விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு52

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாராட்டுகள்[தொகு]

 • 30,000 கட்டுரைகளைத் தாண்டியது ஒரு மிகப்பெரும் அரியசெயல். பெரு மகிழ்ச்சி ஊட்டுகின்றது. உழைத்த விக்கியர்களை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். புன்னியாமீன் அவர்களோடு மிகப்பலரையும் உளமார பாராட்ட வேண்டும். பலவும் குறுங்கட்டுரையாக உள்ளதாக சிலர் கூறுவதை நம்மில் மிகப்பலரும் அறிவோம். ஆனால் உலகமொழிகளின் வரிசையில் சராசரி கட்டுரையின் நீளம் (mean bytes of articles) என்னும் தர அளவீட்டில் தமிழ் விக்கிப்பீடியா 10 ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடப்பட வேண்டும். இத் தர அளவீட்டில் தொடர்ந்து நாம் முன்னேறி வந்துள்ளோம். உலக மொழிகளில் முதல் 10 ஆவது இடத்தில் இருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. உண்மை, நம்மிடம் இப்பொழுது 30,243 கட்டுரைகள்தாம் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 30,000 கட்டுரைகளை எட்டிய போது (ஏப்பிரல் 2002 இல் ஓராண்டில் அவர்கள் எட்டினார்கள்) அதன் சராசரி கட்டுரையின் நீளம் 1593 பைட்டுதான். (ஆனால் தமிழ் 30 ஆயிரத்தை எட்ட ஏழாண்டுகள் ஆயின). இடாய்ச்சு மொழி விக்கி (செருமன்) அக்டோபர் 2003 இல் 32 ஆயிரம் கட்டுரைகளை எட்டிய போது கட்டுரையின் சராசரி நீளம் 1463 பைட்டுகள். பிரான்சிய விக்கி மார்ச்சு 2004 இல் 31 ஆயிரம் கட்டுரைகளை எட்டியபோது கட்டுரையின் சராசரி நீளம் 1497 பைட்டு. எனவே தமிழ் விக்கி உலக மொழிகள் வரிசையில் இன்று 10 ஆவது இடத்தில் கட்டுரையின் சராசரி நீளம் 3300+ பைட்டு அளவுடன் இருப்பது குறைகூறத்தக்கது அல்ல. தமிழ் விக்கி இன்னும் நூற்றுக்கணக்கான வழிகளில் முன்னேற வேண்டும் என்பதைத் தொடர்ந்து பங்களிக்கும் மிகப்பலரும் உணர்வதே. இதுகாறும் அடைந்துள்ள முன்னேற்றம் மிகப் பெருமை வாய்ந்ததே என் கணிப்பில்!--செல்வா 21:56, 15 ஏப்ரல் 2011 (UTC)
 • அருமையான தகவல்கள் செல்வா. என்னுடைய சிறிய பங்களிப்பும் இதில் அடக்கம் என்று எண்ணும்போது உள்ளம் பூரிப்படைகிறது. தங்களைப் போன்ற கல்விமான்களும் பெரியோர்களும் இருக்கும் இத்தகு ஓர் அவையில் நானும் ஓரிருக்கையைப் பெற்றிருக்கிறேன் என்றெண்ணும் போது மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்கிறது. என்பது வெறும் எண்ணிக்கையன்று. அது பலதுறை பயில்வான்களின் பன்னாள் உழைப்பு. (:***I feel proud to be a Tamil Wikipedian***:)
சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 08:14, 16 ஏப்ரல் 2011 (UTC)
 • சூரியப்பிரகாசு, உங்களைப் போன்ற நல்லிளைஞர்கள் இருப்பதாலும், காலம் காலமாக உங்களைப் போன்றவர்கள் மேன்மேலும் வரவேண்டும் என்பதாலுமே நாம் யாவரும் சேர்ந்துழைக்கின்றோம். நான் மேலே சுட்டிய தகவல்களை http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm என்னும் தளத்தில் இருந்தே பெற்றேன். தக்கவாறு மொழியை மாற்றி, தேவையான தகவல்களைப் பெறலாம். உங்கள் பங்களிப்பு சிறியது அன்று!! .. முன் எடுத்துக்காட்டான அரிய படைப்புகள்!! இதனை ஏதோ முகமனுக்காகக் நான் கூறவில்லை. எத்தனை மாணவர்கள் உங்களைப்போல் இப்படி ஆக்கம் அளித்துள்ளார்கள், அதுவும் தன்னலம் இல்லாமல் என்று பார்த்தால் தெரியும்! இயன்றவாறு இடைவிடாது பங்களியுங்கள், உங்கள் பங்களிப்புகள் நற்பயன் நல்கும்!! --செல்வா 17:46, 16 ஏப்ரல் 2011 (UTC)


ஆங்கில விக்கியில் பைட் எண்ணிக்கையும், தமிழ் விக்கியின் பைட் எண்ணிக்கையும் நேரடியாக ஒப்புட முடாது என்று நினைக்கிறன். ஆங்கிலத்தில் ஒரு எழுத்துக்கு ஒரு பைட், ஆனால் தமிழுக்கு ஒரு எழுத்துக்குப் பல பைட்டுக்கள் வரலாம். --Natkeeran 20:51, 19 ஏப்ரல் 2011 (UTC)

தமிழர் காலக்கணிப்பீடும், பழங்கால இலங்கை காலக்கணிப்பீடும்[தொகு]

தமிழர் காலக்கணிப்பு முறையின் படி சித்திரை முதலாம் திகதி (ஏப்ரல் 14 அல்லது 15ம் திகதிகளில்) ஆண்டுப்பிறப்பு தொடங்குகிறது. அதையே தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடி வந்தோம். (அன்மையில் தைப்புத்தாண்டு உருவாக்கம் வேறு) தமிழர் காலக்கணிப்பு முறைதான் இலங்கையிலும் இருந்தது என்றும், " சிங்களப் புத்தாண்டு என்று ஒன்று இல்லை. சிங்களவர் கொண்டாடுவது தமிழர் புத்தாண்டையே ஆகும். அதனாலேயே அவர்கள் தமிழ் சிங்களப் புத்தாண்டு என அழைக்கின்றனர்." நான் பேச்சு பக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

மகாவம்சத்தின் தொடக்கத்தில் பௌத்தர் நிர்வாணம் அடைந்த நாளை விசாக மாதம் எனக்குறிக்கப்பட்டுள்ளது.

