விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு30

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியலும் பங்களிப்புகளும்[தொகு]

 • Rexani (14 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
 • Vijayquality (27 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
 • Andsiri (1 கட்டுரை பிப்ரவரி 9, 2010)
 • Beachelliots (25 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
 • Babramt (13 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
 • Thiagureview (37கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
 • Kadheab (11 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
 • Arasut (25 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
 • Manjuudupa (35 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
 • Sastri123 (49 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
 • Shanthalan (44 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
 • Singarajan (50 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
 • Devikaraju (1 கட்டுரை பிப்ரவரி 9, 2010)
 • Dhanushcine (30 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)

(14 பயனர்கள் 362 கட்டுரைகள் எழுதியுள்ளனர்) --செல்வா 14:28, 9 பெப்ரவரி 2010 (UTC)

பயனுள்ள தொகுப்பு செல்வா.இவர்களது பொதுவான குறைகளைப் பட்டியலிட்டால் திருத்துவோருக்குப் பயனாகும்.அவர்களும் விக்கி சிறப்புப் பக்கங்களைக் கண்டால் பயனடைவர். ஆனால் கூகுள் பொறியில் விக்கிப்பீடியாவிற்கு மேலேற்று தத்தலை அழுத்தியபின்னர் தமிழ் விக்கிப்பீடியாவில் எவ்வாறு வந்துள்ளது என்று கூட அவர்கள் பார்ப்பதாகத் தெரியவில்லை.
 1. அனைவருக்கும் பொதுவான ஓர் தொகுத்தல்பிழை:உள்ளிணைப்புகள் கொடுக்கும்போது [[சென்னை|சென்னையில்]] என்று கொடுக்காது [[சென்னையில்]] என்றே கொடுப்பது.
 2. ஆங்கில இணைப்புகளுக்குச் சென்றால் இணையான தமிழ்விக்கிப் பக்கத்தைக் காணலாம். சரியான தமிழ் விக்கிப்பக்கத்திற்கு இணைப்பு கொடுப்பது எளிதாகும்.

--மணியன் 05:47, 10 பெப்ரவரி 2010 (UTC)

நன்றி மணியன். ஆம் என்னென்ன குறைகள் அவற்றை எப்படிச் சரி செய்யலாம் என்னும் பட்டியல் இருந்தால் நன்றாக இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட [[சென்னை|சென்னையில்]] போன்ற பிழைகள் அவர்கள் தவிர்க்க வேண்டியன. என்ன குறைகள் இருந்தாலும், அவற்றைச் சிறுகச் சிறுகவாவது நாம் வேண்டியவாறு திருத்தி, செப்பம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். பல மொழி பெயர்ப்புகள் நன்றாகவே உள்ளன. சில கட்டுரைகளைப் பிரித்து 2-3 கட்டுரைகளாகக் கூட நாம் செய்துகொள்ளலாம். பல்வேறு துறைகளில் உள்ள கருத்துகளைத் தமிழில் செய்ய முடியுமா, தமிழில் முதலீடு செய்யலாமா என்று சிந்திக்கவும் பயன்தேர்வு செய்யவும் கூகுள் நிறுவனம் முயல்கின்றதோ என நினைக்க வேண்டியுள்ளது. எப்படியாயினும், இம்மொழிபெயர்ப்புகளைத் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ள முயலுவோம். --செல்வா 14:00, 10 பெப்ரவரி 2010 (UTC)

தேவையான பட்டியல்+கண்காணிப்பு. நன்றி, செல்வா. இன்னும் சில கூகுள் தமிழாக்கப் பங்களிப்பாளர்கள் பட்டியலை பகுப்பு:கூகுள் தமிழாக்கப் பங்களிப்பாளர்கள் பக்கத்தில் காணலாம்--ரவி 18:08, 10 பெப்ரவரி 2010 (UTC)

பயனுள்ள தொகுப்பு, நன்றி செல்வா. ஒரு முக்கிய தகவல். கூகுள் மொழிபெயர்ப்பு தொடர்பில் நமது முந்தைய இரு உரையாடல்களில் பயனர்கள் தெரிவித்திருந்த கருத்துக்களைத் தொடர்ந்து இரவி முன்மொழிந்த வழிகாட்டல் நெறிகளை முறைப்படி மின்னஞ்சலில் கூகுள் நிறுவனத் தொடர்பாளரிடம் தெரிவித்துள்ளேன். அவரும் கொள்கை அளவில் இசைவு தெரிவித்துள்ளார். அவர்கள் தரப்பில் ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க உள்ளனர். நமது தரப்பிலும் ஒரு தொடர்பாளர் வேண்டும். இவர்கள் வழியாக நாம் விரும்பும் மொழி, நடை, தலைப்பு பரிந்துரைகளை அவர்களுக்கு நாம் தெரிவிக்கலாம். அவர்களும் குறிப்பிட்ட காலத்துக்குள்ளாக நடவடிக்கை எடுப்பார்கள். நமது பரிந்துரைகளை எண்வாரியாக விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்புப் பக்கத்தில் பட்டியலிட வேண்டும். -- சுந்தர் \பேச்சு 09:26, 17 பெப்ரவரி 2010 (UTC)
நல்ல முன்னேற்றம் சுந்தர். தொடர்புகளை நல்ல முறையில் பேணிவந்தால் பிரச்சினைகளைப் பயனுள்ள வகையில் தீர்க்க முடியும் என்பது எனது நம்பிக்கை. மயூரநாதன் 15:11, 17 பெப்ரவரி 2010 (UTC)
மிக அருமை சுந்தர். மிக்க நன்றி. மகிழ்ச்சியூட்டும் முன்னேற்றம். ஒரு நல்ல வழி திறந்திருப்பதாக நினைக்கின்றேன். இடைப்பட்ட காலத்தில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளைத் திருத்தியும், சற்றுசிறிய அளவான 2-3 கட்டுரைகளாகக்கூட பிரிகலாம். --செல்வா 20:42, 17 பெப்ரவரி 2010 (UTC)

வேண்டுகோள் - மனித உரிமைகள் தலைப்புகள்[தொகு]

தமிழில் மனித உரிமைகள் பற்றிய கட்டுரைகள், நூல்கள் மிக அரிதாகக் கிடைக்கின்றன. தமிழ் மக்களிடையே மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும் மிக மந்தமாக உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு த.வி கட்டுரையாளர்கள் மனித உரிமைத் தலைப்புகளுக்கு முன்னுருமை தந்து ஆக்கித் தருமாறு வேண்டுகிறேன். சுதந்திரங்கள், உரிமைகள், மீறல்கள், மனித உரிமைக் கருவிகள் என பல கட்டுரைகளை நீங்கள் ஆக்கித் தர முடியும். மேலும் பார்க்க: மனித உரிமைகள் தலைப்புகள் பட்டியல் --Natkeeran 03:28, 11 பெப்ரவரி 2010 (UTC)

தமிழ் விக்சனரியில் இற்றைப்படுத்த வேண்டியவை[தொகு]

 • தமிழ் விக்சனரியில் பல தொகுப்புகள் செய்தபின் தற்போது, ஒரு லட்சம் வார்த்தைகளில் இருந்து, 1,05,250-ஐ நெருங்கிக்கொண்டுள்ளது. ஆனால் ஒரு சில பகுதிகளில், தற்போதய உண்மை நிலை தெரியாத காரணத்தினால், மேலும் செயல்படுவது சிறிது கடினமாக உள்ளது.
 • தயவு செய்து கீழ்கண்ட பகுதிகளை இற்றைப்படுத்த (update) வேண்டுகிறேன். அவற்றை குறைந்தது தினமும் ஒரு தடவையாவது இற்றைப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.
1. தொடராப் பக்கங்கள்
2. வேண்டியப் பக்கங்கள்
மேற்கூறிய இரண்டு சிறப்புப் பக்கங்களும், அக்டோபர் 22, 2009-ல் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.
 • இவற்றை இற்றைப்படுத்தினால் மேலும் குறைந்த அளவு 1000 (ஆயிரம்) சொற்கள் உப-இணைப்பு கொடுப்பதன் மூலம் கூடுவதற்கு வாய்ப்புண்டாகும்.
 • இதனை உடன் செய்ய வேண்டுகிறேன்.

நன்றி. வணக்கம். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 10:52, 12 பெப்ரவரி 2010 (UTC)

Orange pog.svgநானும் இக்கருத்தை ஆமோதிக்கிறேன். எனக்கு இதுபற்றிய தெளிவு இல்லையென்பதால், அறிந்தோர் இற்றைப்படுத்திட வேண்டுகிறேன்.த* உழவன் 01:24, 19 பெப்ரவரி 2010 (UTC)

அவசரம்:முறையான தமிழ் விக்கிப்பீடியா செய்தித் தொடர்பாளர்களுக்கு ஒப்புதல் தேவை[தொகு]

பல்வேறு களங்களிலும், குறிப்பாக தமிழக அரசு துறையினரிடம், தமிழ் - இந்திய மொழி விக்கிக்குத் தொடர்பில்லாத சிலர் தங்களை அதிகாரப்பூர்வ விக்கிப்பீடியா சார்பாளர்களாக முன்னிறுத்தி செயல்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இதனை எதிர்கொள்ள, முதற்கட்டமாக தமிழ் விக்கி சார்பில் முறையாக சில செய்தித் தொடர்பாளர்களை அறிவிக்க வேண்டிய தேவை உள்ளது. இம்முயற்சி இந்திய விக்கிகள் அளவிலும் எடுக்கப்பட்டு வருகிறது. மேல் விவரங்களைச் சுந்தர் அளிப்பார்.

முறையான தமிழ் விக்கிப்பீடியா செய்தித் தொடர்பாளர்களாக பின் வருவோர் பெயர்களைப் பரிந்துரைக்கிறேன்:

 1. பரிதிமதி - சென்னையில் இருந்து நிகழ்வுகளில் நேரடியாக கலந்து கொள் பொருத்தமானவர். (இந்தச் சென்னைப்பொறுப்பே தற்போது அவசரமாக மேற்கொள்ள வேண்டிய ஒன்றுமாக இருக்கிறது)
 2. சுந்தர்
 3. நற்கீரன்
 4. மயூரனாதன்
 5. செல்வா

இன்னும் நிறைய பெயர்களை நிச்சயமாகச் சொல்லலாம். ஆனால், ஒருங்கிணைப்பில் குழப்பம் வரலாம் என்பது தற்போது சிலரே இயங்குவது சிறப்பு.

