விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு44

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் விக்சனரி - உலகின் முதல் பத்து விக்சனரிகளில் ஒன்று[தொகு]

தமிழ் இணைய கல்விக்கழகம் அளித்த 70,000+ சொற்களை ஏற்றியதை அடுத்து, தமிழ் விக்சனரி உலகின் முதல் 10 விக்சனரிகளில் ஒன்றாக முன்னேறி உள்ளது. http://www.wiktionary.org/--இரவி 08:05, 16 நவம்பர் 2010 (UTC)

பங்காற்றும் அனைவருக்கும் உதவி ஆற்றிட்ட தமிழக அரசுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் !! இச்செய்தியை முகப்புப் பக்கத்தில் இட்டால் அனைத்து வருநர்களும் அறிந்து பெருமைப்பட ஏதுவாக இருக்கும்.--மணியன் 18:13, 16 நவம்பர் 2010 (UTC)

விக்கி மூலம் - அடுத்த கட்டம்[தொகு]

தற்போது தமிழ் விக்கி மூலம் திட்டம் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. தமிழ் விக்சனரியைப் போல், தமிழ் விக்கி மூலத்தில் மட்டும் பங்களிக்கும் ஆர்வலர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலரும் இணைய ஆர்வம் தெரிவித்திருக்கிறார்கள். எனினும், இது வரை, அங்கு நூல்களைப் பக்கம் பிரித்து முறையாக இடுவதற்கான வழிகாட்டல் இல்லை. முதலிலேயே இதனைச் சரி செய்வது நன்று. அடுத்த சில வாரங்களுக்கு தமிழ் விக்கிப்பீடியர் பலரும் அங்கு வந்து பங்கு பெற்று ஒருங்கிணைக்க உதவினால் நன்றாக இருக்கும். பார்க்க: விக்கிமூலம் பக்கவடிவமைப்பு உரையாடல் பக்கம்--இரவி 08:09, 16 நவம்பர் 2010 (UTC)

நபர்கள்/ பிரபலங்கள் பற்றிய கட்டுரைகளைக் கண்காணித்தல்[தொகு]

த.வி வில் கட்டுரைகள் சுயசரிதைகளாகவோ அல்லது தமது உறவினர் பற்றி அமைத்தலையோ எழுதுபவர்கள் பொறுப்புடன் தவிர்ப்பது நல்லது. நபர்கள் பிரபலங்கள் பற்றிய இத்தகைய குறைபாடுள்ள செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான ஏதாவது சாத்தியமான உத்திகள் பற்றியும் சிந்திக்கலாம். --சஞ்சீவி சிவகுமார் 09:57, 16 நவம்பர் 2010 (UTC)

இவற்றைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 11:29, 16 நவம்பர் 2010 (UTC)

இத்தகைய திட்டப்பக்கங்களை உடனே மொழிபெயர்ப்பது அவசியமே. ஒரு திட்டப்பக்கத்தை மொழிபெயர்க்கத் தொடங்குகிறேன். மண் தொட்டியில் இடுகிறேன். சகலரும் பங்களிக்கக் கோருகிறேன்.

மணல்தொட்டி பலரும் தொகுத்தல் பயிலும் இடமாதலால் விக்கிப்பெயர்வெளியில் தமிழாக்கம் செய்யவேண்டிய கட்டுரைகள் பகுப்பில் புதிய கட்டுரைகளை உருவாக்கியுள்ளேன். சகலரும் அங்கு தமிழாக்கத்தில் பங்கு கொள்ள வேண்டுகிறேன்.--மணியன் 04:17, 17 நவம்பர் 2010 (UTC)

அருள் கூர்ந்து கருத்து கூறுங்கள்[தொகு]

இக்கட்டுரையை நான் விக்கி மாரத்தானில் தொடங்கி வைத்தேன். இன்று முழுமையாக முடித்துள்ளேன். இக்கட்டுரை பற்றிய கருத்து தேவை. அது மேலும் மேலும் என் எழுத்தாற்றலை அதிகரிக்கும். என்னை இன்னும் ஆர்வத்துடன் எழுதத் தூண்டும் என்றும் எண்ணுகிறேன். ஆகவே அருள் கூர்ந்து கருத்து கூறுங்கள்.
--சூர்ய பிரகாசு.ச.அ. 14:18, 16 நவம்பர் 2010 (UTC)

சூரிய பிரகாசு, நன்றாக எழுதியுள்ளீர்கள், ஆனாலும் சில திருத்தம் செய்யப்பட வேண்டும் (ஆங்கில விக்கி கட்டுரையும் சரியாக இல்லை).அதாவது மிதப்புப் புள்ளி செயல்பாடுகள் என்றால் என்ன, அதற்கான சில எடுத்துக்காட்டுகள் முதலியன விளங்குமாறு சேர்க்க வேண்டும். இதற்குத் துணை செய்யும் முகமாக கீழ்வாய்ப்புள்ளி (radix point) பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். மிதப்புப் புள்ளி என்பது மிக அருமையான கலைச்சொல். பிற கருத்துகளை அக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் எழுதுகிறேன். --செல்வா 03:24, 17 நவம்பர் 2010 (UTC)

கூகுள் அடுத்த சுற்று[தொகு]

கூகுள் மொழிபெயர்ப்பு அடுத்த சுற்று தொடங்கியுள்ளது. நாம் கொடுத்த 25 கட்டுரைத் தலைப்புகளில் முதல் தலைப்பு இன்று மொழி பெயர்க்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் இங்கே--சோடாபாட்டில் 07:42, 17 நவம்பர் 2010 (UTC)

நல்ல தொடக்கம். கட்டுரையின் வடிவமைப்பு சிறப்பாக உள்ளது. எழுத்து நடையிலும் பல மடங்கு முன்னேற்றம் உள்ளது. --Natkeeran 00:13, 18 நவம்பர் 2010 (UTC)
ஆம் நல்ல முன்னேற்றம் உள்ளது. ஆனால் எக்கச்சக்க மொழிபெயர்ப்புத் தவறுகள் உள்ளன. முன்னிருந்த குப்பைக் கட்டுரைகளைக் காட்டிலும் இவற்றைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தாலும். வரிக்கு வரி மூலத்தோடு ஒப்பிட்டால் தவறுகள் வந்து கொண்டே இருக்கின்றன. தொழில்சார் மொழிபெயர்ப்பு என்று சொல்லும் அளவுக்குத் தரமில்லை.--சோடாபாட்டில் 05:30, 18 நவம்பர் 2010 (UTC)

விக்கியில் மேலும் சில கட்டுரைகள் பதிவேற்றப்பட்டுள்ளன, விக்கி அன்பர்கள் அவற்றை வாசித்து விரைவில் கருத்துகளைத் தெரிவித்தால், ஏதேனும் திருத்தங்கள் தேவைப்படும்பட்சத்தில் அவற்றைச் செய்ய எளிதாக இருக்கும். நன்றி! அன்புடன் ---சாந்த குமார் 08:29, 1 திசம்பர் 2010 (UTC)

