விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு63

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதிய தட்டச்சுக் கருவி[தொகு]

பிற விக்கித்திட்டங்களில் வெற்றிகரமாக நிறுவப்பட்டதைத் தொடர்ந்து விக்கிப்பீடியாவிலும் இறுதியாக புதிய தட்டச்சுக் கருவி (நரையம் நீட்சி) நிறுவப்பட்டு விட்டது. பழைய கருவி நீக்கப்பட்டு விட்டது. கருவியைப் பயன்படுத்த காணுங்கள் உதவி:தமிழ்த் தட்டச்சு

    • புகுபதிகை செய்தவர்கள்
Tamiltyping1.JPG
    • புகுபதிகை செய்யாதவர்கள்
Tamiltyping2.JPG

தெரிவு செய்தபின்னர் தட்டச்சு செய்யும் பெட்டிகள் நீலநிறத்தில் தோன்றும்.--சோடாபாட்டில்உரையாடுக 17:58, 12 அக்டோபர் 2011 (UTC)

நரையம் நீட்சி நன்றாக வேலை செய்கிறது. உலாவியில் புதிய பக்கங்கள் வருவதற்கு சற்று தாமதமாவது போல இருக்கிறது. Cache பிரச்சினை என்றால் பழகப்பழக சரியாகிவிடும் என்று நம்புகிறேன்.--மணியன் 08:48, 13 அக்டோபர் 2011 (UTC)

முடிந்தால், பாமினி எழுத்துருவையும் சேர்க்க வேண்டும். இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

அடுத்து ரெங்கநாதன் விசைப்பலகை சேர்க்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம் (அதுவே இலங்கைப் பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்று எண்ணியிருந்தேன்). இது பாமினியிலிருந்து நிறைய வேறுபட்டதா?. இவற்றைப் பயன்படுத்துவோர் எதற்கு முன்னுரிமை அளிப்பது (அல்லது இரண்டும் வேண்டுமா) என்று தெளிவு படுத்தினால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர இயலும். இங்கோ அல்லது என் பேச்சு பக்கத்திலோ அல்லது ஸ்ரீகாந்தின் பேச்சு பக்கத்திலோ கருத்துகளை தர வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 19:42, 12 அக்டோபர் 2011 (UTC)
ரெங்கநாதன் விசைப்பலகையிலும் விட பாமினியே இலங்கைத் தமிழராலும், புலம்பெயர் ஈழத்தமிழராலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே பாமினியைச் சேர்ப்பதால் பயன் அதிகம் கிடைக்கும்.--Kanags \உரையாடுக 21:31, 12 அக்டோபர் 2011 (UTC)
கனக்ஸ் அவர்கள் கூறியது போல் பாமினியே அதிகம் பயன்பாட்டிலுள்ளது. எனினும் இரண்டிற்குமிடையில் ஒரு சில எழுத்துக்களே வேறுபடுகின்றன. இரண்டும் இணைக்க வேண்டிய தேவை இல்லை என்றே எண்ணுகின்றேன். பாமினியை இணைத்தால் ரெங்கநாதன் விசைப்பலகைப் பாவனையாளர்களும் அதனை இலகுவாகப் பயன்படுத்த முடியும். --சிவகோசரன் 06:05, 13 அக்டோபர் 2011 (UTC)
நன்றி சிவகோசரன், கனக்ஸ். இதற்கான வழுவை ஸ்ரீகாந்த் பதிந்துள்ளார். விரைவில் உருவாக்கித் தருவதாக ஜுனைத் கூறியுள்ளார். பின்வரும் ஆவணங்களை பாமினி விசைப்பலகைக்கு ஆதார ஆவணங்களாகக் கொடுத்துள்ளோம். - [1] [2]. பாமினி அறிந்தவர்கள் இவை முறையானவையா என்றொருமுறை சரிபார்க்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:10, 13 அக்டோபர் 2011 (UTC)
ஆவணங்களில் சில தவறுகள் இருப்பதாகத் தான் தோன்றுகிறது. 'க்ஷ' எழுத்து இருப்பதாகத் தெரியவில்லை. 'ஸ்ரீ' தவறாகும். 'ஸ்ரீ' க்கு '=' பயன்படுகின்றது. மேலும் 'ரூ, ழூ' க்கு முறையே '&, *' உம், 'ஜு,ஜூ' முதலிய வடமொழி 'உ, ஊ' க்களுக்கு முறையே '{, _' உம் பயன்படுத்தப்படுகின்றன. 'தூ, நூ, ணூ..' போன்றவற்றுக்கு அரவை நீட்ட '}' பயன்படுகின்றது. --சிவகோசரன் 10:56, 13 அக்டோபர் 2011 (UTC)
Translate wiki தளத்தில் சோதனைக்காக பாமினி நிறுவப்பட்டுள்ளது. அங்கு கணக்கு உருவாக்கி விட்டு, my preferences > internationalation language ”தமிழ்” என்று தேர்வு செய்தால் தட்டச்சுக் கருவி தோன்றும். அதைப்பயன்படுத்தி பார்த்து. தேவைப்படும் மாற்றங்களை இங்கு பட்டியிலிட்டுத் தரும்படி வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:54, 14 அக்டோபர் 2011 (UTC)

