விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு43

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவனிக்க[தொகு]

நான் புதுப் பயனர்களுக்கான வரவேற்பு வார்ப்புருவைப் பயன்படுத்தி என் கையொப்பத்திற்கான குறியீட்டை வழக்கம் போல் இணைத்தேன். வரவேற்புச் செய்திக்குப் பின் எனது பெயர், நேரம், நாள் ஆகியவை இருமுறை இடம்பெறுகிறது. இது ஏன்? இருமுறை இடம்பெறுவதை ஒரு முறையாகச் செய்ய இயன்றவர்கள் செய்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 03:14, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நான் வார்ப்புருவிலேயே கையப்பம் வரும்படி மாற்றம் செய்துள்ளேன். இனி வெறும் வார்ப்புரு மட்டும் பயன்படுத்தினால் போதுமானது. ஸ்ரீகாந்த் 03:22, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
சிறீகாந்த், நீங்கள் செய்த திருத்தத்தை இல்லாமல் செய்திருக்கிறேன். பலரும் பயன்படுத்தும் வார்ப்புரு ஒன்றில் இப்படி மாற்றம் கொண்டுவருவது நல்லதல்ல. இந்த மாற்றம் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. வரவேற்பவர் கையொப்பம் இடுவதே நல்லது.--Kanags \உரையாடுக 03:40, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
மாற்றம் நல்லதுதான் என்றாலும், சிறீதரன் சொன்னதுபோல உரையாடிச் செய்திருக்கலாம். தவிர ஏற்கனவே அது பயன்படுத்தியுள்ள பேச்சுப்பக்கங்களையும் பார்த்துவிட வேண்டும். en:Wikipedia:Twinkle வசதியைச் செயல்படுத்தினால் இதைவிட நல்லது. -- சுந்தர் \பேச்சு 05:27, 29 அக்டோபர் 2010 (UTC):[பதிலளி]
நான்கு விசையடி(?) குறையுமே என எண்ணி செய்தேன். மன்னிக்கவும். ஆம் en:Wikipedia:Twinkle நல்ல யோசனை. முயன்று பார்கிறேன். ஸ்ரீகாந்த் 16:15, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

அதிவேகக் கணினி குறித்த கட்டுரை[தொகு]


கல்லூரித் தேர்வுகள் முடிந்துவிட்ட காரணத்தினால் த.வி-யில் பங்களிக்க கணினி ஆய்வகத்திற்கு வந்தேன். எந்தத் தளம் சென்றாலும் சீனத்தின் மீத்திறன் கணினியைப் பற்றிய பேச்சே அடிபட்டது. எனவே அதனைப் பற்றி த,வி-யில் எழுதியுள்ளேன். அக்கணினிப் பெயரில் ஏதேனும் மாற்றமிருப்பின் கூறவும். கட்டுரை "டியான்ஏ-1" என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். படித்துப் பார்த்துக் கருத்து கூறவும். திருத்தம் ஏதேனும் இருப்பினும் கூறவும். இந்தப் பக்கத்தில் கட்டுரைகள் எவ்வெம்மொழியிலுள்ளது என்ற பட்டியலில் தமிழின் பெயரும் இடம்பெற ஆவன செய்யுமாறு மதிப்பிற்குரிய நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்கிறேன். கட்டுரையைப் படித்துப் பார்க்க மறக்க வேண்டாம்....
--சூர்ய பிரகாசு.ச.அ. 13:33, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

Sustaining The Survival Of Nigerian Local Languages[தொகு]

Cafeteria roenbergensis virus தமிழ் எழுத்துப்பெயர்ப்பு தேவை[தொகு]

en:Cafeteria roenbergensis virus தமிழ் எழுத்துப்பெயர்ப்பு தேவை. நன்றி. --Natkeeran 23:01, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

கஃவெட்டெரியா ரோயென்பெர்கென்சிசு நச்சுயிரி --செல்வா 04:36, 30 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

பிறமொழி இணைப்பு[தொகு]

பிற மொழி இணைப்பற்ற பக்கங்கள் என்ற இந்தப் பக்கத்திலிருக்கும் கட்டுரைகளுக்கு பிறமொழி இணைப்பைக் கொடுத்த பின்னர், அந்தக் கட்டுரையை அந்த நிரலில் இருந்து எப்படி அகற்றுவது? எடுத்துக் காட்டாக அடிநாச் சுரப்பிகள் என்ற கட்டுரையை அங்கே கண்டு, அதற்கு பிறமொழி இணைப்பைக் கொடுத்துள்ளேன். தற்போது அந்த குறிப்பிட்ட கட்டுரையை அங்கிருந்து எப்படி அகற்றுவது?--கலை 00:33, 30 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

அக்கட்டுரை காலப்போக்கில் அப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடும். உடனடியாக மாற்றம் தெரியாது என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 03:59, 30 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

சிறப்புக் கட்டுரை நியமனப்பக்கம்[தொகு]

கடந்த சிலநாட்களாக எனக்கு நியமனத் துணைப்பக்கத்தை அணுக முடியவில்லை.Error 324 (net::ERR_EMPTY_RESPONSE): Unknown error.என்றே வருகிறது. எனவே அங்குள்ள கருத்துக்களைக் காணவோ எதிர்வினையாற்றவோ இயலாது இருக்கிறேன். எனது கணினியிலிருந்து அனைத்து உலாவிகளிலும் (IE,குரோம்,பயர்ஃபாக்ஸ்,சஃபாரி)இதே பிரச்சினை உள்ளது.பயர்பாக்சில் தொகுப்பதும் பிரச்சினையாக உள்ளது. குரோம் கொண்டே தொகுத்து வருகிறேன். உதவி தேவை --மணியன் 10:00, 31 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