மாவட்ட வார்ப்புரு[தொகு]

ஒவ்வொரு மாவட்டத்திற்கான செய்தியிலும் மேலே வலது புறம் இடம் பெற்றுள்ள மாவட்டங்களுக்கான வார்ப்புருவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது. இதில் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பெயரும் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும். இது குறித்து கவனிக்க வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி. 14:26, 17 நவம்பர் 2010 (UTC)

சேர்த்துள்ளேன். வேறு மாற்றங்கள் தேவை எனில் கூறுங்கள். பெரும்பாலான மாவட்டங்களில் இவ்வார்ப்புரு இணைக்கப்படவில்லை. மாவட்ட கட்டுரைகளை வளர்த்தெடுக்கவேண்டும். --குறும்பன் 20:27, 17 நவம்பர் 2010 (UTC)

மாற்றத்தில் ஏமாற்றம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெற்றுள்ள சில செய்திகளில் மாற்றம் கோரி நான் ஆலமரத்தடி பக்கத்தில் பதிவு செய்த சில கருத்துக்கள் நண்பர் இரவியால் விக்கிப்பீடியா:இடைமுகப்பு எனும் புதுப்பக்கத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இங்கிருந்த கருத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டதே தவிர இதுவரை பிழைகள்/தேவைகள் மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இது எனக்கும் என் கருத்துக்கும் ஏமாற்றமே... விக்கிப்பீடியா:இடைமுகப்பு பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு கலந்துரையாடல் மூலம் விரைவில் முடிவும் மாற்றமும் கண்டால் நல்லது. தவறுகள் தொடராமல் இருக்கும். --தேனி.எம்.சுப்பிரமணி. 01:34, 20 நவம்பர் 2010 (UTC)

சுப்பிரமணி, உங்களுடைய திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவை என்பது எனது கருத்து. உங்கள் முன்மொழிவுகளைப் பதிந்து இரண்டு கிழமைகள் வரை விடுங்கள். எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கா விட்டால் நீங்களே மாற்றி விடுங்கள். -- மயூரநாதன் 08:16, 20 நவம்பர் 2010 (UTC)

National Identity and Minority Languages[தொகு]

விக்கிமீடியா திட்டம் : இந்திய விக்கிக்கு பங்களியுங்கள்[தொகு]

தற்பொழுது நிதி திரட்டுவதற்கு ஜிம்மி வேல்ஸ் கொண்ட விளம்பர படம் அனைத்து பக்கங்களிலும் செய்தி வருகின்றது.இது டிசம்பர் வரை வரும். இதனை அடுத்து விக்கியை பயன்படுத்துவோரை பங்களிப்போராக மாற்ற ஓர் செய்தி வரவுள்ளது. இப்பொழுது விக்கிமீடியாவின் இந்தியா உத்தியினால் இந்திய விக்கிகளுக்கு தனி கவனம் கொடுக்க படுகின்றது. இந்த பக்கத்தில் உங்கள் கருத்துக்கள் / யோசனைகளை பகிர்ந்துகொள்ளவும். ரவி, பெங்களூர் சந்திப்பின் பிறகு தேடுபொறி முன்னேற்றங்கள் குறித்து நீங்கள் கூறிய கருத்துக்களை பகிர்ந்தால் நன்றாக இருக்கும். ஸ்ரீகாந்த் 09:18, 21 நவம்பர் 2010 (UTC)

நாடு வாரியாக, நாடுகள் வாரியாகத்[தொகு]

  • நாடு வாரியாகத் தமிழ்
  • நாடு வாரியாக தமிழ்
  • நாடுகள் வாரியாகத் தமிழ்
  • நாடுகள் வாரியாக தமிழ்

எது சரி?

--Natkeeran 16:14, 21 நவம்பர் 2010 (UTC)

{நாடு நாடுகள்} வாரியாகத் தமிழ் (வழக்குகள்) என்பது சரியாக இருக்கும். "ஆக" என்று முடிந்தால் பொதுவாக ஒற்று மிகும். எ.கா சரியாகச் சொன்னான், தெளிவாகக் கூறினான்.. எனவே வாரியாகத் தமிழ் (வழக்குகள்) என்பது போல வர வேண்டும். நாடுவாரியாக அல்லது நாடுகள் வாரியாக என்ற இரண்டுமே சரியானதாகத்தான் எனக்கும் படுகின்றது.--செல்வா 20:52, 21 நவம்பர் 2010 (UTC)

Chinese regions fight back against surge of Mandarin[தொகு]

--Natkeeran 01:59, 23 நவம்பர் 2010 (UTC)

Flagged Revisions feature update: November 23[தொகு]

(apologies in advance for using English here) - We are currently planning to roll out a new version of the FlaggedRevs extension to all wikis on Tuesday, November 23 starting roughly 3:15pm PST (23:15 UTC). See the announcement for more information. -- RobLa-WMF 07:39, 23 நவம்பர் 2010 (UTC)

Thanks for the intimation, RobLa. -- சுந்தர் \பேச்சு 02:40, 24 நவம்பர் 2010 (UTC)

மணற்கேணி- 2010[தொகு]

  • சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டியாக, மணற்கேணி- 2010 எனும் தலைப்பில் நடத்தப்பட உள்ளது. அரசியல் / சமூகம் (அச) எனும் முதல் பிரிவில் 10 தலைப்புகளும், தமிழ் அறிவியல் (அறி) எனும் இரண்டாம் பிரிவில் 5 தலைப்புகளும் , தமிழ் மொழி / இலக்கியம் (இல) எனும் மூன்றாம் பிரிவில் 8 தலைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் மூன்றாம் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் தமிழ் விக்கிப்பீடியா எனும் தலைப்பும் ஒன்றாக இருக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருபவர்கள் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பினால் இங்கு சொடுக்கி விபரம் அறிந்து கொள்ளலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி. 15:54, 23 நவம்பர் 2010 (UTC)
      • ஆம். சிறீதரன் சொல்வது சரி தான். வலைப்பூவில் டிசம்பர் 31 என்று தான் உள்ளது. ஆனால், அறிவிப்புப்பலகையில் இடுவதற்காகத் தரப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தான் நவம்பர் 15 என்று உள்ளது. போட்டி நடத்துபவர்கள் கவனத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி விடுகிறேன். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 07:45, 24 நவம்பர் 2010 (UTC)

