விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு31

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருளடக்கம்

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல் பற்றி தமிழ்நாடு அரசு அறிவிப்பு[தொகு]

இந்து நாளிதழில் செய்தி

A competition would be launched next week for college students and their contributions in Tamil on different topics would be uploaded on the Wikipedia. Currently, only 22,000 articles were available in Tamil on the Wikipedia. About 30,000 more articles would be uploaded through the competition.

நாம் எதிர்பார்த்திருந்த நற்செய்தி. விக்கி நண்பர்களே இதில் நாம் அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். உதவி செய்த ரவி, சுந்தர், மயூரநாதன், சிறீதரன், நற்கீரன், தேனி சுப்பிரமணி, பரிதிமதி மற்றும் பலருக்கும் நன்றி. தக்க பக்கங்களை அழகுடன் அமைத்து நெறிப்படுத்த வேண்டும்.--செல்வா 06:12, 6 மார்ச் 2010 (UTC)

நல்ல செய்தி. இத்திட்டம் முழுமையாக சிறப்புடன் நிறைவடைய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். விக்கிப்பீடியர்கள் அனைவரும் இத்திட்டத்துக்கு தமது முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள்.--Kanags \உரையாடு 06:40, 6 மார்ச் 2010 (UTC)
நல்ல செய்தி, கடந்த சில நாட்களாகச் செல்வா எடுத்த முயற்சிகளும், களத்தில் இருந்து சுந்தர், ரவி, தேனி சுப்பிரமணி, பரிதிமதி ஆகியோர் எடுத்த நடவடிக்கைகளும் நல்ல பயன் கொடுத்துள்ளது. முறையான அறிவிப்பு வந்ததும் பயனர்கள் அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்துக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள உழைக்க வேண்டும். மயூரநாதன் 08:24, 6 மார்ச் 2010 (UTC)
நாம் எதிர்பார்த்திருந்த (த.வி.யை) அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்லும் நிகழ்வு இது. கட்டுரைகளை அளிக்கும் அனைத்து பங்களிப்பாளர்களையும் த.வி.யின் பங்களிப்பாளர்களாக மாற்றுவதற்கு நாம் முயல வேண்டும். --பரிதிமதி 10:13, 6 மார்ச் 2010 (UTC)
விக்கிசெய்திகளில்--Kanags \உரையாடு 10:46, 6 மார்ச் 2010 (UTC)
கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது!! சீக்கிரம் இது நிறைவேறட்டும்! நம் இலக்கு இலக்ஷம்! :) -- Vatsan34 11:27, 6 மார்ச் 2010 (UTC)
  • உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மற்றும் ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டிற்காக தமிழ்நாட்டிலுள்ள கல்லூரி/பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறப்புக் கட்டுரைப் போட்டியாக தமிழ் விக்கிப்பீடியாவிற்கான கட்டுரைப் போட்டிகளை தமிழ்நாடு அரசு அறிவிக்க உள்ளது என்கிற தகவல் உண்மையில் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று. தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் இந்தக் கட்டுரைப் போட்டியை நடத்த முன் வந்த தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் ஐ.ஏ.எஸ்., மற்றும் அத்துறை அதிகாரிகள், இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்நாடு அரசின் பிற துறையின் அதிகாரிகள் போன்றவர்களுடன் இதற்காகப் பெரும் முயற்சி செய்த தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் நிர்வாகி செல்வா மற்றும் அவருடன் ஒத்துழைத்த தமிழ் விக்கிப்பீடியாவின் அனைத்துப் பயனர்களுக்கும் இதன் மூலம் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.--Theni.M.Subramani 13:18, 6 மார்ச் 2010 (UTC)
முயற்சிகளுக்கும், திட்டங்கள் நிறைவேறி தமிழ்விக்கிப்பீடியா வளர்ச்சியடையவும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். என்னாலான ஒத்துழைப்பை நானும் செய்வேன். --கலை 17:44, 6 மார்ச் 2010 (UTC)

ஆர்வத்துடன் நல்வாழ்த்தும் கருத்தும் தெரிவித்த அனைவருக்கும் (சிறீதரன் கனகு, மயூரநாதன், பரிதிமதி, வத்சன், தேனி சுப்பிரமணி, கலை), மிக்க நன்றி. இப்பொழுது இது சிறப்பாக நிறைவேற நாம் அனைவரும் ஒன்றுகூடி ஒத்துழைப்போம். இன்னும் இரண்டொரு நாட்களில் அரசின் அறிவிப்புகள் வரும் என எதிர் பார்க்கின்றேன். --செல்வா 17:59, 6 மார்ச் 2010 (UTC)


மிக்க மகிழ்ச்சியான செய்தி. கட்டுரைகள் எண்ணிக்கை இரட்டிப்பு அடைவதை எண்ணி மகிழ்கிறேன். என்னால் முடிந்த அளவு உதவ என்றும் ஆயத்தமாக உள்ளேன். என் ஆய்வு பணிகளில் சற்று கூடுதல் கவனம் உள்ளதால், தற்பொழுது நம் விக்கிக்கு பங்களிக்க முடியவில்லை.

