாளர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய குட்டி அறிமுகம் தந்தேன். "விக்கிப்பீடியாவைப்" பற்றி அனைவரும் அறிந்தும் பயன்படுத்தியும் இருப்பதாகக் கூறினர், ஆனால் ஆங்கில விக்கிப்பீடியாவில் பங்களித்தவர் ஓரிருவரே. அங்கிருந்தவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் யாரும் தமிழ் விக்கிப்பீடியா என்று என்று ஒன்று உள்ளதையே அறியவில்லை என்பதை அறிந்து வியந்தேன். எல்லோரும் மிகவும் ஆர்வம் காட்டினர், தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்துத் தங்கள் அறிவைப் பகிர்ந்துகொள்வதாகக் கூறியுள்ளனர். வரும் திசம்பர் 7 ஆம் நாள் 2 மணி நேர விரிவான விக்கிப் பட்டறைக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.--செல்வா 01:52, 28 நவம்பர் 2011 (UTC)

 1. நல்ல முயற்சி செல்வா. பாராட்டுக்கள்--P.M.Puniyameen 03:10, 28 நவம்பர் 2011 (UTC)
 2. சிறப்பான முயற்சி. இனி வேளாண்மை குறித்த பல கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவிற்கு எதிர்பார்க்கலாம். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:20, 28 நவம்பர் 2011 (UTC)
 3. செயற்கரிய செய்வார் பெரியர்..அப்பயிலரங்கில், உங்களுடன் இணைபவரைப் பற்றி அறிய ஆவல்.05:44, 28 நவம்பர் 2011 (UTC)உழவன்+உரை..
 4. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் செல்வா.--சஞ்சீவி சிவகுமார் 06:18, 28 நவம்பர் 2011 (UTC)
 • உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. செய்திக்குறிப்பாகத்தான் இட்டேன். விளையும் பயனைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஒரு 10 பேராவது பங்களிக்க முன்வருவார்கள் என்று எண்ணுகிறேன். தமிழ்வழி வேளாண்மை அறிவியலைக் கூறும் மரபு தமிழகத்தில் சிறப்பாக உள்ளதால் இந்த எதிர்பார்ப்பு.--செல்வா 06:37, 28 நவம்பர் 2011 (UTC)

ஊடகப் போட்டி நிலவர அறிக்கை 2[தொகு]

ஊடகப் போட்டி இரண்டாம் வாரம் முடிந்துள்ளது. சில புள்ளிவிவரங்கள் பின்வருமாறு:

 • மொத்த கோப்புகள் : 2722
 • பங்கேற்ற புதிய பயனர்கள் : 48
 • பங்கேற்ற விக்கியர்கள் : 25
 • தமிழ் வலைவாசல் சுமார் 15000 முறை பார்வையிடப்பட்டுள்ளது
 • ஆங்கில வலைவாசல் சுமார் 1200 முறை பார்வையிடப்பட்டுள்ளது

போட்டிக்கு இவ்வாரம் வந்த சில படங்கள்:

இதுவரை வந்த அனைத்து படங்களையும் இங்கு காணலாம். போட்டி பற்றி மேலும் பரப்புரை செய்ய உங்கள் உதவி தேவைப்படுகிறது. இதனை உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள - Share with Facebook--சோடாபாட்டில்உரையாடுக 09:50, 29 நவம்பர் 2011 (UTC)

அனைத்துப் படங்களையும் காணக்கூடிய வகையான இணைப்பை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சோடாபாட்டில். அனைத்தும் அழகிய அற்புதமான படங்கள். கிராமியச் சூழலின் எழலும் வாசமும் நிழற்படங்களின் அணிக்கு மென்மேலும் அழகு சேர்க்கிறது. :) நன்றி. --தாரிக் அஸீஸ்  உரையாடுக  15:21, 29 நவம்பர் 2011 (UTC)

பொது வேண்டுதல்[தொகு]

