விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு69

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தரம்[தொகு]

தமிழ் விக்கியின் தரம் பாதாளத்தில் உள்ளதாக கூறியிருந்தனர். அதை அதிகப்படுத்த தேவையான உசாத்துணை, வெளியிணைப்புகள் மற்றும் பல உள்ளன. அவரவர் எழுதிய கட்டுரைகளுக்கு அவரவர்களே உசாத்துணை போன்றவற்றை சேர்த்து விடுமாறு அவரவர் பேச்சுப்பக்கங்களில் வேண்டுகோள் வைக்கலாம். உதாரணத்திற்கு ஒருவர் 500 கட்டுரைகள் எழுதியுள்ளதாக வைத்துள்ளதாக வைத்துக்கொண்டால் அவரை தினமும் 5 கட்டுரைக்கு தரமேம்படுத்தல் பணியை செய்யுமாறும் இரண்டு கட்டுரைகளை புதிதாக உருவாக்குமாறும் வேண்டுகோள் வைக்கவும். இதனால் எண்ணிக்கை மேம்படுத்தல், தரப்படுத்தல் என்ற இரு சக்கரங்களின் சீர் ஓரளவிற்கு மேம்படுத்தப்படும்.

பகுப்பில் உசாத்துணை

உசாத்துணை, குறிப்புதவிக்கான வெளியிணைப்புகள் போன்றவற்றை பகுப்புகளிலே கொடுத்தால் என்ன? உதாரணத்திற்கு நான் தமிழ் பற்றிய கட்டுரை எழுதுகிறேன். தமிழ் சம்பந்தமான வேறொரு தலைப்பு கட்டுரையை மற்றொருவர் எழுதுகிறார். எனக்கொரு புத்தகத்தையும் வெளியிணைப்பையும் தெரிந்திருக்கும். மற்றவருக்கு வேறொரு புத்தகத்தையும் வெளியிணைப்பையும் தெரிந்திருக்கும் இதை பகுப்புகளில் அல்லது அதற்கான பேச்சுப்பக்கங்களிலும் தந்தால் அதை எடுத்து பகுப்புகளிலுள்ள கட்டுரைகள் அனைத்திலும் ஒட்டிவிடலாமல்லவா?

நிற்க. இதை வேறெவராவது கூறியிருந்து அதை நான் பார்க்காமல் போயிருக்கலாம். அதனால் திருப்பி சொல்வதாக நினைக்க வேண்டாம்.--தென்காசி சுப்பிரமணியன் 10:25, 28 சனவரி 2012 (UTC)

இல்லை இதற்கு யாரும் தீர்வு கூறவில்லை. :) நீங்கள் கூறியது நல்லதுதான். ஆனால், பயனரைக் குறிப்பிட்ட பணியைச் செய்யுமாறு வேண்டுவது விக்கியிலிருந்து விலகி நிற்கிறது. :) "தென்காசி, நீங்கள் எழுதிய கட்டுரைகளை ஒருமுறை மீண்டும் உரைத்திருத்தம் செய்து இணைப்புகளை இடுங்கள்!" என்று கூறுகையில் உங்களுக்கு தற்போது செய்துவரும் பணி தடைபடுவதாகத் தோன்றலாம். மேலும், அவ்வாறு பணிக்கையில், நீங்கள் கட்டுரை எழுதும்போதே இதைச்சேர்த்துவிட்டதாக எண்ணி அவ்வேண்டுகோளை புறக்கணிக்கலாம். எனவே, இது முழுவதும் பயன்தரக்கூடிய ஒரு தீர்வாகாது. அவரவர் பார்க்கும் கட்டுரைகளில் உள்ள பிழைகளை விக்கிக்காக ஒதுக்கும் நேரத்தில் ஒரு சிறிய நேரத்தை ஒதுக்கித் திருத்தினாலே அவை களையப்படும் என்று நம்பலாம். :) எனவே, இதனை நான் எனக்குத்தோன்றும் முடிவாகக் கூறுகிறேன். பிடித்திருப்பின் ஏற்றுக்கொள்ளவும் இல்லையெனில் வேறேதேனும் புதிய தீர்வையும் முன்வைக்கலாம்.
மேலும், பகுப்புகளும் வார்ப்புருக்களும் ஒரு துறைகீழ் வரும் கட்டுரைகளைப் பட்டியலிட மட்டுமே, அவற்றில் இதுபோன்ற கலைக்களஞ்சியத் தகவல்களைச் சேர்ப்பது தக்கதா என்று எனக்குத் தெரியவில்லை. என் எண்ணப்படி சேர்க்கக்கூடாது என்று நினைக்கிறேன். :) இன்னொன்று, அவரவருக்குத் தெரிந்த அறிவைத் தருவதுதான் விக்கியின் பலமே! (Sum of all human knowledge!) Face-smile.svg -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 10:53, 28 சனவரி 2012 (UTC)
என்னா உள்குத்து சூர்யா! கொன்னுட்டீங்க போங்க! நீங்க படு சூப்பருங்க! விவிசி!! (இன்னும்கூடச் சொல்லணும் இல்லையா.. மவனே இப்படீல்ல இருக்கணும்!!). நல்லதோர் வீணை அப்படீன்லா ஏதும் வேணாங்க. டேக் எ கி'ட்டார் மேன், ப்'ரேக் இட் இவ்' யு வான்ட் டு ப்ரேக் இட். அதான் மவனே ஸ்பிரிட்டு!!----செல்வா 11:21, 28 சனவரி 2012 (UTC)
சூரியப்பிரகாசு, அது பயனர்களோடு நீங்கள் கொண்ட பரிச்சியத்தைப் பொறுத்தது. விக்கியில் இருந்து விலகி நிற்பதாக எதை வைத்துக் கூறுகிறீர்கள். அவர் கூறியது, வேண்டுகோள், பரிந்துரை. இதைத் தீவரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அப்படி இறுக்கமான நிலை உருவாகுமானால் யாரும் எந்தக் கருத்தையும், முயற்சியையும் முன்வைகத் தயங்குவார்கள். ஒரு சில பயனர்கள், புதுப் பயனர்கள் இவ்வாறான வேண்டுகோள்களை எதிர்மாறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே தெளிவாக வேண்டுகோளாக, பரிந்துரையாக முன்வைப்பதில் சிக்கல் இருப்பதாக நான் நினைகவில்லை. --Natkeeran 11:09, 28 சனவரி 2012 (UTC)
அருமையான பரிந்துரை, தென்காசி சுப்பிரமணியன். இத்தனை கட்டுரைகளை மேம்படுத்துங்கள், புதிய கட்டுரைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்பது போல் எண்ணிக்கை கட்டுப்பாடு வைப்பது, சூரியா சுட்டியபடி தவறான புரிதல் வர வாய்ப்புண்டு. எனவே, பொதுவான வேண்டுகோளாக விடுக்கலாம். இது தொடர்பாக வார்ப்புரு:மேம்படுத்துக உருவாக்கியுள்ளேன். இந்த வார்ப்புருவையும் மேம்படுத்தித் தகுந்த இடங்களில் பயன்படுத்தலாம். இது போன்ற வேண்டல்கள் புதுப்பயனரை ஊக்கம் குன்றச் செய்யும் என்றால் குறைந்தது ஓர் ஆண்டுக்கு முன்பு விக்கியில் இணைந்தோரையும் அன்றாடம் பங்களிப்போரையும் இவ்வாறு வேண்டலாம். நன்றி--இரவி 12:02, 28 சனவரி 2012 (UTC)

சூர்யா, ஒரு துணுக்குச் செய்தி ( ஒரு ஸ்மால் மேட்டர் பா'ஸ்), நான் இந்தியாவிலே ஒரு 50 நாள் பயணம் செய்தேன், ஐ மீன் இண்டியால ட்ராவல் பண்ணேன், அப்போ ஒரு 3 -4 இடத்திலே விக்கிப்பீடியாவைப் பற்றி அறிமுகம் செய்தேன், ஐ மீன் இன்ட்ரொட்'யூஸ் பண்ணேன். எல்லா இடத்திலும் சூர்யான்னு ஒரு 17-18 அகவை நிறைந்த தமிழ்வழி பொறியியல் படிக்கும் மாணவர் எவ்வளவு அருமையாக எத்தனைத் துறைகளில் கட்டுரைகள் எழுதியிருக்கின்றார் என்றும், எப்படி 85 அகவை நிறைந்த பேராசிரியர் வி.கே கிருட்டிணமூர்த்தி, அவர்கள் கணிதத்துறையிலே பல அருமையான கட்டுரைகள் எழுதினார் என்றும் பெருமை பொங்கக் கூறினேன். எத்தனை 17-18 அகவை நிறைந்த நல்லிளைஞர் இப்படி நல்ல பணி ஆற்றுவார்கள் என்று பெருமையாகக் கூறினேன்! இன்னா பா'ஸ் இப்படி டி'சப்பாய்ன்ட் பண்றீங்க! சரி, சமாளிச்சகலாம் விடுங்க! மவனே இதெல்ல ஒரு பெர்ய செய்தியா, ஸ்மால் மேட்டர்தானே பா'ஸ். சொம்மனாச்சிக்கும் இங்கிலீஷ் விக்கிப்பீடியாவுல ஏதாவது சொல்லுவான்க, இது நம்ம பேட்டை! இன்னா பா'ஸ் சர்தானே? நாம த.வி யை மாத்திடலாம் பா'ஸ். சொம்மா கிழவனுங்க படுத்தறாங்க! "புதியதோர் விக்கிப்பீடியா செய்வோம் கட்சி" யங் அண்ட் டை'னாமிக் செல்வா--செல்வா 11:56, 28 சனவரி 2012 (UTC)

தென்காசி சுப்பிரமணியன், நீங்கள் நல்ல பரிந்துரை தந்திருக்கின்றீர்கள். நன்றி. அதனைச் செய்ய முடியும், ஆனால் பகுப்பில் அப்படி உசாத்துணை நூல்கள் சேர்க்க இயலாது. ஆனால் எளிதாகத் தேடவும் துல்லியமாக நூலின் தகவல் இணைக்கவும் ஆங்கில விக்கியில் சில வசதிகள் உண்டு. எடுத்துத் தருகின்றேன். அதுபோல் தமிழ் நூல்களுக்கும் இருந்தால் நன்றாக இருக்கும். --செல்வா 12:09, 28 சனவரி 2012 (UTC)

@நட்கீரன் & @இரவி +1 இந்த நோக்கில்தான் நான் கூறினேன். :) சரியான புரிதலுக்கு நன்றி. புதுப்பயனர் யாரேனும் இவ்வேண்டுகோளை "என்னடா! நம் கட்டுரையில் தப்பு (உரைத்திருத்தத்தையோ நடைமாற்றத்தையோ எழுத்துப்பிழையையோ உள்ளிணைப்பு இணைப்பதையோ அவ்வாறு கருதலாம்) இருக்கிறதென்று நம்மையே திருத்தச் சொல்கிறார்கள், நாம் இனி எழுதுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்" என்ற நோக்கில் எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. (ஒரு கணிப்பு சரியா தப்பா என்று தெரியவில்லை.) தெளிவாக வேண்டுகோளாக நட்கீரன் சொல்வதுபோல் வைப்பதில் எச்சிக்கலும் வராது என நம்புகிறேன். :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 12:14, 28 சனவரி 2012 (UTC)

நீங்கள் அனைவரும் கூறியதை வைத்து அனுபவம் உள்ளவர்களுக்கு இவ்வேண்டுகோள் விடுவது சரி என்று தோன்றுகிறது. எண்ணிக்கை கூறாமல் பொதுவாக விடுவதே நல்லது.

//ஆனால் எளிதாகத் தேடவும் துல்லியமாக நூலின் தகவல் இணைக்கவும் ஆங்கில விக்கியில் சில வசதிகள் உண்டு. எடுத்துத் தருகின்றேன். அதுபோல் தமிழ் நூல்களுக்கும் இருந்தால் நன்றாக இருக்கும்.//

தமிழ் நூல்கள் பற்றி எளிதாக தகவல்கள் பெற நூலக அதிகாரிகள் சிலபேரை விக்கியில் பங்களிக்குமாறு அனுகியதுண்டு. ஆனால் அவர்கள் அனைவரும் கணினி பற்றி அறியாமல் உள்ளனர். கணினி பயன்பாடு தெரிந்த ஒரு நூலக அதிகாரியாக தேடி வருகிறேன். பார்க்கலாம். சில சமயம் இங்கு ஆதாரம் தேவை எண்று கேட்கப்பட்ட தகவல்கள் நான் ஏற்கனவே புத்தகங்களில் படித்தது போல் இருக்கும். புத்தகம் பெயர் தெரிந்திருந்தாலும் மற்ற விவரங்களை மறந்திருப்பேன். அப்போது இவர்கள் உதவி இருந்தால் நன்றாக இருக்குமே என்றெண்ணியதுண்டு. நூலக அதிகாரிகளுக்கென்று ஏதும் கூட்டம் நடப்பதுண்டா? அங்கு சென்று ஏதாவது பரப்புரை செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. இது பற்றி அறிந்த விக்கியர்களின் மேலதிக கருத்துகள் தேவை.--தென்காசி சுப்பிரமணியன் 15:36, 28 சனவரி 2012 (UTC)

முனைவர். மு. இளங்கோவன் மாவட்ட மைய நூலகங்களில் தமிழ் இணையப் பயிலரலங்கு நடத்துவதுண்டு. இது தொடர்பான கூகுள் குழுமத்தில் இணைந்தால் உங்களுக்குத் தேவையான உதவி கிடைக்கலாம்--இரவி 15:51, 28 சனவரி 2012 (UTC)

ஆட்டோபிப்[தொகு]

தென்காசி சுப்பிரமணியன், ஆட்டோபி'ப்'பு (OttoBib) என்று ஒன்று உள்ளது அதில் ISBN எண்ணைக் கொடுத்தால் நூலில் முழுத்தகவலையும் கொடுக்கும். இங்கே பாருங்கள். எடுத்துக்காட்டாக 0-521-82149-5 என்னும் எண்ணை அப்படியே இட்டுப் பாருங்கள் Grimaldi அவர்களும் Engles அவர்களும் எழுதிய நூலில் முழுக்குறிப்பும் வெவ்வேறு வடிவங்களில் கிட்டும். விக்கிப்பீடியாவில் இட வேண்டிய வடிவும் கிட்டும்.--செல்வா 16:36, 28 சனவரி 2012 (UTC) ஆங்கில விக்கியில் Ottobib பற்றிய கட்டுரையையும் அதில் உள்ள இவற்றையும் காண்க என்னும் பகுதியையும், பகுப்புகளையும் பாருங்கள். தமிழ் நூலுக்கு ISBN இருந்தாலும் தரும், ஆனால் மெய்த்தேர்வு செய்து பார்க்கவில்லை. இது போல ஆங்கிலத்தில் இன்னும் பல செயலிகள் உள்ளன. DOI மட்டும் தெரிந்தால் இப் பக்கத்தை அணுகலாம். மேலும் இப்பக்கத்தையும், இப்பகுதியையும் பாருங்கள் --செல்வா 16:49, 28 சனவரி 2012 (UTC)

ISBN 978 8189936228 இத்தமிழ் புத்தகத்திற்கு வரவில்லை. ISBN கொடுக்கும் போது எண்களுக்கு இடையில் எண்ணென்ன இடவேண்டும். நிங்கள் கொடுத்த எண்ணை பரிசொதித்த பொழுது wp Format created 25 minutes ago என்றது. அப்படியென்றால் விக்கியைப்போல் அனைவரும் அங்கு பங்களிக்க இயலுமா?--தென்காசி சுப்பிரமணியன் 17:03, 28 சனவரி 2012 (UTC)

ஆட்டோபி'ப்'பில் 978-0415187886 என்னும் எண்ணை இட்ட பொழுது "Asher, R. Colloquial Tamil : the complete course for beginners. London New York: Routledge, 2002." கிட்டியது. இடையே வரும் இடடக்கோடுகள் தேவை என்று நினைக்கின்றேன். அமேசான் டா'ட் காம் தளத்தில் ஐ.எசு.பி.என் பிடித்து இட்டுப் பார்த்தேன். --செல்வா 17:27, 28 சனவரி 2012 (UTC)
இதுபோல எப்படித் தமிழில் வரவைப்பது? (கட்டுரை: பாபர் மசூதி இடிப்பு) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 17:47, 28 சனவரி 2012 (UTC)
சூர்யா, நீங்கள் சுட்டிய விக்கிப் பக்கத்தில் 978-0415187886 என்னும் எண்ணை இட்டபின், கீழே சென்று "find this book" என்னும் தலைப்புகளில் உள்ள தக்க ஒரு சுட்டியில் சொடுக்குங்கள். அப்படி கூகுள், அமேசான் ஆகிய சுட்டிகளளயோ, பிற பல சுட்டிகளையோ சொடுக்கினால் அந்தத் தமிழ்ப் புத்தகம் இருந்தால் வர வேண்டும். பெரும்பாலான தமிழ்ப் புத்தகங்களுக்கு ISBN எண் இல்லை. ஒருங்குறி (யுனிக்கோடு) குறிமுறையில் தரவடை இருக்குமானால், தமிழிலும் வர வாய்ப்புகள் உண்டு. உங்களிடம் தமிழ் நூல்கள் இருந்து, அவற்றின் ஐ.எசு.பி'.என் எண் இருந்தால் இட்டுப் பார்க்கலாம்.--செல்வா 18:06, 28 சனவரி 2012 (UTC)
81-85602-57-3 என்னும் எண்ணை இட்டுப் பார்த்தேன் (மேலே உள்ள Book Source என்னும் விக்கிப் பக்கத்தில் . தமிழ்நூலின் பெயரை உரோமன் எழுத்தில் எழுதிக் காட்டுகின்றது (அமேசான்), தமிழ்நூலின் ஆங்கிலத் மொழிபெயர்ப்புத் தலைப்பையும் தகவலையும் தருகின்றது கூகுள். மற்ற பல தளங்களும் இதே தகவலைத் தருகின்றன (ஆனால் தமிழ் எழுத்துருவில் இல்லை- நான் பார்த்தவற்றில்).--செல்வா 18:18, 28 சனவரி 2012 (UTC)

தரவுத்தள கட்டுரைகள் தொடர்பான கொள்கை முன்மொழிவு[தொகு]

விக்கிப்பீடியா பேச்சு:தரவுத்தள கட்டுரைகள்--இரவி 12:49, 28 சனவரி 2012 (UTC)

இவ்வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரை அறிவிப்பு[தொகு]

பல விக்கிப்பீடியாக்களின் தொடக்கக் காலங்களில் கூட்டு முயற்சியாக சில கட்டுரைகளைக் கவனம் தந்து உருவாக்கும் வழக்கம் இருந்தது. இதன் மூலம் குறுகிய வளங்கள் இருந்த நிலையிலும் முக்கியமான கட்டுரைகளை வளர்த்து எடுக்க முடிந்தது. தற்போது பல இந்திய விக்கிப்பீடியாக்கள் வளர் நிலையில் இருந்தாலும், ஒவ்வொரு கட்டுரையும் கூட்டாகத் தொகுக்கப்பட்டு மேம்படுத்தப்படுவது குறைவாகவே இருப்பதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. தற்போது குறுந்தட்டுத் திட்டத்தில் பலரும் சேர்ந்து உரை திருத்தி மேம்படுத்துவது நல்ல முற்காட்டு. தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் கூட்டு முயற்சிக் கட்டுரைகளை உருவாக்குவதன் மூலம் பல அருமையான முதற்பக்கக் கட்டுரைகளை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த வாரக் கூட்டு முயற்சியாக தீவு கட்டுரையை மேம்படுத்த வேண்டுகிறேன். நன்றி--இரவி 08:39, 29 சனவரி 2012 (UTC)

