தில்லித் தமிழ்ச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முகப்புத் தோற்றம்

தில்லித் தமிழ்ச் சங்கம் இந்தியத் தலைநகர் தில்லியில் செயல்பட்டு வரும் தமிழ் அமைப்பு ஆகும். 1946 ஆம் ஆண்டில் சங்கம் நிறுவிய துங்கர்கள் என அழைக்கப்படும் ஒன்பதின்மரால் இது துவக்கப்பட்டது. அவர்களுள் குறிப்பிடத்தக்கவரான தமிழ்ச்சங்கம் பாலு தங்கியிருந்த அறையில் நூலக வடிவில் இது துவங்கியது. பின்னர் இன்றைய கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள பாலிக்கா பஜார் அருகே அரசிடமிருந்து மூன்று அறைகள் வாடகைக்குப் பெறப்பட்டன. தமிழார்வலர் பலரின் உதவியுடன் இராமகிருஷ்ணபுரத்தில் சொந்தக் கட்டடம் நிறுவப்பட்டது. தமிழ்ச் சங்கத்தின் முகப்பில் தெய்வப்புலவர் வள்ளுவர் சிலை அமைந்துள்ளது. சங்கத்தினுள் தீரர் சத்தியமூர்த்தி நூலகம், பாரதியார் அரங்கம், பாரதிதாசன் அரங்கம், திருவள்ளுவர் அரங்கம் ஆகியவை அமைந்துள்ளன.

தீரர் சத்தியமூர்த்தி நூலகம்[தொகு]

ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களுடன் செயல்படும் இந்நூலகத்தில் 1947 முதல் வெளிவந்த தமிழ் இதழ்கள் காணக்கிடைக்கின்றன. உறுப்பினராவதற்கு 400 உரூபாய் காப்புத் தொகையும் ஆண்டு சந்தா 100 உரூபாயும் செலுத்த வேண்டும். ஓர் உறுப்பினருக்கு ஒரு முறையில் 4 புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

வெளியிணைப்பு[தொகு]

தில்லித் தமிழ்ச் சங்க இணையத் தளம்