உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு64

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறக்கட்டளை இந்தியப் பிரிவு தூதர்

[தொகு]

விக்கிமீடியா அறக்கட்டளையின் இந்தியப் பிரிவு தமிழ் விக்கித் திட்டங்களில் இருந்து ஒரு தூதர் ஒருவரை நியமிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளது. விக்கிமீடியா இந்தியாவுடனான கலந்துரையாடல்கள், அவர்கள் தமிழ் விக்கித் திட்டங்களுக்காக நடத்தத் திட்டமிட்டுள்ள பயிலரங்குகள்/பட்டறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை செய்ய இவர் தேவைப்படுகிறார். இப்பணியினை செய்ய விரும்புவோர் என் பேச்சுப் பக்கத்திலோ அல்லது இங்கோ விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:33, 1 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஊடகங்களை பகுப்பு செய்தல்

[தொகு]

த.வி உடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் பகுப்பு செய்யப்படாமல் இருக்கின்றன. இப்பகுப்பாக்கத்தில் பயனர்கள் பங்களிக்க வேண்டுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 05:38, 4 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பிற விக்கிகளில் பெரும்பாலும் துறை வாரியாக ஊடகக் கோப்புகளை பகுப்பிடுவதில்லை (பதிப்புரிமை நிலை கொண்டு மட்டும் பகுக்கின்றனர்). எனவே நாமும் கட்டாயம் செய்யத் தேவையில்லையெனக் கருதுகிறேன். (என் தனிப்பட்ட விருப்பமே. பழு அதிகமாகக் கூடிய ஒரு விசயம் என்பதால் இவ்வாறு கருதுகிறேன் :-)) --சோடாபாட்டில்உரையாடுக 05:53, 4 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
உங்கள் கருத்திலும் உண்மை உள்ளது சோடாபாட்டில். ஆனாலும் தேடல் மற்றும் பயன்பாட்டு நோக்கில் பெருந்துறைகளாக பகுப்பது பயனுள்ளதென நினைக்கிறேன். எ.கா: இந்தியாவிலுள்ள ஆறுகள் என சிறுதுறைகளாக பகுக்காமல் ஆறுகள் என பெருந்துறைகளாக வகுக்கலாம். ஆங்கில விக்கியிலும் இவ்வாறான பகுப்புக்கள் உள்ளன. எ.கா:en:Category:Insignia

தொகுத்தல் சாளரத்தில் {.{delete}}

[தொகு]

தொகுத்தல் சாளரத்தின் கீழ் வார்ப்புருக்கள் என்பதில் தற்பொழுது இரண்டு வார்ப்புருக்கள்{.{anonymous}},{.{புதுப்பயனர்}} உள்ளன. அதில் {.{delete}} என்பதனையும் இணைத்தால், அடிக்கடி தட்டச்ச வேண்டிய நிலை பலருக்கும் ஏற்படாது. வணக்கம்.06:56, 4 நவம்பர் 2011 (UTC)உழவன்+உரை..


Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 07:24, 4 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி--18:35, 4 நவம்பர் 2011 (UTC)உழவன்+உரை..


ஒரு குறிப்பு : இது போன்ற துப்புரவு வார்ப்புருக்களை எளிமையாக இணைப்பதற்குத்தான் தொடுப்பிணைப்பி எனு கருவி உருவாக்கப்பட்டுள்ளதே! அதனைப் பயன்படுத்தலாமே! :) இது, பொதுவில் இருப்பதால், சாதாரண பயனரும் தேவையற்ற இடங்களில் இவ்வார்ப்புருக்களைப் பயன்படுத்தக்கூடும். எனவே, இம்மாற்றத்தை மீள்வித்தலைப் பற்றி உரையாடவேண்டும். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 06:59, 5 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

இதுபோன்ற வார்ப்புருக்கள் அனைவரும் இடக்கூடியதே/இடத் தகுந்ததே. நீக்கல் பரிந்துரை எவர் வேண்டுமென்றாலும் இடலாம் - அனானிகளையும் சேர்த்து. எனவே இதனை மீள்விக்கத் தேவையில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 07:02, 5 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்

[தொகு]

