விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு47

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


விக்கிப் பயனர் யார்? பதிவர் யார்?[தொகு]

விக்கிப்பீடியா பதிவர்களை விக்கியர் என்றே அழைக்கின்றனர். ஆனால், சில இடங்களில் பயனர் என்றும் குறிப்பிடுகின்றனர். ஆனால் விக்கிப்பீடியாவில் எழுதுபவர் எப்படிப் பயனர் ஆவார் என்பதே எனது ஐயம். விக்கிபீடியாவால் பயன்பெறுவோரையே பயனர் எனலாம். விக்கிப்பீடியாவில் எழுதுவோரை, விக்கிபீடியாப் பதிவர் என்றே அழைக்கலாம்.(பார்க்க) என்று ஒரு வலைப்பதிவர் அவருடைய வலைப்பதிவில் குறிப்பிட்டு சந்தேகம் கொள்கிறார். அவருக்குப் பதிலளிக்க விரும்புபவர்கள் இங்கு அளிக்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி. 13:23, 24 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இங்கு படிப்பவர்/எழுதுபவர் பாகுபாடு ஒன்றும் பெரிதாக இல்லை என்பதைக் குறிக்கவே கணக்கு வைத்திருப்பவர் அனைவரும் விக்கி பயனர்களாகிறோம். மேலும் விக்கியில் எழுதுவோருக்கும் படிப்போருக்கும் பெரிய இடைவெளி எதுவும் இல்லை என்பதையும் இது குறிக்கிறது. பதிவர் என்பது வலைப்பதிவர்களால் அரசியலாக்கப்பட்ட ஒரு வார்த்தை. அது நம்மை “பீடிக்காமல்” :-) பார்த்துக்கொள்ள வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 13:32, 24 சனவரி 2011 (UTC)[பதிலளி]

சோடாபாட்டிலின் கருத்துச் சரியே. விக்கியைப் பொருத்தவரை எழுதுபவர்கள் அனைவரும் பயனர்களே, பயனர்கள் அனைவரும் எழுதுபவர்களே. அதுவே விக்கியின் பலம்.--Kanags \உரையாடுக 22:29, 24 சனவரி 2011 (UTC)[பதிலளி]

பயனர் என்றால் பயன் படுத்துவோர், பயன்கொள்வோர் என்னும் பொருள் கொண்டாலும், இங்கு எழுதுவோர், கட்டுரைகள் ஆக்குவோர், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி ஆக்கங்கள் செய்கிறார்கள் அல்லவா? மேலும் பிற கட்டுரைகளை இணைத்தும், படங்களைப் பயன்படுத்தியும் ஆக்கம் செய்வதால் நாமும் பயனர்களே. பயன் பெருக உழைப்பவர்கள். பங்காளிகள் என்றால் பங்கு பற்றுவோர் என்பது போல பயன் பெற பங்கு பற்றுவோர் பயனாளர்கள், பயனர் எனலாம். ஆங்கிலத்திலும் யூசர் (user) என்பதும் யூசர் ஐடி (userid) என்பதும் ஒரு முறையில் அல்லது ஓர் அமைப்பில் பங்கு பற்றுவோர்களையும் அதற்கான அடையாள குறிப்பெயரையும் குறிப்பது போல என்றும் கருதலாம். பயன் பெறுவோர், பயன்பெற பங்களித்து அதன் பயனாக இன்பம் பெறும் பயனர் ஆகிய இருவரையும் ஒருவாறு சுட்டும். --செல்வா 22:42, 24 சனவரி 2011 (UTC)[பதிலளி]
விக்கியில் எழுதுவதால் திருப்தி எனும் பயனைப் பெறுபவர்கள் என்றும் கொள்ளலாம்.அத்துடன் எழுதுபவர் எல்லாம் பிறருந் தகவல்களை நுகரவும் செய்கிறோம் அல்லவா? --சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:01, 24 சனவரி 2011 (UTC)[பதிலளி]

வெளியில் இருந்து கல்லெறிவோர்[தொகு]

விக்கிப்பீடியா தொடர்பில் வெளியில் இடம்பெறும் கருத்துக்களையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயமும் பொருப்புணர்வும் கூட விக்கிப்பீடியர்களுக்கு இருக்கவேண்டும். அதேவேளை விக்கிப்பீடியாவில் கட்டற்றத் தன்மை எவரையும் இதன் உள்ளே வந்து தமது கருத்துக்களை பதிய வாய்ப்பளிக்கிறது. பயனர் ஆக அல்லாமல் என்றால் கூட (IP இலக்கங்கள் ஊடாக) விக்கியில் சாத்தியமானது. அதனைவிடுத்து ஒருவர் வெளியில் இருந்து விடும் அறிக்கைகள் விமர்சனங்கள் அநேகமானவை வெளியில் இருந்து கல்லெறிதல் எனும் வகையையே சாரும்.

சிலர் இவ்வாறான செயல்பாடுகளை மாற்றுக்கருத்து என்று அழைத்துக்கொள்கின்றனர். மாற்றுக்கருத்து என்பது இரு திட்டத்தை முன்னெடுத்து செல்லும் போது எல்லோரும் சிந்திக்கும் வழிமுறையில் இருந்து மாறுப்பட்ட அதேவேளை ஏற்கத்தகுந்ததும் சிறந்ததுமான கொள்கையினை அல்லது திட்டத்தை முன்வைப்பதனைக் குறிக்கும். அவ்வாறான மாற்றுக்கருத்து சிந்தனைகள் வரவேற்கத் தகுந்ததும் ஆகும். அவ்வாறு அல்லாமல் ஒரு அமைப்பின் அல்லது திட்டத்தின் உள்நுழைந்து, ஆக்கப்பூர்வமான எதனையும் செய்யாமல், பங்களிக்காமல் வெறுமனே வெளியில் இருந்து விடும் அறிக்கைகள் கருத்துக்கள் "வெளியில் இருந்து கல்லெறிதல்" வகையானவை மட்டுமானதாகவே இருக்க முடியும். அதன் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்பதே எனது கருத்து.--HK Arun 05:37, 25 சனவரி 2011 (UTC)[பதிலளி]

கூகுள் டூல் கிட்[தொகு]

கூகுள் டூல் கிட் இப்போ கூகிள் டாக் கணக்கில் தெரியவில்லை. விக்கி சுட்டியில் இருந்து ஏற்றுவதற்கும் வழியில்லை. இனி எப்படி கூகிள் கணக்கு மூலம் கட்டுரை ஏற்றுவார்கள்? --குறும்பன் 23:29, 27 சனவரி 2011 (UTC)[பதிலளி]

http://translate.google.com/toolkit ? --இரவி 03:51, 28 சனவரி 2011 (UTC)[பதிலளி]


நாளாந்தம் 500 தொகுப்புகள்[தொகு]

அண்மைக் காலமாக தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தது 500 தொகுப்புகள் நாளாந்தம் செய்யப்படுகின்றன. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். தற்போது இந்திய விக்கிகளில் அதிகம் தொகுக்கப்படும் விக்கிகளில் தமிழும் ஒன்று. இந்த தொகுப்புக்களைப் புதுப் பயனர்கள் செய்வது இன்னும் உற்சாகம் தரும் விடயம். ஜெகதீஸ்வரன், புன்னியாமீன், சிவகுமார், சூரியப் பிரகாசு, செங்கைப் பொதுவன், சோடாபோட்டில் என ஒரு புதிய அணியின் வேகம் மலைக்க வைக்கிறது. மாகிர், தேனி, அருண், கலை, கனகு ஆகியோரின் பங்களிப்புகளும் சிறப்பாக உள்ளன. எனினும் பழைய பயனர்கள் மீண்டும் வந்து தொடர்ச்சியாக பங்களிக்க வேண்டும். --Natkeeran 05:33, 29 சனவரி 2011 (UTC)[பதிலளி]

பவுல், சிவகோசரன், டாக்டர் கார்த்தியினையும் இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள் :-). மேலும் புதிய கட்டுரைகளின் எண்ணிக்கையிலும் கடந்த இரு மாதங்களாக நாளொன்றுக்கு சுமார் 25 உருவாகுகின்றன. கட்டுரை எண்ணிக்கை அதிகமாவதால் புதிய பயனர்களின் கட்டுரைகளை விக்கியாக்கம், பகுப்பு சேர்த்தல், பிறமொழி விக்கியிணைப்பு சேர்த்தல் போன்ற வேலைகளும் அதிகமாகி உள்ளன. (இதுவரை இப்பணிகளில் ஈடுபடாத ) அனுபவமுள்ள பயனர்கள் இதில் கொஞ்சம் கவனம் செலுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:49, 29 சனவரி 2011 (UTC)[பதிலளி]

அண்மைக் காலங்களில் தமிழ் விக்கி வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் 7,000 கட்டுரைகள் வரை புதிதாக உருவாகியுள்ளன. பல புதிய பயனர்கள் ஆர்வத்துடன் உழைப்பதுதான் இதற்கு முக்கியமான காரணம். கடைசியாக வெளிவந்த புள்ளிவிவரங்களின்படி 2010 ஆம் ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியாவில் 214 புதிய பயனர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். இது, இதுவரை பங்களிப்புச் செய்தவர்களின் மொத்தத் தொகையை ஓராண்டில் ஏறத்தாழ 67% ஆல் உயர்த்தியுள்ளது. பிற இந்திய விக்கிகளுடன் ஒப்பிடும்போது ஆகக் கூடிய எண்ணிக்கை இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது. இணையத்துக்கு வெளியே பட்டறைகளை நடத்தியமை, பிற பரப்புரை நடவடிக்கைகள், கட்டுரைப் போட்டி என்பன இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணங்கள் எனலாம். இவ்வாறான நடவடிக்கைகளில் இந்தியாவிலும், இலங்கையிலும், பிற நாடுகளிலும் பல பயனர்கள் ஈடுபட்டு உழைத்துள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நீண்ட தூரம் பயணம் செய்து அலுவலகம் செல்லவேண்டியிருப்பது, அதிக பணிச்சுமை என்பவற்றினால் கடந்த சில கிழமைகளாக என்னால் போதிய அளவு பங்களிப்புச் செய்ய முடியவில்லை. விரைவில் வழமைபோல் என்பணி தொடரும். மயூரநாதன் 13:39, 29 சனவரி 2011 (UTC)[பதிலளி]

