விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு62

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கி நூல்களுக்கு அழைப்பு[தொகு]

தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம் தங்களின் உதவியை நாடுகிறது

தமிழ் விக்கி நூல்கள் தங்களின் உதவியை நோக்கி உள்ளது. இதுவரை எந்த ஒரு உருப்படியான தமிழ் நூல்கள் (விக்கி மூலத்தில் உள்ள நூல்களைத் தவிர்த்து) எதுவும் இதுவரை இயற்றப்படவில்லை. எனவே தங்களின் உதவி விக்கி நூல்களுக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சுமார் 500 பக்கங்களிலே அங்கு நாம் கொண்டு உள்ளோம். எனவே நமது கவனம் விக்கி நூல்களின் பக்கமும் செலுத்தவேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். எனவே தங்களிடம் சில வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம். அவைகள்

  1. தாங்கள் விரும்பும் நூல்கள் (விக்கி மூலத்தின் அடுக்கில் கீழ் செல்ல முடியாத நூல்கள், முக்கியமாக பொது காப்புரிமையாக்கப்பட்ட நூல்களை) தமிழ் விக்கி நூல்களில் இருக்கின்றனவா என தேடித் பாருங்கள்.
  2. ஒரு வேளை அங்கு இல்லை என்றால் அந்த புத்தகத்தை ஆரம்பித்து வையுங்கள். முதற் பக்கத்தில் தாங்கள் எந்த எந்தத் தலைப்புகளெல்லாம் இருக்க வேண்டுமோ அவற்றைக் கொண்ட அந்த நூலின் முதற் பக்கத்தை ஆரம்பித்து வையுங்கள்.


தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம்.

இந்த வார்ப்புருவை விக்கிபீடியா அன்பர்களுக்கு அனுப்பி அவர்களை விக்கிநூல்களுக்கு பங்களிக்குமாறு அழைப்பு விடும்படி விக்கிபீடியா சமுக நண்பர்களை அழைக்கிறேன்.--Pitchaimuthu2050 08:53, 18 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

நான் நூல் எழுதத் தொடங்விட்டேன். இப்போதைக்கு ஒரு பத்து பேர் தினம் ஒரு பத்தி எழுதினாலே போதுமென்று எண்ணுகிறேன். --இராஜ்குமார் 10:28, 18 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

எவரேனும் மலர்கள் படிமங்கள் வைத்து இருப்பின் விக்கி நூல்களில் பதிவேற்றவும். மலர்கள் என்னும் நூல் தங்களின் பங்கேற்பை எதிர்பார்த்து உள்ளது.--Pitchaimuthu2050 08:08, 22 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

கல்வியில் விக்கி[தொகு]

பேர்கனில், பல்கலைக்கழகம் செல்லுவதற்கு முதல் நிலையிலுள்ள தமிழ் மாணவர்கள் சிலருக்கு, உயிரியல் பாடத்தில் உதவி செய்கின்றேன். அப்போது, அவர்களுக்குரிய பாடத்திட்டம், பயிற்சி கேள்விகள் போன்றவற்றை வழங்கும் ஒரு இணையத்தளத்தைப் பார்வையிட்டபோது, மிகவும் சுவாரசியமான விடயம் ஒன்றை அவதானித்தேன்[1]. அங்கு கொடுக்கப்பட்டிருந்த எழுத்து வடிவக் கேள்வி ஒன்றில், குறிப்பிட்ட தலைப்பிற்குரிய நேர்வேஜிய விக்கிப்பீடியா கட்டுரைக்கு இணைப்பைக் கொடுத்துவிட்டு, பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள். "விக்கிப்பீடியாவில் உள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள். இந்தக் கட்டுரை குறுகியதாகவோ, அல்லது முழுமையற்றதாகவோ இருப்பதை நீங்கள் காணலாம். இந்தக் கட்டுரையில் ஏதாவது பிழைகளை உங்களால் அடையாளம் காண முடிகின்றதா? இந்தக் கட்டுரையை முழுமையாக்க என்ன விடயங்களை நீங்கள் சேர்ப்பீர்கள்?". இதன்மூலம் மாணவர்களை விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை வாசிக்கத் தூண்டுவதுடன், அங்கே உள்ள பிழைகளை அவதானித்து திருத்தவும், மேலதிக தகவல்களை இணைக்கவும் தூண்டுகின்றார்கள் எனத் தோன்றுகின்றது. இதேபோல் தமிழில் கல்வி கற்கும் இடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களை தமிழ் விக்கிப்பீடியா பக்கம் இழுத்து வரலாம் எனத் தோன்றுகின்றது. --கலை 11:57, 21 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

