விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு22

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிலப்படங்கள்[தொகு]

இந்திய மாவட்டங்கள் தொடர்பான கட்டுரைகளில் ஆங்கிலம், மலையாளம் போன்ற மொழிகளில் அந்தந்த மாநிலங்களின் நிலப்படம் காணப்பட (ml:കണ്ണൂര്‍ (ജില്ല)), தமிழில் முழு இந்தியாவினதும் நிலப்படம் உள்ளது (கண்ணூர் மாவட்டம்). இதை எப்படி மாற்றுவது? மயூரநாதன் 16:17, 12 ஏப்ரல் 2009 (UTC)

தமிழாக்கம் (IMF)[தொகு]

International Monetary Fund (IMF) ன் தமிழாக்கம் என்ன? பன்னாட்டு வர்த்தக வங்கி? பன்னாட்டு நாணய நிதியம் ? --குறும்பன் 19:26, 1 மே 2009 (UTC)

tropical - வெப்பமண்டலம், subtropical - துணை வெப்பமண்டலம்? இது சரியான தமிழாக்கமா? --குறும்பன் 19:55, 1 மே 2009 (UTC)

IMF என்பதற்கு பன்னாட்டு காசு வைப்பகம் அல்லது பன்னாட்டு காசு நடுவகம் எனலாம்.subtropical என்பதற்கு கீழ்வெப்பமண்டலம் அல்லது தணிவெப்பமண்டலம் எனலாம்.--செல்வா 20:37, 1 மே 2009 (UTC)

முக்கிய பகுப்புகளின் தலைப்புக் கட்டுரைகள், முதல் 36, ஒரு கணிப்பீடு[தொகு]


எனது மதிப்பீட்டு முறை: (தகவல் அளவு - 1, முழுமை - 1, பக்க வடிவமைப்பு-1, மேற்கோள்கள் - 1, படங்கள்/வார்ப்புருக்கள்-1)--Natkeeran 03:50, 2 மே 2009 (UTC)

நற்கீரன், தகவல் அளவு, முழுமை, பக்க வடிவமைப்பு, மேற்கோள்கள், படங்கள்/வார்ப்புருக்கள் என்பதோடு நடை என்பதனையும் சேர்த்து 6 தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்புக்கும் 5 மதிப்பெண்கள் தந்து 30 மதிப்பெண்களில் எவ்வளவு பெறுகின்றது என்று குறிக்கலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு புள்ளி தருவது போதிய தகவல் நமக்கு தராது. இவ்வளவு விரிவாக ஆயிரக்கணக்கான கட்ட்டுரைகளுக்குச் செய்வது சற்று கடினம். என்றாலும் இது போல தரம் கணிப்பது உண்மையில் தேவை. ஆளுக்கு ஒரு 200 கட்டுரைகள் பொறுப்பெடுத்துக் கொண்டால் 10 பேர் 2000 கட்டுரைகளைக் கணிக்க முடியும். --செல்வா 02:35, 8 மே 2009 (UTC)


நல்ல கருத்து. விக்கியாக்கம் (உள் இணைப்பு, இடையிணைப்பு, வெளி இணைப்பு) என்பதையும் சேக்கலாம் என்று தோன்றுகிறது. விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் நியமனம் பக்கத்தையும் பாக்கவும். மேலும், துல்லியமாக ஒரு புறவய புள்ளி அட்டை (score card) தயாரித்தால் நன்றாக இருக்கும். 30 என்பதை விட 100 க்கு போடலாம் என்று தோன்றுகிறது. --Natkeeran 02:42, 8 மே 2009 (UTC)

1837 தமிழ்/இந்திய சமூக நபர்கள் படங்கள், பொது ??[தொகு]

பல படங்கள் தமிழ் குறிப்பிடன் உள்ளன. இவை 1837 இல் ஆக்கப்பட்டன என குறிக்கப்பட்டுள்ளது. எனவே இவை பொதுப் பரப்பில் என்று கருதி இங்கு பதிவேற்றலாமா? --Natkeeran 20:00, 2 மே 2009 (UTC)

ஆம் பொதுவில் உள்ளதாக ஐக்கிய அமெரிக்காவில் கருதப்படும் என நினைக்கிறேன். 150 ஆண்டுகள் கடந்து விட்டனவே. என்றாலும் உறுதி செய்துகொள்வது நல்லது. --செல்வா 21:38, 4 மே 2009 (UTC)

தரம் கணிக்க வேண்டும்[தொகு]

கட்டுரைகளின் தரங்களை விரைவில் கணித்தல் வேண்டும். நீண்ட கட்டுரைகளாக இருக்க வேண்டும் என்றில்லை. நல்ல தகவல்களுடன் நன்றாக எழுதப் பட்டுள்ள கட்டுரைகள் யாவை. அவற்றின் தரம் என்ன (தகவல், முக்கியத்துவம், படங்கள், மொழிநடை, சிவப்பு இணைப்புகள் கூடவா போன்றவை)? என்று முடிவு செய்தல் தேவை. 18,000 கட்டுரைகள் இருக்கும் விக்கியில் சிறப்புக் கட்டுரை தரம் பெற்றவை எத்தனை, மிக நல்ல கட்டுரைகள் எத்தனை, நல்ல கட்டுரைகள் எத்தனை முதலியவற்றை தேர்வு செய்தல் வேண்டும். 3,000-5,000 கட்டுரைகள் தேர்ந்தாலும் நலமே. சில கட்டுரைகள் ஒரு பக்கம் மட்டுமே இருக்கலாம், ஆனாலும் அவை கலைக்களஞ்சிய நடையில் அத்தலைப்பில் ஓரளவுக்கு முழுமையாக உள்ளனவா என்று கணித்தல் வேண்டும். ஒவ்வொன்றையும் தேர்வு செய்வதற்கு மாறாக இப்போதைக்கு தகுதி கணிக்கத்தக்கது என்னும் ஒரு முத்திரை குத்தி ஒரு பகுப்பிலோ 5-6 பகுப்புகளிலோ தொகுத்து வரலாம். பின்னர் முறைப்படி தேர்வு செய்வோம்.--செல்வா 21:38, 4 மே 2009 (UTC)

இப்படி தரம் கணிக்கப்பட வேண்டிய கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில் முத்திரை குத்தி நினனவில் கொள்ள {{தக}} என்னும் வார்ப்புரு தற்காலிகப் பயன்பாட்டுக்காக ஆக்கியுள்ளேன். விரைவில் சிறப்பு, மிகநல்ல, நல்ல, கட்டுரைகளை தேர்வு செய்தல் வேண்டும். நாம் 20,000 காட்டுரைகள் எய்தும் பொழுது ஏத்தனை கட்டுரைகள் எந்த நிலையில் உள்ளன என்னும் கணக்கும் பார்வையும் வேண்டும். முடிச்சுகள் என்றால் அவற்றில் ஒரு 30-50 கட்டுரைகள் (குறைந்தது நல்ல கட்டுரையாக), என்றால் அவற்றில் ஒரு 30-50, பறவைகள் என்றால் அவற்றில் ஒரு 80-100, தனிமங்கள், வேதிப்பொருட்கள், அலகுகள், எலும்புகள், நாடுகள், மீன்கள், இராகங்கள், கணிதவியலர்... என்று ஒரு 100 தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் சராசரியாக 30-50 கட்டுரைகள் குறைந்தது நல்ல கட்டுரையாக இருந்தால், 3,000-5,000 கட்டுரைகள் நல்ல கட்டுரைகளாக இருக்கக்கூடும். என் நினைப்பில் மொத்த கட்டுரைகளில் 1/3 கட்டுரைகள் நல்ல கட்டுரைகளாக இருக்க முதல் நிலையில் முயலவேண்டும். அதாவது ஏறத்தாழ 20,000 இல் 7,000 கட்டுரைகள். குறுங்கட்டுரைகள் கூட நிறைவாக அழகாக பயனுடைய பதிவுகளாக இருக்கலாம். முதலில் நல்ல கட்டுரையாக உருமாறக்கூடிய கட்டுரைகளை தரம் கணிக்க வேண்டிய கட்டுரைகளை அடையாளம் காணுவோம். --செல்வா 18:59, 5 மே 2009 (UTC)

கூகுள் குழு சந்தவசந்தத்தில் பாராட்டு[தொகு]

அண்மையில் சூரியன், இந்திய காண்டாமிருகம் ஆகிய இரு கட்டுரைகளையும்க்குறிப்பிட்டு சந்தவசந்தம் என்னும் குழுவில் எழுதியிருந்தேன். கட்டுரைகளின் தொடுப்பைத் தரும் பொழுது tinyurl.com என்னும் நிறுவனம் தருவதைப் போல் சுருக்காமல் தந்திருந்தேன். பின்னர் யாரும் எளிதாகக் காணுமாறு தந்தவுடன், இக் கட்டுரைகளைப் பார்த்த திரு சீனிவாசன் மிகவும் பாராட்டி எழுதியுள்ளார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். தானியேல் பாண்டியனுக்கும், கார்த்திக்குக்கும் நம் எல்லோருடைய பாராட்டுகள்:

இங்கே பார்க்கவும்

May 5, 2009
Dear Selva, I don't have words to thank you for this kindness shown to me. 
Just now I could open the website and see the beautiful writeup on the Sun 
in Tamil with colourful pictures. I will take more time to go through the 
entire article. Now, the Tamil letters are coming all right.It is a great 
achievement, a land mark in Tamil literary field. 
Regards, 
Srinivasan 

--செல்வா 19:55, 5 மே 2009 (UTC)

இரண்டு கட்டுரைகளும் மிகவும் சிறப்பாக உள்ளன. தானியேல் பாண்டியன், கார்த்திக் இருவரும் பாராட்டுக்கு உரியவர்கள். இத்தகைய கட்டுரைகளைத் தமிழில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. மயூரநாதன் 20:09, 5 மே 2009 (UTC)

தானியல் பாண்டியன், கார்த்திக் இருவருக்கும் பாராட்டுகள். இத்தகைய நல்ல கட்டுரைகள் இருப்பதை இணையத் தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லும் உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி, செல்வா. -- சுந்தர் \பேச்சு 02:54, 8 மே 2009 (UTC)
நன்றி சுந்தர். --செல்வா 03:43, 8 மே 2009 (UTC)

பரிந்துரை 1: கட்டுரைத் தர அளவீடு புள்ளி அட்டை[தொகு]

 • தகவல் அளவு (ஆழம்) - கட்டுரை போதிய அளவு அதன் தலைப்பைப் பற்றிய தகவல் கொண்டுள்ளதா?
 • முழுமை (அகலம்) - கட்டுரை அதன் தலைப்பைப் பற்றி முழுமையாக ஆய்துள்ளதா?
 • மேற்கோள்கள் - நம்பத்தகுந்த, பொருந்திய, போதுமான மேற்கோள்கள் கொண்டுள்ளதா?
 • தமிழ் நடை - நடை படர்க்கையில் கலைக்களஞ்சிய நடையில் அமைந்துள்ளதா?
 • தமிழாக்கம் - வார்ப்புரு, விளக்கப் படங்கள்
 • நடுநிலைமை - கட்டுரை எல்லா தகுந்த பார்வைகளுக்கும், விமர்சனங்களுக்கும் இடம் தந்துள்ளதா?
 • பக்க வடிவமைப்பு - தலையங்கள் சரியாக இடப்பட்டும், பக்க தோற்றம் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டும் உள்ளதா?
 • படங்கள்/வார்ப்புருக்கள்/அட்டவணைகள்/பட்டியல்கள் - தகுந்தவாறு சேக்கப்பட்டுள்ளனவா?
 • இணைப்புகள் (உள் இணைப்புகள், இடையிணைப்புகள், வெளி இணைப்புகள்) - சேக்கப்பட்டனவா?
 • கருத்து மோதல்கள், வேறுபாடுகள் உண்டா?--Natkeeran 03:07, 8 மே 2009 (UTC)

--Natkeeran 03:12, 8 மே 2009 (UTC)

வேண்டுகோள்[தொகு]

செல்வம் அவர்கள் விக்கி நடைமுறைகளுக்குப் புதியவர். இதனால், நாம் வழமையாகச் செய்யக்கூடிய நியாயமான சில சிறு மாறுதல்கள் கூட அவரால் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடியது வருத்தம் அளிக்கிறது. இந்தக் குழப்பத்துக்கு நானும் ஏதோ ஒரு வகையில் காரணம் என்றால், எனக்காவும் எல்லார் சார்பாகவும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

புதிதாக வந்திருக்கும் பங்களிப்பாளர்களில் செல்வம் அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர். தொடர்ந்து பல நல்ல தகவல் செறிவுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார். இந்தக் குழப்பத்தால் அவரது பங்களிப்பு தடைபடுவது குறித்து வருந்துகிறேன். அவருடன் இருக்கும் சில கருத்து வேறுபாடுகள், அவர் கட்டுரையில் செய்யப்படக்கூடிய சில சிறிய மேம்பாடுகளை விட அவர் தொடர்ந்து முழு ஈடுபாட்டுடன் பங்களிக்க வேண்டியது முக்கியம். தமிழ் விக்கி வளரவேண்டும் என்று அவரைப் போல் கனவு காண்பவர்கள் பலரை நாம் பெற வேண்டும்.