தமிழ் இலக்கியம், மொழி பிரிவில் தமிழ் இணையம் சார்ந்து உள்ள ஒரே தலைப்பு தமிழ் விக்கிப்பீடியா மட்டுமே. பிற தலைப்புகள் ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ் விக்கிப்பீடியா பல வகைகளிலும் கவனிப்புக்குள்ளாகி வருகிறது என்பதை நாம் கவனித்துச் செயற்பட வேண்டும் ;)--இரவி 11:38, 24 நவம்பர் 2010 (UTC)

ஆமாம் ரவி, தமிழ்மண தெரிவுகளிலும் "தமிழ்க்கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையம் தொடர்பான கட்டுரைகள்" என்ற பகுப்புக்குள் விக்கிப்பீடியா சுட்டப்பட்டு உள்ளது. --Natkeeran 01:28, 25 நவம்பர் 2010 (UTC)

tell us about your wikipedia[தொகு]

மெட்டா விக்கியில் tell us about your Wikipedia எனும் பகுதியில் திராவிட மொழிகள் பிரிவில் மலையாளம் மற்றும் தெலுங்கு விக்கிப்பீடியாக்களைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி இன்னும் சொல்லப்படவில்லை. இங்கு[[2]] அழுத்தி அங்கு செல்லலாம்.--பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 17:19, 23 நவம்பர் 2010 (UTC)

சிறிது சேர்த்திருக்கிறேன். திருத்தம் இருந்தால் தயங்காமல் திருத்தவும். -- மாஹிர் 20:10, 23 நவம்பர் 2010 (UTC)
நன்றி மாகிர். இன்னும் பல தகவல்களை நாம் சேர்க்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 02:42, 24 நவம்பர் 2010 (UTC)

சற்று திருத்தி, விரிவாக்கியுள்ளேன்.--இரவி 11:20, 24 நவம்பர் 2010 (UTC)

Indian states keen to help teach mother tongues in SA[தொகு]

இந்திய விக்கி தரவுகள்[தொகு]

http://stats.wikimedia.org/EN_India/Sitemap.htm - வருகை அடிப்படையில் தமிழ் இரண்டாம் இடத்தில் உள்ளது நன்று. ஒரு மணிநேரத்துக்கு மூவாயிரத்துக்கு மேலாகத் தமிழ் விக்கிப் பக்கங்கள் பார்க்கப்படுகின்றன. ஒரு மில்லியன் தமிழர்களுக்கு ஒரு தமிழ் விக்கிப்பீடியர் என்ற அளவு தான் இருப்பதை நோக்கலாம். சமக்கிருதம், மலையாளம், சிங்களம் முதலியன நமக்கு முன்னே உள்ளன. -- சுந்தர் \பேச்சு 09:19, 24 நவம்பர் 2010 (UTC)

தரவு எனப்படுவது யாதெனில் விரும்பிய வண்ணம் நோக்கல் :) ஒவ்வொரு கட்டுரையும் பெறும் பார்வைகள் அடிப்படையிலும், ஒரு மில்லியன் பயனர்களுக்கு எத்தனைப் பேர் பார்க்கிறார்கள் என்ற அடிப்படையிலும் தமிழும் மலையாளமும் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பதுடன் ஒத்த நிலையிலும் உள்ளன. இந்த ஆவணத்தைக் காண்க . குறைந்தது மணிக்கு 1000 பார்வைகளையும், ஒரு மில்லியன் மக்கள் தொகை உள்ள விக்கிகளையும் மட்டும் கணக்கில் எடுத்துள்ளேன். --இரவி 12:40, 24 நவம்பர் 2010 (UTC)
சந்தேகம் இல்லாமல், பங்களிப்பாளர் எண்ணிக்கை, முறை, பயன்பாடு, ஆழம், தரம் ஆகிய அளவீடுகளில் மலையாள விக்கி பல அடிகள் முன்னிற்கு நிற்கிறது. --Natkeeran 01:26, 25 நவம்பர் 2010 (UTC)
மலையாள விக்கி நன்றாக முன்னேறியுள்ளது என்றாலும், என் கணிப்பில், "தரத்தில்" முன்னணி மொழிகளாகிய இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய நான்குமே நல்ல நிலையில் இருப்பதாகவே நினைக்கின்றேன் (தெலுங்கு ஒருவரிக் கட்டுரைகளை அதிக அளவு கொண்டிருந்தபோதிலும்). கன்னட விக்கியும் பல நல்ல தரமான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. வெவ்வேறு கட்டுரைகளில் வெவ்வேறு மொழி விக்கிகள் சிறப்பாக உள்ளன. விக்கியின் தர அளவீட்டில் "ஆழம்" ("depth") என்னும் அளவீட்டில் மலையாள விக்கி உயர்ந்து இருந்தாலும், அதன் உண்மையான காரணம் எனக்கு விளங்கவில்லை. பல கோணங்களில் தமிழ் விக்கியே முதலாவதாகவோ, இந்திக்கு அடுத்து இரண்டாவதாகவோ உள்ளதாக நான் கருதுகிறேன் (மொத்த பை'ட் அளவு, சராசரி பை'ட் அளவு, மொத்த சொற்கள், ஒரு நாளுக்கான தொகுப்பு, படங்கள்). இவை தவிர, நான் பார்த்த அளவிலே, மலையாள விக்கியில் பல கட்டுரைகளில் அப்படியே ஆங்கில கலைச்சொற்களையும் ஏராளமான வேற்றுமொழிச் சொற்களையும் இட்டு எழுதியுள்ளார்கள். இவ்விதத்தில் தெலுங்கு விக்கியும் இந்தி விக்கியும் மலையாளத்தைவிட நல்ல ஆக்கங்களைக் கொண்டதாக உள்ளன என்று நினைக்கின்றேன். பொதுவாக தென்னிந்த மொழிகள் நான்கும் இந்தியும் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளன. பிற இந்தி மொழிகளும் விரைந்து வளர்ந்துகொண்டு வருகின்றன. தமிழ் விக்கிப்பீடியா இன்னும் 2-3 ஆண்டுகளில் நல்ல நிலையை எய்தும் என்று எண்ணுகிறேன். --செல்வா 03:36, 25 நவம்பர் 2010 (UTC)
விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு என்னும் பக்கத்தில் மே 2010 -ஆன தர அளவீடுகளின் ஒப்பீடு உள்ளது பார்க்கவும். தமிழ் முதல் இரண்டு இடங்களில் உள்ளது. மலையாள விக்கியை விட மொத்த பைட் அளவிலும், சராசரி பைட் அளவிலும் கன்னட விக்கி முந்தி இருப்பதைப் பார்க்கலாம். --செல்வா 04:37, 25 நவம்பர் 2010 (UTC)

