உள்ளடக்கத்துக்குச் செல்

இளங்கோவடிகள் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளங்கோவடிகள் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2015 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவருக்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்பி வருபவருக்கோ இந்த விருது அளிக்கப்படுகிறது.[1] இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்

[தொகு]
வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1முனைவர் ஜி. டி. நிர்மலா மோகன்2015
2நா. நஞ்சுண்டன்2016
3முனைவர் வெ. நல்லதம்பி2017
4சிலம்பொலி சு.செல்லப்பன்2018
5கவிக்கோ ஞானச்செல்வன் (எ) கோ. திருஞானசம்பந்தம்[2]2019
6மா. வயித்தியலிங்கன்2020
7நெல்லை கண்ணன்2021
8கூ.வ. எழிலரசு [3]2022
9முனைவர் சிலம்பு நா.செல்வராசு [4],[5]2023

சிறப்புப் பயண அட்டை

[தொகு]

விருதாளர்கள் அனைவருக்கும், அனைத்துத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் (குளிரூட்டப்பட்டப் பேருந்துகள் தவிர) வாழ்நாள் முழுவதும் கட்டணமின்றி பயணிப்பதற்கான சிறப்புப் பயண அட்டை வழங்கப்படுகிறது. [6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Correspondent, Vikatan. "இளங்கோவடிகள், தமிழ்ச் செம்மல் விருது: ஜெயலலிதா அறிவிப்பு". www.vikatan.com/. Retrieved 2021-03-05. {{cite web}}: |last= has generic name (help)
  2. "தமிழ் புத்தாண்டு விருது பெறுவோர் பட்டியல்தமிழக அரசு வெளியிட்டது". Dailythanthi.com. 2020-01-15. Retrieved 2021-03-05.
  3. "தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கல்". தினமலர். 2024-02-23. Retrieved 2025-01-08.
  4. "26 பேருக்கு தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்". தினமணி. 2025-01-08. Retrieved 2025-01-08.
  5. "பர்வீன் சுல்தானா உள்ளிட்ட 26 பேருக்கு விருதுகள்: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்". மக்கள்குரல். 2025-01-08. Retrieved 2025-01-08.
  6. தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளங்கோவடிகள்_விருது&oldid=4626845" இலிருந்து மீள்விக்கப்பட்டது