விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு18

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொங்கல் வாழ்த்து! தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்![தொகு]

பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!, எல்லோருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்! திருவள்ளுவர் 2040 ஆம் ஆண்டு உலகில் உள்ள எல்லோரும் நலமுடன் வாழ நல்வாழ்த்துகள். தமிழர் திருநாளாம், உழைப்பாளிகளின் திருநாளாம், உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம்! உலகெங்கும் நிகழும் கொடுமைகள் மறைந்து மக்கள் வாழ்வில் அமைதியும், இன்பமும் பெருக நெஞ்சார இறைஞ்சுகிறேன். கூட்டுழைப்பு நல்கும் தமிழ் விக்கி நண்பர்களுக்கு சிறப்பான நல்வாழ்த்து! அன்புடன் --செல்வா 02:46, 14 ஜனவரி 2009 (UTC)


தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் ஆனால் என்றும் இல்லாதவாறு 2009 வலிகள் மிகுந்த ஆண்டாகா பிறந்துள்ளது. தைப்பொங்கலை மிகச்சிறப்பாக கொண்டாடும் ஒரு ம்க்கள் கூட்டம் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளது. மீண்டும் நாம் எழுச்சி பெறுவோம் என்று உறுதி கொள்வோம். --Natkeeran 17:40, 14 ஜனவரி 2009 (UTC)

சொல்லொண்ணா வருத்தம் தரும் உண்மை, நற்கீரன்! வெறும் சொல்லும் பேச்சும் பொருளிழக்கும் துன்பம். எனினும், உள்ளழியாமை என்பார்களே அது போல அடங்காத் துயரத்தையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொள்ளும் நிலைமையிலேயே ஈழத்தமிழ் மக்கள் உள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். வழி பிறக்கும் என நம்புவோம்! என் நண்பர் பெரி. சந்திரசேகர், ஐங்குறுநூற்றின் மருதத்திணையின் முதற்பத்தில் இருந்து ஒரு வாழ்த்து அனுப்பினார். அதில் கூறுவது போல பகைவர் புல் ஆர்க (பகைவர் புல்லை உண்பார்களாக!)
வேந்து பகை தணிக!
அறம் நனிசிறக்க! அல்லவை கெடுக!
நன்று நனிசிறக்க! தீதில்லாகுக!

முழுப்பாட்டும்:

"வாழியாதன்! வாழியவினி!
நெற்பல பொலிக! பொன் பெரிது சிறக்க!"
"பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!"
பகைவர் புல் ஆர்க! பார்ப்பார் ஓதுக!
வேந்து பகைதணிக! யாண்டு பல நந்துக!
அறம்நனி சிறக்க! அல்லவை கெடுக!
நன்று நனிசிறக்க! தீதில்லாகுக!
அரசுமுறை செய்க! களவில்லாகுக!
மாரிவாய்க்க! வளம் நனி சிறக்க!"

திருவருளால் துன்பங்கள் நீங்கி மீண்டும் நல்வாழ்வு பெற வேண்டுவோம்! தீது இல்லாகுக! --செல்வா 18:37, 14 ஜனவரி 2009 (UTC)


நம் சோகங்களும் வலிகளும் அழிந்து புது வாழ்விற்கு இந்த தை வழிகாட்டட்டும். தமிழர் வாழ்வு தரணியெல்லாம் செழிக்கட்டும். தற்காலிக சோகத்தை விரைவில் விரட்டுவோம்.--கார்த்திக் 18:42, 14 ஜனவரி 2009 (UTC)

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் & புத்தாண்டு வாழ்த்துக்கள். தை பிறந்தால் வழி பிறக்கும், இத்தை அனைவருக்கும் நலங்களை கொண்டு வரட்டும் --குறும்பன் 19:56, 14 ஜனவரி 2009 (UTC)

ஆம், தை பிறந்துள்ளது, வழி பிறக்கும் என்று நம்புவோம். -- சுந்தர் \பேச்சு 06:04, 17 ஜனவரி 2009 (UTC)

பெங்களூரில் தமிழ் விக்கிப்பீடியா கருத்தரங்கம்[தொகு]