விக்கி நடைமுறைகளைப் புரிந்து கொள்ளும் வரையிலும், மற்றவர்கள் மேல் நன்னம்பிக்கை வரும் வரையிலும் அனைத்துப் பங்களிப்பாளர்களும் அவருக்கு உறுதுணையாக இருப்போம். விமர்சனங்கள், திருத்தங்களைத் தவிர்ப்போம். இது என் வேண்டுகோள். புதிய பங்களிப்பாளர்கள் விக்கியிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள், விக்கியை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்று உணர நமக்கு இது ஒரு வாய்ப்பு.

செல்வம் தமது வருத்தத்தை விடுத்து முன் போல் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி--ரவி 13:10, 12 மே 2009 (UTC)

கட்டுரை உரிமை[தொகு]

விக்கிப்பீடியா சட்டம் படி எல்லா கட்டுரைகளும் GNU FDL அடிப்படை பொதுச் சொத்துகள் தாம். ஆனால், ஒரு பங்களிப்பாளர் கட்டுரையின் பெரும்பகுதியைக் கவனம், உழைப்பு செலுத்தி எழுதும் போது, அக்கட்டுரையின் மேல் அவர் உணரக்கூடிய தார்மிக உரிமை புரிந்து கொள்ளத்தக்கது. இதனால், ஒருவர் எழுதும் பெரும்பாலான கட்டுரைகளில், அவருக்கு உவப்பில்லாத மாற்றங்களைப் பிற பங்களிப்பாளர்கள் செய்யும் போது வரும் வருத்தமும் புரிந்து கொள்ளத்தக்கது. கண்டிப்பாக இந்தப் பிரச்சினை பிற பெரிய மொழி விக்கிப்பீடியாக்களில் வந்திருக்கும். இதை எப்படி எதிர் கொள்கிறார்கள்? தமிழர் பழக்கவழக்கங்கள், பண்பாடு காரணமாக பொதுவான விக்கிப்பீடியா பழக்க வழக்கங்களில் இருந்து வேறுபட்டும் நாம் இதை அணுக வேண்டி இருக்கும்.--ரவி 16:34, 14 மே 2009 (UTC)

உயர்ந்த மேற்கோள்[தொகு]

அரசு ஆவணம், துறை சார் நூல்கள், பொது வழக்குகள், இலக்கிய வழக்குகள்.. இப்படி பல மூலங்களில் இருந்து பெறப்படும் குறிப்புகளில், எதனை உயர்ந்த, இறுதியான மேற்கோளாக கொள்வது? கண்டிப்பாக, இது ஒவ்வொரு கட்டுரைக்கும், அந்தந்த இடம் கருதி செய்யப்பட வேண்டியது. ஆனால், இது போன்ற பிரச்சினைகளை பிற பெரிய விக்கிப்பீடியாக்களிலும் பொதுவாக கல்வித் துறைகளிலும் எப்படி எதிர் கொள்கிறார்கள்?--ரவி 16:36, 14 மே 2009 (UTC)

இது துறைக்குத்துறை, இடத்துக்கு இடம் மாறுபடக்கூடியது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆங்கில விக்கியில் இது தொடர்பான கொள்கைப் பக்கத்தை இங்கு காணலாம். அதை நம் தமிழ்ச்சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். -- சுந்தர் \பேச்சு 07:52, 20 மே 2009 (UTC)

இரட்டை வழக்குகள்[தொகு]

சிங்கவால் குரங்கு, சோலை மந்தி ஆகிய இரண்டு பெயர்களும் தகுந்த இடங்களில் வழக்குகளில் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை முறையான பெயராக கொண்டு முதன்மை கட்டுரை ஆக்கலாம். ஆனால், அதற்கென இன்னொரு வழக்கு வரும் எல்லா இடத்திலும் நீக்க வேண்டுமா? தேடு பொறி காரணங்களுக்காக இரு வழக்குகளையும் சரி சமமாக பிற கட்டுரைகளில் பயன்படுத்தலாமா? இல்லை எந்த வழக்கைப் பயன்படுத்தினாலும், உள்ளிணைப்பை மட்டும் சரியான முதன்மை தலைப்புக்கு இட்டால் மட்டும் போதுமா? இது போன்ற பிரச்சினை இன்னும் பல சொற்கள், கட்டுரைகளுக்கும் வரலாம். எனவே, இது குறித்த ஒரு வழிகாட்டல் இருப்பது நன்று.--ரவி 16:42, 14 மே 2009 (UTC)

இரண்டு பெயர்கள் வழக்கில் இருக்கும்போது ஏதாவது ஒரு பெயரில் முதன்மைக் கட்டுரை இருக்கலாம். அக்கட்டுரையிலேயே இரண்டு பெயர்களும் குறிப்பிடப்படல் வெண்டும். ஆனால், பிற கட்டுரைகளில் மாற்றுப் பெயர் இருந்தால் பரவாயில்லை. வழிமாற்றுப் பக்கம் உருவாக்குவதே நல்லது. எல்லா இடங்களிலும் ஒரே பெயரே இருக்கவேண்டும் என்பது சரியல்ல என்பது எனது கருத்து. மயூரநாதன் 18:28, 14 மே 2009 (UTC)

உரையாடல் பண்பாடு[தொகு]

பேச்சுப் பக்கங்களில் உரையாடும் பொழுது, மாற்றுக் கருத்து, அதற்கான சான்றுகோள் முதலியன சுட்டும்பொழுது, அருள்கூர்ந்து "இந்தத் தளத்தில் இப்படிக் கூறுகிறார்கள். இதனைப் பார்க்க வேண்டுகிறேன். இப்படி எழுதுவது நல்லதாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்பது போல் கூறுங்கள். அது வளர்முக உரையாடலுக்கு உகந்தது. நையாண்டியாகவோ,, சாடுமுகமாகவோ கூறுவதை இயன்றவாறு குறைத்தோ, அறவே விடுத்தோ எழுதுவது நல்லது. அண்மையில் ஒருவர் கூறியவாறு தவறு தவறு என்று என்று எல்லவாற்றையும் தவறாக கூறும் அகராதியிருப்பவர்கள் என்னும் வகையான சொல்லாடல்கள் இங்கு விக்கியில் நல்லதல்ல. தவிர்க்க வேண்டும் என யாவரையும் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். நான் இப்படிச் செய்தாலும் அருள்கூர்ந்து தவறாது சுட்டிக்காட்டுங்கள், திருத்திக் கொள்கிறேன். கருத்து வேறுபாடுகள் இருப்பது தவறே இல்லை. அது ஒரு வகையில் கருத்து வளர்ச்சிக்கும் நல்லதே. ஆனால் தேவையானவற்றை மட்டும், அதுவும் கூடிய மட்டிலும் கருத்தை மட்டுமே மையமாக வைத்து கூறுவதும், கூடிய மட்டிலும் இணக்க, இசைவு உணர்வு இருக்குமாறும் ஏற்படுமாறும் உரையாடுவதும் நல்லது. விக்கியில் நல்ல உரையாடல் பண்பாட்டை நாம் கைக்கொள்வது நல்லது. நன்றி. --செல்வா 02:54, 17 மே 2009 (UTC)

நான் இதற்கு முழுமையாக உடன் படுகின்றேன். --செல்வம் தமிழ் 05:45, 20 மே 2009 (UTC)

நன்றி செல்வம் தமிழ். --செல்வா 15:27, 20 மே 2009 (UTC)

The Hindu நாளிதழில் தமிழ் விக்கி குறித்த கட்டுரை[தொகு]

The Hindu நாளிதழில் தமிழ் விக்கி குறித்த கட்டுரை. காலை முதல் பலரும் அழைத்து நமது திட்டத்துக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். இப்படி ஒரு திட்டம் இருப்பதையே இன்று தான் அறிந்து கொண்டதாக பலரும் தெரிவித்தார்கள். ஊடகங்கள் நாம் இன்னும் கூடிய பரப்புரையை மேற்கொள்ள வேண்டிய தேவையை உணர்த்துகிறது. ஊடகப் பரப்புரைகளில் ஒரு உத்தியை மேற்கொள்ளலாம்: வெறுமனே ஒரு கட்டுரையை வெளியிடுவதை விட, ஏதாவது ஒரு பயிற்சி நிகழ்வை ஏற்பாடு செய்து விட்டு, அதனை முன்னிட்டு கட்டுரை, பரப்புரையை வெளியிட்டால் ஆர்வமுள்ளவர்கள் நிகழ்வுகளுக்கு வந்து தெளிவு பெற முடியும்.

பங்களிக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு எளிய வழிகாட்டுக் குறிப்புகளையும் தந்துள்ளேன். தமிழில் தட்டச்சு செய்து பழக வேண்டுமா என்பதே பலரின் தயக்கமாக உள்ளது :(

ரவி 03:49, 21 மே 2009 (UTC)

பார்த்தேன் ரவி. இப்படி இந்து நாளிதழில் செய்தி வந்தது நல்லதே. ஆனால் மயூரநாதன் பெயரையும் சிறீதரன் கனகு பெயரையும் குறிப்பிடாமல் விட்டது சரியில்லை என்று நினைக்கிறேன். இப்படி செய்தி பதிவாகி இருப்பதே ஒருவகையான வரலாற்றுப் பதிவு என்பதால் இதனைக் குறிப்பிடுகின்றேன். நற்கீரன் பெயர் இருந்ததைப் பார்த்து மகிழ்ந்தேன். மயூரநாதனும் சிறீதரன் கனகும் நாள்தோறும் கட்டுரைகள் எழுதியிருக்கவில்லை என்றால் தமிழ் விக்கிப்பீடியாவின் நிலைமிகவும் வேறாக இருந்திருக்கும். என் கருத்தை இங்கும், இங்கும் எழுதியுள்ளேன். --செல்வா 04:21, 21 மே 2009 (UTC)

செல்வா, முக்கிய பங்களிப்பாளர்கள் பலரின் பெயர் விடுபட்டிருப்பதற்கு வருந்துகிறேன். சுந்தர் சில விவரங்களைத் தொகுத்து அளித்து இருந்தார். நானும், என்னிடம் இருந்த சிவா, அருநாடன், சத்தியா, சந்தோசு, கார்த்திக் பாலா, balaji ஆகியோரின் தொலைப்பேசி எண் விவரங்களை அளித்து இருந்தேன். எனினும், இக்கட்டுரை கிருபா மூலம் அவரது ஊடகத் தொடர்புகளின் மூலமாக வெளி வந்ததால், கட்டுரையின் உள்ளடக்கம், குறிப்பிடப்பட்ட பெயர்கள் குறித்து கட்டுரை வெளியாகும் வரை எமக்கு எந்தத் தகவலும் இல்லை. இந்த நடைமுறைச் சிக்கலைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். வருங்கால ஊடகத் தொடர்புகளில் இயன்ற அளவு அனைவரின் பெயரும் வெளி வர உறுதி செய்வோம்.--ரவி 04:44, 21 மே 2009 (UTC)