இந்த "விசாக" மாதம் எந்த ஆண்டு கணிப்புக்குறியவை எனப் பார்த்ததில் வில்லெம் கெய்கர் 1912ம் ஆண்டு வெளியிட்ட மகாவம்சத்தில் [1] (அத்தியாயம் 1, பக்கம் 2) ஒரு பட்டியல் உள்ளது. இந்த மாதப் பட்டியலை சற்று ஆய்ந்து பார்த்தால், அது தமிழ் மாதப் பட்டியலின் மாற்று வடிவம் என்பதை ஒப்பு நோக்கலாம்.

பாளி மாதம் தமிழ் மாதம் விளக்கம்
Citta சித்திரை தமிழர், சிங்களப் புத்தாண்டு
Vesakha வைகாசி புத்தர் நிர்வாணம் அடைந்த மாதம்
Jettha ஆணி
Asalha ஆடி
Savana ஆவணி
Potthapada புரட்டாதி
Assayuja ஐப்பசி
Kattika கார்த்திகை
Maggasira மார்கழி
Phussa பூசம் (தை) பூசம்
Magha மாசி
Phagguna பங்குனி

இங்கே இடப்பட்டிருக்கும் பெயர்கள், தமிழ் பெயர்களின் ஒலிப்பில் இருந்து சற்று மாறுபட்டதாக மட்டுமே உள்ளன. அதுவும் தமிழில் இருந்து பௌத்த பிக்குகளால் பாளி மொழியில் எழுதப்பட்டு, பின்னர் பாளியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி மாற்றும் போது இவ்வாறான மாற்றங்கள்/திரிபுகள் ஏற்படுவது இயல்பாகவே இருக்கும். இன்னும் சிலர் சித்திரை ஆண்டுப் பிறப்பு கொண்டாட்டம் 10ம் நூற்றாண்டு அளவிலேயே தோன்றியிருக்கலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் தமிழ் மாதப் பெயர் வழங்கல் முறை கி. மு 3ம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே இலங்கை பௌத்த பிக்குகளால் குறித்து வைக்கப்பட்டுள்ளவற்றின் ஊடாக உள்ளது என்பதன் அடிப்படையில், மிகப் பழங்காலம் தொட்டே தமிழரின் காலக்கணிப்பு முறை இருந்துள்ளது என்பதை கணிக்க முடிகிறது. அதேவேளை பௌத்தம் இலங்கைக்கு அறிமுகமாகும் முன்னரே இலங்கை அனுராதப்புரத்தில் தமிழர் மாத கணிப்பு முறையே இருந்துள்ளது என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது. (அங்கு வாழ்ந்தவர்களும் ஆட்சி அமைத்தவர்களும் தமிழர்களாகவே இருக்க முடியும் என்பதற்கு இதனை ஒரு சான்றகவும் கொள்ளலாம்.) தற்போதும் இலங்கை சிங்களவர்கள் புத்தாண்டாக, தமிழர் புத்தாண்டையே கொண்டாடி வருகின்றனர் என்பது இன்னொரு சான்று. --HK Arun 09:32, 8 ஏப்ரல் 2011 (UTC)

When I was a boy everybody spoke it..it might die with me.[தொகு]

--Natkeeran 16:45, 14 ஏப்ரல் 2011 (UTC)

Culture trumps biology in language development, study argues[தொகு]

--Natkeeran 16:46, 14 ஏப்ரல் 2011 (UTC)

நோய் அறிகுறிகள்[தொகு]

பொதுவாக நோய் அறிகுறிகள் என்று தமிழில் பயன்படுத்தப்படுகின்றது. காய்ச்சல், தலைவலி, இதயமுணுமுணுப்பு, போன்றவை இவற்றுள் அடங்கினாலும் ஆங்கிலத்தில் இதை Symptoms & Signs என்பர். Symptoms என்றால் நோயாளியால் உணரப்படும் நோயின் குறிகள், signs என்றால் மருத்துவரால் அறியப்படும் குறிகள். தமிழில் உள்ள அகரமுதலிகளில் Symptoms என்றாலும் சரி, signs என்றாலும் சரி நோய் அறிகுறிகள் என்று பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது, எனவே எனது பரிந்துரையின்படி

 • Symptoms : நோய் உணர்குறி (நோயாளியால் உணரப்படுவதால்...)
 • Signs : நோய் அறிகுறி (மருத்துவரால் அறியப்படுவதால்...)
என்று அனைத்து மருத்துவக்கட்டுரைகளிலும் காலப்போக்கில் மாற்ற வேண்டும் என்றும் பரிந்துரைகின்றேன். Symptoms & Signs என்று தனித்தனியாக சில இடங்களில் கொடுக்கவேண்டி உள்ளது. அனைத்துலக நோய்கள் வகைப்பாடு - 10 பட்டியல் முழுமை பெறவும் வார்ப்புரு ஒன்றைத் தமிழாக்கம் செய்யவும் இது அவசியமாகின்றது. உங்கள் பரிந்துரைகள், கருத்துக்கள்?--சி. செந்தி 13:24, 16 ஏப்ரல் 2011 (UTC)

இதுபற்றி நான் பல நாட்கள் யோசித்திருக்கின்றேன். ஆனால் எனக்கு இவற்றை சரியாக வேறுபடுத்திப் பெயரிட முடியவில்லை. உங்கள் பரிந்துரைகள் மிகவும் ஏற்புடையவையாகவே தோன்றுகின்றன. மிகவும் நன்றி செந்தி. --கலை 13:26, 16 ஏப்ரல் 2011 (UTC)

”நோய் அடையாளம்” என்று "signs" ஐக் குறிக்க இயலுமா? .--சோடாபாட்டில்உரையாடுக 13:43, 16 ஏப்ரல் 2011 (UTC)

அறிகுறி (ஒன்று இதுவா என தெரிந்துக்கொள்வதற்கான ஆரம்ப நிலை) அடையாளம் (ஒன்று இதுதான் என தெரியும் முழுமையான நிலை) அந்த வகையில் செந்தியின் சொற்கள் பொருத்தமானவை. --HK Arun 14:30, 16 ஏப்ரல் 2011 (UTC)

