ஞானச் செல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஞானச் செல்வன்
NAyya-2.jpg
பிறப்புநவம்பர் 28, 1939 (1939-11-28) (அகவை 80)
மதுக்கூர், தஞ்சை
தேசியம்இந்தியர்
கல்விமுதுகலைப் பட்டம், முதுநிலை கல்வியியல் - சென்னை பல்கலைக்கழகம்
பணிதமிழாசிரியர் (ஓய்வு)
அறியப்படுவதுகவிஞர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர்

கவிக்கோ ஞானச் செல்வன், (பிறப்பு:1939) இந்தியா, தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் என்னும் ஊரில் பிறந்தவர் ஆவார். இயற்பெயர் கோ. திருஞானசம்பந்தம் ஆகும். மரபுக் கவிஞர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் திருவாரூர் மாவட்டக் கிளையின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். உலகத் தமிழ் மாநாடுகளில் தங்கம், வெள்ளிப் (மதுரை) பதக்கங்கள், கேடயம், சிறப்பு விருதுகள் எனப் பல்வேறு பாராட்டுக்களைப் பெற்றவர்.

இளமைக் காலம்[தொகு]

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் 1939 ஆம் ஆண்டு நவம்பர் 28 இல் பிறந்தார்.[1] திருவாரூரில் 1997 வரை தமிழாசிரியாராக இருந்து ஓய்வுபெற்றவர். 1998 முதல் சென்னையில் வசித்துவரும் இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தமிழறிஞர், ஊடகவியலாளர் ஆவார்.

இயற்றிய நூல்கள்[தொகு]

 1. பாடி வந்த நிலா  (கவிதைகள்)
 2. கதைசொல்லும் மங்கலங்கள் (கவிதைகள்)
 3. ஓ...இளமையே! (கவிதைகள்)
 4. வானில் தவழ்ந்த வார்த்தைகள் (வானொலி உரைகள்)
 5. அர்த்தமுள்ள அரங்குகள்(கவியரங்கக் கவிதைகள்)
 6. சாதனைச்சரித்திர நாயகர் ம.பொ.சி (நயந்தோய்வு)
 7. தமிழறிவோம் (மொழிஆய்வு)
 8. சிலம்புச் செல்வர் கவிதாஞ்சலி (கவிதைகள்)
 9. சொல்லறிவோம் (சொல்லாய்வு)
 10. சிலப்பதிகாரச் சிறப்பு (நயந்தோய்வு)
 11. சிந்தனைச் சுடர் (தொலைகாட்சி உரைகள்)
 12. நீங்களும் கவிஞராகலாம் (யாப்பு இலக்கணம்)
 13. அருளாளர்கள் (ஆன்மிகம்)
 14. எண்ணம் பதினாறு (பல்சுவை கட்டுரைகள்)
 15. முத்தமிழுக்கு மேல் ஒரு தமிழா? (பல்சுவைக் கட்டுரைகள்)
 16. கல்வெட்டுகளில் கன்னித் தமிழ் (பல்சுவைக் கட்டுரைகள்)[2]
 17. தீந்தமிழ்த் தென்றல் திரு.வி.க (பல்சுவைக் கட்டுரைகள்)
 18. பாட்டரங்கப் பாடல்கள் (மேடைக் கவிதைகள்)
 19. ஞானச்செல்வன் கவிதைகள் (முழுத் தொகுப்பு)
 20. இனியவை எழுபது (கவிதைத் தொகுப்பு)
 21. பாரதி வாழ்கிறார் (கட்டுரைகள்)
 22. தமிழில் மரியாதைச் சொற்கள் (மொழி ஆய்வு)
 23. பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம்   (இலக்கண இலக்கியம்)
 24. பிழையின்றித் தமிழ் பேசுவோம் (முழுமைப் பதிப்பு)
 25. சிலம்புச் செல்வர் (வாழ்க்கைச் சிறப்பு)
 26. சிலம்பின் பரல்கள் (இலக்கிய விளக்கம்)
 27. தமிழ் அறிவோம் (புதிய பதிப்பு -இணைப்புடன்)
 28. தமிழில் அறிவியல்புலம் (கட்டுரைகள்)
 29. கவிதைப் பூக்காடு (கவிதைத் தொகுப்பு)
 30. பிறமொழி, தமிழ்மொழி அகரமுதலி (அகராதி)
 31. பேசாத பேச்சு (கவிதைகள்)
 32. எழுத்துத் திரட்டு (கட்டுரைகள்)
 33. சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
 34. அறிவோம் அன்னை மொழி
 35. இன்றும் இனிக்கிறது நேற்று
 36. சொல் விளைந்த கழனி
 37. கல்லெல்லாம் கலையாகுமோ

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானச்_செல்வன்&oldid=2854715" இருந்து மீள்விக்கப்பட்டது