கடந்த ஆண்டு என்னால் பங்களிக்க முடியாமல் போய்விட்டது. இவ்வாண்டு எனது பங்களிப்புகள் தொடரும். அதேவேளை பட்டறைகள், பரப்புரைகள், கட்டுரைப்போட்டிகள் போன்றவற்றின் ஊடாக அறிமுகமாகி பங்களித்துவரும் பயனர்களை பட்டியல் இட்டுவந்தால், சக பயனர்கள் அறிந்துக்கொள்ள உதவும். புதிதாக பங்களிக்க முன்வருவோருக்கும் அவை ஒரு முன்னுதாரணமாகவும் இருக்க வாய்புள்ளது. --HK Arun 14:34, 29 சனவரி 2011 (UTC)[பதிலளி]

பரப்புரை விக்கியில் பயன்ர்கள் ஏன் விக்கிப்பீடியாவில் கணக்கு தொடங்குகிறார்கள் என ஒரு கணக்கெடுப்பு எடுத்தார்கள். நாமும் அது போல ஒர் முயற்சி செய்தால் புதுப்பயனர்களின் எதிர்ப்பார்பை அறிந்துகொள்ளலாம். கணக்கெடுப்பு முடிவுகள் சுட்டி

தமிழ் மொழியில் அளப்பரிய மிகப்பெரும் தாக்கம் ஒருங்குறி வழியாக ஏற்படும் வாய்ப்புக்கூறுகள் உள்ளதால் அதனை எதிர்க்கும் பணியில் பெரும்பகுதி நேரம் போகின்றது. உண்மையான நல் இன்பம் பயக்கும் கட்டுரையாக்கம் தடைபட்டு நிற்கின்றது. சரிவர தமிழர்கள் ஒன்றிணைந்து நடக்கவில்லை எனில் தமிழ்மொழி வரும் 10 ஆண்டுகளிலோ, 20 ஆண்டுகளிலோ உருத்தெரியாமல் மாறிவிடும் வாய்ப்பு மிக உள்ளது. இது ஒன்றும் மிகைப்பு அல்ல. இங்கு நான் இப்படி எழுதுவதே, நேரம் பதிவு செய்த ஒரு பதிவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே. என்னுடைய கூற்றுகள் பொய்த்துவிட்டால், என்னைவிட மகிழ்வோர் இருக்க மாட்டார்கள். தமிழ் மொழியின் எளிமை, நுணுக்கம், பொருள் ஒளிரும் சொல்லாக்கம், அறிவுச்செறிவு (மொழியின் அமைப்பில்) என்று பற்பலவற்றையும் அறியாது தமிழ் மொழியை முற்றிலுமாக சிதைக்க வலுவான நகர்வுகள் நடக்கின்றன. இதனை எதிர்க்க முயன்றுகொண்டிருப்பதால், என் பங்களிப்பு தடைபட்டுக் கிடக்கின்றது. இன்னும் ஒன்று. அண்மையில் நற்கீரனும் நானும் தஞ்சை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 34 தொகுதிகள் அடங்கிய பெரும் கலைக்களஞ்சியத்தின் முதல் 19 தொகுதிகளை (அறிவியல் கலைக்களஞ்சியம்) வரவழைத்துப் பெற்றுக்கொண்டோம். அதில் உள்ளகட்டுரைகள் மிக அருமையாக உள்ளன. ஆனாலும் அவற்றையும் விஞ்சும்படி, மேலும் புதிய கருத்துகளையும் நல்ல படங்களையும் இணைத்து மிக வியப்பூட்டும் நற்களஞ்சியக் கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் ஆக்கலாம். தஞ்சை பல்கலைக்கழகத்தின் கலைக்களஞ்சிய தொகுதிகள் ஒவ்வொன்றும் ஏறத்தாழ 1000 பக்கங்கள் கொண்டவை. இந்த 19 தொகுதிகளும், அறிவியலுக்கு மட்டுமே!! மீதி 15 தொகுதிகள் வாழ்வியல், பொருளியல் முதலியவை பற்றியவை. நம் விக்கிப்பீடியாவைத் தரமுடன் வளர்த்து முதலில் 50,000 கட்டுரைகளையும் அதன் பின் 100,000 கட்டுரைகளையும் என்று விடாது உயர்த்துவோம்.--செல்வா 15:53, 2 பெப்ரவரி 2011 (UTC)

ஒன்றிணைக்கலாமே?[தொகு]

ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள் அதிகமாக உள்ளன. இவற்றை தமிழ் விக்கி நிர்வாகிகள் ஒன்றிணைக்க முயற்சிக்கலாமே...? --தேனி.எம்.சுப்பிரமணி. 01:40, 30 சனவரி 2011 (UTC)[பதிலளி]

நன்றி சுப்பிரமணி. கவனிப்போம்.--Kanags \உரையாடுக 01:44, 30 சனவரி 2011 (UTC)[பதிலளி]
நிருவாகிகள் தான் செய்ய வேண்டும் என்றல்ல. கட்டுரை ஒன்றிணைப்பில், உள்ளடக்கங்களை இணைப்பது தான் நிறைய வேலை. நிர்வாகிகள் அல்லாதோரும் இதனைச் செய்யலாம். செய்து விட்டு பேச்சுப் பக்கத்தில் வரலாறுகளை இணைக்க வேண்டுமென்று குறிப்பு இட்டு விட்டால் வரலாற்றை நிருவாகிகள் இணைத்து விடலாம். --சோடாபாட்டில்உரையாடுக 03:27, 30 சனவரி 2011 (UTC)[பதிலளி]
கட்டுரையின் உள்ளடக்கங்களை இணைப்பது சற்று அதிகமான பணி என்றாலும் கட்டுரையின் வரலாறு மாற்றமாகிவிடக் கூடாது என்பதால் நிர்வாகிகள் ஒன்றிணைப்பதே சிறந்தது.--தேனி.எம்.சுப்பிரமணி. 05:39, 30 சனவரி 2011 (UTC)[பதிலளி]
உள்ளடக்கங்களை ஒன்றிணைத்தால் வரலாறு மாறாது. வரலாறுகள் இணைக்கப்பட்ட பின்னர் யார் முதலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்த்தார் என்பது தெளிவாக வரலாற்றுப் பக்கத்தில் இருக்கும். ஒன்றிணைப்பு என்பதில் இரு பகுதிகள் - உள்ளடக்கங்களை ஒரே கட்டுரையில் சேர்த்தல், பின்பு வரலாறுகளை ஒன்றிணைத்தல். நிர்வாகிகள் செய்தாலும் இரண்டையும் செய்ய வேண்டும். முன்னதை பிற பயனர்களும் செய்து உதவினால், நிருவாகிகள் பின்னதை செய்ய உதவியாக இருக்கும். விரைவில் பல ஒன்றிணைப்புகளை செய்து முடிக்கலாம்--சோடாபாட்டில்உரையாடுக 05:43, 30 சனவரி 2011 (UTC)[பதிலளி]

முதல் 1000 கட்டுரைகள்[தொகு]

http://stats.grok.se/ta/top இந்தக் கட்டுரைகளை மேம்படுத்த வேண்டும். -- மாஹிர் 04:19, 30 சனவரி 2011 (UTC)[பதிலளி]

நல்ல இணைப்பு மாகிர். தமிழ், தமிழர் தகவல்கள், பாலியல், தொழில்நுட்பம், புவியல் பற்றிய தகவல்களே பெரும்பாலும் முதல் 1000 இடம்பெற்று உள்ளன. --Natkeeran 15:48, 30 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இலச்சினை மாற்றம் தேவை[தொகு]

நமது த.வி-யின் இலச்சினை (Logo) ஆனது ஆங்கில விக்கியின் இலச்சினையிலிருந்து வேறுபட்டுள்ளது. பார்க்கவும்!.

வேறுபாடுகள்[தொகு]

  1. த.வி-யின் இலச்சினை மிகவும் பெரியதாக உள்ளது; அதே நேரம் ஆ.வி-யின் இலச்சினை சற்றே சிறியதாகவும் இருக்கிறது.
  2. உருசிய மொழிக்குக் கீழ் இருக்கும் எழுத்து உருக்குலைந்துள்ளது.(இங்கு!)
  3. கிரேக்க மொழிக்குக் கீழே இருக்கும் சீனம் பண்டைய சீனமாக இல்லாமல், எளிமைப்படுத்தப்பட்ட சீனமாக உள்ளது. (இங்கு!)
  4. மேலும் அந்த இலச்சினையில் தமிழ் எழுத்து வி உள்ளது. (இங்கு!) கீழே இறுதியாக உள்ளது. அது இங்கு இடம்பெறாதது ஒரு பெரிய குறை.
  5. இங்கிருக்கும் இலச்சினை .png (அ) .jpg வடிவம் என்று நினைக்கிறேன். ஆனால், ஆ.வி-யில் .svg (அளக்கத்தகு நெறிய வரைகலை) வடிவமாகும். எனவே மிகவும் தெளிவாக உள்ளது. (நீங்களே உணரலாம்!)
  6. எனவே நிர்வாகிகள் படத்தை மேற்காணும் இணைப்பில் இருந்து பதிவிறக்கித் தொகுத்து, மாற்றினால் நன்றாக இருக்கும்.

இது என் அவா!

--சூர்ய பிரகாசு.ச.அ. 09:54, 30 சனவரி 2011 (UTC)[பதிலளி]

என்னிடம் image editor கள் எதுவும் இல்லை. இதை எடுத்து இதில் சொருகினால் நீங்கள் சொன்ன மாற்றங்கள் ஏறிவிடும். photoshop அனுபவம் உள்ளவர்கள் செய்யலாம்--சோடாபாட்டில்உரையாடுக 10:17, 30 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இதையும் பார்க்க இந்திய மடற்குழுவில் விடப்பட்ட செய்தி ஸ்ரீகாந்த் 14:46, 2 பெப்ரவரி 2011 (UTC)

ஏற்கனவே அங்கு உருவாக்கப்பட்டு உள்ளது. --சி. செந்தி 19:24, 4 பெப்ரவரி 2011 (UTC)
அந்த இலச்சினையில் ப் விடுபட்டுள்ளதைக் கவனிக்கவும் செந்தில்...