தங்கள் கருத்துகளை அறிந்தால் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம்--ரவி 00:36, 18 பெப்ரவரி 2010 (UTC)

 • தமிழ் விக்கிப்பீடியாவின் செய்தித்தொடர்பாளர்கள் என்கிற ரவி கருத்து சரியானதாக இருக்குமா? என்கிற கேள்வி எழுகிறது. பல்வேறு பணிகளில் இருக்கும் தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் இதற்கு ஒத்துழைப்பார்களா என்பதும் கேள்விக்குறிதான். மேலும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு செய்தித் தொடர்பாளர்கள் என்று வெறுமனே சிலரை அடையாளப்படுத்தினால் எந்தப் பயனுமில்லை. அவர்களுக்கு அடையாள அட்டை அளிக்கப்பட வேண்டும். இந்த அடையாள அட்டைகளை வினியோகிப்பது யார்? என்கிற கேள்வி அடுத்து எழக்கூடும். இதற்கு ஒரு குழு விவாதம் தேவையாயிருக்கலாம்.
 • விக்கிப்பீடியா பயனர் நிர்வாகிகளாக இருப்பவர்கள் அனைவரும் செய்தித் தொடர்பாளராக இருக்கலாம். இவர்களுடைய பயனர் பக்கங்களில் அவர்களுடைய தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை தெரிவிக்கலாம். குறிப்பிட்ட இவர்களுடன் மட்டும் செய்தித் தொடர்புக்கு அவர்களுடைய மின்னஞ்சல் முகவரிகளுடன் அல்லது தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளும்படி தெரிவிக்கலாம். குறிப்பிட்ட நாடு/ மாநில அரசே அவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கலாம்.
 • இது குறித்து முழுமையான கருத்துக்கள் அடங்கிய விவாதம் நடத்தப் பெற்று அனைவரது கருத்துக்களையும் அறிந்து முடிவெடுக்கலாம். --Theni.M.Subramani 02:23, 18 பெப்ரவரி 2010 (UTC)
தேனி கூறியபடி, நிர்வாகிகள், மற்றும் ஆர்வம் உடையவர்கள் தொடர்பாளர்களாக இருக்கலாம். பிரதேச வாரியாக இப்படி அமையும் என்று நினைக்கிறேன். இதற்கென ஒரு பட்டியலைத் தயாரிக்கலாம். ஆர்வம் உள்ளவர்கள் இணையலாம். விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா பயிற்சி --Natkeeran 05:47, 18 பெப்ரவரி 2010 (UTC)
இதில் நாடோ அல்லது மாநில அரசோ எப்படி அடையாள அட்டை கொடுக்கும் என்பது எனக்கு புரியவில்லை! நக்கீரன் கூறியபடி ஆர்வம் உடையவர்கள் பிரதேச வாரியாக தொடர்பாளர்களாக இருக்கலாம்.--கார்த்திக் 05:54, 18 பெப்ரவரி 2010 (UTC)
 • சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் அவர்களால்
 1. ஒவ்வொரு பத்திரிகை நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர், ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 2 ஒளிப்பதிவாளர்கள் , 2 ஒளிப்பதிவு உதவியாளர்கள் ஆகியோர்களுக்கு செய்தியாளர் அட்டை அளிக்கப்படுகிறது.
 2. சென்னையில் ஒரு நாளிதழுக்கு 9 செய்தியாளர்கள், 2புகைப்படக்காரர்கள் மற்றும் பிற மாவட்டங்களில் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் ஆகியோர்களுக்கு பத்திரிகையாளர் அங்கீகார அட்டை அளிக்கப்படுகிறது. (இத்திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், 50 சதவிகித ரயில் கட்டண சலுகை போன்றவை அளிக்கப்படுகின்றன.)
 • இணைய இதழ்களுக்கான சலுகைகள் தெரியவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் அவர்களுடன் தொடர்பு கொண்டால் மேற்குறிப்பிட்ட நாளிதழ்களுக்கான செய்தியாளர் அட்டை, பத்திரிகையாளர் அங்கீகார அட்டை போன்றவற்றைப் பெற முடியும்.

அதற்கு முன்பாக யாரெல்லாம் செய்தித் தொடர்பாளர்களாக இருக்கலாம் என்பது குறித்து உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கென்று சில வழிமுறைகளை வகுக்க வேண்டும்.

நற்கீரன் அவர்கள் தெரிவித்தபடி முழுமையான முகவரிகள் அடங்கிய பட்டியல் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா செய்தித் தொடர்பாளர் மாதிரி பக்கம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. தகுந்த மாற்றங்கள் செய்து திட்டப் பக்கமாக வைக்கலாம்.--Theni.M.Subramani 11:35, 18 பெப்ரவரி 2010 (UTC)

செய்தித் தொடர்பாளர் என்று நான் பயன்படுத்திய சொல் குழப்பம் தருகிறது என்று நினைக்கிறேன். நான் சொல்ல வருவது என்னவென்றால், "நான் தமிழ் விக்கிப்பீடியா தலைவர்" என்று சொல்லிக்கொண்டு ஒருவர் அரசு மட்டங்களில் பேசி வருகிறார். அவருக்கும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் தொடர்பே இல்லை. இது போன்ற போலிகளை முறைப்படி ஒழிக்க, அரசு மட்டத்தில் தொடர்பு கொண்டு பேச, முறையாக நாம் சில பேரை அறிவிப்பது அவசியம். இவர்களுக்குப் பொருத்தமான பெயர் ஒன்று அளிக்கலாம். அனைவரின் கருத்துப்படி, நிருவாகிகள், ஆர்வம் உடையவர்கள் அனைவருமே இந்தப் பணிக்கு முன்வரலாம். இதனை நாம் விரிவாக பின்னர் உரையாடலாம். தற்போதைய நிலைமை மிகவும் அவரசமானது என்ற காரணத்தாலேயே கருத்தொற்றுமை அடிப்படையில் சில மூத்த உறுப்பினர்கள் பெயரை முன்வைத்தேன். நன்றி--ரவி 12:56, 18 பெப்ரவரி 2010 (UTC)

சேர்ந்தெடுப்பு வேண்டுகோள்[தொகு]

விக்கிப்பீடியா எப்படி இயங்குகின்றது, அதன் நடைமுறைகள் என்னென்ன என்று பலரும் அறிவதில்லை. தமிழ்விக்கிப்பீடியாவுக்குத் தலைவரென்று யாரும் கிடையாது என்று பலரும் அறிவதில்லை. "அதிகாரிகள்" (bureaucrats), "நிருவாகிகள்" (sysops) என்பவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு "உரிமையாளர்கள்" அல்லர். இவர்களுக்கு கட்டுரைகளின் எழுத்தாக்கங்கள் பற்றிச் சில ஒழுங்கு செய்யும் பொறுப்புகள் உள்ளன. விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களித்து, அதன் முறைகளை (தொழில்நுட்பம் மட்டுமல்ல), நன்குணர்ந்து, விக்கிப்பீடியாவின் மீது அக்கறையுடனும் பொறுப்புடனும் இயங்கிவரும் சிலர் விக்கிப்பீடியாவைப் பற்றி வெளிநிறுவனங்களுடன் தொடர்புகொள்ளுதல் பொருந்தும். தற்பொழுது தவறான முறையில் ஒருவர் தன்னைத் தமிழ் விக்கிப்பீடியாவின் தலைவர் என்று கூறிக்கொண்டு பல தவறான தகவல்களைப் பல முக்கியமான இடங்களில் (எ.கா. தமிழ்நாடு அரசு) தெரிவித்து வருகின்றார். தமிழ் விக்கியைப் பற்றி வெளிநிறுவனங்களுக்கு முறையானபடி தெரிவிக்க அறிவிக்க ஒரு "நிறுவன ஏற்புபெற்ற" குழு இருப்பது இப்பொழுது உடனடித் தேவையாக உள்ளது. நான் பரிந்துரைப்பது என்னவென்றால், கீழ்க்காணும் விக்கிப்பீடியர்களை புறத்தொடர்பாளர்கள் குழுவாக சேர்ந்தெடுக்க (co-opt) வேண்டுகிறேன்.

 1. மயூரநாதன் - நடுக் கிழக்கு நாடுகள்
 2. சிறீதரன் கனகு - ஆத்திரேலியா
 3. நற்கீரன் - கனடா
 4. சிவக்குமார் - கோவை
 5. செல்வா - கனடா
 6. சுந்தர் - பெங்களூர் (இந்திய விக்கிமீடியா சிறகத்தின் சார்பாக)
 7. ரவி - கோவை
 8. மணியன் - வட இந்தியா (மும்பை)
 9. கலையரசி - ஐரோப்பா (நோர்வே)
 10. கார்த்திக்பாலா - ஐக்கிய அமெரிக்கா
 11. பரிதிமதி - சென்னை
 12. தேனி சுப்பிரமணி - தேனி

இவர்களிலும் ஒருவரோ இருவரோ புறநிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பது நல்லது. தமிழ் விக்கிப்பீடியாவைத் தவறான முறையில் முன்னிறுத்தாமல் இருக்க இது பற்றி உடனே முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தமிழ்நாடு அரசின் மேல்பொறுப்பின் இருப்பவர் ஒருவர் எனக்குத் தனி மடலில் தந்த செய்தியினாலும் பிற வலயங்களில் இருந்து வந்த செய்திகளாலும், இப்படியான ஒரு முடிவு எடுக்க வேண்டியுள்ளது. விக்கிப்பீடியாவில் ஆர்வத்துடனும் அக்கறையுனும் பங்களிக்கும் எல்லோரும் விக்கியின் உண்மையான சார்பாளர்கள்தாம், ஆனால் நடைமுறை எளிமைக்காக மேலுள்ள விக்கிப்பீடியர்களின் பட்டியலை முன்வைக்கின்றேன். அவ்வப்பொழுது தக்க முறையில் செய்திகளையும் கருத்துகளையும் இங்கு பகிர்ந்துகொள்வதும் முறையும் தேவையும் ஆகும். இதற்கென சமுதாய வலைவாசலில் தனியாக ஓர் உள்பக்கம் உருவாக்கலாம் (தமிழ் விக்கியின் செய்திகள் ?). மேலே குறிப்பிட்ட தமிழ் விக்கிப்பீடியர்களில் யாருக்கேனும் தங்கள் பெயர் இப்பட்டியலில் இருக்க விருப்பமிலாவிட்டாலோ, இன்னும் சிலர் தங்கள் பெயரும் இந்த பட்டியலில் இருக்க வேண்டும் என்று நினைத்தாலோ தெரிவியுங்கள். இவர்கள் விக்கிப்பீடியர்களாக இருத்தல் வேண்டும். 10-11 பேருக்கும் கூடுதலாக இக் குழு இருந்தால் இயங்குவது கடினம் (5 பேரே கூடப் போதும்) --செல்வா 14:48, 18 பெப்ரவரி 2010 (UTC)

 • மேலே உள்ளவர்களைச் சார்பாளர்களாக (பிரதிநிதிகளாக)

ஒப்புதல் தந்தவர்கள்[தொகு]

மறுப்புத் தெரிவிப்போர்[தொகு]

  • --?


கருத்துக் கணிப்புக் காலக்கெடு[தொகு]

இந்தக் கருத்துக்கணிப்பு பிப்ரவரி 24 வரை நடக்கும்.

முடிவுகள்[தொகு]

 • தொடர்பாளர்களாக மேலே பரிந்துரைக்கப்பட்ட 12 பேரும் ஒரு மனதாகச் சேர்தெடுக்கப் பட்டார்கள்!
 • இந்தச் சேர்ந்தெடுப்பில் பங்குகொண்டு வாக்களித்து, கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
 • இனிமேல் பணிகளைத் தொடங்கலாம்.

--செல்வா 00:36, 25 பெப்ரவரி 2010 (UTC) ---

கருத்துகள்[தொகு]

சிவக்குமாரையும் இதில் ஒருவராகச் சேர்த்துக் கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மயூரநாதன் 19:01, 18 பெப்ரவரி 2010 (UTC)

