விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு57

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கை நவமணி இதழில் விக்கிப்பீடியா+புன்னியாமீன்[தொகு]

Nawamani.jpg

புன்னியாமீன் தமிழ் விக்கிப்பீடியாவில் 3000 கட்டுரைகள் எழுதியதைப் பாராட்டி இலங்கையின் நவமணி வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. புன்னியாமீனின் சாதனை தவிர தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஒரு சிறு அறிமுகமும், மயூரநாதன் பற்றி ஒரு சிறு தகவலும் இடம் பெற்றுள்ளன்.--சோடாபாட்டில்உரையாடுக 10:53, 25 சூன் 2011 (UTC)

நல்ல செய்தி, சோடா. -- சுந்தர் \பேச்சு 14:42, 26 சூன் 2011 (UTC)
நல்ல செய்தி, பாராட்டுகள். ஆனால் ஒன்றை இங்கு நினைவுகூர்வது தகும் என்று கருதுகின்றேன். கட்டுரை எண்ணிக்கை என்பதை அதிகம் கருத்தில் கொள்வதைவிட, நல்ல பயன் தரக்கூடிய கட்டுரைகளா, நல்ல தரம் உள்ள கட்டுரைகளா, தமிழர்களுக்குத் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள துணை செய்பவையா, தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடிய கட்டுரைகளா, தக்க தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளனவா, என்றவாறு நம் சிந்தனைகள் இருப்பது நல்லது. மயூரநாதன் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி என்பதைவிட, அவர் 3000+ கட்டுரைகள் எழுதியவர் என்பதைவிட, அவர் எத்தனை அக்கறையாக, பார்த்துப் பார்த்து, எந்தெந்த தலைப்புகளில் கட்டுரைகள் இருக்க வேண்டும் என்று கண்ணும் கருத்துமாக இயங்கி அடித்தளம் அமைத்தார், இன்றும் தொடர்ந்து அமைத்து வருகின்றார் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அண்மையில் பென்சில்வேனியாவில் நடந்த 2011 தமிழ் இணைய மாநாட்டில் (சூன் 17-19, 2011) கூட்டாசிரியப் படைப்பு:தமிழ் விக்கிப்பீடியா என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையைப் படித்தேன். அப்பொழுது மயூரநாதன் பெயரைச் சொல்லி அவரின் பங்களிப்பைச் சொன்ன பொழுது, என்னையும் அறியாமல், எத்தனையோ கட்டுரைகளைப் படித்த எனக்கு, என் நா தழுதழுத்துவிட்டது, நான் உடனே கட்டுபப்டுத்திக்கொண்டேன், எனினும் சிலர் (முனைவர் சங்கர் சங்கரபாண்டி போன்றோர்) உணர்ந்துவிட்டனர். எதற்காக இதனைக் கூறுகின்றேன் என்றால் கட்டுரைகளின் தலைப்புகளும், அதன் தரமும், ஆழமும் இன்னும் பலவும் மிக மிக முக்கியம். எண்ணிக்கையை மட்டும் உயர்த்தி முன்னிலைப் படுத்தாமல் இருப்பது நல்லது. பல இன்னல்களுக்கும் இடையே, மிக முனைப்பாகவும் மிக ஆர்வமாகவும் பங்களித்த புன்னியமீன் அவர்களின் உழைப்பையும் ஆக்கங்களையும் நான் மிகவும் போற்றினாலும், உயர் குறிக்கோளைக் கருத்தில் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன். இவை எல்லாம் என் தனிப்பட்ட கருத்துகள்தாம், அருள்கூர்ந்து வளர்முகமாக அணுகி பொருள்கொள்ள வேண்டுகிறேன். --செல்வா 02:34, 29 சூன் 2011 (UTC)
விக்கிப்பீடியாவைப் பொருத்தவரையில் அனைத்துக் கட்டுரைகளும் பயன் தரக்கூடியவையே. எத்துறையானாலும் வேண்டிய தகவல் தரக்கூடியதாக இருக்க வேண்டும். ஒருவரை குறிப்பிட்ட துறைகளில் தான் கட்டுரை எழுத வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது முறையாகாது. எத்துறையானாலும் வேண்டிய தகவல் இருக்க வேண்டியது அவசியம்.--Kanags \உரையாடுக 07:36, 29 சூன் 2011 (UTC)
ஆம். எண்ணிக்கையும் வேண்டும் ஆழமும் வேண்டும். ஆழ உழுபவர் சிலர், அகல உழுபவர் வேறு சிலர். ஒருவர் ஒன்று கொடுக்கிறார் என்றால் அவரை இது வேண்டாம் அது செய் என்று சொல்லக் கூடாது. மேலிருந்து கீழாக நமக்கு இது தேவை இது செய் என்று செய்பவரைச் சுட்டுவது பின் இருக்கை வண்டி ஓட்டுதலுக்கு சமானமானது. செய்பவரின் மனத்தை சோர்வடையச் செய்யுமேயொழிய வேறொன்றும் இதனால நிகழப்போவதில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 08:03, 29 சூன் 2011 (UTC)
ஒரே துறையைப் பற்றிய கட்டுரைகளை எழுதுவதை செல்வா வேண்டாம் என்றோ, குறைத்து மதிப்பிட்டோ சொல்லவில்லை என்று நினைக்கிறேன். எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒப்பிடும் போக்கு எதுவும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சொல்லியிருக்கலாம். கூடவே மயூரநாதனின் அளப்பரிய (இன்னும் துணிந்து சொன்னால் ஒப்பற்ற) பங்களிப்பைப் பற்றி தனது எண்ணத்தையும் பதிவு செய்யும் நோக்கில் அவர் எழுதியிருக்கிறார். விக்கி சமூகத்துக்குள் அனைவரது பங்களிப்புகளையும் உணர்ந்து போற்றுகிறோம். நாளிதழ்களில் எழுதுவோர் அவ்வாறில்லை. அதனால் நம்மால் ஆன வரையில் கூட்டாக்கத்தை வலியுறுத்துவோம். எந்தவொரு நேர்காணலானாலும் 'Like everything in the wikiverse, the credit belongs to all contributors. The stories you find below are merely instances in the overall space." போன்ற ஒரு அறிவிப்போடு தான் தொடங்குகிறேன். ஆனாலும் அவர்கள் எழுதுவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. -- சுந்தர் \பேச்சு 09:59, 29 சூன் 2011 (UTC)
>>புன்னியமீன் அவர்களின் உழைப்பையும் ஆக்கங்களையும் நான் மிகவும் போற்றினாலும், உயர் குறிக்கோளைக் கருத்தில் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன். இதற்கு வேறு அர்த்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தெளிவாகவே சொல்லியுள்ளார். “உயர்” என்ற பயன்பாடு இங்கு முகத்தில் அடிப்பது போல இருக்கிறது. இரு பயனர்களின் விக்கி பங்களிப்புகளை ஒப்பீடு செய்வது விசயமறியா இதழாளர்கள் செய்யலாம். விசயமறிந்து விக்கியர்கள் செய்யலாமா? --சோடாபாட்டில்உரையாடுக 10:18, 29 சூன் 2011 (UTC)

நண்பர்களே, நான் யாரையும் குறைகூறவில்லை. எந்த வகையான பங்களிப்பையும் குறைகூறவில்லை. நான் என்னால் இயன்றவரை, பாராட்டியும், ஊக்கம் தந்துமே வந்துள்ளேன். நான் கூறவந்ததை, அருள்கூர்ந்து வளர்முகமாக அணுகிப் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். நாம் தன் திறனாய்வு செய்ய அஞ்சினாலோ, தவறினாலோ இழப்பு நமக்குத்தான் (இங்கே நான் "நாம்" என்பது தமிழ் விக்கி குழுமத்துக்கு). நாம் அனைவரும் கூட்டிணக்கமாக, கூட்டுழைப்பு தந்து தமிழ் விக்கிப்பீடியாவைச் சிறந்ததொன்றாக ஆக்குவோமே என்னும் நேக்கில்தால் கூறினேன். முன்பும் நாம் ஒருவரிக் கட்டுரைகளை, அல்லது மிகவும்குறைவான உள்ளடக்கக் கட்டுரைகளை அதிகம் எழுத வேண்டாம் என்று கூறி வந்துள்ளோம் (ஏன் ஒரு வரிக் கட்டுரைகள் சிறிதளவாவது கருத்து சொல்லவில்லையா, என்றால் இல்லை என்று சொல்ல முடியாது.). கூறவந்த செய்தியை வளர்முகமாகப் புரிந்துகொண்டால் (நன்னோக்கத்துடன் புரிந்துகொண்டால்) பயன் கூட இருக்கும் என்று நினைக்கின்றேன். நான் "உயர்" என்று பயன்படுத்தியது "முகத்தில் அடிப்பது" போல இருக்கின்றது என்றால் மெய்யாக என் மன்னிப்பைக் கேட்கிறேன். நான் அப்படி நினைக்கவும் இல்லை சொல்லவும் இல்லை (என் நோக்கில்). நான் மயூரநாதனையும் புன்னியாமீனையும் ஒருசிறிதும் ஒப்பிடவில்லை!!! கட்டுரையில் அவருடைய பெயர் (மயூரநாதனின் பெயர்) சுட்டப்பட்டதாலும், நான் 2011 தமிழ் இணைய் மாநாட்டில் குறிப்பிட்டேன் என்பதாலும் கூறினேன். அவருடைய பங்களிப்பை "முன்னோடி", "இத்தனை ஆயிரம் கட்டுரைகள் எழுதியுள்ளார்" என்பதை விட அவருடைய பங்களிப்பு எத்தகையது, அது நம்மில் பலரை எப்படி ஆற்றுப்படுத்தவல்லது என்னும் நோக்கில் கூறினேன். அருள்கூர்ந்து வளர்முகமாக அணுகிப் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். --செல்வா 11:35, 29 சூன் 2011 (UTC)

 • தயவுசெய்து ஒரு அன்பான வேண்டுகோள். நடந்த பிரச்சினையை ஒரு கனவென்று நினைத்து இத்துடன் நிறுத்திக் கொள்வோம். எனக்காக பிரச்சினைப்பட்டு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விக்கிக் குடும்பத்தினுள் ஒரு பிளவு ஏற்படக்கூடாது. என்னோடு அன்பு கொண்டு பலர் ஆலமரத்தடியிலும், தனிப்பட்ட மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடர்புகொண்டீர்கள். இதற்காக என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என் மீது நீங்கள் கொண்ட பாசம் உண்மையானதாக இருந்தால் இது விடயமான வாதப்பிரதிவாதங்களை இத்துடன் நிறுத்திக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன். நிச்சயமாக தேகாரோக்கியம் உள்ளவரை நான் எழுதுவேன். என் மன நிலை குறித்து சில தகவல்களை பின்பு அறியத் தருவேன். --P.M.Puniyameen 05:02, 30 சூன் 2011 (UTC)

தொடர்ந்தும் எழுதவேண்டுமா?[தொகு]

 • ?????????????
 • என்னோடு ஒத்துழைத்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
 • குட்பாய்--P.M.Puniyameen 11:57, 29 சூன் 2011 (UTC)
ஆம் எழுதவேண்டும். கண்டிப்பாக எழுதவேண்டும். உங்கள் உழைப்பையும் மதிப்பையும் உணர்ந்தவர்கள் இங்கு பலர் உள்ளனர்.--சோடாபாட்டில்உரையாடுக 12:36, 29 சூன் 2011 (UTC)

கட்டுரை எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து எமது பயனர்களின் சில கருத்துக்கள்

 • தமிழ் விக்கியில் கட்டுரை எண்ணிக்கை 28,000 ஐ நெருங்கிவிட்டது. இன்று இந்த எண்ணிக்கையைத் தாண்டிவிடுவோம். இதே உற்சாகத்தைத் தக்கவைத்துக் கொண்டால் மிக விரைவிலேயே 30,000 ஐயும் தாண்டிவிடலாம். பயனர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மயூரநாதன் 04:42, 12 பெப்ரவரி 2011 (UTC)
 • நம் விக்கிப்பீடியாவை வளர்த்து முதலில் 50,000 கட்டுரைகளையும் அதன் பின் 100,000 கட்டுரைகளையும் என்று விடாது உயர்த்துவோம்.--செல்வா 15:53, 2 பெப்ரவரி 2011 (UTC)
 • தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் பல்வேறு அம்சங்களிலும் ஒரு சம நிலையிலேயே இருக்கிறது. இந்த நிலையைத் தக்க வைத்துக்கொண்டு மேலும் முன்னேற வேண்டும். பயனுள்ள தலைப்புக்களில் ஆழமான நல்ல கட்டுரைகளை உருவாக்க வேண்டியது அவசியம். கட்டுரைகளின் எண்ணிக்கையையும் கூட்டுவதற்கான நடவடிக்கைகள் தேவை. நீண்ட காலமாகக் கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா 67, 68 ஆம் இடங்களிலேயே இருக்கிறது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கட்டுரை எண்ணிக்கை ஒப்பீட்டளவில் வேகமாக அதிகரித்தது. இந்த ஆண்டிலும் இவ்வேகம் குறையாமல் பேணிக்கொள்ள வேண்டும். மயூரநாதன் 18:53, 2 பெப்ரவரி 2011 (UTC)

விக்கியில் நான் அதிகமாக எழுதக் காரணமாக இருந்த எனது ஒரே விடயம்

கடந்த கால பல ஆண்டறிக்கைகளைப் பார்க்கும் போது தமிழ் விக்கிப்பீடியா 68வது இடத்திலே இருந்து வந்துள்ளது. எமக்கு இத்தடைக்கல்லை தாண்டுவது பெரிதுபோல் பட்டாலும் அதனை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு முன்னேறிச் சென்றுள்ளோம். தமிழ் விக்கியின் 10வது ஆண்டு நிறைவடையும் போது ஏனைய பயனர்களின் உத்வேகத்தோடு குறைந்த பட்சம் தமிழ் விக்கியின் இடத்தை 50 வது இடத்துக்காவது கொண்டு வர வேண்டும் என்ற குறிக்கோளை எமது மனங்களில் பதித்துக் கொண்டால் என்ன? ஆங்கில விக்கியினை சரிவரப் பயன்படுத்துவதனூடாகவும் எமது அனைத்து பயனர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதினூடாகவும் இந்த இலக்கை அடைவது பெரிய காரியம் அல்ல. --P.M.Puniyameen 13:24, 5 மே 2011 (UTC)

இதைத் தவிர எனக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை --P.M.Puniyameen 13:14, 29 சூன் 2011 (UTC)