நல்ல முயற்சி இரவி! இதில் விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 என்னும் பட்டியலில் உள்ள கட்டுரைகள் சிலவற்றையும் அவ்வப்பொழுது சேர்த்துக்கொள்ளுங்கள். தமிழில் தரமான தகவல்களுடன் நல்ல நடையிலே, தெளிவான கருத்துவிளக்கத்துடன் படங்களுடன் இருப்பது நல்லது. நானும் உதவுகின்றேன்.--செல்வா 13:03, 29 சனவரி 2012 (UTC)
செல்வா, விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 ஆ.வி.யில் 10,000 கட்டுரைகள் என்ற இலக்குடன் இருப்பதாகத் தெரிகிறது. தமிழில் விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் பக்கக் கட்டுரைகளே இன்னமும் விரிவாக இல்லை. விக்கிப்பீடியா:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள் கைவிடப்பட்டுள்ளதா? அதில் 500 முக்கிய கட்டுரைகள் நோக்கிப் படிப்படியாக நகர்ந்தால் சில ஆண்டுகளிலேனும் அதனை முழுமைப்படுத்தக்கூடியதாயிருக்கும். தனிப்பட்ட விருப்பம் மட்டுமே. வள மேலாண்மை செய்யவில்லை :). நன்றி. கோபி 16:49, 29 சனவரி 2012 (UTC)
மாணவர்களுக்ககன கட்டுரைகள் கைவிடப்பட்டுள்ளதா என அறியேன் (அந்த நேரத்தில்தான் பயணங்களில் இருந்தேன். 500 கட்டுரைகளுக்கு 25x20 என்றவாறான வகையில் தலைப்புகளுக்கான உட்பகுப்புகள் பற்றி ஒரு குறிப்பு இட்டேன்). சில ஆண்டுகள் ஆக வேண்டிய தேவை இராது. முயன்றால் ஓராண்டுக்குள்ளேயே செய்ய இயலும். இப்பொழுது வெளியிடும் குறுந்தகடில்/இறுவட்டில் உள்ள கட்டுரைகளை மீள்பபர்வவ இட்டு இன்னும் ஒரு 250-300 கட்டுரைகள் சேர்த்து தக்கவாறு விரிவு படுத்தி, திருத்தி வெளியிடலாம். --செல்வா 01:57, 30 சனவரி 2012 (UTC)

நன்றி, செல்வா. அனைவரும் ஆர்வமுடனும் துறையறிவு பெரிதாகத் தேவைப்படாமலும் பங்களிக்கக்கூடிய கட்டுரைகளையே இவ்வாறு அறிவிப்பது பயன் தரும். அப்பொழுது தான் பல பயனர்களும் பங்கு கொள்ள முடியும். முக்கிய கட்டுரைகளில் எவையாவது இப்படிப் பொருந்துகின்றனவா எனப் பார்க்க வேண்டும். தவிர, ஒரு சிலரே கட்டுரைகளை முன்வைப்பதை விட பலரும் கட்டுரைகளைப் பரிந்துரைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.--இரவி 16:36, 29 சனவரி 2012 (UTC)

இரவி, விக்கிப்பீடியா:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்டதாகத் தெரிகிறது. அதனை சற்று இற்றைப்படுத்திப் பயன்படுத்தலாம். பலவும் பொதுக் கட்டுரைகளே... கோபி 16:53, 29 சனவரி 2012 (UTC)
ஆம், கோபி சொல்வது சரி. செய்யலாம் இரவி.--செல்வா 01:57, 30 சனவரி 2012 (UTC)
வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட கட்டுரை தலைப்புகளில் கட்டுரைகள் இல்லை. இந்தத் தலைப்பிலான புதிய கட்டுரைகளை எழுதலாம். --ஸ்ரீதர் /பேசுக 01:11, 30 சனவரி 2012 (UTC)
நல்ல கருத்து. பல கட்டுரைகள் இருக்கின்றன (எ.கா சொட்டு நீர்ப்பாசனம்), ஆனால் தலைப்பு மட்டும் இருக்கும் கட்டுரைகள் இல்லாதவை நிறைய உள்ளன (தக்க தேர்ச்சி பெறாத, அல்லது வராத கட்டுரைகள்).--செல்வா 01:57, 30 சனவரி 2012 (UTC)

கோபி, செல்வா, srithern, தொடுப்புகளுக்கு நன்றி. இந்த வாரக் கூட்டு முயற்சிக்கு அனைவரும் தலைப்புகளைப் பரிந்துரைக்கலாம். எனவே, நீங்களே இந்தத் தொடப்புகளில் இருந்து தகுந்த தலைப்புகளைச் சேர்த்துவிடுங்கள். நன்றி--இரவி 07:24, 30 சனவரி 2012 (UTC)

அடுத்தடுத்த வாரங்களுக்கான கூட்டு முயற்சிக் கட்டுரைகளுக்கான தலைப்புகளை வரவேற்கிறேன். பரவலான பரிந்துரைகள் இல்லா நிலையில் ஒரு சிலரின் பரிந்துரைகளே திரும்பத் திரும்ப இடம்பெறக்கூடும் என்பதால், இதுவே கடைசியும் இறுதியுமான அழைப்பு :)--இரவி 20:47, 16 பெப்ரவரி 2012 (UTC)

இந்திய மாணவர்களின் தாழ்ந்து-நிற்கும் கல்வித்தரம் ("PISA" மதிப்பீட்டில் வெளியான தகவல்)[தொகு]

Programme for International Student Assessment, PISA என்னும் நிறுவனம் 70 நாடுகளிலும், பொருளாதார மையங்களிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை அளக்க 2000 ஆம் ஆண்டில் இருந்து முற்படுகின்றது. இதில் கடைசியில் இருந்து இரண்டாவது நிலையில் இந்திய மாணவர்கள் இருப்பதாக எக்கனாமிக்கு டைம்சு எடுத்துக்காட்டியுள்ளது. அமெரிக்காவும் பின் தங்கியே உள்ளது என்று சா'ன். இ. ப'ர்ரிசு (John E. Burris) சயன்சு என்னும் ஆய்விதழில் ஆசிரியர் பக்கத்தில் எழுதியுள்ளார் (சுருக்கம் இங்கே). முன்னே நிற்கும் பின்லாந்தின் தலைசிறந்த கல்வி கற்பித்தலைப் பற்றியும் பாராட்டிக் கூறியுள்ளார். ஆசிரியர்களின் பங்களிப்பின் முகனையைப் (முக்கியத்துவத்தைப்) பற்றி, "As Finland has shown, the answer to the problem that beleaguers many nations is a straightforward commitment to both value and trust the most important part of any successful educational system—the teacher." (13 JANUARY 146 2012 VOL 335 SCIENCE) என்று கூறுகின்றார். --செல்வா 20:56, 30 சனவரி 2012 (UTC)

இந்தியாவில் தொழிற்நுட்ப கல்வியானது நடைமுறைக்கு ஒத்து வராமலும் தொடர்பில்லாமலும் இருக்கின்றன. அதிகமான பட்டதாரிகள் திறமையற்றவர்களாகவும் மேன்மையடையாமலும் இருக்கிறார்கள். இதனால், தொடர்புத் துறையில் குறிப்பிட்ட வளர்ச்சியடைய முடியவில்லை. மேலும் பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் தரமான நிறுவனங்களும் கூட ஒரு தரமான பணியாளரை உருவாக்க முடியவில்லை. இதனால் தொழில் நுட்பம்/ பொறியியல் கல்வியில் முக்கிய வாய்ப்பை இழக்கிறது. ஆதாரம் --ஸ்ரீதர் /பேசுக 23:26, 30 சனவரி 2012 (UTC)
நன்றி, Srithern. இது பற்றிய என் தனிப்பட்ட கருத்துகளை என் பயனர் பக்கத்தில் இட்டிருக்கின்றேன்.--செல்வா 00:06, 31 சனவரி 2012 (UTC)

இரண்டில் ஒன்று[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் பல இடங்களில் இருவகையாய் எழுதப்பட்டுள்ளது. இரண்டு உதாரணங்களை மட்டும் இங்கு தருகிறேன்.

உதாரணம் 1. அங்கு சென்று என சந்திப்பிழையோடும் உள்ளது. அங்குச் சென்று என சரியாகவும் உள்ளது.

உதாரணம் 2. பழைமை என்பது ஒலிக்கும் போது ஐகாரக்குறுக்கம் அடைந்து பழமை என ஒலிக்கப்படுகிறது. (பனை மரம் --> பனமரம்) விக்கிப்பீடியாவில் பல இடங்களில் பழமை என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதல் உதாரணத்தில் அங்குச் சென்று என்பதே சரி என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இரண்டாம் உதாரணம் குறித்து மற்ற பயனர்கள் கருத்தை வேண்டுகிறேன்.

அத்துடன் ஒருமித்த கருத்தேற்படுமாயின் தானியங்கி மூலம் திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனும் கருத்தையும் முன்வைக்கிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 09:34, 1 பெப்ரவரி 2012 (UTC)

பழைமை என்பதே சரியானது. திருக்குறளிலும் கூட 81ஆவது அதிகாரத்தில் பழைமை என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. --மதனாஹரன் 11:35, 1 பெப்ரவரி 2012 (UTC)
ஆம் பழைமை என்பதும் பனைமரம் என்பதுமே சரி. பழமை என்றால் காய் நிலையில் இருந்து பழமான பழத்தின் தன்மை என்பது போல் பொருள் வரக்கூடும். ஆனால் ஏதேனும் இலக்கண அமைதி கூறுவார்களா என்று தெரியவில்லை. பரவலாக அடிக்கடி செய்யும் பிழை என்று ஒரு பட்டியல் இட்டு சிறுகச் சிறுக திருத்தி வந்தால் சீராகும். இரு பெரும் தொகுதியாக வெளியிட்ட World Book Dictionary ஆங்கில அகரமுதலியில் இப்படி அடிக்கடி செய்யும் எழுத்துப்பிழை என்றே ஒரு பட்டில் தந்து இருக்கின்றார்கள். தமிழிலும் நன்கு தமிழறிந்தவர்கள் பலர் ஊடகங்களிலும் தனி நூலாகவும் வெளியிட்டுள்ளார்கள். நாம் பின்பற்ற முனைந்தால் நல்லது. --செல்வா 11:53, 1 பெப்ரவரி 2012 (UTC)
அங்குச் சென்று, அங்குப் போய் போன்றவை தவறு என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் முறையாகக் கற்றதில்லை என்பதால் இலக்கண விளக்கம் சொல்லத் தெரியவில்லை. கோபி 12:23, 1 பெப்ரவரி 2012 (UTC)

கருத்தளித்த பேராசிரியர், மதனாஹரன், கோபி ஆகியோருக்கு நன்றி. பயனர் கோபி அவர்களுக்கு -வல்லின ஒற்று மிகும் மற்றும் மிகா இடங்கள்

பிற பயனர்கள் கருத்தினைக் குறிப்பாகத் தானியங்கி மூலம் திருத்துவது குறித்தான கருத்தையும் வேண்டுகிறேன். (தானியங்கியில் திருத்தும் போது உள்ளடக்கம் பல கட்டுரைகளிலும் மாற்றப்படுவதால் பெரும்பாலான பயனர்களின் கருத்து அவசியம் என நினைக்கிறேன்.) --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 13:46, 1 பெப்ரவரி 2012 (UTC)

இது தொடர்பானவற்றிக்கு இங்கும், இங்கும் காணவும். -- மாகிர் 14:30, 1 பெப்ரவரி 2012 (UTC)
வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம் இணைப்புக்கு நன்றி கார்த்தி. அப்பக்கத்தில் உள்ள எடுத்துக்காட்டுக்கள், விதிகளில் அங்கு, எங்கு, இங்கு ஆகியவற்றின் பின்னர் வல்லினம் மிகும் என்பது எனக்கு புதிய செய்தி. (மனம் நம்ப மறுக்கிறது:) ) நன்றி. கோபி 15:35, 1 பெப்ரவரி 2012 (UTC)
கார்த்தி, என்னைச் செல்வா என்றே அழையுங்கள். இங்கே நாம் யாவரும் உடன்பங்களிக்கும் தோழர்களே. பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்கள் மிகச்சிறந்த சொல்திருத்தி ஒன்றைச் செய்திருக்கின்றார். இது பயர்பாக்ஃசு (firefox) போன்ற உலாவிகளில் நீட்சியாகப் பயன்படுத்த முடியும் (நான் பயன்படுத்தியது இல்லை). மிகப்பெரும்பாலான இடங்களில் ஒற்று மிகும்-மிகா இடங்கள் தெளிவாகவே உள்ளன. சில இடங்களில் சிறு குழப்பம் அல்லது இரண்டையும் (மிகுதல்-மிகாதல்) ஏற்கும் தன்மை உண்டு (அதற்கான அமைதிகளும் கூறுவர்). புள்ளிவைத்த எழுத்து ("ஒற்று") மிகும் இடங்களில் சில:
 • "பழத்தை", "அறிவை", போன்ற இரண்டாம் வேற்றுமையாகிய ஐ வரும் இடங்கள் (பழத்தைப் பறித்தான், அறிவைப் பெற்றான்) ,
 • நான்காம் வேற்றுமையாகிய கு வரும் இடங்கள், (எனக்குத் தெரிந்த, அவனுக்குப் பிடித்த),
 • "-ஆக", "-ஆய்" போன்று முடியும் சொற்களில் மிக வேண்டும் (புதிதாகக் கண்டுபிடித்தான்)
என்று இப்படி ஒரு 4-5 வகைகள் தெரிந்து வைத்து முயன்றாலே பெரும்பாலான இடங்களில் பிழைகளைக் குறைக்கலாம். ஆனால் இந்த ஒற்று மிகும்-மிகா இடங்களின் விதிகள், 30-40 என்று நுணுக்கமாக உள்ளன. தமிழில் ஓரளவுக்குக் கடினமான ஒன்று இந்த ஒற்றுப்பிழைகள் தாம்.

--செல்வா 14:51, 1 பெப்ரவரி 2012 (UTC)

தங்கள் கருத்துகளுக்கு நன்றி பேரா. செல்வா.(நீங்கள் பொதுவனாரை மரியாதையுடன் விளிப்பது போன்றதே நான் தங்களை விளிப்பதும்) வல்லின ஒற்று மிகும் மற்றும் மிகா இடங்கள் பக்கத்தில் மேலும் உள்ளடக்கம் சேர்க்க வேண்டியிருப்பின் சேர்க்கலாம். யாருக்கும் மறுப்பில்லையேல் ஒரு வாரம் கழித்து அங்கு சென்று என்பதை விக்கிப்பீடியா கட்டுரைகளில் மட்டும் அங்குச் சென்று என மாற்ற இயக்கத்தில் உள்ள தானியங்கியின் பேச்சுப்பக்கத்தில் கோரிக்கை வைக்கலாம். வரும் காலங்களில் இது போன்ற கோரிக்கைகளை பயனர் மாகிர் குறிப்பிட்ட பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் இட்டு ஆலமரத்தடியில் ஒரு செய்தி தந்து விடலாம் என எண்ணுகிறேன். நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 15:47, 1 பெப்ரவரி 2012 (UTC)

ஒரு விளக்கம்: பழைமை என்பதன் பொருள் பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.[1] அது ancient என்று பொருள் தராது. அதன் தமிழ்ச் சொல் பழமை ஆகும். இது மா. நன்னன் அவர்களால் அவரது நூல்களிலும் ஒரு முறை மக்கள் தொலைக்காட்சியிலும் எடுத்தியம்பப்பட்டுள்ளது. அதன், பொருளை பலரும் ancient என்றே உணர்ந்துள்ளனர். எனவே, அதனை மாற்றுவது சரியாக இராது. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 17:37, 1 பெப்ரவரி 2012 (UTC)

எனது சிறு கருத்து: நன்னூலின் படி ஒரு வாரத்தையின் இறுதியில் உயிரெழுத்து (பிரித்தால்) வந்தால் கசதப மிகும் என்றுதான் நான் படித்தாக ஞாபகம். மேலும் வல்லின ஒற்று மிகும் மற்றும் மிகா இடங்கள் பக்கத்தில் உயிரெழுத்து பற்றி குறிப்பிடப்படவில்லை என நினைக்கிறேன்...மேலும் விவரங்களுக்கு [2] இது பற்றிய அனைத்து விதிகளும் விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன..இதனை வல்லின ஒற்று மிகும் மற்றும் மிகா இடங்கள் பக்கத்தில் இணைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்--shanmugam 18:01, 1 பெப்ரவரி 2012 (UTC)

பழைய என்றால் "old" (பொதுவாக "ancient") என்றும் கொள்ளலாம். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது புகழ்பெற்ற நன்னூல் குறிப்பு அல்லவா? பழையது என்பது முந்தைய நாள்களின் சோறு. பழையோள் என்பது தொல்முது காலத்தில் இருந்த பெண் தெய்வமாகத் தமிழ் கூறும். நாள்பட புளித்த கள்ளுக்குப் பழை என்று பெயர். பழைமை = தொன்மை. (கழக அகராதி பார்க்கவும்). பழையர் கள்விற்போர். பழ, பழகு, பழுது, பழம் ஆகிய யாவுமே ஒரே வேரடிப்பொருள் கொண்டவை. பழி என்பதற்கும் அடிவேரில் தொடர்புண்டு. பழைமை = தொன்மை என்பதில் ஐயம் வேண்டாம். தமிழறிஞர் மா. நன்னன் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவர் சொல்லியதைத் துல்லியமாக அறிய ஆவல். --செல்வா 18:43, 1 பெப்ரவரி 2012 (UTC)
 • பழைமை என்பதே சரி.
 • பனை என்ற சொல் முன் க ச த ப வருமாயின் பனை என்பதில் உள்ள ஐகாரம் கெட்டு அம் சாரியைப் பெற்று மாற்றமடையும்;
சான்று
பனை+கொடி = பன்+கொடி=பன்+அம்+கொடி= பனங்கொடி (பனந்திரள், பனம்பழம் என்பதும் இவ்வாறே) ஆனால் மரப் பெயரான பனைமரம் என்பதே சரி.--Parvathisri 19:41, 1 பெப்ரவரி 2012 (UTC)
ஒற்றுப்பிழைகள் தவறிச் செய்வன;திருத்துவதில் தப்பே கிடையாது. (மக்கள் திலகம் வாயிலாக வாலியின் பாடல் "தவறு என்பது தவறிச் செய்வது; தப்பு என்பது தெரிந்து செய்வது" நினைவில் நிற்கிறது ;)) முதலில் தலைப்புகளில் உள்ள ஒற்றுப்பிழைகளை களைவது தலையாயது ஆகும்.--மணியன் 08:36, 2 பெப்ரவரி 2012 (UTC) 👍 விருப்பம்--shanmugam 08:47, 2 பெப்ரவரி 2012 (UTC)

அங்குச் சென்று என்பதே சரியான வழக்கு... ஆனாலும் இன்றைய காலத்தில் அவ்வாறு எழுதுவது குறைவு. அதனையும் கருத்தில் கொண்டு முடிவு எடுத்தால் நன்று. கூகுள் தேடலில் "அங்கு சென்று" என்பதற்கு ஏறத்தாழ 102000 முடிவுகளும் "அங்குச் சென்று" என்பதற்கு ஏறத்தாழ 2700 முடிவுகளும் கிடைத்துள்ளன. --மதனாஹரன் 10:12, 2 பெப்ரவரி 2012 (UTC)