அனைவரின் பெயரும் (அல்லது 20-30 பேர்களுடைய பெயர்கள்) வரவேண்டும் என்பதில்லை. அயராது உழைத்த மயூரநாதன், சிறீதரன் கனகு, நற்கீரன் ஆகிய மூவர் பெயரும் கட்டாயம் இருக்க வேண்டியது என நினைக்கிறேன். ஊடகத்தில் செய்தி இருப்பது, கருத்து பரவுவது இதுவே முதன்மையானது. மயூரநாதனோ, சிறீதரன் கனகோ வருத்தப்படாமல் இருக்கலாம் அல்லது இதை ஒரு பெரிய பொருளாக பொருட்படுத்தாமலும் இருக்கலாம். நான் எழுதியதன் கருத்து, கூடியமட்டிலும் உண்மையான, சரியான கருத்துப் பகிர்வாக இருக்க வேண்டும். --செல்வா 12:17, 21 மே 2009 (UTC)

அடுத்த சென்னை தமிழ் விக்கி பட்டறை[தொகு]

அடுத்த சென்னை தமிழ் விக்கி பட்டறை நடத்துவதற்கான ஆர்வத்தை கிருபா தெரிவித்து உள்ளார். முந்தைய பட்டறை நடந்த அவரது அலுவலகத்தை விட சற்று பெரிய இடத்திலும் ஏற்பாடு செய்யலாம் என்றிருக்கிறார். 30, 31 மே அல்லது அதற்கு அடுத்தடுத்த வார இறுதிகளில் ஏற்பாடு செய்ய இயலும். இந்தப் பட்டறையில் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க இயலும் என இருவராவது உறுதிப்படுத்தினால் நிகழ்வை உறுதி செய்யலாம். இந்த முறை என்னால் கலந்து கொள்ள இயலாமல் இருக்கிறது. --ரவி 03:52, 21 மே 2009 (UTC)

நேற்றைய செய்தியை அடுத்து கிட்டத்தட்ட 10 பேர் பட்டறையில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து தொலைபேசியில் பேசினார்கள். பட்டறை குறித்த பொது அறிவிப்பு வெளியிட்டால் இன்னும் பலர் வரலாம். பயிற்சி அளிக்க விரும்புபவர்கள் தங்களுக்கு இயன்ற நாளை குறிப்பிட்டால், பட்டறைக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். தங்களால் இயன்ற ஏதாவது இரண்டு ஞாயிறுகளைக் குறிப்பிடுங்கள். நன்றி--ரவி 06:14, 22 மே 2009 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் மூத்தவர்களின் பங்களிப்பு[தொகு]

அறிவு, அனுபவம் கூடி ஓய்வு நேரமும் கிடைக்கப்பெற்றுள்ள மூத்தவர்கள் தமிழ் விக்கிக்கு தரக்கூடிய பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இவர்களுக்கு இருக்க கூடிய மிகப் பெரிய தடை, வேகமாக தமிழில் தட்டச்சு செய்ய இயலாததே. ஏற்கனவே நாம் நன்கு அறிந்து பேரா. வி. கே, வலைப்பதிவர் இராம. கி போன்றோர் இதனைத் தங்கள் பங்களிப்புத் தடையாக உணர்ந்துள்ளனர். இன்று காலை என்னை அழைத்துப் பேசிய 72 வயது பேராசிரியர் ஒருவரும் இதனைக் குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினையை நாம் எப்படி அணுகலாம்? இவர்களுக்கு எப்படி உதவலாம்?--ரவி 03:55, 21 மே 2009 (UTC)

எதற்காக வேகமாக தட்டச்சு செய்தல் வேண்டும்? மெள்ளவே அடிக்கலாமே. முதலில் 5-10 வரிக் குறுங்கட்டுரைகள் எழுத Higopi போன்றவை போதும். பின்னர் கீமேன் முதலியன இறக்குவித்து செய்யலாம். அரைப் பக்க விளக்கத்துடன் யாரும் பயன்படுத்தத் தொடங்கலாமே. ஆனால் தெரிந்தவர்கள் பக்கத்தில் இருந்து முதலில் பழக்கி விட வேண்டும். படிப்படியாக என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி விளைவுகள் மின்திரையில் எப்படி இருக்கும் என்று மின்திரைப் படங்களுடன் காட்டினால் உதவியாக இருக்கும்--செல்வா 04:30, 21 மே 2009 (UTC)

இல்லை செல்வா, இது ஒரு முக்கியப் பிரச்சினை. வயது முதிர்ந்து, உடல் நலம் தளர்ந்தவர்கள் ஒற்றை விரலைப் பயன்படுத்தித் தொடர்ந்து எழுதுவர் என்று எதிர்ப்பார்க்க இயலாது. மனம் விரும்பினாலும் உடல் ஒத்துழைக்காது. --ரவி 04:46, 21 மே 2009 (UTC)

தமிழ் எழுத்துச் சீர்மை மற்றும் எளிமை குறித்த ஒளி ஒலி காட்சி ஆய்வு விளக்க கட்டுரை[தொகு]

 • டார்வின் கொள்கை-
  • -மாறாத பொருள் என்றும் வளர்வதில்லை
  • -டார்வினின் கொள்கை வலியது வெல்லும் என்பதன்று, சூழ்நிலைக்கேற்ப மாறும் உயிர் வெல்லும், மாற மறுப்பது மறையும்.
  • யாதும் ஊரே யாவரும் கேளீர் பழைய மொழி புவனமும் மானுடர்க்குப் பொது. இது புது மொழி.
  • தமிழர்கள் பன்னாட்டுச் சிறுபான்மையினர்.
  • ஒரு மொழிக்கு வலிமை என்பது இலக்கணம் இலக்கியம் என்பதைவிட பேசும் மக்களின் எண்ணிக்கைதான். அவர்களுக்காக எந்த மாற்றமும் செய்யலாம், எந்த விலையும் கொடுக்கலாம்.
 • மேற்கூறியவை எல்லாம் கீழ்வரும் இணையதளத்தில் நாம் சற்று வன்மையாக, நடத்திய பல்வேறு விவாதங்களின் மொத்தக் கருப்பொருளாக விளக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் கூறப்பட்டவையும் ஆய்வின் விளைவாக கூறப்பட்ட பரிந்துரைதான். அவைகள் பரிசீலணையில் உள்ளன. நண்பர்கள் சென்று காண்க.
 • எழுத்துச்சீர்மை பற்றிய ஒலி ஒளிக் காட்சி--செல்வம் தமிழ் 20:13, 21 மே 2009 (UTC)
எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு--ரவி 08:02, 24 மே 2009 (UTC)
மீண்டும் தொடங்கியாச்சா....! --Natkeeran 08:25, 24 மே 2009 (UTC)

நற்கீரன், கவலை வேண்டாம் :) உரையாடல் எதையும் வளர்க்கும் எண்ணம் இல்லை :) ஒரு குறிப்புக்காக, இரு பக்க கருத்துகளும் இருக்கட்டுமே என்று பதிந்து வைத்தேன்.--ரவி 08:47, 24 மே 2009 (UTC)

டார்வின் கொள்கைப்படி பார்த்தாலும், தமிழ் நெடுந்தொலைவு தன் பாதையில் வெற்றியுடன் உயிர்ப்பான நடையுடன் வந்திருக்கும் மொழி. சமசுக்கிருதம், இலத்தீன் முதலியன ஏறத்தாழ வழக்கிழந்தோ, பிறமொழிகளாகவோ திரிந்து போன மொழிகள். தமிழில் இருந்தோ, திராவிடத்தில் இருந்தோ திரிந்த மொழிகள் மொழிகள் இருப்பினும், தமிழ்மொழி அது தன்னியல்புடன் சிறப்பாக நிற்கும் மொழி. அதற்கு அதன் எளிமையும், உள்கட்டான வலுவும் காரணங்கள். சில வேற்றுமொழி இயல்புகளைக் ஏற்பதால் எப்படி சில உள்கட்டுகள் அறுபடுகின்றன என்பதெல்லாம் அறிதல் வேண்டும். எல்லா மாற்றங்களும் நல்லதென்று கொள்வது தவறான கருதுகோள். மாற்றங்களும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறுதலும் வேண்டும்தான், ஆனால் அவை தேவையா, நன்மை-தீமை என்ன என்று அறியாமல் மாறுவது வளர்ச்சியாகாது. தமிழ் மொழி 2300 ஆண்டுகளாக,, சீன, எகிப்திய, இந்திய-ஐரோப்பிய, கம்போடிய மொழிகளுடன் உறவுகொண்டு வளர்ந்து வெற்றியுடன் இன்றும் இலக்கண இலக்கியங்களுடன் இருப்பது. இப்படிப் பட்ட மொழிகள் மிகக் குறைவு உலகில். ..அவர்களுக்காக எந்த மாற்றமும் செய்யலாம், எந்த விலையும் கொடுக்கலாம். என்பது எல்லோருக்கும் ஏற்புடையதன்று. டி.என்.ஏ வை கண்டபடி மாற்றிக்கொண்டிருப்பதுதான் வளர்ச்சி என்பது ஏற்க இயலாதது. உலகில் உள்ள அத்தனைக் கருத்துகளையும் நம் மொழியில் குவிக்க வேண்டும், நம்மில் யாரும் அவற்றைப் புரிந்துகொண்டு பயன் பெற வேண்டும் என்பது வேண்டும், ஆனால் எல்லா மொழி ஒலிகளையும் தங்கள் மொழியில் புகுத்தி மொழியை வளர்ப்பதாகக் கருதி தம் மொழியை சின்னாபின்னம் செய்வது அறிவுடைமை அல்ல. இது பற்றி பெரிதாக உரையாட வேண்டும் என்பதல்ல, ஆனால் இப்படி டார்வின் கொள்கையைத் தவறாக எடுத்துக் காட்டுவது பற்றி கூறுவது இங்கு தேவை என்று குறிப்பிடுகிறேன். --செல்வா 22:23, 26 மே 2009 (UTC)


இதையெல்லாம் குறிப்பிடுவது முனைவர் வா.செ.குழந்தைசாமி மற்றும் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் அரசின் கொள்கை முடிவு. நாம் என்ன செய்ய முடியும்?--செல்வம் தமிழ் 04:32, 27 மே 2009 (UTC)

இது முனைவர். வா. செ.கு மற்றும் சில அறிஞர்களின் பரிந்துரையாக த.இ.ப.வில் இடம் பெற்றிருக்கிறது. இது குறித்து அரசின் கொள்கை முடிவு ஏதும் வந்திருப்பதாகத் தெரியவில்லை. --ரவி 04:41, 27 மே 2009 (UTC)

ஆழ்ந்த அனுதாபங்கள்[தொகு]

என்றுமே இல்லாதவாறு ஈழப் போரிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து தவிக்கிறார்கள். அவர்கள் யாவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். 2.8 இலட்சம் மக்கள் மிகத் துன்பம் உற்று நிற்கின்றார்கள் அவர்களுக்கு உதவ முழு அணுக்கம் தரவேண்டும் என ஐ.நா விண்ணப்பித்துள்ளது. விரைவில் மக்கள் யாவரும் பாதுகாப்பு பெற்று அவர்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இறைஞ்சுகிறேன். --செல்வா 03:08, 23 மே 2009 (UTC)

ஈழம் அமையும்[தொகு]

இன்னும் இரண்டு வருடங்களுக்குள் அவர்கள் துயர் தீரும் ஈழமும் அமைந்துவிடும் என்பது என் திடமான நம்பிக்கை. அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன என்பதுமட்டுமில்லாமல் பன்னாட்டு குரல்கள் அதை உறுதிப் படுத்துகின்றன. அதுவரை பொறுத்திருப்போம் --செல்வம் தமிழ் 07:09, 24 மே 2009 (UTC)

சென்னை ஆன்லைனில் தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் மயூரநாதன் நேர்காணல்[தொகு]

மயூரநாதன் நேர்காணல்--செல்வா 20:45, 30 மே 2009 (UTC)

மிகவும் அருமையான பயனுள்ள நேர்காணல். தெளிவாக எளிய தமிழில் இந்நேர்காணலை வழங்கிய மயூரநாதனுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இந்நேர்காணலை ஏற்பாடு செய்த சென்னை ஆன்லைன் ஆசிரியர் அண்ணா கண்ணன் அவர்களுக்கும் நன்றிகள்.--Kanags \பேச்சு 00:38, 31 மே 2009 (UTC)

மயூரநாதன் பதில்கள் தெளிவாக இருந்தது. அவருக்கு பாராட்டுகள். நேர்காணல் கண்ட அண்ணா கண்ணன் அவர்களுக்கு நன்றி. தேவையான கேள்விகளை கேட்டிருந்தார். இந்நேர்காணலை பல மக்களுக்கு மின்னஞ்சல் செய்யப்போகிறேன். --குறும்பன் 02:51, 31 மே 2009 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா தொடக்கத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் தன்னந்தனியாக மயூரனாதன் மட்டுமே கட்டுரை எழுதி வந்தார். இது மிக அரிய முயற்சி. அவர் அப்படி செய்திருக்காவிட்டால் இந்த அளவுக்கு தமிழ் விக்கி வளர்ந்திருக்காது. தமிழ் விக்கி பற்றி பேசக்கூடிய பொருத்தமானவர் மயூரனாதன்.