நன்றி

-- மகிழ்நன் 17:38, 7 மார்ச் 2010 (UTC)

தினமணி செய்தி[தொகு]

தினமணி நாளிதழில் செம்மொழி மாநாடு எனும் தலைப்பின் கீழ் "விக்கிப்பீடியா தமிழ் இணைய தளத்துக்கு கட்டுரை அளிக்க மாணவர்களுக்குப் போட்டி" எனும் தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கீழ்காணும் இணைப்பு முகவரியில் அந்த செய்தி உள்ளது.

மாநாடு: "விக்கிபீடியா தினமணி நாளிதழில் வந்த செய்தி

இனி கட்டுரைப் போட்டிக்கான பணிகளை நாம் விரைவுபடுத்தலாம்.--Theni.M.Subramani 01:56, 7 மார்ச் 2010 (UTC)

செய்தியை அளித்ததற்கு நன்றி! இனி தலைப்புகளைத் தருவோம்.--பரிதிமதி 04:22, 7 மார்ச் 2010 (UTC)

கட்டுரைப் போட்டிப் பணிகள்[தொகு]

கட்டுரைப் போட்டியை முன்னிட்டு உள்ள சில அவசரப் பணிகள்:

1. மாணவர்களுக்கு வழிகாட்டும் வண்ணம் எடுத்துக்காட்டுத் தலைப்புகள் பட்டியல்கள் உருவாக்கப்பட வேண்டும். ஏற்கனவே சில பட்டியல்கள் இருந்தாலும் முழுக்க சிகப்பு இணைப்பு பட்டியல்களாக அனைத்துத் துறைகளிலும் சேர்த்து குறைந்தது ஆயிரம் தலைப்புகளாவது சேர்க்க வேண்டும். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் 2. நல்ல விக்கி கட்டுரையின் நடையை உணர்ந்து பின்பற்றுமாறு சில எடுத்துக்காட்டுக் கட்டுரைகளைச் சுட்ட வேண்டும். இவை பல துறைகளைச் சேர்ந்தவையாகவும் உரை திருத்தப்பட்டவையாகவும் இருக்க வேண்டும். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/மாதிரிக் கட்டுரைகள்

3. போட்டி தொடக்கத்தை முன்னிட்டு பல புதிய உறுப்பினர்கள் வரத்து இருந்தால் அவர்களுக்கு உதவுதல், நெறிப்படுத்தல்.

4. போட்டி விதிகள், கட்டுரையாக்கம் போன்றவற்றுக்கான வழிகாட்டுப் பக்கங்கள் உருவாக்கல். ஏற்கனவே விக்கியில் உள்ள பக்கங்கள் மிக விரிவாகவும் பிற தேவைகளை உள்ளிட்டும் இருப்பதால் மாணவர்களைக் குழப்பலாம். எனவே, சுருக்கமான பக்கங்கள் புதிதாக உருவாக்கப் பட வேண்டும்.

இவற்றை முன்னிட்டு நாம் அனைவருமே வழமையை விட சற்று கூடுதலாக விக்கியில் பங்கு கொள்ள வேண்டும். மற்ற வழக்கமான அவசரமில்லாத விக்கிப்பணிகளை சற்று நிறுத்தி வைத்து விட்டு, போட்டிப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தலாம். மேலும் உதவி நல்க, விடுமுறையில் உள்ள விக்கிப்பீடியர்களையும் உதவச் சொல்லிக் கேட்கலாம். --ரவி 18:16, 6 மார்ச் 2010 (UTC)

ரவி மேலே சொன்னவை யாவும் முக்கியமே.

  • முதலாவதாக முதற்பக்கத்திலேயே பல்கலைக்கழக போட்டியாளர்களுக்கு ஒர் இணைப்பு தரவேண்டும்.
  • அது ஒரு வலைவாசலுக்கு அழைத்துச் செல்லவேண்டும்.
  • அந்த வலைவாசலில் உதவிப்பக்கங்கள் (விக்கி நடைக் கையேடு, கட்டுரை எழுதுவது எப்படி..), **மாதிரிக் கட்டுரைகள்,
    • எழுதக்கூடிய தலைப்புகள்
முதலியவற்றுக்கு தொடுப்புகள் இருக்க வேண்டும்.
  • தொடுப்புகளுக்கு உள் சென்று எல்லா இணைப்புகளும் வேலை செய்கின்றதா என்று மெய்த்தேர்வு செய்து பார்த்தல் வேண்டும்.
  • பல மாணவர்கள் குறுகிய கால இடைவெளியில் வந்து தகவல் தேடும் வாய்ப்பிருப்பதால், மிகவும் முடுக்கத்துடன் கவனத்துடன் நாம் இப்பக்கங்களையும் இணைப்புகளையும் சீர் செய்து வைத்தல் வேண்டும்.
  • அருள்கூர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்.--செல்வா 16:12, 7 மார்ச் 2010 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா போட்டி அறிவிப்பு வெளியானவுடன் மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியா தளத்திற்கு அதிக அளவில் வருகை தரலாம். அதற்கு முன்பாக நாம் அனைத்தையும் தமிழ்நாடு அரசு செய்தியுடன் கூடிய பக்கங்களை விக்கிப்பீடியாவில் உருவாக்கி விட வேண்டும். அரசு செய்திகள் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பச் செயலாளர் மூலம் பத்திரிகைச் செய்தியாக வெளியாகி விட்டது. எனவே முறையான அறிவிப்புக்கு முன்பாக அனைத்தையும் பார்வைக்குக் கொண்டு வந்து விட வேண்டும். போட்டிக்கான விதிமுறைகள் ஒன்றைத் தவிர அனைத்தையும் காட்சிப்படுத்தி விடுவது சிறப்பு. முதற்பக்கத்தின் மேல் பகுதியில் முதற்பக்கக் கட்டுரை, விக்கி செய்திகளுக்கு மேலுள்ள பகுதியில் போட்டி குறித்த செய்தியும் அங்கிருந்து குறிப்பிட்ட வலைவாசல் பக்கத்திற்கும் இணைப்பு செய்வது சிறப்பாக இருக்கும். --Theni.M.Subramani 18:17, 7 மார்ச் 2010 (UTC)