இலக்கணம் என்பது எல்லா காலத்துக்கும் ஒன்று தான். பரவலான பிழைகள் புதிய இலக்கணம் ஆகா :) எனவே, தற்காலத் தமிழ் நடையில் இருந்து வெகுவாக விலகி நிற்காமல் இயன்ற அளவு இலக்கணத்தைப் பின்பற்ற முயல்வோம். குறுந்தட்டுத் திட்டத்துக்கு உரை திருத்தி வருவோர் பலரும் தமிழ் விக்கிப்பீடியாவில் காணப்படும் பொதுவான பிரச்சினைகளை இனங்கண்டிருக்கலாம். இவற்றை விக்கிப்பீடியா பேச்சு:உரை திருத்தும் திட்டம், விக்கிப்பீடியா பேச்சு:நடைக் கையேடு பக்கங்களில் குறித்து வந்தால், ஒற்றுப் பிழைகளை மட்டுமல்லாது தேவைப்படும் அனைத்துத் துப்புரவுப் பணிகளையும் ஒட்டு மொத்தமாக அணுகலாம்.--இரவி 08:57, 5 பெப்ரவரி 2012 (UTC)


சொல்வனம் இதழில் த.வி பற்றி கட்டுரை ஒன்றில்[தொகு]

கடந்த சொல்வனம் இதழில் த.வி பற்றி கட்டுரை ஒன்றில் அ. முத்துலிங்கம் குறிப்பிட்டுள்ளார். தகவலுக்காக இங்கு இணைக்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் 04:09, 2 பெப்ரவரி 2012 (UTC)

சஞ்சீவி சிவகுமார், திரு முத்துலிங்கம் அவர்களுக்கு ஒரு தனி மடல் அனுப்பினேன், அதனை அவர் வெளியிட்டுருக்கின்றேன் என்று கூறினார். இங்கே பார்க்கலாம். --செல்வா 00:38, 4 பெப்ரவரி 2012 (UTC)

புதுப்பயனர் வார்ப்புரு[தொகு]

விக்கிப்பீடியாவில் புதிதாக இணைந்துள்ள பயனர்களை வரவேற்பதற்கான புதுப்பயனர் வார்ப்புருவைப் புதிய பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் இடுவதற்குத் தானியங்கிகளைப் பயன்படுத்தலாமே. அதற்கான வேண்டுகோளை இங்கே விடுக்கின்றேன். --மதனாஹரன் 05:42, 5 பெப்ரவரி 2012 (UTC)

புதுப்பயனர்களை வரவேற்பது தானியக்கமாக இல்லாது தனிப்பட்ட வரவேற்பாக அமைவதே விரும்பத்தக்கது. --மணியன் 08:08, 5 பெப்ரவரி 2012 (UTC)
இது குறித்து ஏற்கனவே ஒருமுறையும் உரையாடியுள்ளோம். மலையாள விக்கி முதலிய சிலவற்றிலும் இதற்குத் தானியங்கி பயன்படுத்துகிறார்கள். பல விக்கிகளிலும் புதுப்பயனர் வரவேற்பால் பெரிய பயன் இல்லை என்று உணரப்படுகிறது. எனவே, பயனர்களின் உழைப்பை இதில் செலுத்த வேண்டுமா என்று எண்ணலாம். அதே வேளை, ஒரு சிலர் இன்னார் தம்மை வரவேற்றார் என்று மகிழ்வதையும் நினைவு வைப்பதையும் பார்த்திருக்கிறேன். இந்த சமூக உணர்வும் முக்கியம்--இரவி 08:10, 5 பெப்ரவரி 2012 (UTC)

அநேகமானவர்களின் கருத்திற்கேற்பச் செயற்படலாம். --மதனாஹரன் 11:48, 5 பெப்ரவரி 2012 (UTC)

நானும் மணியன் கருத்துடன் ஒப்புகின்றேன். நாம் ஒவ்வொருவருவரையும் தனிப்பட வரவேற்பது நல்லது. ஆங்கில விக்கியில் வரவேற்பு தரும் பொழுது இது தானியங்கி அன்று, கேள்விகள் இருந்தால் என்னை அணுகுங்கள் என்று குறித்தும் வந்தார்கள். இப்பொழுதும் அப்படிச் செய்கின்றார்களா அறியேன். முதல் தொடர்புக்கு ஒருவர் இருப்பதும் நல்லது. இதுவும் ஒரு பணிதான், ஆனால் அவ்வளவு பெரிய பணி அன்று. பயன் இருக்கின்றதா, இல்லையா என்பதை விட நாம் உண்மையாக வரவேற்கின்றோம் என்பதே முக்கியம். புதுப்பயனருக்கு உதவவும் அணியமாக இருக்க வேண்டும். --செல்வா 15:22, 5 பெப்ரவரி 2012 (UTC)👍 விருப்பம்--shanmugam 17:38, 5 பெப்ரவரி 2012 (UTC)
There is a thought at global level to study the effectiveness of welcomes messages. If you are interested, please help, meta:Wikimedia_Fellowships/Proposals/Evaluating_welcome_messages. It cant be outrightly said its ineffective / waste of time, however its usefulness needs to be studied. Probably we could get a feedback of the current template used here from 100 new users(sample) and improve on the message content. Delivery can happen manually / automatically, but message needs to reach first :) ஸ்ரீகாந்த் 07:12, 6 பெப்ரவரி 2012 (UTC)
"Srikanth", அருள்கூர்ந்து தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள், இங்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்தில் எழுதக்கூடாது, உரையாடக் கூடாது என்றோ அல்லது பிறமொழிகளில் (இந்தி, அரபி, குசராத்தி...) உரையாடக் கூடாது என்றோ இல்லை ("சட்டம்" இல்லை), ஆனால் இங்குக் கருத்துப்பிறழ்வுகள் ஏற்படாமலும், எல்லோரும் புரிந்துகொள்ளும்படியாகவும் இருப்பதற்காக அருள்கூர்ந்து தமிழில் உரையாட வேண்டுகிறேன். உங்கள் பகிர்வுகள் எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் என்றும் விரும்புகின்றேன். --செல்வா 16:05, 8 பெப்ரவரி 2012 (UTC)
எனக்கு தமிழ் எழுதுவதற்கு சற்று நேரம் கூடுதலாக ஆகும்.(Sometimes I also want to avoid my comments being understood differently due to my lack of tamil skills). நேரம் இல்லாத தருணங்களில் ஆங்கிலத்தில் அடித்துவிட்டு செல்வேன்.(என்னுடைய சில நூறு தொகுப்புகளில் தமிழிலும் உரையாடியுள்ளேன்) ஆலமரத்தடியில் இது வரவேற்க்கத்தக்கதில்லையென்று பெருவாரியானவர்கள் கறுதினால் நான் என் கருத்துக்களை (நேரம் இல்லாத பொழுது) என் பயனர் வெளியில் ஒரு பக்கத்தில் விட்டு இங்கு தொடுப்பு விடுகிறேன், விருப்பமுள்ளவர்கள் படிக்கட்டும். நன்றி ஸ்ரீகாந்த் 16:57, 8 பெப்ரவரி 2012 (UTC)
புரிகிறது, நேரம் எடுக்கக்கூடும் என்பதை மறுக்கவில்லை. நீங்கள் ஆங்கிலத்தில் கூறினீர்களே, "Sometimes I also want to avoid my comments being understood differently due to my lack of tamil skills" என்று, அதையே தான் நானும் சொல்கின்றேன் - நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவதால் பிறரும் தவறாகவோ, சரியாகவோ புரிந்துகொள்ளாமல் இருக்கவும் வாய்ப்புண்டு. மேலே நீங்கள் நன்றாகத்தானே தமிழில் எழுதியுள்ளீர்கள் (கருதினால் என்று எழுத நினைத்தீர்கள் என்று நினைக்கின்றேன்). என்னைவிட எழுத்துப்பிழை விடுபவர்கள் குறைவாகவேதான் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். இதற்கெல்லாம் போய் "facepalm" எல்லாம் வைக்கின்றீர்களே. கொஞ்சம் நினைத்துப்பாருங்கள், தமிழில் எழுதி, உரையாடி, கருத்தாக்கமும் அறிவாக்கமும் செய்யும் களங்கள் மிக மிக அரிதாகவே உள்ளன, அப்படி அரிதாக உள்ள இக் களத்திலும் ஆங்கிலத்தில் உரையாடாமலும், இருநிலை (ஆங்கிலத்தில் உரையாடுவோர், தமிழில் உரையாடுவோர்) அல்லது இருபிரிவுகள் உண்டாக்காமலும் இருக்கலாம் அல்லவா? --செல்வா 18:34, 8 பெப்ரவரி 2012 (UTC)
புரிகிறது, இயன்றவரை முயற்சித்துள்ளேன், முயற்சி செய்கிறேன், முடியாத சில நேரங்களில் மன்னிக்கவும். பிரிவுகள் பற்றி எனக்கு மாற்றுக்கருத்து இருந்தாலும் இப்பக்கத்தில் அது எந்த மதிப்புக் கூட்டாதென்பதால் என்னுடன் வைத்துக் கொள்கிறேன். நன்றி ஸ்ரீகாந்த் 19:28, 8 பெப்ரவரி 2012 (UTC)
புரிந்துணர்வுக்கு நன்றி ஸ்ரீகாந்த். மேலும், இன்றைய சூழலில் இங்கு பங்களிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கலாம். ஆனால், தமிழ் மட்டுமே நன்கு அறிந்த பயனர்களும், தமிழும் ஆங்கிலம் அல்லாமல் செருமன் போன்ற வேறு மொழிகள் அறிந்த பயனர்களும் வர வாய்ப்புண்டு (இப்போது கூட இருக்கலாம்.). அதையும் கருத்தில் கொள்ளுங்கள். -- சுந்தர் \பேச்சு 13:14, 9 பெப்ரவரி 2012 (UTC)

கோரப்படும் கட்டுரைகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட சில கட்டுரைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? இங்கு கோரலாம்--இரவி 08:11, 5 பெப்ரவரி 2012 (UTC)

இம்தாத் அவர்களின் விமர்சனங்கள்[தொகு]

எனக்கு அ. முத்துலிங்கத்தால் அனுப்பப்பட்ட, அவருக்கு தமிழ் விக்கி பற்றி கிடைத்த விமர்சனப் பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன். இந்த விமர்சனங்கள் தொடர்பான எனது கருத்தைப் பின்னர் பகிர்கிறேன்.

"மதிப்பிற்குரிய அ. முத்துலிங்கம் அவர்களுக்கு, நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த கடிதம் இன்று கைகூடியிருக்கிறது. அதற்கு ‘ஆற்றேன் அடியேனில்’ நீங்கள் கவனப்படுத்தியிருக்கும் விடயம் ஒரு காரணம். உங்களது தளம் மூலமாக இது விவாதிக்கப்படுமாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே. நீங்கள் குறிப்பிடும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பங்களித்தல் தொடர்பில் எனது கருத்துக்களை முன்வைக்கவே இதனை எழுதுகிறேன். நான் நீண்டகாலமாக ஆங்கில விக்கியை உபயோகித்ததால் தமிழ் விக்கி உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டதிலிருந்து அதற்கு சிறிய அளவில் பங்களித்திருக்கிறேன். கலைகள், வரலாறு, ஆளுமைகள், நூல்கள் மற்றும் இஸ்லாமிய பண்பாடு குறித்து எனது கட்டுரைகள் அமைந்திருந்தன. இருந்தும் எழுதுவதில் எனக்கிருந்த வரையறைகளை உணர்ந்து இதனை பலருக்கும் விளிப்பூட்டுவதுதான் சிறந்தது எனத் தோன்றியது. இதனால் நண்பர்களின் உதவியுடன் ‘இணைய எழுத்து’ என்ற பெயரில் பயிலரங்கம் ஒன்றை கிழக்கின் பல ஊர்களிலும் செய்தோம். இதில் எழுத்தாளர்கள், ஊடகத்துறையினர், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இது முழு நாள், அரைநாள் பயிற்சி கருத்தரங்குகளாக அமைந்திருந்தன. இதில் ஒரு அமர்வு முழுக்கவே ‘இணைய வளங்களைப் பயன்படுத்தலும் பங்களிப்புச் செய்தலும்’ என்பதாகும். இதில் முக்கியமாக கவனப்படுத்தப்பட்ட விடயம் தமிழ் விக்கிதான். இப்பகுதி முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் கட்டுரைகளை ஒட்டி தயாரிக்கப்பட்டது. அவர் தமிழ் நாடு முழுக்க நடாத்திய இணைய பயிலரங்கம்தான் எமக்கு பெரிதும் வழிகாட்டியாய் அமைந்தது. ஆரம்பத்தில் கட்டுரைகளை விக்கியில் எழுதிச் சேர்க்கும் போது எனது அறிவிற்கு வராத ஒரு விடயம் அதில் ‘தரப்படுத்தல்’ நடைபெறுகிறது என்பது. விக்கியின் தரத்தைப் பேணுவதற்கு அது தேவைதான் என்றுணர்ந்தேன். பலரது அறிவும் கலந்து புது அறிவு பிறக்கும் சாத்தியம் விக்கியில்தான் இருக்கிறது. எனவே மீண்டும் விக்கியின் கொள்கைகளை வாசித்துவிட்டு எனது கட்டுரைகளை நானே செம்மைப்படுத்தத் தொடங்கினேன். மீண்டும் திருத்தங்கள், அதிகமும் முஸ்லிம் பண்பாடு, சமயம் சார்ந்த கட்டுரைகளில்தான் நிகழ்ந்தன. இவை எனக்கு வியப்பூட்டின. காரணம் இஸ்லாமிய சமயத்தையும் பண்பாட்டையும் எழுதத் தொடங்கினால் கிரந்த எழுத்துக்களைத் தவிர்க்க முடியாது என்பதை யாவரும் அறிவர். தற்கால பயன்பாட்டிலுள்ள முஸ்லிம் உரைநடையிலிருந்து கிரந்த எழுத்துக்களை தவிர்த்துப் பார்க்கவே /* இம்தாத் அவர்களின் விமர்சனங்கள் */ முடியாது. இது விக்கியின் திட்டக் கொள்கைகளுக்கு எதிரானதாகவும் இல்லை. காரணம் நடைமுறைப் பயன்பாட்டிலுள்ள பலரும் உபயோகிக்கும் மொழிபைத்தான் விக்கி பரிந்துரைக்கிறது. இங்கு எனக்கு முகத்தை சுழிக்கச் செய்வது, ஒரு கோடி தமிழ்(?) பேசும் முஸ்லிம்களும் ‘இஸ்லாம்’ என்று உபயோகிக்கும் போது நீங்கள் மையத்தில் இருந்து கொண்டு ‘இசுலாம்’ என்று மாற்றுவதால் தான். இப்படி ஏகப்பட்ட முகச்சுழிப்புகள். அதிகமும் கவலை தந்தது என்ன வென்றால், முஸ்லிம் பெயர்களை தூய தமிழில் எழுத வேண்டும் என்று நிர்ப்பந்தித்த போதுதான். அரபு வழிப் பெயர்கள் எப்படி தமிழாக முடியும் என்றுதான் புரியவில்லை. தனித்தமிழ் என்பது பயன்பாட்டு மொழியில் இருந்து 20 நூற்றாண்டுகள் பழமையானது என்பதை விட அது அரசியல் நிறைந்தது. பல்தன்மையை அழித்து உண்டு ஏப்பமிடக்கூடியது. இதே காலப்பகுதியில் எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் ‘விக்கி-தமிழ் தாலிபானியம்’ என்ற கட்டுரை வாசிக்கக் கிடைத்தது. அதிலிருந்து தமிழ் விக்கிமீதான ஆர்வம் குறைந்து மெல்லமெல்ல அதிலிருந்து ஒதுங்க வேண்டியிருந்தது. காரணம் ஒரு குழுவினர் அதனைக் கைப்பற்றி, கையகப்படுத்தி தமது இன, மத, அரசியல் சார்ந்து இயக்குவது தெளிவாகியது. இதற்குப் பின்னால் இருப்போரின் அரசியல், தமிழ் தேசியவாதத்தை ஒத்ததே. மையத்தில் இருக்கும் யாழ் சைவ வேளாள மனம் தமது வசதிப்படி அனைத்தையும் ஒழுங்குபடுத்த நினைப்பதைப் போல. விளிம்பு நிலையில் தோட்டக்காட்டான், பறங்கி, சோனி என்று எல்லோரும் நிறுத்தப்படுவது இங்கு இயல்பானது. எமது இணைய எழுத்து பயிலரங்கத்தில் கலந்து கொண்டோரும் பின்னர் இதைத்தான் சொன்னார்கள். இந்த நடைமுறையையே ‘நூலகம்’ இணையமும் பின்பற்றுவதாகச் சொன்னார்கள். இதிலிரண்டிலும் ஒரே நபர்கள் பங்களிப்பது காரணமாக இருக்கலாம். இப்படி எழுதக்கூடிய ஒவ்வொருத்தரும் ஒதுங்கிக் கொண்டால் நிலைமை எப்படி இருக்கும் என்பதை இலகுவில் ஊகிக்கலாம். இந்தப் பின்னணியில் நின்று உங்களது கட்டுரையைப் படிக்கும் போது சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தனித் தமிழ் கொள்கையை வைத்துக் கொண்டு தமிழ் விக்கியில் எத்தனை சமூகங்களின் பங்களிப்பை எதிர்பார்க்க முடியும்? சைவ மொழியில் எப்படி கிறிஸ்தவ பண்பாட்டை விளக்க முடியும்? தென்னிலங்கை முஸ்லிம்களுக்கு தமிழ் விக்கி மீதான தேவை/பயன்பாடு என்ன? தனித் தமிழ் என்பது விளிம்புநிலை சமூகங்களின் மீதான அதிகாரத்தின் தினிப்பு அல்லாமல் வேறென்ன? இப்படி ஒவ்வொரு சமூகம் சார்ந்தும் கேள்விகளை எழுப்பிக் கொள்ளலாம். எனவே, இந்த லட்சணத்தில் 46,000 கட்டுரைகள் என்பது எனது கணிப்பில் அதிகபட்சம். அனைத்து சமூகங்களினதும் பங்களிப்பில் வளர்ச்சியை நிச்சயப்படுத்தியிருக்கும் ஒரு திட்டத்தில் எப்படி ஒரு வீதத்திற்கும் குறைவானவர்களின் விருப்பை பொதுமைப்படுத்தி அனைவரது பங்களிப்பையும் எதிர்பார்ப்பது? இது பற்றி விரிவாகவே ஜெயமோகனின் தளத்தில் வந்திருப்பதால் நான் அதிகம் கூறவில்லை. http://www.jeyamohan.in/?p=4249 http://www.jeyamohan.in/?p=4292 எனவே, நான் பரிந்துரைப்பது இதுதான். தமிழ் விக்கியோ, நூலகமோ தமிழ் பேசும் சமூகங்கள் அனைத்துக்கும் பொதுவான/பயன்படக்கூடிய ஒன்று /* இம்தாத் அவர்களின் விமர்சனங்கள் */ அல்ல. அது ஒரு சிலரின் நன்மையை மையப்படுத்தியே இயங்குகிறது. ஒவ்வொரு சமூகமும் தங்களுக்கான விக்கிகளை உருவாக்கிக் கொள்வதே சிறந்தது. எதிர்காலத்திற்கும் அதுதான் உதவக்கூடியது. இதற்கான வசதிகளையும் விக்கிப்பீடியாவே அளிக்கிறது. அனைத்து உட்பிரிவினரும் அனைத்து கிளை மொழிகளிலும் தங்களுக்கான விக்கிகளை உருவாக்கலாம். சோனக மொழியிலேயே சோனகர் உருவாக்கலாம். மலையக மக்கள், பறங்கியர், மலாயர் என்று அனைவரும் தங்களுக்கான தனியான இணைய காப்பகங்களை, கலைக் களஞ்சியங்களை உருவாக்கிக் கொள்வதைத்தான் ‘கட்டற்ற’ என்ற சொல் குறித்து நிற்கிறது. அன்புடன், இம்தாத் " --Natkeeran 23:37, 5 பெப்ரவரி 2012 (UTC)