ஒரு பொது வேண்டுதல்,

நம்மில் பலர் நமது பயனர் பக்கங்களில் பிறந்த தேதி, பெற்றோர் பெயர் பிறந்த ஊர் போன்றவற்றை இட்டு வருகிறோம். இவை அடையாளத் திருடர்களுக்கு பயன்படும் தகவல்கள். பயனர் பக்கங்களை யார் வேண்டுமென்றாலும் பார்வையிடலாம் என்பதால் இது ஆபத்தானது. இணைய வழி வணிகம்/வர்த்தகம், வங்கிக் கணக்குகள், பிற தளங்களில் கடவுச்சொல் மீட்பு ஆகியவற்றில் இத்தகவல்கள் பயன்படுகின்றன என்பதால், இவற்றை இட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். மிகக் குறைவான தகவல்களை மட்டும் இடும்படி கேட்டுக்கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:09, 1 திசம்பர் 2011 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா 42,000 கட்டுரைகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா 42,000 கட்டுரை எண்ணிக்கையை அடைந்த இந்த வினாடியில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். பங்களித்த அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.--P.M.Puniyameen 15:35, 1 திசம்பர் 2011 (UTC)

ஒவ்வொரு மைல் கல்லிலும் மகிழ்ச்சியடைகிறோம். தொடர்ந்து பங்களிப்போம்.--சஞ்சீவி சிவகுமார் 16:37, 1 திசம்பர் 2011 (UTC)


விக்கிப்பீடியா:வழு நிலவரங்கள்[தொகு]

வெகுநாட்களாக தள்ளிப்போட்ட இந்த பணியை இன்று முடித்தேன்.பக்கத்தில் உள்ள அனேக வழுக்களை சரிபார்த்து, பக்கத்தை இற்றைப்படுத்தினேன்.வழுக்கள் அனைத்தையும் மேற்பார்வை செய்ய எளிதாக இருக்க மேற்பார்வை வழு (tracking bug) ஒன்று திறக்கப்பட்டது. தமிழ் விக்கித்திட்டங்கள் தொடர்பாக பதியப்படும் எந்த ஒரு வழுவிற்கும் blocks எனும் பண்பிற்கு 32578 என்ற வழுவைக் கொடுத்தால் தமிழ் விக்கி வழுக்களை களையெடுப்போருக்கு வசதியாக இருக்கும். நன்றி. ஸ்ரீகாந்த் 19:09, 2 திசம்பர் 2011 (UTC)

நன்றி ஸ்ரீகாந்த். தமிழ் எழுத்துப்பெயர்ப்பு வசதி இப்போது தமிழ் விக்கியில் நன்றாக வேலை செய்வதாகத் தெரிகிறது. இதனை தமிழ் விக்கி செய்தியிலும் நிறுவ முடியுமா?--Kanags \உரையாடுக 20:45, 2 திசம்பர் 2011 (UTC)
கனக்சு,விக்கி செய்தியில் இங்கு நிறுவதற்கு முன்னாலே நிறுவப்பட்டதே. உங்கள் விருப்பத்தேர்வில் நீங்கள் தட்டச்சு கருவியை செயலிழக்கச் செய்திருக்கின்றீர்களா?, எனக்கு தெரிகிறதே. அல்லது நீங்கள் வேறு எதோ கேட்கிறீர்களா? ஸ்ரீகாந்த் 21:03, 2 திசம்பர் 2011 (UTC)
ஆமாம் இப்போது தெரிகிறது. நன்றி ஸ்ரீகாந்த்.--Kanags \உரையாடுக 22:42, 2 திசம்பர் 2011 (UTC)

பகிர்வி[தொகு]

Pagirvi.JPG

பகிர்வி எனும் நிரல்வரி (script) சார்ந்த புதிய கருவி ஒன்றினை பயனர் ஸ்ரீகாந்த் எபிரேய மொழி விக்கிப்பீடியாவிலிருந்து தனிப்பயனாக்கித் தந்துள்ளார். இது ஃபேஸ்புக் டுவிட்டர் மின்னஞ்சல் ஆகியவை மூலமாக நமது நண்பர்களோடு நாம் விரும்பிப் படித்த கட்டுரைகளையோ விக்கிப்பீடியாவின் பிற உள்ளடக்கப் பக்கங்களையோ (content pages) மிகவும் எளிதாகப் பகிர உதவும். பயன்படுத்திப்பார்க்கவும் நண்பர்களே! Face-smile.svg --சூர்யபிரகாசு உரையாடுக... 21:11, 3 திசம்பர் 2011 (UTC)