வேறு பக்கங்களில் இந்தப் பிரச்சனை வருகிறதா?. எனக்கு ஒரு முறை பிளக்கின் ஒன்று முறிந்து போனதால் இப்படி நடந்தது. இங்கு பார்த்தால் ரெஜிஸ்டிரியில் தொந்தரவு என்று உள்ளது. வின்சாக் ஃபிக்சை டவுன்லோடு செய்து ஓட்டிப்பாருங்கள்.--சோடாபாட்டில் 10:07, 31 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
நீங்கள் கூறியதுபோல வின்சாக் ஃபிக்சை இறக்கி ஓட்டிப் பார்த்தேன். பிரச்சினை இன்னும் சரியாகவில்லை :( --மணியன் 16:59, 31 அக்டோபர் 2010 (UTC) விக்கிப்பீடியா பக்கங்களில் மட்டுமே (தமிழ்/ஆங்கிலம் இரண்டிலும்)இந்தப் பிரச்சினை உள்ளது.--மணியன் 17:02, 31 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
ஃபயர்ஃபாகசை மட்டும் மொத்த அன் இன்ஸ்டால் ரீ-இன்ஸ்டால் செய்து பாருங்கள். (முதலில் ஹிஸ்டரி, குக்கி, காஷ் எல்லாவற்றையும் டெலீட் செய்து விட்டு).--சோடாபாட்டில் 17:10, 31 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நிலப்படங்களை மொழிபெயர்த்தல் -- உதவி[தொகு]

en:User:Planemad தமிழில் en:Openstreetmap நிலப்படங்கள் செய்ய ஓர் வழி கண்டுபிடித்திருக்கிறார். இதற்காக சில நூறு ஊர் பெயர்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்.நீங்கள் உதவி செய்ய நினைத்தால் இங்கு மறுமொழி இடுங்கள், மேலும் விவரங்களை பகிர்ந்துகொள்கிறேன். மேலும் எத்தகையான நிலப்படங்கள் தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என உங்கள் கருத்தையும் வரவேற்கிறேன். ஓபன்ஸ்ட்ரீட்மேபும் விக்கியை போல் கட்டற்ற நிலப்படங்கள் செய்வதற்கான ஓர் கூட்டு முயற்சி. ஆகையால் செய்யப்படும் நிலப்படங்கள் நாம் இங்கு பயன்படுத்தலாம் :) ஸ்ரீகாந்த் 05:20, 2 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

என்னை ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ளுங்கள்--சோடாபாட்டில் 06:05, 2 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
முடிந்தளவில் உதவப் பார்க்கிறேன்--கலை 15:13, 2 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி சோடாபாட்டில்,கலை. கூகிள் ஆவணம் ஒன்று பகிர்த்து கொண்டு இருக்கிறேன். ஸ்ரீகாந்த் 18:27, 2 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
பயனர்:Ganeshbot/Translation_needed பக்கத்தில் ஏற்கனவே ஒலிபெயர்த்துள்ள பெயர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இணை ஒலிபெயர்ப்புகளை வைத்து ஒரு support vector machine போன்ற எடுத்துக்காட்டுவழி அறிவு பெறும் மென்பொருளைப் பயன்படுத்தி எஞ்சிய பெயர்களுக்குத் தாமாக ஒலிபெயர்ப்பை வழங்கும்படியும் செய்யலாம். அவ்வாறு பெறும் ஒலிபெயர்ப்புகளை மெய்ப்புப்பார்க்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 02:18, 3 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
சுந்தர், கணேசுபாட் ஏற்கனவே ஒலி பெயர்த்துள்ளவற்றில் கோவை மாவட்டத்த்தில் மட்டும் நிறைய பிழைகள் இருந்தன. எனக்கு தெரிந்த ஊரென்பதால் மாற்றி விட்டேன். பிற மாவட்டங்களுக்கு அதை பயன்படுத்த தயக்கமாக உள்ளது.--சோடாபாட்டில் 04:18, 3 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
சுந்தர், நன் முதலில் இது எளிதானது என நினைத்தேன். ஆனால் இப்பொழுது தான் புரிந்தது மனிதர்களால் செய்யும்போழுதே குறில் நெடில் பிழைகள் நிறைய வருகின்றது.Natham = நத்தம்.ஆனால் நாதம் என மாற்றப்பட்டது.புதிதாக பார்பவர்க்கு இது தவறே இல்லை.ஊர் பெயர்களை தமிழில் தெரிந்தவர்கள் தான் பிழையில்லாமல் செய்ய முடியும் போல் இருக்கின்றது. இச்சூழலில் தானியங்கி மூலம் மாற்றம் செய்வதில் சோடாபாட்டிலிக்குள்ள அதே தயக்கம் எனக்கும் உள்ளது. ஸ்ரீகாந்த் 04:56, 3 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
ஓ, புரிகிறது. நாமாகவே ஒலிபெயர்ப்போம். -- சுந்தர் \பேச்சு 14:51, 5 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

இரண்டு கோரிக்கைகள்[தொகு]

இரண்டு விடயங்களைத் தெரிவிக்க வேண்டும்.

1.த.வி பங்களிப்பவர்களை ஒருவரையொருவர் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவது. இது அண்மைக் காலங்களில் குறைந்து விட்டது போல் உணருகிறேன்.

2. கட்டுரைகளில் அடிக்கடி மாற்றத்திற்கு உட்படுகின்ற விடயங்கள் உள்ளடக்கமாக இடப்படுவதை தவிர்த்து அதனை அதற்கான தனியானஒரு தகவல் சட்டகத்தில் இணைத்தால் சிறப்பாக இருக்கும் எனக் கருதுகிறேன். எ.கா: இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கட்டுரையில் ஆணைக்குழு உறுப்பினர் பட்டியல் தற்போது மாற்றமடைந்து விட்டது. இவ்வாறு பல கட்டுரைகள் உள்ளன.--சஞ்சீவி சிவகுமார் 06:31, 2 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

சஞ்சீவியின் முதல் கோரிக்கை பற்றி அனைத்துப் பயனர்களும் கருத்தில் கொள்ள வேண்டும். இரண்டாவதில் குறிப்பிட்டுள்ள விடயமும் முக்கியமானது. உதாரணமாக, தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்கள் போன்ற பல மக்களவை உறுப்பினர்கள் பட்டியல்கள் தனித்தனிக் கட்டுரைகளாக உள்ளன. இவை இற்றைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. இப்படியானவற்றைப் பொதுவான கட்டுரைகளில் இடுவதைத் தவிர்க்க வேண்டும். இக்கட்டுரைத் தலைப்பை வேண்டுமானால் தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்கள், 2009 என மாற்றலாம். ஒவ்வொரு மக்களவைத் தேர்தல்களுக்கும் தனித்தனியே கட்டுரைகள் எழுதலாம்.--Kanags \உரையாடுக 22:58, 12 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]