அருமையான செய்தி கலை. விக்கிமீடியா அறக்கட்டளையும் இது போன்ற சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது--சோடாபாட்டில்உரையாடுக 14:59, 23 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
தகவலுக்கு நன்றி. நான் அவர்களுடைய பயிற்சிக் கேள்விக்கு உதவி, அதன்மூலம் அவர்களை நோர்வேஜிய விக்கிப்பீடியாவுக்கு கூட்டிச் சென்று, மெதுவாக தமிழ் விக்கிப் பக்கமும் கூட்டி வரலாம் என்று திட்டம் போடுகின்றேன் :).--கலை 12:17, 24 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா: சிறந்த கட்டுரைகள்[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியாவில் en:Wikipedia:Good articles என்ற பக்கத்தில் சிறந்த கட்டுரைகளுக்கான தொகுப்பு உள்ளது. இது போல நமது தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளதா? இல்லை எனில் இதை உருவாக்கலாமா? --கிருஷ்ணபிரசாத்உரையாடுக 14:02, 23 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

காண்க பகுப்பு:விக்கிப்பீடியா தரமறிதல் --சோடாபாட்டில்உரையாடுக 14:36, 23 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

சமச்சீர்க்கல்வி பாடப்புத்தகங்களில் விக்கிப்பீடியா[தொகு]

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள சமச்சீர்க் கல்வி பாடத்திட்டத்திற்கான பாடநூல்களில் “மேலும் அறிய” எனும் தலைப்பில் “இணையதளங்கள்” எனும் உட்தலைப்பில் விக்கிப்பீடியாவிற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஏழாம் ஆம் வகுப்புக்கான அறிவியல் பாடப் புத்தகத்தில்

  • 11 வது பாடமான “எரிதல் மற்றும் சுடர்” பாடத்தின் கடைசிப் பகுதியில் “மேலும் அதிகம் அறிவதற்கு” எனத் தலைப்பிடப்பட்டு “இணையதளங்கள்” எனும் உட்தலைப்பின் கீழ் ஆங்கில விக்கிப்பீடியாவின் குறிப்பிட்ட இணையப் பக்க முகவரி அளிக்கப்பட்டுள்ளது.

இது போல் எட்டாம் வகுப்புக்கான அறிவியல் பாடத்தில்

  • 2 வது பாடமான வளரிளம் பருவத்தை அடைதல்,
  • 3 வது பாடமான மனித உடல் இயக்கம்,
  • 4 வது பாடமான தாவர உலகம்,
  • 5 வது பாடமான் நுண்ணுயிரிகள்,
  • 7 வது பாடமான வனங்கள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாத்தல்,
  • 11 வது பாடமான நிலக்கரி மற்றும் பெட்ரோலியம்,
  • 13 வது பாடமான விசையும் அழுத்தமும்

ஆகிய பாடங்களுக்கான கடைசிப் பகுதியில் “மேலும் அறிய” எனும் தலைப்பில் “இணையதளங்கள்” உட்தலைப்பில் ஆங்கில விக்கிப்பீடியாவின் குறிப்பிட்ட பக்கங்களுக்கான இணைய முகவரி அளிக்கப்பட்டுள்ளன.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:26, 27 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

அருமையான செய்தி சுப்பிரமணி.--சோடாபாட்டில்உரையாடுக 14:33, 27 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஊக்கமளிக்கும் செய்தி, ஆங்கில விக்கி இணையதளம் குறிப்பிட்டிருந்தாலும் மாணவர்கள் தமிழ் விக்கிக்கு வர வாய்ப்பு அதிகம், குறிப்பிட்ட கட்டுரைகளை தரப்படுத்த வேண்டும். --குறும்பன் 14:40, 27 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

உற்சாகமளிக்கும் செய்தி.
  1. குறிப்பிட்ட பாடங்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்தை தரப்படுத்தவும் கூட்டவும் ஒரு குழுவாக இணைந்து காலதிட்டத்துடன் செயல்படுத்த முடியுமா ? தேனியார் ஒருங்கிணைத்தால் நான் ஒரு பங்களிப்பாளராக இணையத் தயார்.
  2. குறுந்தட்டு திட்டமும் பள்ளி மாணவர்களை குவியப்படுத்தி விரைவாக செயல்படுத்த வேண்டும்.
--மணியன் 14:52, 27 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
நல்ல விசயத்திலும் ஒரு குறை. 8ம் வகுப்பு ஆங்கில வழி பாடநூலகளில் தொடுப்பு (url) பல இடங்களில் தவறாக உள்ளது. தட்டச்சுப் பிழைகளைத் தவிர இல்லாத விக்கிக் கட்டுரைகளுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளன. (எ.கா. 2ம் பாடத்தில் கொடுக்கப்பட்ட தலைப்பில் ஆங்கில விக்கியில் கட்டுரையே கிடையாது)--சோடாபாட்டில்உரையாடுக 15:13, 27 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