நன்றி சோடாபாட்டில், எனக்கு பாமினியில் எழுதிப் பழக்கமில்லை, நேரடியாக திஸ்கி சென்று அங்கிருந்து ஒருங்குறிக்கு மாறினேன். மயூரன், உமாபதி போன்றவர்களிடம் கேட்கலாம்.--Kanags \உரையாடுக 10:16, 14 அக்டோபர் 2011 (UTC)

மன்னிக்கவும், எனக்கு பாமினி விசைப்பலகையோ ரங்கநாதன் விசைப்பலகையோ பழக்கம் இல்லை, ஒலியியல் முறையையே பயன்படுத்துகிறேன் இங்கு வேறு யாரவாது உதவக்கூடும். ஒருமுறை தமிழ் எழுத்துரு உள்ள Prolink இரக விசைப்பலகை ஒன்றைக் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து வாங்கியிருந்தேன் ஆயினும் தரக்குறைவாகத் தயாரிக்கப்பட்டதாலோ என்னவே வெகுவிரைவில் பழதடைந்து விட்டது. மீண்டும் அந்த இரகத்தை வாங்கவில்லை. --உமாபதி \பேச்சு 13:07, 14 அக்டோபர் 2011 (UTC)


பயன்பாடு என்று வரும்போது ரெங்கநாதன் விசைப்பலகையை விட பாமினி வடிவத்துக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆயினும் ரெங்கநாதன் வடிவமே இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியம வடிவம் என்பதால் அதனையும் இணைக்க முயற்சிக்க வேண்டும். பாமினி வடிவமும் ரெங்கநாதன் வடிவமும் அடிப்படையில் ஒன்றுதான் எனினும் வேறுபாடுகள் நிறையவே உள்ளன. ரெங்கநாதன் வடிவம் முன்னேற்றகரமானது ஒருங்குறி நியமங்களோடு முழுமையாகப் பொருந்துவது. --மு.மயூரன் 10:27, 14 அக்டோபர் 2011 (UTC)
கருத்துகளுக்கு நன்றி மயூரன். அடுத்த கட்டமாக ரெங்கநாதன் விசைப்பலகையை இணைக்க வழு பதிகிறோம். அதற்கு முன்னர் தற்போதுள்ள பாமினியை சோதித்து தேவைப்படும் மாற்றங்களைப் பட்டியிலிட வேண்டுகிறேன். மேற்குறிப்பிட்ட வழியைத்தவிர பின்வரும் இணைப்பு மூலமாகவும் சோதிக்கலாம்.
http://lab.dhudhu.com/index.php?title=Tamil&action=edit&redlink=1&uselang=ta--சோடாபாட்டில்உரையாடுக 11:53, 14 அக்டோபர் 2011 (UTC)
புதிய முறை நன்றாக உள்ளது. ஆமாம் பாமின்கே அதிக தேவை இருக்கும் என்று நினைக்கிறேன். சோடா, இதை வழு என்று கூறுவதை விட feature request என்று கூறுவதே பொருத்தம் என்று நினைக்கிறேன். --Natkeeran 13:21, 14 அக்டோபர் 2011 (UTC)
விக்கிமீடியா பக்சில்லாவில் எல்லாம் “வழு” க்களே :-). bug என்பது அனைத்து மாற்றக் கோரிக்கைகளையும் குறிக்கும் பெயர்ச்சொல்லாகி விட்டது.--சோடாபாட்டில்உரையாடுக 13:25, 14 அக்டோபர் 2011 (UTC)