புன்னியாமீன் அவர்களே, உங்கள் எழுத்துக்களை இங்கு யாரும் குறை கூறியதாக நினைக்க வேண்டாம். விக்கிப்பீடியாவில் யாரும் யாரையும் ஒப்பிட வேண்டியதில்லை. எல்லாருக்கும் எல்லா நுட்பங்களும் வந்துவிடுவதுமில்லை. விக்கிப்பீடியாவில் சிலவற்றை எப்படிச் செய்வதென்பது எனக்கு இப்போதும் குழப்பமாகவே உள்ளது. நான் எவரிடமும் கணினி பற்றி ஓரெழுத்துக்கூடக் கற்கவில்லை. எல்லாம் தானாகக் கற்றவையே. நீங்கள் தொடர்ந்தும் எழுத வேண்டும். உங்களின் பங்களிப்பு இங்கு தேவைப்படுகிறது. அதே நேரம் செல்வாவின் கூற்றையும் மதிக்கிறேன். அவர் கூறியதில் எனக்கும் உடன்பாடே. வெறுமனே பட்டியல்களை அமைப்பதைவிட, சற்று ஆழமான அறிவுசார் கட்டுரைகளை அவர் எதிர்பார்ப்பது போன்று நானும் எதிர்பார்க்கிறேன். ஏனெனில், கலைக்களஞ்சியம் என்பது அறிவு வளர்ச்சிக்கான விடயத் தொகுப்பே தவிர, சில பெயர்களையும் பெறுபேறுகளையும் சேர்த்து வைத்திருக்கும் ஆவணக் காப்பகமன்று என்பது என் கருத்து. தமிழ் மூலம் கல்வி பெறும் மாணாக்கரும் தமிழில் தகவல் தேடுவோரும் பயன் பெறுவதற்காக இதனை ஆக்குவதால் நம் எதிர்கால சமுதாயம் மிக்க பயன் பெறுவதுடன் நம் தமிழ் மொழியும் வளம் பெறும். விக்கிப்பீடியா என்பது எமது விக்கி சமூகத்தினரின் கூட்டு முயற்சி. இதை எவரும் தனி உடைமையாகக் கருத முடியாது.--பாஹிம் 13:22, 29 சூன் 2011 (UTC)

புன்னியாமீன் அவர்களே, உங்களை நான் குறைக்கூறியதாக அருள்கூர்ந்து எண்ண வேண்டாம். அப்படி நான் கூறியிருப்பதாக நீங்கள் கருதினால் என்னை மன்னியுங்கள். நீங்கள் "பல இன்னல்களுக்கும் இடையே, மிக முனைப்பாகவும் மிக ஆர்வமாகவும் பங்களித்தீர்கள்" என்றும், உங்கள் "உழைப்பையும் ஆக்கங்களையும் நான் மிகவும் போற்றுகின்றேன்" என்றும் மேலே கூறியுள்ளேன். நீங்கள் மருத்துவமனையில் இருந்துகொண்டே ஊக்குவித்து ஆக்கிய ஆக்கங்களையும் கருத்தில் கொண்டே கூறினேன். எனினும் கலைக்களஞ்சியத்தை மேலும் உயர்த்த வேண்டிய கூறுகளிலும் கவனம் இருப்பது நல்லது என்னும் நோக்கில் கூறினேன். சோடாபாட்டில் கூறிய "உங்கள் உழைப்பையும் மதிப்பையும் உணர்ந்தவர்கள் இங்கு பலர் உள்ளனர்" என்பதில் நானும் ஒருவனாகவே உள்ளேன். நான் வேறொன்றையும் வலியுறுத்தியது என் கூற்றைப் பிறழ உணர அல்லது உள்வாங்க நேர்ந்திருக்கின்றது என்றே அறிகின்றேன். அண்மையில் நிகழ்ந்த 2011 தமிழ் இணைய மாநாட்டில் படித்த கட்டுரையில், எவ்வாறு முன்னணி இந்திய நாளேடுகள் கூட வெறும் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொண்டு இன்ன இன்ன மொழி விக்கிகள் முன்னே உள்ளன என்று கூறுகின்றார்கள் என்பதைச் சுட்டினேன். பல்வேறு தர அளவீடுகள் இருப்பது பற்றியும், அவற்றின் நிறைகுறைகள் பற்றியும் சுருக்கமாகக் கூறினேன். 200 எழுத்துகள் உள்ள கட்டுரையின் எண்ணிக்கைக்கும், "ஏற்புப்பெற்ற" ("official") கட்டுரை எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளையும் சுட்டி, 200 எழுத்துகள் என்பது மிக மிகக் குறைவானது என்றும் சுட்டினேன். சராசரி பைட் அளவில் நாம் உலக மொழிகள் வரிசையில் 10 ஆவதாக இருக்கின்றோம். என்றாலும் இவையும் போதுமான தர அளவுகோல்கள் அல்ல (மொத்த கட்டுரை எண்ணிக்ககளைக் கருத்தில் கொண்டு சராசரி பைட்டை தரப்படுத்தினாலும்). நீங்கள் "குட்பாய்" என்று கூறி விலகுவதுபோல் சொல்ல வேண்டிய தேவை எனக்குப் புரியவில்லை. நீங்கள் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோளும், நம்பிக்கையும். த.வி. குழுமம் தம்மைப் பற்றி தாம் திறனாய்வு செய்வது தேவை. தக்க தரத்துடன் கட்டுரைகளின் எண்ணிக்கை கூடுவது நல்வளர்ச்சியாய் இருக்கும். --செல்வா 14:24, 29 சூன் 2011 (UTC)

அன்பான வேண்டுகோள்[தொகு]

 • நான் பயனராக இணைந்து இன்றுடன் 7 மாதங்கள் 15 நாட்கள் ஆகின்றன. இன்றுவரை அறியாத்தன்மை காரணமாக 3180 கட்டுரைகளை எழுதிவிட்டேன். நிர்வாக அணுக்கம் பெற்ற அனைவருக்கும் விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு அமையாத, தரமில்லாத கட்டுரைகளை நீக்கும் அதிகாரமுண்டு. விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு அமையாதது அல்லது தரமில்லாதது எனக்கருதும் என்னால் எழுதப்பட்ட அனைத்துக் கட்டுரைகளையும் நீக்கி விடும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
 • விக்கிப்பீடியாவின் கட்டுரைகளின் தரம் குறித்து கொள்கைரீதியான முடிவொன்றை வகுப்பது மிக மிக அவசியமானது. அது எதிர் காலத்தில் இணையவிருக்கும் பயனர்களுக்கு மனரீதியான தாக்கங்களைக் குறைத்துக் கொள்ள ஏதுவாக அமையலாம்.--P.M.Puniyameen 14:21, 29 சூன் 2011 (UTC)

நானறிந்து நீங்கள் எழுதியுள்ளவை அனைத்தும் விக்கிப்பீடியா கொள்கைக்குப் புறம்பானவை, தரமற்றவை எவையும் கிடையாது. விக்கிப்பீடியா குறைந்த படச தரமென்பது 3-4 வரிகள் இருக்க வேண்டும், பெருமளவு இலக்கண/எழுத்துப்பிழையில்லாமல் இருக்க வேண்டுமென்பவையே. இவை தவிர வேறெந்த தரமும் கிடையாது. புன்னியாமீனின் கட்டுரைகள் நிறைவான் உள்ளடக்கம் கொண்டுள்ளன, பிழைகளின்றி இருக்கின்றன, வார்ப்புருகள், பகுப்புகள் கொண்டுள்ளன, விக்கியிடை இணைப்புகள் கொண்டுள்ளன, உள்ளிணைப்புகள் கொண்டுள்ளன. இவை தவிர விக்கிப்பீடியாவில் இருப்பதற்கு வேறென்ன வேண்டும்?. இது தவிர “தரம்” பற்றிய அனைத்தும் அவரவர் சொந்த கருத்தே.

நீளமான தரமான கட்டுரை வேண்டுமென்று நினைப்பவர்கள் முதலில் அவரவர் எழுதிய அனைத்து கட்டுரைகளில் தாங்கள் எதிர்ப்பார்க்கும் ஆழம், தரமெல்லாம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துக் கொண்டு பின் மற்றவருக்கு அறிவுரை வழங்குதல் நலம். விக்கிப்பீடியாவின் தரத்தை அதிகப்படுத்தவேண்டுமெனக் கருதினால் அவரவர் முன்னுதராணமாக செயல்பட வேண்டும், அல்லது உள்ள குறுங்கட்டுரைகளை விரிவு படுத்தி செம்மை படுத்த வேண்டும். இதை விடுத்து எழுதும் மற்றவர்களை பார்த்து “நாம் இது செய்ய வேண்டும்” “அது செய்ய வேண்டும்” என்று சொல்வதை நிறுத்துவது நன்று. திறனாய்வு செய்து பிறருக்கு அறிவுரை சொல்வது எளிது, செய்வது கடினம். குறைந்த பட்சம் தினமும் உருவாகும் புதுக்கட்டுரைகளில் நான்கைந்தை எடுத்து செம்மைப்படுத்தலாம். [[பகுப்பு:விக்கிப்பீடியா துப்புரவு]] பகுப்பில் நூற்றுக்கணக்கில் கவனிக்க வேண்டிய செயல்கள் இருக்கின்றன. தரத்தில் அக்கறை இருந்தால் அதனைச் செய்கையில் காட்டுங்கள். --சோடாபாட்டில்உரையாடுக 14:59, 29 சூன் 2011 (UTC)

சோடாபாட்டில், நீங்கள் நான் சொல்ல வந்ததை வேறுகோணங்களில் எடுத்துச் செல்கின்றீர்களோ என்று எண்ணுகிறேன். நான் புன்னியாமீனின் கட்டுரைகள் தரக்குறைவாக உள்ளன என்று எங்கே கூறினேன்?!! நீளமான கட்டுரைகள் வேண்டும் என்று எங்கே கூறினேன்?! மேலும், நான் யாருக்கும் அறிவுரையும் தரவும் இல்லை, த.வி-யின் வளர்ச்சிக்கோணங்களைப் பற்றிய என் கருத்தைச் சொன்னேன் (அவை என் தனிக்கருத்துகள்தாம் என்றும் கூறினேன்). விக்கிப்பீடியாவில் நன்னோக்கத்துடன் கூறியதாக எடுத்துக்கொள்வது வழக்கம். மற்றவர்களை பார்த்து “நாம் இது செய்ய வேண்டும்” “அது செய்ய வேண்டும்” என்று சொல்வதை நிறுத்துவது நன்று என்கிறீர்கள், அது நான் கூறியதைப் பற்றி என்றால், நான் "மற்றவர்களை" அப்படி எதுவும் சொல்லவில்லை! நீங்கள் "இது நன்று" என்று சொல்வது போலவே நானும் எது நன்றாக இருக்கும் என்று என் கருத்தைப் பகிர்ந்தேன். இதனை மேற்கொண்டு தொடரவேண்டாம். --செல்வா 15:40, 29 சூன் 2011 (UTC)

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── நான் வேறெந்த கோணத்திலும் இட்டுச் செல்லவில்லை. தெளிவாகவே சொல்கிறேன்

 • நான் புன்னியாமீனின் கட்டுரைகள் தரக்குறைவாக உள்ளன என்று எங்கே கூறினேன்? புன்னியாமீன் எண்ணிக்கையில் அதிகமான கட்டுரைகள் எழுதியுள்ளார் என்ற செய்திக்கு அளிக்கும் அதே மறுமொழியில் கட்டுரை எண்ணிக்கை என்பதை அதிகம் கருத்தில் கொள்வதைவிட, நல்ல பயன் தரக்கூடிய கட்டுரைகளா, நல்ல தரம் உள்ள கட்டுரைகளா, தமிழர்களுக்குத் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள துணை செய்பவையா, தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடிய கட்டுரைகளா, தக்க தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளனவா, என்றவாறு நம் சிந்தனைகள் இருப்பது நல்லது. என்றும் கட்டுரைகளின் தலைப்புகளும், அதன் தரமும், ஆழமும் இன்னும் பலவும் மிக மிக முக்கியம். என்றும் அவர்களின் உழைப்பையும் ஆக்கங்களையும் நான் மிகவும் போற்றினாலும், உயர் குறிக்கோளைக் கருத்தில் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன் என்றும் சொல்லுவீர்களெனில் வேறு என்ன பொருள்படும்?. எனக்கும் கனக்சுக்கும், புன்னியாமீனுக்கும் நீங்கள் “தரத்தைப்” பற்றி பேசுவது பொலத் தான் பட்டுள்ளது. (கவனிக்க ஒருவரல்ல மூன்று பேருக்குத் தோன்றியுள்ளது)

இத்தோடு நிறுத்திக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. இதைப் பேசியே ஆக வேண்டும். சீராகப் பங்களித்த ஒருவரை மனம் வருந்தி விலகச் செய்து விட்டு, பின் நான் அப்படி சொல்லவில்லை என்றால் என்ன அர்த்தம்? உங்கள் செய்கையால் ஒரு புன்னியாமீனை இழந்துள்ளோம். இன்று இதோடு நிறுத்தினால் எதிர்காலத்தில் எத்தனை புன்னியாமீன்களை இழப்போம்?--சோடாபாட்டில்உரையாடுக 16:32, 29 சூன் 2011 (UTC)