ஊடகப் போட்டிக்காக பரப்புரை செய்யும் பொழுது, சமூக வலைத்தளங்களின் திறனை அறிய முடிந்தது. இங்கு நாம் படிக்கும் / படைக்கும் தரமான கட்டுரைகளை நம் நண்பர்களுக்கு பகிர்ந்து கொண்டால் சிறு அளவிலாவது நம் வாசகர் எண்ணிக்கை உயரும், பங்களிக்க சிலர் வரலாம்(virally). வெளிஉலகில் பரப்புரை செய்வதுபோல மின்னுலகிலும் இம்மாதிரி பரப்புரை செய்தல் நன்று.அதனை எளிமைப்படுத்துவதற்கே இது. நன்றி ஸ்ரீகாந்த் 21:36, 3 திசம்பர் 2011 (UTC)
இணையப்பரப்புரைக்கு, மிக உதவிகரமானதை, தமிழுக்குக் கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி.வணக்கம்.00:31, 5 திசம்பர் 2011 (UTC)உழவன்+உரை..
2004-ம் ஆண்டுவாக்கில் கூகிள் தேடலில் மேலெழும்புவதற்குத் தேவையான நுட்ப நடவடிக்கைகள் சிலவற்றைச் செய்தோம். இன்னாள் தேவைக்கு, இந்தப் பகிர்வி பல மடங்கு பயன் தரக்கூடியது. இனி நானும் இதைப் பயன்படுத்துவேன். -- சுந்தர் \பேச்சு 13:25, 11 திசம்பர் 2011 (UTC)

Improved translation of Brandon's Letter[தொகு]

Dear All,

I've improved the translation of Brandon's Letter and changed the status to 'proofreading'. Can u please go thru it and do necessary to publish?

--Gpgarun 04:02, 7 திசம்பர் 2011 (UTC)

Yes check.svgY ஆயிற்று. Changed status to "Ready"--சோடாபாட்டில்உரையாடுக 04:07, 7 திசம்பர் 2011 (UTC)

இசைக்கருவி உதவி[தொகு]

A TAMILNADU musical instrument.jpg

ஊடகப் போட்டிக்கு வந்த கோப்புகளில் இது ஒன்று. இதில் உள்ள இசைக்கருவி எதுவென்று தெரியவில்லை. அடையாளம் காண உதவுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 15:39, 7 திசம்பர் 2011 (UTC)

இக்கருவி எக்காளம் எனப்படும் காற்றுக் கருவி. இதன் நீளத்திற்கு ஏற்றவாறு எழுச்சி மிக்க ஒலி எழுப்பக்கூடியது. இதன் ஒலி யானையில் பிளிறல் ஒலியைப் போலவே இருக்கும். இது தமிழகத்தில் கோவில் திருவிழா காலங்களில் மட்டுமே இசைக்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய பிற கருவி தாரை , கொம்பு முதலியன. தற்போது கேரள பகுதிகளில் வாசிக்கக் கூடிய கருவி கொம்பு என்ற கருவியாகும். இக்கருவி சற்று வளைந்திருக்கும். ஆனால் எக்காளம் வளையாமல் இருக்கும். இக்கருவியை வாச்சிக்க மிகுந்த மூச்சுப் பயிற்சியும் வலுவும் தேவை.--Parvathisri 00:40, 8 திசம்பர் 2011 (UTC) மேலும் [இங்கு

மிக்க நன்றி பார்வதி. படத்தில் சேர்த்துவிடுகிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 06:46, 8 திசம்பர் 2011 (UTC)

ஊடகப் போட்டி படங்கள்[தொகு]

ஊடகப் போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட படங்களை Slide show வாக காட்சிப்படுத்த ஏதும் நுட்பமுளதா? பரப்புரைக்கு இது வசதியாயிருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் 16:10, 10 திசம்பர் 2011 (UTC)