நேர்காணலில் உள்ள கேள்விகளை ஒட்டி சில கருத்துகள்:

1. சிம்மி வேல்சு ஏன் விக்கிபீடியா தொடங்கினார்?

உலகின் அனைவருக்கும் கட்டற்ற அறிவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கோடு விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. முந்தைய முயற்சியான நியூபீடியாவில் ஒரு சிலரே தொகுக்கலாம் என்ற நிலை வளர்ச்சிக்கு உதவவில்லை. எனவே, இதில் அனைவரும் தொகுக்கலாம் என்ற முக்கிய கொள்கை உருவானது.

2. கூகுள் முடிவுகளில் விக்கிப்பீடியா முந்துவது ஏன்?

மயூரனாதன் சொன்னது போல் கூகுள் விக்கிப்பீடியாவுக்கென சிறப்புச் சலுகைகள் ஏதும் தருவதில்லை. ஆனால், எது சரியான பக்கம் என்ற கூகுள் கணிப்பில் விக்கிப்பீடியா இயல்பாகவே முந்துகிறது. விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள், கட்டமைப்பு இயல்பாகவே தேடு பொறிகளுக்கு உகந்ததாக உள்ளது. மேலும் அறிய பார்க்க - Wikipedia SEO -

http://www.webmasterworld.com/google_adsense/3846633.htm

3. .ogg கோப்புகளை எப்படி கேட்கலாம்?

VLC media Player என்ற கட்டற்ற மென்பொருள் கொண்டு .ogg கோப்புகளைக் கேட்கலாம்.--ரவி 08:03, 31 மே 2009 (UTC)

அண்ணா கண்ணன் அவர்கள் நன்கு ஆய்ந்து கேள்விகளை முன்வைத்திருப்பதைக் கண்டேன். அவருக்கு முதலில் நன்றிகள். மயூரநாதனின் விடைகள் மிகச் சிறப்பான வகையில் தெளிவாகவும் மிகச் சரியாகவும் அமைந்துள்ளன. பாராட்டுகள்! ரவி சொல்லியிருப்பதுபோல் தமிழ் விக்கி பற்றி பேசுவதற்கு மயூரநாதனே மிகப் பொருத்தமானவர். இது போன்ற நேர்காணல்கள் வாயிலாக ஆர்வமுடையோர் பங்களிக்க வருவார்கள் என நம்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 09:20, 31 மே 2009 (UTC)
பி.கு. .ogg கோப்புகளை மீடியா கோடர் (Media Coder) என்ற கட்டற்ற மென்பொருள் கொண்டும் கேட்கலாம். அதன் துணையுடன் வேறு கோப்பு வடிவங்களுக்கும் மாற்றலாம்.
மிகத் தெளிவானக் கேள்விகள் அதற்கு தகுந்த ஆழமான பதில்கள் - மிக அருமையான இணைய நேர்காணல். --கார்த்திக் 13:53, 1 ஜூன் 2009 (UTC)

கேள்விகளுக்கான மயூரநாதனின் விடைகள் மிகத்தெளிவாகவும், மிகவும் பயனுடையதாகவும் இருந்தன. மூன்று மணிநேரம் இந்த நேர்காணல் நிகழ்ந்ததாம்! மயூரநாதனை நெஞ்சார வாழ்த்துகிறேன். இதுகாறும் பங்களித்த அனைவரும் உண்மையிலேயே பெருமை கொள்ளலாம். இனிவருவோரும் ஊக்கத்துடன் பங்கு கொள்ளலாம். தன்னலம் இன்றி இப்படி ஒரு நற்பணி செய்வது மிகப் பாராட்டுக்குரியது. இன்னும் பற்பல மடங்கு தரத்திலும், கட்டுரைப் பரப்பிலும் வளரப் புதிய ஊக்கத்துடன் உழைப்போம். --செல்வா 14:03, 1 ஜூன் 2009 (UTC)

குறுங்கட்டுரைகள்[தொகு]

குறுங்கட்டுரைகளை முனைப்புடன் விரைந்து விரிவுபடுத்த வேண்டும் என்று கோபி பெரிதும் வலியுறுத்தி வந்தார். இவ்வாறு செய்வதற்கான இன்னொரு தேவை ஏற்பட்டுள்ளது. கட்டுரைகளின் ஆழத்தின் ஒரு அளவையின் படி தமிழ் விக்கி 24 புள்ளிகளைக் கொண்டுள்ளது. மலையாள விக்கி 150 புள்ளிகளைக் கொண்டு முதலிடத்திலுள்ளது. குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தவதன் மூலம் தமிழ் விக்கியின் தரம் உயருவதோடு இந்த அளவையின்படி வரைந்த பட்டியலிலும் முன்னேற வாய்ப்புண்டு. சிறப்பு:ShortPages - இப்பட்டியலிலுள்ள கட்டுரைகளைத் திட்டமிட்டு விரிவுபடுத்த வேண்டும். (இதில் வழிமாற்றுப்பங்களையும் இணைத்துள்ளனர்.) -- சுந்தர் \பேச்சு 08:25, 1 ஜூன் 2009 (UTC)

குறுங் கட்டுரைகளை கட்டாயமாக விரிவுபடுத்த வேண்டும். தமிழில் தற்போது 22% ஆகவுள்ள 2 கிபைக்களுக்கு மேற்பட்ட கட்டுரைகளை 40% அளவுக்காவது கொண்டுவரவேண்டும். ஆனால் "ஆழம்" குறுங்கட்டுரைகளில் ஓரளவுக்கே தங்கியுள்ளது. மலையாளத்துடன் தமிழை ஒப்பிட்டுப் பார்த்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.
ஆழம் = ((தொகுப்புகள்/கட்டுரைகள்) x (கட்டுரைகள் அல்லாத பக்கங்கள்/கட்டுரைகள்) x (குறுங்கட்டுரை-விகிதம்))
தமிழ் விக்கியின் ஆழம் - 21.28 x 1.74 x 0.648
மலையாள விக்கியின் ஆழம் = 37.01 x 4.90 x 0.827
இதிலிருந்து (தொகுப்புகள்/கட்டுரைகள்), (கட்டுரைகள் அல்லாத பக்கங்கள்/கட்டுரைகள்), (குறுங்கட்டுரை-விகிதம்) ஆகிய அனைத்திலுமே மலையாளம் முன்னணியில் இருப்பதைக் காணலாம். முக்கியமாக (கட்டுரைகள் அல்லாத பக்கங்கள்/கட்டுரைகள்) மலையாள விக்கியின் ஆழத்துக்குப் பெரும் பங்கு அளிப்பதைக் காணலாம். இதற்கான காரணம் தெரியவில்லை. இது எந்தவகையில் தரத்தைக் கூட்டுகிறது என்பதும் புரியவில்லை. எனவே ஆழத்தைக் கூட்டுவதாயின் "மொத்தத் தொகுப்பு", "கட்டுரைகள் அல்லாத பக்கங்கள்" என்பவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். மயூரநாதன் 12:29, 1 ஜூன் 2009 (UTC)

நீங்கள் மேலே சொன்ன எல்லாவற்றையும் வரவேற்கிறேன். இந்த ஆழம் பற்றி நாம் கருத்தில் கொண்டாலும், அதைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். ஒருவரி, இரண்டுவரிக் கட்டுரைகள் எழுதாமல் இருந்தாலே போதும். மிக முக்கியமானது என்னவென்றால், நாம் எழுதும் கட்டுரைகள், அது குறுங்கட்டுரையாக இருப்பினும், ஓரளவுக்கு கருத்து முழுமை உடையதாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். நல்ல சொற்றொடர்களில், தெளிவான நல்ல தமிழில் இருக்க வேண்டும். கூடிய மட்டிலும் கட்டுரைகளில் உள்ள தகவல்களை விரிவாக்கிக் கொண்டு வருதலும் வேண்டும். தானியல் பாண்டியன் அவர்களின் பணிகள் தரமான விரிவாக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு. கட்டுரைகளை முழுமையாக எழுதுவதில் தற்பொழுது எழுதி வரும் பயனர்:பரிதிமதி நல்ல எடுத்துக்காட்டு. குறுங்கட்டுரையோ, நெடுங்கட்டுரையோ, அது தமிழ் மக்களுக்குப் பயன்படுமாறு உள்ளதா, வேறு எங்கும் (தமிழில்) இருப்பதைக் காட்டிலும் கூடுதலான தகவல்களோடோ, அல்லது தரமான எழுத்திலோ உள்ளதா என்று கருத்து செலுத்துதல் வேண்டும் என நினைக்கிறேன். பல புதிய பயனர்கள் வரும்பொழுது அவர்களுக்கு தக்க வழிகளில், மற்ற பயனர்கள் வழிகாட்ட வேண்டும். எந்த ஒரு கட்டுரையும் 2 கிலோ பை'ட் அளவுக்குக் குறைவாக இல்லாமல் எழுத முடியும். கூடிய மட்டிலும் படங்களையும் தவறாது சேருங்கள்.எழுத்துப் பிழைகளையும், சொற்றொடர் பிழைகளையும் களைய பலரும் உதவ வேண்டும். சான்றுகோள் தரத்துடன் இருக்க வேண்டும் எனில், நல்ல பிழையற்ற நடையில் இருக்க வேண்டும் அல்லவா?--செல்வா 13:47, 1 ஜூன் 2009 (UTC)

இன்னொன்று. கட்டுரைகளின் தரம் கணிக்கப்பட வேண்டும். நீளம் மட்டும் அளவுகோல் அல்ல. 5 வரி கட்டுரையாக இருப்பினும், அது கலைக்களஞ்சிய தரத்தில், நல்ல தகவல்களோடு நல்ல நடையில் எழுதப்பட்டுள்ளதா என நாமே நம் கட்டுரைகளின் தரத்தை கணித்து பேச்சுப் பக்கத்தில் குறித்து வருதல் வேண்டும். குறைகளையும் சுட்டியோ திருத்தியோ கட்டுரைகளை முன்னேற்ற வேண்டும். --செல்வா 13:56, 1 ஜூன் 2009 (UTC)
மயூரநாதன், தெளிவான விளக்கத்துக்கு நன்றி. கட்டுரை அல்லாத பக்கங்கள் வலைவாசல்கள், கொள்கைப் பக்கங்கள், பேச்சுப்பக்கங்கள் முதலிய. இவற்றில் கொள்கைப் பக்கங்களைத் தவிர எஞ்சியவற்றுக்கு மிதமான முன்னுரிமை இருந்தால் போதுமானது என்றே கருதுகிறேன். மற்றபடி செல்வா சொல்லியுள்ளது போல் கட்டுரைகளின் தரத்திலும், முழுமையிலும், பிழையின்மையிலும், நடையிலும் நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம். -- சுந்தர் \பேச்சு 07:07, 4 ஜூன் 2009 (UTC)