 • சரி, நிறுத்திக்கொள்ள விருப்பம் இல்லை என்றால் பேசுவோம் (இதைப் பேசியே ஆக வேண்டும் என்கிறீர்)! திறந்த மனத்துடன் அணுகினால்தான் உண்மை புலப்படும் என்பதை ஒப்புக்கொள்வீர்களா? (1) நான் பாராட்டியதையும், போற்றியதையும் விட்டுவிடுகிறீர்கள், ஆனால் அதே நேரத்தில் பொதுப்பட வேறொன்றையும் கூறுவதைப் பிறழ்வாக பொருள்கொண்டு தனிப்பட தாக்குகின்றீர்கள். (2) இரண்டுமுறை இயல்பாகவும் நேர்மையாகவும் மன்னிப்புக் கேட்டதையும் ஏற்கவில்லை. (3) தரத்தைப் பற்றி மிகப்பல முறை பேசி இருக்கின்றோம், எனவே இது புதிது அல்ல - நீங்களும் புன்னியாமீனும் த-வி-யில் சேரும் முன்னரே இருந்து- எதற்காகச் சொல்கின்றேன் என்றால்-புன்னியாமீனுக்காக சொன்னதல்ல என்பதற்காகக் கூறுகின்றேன். தரக்கண்காணிப்பு பற்றி அட்டவணையிட்டு பல ஆண்டுகளாக கருத்தாடல்கள் நடக்கின்றன (எவ்வெவ் வகையில் எந்தெந்த கட்டுரைகள் சிறப்பானவை (நீளம் மட்டும் கணக்கில்லை இங்கு) என்றும் குறிக்க முயன்றிருக்கின்றோம்). எனவே நீங்கள் சுட்டிக்காட்டிய பைட் அளவு அவற்றுள் ஒன்றுதான். அதுவும் சராசரி பைட் அளவில் த.வி உலக மொழிகளில் 10 ஆவதாக உள்ளது என்று நான் அறிந்த போது பகிர்ந்துகொண்ட கருத்து. புன்னியாமீனுக்காகவோ, தனி ஒருவருக்காகவோ இட்டது அல்ல!! பைட் அளவை மட்டும் கருத்தில்கொள்ளாமல் எத்தனையோ இடங்களில் படங்கள் சேர்ப்பு, புதுச் சான்றுகோள்கள் சேர்ப்பு, விளக்கம் சீரமைப்பு என்று எத்தனையோ வகையில் முன்னேற முயன்றுவருகின்றோம் (நாம் யாவரும்). (4) நீங்கள் தனிப்பட நான் சுட்டிய பொதுப் பரிந்துரையை நானே பின்பற்றவில்லை என்றும், வேறு வகையிலும் தாக்கியும் எழுதுகின்றீர்கள். இதெல்லாம் த.வி-யில் புதிது என நினைக்கின்றேன்(!) நான் பைட்டைக் கணக்கு வைத்தோ, எண்ணிக்கையைக் கணக்கு வைத்தோ பங்களிக்கவில்லை. எனினும் தனித்துக் குறிப்பிடுவதால், நீங்கள் விட்டுவிட்ட இன்னொரு கட்டுரையையும் சுட்டுகிறேன் எத்திலீன் கிளைக்கால் (11,082 பைட்டு). இவை தவிர பல கட்டுரைகளில் சில கிலோபைட்டுகள் சேர்த்துள்ளேன் (பைட்டுக்காக சேர்க்கவில்லை!!) (எ.கா இடுக்கி மாவட்டம், மின்வாயி, அதிர்வெண், மீவளையச் சுருள், மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்), பல கட்டுரைகளைத் திருத்தியுள்ளேன், படங்கள் சான்றுகோள்கள் சேர்த்துள்ளேன், எனவே என் பரிந்துரையை நானே பின்பற்றவில்லை என்னும் உங்கள் கூற்று சரியன்று. மேலும் நான் கூறியது த.வி-யின் நிலை உயர்வாக இருக்கட்டுமே எனும் பொதுநலம் கருதியே, நாம் எல்லோருமே உடன் பணியாற்றுவோர்தான். --செல்வா 19:54, 29 சூன் 2011 (UTC)
பைட் அளவை சுட்டி “இவ்வளவு எழுதுங்கள்” என்று சொல்லி விட்டு இப்போது நான் ”நான் பைட்டைக் கணக்கு வைத்தோ, எண்ணிக்கையைக் கணக்கு வைத்தோ பங்களிக்கவில்லை. ” என்று சொல்லுவதும் ”நான்கில் இரண்டு” எழுதினேன், ”பிற கட்டுரைகளில் சேர்த்தேன்” என்று எதற்கு விளக்கம்.? நீங்கள் சொன்னது ஒன்றும் பொதுப் பரிந்துரையல்ல, “புதிய கட்டுரை”கள் பற்றி பிறருக்கு இட்ட வேண்டுகோள்/அறிவுரை. சொன்னதை சொல்லி விட்டு, அப்படி சோல்லவேயில்லை என்று முதலில் மறுப்பதும் பின் சுட்டி கொடுத்த பின்னால் நான்கில் இரண்டு பின்பற்றினேன், மற்ற இடத்தில் சேர்த்தேன் என்றும் சொல்லுகிறீர்கள். பைட்டுக்காக எழுதவில்லையென்றால், பைட்டை அடிப்படையாக வைத்து பொதுப்பரிந்துரை தருவது எதற்கு?. தரத்தைப் பற்றி புன்னியாமீனுக்கு அளிக்கும் மறுமொழியில் சொல்லி விட்டு புன்னியாமீனுக்காகச் சொல்லவே இல்லை என்று விளக்கம் வேறு. தரத்தைப் பற்றிப் பேச அதுவும் எண்ணிக்கையை மட்டம் தட்டி, பிற விசயங்கள் வேண்டுமென்று சொல்ல உங்களுக்கு அவருக்கு அளிக்கும் மறுமொழி தான் கிடைத்தது போலும். ”இதெல்லாம் த.வி-யில் புதிது என நினைக்கின்றேன்” என்கிறீர்கள். ஒருவேளை பேரரசர் ஆடைகளின்றி இருக்கிறார் என்பதை யாரும் இங்கு சொல்லுவதில்லை போலும். நீங்கள் பாராட்டுவதும் போற்றுவதும் ஒன்றும் தனித்துவமானதல்ல. எல்லாரும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் ஒருவர் தானே பின்பற்றாத ஒரு அறிவுரையை பிறர் பின்பற்றச் சொன்னால் யாரேனும் அதை சுட்டிக் காட்டத் தான் செய்வார்கள். இவ்வளவு தூரம் நான் வலிந்து நிற்பது இன்னொரு முறை உங்களால் ஒரு நல்ல பயனரைத் த. வி இழந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். “தனிப்பட்ட தாக்குதல்” என்று திசை திருப்புகிறீர்களே ஒழிய, இது போல இன்னொருவருக்கு நடந்து விடக்கூடாது என்று உணர்ந்து போலத் தெரியவில்லை. திறந்த மனதுடன் அணுக வேண்டியவன் நானல்ல, நீங்கள் தான். --சோடாபாட்டில்உரையாடுக 20:24, 29 சூன் 2011 (UTC)
சோடாபாட்டில், இது என்ன? நீங்கள் குறிப்பிட்ட என் கூற்று (நான் பைட் அளவு 3500 இருப்பது) பொதுவாக கூறியது (புன்னியாமீனுக்காக அலல!) (இங்கே பார்க்கவும்). இது புன்னியாமீனுக்காக விடுத்ததல்ல, ஒரு பொது வேண்டுகோள் (அறிவுரை அல்ல!! நன்னோக்குடன் அணுகுங்கள்!!). சோடாபாட்டில், நீங்கள் நான் எழுதிய கட்டுரைகள், பைட்டுகள் பற்றிக் கூறியதால் எடுத்துரைத்தேன் (நான் எழுதிய கட்டுரைகளின் சராசரி 8 கி.பைட்டு), பிற கட்டுரைகளை மேம்படுத்துவது பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள், அதற்காக மற்ற கட்டுரைகளில் சேர்த்தவை பற்றியும் குறிப்பிட்டேன். "ஆனால் ஒருவர் தானே பின்பற்றாத ஒரு அறிவுரையை பிறர் பின்பற்றச் சொன்னால் யாரேனும் அதை சுட்டிக் காட்டத் தான் செய்வார்கள்" என்கிறீர்கள், ஆனால் அப்படி நான் பின்பற்றவில்லை என்று நீங்கள் தவறாகக் குற்றம் சாட்டுகின்றீர்கள் (இது தனிப்பட்ட தாக்குதல் என்பது வேறு செய்தி)(இதுகாறும் மிகப்பெரும்பாலும் நட்புணர்வுடனேயே, இணக்கம் நோக்கியே கருத்தாடல்கள் நடந்துள்ளன). நீங்கள் நன்னோக்குடன் அணுகினால் புரிந்துகொள்ளலாம் என்று நம்புகிறேன். உங்களுடைய மற்ற கூற்றுகளையும், அதில் தென்படும் கடுமையையும் என்னால் நம்பவோ புரிந்துகொள்ளவோ முடியவில்லை! பண்பான முறையில் அணுகி உரையாடுவது நன்மை பயக்கும். நான் மூன்றாம் முறையாக திரு புன்னியாமீனிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் மீண்டும் கூறுகின்றேன், நான் அவருடைய பங்களிப்புகளைக் குறைத்தோ, "மட்டம் தட்டியோ" (இது உங்களுடைய "உள்வாங்கல்" ("understanding"), "வரைவு" (description) சோடாபாட்டில்!!!! ) ஒரு சிறிதும் கூறவில்லை! நினைக்கவும் இல்லை! --செல்வா 22:23, 29 சூன் 2011 (UTC)

புன்னியாமீன் எழுதும் 4 kb கட்டுரைகளால் தரம் குறைந்து விடும் என்று அச்சமிருப்பவர்கள் தினம் உருவாகும் பதிப்புரிமை மீறல், எந்திர மொழிபெயர்ப்பு, கலைக் களஞ்சிய நடையற்ற கட்டுரைகளை பார்க்கலாம். அவ்வாறு ஆயிரக்கணக்கில் மேம்படுத்த வேண்டியவை உள்ளன. பகுப்பு பராமரிப்பு பின் தங்கி உள்ளது, நூற்றுக்கணக்கில் படிமங்களில் உரிம மீறல்கள் உள்ளன, நுட்ப ரீதியில் நிரல்கள் இற்றைப்படுத்தப்படாமல் உள்ளன. தினம் செய்ய வேண்டிய விசமத் தொக்ப்பு கண்காணிப்பு, துப்புரவு போன்ற செயல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவையெல்லாம் விடுத்து நீளமான கட்டுரை வேண்டும், X kb க்கும் மேல் வேண்டும் தரம் போய்விடும் என்று கேட்பதைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. கூகுள் கட்டுரையைக் “குப்பை” என்று சொல்வதே தவறென்று சொல்லி விட்டு, புன்னியாமினுக்கு “உயர் தரம்” பற்றி அறிவுரை. ஐயோ ஐயோ. எதற்கு முன்னுரிமை அளிப்பதென்று யோசிப்பதில்லையா? A rethink on priorities is needed here.

இன்று “திறனாய்வு” செய்ததில் என்ன விளைந்துள்ளது? எதாவது உருப்படியாக நடந்துள்ளதா? நன்றாக, தொடர்ந்து பிறருக்கு சுமையின்றி பங்களித்துக் கொண்டிருந்து ஒருவர் மனதைக் காயபடுத்தி அவரை “என் கட்டுரைகளை நீக்கி விடுங்கள்” என்று சொல்ல வைத்திருக்கிறோம். எல்லாம் நான் செய்த்தால் வந்தது. புன்னியாமீன் தன்னைப் பற்றி செய்தி வந்திருக்கிறது என்று தனிப்பட்ட முறையில் சொன்னதை, சமூகத்துக்கும் பகிருவோம் என்று அவரை அச்செய்தியை ஒளிப்படம் எடுத்துத் தரச் செய்து இங்கு இட்டேன். “திறனாய்வு”க்குத் தூண்டுகோலாகப் போய்விட்டது. --சோடாபாட்டில்உரையாடுக 15:32, 29 சூன் 2011 (UTC)

நண்பர்களே, நாம் இங்கு புன்னியாமீன் அவர்களின் ஆக்கங்கள் பற்றி இங்கு கருத்தாடுவது கூடாதென நினைக்கிறேன். அவர் விக்கிப்பீடியாவில் ஆர்வம் மிக்க பங்களிப்பாளர். அதனாற்றான், அல்லும் பகலும் இங்கு கட்டுரை எழுதுவதில் தன் கருத்தைச் செலவழித்தார். இப்போது எமக்கு வேண்டியது நாம் எமது ஒற்றுமையைக் கட்டிக் காத்து இக்கலைக்களஞ்சியத்தை மேலும் வளர்ப்பதே. எதனாலேனும், புன்னியாமீன் அவர்களின் மனம் புண் பட்டிருந்தால் அருள் கூர்ந்து பொறுத்துக் கொள்வதுடன் அவரது பங்களிப்பைத் தொடர்ந்தும் நல்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.--பாஹிம் 16:26, 29 சூன் 2011 (UTC)


எம்மால் எது இலகுவில் செய்ய முடிகின்றதோ, எதில் அதிகளவு ஈடுபாடு உள்ளதோ அதற்கே முன்னுரிமை கொடுத்து நடக்க முயற்சிப்போம், சமூகத்துடன் நிறையத் தொடர்பு கொண்ட ஒருவருக்குத் தனி நபர்களைப் பற்றி எழுதுவது என்பது மிகவும் சுலபம். புன்னியாமீன் அவர்கள் ஊடகவியலில் சிறப்புப்பட்டம் பெற்ற ஒரு ஊடகவியலாளர்; இந்தத் தொடர்பில் அவர் தனி நபர்களைப் பற்றிய கட்டுரைக்கு முன்னுரிமை கொடுத்து எழுதத் தொடங்கினார் என்று நினைக்கிறேன். எந்தவொரு கட்டுரையும் பயன்தரக்கூடியது என்பது எனது கருத்து. தமிழ் விக்கிபீடியாவின் பல குறுங்கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவின் தரத்தைக் குறைந்துவிடும் எனும் அச்சத்தில் ஏற்கெனவே செல்வா கூறி உள்ளார்: அதன்படி ஒரு கட்டுரைக்குக் குறைந்த பட்சம் 3500 பைட்டுகள் இருக்கவேண்டும் என்பதே அது. இதனையும் கருத்தில் எடுக்கவேண்டியது தேவைதான், ஆனால் ஒரு நபர் தொடங்கிய கட்டுரைகளை அந்தத் தனிப்பட்ட நபரை விமர்சித்தல் மூலம் மட்டும் தீர்வு காண விளைதல் ஆரோக்கியமானதல்ல என்பது மொஹமட் எனும் பயனரின் உரையாடல் மூலம் தெரிந்திருக்கக்கூடும்.

முன்னர் ஒரு முறை மொஹமட் எனும் பயனர் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு கருத்தை முன்வைத்தார்; இதற்கு மயூரநாதன் நல்லதொரு விளக்கம் கொடுத்திருந்தார்:

பொதுவாகவே அனைத்து விக்கிபீடியாவையும் எண்ணிக்கை அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பதே இதற்கு மூல காரணம் ஆக உள்ளது. நீளமான கட்டுரைகளை எழுதுபவரும் உள்ளனர்; குறைவாக எழுதுபவரும் உள்ளனர், சிலர் இரு விதமாகவும் எழுதுகின்றனர். எனவே ஒட்டுமொத்த விளைவு இன்று குறைவதாகக் கண்ணுற்றாலும் காலப்போக்கில் படிப்படியாக நன்றாகவே அமையும் என்று எதிர்கூறலாம். 50,000 பைட்டுகள் கொண்ட ஒரு கட்டுரையை உருவாக்கும் நேரத்தில் 10 குறுங்கட்டுரைகள் உருவாக்கலாம், பின்னர் அவற்றை எல்லோரும் சேர்ந்து வளர்த்தெடுக்கலாம்.

ஒரு கட்டுரை தரமானதா இல்லையா என்பதை அந்தக் கட்டுரை முற்றிலும் அல்லது ஓரளவு முடிவுற்றதுமே மதிக்கலாம், குறுங்கட்டுரையாக இருப்பின், அதன் தரத்தை மதிப்பீடு செய்யமுடியாது என்று நான் கருதுகிறேன். அருள்கூர்ந்து புன்னியாமீன் அவர்கள் தமது பணியைத் தொடர்ந்து செய்யுமாறு விக்கிக்குழுமம் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். --செந்தி//உரையாடுக// 18:40, 29 சூன் 2011 (UTC)

தமிழ் விக்கிபீடியாவின் பல குறுங்கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவின் தரத்தைக் குறைந்துவிடும் எனும் அச்சத்தில் ஏற்கெனவே செல்வா கூறி உள்ளார்:
செந்தி, இந்த 3500 எண் ஒரு தவறான கணக்கு. இதைக் கணக்கிட பயன்படுத்தியது "mean article size". இது அதிகமாக இருக்கக் காரணம் கூகுளின் மிகப்பெரும் கட்டுரைகள். 96 ஒரு 1 kb கட்டுரைகளும் மூன்று 100 kb கட்டுரைகளும் இருந்தாலே mean size 4 kb ஆகி விடும். நாளை கூகுள் கட்டுரைகள் நீக்கப்பட்டால் (நான் நீக்கச் சொல்லவில்லை, ஒரு வேளை நீக்கப்பட்டால்) இது குறைந்து போய் விடும். கூகுள் மருத்துவக் கட்டுரைகளின் நிலையை நீங்கள் அறிவீர்கள். அத்தகு கட்டுரைகளால் தூக்கி நிறுத்தப்படும் ஒரு மாய அளவுகோலை விரட்டத் தான் இந்த mean குறைந்து போய்விடும், எனவே இவ்வளவு x kb எழுதுங்கள் பரிந்துரை எழுந்துள்ளது. அளவென்பது ஒரு மாயை. ஒரு கட்டுரையில் விக்கியிடை இணைப்புகளே 2 kb வரும் இடங்களும் இருக்கின்றன. median article size ஆவது பரவாயில்லை, இதில் mean சுத்த மோசம். அப்படியொரு அளவு கோலைக் கொண்டு தரத்தைக் கணிக்க முயலுவதோ, இலக்கு கொண்டு எழுதுவதோ நன்றன்று. நீங்கள் முதற் கூறிய “எம்மால் எது இலகுவில் செய்ய முடிகின்றதோ, எதில் அதிகளவு ஈடுபாடு உள்ளதோ அதற்கே முன்னுரிமை கொடுத்து நடக்க முயற்சிப்போம்” என்பதே என் கருத்தும். தான் செய்யாத ஒன்றை பிறருக்கு பரிந்துரை செய்து, அவர் செய்யாத பட்சத்தில் அதை விமர்சிப்பது தான் இன்று நடந்துள்ள அனைத்துக்கும் பின்புலம்.--சோடாபாட்டில்உரையாடுக 19:20, 29 சூன் 2011 (UTC)