 • செந்தியின் பரிந்துரைகள் மிக நன்று! நோய்க்குறி என்பதற்கு ஈடான ஆங்கிலச் சொல் என்ன? உணர்குறி, அறிகுறி இரண்டுமே ஏறத்தாழ ஒரே பொருள் கொண்டவையே (symptoms and signs also have very similar meanings). யார் உணர்கிறார்கள், யார் அறிகிறார்கள் என்பதைக் கொண்டு பொருள் மாறுபடக்கூடும். நோயாளியே சில உடல் நிலைகளை தான் உணரும் உணர்வாக உணரமுடியும் (காந்துகின்றது, எரிகின்றது, வலிக்கின்றது, குமட்டல் ஏற்படுகின்றது..), ஆனால் கொப்புளம் உள்ளது, சிவந்து உள்ளது போன்றவற்றையும், பிறவற்றையும் அது சுட்டும் நிலையை அறிந்தவர் அறியத்தக்கனவாக இருப்பது அறிகுறி (மருத்துவர் அறியத்தக்க அறிகுறி, நோய் அறிகுறி) என்று கொள்ளலாம். ஆனால் இப்படி வலித்தால் இன்னது என்று நோயாளிகளும் நோயை (தன் போக்காக, இது தவறானதாகவும் அமையலாம்) அறிந்துகொள்ள உதவும். ஆகவே அறிகுறி, உணர்குறி என்பனவற்றை வழக்கால் இது இன்னது என்று துறைவழக்காக வேறுபடுத்திக் கொள்ளுதல் வேண்டும். --செல்வா 17:45, 16 ஏப்ரல் 2011 (UTC)
 • நோய் உணர்குறி, நோய் அறிகுறி என்று வேறுபடுத்துவது மிக்க நன்று. சொற்தேர்வுக்குப் பாராட்டுகள்!--பவுல்-Paul 18:23, 16 ஏப்ரல் 2011 (UTC)
அனைவருக்கும் மிக்க நன்றிகள்...--சி. செந்தி 19:59, 17 ஏப்ரல் 2011 (UTC)

சொற்களை சரிபார்க்க உதவி தேவை!!![தொகு]

கீழ் காணும் சொற்கள் - சரியா எனக்கூறவும் - நந்தகுமார்

Immunology - எதிர்ப்பியல் Immune system - எதிர்ப்பு அமைப்பு Antigen - எதிர்ப்பி Antibody - எதிர்ப்பான் Immunity - நோயெதிர்ப்பு Vaccinology - தடுப்பாற்றலியல் Autoimmune diseases - தன்னெதிர்ப்பு நோய்கள் Immune complex - எதிர்ப்பு இணைவு

 • எனது உயிரியல் அறிவுக்கு எட்டியபடி அனைத்துச் சொற்களும் சரியானவையே நந்தகுமார். நீங்கள் விக்சனரியில் இவற்றைத் தேடிப் பார்க்கலாமே! விக்சனரி --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 10:36, 17 ஏப்ரல் 2011 (UTC)
சூர்யா, நந்தகுமார் இதனை விக்சனரி கோரப்பட்ட சொற்கள் பக்கத்தில் தான் இட்டிருந்தார். நான் தான், நமது உயிரியல் திட்டப்பயனர்களின் கருத்தைத் தெரிந்து கொள்ள இங்கு இடும்படி வேண்டுகோள் விடுத்திருந்தேன் (இங்கு ஆலமரத்தடியில் தற்போது உயிரியல் உரையாடல்கள் நடந்து கொண்டிருப்பதால், இதுவும் பல பேர் கண்ணில் படும் என்று நினைத்து)--சோடாபாட்டில்உரையாடுக 13:27, 17 ஏப்ரல் 2011 (UTC)

இலங்கையில் Immunology - நிர்ப்பீடனவியல், Immune system - நிர்ப்பீடனத்தொகுதி முதலான சொற்களைப் பயன்படுத்துகிறோம். இவை தூய தமிழ்ச் சொற்களா என்பது தெரியவில்லை.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 10:56, 17 ஏப்ரல் 2011 (UTC)

 • இலங்கை வழக்கில் உள்ள நிர் என்பது நிர்மூலம், நிர்தாட்சண்யம் போன்ற ஏராளமான சொற்களில் வரும் "இல்லை" என்னும் பொருள் தரும் சமசுக்கிருத முன்னொட்டு (இதனாலேயே நான் நிர்வாகம் என்பதை, நிருவாகம் என்று எழுதப் பரிந்துரைப்பது.. நில், நிற்பது என்பதால் நிறுவாகம் என்றும் சொல்லலாம்..). "-பீடனவியல்" என்பதும் பொருள் விளங்கவில்லை. எனவே இலங்கையில் வழங்கும் இச்சொற்களுக்கு மாறாக பிற நல்ல தமிழ்ச்சொற்கள் தேர்ந்தெடுப்பது நல்லது. கீழ்க்காணும் பரிந்துரைகளை எண்ணிப்பாருங்கள் (பலவும் நந்தகுமார் கூறியதே):
 • Immunology - நோயெதிர்ப்பியல்
 • Immune system - நோயெதிர்ப்பியம்
 • Antigen - எதிர்ப்பி, எதிர்க்கூறு
 • Antibody - எதிர்ப்பான்
 • Immunity - நோயெதிர்ப்பு, நோயெதிர்ப்பாற்றல்
 • Vaccinology - தடுப்பாற்றலியல், நோய்த்தடுப்பூட்டியல் (தடுப்பு ஊட்டு இயல்)
 • Autoimmune diseases - தன்னெதிர்ப்பு நோய்கள்
 • Immune complex - எதிர்ப்பு இணைவு, எதிர்ப்பிய அணைவம், எதிர்ப்பிய இணைமம்

--செல்வா 13:03, 17 ஏப்ரல் 2011 (UTC)

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!!! நோயெதிர்ப்பியல் (infection and immunity) மற்றும் தன்னெதிர்ப்பு நோய்கள் (Autoimmune diseases) ஆகியவற்றை உள்ளடக்கியிருப்பதால், எதிர்ப்பியல் (Immunology) என்பது சரி என்பது என் எண்ணம். மேலும் உரையாடுக. இச்சொற்கள் சரியாயின் இவை குறித்து எழுத விழைகிறேன் - நந்தகுமார்.

சூரிய பிரகாசுக்கு, தமிழ் விக்சனரியில் கீழ் கண்டவாறு பொருள் உள்ளது. சில சொற்கள் கடினமாக (அல்லது) பொருள் மயக்கமாக உள்ளதால் மேற்கூறிய சொற்களை எழுதியிருந்தேன்.