வலைவாசல்:கட்டுரைப்போட்டி என்ற பெயரில் ஒரு வலைவாசல் பக்கம் உருவாக்கியுள்ளேன் பார்க்கவும். இன்னும் முழுமையாக்கவில்லை. பொருத்தமானால் முதற்பக்கத்துக்கு இணைப்புக் கொடுக்கலாம். மயூரநாதன் 19:34, 7 மார்ச் 2010 (UTC)

கட்டுரைப் போட்டிக்கென தனியான பகுப்பு[தொகு]

கட்டுரைப்போட்டிக்கென எழுதப்பட்ட பல உதவிக் குறிப்புப் பக்கங்கள் ஆங்காங்கே பகுப்புகள் எதுவும் இல்லாமல் காணப்படுகின்றன. அவை அனைத்தும் ஒரு தனிப் பகுப்புக்குள் இடுவது நல்லது. கட்டுரைப் போட்டி அல்லது அதற்கொத்த புதுப் பகுப்பை உருவாக்கி அவற்றினுள் அனைத்தையும் இடுவது நல்லது.--Kanags \உரையாடு 12:13, 8 மார்ச் 2010 (UTC)

கட்டுரைப் போட்டிக்கான படிமம்[தொகு]

கட்டுரைப் போட்டிக்கான சில படிமங்களை நான் இத்துடன் இணைத்துள்ளேன்.

படிமம்1

Wiki-contest1.jpg


படிமம்2

Wiki-contest2.jpg

படிமம்3

Wiki-contest3.jpg

படிமம்4

Wiki contest4.gif

தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம். --Theni.M.Subramani 13:19, 8 மார்ச் 2010 (UTC)


படிமங்கள் எல்லாமே நன்றாக உள்ளன. அரசின் சின்னங்களை விக்கிப்பீடியாவில் பயன்படுத்த அனுமதி உண்டா என்று தெரியவில்லை. இது குறித்து அறியவேண்டும். மயூரநாதன் 18:58, 8 மார்ச் 2010 (UTC)
  • கல்லூரி மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு கட்டுரை அளிக்கும் போட்டியைத் தமிழ்நாடு அரசு நடத்துவதால் இதற்குத் தடை ஏதுமிருக்காது. இருப்பினும் இந்தப் படிமங்களில் ஏதாவது ஒரு படிமத்தை அல்லது புதியதொரு படிமத்தை வெளியிட தமிழ்நாடு அரசிடம் / தகவல் தொழில்நுட்பத்துறையிடம் அனுமதி கோரலாம். --Theni.M.Subramani 00:55, 9 மார்ச் 2010 (UTC)
பயன்படுத்தலாம் எனவே நானும் கேள்விப்பட்டேன். பயன்படுத்தும் முன் முறைப்படி கேட்டுவிடுவோம்.--செல்வா 04:11, 10 மார்ச் 2010 (UTC)

கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் உருவாக்கும் போட்டி[தொகு]

செல்வா! கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் போட்டி பக்கம் பார்க்கவும். திருத்தங்கள் இருந்தால் செய்யவும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் ஒரு மாணவர் த.வி.யின் முதற்பக்கத்திற்கு வந்தவுடனேயே முதல் சொடுக்கிலேயே இப்பக்கம் வர வேண்டும். (பல சொடுக்குகள் மாணவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி, முக்கிய பக்கத்திற்கு வராமலேயே போய்விடச் செய்துவிடலாம்.)

இப்பக்கத்திலும் இரண்டே உட்தலைப்புகள் உள்ளவாறு அமைத்துள்ளேன். அவை 1. தலைப்புகள் 2. விதிகள்.

மேலும் பேசுவோம்.

அமைச்சர், செயலாளர் சந்திப்பின் சாரத்தை உங்களுக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன். தயந்து பார்க்கவும்.

நன்றி. பரிதிமதி


நன்றி பரிதிமதி!