மொத்த பைட் அளவு, மொத்த வார்த்தை அளவு இவ்விரண்டும் கூகுள் குப்பையாக்கம் திட்டம் நடந்துள்ள / நடைபெற்றுள்ள விக்கிகளின் தரவுகளை கொஞ்சம் ஏற்றிக் காண்பிக்கின்றன். எ.கா. இந்தியிலும், கன்னடத்திலும் இன்னும் கூகுள் அடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறது. எனவே இந்த மொத்த பைட்/அளவை கொஞ்சம் விட்டுவைப்பது நல்லது. மலையாள விக்கி எல்லாவற்றிலும் முன்னிற்பதுக்கு காரணம் இரண்டு - 1) சராசரி பைட் அளவு 2) ஒரு கட்டுரை எவ்வளவு முறை எவ்வளவு பயனர்களால் தொகுக்கப்படுகிறது என்பது (கூட்டு முயற்சியின் அடையாளமாக). ஆள் பலத்தில் நாமும் மலையாளமும் சரிநிகர் அளவில் உள்ளோம். தொடர் பங்காளிப்பாளர் பட்டியல்கள் இங்கே. இந்தி, மராத்தி , தெலுங்கு விக்கிகள் தமிழ் மலையாளம் அளவுக்கு ஆள்பலம் கொண்டவை அல்ல. நம்மில் பாதி தான் அங்கே பங்களிப்பாளர்கள் இருக்கிறார்கள். அதுவும் மராத்தி விக்கியில் வெறும் தலைப்புடன் ஒரு பத்தாயிரம் கட்டுரைகள் இருக்கின்றன. (ஒரு வரி கூட கிடையாது). வெறும் தலைப்பு மட்டுமே. சமூகத்தை வளர்ப்பதில் தமிழும், மலையாளமும் கொண்டுள்ள வெற்றி அவர்களுக்கு கிட்டவில்லை என நினைக்கிறேன். கன்னடம் இதில் எல்லாவற்றிலும் பின் தங்கி உள்ளது.

ஒரு கட்டுரைக்கு எவ்வளவு தொகுப்புகள் / எத்தனை பேர் என்பதில் மலையாளம் நம்முடன் இருமடங்கு உள்ளார்கள். கட்டுரைகளை திட்டமிட்டு கூட்டு முயற்சியுடன் உருவாக்குகிறார்கள் என்று நினைக்கிறேன். இது ஒரு சரியான அளவுகொலல்ல என்பது என் கருத்து. ஏனென்றால் த. விக்கியில் இத்தகைய கூட்டு முயற்சி இல்லாதது கட்டுரைகளில் டைவர்சிட்டியியை கூட்டியுள்ளது (பெரும்பாலும் நாமனைவரும் தனித் தனித் கடைகளில் டீ ஆற்றிக் கொண்டிருப்பது பல துறைக் கட்டுரைகளை உருவாக்கியுள்ளது). மேலும் விக்கியாக்கத்தில் நமது தொடர்பங்காளிப்பாளர்கள் கொண்டுள்ள தேர்ச்சி, முழு கட்டுரையையும் ஒரே கிளிக்கில் சேர்ப்பது போன்ற வேலைகளால் நமது ஆழம் குறைந்தள்ளது போன்ற தோற்றமுள்ளது. --சோடாபாட்டில் 04:38, 25 நவம்பர் 2010 (UTC)

மலையாளிகள், தமிழர் மக்கள் தொகையில் அரைவாசி. எனவே அவர்களின் பங்களிப்பு வீதம் இரண்டு மடங்கு. அவர்கள் மேற்கொள்ளும் தொக்கு அளவு அதிகம். நல்ல outreach, கூட்டுழைப்பு, அதிக கல்வி, மொழித் தேர்ச்சி, அரச-ஊடக ஆதரவு ஆகியவை எமது மலையாள விக்கியின் வெற்றிக்கு காரணங்கள். --Natkeeran 04:44, 25 நவம்பர் 2010 (UTC)
சோடாபாட்டில், நான் கூகுள் பங்களிப்பால் சில தரவுகள் கூடுதலாக உள்ளது என்பதை மறுக்கவில்லை, ஆனால் தமிழைப் பொருத்தவரை, அவை குப்பை அல்ல என்பது என் கருத்து. கூகுள் கட்டுரையாக்கத்தில் பல குறைபாடுகள் உள்ளன என்பது நாம் யாவரும் அறிந்ததே. மலையாளம், மராத்தி, இந்தி, வங்காளி விக்சனரிகளில் நான் பங்களித்தபோது (அவற்றில் நான் முதல் 6-8 பகங்களிப்பளரிகளில் ஒருவன் :) ) அம்மொழி விக்கிகளைக் கூர்ந்து நோக்க வாய்ப்பு கிட்டியது. என் கணிப்புகள் அதன் அடிப்படையிலேயே. தெலுங்கு, மராத்தி, இந்தி விக்கிகளில் ஒருவரி, ஒரு சொல் கட்டுரைகளும் வெற்று உள்ளடக்கங்களும் உள்ள கட்டுரைகளும் இருப்பதை நான் நன்கு அறிவேன். என்றாலும் மராத்தியைத் தவிர்த்த மற்ற விக்கிகள் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றன. என் கணிப்பில் இந்தி, தமிழ், மலையாளம் இம்மூன்றும் அதே வரிசையில் நல்ல வளர்ச்சி அடைந்து வருகின்றன. தமிழ் முதல் இடத்தில் ஏறத்தாழ சனவரி-பிப்பிரவரி 2009 வரை இருந்து வந்தது. இப்பொழுதும் இந்தியை முந்தி இருக்கவோ, முந்திக்கொண்டு வரவோ இயலும். நற்கீரன், மலையாளிகளின் அதிகக் கல்வி என்பது சொற்பமே அதுவும் அடிப்படைக் கல்வியே, மொழித் தேர்ச்சி என்பதும் உங்கள் தனிக்கருத்தே. அதிக விழிப்புணர்வுடன் இயங்குகிறார்கள் என்பதில் ஐயமே இல்லை. ஆனால் மொழிநடையும், கருத்துச் செறிவும், சராசரியாக நோக்கும் பொழுது தமிழை விடச் சிறந்ததாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என் கணிப்பு சரியானதாக இல்லாமல் இருக்கலாம். இவை நான் பார்த்த 80-100 கட்டுரைகளின் அடிப்படையிலேயே. --செல்வா 05:34, 25 நவம்பர் 2010 (UTC)
சோடாபாட்டில் நீங்கள் மேலே குறிப்பிட்ட புள்ளிக்குறிப்புகள் பக்கங்களில் இருந்து தொகுதவற்றை நான் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு என்னும் பக்கத்தில் தொடர்ந்து குறித்து வந்துள்ளேன். மே 2010 -ஆன தரவுகள் முழுமையாக கிடைப்பதால் அது வரை தொகுத்துள்ளேன். --செல்வா 05:45, 25 நவம்பர் 2010 (UTC)