இம்தாத் அவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களுடன் அல்லது விக்கியிலோ உரையாடாமல், விக்கியுடன் சம்பந்தப்படாதவர்களுடனும், இணையத்திலும் உரையாடுவதில் எவ்விதப் பயனும் தரப்போவதில்லை. தாமே ஏதேதோ கற்பனைப் பண்ணிக்கொண்டு எழுதுகிறார். அவரை நேரடியாக விக்கிக்கோ அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்கோ எழுதச் சொல்லுங்கள். மேலே அவர் குறிப்பிட்ட கருத்துகளில் நான் அறிந்த வரையில், விக்கியைப் பற்றி விளங்கிக்கொள்ளாமையே அதிகம் தென்படுகிறது.--Kanags \உரையாடுக 02:26, 6 பெப்ரவரி 2012 (UTC)
//கிரந்தமில்லாமல் எழுதலாம் என்கிற இயக்கம் எந்த அரசியல் அடிப்படையிலும் இன்று இணையத்தில் செயலாற்றவில்லை என்பதை என் ஒரு வருட இணைய இயக்கத்தில் காண்கிறேன்.//--இரவி 14:15, 6 பெப்ரவரி 2012 (UTC)

இம்தாத் என்பவரின் விமர்சனங்கள் பெரும்பாலும் அவரது அறியாமையே காட்டுகின்றன. தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் விக்கியில் குறைவாகவே உள்ளனர். நானும் தென்னிலங்கையைச் சேர்ந்தவன்தான். விஜயராகவன் என்பவர் பயன்படுத்தியுள்ள தமிழ்த் தாலிபான்கள் என்பது போன்ற சொற்கள் பண்பற்ற நடத்தையாகவே நான் காண்கிறேன். அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அவர்கள் இங்கு உரையாட வேண்டும். ஒரு சில வேற்று மொழிப் பெயர்களுக்குக் கிரந்தமகற்றி எழுதுவது எளிதான செயலல்லாவிடினும் ஏனைய எல்லா இடங்களிலும் அப்படி எழுதலாம். அவர்கள் சொல்வது போன்று வடமொழி வழி வந்த சொற்களைப் பயன்படுத்தத்தான் வேண்டுமாயின் நாங்களும் மக்களுக்குப் புரியாத வேற்றுமொழிச் சொற்களைக் கையாண்டு அதற்கும் விதிகளும் விளக்கங்களும் கூறி நியாயப்படுத்தலாம். உதாரணமாக, கதிரை என்பதைக் குறிக்கும் சிங்களச் சொல்லான புட்டுவ என்பதைத் தென்னிலங்கையில் புட்டுவம் என்று ம் விகுதி சேர்த்துத் தமிழ்ப்படுத்தியுள்ளனர். அவ்வாறு பல சொற்களைச் சேர்த்து, பெரும்பாலானோருக்குப் புரியாத ஒன்றை உருவாக்கி இதனை அழித்துவிட வேண்டுமென்று அவர்கள் விரும்புவது போன்று தெரிகிறது.--பாஹிம் 15:39, 6 பெப்ரவரி 2012 (UTC) /* இம்தாத் அவர்களின் விமர்சனங்கள் */

இம்தாத் விக்கியின் உண்மை நிலையை அறியாமல், பொதுவாக பயன்படுத்தப்படும் விமர்சன சட்டகங்களை இங்கு பொருத்தமற்று பொருத்துகிறார். தமிழ் விக்கியில் சமசுகிருத சொற்களை நபர் பெயர்களுக்கும், சமயம், மற்றும் கர்நாடக சங்கீதம் ஆகியவற்றிலும் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளப்பட்டது; இதற்குச் சான்றாக ஆயிரக் கணக்கான கட்டுரைகள் உள்ளன. தனித்தமிழ் விக்கி கொள்கை இல்லை. ஆனால் சமசுகிருத திணிப்பு, இந்து இல்லை ஹிந்து போன்ற நிலைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படாது. நல்ல தமிழ், எளிய தமிழ் கொள்கை உண்டு. "யாழ் சைவ வேளாள மனம்" போன்றவை கற்பனையான நேர்மையற்ற உணமை நிலை அறியாத விமர்சனங்களே. சைவத்தை விட கிறிதவம் பற்றி விரிவாக இருக்கிறது. தமிழ் விக்கி மூன்று பட்டறைகளை இலங்கையில் ஒழுங்கு செய்தது. அந்த மூன்றும் கிழக்கு இலங்கையில் நிகழ்ந்தவை. இரண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்திலும். ஒன்று கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையிலும் நடந்தது. யாழ்ப்பாணத்தில் ஒரே ஓர் அறிமுக நிகழ்வு மட்டுமே நிகழ்ந்தது. தற்சமயம் யாழ்ப்பாணத்தில் இருந்து பங்களிப்பவர்களை விட தென்னிலங்கையில் இருந்து பங்களிப்பவர்கள் அதிகம் எனலாம். ஈழத் தமிழர்கள் தமிழ் விக்கிக்கு சிறப்பாக பங்களித்து வந்துள்ளார்கள், அந்த வகையில் அவர்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் பதிவாகி உள்ளன. யாழ்ப்பாண பேச்சு வழக்கு, யாழ்ப்பாண உணவு வழக்கம் போன்று பல கட்டுரைகள். இது இயல்பாக நடந்தது. அவர் கூறுவது எந்தளவு தவறானவை என்பதை இத் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. தமிழ் விக்கியிலும் ஆங்கிலம் மற்றும் பிற விக்கிகளிலும் பெண்கள் பங்களிப்பு மிகச் சொற்பம். அதனால் தமிழ் விக்கியில் பங்களிப்பவர்கள் ஆண் ஆதிக்கவாதிகள் என்று முடிவுகட்டி விட முடியுமா?. இந்த மாதிரி அபத்தமாவே அவரது விமர்சனங்கள் அமைகின்றன. தமிழ் விக்கியில் சாதி, சமய, பிரதேசவாதம் பேசுபவர்கள் ஒன்றில் தமிழ் விக்கியைப் பற்றி அறியவில்லை. இல்லாவிடின் அவர்களின் நோக்கங்கள் வேறு. --Natkeeran 18:26, 6 பெப்ரவரி 2012 (UTC)
1) விக்கியில் செயல் படாதவர்களைப் பற்றி, நாம் உரையாட வேண்டுமா?. இப்பகுப்பை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். செந்தமிழும் நாப்பழக்கம் என்றே ஆன்றோர் உரைக்கின்றனர்.(எ.கா) காகம் என்ற சொல்லை, ஒலிப்பது போல குறிப்பிட வேண்டுமெனில், காஹம் என்று தான் எழுத வேண்டும்.குரங்கு என்பதில் வரும், கு எழுத்துக்களின் ஒலிகளை நான் எப்படி கிரந்தத்தைப் பயன்படுத்தி எழுதுவது?:ஒலிநயத்தை கேட்டு தான் இன்புற வேண்டும். அதனை கண்ணால் பார்க்க வேண்டும் என்ற முயற்சியே கிரந்த கலப்பு.கிரந்தம் பற்றி, பல தமிழ் முன்னோடிகள் எழுதிய கட்டுரைகளை, விக்கியில் இணைப்பதே நல்ல நடைமுறை. பாவாணர் கூறியவை, மறைமலை அடிகள் கூறியவை,.. அதனால் வளர்முக நிலையிலிருக்கும் நமக்கு, அவப்பெயர் ஏற்படாதென எண்ணுகிறேன்.அவர்களுக்கும் நாமிடும் பதிலுரையும் அதுவே.
2) மற்றொன்று சாதரண ஒரு பயன்பாட்டளரிடம், கிரந்த ஆளுமை இருக்கிறது. ஆங்கில மொழி கலப்பு இருக்கிறது. அதனை குறைக்க நாமென்ன செய்யப்போகிறோம்?விக்கி அறிஞர்களுக்கா?கற்பவருக்கா?
3) ராஜஸ்தான்,பாலாஜி, ஜாவா நிரலாக்க மொழி,நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்,ஹாங்காங் போன்ற கட்டுரைகளை விரிவு படுத்தாமல், தலைப்பை மாற்ற, பக்கம் பக்கமாக எழுதுதலில் எனக்கு உடன்பாடில்லை. அனைத்து விக்கியின், மாதங்களில் கிரந்தத்தை நீக்க முயற்சித்தவர், கடைசிவரை அனைத்து இடங்களிலும், மாதங்களில் கிரந்தத்தை நீக்காமல் அப்படியே விட்டு விட்டு போனதால், பலரின் நேரம் தான் சூறையாடப்பட்டது. அதனால் விக்சனரியிலும் பல தொந்தரவுகள் ஏற்பட்டது.கிரந்த நீக்கலில் ஆர்வம் உள்ளவர், இப்பகுப்பை வளர்த்தெடுக்கலாமே? பாரதியின் பல கட்டுரைகளில், கிரந்தமுள்ள சொற்கள் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் அதன் பொருள் புரிய, இப்பகுப்பின் வளர்ச்சி அவசியம் தானே? தோள் கொடுப்பீர்கள் தோழர்களே! வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
தகவலுழவன், நீங்கள் கருத்தையும் தாண்டி பெயர் குறிப்பிடாமல் இவ்வாறு விமர்சித்துள்ளது அழகல்ல. (உங்கள் கருத்து விடுபாட்டுணர்வைக் கட்டுப்படுத்துவதாகக் கொள்ள வேண்டாம், சொல்லும் முறை குறித்து என் கருத்தைப் பதிகிறேன், அவ்வளவே.) தவிர, தற்போது கட்டுரைப் பெயர்வெளியில் ஒருவர் அதிகமாகப் பங்களிக்காவிட்டால் உடனே கருத்துக் கூறக்கூட உரிமையில்லை என்பது போலப் பேசுவது ஏற்கத்தக்கதல்ல. ஒருவர் விக்கியில் பங்களிப்பைப் பற்றி எதுவுமே தெரியாமல் வேண்டுமென்றே இடையூறு செய்யும் நோக்கில் (trolling) பேச்சுப்பக்கத்தில் பதிந்துகொண்டிருந்தால் முதலில் சற்றுப் பங்களித்துப் பாருங்கள். கட்டுரைகளைத் திருத்தும்போது உணர்வீர்கள் எனச் சொல்வது பரவாயில்லை. மற்றபடி ஏற்கனவே ஆயிரக்கணக்கான திருத்தங்களைச் செய்தவரை இப்போது பங்களிக்காமல் கருத்து மட்டும் சொல்லாதீர்கள் எனச் சொல்ல முடியாது. ஆயிரக்கணக்கில் கூட வேண்டாம், தமிழ் விக்கி முறைகளை அறியும் அளவுக்குப் பங்களித்திருந்தால் கூடப் போதுமானது. -- சுந்தர் \பேச்சு 13:35, 9 பெப்ரவரி 2012 (UTC)

என் மறுமொழி - செல்வா[தொகு]

 • திரு. இம்தாத்தின் மடலை எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம், எனக்கும் நற்கீரனுக்கும் அனுப்பியிருந்தார். அது தனிமடல் பரிமாற்றம், அங்கே திரு இம்தாத் எழுதியிருந்ததை இங்குப் பகிர்வுரிமத்தின் கீழ் இயங்கும் தமிழ் விக்கிப்பீடியாவில் நற்கீரன் இட்டது உரிமை மீறல் என நினைக்கின்றேன் (திரு. இம்ப்தாத் இங்கு இந்த உரிமத்தின் கீழ் இட உரிமை அளித்தாரா என்பது தெரியாது). உரிமைமீறல் என்னும் இக்கருத்தைச் சில நாட்களுக்கு முன்னரே நற்கீரனுக்கும் எழுதியிருந்தேன். திரு. இம்தாத்தின் கருத்தை தக்கவாறு மறுத்தும், விளக்கங்கள் சேர்த்தும், அப்பொழுதே எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கு அனுப்பி இருந்தேன். அவரும் "அருமையான பதில். இதை அப்படியே இம்தாத்துக்கு அனுப்பிவைப்பேன். கடிதம் எழுதியதற்கு நன்றி." என்றும் எனக்கு மடலும் அனுப்பி இருந்தார் (இது நற்கீரனுக்கும் தெரியும்).
 • கனகு சிறீதரனும், பாஃகிமும் கூறிய கருத்துகளுடன் ஒப்புகின்றேன். த.உழவன் எழுதியதற்குப் பவுல் கீழே விளக்கமாக உரைத்திருக்கின்றார். ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் த.உழவனுக்குக் கூறிக்கொள்ள விழைகிறேன். த.உழவன் கூறும் கூற்று "அனைத்து விக்கியின், மாதங்களில் கிரந்தத்தை நீக்க முயற்சித்தவர், கடைசிவரை அனைத்து இடங்களிலும், மாதங்களில் கிரந்தத்தை நீக்காமல் அப்படியே விட்டு விட்டு போனதால், பலரின் நேரம் தான் சூறையாடப்பட்டது." (சாய்வெழுத்தில் காட்டியது நான்). அவர் குறிப்பிடுவது என்னைத்தான். சூறையாடுதல் என்பது எவ்வளவு கடுமையான சொல்! இது பண்பான உரையாடலுக்கு வழி வகுக்குமா? இங்கு ஆலமரத்தில் முறைப்படி கலந்துரையாடி முடிவுசெய்தவாறே தமிழ் விக்கிப்பீடியாவில் மாதங்கள் பெயர் தமிழ்முறைப்படி மாற்றி அமைக்கப்பட்டது. (சூலை 31, 2010 இல் இதற்கான காரணங்களை முன்மொழிந்து, தொடர்ந்து நடந்த உரையாடலையும் ஆலமரத்தடி தொகுப்பு 38 இல் காணலாம். இங்கு எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை! ஆனால், ஏறத்தாழ ஓராண்டு கழித்து ஏப்பிரல் 27, 2011 இல் விக்சனரியிலும் இதே கேள்வி எழுந்ததாலோ அல்லது சீர்மை கருதியோ, நான் டிரான்சிலேட்டு விக்கியில் மாதங்களின் பெயர்களை மாற்றியமைத்தேன். ஆனால் திடீர் என்று சூன் 2, 2011 இல் மீடியா விக்கியில் ஏற்பட்ட ஏதோ பொருந்தாமையால் பிழைகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் நான் மாதங்களின் பெயரை மாற்றியது பெரும் குற்றம் என்னும் குற்றச்சாட்டு ஒருசிறிதும் முறையானதல்ல (அதுவும் பலரின் நேரத்தை நான் சூறையாடினேன் என்னும் கடும் குற்றச்சாட்டு). மாற்றங்கள் சரிவர பிற இடங்களில் நிகழாதது (அதுவும் அப்படி நிகழவில்லை என்று ஒரு மாதம் கழித்துத் தெரியவந்தது) ஏதோ மீடியா விக்கியின் உட்குழப்பங்களால். என்னால் அல்ல. சூன் 2, 2011 இல், சூர்யா கூறினார் (ஆலமரத்தடி தொகுப்பு 56 இல் உள்ளது), "TranslateWiki-யில் செல்வா "தமிழ் விக்கிப்பீடியாவுடன் சீர்மை" எனும் காரணம்பற்றி மாதங்களின் பெயர்களைச் சீர்மைப் படுத்தியுள்ளார்". "அவற்றைத் தற்காலிகமாக மீளமைத்துள்ளேன்" என்றும் சூர்யா கூறினார். மீளமைத்ததால் எல்லாம் சரியாகியதா, ஏன் அப்படியான பிழைகள் ஏற்பட்டன (நிரலில் குழப்பமா, அல்லது ஏதேனும் நிரல்களுக்கு இடையே உள்ள தொடர்புகளில் நேர்ந்த பிழையா) என்று தெரியாது. கட்டாயம் பலருடைய நேரத்தைச் சூறையாட எதுவும் செய்யவில்லை. நான் மாற்றியதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. பிற காரணங்களால் குழப்பம் ஏற்பட்டதாகத் தெரிவித்தவுடன் மீளமைத்ததால் தீர்ந்திருந்தாலும் அல்லது தீராவிட்டாலும் அது என் பிழை என்று கூறுவது பொருந்தாது. ஏனெனில் அப்படி மேலே நான் செய்தது என்ன என்று சுட்டிகளோடு காட்டியுள்ளேன். யாரும் பார்க்கலாம்.
 • கிரந்தத்தின் பயன்பாடு பற்றி நிறைய கூறலாம். இந்தியாவில் 80% மக்கள் சிற்றூர்களிலும், கிராமங்களிலும் வாழ்கின்றார்கள். நகரங்களிலும், எளிய மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அவர்கள் இசுக்கூல் என்று சொன்னால் இழிவாக நினைக்கிறார்கள் சிலர். ஸ்கூல் என்றுதான் எழுதவேண்டும் என்கிறார்கள் (பள்ளி கூட இல்லை!). ஆங்கிலம் படித்தவர்களாகவே இருந்தாலும் ஸ்கூல் என்று முன்னே உயிரொலி இல்லாமல் (மொழியியலில் இதனை prosthetic vowel, துணை உயிரொலி, என்பர்) சொல்லட்டுமே பார்க்கலாம். இசுக்கூல் என்பதில் வரும் இகரத்தின் அல்லது முன் நிற்கும் உயிரொலியின் அளவு சற்று சிறியதாகவோ அல்லது சற்று நீட்டமானதாகவோ இருக்கலாமே ஒழிய, முதலிலோ முடிவிலோ ஸ் என்று துணையொலி இல்லாமல் ஒலிப்பது இயலாது (அது தமிழில் கிடையவும் கிடையாது!). தமிழ் முறையைப் பின்பற்றக் கூடாது என்று இங்கு கூறவருவதாயின், தக்கக் காரணங்களுடன் நான் கருத்தாட அணியம். கூடியமட்டிலும் கிரந்தம் தவிர்த்து எழுதுதல் என்பது இங்கு இருப்பில் இருக்கும் பரிந்துரை. ஆகவே தக்கக் காரணங்கள் தந்து கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் முறைப்படி உரையாடி மாற்றுவது எவ்விதத்திலும் பிழையானதல்ல. இன்ஜினியர் (இஞ்சினியர், எஞ்சினியர் என்று கூட அல்ல!) என்றுதான் எழுத வேண்டும் என்றும், தமிழில் இயல்பாக இயங்காத மெய்யொலிக்கூட்டங்களை வலிந்து ஏற்றுத்தான் ஆகவேண்டும், திணிக்கத்தான் செய்வோம் என்று வாதிடுவோர் வாருங்கள், ஒரு தனிப்பக்கத்தில் பண்போடு, கருத்தை முன் வைத்து, உரையாடுவோம் (அறிவடிப்படையாகவும், அற அடிப்படையாகவும் நேர்மையாகவும் திறந்த மனத்துடன் உரையாடினால் நல்முடிவுகளை எட்டலாம். தனிக் கருத்துகளோடு தனிக்கருத்துகள் "மோதுவதால்" எப்பயனும் இல்லை. கிரந்தத்தை "நீக்குவதை"ச் சிலர் தவறாக நினைப்பது போலவே கிரந்தத்தைத் தமிழில் "திணிப்பதும்" குற்றமாக வேறுசிலரும் நினைக்கலாம். இவற்றுக்கு இடையே நிறைய இணக்கமான முடிவுகளும் உள்ளன. பாஃகிம் கூறியது மிகவும் சரியானதாகவே நான் கருதுகின்றேன்.
 • த.உழவனுக்கு வேண்டுகோள். நீங்கள் ஒரு நிருவாகி, பண்புடன் உண்மையை முன் வைத்து உரையாடுங்கள். நேற்று இணைந்த பயனராக இருப்பினும் முதலில் இருந்தே இருக்கும் பயனரே ஆயினும், அதிகாரி ஆயினும் நிருவாகி ஆயினும் யாவரும் பண்போடு உரையாடுதல் வேண்டும். பிறரை முறையில்லாமல் கடுஞ்சொற்களால் தாக்கிப் பேசுவதால் நற்சூழல் கெடுமே அன்றி நீங்கள் கூறும் கருத்துகளுக்கு வலிமை ஏதும் சேர்க்காது.