 • நான் முதலிலேயே சேர்த்திருக்க வேண்டும், ஏனோ விடுபட்டுப்போனது!! மன்னிக்கவும். ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்தவர்கள் ஏற்பார்கள் என்னும் கணிப்பில் சிவக்குமாரின் பெயரை இப்பொழுது மேலே சேர்த்துள்ளேன். இன்னும் பல முக்கியமான பயனர்களுள்ளார்கள், யாரையும் விட்டுவிட்டதாக நினைக்க வேண்டாம். செய்திப் பகிர்வுகளும், எல்லா விக்கிப்பீடியர்களின் கருத்து வேண்டல்களும் (சார்பாளர்கள் மட்டுமல்ல) தொடர்ந்து திறந்த அணுக்கமுறையில் இங்கேயே நடக்கும். நடைமுறை எளிமைக்காகவே இந்த ஏற்பாடு. மயூரநாதன் உங்கள் பரிந்துரைக்கு நன்றி. --செல்வா 22:04, 18 பெப்ரவரி 2010 (UTC)
 • பத்து பேருக்கு மேல் வேண்டாமே? ஏகப்பட்ட தொடர்புப் புள்ளிகள் இருப்பது ஒருங்கிணைப்பில் குழப்பம் தரலாம். தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களில் யாரேனும் முன்வந்து விலகலாம். குறிப்பாக, ஒரே வட்டாரத்தில் இருவர் இருக்கும் நிலையில். வேண்டுமானால், ஆண்டுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மேலும் பலரையும் பொறுப்பு ஏற்கச் செய்யலாம். நிருவாகிகளுக்கு எனச் சிறப்புத் தகுதி ஏதும் இல்லை என்றாலும், நீண்ட நாள் விக்கியில் இருந்து அதன் நடைமுறை, தத்துவத்தை அறிந்திருப்பது, தமிழிணைய அரசியல் சூழலை உணர்ந்திருப்பது அவசியம் எனப்படுகிறது. இந்தப் பட்டியலில் இலங்கையில் இருந்து இயங்கும் ஒருவரும் தேவை. கோபி இலங்கையில் இல்லை. உமாபதி வெகுநாளாகத் தொடர்பில் இல்லை. எனவே, இலங்கை சார்பாக மு. மயூரன் பெயரைச் சேர்க்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி--ரவி 04:02, 19 பெப்ரவரி 2010 (UTC)
 • ரவி, ஆண்டுக்கொரு முறையோ, இரண்டாண்டுக்கு ஒரு முறையோ 1/3 பங்கு உறுப்பினர்கள் அல்லது 1/2 பங்கு உறுப்பினர்கள் சுழற்சி என்பதெல்லாம் நினைத்துப் பார்த்தேன், ஆனால் தற்பொழுது இருக்கும் சூழலில், முதலில் ஒரு குழுவைத் சேர்ந்தெடுக்க வேண்டியிருக்கின்றது (விரைவாக). மயூரனைச் சேர்ப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே, ஆனால் இப்பொழுதே 12 பேர் உள்ளனர். விக்கிப்பீடியாவைப் பற்றிய வெளியுறவுத் தொடர்புகளில் ஏற்படும் நிகழ்வுகளை இங்கு அவ்வப்பொழுது பதியப்போகின்றோம். விக்கிபீடியர்களில் யாரொருவரும் கருத்து தெரிவித்து, கருத்து உள்ளிட முடியும். ஆகவே இப்பட்டியல் மிக நீளமாக இருக்க வேண்டுவதில்லை. தேவை எனில் பின்னொரு முறை விரிவாக உரையாடலாம் (எப்படி இக்குழுவை சேர்ந்தெடுக்கலாம், என்னென்ன வழிமுறைகளைக் கைக்கொள்ளலாம் என்று), ஆனால் இப்போதைய தேவை (மேலே குறிப்பிட்டவாறு) ஒரு குழுவை குறிப்பிட்ட காலத்துக்குள் சேர்ந்தெடுக்க வேண்டும். மயூரன் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார் என நம்புகிறேன். --செல்வா 04:35, 19 பெப்ரவரி 2010 (UTC)
இலங்கை (உமாபதி, கலாநிதி, மயூரன், மயுரேசன்), யேர்மனி (சந்திரவதனா) நாடுகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர் உள்ளார்கள். சேர்ப்பது நன்று. --Natkeeran 04:54, 19 பெப்ரவரி 2010 (UTC)
மேலே நான் ஒப்புமை தெரிவித்தாலும் ரவி கூறுவதுபோல இந்தப் பட்டியலைச் சுருக்குவது செயலாக்க வேகத்தை கூட்டும்.எனது கருத்தில் தமிழகத்திற்கு இருவர்(ரவி,பரிதிமதி), இந்தியா முழுமைக்கும் ஒருவர்(சுந்தர்),ஐரோப்பா(கலையரசி/சந்திரவதனா),ஐக்கிய அமெரிக்க நாடு (கார்த்திக்பாலா),கனடா(நற்கீரன்/செல்வா),ஆத்திரேலியா(கனகு சிறீதரன்),நடுகிழக்கு நாடுகள்(மயூரநாதன்) என ஒவ்வொருவரையும் நியமிக்கலாம். ஏனையவர் அவர்களுக்கு துணைவர்களாகவும் பதிலாட்களாகவும் இருக்கலாம். காட்டாக, மும்பையில் ஏதேனும் ஒருங்கிணைப்பு வேண்டி வந்தால் சுந்தரின் வழிகாட்டலில் நான் ஒருங்கிணைக்கலாம். முதலாமாண்டு பட்டறிவு கொண்டு இதனை பின்னர் விரிவாக்கவோ மாற்றவோ செய்யலாம்.--மணியன் 05:24, 19 பெப்ரவரி 2010 (UTC)
பயனர்கள் பரிந்துரைத்திருக்கும் அனைவருமே முக்கியமானவர்கள் தான். உறுப்பினர்கள் எண்ணிக்கையை 15 ஆகக் கூட்டமுடியுமானால் எல்லோரையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், செல்வாவின் கருத்துடனும் எனக்கு உடன்பாடு உண்டு. உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே போனால் சிறப்பாகச் செயல்படுவது கடினம். தற்போதைய சூழ்நிலையில் முக்கியமாக இந்தியாவில் இருந்து நேரடியாகச் செயற்படக்கூடியவர்கள் தேவை. சுந்தர், ரவி, சிவக்குமார் கட்டாயம் இருக்கவேண்டியவர்கள் இவர்களுடன் இந்தியாவில் இருந்து முனைப்பாகப் பணியாற்றும் இன்னும் இருவரையும் சேர்த்துக்கொள்ளலாம். இலங்கையிலிருந்தும் ஒருவரையாவது சேர்க்க வேண்டியது அவசியம். தவிர செல்வா, நற்கீரன், கனகு ஆகியோர் தொடர்ச்சியான நீண்டகாலத் தமிழ் விக்கிப்பீடியாத் தொடர்பும், நல்ல இணைய உலகப் பழக்கமும், பரந்த வெளித்தொடர்புகளையும் கொண்டவர்கள் இவர்கள் கட்டாயம் குழுவில் இருக்கவேண்டும். இன்னும் இரண்டு மூன்று பேர்களுக்கு இடம் உண்டு. சுழற்சி முறையிலோ அல்லது தேவைக்கு ஏற்றபடியோ இந்த இடங்களுக்கு உறுப்பினர்களை இணைத்துக்கொண்ள முடியும். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு என்று தனியான உறுப்பினர் எவரும் தேவையில்லை. இங்கிருந்து கொண்டு எவ்வளவு சிறப்பாகச் செயல்படமுடியும் என்றும் எனக்குத் தெரியவில்லை. அதனால் என்னுடைய இடத்தைச் சிறப்பாகச் செயல்படக்கூடியவர்கள் வேறு எவருக்காவது கொடுக்கலாம். நான் எப்பொழுதும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அருகிலேயே இருக்கிறேன். தேவை ஏற்படும்போது என்னாலானதைச் செய்யக் காத்திருக்கிறேன். மயூரநாதன் 05:50, 19 பெப்ரவரி 2010 (UTC)
சிறு குழுவாக இருப்பது நடைமுறைக்கு நன்று. அதே வேளையில் எந்த வட்டாரத்துக்கும் பதிலாள் ஒருவராவது இருக்க வேண்டும். இந்த அடிப்படையில், தேவைப்பட்டால் வட்டார வீச்சைப் பெரிதாக்கிக் கொள்ளலாம். வெளிப்படைத்தன்மை பொருட்டும், தவறுதலாக ஒரே விசயத்தை இரு வேறு நபர்கள் ஒரே நபருக்கு அனுப்புவதைத் தவிர்க்கவும் எல்லா மடல்களிலும் ஒரு பொது முகவரிக்குப் படியிடலாம். இதைக் காட்டிலும் OTRS (http://otrs.org/, m:OTRS) போன்ற ஒரு தளத்தை நிறுவிக் கொள்வது நல்லது. மற்றபடி மேலே பரிந்துரைத்தவர்களில் இருந்து எந்த ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்தாலும் எனக்கு முழு ஒப்புதல் உண்டு. -- சுந்தர் \பேச்சு 06:12, 19 பெப்ரவரி 2010 (UTC)
 • மயூரநாதன், செல்வா, எனது பெயரையும் ஒருங்கிணைப்பாளர் பட்டியலில் சேர்க்கப் பரிந்துரைத்தமைக்கு நன்றி. எனினும் விக்கி தவிர்த்த மற்ற வாழ்க்கைக்கூறுகளில் உள்ள ஈடுபாடுகளின் காரணமாக என்னால் தற்போது இப்பணியில் முழுமையான பங்களிப்பு அளிக்க இயலாத நிலையில் உள்ளதற்கு மன்னிக்கவும். கடந்த சில மாதங்களாக விக்கியில் என்னுடைய பங்களிப்புகள் குறைந்திருப்பதை பயனர்கள் கவனித்திருக்கக் கூடும். இந்நிலை இன்னும் ஓரிரு மாதங்கள் நீடிக்கும் என்பதால் என்னை இப்பட்டியலில் இருந்து விலக்கக் கோருகிறேன். பின்வரும் நாட்களில் இது போன்ற பணிகளில் தமிழ் விக்கிக்கு என்னாலான பங்களிப்பை வழங்குவேன். மீண்டும் ஒப்புதல் அளித்த அனைவருக்கும் நன்றிகள். --சிவக்குமார் \பேச்சு 08:02, 19 பெப்ரவரி 2010 (UTC)
 • ஒரு பிரச்சினைக்கான எதிர்வினையாகவே இப்பொழுது இக்குழுவை அமைக்கின்றோம். ஆயினும் இணையத்துக்கு வெளியே த.வி சார்பாக இயங்க வேண்டிய தேவை உள்ளது. (அறிமுகக் கூட்டங்கள், வெளியீடுகள், தொடர்புகள் எனப் பலவற்றுக்கு) இத்தகையவற்றைப் பொறுப்பெடுப்பவர்களை அடையாளங் காட்ட வேண்டியுமிருக்கும். இதற்கு சிறிய குழுவொன்றே பொருத்தமாயிருக்கும். அவ்வகையில் 5 பேருக்குள் இக்குழுவைச் சுருக்குவது பொருத்தமாயிருக்கும் என்பதனை வலியுறுத்துகிறேன். மேலும் குறித்த குழு இயங்கும் காலப்பகுதியையும் வரையறுப்பது நல்லது. கோபி 08:25, 19 பெப்ரவரி 2010 (UTC)
 • கோபியின் கருத்துடன் ஒத்துப்போகிறேன். ஆரம்பத்தில் ரவி பரிந்துரைத்த ஐவருடன் இலங்கையிலிருந்து மு.மயூரனையும் இணைத்து ஒரு சிறு குழுவாக்குவது நல்லது. ஏனைய அனைவரும் அக்குழுவிற்கு ஒத்துழைப்பு நல்க உறுதி பூணுவோமாக.--Kanags \பேச்சு 08:44, 19 பெப்ரவரி 2010 (UTC)
 • பெயர்கள் அறிவித்து சேர்ந்தெடுப்பு நடப்பதால், சுந்தர் கூறியவாறும், சிறீதரன் கனகு சொன்னவாறும் சேர்ந்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்களின் ஒப்புதலின் பேரின், சிறிய உட்குழு (5-6 பேர்) ஒன்று இயங்கலாம். சிவக்குமார் பங்களிப்பது கடினம் என்பதால், மேலே பட்டியலில் உள்ள 12 பேரும் சேர்ந்தெடுக்கப்பட்டபின், அவர்களின் ஒப்புதலுடன் சிவக்குமாருக்கு மாற்றீடாக மயூரனை இக்குழுவில் சேர்க்கலாம். இக்குழுவின் நடவடிக்கைகள் அவ்வப்பொழுது இங்கு பதிவாகும் என்பதால், அனைவருக்கும் என்னென்ன நடக்கின்றது என்பதும் தெரியும். அனைத்து விக்கிப்பீடியர்களும் இது பற்றிக் கருத்து உள்ளீடுகளும் இடுவது இயலும். --செல்வா 14:25, 19 பெப்ரவரி 2010 (UTC)
  • நற்கீரன், நீங்கள் சொல்வது விளங்குகின்றது. அவர்கள் யாவரும் சிறப்பாக பங்களிப்பவர்கள் என்பது ஐயத்துக்கு இடமின்றி நம் யாவருக்கும் தெரியும். ஒவ்வொரு பங்களிப்பாளரும் அக்கறையுடன் விக்கியை வளர்த்தெடுக்கின்றார்கள் நாம் எல்லோரும் நன்கு அறிவோம். அடுத்த ஆண்டும் வெளியுறவுக்கான த.வி சார்பாளர்கள் தேவைப்படுவார்கள் அல்லவா? உமாபதி, மயூரன், சந்திரவதனா, தெரன்சு, தானியல் பாண்டியன், Inbamkumar86, சிந்து, தகவல் உழவன், குறும்பன், கலாநிதி, Hibayathullah, Arafath.riyath, மகிழ்நன், வாசு, கோபி, Vatsan34, இரகுநாதன், TRYPPN... என்று உள்ள ஒவ்வொருவரும் நல்ல பங்களிப்பாளர்கள் அல்லவா, ஆனால் எல்லோரையும் முதல் முறையிலேயே எப்படி இணைப்பது. மேலே குறிப்பிட்டவாறு மயூரனை சிவக்குமாருக்கு மாற்றீடாக சேர்த்துக்கொள்வோம். --செல்வா 14:25, 19 பெப்ரவரி 2010 (UTC)
  • நல்ல பங்களிப்பாளர்கள் என்று அடையாளம் கண்டுகொண்ட திரு. செல்வா அவர்களுக்கு நன்றி.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:53, 22 பெப்ரவரி 2010 (UTC)
 • தற்பொழுது தவறான முறையில் ஒருவர் தன்னைத் தமிழ் விக்கிப்பீடியாவின் தலைவர் என்று கூறிக்கொண்டு பல தவறான தகவல்களைப் பல முக்கியமான இடங்களில் தெரிவித்து வருகிறாரெனில் விக்கிப்பீடியாவின் அதிகாரிகள், நிருவாகிகள் அவர் போலி என்பதையும் விக்கிப்பீடியாவின் அதிகாரிகள், நிருவாகிகள் முழுபட்டியலையும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் தெரியப்படுத்துங்கள் தமிழ் விக்கியைப் பற்றி வெளிநிறுவனங்களுக்கு முறையானபடி தெரிவிக்க அறிவிக்க ஓர் குழு தேவையில்லை. அந்தப்பணியை விக்கிப்பீடியாவின் அதிகாரிகள், நிருவாகிகளே செய்யலாம்.--Hibayathullah 15:54, 19 பெப்ரவரி 2010 (UTC)
  • நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. கேள்விப்பட்டவுடன் இப்பக்கத்தில் உள்ள விக்கிப்பீடியர்களின் பெயர்களையும் பங்களிப்புகளையும் சுட்டிக் காட்டியது மட்டுமல்லால், தொடுப்போடு மடலிலேயே அட்டவணையை ஒற்றி ("வெட்டி") ஒட்டி அனுப்பினேன் (அப்படி யாரும் இல்லை என்றும் உறுதிப்படுத்தின்). எனினும் அரசு அலுவலர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் நிறுவன முத்திரை பதித்த தாளில் வேண்டும் என்றனர்! சுந்தரின் உதவியால் இந்தியாவில் உள்ள விக்கிமீடியா நிறுவனக் கிளையின் சார்பாக மடல் இப்பொழுது அனுப்பப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாட்டுக்காகவும் முறைப்படி சேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழு இருப்பது தேவை என்று நம்மில் பலர் உணர்ந்ததால்தான் இது நிகழ்கின்றது. இங்கே நான் சுட்டிய தகவல்கள் பொதுவில் கிடைப்பது என்றாலும், தெரியாதவர்கள் பலராக இருக்கிறார்கள் அல்லவா. மிகப்பலருக்கும் தமிழ் விக்கிப்பீடியா என்பது 6.5 மில்லியன் சொற்கள் (65 இலட்சம் சொற்கள்) கொண்ட களஞ்சியம் என்றால் தெரியாது. இத் தகவலும் பொதுவில் கிடைப்பதே. நாளொன்றுகு 60,000 முறை பார்க்கப்படுகின்றது என்றால் தெரியாது. தமிழ் விக்கிப்பீடியாவின் இயக்கப்பாடுகளும் தெரிவதில்லை. எனவே தமிழ் விக்கிப்பீடியாவோடு தொடர்பு கொள்ள வெளியுறவுக்காக த.வி-யின் சார்பாளர்கள் (பிரதிநிதிகள்) தேவைப்படுகின்றார்கள். உங்கள் கருத்துக்கு என் நன்றி.--செல்வா 17:13, 19 பெப்ரவரி 2010 (UTC)
   • மிகவும் சரியாக அணுகியுள்ளீர்கள் செல்வா. இபாயத்துல்லாவின் வினாவும் சரியானதே. இருப்பினும் ரவி கூறியது போல் தொடர்புப்புள்ளியாக இருக்கத்தான் ஒரு சிறுகுழு -- அக்குழு உறுப்பினர்கள் தம் தொடர்பின் மூலம் கேட்டவற்றை இங்கே (ஆலமரத்தடி) விவாதித்த பின்னர் அடுத்த கட்ட செயல்களைச் செய்யுமாறு பணிக்கலாம்.--பரிதிமதி 17:28, 19 பெப்ரவரி 2010 (UTC)
 • குழு சிறியதாக இருந்தால் நல்லது. அப்போது தான் அவர்கள் செம்மையாக செயல்பட ஏதுவாக இருக்கும். தமிழகத்தில் தான் போலி விக்கிப்பீடியர் அரசை நாடியுள்ளதால் தமிழகத்தில் இருப்பவர்கள் குறிப்பாக சென்னை வாழ் விக்கிப்பீடியர், அடிக்கடி சென்னைக்கு செல்பவர், அரசு அதிகாரிகளை அடிக்கடி சந்திப்பவர்களுக்கு முன்னுருமை கொடுக்கலாம். --குறும்பன் 21:24, 19 பெப்ரவரி 2010 (UTC)
 • தமிழ் விக்கிப்பீடியாவில் ஒருவருக்கொருவர் முகம் தெரியாமல் அவர்களுடைய பங்களிப்புகளின் வழியாக இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதன் வழியாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியுடன் தமிழ் வளர்ச்சியும் இணைந்திருக்கிறது என்பது இங்கு கவனிக்கத் தக்கது. இந்த தமிழ் விக்கிப்பீடியாவின் உரிமையாளர் என்கிற பெயரில் ஒருவர் தமிழ்நாடு அரசுடன் தொடர்பு கொண்டு வருவதாகத் தெரிவித்து தமிழ் விக்கிப்பீடியாவின் செய்தித் தொடர்பாளர்களாக தொடர்புகளுக்கு சிலர் நியமிக்கப்பட வேண்டும் என்பது குறித்து ரவி கடந்த 18 பெப்ரவரி 2010 (UTC)அன்று 00:36 மணிக்கு ஒரு கருத்தை முன் வைத்தார். இந்தக் கருத்து முன் வைக்கப்பட்ட போதே சிலர் பெயர்களையும் பரிந்துரை செய்திருந்தார்.