பின்வரும் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளன:

asterisk (shift+8) - ழூ
i - சங்கிலிக்கொம்பு - கை, சை...இல் வருவது
n - ஒற்றைக்கொம்பு - கெ, செ... இல் வருவது
N - இரட்டைக்கொம்பு - கே, சே... இல் வருவது
_ (underscore) - வடமொழி ஊ - ஜூ, ஸூ... இல் வருவது
= - ஸ்ரீ
{ - வடமொழி உ - ஜு, ஸு... இல் வருவது
} - பகுதி அரவு - நூ, தூ... இல் வருவது (நு க்குப் பின் இதனை பயன்படுத்தி நூ ஆக்கப்படும்)

--சிவகோசரன் 16:36, 14 அக்டோபர் 2011 (UTC)

Alzheimer's breakthrough: Bilingualism delays Alzheimer’s: Study[தொகு]

--Natkeeran 16:43, 14 அக்டோபர் 2011 (UTC)

R.Krishanasamynaidu.jpg" நீக்கம்,[தொகு]

ரா. கிருஷ்ணசாமி நாயுடு http://tawp.in/r/1fek ("R.Krishanasamynaidu.jpg" நீக்கம், அப்படிமத்தை Jameslwoodward பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். ...) அப்படிமத்தை மீண்டும் இணைக்கு வேண்டுகிறேன்.--−முன்நிற்கும் கருத்து Srithern (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

விக்கிமீடியா காமன்சில் நீக்கப்பட்டவற்றை இங்கு நம்மால் மீள்விக்க இயலாது. படம் பதிப்புரிமை சிக்கல்களால் நீக்கப்பட்டுள்ளது. காமன்சில் பதிப்புரிமை விதிகள் கடுமையானவை. உங்கள் “சொந்த ஆக்கம்” என்பதை சந்தேகித்து நீக்கியுள்ளார்கள். ஆனால் மறைந்த நபரின் படம் என்பதால் நியாயப் பயன்பாட்டுக் காரணம் கொண்டு இங்கு மீண்டும் பதிவேற்றி கட்டுரையில் இணைத்துள்ளேன். விக்கிப்பீடியாவின் பதிப்புரிமை விதிகள் - விக்கிப்பீடியா:பதிப்புரிமை--சோடாபாட்டில்உரையாடுக 12:31, 17 அக்டோபர் 2011 (UTC)

பட்டியல்[தொகு]

தமிழ்விக்கியில் கட்டுரையைத் தொகுக்கும் போது வரும் பட்டியலை உள்ளிடும் பகுதி வேலை செய்யவில்லை.--Kanags \உரையாடுக 02:36, 18 அக்டோபர் 2011 (UTC)

எனக்கு வேலை செய்கிறதே கனக்ஸ். பிரச்சனையின் screenshots இருப்பின் என் அஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:00, 18 அக்டோபர் 2011 (UTC)
சரி தான். ஒவ்வொரு நிரையிலும் முன்னுள்ள (;) என்பதை நீக்கினால் தெரிகிறது. ஆங்கில விக்கியில் பட்டியலுக்கு என்று ஒரு கருவி பயன்படுத்துகிறார்களே.--Kanags \உரையாடுக 04:08, 18 அக்டோபர் 2011 (UTC)
நான் http://excel2wiki.net/ பயன்படுத்துகிறேன். இதில் பட்டியல் உருவாக்கல் எளிதாக இருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 17:22, 19 அக்டோபர் 2011 (UTC)

இந்திய விக்கி மாநாட்டில் பிறநாட்டினர் கலந்துகொள்ள வாய்ப்பு[தொகு]

மும்பையில் நடைபெறும் இந்திய விக்கி மாநாட்டில் பிற நாட்டினர் கலந்து கொண்டு கட்டுரை வாசிக்க விக்கிமீடியா அறக்கட்டளை ஐந்து உதவித்தொகைகளை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்த விக்கிமாநாட்டுத் தலைவர் பிரணவின் மின்னஞ்சல் பின்வருமாறு. இந்தியரல்லாத தமிழர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

We are please to announce that WMF has granted a few scholarships (maximum of 5) for persons outside of India to attend WikiConference India 2011 (WCI 2011 - http://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2011). WCI 2011 will take place in Mumbai, India between 18-20 November 2011.