தற்போது பாடதிட்டத்தில் உள்ள கட்டுரைத் தலைப்புகளை தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்குவது மற்றும் மேம்படுத்துவது ஆகிய செயல்களின் மூலம் மாணவர்களின் வருகை அதிகரிக்கலாம். --கிருஷ்ணபிரசாத் 15:50, 27 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

  • என் நண்பர் ஒருவரின் மகன் பள்ளிக்கல்வித் துறையின் ஆங்கிலவழிக் கல்வியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். அவன் என்னிடம் எங்கள் புத்தகத்தில் விக்கிப்பீடியான்னு போட்டிருக்கிறது என்றான். வாங்கிப் பார்த்தேன் விக்கிப்பீடியா இணைய முகவரிகள் இருந்தன. தமிழ் வழிக் கல்விக்கான எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்திலும் விக்கிப்பீடியா இணைய முகவரிகள் இருந்தன. (என் மகள் எட்டாம் வகுப்புதான் படித்து வருகிறாள். மெட்ரிக் முறையில் படித்து வரும் அவளுக்கு சமச்சீர்க் கல்விப் பாடப்புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. காலாண்டுத் தேர்வுக்குப் பின்பு வழங்கப்படலாம் என நினைக்கிறேன்.) ஒன்பது, பத்தாம் வகுப்பு அறிவியல் பாடங்களிலும் விக்கிப்பீடியாவிற்கான இணைய முகவரிகள் இருக்கக் கூடும் என நினைக்கிறேன். பாடப்புத்தகத்தில் குறிப்பிட்ட விக்கிப்பீடியா பக்கத்திற்கான முகவரி தவறாக இருப்பினும், இணையம் பயன்படுத்தும் மாணவர்கள் விக்கிப்பீடியா குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பு அதிகமாகி வருகிறது. தவறான முகவரி குறித்து தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்திற்கு நாம் தெரிவிக்கலாம். அடுத்துப் புதிதாக அச்சிடும் புத்தகங்களில் சரியான முகவரியை வெளியிடக்கூடும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:45, 27 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
நாம் இனிப் பள்ளிப்பாடங்களுக்குரியவைகளை, இங்கு விரிவுபடுத்துதலைத் துவங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைக் கவனிக்கிறேன்.அடுத்தவருடம் பள்ளி மாணவர்களின் வருகை அதிகரிக்கும். அதற்குள் நாம் செயல்பட வேண்டுகிறேன்.18:35, 27 செப்டெம்பர் 2011 (UTC)உழவன்+உரை..
பாடநூல்களில் குறிக்கப்பட்டுள்ள ஆங்கில விக்கிப்பக்கங்களின் இணைப்புகளைத் தந்தால் அவற்றின் தமிழ்க் கட்டுரைகளை மேம்படுத்த முயலலாம்.--Kanags \உரையாடுக 22:18, 27 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
நல்ல செய்தி, தேனி சுப்பிரமணி. :) ஆங்கில விக்கிகளுக்கான இணைப்பாகவும் பிழையான சுட்டிகளாக இருப்பினும் இது ஒரு நல்ல வளர்ச்சி தான். http://www.textbooksonline.tn.nic.in/Std8.htm என்ற இணைப்பில் உள்ள பாடங்களில் எவ்வெவ் கட்டுரைகளுக்கு இணைப்பு தந்திருக்கிறார்கள் எனப் பார்த்து இணைக் கட்டுரைகளை மேம்படுத்துவோம். -- சுந்தர் \பேச்சு 03:00, 28 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
குறிப்பிட்ட பாடங்களுக்கான கட்டுரைகளை மட்டும் விரிவுபடுத்துவோம் என்கிற நிலையை விட தமிழ் வழி அறிவியல் பாடங்களிலுள்ள அனைத்துத் தலைப்புகளுக்குமான கட்டுரைகளையும் தமிழில் உருவாக்குவோம். இதற்காக குறிப்பிட்ட கால அளவு நிர்ணயித்துக் கொண்டு செயல்பட்டால் தரமான கட்டுரைகளாகவும், பள்ளி மாணவர்களுக்கு உதவக்கூடிய கட்டுரைகளாகவும் உருவாக்குவோம். தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்திடம் தமிழ் வழிக் கல்விப் பாடப் புத்தகங்களுக்கு, தமிழ் விக்கிப்பீடியா இணைய முகவரிகளை அளித்துப் பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்ய வேண்டுவோம். முதலில் அறிவியல் பாடப் புத்தகங்களுக்கு மட்டும் இந்த நிலையை எடுத்தாலும், அடுத்தடுத்து தமிழ், கணிதம், சமூக அறிவியல் என அனைத்துப் பாடங்களுக்குமான பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள பாடங்களுக்குமான கட்டுரைகளை உருவாக்க முயற்சிக்கலாம்.மணியன் குறிப்பிட்டது போல் இதற்கென கல்வியாளர்களாக உள்ள விக்கிப்பீடியர்களைக் கொண்டு “விக்கிப்பீடியா: தமிழ்நாடு அரசு பாடத் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு” ஒன்றைக் கூட உருவாக்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:38, 28 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
ஆம், பயனர்:பரிதிமதி, பயனர்:Parvathisri போன்ற கல்வியாளர்களின் கருத்துக்கள் வேண்டப்படுகின்றன.--மணியன் 04:41, 28 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

