உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு36

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியா முதற்பக்கத்திலேயே எழுத்துப்பிழை

[தொகு]

"உலகக்கோப்பைக் கால்பந்து 2010 அல்லது 2010 ஃபீஃபா (FIFA) உலகக்க்கிண்ணக் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் 2010 ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை நடைபெறுகின்றன. தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 204 அணிகளிலிருந்து 32 அணிகள் இறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இம்முறை முதற் தடவையாக ஆப்பிரிக்க நாடொன்றில் இறுதிச் சுற்று நடைபெறுகின்றது.ஜெர்மனியில் நடைபெற்ற 2006 உலகக்கோப்பை கால்பந்து இறுதிச் சுற்றில் இத்தாலி வெற்றி பெற்றது." - இந்தக் கட்டுரை, தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உள்ளது. இதில் முதல் வரியில், "உலகக்கிண்ணக் கால்பந்து " என்பதற்கு பதிலாக "உலகக்க்கிண்ணக் கால்பந்து" என்று உள்ளது. இரண்டு 'க்' எழுத்துக்கள் உள்ளன. தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் - கிரிதரன் - உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி - கிரிதரன்

அந்தப் பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி கிரிதரன்.--Kanags \உரையாடுக 05:09, 19 ஜூன் 2010 (UTC)

சிறந்த கூகுள் மொழி பெயர்ப்பாளர்களுக்குப் பரிசு அறிவிப்பு

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில், தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் குன்றாமல் கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் வழங்கும் சிறந்த கட்டுரைகளின் அடிப்படையில் இரண்டு பரிசுகள் வழங்குவது என தனிப்பட்ட முறையில் நான் முடிவு செய்துள்ளேன். இப்பரிசுகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஒப்பற்ற பங்களித்த இருவரின் பெயரால் வழங்குவது என முடிவு செய்துள்ளேன். மயூரநாதன் பரிசு, சிறீதரன் பரிசு என இவை வழங்கப்படும். ஒவ்வொரு பரிசும் அதன் மதிப்பாக ஆயிரம் இந்திய உருபாயும் ஒரு சான்றிதழும் வழங்கப்படும். இப்பரிசின் மதிப்பு அதன் தொகையில் இல்லை, சிறந்த கட்டுரைகளை வழங்கியதால் விக்கிப்பீடியர்கள் தேர்ந்தெடுத்து வழங்கும் பெருமையில் இருக்கும். பரிசு பெறும் கூகுள் மொழிபெயர்ப்பாளர் அவர் வழங்கிய கட்டுரைகளின் தரத்தின் அடிப்படையிலும், குறிப்பாக அவர் வழங்கிய சிறந்த இரண்டு கட்டுரைகளைக் குறிப்பிட்டும் பரிசுகள் வழங்கப்படும். இப்பரிசுகள் சனவரி 2011 முதல் கிழமை (வாரம்) அறிவிக்கப்படும். பரிசுக்காக கூகுள் மொழியாளர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, என்ன வழிமுறைகளைக் கையாள்வது என்பதைப்பற்றி மேலும் கருத்துகளை வரும் நாட்களில் அறிவிக்கலாம். தேர்வுக்குழு என்றில்லாமல் எல்லோரும் கருத்துகள் தெரிவிக்கும்படியாகவும் நாம் அமைக்கலாம். விக்கி முறைப்படியே கருத்தறிவித்து தேர்வு செய்யலாம் என்பது என் தனிக்கருத்து. தமிழ் விக்கிப்பீடியாவின் பெயரைப் பயன்படுத்த முறைப்படி ஒப்புதல் பெற வேண்டியிருக்கும், அதற்கான ஏற்பாடுகளைப் பின்புலத்தில் நான் தொடர்வேன். இப்போதைக்கு மிகச்சிறந்த இரண்டு தமிழ் விக்கிப்பீடியர்களின் பெயர்களால் கூகுள் மொழிபெயர்ப்பாளர்களுக்கு என சிறப்பான பரிசுகள் தரவிருப்பதை மட்டும் அன்புடன் அறிவிக்கின்றேன். தமிழ் விக்கிப்பீடியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள், திடுதிப்பென்று இரண்டு விக்கிப்பீடியர்களின் இப்படி அறிவித்தமைக்கு அந்த நல்ல விக்கிப்பீடியர்கள் என் மீது கோவித்துக் கொள்ளமாட்டார்கள் என்னும் நம்பிக்கையில் இதனை அறிவிக்கின்றேன். வருங்காலத்தில் மயூரநாதன் பரிசும், சிறீதரன் பரிசும் பெரிதாக வளரும் என நான் நம்புகிறேன் (வருங்காலத்தில் கூகுள் மொழி பெயர்ப்பு என்றில்லாமல் சிறந்த கட்டுரைகள் எழுதிய விக்கிப்பீடியருக்கு என உருவெடுக்கலாம்). அதற்கான என் நல்லூட்டுகளை நான் தர அணியமாக உள்ளேன். கூகுள் மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஊக்கம் தரவேண்டும் என்னும் நோக்கிலேயே இப்பரிசுகளை நிறுவுகின்றேன். தேர்வு செய்வது விக்கிப்பீடியர்களின் பொறுப்பு :) --செல்வா 20:17, 30 ஏப்ரல் 2010 (UTC)