நாளிதழில் பணியாற்றும் செய்தியாளர்கள் அரசுடன் குறிப்பிட்ட துறை வாரியாகத் தொடர்பு கொண்டிருப்பது போல் தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் நியமிக்கப்படலாம் என்கிற என்னுடைய பார்வையில் செய்தியாளருக்கான கருத்தையும் இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளையும் தெரிவித்திருந்தேன்.

ஆனால் விக்கிப்பீடியாவின் வழியாக வெளி நிறுவனங்கள்/ அமைப்புகளுடன் தொடர்பு கொள்வதற்கான குழு என்கிற பெயரில் செல்வாஅவர்கள் 18 பெப்ரவரி 2010 (UTC) அன்று 14:48 மணிக்கு எனது பெயரும் சேர்க்கப்பட்ட 11 பேர்களைக் கொண்ட குழுவின் பட்டியல் ஒன்றை வெளியிட்டு அதற்கு ஒப்புதல் தந்தவர்கள், மறுப்பு தெரிவிப்பவர்கள், கருத்துக் கணிப்புக் காலக்கெடு, கருத்துக்கள் எனும் தனித் தலைப்புகளுடன் தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்கள் வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுத்திருந்தார். பொதுவாக, என்னைப் பொறுத்தவரை ஒரு குழுவை அறிவிக்கும் முன்பாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி நடத்தப்பட்டிருந்தால் அந்தக் கருத்துக் கணிப்பில் பலர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்திருப்பார்கள். இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவில் அந்தச் செயல் குறித்து ஒரு முடிவுக்கு வந்திருக்க முடியும். அதன் பிறகு முக்கியமான சிலருடன் நல்ல கருத்துக்கள் அளித்த சிலரையும் இணைத்து குழுவின் பட்டியலை உருவாக்கி ஒப்புதல் தந்தவர்கள், மறுப்பு தெரிவிப்பவர்கள் என்ற இரு விதமான வாக்கெடுப்பிற்கு விட்டிருக்கலாம். தற்போது குழுவில் முன்பே பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்டதால் கருத்துக்களில் பல எதிர்மறையான நிலையைச் சந்திக்க வேண்டியுள்ளது.

கருத்துக்களில் சிவக்குமார் சேர்க்கப்பட வேண்டும் என்று மயூரநாதன் தெரிவித்ததன் அடிப்படையில் சிவக்குமார் பெயர் சேர்க்கப்பட்டு குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்பட்டது. பயனர் சிவக்குமாரும் 18 பெப்ரவரி 2010 (UTC) அன்று 18:24 மணிக்கு ஒப்புதல் தந்தவர்கள் பட்டியலில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

அதன் பிறகு ரவி "பத்து பேருக்கு மேல் வேண்டாமே? ஏகப்பட்ட தொடர்புப் புள்ளிகள் இருப்பது ஒருங்கிணைப்பில் குழப்பம் தரலாம். தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களில் யாரேனும் முன்வந்து விலகலாம். குறிப்பாக, ஒரே வட்டாரத்தில் இருவர் இருக்கும் நிலையில். வேண்டுமானால், ஆண்டுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மேலும் பலரையும் பொறுப்பு ஏற்கச் செய்யலாம். நிருவாகிகளுக்கு எனச் சிறப்புத் தகுதி ஏதும் இல்லை என்றாலும், நீண்ட நாள் விக்கியில் இருந்து அதன் நடைமுறை, தத்துவத்தை அறிந்திருப்பது, தமிழிணைய அரசியல் சூழலை உணர்ந்திருப்பது அவசியம் எனப்படுகிறது. இந்தப் பட்டியலில் இலங்கையில் இருந்து இயங்கும் ஒருவரும் தேவை. கோபி இலங்கையில் இல்லை. உமாபதி வெகுநாளாகத் தொடர்பில் இல்லை. எனவே, இலங்கை சார்பாக மு. மயூரன் பெயரைச் சேர்க்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி" என்று மற்றொரு கருத்தை 19 பெப்ரவரி 2010 அன்று 04:02 மணிக்கு பதிவு செய்தார்.

இதையடுத்து பயனர் சிவக்குமார் ஒப்புதல் அளித்த தன் பெயரை நீக்கம் செய்துவிடும்படி 19 பெப்ரவரி 2010 அன்று 08:02 மணிக்கு தனது கருத்தைப் பதிவு செய்தார். மயூரநாதன் தனது பெயரை நீக்கிக் கொள்ளும்படி கருத்து தெரிவித்தார். இதைத் தொடந்து சிலரது எதிர்மறையான கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டன.இந்நிலையில் இலங்கைக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படாத நிலையில் மயூரன் சேர்க்கப்பட வேண்டும். இத்துடன் மேலும் சிலர் சேர்க்கப்பட வேண்டும் என்கிற கருத்தும் முன் வைக்கப்பட்டது.

இச்செய்தியை முதலில் பதிவு செய்த ரவி இன்னும் தனது வாக்கைப் பதிவு செய்யவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்க ஒன்று.