முஸ்லிம் [[விக்கிப்பீடியா:[விக்கிப்பீடியர்கள்|நண்பர்கள்]] அனைவருக்கும், உளங்கனிந்த தியாகப்பெருநாள் நல்வாழ்த்துக்கள். (இங்கு மலேசியாவில் இன்று மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர் பள்ளிவாசலில் (தமிழ் பள்ளிவாசல்) தொழுது பெருநாள் கொண்டாடினேன்). -- மாகிர் 12:10, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தியாகப் பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள். மாகிர் இப்போது மலேசியாவில் பணியில் இருக்கிறீர்களா?--Kanags \உரையாடுக 12:14, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
வாழ்த்திற்கு நன்றி. ஆமாம் கனகு. வேலையில்தான். -- மாகிர் 15:58, 7 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

சகோதரர் மாஹிர், உங்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள். என்றென்றும் நீங்களும் ஏனைய எம் சகோதரர்களும் ஈமானுடன் வாழ வேண்டுமென வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.--பாஹிம் 12:30, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

இப்போதுதான் மஸ்ஜித் இந்தியா விபரத்தைப் பார்க்கிறேன். நான் 2009 ஆம் ஆண்டு நோன்பு காலங்களில் கோலாலம்பூரில் உள்ள அதே பள்ளியில்தான் தொழுதேன்.--பாஹிம் 12:32, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தியாகப் பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள் !! மஸ்ஜித் இந்தியா குறித்த கட்டுரையை ஒளிப்படத்துடன் துவக்கி வையுங்கள் :) --மணியன் 12:49, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தியாகப் பெருநாள் கொண்டாடும் எல்லா இசுலாமிய நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். மயூரநாதன் 13:24, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தியாகப் பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள்.--P.M.Puniyameen 14:47, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
தியாகப் பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் பயனர்களுக்கும் எனது மனமார்ந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 15:08, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
ஈத் முபாரக்--MUTTUVANCHERI NATARAJAN 15:23, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை

[தொகு]

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் மற்றொரு விக்கி அறிமுகப் பட்டறை நடாத்துவது பற்றிப் பேசியிருந்தேன். நாளை (09.11.2011) பட்டறையை நடாத்தித் தருமாறு இருநாட்களுக்குமுன் கேட்கப்பட்டது. வெறும் முன்வைப்பாக பட்டறையை நடாத்தாமல் பங்குபற்றுபவர்கள் செயற்படுத்தி பார்க்கக்கூடியதாக இணைய இணைப்புள்ள மண்டப ஒழுங்கு சிறு பிரச்சினையாக உள்ளது. பாடசாலை அதிபர் காலையில் சில ஒழுங்குகளை செய்யமுனைகிறார். சரிவந்தால் இப்பட்டறையை நடாத்தமுடியும். திட்டப்பக்கம், ஏனைய விபரங்கள் நாளைய ஒழுங்குகளின் பின்ன்ர் தயாரிக்கலாம்.--சஞ்சீவி சிவகுமார் 15:58, 8 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

முயற்சி வெற்றிபெற நல்வாழ்த்துக்கள் சஞ்சீவி சிவகுமார்--P.M.Puniyameen 17:46, 8 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
நன்றி சஞ்சீவ். நாம் எப்படியாவது உதவ முடிந்தால் கூறவு. --Natkeeran 17:51, 8 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

சிவகுமார், இணையப் பிரச்சினை எப்போதும் இருக்கத் தான் செய்யும். அதற்கேற்ப உங்கள் திட்டப்பக்கங்களைத் தயாரியுங்கள். உங்கள் முயற்சியில் வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 20:09, 8 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

நாளை பகலில் இணையத்தில் தான் இருப்பேன். புதிய பயனர்களுக்கு விக்கி வழி உதவி தேவைப்படின் செய்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 20:19, 8 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பட்டறை நன்றாக நடைபெற வாழ்த்துக்கள் சஞ்சீவி.--கலை 21:43, 8 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

உங்கள் வாழ்த்துக்களுக்கெல்லாம் நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் 00:18, 9 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 09:33, 9 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பட்டறை பாடசாலை அதிபர் திரு வி. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப அரறிமுகத்துடன் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெறுகிறது. விபரம் திட்டப்பக்கத்தில் தருகிறேன். சஞ்சீவி சிவகுமார்.

வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 07:22, 9 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
பட்டறையை ஒழங்கு செய்தோருக்கும் பங்கேற்பவர்களுக்கும் பட்டறை சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைய வாழ்த்துகள் !!--மணியன் 07:49, 9 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஒரு வருடக் கட்டுரையாக்கம்

[தொகு]

ஒரு வருடத்தை இலக்கு வைத்த புன்னியாமீனின் கட்டுரையாக்கம் தற்போது 7240 எட்டிப் பிடித்துள்ளது. இவர் விக்கிப் பயனராக இணைந்து ஓராண்டு நிறைவடைய இன்னும் 3 தினங்கள் உள்ளன. இவர் செல்லும் வேகத்தைப் பார்க்கும்போது ஓராண்டுக்குள் 7400 - 7500 கட்டுரைகளை எட்டலாம் என எதிர்பார்க்கலாம். அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் இத்தனைப் பதிவுகளை ஓராண்டுக்குள் பதிவாக்கிய பயனர்கள் உள்ளனரா? அது பற்றி விபரம் அறிந்தவர்கள் அறியத் தருவீர்களா? அல்லது இந்த விபரங்களை எந்த முறையில் பெற்றுக்கொள்ள முடியும்?--பாஹிம் 05:38, 10 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

இதைவிட அதிகமாக பிற விக்கிகளில் கட்டுரைகள் உருவாக்கியோர் உள்ளனர். (தானியங்கி மூலமாகவும் / தானியங்கி அல்லாமலும்). பொதுவாக இதனைத் தனியாக எங்கும் குறித்து வைப்பதில்லை. --சோடாபாட்டில்உரையாடுக 06:01, 10 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
த.வி யில் புன்னியாமீனின் பங்களிப்பு வேகம் பாராட்டுக்குரியது.--சஞ்சீவி சிவகுமார் 15:47, 10 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் - புள்ளிவிபரம்

[தொகு]

Indian Language wikipedia Statistics – 2011 September.--Kanags \உரையாடுக 11:40, 10 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

கவனத்துக்குரிய விக்கிப்பீடியர் விருது

[தொகு]

எதிர்வரும் இந்திய விக்கி மாநாட்டை ஒட்டி, இந்திய விக்கிமீடியா திட்டங்களில் சிறந்த பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு கவனத்துக்குரிய விக்கிப்பீடியர் விருது அளிக்கப்படுகிறது. விவரங்களை http://wiki.wikimedia.in/NWR_2011 பக்கத்தில் காணலாம். இன்னும் இரு நாட்களுக்குள் பரிந்துரைகளை அனுப்ப வேண்டும். நீங்கள் மற்றொரு பங்களிப்பாளரையோ உங்களை நீங்களோ கூட பரிந்துரை செய்யலாம். தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த விருது வழங்கும் முறைமையில் ஒப்புதல் இல்லை. எனினும், தமிழ் விக்கிப்பீடியாவின் பல்வேறு சிறந்த பங்களிப்பாளர்களில் எவருக்கும் சளைக்காத ஒருவருக்கே இந்த விருது செல்லவேண்டும் என்று ஆவல் :) --இரவி 06:32, 11 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

+1 இதனைக் குறிப்பிடத்தக்க விக்கிமீடியர் விருது (Noteworthy Wikimedian Award) எனலாம். :)--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 15:06, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா கட்டுரைகளை PDF கோப்புகளாக தரவிரக்கம்.