--செல்வா 12:50, 9 பெப்ரவரி 2012 (UTC)

இம்தாதின் விமரிசனத்தைப் பகிர்வதற்கான உரிமை குறித்து நற்கீரன் தெளிவுபடுத்திய பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். இது குறித்து முன் ஒப்புதல் இல்லை என்றால் அவரது பெயரைக் குறிப்பிடாமல் இந்த விமரிசனத்தை இங்கு பகிர்வதில் தடை இருப்பதாகத் தோன்றவில்லை. முன்பு பெயருடன் குறிப்பிட்டதற்கு வருத்தமும் தெரிவிக்கலாம்.
கிரந்தம் குறித்து தமிழ் விக்கிப்பீடியாவின் நிலை என்ன என்று தகுந்த, தெளிவான வழிகாட்டை வகுக்க வேண்டியது அவசியம். இலங்கை - தமிழ்நாடு சொல் வழக்குகள் போல் அவரவர் வழக்கில் எழுத விடுங்கள் என்பது இதில் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வாக இல்லை. ஒருவர் எழுதியதை மாற்றாதே என்பது விக்கி நடைமுறைக்கு உட்பட்டதாகவும் இல்லை. எனினும், தற்காலிகத் தீர்வு இது தான். ஆனால், ஒரே மாதத்தில் தொடர்ந்து பல கிரந்த உரையாடல்கள் வருவது ஒரு சில சிறந்த பங்களிப்பாளர்களையேனும் அயரச் செய்வதாக உணர்கிறேன். எனவே, கிரந்தம் தொடர்பான கொள்கை உரையாடலைக் குறுந்தட்டுத் திட்டம் முடிந்த பிறகோ சூலை மாதத்திலோ செய்யலாம் என்று வேண்டுகிறேன்.
ஒரு கருத்தை / கொள்கையை முன் வைத்து உரையாடும் போது அதன் அடிப்படையிலேயே அணுகுவது சிறப்பாக இருக்கும். யார் சொல்கிறார், அவரது செயல்பாடுகள் அடிப்படையில் கருத்தைப் புறந்தள்ளுவது நன்று அன்று. கிரந்தம் குறித்த உரையாடல்கள் வரும் போதெல்லாம் பெயர் சொல்லாம் பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அல்லது, உங்களை முன் வைத்து குற்றம் சாட்டப்படுகிறது. இயன்ற வரை கிரந்தம் தவிர்க்கலாம் என்பதைப் பல பயனர்களும் ஏற்றுக் கொள்வதால் இரண்டுமே தவறான அணுகுமுறை. நீங்கள் மேலே கூறியுள்ள விளக்கம், உங்களின் பங்களிப்பு வரலாறு அடிப்படையில் உங்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டும் ஏற்கக் கூடியது அன்று.
விக்கி ஒரு கூட்டு முயற்சி. மாற்றங்களைப் பொதுவாக முன்வைத்து உரையாடிச் செயற்படுத்தும் போது, அதனைச் செய்து முடிப்பதற்கான பொறுப்பு அனைவரையும் சாரும். விக்கியில் அனைவரும் தன்னார்வலர்களே. பல காரணங்களால் ஒருவர் எடுத்த பணியை முடிக்காமல் செல்லலாம். அல்லது, அவர் நல்லெண்ணத்தில் செய்த பணிகள் புறச் சூழ்நிலைகளால் பிறகு தவறாக இருக்கலாம். எனினும், அவரைத் தனிப்படச் சாடாமல் மற்றவர்கள் பொறுப்பேற்பதே விக்கி நடைமுறை. --இரவி 13:38, 9 பெப்ரவரி 2012 (UTC)

இரவி, அயர்ச்சி எனக்கும் ஏற்படுகின்றது, அதனால் என் நேரத்தை வீணாக்குகின்றீர்கள் என்றோ "சூறையாடுகின்றீர்கள்" என்றோ யாரையும் சொல்லவில்லை. எத்தனையோ பணியழுத்தங்களுக்கும் நெருக்கடிகளுக்கும், இழுப்புகளுக்கும் இடையேதான் நானும் என்னால் இயன்ற அளவு இங்குப் பங்களிக்கின்றேன். இப்பொழுது உரையாடவேண்டும் என்று சொல்லவில்லை, ஆனால் இது கிரந்தச் சிக்கல் மட்டும் அன்று. ஒருசில எடுத்துக்காட்டுகள் தருகின்றேன். மிகச்சிறந்த முறையிலே பணியாற்றும் மணியன், Booradleyp ஆகிய இரண்டுபேர் அண்மையில் உருவாக்கிய கட்டுரைகளின் தலைப்புகள் முறையே கிரீட், பிட்டாட் தேற்றம். இங்கே எந்தவிதக் கிரந்தச் சிக்கலும் இல்லை. இவற்றை கிரீட்டு என்றும் பிட்டாட்டுத் தேற்றம் என்றும் இன்ன இன்ன காரணங்களுக்காக நான் மாற்ற வேண்டும் என்று எண்ணினால், "be bold" என்று விக்கிக் கொள்கை இருந்தபொழுதும், கட்டுரைப் பேச்சுப் பக்கத்தில் கருத்துக் கேட்டு மாற்ற வேண்டலாம் அல்லவா? அறிவியல் அணுகுமுறைப்படியும், மொழியியலின் படியும் ட் என்று நிறுத்தவே முடியாது (அவ்வொலி வெளி வராது), தமிழ் முறைப்படியும் அப்படி வல்லின ஒற்றில் முடிதல் கூடாது. மணியன் கீழ்க்காணுமாறு கட்டாயம் சொல்லவேமாட்டார் எனினும், 'கிரீட் என்றுதான் இருக்கவேண்டும், எல்லோருக்கும் அப்பொழுதான் புரியும், கிரீட்டு என்று எழுத எனக்கு உடன்பாடு இல்லை' என்று சொன்னால் எப்படி அணுகுவது? கிரீட்டு என்னும் தீவின் பெயர் கிரீத்தி என்பதாகும், வேண்டுமென்றால் Κρήτη என்பதன் ஒலிப்பைக் கேட்டுப் பாருங்கள் (இடாய்ச்சு போன்ற பல மொழிகளில் Kreta என்பது போலவே எழுதுகிறார்கள், இந்தியில்கூட क्रीत (க்ரீத்) என்று தகரம் இட்டு எழுதுகிறார்கள்). ஆங்கிலத்தைப் பின்பற்றியே எழுதுவதே ஆயினும் ஏன் கிரீட்டு என்று எழுதுதல் கூடாது. அறிந்தவர்கள் முறையாகக் கருத்துகளை எடுத்துச் சொல்லுதல் தவறல்லவே (இங்கே கிரந்தச் சிக்கல் ஏதும் இல்லை என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்). தமிழ் முறையை மதிக்கக்கூடாது என்னும் கொள்கை விக்கிப்பீடியாவில் ஏதும் இல்லையே! செய்வன திருந்தச்செய்யலாமே! மேலும் சீர்மை, ஒழுக்கம் (எழுத்து, ஆக்கம் பற்றிக்கூறுகின்றேன்) முதலியவற்றைத் தமிழ் உலகில் நாம் இன்னும் போற்றி வளர்த்தெடுக்க வேண்டும். பாட நூல்களாகட்டும், ஊடகங்கள் ஆகட்டும் போதிய சீர்மை, ஒழுக்கம், பேணுவதில்லை, இங்காவது நாம் சற்று திருந்தச் செய்யலாமே. இவை நமக்குப் பெருமையே தரும். இவற்றைப் பற்றி விரிவாக இப்போது பேச வேண்டும் என்பது என் நோக்கம் அன்று. ஆனால் இங்கு இதனைக் குறிப்பது முக்கியம் எனக் கருதுகின்றேன். --செல்வா 17:25, 9 பெப்ரவரி 2012 (UTC)

 • கிரேத்து - Crete: செல்வா, மேலே நடைபெறும் உரையாடலில் "கிரீட்" பற்றிக் குறிப்பிட்டீர்கள். அச்சொல் கிறித்தவ விவிலியமான புதிய ஏற்பாட்டில் ஆறு இடங்களிலாவது வருகிறது. அதன் தமிழ்ப் பெயர்ப்பு அங்கே "கிரேத்து" என்று நல்ல தமிழ் வடிவத்தில் உள்ளது. எ.டு.: திருத்தூதர் பணிகள் 2:11; தீத்து 1:12. எனவே, "கிரேத்து" என்பதை நீங்கள் குறிப்பிடும் கட்டுரைக்கு வழிமாற்றாகக் கொடுக்கலாம்.--பவுல்-Paul 04:03, 10 பெப்ரவரி 2012 (UTC)
மிக்க நன்றி பவுல்! --செல்வா 04:06, 10 பெப்ரவரி 2012 (UTC)
மேலே "பிட்டோட்டுத் தேற்றம்" என்பது பீத்தோவின் தேற்றம் அல்லது பீட்டோவின் தேற்றம் என்று கூற வேண்டியிருக்கும். ஏனெனில் Henri Pitot (ஏன்றி பீத்தோ) என்பவர் பிரான்சிய நாட்டவர். --செல்வா 04:10, 10 பெப்ரவரி 2012 (UTC)
செல்வா, அனைவரும் பிற கடமைகள், நேரச் சிக்கலுக்கு இடையே தான் பங்களிக்கிறோம். அயர்ச்சி இரு புறமும் தான். எனவே தான், இதனை முறையாகத் திறம்பட அணுக நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்றேன். கிரந்தச் சிக்கல் என்பது மொழிச் சீர்மை பேணுவதின் ஒரு பகுதி தான். எனவே தான், கிரந்தப் பிரச்சினை என்பதை விட எந்த ஒரு பிரச்சினையையும் சிறப்பாகத் தீர்ப்பதற்கான அணுகுமுறைகளைச் சிந்திக்க வேண்டும் என்று முன்பு குறிப்பிட்டிருந்தேன். ஒரு குறிப்புக்கு: அண்மையில் முதற்பக்கத்தில் முகமது நசீட் என்று ஒரு கட்டுரைக்கான இணைப்பு இருந்தது. ஆனால், ஆங்கிலத்தில் அவரது பெயர் Mohammed Nasheed என்று இருந்தது. இதனை கிரந்தம் விலக்காமல் முகமது நஷீட் என்று எழுதினாலும் nasheet என்ற ஒலி தான் வரும். Rasheed என்ற பெயர் தமிழ்ச் சூழலில் நன்கு அறிமுகமான பெயர். இதனை ரசீது என்று எழுதுதே வழக்கம். இதே அணுகுமுறையில் பேச்சுப் பக்கத்தில் கருத்து கேட்காமலேயே நசீது என்று மாற்றினேன். இது விக்கிப்பீடியா பரிந்துரைக்கும் துணிச்சலான செயற்பாடு என்பதை விட இது போன்ற விசயங்களுக்கு உரையாடிக் கொண்டிருப்பது தமிழ் விக்கிப்பீடியா போன்ற சிறிய சமூகத்தில் திறனான செயற்பாடாக இருக்காது. இந்த இடத்தில் உரையாடிவிட்டு மாற்றுவதை விட்டு, மாற்றி விட்டு மறுப்பு வந்தால் உரையாடுவது திறன் மிக்கது. கிரந்தமல்லா இத்தகைய மாற்றங்களில் பலருக்கும் மாற்றுக் கருத்து இருப்பதில்லை. ஆனால், இதே அணுகுமுறையில் கிரந்தத்தை அணுகினால் சிக்கல் ஆகிறது. எனவே தான், தமிழ்ச் சூழலில் கிரந்தமா இல்லையா என்பது மொழியியல் அணுகுமுறையையும் தாண்டிய ஒரு வகை அடையாளச் சிக்கலாக இருக்கிறது என்று முன்பு குறிப்பிட்டிருந்தேன்.--இரவி 17:48, 9 பெப்ரவரி 2012 (UTC)