இந்த "ஆழத்துக்காக" இல்லாவிட்டாலும், பொதுவாகவே குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்த வேண்டியது ஒரு முக்கியத் தேவை தான். இந்த ஆழத்தைக் கணக்கிடப் பயன்படும் "மொத்தத் தொகுப்புகள்" கவனத்துக்குரியது. ஒரே கட்டுரையையே சிறிது சிறிதாக அடிக்கடி தொகுத்து இவ்வெண்ணிக்கையைக் கூட்டலாம். ஆனால், தேவையில்லை. மயூரனாதன் போன்றோர் மிகப் பெரிய கட்டுரைகளைக் கூட ஒரே தொகுப்பாக இடுவர். கோபி, நிரோ போன்றோர் பல கட்டுரைகளை இணைய இணைப்பில்லாமல் .txt கோப்புகளில் உருவாக்கி வைத்திருந்து ஒரே மூச்சாக பல நூற்றுக் கணக்கான கட்டுரைகளை கட்டுரை ஒரு தொகுப்பு என்று வெளியிட்டனர். இந்திய ஊர்கள் பற்றிய நூற்றுகணக்கான கட்டுரைகளும் தானியங்கி முறையில் ஒரு கட்டுரை ஒரு தொகுப்பாக இட்டோம். இக்காரணங்களால், நம் தொகுப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். செல்வா சொல்வது போல், இவ்வளவீடுகளைப் பற்றி பெரிதாக அலட்டாமல், நமக்கே நம் தளம் நிறைவு அளிக்கும் வரை தொடர்ந்து உழைப்போம். --ரவி 10:23, 6 ஜூன் 2009 (UTC)

நடுநிலைத்தன்மை[தொகு]

இசுலாம் என்ற பக்கத்தின் உரையாடல் பகுதியில் கீழ்க்கண்ட பதிவு ஒரு அன்பரால் எழுதப்பட்டிருக்கின்றது. இது இசுலாம் பற்றிய சரியான அடிப்படை அறிவு இல்லாமலும், அவசரக் கோலத்திலும் எழுதப்பட்ட ஒரு பதிவாக எனக்கு தோன்றுகின்றது. மேலும் இது போன்ற பதிவுகள் விக்கிப்பீடியாவின் நடுநிலை தன்மையை பாதிக்காதா? சற்று கவனிக்கவும்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D#.E0.AE.AE.E0.AF.81.E0.AE.B0.E0.AE.A3.E0.AF.8D.E0.AE.AA.E0.AE.BE.E0.AE.9F.E0.AF.81.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D
--arafat 08:41, 4 ஜூன் 2009 (UTC)

arafat, விக்கிப்பீடியாவின் கட்டுரைப் பக்கத்தில் உள்ள கருத்துகளே விக்கிப்பீடியாவின் நடுநிலைத்தன்மையைச் சுட்டுவன. உரையாடல் பக்கத்தில் உள்ளவை தனிநபர்களின் சாய்வுக்கு உட்பட்டவையே. கட்டுரைப் பக்கத்தில் தவறான தகவல் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். நன்றி--ரவி 13:00, 4 ஜூன் 2009 (UTC)
ரவி, நீங்கள் சொல்வது பொதுவாக சரியென்றாலும், மதக்கொள்கைகளை பொதுவாக விமரிசிக்கும் களம் இதுவல்ல. அவற்றை விமரிசிக்க இங்கு எமக்கு என்ன அருகதை உள்ளது? மேலும், இது தேவையற்ற வில்லங்கங்களையே தோற்றுவிக்கும்.--Kanags \பேச்சு 21:27, 4 ஜூன் 2009 (UTC)

Kanags, நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். இது போன்ற கருத்துகளைத் தவிர்க்குமாறு செல்வத்துக்குத் தெரிவித்து இருக்கிறோம். எந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்துக்கும் நேரடியாகத் தொடர்பின்றி காழ்ப்புணர்வுடன் வேண்டும் என்றே தொடர்ந்து எவரேனும் எழுதினால், நிச்சயம் நாம் நடவடிக்கை எடுப்போம். --ரவி 02:23, 5 ஜூன் 2009 (UTC)


கனக், ரவி அந்த கட்டுரையில் முழுமையும நான் எதிர்க்கவில்லை. தவிர நாம் இது போன்ற பல விடயங்களில் விவாதித்திருக்கின்றோம். ஒரு கட்டுரை வன்முறையை தூண்டுவதாய் அமையுமானால் அது எந்த சமயமானாலும் தவிர்க்கலாம். கருத்து தெரிவிக்கலாம். இதை விட்டோமானால் அனைவரும் சமயப் பிரச்சாரக் கருத்துக்களை திணிக்க ஆரம்பித்து விடுவர். அதுவே வன்முறைக்கு வித்திட்டால் என்ன செய்வீர்கள். சாதாரண கட்டுரைகளிலேயே பலவற்றை கூடுதலாக சொல்லிவிட்டார் என்று நீக்குகின்றோம். பக்க சார்பு என்று நீக்குகின்றோம். இதில் மட்டும் ஏன் தயக்கம். எத்தனை சமயக் கட்டுரைகள் இராமலிங்க அடிகளார் எவ்வளவோ...... இதில் தயங்குவதேன்.

கடவுள் சொல்லவிட்டார் என்று அனைவரும் ஆயுதத்தை ஏந்தினால் என் செய்வீர்கள். அவர் சொல்லிய காலம் வேறு காலம். அந்த வாசகத்தை இன்றும் பயன்படுத்த வேண்டிய அவசியமென்ன? நபிகள் கூறிய எவ்வளவோ நல்ல கருத்துக்கள இருக்கின்றனவே? குறிப்பிட்டு இது இரண்டையும் வலியுறுத்திக் கூறுவதேன்? ஒரு பாலினத்தை பாதிக்கின்றது என்றால் விட்டு விடலாமே? அது த.வி யின் கட்டுப்பாடு தானே. யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடாது. சமயச் சார்பற்றத் தளம்.

வர்ணாசிரமக் கொள்கை எனும் பழையக் காலமுறையில் பின்பற்றி வந்த்தை பற்றி ஆங்கிலத்தில் இருந்து மொழி மாற்றம் செய்த கட்டுரையை நடுவு நிலைக்கு விடவில்லையா? அதில் முரண்பாடுகளை தெரிவக்கவில்லையா? புட்ட பர்த்தி சாய் பாபா நடுவு நிலைக்கு விட வில்லையா? அதை இங்கு பின்பற்றச் சொல்கின்றேன் இதில் என்ன தவறு?

இதில் குறிப்பிட்டு தமிழில் பெண்களும் குழந்தைகளும் தவிர கொல்லலாம் என்று கூறப்பட்டிருக்கின்றதே? அதை தவிர்த்து நபிகள் நாயகத்தை உயர்த்திக் காட்டலாமே? அதையும் முரண்பாடாகத்தான் குறிப்பிடுகின்றார். பெண்களை கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே அனைவரும் தானே வாசிப்பர் அனைவருடைய மனமும் புண் படாதா? இசுலாம் கட்டுரைகள் இசுலாமியர் தான் வாசிக்க வேண்டுமா? அவர்களே இதை ஏற்றுக் கொள்ளமாட்டார்களே. அதையும் தீர்மானமாக அறைகூவலாக கூறுவது விக்கிப்பீடியா முறைக்கு ஏற்றதா? இங்கு எல்லா கொள்கைகளும் விடப்பட்டுவிட்டதா? வருத்தமளிக்கின்றது.


அவர் வேறு மொழியில் எழுதினால் கவலையில்லை எமக்குத் தமிழ் தெரியுமே. நாம் அனைவரும் சமம் என்ற கருத்து பிளவுபட்டால் மதசார்பற்ற கொள்கை வீழ்ந்து பக்கசார்பு வந்து விடும்.அவர் அரபு நாட்டுக்காக அதை எழுதினார். அவர் எழுதிய காலம் வேறு அதிலேயே பல முரண்பாடுகளை பொய் மெய் என்று கூறியுள்ளார். பிறகெப்படி ஆதாரமான கட்டுரையாக கொள்ளமுடியும். எதறகெடுத்தாலும் மேற்கோள் கேட்பீர்கள் இங்கு அனைத்தும் துறக்கப்பட்டுவிட்டது.--செல்வம் தமிழ் 18:37, 6 ஜூன் 2009 (UTC)

செல்வம், கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளில் உங்களுக்கு ஏதும் மறுப்பு இருந்தால் {{POV}} என்ற வார்ப்புருவை கட்டுரையின் தொடக்கத்தில் இடுங்கள். ( விடுதலைப் புலிகள் நோக்கிய விமர்சனங்கள் என்ற கட்டுரையில் உள்ளது போல). குறிப்பிட்ட சில வரிகளுக்கு ஆதாரம் தேவை என்று எண்ணினால், அந்த வரிகளுக்கு அருகில் {{Citation needed}} என்ற வார்ப்புரு இடுங்கள். (ம. கோ. இராமச்சந்திரன் கட்டுரையில் உள்ளது போல). எந்தெந்த வரிகள் குறித்து மறுப்பு என்பதை முன்வைத்துப் பேச்சுப் பக்கத்தில் கட்டுரை ஆசிரியரோடு உரையாடலாம். கட்டுரையில் இல்லாத பொதுவான விசயங்கள் குறித்துப் பேசுவதைத் தவிர்க்கலாம். நன்றி--ரவி 07:33, 7 ஜூன் 2009 (UTC)

இணையத்தில் திருக்குறல்[தொகு]

விகிபீடியாவின் பங்களிப்பாளர்களின் கவனத்திற்கு, இணையத்தில் திருக்குறள் என்ற சொல் 346 இடங்களில் திருக்குறல் என்று உள்ளதாக கூகுள் தேடலில் காட்டுகிறது. உலகளவில் தமிழுக்கு பெருமையைச் சேர்த்த திருக்குறள், திருக்குறல் என்றவாறு எழுத்துப்பிழையுடன் இருப்பது வேதனையானது. இத்தகைய தளங்களின் உரிமையாளர் அல்லது தொகுப்பாளகர்ளுக்கு பிழையை களையுமாறு வேண்டுகோள் விடுக்க அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கி்றேன். --Augustine 10:03, 4 ஜூன் 2009 (UTC)

augustine, உங்கள் நன்னோக்கம் புரிகிறது. ஆனால், இது போன்ற பிழைகளைத் திருத்துவது சாத்தியமற்றது. தேவையும் அற்றது. எல்லா மொழி இணையங்களிலும் இது போன்ற பிழைகள் உண்டு தானே? திருக்குரல், திருக்குறல், திருக்குரள் என்று எப்படி பிழையாகத் தேடினாலும் திருக்குறள் பற்றிய செய்திகள் கிடைப்பது நல்லதே. நன்றி--ரவி 13:48, 4 ஜூன் 2009 (UTC)


ரவி, தங்கள் உரையை ஏற்றுக்கொள்கிறேன். மேலும், பயனர்:Ganeshbot/Translation needed என்ற பகுதியில் பலுக்களாக(Repeated) உள்ள வார்த்தைகளை நீக்கிவிடலாமா என ஆலோசித்து கூறவும். எடுத்துக்காட்டு:Almora. --Augustine 11:03, 8 ஜூன் 2009 (UTC)

//பலுக்களாக (repeated)// புரியலியே :( அந்தப் பக்கத்தின் என்ன செய்ய வேண்டுகிறீர்கள் என்று இன்னும் சற்று விளக்க இயலுமா? நன்றி--ரவி 13:09, 8 ஜூன் 2009 (UTC)


இந்த பகுதியில் duplicate-ஆக உள்ள வார்த்தைகளை நீக்க எண்ணுகிறேன். தயவு செய்து Almora-என்ற வார்த்தையைத் தேடிப்பர்க்கவும்.--அகஸ்டின் 11:13, 9 ஜூன் 2009 (UTC)

இப்போது புரிகிறது. இவைத் திரும்பத் திரும்ப வர ஏதும் காரணமிருக்கிறதா என்று ganeshஉடன் பேசிய பிறகு நீக்க முயல்வோம். சுட்டிக் காட்டியதற்கு நன்றி--ரவி 13:55, 9 ஜூன் 2009 (UTC)

அடிப்படை அறிவு என்ற வார்தை மிகவும் மோசமானது[தொகு]