வாருதல் வகை புரை ஊடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி எனும் பெயர் மிகவும் நீளமான ஒன்றாகவும் அதனை விவரிக்கும் விதமாகவும் உள்ளது. ஒரு பொருளுக்குப் பெயரிடுகையில் அதன் பொருள் விளங்குவதைக் காட்டிலும் அதனை சுருக்கமாக அழைக்கும் முறைமையே கையாளப்பட வேண்டும் என்பது திரு.மா.நன்னன் அவர்களின் கருத்து. அதை நான் ஒப்புகிறேன். ஆனால் விக்கியின் கொள்கை என்னவென்று அடியேன் அறிகிலம். எனவே உங்கள் அனைவரின் கருத்தும் தேவை. அதைக் கொண்டு இந்த சாதனத்திற்கு இப்பெயரே இருக்கட்டுமா அல்லது சுருக்கமாக வேறொரு பெயரிடலாமா என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இது குறித்து பொதுவான ஓர் அறிவிப்பை நிர்வாகி அவர்கள் அனைவருக்கும் வெளியிட வேண்டுகிறேன். அதாவது 'தமிழில் பெயரிடும்போது அப்பெயர் அதன் பயன்பாட்டை விளக்கும் வகையில் இருக்க வேண்டுமா அல்லது அதனை எளிதில் நினைவு வைத்துக் கொண்டு செயல்படுவது போல் இருக்க வேண்டுமா'
--சூர்ய பிரகாசு.ச.அ. 10:54, 2 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

கட்டாயம் சுருக்கமாகத்தான் இருக்க வேண்டும். வருடு ஊடுருவு நுண்ணோக்கி என்பது போதும்.வ. ஊ.நு என்றும் சொல்லிப்பழக வேண்டும். ஒரு 5-10 முறை சொன்னால் பழகிவிடும். --செல்வா 03:11, 3 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]


அக்கட்டுரையை எழுதியவன் அடியேன் தான். கட்டுரைத் தலைப்பை "வருடு ஊடுருவு நுண்ணோக்கி" எனும் தலைப்பிற்கு மாற்றிவிடட்டுமா ஐயா?
--சூர்ய பிரகாசு.ச.அ. 13:38, 8 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

The Near Future of Free Knowledge in India: Interview With Jimmy Wales[தொகு]

Indian sound recordings bring history to life[தொகு]

Indian sound recordings bring history to life--சோடாபாட்டில் 09:18, 4 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

தமிழ் வார்ப்புருக்களைப் பயன்படுத்தல்[தொகு]

திரைப்படம், நபர்கள், இடங்கள் என அனைத்துக்கும் ஆங்கில வார்ப்புருக்கள் அப்படியே இங்கு பயன்படுத்தப்பட்டு, தகவல்கள் மட்டும் மொழி பெயர்க்கப்படுகின்றன. இது தொடர்புது தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நல்ல தல்ல. எனவே இயன்றவரை தமிழ் வார்ப்புருக்களைப் பயன்படுத்த நாம் ஊக்குவிக்க வேண்டும். --Natkeeran 01:32, 5 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

Geysers and Hot Springs[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியாவில் Geysers, Hot Springs க்குத் தனித்தனியான கட்டுரைகள் உள்ளன. ஆனால் அவை இரண்டையும் வேறுபடித்திக் காட்டக் கூடிய தமிழ்ச் சொற்கள் எவை எனத் தெரியவில்லை. இவற்றிற்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்தால் நல்லது.--கலை 14:29, 7 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

பேர்கனில் விக்கியில் எழுதப் பயிற்சி[தொகு]

நேற்று சனிக்கிழமை (06.11.10 அன்று) பேர்கன் தமிழ்ப் பாடசாலையில், தமிழ்விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கான பயிற்சி ஒன்று வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சி வருகின்ற கிழமை நிகழவுள்ள விக்கி மராத்தனுக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்தது என நினைக்கிறேன். பல ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் எழுதுவதற்குத் தேவையான விடயங்களைக் கேட்டு அறிந்து கொண்டனர். ஆனாலும், பல தொழில்நுட்பம் தொடர்பான தமிழ்ச் சொற்களைப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதாகவும், அவற்றை இலகுவாக எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் கேட்டனர். இப்படியான தொழில்நுட்பச் சொற்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்பை எங்கே பெறலாம்? இந்த பயிற்சியை வழங்குவதற்குத் தேவையான சில தகவல்களை இணையத்தொடர்பு மூலம் எனக்கு அளித்த பயனர்:Mayooranathan, பயனர்:Sodabottle க்கும் எனது நன்றிகள்.--கலை 14:50, 7 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நல்ல செய்தி கலை. உடனேயே பயனர் கணக்கு ஏற்படுத்துவது, எடுத்துக்காட்டு கட்டுரைகளை உருவாக்குவது உதவும். விக்கி கலைச்சொற்களுக்கான ஒரு பக்கம் உள்ளது. சோடா உங்களுக்கு சுட்டியைத் தரவார். படங்கள் இருந்தால் பகிரவும், நன்றி. --Natkeeran 15:01, 7 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி நக்கீரன். உண்மையில் சனிக்கிழமையே பயிற்சி கொடுக்கும்போது, பயனர் கணக்குகளை ஏற்படுத்தி, எடுத்துக்காட்டு கட்டுரைகளை உருவாக்கத்தான் இருந்தேன். 30 பேரளவில் வந்திருந்தார்கள். ஆனால் வந்தவர்கள் கணினியை எடுத்து வராமையால், அப்படி செய்ய முடியாமல் போனது. ஆனால் எடுத்துக்காட்டு கட்டுரை, கோப்பை பதிவேற்றி, கட்டுரையுடன் இணைத்தல், சிறு திருத்தங்கள் என எடுத்துக் காட்டினேன். அடுத்த கிழமை அனேகமாக சிலர் புதிதாக பயனர் கணக்கைத் தொடங்கி எழுதுவார்கள் என நம்புகின்றேன். அன்று படங்கள் எடுக்காமல் விட்டு விட்டேன். வருகின்ற சனிக்கிழமை நிகழ்வில் படங்கள் எடுத்து பதிவேற்றுகின்றேன். --கலை 21:21, 8 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

மொழியும் இணையமும்[தொகு]

"ஆரம்பத்தில் ஆர்வம் காரணமாக உள்ளே வந்து என் மொழிநடைக்குப் பழக்கமில்லாமல் சிக்கலுக்குள்ளான பலர் இதன் வழியாக சிலமாதங்களுக்குள் என்னை நெருங்கியிருக்கிறார்கள். சிற்றிதழ்சார் அறிவுலகின் அறிமுகமே இல்லாமல் இந்த நடைக்குள் சட்டென்று நுழைவது கடினம். தினமும் இதில் பதிவேற்றங்கள் வந்து தினம்தோறும் வாசிக்கமுடிவதனால்தான் அவர்கள் என் எழுத்துக்கு பழகினார்கள். மாதவெளியீடுகளான சிற்றிதழ்களில் பல வருடம் எழுதினால்கூட இந்த விளைவை உருவாக்க இயலாது. ஆகவே இந்த இணையதளத்தின் பயனை நான் அடைந்துவிட்டதாகவே எண்ணுகிறேன்.