என்னுடைய கருத்துப்படி சிவக்குமார் நீக்கப்பட வேண்டாம். இப்போதுள்ள 12 குழு உறுப்பினர்களுடன் மேலும் மூன்று பயனர்களை இணைத்து 15 பேர் கொண்ட குழுவாக முதலில் தேர்வு செய்து கொள்ளலாம். அதன்பிறகு ரவி முதலில் தெரிவித்த 5 நபர்களை மட்டும் தமிழ் விக்கிப்பீடியாவின் தொடர்புகளுக்கான முதன்மையானவர்களாக தேர்வு செய்து கொண்டு மற்றவர்களை அவர்களுக்கு மாற்றாக வைத்துக் கொள்ளலாம். மேலும் அவர்களை துணைக்குழு உறுப்பினர்களாக அறிவிக்கலாம். இந்தத் துணைக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம், கருத்தரங்கம் போன்றவற்றிற்கான தொடர்புப் பணிகளை அறிவிக்கலாம். அரசியல் கட்சிகளில் குழு மோதல்கள் வரும் போது கட்சிப் பதவிகளில் இணை, துணை என்கிற பெயர்களில் பொறுப்புகள் அறிவிக்கப்படுவது போல் தமிழ் விக்கிப்பீடியாவிலும் இந்நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. --தேனி.எம்.சுப்பிரமணி 02:50, 20 பெப்ரவரி 2010 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா இயன்றவரை நல்ல பயனர்களை உள்வாங்கி வளர வேண்டும். இங்கு எண்ணிக்கை சிறிதாக இருக்க வேண்டியது கட்டாயம் இல்லை. ஆர்வம் உள்ளோர் தவிர்க்கப்படக்கூடாது என்பதே முக்கியம். --Natkeeran 03:04, 20 பெப்ரவரி 2010 (UTC)
முதலில் ஒரு குழுவைச் சேர்ந்தெடுத்த பின்பு அக்குழுவினர் (கமிட்டி)மேலும் இரண்டொருவரை சேர்ந்தெடுத்துக்கொள்ள முடிவு செய்ய இயலுமே. அதுபோலவே அக்குழுவினர் ஒரு சிலரை உட்குழுவாக உருவாக்கிக்கொண்டும் இயங்கலாமே. கோபி மேலே கூறியவாறு இது திடீரென ஏற்பட்ட ஒரு தேவை கருதி விரைந்தியங்க வேண்டிய சூழலால் இப்படிச் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம். இல்லாவிடில் இவ்வகையான பொறுப்புகளுக்கான வரைவுகளை முதலில் கலந்துரையாடிய பின்பு விக்கிப்பீடியர்களின் சேர்ந்தெடுப்போ, தேர்ந்தெடுப்போ செய்யலாம். நற்கீரன் சொல்வது போல எண்ணிக்கை சிறியதாக இருக்க வேண்டும் என்றில்லை, மயூரநாதன் சொல்வது போலவும், சுந்தர் சொல்வது போலவும் 15 பேராகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளும்பொழுது 2-3 பேருக்கும் மேல் பெயர்கள் குறிப்பிட்டு அவர்களின் மின்னஞ்சல் முதலியவற்றைத் தெரிவித்தால் பெரும் குழப்பமாக இருக்கும். சுழற்சி முறையில் எல்லோருக்கும் வாய்ப்பும் கிடைக்கும். பட்டியலை மாற்ற வேண்டாம் என நான் கூறுவதற்கு முக்கிய காரணம், ஒரு காலக்கெடு கொடுத்து சேர்ந்தெடுப்பு நடத்தும்பொழுது இடையே மாற்றல் தவறாகும். தமிழ் விக்கியின் வழக்கப் படி செயல்படக்கூடிய ஒரு தீர்வு நோக்கி ஓர் இணக்க முடிவு எடுப்பது நல்லது. --செல்வா 04:06, 20 பெப்ரவரி 2010 (UTC)

சுப்பிரமணி, ஒரு இணக்க முடிவு வந்த பிறகு பரிந்துரைக்கப்படும் அனைவர் பெயரையும் ஆதரிப்பதில் எனக்குத் தயக்கம் இல்லை.

நீங்கள் கருதுவது போல தமிழ் விக்கிப்பீடியாவில் எந்தக் குழுவுமோ பொறுப்புச் சிக்கல்களோ இல்லை. இது வரை நிகழ்ந்த அதிகாரி, நிருவாகிகள் தேர்தல் அனைத்தும் ஒருமனதான முடிவுகள் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளன என்பதே சான்று. அதே வேளை, விக்கிப்பீடியர் அனைவரும் திறந்த முறையில் தங்கள் கருத்துகளை முன்வைப்பது வழமையே.

இலங்கையில் இருந்து ஒருவர் வேண்டும் என கூறியதற்கு காரணம், தமிழ்நாட்டில் நடந்தது போல இலங்கை அரசிடமும் போலிகள் எவரும் அண்டக்கூடாது என்பதற்காகவே.

ஒரு வெளி நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளும்போது நமது சார்பாளர்கள் என்று பலரின் பட்டியல், முகவரியைக் கொடுத்தால் ஒருங்கிணைப்பில் குழப்பம் வரும். தமது பணியிட, பிற இணையத் திட்டங்கள் பங்கேற்பின் அனுபவத்தில் அடிப்படையிலேயே இந்தக் குறைவான தொடர்புப் புள்ளிகள் என்ற கருத்தை பலரும் வலியுறுத்துகின்றனர்.

15 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குள் திரும்ப 5 தொடர்புப் புள்ளிகள் என்பது தேவையற்றது. பதிவு செய்த விக்கிப்பீடியர் 14000+ பேருமே இந்த பெரிய குழுவில் தாமாகவே உள்ளடகங்கியவர்கள் தான். விக்கிப்பீடியாவில் உரையாடல்கள் திறந்த முறையில் நடைபெறுவதால் உண்மையில் பெரிய குழு, அதற்குள் உட்குழு என்றெல்லாம் தேவை இல்லை. பிறகு எல்லாவற்றுக்கும் இந்தக் குழு மூலமாகச் செயல்படுவதிலேயே காலம் வீணாகும். அதுவும் ஏதோ சிலரைச் சமாதானப்படுத்தும் தோற்றத்துடன் குழுவைப் பெரிதாக்கிக் கொண்டே போவதில் உடன்பாடில்லை. பயிலரங்கம், கருத்தரங்கம் போன்றவற்றுக்கு எல்லாம் குழு தேவை இல்லை. ஆலமரத்தடியில் ஒரு சிறு அறிவிப்போடு ஆர்வம் உள்ளோர் தத்தம் ஊர்களில் இவற்றை ஏற்பாடு செய்யலாம்.

தற்போதைய உடனடித் தேவை தொடர்புப் புள்ளிகளே. கூகுள் ஒருங்கிணைப்புத் திட்டத்துக்கு 14000+ பங்களிப்பாளர்களும் உறுப்பினர்களே. ஆனால், நடைமுறைக் காரணத்துக்காக சுந்தர் என்று தொடர்புப்புள்ளி மூலமாகத் தொடர்பு கொள்கிறோம். அதே போன்ற தொடர்புப் புள்ளிகளே இப்போதைய தேவை. பலரும் பரிந்துரைத்த படி, இந்தத் தொடர்புப் புள்ளிகள் மிகச் சிலராக இருக்க வேண்டும் என்பதே என் கருத்து. ஐவருக்கு மிகாமல் இருக்கலாம். இவர்களின் பணி குறித்த இற்றைப்படுத்தல்களை ஆலமரத்தடியில் இட்டு தமிழ் விக்கி சமூகத்தின் வழிப்படுத்தலோடு நடக்கும். தமிழ் விக்கி சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தும் ஊடகமாக மட்டுமே செயல்படுவார்கள்.

அதே வேளை, அவசர காலத்தில் அவர்கள் எடுக்கும் முடிவை சமூகம் முழு மனதுடன் ஆதரிக்கும் அளவு சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றவர்களாகவும் அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி என்ன அவசர காலம் என்றால்.. தமிழ் விக்கிப்பீடியாவைப் பெரிய அளவில் ஓரங்கட்டும் சில முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த வேளையில் விரைந்து உரியவர்களை அணுகி தமிழ் விக்கிக்கு வலு சேர்க்க வேண்டிய தேவை உள்ளது. எனவே, தொடர்புப் புள்ளிகளை விரைந்து ஒரு மனதுடன் அறிவிக்க வேண்டுகிறேன். காலம் தாழ்த்துவது கேடாக முடியும்.

1. செல்வா

2. பரிதிமதி - சென்னையில் தொடர்புப் புள்ளி ஒருவர் கண்டிப்பாகத் தேவை.

3. சுந்தர்

4. நற்கீரன்

5. மு. மயூரன் - ஓர் இலங்கைத் தொடர்புப் புள்ளி கண்டிப்பாகத் தேவை.

நான் முன்பு பரிந்துரை பெயரில் மயூரநாதன் அவர்கள் பெயர் மட்டும் இல்லை. அவர் ஏற்கனவே ஆலமரத்தடியில் இருந்து வழிப்படுத்த முன்வந்துள்ளார். மு. மயூரன் தவிர அனைவருமே முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிருவாகிகள். இலங்கையில் இருந்து செயற்படக்கூடிய நிருவாகிகள் இப்போது இல்லை. எனவே, மேற்கண்ட அனைவரையும் இப்பொறுப்பை ஏற்றுச் செய்யச் சொல்லலாம்.

செல்வா, தற்போதைய அவசர நிலை கருதி, இந்தப் பட்டியலை முன்மொழிந்து தொடர்பாளர் பொறுப்புகளுக்கு ஒரு மறுவாக்கெடுப்பு நடத்த இயலுமா? இவர்களுக்கான பொறுப்புக் காலம் குறைந்தது 6 மாதமாக இருக்கலாம்.

தேவைப்பட்டால், பிறகு முறையாக உரையாடி நாடு / கண்டம் / வட்டாரம் வாரியாகத் தொடர்புப் புள்ளியாக அறிவிக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாகப் பேச வல்ல ஒரு சிலரையாவது உடனடியாக காலம் தாழ்த்தாது அறிவிக்க வேண்டியது முக்கியம்


நன்றி--ரவி 06:40, 20 பெப்ரவரி 2010 (UTC)

