விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுக்கு வழி:
WP:WH
தொகுப்பு

தொகுப்புகள்


1 | 2 | 3 | 4

இப்பக்கத்தில் பயனர்களுக்குத் தமிழ் கலைச்சொற்கள் தொடர்பாகப் பரிந்துரைகள் வழங்கப்படும். உங்களுக்குக் கலைச்சொற்கள் தேவைப்படின் அல்லது கலைச்சொற்கள் தொடர்பாக ஐயங்கள் இருந்தால் முதலில் தமிழ் விக்சனரியில் தேடுங்கள். அங்கு கிடைக்காவிடின் இங்கு கேட்கவும். பிற பயனர்கள், தமிழறிஞர்கள், துறை வல்லுனர்கள் இயன்றவரை உதவிகள் வழங்குவார்கள்.

மேலும் தகவல்களுக்கு கலைச்சொல் செயற்பாடுகள் ஒருங்கிணைவு, சொல் தேர்வு, பொதுவான மொழிபெயர்ப்புக் கலந்துரையாடல்கள் ஆகிய பக்கங்களைப் பாக்கவும்.



கலைச்சொல் ஒத்தாசை   மருத்துவம்   உயிரியல்   இயற்பியல்   வேதியியல்   கணிதம்   தொழில்நுட்பம்   சமூக அறிவியல்   புவியியல்   சட்டம்    


--Natkeeran (பேச்சு) 03:57, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]

nonviolence, satyagraha - அறப்போராட்டம்[தொகு]

அறப்போராட்டம் என்பது பொதுவாக non-violence என்றதைக் சுட்டவே பயன்படுகிறது என்று அறிகிறேன். இதை உறுதிப்படுத்த முடியுமா. --Natkeeran (பேச்சு) 16:13, 31 மார்ச் 2013 (UTC)

Non-violence struggle என்பதைச் சுட்ட அறப்போராட்டம் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. Non-violence என்பதைச் சுட்ட இன்னாசெய்யாமை என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம்.--அரிஅரவேலன் (பேச்சு) 06:17, 22 சூலை 2014 (UTC)[பதிலளி]

ஜிஹாத் என்பதை அறப்போராட்டம் எனக் குறிக்கும் வழக்கம் இஸ்லாமிய வழக்கிலுள்ளது.--பாஹிம் (பேச்சு) 18:24, 19 சூலை 2016 (UTC)[பதிலளி]

அறவழிப் போராட்டம் என்போம். அறத்திற்காக போராட்டம், அறப்போராட்டம். அறவழியில் போராடுவது, அறவழிப் போராட்டம்.(Helppublic (பேச்சு) 09:26, 2 சூலை 2020 (UTC))[பதிலளி]

திரைப்படங்கள் தொடர்பான கலைச்சொற்கள்[தொகு]

திரைப்படங்கள் குறித்தான கட்டுரைகளை எழுதுவதற்கு சில கலைச்சொல் ஒத்தாசை தேவைப்படுகிறது. உதவுங்கள்.

  • Filmography - திரைப்பட பட்டியல்?
  • cast - நடிகர்கள்?
  • Villain - எதிர் நாயகன்?
  • anti hero - எதிர் நாயகன்?
  • Cameo appearance - கௌரவ தோற்றம்? சிறப்புத் தோற்றம்?
  • Choreographer - நடன இயக்குனர்?
  • thriller - பரபரப்புபான?
  • Romance - காதல்?
  • Drama - நாடகம்?
  • Fantasy -

--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:58, 28 நவம்பர் 2013 (UTC)--குறும்பன் (பேச்சு) 23:57, 28 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

  • Villain - அநாயகன், கேடன் (சான்று: சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - கவிக்கோ ஞானச் செல்வன்)
  • anti hero - முரண் நாயகன்
  • Fantasy - கற்பனை
  • thriller - கிளர்ச்சி/திகில்

--Kalaivanan S (பேச்சு) 05:40, 15 மே 2015 (UTC)[பதிலளி]

Hero - தலைவன் (கதையின் நாயகன்). Heroin - தலைவி. Guest role - சிறப்புத் தோற்றம் (கௌரவத் தோற்றம்) thriller - பரபரப்பான / திகிலான.(Helppublic (பேச்சு) 09:41, 2 சூலை 2020 (UTC))[பதிலளி]

டென்னிசு விளையாட்டு[தொகு]