என்னுடைய நடை தமிழின் சிற்றிதழ்சார் அறிவுத்தளத்தில் உருவாகி வந்த நடையின் வளர்ச்சி வடிவம். இதற்கென தனிக் கலைச்சொற்கள் உள்ளன. சிறப்பான சொற்றொடரமைப்பு உள்ளது. தமிழில் தொடர்ந்த அறிவார்ந்த விவாதங்கள் மூலம் உருவாகியிருக்கும் இந்த நடைக்கு ஐம்பதாண்டுக்கால மரபுண்டு. செறிவாகவும் கச்சிதமாகவும் சொல்லுவது இதன் இலக்கு. வாசிப்பார்வத்தை மேம்படுத்துவது அல்ல. மேனாட்டுமொழிகளில் எண்ணூறுகளிலேயே உருவாகி விட்ட இந்த அறிவுத்தள மொழி நமக்கு சிலபத்தாண்டுகளாகவே உருவாகியிருக்கிறது.

இந்த மொழியை சிற்றிதழ்களுக்குள் மட்டும் கையாண்டுகொண்டிருந்தபோது இதன் தொடர்புறுத்தும்தன்மையில் பல சிக்கல்கள் இருந்தன. இதன் வளர்ச்சி தேக்கமுற்றிருந்தது. ஏனென்றால் இந்தமொழியை தாங்களும் கையாள்பவர்களே இதை வாசித்தார்கள். ஆனால் இணையத்தில் இது இடம்பெற ஆரம்பித்தபோது இது நேரடியாக வாசகர்களிடம் உரையாட ஆரம்பித்தது. எதிர்வினைகளைப் பெற ஆரம்பித்தது. ஆகவே இதன் தொடர்புறுத்தும்தன்மை மேம்பட்டது, மேலும் மேலும் தெளிவு கைகூடியது. இதை என் நடையில் நானே உணர்கிறேன்.

மேலும் சிற்றிதழ்ச்சூழல் ஒரு சிறிய அந்தரங்க வட்டத்துக்குள் இருந்தது. இணையத்தில் வேறுபல அறிவுத்தளத்தைச் சேர்ந்தவர்களும் இதனுடன் உரையாட ஆரம்பித்தனர். அது மிகச்சாதகமான விளைவுகளை உருவாக்கியது. குறிப்பாக தூயதமிழ்வாதிகளுடனான உரையாடல் மூலம் சிற்றிதழ் சார்ந்த மொழிநடையின் தரம் மேம்பட்டது என்று நினைக்கிறேன். அதன் வடசொற்கள் குறைந்து தனித்தமிழ்ச்சொற்கள் மிகுந்தன." - http://www.jeyamohan.in/?p=9223 - --இரவி 17:42, 12 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நல்ல பகிர்வு ரவி. எழுத்தாளரின் அவதானிப்புகள் கவனிக்கப்பட வேண்டியவை. சிற்றிதழ்களுக்கு அப்பால் தமிழில் துறைசார் அறிவுத்தளங்கள் உருவாக இணையம் உதவி உள்ளது. எனினும் வளர்ச்சி போதாது. எத்தனை வலைத்தளங்கள் வேதியல், வானியல், அல்லது நனோ தொழில்நுட்பம் பற்றி தமிழில் உள்ளன. பூச்சியம் என்றே நினைக்கிறேன். ஆனால் கலைச்சொற்கள், கட்டுரை எடுத்துக்காட்டுக்கள், உள்ளடக்கம் ஆகியவற்றால் அப்படியான படைப்புகள் உருவாவதற்கான சூழல் உள்ளது என்று கருதுகிறேன். --Natkeeran 01:13, 13 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
குறிப்பாக தூயதமிழ்வாதிகளுடனான உரையாடல் மூலம் சிற்றிதழ் சார்ந்த மொழிநடையின் தரம் மேம்பட்டது என்று நினைக்கிறேன். அதன் வடசொற்கள் குறைந்து தனித்தமிழ்ச்சொற்கள் மிகுந்தன என்று தூய தமிழ் முயற்சிகளை ஆதரிக்காத ஒருவர் எழுதியிருப்பது தமிழின் வளர்ச்சியில் தூய தமிழ் ஆர்வலர்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுவதாகத் தோன்றுகிறது. --மயூரநாதன் 14:56, 13 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி, நற்கீரன். பல துறைகளில் வெற்றிடம் இருந்தாலும், இணையம் - கணினி - நுட்பக் கருவிகள் போன்று மக்கள் நேரடியாகப் பயன்பெறும் துறைகள் பற்றி இயன்ற அளவு நல்ல தமிழில் வலைப்பதிவுகளைக் காண முடிவதே நல்ல மாற்றம் தான்.