--சூர்ய பிரகாசு.ச.அ. 06:13, 10 பெப்ரவரி 2011 (UTC)

ஒரு பயனரால் உருவாக்கப்பட்ட இலச்சினை சில மாற்றங்களுடன் மீள உருவாக்கப்பட்டுள்ளது; png கோப்பில் பிழை என்றால் மீண்டும் உருவாக்கலாம், அல்லது திறனாளர்கள் யாராவது svg கோப்பைப் பயன்படுத்தி png உருவாக்கமுடியும். மூலப்பிரதியில் எழுத்துரு(font) ஒரு படமாக உள்ளதனால் இடையில் "ப்" இடுவது சிரமமாக இருந்தது, இதனை ஒரு திறனாளர் உருவாக்கும் வரை இங்கே இடலாம் அல்லது மீண்டும் எழுத்துருவை உரிய முறையில் இட்டு என்னால் உருவாக்கமுடியும், ஆனால் சிறிது அவகாசம் தேவை. --சி. செந்தி 00:13, 11 பெப்ரவரி 2011 (UTC)

உடனடி உதவிக்கு நன்றி செந்தில். உங்கள் பணி பாராட்டத்தக்கது. இருப்பினும் ஒரு சிறு பிழை உள்ளது. கலைக்களஞ்சியம் ஒரே சொல். (அப்படித்தான் இலச்சினையில் உள்ளது) ஆனால் இதில் கலைக் களஞ்சியம் என்று உள்ளது. இச்சிறு பிழையை மட்டும் திருத்தித் தருமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நான் செய்த இன்னுமொரு தவறு என்னவென்றால் இங்கு காட்டாமலேயே அங்கே தரவேற்றம் செய்தமையே..! இதனைத் திருத்தி இங்கே காட்டிவிட்டுப் பின்னர் தரவேற்றம் செய்யலாம் என்று உள்ளேன், நன்றி.--சி. செந்தி 14:18, 11 பெப்ரவரி 2011 (UTC)
2Wikipedia-logo-v2-ta.svg எனும் பெயரில் இங்கேயே தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது, பார்த்து சரியென்றால் இங்கிருந்து நீக்கிவிட நிர்வாகிகளைக் கோருகின்றேன். --சி. செந்தி 16:29, 11 பெப்ரவரி 2011 (UTC)

இறுதி வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் இலச்சினை மாற்றம் குறித்த வேண்டுகோள் இங்கு முன்வைக்கப்படுகிறது. பயனர் w:User:logicwiki இப்பணியைச் செய்வதாகக் கூறியுள்ளார். அவருக்கு இறுதியாக ஓர் உறுதித் தகவல் தர வேண்டும். எனவே பயனர்கள் இங்கு தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள்[தொகு]

  1. நான் vector இலச்சினையை ஆதரிக்கிறேன். --சூர்ய பிரகாசு.ச.அ. 05:15, 25 பெப்ரவரி 2011 (UTC)
  2. எதுன்னாலும் எனக்கு ஓகே.--சோடாபாட்டில்உரையாடுக 05:32, 25 பெப்ரவரி 2011 (UTC)
  3. முதல் படம் நன்றாக உள்ளது. ஒன்றிரண்டு பிக்சல் கூட்டவேண்டும். -- மாஹிர் 05:55, 25 பெப்ரவரி 2011 (UTC)
  4. PNG இலச்சினைக்கு என் ஆதரவு. "கலைக்களஞ்சியம்" என்று ஒரே சொல்லாக இணைக்கலாமே!--பவுல்-Paul 06:25, 25 பெப்ரவரி 2011 (UTC)
  5. இரண்டு படங்களும் இப்போதுள்ள படத்தின் அளவை விடச் சிறியதாக உள்ளது போல் தெரிகிறது. அத்துடன் கலைக்களஞ்சியம் ஒரு சொல்லாக இருக்க வேண்டும். முதலாவது படத்தை இன்னும் தெளிவாக அமைத்தால் அதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது இரண்டாவது எனது தேர்வு.--Kanags \உரையாடுக 07:07, 25 பெப்ரவரி 2011 (UTC)
  6. இரண்டாவது முதலாவதைவிட நன்றாக உள்ளது. எழுத்துரு (Font) இன்னும் செம்மையாக இருக்கலாம்
    போல் தோன்றுகிறது. "பாமினி" போன்ற எழுத்துருக்கள் கூடிய செம்மையாக இருக்கும். பாமினி எழுத்துருவைக் கீழே பார்க்கவும்.

    -- மயூரநாதன் 10:36, 25 பெப்ரவரி 2011 (UTC)
  7. இரண்டாவது படம் பார்வைக்குத் தெளிவாக இருக்கிறது. ஆனால் அதில் கனக்ஸ் குறிப்பிட்டது போல் கலைக்களஞ்சியம் என்பது ஒரே சொல்லாக சேர்ந்து இருக்க வேண்டும். இதில் மயூரநாதன் குறிப்பிட்டது போல் செம்மையாகத் தெரியும் எழுத்துருவாக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:48, 25 பெப்ரவரி 2011 (UTC)
  8. இரண்டாவது படம் என் தேர்வு.ஆனால் பிக்சல் அதிகமாக வேண்டும்.பயனர்:balajichinna.
  9. முதலாவது, மயூரநாதனின் எழுத்துடன். --Natkeeran 06:02, 26 பெப்ரவரி 2011 (UTC)
    இரண்டும் ஒருபோலவே உள்ளன. கலைக்களஞ்சியம் ஒரு சொல்லாக அமைந்து எழுத்துரு தெளிவடைய வேண்டும். --மணியன் 06:09, 26 பெப்ரவரி 2011 (UTC)
  10. உள்ளே அமைந்துள்ள படத்தில், தமிழுக்கு பின் தோன்றிய மொழிகளின் எழுத்துக்கள் இருக்கும் போது, நம் தமிழ் மொழியினைக் குறிக்க என்று எழுத்தை கொண்டு வரவேண்டும். --தகவலுழவன் 06:02, 27 பெப்ரவரி 2011 (UTC)

விளக்கம்[தொகு]

இதில் ஒரு விடயம் கவனிக்கப்படவேண்டியது; அனைத்து விக்கிப்பீடியா வெக்டர் (SVG) இலச்சினைகளுக்கும் ஒரு பொதுவான பரிமாண அளவு உள்ளது (135×155 பிக்சல்கள்), இங்கு காட்டப்பட்டுள்ள வெக்டர் இலச்சினை 135×155 அளவுப்படி உருவாக்கப்பட்டது, இந்த வெக்டர் இலச்சினையைப் பயன்படுத்தி PNG கோப்பு உருவாக்கலாம்.

செயன்முறை: http://URL/padam.svg என்பது 135 பிக்சல்களாக உள்ளது, இதிலிருந்து 1350 பிக்சல்கள் padam.png உருவாக்குவதற்கு http://URL/padam.svg/1350px-padam.svg.png என்று எழுதவேண்டும். இதன்படி 135 பிக்சல் கொண்ட இந்தப்படத்தை

இவ்வாறு மாற்றலாம்

அல்லது இவ்வாறு மாற்றலாம்

எழுத்துரு செம்மையாக இல்லாததற்குக் காரணம், இது உருவாக்கப்பட்டது adobe illustrator பயன்படுத்தி, இதில் ஒருங்குறி எழுத்துக்களாக render செய்தால் கிடைக்கும் படத்தில் "வி" என்பது "வ" ஒருபுறத்திலும் அதன் விசிறி ஒரு புறத்திலும் (Glyph) காணப்படும். ஏற்கனவே [1] இங்கு தமிழ் எழுத்துரு ஒன்று பரிந்துரைக்கப்பட்டு இருந்தது (Jana-tamil - unicode), மேலும் இந்த எழுத்துருவைப் பயன்படுத்தி ஒரு மாதிரி உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது, அதில் "விக்கிபீடியா" என்று "ப்" இல்லது இருந்தது, அதனை உருவாக்கியவர் செய்த முறை எழுத்துருவைப் படமாகவே render செய்தது, அதனையே நான் செய்தேன். இப்போது பாமினி எழுத்துரு பரிந்துரைக்கப்படுவதால் Glyph சிக்கல் இருக்காது. --சி. செந்தி 12:01, 26 பெப்ரவரி 2011 (UTC)


  • தகவலுழவன் நீங்கள் கூறும் கருத்து எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்று. விக்கிமீடியா நிறுவனம் ஆனது விக்கிப்பீடியாவின் அதிகாரப்பூர்வ இலச்சினையாக இதனை வெளியிட்டுள்ளது. இதில் எழுத்துகளை மாற்ற நமக்கு உரிமை இல்லை. எனவே வி என்பதே சரி என நான் கருதுகிறேன். தெரிந்தவர்கள் மேலும் விளக்கலாம்.