மார்ச்சு 7 ஆம் நாள் அன்றும் அதற்கு முன்னருமே இங்குப் பலரும் முதல் பக்கத்தில் இருந்தே இணைப்பு இருக்க வேண்டும் என்றும், அங்கிருந்தே பிற இடங்களுக்கு இட்டுச்செல்லும் என்று கூறிவந்துள்ளோம். அரசிடம் இருந்து அறிவிப்பு வர இருக்கும் சற்றுமுன் அதனைச் செயல்படுத்தலாம் என்றுதானே இருக்கின்றோம். ஆலமரத்தடியில் கூறியது இதோ:


  • முதலாவதாக முதற்பக்கத்திலேயே பல்கலைக்கழக போட்டியாளர்களுக்கு ஒர் இணைப்பு தரவேண்டும்.
  • அது ஒரு வலைவாசலுக்கு அழைத்துச் செல்லவேண்டும்.
  • அந்த வலைவாசலில் உதவிப்பக்கங்கள் (விக்கி நடைக் கையேடு, கட்டுரை எழுதுவது எப்படி..), **மாதிரிக் கட்டுரைகள்,
    • எழுதக்கூடிய தலைப்புகள்
முதலியவற்றுக்கு தொடுப்புகள் இருக்க வேண்டும்.
  • தொடுப்புகளுக்கு உள் சென்று எல்லா இணைப்புகளும் வேலை செய்கின்றதா என்று மெய்த்தேர்வு செய்து பார்த்தல் வேண்டும்.
  • பல மாணவர்கள் குறுகிய கால இடைவெளியில் வந்து தகவல் தேடும் வாய்ப்பிருப்பதால், மிகவும் முடுக்கத்துடன் கவனத்துடன் நாம் இப்பக்கங்களையும் இணைப்புகளையும் சீர் செய்து வைத்தல் வேண்டும்.
  • அருள்கூர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்.--செல்வா 16:12, 7 மார்ச் 2010 (UTC)

ஆகவே பல சொடுக்குகள் செய்து மாணவர்கள் வழிதவறக்கூடாது என்பதை முதலில் இருந்தே நாம் அனைவருமே அறிந்திருப்பதால், அப்படியேதானே செய்வதாக இருந்தோம். இதில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லையே. இரண்டே உட்தலைப்புகள் இருப்பதும் சரியே. இது பற்றி மேலும் கூறுகிறேன். --செல்வா 15:47, 10 மார்ச் 2010 (UTC)

வலைவாசல் பக்கத்தையும் உருவாக்கிக் கொண்டுதான் வருகிறோம். எல்லோரும் அதனைப் பார்த்து தேவையானவற்றைச் சேர்த்தும் திருத்தங்கள் செய்தும் உதவினால் தேவை ஏற்பட்டவுடன் உடனே முதல் பக்கத்துக்கு இணைப்புக் கொடுக்க முடியும். மயூரநாதன் 15:56, 10 மார்ச் 2010 (UTC)

பயனர் ரவியின் விக்கிப்பணி - ஐந்தாண்டுகள் நிறைவு - ஆறாம் ஆண்டு தொடக்கம்[தொகு]

ரவி! தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பணி இந்த மார்ச்சு 11 அன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெற்று ஆறாவது ஆண்டு தொடங்குகின்றது! மேலும் மேலும் உங்கள் பணி தமிழ் விக்கிப்பீடியாவில் சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! --செல்வா 03:20, 11 மார்ச் 2010 (UTC)

ஐந்து ஆண்டுகள் தளர்வின்றி ஒரே முனைப்புடன் பங்காற்றி த.வியின் தரம் தாழாமல் இருக்கப் போராடியும் வரும் ரவிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !!--மணியன் 04:21, 11 மார்ச் 2010 (UTC)

ரவியின் விக்கிப்பயணத்தில் ஐந்தாண்டுகள் கடந்து விட்டன. ஆறாவது ஆண்டு காலத்தில் கடந்த ஆண்டுகளை விட அதிக பங்களிப்பு செய்வதுடன், பல புதிய பயனர்களை விக்கிக்குக் கொண்டு வந்திட மேலும் பல முயற்சிகள் செய்தும் தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் (நிலை) முன்னேற்றமடைய பங்காற்றும்படி அனைத்துப் பயனர்களின் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறேன். --Theni.M.Subramani 04:48, 11 மார்ச் 2010 (UTC)

ரவியின் தொடர்ந்த பங்களிப்புக்கு எனது அன்பான வாழ்த்துகள்! தமிழ் விக்கியின் தொடக்க நாட்களில் அடிப்படைக் கட்டமைப்பை மயூரநாதன் உருவாக்கியிருந்த நிலையில், அடுத்த நிலைக்குச் எடுத்துச் செல்வதற்குத் தேவைப்பட்ட அனைத்துப் பணிகளிலும் உங்கள் பங்கு மெச்சத்தகுந்தது என்பதை மயூரநாதன், நற்கீரன், சிவா, சிறீதரன், நான் உட்பட பலரும் அறிவோம். இப்போதும் நாம் அதற்கடுத்த கட்டத்தைத் தொடவுள்ளோம். இப்போது ஊக்கத்துடன் பங்களித்து வரும் பல பயனர்களுக்கு நீங்கள் தோள் கொடுத்து உதவ வேண்டும், வரும் ஆண்டில் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். -- சுந்தர் \பேச்சு 05:18, 11 மார்ச் 2010 (UTC)