மயூரநாதன், நீங்கள் குறிப்பிட்ட வரிகள் தாம் என் கவனத்தையும் ஈர்த்தன. செயமோகன் தூய தமிழ் முயற்சிகளை முற்றிலும் ஆதரிக்காதவர் என்று சொல்ல முடியாது. பல்வேறு இடங்களில் தேவையற்ற பிற மொழிச் சொற்களைத் தவிர்ப்பதுடன் அதற்கான தேவையையும் வலியுறுத்தி எழுதி வருகிறார். எந்த அளவு தூய்மை என்பதில் தான் ஒவ்வொருவரும் மாறுபடுகின்றனர். மேற்கொண்டு அவரின் எழுத்துகள் பற்றி தனிப்பட்ட முறையில் எழுத இது களம் இல்லை என்பதால் முடித்துக் கொள்கிறேன் :) --இரவி 15:23, 13 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் - இன்னும் சில மணி நேரங்களில்[தொகு]

தமிழ் விக்கி மாரத்தான் இன்னும் சில மணி நேரங்களில் துவங்குகிறது. (இந்திய நேரம் நவம்பர் 14, 2010 காலை 05.30)--இரவி 14:36, 13 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

இந்திய நேரம் நவம்பர் 14, 2010 காலை 05.30 - நவம்பர் 15, 2010 காலை 05.30 வரை? --மயூரநாதன் 14:47, 13 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஆம். உலக நேரத்தில் நவம்பர் 14, 2010 24 மணி நேரமும். --இரவி 14:53, 13 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நவம்பர் 14, 2010 இந்திய நேரம் இரவு 11.30க்குப் பின்னரே எனது பங்களிப்புத் தொடங்கும். --மயூரநாதன் 15:00, 13 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
ஒரே நேரத்தில் எத்தனை பேர் தொகுக்கலாம் ? எதிர்பாராத வேலைப்பளுவிற்கு வழங்கி ஆயத்தம் செய்யப்பட்டுள்ளதா ?--மணியன் 17:36, 13 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
அப்படி இருக்காது. ஏன் என்றா இதை விட நூறு மடங்குக்கு மேலாக ஆங்கில விக்கியில் தொகுப்புகள் ஒவ்வொரு நிமிடமும் நிகழ்கின்றன. ஒரே பிணையப் பின்புலம்தான். --Natkeeran 17:37, 13 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
ஆம், விக்கியின் வழங்கிகள் பலம்வாய்ந்தவை (9 மில்லியன் டாலர் செலவாகிறது ஆண்டொன்றுக்கு :-)).--சோடாபாட்டில் 17:43, 13 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கி மாரத்தான் கட்டுரைகளைப் பின்னர் வேறுபடுத்திப் பார்க்க அந்தந்தக் கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில் விக்கி மாரத்தான் வார்ப்புரு (நவம்பர் 2010) ஒன்று இணைத்தால் நன்று எனக் கருதுகிறேன்.--சி. செந்தி 20:13, 13 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
மாரத்தான் நிகழ்வில் புதிய கட்டுரைகளை எழுதுவதை விட பழைய கட்டுரைகளை விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான்#இலக்குகள் / தலைப்புகள் இல் உள்ளவாறு மேம்படுத்துவது நல்லது. வார்ப்புருக்கள் தேவையில்லை என்பது என் கருத்து. அண்மைய மாற்றங்கள் பகுதியில் 500 மாற்றங்கள் மட்டும் தான் ஒரே நேரத்தில் தெரியும். இதனை அடிக்கடி அவதானித்து வேறு பயனர்களினால் எழுதப்படும் விசமத் தொகுப்புகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். இல்லாது விட்டால் அவை கண்காணிப்பில் இருந்து தப்பிவிடும். நன்றி.--Kanags \உரையாடுக 20:38, 13 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
URL இல் limit=500 என்ற இடத்தில் வேறு எண் போட்டு மாற்றிக்கொள்ளலாம், நிறையத் தெரியும். 2000 வரை தெரியுமென்று நினைக்கிறேன்.--சோடாபாட்டில் 20:44, 13 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நான் விக்கி மாரத்தான் (தொடர்தொகுப்பு) தொடங்கும் சற்று முன் பங்கு கொண்டு பின்னர் இந்திய நேரம் காலை 9 மணியளவில் மீண்டும் கலந்து கொள்கிறேன்..பிறகு மீண்டும் (இ.நே) மாலை முதல் விடியற்காலை வரை. வெற்றி பெற உழைக்கலாம் என்று இருக்கேன்! --செல்வா 21:38, 13 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஒரே நாளில் 500 தொகுப்புகளுக்கு மேல் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகின்றது. எதிர்பாரா பிற (தமிழ் சார்ந்த) சிக்கல்களில் ஈடுகொடுக்க வேண்டியிருந்ததால், நான் நினைத்துத் திட்டமிட்ட அளவு பங்குகொள்ள முடியவில்லை. எனினும் ஓரளவுக்குப் பங்குகொண்டேன். பங்கு கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி. நல்லதோர் முயற்சி இது. --செல்வா 02:26, 15 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

கூட்டிணைவுடனான பங்களிப்புக்குப் பிள்ளையார் சுழி போட்டு நம் ஒன்றிய வாழ்வுக்கு கட்டியம்கூறி நிறைவுற்ற 14.11.2010 விக்கி மரதனின் பெறுபேறு மற்றும் குறைபாடு பற்றி ஆராயவேண்டும். அது பயனுடைத்து எனக் கருதுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 07:26, 15 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் எதிர்ப்பார்த்த அளவு சூடு பிடிக்கவில்லை :( ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருந்த பலர் நடைமுறை காரணங்களால் பங்கு கொள்ள இயலவில்லை.

சென்னை விக்கிச் சந்திப்பில் காலை 10 மணியளவில் 20 பேர் வந்திருந்தனர். வந்திருந்தவர்களில் சிலரே மடிக்கணினிகள் வைத்திருந்தனர். பலரும் ஆங்கில விக்கித் தொகுப்புகளில் செய்வதில் ஈடுபாடு காட்டினர். பயனர்:logicwiki நிலப்படத் தகவல்களைத் தமிழில் தருவதற்கான நிரலாக்கத்தில் ஈடுபட்டார். நாள் முழுதும் நிகழ்வு ஒருங்கிணைப்புகள், வந்திருந்தோருக்கு உதவியாக இருந்தது, கடுமையான உடல்நலக் குறைவால் என்னாலேயே எதிர்ப்பார்த்த அளவு செய்ய முடியவில்லை :(

அடுத்து சரியான வேளை வாய்க்கும் போது இன்னொரு மாரத்தான் முயலலாம். ஆண்டுக்கு ஒரு முறை செய்வதன் மூலம் தமிழ் விக்கியின் வளர்ச்சி நிலையை ஒப்பிட முடியும்.--இரவி 07:05, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