பெங்களூரில் இந்திய அறிவியல் கழகத்தில் ஒரு 2-3 மணி நேர தமிழ் விக்கிப்பீடியா - ஒரு முன்னுரை என்ற கருத்தரங்கத்திற்கு அனுமதி கோரியிருந்தேன், இன்று அனுமதி கிடைத்துவிட்டது :). இந்த கருத்தரங்கம் இவ்வளாகத்தில் இருக்கும் சுமார் 60 தமிழை தாய் மொழியாகக் கொண்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை பற்றியும் மற்றும் அவர்கள் பங்களிப்பை எப்படி செய்யவேண்டும் என்ற விடயங்களை தெரிவிக்க வேண்டி நடத்த திட்டமிட்டுள்ளேன். இதை பற்றி திரு சுந்தரிடமும் உரையாடினேன், இதில் பங்கு பெற அவருடைய ஆவலை தெரிவித்ததுடன் மேலும் சிவகுமார், ரவி மற்றும் பெங்களுரில் இருக்கும் மேலும் சிலரையும் அழைக்கலாம் எனக்கூறியிருந்தார். இந்நிகழ்ச்சி பிப்ரவரி திங்களில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் (பெரும்பாலும் 3/4 சனியில்) நடக்கும். இதில் முக்கியமாக ஒலி ஒளியுடன் உரையாட நபர்கள் தேவை.இது சம்பந்தமாக அனைவரது கருத்துகளை பெறவிருப்புகின்றேன். --கார்த்திக் 17:59, 16 ஜனவரி 2009 (UTC)

அருமை, கார்த்திக். கொஞ்ச நேரம் முன்னாடி தான் http://thamizha.com முகுந்தும் பெங்களூரில் விக்கி அறிமுகப்பட்டறை நடத்துவது பற்றி சொல்லி இருந்தார். சுந்தர் போக சந்தோசு குருவும் (தொடக்க கால தமிழ் விக்கி ஆர்வலர்) பெங்களூரில் இருக்கிறார். இன்னும் பல இந்திய விக்கி ஆர்வலர்களும் பெங்களூரில் இருப்பார்கள். இடம், கணினி வசதி இருக்கும் பட்சத்தில் இந்திய அறிவியல் கழகத்துக்கு வெளியில் உள்ள ஆட்களும் கலந்து கொள்ள இயலுமாறு செய்தால் நன்றாக இருக்கும். என்னால் பெங்களூருக்கு வர இயலும் என்று உறுதியாக சொல்ல இயலவில்லை. முடிந்த அளவு முயல்வேன். நிகழ்பட பயிற்சிக் கோப்புகள் தயாரிப்பதில் உதவ முடியும்.--ரவி 18:56, 16 ஜனவரி 2009 (UTC)

பெங்களூர் தமிழ் விக்கிப்பீடியா கருத்தரங்கம் சிறப்பாக அமைய பாராட்டுக்கள் கார்த்திக். இந்திய அறிவியல் கழகத்தில் இருப்பவர்கள் பங்களித்தால் துறை சார் கட்டுரைகள் அதிகமாகவும் ஆழமாகவும் இருக்கும். --குறும்பன் 02:17, 17 ஜனவரி 2009 (UTC)

நல்ல முயற்சி கார்த்திக். இம் முயற்சியில் பங்களிக்கக்கூடிய அனைவரும் சேர்ந்து இந்தச் சந்தர்ப்பத்தை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கருத்தரங்கத்தின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். மயூரநாதன் 04:13, 17 ஜனவரி 2009 (UTC)
தற்செயலாக வழிமாறி (!) இந்திய அறிவியல் கழகத்தருகே சென்று கார்த்திக்கை கண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது. வெகு நேரம் பேசியதில் எனக்கு தனிப்பட்ட அளவில் மிக்க மகிழ்ச்சி. அப்போது இ.அ.க. தமிழ்ச் சங்கத்தினரைப் பார்த்தபோது நினைவு வந்து கார்த்தி இதைப் பரிந்துரைத்தார். எனக்கும் ஆவல் கூடியுள்ளது. இந்த அறுபது பேரில் ஒரு இருபது பேர் பல துறைக் கட்டுரைகளை எழுத முன்வந்தால் த.வி. வலுவான ஏற்றம் பெறும்.சந்தோசையும் ஈசுவரையும் அழைக்க வேண்டும். அவர்கள் தற்போது வெளியூரில் உள்ளனர். வந்ததும் தொடர்பு கொள்வேன். அரிகிசோரும் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்துள்ளார். அவரையும் அழைப்போம். ரவியும் சிவகுமாரும் வர முடிந்தால் மேலும் நலம். நாளைய விக்கிப் பட்டறை சிறப்பாக அமைய ரவிக்கு எனது வாழ்த்துகள். -- சுந்தர் \பேச்சு 06:14, 17 ஜனவரி 2009 (UTC)