பாடங்களில் உள்ள விக்கி கட்டுரை இணைப்புகள்[தொகு]

ஏழாம் வகுப்புக்கான அறிவியல் பாடத்தில்
பாடம் எண் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ள ஆ.விக்கி தொடுப்பு இணையான த.வி தொடுப்பு
11 எரிதல் மற்றும் சுடர் http://www.en.wikipedia.org/wiki/combustion தகனம்
எட்டாம் வகுப்புக்கான அறிவியல் பாடத்தில்
பாடம் எண் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ள ஆ.விக்கி தொடுப்பு இணையான த.வி தொடுப்பு
2 வளரிளம் பருவத்தை அடைதல் http/en.wikipedia.org/wiki/smokinghazards புகையிலை பிடித்தல், புகைத்தல்
3 மனித உடல் இயக்கம் www. en.wikipedia.org/wiki/cell - (biology) உயிரணு
4 தாவர உலகம் www.en wikipedia org/ wiki/plants தாவரம்
5 நுண்ணுயிரிகள் www. en.wikipedia.org/wiki/micro organism. நுண்ணுயிர்
7 வனங்கள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாத்தல் www.en wikipedia org/wiki/forest; www.en wikipedia org/ wiki/plants காடு, தாவரம்
11 நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் www.en.wikipedia.org/wiki/Non-renewable _resources. புதுப்பிக்கவியலா வளம்
13 விசையும் அழுத்தமும் www.en.wikipedia.org/wiki/pressure அழுத்தம்

---மணியன் 06:42, 28 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஒன்பதாம் வகுப்புக்கான அறிவியல் பாடத்தில்
பாடம் எண் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ள ஆ.விக்கி தொடுப்பு இணையான த.வி தொடுப்பு
4 தாவரங்களின் அமைப்பும் செயல்பாடுகளும் http://www.en.wikipedia.org
பத்தாம் வகுப்புக்கான அறிவியல் பாடத்தில்
பாடம் எண் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ள ஆ.விக்கி தொடுப்பு இணையான த.வி தொடுப்பு
8 கழிவு நீர் மேலாண்மை http://www.en.wikipedia.org/wiki/sewage-treatment கழிவு நீர்
16 மின்னோட்டவியலும் ஆற்றலும் http://www.en.wikipedia.org/ மின்னோட்டம், ஆற்றல் மின்னணுவியல்

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:39, 28 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

  • நன்றி.இதுபோல பட்டியலிடுவதால் குறிப்பிட்டக் கட்டுரையை மேம்படுத்த வசதியாக இருக்கிறது. நுண்ணுயிர் கட்டுரையைச் சற்று மேம்படுத்தியுள்ளேன்.07:37, 28 செப்டெம்பர் 2011 (UTC)உழவன்+உரை..