--சூர்ய பிரகாசு.ச.அ. 12:37, 27 பெப்ரவரி 2011 (UTC)


கோப்புக்கள்[தொகு]

பாமினி எழுத்துருப் பயன்படுத்தி திருத்தியமைத்த புதிய PNG, SVG : இங்கே

இலச்சினைகள் விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது--சி. செந்தி 16:30, 1 மார்ச் 2011 (UTC)

வெக்டர் இலச்சினை
வெக்டர் இலச்சினை
பி.என்.ஜி இலச்சினை
பி.என்.ஜி இலச்சினை

இறுதி முடிவு[தொகு]

--சூர்ய பிரகாசு.ச.அ. 05:15, 1 மார்ச் 2011 (UTC)

இறுதி முடிவைப் பற்றிய கருத்துகள்[தொகு]

சூர்ய பிரகாசு, தாங்கள் இறுதி செய்துள்ள தமிழ் விக்கிப்பீடியாவின் இலச்சினையில் விக்கிப்பீடியா என்பதற்குக் கீழுள்ள கட்டற்ற கலைக்களஞ்சியம் என்பதில் கட்டற்ற கலைக்களஞ் என்பது தடிமனாகவும் (Bold) (கறுப்பு எழுத்தாகவும்), சியம் என்பது தடிமனின்றியும் (கறுப்பின்றியும்) உள்ளதே... இது என் கணினியில் மட்டுமா? பிற கணினிகளில் எப்படித் தெரிகிறது?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 07:38, 1 மார்ச் 2011 (UTC)

எனக்கு சரியாகத் தான் தெரிகிறது சுப்பிரமணி. svg பகுதி பகுதியாக render ஆவதால் உங்கள் கணினி/உலாவியில் அப்படியொரு தோற்றமளிக்கிறது என நினைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:56, 1 மார்ச் 2011 (UTC)
தடிமன் சிக்கல் இதுவரை யாரும் குறிப்பிடாத ஒன்று. இது உங்கள் உலவியின் சிக்கலாக இருக்கலாம். ஃபயர்ஃபாக்சு உலவியில் இது சிறப்பாகத் தெரிகிறது.

தோற்றப்பாடுகள் (Best viewed in)[தொகு]

  1. ஃபயர்ஃபாக்சு உலவி
  2. இண்டர்நெட் எக்சுபுளோரர்
  3. ஒபேரா (உலாவி)

நன்றிகள் கோடி[தொகு]

இந்தப் பணியில் எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி. கருத்துகள் கூறிய பயனர்களுக்கும் நிர்வாகிகளுக்கும், இலச்சினையின் மூல உருவாக்குனராக செயலாற்றிய சி. செந்தி அவர்களுக்கும், மயூரநாதன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பணி சிறக்க உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றி. --சூர்ய பிரகாசு.ச.அ. 05:15, 1 மார்ச் 2011 (UTC)

திட்டம் முடிந்தது[தொகு]

இந்த இலச்சினை மாற்றத் திட்டம் இனிதே நடந்தேறியது. உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி. --சூர்ய பிரகாசு.ச.அ. 15:23, 14 மார்ச் 2011 (UTC)

இலங்கை எழுத்தாளர்களின் நூல் விபரப்பட்டியல்[தொகு]

இந்தத் தலைப்பில் நடந்த உரையாடல் வார்ப்புரு பேச்சு:இலங்கைத் தமிழ் நூல்கள் என்ற பக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 08:28, 2 பெப்ரவரி 2011 (UTC)

விக்கி மேற்கோள் தளம்[தொகு]

விக்கி மேற்கோள் தளத்தினைப் புதுப் பொலிவு பெறச் செய்துள்ளேன். பார்க்கவும். http://ta.wikiquote.org வார்ப்புருக்களை மாற்றி முதற்பக்கத்தில் நிறைய திருத்தம் செய்துள்ளேன். இன்னும் செய்ய வேண்டும். உதவிப் பக்கங்கள், பிற இன்றியமையாப் பக்கங்களை எழுத வேண்டும். (அதுவரை சில காலம் விக்கிப்பீடியா ஓய்வு (may be)) (மேலும் தேர்வுகளும் வந்துவிட்ட காரணத்தினாலும்)

--சூர்ய பிரகாசு.ச.அ. 17:44, 1 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி. நல்லாக உள்ளது.

விக்கிநூல்கள் தளம்[தொகு]

அடுத்த துப்புரவு முயற்சியாக விக்கிநூல்கள் தளத்தை புதுப் பொலிவு பெறச் செய்துள்ளேன். பார்க்கவும் http://ta.wikibooks.org வார்ப்புருக்களை மாற்றியுள்ளேன். இன்னும் இன்றைய சிறப்பு நூல், குழந்தைகளுக்கான இன்றைய சிறப்புப் பக்கம் என்ற இரு வார்ப்புருக்களை முதற்பக்கத்தில் இட்டு முதற்பக்கத்தை மேலும் உள்ளடக்கம் உள்ளதாக மாற்ற வேண்டும். தேர்வுகள் முடிந்து விட்ட காரணத்தினால் இனி கொஞ்சம் கூடுதலாக வேலை செய்ய முடியும். மேலும் சமையல் நூலுக்கான உள்ளடக்கங்களை ஒரு பதிவரிடம் கேட்டுள்ளேன். நானும் கணினியியல் தொடர்பான ஒரு நூல் எழுதலாம் என்றுள்ளேன். (ஞாயிறன்று பதிவேற்றுகிறேன்)

என் எண்ணம் தற்போதுள்ள தமிழ் விக்கித் திட்டங்கள் எவையும் முடக்கப்படக் கூடாது என்பதுவே!

--சூர்ய பிரகாசு.ச.அ. 13:39, 11 பெப்ரவரி 2011 (UTC)

சூரியப் பிரகாசு, விக்கிநூல் தளத்தில் உங்கள் பங்களிப்புக் கண்டு மகிழ்ச்சி. ஏதாவது நிருவாக உதவி தேவைப்பட்டால் விக்கியில் எனது பயனர் பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 13:48, 11 பெப்ரவரி 2011 (UTC)


இலங்கையில் கட்டுரைப் போட்டி[தொகு]

தனிப்பக்கத்துக்க் மாற்றப்பட்டுள்ளது - விக்கிப்பீடியா:இலங்கை கட்டுரைப்போட்டி--சோடாபாட்டில்உரையாடுக 05:00, 28 பெப்ரவரி 2011 (UTC)

புதுவையில் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை[தொகு]

புதுவையில், பிப்ரவரி 20 அன்று தமிழ் விக்கிப்பீடியா பட்டறை ஒன்றை நடத்த இராச சுகுமாரன் உள்ளிட்ட நண்பர்கள் ஆர்வம் தெரிவித்து உள்ளனர். இது குறித்த ஏற்பாடுகளை உறுதிப்படுத்திக் கொண்டு மேல் விவரங்களைத் தருகிறேன். நன்றி--இரவி 13:07, 2 பெப்ரவரி 2011 (UTC)

நிகழ்வு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து கொங்கு மண்டலத்திலும், தென் தமிழ்நாட்டிலும் ஒரு அறிமுகக் கூட்டமாவது நடத்த முயல வேண்டும்.--இரவி 11:38, 3 பெப்ரவரி 2011 (UTC)
இதற்கு அடுத்த வார இறுதியில் கோவை பி. எஸ். ஜி கல்லூரியில் ஒரு பட்டறை நிகழ உள்ளது (பொதுமக்களுக்கல்ல, சிருஷ்டி 2011, தொழில்நுட்பத் திருவிழாவில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும்). தேதியும் நேரமும் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை (25, 26, 27 தேதிகளில் வரும்). ஒரு வாரத்துள் உறுதியான பின்னர் பக்கத்தை உருவாக்கி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:49, 3 பெப்ரவரி 2011 (UTC)

இந்திய விக்கிகள் தரவரிசை[தொகு]

இந்திய விக்கியர் மடற்குழுமத்தில் இந்திய விக்கிகள் தர வரிசை பற்றிய ஆவணம் ஒன்று முன்வைக்கப்பட்டது. இந்த வரிசைப்படுத்தலுக்கான சமன்பாடு எந்த அளவு சரி என்பது ஆய்வுக்குட்பட்டது. எனினும், தமிழ் விக்கிப்பீடியா நல்ல நிலையில் உள்ளது :)--இரவி 13:44, 2 பெப்ரவரி 2011 (UTC)

தமிழ் 2,3 ஆகிய இடங்களில் இருப்பது சரியான கணிப்பாகவே எனக்கும் தோன்றுகின்றது. --செல்வா 16:02, 2 பெப்ரவரி 2011 (UTC)
  • இந்திய விக்கித் தர வரிசையில் இந்தி மொத்தத் தரத்தில் முதலிடத்திலிருந்தாலும் சிறப்புத் தர அடிப்படையில் 9 வது இடத்தில் உள்ளது. தமிழ் மொத்தத் தரத்தில் 2 வது இடத்திலும், சிறப்புத் தர அடிப்படையில் 3 வது இடத்திலும் இருப்பதால் தமிழ் முதல் நிலையிலேயே இருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்வோம்.--தேனி.எம்.சுப்பிரமணி. 16:30, 2 பெப்ரவரி 2011 (UTC)
தமிழில் குறைவான கட்டுரைகள் இருந்தாலும் 200 MB யில் நிறைவாக இருக்கிறது. மராத்தியில் தமிழைவிட இருமடங்கு கட்டுரைகள் இருந்தாலும் ~76MB தான் உள்ளது. தொகுப்புக்கள் தமிழில் குறைவாக உள்ளது. இது புதிய கட்டுரைகளை இடுவதில் மட்டுமே இருக்கும் ஆர்வத்தையும் கூட்டு முயற்சி (Colloborative effort) இல்லாததையும் சுட்டுவதாகத் தோன்றுகிறது. விக்கியின் எவரும் தொகுக்கலாம் கொள்கை குறித்து விக்கியைப் பயன்படுத்துவோருக்கு புரியாதிருக்கலாம். விசமத் தொகுப்புகளைத் தவிர்த்து அநாமதேயப் பயனர்கள் எந்தப் பிழையையும் திருத்துவதை கூடுதலாக காணவில்லை.
கூடுதலான புதுப்பயனர்களின் வருகையை யொட்டி 2011ஆம் ஆண்டில் தமிழ் முதலிடத்தை எட்டும் என நம்பலாம்.--மணியன் 17:17, 2 பெப்ரவரி 2011 (UTC)
indic என்பதற்கு இந்திய என்பதைவிட துணைக்கண்டத்து அல்லது இந்தோ என குறிப்பிடலாமா ? பட்டியலில் நேபாலி, சிங்களம் முதலியன உள்ளன.--மணியன் 17:17, 2 பெப்ரவரி 2011 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் பல்வேறு அம்சங்களிலும் ஒரு சம நிலையிலேயே இருக்கிறது. இந்த நிலையைத் தக்க வைத்துக்கொண்டு மேலும் முன்னேற வேண்டும். பயனுள்ள தலைப்புக்களில் ஆழமான நல்ல கட்டுரைகளை உருவாக்க வேண்டியது அவசியம். கட்டுரைகளின் எண்ணிக்கையையும் கூட்டுவதற்கான நடவடிக்கைகள் தேவை. நீண்ட காலமாகக் கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா 67, 68 ஆம் இடங்களிலேயே இருக்கிறது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கட்டுரை எண்ணிக்கை ஒப்பீட்டளவில் வேகமாக அதிகரித்தது. இந்த ஆண்டிலும் இவ்வேகம் குறையாமல் பேணிக்கொள்ள வேண்டும். மயூரநாதன் 18:53, 2 பெப்ரவரி 2011 (UTC)
கூட்டாக்கத்தை வலியுற்றுத்த வேண்டியதன் தேவை புலனாகிறது. மற்றபடி, இப்போது இருக்கும் தரத்தைத் தக்கவைத்துக் கொண்டு மேலும் முன்னேற வேண்டும். கட்டுரை எண்ணிக்கையில் உடனடியாக ஒரு மூவாயிரம் கூடினால் மூன்று இடங்கள் முன்னேறலாம். அதற்கு ஒரு தானியங்கித் திட்டம் இருக்கிறது. நிறைகுறைகளை அலசி முடிவெடுப்போம். -- சுந்தர் \பேச்சு 12:28, 3 பெப்ரவரி 2011 (UTC)