WCI 2011 is the first conference of its kind being held in India and is intended to become an annual national flagship event for Wikipedia/Wikimedia in the country. It is meant to provide a common platform for all Indian Wikimedians to meet and share their views, discuss challenges and exchange useful tips, best practices and other information.

Anyone residing outside of India is eligible to apply, but since this is an India specific conference they would need to demonstrate how by being present at the conference they can help the movement in India or improvement of indic languages. It is also necessary that those receiving the scholarship present something at WCI 2011.

The scholarships will cover Travel to and Fro Mumbai (economy), Accommodation (similar to what is being offered to Indian Scholars) and Visa fees (if you need one).

Please do make your application as strong as possible given that there are few scholarships and we expect a huge number of applications: http://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2011/Call_for_Participation

Kindly note given that there is less than a month to go and that Visa applications etc. will take time, we have set an application deadline of 23:59 IST on Saturday 22nd October 2011. Only applications received before the deadline will be considered.

Looking forward to hosting five of you at WCI 2011!

--சோடாபாட்டில்உரையாடுக 17:22, 19 அக்டோபர் 2011 (UTC)

கையெழுத்து உதவி[தொகு]

Signature button.png

புகுபதிகை செய்த விக்கிபீடியர்கள், பேச்சுப் பக்கங்களில் நேரத்துடன் கூடிய கையெழுத்து இட, தொகுப்பு பெட்டிகளுக்கு மேல் உள்ள "நேர முத்திரையுடன் உங்கள் கையொப்பம்" என்ற பொத்தானை அழுத்தும் போது பெயரும் நேரமும் வருகின்றது. ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது போல தானாகவே உரையாடல் பெட்டியையும் சேர்த்து உள்ளிட வழி உள்ளதா? நான் தற்போது இந்த உரையாடல் பெட்டியைப் பெற தனி விக்கி நிரலை " <sup>[[பயனர் பேச்சு:krishnaprasaths|உரையாடுக]]</sup> " பயன்படுத்துகிறேன். --கிருஷ்ணபிரசாத் 16:34, 20 அக்டோபர் 2011 (UTC)

என் விருப்பத்தேர்வுகளில் > பயனர் தரவு > கையெழுத்தில் ”வெறும் கையொப்பம் மட்டும் (இணைப்பு இல்லாமல்)” என்னும் சதுர பெட்டியைத் தெரிவு செய்து விட்டு, அதற்கு மேலுள்ள பெட்டியில் முழு விக்கி நிரலை (நீங்கள் மேலே கொடுத்துள்ளபடி) சேர்த்துக் கொள்ளுங்க்கள். -[[பயனர்:krishnaprasaths]]<sup>[[பயனர் பேச்சு:krishnaprasaths|உரையாடுக]]</sup> இவ்வாறு செய்து சேமித்து விட்டால், பின் கையெழுத்துடன் தானாக உரையாடுக பகுதி சேர்ந்து வரும்--சோடாபாட்டில்உரையாடுக 16:29, 22 அக்டோபர் 2011 (UTC)
விரிவாக கற்றுத்தந்தமைக்கு நன்றி.03:37, 26 அக்டோபர் 2011 (UTC)உழவன்+உரை..


தமிழ் விக்கிபீடியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்[தொகு]

Diwali Diya.jpg
தீபத் திருநாள் வாழ்த்துக்கள்

தமிழ் விக்கிபீடியா அன்பர்கள் அனைவருக்கும், தமிழ் விக்கி நூல்கள் சார்பாக தீபத்திருநாளாம் தீபாவளி வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம்.
குறிப்பு: உங்கள் வாழ்த்துக்களை விக்கி நூல்கள் சமுதாயத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தெரிவிக்க இங்கு>> சொடுக்கவும்.

60 வது இடத்தில் தமிழ்விக்கிப்பீடியா[தொகு]

  1. தமிழ் விக்கிப்பீடியா இன்று ஒரு முக்கியமான மைற்கல்லை தாண்டியுள்ளது. 282 மொழி விக்கிப்பீடியாக்கள் பட்டியலில் தமிழ் விக்கிப்பீடியா 60வது இடத்திற்கு வந்துள்ளது. இந்த அடைவிற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து விக்கிப்பீடியா அன்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இதனை நாங்கள் கூட்டிணைப்பாக செயல்பட்டு பாதுகாப்போம். --P.M.Puniyameen 07:25, 23 அக்டோபர் 2011 (UTC)
  2. வாழ்த்துக்கள் தமிழ் விக்கிபீடியா, மற்றும் விக்கி அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள். அன்புடன், --Pitchaimuthu2050 13:42, 23 அக்டோபர் 2011 (UTC)
  3. அடைவில் மகிழ்வுறுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 15:13, 25 அக்டோபர் 2011 (UTC)
  4. மேலும் விரிவாக்கவும். அதோடு தவறாமல் உள்ளவற்றின் உள்ளகத்தை மேம்படுத்தவும் திட்டமிடுவோம். வணக்கம்03:40, 26 அக்டோபர் 2011 (UTC)உழவன்+உரை..