ரவி, நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாப் பணியில் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதையிட்டு எனது வாழ்த்துக்கள். உங்களைப் போன்றவர்களின் பணி நீண்ட காலம் விக்கிப்பீடியாவுக்குத் தேவை. உங்கள் சொந்த முன்னேற்றத்தையும் கவனித்துக்கொண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் தோள் கொடுங்கள். இரண்டிலும் நீங்கள் சிறப்பான வெற்றிகளைப் பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மயூரநாதன் 18:10, 11 மார்ச் 2010 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பற்றி, அதுமீது வரும் விமர்சனங்கள் பற்றி மிக விரிவாக, பொறுமையாக பதில்கள் தந்து நெறிப்படுத்தியவர். வலைப்பதிவு, பத்திரிகை, பட்டறை என்று எல்லா இடங்களிலும் விக்கிப்பீடியாவை சளைக்காமல் அறிமுகப்படுத்தியவர். பணிகள் தொடர வாழ்துக்கள். --Natkeeran 01:14, 12 மார்ச் 2010 (UTC)

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. வரும் ஆண்டுகளில் இயன்ற வரை இன்னும் சிறப்பாக விக்கிப்பணிகளில் ஈடுபட விரும்புகிறேன். நன்றி--ரவி 11:49, 13 மார்ச் 2010 (UTC)

விக்கிப்பீடியா பணியில் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ரவிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். அவர் வாழ்க்கையிலும், இந்த வீக்கிப்பீடியா பணியிலும் மேலும் சிறந்த பல முன்னேற்றங்களை காணவும் வாழ்த்துகிறேன்.--கலை 00:02, 14 மார்ச் 2010 (UTC)
இரவி இரவி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
இரவி ஒருவனும் அல்லன்
த.வி.யில் ஐந்து ஆண்டு நிறை புரவலனே!

இரவி, வாழ்த்துகள். உங்கள் பங்களிப்பின் அருமை, பெருமை பற்றி எனக்குத் 'தகவல்' வந்தவண்ணமே இருக்கிறது. இணையத்தின் கற்காலத்தில் பலர் எங்கெங்கோ உலாவிக்கொண்டிருந்தபோதே தமிழ் விக்கியில் அடியெடுத்து வைத்த முன்னோடி மூதாதை நீங்கள். உங்களைப் போன்றோரின் வெளிச்சத்தில், வழிகாட்டுதலில், பங்களிப்புகளில் தமிழ் விக்கியில் பங்களிப்புகள் மேலும் மேலும் செழிக்கட்டும், சிறக்கட்டும். ஐந்து மாதங்களே நிறைவு செய்துள்ள 'இளைஞன்' Pazha.kandasamy 01:02, 14 மார்ச் 2010 (UTC)

கூகிள் மொழிப்பெயர்பு கட்டுரையை பார்க்கவும்[தொகு]

தயவு செய்து சுந்தரவனக்காடுகள் கட்டுரையையும் அதன் பேச்சு:சுந்தரவனக்காடுகள் பக்கத்தையும் பார்க்கவும். --கார்த்திக் 06:48, 11 மார்ச் 2010 (UTC)

இது போன்று மேலும் பல சிக்கல்கள் உள்ளன. இவையனைத்தையும் திரட்டி எடுத்துக்காட்டுகளுடன் சுட்டிக் காட்டி இவை நமக்கு ஏற்புடையவை அல்ல என்று தெளிவு படுத்துவோம். அதன் பின்னும் தொடர்ந்தால் மேல் நடவடிக்கையைத் தொடரலாம். -- சுந்தர் \பேச்சு 07:03, 11 மார்ச் 2010 (UTC)
கூகிள் தொடர்பாளரிடம் இது தொடர்பில் மின்னஞ்சல் வழியாக உரையாடினேன். நாம் ஏற்கனவே உறுதி செய்த தலைப்புகளில் மட்டும் கட்டுரைகளை முடித்துக் கொண்டு நிறுத்தி விட்டு, பிழைகள் தொடர்பில் நேரில் உரையாடுவோம் என்று கூறினேன். அவர்கள் தரப்பிலும் இசைந்துள்ளார்கள். சந்திப்புக்கு முன்னதாக, என்னென்ன விதமான பிறழ்வுகள் உள்ளன என்று காட்டுகளுடன் பட்டியலிட வேண்டும். இயன்றால் அவர்கள் உருவாக்கிய ஓரிரு கட்டுரைகளை உரை திருத்தி, இப்படித்தான் இருக்க வேண்டும் எனவும் காட்டலாம். இப்பணியை விரைந்து செய்ய வேண்டும். -- சுந்தர் \பேச்சு 04:59, 12 மார்ச் 2010 (UTC)
இன்னும் ஓரிரு நாளில் சுந்தரவனம் கட்டுரையை முழுவதும் திருத்த முயல்கிறேன் (புது கட்டுரையே எழுதவேண்டியிருக்கும்!) சுந்தர். அப்புறம் அவர்களாக கட்டுரைகளை தேர்வு "செய்யக்கூடாது" நாம் குறிப்பிடும் கட்டுரைகளை மட்டும் மொழி பெயர்க்கவேண்டும். அவர்களாக தேர்வு செய்யும் கட்டுரைகள் பயனுள்ள கட்டுரைகளாக தெரியவில்லை :( நன்றி--கார்த்திக் 06:27, 12 மார்ச் 2010 (UTC)
நல்லது கார்த்தி. திருத்தங்கள் முடிந்ததும் சொல்லுங்கள். -- சுந்தர் \பேச்சு 10:26, 14 மார்ச் 2010 (UTC)

Petunia வுக்குத் தமிழ்ப்பெயர் என்ன?[தொகு]

Petunia என்னும் செடிக்கு தமிழ் பெயர் தெரியுமா? தெரிந்தால் எனக்கு அறிய தரவும்.