காமன்சில் Slideshow என்ற கருவியை உங்கள் விருப்பத்தேர்விற்கு சென்று தேர்வு செய்தால் பகுப்பு பக்கத்தில் Show Slideshow என்ற இணைப்பு உங்களுக்கு தோன்றும். நன்றி.ஸ்ரீகாந்த் 07:45, 11 திசம்பர் 2011 (UTC)
அருமையான கருவி ஸ்ரீகாந்து. அறியத்தந்தமைக்கு நன்றி.--Kanags \உரையாடுக 07:53, 11 திசம்பர் 2011 (UTC)
மிக்கநன்றி ஸ்ரீகாந்து.--சஞ்சீவி சிவகுமார் 09:28, 11 திசம்பர் 2011 (UTC)
நானும் அறிந்தேன்.நன்றி.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

விக்கிமீடியா நன்கொடை வேண்டலில் செங்கை பொதுவன்[தொகு]

விக்கிமீடியா அறக்கட்டளையின் வருடாந்திர நன்கொடை வேண்டலில் நமது செங்கை பொதுவன் ஐயாவின் கதையும்+வேண்டலும் கடந்த சில நாட்களாக இடம் பெற்று வருகின்றன. தற்சமயம் அமெரிக்காவிலிருந்து பார்வையிடுவோருக்கு மட்டும் தெரியும் வண்ணம் உள்ளது. விரைவில் பிற நாட்டுப் பயனர்களுக்கும் தெரியக்கூடும். அவரது வேண்டலுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக அறக்கட்டளை நன்கொடை வேண்டல் குழுவினர் தெரிவித்துள்ளனர்--சோடாபாட்டில்உரையாடுக 19:08, 11 திசம்பர் 2011 (UTC)

செங்கை பொதுவன் ஐயாவின் அழைப்பைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் அருமை. வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 07:59, 12 திசம்பர் 2011 (UTC)

தாவரப் பெயரீடு[தொகு]

பூக்குந்த தாவரங்களின் பெயரீட்டில் Monocotyledon என்பது ஒருவித்திலைத் தாவரம் என்றும் Dicotyledon என்பது இருவித்திலைத் தாவரம் என்றும் இரு வகையினவாகவே தாவரங்கள் முன்னர் அழைக்கப்பட்டன. எனினும் தற்காலத்தில் 2009 ஆம் ஆண்டின் APG III system (பூக்குந்தாவரக் கூர்ப்பொழுங்குக் குழு III முறை - Angiosperm Phylogeny Group III system) என்பதன் படி, இவை வேறு எட்டு வரிசையினவாகக் குறிக்கப்படுகின்றன. Monocotyledonae (Monocots), Eudicotyledonae (Eudicots) என்றவாறு பிரிக்கின்றனர். எனவே, இவற்றின் பெயரீடு தமிழில் பின்வருமாறு வகை குறிக்கப்பட வேண்டும்:

 • அம்பொரெல்லா (Amborella)
 • அல்லியம் (Nymphaeales)
 • அவுத்திரோபியன் (Austrobaileyales)
 • பசியவணி (Chloranthales)
 • மூவடுக்கிதழிகள் (Magnoliidae)
 • ஒருவித்திலையிகள் (Monocotyledonae)
 • மூலிகைக்கொம்புகள் (Ceratophyllum)
 • மெய்யிருவித்திலையிகள் (Eudicotyledonae)

தமிழ் விக்கிப்பீடியாவில் இருவித்திலைத் தாவரங்கள் எனக் குறிக்கப்பட்டுள்ள ஏராளமான இனங்கள் மெய்யிருவித்திலையிகள் என்று பகுக்கப்பட வேண்டியுள்ளது. எனவே, அவற்றைச் சரிபார்த்துத் திருத்துவதில் விக்கிப்பீடியர்கள் சற்றுக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.--பாஹிம் 07:52, 12 திசம்பர் 2011 (UTC)

பாஹிம் இருவித்திலை - மெய்யிருவிருத்தி மாற்றத்தை awb ஓட்டி செய்கிறேன். மெய்யிருவிருத்திகளுக்கு ஒரு கட்டுரை எழுதித் தாருங்களேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:15, 12 திசம்பர் 2011 (UTC)