‌புன்னியாமீன் அவர்கள் தனது முடிவை நிச்சயம் மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறேன். விக்கியில் ஒவ்வொருவரது பங்களிப்பும் முக்கியமானதே. பொதுவாக நான் ஓய்வு நேரங்களில் தான் விக்கிப்பீடியாவில் பங்களிப்பேன். ஆனால் சோடாபாட்டில், புன்னியாமீன், (இன்னும் சிலர்) கிடைக்கின்ற நேரங்களில் எல்லாம் பங்களிப்பதைக் காணும் போதெல்லாம் நான் உற்சாகம் அடைவது வழக்கம். இங்கே அவ்விருவரும் சங்கடத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

ஆரம்ப காலங்களில் விக்கி வழக்கம் ஒன்றும் அறியாத நாட்களில் (இன்னும் நான் முழுமையாய் அறிந்தவன் என்று சொல்வதற்கில்லை) பேராசிரியர் செல்வா அவர்கள் எனக்கு விக்கிவழக்கங்களைக் கூறி ஆற்றுப்படுத்தியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் இங்கு கூறிய கருத்து சரியா தவறா என்று முடிவெடுக்கும் விக்கியறிவு எனக்கு இல்லை என்றாலும் அவர் தனது கருத்தைப் பதிந்துள்ள இடம் (பாராட்டுச் செய்தியின் அடியில்) நிச்சயம் வருத்தம் அளிக்கும் விதமாகவே உள்ளது. எனினும் பேராசிரியர் புன்னியாமீனிடம் மன்னிப்புக் கோரி நயத்தக்க நாகரிகம் பேணியிருக்கிறார். ஆகையால் புன்னியாமீன் அவர்கள் தனது பங்களிப்பைத் தொடர்வார் என்று நாம் நம்புகிறேன். தொடர வேண்டும் என்று வேண்டுகின்றேன்.- மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 19:57, 29 சூன் 2011 (UTC)

புண்ணியாமீனின் பங்களிப்புகள் விக்கிப்பீடியா விதிகளுக்கு உட்பட்டவையே. அவருடைய முனைப்பான பங்களிப்புகள் தமிழ் விக்கிக்கு உரம் ஊட்டுவனவே. அதே வேளை, செல்வாவின் கருத்துகளிலும் எந்தத் தவறும் இல்லை. எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒப்பிடும் போக்கு எதுவும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சொல்லியிருக்கலாம் என்று சுந்தர் சொன்னதைப் போன்றே நானும் கருதுகிறேன். செல்வாவே சுட்டியுள்ளபடி, இக்கருத்தை தர அளப்பீடு பற்றிய உரையாடல் நிகழும் பல்வேறு இடங்களிலும் பல ஆண்டுகளாகவே தான் சுட்டி வருகிறார். மற்ற விக்கிகளைக் கண்டு எண்ணிக்கையை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படாமல், ஆக்கும் ஒவ்வொரு கட்டுரையும் தன்னளவில் பயனுள்ளவையா என்று எண்ணி உருவாக்க வேண்டும் என்பதே அடிப்படை வழிகாட்டு. 2006 முதல் பல்வேறு நெடுங்கட்டுரைகளை உருவாக்கியும், பிறரது கட்டுரைகளை வளர்த்தும், பல பயனர்களுக்கு பல்வேறு வகையில் உந்ததுதலாகவும் இருந்துள்ளார். எனவே, அவரது அண்மைக்கால பங்களிப்புகளின் அடிப்படையில் அவரது கருத்துகளை மதிப்பிடுவது தவறு. அவரது கருத்துகளில் மாற்றுக் கருத்து இருந்தால் தாராளமாக நயம்பட எடுத்துரைக்கலாம். ஆனால், கருத்து கூறவே அவருக்குத் தகுதி இல்லை என்பது போல் முழுமையற்ற ஆதாரங்களைத் தருவதைத் தவிர்க்கலாம்.

தனியொரு பயனர் வருத்தம் அடைந்து விலகுவதாகச் சொல்வதும், மற்ற பயனர்கள் வாக்கெடுப்பு போன்று ஆதரவு தருவதும் வலைப்பதிவுலக பண்பாட்டை நினைவுறுத்துகிறது :( ஒவ்வொரு பயனருக்கும் தான் ஏன் விக்கிக்குப் பங்களிக்கிறோம் என்ற தெளிவு இருக்கும். அதற்கு உட்பட்டு மற்றவர்களின் கருத்து இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் புறக்கணிக்கலாம்.

புண்ணியாமீன் புண்படும் அளவு எந்தக் கருத்தையும் செல்வா சொன்னதாக நான் நினைக்கவில்லை. அப்படியே சொல்லி இருந்தாலும் அதற்கு அவர் வருத்தம் தெரிவித்த பின்னும் இந்த உரையாடலைத் தொடர்வது தேவையற்றது. --இரவி 20:17, 29 சூன் 2011 (UTC)

எனவே, அவரது அண்மைக்கால பங்களிப்புகளின் அடிப்படையில் அவரது கருத்துகளை மதிப்பிடுவது தவறு. அவரது கருத்துகளில் மாற்றுக் கருத்து இருந்தால் தாராளமாக நயம்பட எடுத்துரைக்கலாம். ஆனால், கருத்து கூறவே அவருக்குத் தகுதி இல்லை என்பது போல் முழுமையற்ற ஆதாரங்களைத் தருவதைத் தவிர்க்கலாம்.
இங்கென்ன முழுமையற்ற ஆதாரங்களைத் தந்துள்ளேன்? அவர் பரிந்துரை செய்த காலத்துக்கு பிந்தைய கட்டுரைகளையே சுட்டியுள்ளேன். அவர் முன் என்ன செய்தார் என்று எதற்கு ஆராய வேண்டும்?. ஒரு ”எண்”ணைக் குறிப்பிட்டு அனைவரும் இவ்வளவு எழுதுங்கள் என்று ஒரு நாள் சொல்கிறார். அதற்குப் பின் அதை அவரே பின்பற்ற வில்லை. என்பதையே சுட்டிக் காட்டுகிறேன். தர அளவீடுகளைப் பற்றி புன்னியாமீனுக்கு அளிக்கும் மறுமொழியில் சொல்லியுள்ளார். அதைப் பொதுப்படையாகச் சொன்னார் என்று நம்பச் சொல்கிறீர்கள். ஒருவர் என்ன செய்தாலும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதும், அவர் வகுக்கும் விதிகளும் பரிந்துரைகளும் அவருக்கு மட்டும் பொருந்தாதென்பதும் எந்த உலகப் பண்பாடோ? உங்களுக்கு அவர் எதுவும் தவறாகச் சொல்லவில்லை என்று தோன்றுகிறது. பிறருக்கு (நான் மட்டுமல்ல) இல்லையெனத் தோன்றுகிறது. இப்படியொரு நிகழ்வு இனி எப்போதும் நடக்கக் கூடாதென்பதற்கே இந்த உரையாடலை வளர்க்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 20:35, 29 சூன் 2011 (UTC)
தயவு செய்து இந்தப்பிரச்சினையைச் சிக்கலாக்காதீர்கள். இவ்வாறான பிரச்சினைகளை நிதானமாக அணுகித் தீர்க்கவேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்கு எல்லோருக்கும் சம உரிமை உண்டு. ஒருவர் தான் விரும்பியவாறு பங்களிக்கலாம். அதுபோலவே ஒருவருடைய ஆக்கங்கள் பற்றி இன்னொருவர் கருத்துச் சொல்லும் உரிமையும் உள்ளது. இது விக்கிப்பீடியாவின் கூட்டுமுயற்சித் தத்துவத்தின் அடிப்படைகளில் ஒன்று. இதை எல்லோரும் சரியாகப் புரிந்து கொண்டால் பிரச்சினை இருக்காது. எனக்கும், செல்வாவுக்கும், சோடாபாட்டிலுக்கும், கனகுவுக்கும்,........... இருக்கும் அதே உரிமையே புன்னியாமீனுக்கும் உள்ளது. மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களை ஏற்கவோ அல்லது ஏற்காமல் விடவோ அவருக்கு உரிமை உண்டு. எனவே புன்னியாமீன் தனது பணியைத் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சிறு சச்சரவுகள் நல்ல நோக்கமொன்றைப் பாழாக்க அனுமதிக்கக்கூடாது.
இது ஒருபுறம் இருக்க, இந்த 3,500 என்ற கணக்கு "mean article size" ஐ அடிப்படையாகக் கொண்டது அல்ல. இது வேறு அடிப்படையில் அமைந்த ஒரு அண்ணளவான கணக்கு. சில மாதங்களுக்கு முன்வரை 0.5kb, 2.0kb அளவுகளுக்கு மேற்பட்ட கட்டுரைகளின் புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. இது தரத்துக்கான ஒரு அளவீடாகக் கருதப்பட்டது. தமிழில் கடைசியாக 0.5 கிபைக்கு மேற்பட்ட கட்டுரைகள் 82% ஆகவும் 2.0 கிபைக்கு மேற்பட்டவை 28% ஆகவும் இருந்தன. இந்திய மொழிகளைப் பொறுத்தவரை இது ஒரு நல்ல முன்னணி நிலை. இந்த 2.0 கிபை, விக்கியாக்கக் கூறுகள், பிற விக்கிகளுக்கான இணைப்புகள் போன்றவற்றை நீக்கிய பின் கிடைத்த அளவீடு. நாங்கள் எழுதும் கட்டுரைகளில் சராசரியாக இந்த விக்கியாக்கக் கூறுகளும், விக்கி இணைப்புக்களும் ஏறத்தாழ 1.5 கிபை வரை இருப்பது தெரிந்தது. இதனால் வரலாற்றுப் பக்கத்தில் காணப்படும் கட்டுரையின் அளவு 3,500க்கு மேல் இருந்தால்தான் புள்ளிவிபரக் கணிப்பீட்டில் அது 2.0 கிபைக்கு மேல் வரும். இதனால் தான் தர அளவீட்டு நிலையை மேம்படுத்துவதற்கு எழுதும் கட்டுரைகள் 3,500 பைட்டுக்கு மேல் இருந்தால் நல்லது என்ற கருத்து ஏற்பட்டது. இந்த அளவீட்டின்மீது கூகிள் கட்டுரைகளின் தாக்கம் அதிக அளவில் கிடையாது. கூகிள் கட்டுரைகள் இடம்பெறத் தொடங்கிய காலத்துக்கு முன்னிருந்தே நமது தர அளவீடுகள் நல்ல நிலையிலேயே இருந்ததுடன் சீராக மேம்பட்டும் வந்தது. எனக்குத் தெரிந்தவரை 3,500 என்ற கணக்கின் பின்னணி இதுதான். ஆனால் எல்லோரும் கட்டுரைகளை 3,500 பைட்டுகளுக்கு மேல் இருக்குமாறுதான் எழுதவேண்டும் என்று எவரும் நிர்ப்பந்தம் செய்வதோ அல்லது அப்படியான கட்டுரைகளை நீக்கவேண்டும் என்று கருத்துச் சொன்னதோ இல்லை.
--மயூரநாதன் 20:50, 29 சூன் 2011 (UTC)
இதைத் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி மயூரநாதன். இங்கு விக்கியாக்கக் கூறுகள் என்று நீங்கள் குறிப்பிடுவதில் தகவல்பெட்டிகளும். மேற்கோள்/குறிப்புகளும் அடங்குமா?. --சோடாபாட்டில்உரையாடுக 21:00, 29 சூன் 2011 (UTC)
தகவல் பெட்டிகளிலும், மேற்கோள் குறிப்புகளிலும் வரும் எழுத்துக்கள் கணக்கில் எடுக்கப்படும். குறியீடுகள் மட்டுமே இதில் அடங்கா. ([[, <ref, || போன்றவை கணக்கில் வரா. இந்த அளவீட்டின் வரையறை பின்வருமாறு உள்ளது:
"Article count (alternate) Articles that contain at least one internal link and 200 (ja,ko,zh:50) characters readable text, disregarding wiki- and html codes, hidden links, etc.; also headers do not count."
கட்டுரைகளின் இறுதியில் பிற மொழி விக்கிக் கட்டுரைகளுக்குக் கொடுக்கும் இணைப்புப் பகுதி முற்றாகவே கணக்கில் வராது. 30, 40 மொழிகளுக்கு இணைப்பு இருந்தால் அதுவே ஏறத்தாழ 2.0 கிபை வந்துவிடும். ஆகவே வரலாற்றுப் பகுதியில் வரும் கட்டுரை அளவிலிருந்து இதைக் கழிக்கும்போது உண்மையான அளவு X - (அண் 2.0 கிபை) ஆகவே இருக்கும். -- மயூரநாதன் 07:10, 30 சூன் 2011 (UTC)


சோடா, மேலே நீங்கள் சற்று கொதித்து விட்டீர்கள் என்றே தெரிகிறது. செல்வாவின் கருத்துக்களில் தீவரத்தன்மை இருப்பதாகக் கூறிவிட்டு, நீங்கள் அதே மாதிரிக் கருத்துக்களை கூறி உள்ளீர்கள். ஆழ உழுவதும், அகல உழுவதும் முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. புன்னியாமீன் செல்வாவின் ஒரு கூற்றில் இருந்து தீவர நிலைப்பாடு எடுக்கவேண்டியதில்லை என்பதை பலரும் பல்வாறவாறு விளக்கி உள்ளனர். அதற்குமேல் இந்தளவு கொந்தளிப்பு ஏன் என்று தெரியவில்லை. செல்வாவின் பங்களிப்பு விக்கிப்பீடியாவிற்கு ஒரு முதுகெலும்ப்பு போல. கட்டுரை எழுதுவது மட்டும் அல்ல அதற்கு வெளியே அவர் பல நாட்களை தமிழ் விக்கிக்காக செலவிட்டுள்ளார் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். --Natkeeran 04:23, 30 சூன் 2011 (UTC)
நற்கீரனின் கருத்துகளுடன் உடன்படுகிறேன். செல்வாவின் கருத்துகள், பங்களிப்புகளைத் திறனாய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், சோடாபாட்டிலின் கருத்துகள் அந்த எல்லையைத் தாண்டி தனிப்பட்ட தாக்குதலாக உள்ளதாகவே கருதுகிறேன். சோடாபாட்டில் ஒரு நிருவாக அணுக்கம் உள்ள பயனர் என்பதையும் கருத்தில் கொண்டு, தனது கருத்துகளை இன்னும் கனிவாகவும் பண்புடனும் வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். --இரவி 05:44, 30 சூன் 2011 (UTC)
இத்தனை விவாதங்களுக்குப் பின் நானும் இதை வளர்த்துக்கொள்ள விரும்பவில்லை. தனிப்பட்ட வகையில் பயனர்கள் மனஞ்சலிக்காமல் யாவரும் செயற்படுவோம். புன்னியாமீன் தொடர்ந்து இதே முனைப்புடன் எழுதவேண்டும். கருத்தில் ஏற்பட்ட முரண்பாடு யாவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல தெளிவுகளை இந்த விவாதம் தந்திருப்பதாகவே நம்புகிறேன். புன்னியாமீன் எங்கள் ஆதங்கங்களை அன்புகொண்டு ஏற்றுக்கொள்வார் என நம்புகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் 04:44, 30 சூன் 2011 (UTC)