//குறிப்பிட்ட பாடங்களுக்கான கட்டுரைகளை மட்டும் விரிவுபடுத்துவோம் என்கிற நிலையை விட தமிழ் வழி அறிவியல் பாடங்களிலுள்ள அனைத்துத் தலைப்புகளுக்குமான கட்டுரைகளையும் தமிழில் உருவாக்குவோம்.// இந்த செயற்பாடு அவசியமாயினும், முதலில் பாடநூல்களில் குறிக்கப்பட்டுள்ள பக்கங்களின் தமிழ்க் கட்டுரைகளை மேம்படுத்த முயலலாம். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்வதென்பது சிறிது கடினமாக இருக்கும். --கலை 15:00, 28 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கியில் அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றவர்கள், ஆர்வமுடையவர்கள், கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துச் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். எனக்கு அறிவியல் அதிக ஈடுபாடு இல்லை என்பதால், மணியன் குறிப்பிட்டது போல் என்னால் இதை ஒருங்கிணைக்க இயலாது. இதற்கென மணியன் தலைமையில் ஒரு குழுவை அமைக்கலாம். அவர் மறுக்கும் நிலையில் செல்வா, சோடாபாட்டில் போன்ற அறிவியல் ஆர்வமுடையவர்களைத் தலைமை ஏற்கச் செய்யலாம். இருப்பினும் குழுவில் ஒருவராகவோ அல்லது இல்லாமலோ பிற பணிகளில் உதவமுடியும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:49, 28 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
சோடாபாட்டில் போன்ற அறிவியல் ஆர்வமுடையவர்களை மன்னியுங்கள் எனது அறிவியல் அறிவு/ஆர்வம் மிகக் குறைவு. இது போன்ற ஒரு திட்டத்தை திட்டமிட்டு ஒருங்கிணைக்கும் அளவுக்கு எனக்கு துறை அறிவு போதாது :-).--சோடாபாட்டில்உரையாடுக 04:58, 29 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
பள்ளிப்பாடங்களை விரிவுபடுத்துவோம.உருவாக்குவோம்.நேற்று நானும் 9ஆம்வகுப்பு அறிவியல் பாடங்களை அரைமணிநேரம் ஒரு நோட்டம் விட்டேன். அதே முற்படுதலை தேனீயும் செய்திருக்கிறார். 9ஆம் வகுப்பின் பிற அறிவியல் பாடங்களில் வேறு எங்கும் விக்கியைப் பற்றிய குறிப்பு இல்லை. எனவே, நாம் செய்ய வேண்டியதைப் பகிர்ந்து கொள்வோம். நேரவிரயம் ஏற்படாது. பட்டியலைக் கண்டு பாடங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட முனைப்பாக உள்ளேன். உயிரியல், வரலாறு, சட்டம் ஆகிய துறைகளில் எனக்கு ஈடுபாடு அதிகம்.04:41, 29 செப்டெம்பர் 2011 (UTC)உழவன்+உரை..
இதனை இன்னார்தான் செய்யலாம் என்பது விக்கிக்கொள்கைக்கு முரணானது ;) செய்யவேண்டுவனவற்றைப் பட்டியலிடுவோம். விக்கி ஆர்வலர்கள் தங்களுக்கு உவப்பான/ஆர்வமுள்ள பாடங்களை விரிவுபடுத்துவார்கள். தமிழக அரசுத்துறைகளின் இயக்கத்திலும் சிற்றூர் பள்ளிகளின் தேவையையும் அறிந்தவர் என்ற முறையிலேயே தேனியாரை

ஒருங்கிணைக்கப் பரிந்துரைத்தேன். இங்கு அனைவரின் கவனத்தையும் கவர்ந்ததிற்கு அவருக்கு மிக்க நன்றிகள் !!--மணியன் 07:20, 29 செப்டெம்பர் 2011 (UTC) அறிவியல் பாடங்கள் (பாட நூல்களாக) எழுதுவதற்கு உகந்தது விக்கி நூல்களே. விக்கிப்பீடியாவில் அறிவியல் பாடங்களுக்கேற்ற தகவல்களைத் தரமுடியும்.--Kanags \உரையாடுக 07:28, 29 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