அடிப்படை அறிவு என்ற வார்தையை நீக்காமல் நீங்கள் என்வார்தையை நீக்குவது முறையற்றது. அவர் வார்த்தையை திரும்பப்பெறும் வரை. என்வார்தை சொறிவு என்பதை அறிவுச்சுடருக்காகப் பதிவு செய்கின்றேன்.சுந்தர் வேண்டுமானலும் நீங்கள் கூப்பிட்டு அவரை அம்மாதிரி உங்களை அழைக்கச்சொல்லி கேட்டுக்கொள்ளுங்கள். இதில் என்ன பாரபட்சம்.--செல்வம் தமிழ் 08:05, 7 ஜூன் 2009 (UTC)

இசுலாம் சமயத்தில் அடிப்படை அறிவு இல்லாததை என்றுதானே சொல்லியிருந்தார்? அது தேவையற்றது என்றாலும் தனிநபர் மீதான தாக்குதலாகத் தென்படவில்லை. அவருக்கு இதற்காக ஒரு அறிவுறுத்தல் போதுமானது. உங்களது பதிவைக் கீழே (சில சொற்களைத் தடித்த எழுத்தில்) இட்டிருக்கிறேன். அது தனிநபர் மீதான தேவையற்ற கருத்து என்பது உங்களுக்கே புலனாகும்.
இத்தனைக்கும் உங்களுக்கு இது முதல் முறை அல்ல. நீங்கள் நன்கு பங்களிப்பவர் என்பதாலேயே பலமுறை மெலிதாக அறிவுறுத்தியிருந்தோம். உங்கள் பேச்சுப் பக்கத்தைப் பாருங்கள். இப்போதும் கூட இது போன்ற சாடலுக்கான எச்சரிக்கையை விடுக்காமல் பொறுமையாகத்தான் செய்தி விடுத்திருக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 08:50, 7 ஜூன் 2009 (UTC)

இசுலாம் என்பது அடிப்படை அறிவா? அடிப்படை அறிவு என்பது இசுலாமா? இசுலாம் பற்றி தவறாக புரிந்து கொண்டார் என்று குறிப்பிட்டு இருக்கலாம். இந்த தமிழ் தெரியாதா? இந்து அடிப்படை அறிவு, கிறித்துவ அடிப்படை அறிவு, புத்த அடிப்படை அறிவு இன்னும் பிற சமய அறிவு? என்று யாருமே குறிப்பிட மாட்டார்கள். முதல் முறையாக இதெல்லாம் அடிப்படை அறிவு என்று இப்பொழுதுதான் கேள்வி படுகின்றேன். அதை அங்கேயே கேட்கலாமே இங்கு வந்து பெயர் குறிப்பிடாமல் இசுலாம் பற்றி அடிப்படை அறிவில்லாமல் கேட்கிறார் ஒருவர் என்று கேட்டுவிட்டு அங்கு பெயர் குறிப்பிட்டு கேள்வி கேட்பது என்ன நியாயம்.

நான் இட்ட கருத்துக்கு என்ன பதில் கூறியிருக்கவேண்டும், நீங்கள் கூறுவது தவறு, அப்படியில்லை சமய சாரபுடன் பெயர்கள் இல்லை இதோ இருக்கின்றது பாருங்கள் சார்பற்ற பெயர்கள் தமிழர் சிறுபான்மையினர் கட்சி, இந்திய சிறுபான்மையினர் முன்னேற்றக் கழகம் என்று இருந்தால் சுட்டிக் காட்டியிருக்கவேண்டும். அதுதான் பதில். இதோ இருக்கிறது பாருங்கள் என்று சுட்டி காட்டியிருக்கவேண்டும். அப்படி குறிப்பிடுபவர் பக்க சார்பற்றவர். இந்த பொதுதளத்தில் இது தகும்.

நாம் குறிப்பிட்ட கருத்து பிற சமயத்தினரை மற்றும் பொதுவானவர்களை இப்படித்தான் பாதிக்கும் ஆகையால் அவற்றை தவிர்க்க பரிந்துரைக்கலாம் என்று. பெண்களை குறிக்கும் பொழுது அவரவர் வீட்டில் இருக்கும் பெண்கள் பிற சமயத்தினர் வேறு விதமாக பார்ப்பார்கள். பொது தளத்தில் நம் கருத்தை திணிப்பது தவறு அப்படித் திணித்தால் பிற சமயத்தினர் அல்லது நடுநிலையினர் கருத்துதான் தெரிவிப்பர் அது அந்த தன்மைக்கேற்ப மாறுபடும் என்பதை அவர் உணர வேண்டும்


ஒரு வார்த்தை ஒன்றே மாற்ற சொல்லி என்ன சொன்னீர்கள் (அதுவும் பொருளுள்ள வார்த்தைக்கு) தமிழர்களுக்கு தவறான கருத்தை திணித்து விடக் கூடாது என்று வலியுருத்திய நீங்கள் ஒரு சமுதாயமே தவறாக எடுத்துக் கொள்ள வழிவகை செய்யும் விடயத்தை அனுமதிக்கச் சொல்லுவது என்ன?. ஈருடக வாழி இந்த சொல்லினால் உயிரிழப்பு வராது. இந்த சொல்லினால், வாசகத்தினால் பெண்களையும் குழந்தைகளையும் தவிர பிறரை கொல்லலாம். (அது எந்த நிலையில் சொல்லியிருந்தாலும் சரி-பாதிப்புகள் வராது என்றால் ஆதாரத்துடன் நிருபியுங்கள்-பாதிப்பு வருகின்றதே) உயிரிழப்புகள் வரும் வந்திருக்கின்றது. (இது வாசகத்தை பற்றித்தான் சமயத்தை பற்றியல்ல) கட்ந்த வருடம் தமிழகத்தில் பிடிபட்டிருக்கிறார்கள் அனைவரும் இளைஞர்கள். இந்த வாசகங்கள் தமிழில் அச்சடிக்கப்பட்டு அவர்கள் இல்லத்தில் இருந்த்து. அந்த வீட்டு உரிமையாளர் மிகக் கொடியத் துயரத்துக்கு ஆளானார். எல்லாவற்றையும் இங்கு குறிப்பிட முடியாது இன்றைய செய்தியை பாருங்கள்.

நம் தளம் இவ்விடயங்களில் அரசங்காத்தால் கண்காணிக்கப்படுகின்றது. அரசாங்கம் என்பது யார் என்பது உங்களுக்கு புரியும். நானே இங்கு (இருப்பிடம்) குடியிருப்பவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். அதை இங்கு குறிப்பிட முடியாது. இசுலாம் கட்டரையை ஒரு இசுலாமியர் எழுதுவது பெரிய விடயமில்லை அதை பிற சமயத்தினர் எழுத வேண்டும். அதற்கு அவர்கள் சார்பற்றவர்களாக இருக்கவேண்டும். நாம் எவ்வளவோ இசுலாம் சமயம் சார்ந்தவர்கள் கட்டுரைகள் எழுதியிருக்கின்றோம். அப்பொழுதெல்லாம் இசுலாம் சமயம் என்ற எண்ணம் எழுந்ததில்லை. இப்பொழுது எழுகின்றது காரணம் அதற்கு இசுலாம் என்ற அடிப்படை அறிவு வேண்டும் அது எனக்கு இல்லை.

இந்து கட்டுரை எழுதுவதற்கு இந்து அடிப்படை அறிவு வேண்டுமா அதுதான் தகுதியா? தமிழ் தெரிந்தால் போதாதா? எல்லாசமயத்திலும் தான் குறைகள் இருக்கின்றது நாம் சுட்டிக் காட்டவில்லை. வர்ணாசிரம தர்மம் இந்து மதத்தில் ஏற்கனவே பின்பற்றினார்கள் இப்பொழுது கண்டிப்பாக கடைப்பிடித்துதான் ஆகவேண்டும் இதை எதிர்ப்பவர்கள் இந்து மதம் அடிப்படை அறிவில்லாதவர்கள் என்று கூறினால் ஏற்றுக் கொள்வோமா? சமயத்திற்கு சமயம் கட்டுப்பாடுகள், மனிதநேயம், மாறுமா? விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மாறுமா? அந்த உரையாடல்களில் பலர் கருத்து தெரிவித்திருக்கிறாரகள். 95 % உண்மையில்லை என்று இசுலாமியப் பயனரே குற்றம் சாட்டியிருக்கின்றார். ஏன் அவருக்கு அடிப்படை அறிவில்லை என்று கேட்பாரா? கேட்பதுதான் நியாயமா? பெண்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்ற வாசகம் என்னை பாதித்த விடயம் அது அந்த வாசகத்தை குறிப்பட்டது தான்.

அதை நான் எழுதியிருந்து ஒரு வேளை அவர் வினவியிருந்தாலும் நான் அதற்கு வருத்தம் தான் தெரிவித்திருப்பேன். இது குரானில் உள்ள வாசகம் இது முகம்மது நபி வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டது அரபு மக்களுக்காக எழுதப்பட்டது நாம் இப்பொழுது பின்பற்றத் தேவையில்லை இதை முரண்பாடுகளில் காட்டாலம். இதுதான் நடுவு நிலைமை. நான் இதைத்தான் செய்திருப்பேன் இது மாதிரி அவரை செய்ய சொல்லுங்கள். அனைவரும் பின்பற்ற கூறுங்கள் சர்ச்சையே வராது.

விக்கிப்பீடியா கட்டுபாடுகள் சமயத்திற்கு சமயம் மாறுமா? அப்படியென்றால் அவ்வப்பொழுது சமயத்தை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். எல்லாருக்கும் ஒரேக் கொள்கை இது தகவற்கள்ஞ்சியம் பிற சமயத்தினரையும் இழுக்க வேண்டும். ஒத்துக் கொள்ள செய்யவேண்டும். சமயத்திவிரத்துட்ன செயல்பட்டால் இது இம்மியளவும் நிகழாது.

உங்களுக்கு ஒரு வார்த்தை தவறான தகவல் தமிழில் தறக்கூடாது என்பது போல. எனக்கு ஒரு உயிரும் இந்த மண்ணில் சமயத்திற்காக வீழ்தல் கூடாது, நமக்கென்ன என்றால் அதில் நாமே ஒரு நாள் சிக்குவோம். (என் வேண்டுதல் எதுவும் அப்படி நடக்க கூடாது நம் பயனர் அனைவரும் குடும்பங்களும் நல்ல வளத்துடன் ஆயுளுடன் இருக்கவேண்டும் என்பது தான்) இன்றையை செய்தியே சாட்சி. என்னை பொறுத்தவரை நான் வாதிட்டது தவறல்ல இங்கு பயனர் சமயத்தீவிரத்துடன், சமயவெறியுடன் இருந்தால் நான் பொறுப்பல்ல. நான் சமயவெறியை கொண்டு பிறரை சாடுவது தடைசெய்யப்பட்ட ஒன்று, குற்றம். நானாயிருந்தாலும், யாராயிருந்தாலும் சரி. நான் சமயவெறிப்பிடித்தவன் என் சுய விவரத்தில் குறிப்பிட்டால் யாராவது நாடுவீர்களா?


நீங்கள இவ்விசயத்தில் தயங்குவது புரிகின்றது நான் அச்சப்பட முடியாது அது என் கொள்கை, பொதுவுடமைவாதிகளின் கொள்கை இங்கிருப்பவர்கள் கட்டுரைகள் கூடுதாலாக எழுதினால் பக்க சார்பு, நடுவு நிலைமை, விக்கிப்பீடியா நடை இல்லை, தமிழுக்கே இழுக்கு நீக்குவேன், நீக்கியிருக்கின்றீர்கள் அது தவறல்ல அது இங்கு (இக்கட்டுரைகளில்) பயன்படுத்தபடவில்லை. ஆங்கிலத்தில் பயன்படுத்தியிருக்கின்றார்கள். ஒரு லாரி கிரந்தம், தமிழே இல்லை ஏனென்றால் சமயம் சார்ந்த கட்டுரை. தமிழ் ஒன்று தானே. அங்கே கட்டுரை எழுதிக்கொண்டிருக்கம்போதே மாற்றுகின்றீர்கள் அவ்வளவு அவசரம். அதே அவசரம் இங்கு காட்டவேண்டாம் கொஞ்சம் நிதானமாவது காட்டியிருக்கலாம்.