புன்னியாமீன் அவர்களின் பங்களிப்பை விக்கியில் நாம் நாடுகிறோம்[தொகு]

தயவுசெய்து ஒரு அன்பான வேண்டுகோள். நடந்த பிரச்சினையை ஒரு கனவென்று நினைத்து இத்துடன் நிறுத்திக் கொள்வோம். எனக்காக பிரச்சினைப்பட்டு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விக்கிக் குடும்பத்தினுள் ஒரு பிளவு ஏற்படக்கூடாது. என்னோடு அன்பு கொண்டு பலர் ஆலமரத்தடியிலும், தனிப்பட்ட மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடர்புகொண்டீர்கள். இதற்காக என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என் மீது நீங்கள் கொண்ட பாசம் உண்மையானதாக இருந்தால் இது விடயமான வாதப்பிரதிவாதங்களை இத்துடன் நிறுத்திக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன். நிச்சயமாக தேகாரோக்கியம் உள்ளவரை நான் எழுதுவேன். என் மன நிலை குறித்து சில தகவல்களை பின்பு அறியத் தருவேன்.--P.M.Puniyameen 05:05, 30 சூன் 2011 (UTC)

புன்னியாமீன், நீங்கள் ஒரே நாளில் 300 கட்டுரைகள் உருவாக்கிய போது, அந்த 300 என்ற எண்ணிக்கையை விட, தொடர்ந்து 20 மணி நேரம் விக்கிக்காக ஒதுக்கி உறவினர், தோழர்களையும் உற்சாகப்படுத்தி இந்தப் பணியில் ஈடுபடச் செய்ததே என்னைப் பெரிதும் கவர்ந்தது. இந்த ஈடுபாட்டுணர்வே இச்செய்தியை இந்திய விக்கிமீடியா குழுமத்தில் பகிந்தேன். அது உலகளவிலும் கவனத்தை ஈர்த்தது. இந்த அடிப்படையில், "எண்ணிக்கையை மட்டும் உயர்த்தி முன்னிலைப் படுத்தாமல் இருப்பது நல்லது" என்ற செல்வாவின் கருத்துடன் எனக்கும் உடன்பாடு உண்டு.

எண்ணிக்கையா ஆழமா துறைக்கான முக்கியத்துவமா என்ற உரையாடல் தமிழ் விக்கி தொடங்கிய காலம் தொட்டே உள்ளது தான். தமிழ்த் திரைப்படத் துறை குறித்த 2000க்கும் மேற்பட்ட கட்டுரைகளை ஒரே மூச்சாக நிரோ எழுதிய போதும் இது போன்ற ஒரு உரையாடல் வந்தது. தமிழர்கள் திரைப்படங்கள் குறித்து கூடுதலாகத் தேடுவதால் இதன் மூலம் தமிழ் விக்கிக்குக் கூடுதல் வாசகர்கள் கிடைக்கலாம் என்று நிரோ தனது பங்களிப்பை நியாயப்படுத்தினார். அதே நியாயம் கிரிக்கெட், இலங்கை, இதழ்கள் குறித்த தங்கள் பங்களிப்புக்கும் உண்டு. ஏன் தமிழ் விக்கி தொடங்கிய காலத்தில் நான் எழுதிய ஏராளமான கட்டுரைகள் கூட திரைப்படங்கள் குறித்தவை தான். அப்போதும் இதே போல், பயனுள்ள தலைப்புகளில் கட்டுரைகள் எழுதலாமே என்று பலர் கேட்டுக் கொண்டுள்ளனர். பல தலைப்புகளிலும் எழுதலாமே, பெரிய கட்டுரைகள் எழுதலாமே என்பது எல்லாம் பலரும் பல பயனர்களிடமும் வழக்கமாக வேண்டுபவை தான். இவை விருப்பம், வேண்டுதல் எனக் கொள்ளப்பட்டனவே தவிர, இடித்துரைப்பதாகவோ மனம் வருந்தச் செய்வதாகவோ எண்ணியதில்லை.

தமிழ் விக்கி தொடக்கம் முதற்கொண்டு தமிழ் விக்கிக்குள்ளும் வெளியேயும் மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டே வளர்ந்துள்ளோம். தாலிபான் கூட்டம் என்பது முதல் கோமாளிகள், மனநோய் உள்ளவர்கள் என்பது வரை பலவாறாக விமர்சிக்கப்பட்டுள்ளோம். இதற்கெல்லாம் வருத்தப்பட்டு எல்லாரும் விலகி இருந்தால், தமிழ் விக்கியில் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். இந்த விமர்சனங்களைப் பொருட்படுத்தாது தொடர்ந்து செயல்படுகிறோம் என்றால், விக்கியின் ஊடான நமது பங்களிப்பால் தமிழ்ச் சமூகத்துக்கு ஏதேனும் பயன் கிட்டும் என்ற நமது பங்களிப்பின் மேல் உள்ள நம்பிக்கையால் தான். தங்கள் பங்களிப்பின் மீது இதே போன்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கும் எனில், நீங்களும் தொடர்ந்து விக்கியில் செயற்பட வேண்டும். இதற்கு மற்றவர் ஏற்பு தேவை இல்லை. இந்நிலையில் செல்வாவின் வழக்கமான கருத்தை நீங்கள் தவறுதலாகப் புரிந்து கொண்டு தேவையின்றி மனம் வருந்தி அளவுக்கு அதிகமாக எதிர்வினை ஆற்றியுள்ளதாகவே கருதுகிறேன். அதனாலேயே பிரச்சினை, கனவு, பாசம், மறப்போம் போன்ற சொற்களால் இந்த உரையாடலை உணர்ச்சிகரமான ஒன்றாக மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு பயனர் தொடர வேண்டும் என்று வாக்கெடுப்பு போல் ஆதரவு தெரிவிப்பதால் வருங்காலத்தில் தேவையற்ற அரசியல்கள், குழுச் செயல்பாடுகள், விக்கிச் சமூகத்தில் பிளவு ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளன. பிரச்சினை முழுக்க செல்வாவால் தான் என்பது போல் தோற்றம் வருவது சரியாகத் தோன்றவில்லை. எனவே தான் என் கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிக்கிறேன். --இரவி 05:39, 30 சூன் 2011 (UTC)

எனது பெயர் இழுக்கப்பட்டதால் இங்கு எழுதவேண்டிய நிலை வந்துவிட்டது. செல்வா தனது கருத்துக்களை பொதுப்படையாகவே முன்வைத்துள்ளார். நான் இங்கே எனது கருத்துக்களை வெளிப்படையாக முன்வைக்கிறேன். தமிழர் வரலாற்றில் ஒரு முழுமையான கலைக்களஞ்சியம் இதுவரை இருக்கவில்லை. ஆனால் விக்கிப்பீடியாவின் தொழில்நுட்பம் (மென்பொருள்) ஒரு வரப்பிரசாதமாக கிட்டியுள்ளது. இதனை சரியாகப் பயன்படுத்தி, பங்களித்தால் பலன் ஒட்டுமொத்த எமது தமிழனத்திற்கானது. நாளைய இளம் தலைமுறையின் வளர்ச்சிக்கானது.

இங்கே புன்னியாமீனின் கட்டுரைகள் பல எத்தகையது என்பதை கலாநிதி பட்டம் பெற்ற புன்னியாமீனே உணரவேண்டும். புன்னியாமீன் எழுதிய கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் இருப்பதற்கான தகுதிகள் அனைத்தையுமே கொண்டுள்ளன. (சோடாப்பாட்டிலின் கருத்துப்படி) இவ்வாறு விக்கிபீடியாவில் மட்டுமே எழுதலாம். ஆனால் விக்கிபீடியாவைத் தவிர எந்த இடத்தில் இவ்வாறு எழுதினாலும் எவரும் எட்டிப்பார்க்கவும் மாட்டார்கள். வலைப்பதிவில் எழுதி தமிழிஷ் தளத்தில் சேர்த்தால் எத்தனைப் பேர் வாக்களிப்பார்கள் என்றும் பார்க்க வேண்டும். இதுவரை எழுதியவை அறை குறை 3+++ ஆக்கங்களை நூலாக எழுதி வெளியிட்டுப்பாருங்கள் எவனாவது வாங்குவானா என்று? இவை வெறுமனே தமிழ் விக்கிபீடியாவின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு மட்டுமே பயன்படும். அதனால் அகமகிழ்வோருக்கு இது மகிழ்ச்சி தரும்; மாறாக ஒரு இனத்தின் வளர்ச்சிக்காக வளர்க்கப்படும் ஒரு கலைக்களஞ்சியம் எனப் பார்த்தால் பூச்சியம் மட்டும் தான்.

விக்கிபீடியாவின் வளர்ச்சி என்று கூறிக்கொண்டாலும், குறைந்த காலத்தில் அதிக எண்ணிக்கையான கட்டுரைகளை தந்தவர் எனும் வகையில் பார்த்தால், இன்னும் கொஞ்ச நாட்களில் மயூரநாதனையும் முந்திவிடலாம். அதன்பிறகு அதிக தொகுப்புகள் செய்துள்ள நற்கீரனையும் முந்திவிடலாம். இவ்வாறு தனது தனிப்பட்ட வகையில் தரகணிப்பில் முன்னிலையில் மகுடம் சூடிக்கொள்ளலாம். எண்ணிக்கையை அதிகரிப்பால் உயர்வு என நினைத்து பன்றி அதிகம் குட்டிப்போடுவது போல் போடுவதால் மட்டும் விளைவது ஒன்றுமில்லை. புத்தியுள்ள சமுதாயமாக வளரவேண்டும். கிடைக்கும் வெற்றியும் சரி! பட்டமும் சரி! குறுக்குவழி சிந்தனையில் கிடைக்கக்கூடாது.

கலாநிதி புன்னியாமீன் உணரவேண்டியது (விக்கிபீடியாவை பொறுத்தமட்டில் அல்ல; தனிபட்ட வகையில்) தான் எழுதும் ஆக்கங்கள் தரமானவை தானா? பொதுக்கலைமாணி, ஊடகவியல் சிறப்புப்பட்டம், இலங்கை கல்விச்சேவை, இலக்கிய ஆய்வு, சுதந்திர ஊடகவியலாளர் போன்ற தகமைகளை வைத்துள்ளீர்கள் இவை நீங்கள் விக்கியில் எழுதிய 3+++ ஆக்கங்கள் போன்று எழுதி பெற்ற பட்டங்களா? (மர்வின் சில்வாவுக்கும் டொக்டர் பட்டம் உள்ளது)

மேலும் இதுப்போன்ற கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒருநாளைக்கு எத்தனைப் பேர் பார்க்கின்றனர் பாருங்கள். அப்போது அதனால் எத்தனைப் பேர் பலன் அடைகின்றனர் என்பதை அறியலாம். --மொஹமட் 06:21, 30 சூன் 2011 (UTC)

மௌனம் காக்க நினைத்தேன். மொஹமட் தனிப்பட்ட ஒருபிரச்சினையை முன்வைத்துள்ளதால் ஒரு சிறு விளக்கம். மொஹமட் நான் கலாநிதி அல்ல. கலாபூசணம். கலாபூசணம் என்பது இலங்கை அரசு எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் வழங்கும் உயரிய விருது. எனது கலாபூசணம் விருது குறுக்குவழியில் பெறப்பட்டதல்ல. தமிழ் மொழில் நான் 100 புத்தகங்கள் எழுதியமைக்காக இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக எனக்கு 2004ம் ஆண்டில் வழங்கியது சந்தேகமென்றால் இலங்கை கலாசார அமைச்சுடன் தொடர்பு கொண்டு விசாரித்துக்கொள்ளுங்கள். தயவு செய்து 'முழங்காலுக்கும், மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போடாதீர்கள்.' மொஹமட் நீங்கள் உண்மையான ஒரு முஸ்லிமாக இருந்தால் பன்றிக்குட்டியை உவமித்த வாக்கியத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள். ஒருநாளைக்கு எத்தனைப் பேர் கட்டுரைகளைப் பார்க்கின்றனர், அது தரமா இல்லையா? அதனால் எத்தனைப் பேர் பலன் அடைகின்றனர் என்பதை விக்கி நிர்வாகிகள் பார்த்து கொள்வார்கள். அதைப்பற்றி நான் கவலை கொள்ளத் தேவையில்லை. --P.M.Puniyameen 11:25, 30 சூன் 2011 (UTC)
”பன்றி அதிகம் குட்டிப்போடுவது போல்” என்று அவதூறு செய்ததற்காக மொஹமட் தடை செய்யப்பட்டுள்ளார். தகாத சொற்களை முன்பே பயன்படுத்தி ஒரு முறை தடைசெய்யப்பட்டார். அப்போது இன்னொரு முறை இதுபோன்ற தகாத சொற்களைப் பயன்படுத்தினால் நிரந்தரமாக கணக்கு முடக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தேன். எனவே இன்று முடிவிலியாகத் தடை செய்யப்பட்டிருக்கிறார். பன்றி/மனநோயாளி போன்ற வார்த்தைகள் இங்கு பயன்படுத்தக்கூடாதவை--சோடாபாட்டில்உரையாடுக 13:13, 30 சூன் 2011 (UTC)

தமிழ் விக்கியின் வளர்ச்சியைக் கருத்தில் கொள்க![தொகு]

இங்கு காரசாரமாக நடந்துகொண்டிருக்கின்ற கருத்துப் பரிமாற்றத்தில் கலந்துகொள்ளவா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இறுதியில் என் கருத்தையும் சுருக்கமாக முன்வைப்பது பொருத்தமே என்று முடிவுசெய்தேன். தமிழ் விக்கி அளவிலும் வளரவேண்டும், ஆழத்திலும் விரிவிலும் சிறக்கவேண்டும் என்பது குறித்து அனைவருக்கும் ஒத்த கருத்து உள்ளது. எனவே, நம் தலைமுறையும் வருங்காலத் தலைமுறையினரும் தமிழ் விக்கியால் பயன்பெற வேண்டும் என்னும் ஒரே இலக்கைக் கண்முன் கொண்டு அனைத்துப் பயனர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்பது என் பணிவான கருத்து. விக்கியின் உயிர்மூச்சே கூட்டுமுயற்சி என்பதால் அந்த உணர்வோடு பணியைத் தொடர்வோம். அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள்!--பவுல்-Paul 18:16, 29 சூன் 2011 (UTC)