காமில் சுவெலிபில் மறைவு[தொகு]

சனவரி 17-ல் தமிழியல் முன்னோடி காமில் சுவெலிபில் மறைந்தார். (ஆங்கில விக்கிப் பக்கம், தமிழ் நேசன் வாழ்க்கைக் குறிப்பு) -- சுந்தர் \பேச்சு 10:19, 18 ஜனவரி 2009 (UTC)

சனவரி 18, சென்னை தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை[தொகு]

இன்னும் முனைப்பான விக்கிப்பீடியா உதவி, பயிற்சி[தொகு]

புதுப்பயனர்களை ஈர்ப்பதிலும், வருபவர்களுக்கு உதவுவதிலும் நாம் இந்த ஆண்டு கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும்.

  • நேற்றைய நிகழ்வின் மூலம் சில ஊடக நிறுவனத் தொடர்புகள் பெற்று வந்துள்ளேன். அவர்கள் மூலம் அச்சு, காட்சி, ஒலி ஊடகங்களில் பரப்புரைக்கு வாய்ப்புகள் உண்டா என்று முயல்வேன். மற்றவர்களும் தத்தம் பகுதிகளில் இது போல் முயலலாம். தங்கள் தொடர்புகளைப் பகிர்ந்து கொண்டால், தமிழகத்தில் உள்ள சிவா, அருநாடன், என்னைப் போன்றோர் நேரடியாகப் பங்கு பெற்று உதவ இயலும். பொதுவாக, ஊடக நிறுவனங்களின் பெருக்கத்தால் அனைவருக்கும் "உள்ளடக்கப் பசி" இருக்கிறது. இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெறுமனே விக்கிப்பீடியா என்பதை முன்வைப்பது கவர்ச்சி குறைவாக இருந்தால், பொதுவாக தமிழ் இணையம் என்பதை முன்வைத்து, குறிப்பிடத்தக்க பகுதியை விக்கித் திட்டங்களுக்குச் செலவிடலாம்.
  • ஆங்கில விக்கிப்பீடியா அறிமுக கூட்டத்துக்கு இன்னும் நிறைய பேர் வந்திருந்ததாக கிருபா சொன்னார். இது புரிந்து கொள்ளத்தக்கது. பொதுவாக, ஆங்கில விக்கிப்பீடியா அறிமுகம் என்பதை முன்னிறுத்தி பரப்பலாம். தமிழ்த் தட்டச்சு கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தவிர்த்து ஆங்கில விக்கிப்பீடியா பங்களிப்புக்கும் இங்கு செய்வதற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை அல்லவா? ஆங்கில விக்கிப்பீடியா அறிமுகத்துக்கு வருபவர்களில் ஆர்வமுடையவர்களுக்குத் தமிழ் விக்கி அறிமுகம் தரலாம்.
  • நம்முடைய sitenotice மூலம் "உங்களுக்கு விக்கிப்பீடியாவில் எழுத உதவி தேவையா" என்று நிரந்தரமாக அறிவிப்பு இடலாம். இந்த அறிவிப்பில் நேரடியாக நம்மில் சிலரைத் தொடர்பு கொண்டு பேசுவதற்கான தொலைப்பேசி எண்கள், மின்மடல் முகவரி தரலாம். பலருக்கும் நேரடியாக மனிதர்களிடம் பேசிக் கேட்டுக் கற்றுக் கொள்வது இலகுவாக இருக்கிறது. இதே அறிவிப்பில், யாரேனும் தங்கள் பகுதி / கல்லூரி / அலுவலகம் / பள்ளியில் ஓரிரு கணினிகளும் இருக்கை வசதிகளும் செய்து தந்தால் நேரடியாக வந்து கற்றுத் தர இருக்கிறோம் என்று குறிப்பிடலாம்.--ரவி 05:05, 19 ஜனவரி 2009 (UTC)

sitenoticeல் உதவி அறிவிப்பு வெளியிடுவதைப் பற்றி பயனர்களின் கருத்தை வேண்டுகிறேன். சோதனை முயற்சியாக என்னுடைய தொலைப்பேசி எண்ணையே இட்டுப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இதன் விளைவுகளைக் கண்டு தொடர்ந்து என்ன செய்யலாம் என்று முடிவெடுக்கலாம்--ரவி 12:55, 21 ஜனவரி 2009 (UTC)