விக்கி ஊடகப் போட்டி - சின்னம் + பதாகை[தொகு]

தமிழ் விக்கி ஊடகப் போட்டிக்கான சின்னம் மற்றும் பதாகைகள் உருவாக்க வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தங்கள் கருத்துகளையும், சின்னம் + பதாகைக்கான பரிந்துரைகளையும் மேற்குறிப்பிட்ட பக்கத்தில் தர வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:04, 24 அக்டோபர் 2011 (UTC)

விக்கிப்பீடியா:இணைய_எழுத்துரு -- மீடியாவிக்கி நீட்சி நிறுவ ஆதரவு[தொகு]

விக்கிப்பீடியா:இணைய_எழுத்துரு மீடியாவிக்கி நீட்சி நிறுவ ஆதரவு வேண்டுகிறேன். அதே பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளேன். நன்றி ஸ்ரீகாந்த் 17:52, 24 அக்டோபர் 2011 (UTC)

தமிழ் விக்கி நுட்பத்தில் இன்னொரு முன்னேற்றம். என் ஆதரவினை தெரிவித்துள்ளேன்--சோடாபாட்டில்உரையாடுக 18:03, 24 அக்டோபர் 2011 (UTC)
அனைவிரின் ஆதாரவிற்கு நன்றி. வழு 31936 பதியப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் இந்த வசதி சேர்த்துவிடுவார்கள் என எதிர்பார்க்கலாம். ஸ்ரீகாந்த் 09:45, 27 அக்டோபர் 2011 (UTC)

தீபாவளி வாழ்த்துக்கள்[தொகு]

இன்றைய தினம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து விக்கி அன்பர்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். --P.M.Puniyameen 04:02, 26 அக்டோபர் 2011 (UTC)

புத்தாடை புனைந்து பட்டாசு வெடித்து பட்சணங்களுடன் கொண்டாடி புதுத் திரைப்படங்களில் மகிழ்ந்திருக்கும் இனிய நண்பர்களுக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !!

--மணியன் 04:25, 26 அக்டோபர் 2011 (UTC)

அரபி விக்கி மாநாடு[தொகு]

அக்டோபர் 20-22 தேதிகளில் கத்தார் தலைநகர் தோகாவில் ஒரு அரபு விக்கி மாநாடு நடைபெற்றது. கத்தார் அறக்கட்டளை அரபி விக்கிப்பீடியாவுக்கு உதவும் வழிவகைகளை ஆராய இது கூட்டப்பட்டிருந்தது. மொழிபெயர்ப்பு மூலம் (எந்திர மற்றும் மனித மொழிபெயர்ப்பு) அரபி விக்கிக் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கத்தார் அறக்கட்டளை திட்டமிட்டிருந்தது. பெரும் மொழிபெயர்ப்புத் திட்டத்தைத் துவக்கும் முன்னர் அவற்றால் விளையக் கூடிய நன்மை தீமைகளை கத்தார் அறக்கட்டளைக்கும் அரபி விக்கி சமூகத்துக்கும் விளக்க வேண்டுமென விக்கிமீடியா அறக்கட்டளை விரும்பியது. இதனால் தமிழ் விக்கிக்கு கூகுள் திட்டத்தில் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நமது கூகுள் திட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரை அம்மாநாட்டுக்கும் விக்கிமீடியா அறக்கட்டளையின் உலகளாவிய வளர்ச்சி அதிகாரி பேரி நியூஸ்டெட் அழைத்திருந்தார். நான் இம்மாநாட்டில் கலந்து கொண்டு அளிக்கை ஒன்று செய்தேன். பெரும் நிறுவனங்கள் விக்கிப்பீடியா பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதால் விளையும் தீமைகளை எடுத்துரைத்தேன். நமது கூகுள் அனுபவங்கள் அவர்களுக்கு ஒரு நல்ல கண் திறப்பாக அமைந்தன. --சோடாபாட்டில்உரையாடுக 05:03, 26 அக்டோபர் 2011 (UTC)