எனது கருத்தையும் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன். விக்கிப் பயனர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தமது பங்களிப்பைச் செய்கின்றனர். சிலருக்கு ஆழமான கட்டுரைகளை எழுத முடிகின்றது. வேறு சிலருக்கு குறுகிய, அதிகளவிலான கட்டுரைகளை எழுத முடிகின்றது. இன்னும் சிலருக்கு இரு வகையான கட்டுரைகளையும் எழுத முடிகின்றது. நான் சில கட்டுரைகளை முழுமையாக எழுதும் நோக்குடன் ஆரம்பிப்பேன். பின்னர் நேரக் குறைபாட்டில், அப்படியே விட்டு விடுவேன். வேறொரு கட்டுரையை ஆரம்பிக்கும் ஒரு மனநிலை வந்தால், முதல் கட்டுரையை அப்படியே விட்டு விட்டு, அடுத்த கட்டுரைக்குத் தாவி விடுவேன். அவரவர், தனக்கு கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து, மன நிலையைப் பொறுத்து, தாம் அறிந்துள்ள விடயங்களைப் பொறுத்தே கட்டுரைகளை ஆக்க முடியும். சிலர் எழுதும் கட்டுரைகளில் எனக்கு எதுவுமே புரிந்து கொள்ள முடியாத விடயங்கள் இருக்கும். அதேபோல் நான் எழுதும் கட்டுரைகளில் வேறொருவருக்கு எதுவுமே புரிந்து கொள்ள முடியாத விடயங்கள் இருக்கக் கூடும். நமக்கு புரியாவிட்டாலும், வேறொருவருக்கு அந்த தகவல்கள் தேவைப்படலாம். அவர் தேடும்போது அந்த தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் கிடைக்கலாம். எல்லா வகையான தகவல்களும் ஏதோ ஒரு வகையில், எவரோ ஒருவருக்கு பயன்படக் கூடியவையாகவே இருக்கும். அந்த வகையில் புன்னியமீனின் பங்களிப்பும் சிறப்பானதே. அவர் தொடர்ந்தும் தனது பங்களிப்பை தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வழங்க வேண்டும் என்று அனைவரையும் போல நானும் அவரைக் கேட்டுக் கொள்கின்றேன்.
புன்னியமீனைப் பாராட்டி வந்த செய்தியில் வேறு விடயங்கள் பேசப்பட வேண்டி வந்ததும், அவர் மனம்வருந்தி விலகுவதாக சொன்னதும் வருத்தமாகவே உள்ளது. விக்கிப்பீடியாவின் விதிகளுக்கு உட்பட்டு, சிறப்பான பங்களிப்பைச் செய்துவரும் எந்த ஒரு பயனரையும், மனம் சோர்வடையக் கூடிய விதத்தில் கருத்துக்கள் கூறப்படாமல் இருத்தலே நல்லது. ஒரு நல்ல புரிந்துணர்வுடன் புன்னியமீன் மீண்டும் தனது பங்களிப்பை முன்போலவே தொடருவார் என நம்புகின்றேன். --கலை 23:30, 29 சூன் 2011 (UTC)

PDF கோப்பாகத் தரவிறக்கம்[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளதைப் போல, இங்கும் கட்டுரைகளை PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்யுமாறு ஏற்படுத்தமுடியுமா? --செந்தி//உரையாடுக// 19:56, 29 சூன் 2011 (UTC)

இதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. எப்பொது இணைக்கப்படுமென்று தெரியவில்லை. மலையாள விக்கியரும் மீடியாவிக்கி நிரலாளருமான சந்தோஷ் தொட்டிங்காலைக் கேட்டால் தெரியலாம்--சோடாபாட்டில்உரையாடுக 21:05, 29 சூன் 2011 (UTC)

சோடாபாட்டிலுக்கு வேண்டுகோள்[தொகு]

 • தமிழ் விக்கிப்பீடியாவில், இதுகாறும் ஒருவருக்கொருவர் பண்புடனும், மதிப்புடனும், பெருந்தன்மையுடனுமே கருத்தாடி வந்துள்ளோம். ஒருசில நேரங்களில் மாற்றுக் கருத்துகள் எதிர்-எதிர் நின்ற இடங்களிலும் அமைதியான முறையில் பண்புடனேயே உரையாடி வந்துள்ளோம். நான் பங்களிக்கத் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவுற்ற பொழுது, என் பயனர் பக்கத்தில், இப்படிக் கூறினேன்: "விக்கி நண்பர்களுடன் பணியாற்றுவதிலும், விக்கி நண்பர் பங்களிபாளர்களின் குழாம் காட்டும் பொதுநல உணர்வும், நடுநிலைப் போக்கும், அறிவை அடிப்படையாகக் கொண்டு அணுகும் உள்ளகப் பண்பாடும் என்னை மிகவும் மகிழ்வித்தவை. "விக்கி நடத்தை" (நன்னோக்கு, வளர்முக அணுகுமுறை, பரந்த நோக்கு இப்படி பல அரிய கூட்டுழைப்பு நன்னடத்தைக்கூறுகள் கொண்ட விக்கி நடத்தை) என்றே மெய்யாகப் புகழலாம் என நினைக்கின்றேன். இதில் நானும் ஒருவனாக இருந்து பணியாற்றக் கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்."
 • என் கருத்துகளை, இந்த 5 ஆண்டுகளில், நேர்மையுடனும், தக்க சான்றுகளுடனும், பண்புடனும் மதிப்புடனுமே தெரிவித்து வந்துள்ளேன். நான் கூறுவதில் குற்றம் குறைகள் இருந்தால் எடுத்துக்கூறுங்கள், நான் என்னைத் திருத்திக் கொள்கின்றேன். ஆனால் தனிப்பட்ட முறையில் நீங்கள் என் மீது செய்யும் தாக்குதல் சரியன்று. பயனர் புன்னியாமீன் அவர்கள் மீது நான் கூறாத, நினைக்கவும் அல்லாத "மதிப்பீடுகளை", நான் கூறியதாக நீங்கள் "வரைவு' (describe) செய்து, அல்லது புரிந்துகொண்டு, நீங்கள் தனிப்பட என் மீது செய்யும் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். நான் யாருடைய பங்களிப்பையும் குறைத்து மதிப்பிட்டது கிடையாது. நான் எளிமையாகவும் நேர்மையாகவும் மன்னிப்பும் கேட்டுள்ளேன். ஏற்பதும் ஏற்காததும் பயனர் புன்னியாமீனின் உகப்பு. விக்கிப்பீடியா என்பது பலர் கூடி, பலவாறு கருத்துகள் பகிர்ந்து, கருத்தாடி உருவாக்கும் ஓர் ஆக்கம். அதுவும் பெரும்பாலும் அறிவிலக்கிய ஆக்கம். இதில் செழிப்பான கருத்தோட்டம், உறவாட்டம் நடக்க, அமைதியான, அறிவார்ந்த, பண்பான, ஒருவருக்கொருவர் மதிப்புடனும் பெருந்தன்மையுடனும் நடந்துகொள்ளும் பாங்கு (நட்புறவான சூழலும்) இருக்க வேண்டும். இந்த ஐந்து ஆண்டுகளில் இப்படி இருந்து வந்துள்ளதை நான் உணர்ந்தவாறு மேலே சுட்டியுள்ளேன். அரிய ஒரு நல்லிணக்கப் பண்பாட்டுச் சூழல் பாழாகாதவாறு நடந்துகொள்வது வேண்டும் (நாம் அனைவரும்). --செல்வா 02:08, 30 சூன் 2011 (UTC)

செல்வா, சோடாபாட்டில், புன்னியாமீன் மற்றும் ஏனைய நண்பர்கள் யாராயிருப்பினும் இங்கு ஏற்பட்ட கருத்தாடலைக் கண்டு நீங்கள் மனமுடைந்து போகக் கூடாது என்றும் நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பங்களிப்பை முன்னிலும் சிறப்பாக நல்க வேண்டுமெனவும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.--பாஹிம் 04:56, 30 சூன் 2011 (UTC)

பாஹிமின் கருத்துடன் முழுவதும் உடன்படுகிறேன். --Natkeeran 04:57, 30 சூன் 2011 (UTC)

உங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே. நான் மனம் உடைந்து போகவில்லை :) இதில் மனம் உடைய ஏதும் இல்லை! :) என் ஒரே கவலை, அறிவாக்கம் நிகழும் இங்கே, அன்பும் நட்புறவுமாக மலர்ந்து வந்த நற்சூழல் மாறக்கூடாதே என்பதுதான். நான் பல இடங்களிலும் கூறிவந்த என் பொதுக் கூற்றுகள் இங்கு இந்தச் சூழலில் சிலரால் பிறழ்வாக உணர நேர்ந்தது என் தவறுதானே. அதற்கு நான் வருத்தப்பட்டேன். ஆனால் நான் கூறவந்த செய்தியில் தெளிவும், உறுதியும் உள்ளது. தொடர்ந்தும் என் கருத்துகளைக் கூறத் தயங்கமாட்டேன், ஆனால் அவற்றை என்னால் இயன்ற அளவு தக்க பண்பான, நட்புறவான முறையிலேயே முன்வைக்க முனைவேன். த-வி-யில் பங்களிக்கக் கொடுத்துவைத்தது என் நல்வாய்ப்பாக உணர்கிறேன், இங்கு கிட்டிய நல்ல நட்புறவுகள் கிடைத்தற்கரியனவாய் உணர்கிறேன். எனவே த-வி-யில் என்பங்களிப்பு எப்பொழுதும் என்னால் இயன்ற அளவு கட்டாயம் இருக்கும். உங்கள் ஊக்கத்துக்கும் உந்துதலுக்கும் மிக்க நன்றி, என் உள்ளத்தில் எந்தச் சோர்வும் இல்லை! --செல்வா 11:50, 30 சூன் 2011 (UTC)
தயவுசெய்து ஒரு அன்பான வேண்டுகோள். நடந்த பிரச்சினையை ஒரு கனவென்று நினைத்து இத்துடன் நிறுத்திக் கொள்வோம். எனக்காக பிரச்சினைப்பட்டு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விக்கிக் குடும்பத்தினுள் ஒரு பிளவு ஏற்படக்கூடாது. என்னோடு அன்பு கொண்டு பலர் ஆலமரத்தடியிலும், தனிப்பட்ட மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடர்புகொண்டீர்கள். இதற்காக என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என் மீது நீங்கள் கொண்ட பாசம் உண்மையானதாக இருந்தால் இது விடயமான வாதப்பிரதிவாதங்களை இத்துடன் நிறுத்திக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன். நிச்சயமாக தேகாரோக்கியம் உள்ளவரை நான் எழுதுவேன். என் மன நிலை குறித்து சில தகவல்களை பின்பு அறியத் தருவேன். --P.M.Puniyameen 05:04, 30 சூன் 2011 (UTC)
நன்றி, புன்னியாமீன். -- மயூரநாதன் 06:28, 30 சூன் 2011 (UTC)
புன்னியாமீனுக்கு எனது நன்றிகள். --சஞ்சீவி சிவகுமார் 09:30, 30 சூன் 2011 (UTC)

ஆழமா உழுவதா, அகலமா உழுவதா, பழைய கதையப்பா[தொகு]

தற்போது மேலே வலைத்தளங்களில் நடப்பது போல ஒரு உரையாடல் நடந்து கொண்டு இருக்குது. இதன் சாரமாகத் தெரிவது விக்கியின் தரத்தை நிர்ணமிப்பது எது என்பதே. (ஆக்கள் தாக்குதலை தவிர்த்து கருத்துக்களை எடுத்துப் பார்த்தால்.) விக்கிக்கு வெளியே உள்ளவர்களுக்கு கட்டுரை எண்ணிக்கை என்பது ஒரு முக்கிய ஈர்ப்பு அளவீடே. அதனாலேயே சுந்தர் நாம் 50 நிலைக்கு வந்துவிட வேண்டும் என்ற போது, அது சரியான இலக்கு என்று பட்டது.

கட்டுரை இல்லாமல் இருப்பதிலும் பார்க்க ஒரு குறுங்கட்டுரை இருப்பது பல சந்தர்ப்பங்களில் நன்றே. பொதுவாக நாங்கள் மூன்று வசனங்கள், பகுப்பு, இணைப்புக்கள் என்று ஆகக் குறைந்த வரையறை செய்தோம். இதில் விதி விலக்குகளும் உண்டு. ஒரு நல்ல வரையறை தரக் கூடியதாக இருந்தால், அது கூட நல்ல தொடக்கமாக இருக்கும். இதழ்கள் பற்றிய கட்டுரைகள் இதற்கு ஒர் எடுத்துக்காட்டு. குறுங்க கட்டுரைகள் ஆனாலும் அவை தமிழ் மொழியின் ஒரு முதன்மைப் படைப்புக் களத்தைச் சுட்டி நிற்கின்றன. ஒவ்வொரு இதழுக்குப் பின்னாலும் ஆசியர், இடம், கருத்து என விரித்துச் செய்யக் கூடிய கூறுகள் இருக்கின்றன. அத்தோடு திரைப்படங்கள் பற்றி அதிக கட்டுரைகள் இருக்கும் தமிழ் விக்கியின் பல்வகைத்தன்மையை அவை அதிகரிக்கிறன.

அதே வேளை தமிழ் விக்கியில் நாம் நிச்சியம் ஒரு வரி அல்லது ஒரு சொல் கட்டுரைகளைத் தவிர்த்தோம். அது குப்பையான ஒரு விக்கியையே உருவாக்கி இருக்கும். பகுப்பாக்கம், பராமரிப்பு ஆகியவற்றை சிக்கலாக்கி இருக்கும். அத்தோடு ஒரே மாதிரி ஒரே துறைக் குறுங் கட்டுரைகளை தானியங்கி முறையில் பல்லாயிரக்கணக்கில் உருவாக்குவது இல்லை என்றும் நாம் தீர்மானித்தோம்.

பல்துறைக் கலைக்களஞ்சியம் என்று கருத வேண்டும் என்றால் சில அடிப்படைக் கட்டுரைகள் ஆழமாக இருக்க வேண்டும். போக்கிமானின் ஒரு கதாபத்திரம் பற்றிய ஒரு விரிவான கட்டுரை இல்லை என்றால் பறவாயில்லை, ஆனால் தமிழ் என்ற கட்டுரை விரிவாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. பல துறைகளில் முக்கியமான கட்டுரைகள் எவை என்பதை பல பட்டியல்களில் அடையாளப் படுத்தி உள்ளோம்.