இம்தாத் அவர்களின் விமர்சனங்களை விக்கியில் பகிர்ந்து, குறிப்பாக இஸ்லாம் இசுலாம் வேறுபாடு குறித்து உரையாடல்களைப் பகிர்வதாக அ. முத்துலிங்கத்துக்கு கூறி இருந்தேன். இது அவர் வலைத்தளத்துக்கு வந்த கருத்துரை எனவே அவருடன் அனுமதியுடன்/வேண்டுகோளுக்கு இணங்கவே இங்கு பதிந்தேன். இம்தாத்தின் விமர்சங்களில் தமிழ் விக்கியின் உண்மை நிலையை அவர் உணரவில்லை என்பதை உணர்ந்த்துகின்றன, ஆனால் அவர் பண்பாகவே கருத்தை முன்வைத்துள்ளார். விமர்சனங்களை நேரெ எதிர்நோக்க வேண்டும் என்று கருதியே இங்கு இட்டேன். --Natkeeran 01:34, 10 பெப்ரவரி 2012 (UTC)
சில தகவல்களை தெளிவு படுத்த விரும்புகிறேன்
1) மாதப் பெயர்களில் கிரந்தம் நீக்கியதாலும், டிசம்பர்->திசம்பர், மார்ச்->மார்ச்சு என்று மாறியதாலும்
//இங்கு எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை!// என்பது தவறு. தமிழ் விக்கிப்பீடியாவில் மீடியாவிக்கி மாறிகளில் மாதப் பெயர்களை செப்டம்பர் 2010 இல் மாற்றினீர்கள். ஆனால் அதுவரை இருந்த மாத, தேதிக் கட்டுரைகளை முழுமையாக நகர்த்தவில்லை / வழிமாற்றுகளை ஏற்படுத்தவில்லை. சில நாட்களுக்கு மட்டும் வழிமாற்றுகள் உருவாக்கினீர்கள் பெரும்பான்மையானவற்றுக்குச் செய்யவில்லை. இதனால் முதல் பக்கத்தின் ”இன்றைய நாளில்” பகுதி இணைப்புகள் பெரும்பான்மை முறிந்தன. தகவல்பெட்டியில் பயன்படும் தேதி வார்ப்புருக்களும் முறிந்தன. இந்த பாதிப்பு அந்த மாதங்கள் அடுத்து வரும் வரை வெளித்தெரியாது அல்லத் குறிப்பிட்ட கட்டுரையைக் காணும் வரை தெரியாது. சில மாதங்கள் கழித்து நானும் சிறீதரனும் வழிமாற்றுகள் உருவாக்கி இதைச் செய்து முடித்தோம். (சுமார் 200 வழிமாற்றுகள் தேவைப்பட்டன).
2) விக்கிப்பீடியா ஒரு திட்டம் மட்டும். டிராஸ்லேட் விக்கி அனைத்து மீடியாவிக்கி இணையதளங்குக்கும் பொதுவானது (விக்கித்திட்டங்கள் மட்டுமல்ல) டிரான்ஸ்லேட் விக்கியில் மாதங்களை மாற்றியதால் என்ன சிக்கல் என்று விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு56 பக்கத்தின் கனக்ஸ் தெளிவாகக் கூறிவிட்டார். விக்கி செய்திகளில் சுமார் 700 இணைப்புகள் முறிந்து போயின. அனைத்துக்கும் வழிமாற்றுக்கள் உருவாக்க வேண்டியிருந்தது. மாதப்பெயர்களில் உள்ள பகுப்புகளும், தலைப்பு கொண்டிருந்த கட்டுரைகளும் “ஜனவரி”, “டிசம்பர்” என்றிருந்தன. மீடியாவிக்கி மாறிகள் “சனவரி”, “திசம்பர்” என மாறியதால், மாறிகள் பயன்படும் அனைத்து இடங்களிலும் இணைப்புகள் முறிந்தன. விக்கிசெய்திகளில் இப்பயன்பாடு அதிகமென்பதால். கடந்த இரண்டு ஆண்டுகளாக விக்கிசெய்தியில் எனது பங்களிப்புகள் அனைத்தும் வீனாகி விடும் வாய்ப்பு உள்ளது. விக்கிசெய்தியைக் கைவிட வேண்டியும் ஏற்படலாம். என்று கனக்ஸ் சொல்லும் அளவுக்கு சிக்கல் ஏற்பட்டது. அன்று நானும் சூரியாவும் தற்செயலாக ஒரே நேரத்தில் விக்கியில் இருந்ததால் தானியங்கி கொண்டு முறிந்தவற்றை வழிமாற்றுப்படுத்தினோம். எனக்கும் சூரியாவுக்கும் ஒரு நாள் இரவு முழுவதும் இதைச் செய்து உறுதிபடுத்திக் கண்காணிப்பதில் கழிந்தது. அடுத்த டிரான்ஸ்லேட்விக்கி மாற்றம் வரும் வரை விழிப்புடன் காத்திருந்து உறுதிபடுத்திக் கொண்டோம்.
3) விக்கிசெய்திகளில் ஏற்பட்ட பாதிப்பைக் சிறீதரன் சுட்டியதால் கணிக்க முடிந்தது. ஆனால் விக்சனரியிலும் பிற திட்டங்களிலும் என்ன ஏற்பட்டிருக்கும் என்று அவசரமாக அன்று விக்கி செய்திகளில் மாற்றிக் கொண்டிருந்த போது கவனிக்க இயலவில்லை. இரு மாதங்களின் பெயர்கள் விட்டுப் போயின. அவை அந்த மாத காலத்தில் விக்சனரியில் பாதிப்பு ஏற்படுத்தின. இன்று வரை மாத மாறிகளைப் பயன்படுத்தும் போது இரு முறைப் பெயர்களுக்கும் வழிமாற்று கொடுக்கச் சொல்லி அனைவரையும் கேட்டுக் கொண்டு வருகிறோம் - ஏனெனில் பாதிப்பு தீர்ந்து விட்டது என்று முழுமையாகத் தெரியாததால்.
மாதங்களின் பெயரை மாற்றுவதால், கிரந்தம் அகற்றுவதால் ஏற்கனவே உள்ள பக்கங்களில் பாதிப்பு ஏற்படுமா என்று சற்று யோசித்திருக்க வேண்டும். அதைச் செய்யாததால் ஏற்பட்ட குழுப்பங்களே இவை. இவை நிரல் பிழையன்று, மீடியாவிக்கி பொருந்தாமைப் பிழையுமன்று. ஒரு கட்டுரையை நகர்த்தும் போது இணைப்புகள் முறியாமல் இருக்கும்படி செய்யவேண்டும். மாதப் பெயர்களில் ஆறேழை மாற்றும் போது எவ்வளவு இடத்தில் எவ்வளவு திட்டங்களில் பாதிப்பு ஏற்படுமென்று எண்ணிப்பார்க்கவில்லை. இது பெரிய மாற்றம். சிறிய மாற்றமல்ல. சிறீதரன் மாற்றத்தை நிறுத்துங்கள் பெரும் பாதிப்பு உள்ளது என்று சொன்ன பிறகும் மாற்றங்களால் என்ன பாதிப்பு என்பதை நீங்கள் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. அந்த உரையாடலில் நீங்கள் அதற்குப் பின்னர் பங்கேற்கவும் இல்லை.
இந்த மாத மாற்றத்தால் இன்று வரை பாதிப்பு எங்கு என்று நேரத்தை செலவழித்து தேடிப் பார்த்து வருகிறோம். இது சூறையாடல் என்று நான் வர்ணிக்கவில்லை. ஆனால் நீங்கள் செய்ததால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய நான் உட்பட பலரது நேரமும் உழைப்பும் அதிக அளவில் செலவாகியுள்ளது உண்மை. விக்கியில் அதுவும் அப்படி நிகழவில்லை என்று ஒரு மாதம் கழித்துத் தெரியவந்தது என்று சொல்கிறீர்கள். இது நான், சூர்யா, சிறீதரன், த. உழவன் பட பலரும் அந்த பாதிப்பைப் போக்க உழைத்ததால் தான். செய்யாமல் அப்படியே விட்டிருந்தோமெனில் இன்று உடைந்த இணைப்புகளும் குழப்பங்களும் எவ்வளவு இருந்திருக்கும் என்று வெளிப்படையாகத் தெரிந்திருக்கும்.
நான் மாற்றியதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. பிற காரணங்களால் குழப்பம் ஏற்பட்டதாகத் தெரிவித்தவுடன் மீளமைத்ததால் தீர்ந்திருந்தாலும் அல்லது தீராவிட்டாலும் அது என் பிழை என்று கூறுவது பொருந்தாது.
இது பிற காரணங்களால் குழப்பமில்லை. இது பாதிப்புகளை சரியாக அளவிடாமல் /முழுமையாக மாற்றங்கள் செய்யாமல், செய்த மாதபெயர் மாற்றத்தால் ஏற்பட்ட குழப்பமே. ஒருவர் செய்யும் மாற்றங்களின் பாதிப்பை/பிழைகளைப் பிறர் சரிசெய்வது விக்கி நடைமுறை. ஆனால் மாற்றத்தின் பாதிப்பு சுட்டிக்காட்டப்பின்பு, குறைந்த பட்சம் ஏற்றுக் கொள்ளவாவது வேண்டும். நமது செயல்களின் விளைவுகளுக்குப் பொறுப்பேற்பது, குறைந்த படசம் நாம் செய்தவனற்றால் விளைந்த பாதிப்பு சுட்டிக்காட்டப்பட்டவுடன் ஏற்றுக் கொள்வது விக்கியில் தேவை. பாதிப்பு உள்ளது என்று தெரிந்த பின்பும் பின்பும் என் பிழையன்று, நான் செய்தது தவறன்று என்று சொல்லி வந்தால், வருங்காலத்தில் இப்பிழைகள் மீண்டும் நிகழும்.
இதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் இஷ்டம். இதற்கு மேல் இது நீங்கள் செய்ததால் விளைந்தது என்பதை வாதிட்டு நிறுவ நான் விரும்பவில்லை. எனக்கு நேரமுமில்லை. இனி வரும் காலங்களில், சீர்மை வேண்டும், பெயர்களில் கிரந்தம் கூடாதென்று கருதினால், அதற்காக முறையாகத் திட்டமிட்டு அனைவரிடமும் பாதிப்புகள் ஏற்படுகின்றனவா என்று கண்காணிக்கச் சொல்லி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுங்கள். மீடியாவிக்கி மாறிகளில் மாற்றினால் நீங்களே தொடர்ந்து கண்காணித்து செய்ய வேண்டியனவை அனைத்தையும் செய்து முடியுங்கள். அல்லது பிறரது உதவியுடன் செய்து முடியுங்கள். டிரான்ஸ்லேட் விக்கியில் மாற்றினால், அனைத்து விக்கித் திட்டங்களிலும், பிற தளங்களுக்கும் ஏற்படக் கூடிய பாதிப்புகளை அளவிடுங்கள். அத்திட்டங்களில் அறிவிப்பிடுங்கள். மாற்றியபின்னர் அவை எப்போது விக்கித்திட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என பொறுத்திருந்து பாருங்கள். பாதிப்பு ஏற்படுகிறதா என்று ஆராயுங்கள். அப்படி ஏற்பட்டால் அதற்கான தீர்வுகளைச் செய்யுங்கள், அல்லது செய்பவர்களுக்கு உதவுங்கள்.
இவ்வுரையாடலில் இதுவே எனது முதலும் இறுதியுமான பங்களிப்பு. மீண்டும் உரையாடப்போவதில்லை --சோடாபாட்டில்உரையாடுக 07:28, 10 பெப்ரவரி 2012 (UTC)
//இது பாதிப்புகளை சரியாக அளவிடாமல் /முழுமையாக மாற்றங்கள் செய்யாமல், செய்த மாதபெயர் மாற்றத்தால் ஏற்பட்ட குழப்பமே// //இதற்கு மேல் இது நீங்கள் செய்ததால் விளைந்தது என்பதை வாதிட்டு நிறுவ நான் விரும்பவில்லை. //
செல்வா, மாதங்களின் சீர்மை குறித்த தனது முயற்சியை முன்கூட்டியே ஆலமரத்தடியில் கருத்து வேண்டி ஒப்பதல் பெற்றே செய்தார். அப்போது இத்தகைய பிரச்சினைகள் வரும் என்று யாராவது சுட்டிக் காட்டினோமா? அப்படி சுட்டிக்காட்டாத பட்சத்தில் பின் வரும் விளைவுகளுக்கு விக்கி சமூகம் மொத்தமுமே பொறுப்பு. எனவே, இத்தகைய சூழ்நிலையில் தொடர்ந்து ஒருவரைக் குறை காண்பதும், தொடர்பில்லாத உரையாடல்களில் இவ்விசயத்தைச் சுட்டிக் காட்டுவதும் வளர்முகச் செயற்பாடாக இருக்காது. நன்றி--இரவி 09:50, 10 பெப்ரவரி 2012 (UTC)
மாதங்களை மாற்றினால் சிக்கல்கள் வரும் என்று அவருக்கு தெரியாததல்ல. விக்கிப்பீடியாவில் மாதங்களை மாற்றி விட்டு அவரே சில நாட்களுக்கு இந்த மாறுதல்களை விக்கிப்பீடியாவில் செய்துள்ளார். இதனால் அவற்றை முழுமையாகச் செய்யவில்லை. சில பக்கங்களுக்குச் செய்துவிட்டு முடிக்காமல் விட்டு விட்டார். எஞ்சியதை நானும் சிறீதரனும் செய்து முடித்தோம். இதனை நான் அப்போது பிறர் முடிக்காத வேலை / சமூகப் பொறுப்பு என்ற போக்கில் கையாண்டு என் பங்கைச் செய்தேன்.
ஆனால் சில மாதங்கள் கழித்து டிரான்ஸ்லேட் விக்கியில் ஏப்ரல் 2011 இல் செய்ததை எங்கும் அவர் முன்கூட்டியே அறிவிக்கவில்லை. டிரான்ஸ்லேட் விக்கியில் செய்யப் போகிறேன் என்று அறிவித்திருந்தால் என்ன சிக்கல் வருமென்று நானோ சூர்யாவோ சுட்டிக்காட்டியிருப்போம். இதே போன்று முதற்பக்கத்தை முகப்பு என்று மாற்றியதால், அனைத்து விக்கித்திட்டங்களிலும் முதல் பக்க இணைப்பு முறிந்து அதனை சரிசெய்தது டிசம்பர் 2010 இல் தான் நடந்தது. அதுவும் ஆலமரத்தடியில் உரையாடப்பட்டு அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரியும். அதன் பின்னர் தான் இந்த டிரான்ஸ்லேட் விக்கி மாதப்பெயர் மாற்றம் நடந்துள்ளது. சிறீதரன் சுட்டியபின்னால் விக்கிசெய்திகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அது மீண்டும் நிகழாமல் என்ன செய்ய வேண்டுமென்று ஆராய்ந்திருந்தாலோ அவரை யாரும் குறிப்பாக இங்கு சுட்டிக்காட்டியிருக்க மாட்டார்கள். பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அதனைப் பிறர் சரி செய்கிறார்கள் என்று தெரிந்த பின்னர், ஒன்றும் சொல்லாமல் உரையாடலில் இருந்து விலகிக் கொண்டார். ஏதேனும் உதவி வேண்டுமா என்று கூடக் கேட்கவில்லை. இப்போதும் அதற்கு அவர் பொறுப்பல்ல என்று சொல்லுகிறார். இது தன் மாற்றத்தால் ஏற்பட்ட பிழையன்று என்று அவர் இங்கு மறுமொழி அளித்ததால் தான் நான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறேன். இது மீண்டும் நடக்காத வண்ணம், வளர்முகச் செயல்பாடாக இருக்க வேண்டுமென்பதால் “கிரந்தம் நீக்குதலால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்ன. மாற்றினால் முழுமையாகத் திட்டமிட்டு மாற்ற வேண்டும்.” என்று இப்போது சுட்டிக்காட்டப்படுகிறது. இது தொடர்பில்லாத உரையாடல் அல்ல. விக்கியில் கிரந்தமகற்றினால் எழும் சிக்கல்கள் இங்கே சுட்டப்பட்டுள்ளன. வளர்முகமாக அணுக வேண்டுமெனில், இத்தவறு மீண்டும் நிகழாமல் இருக்க இத்தகைய சீர்மை / கிரந்தமகற்றல் மாற்றங்களை முன்மொழிபவர்கள் முழுமையாகப் பொறுப்பு எடுத்து மாற்ற வேண்டும். சிறிது மாற்றிவிட்டு மற்றதை சமூகம் கவனித்துக்கொள்ளும் / பாதிப்பு ஏற்பட்டால் என் பொறுப்பன்று என்ற நிலை எடுப்பது முறையானதல்ல. (மேலும் பேச மாட்டேன் என்று சொல்லியிருந்தேன். முடியவில்லை. இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்)--சோடாபாட்டில்உரையாடுக 10:41, 10 பெப்ரவரி 2012 (UTC)
//அதனைப் பிறர் சரி செய்கிறார்கள் என்று தெரிந்த பின்னர், ஒன்றும் சொல்லாமல் உரையாடலில் இருந்து விலகிக் கொண்டார். ஏதேனும் உதவி வேண்டுமா என்று கூடக் கேட்கவில்லை. இப்போதும் அதற்கு அவர் பொறுப்பல்ல என்று சொல்லுகிறார்.//
இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள், துடுப்பாட்டக்காரர்கள் தொடர்பான கட்டுரைகளின் நம்பகத்தன்மை, உரை திருத்தம் பற்றி உரையாடல் வந்த போது புன்னியாமீன் கூட இதே நிலைப்பாடு கொண்டிருந்தார். அவருடைய கட்டுரைகளை மேம்படுத்தும் பொறுப்பு அவருக்கு உண்டு என்று நீங்களோ யாருமோ சுட்டிக்காட்டவில்லை (குறைந்தபட்சம் விக்கிப்பீடியாவில் வெளிப்படையாகச் சுட்டவில்லை). ஆனால், நீங்கள் உட்பட இன்னும் பலரும் அதற்கு பொறுப்பெடுத்து நேரம் ஒதுக்கியே செப்பனிட்டு வருகிறோம். கூகுள் கூடத் தான் நூற்றுக் கணக்கில் கட்டுரைகளைத் தந்து விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டது. அத்திட்டத்தை ஏற்றது நமது சமூகப் பொறுப்பு என்பதால் அதையும் தான் துப்புரவு செய்ய முனைகிறோம். ஒரு நிறுவனத்திடம் காட்டும் கனிவை ஏன் உடன் பங்காற்றும் ஒருவரிடம் காட்டக்கூடாது?
வரிக்கு வரி விக்கி நடைமுறைகளை மேற்கோள் காட்டி செல்வாவிடம் உரையாடுகிறீர்கள். ஆனால், மற்ற இடங்களில் மற்ற பயனர்களிடம் நீங்கள் இத்தகைய அணுகுமுறையைக் கொண்டிருப்பதில்லை. எடுத்துக்காட்டு: 2004ல் எழுதிய கட்டுரையை இப்போது ஏன் திருத்துகிறீர்கள் என்று கேட்ட போது ஒன்றும் பேசவில்லை. இவரைச் சொல்கிறீர்களே அவரை ஏன் சொல்லவில்லை, அவரை நிறுத்தச் சொல்லுங்கள் - நான் நிறுத்துகிறேன் என்று நாயகன் பாணியில் உரையாடலை வளர்ப்பது என்னுடைய நோக்கம் அன்று. இத்தகைய ஒப்பீட்டை வைப்பதில் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். முன்கூட்டியே மன்னிப்பும் கோருகிறேன். விக்கிப்பீடியர்கள் நட்புடன் இருப்பதும், விக்கிப்பீடியாவுக்கு வெளியே தொடர்பில் இருப்பது தவறு அன்று. ஆனால், செல்வாவின் மீதான விமர்சனங்களை மட்டும் வெளிப்படையாக வைத்து விட்டு மற்றவர்களுடன் கூகுள் அரட்டையிலோ தொலைப்பேசியிலோ பேசி சரி செய்வது எந்த வகையிலும் ஒருவரின் நடுநிலைத்தன்மையை வெளிக்காட்டாது.
தமிழ், கிரந்தப் பிரச்சினை, தமிழ் விக்கிப்பீடியா எல்லாமே செல்வாவுக்கு முன்பும் இருந்தது. பின்னும் இருக்கும். எனவே கொள்கைகளைப் பற்றிய உரையாடலின் போது கருத்தை முன்வைத்துப் பேசுவதே நேர்மையான போக்காக இருக்கும். ஆனால், கருத்து அடிப்படையில் அணுகாமல், கிரந்தம் தவிர்த்தல் கொள்கையை யார் முன்வைத்தாலும், "தொடர்ந்து பங்களிக்கிறீர்களா, குறுந்தட்டுத் திட்டம் போன்ற குறிப்பிட்ட திட்டத்தில் பங்களிக்கிறீர்களா, நீங்களே கட்டுரை எழுத வேண்டியது தானே, அடுத்தவர் கட்டுரையை மாற்றாதீர்கள், விக்சனரி-விக்கிநூல்கள்-விக்கிமூலத்தில் கிரந்தம் பற்றி எழுத வேண்டியது தானே, ." என்று அணுகுவது சரியா?
கிரந்தப் பிரச்சினை -> செல்வா -> அவரிடம் குறை கண்டுபிடிப்பது / அவருக்கு அறிவுரை சொல்வது -> கிரந்தம் தவிர்த்தல் தவறு என்பது போன்ற முறையற்ற உரையாடல் போக்கே தொடர்ந்து வருவது ஏற்புடையது அன்று. இதை நான் செல்வாவுக்காச் சொல்லவில்லை. எந்த ஒரு கொள்கை உரையாடல் / தனிப்பட்ட பங்களிப்பாளருக்கும் இது பொருந்தும். குறிப்பிட்ட ஒருவர் ஆயிரக்கணக்கில் தரவுத்தள கட்டுரைகள் எழுதுவதால் தரம் குறைகிறதா என்ற பிரச்சினை வந்த போதும், அதைத் தனி ஒரு பங்களிப்பாளரில் இருந்து விலகி பொதுவாகவே உரையாடி ஒரு கொள்கையை முன்வைக்க முயன்றோம்.
இம்தாத் வைத்துள்ள விமர்சனம் அடிப்படையற்றது என்று பலரும் ஒரு மனதாகச் சுட்டி உள்ளார்கள். அவருடைய விமரிசனமும் அரசியல் நோக்கில் உள்ளதே தவிர, தொழில்நுட்ப நோக்கில் அன்று. எனவே, //இது மீண்டும் நடக்காத வண்ணம், வளர்முகச் செயல்பாடாக இருக்க வேண்டுமென்பதால் “கிரந்தம் நீக்குதலால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்ன. மாற்றினால் முழுமையாகத் திட்டமிட்டு மாற்ற வேண்டும்.” என்று இப்போது சுட்டிக்காட்டப்படுகிறது. இது தொடர்பில்லாத உரையாடல் அல்ல.// என்று இந்த இடத்தில் சுட்டிக்காட்டத் தேவை இல்லை.
மாதங்களின் பெயரை மாற்ற முனைந்தது சீர்மை நோக்கியே என்று செல்வா தெளிவாகச் சுட்டியுள்ளார். மார்ச்->மார்ச்சு, டிசம்பர் -> திசம்பர் என்பது எல்லாம் கிரந்த மாற்றமா? முதற்பக்கத்தை முகப்பு என்று மாற்றியது கிரந்த மாற்றமா? இது கிரந்தம் மாற்றுவதால் வரும் பிரச்சினை அன்று. எனவே தான், கிரந்தத்துடன் இப்பிரச்சினையைத் தொடர்புப்படுத்துவம், செல்வாவுடன் தொடர்புப்படுத்துவதும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை. இது எல்லா மீடியாவிக்கி தளங்களுக்கும் மையப்படுத்திய மொழிபெயர்ப்பு வழிமுறை என்பதால் வரும் சிக்கல். மீடியாவிக்கி விக்கிப்பீடியாவைத் தாண்டி பிற திட்டங்களிலும் பயன்படும் போது இன்னும் கூடுதலான சிக்கல்கள் வரும். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு அனுபவம் இல்லாத பலர் கூட Translate விக்கியில் பங்கு கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். Bureaucrat என்பதைப் படிப்பாளர் என்று மொழிபெயர்த்துள்ளார்கள். இன்னும் பல இடங்களில் சூழல் புரியாமலும் தமிழ் சொற்றொடர் அமைப்புக்கு முரணாகவும் மொழிபெயர்த்துள்ளார்கள் (எடுத்துக்காட்டு: மறந்தீர்களா உங்கள் கடவுச் சொல்லை?). பொதுவாக, மென்பொருளைப் பயன்படுத்தாமல் மொழிபெயர்ப்பில் மட்டும் ஆர்வம் காட்டுவதால் இந்தப் பிரச்சினை வரும். இதே பிரச்சினை இன்னும் பல திறமூல மென்பொருள்கள், திறந்த மொழியாக்கத் திட்டங்களிலும் உண்டு. மீடியாவிக்கி மொழிபெயர்ப்பு விக்கிப்பீடியர்களின் கட்டுபாட்டுக்குள் இருந்த வரைக்கும் இந்தப் பிரச்சினை இல்லை. நாம் இயன்றவரை நல்ல தமிழ் என்று கொள்கை வைத்துக் கொண்டு Translate விக்கி சமூகம் அதற்கு முரணாக இருந்தாலும் பிரச்சினை தான். மொழிநடை என்பதைத் தாண்டி அங்கு மொழிபெயர்ப்பவர்கள் தொழில்நுட்பப் புரிதல் இல்லாமல் மொழிபெயர்த்தார்கள் என்றால் இது போன்ற இன்னும் பல பிரச்சினைகள் வரும். எனவே, இதனை முறையாக அணுகி சரி செய்வதற்கான களம் Translate விக்கி தான். எப்படி மொழிபெயர்க்க வேண்டும், எங்கெங்கு நுட்பத் தொடர்புகள் உள்ளன என்று வழிகாட்டுவதற்கான குறிப்புகள், உதவிப்பக்கங்கள், கொள்கைகளை அங்கு முன்வைத்து ஒருங்கிணைப்பதே சரியாக இருக்கும். நன்றி--இரவி 12:47, 10 பெப்ரவரி 2012 (UTC)


மாதங்கள் மாற்றுவது பற்றி பல முறை உரையாடப்பட்டது. முழுமையாக நுட்பச் சிக்கல்களை அறியாமல் மாற்றி இருந்தாலும் அதில் தவறு இல்லை. அதால் பெரிய மீள முடியாது பாதிப்பு இல்லை. இதை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுவது பண்பல்ல. இதன் உள்நோக்கங்கள் என்ன என்றும் தெரியவில்லை. --Natkeeran 16:17, 10 பெப்ரவரி 2012 (UTC)
இரவியின் கருத்துடன் முழுவதும் உடன்படுகிறேன். சோடாபாட்டில் போன்ற பண்பட்ட (ஆங்கில விக்கியிலும் இங்கும்) பயனரிடம் இதை எதிர்பார்க்கவில்லை. அவரது கருத்துக்களில் தனிப்பட்ட காழ்ப்புணர்வு தெரிகிறது. ஒருவரது விக்கிப் பங்களிப்புகளில் தவறு இருந்தால் திருத்தலாம், தொடர்ந்து பயனர் கூட்டுமுடிவை மீறிச் செயல்பட்டால் தடுக்கலாம். ஆனால் ஒவ்வொரு திட்டத்தையும் இப்படிச் செய்துவிட்டீர்கள், அப்படிச் செய்துவிட்டீர்கள் என்று குறை சொல்ல வேண்டிய தேவை என்ன? செல்வா பேச்சுப் பக்கத்தில் இப்படி மாற்றலாமா, அப்படி மாற்றலாமா என்று கேட்பதையே மற்ற பயனர்களைக் குறை சொல்வது போலவும் இடையூறு செய்வது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டு, இங்கு ஆலமரத்தடியில் உரையாடி முடிவை எட்டி ஒரு பணியைத் தொடங்கிச் செய்யும்போது சில விடுதல்கள் ஏற்பட்டதை ஏதோ குற்றம் செய்ததாகச் சொல்ல வேண்டியதில்லை. விளைவுகள் தெரிந்தே செய்கிறார் என்றால் விக்கிப் பக்கங்கள் முறிய வேண்டும் என்று செய்தார் என்கிறீர்களா? புன்னியாமீனுடைய ஆக்கங்களில் சில குறைகளைத் திருத்தினாலும் தொடர்ந்து கூகுள் கட்டுரைகளைவிட வேகமாக அவர் கட்டுரைகளை ஏற்றிக் கொண்டிருந்ததால் திருத்துவது கடினம் என்பதால் சில மாற்றங்களைப் பரிந்துரைத்ததற்குக் கூட அவர் என் விருப்பப்படி செய்ய விடுங்கள் என்றார். அப்போதுகூட ஒன்றும் சொல்லாமல் இதைச் சொல்வதை என்னவென்று சொல்வது?
சோடாபாட்டில், உங்களுக்கு என் வேண்டுகோள். சற்று நிதானமாக உங்களுக்கு நீங்களே எண்ணிப் பாருங்கள். உங்களுக்குத் தெரியாத கொள்கைகள் இல்லை. ஆனால், கொள்கைகளுக்கு அடிப்படையான விக்கிக் கோட்பாடுகளையும் நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன். (ஆங்கில விக்கியிலேயே கூட பல கொள்கைகள் பின்னால் வந்தவை தாம். அவை சற்று மாறவும் செய்கின்றன.) அவற்றின் அடிப்படையில் நன்னயத்துடன் அணுக வேண்டும். -- சுந்தர் \பேச்சு 09:14, 11 பெப்ரவரி 2012 (UTC)

என் மறுமொழி-2 - செல்வா[தொகு]

மன்னிக்கவும் சோடாபாட்டில் நீங்கள் பலவற்றையும் போட்டுக் குழப்புகின்றீர்கள். தன்னெஞ்சு அறிவது பொய்யற்க என்பார்களே அது போல் கட்டாயம் நீங்கள் செய்வது என்ன என்று உங்களுக்கு நன்கு தெரியும் என்று நம்புகின்றேன். முறைப்படி, கால ஒழுக்கத்துடன், தக்க பதிவேடுகளின் சான்றுகளுடன் கூறுங்கள்!