பெங்களூர் விக்கிப்பீடியா அறிவகம்[தொகு]

http://thamizha.com முகுந்த் அவர்கள் பெங்களூரில் ஒரு விக்கிப்பீடியா அறிவகம் அமைக்க முன்வந்துள்ளார். அவருடைய அலுவலகத்தில் 7 கணினிகள், 15 பேர் அமரத்தக்க இடம் உண்டு. கூட்டம் அதிகமானால் வேறு இடம் ஏற்பாடு செய்யலாம் என்றிருக்கிறார். மாதம் இரு முறை ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சிகள் ஏற்பாடு செய்யலாம். முதலில் விக்கிப்பயிற்சி. தேவை இருப்பின் அதே இடத்தை பிற தமிழ் இணையத் திட்டங்கள், கட்டற்ற இயக்கப் பயிற்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெங்களூரில் இருந்து நம்மில் யாராவது ஒருவர், இயன்றால் இருவர் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க இயலுமானால் வரும் சனவரி 25 அன்றே பட்டறையை அறிவிக்கலாம்--ரவி 08:25, 19 ஜனவரி 2009 (UTC)

விக்கிப்பீடியா:பெங்களூரு தமிழ் விக்கிப்பீடியா அறிவகம்--ரவி 11:41, 23 ஜனவரி 2009 (UTC)

விக்கிப்பீடியாவை இணைய களங்கள் ஊடாக அறிமுகப்படுத்தல்[தொகு]

யூடியூப், டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் த.வி என கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இவற்றுள் யூடியூப் கவனம் தரப்பட்டு அவ்வப்போது இன்றைப்படுத்தப்படும். அனைத்து நிர்வாகிகளுக்கும் கணக்கு விபரம் அனுப்பிவைக்கப்படும். மற்ற பயனர்கள் கணக்கு விபரங்கள் வேண்டி, இங்கே குறிப்பிடுக. இது த.வி அறிமுகப்படுத்தலின் ஒரு பாகம் ஆகும்.

--Natkeeran 22:06, 21 ஜனவரி 2009 (UTC)

அருமையான கட்டுரை: அறிவியலும் தமிழ்ச்சமூகமும்[தொகு]

த. செந்தில்பாபு. (2008). அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள். புது விசை.[1] --Natkeeran 02:09, 23 ஜனவரி 2009 (UTC)

நல்ல கட்டுரை. நமது மரபுகள் என்று நம் இன்று கருதிக் கொள்பவை தொடர்பிலான ஒரு வேறுபட்ட சிந்தனைப் போக்கை இது முன்வைக்கிறது. ஆய்வாளர்களின் செயற்பரப்புக்குள் வரத்தவறிய தமிழர் மரவுவழிக் கணிதம் அறிவியல் போன்றவை தவிர, அதிகம் ஆய்வு செய்யப்பட்ட துறைகளான மரபுக் கலை, மரபுக் கட்டிடக் கலை போன்ற துறைகளிலும் கூட, இக்கட்டுரையில் கூறப்பட்டது போன்ற குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன. மயூரநாதன் 05:05, 23 ஜனவரி 2009 (UTC)

தமிழாக்கம் தேவை[தொகு]

Madras Crocodile Bank Trust என்பதற்கு தக்க தமிழாக்கம் தேவை. Centre for Herpetology என்பதற்கு "ஊர்வனவியல் மையம்" என்பது தகுந்ததா?. நன்றி--கார்த்திக் 19:30, 25 ஜனவரி 2009 (UTC)

  • சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை !!--Natkeeran 19:52, 25 ஜனவரி 2009 (UTC)
நற்கீரன் சொன்னபடி செய்யலாம், அல்லது சென்னை முதலைக் காப்பக நிறுவனம் என்றோ சென்னை முதலைக் காப்பு நிறுவனம் என்றோ கூட சொல்லலாம். Trust என்பது என்ன நன்கொடை வைப்புநிதியா, அறக்கட்டளையா, பொதுநல நிறுவனமா என்று விளங்கவில்லை. --செல்வா 14:10, 27 ஜனவரி 2009 (UTC)

வரைபடம் தமிழாக்கம்[தொகு]

http://en.wikipedia.org/wiki/File:Indian_Kadamba_Empire_map.svg இந்த வரைபடத்தை தமிழாக்கம் செய்வது எப்படி? உதவி பக்கம் ஏதேனும் உண்டா? உதவி தேவை--கார்த்திக் 06:14, 27 ஜனவரி 2009 (UTC)