இப்படித்தான் தரம் இருக்க வேண்டும் என்ற உரையாடல் பல முறை நிகழ்ந்து உள்ளது. இதில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுவது இயல்பே. இதுவரை ஒரு பொதுவான இணக்கம் இருந்து வந்துள்ளது. அதில் கருத்து வேறுபாடுகள் இருப்பின் அவற்றை முன்வைத்து, ஒரு புதிய இணக்கப் பாட்டுக்கு வரலாம். --Natkeeran 04:57, 30 சூன் 2011 (UTC)


நற்கீரனின் கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவைப் போன்ற, வளர்ச்சியின் தொடக்க நிலையில் இருக்கும் விக்கிப்பீடியாக்களில் எதையுமே இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருக்க முடியாது. தவியில் 200, 300 கட்டுரைகள் இருந்த காலப்பகுதியில் இப்பொழுது இருப்பதுபோல் பல பங்களிப்பாளர்கள் கிடையாது. ஓரிருவர் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தோம். கட்டுரை எண்ணிக்கையை விரைவாகக் கூட்டுவது, புதிய பயனர்களைக் கவர்வது, பல்துறை விரிவாக்கம் போன்றவை மிக மிக முக்கியமானவையாக இருந்தன. மிகக் குறைந்த வளங்களைக் கொண்டு இவற்றைச் செய்ய வேண்டும். அக் காலப்பகுதியில், "நடிகர்கள் பட்டியல்", "நடிகைகள் பட்டியல்" என்று சில குறுங்கட்டுரைகளையும் நான் உருவாக்கினேன். சினிமாவில் எனக்கு அதிக ஈடுபாடு இருந்ததில்லை. இவை பயனுள்ள கட்டுரைகள் என்பதற்காகவும் நான் எழுதவில்லை. ஆனால், தவி பல்துறை சார்ந்தது என்பதைக் காட்டவும், சினிமா ஆர்வம் உள்ளவர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு வழியாகவுமே இதனைக் கருதினேன். பின்னர் ஒரு காலத்தில், திரைப்படங்கள் தொடர்பான 2000 குறுங் கட்டுரைகளை நிரோ என்னும் பயனர் எழுதினார். அப்போதும் இதற்கு ஒரு தேவை இருந்தது. கட்டுரை எண்ணிக்கைத் தர நிலையில் தவியை ஓரளவு நல்ல நிலைக்குக் கொண்டுவர முடிந்தது. அதே நேரம் இதே பயனர் பாண்டியர் தொடர்பாகப் பல ஓரளவு பெரிய கட்டுரைகளை எழுதியதையும் குறிப்பிடலாம். இன்னொரு கால கட்டத்தில் தவியின் கட்டுரை எண்ணிக்கையைக் கூட்டவேண்டும் என்ற தேவை உணரப்பட்டபோது, ஊர்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான கட்டுரைகளைத் தன்னியக்கமாக எழுதும் வாய்ப்புக்கள் இருந்தும், 1000 கட்டுரைகள் வரை இவ்வாறு எழுதலாம் என இணங்கினோம் (சில இந்திய மொழிகளில் 20-25,000 வரை கட்டுரைகள் எழுதப்பட்டன). பயனர் கணேஷ் தானியங்கி முறையில் ஏறத்தாழ 1000 கட்டுரைகள் வரை உருவாக்கினார். அக் கட்டுரைகள் 2.0 கிபிக்கு மேல் இருந்ததையும் குறிப்பிட வேண்டும். இதுவும் தவியின் கட்டுரை எண்ணிக்கையை நிலைப்படுத்த உதவியது. இதே போன்று கட்டுரை எண்ணிக்கையில் தவியின் தரநிலை இறங்கிச் சென்று 70 ஐ அண்மித்த நிலையில் இருந்தபோது புன்னியாமீனின் பங்களிப்பு அதை 65 க்கு உயர்த்தியது. புன்னியாமீனின் கட்டுரைகளில் வேறு சிறப்பம்சங்களையும் நாம் கவனிக்க வேண்டும். கட்டுரைகளில் சில சிறியவை ஆனாலும், அவற்றில் உள்ள தகவல்கள் பல, முக்கியமாக வெளியீடுகள் தொடர்பானவை, இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியாதவை. அவை குறுங் கட்டுரைகளாக இருந்தாலும் பரவாயில்லை. வேறு சில நிச்சயமாக விரிவாக்கத்தக்கவை. காலப்போக்கில் அவற்றை விரிவாக்க வேண்டும். விரிவாக்கலாம்.
திரைப்படக் கட்டுரைகள் பற்றி அண்மையில் சில விமர்சனங்கள் எழுந்தன. சொல்லப்பட்ட கருத்துக்கள் நியாயமானவை. அவற்றை விரிவாக்க முடியும் என்பதும் அதற்கான தேவை உள்ளது என்பதையுமே அதற்குப் பதிலாகக் கூற முடியும். இந்த விமர்சனங்களுக்குப் பின்னர், அண்மையில் சென்னைக்குச் சென்றிருந்தபோது தமிழ்த் திரைப்பட வரலாறு, அதன் சமூக அரசியல் தாக்கங்கள் முதலிவை தொடர்பான ஏழெட்டு நூல்களை வாங்கி வந்துள்ளேன். அவற்றை வாசித்து வருகிறேன். விரைவில், சில திரைப்படக் கட்டுரைகளையாவது விரிவாக்க எண்ணியுள்ளேன். எனவே இக் குறுங்கட்டுரைகள் அவற்றை விரிவாக்க வேண்டிய நெருக்கடியையும் கொடுத்துவருகின்றன என்பது அவற்றின் பயன்களில் ஒன்றாகக் கருதலாம். அதே வேளை இந்தத் தேவையை ஞாபகப் படுத்தும் வகையில் விமர்சனங்களை முன்வைக்கும் பயனர்களும் தவியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களே. விமர்சனங்கள் எந்தத் திட்டத்தின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதவை என்பதை நாம் அனைவரும் உணர்ந்து அவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றிலிருந்து படிப்பினையைப் பெற்றுக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். பாராட்டுகள் எவ்வளவுக்கு எம்மை உற்சாகப் படுத்துகிறதோ, அதேயளவுக்கு ஆலோசனைகளும், விமர்சனங்களும்கூட நம்மைச் சிந்திக்க வைக்கின்றன, புடம் போடுகின்றன. தமிழ் விக்கியில், இரவியையும் செல்வாவையும் போல் அதிகமான, கடுமையான விமர்சனங்களை எதிர் நோக்கியவர்கள் கிடையாது ஆனாலும் அவற்றையெல்லாம் நேர்முகமாக ஏற்றுக்கொண்டு தொடர்ந்தும் முனைப்பாகப் பணியாற்றிவரும் அவர்களது நேர்மையும், உறுதிப்பாடும் போற்றுதலுக்கு உரியன.
எல்லாச் சூழ்நிலைகளிலும் மற்றவர்களைப் புரிந்து கொள்வதிலும், உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு நிதானமாகச் செயலாற்றுவதிலுமே எந்தக் கூட்டு முயற்சியினதும் வெற்றி தங்கியுள்ளது. தரத்தைப் பேணுவதில் நாம் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி கண்டுள்ளோம். தொடர்ந்தும் இந்நிலையப் பேணுவதற்கு எல்லோரும் சேர்ந்து உழைப்போம். -- மயூரநாதன் 09:01, 30 சூன் 2011 (UTC)

தமிழ்விக்கியில் நான்[தொகு]

தமிழ்விக்கிப்பீடியாவில் எனது பங்களிப்பு குறித்த சில தெளிவுகளை வழங்கவேண்டிய கடமைப்பாட்டில் நான் உள்ளேன். 'மொஹமட்' குறிப்பிட்டதைப் போல கொஞ்ச நாட்களில் 'மயூரநாதனை' முந்திவிடலாம். அதன்பிறகு அதிக தொகுப்புகள் செய்துள்ள 'நற்கீரனை'யும் முந்திவிடலாம் இவ்வாறு தனது தனிப்பட்ட வகையில் தரகணிப்பில் முன்னிலையில் மகுடம் சூடிக்கொள்ளலாம் என்ற குறுகிய எண்ணம் எனக்கில்லை.

தமிழ்விக்கிப்பீடியாவின் வளர்ச்சி குறித்து சுயமாக என்னால் ஆற்றப்பட்ட சில பணிகள் பற்றியும் எதிர்காலத்தில் தமிழ்விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கென என்னால் செய்ய ஆசைப்படக்கூடிய விடயங்கள் பற்றியும் இவ்விடத்தில் மனம்திறந்து கருத்துத் தெரிவிக்கலாம் என நினைக்கின்றேன்.

தமிழ்விக்கிப்பீடியாவில் நான் இணைந்தது 2010 நவம்பர் 14ம் திகதியாகும். அதிலிருந்து படிப்படியாக எழுத ஆரம்பித்து விக்கியின் ஏனைய பயனர்களின் அன்பான அணுகுமுறைகள் என்னைக் கவர்ந்தமை காரணமாக தொடர்ந்தும் எழுதத் தலைப்பட்டேன். ஆங்கில விக்கியின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு சுயிஸ் கனல்கா வானொலிக்கு வழங்கிய செவ்வியையும், இதே விடயம் குறித்து ஏனயை ஊடகங்களுக்கு எழுதிய கட்டுரைகளையும் தொடர்ந்து தமிழ்விக்கிப்பீடியாவின் 10வது ஆண்டு நிறைவை பற்றி எனக்குள் ஒரு கற்பனையை உருவாக்கிக் கொண்டிருந்தேன். தமிழ்விக்கிப்பீடியா 10வது ஆண்டு நிறைவடையும்போது தமிழ் விக்கி 50வது இடத்தில் இருக்க வேண்டுமென்றும், தனிப்பட்ட முறையில் எனது கட்டுரைகள் பத்தாயிரமாக இருக்க வேண்டும் என்றும் எனக்குள் ஓர் இலக்கை உருவாக்கிக்கொண்டு செயல்பட ஆரம்பித்தேன். இதைத் தவிர தமிழ்விக்கியில் வேறொன்றையும் எதிர்பார்த்தோ அல்லது என்றும் விக்கியில் மானசீகமாக நான் ஒரு குருவாக மதிக்கும் மயுரநாதன் ஐயாவை விஞ்சிச் செல்ல வேண்டும் என்ற நோக்கமோ கடுகளவுக்கும் இருந்ததில்லை. இனியும் ஏற்படமாட்டாது.

மயுரநாதன் ஐயா தமிழ்விக்கியை ஆரம்பித்தவர். தமிழ்விக்கியில் ஏற்படக்கூடிய வளர்ச்சி நிச்சயமாக மயுரநாதனுக்குரியதே. இதனை யாராலும் மறுக்க முடியாது. விக்கி பற்றி என்னால் எழுதப்படக்கூடிய கட்டுரைகள், நேர்காணல்களில் எந்த இடத்திலாவது நான் மயுரநாதன் ஐயாவை குறிப்பிடாமல் விட்டதில்லை. தமிழ்விக்கி எனும்போது அவர்தான் என்று எனது கருத்தை நான் வலியுறுத்தியுள்ளேன். எனவே, தனிப்பட்ட முறையில் நான் கட்டுரை எழுதினாலும்கூட, விக்கி வளர்ச்சியடைகின்றதென்றால் நிச்சயமாக அந்த முழுப் பெருமையும் மயுரநாதன் ஐயாவையே சாரும். இப்படிப்பட்ட மனநிலை இருக்கும்போது நண்பர் செல்வாவின் ஒரு வார்த்தையில் எனக்கு ஏற்பட்ட கருத்து மயக்கம் என்னுள் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது உண்மைதான். மயுரநாதன் ஐயாவுக்கும் எனக்குமிடையேயுள்ள புரிந்துணர்வு சிதைத்துவிடுமோ என்று ஐயம் கொண்டேன். இனி எழுதமாட்டேன் என்ற முடிவுக்கு ஆரம்பத்தில் வந்தேன். தொடர்ந்து செல்வாவின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டேன். இச்சந்தர்ப்பத்தில் சோடாபாட்டில் எனக்காக வாத பிரதிவாதத்தை தொடர்ந்தமையே கண்டு அஞ்சிவிட்டேன். எனவேதான் உடனடியாக இப்பிரச்சினையை முடிவுக்குகொண்டு வருவோம் என்று அன்புடன் பணித்தேன்.

தமிழ்விக்கிப்பீடியாவில் 25க்கும் மேற்பட்ட பயனர்களுடன் தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் எனக்குத் தொடர்பிருந்த போதிலும்கூட, இதுவரை எந்தவொரு பயனரையும் நான் நேரடியாக சந்தித்ததில்லை. அவர்கள் கருப்பா வெள்ளையா என்பது கூட எனக்குத் தெரியாது. எமக்குள்ள ஒரு உறவு விக்கிக் குடும்பம் என்ற அடிப்படையே. விக்கி வளர்ச்சி தொடர்பாக மட்டுமே. தொலைபேசி மூலமாகவும். மின்னஞ்சல் மூலமாகவும் ஆலமரத்தடியின் கீழும் நான் தொடர்ந்தும் எழுதவேண்டும் என கேட்டுக்கொண்ட பயனர்களுக்கு என் இதய பூர்வமான நன்றிகள். உங்கள் அன்புக்கு நான் கட்டுப்படுவேன். அதனால் உங்கள் அன்புக் கட்டளையை ஏற்றுக்கொண்டேன்.

நான் துடுப்பாட்ட வீரர்கள் பற்றி அதிகமாக எழுதுவது பற்றி ஒரு சிறிய விளக்கத்தைத் தரவேண்டும். துடுப்பாட்டக் கட்டுரைகளை நான் நேரடியாக எழுதுவதில்லை. எனது அலுவலகத்தில் பணிபுரியும் சகோதரர்கள் இக்கட்டுரைகள் தயாரிப்பதில் முழுமையாக ஒத்துழைப்பார்கள். பின்பு அவற்றை நான் பரிசீலித்து பதிவேற்றம் செய்துவிடுவேன். இக்கட்டுரைகளை விட்டால் நிச்சயமாக அந்த நேரத்தில் எனக்கு வேறு கட்டுரைகள் எழுத முடியாதிருக்கும். ஏனெனில், பலதரப்பட்ட வேலைப்பளுகள் என்னிடம் இருப்பதினால் அவற்றையும் நான் கவனிக்க வேண்டியவனாகவுள்ளேன். அதேநேரம், துடுப்பாட்ட வீரர்கள் தொடர்பாக ஆங்கில விக்கியிலுள்ள கட்டுரையை தான் நான் எழுதிவருகின்றேன். இக்கட்டுரையை எழுத வேண்டாம் என நிர்வாக அணுக்கத்தின் யாதாவதொரு பயனர் உத்தியோகபூர்வமான முறையில் எனக்கு அறியத்தருவாராயின் இந்த நிமிடமே நான் நிறுத்திக் கொள்வேன். இது பற்றி ஏற்கனவே நான் ஓரிரு தடவைகள் குறிப்பிட்டிருந்தேன்.

இதுவொரு புறமிருக்க 10வது ஆண்டு நிறைவடையும்போது இலங்கையைச் சேர்ந்தவன் என்றடிப்படையில் தமிழ்விக்கியை இலங்கையில் அறிமுகப்படுத்த பல வேலைத்திட்டங்களை சுயேட்சையாக முன்வைத்தேன். உதாரணமாக இதுவரை நான் யாரிடமும் வெளிப்படுத்தாத ஒரு வேலைத்திட்டத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். சிலவாரங்களுக்கு முன்பு இலங்கையிலுள்ள அனைத்து தமிழ்மொழிமூலப் பாடசாலைகளுக்கும் அனுப்பவென ஏ4 அளவில் இரண்டு பக்கங்களிலும் 3000 துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டேன். இவற்றை இன்றை வரை 1000க்கும் அதிகமான தமிழ்மொழிப் பாடசாலைகளுக்கு தபாலில் அனுப்பியுள்ளேன். அத்துண்டுப்பிரசுரத்தில் எனது முக்கிய குறிப்புகளாக இருந்தது தமிழ்விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்துவதும், இலங்கையிலுள்ள தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் பற்றி எழுதுவுதற்கான ஆதாரபூர்வமான விபரங்களைத் திரட்டுவதுமாகும். இக்கடிதத்திற்கு பல சாதகமான தரவுகள் எனக்குக் கிடைத்துள்ளன. இந்த 3000 துண்டுப்பிரசுரங்களையும் அச்சிட்டது எனது சொந்த செலவிலாகும். இலங்கையில் சாதாரண தபால் செலவு 15 ரூபாய். இலங்கையில் மொத்தமாக 2650 தமிழ்மொழி பாடசாலைகள் உள்ளன. எனவே, இதற்குப் போகும் செலவுகள் அனைத்தும் எனது சொந்த செலவே. அதேபோல தமிழ் விக்கிப்பீடியா சம்பந்தமான கள ஆய்வுக்கு திட்டமிட்டுள்ளேன். இதற்கும் சுமார் 1இலட்சம் ரூபாய் அளவில் செலவேற்படலாம். இதையனைத்தையும் எனது சொந்த செலவிலேயே மேற்கொண்டு வருகின்றேன். இதை பற்றி நான் விளம்பரப்படுத்தவோ அல்லது யாரிடமும் உதவி கோருவதோ இல்லை. சுயேட்சையாகவே செய்து வருகின்றேன். ஏனெனில், தமிழ்விக்கிப்பீடியாவை வளர்க்க வேண்டும் என்ற ஒரே இலக்கே தவிர வேறு ஏதுமில்லை. இவற்றையும் எமது பயனர்கள் புரிந்துகொள்வார்கள் எனக் கருதுகின்றேன்.