பிற கட்டுரைகளில், பிற சமயக் கட்டுரைகளில் இடப்பெயர்தான் சார் விடுங்கள் சார் , ஒரே ஒரு கிரந்தம் தான் சார், முடியாது! முடியாது! நீக்குவேன் என்று ஒரு அக்கப்போர் நடத்துவீர்கள். வேண்டாம் சார் இது அங்கு உச்சரிப்பு உள்ளது சார் முடியாது முடியாது கிரந்தம் நீக்குவேன் விசையை வைத்து பூட்டுவீர்கள். எனக்கு அம்மாதிரி எல்லாம் பிரித்து பார்க்கத் தெரியாது.

ஒரேக் கொள்கை மனிதம் மனிதம் மனிதம் அதற்கு எதிராக எது இருந்தாலும் எதிர்ப்புத் தெரிவிப்பேன். அது அந்த கருத்தைக் கொண்டு மாறுபடும். கட்டுரையை வாசிப்பவர் சற்று உணர்ச்சி வசப்படுவார். வார்த்தைக்கு அந்த சக்தி உண்டு. அவற்றில் உண்மையிருக்கின்றதா உண்மையில்லை என்று நிறுபிக்கும் கடமை அதை எதிர்த்து வாதாடுபவருக்கு உண்டு அதை ஆதாரத்துடன் நிருபித்தால் சர்ச்சை முற்று இதை இது வரை யாரும் செய்வதே இல்லை. (என்னைக் கேட்டால் உடனுக்கு உடன் ஆதாரத்தை தேடி கொடுக்கின்றேன் அது நடக்கின்றதா இல்லையா.)


ஆனால் சும்மாவே எதிர்க்க்கூடாது இங்கு அதுதான் நடந்த்து. இசுலாம் ஒரு தனி நபருடைய சொத்தா அது அனைவரின் சொத்து யார் வேண்டுமானலும் பின்பற்றலாம் வேண்டாம் பிடிக்கவில்லை என்று விலகாலம். (சும்மாவே எதிர்த்தால் இது மாதிரி வார்த்தைகள் தான் வெளிவரும், அதை கேட்கும் பொழுது என்க்கு ஆத்திரம் வரும் அதற்கு ஒரு வார்த்தை வரும். அவர் அந்தவாரத்தை குறிப்பிடும் பொழுதே தடுத்திருந்தால் அவர் பதில் தெரிவித்திருப்பார் நல்லவராயிருந்தால். நானும் வார்த்தை விட்டிருக்க மாட்டேன்.இது வருமுன் தடுப்பதுதான் நலம். நான் அடுத்து வார்த்தை இன்னும் பலமாக விடப் போகின்றார் என்ற ஆதங்கத்தில் நான் விடுத்தது இது தவறல்ல பொருளற்ற வார்த்தை இன்னும் கடுமையாக விட்டிருந்தாலும் தவறில்லை அவர் விடுத்த வார்த்தை அது மாதிரி தான்.

(மடையா என்ற உள் அர்தத்தை போல்)- என்க்கு அறிவும் வேண்டாம் சொறிவும் வேண்டாம்-எனக்குத்தானே பாதகமான வார்த்தை இதற்கு கூடாவா விவாதம்- இசுலாமிய அறிவில்லாதவர் என்பது தான் கொச்சை வார்த்தை கடுமையான வசை-இதற்கும் மேற்கோள் வேண்டுமா)


அவர் எதற்காவது ஆதாரம் காட்டீனாரா அப்படி இல்லை இதோ ஆதாரம் என்று எதையாவது காட்டினாரா? பதிலுக்கு இசுலாம் அடிப்படை அறிவு இல்லை என்றா கூறுவதா? அம்பேத்காரை வம்புக்கு இழுத்தார். அவர் மகானா? இந்திய அரசியல் சட்டத்தை எழுதியவர். சட்டக்குழுவுடன் அவர் எழுதியது நாடளும்ன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது அரசியல். அவர் எந்த இடத்திலும் தாழ்த்தவில்லை. இதை அவர் வாதிடும் போது நபிகள் நாயகம் எங்கேயும் தாழ்த்தவில்லை அந்த காலத்தில் எழுதியது என்று கூறியிருக்கலாம் அவர் அம்பேத்காரை இழுத்தால் அதுவா பதில். கட்டுரை அவர் சொந்த கருத்து அல்ல அவர் எழுதவில்லை அந்த சமயத்துக்காக வாதாடுகின்றார். நபிகள் எவ்வளவோ நல்லவாசகங்களை கூறியிருக்க இந்த வாசகங்கள் தேவைதானா? அனைத்து வாசகங்களை குறிப்பிட விக்கிப்பீடீயாவில் இடம் போதாது.

இந்துமதம் பெண்களை இழிவு படுத்தியிருந்தால் அதே நிலையைத்தான் எடுப்பேன் கட்டுரை இருந்தால். யார் வேண்டுமானாலும் உஷ்ணத்துடன் கருத்தை எதிர்க்கலாம் அதை கட்டுரையாளர் உணர்ந்து அவற்றைத் தவிர்க்க வேண்டும். சொல்லுவதை சொல்வேன் நீங்கள் எதிர்க்க்கூடாது என்று சொன்னால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் யாருமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்--செல்வம் தமிழ் 17:50, 7 ஜூன் 2009 (UTC)

மூடர், சமய திவிரவாதத்துடன் செயல்படுபவர் என்றெல்லாம் கூறுவது சரிதான் என்கிறீர்களா? கட்டாயம் சரியில்லை. இசுலாமிய அறிவில்லாதவர் என்று குறிப்பிடுவது தேவையற்றது என்றாலும் ஒரு வரம்புக்குள்ளானது தான். இப்போதும் நீங்கள் அக்கப்போர் என்றெல்லாம் தரக்குறைவாகவே பேசி வருகிறீர்கள். நீங்களே சொல்லியபடி ஆத்திரத்துடனே அணுகுகிறீர்கள். இங்கு ஆத்திரத்துக்கு இடமில்லை.
இது ஒரு விவாதக்களமோ, அறமன்றமோ அல்ல. ஒரு கலைக்களஞ்சியம் எழுதுகிறோம். அதன் உள்ளடக்கத்தில் பிழை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், நடுநிலை தவறியிருந்தால் நீங்கள் செய்தது போல் வார்ப்புருக்களை இட்டது சரிதான். அதைவிடுத்து உங்கள் சமயக் கோட்பாடுகள் சரியா என்று கேட்பதற்கு இது இடமல்ல. அதை ஒரு விவாதக்களத்தில் வைத்துக் கொள்ளுங்கள். குரான் இவ்வாறு கூறுகிறது என்று கட்டுரையில் இருந்தால், அது பிழையென்றால், திருத்தலாம். குரான் இப்படிச் சொல்கிறது, ஆனால் நீங்கள் அதைப் பின்பற்றவில்லை போன்ற வாதத்தை இங்கு இடுவதால் என்ன பயன்?
மற்றபடி, எனக்கு எந்த ஒரு சமயத்தின்மீதும் பெரிய பற்றுதலோ வெறுப்போ கிடையாது. இந்து மதமோ, இசுலாமோ எனக்கு ஒன்றுதான். -- சுந்தர் \பேச்சு 07:47, 8 ஜூன் 2009 (UTC)
செல்வம் தமிழ் எழுதியிருந்ததைப் பொறுமையாகப் படித்து பார்த்தேன். அவர் கூறுவது மிகப்பலவும் மிகவும் சரியானவை. அவர் கூறுவதில் ஒருசில இடங்களில் நாம் இங்கு முன்னர் காணாத உரையாடல் போக்கு உள்ளது. மிகவும் விரிவாகவும் பிற பல கருத்துகளையும் இணைத்து எழுதுகிறார். ஆனால் அவர் கூறுவதில் பல நேர்மையான கருத்துகள் உள்ளன. சுந்தர் கூறுவதன் கருத்தை ஏனோ செல்வம் தமிழ் தவறான கோணத்தில் அணுகுகிறார். எனவே பிணக்கான போக்கு வளர்கிறது. இதனைப் பெரிது படுத்தாமல், அருள்கூர்ந்து குறைந்தது ஒரு கிழமை (வார) காலம் யாரும் எதுவும் கூறாமல் வேறு பணிகளில் கருத்தைச் செலுத்தப் பரிந்துரைக்கிறேன். கருத்து வேறுபாடுகள் இயற்கை, அடிக்கடி வருவதுதான், ஆனால் வளர்முகமாக அணுகுவோம். அதிகம் உரையாடாமல், கட்டுரை ஆக்கம், எழுத்துப்பிழை நீக்கம் முதலான விக்கிப் பணிகளில் கவனம் செலுத்துவோம். செல்வம்-தமிழ், உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு நன்றி. சுந்தர் உங்கள் அரும் பணியை இங்குள்ள பழைய பயனர்கள் யாவரும் நன்கு அறிவோம். இப்பொழுது நீங்கள் கூறிய அனைத்தும் சரியே எனினும், பொது நன்மை கருதி, சற்று இடைவெளி தந்து வேறு பணிகள் செய்வது நம் எல்லோருக்குமே (என்னையும் சேர்த்தே கூறுகிறேன்) நல்லது என நினைக்கிறேன். எத்தனை பணிகள் இன்னும் உள்ளன!--செல்வா 14:04, 8 ஜூன் 2009 (UTC)
பொறுமையைக் கடைபிடிக்கும்படி அறிவுறுத்தியதற்கு மிகவும் நன்றி, செல்வா. இல்லையென்றால் நான் என் இயல்பை மீறிவிட்டு பின்னால் வருந்தியிருக்கக் கூடும். தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் அழுத்தங்களை நான் விக்கிப் பணியில் இடையூறு செய்ய விடாமல் இருந்திருந்தாலும் சில வேளைகளில் அவற்றின் விளைவு இருக்கத்தான் செய்கிறது. ஓரிரு நாட்கள் விடுப்பு பெற்று அல்லது கருத்து தெரிவிப்பதை விட்டு கட்டுரை ஆக்கத்தில் பணி செய்ய முடிவு செய்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 15:06, 8 ஜூன் 2009 (UTC)

பிரச்சினையை முடிக்க முயலமுடியுமா[தொகு]

சுந்தர் உங்கள் வயதா? உங்கள் மனநிலையா? என்று தெரியவில்லை. நீங்கள் எதேயோ மனதில் வைத்து மீண்டும் மீண்டும் அங்கிருந்து யாருடையோ மனநிலையோ ஆராய முனைகிறீர்கள். மேலும் இது குறித்து விளக்கமளித்தபின்னும் ஒருதலைபட்சமாக செயல்படுவது உமது நோக்கம் பழையப் பகையை தீர்த்துக் கொள்ள விருப்பமா இந்த வயதில் இதெல்லாம் வரும் நான் அந்த வயதை கடந்தவன். (அப்படித்தான் உங்களை காட்டிக்கொள்கிறீர்கள்) இங்கிருப்பவர்கள் யார் யாருக்கு தொடர்புடையவர்கள் என்றுத் தெரியாமல் நீங்கள் முனைவதை நிறுத்திக் கொள்வது நல்லது என நினைக்கின்றேன். இது சம்பந்தமாக நீங்களே வாதிடுகிறீர்கள். எனக்கு சந்தேகமாக இருக்கின்றது நீங்களே இன்னொரு பயனர் போல் சர்ச்சையை எழுப்பினீர்களா? ஏனென்றால் நீங்கள் இருவர் எண்ணை ஊற்றியபின் கொழுந்து விட்டு எரிந்த்து.

உங்களுக்கு ஆதரவு கொள்கை இருந்தால் அதை அங்கேயே தெரிவிக்கவேண்டும். மீண்டும் மீண்டும் சிறு பிள்ளைத்தனமாக விளையாடக் கூடாது. சர்ச்சையை முடிக்க நீங்கள் விரும்பாதவர் என நீனைக்கின்றேன். நீங்களே ஒருதலைபட்சமாக முடிவெடுக்கின்றீர்கள். உங்கள் நோக்கம் என்ன சிறிய விடயத்தை பெரிதாக்குவதா? பாதிக்கபட்ட நானே ஒதுங்கினால் மீண்டும் மீண்டும் கருத்து தெரிவித்து கொண்டிருப்பதின் நோக்கம் என்ன?