Kanags தாங்கள் கூறுவது மிகவும் சரியே. தற்போது தமிழ் விக்கி நூல்கள் புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது, அறிவியல் பாடத்தை அங்கு தொக்குக்கலாமே! பாடநூல்கள் என்றொரு பிரிவும் அங்கு உள்ளது. உலகம் எங்கிலும் இருக்கும் தமிழ் பாட நூல்களை இங்கு உருவாக்க வேண்டும் என்பது நமது நோக்கம். இதன் மூலம் பிற நாட்டு நூல்களின் (ஈழம், சிங்கப்பூர், மலேசியா மேலும் பிற நாட்டு தமிழ் நூல்களை குறிப்பிடுகிறேன். ) தரம் பற்றியும் ஒரு மாணவனால் அல்லது ஆசிரியரால் தெரிந்து கொள்ள முடியுமே. [மேலும் சுட்டப்பட்டுள்ள விக்கி கட்டுரைகள் என்று தலைப்பிற்குப் பதில், பாடநூல்களில் விக்கியின் கட்டுரைகள் என்று தலைப்பிட்டு இருந்தால் விக்கி சமுதாய அன்பர்களின் உள்ளம் உயர்வானதாக இருப்பதை உணர்த்தி இருக்கும்! ஏனெனில் நமது கட்டுரைகள் பாடநூல்களில் வருவது என்பது நமக்குப் பெருமையே. அதை விடுத்து சுடப்பட்ட என்ற அடைமொழி முற்றிலும் தவறானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.] அன்புடன் --Pitchaimuthu2050 05:59, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
”சுட்டப்பட்டுள்ள” என்பது “குறிப்பிடப்பட்ட” என்ற பொருளில் எழுதினேன்; “சுடப்பட்ட” / “திருடபட்ட” என்ற பொருளில் அல்ல. “சுட்டப்பட்டுள்ள” என்னும் ப்யன்பாடு பொதுவானது தானே. அதை எப்படி இழிவான பொருளில் கொள்கிறீர்கள் எனப் புரியவில்லை. எனினும் குழப்பம் வராமல் இருக்க இப்போது தலைப்பை மாற்றியுள்ளேன். --சோடாபாட்டில்உரையாடுக 06:09, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

வணக்கம்.

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்திற்கான கட்டுரைகளுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். வழிமுறைகளும் குறிப்புகளும் தந்து உதவுங்கள். மேலும் சிறுவர் பாட நூல்களுக்கான மாதிரிப் பாடத்திட்டம் ஒன்றையும் (விக்கி நூல்கள்- ஆலமரத்தடியில் காண்க) உருவாக்கியுள்ளேன். அவைகள் குறித்த உங்கள் கருத்துகள் அளித்தால் உதவியாக இருக்கும்.--Parvathisri 17:32, 3 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

எச்சரிக்கை செய்தி தோன்றுவதன் காரணம் என்ன?[தொகு]

எச்சரிக்கை: பராமரிப்புக்காகத் தரவுவழங்கன் பூட்டப்பட்டுள்ளது, எனவே உங்கள் தொகுப்புக்களை இப்பொழுது சேமிக்க முடியாது. உங்கள் உரையை இன்னொரு உரைக் கோப்பில் வெட்டி ஒட்டி சேமித்துவைத்துப் பின்பு உபயோகிக்கலாம். சேமிக்கும் போது மேலுள்ள செய்தி தோன்றி, சேமிக்க முடியாமல் போவதற்கு காரணம் என்ன?--HK Arun 07:20, 28 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

  • இது தற்காலிகமானது.தரவு வழங்கும் கணினியை மேம்படுத்தும் போது, இது நிகழ்கிறதென எண்ணுகிறேன்.07:35, 28 செப்டெம்பர் 2011 (UTC)உழவன்+உரை..


தற்காலிக தரவுதள தொழில்நுட்ப சிக்கல். வழங்கிகளில் ஏதேனும் இற்றை நடந்து கொண்டிருக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 07:46, 28 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி! இப்பொழுது சேமிக்க முடிகிறது.--HK Arun 07:54, 28 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]


தமிழ் விக்கி ஊடகப் போட்டி[தொகு]

பதிவு செய்யப்பட்ட கருத்துகளும், திட்ட முன்மொழிவும் - விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி பக்கத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது. தெரிவிக்கப்பட்ட கருத்துகளை கருத்தில் கொண்டு, போட்டி பற்றிய நோக்கம்/விதிகள்/திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய முன்மொழிவு அங்கு இடப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை அங்கு இட வேண்டுகிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 16:14, 4 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள்[தொகு]