சோடாபாட்டில், தாங்கள் அரபி விக்கி மாநாட்டில் கலந்து கொண்டு, இயந்திர மற்றும் மனித மொழிபெயர்ப்புக்கான திட்டங்களில் பெரும் நிறுவனங்களில் செயல்பாடுகளையும், அதிலுள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி வந்தமை குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். அங்கு எடுத்த புகைப்படங்களை இங்கு பகிர்ந்து கொண்டால் ஆவணப்படுத்த உதவுமே... --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:10, 26 அக்டோபர் 2011 (UTC)
காமன்சில் ஏற்றியிருக்கிறேன். ஆனால் கலந்து கொண்டவர்களை எடுக்கவில்லை - அரபிச் சூழலில் சற்று சர்ச்சையான விசயங்கள் பேசப்பட்டதாலும், ஊடகங்கள் (அல் ஜசீரா போன்றவை) கலந்து கொண்டதாலும், சிலர் முகம் காட்ட விரும்பவில்லை. எனவே நிறைய படங்கள் எடுக்க வில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 11:15, 26 அக்டோபர் 2011 (UTC)
அருமை. ppt சிறப்பாக இருந்தது. அவதானிப்புக்கள் மிகச் சரியே. குறிப்பாக இறுதியான கூற்று, "build a community, numbers will follow", அதுவே எமது உயர்விற்கு உந்து. --Natkeeran 13:38, 26 அக்டோபர் 2011 (UTC)
மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் சோடாபாட்டில்.--சஞ்சீவி சிவகுமார் 15:14, 28 அக்டோபர் 2011 (UTC)

Terms of Use update[தொகு]

I apologize that you are receiving this message in English. Please help translate it.

Hello,

The Wikimedia Foundation is discussing changes to its Terms of Use. The discussion can be found at Talk:Terms of use. Everyone is invited to join in. Because the new version of Terms of use is not in final form, we are not able to present official translations of it. Volunteers are welcome to translate it, as German volunteers have done at m:Terms of use/de, but we ask that you note at the top that the translation is unofficial and may become outdated as the English version is changed. The translation request can be found at m:Translation requests/WMF/Terms of Use 2 -- Maggie Dennis, Community Liaison 01:19, 27 அக்டோபர் 2011 (UTC)

40,000 கட்டுரைகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா 40,000 கட்டுரை எண்ணிக்கையை அடைந்த இந்த வினாடியில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். பங்களித்த அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.--பாஹிம் 14:23, 28 அக்டோபர் 2011 (UTC)

ஆமாம் பாஹிம். முக்கிய மைல்கல்லே. பங்களிப்புச் செய்யும் பயனர் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. வாழ்த்துக்கள். --Natkeeran 15:21, 28 அக்டோபர் 2011 (UTC)
40,000 கட்டுரைகள் அடைவுக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்--சஞ்சீவி சிவகுமார் 15:40, 28 அக்டோபர் 2011 (UTC)
மிகவும் பெருமைக்குரிய நிகழ்வு. பல புதிய பயனர்களும் ஆர்வத்துடன் தொடர்ந்து பங்களிப்பது தமிழ் விக்கி வலைச்சமூகம் நிலைபெறும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. இந்த விரைவான வளர்ச்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள் !!--மணியன் 01:30, 29 அக்டோபர் 2011 (UTC)

விக்கி நூல்கள்: வேளாண்மை, சிறு தொழில்கள், சுற்றுச்சூழல் நூல்கள் தொகுப்பு பற்றி[தொகு]

Wikibooks-logo.svg
தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம் தங்களின் உதவியை நாடுகிறது

தமிழ் விக்கிபீடியா 40,000 கட்டுரைகள் என்ற எல்லையைத் தொட்டமைக்கு வாழ்த்துக்கள்.
விக்கி நூல்கள் புதிய நூல்களை ஆரம்பித்து உள்ளது. அவற்றிற்கு உரிய தலைப்புகளை தாங்கள் நல்குமாறு வேண்டுதல் வைத்து இவ்விண்ணப்பம். b:வேளாண்மை, b:சிறு தொழில்கள், b:சுற்றுச்சூழல் நூல்கள் தொகுக்கப்பட உள்ளன. இவற்றைப் பற்றி அறிந்த தெரிந்த வல்லுனர்களை விக்கி நூல்கள் அழைக்கிறது.