விக்கி மரத்தான் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஏராளமான பயனர்கள் இதில் பங்குபற்றுவதற்கான தமது விருப்பத்தைத் தெரிவித்ததே ஒரு வெற்றிதான். பல நடை முறைச் சிக்கல் கள் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். நானும் இறுதி நேரத்தில் தான் வெளியில் இருந்து பங்குபற்ற முடிந்தது. எனது பணி தொடர்பான காரணங்களால் இந்திய நேரம் காலை 5.30 மணியில் இருந்து இரவு 11 மணிவரை எதுவுமே செய்ய இயலாத நிலை (கடந்த ஆறு மாத காலமாக இது வழமையான நிலைதான்). எனினும் 15 ஆம் திகதி எங்களுக்குப் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் அடுத்தநாள் விடியும் வரை விழித்திருந்து ஓரளவு பங்களிப்புச் செய்ய முடிந்தது. இது முதல் முயற்சி இந்த முயற்சியில் இருந்த பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அடுத்த தடவை மேலும் சிறப்பாகச் செய்ய முடியும். எல்லோரும் வெளியில் இருந்தே பங்களிக்க முடிவதனால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூட இதனை ஒழுங்கு செய்யலாமே. விக்கி மரத்தானை முன்னின்று ஒழுங்கு செய்த ரவிக்கும் மற்றப் பயனர்களுக்கும் வாழ்த்துக்கள்.-- மயூரநாதன் 08:21, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி, மயூரநாதன். மாரத்தான் அன்றே சந்திப்பையும் வைத்தது எதிர்பார்த்த அளவு உதவவில்லை. அடுத்த முறை அனைவரும் வீட்டில் இருந்தே செய்வது போல் வைக்கலாம். புதிதாக அன்று இணைந்து பங்களிப்பவர்களை விட, ஏற்கனவே விக்கியில் உள்ளவர்கள் கூடுதலாக பங்களிக்க முடியும். தமிழ் விக்கி தொடங்கிய நாளை ஒட்டி வரும் ஞாயிற்றுக் கிழமையில் செய்வது ஆண்டு விழா கொண்டாட்டம் போல இருக்கும் :) --இரவி 08:25, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

மராத்தான் வைத்ததில் ரொம்ப நாளாகத் தள்ளிப் போட்டுவந்த துப்புரவுப் பணிகளை செய்து முடிக்க முடிந்தது. விக்கிப்பீடியா துப்புரவுப் பகுப்பில் இரண்டு உட்பகுப்புகளை காலி செய்து விட்டேன்.--சோடாபாட்டில் 08:31, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்[தொகு]

இன்றைய விக்கியர் சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள். --மயூரநாதன் 05:29, 14 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

சந்திப்பு நல்ல முறையில் நடைபெற வாழ்த்துக்கள் , மன்னிக்கவும், ஊரில் இல்லாததால் கலந்துகொள்ள முடியவில்லை. -- அருண்

விக்கியர் சந்திப்புக்களும், விக்கி மராத்தான் நிகழ்வும் வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்களும்.--கலை 08:53, 14 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

மயூரநாதன், கலை, அருண், வாழ்த்துகளுக்கு நன்றி. 2007 ஆம் ஆண்டு நடந்த சென்னை விக்கி முகாமுக்கு அடுத்து 3 ஆண்டு இடைவெளிக்குப் பின் இப்போது தான் தமிழகத்தில் ஒரு பொதுவான விக்கிமீடியா சந்திப்பு நடந்துள்ளது. இந்தியா மீதான விக்கிமீடியாவின் பார்வையை அடுத்து இந்திய விக்கிமீடியர்கள் குழுமம் மும்முரமாக உள்ளது. இந்தியாவின் பல பகுதிகளிலும் விக்கிச் சந்திப்புகள் நடைபெறுகின்றன. தமிழ் விக்கித் திட்டங்கள் நாம் திறம்பட உழைப்பதும், அதை எடுத்துரைப்பதும், தமிழகத்தில் கள ஒருங்கிணைப்புகளைத் தொடர்ந்து மேற்கொள்வதும் நல்லது. சென்னையில் இருந்து ஆங்கில விக்கிப்பீடியர்கள் இருந்தாலும் தமிழ் விக்கிப்பீடியர் அளவு அவர்கள் ஒரு சமூகமாக இயங்குவதாகத் தெரியவில்லை. --இரவி 07:15, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

சென்னை விக்கிச் சந்திப்பு[தொகு]

சென்னையில் இந்நிகழ்வை நடத்துவதற்கான முனைப்பை மலையாள விக்கியரான தீனு செரியன் தூண்டி விட்டார். அதனை அடுத்த logicwiki நிகழ்வுக்கான இடத்தைப் பெறுவது தொடங்கி அனைத்து ஒருங்கிணைப்புகளையும் செய்தார்.

விக்கித்திட்டங்களை அறிமுகப்படுத்தும் logicwiki

நிகழ்வு, காலை 10 தொடங்கி மாலை 5 வரை நடந்தது. முதலில் ஒரு சிறிய அறிமுகத்தை அடுத்து 1 மணி வரையில் விக்கி மாரத்தான் நடைபெற்றது. பிற்பகலில் விக்கி பற்றிய பொதுவான அறிமுகம், தமிழ் விக்கித் திட்டங்கள் பற்றிய அறிமுகம், மலையாள விக்கித் திட்டங்கள் பற்றிய அறிமுகம், பொதுவான கலந்துரையாடல் இருந்தது.

சென்னை, சேலம், வேலூரில் இருந்து மாணவர்கள், இலினக்சு ஆர்வலர்கள், ஆங்கில விக்கிப்பீடியர்கள் கலந்து கொண்டார்கள். மொத்தம் 45 பேர் வந்திருந்தனர். தமிழ் விக்கித் திட்டங்களில் இருந்து மணியன், மாகிர், logicwiki, செங்கை பொதுவன், சூர்யபிரகாசு, கி. கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.

செங்கை பொதுவன்

75வது நிறைந்த செங்கை பொதுவன், தனது மனைவியுடன் வந்து நாள் முழுதும் நிகழ்வில் பங்கு கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது. பல அடிப்படையான விக்கி நுட்பக் கேள்விகளைக் கேட்டுத் தெளிந்து கொண்டார். பலருக்கும் விக்கிப்பீடியா, விக்கிநூல், விக்கிமூலம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு புரிவதில்லை. நாம் பக்கங்களை அழித்தாலோ நகர்த்தினாலோ அதற்கான காரணத்தை இனங்காண இயலாது திகைக்கிறார்கள். எனவே, புதுப்பயனர்களிடத்தில் நாம் இன்னும் கவனமாகவும் கனிவாகவும் இருக்க வேண்டியது புரிகிறது.