வணக்கம் தமிழ் விக்கிப்பீடியா , விக்கிநூல்கள் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
உன் அறிவுப் பாதை மேலும் வளரட்டும்!
8ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு எனது வாழ்த்துக்கள். எமது விக்கி மென்மேலும் வளர்ந்து கட்டற்ற தகவல் கலைக்களஞ்சியங்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ உழைக்கும் அனைத்து விக்கிப்பீடியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.--Kanags \உரையாடுக 06:21, 30 செப்டெம்பர் 2011 (UTC).[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவின் 8 ஆவது ஆண்டு நிறைவிற்கும், அதனை வளர்த்தெடுக்க முயற்சித்த, முயற்சித்துக் கொண்டிருக்கும் அனைத்து விக்கிப்பீடியர்களுக்கும் எனது வாழ்த்துக்களும். --கலை 08:07, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவின் எட்டாவது ஆண்டு பிறந்த நாளுக்கு எனது வாழ்த்துக்கள்! தமிழ் விக்கிப்பீடியாவை வளர்த்தெடுக்கும் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 09:02, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
நம்மால் சோறூட்டப்பட்டு வளர்ந்துகொண்டுள்ள அன்பு விக்கிக் குழந்தைக்கு 8ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். முடிந்தால் வழங்கிக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடலாம். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

தனது எட்டாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தமிழ் விக்கிபீடியாவுக்கு எனது வாழ்த்துக்கள். தமிழ் விக்கிபீடியா தனது ஒன்பதாம் ஆண்டில் காலடி பதிக்கும் இந்த வேளையில் எம்முன் பல பணிகள் காத்திருக்கின்றன.

  • தமிழ் விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை மேம்படுத்தி பல சிறப்புக் கட்டுரைகளை ஆக்கல்.
  • கட்டுரைகளின் எண்ணிக்கையை உயர்த்துதல்
  • தமிழ் விக்கிபீடியாவின் ஏனைய பிரிவுகளான விக்கிநூல்கள், விக்கிமேற்கோள் போன்றவற்றை வளர்த்தெடுத்தல்
  • உருவாக்கப்படாத பிரிவுகளான விக்கி பல்கலைக்கழகம், விக்கியினங்கள்(நிலைமை கவலைக்கிடம்) போன்றவற்றை உருவாக்கல்.

ஆகவே, இந்த பிறந்தநாளில் விக்கியன்பர்கள் அனைவரும் உறுதியெடுத்துக் கொள்வோமாக. வாழ்த்துக்களுடன்.....--Prash 13:35, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

  • தமிழ் விக்கிப்பீடியா ஆற்றி வந்துள்ள தொண்டு இப்பொழுதே வரலாற்றுப்புகழ் வாய்ந்தது. இதில் பங்களித்த ஒவ்வொரு உள்ளங்களுக்கும் உடன் பங்களிக்கும் என் உளமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். தமிழ் விக்கிப்பீடியா வரும் ஆண்டுகளில் இன்னும் சிறந்தொளிரும் என்று திண்ணமாக நம்புகின்றேன். பலர் ஒன்றிணைந்து ஆக்கும் இந்த அறிவாக்கப் பணியில் மிகப்பெரும்பாலும் நாம் கைக்கொண்ட மிக நல்ல உரையாடல் பண்பையும், வளர்முக அணுக்கத்தையும், அறிவடிப்படையான, நேர்மையான அணுகுமுறையும் மேன்மேலும் பேணி வளர்த்து, ஒப்பற்ற பல்துறை அறிவுக்களஞ்சியமாக இதனை வளர்த்தெடுப்போம்! இன்னும் பல தமிழர்களிடையே பயன்பெருகுமாறு பரப்புரை செய்ய வேண்டியுள்ளது. தொடர்ந்து ஊக்கம் தந்து ஈடுபடுத்தவும் வேண்டியுள்ளது. அண்மையில் நான் மலேசியா சென்றிருந்தமொழுது அங்கு கோலாலம்பூர், பாரிட் புந்தார், மலாக்கா ஆகிய இடங்களில் விக்கிப் பட்டறைகள் நடத்தினேன். பினாங்கிலும் எடுத்துரைத்தேன். மிக ஏராளமாக நல்லார்வம் மிக்கத் தமிழர்கள் உள்ளார்கள். ஆனால் பரப்புரையும், விரிவாக்க முயற்சிகளையும் இடைவிடாதும், பொறுமையாகவும், தக்க வழிகளுடனும் பின் பற்றி வளர்த்தெடுக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களை, அடுத்தடுத்து வரும் தலைமுறையினரை ஈடுபடுத்த உழைக்க வேண்டும். செம்மை ஒளிர வாழ்க தமிழ் விக்கிப்பீடியாவும், அதன் உறவுத்திட்டங்களும்!! --செல்வா 18:04, 3 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

Language support group for Tamil[தொகு]

The Wikimedia Foundation has brought together a new team of developers who are dedicated to language support. This team is to support all the languages and consequently it is not realistic to expect that the team members can provide proper support for your language. It is for this reason that we are looking for volunteers who will make up a language support team.