நன்றி

-- மகிழ்நன் 20:07, 11 மார்ச் 2010 (UTC)

பெத்தூனிய என்னும் இத் தென்னமெரிக்கச் செடிக்குத் தமிழில் பெயர் இல்லை. இது புகையிலைச் செடியின் இனமான செடி. பிரான்சிய மொழியில் பெத்துன் (pétun) என்றால் புகையிலைச் செடி (~கி.பி. 1555). இந்த பிரான்சியச் சொல்லே தென்னமெரிக்கப் பழங்குடி மக்களின் குவார்னி, தூப்பி மொழிகளின் அடிபடையில் அமைந்த சொல் (குவார்னி- pety; தூப்பி- petïma). ஆகவே நாம் பெத்தூனியா என இப்போதக்கு வழங்கலாம் என்பது என் கருத்து. --செல்வா 23:50, 11 மார்ச் 2010 (UTC)

நன்றி செல்வா

எனது ஆர்.என்.ஏ குறுக்கீடு என்ற கட்டுரையில் இச்செடியெய் பற்றி எழுதி உள்ளேன். முதலில் காகித பூ என தவறாக நினைத்து எழுதி விட்டேன்.

கருத்துக்கு நன்றி

-- மகிழ்நன் 00:03, 12 மார்ச் 2010 (UTC)

ஆர்.என்.ஏ குறுக்கீடு என்னும் கட்டுரையில் எழுதினீர்களா. இன்னும் பார்க்கவில்லை.--செல்வா 00:15, 12 மார்ச் 2010 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா போட்டி அறிவிப்பு[தொகு]

இன்றைய தினமணி நாளிதழில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா கொடுத்துள்ள தமிழ் விக்கிப்பீடியா போட்டி குறித்த அறிவிப்பு செய்தி இடம் பெற்றுள்ளது.

மகிழ்ச்சியான இச்செய்தியைக் கவனிக்கவும். --Theni.M.Subramani 01:23, 13 மார்ச் 2010 (UTC)

மாணவர்களுக்கு தனி பகுப்பு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவிற்கு கட்டுரை அளிக்கும் போட்டிக்கென தனி பகுப்பு ஒன்றை உருவாக்கி அதில் மாணவர்களை கட்டுரைகளை நேரிடையாக பக்கத்தைச் சேமிக்கும்படி செய்தால் நன்றாக இருக்கும். மேலும் அந்தப் பக்கங்களை போட்டி முடிவுகளுக்குப் பின்பு விக்கிக் குறியீடுகள் மற்றும் தேவையான மாற்றங்கள் செய்து தமிழ் விக்கிப்பீடியாவின் உரிய பகுப்புகளில் சேர்த்துக் கொள்ளக்கூடாதா?--Theni.M.Subramani 01:48, 13 மார்ச் 2010 (UTC)

மாணவர்களை விக்கிப்பீடியாவுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள வைப்பது பயனுள்ளது தான். ஆனால், இதன்மூலம், முதலில் பதிவேற்றும் மாணவர்களின் கட்டுரைகளை மற்ற மாணவர்கள் பார்க்கக் கூடியதாக இருக்கும். அத்துடன், போட்டிக் கட்டுரைகளை மதிப்பீடு செய்வதற்கு முன்னரே கட்டுரைகள் எல்லோரும் பார்க்கும்படி இருப்பது நல்லதா என்பதையும் யோசிக்க வேண்டும். மயூரநாதன் 04:49, 13 மார்ச் 2010 (UTC)

போட்டி ஏற்பாடுகள் குறித்து அறிந்த வரையில், கட்டுரைகள் தனியாக இன்னொரு வலைத்தளத்தில் ஏற்றப்பட்டு, கட்டுரைத் தெரிவு அங்கே நடைபெற வாய்ப்புள்ளது. இவ்வலைத்தளத்தை உருவாக்கும் பணியில் ஒரு பல்கலை ஈடுபட்டு வருகிறது. மேல் விவரங்கள் அறிந்தபின் இற்றைப்படுத்துகிறேன்.--ரவி 11:46, 13 மார்ச் 2010 (UTC)

யோர்க் பல்கலைக்கழக தமிழியல் மாணவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்[தொகு]

கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 5, 2010) ரொறன்ரோ நேர்த்யோர்க்கில் அமைந்துள்ள யோர்க் பல்கலைக்கழக தமிழியல் மாணவர்களுக்கு தமிழ் கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, நூலகம் பற்றி அறிமுகப்படுத்துவதில் நானும், செல்வாவும் கலந்து கொண்டோம். இந்த வாய்ப்பை ஆசிரியை பார்வதி கந்தசாமி வழங்கியிருந்தார். இவரை கனடா தமிழ் சொற்கோவைக் குழுவின் ஊடாக அறிமுகம் ஆகியவர். 15 - 20 வரையான தமிழில் பேச, வாசிக்க, எழுத வல்ல இந்த மாணவர்கள் எமது அறிமுகத்தை ஆர்வத்துடன் கேட்டனர். சில கேள்விகளையும் முன்வைத்தனர். சுமார் இரண்டரை மணிநேரம் நாம் விரிவான ஒரு விளக்கத்தை தரக் கூடியதாக இருந்தது. நெடும்பயணம் செய்து வந்திருந்த செல்வாவுக்கு நன்றிகள். எமது நிகழ்த்தல் தயாரிப்பில் மு. இளங்கோவன் அனுப்பிய பிபிடி பயன்பட்டது, அவருக்கு நன்றிகள். --Natkeeran 02:32, 13 மார்ச் 2010 (UTC)