சோடாபாட்டில் சொன்ன மாதிரி நாம் பலரும் ஒரே சொடுக்கில் முழுமையான கட்டுரைகளை ஏற்றுகிறோம் (கூகுள் திட்டம் உட்பட). தவிர, Depths above 300 for Wikipedias below 100 000 articles have been automatically dismissed as irrelevant என்று http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias பக்கத்தில் குறிப்பிடுகிறார்கள். எனவே, தரவு குறிப்பிடும் ஆழம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆனால், மலையாள விக்கி பயனர் சமூகம் நம்மை விட 3 மடங்காவது பெரிதாகவும், முனைப்புடையதாகவும், பல்வேறு திறன் பொருந்தியதாகவும் இருப்பது கண்கூடு. கணிசமானோர் இளைஞர்கள், மாணவர்கள். கேரள அரசுடன் இணைந்து மாவட்டம் தோறும் பயிற்சிப் பட்டறைகள் நடத்துகிறார்கள். தொலைநோக்கில், இது அவர்கள் விக்கியின் வளர்ச்சியில் பெரிதும் உதவும். தமிழ் விக்கியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு: 1. பயனர் சமூகத்தை வளர்ப்பது 2. ஏற்கனவே இருக்கிற அறிவு மூலங்களை விக்கியில் இணைப்பது ஆகிய இரண்டு நடவடிக்கைகள் மிகவும் உதவும்--இரவி 12:05, 25 நவம்பர் 2010 (UTC)

ஒப்பீட்டளவில் மலையாளிகள் கூடிய அளவு தாய் மொழியில் கற்கின்றனர். சீரிய எழுத்து, இலக்கியம் ஆகிய துறைகளில் கூடிய ஈடுபாடு காட்டுகிறார்கள். பெண்கள் கூடிய சுதந்திரம் பெற்று இருக்கிறார்கள். இந்தியாவிலேயே பல தரவுகளில் மிக முன்னேறிய மாநிலம் கேரளம் ஆகும். ஆகவே அதன் ஒரு வெளிப்பாடக அவர்களின் விக்கி பங்களிப்பையும் கருதலாம். --Natkeeran 00:35, 26 நவம்பர் 2010 (UTC)
நற்கீரன் நீங்கள் சொல்லியதில் சில உண்மையே (மாந்தர் வளர்ச்சிச் சுட்டெண் முதலானவை), மறுக்கவில்லை, ஆனால் கேரளா வேறுபல கோணங்களில், தமிழ்நாட்டை ஒப்பிடும் பொழுது ஈடான வளர்ச்சி அடையவில்லை (தலா முறையிலும்). வேளாண்மையிலும், தொழில் வளர்ச்சியிலும் தமிழ்நாடு அளவு வளரவில்லை. இது விரிவாகவும், தக்க தரவுகளோடும், சீரான முறையில் ஒப்பிட்டும் பேசவேண்டியது. இங்கு அதிகம் இது பற்றிப் பேசுவது முறையாகாது. நீங்கள் கூறும் நோக்கிற்கு மாறான பார்வைகளும் உண்டு என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். --செல்வா 01:34, 26 நவம்பர் 2010 (UTC)

மேலோட்டமாகப் பார்த்தால் தரவுகளில் இருந்து ஓரளவு உண்மைகளை மட்டுமே அறிந்து கொள்ள முடியும். முக்கியமாக "ஆழம்" பல்வேறு வழிகளில் அதிகரிக்க வாய்ப்புக்கள் உண்டு. தமிழ் விக்கியில் இப்போதிருக்கும் நிலையில் தமிழ் விக்கியில் உடனடியாக 1000 கட்டுரைகளைக் கூட்டினால் "ஆழம்" 2.5 புள்ளிகள் இறங்கிவிடும். ஆனால் கட்டுரை எண்ணிக்கையை மாற்றாமல் இதே ஆயிரம் பேச்சுப் பக்கங்களைத் திறந்து விட்டால் அல்லது 1000 வழிமாற்றுப் பக்கங்களை உருவாக்கினால் "ஆழம்" 1.0 புள்ளி கூடும். இதே ஒரு புள்ளியைத் தொகுப்புக்கள் செய்வதன் மூலம் கூட்ட வேண்டின் 18,000 தொகுப்புக்கள் செய்யவேண்டியிருக்கும். எனவே இந்த ஆழம் என்னும் அளவீடு நியாயமானதாக எனக்குத் தெரியவில்லை. திட்டமிட்டுக் குறுக்கு வழியிலும் கூட இதை அதிகரிக்க முடியும்.

மலையாள விக்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அங்கே பல பயனர்கள் சிறப்பாகப் பணியாற்றுவதும் இதற்குக் காரணம் எனலாம். இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு கிழமையில் 6 விக்கிப் பட்டறைகள் கேரளா முழுவதும் நடத்தியதாகக் கேள்விப்பட்டேன். ஒவ்வொரு பட்டறையிலும் சராசரியாக 50 பேர் வரை கலந்து கொள்வதாகவும் அறிந்தேன் சில இடங்களில் 70-75 பேர் வரை ஆர்வமாகக் கலந்து கொள்கிறார்களாம். இவ்வாறான ஒரு பரவலான மக்கள் விழிப்புணர்வு தமிழ் விக்கிப்பீடியா குறித்து இன்னும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தமிழ் உணர்ச்சி தமிழர்களுக்கு அதிகம். ஆனாலும் அதைப் பயனுள்ள வகையில் வெளிப்படுவது குறைவு. இந்த ஒப்பீடுகளில் நாம் சிங்கள விக்கியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் வேகமாக வளர்ந்து வருகிறது. சென்ற மாதம் மட்டும் 43 புதிய பங்களிப்பாளர்கள் இணைந்திருக்கிறார்கள். தொகுப்புக்கள் 82% அதிகரித்துள்ளது.