One-handed backhand என்பதை எவ்வாறு அழைப்பது? --குறும்பன் (பேச்சு) 21:54, 30 சனவரி 2014 (UTC)[பதிலளி]

புறங்கை கட்டி விளையாடுதல்.(Helppublic (பேச்சு) 09:44, 2 சூலை 2020 (UTC))[பதிலளி]

மிருகத்தின் தமிழ்ப்பெயர்[தொகு]

sloth bear என்ற மிருகத்தின் தமிழ்ப் பெயர் என்ன? (இது தெற்காசியாவிலேயே அதிகம் வாழ்கிறது)--பிரஷாந் (பேச்சு) 05:06, 11 சனவரி 2015 (UTC)[பதிலளி]

  • sloth என்றால்
  1. habitual disinclination to exertion; indolence; laziness.
  2. any of several slow-moving, arboreal, tropical American edentates of the family Bradypodidae, having a long, coarse, grayish-brown coat often of a greenish cast caused by algae, and long, hooklike claws used in gripping tree branches while hanging or moving along in a habitual upside-down position.
  3. a pack or group of bears.
தமிழ்நாட்டில் இதனைத் தான் கண்டிருப்பர்;எனவே கரடி என்பது sloth bearக்குத் தான் பொருந்தும். மற்ற பகுதி கரடிகளுக்குத் தான் வேறுபடுத்துமுகமாக பெயரிடப்பட வேண்டும்..முனையக் கரடி/துருவக் கரடி = polar bear போல...இருப்பினும் குறும்பனின் கருத்தையொட்டி ... that has long black hair --கருங்குழல் கரடி ?--மணியன் (பேச்சு) 01:04, 12 சனவரி 2015 (UTC)[பதிலளி]

கலைச்சொல் உதவி[தொகு]

'Collagen' என்னும் ஆங்கில சொல்லுக்கு சரியான கலைச்சொல் தேவைப்படுகிறது. தற்பொழுது கீழ்வருமாறு உபயோகப்படுத்தப்படுகிறது.

̽தமிழ் விக்கிபீடியாவில் ̈

  • கொலாசன்
  • கொலஜன்
  • கொலாஜின்
  • கொல்லாஜன்

தமிழ் விக்சனரியில்

  • இணைப்புதிசு வெண் புரதம்
  • தசை நார்ப் புரதம்
  • கொலாசென்
  • மறுஉருவாக்கக் கூழ்

உங்கள் கருத்துகள் தேவைǃ--நந்தகுமார் (பேச்சு) 08:43, 13 ஏப்ரல் 2016 (UTC)

கட்டற்ற எதிர் திறந்த (Open Knowledge, Open Format, Open Standard, Open Access)[தொகு]

Open Knowledge, Open Format, Open Standard, Open Access என்பதை நேரடியாக மொழிபெயர்ப்பது என்றால் திறந்த அறிவு, திறந்த வடிவம், திறந்த சீர்தரம், திறந்த அணுக்கம் என்றே வரும். ஆனால் Open Knowledge என்னும் போது நாம் கட்டற்ற அறிவு, கட்டற்ற வடிவம், கட்டற்ற சீர்தரம், கட்டற்ற அணுக்கம் ஆகியவற்றையே சிறப்பாகக் குறிக்கிறோம். Free and Open Source இக்கும் Open Source இக்கும் உள்ள வேறுபாடு இது. Open Knowledge, Open Format, Open Standard, Open Access என்பவற்றுக்கு திறந்த அல்லது கட்டற்ற, எதனை எடுத்தாளவு கூடிய பொருத்தமாக இருக்கும்? --Natkeeran (பேச்சு) 17:47, 19 சூலை 2016 (UTC)[பதிலளி]

ஆங்கில - தமிழ் அகராதி[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியாவில் பயன்படுத்தப்படும் விக்கியில் உருவாக்கம் செய்வதற்குத் தேவையான கலைச்சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை தமிழ் விக்கியில் எங்கே (எந்தப் பக்கத்தில்) கண்டறியலாம்? உதாரணமாக Tag, Template போன்றவை.--UKSharma3 09:02, 27 நவம்பர் 2016 (UTC)

கி.மு, கி.பி[தொகு]