ஒரு வேளை தாங்கள் விவசாய துறை சார்ந்த வல்லுனராகவோ அல்லது விவசாயத் துறையில் வேலை செய்பவராகவோ இருக்கலாம், அல்லது ஒரு விவசாய நுட்பங்கள் சார்ந்த நூலை தொகுப்பதில் ஆர்வம உள்ளவராகவோ இருக்கலாம்; அல்லது பல புதிய உத்திகளை செயல் முறை படுத்தும் நவீன கால விவசாயியாகவோ இருக்கலாம்.உங்களுக்காக b:வேளாண்மை என்னும் நூலை தொகுக்க அழைக்கிறோம். இணையத்தில் பல துறைகள் சார்ந்த நூல்கள் சிறிதளவேனும் தமிழில் உருவாக்கம் செய்யப் பட்டு உள்ளது ஆனால் விவசாயம் சார்ந்த நூல்களுக்கு குறிப்பிட்ட அங்கிகாரத்தைக் கொடுக்கவில்லை எனவே இந்த நூலை தொகுக்கவும் விவசாயம் சார்ந்த நுட்பங்களை பதிவிடவும் விக்கிபீடியா சமுதாயத்தினரை அழைக்கிறோம்.

முதலாளிகளின் சிக்கில் பிடிபடாத சாதிக்கும் உள்ளங்களுக்காக b:சிறு தொழில்கள் என்னும் நூலை உருவாக்க விக்கி நூல்கள் சமுதாயம் திட்டம் கொண்டு உள்ளது. எனவே சிறுதொழில் முனைவோர்களையும், சிறி தொழில் செய்து வெற்றியடைந்தவர்களையும் b:சிறு தொழில்கள் என்னும் நூலைத் தொகுக்க அழைக்கிறோம்.

b:சுற்றுச்சூழல் சார்ந்த சிந்தனைகள், பசுமை உலகம் படைக்கும் கனவைக் கொண்டு இருக்கும் பசுமை உள்ளங்களுக்காக b:சுற்றுச்சூழல் என்னும் நூலைத் தொடங்க உள்ளோம். மேல் காணும் மூன்று நூல்களில் எந்த நூலில் தங்களுக்கு விருப்பம் உள்ளதோ அவற்றை தொகுப்பதன் மூலம் ஒரு விவசயிக்கோ, ஒரு சிறு தொழில் முனைவோருக்கோ, ஒரு சுற்றுச் சூழல் விரும்பிக்கோ நீங்கள் உதவ முடியும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டு உள்ளோம்.

எனவே b:வேளாண்மை, b:சிறு தொழில்கள், b:சுற்றுச்சூழல் நூல்களைத் தொகுக்க அனைவரையும் வரவேற்கிறோம்.


தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம்.


தொழில்நுட்ப உதவி[தொகு]

தமிழ் விக்கி ஊடகப் போட்டிக்காக நிகழ்படக் கையேடுகளைத் தயாரித்து வருகிறேன். அவற்றில் தமிழ் துணைஉரை (subtitle) இணைக்க இயலவில்லை. ஆங்கிலம் இணைக்க முடிகிறது. ஒருங்குறித் தமிழ் எழுத்துகளை இணைக்க இயலவில்லை. ஒரு .avi கோப்பில் தமிழ் யுனிக்கோடு உரைகளை இணைப்பது எப்படி என்று யாரேனும் அறிந்திருந்தால் உதவி செய்ய வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:20, 29 அக்டோபர் 2011 (UTC)

எந்த மென்பொருள் பயன்படுத்துகின்றீர்கள்? எதுவாயினும் தேனீ சுப்பிரமணி கூறியது போல இங்கும் பயன்படுத்த முடியும்.

முறை http://www.suratha.com/uni2bam.htm சென்று ஒருங்குறித் தமிழ் எழுத்துகளை பாமினி வடிவில் மாற்றுங்கள். எடுத்துக்காட்டாக, "njhopy;El;g cjtp" (தொழில்நுட்ப உதவி) என்று உள்ளதை மென்பொருளில் இட்டு, எழுத்துருவை பாமினியாக மாற்றுங்கள்.