 • Immunology - தடுப்பாற்றலியல்; தடுப்பாற்றியல்; தடுப்புத்திறனியல்
 • Immune system - நோய் எதிர்ப்பு மண்டலம்;நோய் எதிர்புத் தொகுதி
 • Antigen - உடற் காப்பு ஊக்கி; எதிர்ச்செனி; பிறபொருளெதிரியாக்கி; எதிரியாக்கி
 • Antibody - உடற்காப்பு மூலம்; எதிர்ப்பொருள்; பிறபொருளெதிரி
 • Immunity - நோய் எதிர்ப்புத் திறன்; நோய்த் தடுதிறன்; நோய்த் தடைக் காப்பு
 • vaccinology -
 • Autoimmune diseases -
 • Immune complex - நோய்எதிர்ப்பிகளின் கூட்டு

- நந்தகுமார்

செல்வா கூறியதன்படி நிர்பீடனம் உகந்த சொல் அல்ல என்பது புரிகின்றது. நோயில் இருந்து காத்தல் ("protection from disease") என்பது ஆங்கிலத்தில் உள்ள கருத்து, எனினும் நோயை எதிர்த்தல் என்பதும் ஒன்று, செல்வாவின் பரிந்துரைகள் நன்று,
 • Immune system - நோயெதிர்ப்பியம் Icons-mini-page tick.gif, நோய் எதிர்ப்புத்தொகுதி என்றும் அழைக்கலாம் அல்லவா?
எனது பரிந்துரை:
 • Antigen - காவுடலாக்கி,
 • Antibody - காவுடல்
விளக்கம்:

Antigen என்பது antibody generator [Anti(body) + Gen] ; Antigen ஒன்று உடலில் புகுவதால் antibody உருவாக்கப்படுகின்றது. எதிர்ப்பி, எதிர்ப்பான் என்பது சரியே எனது பரிந்துரையின்படி சற்று இவற்றின் தொழிலை எண்ணிப்பார்த்தால்,

antibody என்பது உடலில் காக்கும் தொழில் புரிகிறது, மேலும் அவை சிறுதுணிக்கைகள் போன்றவை. எனவே எனது பரிந்துரை காக்கும் + உடல் = காவுடல் (இங்கு உடலைக் காக்கும் என்றும் எடுக்கலாம் அல்லது காக்கும் உடல் (protecting particle) என்றும் கருதலாம்).
antigen என்பது ஏற்கனவே கூறியது போல ( antibody generator [Anti(body) + Gen]) என்பதால் காவுடலாக்கி எனலாம்.--சி. செந்தி 20:31, 17 ஏப்ரல் 2011 (UTC)

செல்வாவின் விளக்கத்துக்கு நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 22:44, 17 ஏப்ரல் 2011 (UTC) ஆனால், செந்தி அவர்களே, antibody can be protective as well as pathogenic. எனவே, பொதுபெயரான "எதிர்ப்பான்" "எதிர்ப்பி" சரியாக இருக்கும் என எண்ணினேன் - நந்தகுமார்.

நீங்கள் antibody - autoimmune பற்றிக் கருதுகின்றீர்கள் என நினைக்கிறேன், அப்படி ஒரு கருத்து எழுமெனில் "எதிர்ப்பான்" "எதிர்ப்பி" என்பதற்கு எனக்கு மறுப்பேதும் கிடையாது.--சி. செந்தி 18:40, 19 ஏப்ரல் 2011 (UTC)


ஏற்கனவே இந்த சொற்களில் சிலவற்றைப்பற்றி வெவ்வேறு இடங்களில் கலந்துரையாடியுள்ளோம். அத்துடன் சில கட்டுரைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. கீழே உள்ள கட்டுரைகளையும் பாருங்கள்.


--கலை 21:09, 19 ஏப்ரல் 2011 (UTC)

ஏற்கனவே இங்கு உள்ளது, மேலும் அவை பொருத்தமானவைகளாகத் தோன்றுகின்றது (பிறபொருளெதிரி என்று தமிழில் இலங்கையில் படித்ததாக ஞாபகம்!); குழப்பம் இல்லாமல் இவையே எல்லாக் கட்டுரைகளிலும் பயன்படுத்தல் நன்று எனக்கருதுகின்றேன்.--சி. செந்தி 21:23, 19 ஏப்ரல் 2011 (UTC)

இந்தக் கலந்துரையாடலை விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை பக்கத்துக்கு நகர்த்தியுள்ளேன். --கலை 22:54, 19 ஏப்ரல் 2011 (UTC)

Bab-el-Mandeb (பாப்-எல்-மான்டெப்)நீரிணை:[தொகு]

Bab-el-Mandeb (பாப்-எல்-மான்டெப்)நீரிணை:

இது செங்கடலை,ஏடன் வளைகுடாவோடும்,அரபியன் கடலோடும் இனைப்பதோடு ஜிபொஊடி(Djibouti),எரிட்ரி,ஏமன் ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டது.இது கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து அரபியன் பெனின்சுலாவை பிரிக்கிறது.பாப்-எல்-மான்டெப் என்பதற்கு அராபி மொழியில் "கண்ணீர் கதவு"(Gate of Tears)பொருளாகும்.ஏனென்றால் இந்த குறுகலான நீரிணை வழியாக கப்பலை செலுத்துவது என்பது கப்பல் மாலுமிக்கு பெரும் கடினமான செயலாகும்.

Marcin Jakubowski: Open-sourced blueprints for civilization[தொகு]

Marcin Jakubowski: Open-sourced blueprints for civilization --Natkeeran 03:07, 18 ஏப்ரல் 2011 (UTC)

விக்கிப்பீடியா வளாகத் தூதுவர்[தொகு]

ஆங்கில விக்கியில் விக்கி வளாகத் தூதுவர் பணிக்கான விண்ணப்பம் குறித்த அறிவிப்பு இருந்ததைக் கண்டு மகிழ்வுற்றேன். தற்போதைக்கு பூனாவை மையப்படுத்தி நிகழ்த்தப்படும் இது இந்தியாவின் பிற பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சட்டக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி, கால்நடை மருத்துவம், மருத்துவக் கல்லூரி (ஆங்கிலம், சித்தா, ஆயுர்வேதம்) எனப் பல கல்லூரிகளிலும் உள்ள பயனர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வர் என நம்புகிறேன். புதுச்‌சேரியில் ஏதாவது மருத்துவக் கல்லூரியில் பணியில் சேருங்கால் நானும் வளாகத் தூதுவராகச் செயல்பட ஆர்வமாய் உள்ளேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 05:24, 18 ஏப்ரல் 2011 (UTC)

இந்தியாவில் உள்ள பயனர்கள் தாம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இணைந்திருப்பின் இப்பணியில் தம்மை இணைத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இலங்கையிலும் இத்தகைய முன்னெடுப்புக்களை செயற்படுத்துவது பயனுடையது.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 06:01, 18 ஏப்ரல் 2011 (UTC)