This language support team will be asked to provide us with information about their language. Such information may need to be provided either to us or on a website that we will indicate to you. Another activity will be to test software that will likely have an effect on the running of the MediaWiki software. We are looking for people who clearly identify their ability. Formal knowledge is definitely appreciated.

As much of the activity will be concentrated on translatewiki.net, it will be a plus when team members know how to localise at translatewiki.net. Thanks, Gmeijssen 12:03, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இந்திய மொழி விக்கித்திட்டங்கள் வளர்ச்சித் திட்டம் -- விக்கியூடக ஆலோசகர் ஷிஜு அலெக்ஸ்[தொகு]

இந்திய விக்கியூடக அலுவலகத்தில் இந்திய மொழி விக்கி வளர்ச்சித் திட்ட ஆலோசகராக மலையாள விக்கியர் ஷிஜு அலெக்ஸ் பணியில் சேர்ந்துள்ளார் அறிவிப்பு. அவர் இந்திய மொழி விக்கித்திட்டங்களுக்காக பெரும் வளர்ச்சித் திட்டம் தீட்டவுள்ளார்.இத்திட்டத்தை தீட்ட அவர் இந்திய மொழி விக்கித்திட்டங்களின் பங்களிப்பாளர்களுடன் கூட்டாக தயாரிக்க முனைகிறார். அதற்கான யோசனைகளை அவர் வரவேற்க்கிறார். மேலும் அவர் சமீபத்தில் சென்னை வந்த பொழுது, தற்செயலாக சூர்யாவையும் மணியணையும் சந்தித்து தமிழ் விக்கித்திட்டங்கள் பற்றி உரையாடினார்.சந்திப்பின் குறிப்பு ஸ்ரீகாந்த் 14:27, 1 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

  • FOSS(Free and open source software) மாநாட்டில் சூர்யா, சோடாபாட்டில் கடை பரிசுபெற்றது, மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துக்கள்.இதுபோன்ற புற விக்கிப்பீடியச் செய்திகளை இனி ஆலமரத்தடியில் இட்டால் நன்றாக இருக்கும்.RSMN-ன் விக்கிமூலம் குறித்தவையும்,இறுவட்டுக்கா அதிக நேரம் ஒதுக்க வேண்டாம் என்று கூறிய அலெக்சின் கருத்தும் சிந்திக்க வைத்தன.02:59, 3 அக்டோபர் 2011 (UTC)உழவன்+உரை..


உருமேனியா கட்டுரை கண்னுக்கு தெரியாமல் இருக்கக் காரனம் என்ன?[தொகு]

உருமேனியா கட்டுரை வெற்று கட்டுரையாக தோற்றமளிக்கின்றது. ஆனால் அதனைத் தொகுத்தாலோ அதில் உள்ளடக்கம் இருப்பது தெரிகின்றது. இது எனக்கு மட்டும் இப்படி தெரிகின்றதா? இது எதனால் வருகின்றது? மேலும் இதனை எவ்வாறு சரி செய்வது? (காண்: [2]) --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:02, 9 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

இப்போது சரி செய்திருக்கிறேன். convert வார்ப்புருவில் அண்மையில் செய்யப்பட்ட மாற்றம் ஒன்றே இவ்வாறு சில பக்கங்களை வெற்றுக் கட்டுரையாகக் காண்பிக்கிறது. எங்கே அந்த மாற்றம் செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 06:24, 9 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி திரு. கனகரத்தினம். AWBBot கொண்டு என்னால் முடிந்தவரை எல்லா கட்டுரைகளையும் சரி பார்த்துவிட்டேன். :-) --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:53, 9 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
அருமை ஜெயரத்தினா. நான் செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் முடித்து விட்டீர்கள் :-)--சோடாபாட்டில்உரையாடுக 13:57, 9 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
மீடியாவிக்கி 1.18 பதிப்பு வெளியானதிலிருந்து convert வார்ப்புருவில் குறை எண் (negative numbers) கொடுத்தால் இம்மாதிரி ஆகிவிடுகிறது. வெற்றாக உள்ள பிற கட்டுரைகளைக் கண்டால் அதில் இவ்வாறு convert வார்ப்புரு உள்ளதா என்று சோதித்துப் பார்த்து சரி செய்யுங்கள். உருமேனியா கட்டுரையை கனக்ஸ் சரி செய்துள்ளார்.--சோடாபாட்டில்உரையாடுக 06:25, 9 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி திரு. சோடாபாட்டில். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:53, 9 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]