[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது போன்று அனைத்துக் கட்டுரைகளையும் PDF கோப்புகளாக தரவிரக்கம் செய்யும் Book creator வசதி தமிழ் விக்கிப்பீடியாவிலும் அறிமுகப்படுத்த வேண்டுகிறேன். --கிருஷ்ணபிரசாத்/உரையாடுக 15:38, 11 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

அதற்கான முயற்சிகளில் விக்கிமீடியா அறக்கட்டளையும் தன்னார்வலர்களும் ஈடுப்பட்டு வருகிறார்கள் என நினைக்கிறேன். pdf கோப்புகளில் ஒருங்குறித் தோன்றுவதில் சிக்கல்கள் உள்ளன. இது பற்றிய பழைய உரையாடல்கள் [1]--சோடாபாட்டில்உரையாடுக 15:44, 11 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
தமிழில் விக்கிப்பீடியா தவிர்த்து ஏனைய திட்டங்களில் (விக்கிசெய்தி உட்பட) இந்த வசதி உள்ளது. ஆனாலும் சோடா சொன்னது போல ஒருங்குறி தோன்றுவதில் சிக்கல் உள்ளது. இந்தப் பிரச்சினை கடந்த சில மாதங்களாகவே உள்ளது. முன்னர் நன்றாகவே தோன்றியது. தினமணி இ-பேப்பரிலும் இதே பிரச்சினை உள்ளது. இதனை உடனடியாகச் சரி செய்ய வேண்டும்.--Kanags \உரையாடுக 01:57, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

திருநின்றவூர், ஜெயா பொறியியல் கல்லூரி - திசம்பரில் பட்டறை அறிவிப்பு

[தொகு]

http://wiki.wikimedia.in/Wiki_Academy/Jaya_Engineering_College இதனைப் பார்க்கவும். -- மாகிர் 15:57, 11 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

இதனைப் போன்றே பிற கல்லூரிகளிலிருந்தும் முன்வரைவுகள் http://wiki.wikimedia.in/Wiki_Academy/ தளத்தில் இடப்பட்டுள்ளன. இவற்றை நாம் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். --மணியன் 01:36, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

மாணவர்களும் விக்கிப்பீடியாவும்

[தொகு]

Will young India take to editing Wikipedia?

இந்தியாவிலிருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிக்கை டிஎன்ஏ வில் நமது சூர்யா பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. விக்கிப்பீடியாவின் மாணவப் பயனர்களைப் பற்றிய இக்கட்டுரையின் சில பகுதிகள்:

...Take the case of Surya Prakash, 18, the youngest administrator on Tamil Wikipedia. He admits to spending most of his holidays and free time at his campus browsing centre. Instead of status updates, he borrows his friends’ laptops to make an urgent edit or to update pages....Prakash, who did his schooling in Tamil, said, “Having conversations with foreigners has helped me develop my English. I’ve learned how to write professionally. I have also picked up skills on how to convince and bargain with people,” he said, referring to the extensive dialogue that goes on in the back-end of every Wikipedia page whenever an addition or edit is brought to question.

சில காலமாக அருமையான மாணவப் பயனர்கள் ஆர்வத்துடனும் பொறுப்புடனும் விக்கியில் பணியாற்றுவதைக் கண்டு வருகிறேன். சூர்யா தவிர, அஸ்வின், கிருஷ்ணபிரசாத், ஜெயரத்தினா, சிங்கமுகன், பிரஷாந், சயனொளிபவன் போன்ற மாணவர்களும் சுப்பிரமணியன், மரு. கார்த்தி, கார்த்திக் ராமானுஜம் (அண்மைக்காலம் வரை மாணவர்கள்) போன்ற இளைஞர்களும் தமிழ் விக்கிக்கு ஆற்றி வரும் பங்கு மகத்தானது. படிப்பும் மதிப்பெண்களும், ஊதியமும் மட்டுமே முக்கியம் என போதிக்கும் கல்விச் சூழல், மனதை அலைக்கழிக்கும் சமூகவலைப் பின்னல்கள் ஆகியவற்றையும் தாண்டி இவர்கள் செயல்படுவதைக் காணும் போது மலைப்பாகவும் பெருமையாகவும் உள்ளது. (எனது மாணவப் பருவத்தில் இவர்கள் செய்வதில் நூற்றில் ஒரு பங்கைச் செய்திருப்பேனா என்பது சந்தேகம). விக்கிப்பீடியா அடுத்த தலைமுறையின் கையில் பத்திரமாக இருக்கும் என்று மனநிறைவாகவும் உள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 06:03, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