ரவி மற்றும் செல்வா சொல்வது போல இப்போதைக்கு மேற்குறிப்பிட்டுள்ள 5 பேருடன் இக்குழுவை அமைத்து மேற்கொண்டு ஆகவேண்டியதை பார்ப்போம். பின்னாளில் தேவையெனில் இக்குழுவில் வேறு உறுப்பினர்களையும் தொடர்பாளர்களாக அறிவிக்கலாம். இப்போதைக்கு "இவ்விசயத்தின் அவசரம் கருதி" இக்கருத்துடன் செல்வோம்--கார்த்திக் 15:52, 20 பெப்ரவரி 2010 (UTC)
ரவி, கார்த்திக், சிறிய குழுவாக இருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுவது புரிகின்றது. ஆனால் மறு வாக்கெடுப்பு வேண்டாம் என நினைக்கின்றேன். ஏனெனில் மறுவாக்கெடுப்பு நடத்துவதென்றால் குறைந்தது இன்னும் ஒரு 4-5 நாட்கள் காலக்கெடு தரவேண்டும். அதற்கும் முன்னரும்கூட சில நாட்களாவது கருத்துரையாடுவதற்காக இருக்க வேண்டியிருக்கும். இப்படிச் செய்வதற்கு மாறாக சேர்ந்தெடுப்பு முடிந்த பின், சேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர், (1) தங்கள் பொறுப்புக்காலம் திசம்பர் 31, 2010 வரை என்றும், (2) குழுவிலுள்ளோரைக் கலந்துகொண்டு மேலும் ஒரு சிலரைச் சேர்த்துக்க்கொண்டு குழுவினர் எண்ணிக்கையாக 15 ஆக உயர்த்திக் கொள்ளவோ (முன்னர் சுந்தர், மயூரநாதன் கூறியவாறு), அல்லது குறிப்பிட்ட பொறுப்புகளில் விரைந்தியங்க ஏதுவாக சிறிய உட்குழு அமைத்துக்கொண்டு இயங்கவோ இயலும் என்றும் குழு இயக்க வழிமுறைகளை வகுத்துக்கொள்ளலாம். இவை பற்றிய கருத்தாடல்கள் யாவும் இங்கேயே ஒரு தனிப்பக்கத்தில் பதிவு செய்து நடத்தலாம் (எனவே எல்லாப் பயனர்களும் பார்க்கலாம்). சேர்ந்தெடுப்பு முடிந்தபின் பேசலாம் என்பது என்கருத்து. சேர்ந்தெடுப்பு முடிந்தபின் நான் இக்குழுவில் இருந்து விலகிக் கொள்ள அணியமாக இருக்கின்றேன். ஏனெனில் வெளியுறவுக்கான விக்கிப்பீடியாவின் சார்பாளன் என்னும் அடையாளம் உண்மையில் எனக்கோ நம்மில் யாரொருவருக்குமோ தேவை இல்லை. நன்றகப் பங்களித்து, விக்கி முறைகளை ஓரளவுக்கு நன்றாக அறிந்து, அக்கறையுடன் விக்கியை வளர்த்தெடுக்க எந்தத் தடையும் எனக்கு இல்லை. இதுதானே விக்கியின் அருமை!. பதிவு செய்து நல்ல பங்களிக்கும் எந்தவொரு பயனரும் விக்கியின் நல்வளர்ச்சிக்காக வெளியில் தொடர்புகொண்டு பணியாற்றவும் முடியும். எனவே இப்பொழுது நாம் நடத்தும் சேர்ந்தெடுப்பு, திடீர் என்று தோன்றிய ஒரு தேவைக்காக. எனவே இது பற்றி இப்பொழுது அதிகம் உரையாடவேண்டும் என்றில்லை என்பது என் கருத்து. இப்படி நாம் வாக்களித்தும் கருத்து தெரிவித்தும் கூட்டுழைப்பாக பணியாற்றுவதுதான் விக்கியின் அருமை. நன்றி. --செல்வா 06:02, 21 பெப்ரவரி 2010 (UTC)
இதுபோன்று நாம் அமைக்கும் குழுவிற்கான சட்டபூர்வமான நிலை என்ன ? விக்கிமீடியா நிறுவனத்தின் சார்பாளராக நாம் நம்மையே நியமித்துக் கொள்ள முடியுமா அல்லது தாய் நிறுவன ஆணை வேண்டுமா ? இது தமிழகத்தின் உடனடி தேவையென்றால் தமிழ்விக்கிப்பீடியா பங்களிப்பாளர்கள் சங்கம் என்ற ஒன்றை ஏழு உறுப்பினர்களைக் கொண்டு சார்பு பதிவாளர் அலுவலகத்தில் பதிந்து கொள்ள வேண்டுமா ? பிரபு ராஜதுரை போன்ற வழக்கறிஞர் பதிவர்களின் அறிவுரையையும் பெறலாம். --மணியன் 14:09, 21 பெப்ரவரி 2010 (UTC)
விக்கிப்பீடியாவில், அதன் வழிமுறைகளின்படி பத்து கட்டுரைகளையோ ஆயிரம் கட்டுரைககளையோ எழுத எந்தத் தடையும் இல்லை. இப்படிப் பங்களிப்பவர்கள் விக்கிப்பீடியா/விக்கிமீடியா நிறுவன அலுவலர் அல்லர் ஆனால் விக்கிமீடியா என்னும் இலாபநோக்கற்ற நிறுவனத்தின் திட்டங்களில் ஒன்றான விக்கிப்பீடியா என்னும் திட்டத்தில் தன்னார்வலர்களாக (சம்பளம் வாங்கும் அலுவலர்களாக அல்ல) பங்கு கொள்கிறோம். விக்கிமீடியா தரும் தொழில்நுட்பத்தின் உதவியால், உள்ளடக்கம் உருவாக்கும் திட்டங்களாகிய விக்கிப்பீடியா, விக்சனரி முதலான உறவுத்திட்டங்கள் நடக்கின்றன. நாம் இங்கே சேர்ந்தெடுக்கும் குழுவுக்கு சட்ட அடிப்படையில் எதுவும் வேண்டும் என்றால் விக்கிமீடியா நிறுவனத்தை அணுக வேண்டும். சுந்தர் போன்றவர்களுக்கு இதன் நடைமுறைகள் தெரியும். ஆனால் உள்ளடக்கம் உருவாக்குவதற்கான பணிகளைச் செய்ய வெளிநிறுவனங்களுடன் தொடர்புகொள்ள தமிழ் விக்கிப்பீடியா குமுகம்(community) சேர்ந்தெடுத்து ஒரு குழுவை வைத்திருப்பதில் தடை இருப்பதாகத் தெரியவில்லை. --செல்வா 15:01, 21 பெப்ரவரி 2010 (UTC)

விக்கிமீடியா] நிறுவன அமைப்புகள் விதிகள் பற்றி அறிய இப்பக்கத்தைப் பார்க்கலாம். இதில் உட்கூறு 3 இன் படி நிறுவனத்திற்கு உறுப்பினர்கள் (Members) கிடையாது. நிறுவன மேலாட்சியர்/பொறுப்பாட்சியர் ஆயம் உண்டு. --செல்வா 15:57, 21 பெப்ரவரி 2010 (UTC)

நாடு வாரியாக விக்கிமீடியா chapter அமைப்பதே தற்போது நடைமுறையில் உள்ளது. மொழிவாரி chapter அமைக்கும் நடைமுறை இல்லை. தற்போதைய தேவை கிட்டத்தட்ட தள மேலாண்மைக்காக நாமே நிருவாகிகள், அதிகாரிகள் தேர்ந்தெடுப்பது போலவே. சட்டமுறை ஒப்புதல் தேவை இல்லை.

செம்மொழி மாநாடு நடப்பதால், பல்வேறு வகையான தமிழ்த் திட்டங்களையும் அரசு கனிவுடன் கவனிக்கும் நிலை உள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அரசின் ஆதரவு பெற இது சரியான நேரம். தமிழ் விக்கிப்பீடியாவின் வளம் கூட்டுவது தொடர்பாக அரசுடன் பேச வேண்டிய உடனடித் தேவை உள்ளது.

1. செம்மொழித் தமிழ் மாநாட்டுடன் இணைந்து விக்கி பயிற்சி பட்டறை நடத்துவது. 2. தமிழ் விக்கிமீடியா திட்டங்களின் உள்ளடக்கத்தைக் கூட்ட அரசு எவ்வகையில் உதவலாம் என்று பேசிப் பார்ப்பது.

என்ன உரிமையில் பேசுகிறோம் என்று யாராவது கேட்டால், இது போல் தமிழ் விக்கிப்பீடியாவில் உரையாடி சமூகத்தின் ஒப்புதலோடு பேசுகிறோம் என்று சொல்ல ஒரு தொடர்பாளர் பட்டியல் பக்கம் தேவை. அதே வேளை, பலரும் ஒரே நேரத்தில் மாற்றி மாற்றிப் பேசிக் குழப்பாமல் இருக்க, ஒரு சிலரே இத்தொடர்பாளர் பணியில் ஈடுபட வேண்டிய நடைமுறைத் தேவையும் உள்ளது.

அரசு, அதிகாரிகள், அறிஞர்களிடையே தொடர்புகளும் ஒரு பேராசிரியராகச் சிறந்த தகைமையும் அனுபவமும் கூடி இத்தொடர்புப் பணியைத் திட்டமிட்டு வழிநடத்த செல்வா சிறப்பானவர். சென்னையில் உள்ள கூட்டங்களுக்குச் செல்ல பரிதிமதி பொருத்தமானவர். உலகளாவிய விக்கிமீடியா நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றுத் தந்து விக்கி நடைமுறைகளைத் தெளிவுபடுத்த சுந்தர் சிறந்தவர். மாற்றுக் கருத்துகளைத் தயங்காது வெளிப்படுத்தி நெறிப்படுத்த நற்கீரன் வல்லவர். எனவே, இந்த நான்கு பேரை முதன்மைத் தொடர்பாளர்களாகக் கொள்ளலாம். போலிகள் நடமாட்டத்தைக் கருத்தில் கொண்டு தற்போதே இலங்கைக்கான தொடர்பாளரையும் அறிவிப்பது நன்று. இதற்கு மு.மயூரன் பொருத்தம்.

எனவே,

தமிழக அரசுடன் பேசும் முதன்மைத் தொடர்பாளர்களாக:

1. செல்வா

2. பரிதிமதி

3. நற்கீரன்

4. சுந்தர்

ஆகியோரை அறிவிக்கலாம்.

இலங்கைக்கான முதன்மைத் தொடர்பாளராக

5. மு. மயூரன்

செல்வா, நற்கீரன் வெளிநாட்டில் இருப்பதாலும், குறிப்பாக, இத்தொடர்பாடல் செம்மொழி மாநாட்டை ஒட்டி நடைபெறுவதாலும் (கோவையில் இருந்து களப்பணிகளைப் பார்க்க ஆள் தேவை. ), உடனடியாக சுந்தர்-பரிதிமதி போன்ற உள்நாட்டுச் சார்பாளர்களுக்கு ஒரு மாற்று தேவைப்பட்டாலும் (அவர்களால் கூட்டங்களில் பங்கு பெற முடியா நிலை, தொலைப்பேசியில் உடனடியாகப் பதில் அளிக்க இயலா நிலை போன்றவை), இப்பொறுப்பைப் பகிர்ந்து கொள்ள ஒரு மாற்றுத் தொடர்பாளர் தேவை. இந்தப் பொறுப்பை என்னால் ஏற்க இயலும். எனவே, ஒரு மாற்றுத் தொடர்பாளரை அறிவிக்கும் நிலையில் என் பெயரைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். இப்பொறுப்பை நிறைவாக வேறு யார் ஏற்க முன்வந்தாலும் உடன்பாடே.

தற்போதைய தேவைக்கு மேல் உள்ளவர்களை முதன்மைத் தொடர்பாளர்களாக அறிவித்து விட்டு, ஏற்கனவே வாக்களித்து ஒப்புதல் தரப்பட்ட மற்றவர்களையும் வட்டார அடிப்படையில் தொடர்பாளர்களாக அறிவிக்கலாம். தற்போதைய தேவை நிறைவு பெற்ற பிறகு, முறையாக கூடுதல் பெயர்களையும் முதன்மைத் தொடர்பாளர்களையும் தேர்ந்தெடுக்கலாம். நன்றி--ரவி 16:59, 21 பெப்ரவரி 2010 (UTC)

நாளடைவில் தொடர்பாளர் குழுவில் யார்-யார் இருக்க வேண்டும் என்பதைப் பொருத்த வரை மேலே செல்வா குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு எனது ஒப்புதல் உண்டு. இப்போது உடனடித் தொடர்புகளுக்கு மேலே ரவி குறிப்பிட்ட குழுவையாவது அறிவிக்கலாம் எனக் கருதுகிறேன். அத்தோடு, களப்பணிகளுக்காகவும் திட்டமிடலிலும் தொடர்புகளிலும் தொடர்ச்சி பேணுவதற்காகவும் கோவையிலுள்ள இரவி பொறுப்பேற்க வேண்டும். என்னுடைய பங்கு இம்முறை விக்கிமீடியாத் தொடர்புக்கு மட்டும் தான் இருக்கப் போகிறது. அதனால், இந்தக் குழுவில் நான் இடம்பெற வேண்டும் என்ற கட்டாயமில்லை. விக்கிமீடியாத் தூதர் (பதவியெல்லாம் இல்லைங்க :-)) போன்று நான் செயல்படலாம். -- சுந்தர் \பேச்சு 05:06, 22 பெப்ரவரி 2010 (UTC)

 • --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 13:04, 22 பெப்ரவரி 2010 (UTC)கருத்துக்கள்
 • தற்போதய உடனடித் தேவை சென்னையில், அடுத்தது கோவையில். ஆக இந்த இரண்டு இடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, முதன்மைத் தொடர்பாளர்கள், துணைத் தொடர்பாளர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 • உடன் ஏற்படுத்த வேண்டிய ஐவர்-குழு.
வரிசை எண் நாடு பகுதி முதன்மைத் தொடர்பாளர்கள் துணைத் தொடர்பாளர்கள் குறிப்பு (கருத்து)
1 கனடா --- செல்வா --- ---
2 இந்தியா சென்னை பரிதிமதி --- உடனடித் தேவை
3 இந்தியா * பெங்களூர்
 • கோவை - உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
சுந்தர் 1. ரவி

2.த.உழவன்

* சுந்தர் - இந்திய விக்கிமீடியாவின் சார்பாக
 • ரவி, த.உழவன் --- உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் விக்கிப்பீடியாவின் தொடர்பாளர்களாகவும் களப்பணியாளர்களாகவும் செயல் பட வேண்டும்.
4 கனடா --- நற்கீரன் --- ---
5 இலங்கை --- மு. மயூரன் --- ---
 • பிறகு மெதுவாக, எல்லா பெருநகர்களுக்கும், நாடுகளுக்கும், முதன்மைத் தொடர்பாளர், துணைத் தொடர்பாளர் ஆகியோரை அடையாளம் கண்டு, ஒரு பட்டியலிட்டு அவர்களின் சம்மதத்தை கேட்டறிந்து நியமனம் செய்ய வேண்டும்.
 • ஒவ்வொரு வருடமும் முன்னிலையில் உள்ள தொடர் பங்களிப்பாளர்களுக்குப் வாய்ப்பளிக்க வேண்டும். அதனால் அவர்களின் ஆர்வமும் கூடும், பின் அவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவார்கள்.
 • தமிழ் விக்கிப்பீடியாவில் எந்த ஒரு குழு அமைத்தாலும் அதில் தொடர்பங்காளர் பட்டியல் வரிசையில் உள்ள முதல் 100 நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். (அவ்வாறு தகுதி பெற்றவர்கள 33 பேர்கள் மட்டுமே)
 • கடந்த ஒரு வருடமாக (365+ நாட்கள்) எந்த ஒரு பங்களிப்பும் செய்யாதவர்கள் --- தமிழ் விக்கிப்பீடியா சார்ந்த எந்த ஒரு பதவியும், குழு உறுப்பினராகவும் அமர்த்துவது சரியல்ல என்பது எனது கருத்து.
 • எந்த ஒரு குழு அல்லது அமைப்பை ஏற்படுத்துவதற்கு முன்பு இந்த விக்கிப்பீடியாவின் பட்டியலை முன்மாதிரித் தர அளவாகவும் வழிகாட்டியாகவம் வைத்துக்கொள்ளலாம் என்பது எனது கருத்து.