நல்ல செய்தி நற்கீரன். இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பெருந் துணை புரியக்கூடியவை என்பதோடு. வெளிநாடுகளில் உள்ள தமிழ் மாணவர்களைத் தமிழ் முகம் கொடுக்கும் சமகாலப் பிரச்சினைகளுக்கு அறிமுகப் படுத்துவதிலும் பயன்படக்கூடியவை. நீங்களும் செல்வாவும் பெரு முயற்சியெடுத்து உங்கள் நேரத்தையும் செலவுசெய்து இவ்வாறான அரிய பணிகளை ஆற்றிவருவதற்குத் தமிழ் உலகம் நன்றியுடையதாக இருக்கும். மயூரநாதன் 04:37, 13 மார்ச் 2010 (UTC)
நக்கீரன் மிகவும் நல்ல செய்தி. குறிப்பாக வடஅமெரிக்க, ஐரோப்பா மற்றும் சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் பங்கு தவிக்கு இன்றியமையாதது. இங்கு கொலராடோ பல்கலைகழகத்தில் தமிழர் கலாச்சாரம் என்ற பாடம் மானிடவியல் துறையில் ஒரு பேராசிரியரால் வழங்கப்படுகிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட அமெரிக்க மாணவர்கள் அதில் கலந்துகொள்கின்றனர். அவ்வகுப்பில் அடிப்படை தமிழ் குறித்தும் வகுப்புகள் நடக்கின்றன :) வரும் சூன் திங்கள் முழுவதும் நான் அட்டோவாவில் இருக்கிறேன், அப்போது அங்கு தவி பற்றி கூட்டம் நடத்த வாய்பிருந்தால் கூறவும், அதை நடத்த நான் மிகவும் விரும்புகிறேன்.--கார்த்திக் 08:09, 13 மார்ச் 2010 (UTC)

நல்ல செய்தி. தமிழர் மிகுந்து இருக்கும் சிங்கை, மலேசியா மற்ற பிற நாடுகளில் இருந்து அங்கேயே பிறந்து வளரும் தற்காலத் தலைமுறையினர் எவரும் த.விக்குப் பங்களிக்காமல் இருப்பது இந்நாடுகளில் தமிழின் எதிர்காலம் குறித்து கவலையளிக்கும் போக்காகவே உள்ளது. --ரவி 11:47, 13 மார்ச் 2010 (UTC)

நல்ல செய்தி. இது போன்ற நிகழ்வுகளை வெளியுறவு விக்கியிலும் பதிந்து வைத்தால் நன்றாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 10:22, 14 மார்ச் 2010 (UTC)

மகிழ்நன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகத் தேர்வு[தொகு]

அன்பின் நண்பர்களுக்கு,

வணக்கம். எனக்கு மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியர் பணி கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் அறிய தருகிறேன். ஒரு மாதத்தில் பல்கலைகழகத்தின் பணிக்கான விளம்பரம், நேர்முகம் , உடனடியான சேர்வதற்க்கான வேண்டுகோள் என அனைத்தும் முடிந்து விட்டது. நான் எதிர்பார்க்காத முடிவு, விரும்பமுடன் மறுபடியும் தீ நுண்ம ஆய்வோடு குறு ஆர்.என்.ஏ க்களை பற்றி ஆய்வு செய்ய விழைகிறேன்.

நன்றி

-- மகிழ்நன் 22:44, 18 மார்ச் 2010 (UTC)

உங்கள் பணியும், ஆய்வும் வெற்றியளிக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மகிழ்நன்.--கலை 23:03, 18 மார்ச் 2010 (UTC)
ஓ, அருமை அருமை!! நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் மகிழ்நன்! உங்கள் பேராசிரியர் பணி செவ்வனே சிறக்க வேண்டுகிறேன். தங்களைப் போன்ற நல்ல ஆய்வாளரைத் தேர்ந்தெடுத்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தையும் நெஞ்சார வாழ்த்துகிறேன்! --செல்வா 23:33, 18 மார்ச் 2010 (UTC)
மிகவும் மகிழ்ச்சியான செய்தி மகிழ்நன். தங்களின் ஆய்வு பணி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். நீங்கள் பயின்ற பல்கலையிலேயே பணியில் சேர்வது மிகவும் சிறப்பு--கார்த்திக் 23:49, 18 மார்ச் 2010 (UTC)
  • மகிழ்நன், தங்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி கிடைத்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி. தங்கள் ஆசிரியப் பணியும், ஆய்வுப்பணியும் சிறப்பாய்த் தொடர என் இனிய வாழ்த்துக்கள்.--Theni.M.Subramani 00:39, 19 மார்ச் 2010 (UTC)