மணியன் சுட்டியபடி, தமிழ் விக்கியில் கூடிக் கட்டுரையாக்குவது குறைந்துள்ளது கவனிக்கத்தக்க போக்கு. தமிழ் விக்கி தொடங்கிய காலத்தில் கூட்டுழைப்பும், விக்கியாக்கங்களும் கூடுதலாக இருந்தன. நம்மை விட குறைவாக தானியங்கித் தொகுப்புகள் செய்யும் மலையாள விக்கியர் கூட்டுக் கட்டுரையாக்கத்தில் முன்னிற்பதைக் காண முடிகிறது. தர வரிசையில், 10 ஆயிரம் கட்டுரைக்குக் குறைவாக உள்ள சிங்கள விக்கியை விட்டுப் பார்த்தால், தமிழ் தரம்-ஒட்டுமொத்தம் ஆகிய இரண்டு வகைகளிலும் இரண்டாம் இடத்தில் உள்ளது. மலையாள விக்கியும் தமிழ் விக்கியுமே ஒப்பு நோக்கத்தக்க சீரான வளர்ச்சியைக் கொண்டுள்ளன--இரவி 11:41, 3 பெப்ரவரி 2011 (UTC)


கூட்டுக் கட்டுரையாக்கம் குறைவாக இருப்பதின் ஒரு நல்ல பக்க விளைவு - கட்டுரைகளின் துறைகள் பலவாகியுள்ளன. தொடர் பங்காளிப்பாளர் அனைவரும் தனிக்கடைகளில் டீ ஆத்துவதால் தமிழ் விக்கிப்பிடீயாவின் வீச்சு துறைநோக்கில் பரந்து பட்டு உள்ளது :-). ஆங்கில விக்கிக் கட்டுரைகளின் பிற மொழி இணைப்புகளைக் காண்கையில் இது புலனாகிறது. பெரும்பாலான இந்தோ மொழி விக்கிகளில் திரைப்பட/புவியியல் கட்டுரைகளே அதிகம். நாம் இதனை ஓரளவு தவிர்த்து hard sciences/humanities நிறைய ஆக்கியுள்ளோம்.--சோடாபாட்டில்உரையாடுக 13:55, 3 பெப்ரவரி 2011 (UTC)
சுந்தர், உங்கள் தானியங்கித் திட்டத்தை முன்வைத்தால், அதைச் செயல்படுத்தும் வழிவகைகள் குறித்துக் கலந்துரையாடலாம். மயூரநாதன் 18:17, 5 பெப்ரவரி 2011 (UTC)
நம்மால் (தமிழ் விக்கியால்) பெரிய அளவில் வளர முடியும், வளரவும் வேண்டும். இருக்கும் தடைகளையும், அவற்றை நீக்கும் வழிகளையும் அறிந்திருந்திருந்தாலும், இன்னமும் போதிய அளவு முழுத் தாக்கம் தரும்படி செயல்படுத்த முடியாமல், தமிழுக்கு நேரவிருக்கும் கெடுதிகளைப் பின்னணியில் தடுக்கும் முகமாகவே தீயணைப்புப் படை வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. உண்மையிலேயே ஆயிரக்கணக்கான நல்ல கட்டுரையாளர்கள் உள்ளார்கள்! மிகப்பெரும் நல்லாக்கம் தரக்கூடியவர்கள். அவர்களை ஈடுபடுத்த முடியும்.முனைப்பாக இயங்கினால் 2 ஆண்டுகளுக்குள் அவர்களில் பலரும் நிலைக்கும் அளவில் பங்களிப்பர். எனக்கு நல்ல நம்பிக்கை உள்ளது! இதுகாறும் தமிழ்விக்கிப்பீடியா ஆற்றிய பணியும் ஓர் ஒப்பரிய ஒன்று! இனி வருங்காலங்களில் இன்னமும் பன்முகமாக வளரும்!--செல்வா 02:47, 7 பெப்ரவரி 2011 (UTC)

மீண்டும் நான்[தொகு]

ஓ நண்பர்களே!

வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள்? நான்தான் உங்கள் ஞானப்பிரகாசன். மீண்டும் வந்திருக்கிறேன். இம்முறை கணிணி வழியே.

ஆம். இத்தனை நாட்களாகக் கைப்பேசி வழியாக மட்டுமே விக்கிப்பீடியாவில் இயங்கிக் கொண்டிருந்த நான் அண்மையில் கணிணி வாங்கி விட்டேன். சில நாட்களுக்கு முன்புதான் கணிணியில் தமிழைப் பதிவேற்றினேன். இன்னும் ‘தமிழ்99’-இல் தட்டெழுதக் கற்றுக் கொள்ளவில்லை. இப்பொழுதுக்கு ’ஃபொனடிக்’கில்தான் தட்டெழுதெத் தெரியும்.

இதுவரை கணிணி இல்லாததால்தான் என்னால் பெரிதாக எதுவும் பங்களிக்க முடியவில்லை. விரைவில் ‘தமிழ்99’ கற்றுக் கொண்டு வருகிறேன். அதன் பின் என்னிடம் நீங்கள் பெரிதாக எதிர்பார்க்கலாம்.

உங்கள் அன்பன்: --இ.பு.ஞானப்பிரகாசன் 11:18, 4 பெப்ரவரி 2011 (UTC)

மகிழ்ச்சி ஞானப்பிரகாசன்! தங்கள் பங்களிப்புகள் பெருகட்டும். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 11:35, 4 பெப்ரவரி 2011 (UTC)
ஞானப்பிரகாசன் வாழ்த்துக்கள். கணினி இல்லாதிருந்தும் நீங்கள் ஆர்வமுடன் செயல்பட்டு வந்துள்ளீர்கள். இப்பொழுது கணினியும் இருப்பதால் பங்களிப்புக்களைச் சுலபமாகச் செய்யமுடியும். உங்கள் முன்னேற்றத்தையும் கவனித்துக்கொண்டு தமிழ் விக்கிப்பீடியாவும் வளர உதவுங்கள். மயூரநாதன் 13:03, 4 பெப்ரவரி 2011 (UTC)

விக்கிமீடியா மென்பொருள் மேம்பாடு[தொகு]

விக்கிமீடியா மென்பொருள் 8 பெப்ரவரி மேம்படுத்தப்பட உள்ளது. இது சாவா நிரல்களைப் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. தமிழ் தட்டச்சுக் கருவி, வார்ப்புரு உதவி போன்ற நிரல்கள் தடைபடாதிருக்க உருவாக்குனர்கள் கவனிக்க வேண்டுகிறேன்.--மணியன் 04:45, 8 பெப்ரவரி 2011 (UTC)

Site notice அறிவிப்புகள் தற்போது கட்டுரைத் தலைப்பிற்கும் tabsக்கும் இடையில் வருவது இந்த மேம்படுத்தலினாலா ?--மணியன் 08:18, 8 பெப்ரவரி 2011 (UTC)
இல்லை இது முன்னரே இப்படித்தான் இருந்தது. கேஷை எடுத்துவிட்டுப் பார்த்தேன் நீங்கள் சொல்வது சரிதான். வித்தியாசமாக இருக்கிறது--சோடாபாட்டில்உரையாடுக 08:23, 8 பெப்ரவரி 2011 (UTC)

hotcat காலாவதியாகி விட்டது. தட்டச்சுக் கருவி வேலை செய்கிறது, மாஹிரின் கருவிகளும் வேலை செய்கின்றன. ஆங்கில விக்கியில் தகவல்பெட்டிகள் அனைத்தும் ஒழுங்காககத் தெரியவில்லை. இங்கு தெரிகின்றன.--சோடாபாட்டில்உரையாடுக 14:05, 8 பெப்ரவரி 2011 (UTC)

ஹாட்கேட் வேலை செய்யவில்லை. எந்த நிரலை எனது நெறியத் தோலில் (Vector skin) ஒட்டுவது? --சூர்ய பிரகாசு.ச.அ. 14:11, 8 பெப்ரவரி 2011 (UTC)
ஓரிரண்டு நாள் பொறுத்துப் பார்ப்போம். hotcat.js மூலத்தில் ஏதேனும் சரி செய்ய வேண்டுமா என்று. அங்கு சரி செய்ய வில்லையெனில் வழு எழுப்பி தெரிந்து கொள்வோம்--சோடாபாட்டில்உரையாடுக 14:27, 8 பெப்ரவரி 2011 (UTC)
importScript('MediaWiki:Gadget-HotCat.js'); இந்த நிரல் துடை தோல் கோப்பில் ஒட்டுங்கள் ஹாட்கேட் மீண்டும் வேலை செய்யும்.--சோடாபாட்டில்உரையாடுக 14:32, 8 பெப்ரவரி 2011 (UTC)

ஹாட்கேட் நல்ல நிரல் அனைவருக்கும் கிடைக்க மீடியாவிக்கி:Common.js ல் மேலுள்ள நிரலை ஒட்டுங்களேன். -- மாஹிர் 16:09, 8 பெப்ரவரி 2011 (UTC)

common.js இல் ஒட்டியுள்ளேன். ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 16:20, 8 பெப்ரவரி 2011 (UTC)
சோடாபாட்டில் மன்னிக்க, ஹாட்கேட் ஏற்கெனவே கருவி பட்டியலில் உள்ளதால் காமனில் தேவையில்லை. அதனை இணைத்ததாலோ என்னவோ இப்பொழுது வேற வழு வருகிறது. தயவு செய்து மீளமைக்கவும் -- மாஹிர் 17:46, 8 பெப்ரவரி 2011 (UTC)
மீளமைத்துவிட்டேன். --சோடாபாட்டில்உரையாடுக 17:57, 8 பெப்ரவரி 2011 (UTC)

தற்போது மீடியாவிக்கி 1.16க்கே மீளப்பட்டுவிட்டது.