இது தொடர்பில் முன்பு உரையாடப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. கிறிஸ்துவுக்கு முன் (BC) கிறிஸ்துவுக்குப் பின் (AD) என்பவற்றைக் குறிப்பிட ஆங்கிலத்தில் தற்போது Before Common Era (BCE), Common Era (CE) என்பவற்றைப் பயன்படுத்துகிறார்கள். தமிழிலும் இந்த வழக்கு ஓரளவு நடைமுறையில் வந்துவிட்டாலும், பின்வரும் நான்கு விதங்களில் அது வெவ்வேறாகப் பயன்படுத்தப்படுகிறது.
1. Era என்பதை "யுகம்" என மொழிபெயர்த்து, பொ.யு.மு, பொ.யு என்று குறிப்பிடுவது.
2. தனித்தமிழ் வழக்கில் யுகத்தை, "உகம்" என எழுதி, பொ.உ.மு, பொ.உ எனக் குறிப்பிடுவது.
3. Era என்பதை "ஆண்டு" என மொழிபெயர்த்து பொ.ஆ.மு, பொ.ஆ என எழுதுவது.
4. கி.மு, கி.பி ஐ பின்பற்றி பொ.மு, பொ.பி என எழுதுவது.

இது சொற்சுருக்கம் என்பதால், குழப்பமேற்படுத்தாதவாறு ஒரு வழிமுறையை மாத்திரம் பயன்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும். இந்நான்கிலும் பொருத்தமான மொழியாக்கம் எது? ஏன்?

(தனிப்பட்ட கருத்து: நாம் முன்பு கி.பி என மொழிபெயர்த்த இலத்தீன் சொல் கூட, "கடவுளின் ஆண்டு" (Anno Domini - A.D, year of the lord) எனப் பொருள்படுவது தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதை நாம் கி.ஆ (கிறிஸ்து ஆண்டு) என மொழியாக்கவில்லை.கி.மு, கி.பி ஐ ஒத்து இருப்பதாலும், யுகம், ஆண்டு, உகம் குழப்பங்களுக்குள் நுழையாததாலும் நான்காவதையே பரிந்துரைக்க விரும்புவேன்.) --5anan27 (பேச்சு) 06:23, 3 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

நீங்கள் குறிப்பிட்ட 4 வழிகளையும் விட இன்னும் ஒரு சொல் விக்கியில் பயன்பாட்டில் உள்ளது. பார்க்க: Common Era - பொது ஊழி.--Kanags \உரையாடுக 06:53, 3 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
ஓ! இதைக்கவனிக்கவில்லை. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. மேலும் நம்மவர்கள் இதை பொதுக்காலம் - பொ.கா என்றும் எடுத்தாண்டிருக்கிறார்கள். முழுமையாகப் புழங்கும் போது கிறிஸ்து ஆண்டு, கிறிஸ்து சகாப்தம், என்றெல்லாம் சாதாரணமாகச் சொல்லிக்கொள்வது போல, பொதுக்காலம், பொது ஊழி, பொது யுகம் எப்படியும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் சொற்குறுக்கமாகவுள்ள BCE, CE என்பவற்றுக்கு ஒரு நியமத்தை பயன்படுத்துவதே சரியானது. ஆக, இவற்றில் எந்த ஒன்றை நாம் பொருத்தமானதாக முன்மொழியலாம்? --5anan27 (பேச்சு) 08:03, 3 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
யுகம் தமிழ்ச் சொல்லில்லை. எனவே உகமும் எடுபடாது. ஊழி நல்ல சொல். அதனையே பயன்படுத்தலாம். பொது ஊழி (பொஊ), பொது ஊழிக்கு முன் (பொஊமு) எனலாம்.--Kanags \உரையாடுக 09:16, 3 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

கி.மு , கி.பி என்று எழுதுவதை விட , கி.மு. , கி.பி. என்று எழுதுவது இலக்கண சரியானது. நீண்ட வார்த்தைகளைச் சுருக்கி எழுதும் போது, ஒவ்வொரு வார்த்தைகளின் சுருக்கத்தின் முடிவில் (முற்றெழுத்து) முற்றுப் புள்ளி இடவேண்டும்.(Helppublic (பேச்சு) 09:57, 2 சூலை 2020 (UTC))[பதிலளி]

தத்தல் சொற்கள்[தொகு]

திற, மூடு, தொகு இது போன்ற அதிக அளவிலான சொற்கள், திறந்திடுக (திறக்க), மூடுக, தொகுத்திடுக(தொகுக்க) என‌ உயர்திணையில் குறிப்பிடப்படவேண்டும்.(Helppublic (பேச்சு) 10:05, 2 சூலை 2020 (UTC))[பதிலளி]