தினத்தந்தியில் விக்கிப்பீடியா பற்றி![தொகு]

தமிழகத்தில் வெளிவரும் நாளிதழான தினத்தந்தியில் இணைப்பாக திங்கள் கிழமை தோறும் வரும் மாணவர் ஸ்பெஷல் என்ற இணைப்பிதழில் விக்கிப்பீடியா குறித்து ஆங்காங்கைச் சேர்ந்தவர் ஒருவர் எழுதத் தொடங்கியுள்ளார். வரும் வாரங்களில் விக்கிப்பீடியா குறித்து பல செய்திகள் எழுத உள்ளதாக அறிமுகக் கட்டுரையில் கூறியுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவைக் குறித்தும் ஒரு சிறு அறிமுகம் கொடுத்துள்ளார். வாய்ப்பு கிடைக்கும் நண்பர்கள் படிக்கவும், விக்கிப்பீடியாவைப் பற்றி அறிய பலருக்கும் இது உதவலாம். --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 10:15, 18 ஏப்ரல் 2011 (UTC)

விக்கிப்பீடியா விடுப்பு![தொகு]

பருவத் தேர்வுகள் துவங்கிவிட்ட காரணத்தினால் இனியாவது படிக்கத் துவங்க வேண்டும். எனவே இனி மே மாத இறுதியில் தான் விக்கிப்பீடியா பக்கம் வரமுடியும். உதவி தேவைப்படுவோர் 0091 8148446213 என்ற எண்ணில் என்னைத் தொடர்பு கொள்ளவும்! உதவக் காத்திருக்கிறேன்!!

இப்போதைக்கு என் வேலைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டேன். மே மாத இறுதி வரை முதற்பக்கப் படங்கள் அணியமாக உள்ளன. எனவே, முதற்பக்க இற்றைப்படுத்துனர்கள் அப்பகுதி பற்றிக் கவலைப் பட வேண்டாம். போய் வருகிறேன் நண்பர்களே! உங்களையெல்லாம் ஒரு மாதகாலம் பிரிகிறேன் என்ற சிறிய மனவருத்தத்தோடு செல்கிறேன்!!

தேர்வுகளை கவனமாக எழுதுங்கள். எளிதான வினாத்தாள் அமைய என் வாழ்த்துக்கள் :-)--சோடாபாட்டில்உரையாடுக 04:24, 19 ஏப்ரல் 2011 (UTC)
  • தேர்வுகள் எளிதான அமைய பிரார்த்திக்கிறேன் சூர்ய பிரகாசு, வெற்றிபெற என் வாழ்த்துக்கள். போய் வாருங்கள். மீண்டும் சந்திப்போம்--P.M.Puniyameen 05:22, 19 ஏப்ரல் 2011 (UTC)

கடுமையாகப் பயிற்சி செய்தால் எளிமையாக தாக்கிவிடலாம்.வாழ்த்துக்கள்--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 08:34, 19 ஏப்ரல் 2011 (UTC)

சூர்யா, உயர்மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வாழத்துகள்!--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 11:50, 19 ஏப்ரல் 2011 (UTC)

இன்று போய் வென்று வாருங்கள்!--சி. செந்தி 18:41, 19 ஏப்ரல் 2011 (UTC)

தேர்வுகளைத் திறமையாகச் செய்ய வாழ்த்துக்கள்.--கலை 19:46, 19 ஏப்ரல் 2011 (UTC)

சூர்யா, நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகிறேன். -- சுந்தர் \பேச்சு 09:45, 20 ஏப்ரல் 2011 (UTC)
சூர்யா, தேர்வில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துகள் !! உங்கள் விடுப்பிலும் முதற்பக்க இற்றைப்படுத்தலைப் பற்றி கவலைப்படும் உங்கள் ஈடுபாடு பாராட்டுற்குரியது. --மணியன் 13:30, 21 ஏப்ரல் 2011 (UTC)

முதன்மையான (சற்றே கடினமானவுமான) தேர்வுகள் முடிந்துவிட்டன. இனியும் நான் விடுப்பில் இல்லை!!! --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 14:10, 9 மே 2011 (UTC)

இலக்குப் பதிவு[தொகு]

ஒரே நாளில் குறைந்தது 200 கட்டுரைகளை இலக்கு வைத்துப் பதியும் வெற்றிப் பதிவு முயற்சி ஒன்றை புன்னியாமின் நாளை செயற்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார். நாளை 20ம் திகதி இலங்கை சீர்நேரப்படி காலை 6.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை சுமார் 18 மணித்தியாலங்கள் முழு நேரமாகப் பணியாற்றி இத்தகைய செயலை புரியத் திட்டம் வைத்துள்ளார். அவரது முயற்சி தடையின்றி நடந்தேற வாழ்த்துக்கள். பயனர்கள் தமது உரை திருத்தங்களையும் உற்சாகத்தையும் வழங்குமாறு வேண்டுகின்றேன். நன்றி--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 09:05, 19 ஏப்ரல் 2011 (UTC)

வாழ்த்துக்கள் புன்னியாமீன், உங்கள் கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.--Kanags \உரையாடுக 09:34, 19 ஏப்ரல் 2011 (UTC)

உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் - நந்தகுமார்

உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாது புன்னியாமீன் செய்யும் பணிகள் மலைக்க வைக்கின்றன! அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் விரைவில் முழுநலம் பெற்று முன்னை விட புத்துணர்வுடன் செயல்பட இறை‌வனை வேண்டுகிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 11:53, 19 ஏப்ரல் 2011 (UTC)

புன்னியாமீன், உங்கள் முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள். --மயூரநாதன் 18:16, 19 ஏப்ரல் 2011 (UTC)

வாழ்த்துகள், புன்னியாமீன். உடம்பையும் பார்த்துக் கொள்ளுங்கள். -- சுந்தர் \பேச்சு 18:18, 19 ஏப்ரல் 2011 (UTC)

தங்களது முயற்சிக்கும் அது இனிதே நிறைவு பெறவும் வாழ்த்துக்கள். தங்களை வருத்திச் செய்யாதீர்கள், உங்களால் இயலுமானவரை செய்யுங்கள்.--சி. செந்தி 18:37, 19 ஏப்ரல் 2011 (UTC)