---தொடர்பங்களிப்பாளர்கள்-பட்டியல்


ரவி, சுந்தர், திருச்சி பெரியண்ணன், இன்னும் இரண்டே நாளில் முதல் குழு உருவாகும். நீங்கள் சொல்லும் அத்தனையும் இப்பொழுதே செய்யலாம். பரிதிமதி, சுந்தர், ரவி கட்டாயம் யாருடனும் பேசலாமே. அதற்கு எந்தத் தடையும் இல்லையே. மற்றவர்களும் உரிமை கொண்டாடுவார்களா எனில், முதலில் விக்கிப்பீடியா என்றால் என்ன என்று அவர்கள் விளங்கிக்கொள்ளாதவர்கள் என்பது பொருள். கூட்டு நலமே முதல், இணக்க முடிவே வரவேற்பது. தனிமனித முன்னுந்தல் (கூட்டு நலனுக்கு எதிரான முன்னுந்தல்) வரவேற்கப்படாதது. இங்கு இதுகாறும் பணியாற்றியவர்கள் மிகப் பெருவாரியாக மிக ந்ன்னோக்கம் உடையவர்களாகவே நான் பார்த்துள்ளேன். என் கணிப்பு தவறு என்றால் சொல்லுங்கள். நீங்கள் சொல்வது போல "அறிவிப்பு" செய்வது "முறை" (due process) ஆகாது என்பதாலேயே இன்னும் இரண்டு நாள் பொறுத்திருப்போம் என்கிறேன். ஆனால் களப்பணிகள் செய்ய, தக்கவர்களுடன் பேச (பொறுப்பாகப் பேசவும் நடந்துகொள்ளவும்) ஏதும் தடை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இருந்தால் அறிவுறுத்துங்கள். இன்று வரை உள்ள நிலவரத்தின் படி ரவி கூறிய அத்தனை பேரும் சேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதுதானே. இந்தத் செம்மொழி மாநாடு தொடர்பாக விக்கிப்பீடியாவோடு இணைந்து ஏதும் செய்வதாயின், பரிதிமதி, ரவி, சுந்தர் முதலானோர் தாராளமாக இந்த சேர்ந்தெடுப்பு முடியுமுன்னரே செய்ய வேண்டியதைச் செய்ய எந்தவிதத் தடை இருப்பதாக் எனக்குத் தெரியவில்லை. ஒரு குரல், ஒரு தொடர்பு புள்ளி (குழப்பம் வராது இருக்க) என்பதெல்லாம் நாம் மதித்து உடன் ஒத்துழைப்பு தர வேண்டும் (சேர்ந்தெடுத்த பின்னும்; இப்படி ஒரு குழுவே இல்லாமல் இருந்தாலும்). நாம் அறிவித்த பிறகா சுந்தரோ, ரவியோ கடந்த பல ஆண்டுகளில் எத்தனையோ முறை தங்கள் புற உறவாட்டங்களை இங்கே அக்கறையுடனும் பொறுப்புடனும் பதிவு செய்தார்கள்? இல்லையே. ரவி ஏதும் ஒருவருடன் பேசி இருந்தால், நான் கூற விழைவதை அவர் மூலம் தருவேனே. அருள்கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள். சேர்ந்தெடுப்பவர்கள் கூட்டு நலனுக்காக பணியாற்றவேண்டும். செருமனியில் ஒன்று செய்ய வேண்டும் எனில் நம் பயனர் சந்திரவதனா தான் செய்ய முடியும். நம் கருத்துகளை அவர் மூலம்தான் தருவோம். அவர் தற்பொழுது இந்தக் "குழு"வில் உறுப்பினர் இல்லை என்பதால் அவருக்கு எந்தத் தடையும் இல்லை. அதனால்தான் நான் கூறுகிறேன் நான் குழுவில் இருந்து விலகி இருந்தாலும் என்னால் எல்லாம் செய்ய முடியும். இந்தக் குழுவில் உறுப்பினராக இருப்பது ஏதோ பதவி இல்லை. நாம் எல்லோரும் கூட்டுழைப்பு பங்களிப்பாளர்கள்தாம். செயலில் கவனம் செலுத்துவோம். ரவி, சுந்தர் பரிதிமதிக்கு நாம் எல்லோரும் துணை செய்வோம். நான் என் முழு பின்னுழைப்பை இயன்ற வழிகளில் தருகின்றேன். திருச்சி பெரியண்ணனுக்கு ஒரு குறிப்பு. இலங்கையில் கடுமையான நிலை இருந்து வந்ததால், பல அருமையான பங்களிப்பாளர்களால் பங்கு கொள்ள முடியவில்லை (எ.க. உமாபதி, கலாநிதி, சிந்து, கோபி, மு மயூரன், மயூரேசன் என்று எத்தனையோ பேர்), மிகச் சிறந்த பங்களிப்புகள் செய்துவந்துள்ள தெரன்சு, அவருடைய முனைவர் ஆய்வு முடியும் நிலையில் உள்ளதால் தற்காலிகமாக பங்களிக்க இயலாது உள்ளது....ஆழமாக பங்கு பற்றிய சிலர் (சக்திவேல் நிரோ) பல்வேறு காரணங்களால் அண்மையில் பங்களிக்க முடியாமல் இருக்கிறார்கள் (ஆனால் எல்லோரும் த.வி-யில் அக்கரை கொண்டவர்கள். த.வி-யை நன்கு அறிந்தவர்கள். இவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். --செல்வா 15:36, 22 பெப்ரவரி 2010 (UTC)

நன்றி நவிலல்[தொகு]

மிகவும் பொறுப்பாக விக்கிப்பீடியர்கள் இந்த சேர்ந்தெடுப்பில் வாக்களித்தும் கருத்தளித்தும் பங்கு கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி. இத்துடன் இந்த சேர்ந்தெடுப்பு நிறைவு பெறுகின்றது. மேற்கொண்டு செயலில் தொடர வேண்டியதையும் அவை பற்றிய செய்திகளையும், கீழ்க்கண்ட இரண்டு இடங்களில் காணலாம்.

யாவருக்கும் என் நன்றி. குறிப்பாக இலங்கையில் இருந்து இதற்காகவே வந்து வாக்களித்த பயனர்கள் உமாபதி, கலாநிதி அவர்களுக்கு என் நன்றி.

--செல்வா 13:48, 25 பெப்ரவரி 2010 (UTC)

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் விக்கிப்பீடியா?[தொகு]

 • 2010 ஆம் ஆண்டு சூன் மாதம் 23 ஆம் நாளிலிருந்து 27 ஆம் நாள் வரை தமிழ்நாடு அரசின் சார்பில் கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் / கருத்தரங்கில் இடம் பெற்றிட தமிழ் விக்கிப்பீடியா குறித்த ஆய்வுக் கட்டுரை ஏதாவது நமது தமிழ் விக்கிப்பீடியர்களால் அனுப்பப்பட்டுள்ளதா? இதுபோல் இம்மாநாட்டுடன் இணைந்து நடத்தப்படும் ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த கட்டுரைகளை இடம்பெறச் செய்ய பயனர்கள் யாராவது கட்டுரைச் சுருக்கம் அனுப்பியுள்ளனரா? கடைசித் தேதி மார்ச்-15 வரை இருப்பதால் தமிழ் விக்கிப்பீடியா குறித்த கட்டுரைகள் இணைய மாநாட்டில் இடம்பெற பயனர்கள் கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பிடலாமே...?--Theni.M.Subramani 17:17, 20 பெப்ரவரி 2010 (UTC)
இதுவரை யாரும் அனுப்பியதாகத் தகவல் இல்லை. போன மாநாட்டில் ஒரு கட்டுரை வாசிக்க முயன்று மு.மயூரனுக்கு செருமனிக்கான நுழைவு அனுமதி கிடைக்கவில்லை. இம்முறை அவரது கட்டுரையையே விரிவாக்கி நம்மில் விருப்பம் உள்ள யாராவது கட்டுரை அனுப்பி வைக்கலாம். தேவையான தகவல், உதவிக்கு இங்கு கோரலாம்--ரவி 17:19, 20 பெப்ரவரி 2010 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா நூல் எழுதியுள்ள தேனி எம். சுப்பிரமணி இம்மாநாட்டிற்காக த.வி. பற்றிய கட்டுரையை எழுதப் பொருத்தமானவர்; மேலும் த.வி. பற்றிய பல பட்டறைகளை நடத்தியும் பல பத்திரிக்கைகளில் த.வி.யைப் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதியும் உள்ள ரவியின் துணையுடன் (அனைவரும் துணை புரியலாம் - எனக்கும் துணையளிக்க ஆவலே!) இக்கட்டுரையை எழுதுமாறு தேனி சுப்பிரமணியை நான் கேட்டுக் கொள்கிறேன். இது த.வி.யை அடுத்த கட்டத்திற்கு ஒரே பாய்ச்சலில் எடுத்துச் செல்ல உதவும். மிகக்குறுகிய காலமே உள்ளதால் (மார்ச் 15 கடைசி தேதி) விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய செயல்களில் இதுவும் ஒன்று. --பரிதிமதி 17:22, 21 பெப்ரவரி 2010 (UTC)
ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டிற்கு தமிழ் விக்கிப்பீடியா குறித்து பல தலைப்புகளிலான கட்டுரைகளை பல பயனர்கள் அனுப்புவது நல்லது. பல கட்டுரைகளில் ஒரு கட்டுரையாவது தேர்வு செய்யப்படலாம். முதலில் கட்டுரைச் சுருக்கம் ஒரு பக்கத்தில் இருந்தால் போதுமானது. கட்டுரை ஆறு பக்கத்தில் இருக்க வேண்டும். கட்டுரைச் சுருக்கம் அனுப்ப கடைசி நாள் மார்ச் 15. கட்டுரைச் சுருக்கம் தேர்வு செய்யப்பட்டால் கட்டுரை அனுப்ப கடைசிநாள் ஏப்ரல் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுரை எழுதத் திறனுடைய பயனர்கள் அனைவரும் பங்கேற்க முன் வர வேண்டுகிறேன். --Theni.M.Subramani 01:42, 22 பெப்ரவரி 2010 (UTC)
தேனி சுப்பிரமணி இக்கட்டுரையை எழுதப் பொருத்தமானவர் என்று பரிதிமதி சொன்னதை நானும் வழிமொழிகிறேன். தேனி சுப்பிரமணி இக்கட்டுரையை விக்கியிலேயேகூட எழுதலாம். பிற பயனர்கள் கருத்துத் தெரிவிக்கலாம். சுந்தர் கூட தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரையைத் தான் எழுதிய பிறகு இங்கே இட்டு கருத்தறிந்து பின்னர் சமர்ப்பித்தார். இது ஆய்வுக்கட்டுரையை ஒரு சில உடனாய்வாளரிடம் தந்து அவர்கள் பார்வையில் தென்படுவதைத் தேர்ந்து திருத்துவது போன்றது என்று கொள்ளலாம். ஆனால் வேறுபாடு என்னவென்றால் இது திறந்த வெளி - மற்றவர்களும் பார்க்கலாம். எழுதுங்கள் நாங்களும் ஏற்றவாறு உதவுகிறோம்.--செல்வா 03:50, 22 பெப்ரவரி 2010 (UTC)
உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்கு தமிழ் விக்கிப்பீடியா குறித்த என்னுடைய கட்டுரைச் சுருக்கம் இன்று அனுப்பப்பட்டுவிடும்.--Theni.M.Subramani 04:44, 22 பெப்ரவரி 2010 (UTC)
தேனி சுப்பிரமணி, கட்டுரையை அனுப்புவதற்க்கு முன்பு விக்கியில் பதிய முடியுமா? --Arafat 06:20, 22 பெப்ரவரி 2010 (UTC)
If possible??--Arafat 06:22, 22 பெப்ரவரி 2010 (UTC)
நான் தமிழ் விக்கிப்பீடியா எனும் தமிழ்க் கலைக்களஞ்சியம் எனும் தலைப்பில் பொதுவாகத்தான் கட்டுரை எழுத இருக்கிறேன். கட்டுரை இணைய மாநாட்டின் தேர்வுக்காக அனுப்பப்படுவதால் அதை முன்பே விக்கியில் பதிவு செய்வது அவ்வளவு சரியானதாக இருக்காது.--Theni.M.Subramani 07:37, 22 பெப்ரவரி 2010 (UTC)