Corel Video studio 12 எனும் மென்போருளில் இவ்வாறு இலகுவில் செய்யமுடியும்.

--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 09:26, 29 அக்டோபர் 2011 (UTC)

நன்றி செந்தி. உங்கள் தீர்வு வேலை செய்கிறது :-) (camstudio + virtual dub பயன்படுத்துகிறேன் :-))--சோடாபாட்டில்உரையாடுக 10:06, 29 அக்டோபர் 2011 (UTC)
உங்கள் கேள்விக்கு http://forum.videohelp.com/threads/301235-South-asian-language-%28tamil%29-subtitles தளத்தில் தீர்வு கிடைக்கும் என நினைக்கின்றேன். --கிருஷ்ணபிரசாத்/உரையாடுக 09:20, 29 அக்டோபர் 2011 (UTC)
அங்கு உள்ளதை முயன்று பார்த்துவிட்டேன் கிருஷ்ணபிரசாத் - பலன் கிட்டவில்லை :-). குறிப்பாக யுனிக்கோடு .ssa கோப்பு உருவாக்க இயலுகிறது. ஆனால் அதை .avi உடன் கலக்கும் போது ஒருங்குறி எழுத்துகள் வருவதில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 09:24, 29 அக்டோபர் 2011 (UTC)

தகவற்சட்டத் திருத்தம்[தொகு]

சில நாடுகளின் தகவற்சட்டத்தில் அவற்றின் பரப்பளவுகள் தவறாகக் காணப்படுகின்றன. ஆயினும் தொகுப்பில் சரியான அளவுகளே குறிப்பிடப்பட்டுள்ளன. கட்டுரையில் தான் தவறாக காட்டப்பட்டுள்ளது. திருத்தி உதவுக.--Prash 08:49, 29 அக்டோபர் 2011 (UTC)

ஒரு எடுத்துகாட்டு கட்டுரை சுட்டுங்கள் பிரஷாந், ஆராய்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:59, 29 அக்டோபர் 2011 (UTC)

பல உள்ளன. உதாரணமாக, இந்தியா, இலங்கை, கம்போடியா போன்றவற்றைப் பாருங்கள்--Prash 14:04, 29 அக்டோபர் 2011 (UTC)

எண்களுக்கிடையில் கால்புள்ளி இடுவதால் இப்படி தவறாக மாறுகிறது. தகவற்சடடத்தில் உள்ள ”area" தரவில் கால்புள்ளிகளை அகற்றிவிட்டால் இது சரியாகிவிடும்.--சோடாபாட்டில்உரையாடுக 06:47, 11 நவம்பர் 2011 (UTC)

கோப்புக்களுக்குப் பெயரிடுதல்[தொகு]

கோப்புக்களைப் பதிவேற்றியபின் அவற்றுக்குப் பெயரிடும்போது மிகப்பொருத்தமான பெயர்களில் அவற்றை சேமிப்பது அவசியம். பொதுவில் அல்லது த.வி யில் காணப்படும் கோப்பு ஒன்றை தேடுவதற்கும் அவற்றை மற்றொரு பயனர் பயன்படுத்துவதற்கும் இது வசதி செய்யும். சில கோப்புகளின் பெயர்கள் குறியீட்டுத் தன்மை கொண்டவையாக உள்ளன. இவற்றை ஆக்கிய பயனரைத் தவிர மற்றவர்கள் தேடிக் கண்டடைவது கடினமாகும்.--சஞ்சீவி சிவகுமார் 09:30, 29 அக்டோபர் 2011 (UTC)

ஆம். கவனிக்க வேண்டிய விசயமிது. கோப்புகள் தலைப்பை நகர்த்தும் அணுக்கம் நிருவாகிகளுக்கு மட்டும் உள்ளதால், பதிவேற்றும் போது தலைப்பினை தேடுவதற்கு உகந்த தலைப்பாக வைக்க வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 09:38, 29 அக்டோபர் 2011 (UTC)
தலைப்பை ஆங்கிலத்தில் தருவது நல்லது, ஆனால் அவசியமில்லை. பொதுவில் தரவேற்றும் போது ஆங்கிலத்தில் தருவது நல்லது. அத்துடன் படிமத்தைப் பற்றிய போதுமளவு தரவுகள் தருவது நல்லது.--Kanags \உரையாடுக 09:43, 29 அக்டோபர் 2011 (UTC)