வாழ்த்துக்கள் புன்னியாமீன். --கலை 19:44, 19 ஏப்ரல் 2011 (UTC)
வாழ்த்துக்கள் தெரிவித்து மன தைரியத்தைத் தந்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி. இது ஒரு முயற்சி மட்டுமே --P.M.Puniyameen 23:59, 19 ஏப்ரல் 2011 (UTC)
 • ஒன்றிரண்டு கட்டுரைகளா? இருநூறு கட்டுரைகள்... அதுவும் ஒரு நாளில்... உண்மையில் புன்னியாமீன் முயற்சி மாபெரும் முயற்சி. இந்த முயற்சியில் அவருக்கு வெற்றி கிடைத்திட என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:26, 20 ஏப்ரல் 2011 (UTC)

மனமார்ந்த வாழ்த்துக்கள் புன்னியாமீன் - பயனர்:கி. கார்த்திகேயன்

வெற்றிப் பயணத்தின் ஆறாவது மணித்தியாலங்கள் தாண்டியமைக்கு ஓர் உற்சாகம்.--192.248.66.3 06:39, 20 ஏப்ரல் 2011 (UTC)
இலங்கை நேரப்படி அதிகாலை 5.40க்கு ஆரம்பித்த எமது பணி பகல் 1.45 மணியாகும் போது 131 பதிவுகளை அடைந்து விட்டது. தமிழ் கணனிப்பதிப்பில் என்னுடன் மூவர் பணியாற்றுகின்றனர். எனவே எதிர்பார்த்த இலக்கினை அடையமுடியும் எனக்கருதுகின்றேன். வாழ்த்துக்களை ஆலமரத்தடியிலும், மின்னஞ்சல் மூலமாகவும், தொலைப்பேசி மூலமாகவும் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.--P.M.Puniyameen 08:21, 20 ஏப்ரல் 2011 (UTC)
எமது பணி பகல் 2.30 மணியாகும் போது 150 பதிவுகளை அடைந்து விட்டது. --P.M.Puniyameen 08:58, 20 ஏப்ரல் 2011 (UTC)

200 என்ற இலக்குப் பதிவு[தொகு]

தமிழ் விக்கி சாதனையாளர்

புகழனைத்தும் படைத்தவனுக்கே. இலங்கை நேரப்படி அதிகாலை 5.40க்கு ஆரம்பித்த எமது பணி மாலை 5.50 மணியாகும் போது 200 என்ற இலக்குப் பதிவுவை அடைந்து விட்டது. ஒத்துழைத்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி…. நன்றி…. நன்றி. முயற்சி தொடரும்….. --P.M.Puniyameen 12:28, 20 ஏப்ரல் 2011 (UTC)

புன்னியாமீன் குடும்பம் மற்றும் அவர்களது குழுவினருக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். குடும்பமாக அனைவரும் பங்குபற்றியது அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக உள்ளது. உங்கள் கட்டுரைகளைப் பார்த்து அவ்வப்போது சோடாபாட்டில் திருத்தங்களைச் செய்து வருகிறார். அவருக்கும் நன்றிகள்.--Kanags \உரையாடுக 12:36, 20 ஏப்ரல் 2011 (UTC)
அதிகமான சிரமத்தைத் தந்து விட்டேன் சோடாபாட்டில். அதற்காக மன்னிப்பினைக் கோரிக் கொள்கின்றேன் :Kanagsசிடமும் கூட --P.M.Puniyameen 13:02, 20 ஏப்ரல் 2011 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் இது ஒருவரின் ஒருநாள் சாதனை. வாழ்த்துக்கள் புன்னியாமீன் --HK Arun 13:22, 20 ஏப்ரல் 2011 (UTC)

புன்னியாமீனுக்கும் அவருக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 16:58, 20 ஏப்ரல் 2011 (UTC)

 • தமிழ் விக்கிப்பீடியாவில் தன் குடும்பத்தினர் உதவியுடன் தனிப்பெரும் சாதனை செய்த புன்னியாமீன் அவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக இந்த விக்கிப்பீடியா சாதனையாளர் விருது அளிக்கப்படுகிறது. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:39, 20 ஏப்ரல் 2011 (UTC)
தேனி.எம்.சுப்பிரமணி, தங்கள் பதக்கத்தை ஏற்றுக் கொண்டு எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்--P.M.Puniyameen 17:49, 20 ஏப்ரல் 2011 (UTC)
புன்னியாமீன், ஒரு இலக்கை ஏற்படுத்திக்கொண்டு அதைக் குறித்தபடி நிறைவேற்றியுள்ளீர்கள். உங்களுக்கும், உங்களுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அண்மைக்காலத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் வேகமான வளர்ச்சிக்கு நீங்கள் பெரும் பங்களிப்புச் செய்துள்ளீர்கள். அதற்காக எனது நன்றிகள். --- மயூரநாதன் 18:33, 20 ஏப்ரல் 2011 (UTC)

மிக்க நன்றி மயூரநாதன் அவர்களே--P.M.Puniyameen 18:50, 20 ஏப்ரல் 2011 (UTC)

ஒரு இலக்கை நிர்ணயித்து, அதில் வெற்றியடைந்தமைக்கும், உங்கள் சாதனைக்கும் எனது வாழ்த்துக்களும்.--கலை 19:30, 20 ஏப்ரல் 2011 (UTC)

மிக்க நன்றி கலை--P.M.Puniyameen 19:48, 20 ஏப்ரல் 2011 (UTC)
இந்த அரிய செயல் நிறைவேறியமைக்கு இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதுடன் புன்னியாமீனுக்கும் அவருக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தங்களைப் போன்று நாம் அனைவரும் இவ்வாறு செயற்பட்டால் தமிழ் விக்கிப்பீடியா எப்படி உயரும் என்று நினைத்துப்பார்க்கின்றேன். நன்றிகள் அனைவருக்கும்.--சி. செந்தி 19:57, 20 ஏப்ரல் 2011 (UTC)
மிக்க நன்றி செந்தி--P.M.Puniyameen 20:07, 20 ஏப்ரல் 2011 (UTC)

இலக்குப் பதிவின் அடைவு 300[தொகு]

புகழனைத்தும் படைத்தவனுக்கே. இலங்கை நேரப்படி அதிகாலை 5.40க்கு ஆரம்பித்த எமது பணி நள்ளிரவு 1.30 மணியாகும் போது இலக்குப் பதிவின் அடைவு 300 ஆகி விட்டது. எமது இலக்கைவிட 100 அதிகம். ஒத்துழைத்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். --P.M.Puniyameen 20:07, 20 ஏப்ரல் 2011 (UTC)