தமிழிலும் அண்மைக் காலங்களில் சற்று வேகமான வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கு இல்லை ஆனாலும் புதிய பங்களிப்பாளர்கள் இணையும் வேகம் போதாது. கல்லூரி மாணவர்கள் மட்டத்தில் பல பங்களிப்பாளர்கள் தேவை. பலருக்குத் தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்க்கவே முடியாதிருப்பதாக மலையாள விக்கியர் சிஜு ஒருமுறை சொன்னார். பலர் தமிழ் விக்கி பற்றித் தெரிந்து கொள்ளாமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். புள்ளிவிவர அடிப்படையிலும் தமிழ் தலை நிமிர்ந்தே நிற்கிறது எனினும் புள்ளிவிவரங்களுக்கும் அப்பால் சென்று நல்ல தரமான பல கட்டுரைகளைக் கொண்டதாகத் தமிழ் விக்கி வளர வேண்டும். --மயூரநாதன் 11:42, 26 நவம்பர் 2010 (UTC)

குறுந்தட்டில் தேர்ந்தெடுத்த கட்டுரைகளும் தமிழ் விக்சனரியும்[தொகு]

தேர்ந்தெடுத்த தமிழ் விக்கி கட்டுரைகளையும் விக்சனரிப் பக்கங்களையும் தொகுத்து மாணவர்களுக்கான குறுந்தட்டு ஒன்றை வெளியிடுவதற்கு விக்கிமீடியா அலுவலர் Jessie Wild உதவ விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான உரையாடல்களைக் காண http://lists.wikimedia.org/pipermail/wikita-l/2010-November/thread.html#12 என்ற மடலிழையைப் படியுங்கள். ஏற்கனவே இலினக்சு குழுமத்தினர் உதவியுடன் இதற்கான திட்டத்தைத் தொடங்கியிருந்தோம், நற்கீரனுடைய நண்பர் ஒருவரும் பண உதவி அளிக்க இசைந்திருந்தார். அதனால், இத்திட்டத்தை முடுக்கி விட இது சரியான நேரமாகும். இத்திட்டத்துக்கு பொறுப்பாளராக எவரேனும் முன் வர வேண்டும். அதன்பின், ஒரு திட்டப்பக்கத்தை உருவாக்கிப் ப்பணிகளைத் தொடரலாம். -- சுந்தர் \பேச்சு 03:01, 25 நவம்பர் 2010 (UTC)

நாம் இதை செய்வதால் பல ஆயிரம் மாணவர்களை விக்கி பக்கம் ஈர்க்க முடியும். மலையாள விக்கியின் வளர்ச்சியில் குறுந்தட்டும் ஓர் பங்கு வகிக்கும். திட்டப்பக்கம். 3 மாத இலக்கு எனக்கு சாத்தியம் என தோன்றுகிறது. மீடியாவிக்கி:Sitenotice யில் ஓர் சுட்டி கொடுத்தால் நன்றாக இருக்கும். ஸ்ரீகாந்த் 08:02, 25 நவம்பர் 2010 (UTC)
ஸ்ரீகாந்த், நீங்கள் பொறுப்பாளராக இருக்க முடியுமானால் அருணுடன் இணைந்து இத்திட்டத்தை ஒருங்கிணையுங்கள். தேவையான உதவிகள் அனைத்தையும் செய்ய அணியமாய் இருக்கிறோம். இத்திட்டத்தை ஈழத்திலுள்ள பள்ளிகளுக்கும், ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற அயலகப் பள்ளிகளுக்கும் விரிவாக்கலாமா? ஏனெனில், விக்கிமீடியாவும் வட அமெரிக்கத் தமிழர் ஒருவரும் தனித்தனியே பண உதவி அளிக்க முன்வந்துள்ளனர். வேண்டுமெனில், முதல் கட்டமாகத் தமிழகத்தை மட்டும் வைத்துக் கொள்ளலாம். -- சுந்தர் \பேச்சு 09:03, 25 நவம்பர் 2010 (UTC)
என்க்கு அனுபவம் பத்தாது,அதான் யோசிக்கறேன்.குறுந்தட்டு பொதுவானது.ஆகையால் யாவரும் பயன்படுத்துவதில் சிரமம் இருக்க கூடாது. மாணவர்களுக்காக செய்யப்படும் குறுந்தட்டு என்றாலும், இது யார் வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய ஓர் சிறு கலைக்களஞ்சியம். ஸ்ரீகாந்த் 09:39, 25 நவம்பர் 2010 (UTC)

விக்கிமூலத்திலிருந்து பழந்தமிழ் இலக்கியங்கள் சேர்த்தல் நன்றாக இருக்கும். அனைத்து நூலகங்களிலும் இவை இருக்குமா என்பது சந்தேகம். இதன் மூலம் அரசையே கூட பண உதவி கேட்கலாம். ஸ்ரீகாந்த் 08:58, 25 நவம்பர் 2010 (UTC)

இதையும் ஆராயலாம். -- சுந்தர் \பேச்சு 09:03, 25 நவம்பர் 2010 (UTC)

சுந்தர், இது ஒரு தமிழ் விக்கி அடையாளமாக இருக்கக்கூடிய படைப்பாக (flagship product?) என்பதால் சற்று பொதுவான தொகுப்பாக, அதே வேளை மாணவர்களுக்கும் உகந்ததாக உருவாக்கினால் போதும். எனவே, தமிழ்நாடு என்ற எல்லைக்குள் சுருக்கிக் கொள்ளத் தேவை இல்லை. தொகுப்பை உருவாக்கி விட்டால், பிறகு ஆதரவாளர்களின் விருப்பம் / வசதியைப் பொறுத்து அவரவர் பகுதிகளில் அச்சிட்டு வழங்கலாம். 500 கட்டுரைகள் என்று வைத்துக் கொண்டால் கூட, அவற்றைப் பதிப்புக்கு ஏற்றவாறு பிழை திருத்தி, இற்றைப்படுத்துவது மிகப் பெரும் பணி. 3 மாதம் காலம் போதுமா என்பது ஐயமே. தரத்தை உறுதிப்படுத்த கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளலாம். விக்கி மூலத்தில் இருந்து இலக்கியங்களைச் சேர்ப்பது நல்ல யோசனை--இரவி 11:44, 25 நவம்பர் 2010 (UTC)

உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன், இரவி. இந்த வெளியீட்டுக்கான உள்ளடக்கத்தை ஒழுங்கு செய்தல் பணியைப் பொருத்தமட்டில் எந்த எல்லையையும் மையப்படுத்த வேண்டியதில்லை. குறுவட்டில் எழுதியோ, நூல்வடிவில் அச்சிட்டோ வழங்கும் திட்டத்தை வெவ்வேறு வட்டாரங்களில் முன்னெடுக்கலாம். en:WP:1 ஒரு நல்ல மாதிரித்திட்டம். -- சுந்தர் \பேச்சு 12:23, 25 நவம்பர் 2010 (UTC)
குறுந்தட்டு உலகத் தமிழ் மாணவர்கள் எல்லோருக்கும் பொதுவாக இருக்கவேண்டுமானால், முதலில் பல விடயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும். கட்டுரைகளைத் தெரிவு செய்தபின் வெளியிடத் தக்கவாறு மேம்படுத்தும்போது கலைச் சொற்களுக்கு மாற்றுக் கலைச் சொற்களையும் சேர்க்கவேண்டும். இதற்கான ஒழுங்கு முறையொன்றை முன்னதாகவே வகுத்துக்கொள்ளலாம். மாணவர்களுக்காக என்பதால் அவரவர்கள் பயன்படுத்தும் கலைச் சொற்கள் இல்லாவிடில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நிற்க, ஒவ்வொரு கட்டுரையையும் இலக்கணப்பிழைகள், எழுத்துப்பிழைகள், பொருட்பிழைகள் இல்லாமல் திருத்தவேண்டும். நிச்சயமாக இதற்குக் காலம் தேவைப்படும். ஆனால் தொடங்குவோம். வேண்டுமானால் காலத்தைச் சிறிது நீட்டித்துக் கொள்ளலாம். முதலில் கட்டுரைகளைத் தெரிவு செய்யலாம். ---மயூரநாதன் 07:02, 26 நவம்பர் 2010 (UTC)
விக்கிசெய்திகளில் அறிவியல், வரலாற்று செய்திகளை கனகு நிரைய தொகுத்திருக்கிறார். அவற்றை விக்கி செய்தி காப்பகம் என்று ஒன்றை சேர்க்கலாமா? தமிழ் புத்தகங்களிலோ வேறு எங்குமோ காணக்கிடைக்காத அரிய தகவல்கள் அவை. --மாஹிர் 06:43, 27 நவம்பர் 2010 (UTC)
கருத்துப்பிழை, எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை இல்லாதவையாக இருத்தல் வேண்டும் என்பது தலையாயது. சொற்றொடர்கள் எளிமையானதாகவும், கருத்தைத் தெளிவாகக் கூறுவனவாகவும் இருத்தல் வேண்டும். தக்கவர்களைப் பொறுப்பாசிரியர்களாகக் கொண்டு திருத்தங்கள் செய்தல் வேண்டும். தரம் நிறுவும் விதமாக எடுத்துக்காட்டான கட்டுரைகளாக இருக்க வேண்டும். அரைகுறையாகவோ, தேவையில்லாத நெருக்கடியான காலக்கெடுக்களை வைத்துக்கொண்டு அல்லறவோ தேவை இல்லை. பலர் படித்துப் பார்த்து சீர் செய்ய வேண்டும். கூடிய மட்டிலும் நல்ல தமிழில் இருத்தல் நல்லது. கட்டுரைகள் பல துறைகளைச் சார்ந்தவையாக இருத்தல் வேண்டும். மாணவர்களுக்கு என்றாலும், அது பொதுப்பட பயன் தரும் ஒரு தொகுப்பாக இருக்க வேண்டும். என்ன செலவு ஆகும் என்று கணித்துச் சொன்னால் உதவி செய்ய அணியமாக உள்ளேன். பொறுப்பாசிரியர்களில் ஒருவனாகவும் பங்கு கொள்ள இயலும் (ஆனால் காலக்கெடுவைப் பொருத்தே ஏற்றுக்கொள்ளும் பொறுப்புகள் அடங்கும்). கலை, இரவி, சிறீதரன் கனகு, மயூரநாதன் சுந்தர் போன்றவகளோடு இன்னும் சிலர் சேர்ந்து மிகச் சிறப்பாகச் செய்யலாம். தமிழ் இலக்கியங்கள் இருப்பதை நான் வரவேற்றாலும், இதுவரை வெளியாகாத அறிவியற் கட்டுரைகள், வரலாறு, குமுகவியல் கட்டுரைகள் அடங்கியவை பெரும்பகுதியாக இருப்பது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன். வியப்பூட்டும் அரிய நல்ல படங்கள் அல்லது இயங்கு படங்ககள் (குறுந்தகடாக இருந்தால்) முதலியன இருந்தால் களிப்பூட்டுவதாக இருக்கும். கண்ணைக் கவர்வதாகக் கருத்தைக் கவர்வதாக, அறிவைக் கிளர்வதாக இருக்க வேண்டும். பயனுடையதாகவும் இருக்க வேண்டும்.--செல்வா 21:27, 28 நவம்பர் 2010 (UTC)

தமிழ்த் தட்டச்சுப் பொறி சேர்ப்பு[தொகு]

வேறு எந்த மென்பொருளும் இல்லாமல், தமிழ் விக்கி தளத்தில் இருந்தே தமிழில் எழுதும் தட்டச்சுப் பொறி சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்99, தமிங்கில முறைகள் உள்ளன. அடுத்து இலங்கை சீர்தர முறையைச் சேர்க்க உதவி தேவைப்படுகிறது. தமிழ் விக்கி செய்திகள் தளத்திலும் இவ்வசதி சேர்க்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டத்துக்குப் பிறகு பிற தமிழ் விக்கித் திட்டங்களிலும் சேர்க்கலாம். இதன் மூலம் விக்கித் தேடலில் தமிழில் தேடவும், புதிய பயனர்கள் தமிழில் தொகுக்கவும் கூடுதல் வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்திட்டத்தின் விவரங்களை இங்கு காணலாம்.

அண்மைய தமிழ் விக்கி மாரத்தான் / சென்னை விக்கிச் சந்திப்பை அடுத்து மலையாள விக்கியர்களான சிச்சு அலெக்சு, சுனாயித் ஆகியோர் மலையாள விக்கியில் இருந்த நிரலைத் தமிழ் விக்கிக்கு மாற்றித் தர பெரு முயற்சி எடுத்தனர். அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்--இரவி 13:25, 25 நவம்பர் 2010 (UTC)

இரவி, மிக்க மகிழ்ச்சி. நான் புகுபதிகை செய்யாமலிருக்கையில் வலமேற்புறத்தில் drop-down பெட்டி வருகிறது. ஆனால் புதுபதிகை செய்தவுடன் இது தெரிவதில்லை. வேறு யாருக்கும் இச்சிக்கல் உள்ளதா? இதை எப்படி சரி செய்வது --சிவக்குமார் \பேச்சு 16:03, 25 நவம்பர் 2010 (UTC)
உங்கள் உலாவியின் cacheஐ நீக்கி விட்டு பாருங்கள். ஸ்ரீகாந்த் 16:08, 25 நவம்பர் 2010 (UTC)
சரியாகி விட்டது. நன்றி, ஸ்ரீகாந்த்.--சிவக்குமார் \பேச்சு 14:09, 26 நவம்பர் 2010 (UTC)
ரவி, நிறைய பயனர்கள் cache யினால் இந்த வசதி தெரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. இரு வாரங்களுக்கு cache ஐ நீக்க சொல்லி தள அறிவிப்பில் போட்டால் நன்றாக இருக்கும். ஸ்ரீகாந்த் 18:10, 25 நவம்பர் 2010 (UTC)
சேர்த்தாச்சு--இரவி 04:29, 26 நவம்பர் 2010 (UTC)


மிக்க நன்றி. முடிந்தால் பாமினியையும், தாப், தாம், தாசுகியையும் சேர்க்க வேண்டும். --Natkeeran 02:25, 26 நவம்பர் 2010 (UTC)