கருத்துக்கள்

[தொகு]
  • ஆர்வமுள்ள படைப்பாளர்களை ஊக்குவிக்கவும், விக்கி-கூகுள் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் செல்வாவின் பரிசுத் திட்டம் வழிகோலும் என்பது உறுதி. செல்வாவுக்கு உளமார்ந்த பாராட்டுகள்!--George46 01:21, 1 மே 2010 (UTC)[பதிலளி]
திருச்சி பெரியண்ணன், முனைவர் பவுல் வறுவேல் (George46), உங்களுக்கு நன்றி.--செல்வா 01:27, 1 மே 2010 (UTC)[பதிலளி]
மிக நல்ல திட்டம், செல்வா. அதுவும் மயூரநாதன், சிறீதரன் பெயரால் வழங்குவது மிகப் பொருத்தம். ஆங்கில விக்கியில் நச்சு வேலைகளைத் தடுப்பதில் அருமபணி ஆற்றிய பயனர் RickK பெயரால் ஒரு பதக்கம் நிறுவப்பட்டது நினைவுக்கு வருகிறது. (அவரது கணக்கை வேறு யாரோ கைப்பற்றி விட்டதாக ஐயம் எழுந்துள்ளது கவலைக்குறிய நிகழ்வு.) -- சுந்தர் \பேச்சு 03:29, 1 மே 2010 (UTC)[பதிலளி]
செல்வா, தமிழ் விக்கியின் வளர்ச்சியில் நீங்கள் காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது. விருதுகளுக்கான பெயர்களும், மிகச் சரியான தேர்வு. இதே போல புதுப் பயனர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பதக்கங்களை உருவாக்கலாம். பனமுடிப்பு இல்லாமல் :) --அராபத்* عرفات 04:23, 1 மே 2010 (UTC)[பதிலளி]

செல்வா, இந்த அறிவிப்பு குறித்து எனக்குச் சில தயக்கங்கள் உள்ளன. தற்போது, கூகுள் திட்டத்தில் ஓரளவு நம்பிக்கை வந்திருந்தாலும்,பலப் படிநிலைகளைக் கடந்த பின்னரே இத்திட்டம் தமிழ் விக்கிப்பீடியாவின் முழுமையான ஆதரவு பெற்ற ஒரு திட்டமாகத் தொடர முடியும். நல்ல தரமான கட்டுரைகளைத் தருவது அவர்களது தொழில் தேவையும் (professional requirement) கடமையும் ஆகும். தரமான கட்டுரைகளைத் தந்து இத்திட்டம் தொடர்வதை உறுதி செய்வதன் மூலம் தங்கள் தொழில் வாய்ப்பைப் பெருக்கிக் கொள்வது அவர்களுக்குத் தான் நல்லது. பலர் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவழித்துத் தன்னார்வத்தின் பேரில் பங்காற்றும் போது, பணம் பெற்றுக் கொண்டு எழுதுபவர்களுக்கு மேலும் பணம் தந்து ஊக்கப்படுத்துவது சரியாகத் தோன்றவில்லை (அதுவும் அடிப்படைத் தரத்தை எட்ட).

கூகுள் திட்டத்தை மேம்படுத்த விழையும் நோக்கம் நன்று. ஆனால், தற்போது இந்நோக்கத்தைச் செயற்படுத்த பயிற்சிப் பட்டறை முதலிய வழிமுறைகளையே நாம் ஆய வேண்டும். கூகுள் மொழிபெயர்ப்பாளர்களை ஊக்கப்படுத்த வழமையான விக்கிப் பதக்கங்களே கூட போதுமானவை.