புன்னியாமீன், உங்களுக்கும் உங்களோடு ஒத்துழைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.--Kanags \உரையாடுக 21:06, 20 ஏப்ரல் 2011 (UTC)
வாழ்த்துக்கள் புன்னியாமின். தங்கள் இலக்குப் பதிவு எல்லையை அடைந்த வெற்றிநொடிகளில் அலுவலக விழா ஒன்றிலிருந்ததால் தொலைபேசியில் மட்டுமே வாழ்த்த முடிந்தது. விக்கிப்பயனர்களுக்கு நீங்கள் எடுத்துக்காட்டாகி விட்டீர்கள்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:09, 20 ஏப்ரல் 2011 (UTC)
வாழ்த்துக்கள் புன்னியாமீன் மற்றும் அணியினர். கலக்கீட்டிங்க :-)--சோடாபாட்டில்உரையாடுக 04:28, 21 ஏப்ரல் 2011 (UTC)
வாழ்த்துகள் புன்னியாமீன் !! உங்கள் அலுவலக மற்றும் குடும்பத்தினரின் பங்களிப்புகளை ஒருங்கிணைத்து ஒரு விக்கி வேள்வியே நடத்தி விட்டீர்கள்..சக பயனர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் தூண்டுதலையும் தருகின்ற ஓர் நிகழ்வாக அமைந்திருந்தது. உங்கள் மூலம் இதில் பங்கேற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துகளும் உரியது. விக்கியில் உடனுக்குடன் உங்குக்கு உதவிய சோடாபாட்டில், சிறீதரன் போன்றோருக்கும் எனது நன்றிகள் !! --மணியன் 13:26, 21 ஏப்ரல் 2011 (UTC)

நன்றிகள்[தொகு]

ஏப்ரல் 20. 2011 இலங்கை நேரப்படி அதிகாலை 5.40 முதல், நள்ளிரவு 1.30 மணிவரை சுமார் 20 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக 300 கட்டுரைகளை தரவேற்றம் செய்த நேரத்தில் நான் எதிர்பாராத விதமாக உலகலாவிய ரீதியில் பல பயனர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டும், மின்னஞ்சல் மூலமும் வாழ்த்துக்களைத் தெரிவித்து மனதைரியத்தைத் தந்து ஊக்கப்படுத்தினர். அதே போல ஆலமரத்தடி மற்றும் எனது பேச்சுப் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அனைவருக்கும் இவ்விடத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். "வாழ்த்துக்களை எதிர்பார்த்து என் இலக்குப் பயணத்தை ஆரம்பிக்கவில்லை'. இருப்பினும் தொடர்ச்சியாக ஒரே மூச்சில் வேலை செய்ததினால் உடல், மன சோர்வு ஏற்பட்ட நிலையில் இந்த வாழ்த்துக்கள் ஒரு புதுத் தெம்பினைத் தந்தன. 200 பதிவுகளுடன் நிறுத்திக் கொள்ள இருந்த நேரத்தில் பயனர் சிவகுமார் தொலைப்பேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு இயலுமான வரை தொடரும் படி தைரியத்தைத் தந்தார். அவரின் அன்புக் கட்டளை இல்லாதிருப்பின் 200உடன் நிறுத்தியிருப்பேன். அவர் அலுவலக விடயமாக ஒரு கூட்டத்தில் இருந்த போதும் கூட அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு எண்ணிக்கையை கேட்டுக்கொண்டேயிருந்தார். எனது இந்த இலக்குப் பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டதொன்றல்ல. 19ம் திகதி காலை விக்கிப்பீடியாவைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எனது அலுவலக கணனி இயக்குனர்கள் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டால் என்ன என என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அதன் பின்பே என் சிந்தனையில் இத்திட்டம் உதித்தது. பின்பு சோடா கெனக்ஸ் சிவகுமார் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தேன். சிவகுமார் அதை விக்கியிலும் அறிவித்து விட்டார். அதன் பின்பே அனைத்துத் திட்டங்களையும் தீட்டி 20ம் திகதி இலக்குப் பயணத்திற்கு ஆயத்தமானேன். விக்கி செய்தி வந்தபின்பே கட்டுரைகளை டைப் பண்ண ஆரம்பித்தோம். ஏனவே 300கட்டுரைகளும் 19ம் திகதி மாலையிலும் 20ம் திகதி காலை முதல் மாலை வரையிலும் டைப் பண்ணப்பட்டவையே. இதற்காக 3 கனணிகளை பயன்படுத்தினோம். எனது அலுவலகத்தில் பணிபுரியும் மௌலவி ரமீஸ்தீன் அவர்களும், திருமதி இல்முன் நிஸா ஹிலால் அவர்களும் மற்றும் என் மகன் சஜீர் அகமது, மகள் பாத்திமா சம்ஹா ஆகியோருடன் இணைந்து என் மனைவி மஸீதா புன்னியாமீனும் இப்பணிக்கு முழுமையான பங்களிப்பை நல்கினர். இவ்வாறே எமது கூட்டு முயற்சி நடைபெற்றது. அனைத்தும் என்னால் நேரடியாக வழிகாட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டதுடன் 300 கட்டுரைகளும் என்னாலே தரவேற்றம் செய்யப்பட்டன. ஒத்துழைத்த ஆதரவு தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். விசேடமாக கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்படும் போது உடனுக்குடன் திருத்தங்கள் செய்த சோடாவுக்கும் கெனக்சுக்கும் எனது விசேட நன்றிகள்.--P.M.Puniyameen 12:23, 21 ஏப்ரல் 2011 (UTC)

சிறப்புப் பாராட்டுகள்[தொகு]

மலைப்பூட்டும் படையெடுப்பு!! :) முன்னர் பயனர் நிரோ சக்திவேல் அவர்கள் படையெடுப்புபோல் புயல் விரைவில் திரைபப்படங்கள் பற்றி கட்டுரைகள் எழுதினார் (200-500 என ஓரிரு நாட்களில்!!). அதுபோல ஆனால் வேறு துறைகளில் புன்னியாமீன் அவர்கள் நிறைவேற்றியிருக்கும் அரிய செயலை உளமாரப் பாராட்டுகிறேன். அவருக்கும் அவருடன் ஒத்துழைந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!! --செல்வா 01:09, 24 ஏப்ரல் 2011 (UTC)

மிக்க நன்றி செல்வா--P.M.Puniyameen 04:43, 24 ஏப்ரல் 2011 (UTC)

கட்டுரைக்கு தேவையான படங்களை எப்படி பதிவேற்றம் செய்வது?[தொகு]