நற்கீரன், தாப், தாம், திசுக்கி ஆகியவை குறிமுறைகள். ஒருங்குறி போல. விக்கிப்பீடியா ஒருங்குறியிலேயே இயங்குகிறது. தவிர, நாம் இப்போது சேர்த்திருப்பன விசைப்பலகை அமைப்புகள். அதற்கும் குறிமுறைக்கும் தொடர்பு இல்லை. பாமினி (இலங்கை சீர்தர விசைப்பலகை) கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். அதை அறிந்தோர் உதவி தேவை. விக்கிக்கு வெளியே உள்ள நண்பர்களிடமும் கேட்டுப் பார்க்கிறேன். --இரவி 04:29, 26 நவம்பர் 2010 (UTC)

என்னுடைய கணினியில் தமிழ் 99 வேலை செய்கிறது ஆனால் "தமிங்கிலம்" வேலை செய்யவில்லை. நான் IE 8 உலாவியைப் பயன்படுத்துகிறேன். சிஜு இதனை இந்த உலாவியில் இன்னும் சோதித்துப் பார்க்கவில்லை என்கிறார். உங்களில் யாருக்காவது இந்தப் பிரச்சினை உண்டா? -- மயூரநாதன் 05:56, 26 நவம்பர் 2010 (UTC)
இப்பிரச்சினை பலருக்கு உள்ளது. செங்கை பொதுவன் ஐயாவும் பிரச்சினையை எதிர்கொள்ளுகிறார். இந்தப் பிரச்சியைத் தீர்த்து விட்டே கருவியை இணைத்திருக்க வேண்டும். அவசரப்பட்டு விட்டீர்களோ என்று யோசிக்கிறேன். தற்போதுள்ள TAM99 default ஆகத் தேர்ந்தெடுக்கும் முறையைத் தற்காலிகமாக நீக்க வேண்டும். check box ஐ விரும்பியவர்கள் தெரிவுசெய்ய வைக்க வேண்டும். இப்போது ஒவ்வொரு முறையும் தொகுக்கும் போது uncheck பண்ணிவிட்டே எழுத வேண்டியுள்ளது. மேலும், விக்கிசெய்திகளில் இணைக்கப்பட்டுள்ள கருவிப்பெட்டியில் write tamil என்ற இணைப்பு மலையாள விக்கிப்பீடியாவுக்குச் செல்லுகிறது.--Kanags \உரையாடுக 21:42, 26 நவம்பர் 2010 (UTC)
கனகு, தவியில் சரியாக இயங்கிய பிறகு விக்கிசெய்தியில் இணைக்கலாம். விக்கிசெய்தியில் நீக்கியிருக்கிறேன்.
இக்கருவி பீட்டா அல்லது சோதனை கட்டம் என்று சிகப்பு எழுத்தில் இருக்குமாறு செய்து கொண்டால் நல்லது. -- மாஹிர் 06:40, 27 நவம்பர் 2010 (UTC)

தட்டச்சு வசதி அருமை. அற்புதம். புகுபதிகை செய்யும் இடத்தில் இவ்வசதி இயங்கவில்லை. அதனால் புகுபதிகை செய்ய, தேடு சாளரத்தில் தட்டச்சி, அதையெடுத்து புகுபதிகை செய்ய வேண்டியுள்ளது. இவ்வசதி மூலம் உபுண்டுவிலும் தட்டச்ச எளிமையாக இருக்கிறது. பல நேரங்களில் தட்டச்சும் போது, ஏற்கனவே தட்டச்சிய வரிகள் துடித்து மறைந்து, பிறகு வருகிறது. இயல்பிருப்பாக சிறந்த தமிழ்99தட்டச்சும் வசதி, தெரிவு செய்து இருப்பின் நன்றாக இருக்கும். தமிழ்99 இருப்பின் நன்றாக இருக்கும். தட்டச்சுப் பலகையும் தோன்றுமாறு செய்தால், பலருக்கும் கற்க ஏதுவாகும். இவ்வசதிக்காக உழைப்பவர்கள் அனவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரியப் படுத்தவிரும்புகிறேன். --த* உழவன் 07:24, 29 நவம்பர் 2010 (UTC)

  • வணக்கம். தமிழ் தட்டச்சு வசதியை தொகுப்பு செய்யும் பகுதியில் பயன்படுத்தும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தனியே தட்டச்சு செய்து அதனை இங்கு வெட்டி ஒட்டும் வேலை மிச்சம். இந்த வசதியை இங்கு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 11:35, 2 திசம்பர் 2010 (UTC)

விக்கி குறுஞ்சுட்டி சேவை[தொகு]

விக்கி குருஞ்சுட்டி சேவை.png

நாம் விக்கிப்பக்கத்தின் சுட்டியை வெளியே பகிர்ந்துகொள்ளும் போது சுட்டியிலுள்ள தமிழ் எழுத்துக்கள் ஒருங்குறி இலக்கங்களாக மாற்றி அவற்றை நீளப்படுத்தி அசிங்கப்படுத்துகின்றன.சில மாதங்களுக்கு முன்னர் en:User:Mountain, இதற்காக ஓர் சேவை தொடங்கினார். நான் இப்போது தான் அவர் தூதரகத்தில் விட்ட செய்தியை பார்த்தேன்.ஒரு வரி நிரலை பயன்ர்வேளியிலுள்ள vector.js கோப்பில் போட்டால் பக்கத்திற்கான குறுஞ்சுட்டி தானாக வந்துவிடும். பக்கத்தில் மேற்புறம் வேண்டுமானால்(1) பயனர்:Logicwiki/shorturl.js யும், தலைப்பிற்கு அருகில் வேண்டுமானால்(2) பயனர்:Mountain/shorturl.js யும் உங்களின் vector.js கோப்பில் பயன்படுத்தினால் இந்த சேவையை பயன்படுத்தலாம். இது அனைவருக்கும் பயன்படுமேயானால் தள அளவில் கூட இந்த மாற்றத்தை செய்யலாம்.வேண்டுமானால் நாமும் ஆங்கில விக்கி போல் tawp.org போன்ற பெயரை வாங்கி இதனைப் பயன்படுத்தலாம். ஸ்ரீகாந்த் 15:52, 26 நவம்பர் 2010 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளஒவ்வொரு கட்டுரைக்கும், பக்கத்துக்கும் தனி குட்டிச்சுட்டி உருவாக்கி அதனை அப்பக்கத்திலேயே ஓரிடத்தில் இடலாம். நல்ல கருத்து லாச்யிக்விக்கி!--செல்வா 21:32, 28 நவம்பர் 2010 (UTC)

இது எல்லா விக்கிமீடியா திட்டங்களுக்குமே பயனுள்ளதாக இருக்கும் என்பதால், பேசாமல் விக்கிமீடியாவே எல்லா திட்டங்களிலும் இதை நிறுவுமாறு வேண்டினால் நல்லது--இரவி 18:11, 29 நவம்பர் 2010 (UTC)