பதிவேற்றும் பொழுது வரும் ஒளிப்படக் குறிப்புகள் பற்றிய கேள்வி[தொகு]

எந்த வார்ப்புருவை மாற்றினால் கீழ்வருவன போன்றவற்றை மாற்ற முடியும்?

மறைநீக்க நேரம் என்பதை திறப்பு நேரம் என்று மாற்ற வேண்டும். ஏனெனில் ச^ட்டர் இசுப்பீடு (shutter speed) என்பது எவ்வளவு நேரம் திறந்திருந்து பின் திரை (மறைப்புத் திரை) மூடுகின்றது என்பது. எனவே இது திறப்பு நேரம் (திறந்திருக்கும் நேரம்). அதேபோல வில்லை குவியத் தொலைவு என்று மாற்றலாம் என விழைகிறேன். எஃப் எண் என்பதனியும் குவி எண் (எஃப் எண்) என்று மாற்ற விழைகிறேன். கமெரா என்பதனையும் காமிரா (காமி என்பது காட்டு என்பதுபோல உள்ளதால் வேற்றுமொழிச்சொல்லானாலும் ஏதோ நமக்கு ஒரு சுட்டுதருமாறு இருக்கும். camera என்பது அறை அவ்வளவுதான். பொருளில் இருந்து வரும் ஒளியைப் பிடித்து வைத்துப் பதிவு செய்யும் ஒள்ளறை (ஒள்ளறைப் பெட்டி). பொருளை ஒளிப்படமாக்குவதால் அல்லது படம் "எடுப்பதால்" படமி என்றும் சொல்லலாம். ஒளிப்படக்கருவி என்பது சற்று நீளமாக உள்ளது (தவறில்லை). காமிரா என்று இருந்தாலோ, கமெரா என்று இருந்தாலோ இருக்கட்டும். ஆனால் வேறு பொருத்தமான சொல் இருந்தால் கூடவே பதிந்தும் வைக்கலாம்தானே. ஒள்ளறை (காமிரா) அல்லது படமி (காமிரா), என்பதுபோல ஏதேனும் ஒன்று இருக்கட்டுமே.

கமெரா தயாரிப்பாளர் NIKON CORPORATION
கமெரா வகை NIKON D50
மறைநீக்க நேரம் 1/250 செக்கன் (0.004)
எஃப் எண் f/8
தரவு உருவாக்க நாள் நேரம் 16:11, 1 ஜனவரி 2010
வில்லை குவியத்தூரம் 18 mm
--செல்வா 21:39, 22 பெப்ரவரி 2010 (UTC)

Exif என்று தொடங்கும் மீடியாவிக்கிப் பெயர்வெளி செய்திகளை மாற்ற வேண்டும். நம் தளத்தில் அவை இல்லை. அதனால் அவை மீடியாவிக்கி ஒருங்கிணைப்புத் தளமான http://translatewiki.net -ல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கக் கூடும். http://translatewiki.net/w/i.php?title=Special%3ASearch&search=exif&go=Go - இங்குள்ள செய்திகளில் மொழிக்குறியை ta என்று மாற்றி (எ.கா: http://translatewiki.net/wiki/MediaWiki:Exif-gpsstatus-a/ta ) வரும் பக்கங்களைத் தொகுக்க வேண்டும். பின்னர் செரார்டை அணுகினால் அவர் நம் தளத்தில் இற்றைப்படுத்த ஏது செய்வார். -- சுந்தர் \பேச்சு 05:02, 23 பெப்ரவரி 2010 (UTC)
மிக்க நன்றி சுந்தர். --செல்வா 14:52, 23 பெப்ரவரி 2010 (UTC)

சீராக்கப் பணிகள்[தொகு]

பலரும் தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்க்கும் நேரமாக இக்கால கட்டம் உள்ளது. கூகுள் மொழியாக்கங்கள் பலவும் நன்றாக உள்ளன. எனினும் பலவகையான திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளன. சில தலைப்புகள் நம் முதல்நிலை தேவைக்கு ஏற்றவை அல்ல. எனினும் வருவதை வேண்டாம் என்பது மட்டுமல்லாமல் இருக்க்கட்டுமே என்றும் தோன்றுகின்றது. இப்படியான முதல்நிலைத் தேவை இல்லாதவை சுருக்கமாக இருந்தாலாவது பொருட்படுத்தாமல் இருக்கலாம். இவை நெடிய கட்டுரைகளாக இருப்பது உறுத்துகின்றது. எப்படியாயினும் கூகுள் கட்டுரைகளின் முதல் வரியில் {{கூகுள் தமிழாக்கக் கட்டுரை}} என்று வார்ப்புரு இட்டு உதவுங்கள். முதல் 2-3 பக்கங்களாவது உரைத் திருத்தம் செய்து உதவுங்கள். சில சிவப்பு இணைப்புகளை இப்போதைக்கு நீக்குங்கள் (எங்கோ எதோ ஒரு பள்ளியில் ஒரு நடிகன் படித்திருந்தால் அதற்கெல்லாம் ஓர் உள்ளிணைப்புத் தேவையில்லை (இப்போதைக்காவது). சீர்தரம் பாதுகாக்க வேண்டுகிறேன்--செல்வா 14:36, 25 பெப்ரவரி 2010 (UTC)

அதே போல் கூகுள் மொழிபெயர்பாளர்களே, படங்களை இணைத்தால் நல்லது. படம் இல்லாத சிகப்பு இணைப்புகள் உறுத்துகிறது.கூகுள் மொழிபெயர்பாளர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் அவர்களுக்கு வேறு மொழி விக்கியில் இருந்து விக்கி காம்ன்சுக்கு படம் சேர்ப்பது எப்படி என்று சொல்லிதந்தால் நன்று. மேலும் முடிந்தவரை ஆங்கில விக்கியின் வார்ப்புருவையும் இடாமல் இருந்தால் நன்று (எடுத்துக்காட்டு: வார்ப்புரு:IPA-en, வார்ப்புரு:Infobox Model மற்றும் பல) இதை உடனடியாக செய்யவேண்டும் இல்லைமெனில் பின்னாளில் இதுவே ஒரு பெரிய வேலையாகிவிடும்.--கார்த்திக் 16:05, 25 பெப்ரவரி 2010 (UTC)

திருத்தக் கருத்து[தொகு]

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய விக்கிபீடியா நிறுவனத்தாருக்கும், சக விக்கியர்களுக்கும் அன்பு வணக்கம்! ' என்சைக்ளோபீடியா ' என்று எழுதும்பொழுது ' ளோ ' வுக்கும் ' பீ ' க்கும் நடுவில் ' ப் ' எழுதுகிறோமா, இல்லைதானே? பிறகு, ' விக்கிபீடியா' என்று எழுதும்பொழுது மட்டும் ' கி ' க்கும் ' பீ ' க்கும் நடுவில் ' ப் ' எப்படி வரும்? எனவே ' விக்கிப்பீடியா ' என்பதிலுள்ள ப்-ஐ அருள் கூர்ந்து நீக்கவும்! −முன்நிற்கும் கருத்து இ.பு.ஞானப்பிரகாசன் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஞானப்பிரகாசன், கருத்துக்கு நன்றி. encyclopaedia என்பதைத் தமிழில் ஒலிபெயர்த்தால் என்சைக்குளோப்பீடியா எனலாம். வல்லின எழுத்துகள் சொல்லின் முதலிலும், தம் ஒற்றை அடுத்து வரும்போதும் மட்டுமே வலிந்து ஒலிக்கும். பகரம் இந்த இடத்தில் வலிந்து ஒலிக்க வேண்டுமென்பதால் ஒற்று இரட்டித்தல் வேண்டும். உங்கள் பெயரிலேயே பகர ஒற்று வந்துள்ளதையும் நோக்கவும். :) -- சுந்தர் \பேச்சு 05:05, 3 மார்ச் 2010 (UTC)
பகர ஒற்று (ப்) இல்லாமல் என்சைக்ளோபீடியா என்று எழுதினால் encycloBeediyaa என்று மெல்லொலி B ஒலிப்பு வர வேண்டும் இடையே. படம் என்னும் சொல்லில் ட என்பது மெல்லொலி. பட்டம் என்பதில் வரும் ட வல்லொலி. இதேபோல கபடம் என்பதில் வரும் பகரமும் டகரமும் மெல்லொலி (kabadam not kapaTam). தமிழில் வல்லொலி இரண்டே இரண்டு இடங்களில்தான் வலித்து ஒலிக்கும்: 1) சொல்லின் முதல் எழுத்தாக வருதல், 2)வல்லின ஒற்று (புள்ளி வைத்த வல்லின எழுத்து க்,ச்,ட்,த்,ப், ற்) எழுத்தை அடுத்து வருதல். ஆகிய இரண்டே இரண்டு இடங்கள். எளிய விதி. விண்டேன் அல்லது விடேன் <-> விட்டேன் (டே என்பது முதலிரு சொற்களிலும் மெலிந்தும் மூன்றாவது சொல்லில் வலித்தும் ஒலிக்கும்) ஊடகங்கள் அறியாமலோ, வேண்டுமென்றேயோ செய்கின்றன. தமிழில் எழுத்தொலிப்பானது எழுத்துச் சூழலைப் பொருத்து வருவது. வல்லின எழுத்துகளுக்கு ஓரெழுத்துக்கு எல்லா இடத்திலும் ஒரே ஒலிப்பு அல்ல. ஆனால் இவை சீராக முறைப்படி ஒழுக்கத்துடன் (ஒலிப்பொழுக்கத்துடன்) வருவது. வேற்று மொழிச்சொற்களை நாம் ஒலிபெயர்க்கிறோம். எழுத்துப் பெயர்ப்பதில்லை. Physics என்பதை ப்ஹ்ய்ஸ்இக்ஸ் என்பதில்லை. ஆங்கிலத்தில் சில உயிரொலிகள் நீண்டு ஒலிக்கும். அவர்களிடம் குறில் நெடில் என்பதற்குத் தனி எழுத்துகள் இல்லை. எனவே ஒலிப்புக்கு ஏற்றார்போல தமிழில் நாம் எழுத்துகள் பெய்து கூடியமட்டிலும் நெருக்கமான ஒலிப்பைப் பெறுகிறோம். --செல்வா 18:54, 4 மார்ச் 2010 (UTC)