சரி. நான் முயல்கிறேன்.--பாஹிம் 08:54, 12 திசம்பர் 2011 (UTC)

படங்களின் மேல்நிலைத் தரவு[தொகு]

படங்களை பதிவேற்றும் போது, உடன் பதிவாகும் படத்தின் மேல்நிலைத் தரவு(EXIF) தேதியையும் குறிப்பிடுகிறது.அதில் வரும் பிழையை நீக்குதல் எப்படி? எடுத்துக்காட்டாக,இப்படத்தின் கீழுள்ள மேல்நிலைத் தரவில் தேதி 10.12.2011 எனக் காட்டுகிறது. ஆனால், நான் படம் எடுத்தது 11.12.2011 தேதி. எப்படி இதனை மாற்றுவது? பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

EXIF Editors இணைப்பிலுள்ள மென்பொருட்கள் மூலமாகவோ, மென்பொருளை சேவையாக தரும்(SaaS) சில இணைய தளங்களை பயன்படுத்தியோ அவற்றை மாற்றலாம். சொந்த அனுபவம் இல்லை, அதனால் பரிந்துரை செய்ய இயலாது. :( உங்கள் படிமியில் தேதியை மாற்றுவது நல்லது, அது அமெரிக்க நேரம் பயன்படுத்துகிறது என நினைக்கிறேன். ஸ்ரீகாந்த் 07:49, 13 திசம்பர் 2011 (UTC)
காமென்சின் அனுபவம் வாய்ந்த நிழற்படக்காரர்கள் இத்தகைய குறிப்புகளை நீக்குவதனை அறிந்து கொண்டேன். மேலும் நீங்கள் கொடுத்த, மேல்நிலைத்தரவு மாற்றத் தொடுப்பும் நன்றாக செயல்படுகிறது. எனது படிமி/நிழற்படக்கருவியிலேயே தேதியை மாற்றிக் கொண்டேன். மிக்க நன்றி.வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

Statistical report of Indian language wiki projects - 2011 October[தொகு]

Dear All,

I am sharing the statistical report of Indian language wiki projects for the month of 2011 October. It is available here. https://blog.wikimedia.org/2011/12/12/indian-language-wikipedia-statistics-october-2011/


One interesting facts from this report is:

 • Nearly 4.3 crore readers are there for all Indic language wikipedias! This number is huge and increased by nearly 1/3 in just 1 month! So Indic wikis has huge existing reader base.

You can find more interesting facts about Tamil wikipedia and community from the report at https://blog.wikimedia.org/2011/12/12/indian-language-wikipedia-statistics-october-2011/

--Shijualex 11:09, 13 திசம்பர் 2011 Last 30 days(UTC)

தமிழ் விக்கிபீடியர்கள் வரிசைபட்டியல் கடைசி 30 நாட்கள் தொகுப்புகளின் எண்ணிக்கையில்[தொகு]

http://en.wikipedia.org/wiki/Wikipedia:List_of_Wikipedians_by_number_of_edits/1%E2%80%931000
List of Tamil Wikipedians by number of edit/1–100 Last 30 days
தமிழ் விக்கிபீடியர்கள் பட்டியல் கடைசி 30 நாட்கள் தொகுப்புகளின் எண்ணிக்கை வரிசையில் எப்படி அறிவது ?--ஸ்ரீதர் /பேசுக 03:34, 14 திசம்பர் 2011 (UTC)

கடைசி 30 நாட்களுக்குப் பார்க்க இயலாது. ஆனால் சென்ற மாதம் பட்டியலை இங்கு காணலாம். "50 recently active wikipedians, excl. bots, ordered by number of contributions" என்ற பகுதியில் இத்தரவுகள் உள்ளன. ஒவ்வொரு மாதம் 20ம் தேதி வாக்கில் முந்தைய மாததுக்கான தரவுகள் இற்றைப் படுத்தப்படுகின்றன. “ --சோடாபாட்டில்உரையாடுக 05:06, 14 திசம்பர் 2011 (UTC)