மாகிர், தமிழ் விக்கித் திட்டங்களை அறிமுகம் செய்கிறார்

தமிழ் விக்சனரி 1,90,000+ சொற்களைச சேர்த்து உலக விக்சனரிகளில் ஒன்பதாவது இடத்தை எட்டியுள்ளதைப் பெருமையுடன் அறிவித்தோம். தமிழ் விக்கி செய்தி போன்ற திட்டங்களும் முனைப்புடன் இயங்குவது கண்டு மலையாள விக்கிப்பீடியர்கள் வியப்புற்றனர். புதிய பயனர்கள் தமிழ் விக்கியில் இலகுவாகப் பங்களிப்பதற்கான தங்களுடைய அனுபவம், தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வதாக மலையாள விக்கிப்பீடியர்கள் ஆர்வம் தெரிவித்தனர். வந்திருந்த அனைவருக்கும் இந்திய விக்கிமீடியா செய்தி இதழை அச்சிட்டு வழங்கினோம்.

நவம்பர் 14, 2010 சென்னை விக்கிச் சந்திப்பில் இருந்து சில படங்கள்

--இரவி 07:12, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

சென்னை விக்கி சந்திப்பு தொடர்பான மேற்படி அறிக்கையையும் படங்களையும் பார்க்கும்போது விக்கித் திட்டங்களில் பலர் ஆர்வம் கொண்டிருப்பது புலனாகிறது. இத்தகைய சந்திபுக்களை மேலும் கூடிய ஆர்வலர்களுடன் ஒழுங்கு செய்யக்கூடிய வாய்ப்பும் தெரிகிறது. செங்கை பொதுவன் ஐயா அவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றிப் பங்களித்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி. இது தமிழ் விக்கிக்கு நல்ல உத்வேகத்தைக் கொடுக்கும். இக்கூட்டத்தை ஒழுங்கு செய்வதில் முனைப்புக்காட்டிய தினு செரியனுக்கும், "லாஜிக்விக்கி"க்கும், தமிழ் விக்கி சார்பில் பங்கு கொண்டு விளக்கங்கள் அளித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். -- மயூரநாதன் 08:36, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
45 பேர் வரை கலந்து கொண்டதை அறிந்து மகிழ்ச்சி. அதிலும் வெளியூர்களில் இருந்தெல்லாம் வந்திருப்பது விக்கிப்பக்கம் பலரும் ஆர்வம் செலுத்துவதை உணர்த்துகிறது. இனி தமிழ்நாட்டிலிருந்து இன்னும் பல நூறு பங்களிப்பாளர்கள் வருவதற்கு இது போன்ற சந்திப்புகள் மிகவும் பயன் அளிக்கும். இதை நடத்துவதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள். -- சுந்தர் \பேச்சு 10:52, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
மலையாள விக்கி எழுத்துரு,தட்டச்சு முறைகள் பற்றி கூறிய ஷிஜு. நிற்போர்: பிரதீக்,ரவி,ஸ்ரீகாந்த்

சற்று தாமதமாக தொடங்கினாலும் காலை வேளையிலேயே நிறைய பேர் வந்துவிட்டனர். சிலர் மடினி இல்லாமல் வந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. பெங்களூரில் சந்திப்புகளில் நிறைய பேர் மடினி கொண்டு வருவது போல சென்னையிலும் கொண்டு வருவார்கள் என எண்ணியது தவறு. ஏதேனும் ஓர் கல்லூரி சோதனை கூடத்தில் ஒருங்கினைந்திருந்தால் இதனை செய்திருக்கலாம்.சந்திப்பிற்கு முன்னர் தமிழ் பேப்பர் க்கு எழுதுவதாக எண்ணிய அறிவிப்பும், தமிழ் நிலப்படம் செய்வதற்கான வேலைகளும் அலுவலக பணிகளால் செய்ய இயலவில்லை.

என்னுடைய அறிமுக பேச்சை தொடர்ந்து மாகிர் அளித்த பேச்சு குறிப்பாக அனைவராலும் அறியப்படாத விக்கிசனரி,விக்கிமூலம்,விக்கிசெய்தி மற்ற விக்கி திட்டங்களை அறிமுக படுத்தியது மிகவும் நன்றாக அமைந்தது. என்னிடம் "ஏன் நீங்கள் / உங்களை போல் ஆங்கில விக்கியர்கள் தாய் மொழி விக்கிகளில் பங்களிப்பதில்லை?" என ரவி கேட்டார். பதிலுக்கு பின் சிறு விவாதம் நடைபெற்றது.காப்புரிமை,ஏனைய விக்கி கொள்கைகள் பற்றிய தெளிவு புது பயனர்களுக்கு வர, கண்டிப்பாக நாம் அதை எளிதில் புரியும் போல் அமைக்க வேண்டும், இதன் தேவை சந்திப்பில் அத்யாவசியம் என உணரப்பட்டது. தமிழ் விக்கிப்பீடியாவை பார்வையறோரும் பயன்படுத்துகிறார்கள் என ஒருவர் பகிர்ந்து கொண்டார்.

கூட்டம் முடிந்த பின் பெங்களூர் பயனர்கள்(டினு,சிசு,திசு,நான்) காரில் மற்றோரு சிறு கூட்டம் போட்டோம்.நள்ளிரவு வரை நீண்ட பயணத்தில் ஷிஜு தன் பெயரை ஏன் சிசு என த.விக்கியில் எழுதப்படுகிறது என கேட்டார்.நான் அவருக்கு கிரந்த எதிர்ப்பு கொள்கை,சமீப கிரந்த சர்ச்சை முதலியவை பற்றி விளக்கினேன்.அவர் அப்படியும் பெயர்களை மாற்றி எழுதுவதில் உடன்பாடு இல்லை என்றார். (தற்பொழுது எனக்கும் அதே உடன்பாடுதான்).சென்னையில் இருக்கும் ஆங்கில விக்கியர்கள்,சற்று ஏமாற்றம் தான், தமிழ் விக்கியர்களின் எண்ணிக்கை அதிகம் போல் இருக்கின்றது.விரைவில் அடுத்த கூட்டம் நடக்கும் என எதிர்பார்கிறேன். ஸ்ரீகாந்த் 19:51, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