உங்களைப் போன்ற தமிழ் ஆர்வம் மிக்கோர் இளம் வயதில் பல்கலைப் பொறுப்புகளுக்கு வருவது நற்செய்தி. எனது செருமன் நாட்டுப் பேராசிரியர் அறிவுறுத்தியபின்னே விக்கிப்பீடியா என்று ஒன்று இருப்பது அறிந்தேன். (செருமனியில் விக்கி ஈடுபாடுகள் மிகுதி ). அது போல் உங்கள் பல மாணவர்களையும் விக்கி, கூட்டு முயற்சி பக்கம் ஈர்ப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்--ரவி 01:32, 19 மார்ச் 2010 (UTC)

மிகவும் இனிப்பான, சிறப்பான, ஊட்டமான செய்தி! உங்களைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் மதுரை காமராசர் பல்கலை தன் சிறப்பை நிலைநாட்டியுள்ளது எனலாம்! உங்கள் ஆசிரியப் பணியும் ஆய்வுப்பணியும் விக்கிப்பணியும் சிறக்க வாழ்த்துக்கள். --பரிதிமதி 02:18, 19 மார்ச் 2010 (UTC)
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். --Natkeeran 02:27, 19 மார்ச் 2010 (UTC)


அன்பின் சான்றோர்களுக்கு,

நன்றி, நன்றி,மிக்க நன்றி.

பெரியோர்களின் வாழ்த்துகள் எனக்கு மிக்க மகிழ்ச்சியளிகிறது. இந்த சிறு அகவையில் இப்பணியேய் ஏற்ப்பது கொடையே. இதற்க்கு கரணியமான நெறியாளர் உசா (MKU), திதி (இசுரேல்) மற்றும் தற்போது நெறியாளர் ரகு , பெற்றோர், நண்பர்கள் அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன்.

தற்போது உள்ள ஆய்வகத்தில் மூளை காயங்களில் குறு ஆர்.என்.ஏ க்களின் பணிகள் என்ன, குறு ஆர்.என்.ஏ க்களின் அளவுகளில் எவ்வாறு மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை முதன் முறையான, புதிய முறையில் கண்டுபிடித்துள்ளோம். இதை நிறைவாக முடிப்பதற்கு இரு திங்கள்கள் (மாதம்) தேவை. பல்கலைகழகமோ ஏப்ரல் 21 கடைசி நாள் என்றும், இல்லையேல் வேலை மற்றவருக்கு அளிக்கப்படும் என்கிறது. நெறியாளரிடம் கலந்து ஒரு நல்ல முடிவை எடுக்க எண்ணியுள்ளேன்.

பல்கலையில் நமது விக்கியெய் பற்றி உறுதியாக பரப்புரையும், மிகையான நேரமும் செலவு செய்வேன். என்னால் முடிந்த அளவு உழைத்து, நமது விக்கியெய் மேம்படுத்த பாடுபடுவேன்.

-- மகிழ்நன் 02:50, 19 மார்ச் 2010 (UTC)

மகிழ்ச்சி மகிழ்நன், உங்களுக்கு மிகவும் பொருத்தமான பணி. உங்கள் ஆய்வுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு, தமிழ் மக்கள் அனைவருக்கும் கிடைத்த வாய்ப்பு என நான் நம்புகிறேன். அறிவுத்தேடலில் நாட்டமும் சமூக உணர்வும் கொண்ட உங்களுக்குக் கிடைத்த இந்தப் பதவியைப் பயன்படுத்தி நீங்களும் முன்னேறுங்கள். சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கும் உதவுங்கள். எனது வாழ்த்துக்கள். மயூரநாதன் 03:09, 19 மார்ச் 2010 (UTC)
வாழ்த்துக்கள் மகிழ்நன். தொடரட்டும் உங்கள் பணி.. பல்கலையிலும் விக்கியிலும்.--Arafat 04:07, 19 மார்ச் 2010 (UTC)
மிக்க மகிழ்ச்சி மகிழ்நன்.ஆய்வா பணியா என்ற சந்திப்பில் இருப்பது புரிகிறது. பல்கலைப்பணி நிச்சயம் உங்கள் ஆய்வுகளுக்கு உதவியாக அமையும். அடுத்த இரு திங்கள்கள் விடுமுறை காலமாதலால் பணியில் சேர்ந்தபிறகும் கௌரவ நிலையில் உங்கள் ஆய்வுகூடத்திற்கு உதவிடலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் சீரிய பணியும் விக்கி பங்களிப்பும் தொடர வாழ்த்துகள் !!--மணியன் 04:15, 19 மார்ச் 2010 (UTC)
வாழ்த்துகள் மகிழ்நன்! -- சுந்தர் \பேச்சு 06:14, 19 மார்ச் 2010 (UTC

நன்றி. வாழ்த்துகளுக்கும் , கருத்துகளுக்கும் நன்றி.

-- மகிழ்நன் 17:08, 19 மார்ச் 2010 (UTC)

வாழ்த்துகள். உங்கள் புதிய பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன். --Daniel pandian 15:46, 22 மார்ச் 2010 (UTC)
வாழ்த்துக்கள் மகிழ்நன். உங்களுடைய புதிய பணி விக்கிக்கு ரவி சொன்னது போல் மேலும் வளம் சேர்க்கும். --சிவக்குமார் \பேச்சு 17:00, 22 மார்ச் 2010 (UTC)