--Natkeeran 03:26, 9 பெப்ரவரி 2011 (UTC)

எனக்கு விக்கி தேடுபொறியில் (மேல் வலது மூலை) இப்போது பிர்ச்சன்னை எழுந்துள்ளது. auto suggestions வருவதில்லை. மேலும் disabled textbox போலத் தோற்றமளிக்கிறது. வேறு யாருக்கும் இப்படி உள்ளதா? நேற்று செய்த மீளமைப்பில் வந்த பிரச்சனை. சரி செய்துவிட்டேன். --சோடாபாட்டில்உரையாடுக 06:55, 9 பெப்ரவரி 2011 (UTC)

Printing_in_Tamil_language[தொகு]

http://en.wikipedia.org/wiki/Printing_in_Tamil_language இந்தக் கட்டுரையை யாராவது முழுமையகா மொழி பெயர்த்துத் தந்தால் நன்றாக இருக்கும்.

தமிழ் அச்சிடல் வரலாறு ??

--Natkeeran 05:29, 8 பெப்ரவரி 2011 (UTC)

துவங்கியுள்ளேன். படிப்படியாக வளர்த்தெடுப்போம். --மணியன் 08:52, 8 பெப்ரவரி 2011 (UTC)
நன்றி மணியன். அருமையான மொழி பெயர்ப்பு, நல்ல கட்டுரை. --Natkeeran 03:26, 9 பெப்ரவரி 2011 (UTC)

அதிக interwiki இணைப்புகள்[தொகு]

அதிக interwiki (விக்கியிடை?) இணைப்புகள் கொண்ட கட்டுரைகள் http://toolserver.org/~hoo/dbq/dbq-121_4.txt தவியில் விடுபட்ட கட்டுரைகளை உருவாக்கலாம். -- மாஹிர் 05:06, 9 பெப்ரவரி 2011 (UTC)

  • ஒரு சில கட்டுரைகளை, இங்கு மாற்றுகிறேன். தொடுப்புக்கு நன்றி.மாகிர்--த* உழவன் 01:49, 10 பெப்ரவரி 2011 (UTC)

புறகருவிகள்[தொகு]

சில வாரங்களாக, ஆங்கில விக்கியில் இருப்பது போல கட்டுரைகளின் வரலாற்றுப் பக்கங்களில் புறக்கருவிகளுக்கு இணைப்புகள் தோன்றுகின்றன (பதிப்பு வரலாறு புள்ளிவிபரம், பங்களிப்பாளர் பட்டியல், பதிப்பு வரலாற்றில் தேட · பார்வையாளர்களின் எண்ணிக்கை, பக்கம் பார்க்கப்பட்ட புள்ளிவிபரம்). இதனைச் செய்யத் தெரியாமல் சில மாதங்களாக முழித்துக் கொண்டிருந்தேன். செய்தவருக்கு (லாஜிக்? மாஹிர்?) நன்றியும் பாராட்டுகளும். எப்படி செய்தீர்கள் என்று விளக்கினால் கீழிள்ள “edit counter", "articles created", வகையறாக்களையும் இணைக்க உதவியாக இருக்கும். --சோடாபாட்டில்உரையாடுக 04:30, 10 பெப்ரவரி 2011 (UTC)

தமிழிலும் இணைத்தால் நன்றாக இருக்கும். இருக்கிறது. பார்க்காமல் கூறிவிட்டேன். --சூர்ய பிரகாசு.ச.அ. 06:16, 10 பெப்ரவரி 2011 (UTC)

செய்தவரே தன் பங்களிப்பை மறந்துடார் :: என்ன சோடா நான் சொல்லி, நீங்க தானே பண்ணீங்க. ரொம்ப அதிகமா தொகுதாலே இப்படிதான். த.விக்கியில் பல மீடியாவிக்கி பக்கங்கள் 2004 யிலிருந்து அண்மைப்படுத்தாமல் உள்ளன.தனிப்பட்ட பக்கங்களை செய்யாமல் எல்லா பக்கங்களை ஒரு பார்வையிட்டு அண்மைப்படுத்தினால் பல வசதிகள் கிடைக்கலாம். சில நாட்களில் என் சொந்த வேலைகள் முடிந்தவுடன் இங்கு வருகிறேன்.இல்லைனா திருச்சியில் ஒண்ணா பண்ணுவோம். ஸ்ரீகாந்த் 03:45, 11 பெப்ரவரி 2011 (UTC)
ஆகா அது தானா இது. நான் நீங்கள் சொன்ன விக்கிப்பீடியா:பக்க வரலாறு மாற்றத்த மட்டும் நியாபகம் வச்சிருக்கேன். Histlegend அ மாத்துனது சுத்தமா நினைவு இல்ல :-). ஆம் திருச்சியில் மீதி மீடியாவிக்கி பக்கங்களையெல்லாம் இற்றை படுத்துவோம். குறிப்பா கீழே இருக்கும் கருவிப்பட்டையை (edit counter/articles created) சேர்க்க வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:01, 11 பெப்ரவரி 2011 (UTC)

தானுலவி தானியங்கிப் பணிகள்[தொகு]

எனது தானியங்கி கணக்கை மறுபடி புதுப்பித்துள்ளேன். இதன் ஒரு கட்டமாக பேரூராட்சிகள் (keyword: "ஒரு பேரூராட்சி") 540 கட்டுரைகள் காட்டுகிறது. இதற்கு பகுப்பு இடலாம் என்றிருக்கிறேன். தமிழ்நாடு தொடர்பான பேரூராட்சிகளுக்கு பகுப்பு:தமிழ்நாடு பேரூராட்சிகள் என்று கொடுக்கலாம் என்றிருக்கிறேன். இத்துடன் தகவற்பெட்டியில் சில திருத்தங்களும் செய்கிறேன். (மக்கள் தொகையில் கமா நீக்கவேண்டும் - வழு, சிற்சில தமிழாக்கம் (state_name=மாநிலம்)). பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் நீக்குகிறேன். ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும். பார்க்க.

மேலும், தகவற்பெட்டியில் எந்த சட்டமன்றத் தொகுதி என்று இணைக்கவேண்டியுள்ளது. சட்டமன்றத் தொகுதி கட்டுரைகளில் குறிப்பிடப்படும் ஊர்கள் எங்கிருந்து பெறப்பட்டது என்பது சரியாக தெரியாததால் தற்போதைக்கு அதனை இணைக்க முடியவில்லை. அது சரியாக, உறுதி செய்யப்பட்டால் அதனை அடுத்த இலக்காக ஓட்டலாம். -- மாஹிர் 16:37, 11 பெப்ரவரி 2011 (UTC)

தமிழ் விக்கி 28,000 கட்டுரைகள்[தொகு]

தமிழ் விக்கியில் கட்டுரை எண்ணிக்கை 28,000 ஐ நெருங்கிவிட்டது. இன்று இந்த எண்ணிக்கையைத் தாண்டிவிடுவோம். இதே உற்சாகத்தைத் தக்கவைத்துக் கொண்டால் மிக விரைவிலேயே 30,000 ஐயும் தாண்டிவிடலாம். பயனர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மயூரநாதன் 04:42, 12 பெப்ரவரி 2011 (UTC)

  • தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி!.--சூர்ய பிரகாசு.ச.அ. 06:35, 13 பெப்ரவரி 2011 (UTC)
  • உங்களின் வாழ்த்துக்களுக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி.--த* உழவன் 09:33, 13 பெப்ரவரி 2011 (UTC)

இராம்கி ஐயாவின் உரையாடல்[தொகு]

மக்கள் தொலைக்காட்சியில் இராம்கி ஐயாவினால் வழங்கப்பட்ட செவ்வி, காணொளி வடிவில்:

  • பகுதி 1
  • பகுதி 2
    • ஆழமான சிந்தனைகளை பாமரும் புரிந்துணர எடுத்துரைத்தார். அவ்வப்போது சென்னைத் தமிழ் வந்ததோ? நாம் செய்ய வேண்டுன குறித்தும் கூறியது, உயர்வாகும்.--த* உழவன் 09:19, 13 பெப்ரவரி 2011 (UTC).

இலங்கை எழுத்தாளர்களின் நூல்பட்டியல், சில குறிப்புகள்[தொகு]

இலங்கை எழுத்தாளர்களின் தமிழ் நூல்விபரப்பட்டியலை விக்கியில் ஆரம்பித்து தற்போது ஓரளவிற்கு நூல் விபரங்களை பதிவாக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை ஆரம்பிக்கும்போது இலகுவாகக் காணப்பட்டாலும்கூட, இதனை நடைமுறைப்படுத்தும்போது பாரிய திட்டமாகவே படுகின்றது. இதுவரை சுமார் 1000 இலங்கை தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை பட்டியலிட்டுள்ளேன். இன்னும் இதுபோன்ற பல மடங்குகள் உண்டு.

இந்நிலையில் இத்திட்டம் பற்றி சில முடிவுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலே ஆல மரத்தடிக்கு வந்தேன்.