மயூரநாதன், சிறீதரன், நற்கீரன் போன்றோரின் தன்னலமற்ற உழைப்பு விக்கிப்பீடியாவில் மட்டுமல்ல பொதுவான தமிழ்ச் சமூகத்திலும் போற்றுதலுக்குரியது. இவர்கள் அனைவர் மேலும் நான் வைத்துள்ள மதிப்பை அவர்கள் அனைவரும் நன்கு அறிவர். இவர்களுக்கு உரிய மதிப்பை தமிழ்ச் சமூகம் அளிக்க முனைய வேண்டும். எனினும், தனிப்பட்ட விக்கிப்பீடியர்களின் பெயரில் விக்கிப்பீடியாவுக்குள்ளேயே பரிசு அறிவிப்பதில் எனக்குச் சில தயக்கங்கள் உள்ளன. தமிழ்ச் சமூகத்திலேயே எங்கும் காண இயலாத அருமையான தோழமை உணர்வுடன் செயற்பட்டு வருகிறோம். உங்களைப் போன்ற ஒரு பேராசிரியரையோ மற்ற பெரியவர்களையோ பெயர் சொல்லி அழைப்பதும் தயக்கமின்றி கூடி உழைப்பதும் தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டுமே சாத்தியம். இந்நிலையில், பரிசு, விருது என ஒரு சில பங்களிப்பாளர்களுக்கு உரிய நியாயமான மதிப்பை அளித்துத் தனித்து உயர்த்திக் கூறுவது கூட சமூகத்தின் சமநிலையை மாற்றலாம். மூத்த வலைப்பதிவர், புது வலைப்பதிவர் என்றெல்லாம் வலைப்பதிவில் பிரிவினைகள் இருப்பது போல் இங்கும் வந்து விடக்கூடாது. முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகத்தைச் செய்த போது கூட மிகவும் தயங்கியே செய்தேன். தன் பெயர் விட்டுப்போவதாக யாரும் நினைக்கக்கூடாதே என்று. எனவே, தனிப்பட்ட எவரின் பெயரையும் முன்னிலைப்படுத்திச் செயற்பட வேண்டாம் என்று தோன்றுகிறது.

இப்பரிசு அறிவிப்பு, உங்கள் தனிப்பட்ட ஆர்வத்தின் பேரிலோ தமிழ் விக்கிப்பீடியா சார்பற்ற ஒன்றாகவோ இருக்கும் எனில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. தமிழ் விக்கிப்பீடியா சார்பாக செய்யப்படுவது எனில் எனக்கு உடன்பாடில்லை.

தமிழ் விக்கிப்பீடியா சார்பாக பணப்பரிசு / முறையான பெருமை அறிவிப்பது என்றால், புதிய பயனர்களை ஊக்குவிக்கும் விதமாக அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும். ஏற்கனவே இருக்கிற பங்களிப்பாளர்களை ஊக்குவிப்பது என்றால் கட்டுரை எழுதுவது போக பிற விக்கிப் பணிகளையும்கவனத்தில் நன்று. கோபியின் துப்புரவுப் பணி, தெரன்சின் படிம ஒருங்கிணைப்புப் பணி, சுந்தரின் விக்சனரிப் பணி போல முக்கியத்துவம் வாய்ந்த எவ்வளவோ பணிகள் உள்ளன. --ரவி 06:05, 1 மே 2010 (UTC)[பதிலளி]