 1. நான் கூறியது // இங்கு ஆலமரத்தில் முறைப்படி கலந்துரையாடி முடிவுசெய்தவாறே தமிழ் விக்கிப்பீடியாவில் மாதங்கள் பெயர் தமிழ்முறைப்படி மாற்றி அமைக்கப்பட்டது. (சூலை 31, 2010 இல் இதற்கான காரணங்களை முன்மொழிந்து, தொடர்ந்து நடந்த உரையாடலையும் ஆலமரத்தடி தொகுப்பு 38 இல் காணலாம். இங்கு எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை! // நான் அழுத்தம் தந்து எழுதியது தமிழ் விக்கிப்பீடியாவில் மாற்றியதால் இன்றளவும் அது எந்தச்சிக்கலையும் தரவில்லை. அது தவறு என்று நீங்கள் காட்டுங்கள்! (நான் தமிழ்விக்கிப்பீடியாவில் "சிறப்புப் பக்கத்தில் உள்ள "அனைத்து முறைமைசார் தகவல்கள் அட்டவணை" என்பதில் தான் மாற்றினேன் முதலில். அப்படி மாற்றியபின் செப்டம்பர் 8, 2010 இல் மாற்றியதையும் குறித்தும் அறிவித்தேன்(பார்க்கவும் தொகுப்பு40-மாதங்களின் பெயர்கள். மேலும் கருத்து வேண்டினேன்.எந்தச் சிக்கலும் வரவில்லை. முதலில் நீங்கள் இதனை ஒப்புக்கொள்ளுங்கள்! நீங்களும் இங்கு அப்பொழுது இருந்தீர்கள்.
 2. அடுத்து செப்டம்பர் 8, 2010 அன்று விக்சனரி ஆலமரத்தடியில் கருத்து வேண்டினேன். இங்கே பார்க்கவும். பிறகு, திசம்பர் 13, 2010 அன்று மாகிர் கேட்டார், "விக்சனரி மாதங்கள்தவியில் மாதங்கள் திசம்பர், சனவரி என்றுள்ளது. இங்கு டிசம்பர், ஜனவரி என்று வருகிறது. மாற்றம் செய்ய வேண்டுகிறேன்." (இங்கே பார்க்கவும். சனவரி 5 அன்று மீண்டும் கருத்து வேண்டியபின் தான் மாற்றினேன். மாற்றியதையும் அறிவித்தேன். அங்கும் ஏதும் சிக்கல் வரவில்லை (நானறிய இதனால்). வரவும் கூடாது.
 3. மூன்றாவதாக, ஏப்பிரல் 27, 2011 இல் டிரான்சிலேட்டு விக்கியில் மாற்றம் செய்தேன். இது வரை எந்தச் சிக்கலும் வரவில்லை என்பதை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள். சூன் 2-இல் "Mediawiki erroring" என்று கூறி நான் செய்த மாற்றத்தை மீளமைத்தார் (இது டிரான்சிலேட்டு விக்கியில்தான், மற்ற இடங்களில் இல்லை). இப்படி டிரான்சிலேட்டு விக்கியில் நான் செய்த மாற்றம் தவறு என்று சோடாபாட்டிலோ, அறிந்தவர்கள் வேறு யாருமோ சொல்லுங்கள்! நான் செய்தது தவறு அன்று என்று உறுதியாய்க் கூறவியலும். ஏப்பிரல் 27 உக்குப் பிறகு சூன் 2 உக்குள் சூர்யா டிரான்சிலேட்டு விக்கியில் பல திருத்தங்கள் செய்திருந்தார். டிரான்சிலேட்டு விக்கியில் சோடாபாட்டிலின் முதல் தொகுப்பு செப்டம்பர் 22, 2010 இல் என்று காட்டுகின்றது.மே மாதம் 2011 இல் 5 தொகுப்பு செய்திருக்கின்றார் என்று காட்டுகின்றது. இது பெரும் தீங்கு விளைவிக்கும் எனில் ஏன் அவரோ, சூரியாவோ எதுவும் கூறவில்லை?! சூன் 2 அன்று சூர்யா "சரியாக மீளமைத்துவிட்டாரே"! பின் ஏன் சிக்கல்? இதனால் பெரும் பிழை ஏற்படும் எனில் யாரும் எளிதாக மாற்றவியலாதவாறு காப்பு செய்திருக்கலாமே?
 4. நான்காவதாக, மேலே செப்டம்பர் 8, 2010 இல் செய்த மாற்றங்களால், பல இடங்களில் சரியாக மாற்றம் நிகழ்ந்தாலும், விக்கிப்பீடியாவில் மாதங்கள் தோறும் ஒவ்வொரு நாளுக்குமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வந்த பகுதியில் தானியங்கியாய் இம்மாதங்களின் பெயர்களின் ஏற்பட்ட மாற்றம் நிகழவில்லை. இவற்றைத் தனித்தனியாகவே மாற்ற வேண்டியிருக்கும் போல் தெரிந்தது. இதனை வார்ப்புரு:MonthsSource என்னும் பகுதியில் இருப்பதைப் பார்த்தேன். நான் அக்டோபர் 6, 2010 அன்று சூன் மாதத்துக்கான 1-2-3 ஆகிய நாள்களும் இன்னும் சிலவும் மட்டும் மாற்றிப் பார்த்தேன் (வழிமாற்று விட்டும் இருந்தேன்). இதனால் சிக்கல் ஏதும் நேர்ந்ததா என்று தெரியவில்லை. ஆனால் பலநூறு இணைப்புகள் முறிந்தன என்பதற்கான சான்றும், அது என் பிழை, வேறு காரணங்களால் பிழை இல்ல என்றும் தக்கவாறு காட்டாமல் குற்றம் சாட்டுவது தவறு. சோடாபாட்டில் சொல்கிறார், "இந்த பாதிப்பு அந்த மாதங்கள் அடுத்து வரும் வரை வெளித்தெரியாது அல்லத் குறிப்பிட்ட கட்டுரையைக் காணும் வரை தெரியாது. "சில மாதங்கள் கழித்து நானும் சிறீதரனும் வழிமாற்றுகள் உருவாக்கி இதைச் செய்து முடித்தோம். (சுமார் 200 வழிமாற்றுகள் தேவைப்பட்டன)." என்கிறார். ஆனால் சோடாபாட்டில் சொல்வது (திசம்பர் 11 வழிமாற்று தந்தது) நவம்பர் 1, 2010-இல். நான் டிரான்சிலேட்டு விக்கியில் செய்தது ஏப்பிரல் 27, 2011. சிக்கல் என்று கூறி சூரியா மீளமைத்தது சூன் 2, 2011. இதில் உள்ள முரண்பாடுகளை யாரும் காணலாம்.
 5. கடைசியாக விக்கியில் ஏறத்தாழ எதையும் மீளமைக்கலாம். சோடாபாட்டில் கூறுவதைக் கண்டு புதிய பயனர்கள் எதுவும் செய்யக் கூட அச்சப்படுவார்கள். நிரலில் ஏதும் பிழை நேர்ந்து இருந்தால், முறைப்படி கருத்துக் கணித்து படிப்படியாக மாற்றிய என்னைக் குறைகூறுவது எங்ஙணம் சரியாகும்? அதுவும் இப்படியா?!! இப்படி உரையாடல் நீள்வதும் ஒரு சிறிதும் சரியல்ல. விக்கியில் யாரும் எதையும் மறைக்க முடியாது. இப்படி நீளமாக உரையாடுவதால் குழம்பம் வேண்டுமானால் நேரிடலாம்!

--செல்வா 06:47, 11 பெப்ரவரி 2012 (UTC)

தகவலுழவன் கருத்துகள் பற்றி சில கருத்துகள்[தொகு]

 • மேலே காணும் உங்கள் இடுகையில் நல்ல கருத்துகள் பலவற்றைத் தெரிவித்துள்ளீர்கள். அவற்றுள் சில குறித்து எனது கருத்துகளை வெளிப்படுத்த விரும்புகிறேன்:
 • //விக்கியில் செயல் படாதவர்களைப் பற்றி, நாம் உரையாட வேண்டுமா?//

என்னைக் கேட்டால் உரையாட வேண்டாம் என்றே சொல்வேன். தமிழ் பற்றியும் தமிழைக் கையாளுகின்ற/கையாள வேண்டிய முறை பற்றியும் பல கருத்துகளை நாம் வாசிக்க நேரிடலாம். அவை ஒவ்வொன்றுக்கும் விக்கிப் பயனர்கள் பதிலளிக்க வேண்டும் என்ற தேவை இல்லை. ஆனால் தமிழ் விக்கியைப் பற்றி குறைகூறுகின்ற விதத்தில் சிலர் இணையத்தளங்களில் எழுதிவருவது உங்களுக்கும் தெரியும், எல்லாருக்கும் தெரியும். அவர்களுக்கு தமிழ் விக்கியின் உண்மை நிலை பற்றியும் அணுகுமுறை, கொள்கைகள் பற்றியும் விக்கிப் பயனர்கள் தகுந்த விதத்தில் பதில் கொடுப்பது வரவேற்க வேண்டிய ஒன்று என நான் கருதுகிறேன். ஆனால் அந்த "வெளி" உரையாடலை இங்கே தமிழ் விக்கியில் கொண்டுவந்து புகுத்த வேண்டியதில்லை என்பது என் பணிவான கருத்து.

 • //கிரந்தம் பற்றி, பல தமிழ் முன்னோடிகள் எழுதிய கட்டுரைகளை, விக்கியில் இணைப்பதே நல்ல நடைமுறை.//

இது நல்ல கருத்து. ஆனால் தமிழ் விக்கியில் இதைச் செய்வதைவிட விக்கிமூலத்தில் செய்து, விக்கியில் தொடர்புடைய கட்டுரைகளில் இணைப்புகளைக் கொடுத்துவிடுவது பயனுள்ளதாக இருக்கும். ஆனால், விக்கிமூலத்தில் பலர் இடுகை செய்வதுபோலத் தெரியவில்லை.

 • //விக்கி அறிஞர்களுக்கா?கற்பவருக்கா?//

இதை நீங்களும் நானும் தீர்மானிக்க முடியாது என்பதே என் கருத்து. விக்கி என்பது எல்லா இணையத்தளங்களைப் போல உலகளாவிய சொத்து. அதை யார்யார் பயன்படுத்துகிறார்கள்/பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து எந்தவொரு வரையறையோ எல்லைக்கோடோ இல்லை. ஆனால், விக்கியின் உருவாக்கத்தைப் பொறுத்த மட்டில் ஒருசில அடிப்படைக் கொள்கைகள் ஏற்கெனவே உள்ளன: நல்ல, தரமான, நம்பகமான இடுகைகள் விக்கியில் உண்டு என்னும் எதிர்பார்ப்போடுதான் விக்கி என்னும் கட்டற்ற கலைக்களஞ்சியத்தை பயனர்கள் அணுகுகின்றார்கள். அவர்கள் ஏமாற்றம் அடையாதவாறு விக்கியின் தரம் இருக்கவேண்டும் என்பதில் உங்களுக்கோ எனக்கோ ஐயமில்லை. தமிழ் நடையைப் பொறுத்தமட்டில், எளிமை, தெளிவு, இலக்கிய இலக்கண மரபு பேணல், தமிழின் தனித்தன்மையைக் காத்து பிறமொழிக் கலப்புகளைத் தவிர்த்தல் போன்ற பண்புகள் இருக்கவேண்டும் என்று கருதுகிறேன். பொது ஊடகங்கள் ஆங்கிலமும் வடமொழியும் கலந்து எழுதும்போது விக்கி மட்டும் விதிவிலக்கா என்று கேட்கும் கேள்வி முறையானதல்ல என்று நினைக்கிறேன். விக்கி என்பது ஒரு கலைக்களஞ்சியம்; அதற்கென்று ஒரு தரம் உண்டு. அதைக் காப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பது என் கருத்து.

 • //அனைத்து விக்கியின், மாதங்களில் கிரந்தத்தை நீக்க முயற்சித்தவர், கடைசிவரை அனைத்து இடங்களிலும், மாதங்களில் கிரந்தத்தை நீக்காமல் அப்படியே விட்டு விட்டு போனதால், பலரின் நேரம் தான் சூறையாடப்பட்டது. அதனால் விக்சனரியிலும் பல தொந்தரவுகள் ஏற்பட்டது.//

இங்கே தகவலுழவன் யாரையும் பெயர்சொல்லிக் குறிப்பிடாவிட்டாலும் அவர் பெயர் பலருக்கும் தெரியும் என்றே ஊகிக்கிறேன். விக்கியும் விக்சனரியும் "கட்டற்றவை" என்பதால் அவ்வப்போது சில திருத்தங்களுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டுத்தான் அதன் வளர்ச்சி நிகழ்கிறது என்பது எல்லாப் பயனர்களுக்குமே தெரிந்த ஒன்று. மேலும், விக்கியும் விக்சனரியும் கூட்டுமுயற்சி என்பதால் பலருடைய ஒத்துழைப்போடுதான் அது வளர்ந்து வருகிறது. தகவலுழவன் விக்சனரியில் ஊக்கத்தோடு உழைப்பது கண்டு நான் பலமுறை வியந்ததுண்டு. எனவே, கூட்டுமுயற்சி என்னும் அடித்தளம் குலைந்துவிடாமல் பார்ப்பது நல்லது என்று கருதுகிறேன்.

 • //பாரதியின் பல கட்டுரைகளில், கிரந்தமுள்ள சொற்கள் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் அதன் பொருள் புரிய, இப்பகுப்பின் வளர்ச்சி அவசியம் தானே? தோள் கொடுப்பீர்கள் தோழர்களே! வணக்கம்//

தகவலுழவன் தமிழில் பயில்கின்ற பிறமொழிச் சொற்களை விக்சனரியில் இடுகை செய்யக் கேட்பது ஒரு நியாயமான கோரிக்கை என்றே கருதுகிறேன். பாரதியின் படைப்புகளில் வடமொழிச் சொற்கள் உண்டு, அவர் கிரந்தத்தைப் பயன்படுத்தியது உண்டு என்று தகவலுழவன் கூறுவதில் உண்மை உள்ளது. ஆயினும் பாரதி இன்றைய தமிழ் நடைக்கும் வளர்ச்சிக்கும் வழிகாட்டினார் என்பதையும் நாம் மறத்தலாகாது. பாரதி இறந்து இன்று ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு ஆகிறது. தமிழ் உரைநடையும் வளர்ந்துள்ளது. எனவே, எழுத்துக்கு எழுத்து பாரதியை நாம் பின்பற்றுவதைவிட, அவர் வகுத்துத் தந்த வழியில் முன்னேறிச் செல்வதே நலம் என்று கருதுகிறேன்.

 • தகவலுழவன், நீங்கள் கூறியவற்றில் குறைகாண்பது என் நோக்கம் அல்ல. மாறாக, சில கருத்துகளை விக்கியரோடு பகிர்ந்திட வாய்ப்பளித்தீர்கள். நன்றி! தொடர்க உங்கள் விக்கிப் பணி! --பவுல்-Paul 05:24, 7 பெப்ரவரி 2012 (UTC)


"2) மற்றொன்று சாதரண ஒரு பயன்பாட்டளரிடம், கிரந்த ஆளுமை இருக்கிறது. ஆங்கில மொழி கலப்பு இருக்கிறது. அதனை குறைக்க நாமென்ன செய்யப்போகிறோம்?விக்கி அறிஞர்களுக்கா?கற்பவருக்கா?"