தற்போதுள்ள பட்டியலில் புத்தகப் பெயர் தடித்த எழுத்தில் போடப்பட்டது. ஆனால், ஒரு சில பதிவுகள் இருக்கும்போது அதன் பாதிப்பு விளங்கவில்லை. பட்டியல் நீளும்போது கவர்ச்சிகரமற்றதாக இருக்கின்றது. இது தொடர்பாக தேனீ எம். சுப்பிரமணி தொடர்பு கொண்டிருந்தார். அதேநேரம், சரிந்த எழுத்துகள் வருவதும் பக்கத்தின் கவர்ச்சியை குறைக்கின்றது.

தற்போது இப்பட்டியல் வேலைகள் இடம்பெற்று வருவதினால் இதன் அமைப்பு முறை எவ்வாறிருக்கலாம் என்று ஓர் இறுதியான முடிவுக்கு வருமிடத்து அதன் படியே செயல்பட்டுச் செல்லலாம் எனக் கருதுகின்றேன்.

இவ்விடத்தில் எனது சில ஆலோசனைகள்

  • நூலின் பெயர் சாதாரண எழுத்தில் மேற்கோள் குறியிட்டு எழுதுவது.
  • நூலாசிரியரின் பெயரை சிறு கோடிட்டு நூலின் பெயருடன் இணைத்து எழுதுவது.

உதாரணமாக - க. டொமினிக்

  • விசேட குறிப்புகள் இருப்பின் அல்லது வெளியீட்டு விபரம் இருப்பின் அதனை அடைப்புக்குள் போடுவது.
  • பதிப்பு ஆண்டு, ISBN ஆகியவற்றை சாதாரண எழுத்தில் போடுவது.

இது குறித்து ஏனைய பயனர்களும் கருத்துகளை தெரிவிக்குமிடத்து இறுதித் தீர்மானத்திற்கு வரலாம். தற்போதே முடிவெடுத்துக் கொண்டால் தற்போது உள்ளவற்றை படிப்படியாக மாற்றுவதுடன் இதன் பின்பு பதிவேற்றம் செய்பவற்றை புதிய முறைப்படியே பதிவேற்றம் செய்யலாம்.

ஒரு அன்பான அழைப்பு

இலங்கையைப் பொறுத்தமட்டில் விக்கியில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த திட்டம் எதிர்காலத்தில் பயன்தரும் ஒரு திட்டமாக அமையலாம். ஏனெனில், விக்கியைப் பொறுத்தமட்டில் காணப்படும் திறந்த தன்மை இப்பட்டியலை ஓரளவிற்காவது நிறைவடைய செய்ய ஒத்துழைப்பாக இருக்குமெனக் கருதுகின்றேன்.

எனவே, விக்கி பயனர்கள் தம்மிடமுள்ள நூல்கள் தான் படிக்கும் நூல்கள் போன்றவற்றை இயலுமான வரை பதிவேற்றம் செய்து இக்கூட்டுத் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அன்பான அழைப்பு விடுக்கும் அதேநேரத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள வார்ப்புருவில் பிரதான தலைப்புகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. நூல் பகுதிகளை பயனர்கள் இலகுவாக இனங்கண்டு கொள்ளக்கூடியதாக வார்ப்புருவில் முதலில் நூல் பகுப்பாக்க முறை பற்றி விரிவு கட்டுரை ஒன்றும் உள்ளது. அதனை படிக்குமிடத்து குறிப்பிட்ட நூலை எந்த பகுப்பில் சேர்க்கலாம் என பயனர்களால் தீர்மானித்துக் கொள்ள முடியும்.

மிக்கநன்றி --P.M.Puniyameen 05:23, 13 பெப்ரவரி 2011 (UTC)

பன்னாட்டு நூலகள்/அறிவியல் பத்திரிக்கைகளில் மேற்கோள் சுட்டும் முறையினை பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. கீழே ஒரு எடுத்துக்காட்டு தந்துள்ளேன். நமது cite book வார்ப்புருவும் இதே முறையினைக் கையாளுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 06:22, 13 பெப்ரவரி 2011 (UTC)

Mumford, David (1999). The Red Book of Varieties and Schemes: Includes the Michigan Lectures on Curves and Their Jacobians (2nd ed.). Springer-Verlag. ISBN 354063293X.

ஆசியர் பெயர். (2011). நூலின் பெயர். இடம்: பதிப்பகம். ISBN xxxxxx.[2][3]
மேலும் பல நூல்கள் நூலகத் திட்டத்தில் ஏற்கனவே உள்ளன. எனவே அவற்றுக்கு இணைப்புத் தரலாம். என்னிடமும் ஒரு 40 - 50 நூல்கள் உள்ளன. --Natkeeran 06:36, 13 பெப்ரவரி 2011 (UTC)


சோடாபாட்டில் / Natkeeran இம்மாதிரி சரிவருமா? உதாரணத்திற்கு ஒன்று கீழே

  • ஓ. கே. குணநாதன். (1வது பதிப்பு: ஐப்பசி 2004), ஆடித் தீ, மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், ISBN 955-8715-18-2

--P.M.Puniyameen 07:05, 13 பெப்ரவரி 2011 (UTC)

மேற்கோள் சுட்டுவதும், நூல்களின் பட்டியலில் பட்டியலிடுவதும் வெவ்வேறு. சோடா, மற்றும் நற்கீரன் தந்துள்ளது மேற்கோள்களுக்குப் பொருந்தும். ஆனால் புன்னியாமீனின் பட்டியலுக்குப் பொருந்தாது. நூலின் பெயர் முதலில் வர வேண்டும். எனது பரிந்துரை:
  • நூலின் பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பகம், இடம், ஆண்டு, ISBN.

நூலின் பெயர் முடிவில் நிறுத்தல் புள்ளியும் தேவையில்லை.--Kanags \உரையாடுக 07:10, 13 பெப்ரவரி 2011 (UTC)

  • கனக்ஸ் சொல்வது எனக்கு சரியெனப்படுகிறது. ஆய்வுக் கட்டுரைகளில் மேற்கோள் சுட்டும் போது சோடாபாட்டில், நற்கீரன் சொல்லும் முறை சரியாக இருக்கலாம். இங்கு நூல்கள் குறித்த குறிப்புகளே முக்கியத் தகவல்களாகத் தரப்படுவதால் கனக்ஸ் குறிப்பிடும் முறையில் நூலின் பெயர் முதலில் இடம் பெறுவது சிறப்பு. அதைத் தொடர்ந்து, ஆசிரியர் பெயர், பதிப்பகம், இடம், ஆண்டு, சர்வதேசத் தரக் குறியீட்டு எண்(ISBN)என்கிற வரிசையில் அமைப்பது நன்றாக இருக்கும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 07:47, 13 பெப்ரவரி 2011 (UTC)
தற்போது முத்த நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்களுடனும், பேராதனைப் பல்கலைக்கழக உதவி நூலகவியலாளருடனும் தொடர்பு கொண்டேன். நூல் பட்டியலிடும் முறையாக பின்வரும் ஒழுங்கினையே அவர்கள் குறிப்பிட்டனர்.
நூலின் பெயர், (புத்தகத்திலுள்ளபடி) / நூலாசிரியரின் பெயர் / (புத்தகத்திலுள்ளபடி) வெளியிட்டகம் / பதிப்பு / பக்கங்கள் (நாங்கள் குறிப்பிடுவதில்லை) / விலை (நாங்கள் குறிப்பிடுவதில்லை) /அளவு (நாங்கள் குறிப்பிடுவதில்லை) / சர்வதேச தராதர எண் ISBN
என். செல்வராஜா அவர்களுடைய நூல்தேட்டம் 06 தொகுதிகளிலும் இலங்கை தேசிய நூற்பட்டியலிலும் இதேமுறைதான் பின்பற்றப்படுகின்றது. அதனைத் தழுவியே இதுவரை பட்டியலிட்டு வந்தேன். பட்டியலிடும் போது விக்கி நடைமுறைகளுக்கு அமைய வேண்டுமென்பதற்காகவே இதனை ஆலமரத்தடியில் இட்டேன். எனவே கலந்துரையாடி ஏற்றுக்கொள்ளக்கூடியதும் இறுதியுமான முடிவைப்பெற்றால் தொடர்ந்தும் பதிவேற்றம் செய்ய இலகுவாக இருக்கும். --P.M.Puniyameen 08:15, 13 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி புன்னியாமீன். நீங்கள் குறிப்பிட்டுள்ளவாறே பதியுங்கள். நூலின் பெயர் சாய்வில் வருவது நல்லது. ஆங்கில விக்கியில் அவ்வாறே நூல் பட்டியல்கள் உள்ளன. அதற்காக நீங்கள் ஏற்கனவே எழுதியவற்றை மாற்ற வேண்டாம். நிறைய நேரம் செலவழிக்க வேண்டி வரும்.--Kanags \உரையாடுக 08:39, 13 பெப்ரவரி 2011 (UTC)

ஆமாம், அப்படியே செய்யலாம். --Natkeeran 16:02, 13 பெப்ரவரி 2011 (UTC)
எனக்கும் உடன்பாடே. இம்முறையினையே பின்பற்றுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 16:21, 13 பெப்ரவரி 2011 (UTC)
  • நன்றி தொடர்கின்றேன்--P.M.Puniyameen 16:31, 13 பெப்ரவரி 2011 (UTC)

Bibliographic databases[தொகு]

Bibliographic databases / index என்பதற்கு சரியான சொல் என்ன? உசாத்துணைகள் தகவல் திரட்டு, உசாத்துணைகள் தரவுத்தளங்கள், உசாத்துணைகள், நூற்பெயர்க்கோவை, நூற்றொகை ?? --Natkeeran 19:55, 13 பெப்ரவரி 2011 (UTC)