நான் ஒரு புதிய பயனர்,பாப்-எல்-மான்டெப் பற்றிய எனது கட்டுரையை எழுதுகிறேன்.அதற்கான படத்தை எப்படி பதிவேற்றம் செய்வது? help needed!--−முன்நிற்கும் கருத்து N.e.sasikumar (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இந்த உதவியை கேட்பதற்கான சரியான பக்கம் விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் ஆகும். அங்கு பரணிலிடப்பட்ட தொகுப்புகளில் படிமங்கள் குறித்து பலமுறை வழிகாட்டப்பட்டுள்ளது. மேலும் விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி பக்கத்தையும் காணலாம்.படிமங்கள் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு ஏற்ப பொதுவுரிமை அல்லது காப்புரிமை விலக்கிய படிமங்களாக இருப்பது மிகத்தேவையாகும்.--மணியன் 13:44, 21 ஏப்ரல் 2011 (UTC)

சொற்களை சரிபார்த்தல்[தொகு]

இங்கு ஆலமரத்தடியில் சொற்களை சரிபார்க்க உதவி தேவை] என்ற தலைப்பில் இருந்த விடயங்களைக் கவனிக்கத் தவறி விட்டேன். ஆலமரத்தடியில் எழுதப்படும் விடயங்கள் 'என் கவனிப்புப் பட்டியலில்' இடம்பெற்றாலும், தலைப்புக்கள் முழுமையாக பார்க்காமல், இறுதியாக வந்த தலைப்பைப் பார்த்துவிட்டு சில சமயம் விட்டு விடுகின்றேன். இவ்வாறு சொற்கள் தொடர்பான கலந்துரையாடலுக்கு, குறிப்பிட்ட கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலோ, அல்லது கட்டுரை இல்லாதவிடத்து, அதற்காக ஒரு தனியான பக்கத்திலோ எழுதினால் நல்லது எனத் தோன்றுகின்றது. இப்படியான சொற்கள் பற்றிய கலந்துரையாடலுக்கு, அதற்காக ஒருதனியான பக்கத்தை உருவாக்குவோமா?
சொற்களை சரிபார்க்க உதவி தேவை என்ற மேற்குறிப்பிட்ட தலைப்பில் கேட்கப்பட்டிருந்த சில சொற்கள் தொடர்பில் கட்டுரைகள் இருப்பதையும், சிலவற்றிற்கு கலந்துரையாடல் ஏற்கனவே நிகழ்ந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளேன். சில கலந்துரையாடல்கள் எந்தப் பக்கத்தில் நிகழ்ந்ததென என்னால் நினைவில் கொண்டு வர முடியவில்லை. Autoimmune பற்றிய கலந்துரையாடல் அதற்குரிய பேச்சுப் பக்கத்தில் உள்ளது. பார்க்க:பேச்சு:தன்னுடல் தாக்குமை --கலை 21:31, 19 ஏப்ரல் 2011 (UTC)

விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை பக்கத்தைப் பயன்படுத்தலாம். --Natkeeran 22:21, 19 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி நக்கீரன். இந்தப் பக்கத்தை கவனிக்கவில்லை. இங்கே உள்ள சொற்களை சரிபார்க்க உதவி தேவை] கலந்துரையாடலையும் அந்தப் பக்கத்து மாற்றுகின்றேன். --கலை 22:48, 19 ஏப்ரல் 2011 (UTC)
சொல் பற்றிய உரையாடல்கள் நிகழ்ந்துள்ள பேச்சுப் பக்கங்களின் பகுப்பையும் பாருங்கள், கலை. இவை அனைத்தையும் ஒரு பக்கத்தில் இருந்து அணுகுமாறு செய்ய வேண்டும். -- சுந்தர் \பேச்சு 05:03, 20 ஏப்ரல் 2011 (UTC)

நாட்டுப் பண்கள்[தொகு]

நாட்டுப்பண்கள் தொடர்பான கட்டுரைகளில் சில நாட்டின் பெயர் சுட்டி தலைப்பிடப்பட்டுள்ளன. எ.கா:சீன நாட்டுப்பண். சில நாட்டுப்பண்களின் தொடக்கவரி கொண்டு பெயரிடப்பட்டுள்ளன.எ.கா:ஜன கண மன இவற்றை ஒரே அமைப்பில் சீர்படுத்துவது பற்றிய பயனர் கருத்துக்கள்??நாட்டின் பெயர் சுட்டி தலைப்பிடுவது நல்லதேன எண்ணுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 06:01, 21 ஏப்ரல் 2011 (UTC)

பண்ணின் பெயர் தலைப்பாக இருந்தால் பொருத்தாமாக இருக்கும் என்பது என் கருத்து. ஏனென்றால், பல பண்கள், நாட்டுப் பண்ணாவதற்கு முன்பே தன்னிச்சையாகப் புகழ்பெற்றவை (ஜன கன மன, அமர் சோனா பங்களா, லா மார்செயாசு போன்றவை). பல நாடுகள் ஒரு பண் புகழ்பெற்ற பின்னரே அதனை நாட்டுப்பண்ணாக தேர்வு செய்துள்ளன. எனவே தலைப்பில் பெயர் இருப்பதே நல்லது எனக் கருதுகிறேன். X நாட்டுப்பண் என்பதை வழிமாற்றாக செய்துவிட்டு, கட்டுரைகளின் முதல் வரிகளில் அச்செய்தியினையும் இடம்பெறச் செய்யல்லாம்.--சோடாபாட்டில்உரையாடுக 06:17, 21 ஏப்ரல் 2011 (UTC)
சோடாபாட்டில். தங்கள் கருத்தும் சரியே. வேறு கருத்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 07:17, 21 ஏப்ரல் 2011 (UTC)
சோடாபாட்டிலின் கருத்து எனக்கும் சரியாகவே தெரிகின்றது. நாட்டுப்பண்கள் தொடர்பான பக்கங்களின் பட்டியலையும் இரண்டு விதமாகவும் உருவாக்கிக் கொள்ளலாம். ஒன்று நாட்டுப்பண்களின் பட்டியல் (நாடுகளின் அடிப்படையில்), மற்றது நாட்டுப்பண்களின் பட்டியல் (முதல்வரி அடிப்படையில்) இவ்வாறான பட்டியல்களும் பக்கங்களை ஒழுங்குபடுத்துவதில் உதவியாக அமையக்கூடியவை. -- மயூரநாதன் 05:13, 29 ஏப்ரல் 2011 (UTC)