Living in the age of language death[தொகு]

நன்றி, பயனான தகவல், பெலருசில் இருப்பதால் இதனை நேரடியாகப் பார்க்கக்கூடியவாறு உள்ளது. உருசிய மொழியின் ஆதிக்கத்தால் பெலருசிய மொழி இறந்துவிட்டது என்பது சரியான உண்மை. ஒரு இனத்தின் கல்வியாவது சொந்தமொழியில் இல்லாதவிடத்து அவர்களின் சொந்தமொழி இறக்கும் என்பதில் ஐயமில்லை.--சி. செந்தி 10:38, 15 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
பெலருஸ் கட்டுரையை மேம்படுத்தித் தாருங்கள் செந்தி.--Kanags \உரையாடுக 10:51, 15 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
விரைவில் சிறிது சிறிதாக மேம்படுத்தத் தொடங்குகிறேன்.--சி. செந்தி 20:16, 15 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]


புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளின் தமிழார்வம்[தொகு]

நோர்வே பேர்கன் நகரில் இருக்கும், அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இணைந்து இப்படியொரு வலைப்பதிவை] அமைத்து வருகின்றார்கள் என்று இன்று பார்த்து அறிந்தேன். நோர்வேயிலேயே பிறந்து வளர்ந்து வரும் பிள்ளைகள் இவ்வாறு தமிழில் ஆர்வத்துடன் செயற்படுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. அந்த மகிழ்ச்சியை விக்கி நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது--கலை 23:37, 15 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

உண்மையில் வியக்கத்தக்க, பாரட்டமிக்க விடயம். ஆனால் ஆங்கில மொழி நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கு (ஐக்கிய இராச்சியம், கனடா, அமெரிக்கா, ஆசுத்திரேலியா) இந்த ஆர்வம், திறமை இல்லாதது வருத்தத்துகுரிய நிகழ்வாகும். இப்படி திறமை கொண்ட, கனடாவில் பிறந்த மாணவர்களை விரல் கொண்டு எண்ணி விடலாம். ஆனால் இங்கு நேர்வேயிலும் பார்க்க பதினைந்து மடங்கு மக்கள் தொகை உள்ளது. இது ஆங்கில மொழி மேலாதிக்கத்தின் உள்வாங்கல் என்றே கருதுகிறேன். --Natkeeran 02:04, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
பாராட்டப்பட வேண்டியவர்கள்,பெற்றோர்கள் விருப்பப்பட்டாலும் இன்றைய புலம் பெயர் மாணவர்கள் தமிழில் எழுதுவது குறைவு (பேசுவதே பெரிய சங்கதியாக உள்ளது), வலைப்பதிவு நடத்தும் 10ம் வகுப்பு மாணவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும், அவர்களுக்கு விக்கி நண்பர்களின் சார்பாக பாராட்டுகளை தெரிவியுங்கள். --குறும்பன் 03:10, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
சிறுவர்களின் தமிழார்வமும் படைப்புத்திறனும் பாராட்டிற்குரியது. அவர்களை வழிநடத்தும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு வாழ்த்துகள். --மணியன் 06:04, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. தமிழ்நாட்டில் கூட இப்போது தமிழைக் குழு அமைத்துக் காப்பாற்ற வேண்டிய நிலைக்குச் சென்று கொண்டிருக்கும்போது இதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி. பாராட்டுகள். -- சுந்தர் \பேச்சு 07:40, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
நல்ல முயற்சி. சரியான வழியில் தமிழை இளையோரிடம் கொண்டு செல்வதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தமிழைப் பரப்ப குற்ற உணர்வும் கடமைப் பரப்புரையும் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இக்காலத்தில், இது பொன்ற முயற்சிகள் நன்கு பலன் தரும்.--சோடாபாட்டில் 07:47, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
சிறப்பான பாராட்டுக்குரிய ஒரு நடவடிக்கை. தமிழ் மொழியுடன் தாம் நேரடியான தொடர்பைப் பேணிக்கொள்வதற்கு மட்டுமன்றி தம்மைப் போன்ற பிறருக்கும் முன்னுதாரணமாக விளங்கக்கூடிய இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள பிள்ளைகள் பாராட்டுக்கு உரியவர்கள். தனிப்பட்ட முறையிலும் நாம் இவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்து ஊக்குவிக்க வேண்டும். -- மயூரநாதன் 07:52, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஆங்கில நாடுகளில் வாழ்வோருக்கு ஆங்கிலம் பொது மொழி. ஆனால், பல்வேறு மொழிகள் உள்ள ஐரோப்பிய நாடுகளில் உறவினர்களைக் கொண்டுள்ள புலம்பெயர் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தமிழே முதன்மையான தொடர்பு மொழியாக இருக்க முடியும். மற்ற நாடுகளைக் காட்டிலும் இங்கு தமிழ்க் கல்வி சற்று முன்னேறி இருப்பதற்கு இதுவே காரணம் என நினைக்கிறேன். செருமனியில் தமிழாலயப் பள்ளியில் சில காலம் பாடம் கற்பித்த அனுபவம் மறக்க முடியாதது. அவர்களின் வாழ்க்கைக்கு நெருங்கி நட்புடன் கற்றுத் தந்தால், தமிழை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறார்கள். புலம்பெயர் குழந்தைகளின் தமிழ் அறிவு, உணர்வை வளர்ப்பதில் பெற்றோரே பெரும் பங்கு வகிக்க முடியும். அதற்கு அடுத்து நல்ல பள்ளிகளும் ஆசிரியர்களும். அப்படி அமைந்தால், அஞ்சலி போல இன்னும் நிறைய குழந்தைகள் கிடைப்பார்கள் :) --இரவி 08:15, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

மயூரநாதன் கூறியுள்ளபடி, தனிப்பட்ட முறையில் பாராட்டுத் தெரிவித்து ஊக்கப்படுத்துவது நல்லதுதான். அங்கே ஏற்கனவே மயூரநாதனும், மணியமும் பாராட்டியிருப்பதைப் பார்த்தேன். மற்றவர்களும் அவ்வாறே செய்தால் அவர்களுக்கு தொடர்ந்து எழுத ஊக்கமும், உற்சாகமும் கிடைக்கும் என நினைக்கிறேன்.--கலை 15:57, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]