நூல் தரவுத்தளம்/உள்ளடக்கம். நூலிய தரவுத்தளம்/உள்ளடக்கம் (அதாது நூல்களாக இல்லாமல் நூல்போன்ற் சிறிதும் பெரிதுமான தகவல் ஆவணங்களாகவும் இருக்கலாம் எனக் கருதி, நூலிய என்று எழுதலாம் எனப் பரிந்துரைக்கின்றேன். நூல்+இயம் ==> நூலிய- நூல், நூல் சார்ந்த, நூல்போன்றவற்றைக் குறிக்கும் பெயரடை. தமிழ் அறிவியல் கலைக்களஞ்சியத்தில் நூலோதி என்று குறிக்கிறார்கள். பற்பல விதமாகக் குறிக்க இயலும். ஆனால் ஒன்றிரண்டாவது சீரான ஈடான கலைச்சொல்லாகப் பயன்படுத்துவது நல்லது --செல்வா 22:33, 13 பெப்ரவரி 2011 (UTC)
Bibliography என்பதற்கு "நூற்பட்டியல்" என்னும் தமிழாக்கம் ஏற்கெனவே இருப்பதால் bibliographic database என்பதை "நூற்பட்டியல் தரவுத்தளம்" என்றால் எப்படி? --பவுல்-Paul 00:54, 14 பெப்ரவரி 2011 (UTC)
நூற்கள் என்று எழுதுவது தவறு என எங்கோ யாரோ கூறியிருந்தனர். அது செல்வாவாகவும் இருக்கலாம்.நூற்பட்டியல் என்பது நூல்பட்டியல் என வரும்.--Kanags \உரையாடுக 07:24, 14 பெப்ரவரி 2011 (UTC)
நன்றி. --Natkeeran 23:27, 14 பெப்ரவரி 2011 (UTC)

தமிழ்ப் பெயரீடு[தொகு]

வரலாற்றுச் செய்திகளைப் பதிவிடும்போது ஏராளமான பெயர்கள் பல்வேறு இடங்களிலும் ஒரே மாதிரி வருவதுண்டு. அவ்வாறான பெயர்களைப் பயன்படுத்தும்போது ஆங்கில வழியைப் பின்பற்றி நாம் அப்பெயர்களைப் பயன்படுத்தலாமா? உதாரணமாக, ஐந்தாம் மகிந்தன் என்பதற்குப் பதிலாக மகிந்தன் V என்றும் இரண்டாம் இராசசிங்கன் என்பதற்குப் பதிலாக இராசசிங்கன் II என்றும் பயன்படுத்துவது வரலாற்றுச் செய்திகளைக் கூறுவதற்கும் தலைப்பிடுவதற்கும் பொருத்தமான முறை என்று கருதுகின்றேன். இது தொடர்பில் விக்கிப்பீடியர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.--பாஹிம் 04:14, 14 பெப்ரவரி 2011 (UTC)

ஆங்கில வழியில் உரோமன் எண்களில் எழுதும்போது சட்டென்று படிப்பவர் குழம்பும் வாய்ப்புள்ளது. பலமுறைக் கண்டுள்ளேன். மகிந்தன் V என்பதை “மகிந்தன் வி” என்று படித்துவிட வாய்ப்புண்டு. ஆங்கிலத்திலேயே உரோம எண்களில் எழுதும் போது வேறு மாதிரி படிக்க வேண்டும் என்று சொல்லித் தரவேண்டியுள்ளது. (என் பள்ளி காலத்தில் வெகு நாட்களாக மகிந்தன் எட்டு, மகிந்தன் மூன்று என்று படித்து வந்தோம், உயர்நிலைப்பள்ளி சென்ற பின்னர் தான் ஒரு ஆசிரியர் ஐந்தாம் மகிந்தன்/ mahindha the fifth என்று படிக்க வேண்டும் என்று திருத்தினார் :-)). எனவே என் அனுபவத்தில் இது குழப்பம் தரக்கூடிய முறை. இதனை ஒரு வழிமாற்றாக / அடைப்புக் குறிகளுக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்டுரைத் தலைப்பில் “ஐந்தாம் மகிந்தன்” என்ற முறையைப் பயன்படுத்துவது குழப்பங்களைத் தவிர்க்க பெரிதும் உதவும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:59, 14 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி சோடாபாட்டில். அப்படியே செய்யலாம்.--பாஹிம் 05:04, 14 பெப்ரவரி 2011 (UTC)

பட்டறை தொடர்பான பிடிஎப் அல்லது டொக் ஆவணங்களை எங்கு பதிவேற்றலாம் ?[தொகு]

பட்டறை தொடர்பான பிடிஎப் அல்லது டொக் ஆவணங்களை எங்கு பதிவேற்றலாம் ? --Natkeeran 23:26, 14 பெப்ரவரி 2011 (UTC)

காமன்சில் இது மாதிரியான பல அறிக்கைகள் ஏற்றப்படுகின்றன். அங்கேயே ஏற்றலாம்--சோடாபாட்டில்உரையாடுக 10:08, 15 பெப்ரவரி 2011 (UTC)
முழுவதும் காப்புரிமை விலக்கு பெற்ற உள்ளடக்கமாக இருந்தால் காமன்சில் பதிவேற்றலாம். இல்லையென்றால் http://www.slideshare.net/ போன்ற தளமொன்றில் பதிவேற்றலாம். http://outreach.wikimedia.org/wiki/Main_Page விக்கியிலும் பதிந்து வைக்கலாம். -- சுந்தர் \பேச்சு 10:26, 15 பெப்ரவரி 2011 (UTC)

2011 உலகத் துடுப்பாட்டக் கோப்பை இலங்கை அணி[தொகு]

2011 உலகத் துடுப்பாட்டக் கோப்பை இலங்கை அணியின் 15 இலங்கை வீரர்களினது பந்து வீச்சு, துடுப்பாட்டம் போன்ற புதிய தரவுகளை திரட்டி வைத்துள்ளேன். 2007ம் ஆண்டு துடுப்பாட்ட அணி அறிமுகப்படுத்தப்பட்டதைப் போன்றே 2011ம் ஆண்டு இலங்கைத் துடுப்பாட்ட அணியை அறிமுகப்படுத்தினால் என்ன? இது குறித்து முறையான ஆலோசனை கிடைக்குமிடத்து இன்றே சகல குறிப்புகளையும் இற்றைப்படுத்திவிடலாம். --P.M.Puniyameen 09:51, 15 பெப்ரவரி 2011 (UTC)

தனியாக ஒவ்வோர் 2007 ஆம் ஆண்டு அணிக்கும் கட்டுரை இருப்பதாகத் தெரியவில்லை. ஆங்கில விக்கியிலும் தேடிப் பார்த்தேன். ஆனால் இலங்கை அணியில் விளையாடுபவர்கள் அனைவருக்கும் தனித் தனிக் கட்டுரைகள் எழுதலாம். ஏற்கனவே சிலரின் கட்டுரைகள் உள்ளன. அவற்றை இற்றைப்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 10:18, 15 பெப்ரவரி 2011 (UTC)
ஆங்கில விக்கியில் உலகக்கிண்ண அணிகளை தனித் தனி கட்டுரைகளாக்கி பின் வார்ப்புருக்கள் மூலம் இணைக்கிறார்கள் - en:Template:Sri Lanka Squad 2007 ICC World Twenty20--சோடாபாட்டில்உரையாடுக 10:39, 15 பெப்ரவரி 2011 (UTC)
திருத்தம். அங்கு உலகக்கிண்ண அணிகளை அல்ல அணி வீரர்களுக்கான தனிக் கட்டுரைளையே வார்ப்புருக்கள் மூலம் இணைக்கிறார்கள். Sri Lanka Squad 2011 Cricket World Cup.--Kanags \உரையாடுக 11:10, 15 பெப்ரவரி 2011 (UTC)
பார்க்க வார்ப்புரு:2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி --மணியன் 02:48, 16 பெப்ரவரி 2011 (UTC)

மணியன் குறிப்பிட்டதைப் போல 2011 உலகக் கிண்ண இலங்கை அணி வார்ப்புருவை அமைத்தால் கட்டுரைகளை ஆரம்பத்திலிருந்து எழுத வேண்டி வருமா? தொழில்நுட்ப அறிவின்மை காரணமாக சரியான முறையில் பதிவேற்றம் செய்ய முடியாமல் இருக்கும். 19ம் திகதி உலகக் கிண்ணம் ஆரம்பிக்கும் தினத்தன்று இலங்கையின் தேசிய பத்திரிகையொன்று விசேட அனுபந்தமொன்றை வெளியிடவுள்ளது. அதற்காக அதன் ஆசிரியர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இலங்கை வீரர்கள் 15 பேரினதும் ஒருநாள் சர்வதேச போட்டி பற்றிய சாதனை குறித்து வைத்துள்ளேன். அதனையே விக்கிப்பீடியாவிலும் பதிவேற்றம் செய்யலாம் என்றிருந்தேன். புதிய தரவுகளை குமார்சங்ககார பக்கத்தில் பதிவேற்றிய போல பதிவேற்றிவிடவா? இருப்பினும் ஒரு சந்தேகம். தற்போது இலங்கை அணியினர் பற்றிய குறிப்பு 2007 உலகக் கிண்ண இலங்கை அணி என்ற வார்ப்புருவுக்கு உட்பட்டே இருக்கின்றது. இதனால் யாதும் கருத்து முரண்பாடுகள் தோன்றுமா? இது குறித்து ஒரு தெளிவான விளக்கத்தைப் பெற விரும்புகின்றேன். --P.M.Puniyameen 04:52, 16 பெப்ரவரி 2011 (UTC)

குமார சங்கக்கார கட்டுரையில் செய்தது போலவே பிற வீரர்களுக்கும் செய்து விடுங்கள். ஏற்கனவே கட்டுரை இருப்பின் மீண்டும் அவ்வீரருக்கென கட்டுரை துவங்கத் தேவையில்லை. ஒரே கட்டுரை ஒன்றுக்கும் மேற்பட்ட வார்ப்புருக்களுக்குள் வரலாம் . ஒரு வீரர் 2007 மற்றும் 2011 அணிகளுக்கான வார்ப்புருக்கள் இரண்டிலும் இடம்பெறலாம. எனவே முரண்பாடு ஆகாது. --சோடாபாட்டில்உரையாடுக 06:29, 16 பெப்ரவரி 2011 (UTC)
  • நன்றி சோடாபாட்டில். அப்படியே செய்கிறேன்--P.M.Puniyameen 06:47, 16 பெப்ரவரி 2011 (UTC)

India Faces a Linguistic Truth: English Spoken Here[தொகு]