கார்த்திக். ஒருவாறு இப்படத்தைத் தமிழ்ப்படுத்தி ஏற்றியுள்ளேன். முழு நிறைவு இல்லை. இலவசமாகக் கிடைக்கும் இன்க்குசிகேப் (Inkscape) வரைபட மென்பொருள் கொண்டு மாற்றினேன். இதில் அழிக்கும் வசதி இல்லை, ஆனால், நீள்சதுர, வட்ட வடிவங்களை வரைந்து மறைக்கலாம். பின்னர் அதன் மீது எழுதலாம். முடிந்த பின்னர் புறமேற்று (Export) என்னும் ஆணைவழி மற்றிய படத்தை சேமிக்கலாம். இந்த மென்பொருளை பயன்படுத்துவதில் எனக்கு போட்திய தேர்ச்சி இல்லை. ஆனாலுமிப்போதைக்கு இதனைப் பயன்படுத்துங்கள். படம் இங்கே சிறுவடிவில் இணைத்திருக்கின்றேன்.
Indian Kadamba2 Empire map2 svg.png.png
. சரிபார்க்கவும்--செல்வா 15:16, 27 ஜனவரி 2009 (UTC)
பிறிதொருவழி ஆர்க்ஜிஐஎஸ் மென்பொருளூடாக Shape file இருந்தால் புதிதாகவே படத்தை உருவாக்கிவிடலாம். நேரம்பிடிக்கும் வேலை ஆனால் அழகாக வரும். --உமாபதி \பேச்சு 00:42, 6 பெப்ரவரி 2009 (UTC)

வெளி இணைப்புகள்[தொகு]

வெளி இணைப்புகளை விளம்பர நோக்குடன் இணைப்பதைத் தவிர்க்க வேண்டுகிறேன். நல்ல அறிவார்ந்த கட்டுரையாக, வலுவான சான்றுகோள்களுடன், குறிப்பிடத்தக்கவாறு விரிவு தருவதாக அமைந்திருந்தால் வெளியிணைப்பாக கட்டுரைகளைத் தருவது நல்லதே. தமிழ் விக்கியை விளம்பரப் பலகையாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். --செல்வா 17:35, 27 ஜனவரி 2009 (UTC)

நிலாமுற்றம் தளத்திற்குச் செல்லும் பொழுது பலமுறை நச்சுநிரல் (வைரசு) ("Trojan.Giframe") வந்து இடர் தருகின்றது. நச்சுநிரல் எதிர்ப்பு நன்றாக உள்ளவர்கள் சென்று பார்த்து கருத்து தெரிவியுங்கள். தொடர்ந்து இவ்வாறு அத்தளம் இருந்தால், அவ்விணைப்புகளை நீக்க வேண்டியிருக்கலாம். எடுத்துக்காட்டு:ராமானுஜன் - நிலா முற்றம் கட்டுரை --செல்வா 22:22, 27 ஜனவரி 2009 (UTC)

படம் JPG vs jpg[தொகு]

படம் .JPG ஆக இருந்தால் படத்திற்கு கீழ் எழுதும் குறிப்பு தெரிவதில்லை, .jpg ஆக இருந்தால் தெரிகிறது. ஆவி-யிலும் இவ்வலு உள்ளதா என்று தெரியவில்லை--குறும்பன் 20:59, 5 பெப்ரவரி 2009 (UTC)


எ.கா ஒன்று தாருங்கள். நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்று புரியவில்லை. --Natkeeran 21:11, 5 பெப்ரவரி 2009 (UTC)

கபினி ஆறு, செனாப் ஆறு இவை இரண்டிலும் படம் .JPG ஆக இருப்பதால் படத்திற்கு கீழ் எழுதிய குறிப்பு தெரியவில்லை. தார் பாலைவனம் படம் jpg ஆக இருப்பதால் படத்திற்கு கீழ் எழுதிய குறிப்பு தெரிகிறது. --குறும்பன் 23:15, 5 பெப்ரவரி 2009 (UTC)

இப்போ சரியா. frame என்று பாத்துவிட்டு, பின்னர் thumb என்று மாற்றவும் சரியாக வருகிறது. order சரியாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். வழுவாக இருக்காலாம். --Natkeeran 00:35, 6 பெப்ரவரி 2009 (UTC)