நீங்கள் எனக்கு பாரபட்சமாக செயல்படுவதாக தோன்றுகின்றது. உமது கருத்தை கட்டுரையின் பக்கத்தில் தெரிவிக்கவும். முன்பும் இதே நிலையை மேற்கொண்டீர்கள் இப்பொழுதும் இதே நிலையை மேற்கொள்கீறீர்கள். என்க்கு அறிவுரை கூறுகிறீர்களா? என்ன எதிர்பார்க்கிறீர்கள்?. ஒரு கேள்வி பதில் கிடைத்தபின் அடுத்தது என்று போய்கொண்டேயிருக்கின்றது. நீங்களே என்க்கு கண்டணம் தெரிவித்து என்பதிலை நீக்கினீர்கள் அவர் கூறிய வாசகத்தை விட்டு விட்டீர்கள். திரும்ப நீங்களே அவற்றை இட்டு மறுபடியும் கருத்து கேட்கிறீர்கள். இதில் பற்றுடன் அணுகுவதாக தெரியவில்லையே?


நேற்று அவ்வளவு கூறியும் இத்தளம் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுகிறது. உளவுத்துறையால் கணகாணிப்படுகின்றது என்று கூறியும். தமிழகம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று கூறியும் அந்த சர்ச்சையை குறித்து முன் வைப்பதின் நோக்கமென்ன? தமிழக சென்னை இளைஞர்கள் பயிற்சிக்காக அழைத்து செல்லபட்ட ஏஜன்ட் பிடிபட்டார் என்று செய்தி சொல்லியும். இதை கிளருவதின் நோக்கமென்ன?

நீங்கள் மிகவும் பெரிதாக்குகிறீர்கள் என்று ஏற்கன்வே கருத்து இட்டுவிட்டேன் அதே தான் இங்கும். சர்ச்சை நடந்தவர்களால் பிரச்சினை பெரிதாவதில்லை. வக்கலாத்து என்ற பெயரில் ஊதி பெரிதாக்க கூடாது. வேண்டுமானால் கருத்து தெரிவிக்கும் பொழுது உங்களிடம் கேட்டுவிட்டு கருத்து தெரிவிக்க நீங்கள் அறிவிக்காலம். நீங்கள் மதக்கலவரத்தை உண்டு பண்ண ஏதாவது எண்ணம் கொண்டுள்ளீரா? பழைய விவாதங்கள் எதுவும் அறியாமல் உங்கள் இட்டத்துக்கு கட்டளை இடுவது சரியல்ல. என்னை குறை சொல்வதற்கு முன் நீங்கள் எல்லாவற்றிலும் சரியாக நடக்க முயலவும். --செல்வம் தமிழ் 10:11, 8 ஜூன் 2009 (UTC)

செல்வம் தமிழ், நீங்கள் மேலே கூறியுள்ளவற்றில் பல சொற்றொடர்கள், கவலை அளிப்பதாக உள்ளன. சுந்தர் தமிழ் விக்கியில் ஓர் "அதிகாரி" (பியுரோகிராட்), அவர் விக்கியின் நலம் குறித்து கூறுவதை அருள்கூர்ந்து தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள், வளர்முகமாக அணுக வேண்டுகிறேன். நீங்கள் இங்கு இப்படி "நீ-நான்" என்று உரையாடுவதுபோல் முன்னர் தமிழ் விக்கியில் யாரும் உரையாடியதில்லை. விக்கிப்பீடியாவின் ஒழுங்கு, பாங்கு கெடாமல் பங்களிக்க நேர்மையாக வேண்டிக்கொள்கிறேன். விக்கி நடைமுறைகளை ஒழுங்கு படுத்த சுந்தர் போன்ற அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டிக்கொள்கிறேன். இக்கூற்றுகளை வளர்முகமாக உள்வாங்கிக்கொண்டு, மேலும் இங்கே சொற்களை இட்டு வளர்க்காமல் இருக்கவும் வேண்டிக்கொள்கிறேன். --செல்வா 14:40, 8 ஜூன் 2009 (UTC)
செல்வம் தமிழ், நான் எதையும் மனதில் வைத்துக் கொண்டு உங்களிடம் பேசவில்லை. நீங்கள் பங்களிக்கத் துவங்கிய நாட்களில் உங்களை பேச்சுப் பக்கத்தில் நான்தானே வரவேற்றேன்? (பாருங்கள்) அதன் பின்னால் உங்களுக்கும் எனக்கும் எதுவும் பிணக்கு ஏற்பட்டதாக எனக்கு நினைவில்லை. ஆனால் துவக்கம் முதலாகவே எல்லாப் பயனர்களும் (கனகு, ரவி, கார்த்திக், நான் என) உங்களுக்கு எதிர்ப்பாக இருப்பதாக முன்கூட்டியே எண்ணிக் கொண்டு நீங்கள் காட்டமாக எழுதியதில் எனக்கு வருத்தம் கட்டாயம் உண்டு. இந்த விசயத்திலும் இசுலாம் கட்டுரையில் நீங்கள் மாற்றம் செய்தாலோ நடுநிலையைக் கேள்விக்குட்படுத்தினாலோ நான் கட்டாயம் வரவேற்றிருப்பேன். ஆனால், தொடர்பில்லாத விசயத்தில் ஒரு சமயத்தையும் தனி நபரையும் தாக்கி எழுதியதை மட்டுமே நான் விரும்பவில்லை. இவ்வாறு செய்பவர்களை எச்சரிக்கை செய்வதும், பயனர் கணக்கை ஒன்றிரண்டு நாட்கள் முடக்குவதும் பொதுவான விக்கி நடைமுறையாக இருந்தாலும், உங்கள் பங்களிப்புகள் கருதியே நான் வெறும் செய்தியாகத் தந்தேன். தவிர நீங்கள் நான் உங்களுக்கு எதிரானவன் என்ற கருத்தைக் கொண்டிருப்பதால் இது போலச் செய்வதில் எனக்கு கூடுதல் தயக்கம் உள்ளது. அதைச் சற்று புரிந்து கொள்ள முயலுங்கள். இப்போதும் சொல்கிறேன், நான் கூறியதில் பண்பில்லாமலோ, வேண்டுமென்றே மனதைக் காயப்படுத்தும் வகையிலோ எது இருந்தாலும் மன்னிப்பு கேட்பதில் எனக்குத் தயக்கம் இல்லை. இதற்கு முன்னர் தெரியாமல் காயப்படுத்தியதற்குக் கூட மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன். நீங்கள் நன்னம்பிக்கை கொண்டு பணியாற்ற முன்வந்தால் கட்டாயம் இணக்கமாக செயல்படுவேன். -- சுந்தர் \பேச்சு 15:02, 8 ஜூன் 2009 (UTC)

நான் எவ்வளவோ கூறியும் அவர் மீண்டும் மீண்டும் அதே இடத்திற்கே வருகின்றார். ஏற்கனவே நமது பயனர்கள் சமயக் க்டுரைகளில் நான் எழுதிய கட்டுரைகளில் உணர்ச்சி வசப்பட்டு கருத்து தெரிவித்தனர். அதற்கு முன்னரே நான் அக்கட்டுரை எழுதிய சூழ்நிலையை விளக்கிவிட்டேன் இருப்பினும் அக்கட்டுரையில் உஷ்ணத்துடன் கருத்து தெரிவித்தனர் கட்டுரையில் கருத்து கோவப்படக்கூடிய கருத்து. பார்க்க வர்ணம் (இந்து மதம்). இது நான் புதுப் பயனராக அப்பொழுதான் வந்தேன். அப்பொழுதே இது நடந்தது. அது தவறல்ல அதில் உள்ள வாசகம் அப்படி. நான் பயந்தேன் என்னைத் தவறாக நினைத்துவிடப் போகின்றார்கள் என்று. அதற்காக முன்பே தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டேன் இருந்தும் கருத்துகளை உஷ்ணத்துடன் தெரிவித்தனர். அதில் உள்ள கருத்து அப்படி.

அதே மாதிரி தான் இங்கு ஒரு சமயக் கட்டுரை கருத்து. இதை கட்டுரையாளரே இது பிற சமயத்தினர் ஏற்றுக் கொள்ளாத கட்டுரை இதன் வாசகங்கள் குறித்து எதிர்மறையான கருத்து தெரிவிப்பர் அதை பற்றி நான் கவலைப்படவில்லை என்னை சுதந்திரமாக எழுத விடுங்கள். என்று கூறியிருக்கின்றார்.

அதன்படி அவர் கட்டுரைகளில் என்ன விமர்சனம் வந்தாலும் இசுலாம் பற்றி கட்டுரை எழுதுவதை நிறுத்தாதீர்கள் விமர்சனம் வரும். அதை தீர்த்துக்களாம். என்று குறிப்பிட்டிருக்கின்றேன். இவ்வளுவும் குறிப்பிட்டு விட்டு தான் கருத்தையும் வெளியிட்டேன். அது என் கருத்து. இங்கு தொலைக்காட்சியில், பத்திரிகைகளில் விவாதிக்கப்பட்ட ஒன்று அதை அங்கு இட்டுள்ளேன். அதற்கு பிறகு அவ்வளவு விளக்கமும் கூறியுள்ளேன். ஒருவர் சமயத்தை வைத்து ஏசினார் என்பதை அவர் ஏசவில்லை என்று அவர் கூறியதைக் கூடப் பொருட்படுத்தவில்லை. அவருக்காக வாதாடியதைக் கூட பொருட்படுத்தவில்லை. அதற்கு முழு விளக்கமும் அவருக்காக அல்ல அந்த பயனுருக்காக, கொடுத்த பிறகும், அது முடிந்தவுடன் அடுத்த கேள்வி, அடுத்தது என்று தொடுத்து கொண்டே போனால். மீண்டும் மீண்டும் குரான்.....என்று குறிப்பிட்டால் அந்த சமயத்தை பின்பற்றுபவர்கள் ஒரு வேளை மீண்டும் என் மீது தாக்குதல் தொடுப்பார்களா? மாட்டார்களா? இதை அவர் செய்யலாமா? இது என்மீது தாக்குதல் தொடுக்கப்படுமா? என்னை ஏசியவருக்காக அவ்வளவு விளக்கத்தையும் கொடுத்தேன்.

மீண்டும் இவர் குரான்....என்று ஆரம்பிக்கின்றார். அந்த பற்றாளரை தூண்டி விடுமா? விடாதா? என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். அவர் விட்டாலும் நான் விட மாட்டேன் என்பது எதைக் குறிக்கின்றது. அவர் மீண்டும் ......என்னை..... நம் பயனர்களுக்கு எற்பட்ட அதே கருத்து மோதல்தான். நான் எழுதிய கட்டுரைகளில் குறிப்பிட்ட அதே மாதிரிக் கருத்து தான் இதுவும். ஏன் இவ்வளவு ஒரவஞ்சனை. இங்கு இருக்கும் எனக்குத் தவறாகப் படுமா படாதா என்று மட்டும் கூறுங்கள்.அவர் இங்கு சூழ்நிலை அறிந்தவர் பூடமாக தெரிவித்தும் வேண்டுமென்றால் மின்னஞ்சலில் கூட கேட்கலாம், அதை நான் பகிரங்காமாக குறிப்பிட முடியாது. இன்னொரு கட்டுரையாளரும், பயனரும் கவனிப்பார். மீண்டும் குரான் என்பது தான் சந்தேகத்தை எழுப்பியது. உண்மையில் அவர் அப்படி இருக்க்கூடாது என்பதே என் விருப்பம்.--செல்வம் தமிழ் 15:33, 8 ஜூன் 2009 (UTC)

சுந்தர் அந்த கருத்துக்கு வருத்த்தை தெரிவிக்கின்றேன். மின்னஞ்சலில் என்னை தொடர்பு கொள்ள முடியுமா? உங்களிடம் இருக்கும் என நினைக்கின்றேன்.--செல்வம் தமிழ் 17:13, 8 ஜூன் 2009 (UTC)