கருத்துகள் தெரிவிப்பது இலகு. ஆனால், இதன் பின்பாவது நாம் தெரிவிக்கும் கருத்துக்கள் அடுத்தவரின் மனோநிலையைப் பாதிக்காதவாறு அமைய வேண்டுமென்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். கட்டுரைகளை விமர்சிப்பது தவறல்ல. நிச்சயமாக எழுத்தாளன் அவற்றை ஏற்றுக் கொள்ளவேண்டும். தனிப்பட்ட விடயங்களில் சில குரோதங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் கருத்துக்களை தெரிவிப்பது நாகரிகமாக அமையாது. எந்த நிலையிலும் மயூரநாதன் ஐயாவையோ, நற்கீரனையோ விஞ்ச வேண்டும் என்பது என் நோக்கமல்ல.

என்றும் எனது வழமையான பணி தொடரும். மீண்டும் அன்பான ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். என்னால் எழுதப்படக்கூடிய கட்டுரைகள் அல்லது எழுதப்பட்ட கட்டுரைகள் தரமற்றவை எனக் கருதினால் நிர்வாக அணுக்கமுள்ள எந்தவொரு பயனரும் அதனை நீக்கிவிடலாம். இது பற்றி எவ்விதத்திலும் நான் மனவேதனையடையவோ தவறாக எண்ணவோ மாட்டேன். ஆக்கங்களைப்பற்றி விமர்சனங்கள் இருப்பின் ஆலமரத்தடிக்கு வரவேண்டாம். என் பேச்சுப் பக்கத்திற்கு வாருங்கள். நிச்சயமாக ஆக்கபூர்வமான எந்தக் கருத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் எனக்குண்டு.

மயூரநாதன் ஐயா தெரிவித்த கருத்தின் படி கட்டுரை எண்ணிக்கையில் தவியின் தரநிலை இறங்கிச் சென்று 70 ஐ அண்மித்த நிலையில் இருந்தபோது புன்னியாமீனின் பங்களிப்பு அதை 65 க்கு உயர்த்தியது. புன்னியாமீனின் கட்டுரைகளில் வேறு சிறப்பம்சங்களையும் நாம் கவனிக்க வேண்டும். கட்டுரைகளில் சில சிறியவை ஆனாலும், அவற்றில் உள்ள தகவல்கள் பல, முக்கியமாக வெளியீடுகள் தொடர்பானவை, இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியாதவை. அவை குறுங் கட்டுரைகளாக இருந்தாலும் பரவாயில்லை. வேறு சில நிச்சயமாக விரிவாக்கத்தக்கவை. காலப்போக்கில் அவற்றை விரிவாக்க வேண்டும். விரிவாக்கலாம். என்ற கருத்தினையும், சோடாபாட்டில் தெரிவித்த புன்னியாமீனின் கட்டுரைகள் அனைத்தும் விக்கிப்பீடியா கொள்கைக்குப் புறம்பானவை, தரமற்றவை என்று எவையும் கிடையாது. விக்கிப்பீடியா குறைந்த பட்ச தரமென்பது 3-4 வரிகள் இருக்க வேண்டும், பெருமளவு இலக்கண / எழுத்துப்பிழையில்லாமல் இருக்க வேண்டுமென்பவையே. இவை தவிர வேறெந்த தரமும் கிடையாது. புன்னியாமீனின் கட்டுரைகள் நிறைவான உள்ளடக்கம் கொண்டுள்ளன, பிழைகளின்றி இருக்கின்றன, வார்ப்புருகள், பகுப்புகள் கொண்டுள்ளன, விக்கியிடை இணைப்புகள் கொண்டுள்ளன, உள்ளிணைப்புகள் கொண்டுள்ளன. இவை தவிர விக்கிப்பீடியாவில் இருப்பதற்கு வேறென்ன வேண்டும்?. இது தவிர “தரம்” பற்றிய அனைத்தும் அவரவர் சொந்த கருத்த என்ற கருத்தையும் ஏற்றுக்கொண்டு இனி என் பயணம் தொடரும். நான் யாருடனும் மனத்தாங்கள் இல்லை. என்விடயத்தில் யாரும் மனத்தாங்ளடையவும் வேண்டாம். இதுவே என் ஒரே எதிர்பார்ப்பு --P.M.Puniyameen 12:47, 30 சூன் 2011 (UTC)

புன்னியாமீன், உங்களுடைய பணிகள் குறித்து எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் ஐயம் இல்லை. இரண்டு மாதங்களுக்கு முதல் இலங்கைக்கு வந்திருந்தபோது உங்களைச் சந்திக்க வேண்டும் என எண்ணியிருந்தேன் நேரம் வாய்க்கவில்லை. அடுத்தமுறை சந்திக்கலாம். உங்கள் விளக்கம் தொடர்பில் ஒரு விடயத்தை எல்லாத் தமிழ் விக்கிப்பீடியாப் பயனர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை தமிழ் விக்கியில் வேறெந்தப் பயனருக்கும் மேலாக நான் என்னைக் கருதிக்கொண்டது இல்லை. உண்மையில் என்னைவிடக் கூடுதலாகப் பல பயனர்கள் வெவ்வேறு விதங்களில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார்கள் என்பதே எனது கருத்து. மிகக் கூடிய அளவு கட்டுரைகளை நான்தான் எழுதியிருக்கவேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. உண்மையில் முதலில் 2,000 கட்டுரை எண்ணிக்கையைத் தாண்டியது "பயனர் நிரோ" தான். எனவே என்னைவிடக் கூடுதலான கட்டுரைகள் எழுதுவது பற்றி எவரும் கவலைப்பட வேண்டியதில்லை. இப்பொழுது ஏறத்தாழ 3,500 கட்டுரைகள் வரை என் பெயரில் உள்ளன. எனவே என்னைத் தாண்டிச் செல்லும் ஒவ்வொருவரும் குறைந்தது 3,500 கட்டுரைகளை எழுதியிருப்பார்கள். எனவே 10 பேர் என்னைத் தாண்டிச் சென்றால் தமிழ் விக்கிக்கு 35,000 கட்டுரைகள் கிடைக்கும். இதில் என்னைவிட மகிழ்ச்சி அடைபவர்கள் எவரும் இருக்கமுடியாது. எனவே எத்தனை பேர் என்னைத் தாண்டிச் செல்கிறார்களோ அந்த அளவுக்கு அது தமிழ் விக்கிக்கு நல்லது. என்னுடைய கட்டுரை எண்ணிக்கை எவருக்கும் தடைக்கல் அல்ல. இனிமேல் கூடுதலாக, இருக்கும் கட்டுரைகளை விரிவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. எனவே முன்னைய வேகத்துடன் புதிய கட்டுரைகளை நான் எழுதும் வாய்ப்பு இல்லை. இங்கே என்னுடைய பணி நிறைவேறும்போது குறைந்தது 5,000 தரமான கட்டுரைகளிலாவது எனது பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். புன்னியாமீன், உங்கள் பணியை வழமை போலத் தொடருங்கள் உங்கள் இலக்குகளை நீங்கள் இலகுவாக அடைய எனது வாழ்த்துக்கள். --- மயூரநாதன் 14:37, 30 சூன் 2011 (UTC)
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா எந்த சந்தர்ப்பத்திலும் தங்கள் தனிப்பட்ட அறிவுரைகளை மீறிநான் செல்லமாட்டேன். இது உறுதி. அடுத்தமுறை இலங்கை வரும்போது நாம் சந்திப்போம்.--P.M.Puniyameen 15:08, 30 சூன் 2011 (UTC)

புன்னியாமீன், தங்கள் மனநிலையையும் திட்டங்களையும் பகிர்ந்து கொண்டு தொடர்ந்து பங்களிப்பதாக உறுதி அளித்திருப்பதற்கு நன்றி. ஒரே ஒரு வேண்டுகோள்:

//மயுரநாதன் ஐயா தமிழ்விக்கியை ஆரம்பித்தவர். தமிழ்விக்கியில் ஏற்படக்கூடிய வளர்ச்சி நிச்சயமாக மயுரநாதனுக்குரியதே. இதனை யாராலும் மறுக்க முடியாது. விக்கி பற்றி என்னால் எழுதப்படக்கூடிய கட்டுரைகள், நேர்காணல்களில் எந்த இடத்திலாவது நான் மயுரநாதன் ஐயாவை குறிப்பிடாமல் விட்டதில்லை. தமிழ்விக்கி எனும்போது அவர்தான் என்று எனது கருத்தை நான் வலியுறுத்தியுள்ளேன். எனவே, தனிப்பட்ட முறையில் நான் கட்டுரை எழுதினாலும்கூட, விக்கி வளர்ச்சியடைகின்றதென்றால் நிச்சயமாக அந்த முழுப் பெருமையும் மயுரநாதன் ஐயாவையே சாரும்.//

தமிழ் விக்கி வரலாற்றில் மயூரநாதனின் முக்கியத்துவம் அனைவரும் அறிவர். எனினும், பொதுவாக அனைத்து இடங்களிலும் விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி என்பதையும் இதில் பலரது பல்வேறு வகையான பங்களிப்புகள் அடங்கியுள்ளன என்பதையும் குறிப்பிடுவது நலம். தனியொருவரையோ எண்ணிக்கையையோ மட்டுமே முன்னிறுத்தாமல் விக்கி தத்துவத்தையும் நிறைய பங்களிப்பு எடுத்துக்காட்டுகளையும் தருவது விரும்பத்தக்கது. எ.கா: கோபியின் உரை திருத்தங்கள், தெரன்சின் படிம ஒருங்கிணைப்பு, நற்கீரனின் திட்ட மேலாண்மை, சோடா பாட்டிலின் விக்கியாக்கங்கள் - கொள்கை கடைப்பிடிப்புகள், மாகிர், லாசிக்விக்கியின் நுட்பப் பங்களிப்புகள்.... கட்டுரை எழுதுவதைத் தவிர்த்து விக்கியில் ஆற்றக்கூடிய பல்வேறு பங்களிப்புகள் குறித்தும் எடுத்தியம்புவதும் முக்கியம். நன்றி--இரவி 16:56, 30 சூன் 2011 (UTC)

மிக்க நன்றி இரவி தமிழ் விக்கிப்பீடியாவை ஆரம்பித்தவர் என்ற அடிப்படையில் தமிழ்விக்கியில் ஏற்படக்கூடிய வளர்ச்சி நிச்சயமாக மயுரநாதனுக்குரியதே என்று கூறியமைக்குக் காரணம் பிள்ளைகளால் ஏற்படக் கூடிய பெருமைகள் பெற்றேரைச் சார்வதைப்போல தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தமட்டில் ஒரு தந்தை என்ற ஸ்தானத்திலே அவரை நான் மதிப்பதினால் பிள்ளைகள் நாங்கள் செய்யக்கூடிய நற்காரியங்களின் பலாபலன் அவரைச் சாரும் என்ற அடிப்படையை வைத்துத்தான். எனவே தான் விக்கி வளர்ச்சியடைகின்றதென்றால் நிச்சயமாக அந்த முழுப் பெருமையும் மயுரநாதன் ஐயாவையே சாரும் என்றேன். ஆனால் முழுப் பொறுப்பும் அவரைச்சாரும் எனக் குறிப்பிடவில்லை. விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி எனவே இதன் வளர்ச்சிக் கட்டமைப்பும், பொறுப்பும் பயனர்களாகிய அனைவரையுமே சாரும்.
இரவி நான் கணினி பற்றி ஓரெழுத்துக்கூடக் கற்கவில்லை. எல்லாம் தானாகக் கற்றவையே. எனவே கணினி தொழிநுட்பப் பக்கங்கள் எனக்குத் தெரியாது. அதேபோல விக்கிப்பீடியா தொழிநுட்பப் பக்கங்கள் எனக்குத் தெரியாது. விக்கிப்பீடியா தொழிநுட்பப் பக்கங்களை தெரிந்து கொள்ளவும் அதன் பங்களிப்பாளர்கள் பற்றித்தெரிந்து கொள்ளவும் ஆசைப்படுகின்றேன். தயவுசெய்து இதற்கு உதவுவீர்களா?--P.M.Puniyameen 02:31, 1 சூலை 2011 (UTC)
புன்னியாமீன், //தந்தை, பிள்ளைகள், நற்காரியங்கள், பலாபலன், முழுப்பெருமை// போன்ற சொற்கள் உணர்ச்சி மேலிட்டவையாகத் தோன்றுகின்றன. ஆசிய / தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் இயன்றவரை தோழமை உணர்வையே கடைப்பிடித்து வருகிறோம். இதன் காரணமாகவே, தமிழ்ப் பண்பாட்டுக்குப் புறம்பாக இருந்தாலும், அனைத்து வயது பங்களிப்பாளர்களையும் பெயர் சொல்லியே அழைக்கிறோம். மூத்த - இளைய - புதிய விக்கிப்பீடியர் போன்ற வரம்புகளும் தமிழ் விக்கியின் தோழமைச் சூழலுக்கும் வளர்ச்சிக்கும் அவ்வளவாக உதவாது. 2003ல் தமிழ் விக்கிப்பீடியாவைத் தொடங்கி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் தன்னந்தனியாக தமிழ் விக்கிப்பீடியாவில் உழைத்தவர் மயூரநாதன். அன்றில் இருந்து 3000+ அரிய கட்டுரைகளை எழுதி உள்ளார். தமிழ் விக்கிச் சமூகத்தின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவையான ஆலோசனைகளை வழங்கி வழி காட்டி வருகிறார். இதுவே, அவரது முக்கியத்துவத்தைத் தெளிவாக உணர்த்தும். அதற்கு மேல், உணர்ச்சிவயப்பட்டுப் பேசுவது கூட்டு முயற்சித் தத்துவத்தையும் பல பங்களிப்பாளர்களையும் அந்நியப்படுத்தக்கூடும். உலகளாவிய விக்கிப்பீடியாக்களிலும் சிம்மி வேல்சு ஒரு இணை தோற்றுவிப்பாளர் என்ற சுட்டிக்காட்டலுடன் தாண்டிப் போய் விடுகின்றனர். தமிழ்ச் சூழலில் நிறைய தேவையற்ற வழிபாட்டு உணர்வு (idolozing / iconizing) உள்ளது. அது இங்கு தேவையில்லை என்று நினைக்கிறேன். மயூரநாதன் என்னை நன்கு அறிவார் என்பதால் வெளிப்படையாகவே இக்கருத்துகளைக் கூறுகிறேன். தமிழில் நல்ல கலைக்களஞ்சியம் உருவாக்கும் பணியில் தொடர்ந்து உழைப்போம். நன்றி--இரவி 05:57, 1 சூலை 2011 (UTC)
என் உள உணர்ச்சியை தான் குறிப்பிட்டேன். அதற்காக ஏனைய பயனர்களின் பணிகளை நான் நிராகரிக்கின்றேன் எனப் பொருள் படாது. அனைவரையும் நான் மதிக்கின்றேன். அதனால் தான் என்கருத்தைத் தெரிவித்தேன். நன்றி இரவி --P.M.Puniyameen 06:44, 1 சூலை 2011 (UTC)