விக்கிப்பீடியா பேச்சு:கலைச்சொல் ஒத்தாசை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பக்கத்தை அமைத்திருக்கும் முறையில் ஏதாவது மாற்றம் செய்யவேண்டியிருப்பின் செய்யவும்.

இப்பக்கம் மிகவும் பிரயோசனமானதாகவே படுகிறது. கலைச்சொல்லாக்கம் தொடர்பான திறன்கள் கொண்ட புலமையாளர்கள் விக்கிபிட்டியாவில் ஆர்வத்துடன் பங்களிக்கக்கூடும் என்றில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு இந்த பக்கத்தின் தொடுப்பை மட்டுமே அனுப்பி மேற்பார்வையாளர்களாக உதவி புரியச்சொல்லி வேண்டுகோள் விடுக்கலாம். அவர்களுக்கும் இது மிகவும் வசதியானதாக இருக்கும்.

இவ்வாறான புலமையாளர்கள் மத்தியில் இப்பக்கத்தினை அறிமுகம் செய்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள உஅதவி புரியுமாறு சக விக்கிபீடியர்களை வேண்டிக்கொள்கிறேன். --மு.மயூரன் 08:40, 30 ஜூன் 2006 (UTC)

License[தொகு]

இச்சொல்லுக்கு உரிமம் என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனால் உரிமம் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதை பார்த்திருக்கிறேன். patent போன்றவற்றும் சிலர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் இச்சொல்லுக்கே உரிமம் பொருத்தமுடையது. உரிமம் என்ற சொல்லுக்கு வேறு பயன்பாடுகள் இருந்தாஅல் தெரியப்படுத்தவும். --மு.மயூரன் 16:34, 30 ஜூன் 2006 (UTC)

தயவு செய்து விக்சனரி பேச்சு பக்கத்தை உபயோகியுங்கள்.  ! :- ) தொலை நோக்கில் அவ் வழிமுறைதான் கூடிய பயன் தரும் போல் தெரிகின்றது. தற்போது பரிசோர்த்தமாக செய்து பார்க்கலாம். --Natkeeran 16:46, 30 ஜூன் 2006 (UTC)

நல்லது நற்கீரன். நானும் இப்போது இதைப்பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தேன். பரவாயில்லை. அங்கே இங்கே முட்டி மோதி இந்த கலைச்சொல் பிரச்சனைக்கு சரியான தீர்வை விரைவில் எட்டிவிடுவோம். சொற்களுக்கு விக்சனரி இணைப்பு தருவது நல்லது. உரையாடலை அங்கேயே வைத்துக்கொள்ளலாம். --மு.மயூரன் 16:58, 30 ஜூன் 2006 (UTC)

மாதிரி முயற்சிகள்[தொகு]

கலைச்சொல்லாக்கம்
விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை கலைச்சொற்கள் பகுதி
அகரவரிசையில் தேட கீழுள்ள எழுத்துக்களைச் சொடுக்குக:

தமிழ் எழுத்துகள்:

இலத்தீன் எழுத்துகள்: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

-இது ஒரு மாதிரி முயற்சி --செந்தி//உரையாடுக// 23:35, 4 மே 2011 (UTC)[பதிலளி]


கலைச்சொல் ஒத்தாசை   மருத்துவம்   பொறியியல்    

கையேடு ??[தொகு]

கலைச்சொல் ஒத்தாசை செய்ய பல பயனர்கள் முன்வருவார்கள். எனினும், அவர்களின் நேரத்தை மதித்து ஒத்தாசை கேட்க முன் உசாவல் செய்து பாருங்கள். அதற்கு Wikipedia:கலைச்சொல் செயல்பாடுகள் ஒருங்கிணைவு பக்கம் உதவலாம்.


உங்கள் உசாவலின் பின்பு சொற்கள் கிடைக்காவிடின் அவ் ஆங்கில சொற்களுக்காக தமிழ் விக்சனரியில் ஒரு பக்க்ததை ஏற்படுத்தினால் நன்று, ஆனால் அவசியமில்லை.


தமிழ் விக்சனரிக்கு உள் இணைப்பு தர இயலும்
தமிழ் விக்சனரிக்கு உள் இணைப்பு தர இயலும். இரண்டு எடுத்துக்கட்டுக்கள்:

ஆங்கில விக்சனரிக்கு ta: வை எடுத்துவிட வேண்டும். பிற மொழி விக்சனரிகளுக்கு அந்தந்த மொழி விக்கி குறியைப் பயன்படுத்த வேண்டும்


ஒத்தாசை தேவைப்படும் சொற்களின் ஆங்கிலப்பதத்தினை இப்பக்கத்தில் துறைவரியாக பட்டியலிடவும். சொல் குறித்த விவாதங்கள் அவ்வச்சொற்களின் தலைப்பில் உரையாடற்பக்கத்தில் அல்லது அச்சொல்லின் விக்சனரி பக்கத்தில் இடம்பெறட்டும். இப்பக்கத்தில் சொற்கள் மட்டுமே இடம்பெறல் நலம். சிறு விளக்கங்கள் தருவது தவறில்லை, நீண்ட விவாதங்களே சொல்லுக்குரிய விக்சனரி அல்லது உரையாடல் பக்கங்களுக்கு எடுத்து செல்லப்படவேண்டும்.


ஒத்தாசை கேட்பவர் தங்கள் பெயரையும் திகதியையும் தலைப்பில் இணைத்தல் நன்று. உதவி கேட்பவரின் பெயர், மேலதிகமாக தகவல்களை வழங்க அல்லது உரையாடல்களை பேண உதவலாம். எப்பொழுது உதவி கேட்கப்பட்டது என்ற தகவல் அதிக காலம் செல்லாமல் பதில் தர தூண்ட முனையலாம். மேலும், உதவிய பயனர்கள் இறுதியில் தங்கள் பெயர்கள் குறித்தால், மேலும் விளக்கங்களை கேட்க ஏதுவாக இருக்கும்.