நீங்கள் சாதாரண பயனர் என்று யாரைக் குறிப்பிடுகிறீகள். ஆங்கில வழி படித்த, அல்லது ஆங்கிலம் அதிகம் கலந்து பேசுவோரை மட்டுமா. ஈழத்தில் பெரும்பான்மையினருக்கு ஆங்கிலம் தெரியாது. தமிழிநாட்டிலும் பெரும்பான்மையினர் நிலைமை அப்படியே. கிரந்தமும் எல்லா இடங்களிலும் மிகையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆங்கிலமும் சமசுகிருதமும் படித்துதான் தமிழ் புரிந்து கொள்லாம் என்ற நிலைமை பாதகமானது. --Natkeeran 19:00, 7 பெப்ரவரி 2012 (UTC)

மாவட்ட வார்ப்புரு[தொகு]

மாவட்டங்களில் தற்போது {{Infobox Indian Jurisdiction}} என்ற வார்ப்புரு பயன்படுத்தப்படுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் பெயரை எங்கு இணைப்பது என்று தெரியவில்லை, leader_name_1, 3 எல்லாம் முயன்றுவிட்டேன். வார்ப்புருவை மாற்றுபவர்கள் எடுத்துக்காட்டையும் அந்த வார்ப்புருவில் கொடுத்தால் எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும். --குறும்பன் 16:18, 9 பெப்ரவரி 2012 (UTC)

குறும்பன், பெயரையும் குறிப்பையும் வார்ப்புரு:தமிழக உயர் அதிகாரிகள்,வார்ப்புரு:தமிழக உயர் அதிகாரிகள்/குறிப்புகள் ஆகிய வார்ப்புருக்களில் இணைத்துவிட்டு, {{Infobox Indian Jurisdiction}} வில் மாவட்டம் parameter ல் மாவட்ட பெயரை சேர்க்கவேண்டும். உதா. இந்தப் பக்கத்தைப் பார்க்கவும். நன்றி -- மாகிர் 01:57, 10 பெப்ரவரி 2012 (UTC)

மேற்கோள் அளவீடு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் பல ஆண்டுகளாக மேற்கோள் சுட்டுதலுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். நம் தரக் கண்காணிப்புப் பணியில் மேற்கோள்களைக் கொண்ட கட்டுரைகளின் எண்ணிக்கை, தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் சராசரியாக எத்தனை மேற்கோள்கள் சான்றாகக் காட்டப்படுகின்றன போன்ற அளவீடுகளையும் சேர்க்கலாமா? <ref> எத்தனை முறை வருகிறது என்பதைக் கொண்டு இவற்றை அறியலாம். இதைத் தானியங்கி வழியாக மாதம் ஒருமுறை கணக்கிட முடிந்தால் நல்லது. அனைவரது கருத்தையும் அறிய விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 17:30, 9 பெப்ரவரி 2012 (UTC)

நல்ல கருத்து. இப்படி நாம் தரத்தின் கூறுகளை அளவிட்டுக்கொண்டும் மேம்படுத்துக்கொண்டும் வருதல் நல்லது.--செல்வா 17:34, 9 பெப்ரவரி 2012 (UTC)
செய்யலாம், சுந்தர். பல கட்டுரைகளில் ref இல்லாமல், பொதுவாக உசாத்துணைப் பகுதியில் நூல்கள், ஆதாரங்கள் குறித்துள்ளோம். இதனை எப்படி அளப்பது? தர அளவீட்டில் இதையும் கணக்கில் கொள்ள வேண்டும்--இரவி 17:48, 9 பெப்ரவரி 2012 (UTC)
 • மேற்கோள், ஆதாரம், உசாத்துணை பற்றி உரையாடல் நடக்கும் இத்தருணத்தில், எந்தவொரு ஆதாரமும் காட்டாமல் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் பற்றியும் சிந்திப்பது நல்லது. அவற்றையும் (தானியங்கி மூலம்) அடையாளம் கண்டு, ஆதாரங்கள் இணைத்தால் தமிழ் விக்கி மேன்மையுறும்.--பவுல்-Paul 18:33, 9 பெப்ரவரி 2012 (UTC)

உசாத்துணை நூல் மட்டும் இருந்தால் அது மூல நூலாக இருக்கும். அதை பின்வருமாறு கொடுக்க சொல்லலாமா?

மூல நூல்<ref>நூல் பெயர்</ref>

உள்ளடக்கம்

==உசாத்துணை==

{{Reflist}}--தென்காசி சுப்பிரமணியன் 02:35, 11 பெப்ரவரி 2012 (UTC)

ஆம் தென்காசி சுப்பிரமணியன். இனிவரும் கட்டுரைகளில் ஒரு சீரான முறையைப் பின்பற்றலாம். ஏற்கனவே உள்ள கட்டுரைகளையும் தானியங்கி மூலமாக ஒரே மாதிரியாகக் கொண்டு வர முயலலாம்.
பவுல், ஆம் முதலில் விக்கிநெடுகிலும் மேற்கோள் பயன்பாட்டை அளக்க முயல்வோம். அதன் பின்னால் விக்கிப்பீடியா:தரமறிதல்_முறைமை/தர_அளவீடுகள் திட்டத்திலோ வேறு புதுத்திட்டத்திலோ இது போன்ற கட்டுரைகளை அடையாளங்கண்டு சான்றுகளைச் சேர்க்கலாம்.
இரவி, சில உசாத்துணைகளைப் பத்தியின் தலைப்பு முதலியவற்றைக் கொண்டு அறியலாம். இவற்றையும் தாண்டி விடுபட்டவைகளை நாமாகப் பார்த்துதான் சீராக்க முடியும். -- சுந்தர் \பேச்சு 09:33, 11 பெப்ரவரி 2012 (UTC)

பொறுப்பும் மொழியும்[தொகு]

Admins influence the language of non-admins--இரவி 22:49, 9 பெப்ரவரி 2012 (UTC)

பட்டறைகள்[தொகு]

சென்னையில் கடந்த வாரத்தில் இரு பட்டறைகள் நடத்தப்பட்டன. அவற்றின் திட்டப்பக்கங்கள்:

 1. ஜெயா பொறியியல் கல்லூரி, தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
 2. கிண்டி பொறியியல் கல்லூரி, விக்கிப்பீடியா அறிமுகம்
-- சூர்யபிரகாஷ்  உரையாடுக 18:36, 10 பெப்ரவரி 2012 (UTC)
 • அருமை சூர்யா! பாராட்டுகள்! நற்பணி செய்தீர்கள். அவர் பெயர் "பாணிக்'ரஃகீ" என்று நினைக்கின்றேன் (ஒரிய மொழி விக்கியின் பங்களிப்பவர்தானே?)--செல்வா 21:49, 10 பெப்ரவரி 2012 (UTC)
கலக்கல் சூரியா. இத்தனை மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் விக்கியைப் பற்றி அறிமுகம் சென்றடைந்தது நல்லது. உங்களுக்கும் சுபாசீசுக்கும் உதவிய மற்றவர்களுக்கும் நன்றி. -- சுந்தர் \பேச்சு 09:49, 11 பெப்ரவரி 2012 (UTC)

நல்ல, பயனுள்ள முயற்சிகள். வாழ்த்துகள். வளரட்டும் உங்கள் தமிழ் பணிகள்!!!--Nan 10:07, 11 பெப்ரவரி 2012 (UTC)

பாராட்டுக்கள் சூரியா ! தமிழ் விக்கிப்பீடியாவின் பரப்புரையில் பெரும் பங்காற்றிவரும் தங்கள் பணி சிறக்க வாழ்த்த்கள் !!--மணியன் 12:32, 11 பெப்ரவரி 2012 (UTC)

பாராட்டுக்கள் சூர்யா..! உங்கள் பணி மேலும் வளர வாழத்துக்கள். கி. கார்த்திகேயன் 16:12, 11 பெப்ரவரி 2012 (UTC)

நல்ல முயற்சி சூர்யா. பாராட்டுக்கள். அதிக மாணவர்கள் பங்கெடுத்துள்ளார்கள்.--சஞ்சீவி சிவகுமார் 06:30, 13 பெப்ரவரி 2012 (UTC)

பாராட்டுக்கள் சூர்யா.--கலை 14:22, 13 பெப்ரவரி 2012 (UTC)

அனைவருக்கும் நன்றி. @செல்வா, ஆமாம் பனிக்ரஹி தான். :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 07:26, 17 பெப்ரவரி 2012 (UTC)
சுபாசிச பாணிகாஃகி அவர்களிடம் அவர் பெயரை எப்படி எழுதவேண்டும் என்று கேட்ட பொழுது அவர் கூறிய விடை, "My name is supposed to be Subhasisa Panigahi (सुभासिस पाणिगाहि), but, sadly in all my records it is Subhashish Panigrahi, as I can't change my name in English I have been writing it as ସୁଭାସିସ ପାଣିଗାହି (Subhasisa Panigahi) in Odia. Subhashish Panigrahi will be शुभाशिष पाणिग्राही, that's correct in Hindi/Sanskrit, and present day Odia, but incorrect in original Odia.". சூர்யா என் குறிக்கோள் நிறுவததோ நீங்கள் சொன்னது தவறு என்று கூறுவதோ அன்று; ஒன்றை அறிந்தால் கூடிய மட்டிலும் சரியாக அறிந்துகொள்வோமே என்னும் என் தேடலின் விளைவு (கற்க கசடற). நான் சொன்னதோ, சொல்வதோ தவறெனில் உடனே நன்றியுடன் என்னைத் திருத்திக்கொள்வேன். ஒரியாவில் (ஒடியாவில்) பாணிக்3ரஃகீ அன்று, பாணிகா3ஃகி என்பது சரி. மேலும் ஒரியாவில் ஸுபா4ஸிஸ என்பது சரி (சமற்கிருதத்தில் உள்ளவாறு ஸுபா4ஷீஷ்2 அன்று). வட இந்திய மொழிகளின் ணகரம் உண்டு, "ந"கரமும் உண்டு ஆனால் னகரம் கிடையாது. --செல்வா (பேச்சு) 05:48, 3 மார்ச் 2012 (UTC)

ஒத்தாசைப் பக்கம்[தொகு]

தற்போது விக்கிப்பீடியா தொடர்பான உதவிகளை பயனர் பேச்சுப் பக்கங்கள், ஆலமரத்தடி உட்பட வெவ்வேறு பக்கங்களில் கேட்கிறோம். விக்கிப்பீடியாவுக்கு வெளியேவும் உதவி பெறுகிறோம். நானும் சேர்த்துத் தான் :) இவற்றை இயன்ற அளவு ஒத்தாசைப் பக்கத்தில் கேட்டால் அனைத்துப் பயனர்களும் கவனித்து உதவி நல்கலாம். கூடவே, இந்த உரையாடல்களை ஆவணப்படுத்துவோம் என்பதால் பிறரும் கற்றுக் கொள்ளவும் பிற்காலத்தில் தேடிப்பார்க்கவும் உதவும். நன்றி--இரவி 22:13, 10 பெப்ரவரி 2012 (UTC)

உதவி[தொகு]

கொங்கு வேளாளர் கட்டுரையில் ஒரு மாத காலமாக ஒரு தொகுத்தல் போர் நடந்து கொண்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன் நான் தலையிட்டு இதனை முடிவுக்குக் கொண்டு வர முயன்றேன். தற்காலிகமாக நின்றிருந்த அது இப்போது மீண்டும் துவங்கியுள்ளது. அங்கிருந்து வேறு சில கட்டுரைகளுக்கும் பரவியுள்ளது. சாதி தொடர்பான இச்சிக்கலை என்னால் இதற்கு மேல் வெற்றிகரமாகக் கையாளமுடியும் என்று நம்பிக்கை போய்விட்டது. பிறர் உதவி தேவைப்படுகிறது. கட்டுரையினையும், பேச்சுப் பக்க உரையாடல்களையும் கவனித்து உதவும்படி நிருவாகிகளையும் பிற பயனர்களையும் வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:41, 11 பெப்ரவரி 2012 (UTC)

சாதி தொடர்பான கட்டுரைகள் மிகவும் சிக்கலானவை. இவ்வளவு நாள் தனியாக அதைச் சமாளித்தமைக்கு நன்றி. இன்னும் பலர் சேர்ந்து உதவும்வரை அந்தக் கட்டுரைகளைப் பூட்டி வைக்கலாமா? வழக்கமான பங்களிப்பாளர்கள் இன்னும் ஓரிருவர் இணைந்து சான்றுகளுடன் நடுநிலையில் எழுத முயல்வோம். -- சுந்தர் \பேச்சு 10:11, 11 பெப்ரவரி 2012 (UTC)👍 விருப்பம்--shanmugam 11:06, 11 பெப்ரவரி 2012 (UTC)
நானும் சில நாட்களாக கவனித்து வருகிறேன்... தொடர்ந்து ஒருவர் மாற்றி ஒருவர் உள்ளடக்கங்களை நீக்குவதும் சேர்ப்பதுமாக உள்ளனர்..பூட்டி வைப்பதே நல்ல முடிவு என நினைக்கிறேன்..--shanmugam 11:06, 11 பெப்ரவரி 2012 (UTC)
இப்போது பூட்டியுள்ளேன். நடுநிலை பயனர்கள் பலர் தலையிட்டு உரையை இறுதி செய்ய வேண்டும். அதன் பின்னால் காப்பை நீக்கலாம். -- சுந்தர் \பேச்சு 14:00, 11 பெப்ரவரி 2012 (UTC)
அரசின் பட்டியலில் உள்ள அனைத்துச் சாதிகளைப் பற்றிய கட்டுரைகளையும் தொடங்கினால் நமக்கு நிறைய பங்களிப்பாளர்கள் கிடைப்பார்கள் போல இருக்கிறதே :)--இரவி 17:10, 11 பெப்ரவரி 2012 (UTC)
இரவி தாங்கள் கூறுவது சரியே. மிக அதிக பேரை ஈர்க்க சாதி என்னும் ஆயுதத்தை பயன்படுத்தலாமே! (தமிழக, இந்திய அரசியல்வாதிகள் போல!) சாதிப் பித்தர்கள் தமிழகத்தில் அதிகம்தானே. வியூகம் வெற்றியைத் தரும் என்றே எண்ணுகிறேன். மேலும் எனது முன்வைப்பு என்னவென்றால், ஏன் சாதிக் கட்டுரைகளை முற்றிலுமாக நீக்கி விடக் கூடாது? எவ்வாறு அரசு சாதிகளே இல்லை என்று சொல்லிக் கொண்டு சாதிப் பட்டியல் வைத்து உள்ளதோ, அதைப் போலவே தகவல் களஞ்சியம் என்னும் பெயரில் விக்கிபீடியா சாதிக் கட்டுரைகளைக் கொண்டு உள்ளது. மேலும் தமிழ் விக்கிபீடியா தகவல்களை கொடுக்கும் அதே சமயத்தில் சமுதாய அக்கறை கொண்ட தளமாகவும் விளங்கவும் வேண்டும் என்பதே எனது எண்ணம். தகவல் கொடுக்கிறேன் என்ற பெயரில் வருங்கால விக்கிபீடியர்களுக்கு ஏன் ஒரு சமுதாய பிரிவினையை மறைமுகமாக உருவாக்க வேண்டும் என்பதே எனது கருத்து. ஒருவேளை கட்டுரைகள் விக்கிபிடியாவில் நீடிக்கும் பட்சத்தில் வருங்கால விக்கிபீடியர்கள் தங்களின் சாதியையும் அவர்களின் பக்கத்தில் இட்டுக் கொண்டாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை என்றே தோன்றுகிறது. கட்டுரைகளைத் தொடர்வதா அல்லது நீக்குவதா என்பது குறித்து ஒரு வாக்கு (தமிழ் விக்கிபீடியா வாக்கு) நடத்தி முடிவு எடுக்கப்படலாம். அன்புடன் -Pitchaimuthu2050 08:16, 12 பெப்ரவரி 2012 (UTC)

இரவி வேடிக்கையாகச் சொன்னாலும், சாதி பற்றிய கட்டுரைகளில் நடுநிலைமையான கருத்துகளையும், கூற்றுகளையும், தரவுகளையும் கொண்ட கட்டுரைகளாக இருக்கலாம். இதில் பல சிக்கல்கள் வரும் என்பது மிகவும் உண்மை. இதுபோலவே மதம், மொழி, ஊர், நாடு என்று மட்டும் அல்லாமல், துடுப்பாட்டக்காரர்கள், இசைக் கலைஞர்கள், ஆடற்கலைஞர்கள் என்னும் பல தலைப்புகள் பற்றிய கட்டுரைகளிலும் பற்பல சாய்வுகள் வரலாம். அவற்றைச் சீர் செய்து நடுநிலையானதாக ஆக்குவது நம் பொறுப்பு! சில நேரங்களில் மிகவும் சிக்கலானதாககக் கூட இருக்கும். ஆனால் இது திறமையை வெளிப்படுத்தி சிறப்புடையதாக்க ஓர் அறைகூவல் என்றும் கொள்ளலாம். --செல்வா 14:17, 12 பெப்ரவரி 2012 (UTC) இவற்றோடு ஆப்பிள், பிளாக்கு பெரி, என்றும், இந்த மருந்து அந்த மருந்து என்றும், தொழில்நுட்பம் சார்ந்தவற்றிலும் சாய்வுகள் வரும். எனவே இது செப்பம் காண ஓர் அறைகூவலே!--செல்வா 14:20, 12 பெப்ரவரி 2012 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளத்தை ஒருங்குறி ஆதரவு இல்லாத கைபேசிகளிலும் பார்க்கக்கூடியவாறு படிமங்களாக வழங்கக் கூடியவாறும் ஓர் இணையத்தள முகவரியை உருவாக்கினால் நன்றாக இருக்கும். பிபிசி போன்ற சில தளங்கள் அவ்வாறான வசதியை வழங்குகின்றன. --மதனாஹரன் 11:58, 12 பெப்ரவரி 2012 (UTC)

நல்ல கருத்து மதன்! சுந்தர் அல்லது ("தமிழா தமிழா" e-kalappai) முகுந்து போன்றவர்கள் உதவக்கூடும். பொதுவாக ஒருங்குறி (யூனிக்கோடு) ஏறத்தாழ எல்லா கைபேசி கையடக்கக் கருவிகளிலும் வந்துவிடும் என்று நம்பலாம். எனினும் நீங்கள் சொல்வது போன்ற வசதி இருப்பது நல்லது.--செல்வா 14:08, 12 பெப்ரவரி 2012 (UTC)
மதன், செல்வா, கிட்டத்தட்ட அனைத்து செல்பேசிகளிலும் ஓப்பரா மினி என்ற உலாவியை நிறுவலாம், பலவற்றில் ஏற்கனவே நிறுவியிருக்கும். அந்த உலாவியில் இணைய முகவரிக்கான பெட்டியில் about:config எனத் தட்டினால் உலாவிக்கான விருப்பத்தேர்வுகள் வரும். அவற்றில் 'Enable bitmap rendering for complex scripts' என்ற வசதியைத் தேர்வு செய்தால் தமிழ் எழுத்துக்கள் ஓப்பராவின் தருவியில் படமாகித் தெரியும். (மேலும் உதவிக்கு இரவியின் பதிவைப் பார்க்கலாம். இந்த வசதியை உதவிப் பக்கத்தில் இட வேண்டும். விரைவில் அனைத்து கைபேசிகளிலும் இயல்பாகவே தமிழ் எழுத்துகள் தெரியத் தொடங்கும். -- சுந்தர் \பேச்சு 14:21, 12 பெப்ரவரி 2012 (UTC)
இந்த வசதி இருந்தாலும், நாமாகவே தமிழ் விக்கிப்பீடியாவின் கைபேசித் தளத்தில் அந்த வசதியைத் தருவது நல்லது தான். -- சுந்தர் \பேச்சு 14:26, 12 பெப்ரவரி 2012 (UTC)
விக்கிப்பீடியா:இணைய எழுத்துரு தமிழ் விக்கிக்கு வரும் பொழுது மேலும் சில கைபேசிகளில் தானாகவே தெரியக் கூடும்.(என்னுடைய நோக்கியா ஈ 51 இல் கன்னட விக்கிப்பீடியா இணைய எழுத்துரு மூலம் தெரிகிரது. மலையாள மென்பொருள் வரைபவர்(typographer) ஒருவர் புதிய கட்டற்ற எழுத்துரு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்(அது முடிந்தால் தமிழிலும் இணைய எழுத்துரு செயலாக்க கோரலாம். பக்கங்களை படிமமாக வழங்கும் திட்டம் நம்முடைய அளவிற்கு சரியாக வராது என நினைக்கிறேன்.(Serverside image rendering might be resource intensive for our volume). ஸ்ரீகாந்த் 15:35, 13 பெப்ரவரி 2012 (UTC)

ஒபேரா மினி வசதி பற்றி முன்னரே தெரியும். ஆனாலும் உடனடியாகப் பார்வையிடுவதற்கு அந்த வசதியைத் தருவது நல்லது. --மதனாஹரன் 11:44, 14 பெப்ரவரி 2012 (UTC)

நன்றி ஸ்ரீகாந்த். ஆம் மதனாஹரன், நீங்கள் சொல்வது சரிதான். -- சுந்தர் \பேச்சு 12:00, 14 பெப்ரவரி 2012 (UTC)