கழிவு நீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கழிவு நீர் என்பது வீட்டுக்கழிவு, வணிகக் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுகளால் மாசடைந்த நீரினைக் குறிக்கும். பொதுவாக இது நகராட்சியின் கழிவு வாய்க்கால்களில் செல்லும் நீரைக் குறிக்கும். இது கழிவு நீரைப் பல வகையான மூலங்களில் இருந்தும் பெறுகிறது.

மூலங்கள்[தொகு]

  • மனிதக் கழிவுகள் (மலம், சிறுநீர் முதலியன)
  • பாத்திரம் கழுவும் நீர், துவைக்கும் போது வெளியேறும் நீர்
  • கட்டிடங்களின் மீது படிந்து வரும் மழைநீர்
  • வீடு/கட்டிடங்களில் மிகும் சாயம், உயவு எண்ணெய் போன்ற பொருட்கள்
  • தொழிற்சாலைக் கழிவுகள்

கழிவு நீரில் அடங்கியுள்ள பொருட்கள்[தொகு]

  • நீர் (95%க்கும் மேலாக)
  • பாக்டீரியா, புழுக்கள் முதலானவை
  • உணவு, காகிதம், மலம், முடி முதலான கரிமப் பொருட்கள்
  • யூரியா முதலான கரையக்கூடிய கரிமப்பொருட்கள்
  • உலோக/மணற் துகள்கள்
  • நச்சுப்பொருட்கள்
  • சாயம் முதலான வேதிப்பொருட்கள்
  • மீத்தேன் முதலான வாயுக்கள்
  • பூச்சிகள் முதலான உயிரினங்கள்
  • ஊசிகள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் முதலான திடக்கழிவுகள்
"http://ta.wikipedia.org/w/index.php?title=கழிவு_நீர்&oldid=1403354" இருந்து மீள்விக்கப்பட்டது