சூர்யா உண்மையிலேயே ஒரு துடிப்பான விக்கிப்பீடியர். தமிழ் விக்கிப்பீடியா பரப்புரைகளில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுக்கும் விக்கிப்பீடியர். அவருடன் நீங்கள் குறிப்பிட்டுள்ள பிற மாணவ மணிகளும் பெரும் பங்காற்றி வருதல் மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது. அவர்களது பணி தொடரவும் தமிழ் விக்கிப்பீடியா பல மைல்கற்களைத் தொட உதவவும் வாழ்த்துகள் !!
//விக்கிப்பீடியா அடுத்த தலைமுறையின் கையில் பத்திரமாக இருக்கும் என்று மனநிறைவாகவும் உள்ளது.// மகிழ்ச்சியாக உள்ளது. சூர்யா மற்றும் பங்களித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். இன்று உயிரியல் பாடம் சொல்லிக் கொடுக்கப்போய் ஒரு மாணவிக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவது எப்படி என பாடம் நடத்திவிட்டு வந்தேன் :). பாடத்தின் முடிவில் நல்ல பயனுள்ள விடயங்களை அறிந்தேன் என்று சொல்லிப் போனார். --கலை 13:39, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
சூர்யாவின் ஆர்வத்தை நேரில் பார்த்திருக்கிறேன். சூர்யா மற்றும் அனைத்து மாணவ பங்களிப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள். -- மாகிர் 14:54, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
சூர்யாவுக்கு வாழ்த்துக்கள். மாணவர்கள் சிறப்பாக பங்களிக்க முடியும் என்பதற்கு சூர்யா போன்றவர்கள் நல்ல சான்று.--சஞ்சீவி சிவகுமார் 15:55, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

இணைய எழுத்துரு நீட்சி

[தொகு]

சில வாரங்கள் முன்பு, இணைய எழுத்துரு நீட்சியினை நிறுவ, சமூகத்திடம் ஒப்புதல் பெற்று பக்சில்லாவில் பதியப்பட்ட வழுவை திரும்பப் பெற்றுள்ளோம். அதற்கான காரணங்கள் கருத்து வேண்டல் பக்கத்தில் தரப்பட்டுள்ளன--சோடாபாட்டில்உரையாடுக 20:42, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் 7500 கட்டுரைகள்

[தொகு]

இன்று நவம்பர் 13 2011 தமிழ்விக்கிப்பீடியாவில் 7500 கட்டுரைகளை நான் பதிவாக்கிவிட்டேன். புகழனைத்தும் படைத்தவனுக்கே. இந்த முயற்சியில் ஒத்துழைத்த அனைத்து நல்லிதயங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். 'ஓராண்டு நிறைவில் தமிழ்விக்கிப்பீடியாவில் 7500 கட்டுரைகள்' எனும் தலைப்பில் ஓராண்டு கால பதிவுகளை என் பேச்சுப் பக்கத்தில் பதித்துள்ளேன்.--P.M.Puniyameen 17:43, 13 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஊடகப் போட்டி துவக்கம்

[தொகு]

தமிழ் விக்கி ஊடகப் போட்டி, இன்று (நவம்பர் 15) முதல் துவங்குகிறது. போட்டிக்கான வலைவாசல் - வலைவாசல்:ஊடகப் போட்டி. அனைவரும் பங்கு கொண்டு தங்கள் ஆக்கிய ஊடகக் கோப்புகளைப் பதிவேற்றும்படி வேண்டுகிறேன். மேலும் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினாரிடம் இது பற்றிக் கூறி பரப்புரை உதவி புரியவும் வேண்டுகிறேன். உங்களுடைய ஃபேஸ்புக், டிவிட்டர், வலைப்பதிவுகள் போன்றவற்றில் இது குறித்து செய்தி இட்டு உதவுங்கள். வலைப்பதிவில் இடவும் மின்னஞ்சலில் அனுப்பவும், அச்செடுத்து விநியோகிக்கவும் ஏற்ற ஒரு துண்டறிக்கை வலப்புறம் உள்ளது. இதனை பயன்படுத்தி பரப்புரை செய்ய வேண்டுகிறேன்.

போட்டிக்கான ஃபேஸ்புக் தளம் - இதனைப் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள - Share with Facebook