இரவி, மேலே கூறிய உங்கள் கருத்துகள் பலவற்றிலும் எனக்கு நெருங்கிய உடன்பாடு உண்டு. சிலவற்றைக் கூற விழைகிறேன். திறந்த மனத்துடன் அணுகுவீர்கள் என நினைக்கின்றேன். கூகுள் நிறுவனம் பணம் தந்து மொழி பெயர்க்கிறார்கள். எனவே ஓராயிரம் உருபாய் என்பது ஒரு பெரிய தொகையே அல்ல. என் கருத்து என்னவென்றால், கூகுள் மொழிபெயர்ப்புகளிலேயே மிகச்சிறந்த மொழிபெயர்ப்புகள் தமிழில் உள்ளன என்று விளங்குமாறு அவர்கள் பணி சிறக்க வேண்டும் என்பதே.ஒரு நிறுவனத்தில், சம்பளம் பெற்று பணி செய்து வந்தாலும், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஊக்கப் பரிசுகள், பெருமைகள் தருவதில்லையா? எனவே பணம் பெற்று அவர்கள் செய்தாலும், அவை நல்லபடியாக சிறப்பாக அமைந்து விக்கிப்பீடியர்களின் நன் மதிப்பைப் பெற்று நலம் பெருக்குவதாய் அமைந்துள்ளது என்றால் நல்லதுதானே. புதிய பயனர்களில் சிறப்பாக பங்களிப்பவர்களுக்கு ஆண்டுதோறும் ஒரு பரிசும் அளிக்கலாம். தொழில்நுட்பம், பராமரிப்பு, உதவிப்பக்கங்கள் உருவாக்கம் போன்றவற்றுக்கு ஒரு பரிசும், சிறந்த ஒளிப்படங்கள், அசைப்டங்கள் உருவாக்கம் முதலியவற்றுக்கு ஒரு பரிசும், வெளியுறவு, பட்டறை நடத்தல் போன்ற பணிகளுக்கு ஒரு பரிசு என மேலும் நான்கு பரிசுகள் அறிவிக்கலாம். இது ஒரு தொடக்கம்தான் இரவி. கூகுள் திட்டத்தால் உருவானவை இன்னும் நன்றாக அமைந்திருந்தால் அவை தனித் தொகுதியாக மூன்றில் ஒரு பங்கு அல்லது நான்கில் ஒரு பங்கு என்னும் அளவுக்குக் கணிசமானவை. அதுவும் குறுகிய காலகட்டத்திலேயே உருவானவை. பணம் ஈட்டும் தொழில்வழி உருவாக்கப்பட்டாலும் அவற்றை அக்கறையுடனும், சிறப்பாகவும் அவர்கள் செய்தால் நாம் ஊக்கம் அளிப்பது நல்லதென்றே நான் நினைக்கின்றேன். ஏற்றத்தாழ்வுகளோ, கருத்துக் கூறும் உரிமைகளில் சாய்வுகளோ ஏதும் வந்துவிடல் கூடாது. உரையாடல் பண்பு குன்றாமல் வளர்முகமாகவும் பொதுநலம் சார்ந்தே உரையாடி இணக்க முடிவுகள் எடுக்கும் நம் நடைமுறையிலும் மாற்றம் ஏதும் வந்துவிடல் கூடாது. தனி விக்கிப்பீடியர்களின் பெயரால் இப்படியான பரிசுகள் தருவது தவறல்ல என்பது மட்டுமல்ல, தகைமை மிக்கவர்கள் பெயரால் அப்படிச் செய்வதை நாம் உளம் உவந்து ஏற்கும் பண்பாடும் வளர்தல் வேண்டும் என நினைக்கின்றேன். அது நம் கடமையும் ஆகும். தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒரு மனதாக கூடாது என்றால், அதனை நான் மதிப்பேன், ஆனால் இலாபநோக்கமற்ற புற நிறுவனம் ஒன்றை நிறுவி அதன்சார்பாக அளிக்க முயல்வேன். குறிக்கோள் தமிழ் விக்கிப்பீடியாவில் நல்ல தரமான கட்டுரைகள் வளர வேண்டும், அதன்வழி பள்ளி, கல்லூரி மாணர்வர்களும், பொதுமக்களும் நற்பயன் கொள்ள வேண்டும் என்பதே. ரியாத் அராபத்*, நீங்கள் சொல்வதை நான் முற்றிலுமாக ஏற்கின்றேன். அவ்வப்பொழுது பதக்கம், விண்மீன் என்பனவற்றை உடன் பங்களிபாளன் என்னும் முறையில் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றேன். இவர்களில் பலர் குறுகிய காலம் பங்களித்தவர்களே. எல்லாவற்றுக்கும் மேலாக சிறப்பான ஒரு கட்டுரையை எழுதினோம், பயனுடைய பல கருத்துகளைத் தமிழில் வழங்கினோம், மின்மினிப்பூச்சி போன்றேனும் சிறு விளக்கேற்றினோம் என்னும் உள்ள நிறைவே நம்மை எழுதத் தூண்டுவது.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

என்பது போலவும் உள்ளத்துள் நற்றனைத் தூறும் நலமாக இருக்கலாமே நம் விக்கிப்பீடியா :)
தொட்டனைத் தூறும் மணற்கேணி உள்ளத்துள்
நற்றனைத் தூறும் நலம்.

அதாவது நல்லது செய்தால் அதுவே மேலும் நலம் பெருக்கும் ஒன்றாக அமையலாம். [நற்று = நன்மை. கழக தமிழகராதியைப் பார்க்கவும். சென்னைத் தமிழ்ப் பேரகராதிலும் உண்டு. நற்றம், நற்று. ].
சுந்தர் உங்கள் ஆதரவுக்கும், பயனர் RickK பற்றிய செய்திக்கும், மிக்க நன்றியுடையேன். அடுத்த மூன்று பரிசுகள், பதக்கங்களின் பெயர்கள் நற்கீரன், இரவி, சுந்தர் தான் :) இதெல்லாம் உண்மையான அரும்பணியின் விளைவாய் ஏற்பட்டது என்பது காலம் சொல்லும். போற்றுவார் போற்றுவர் (மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்). --செல்வா 12:38, 1 மே 2010 (UTC)[பதிலளி]

செல்வா, தமிழர் சமூகம் எங்கும் சங்கம், விருது, பரிசு, போட்டி, அது, இது என்று அரசியலில் தேய்ந்து கிடப்பதையே காண முடிகிறது. இத்தகைய எந்தவித தன்னல நோக்கும் குழப்பமும் இல்லாமல் இங்கு செயல்பட முடிவதே நல்ல பங்களிப்பாளர்களை ஈர்த்துச் செயற்படுத்துவதற்கான வடிகட்டியாகத் திகழ்கிறது. விக்கிப்பீடியாவில் பெரிய தனிப்பட்ட அங்கீகாரம் இல்லை என்பது குறை இல்லை. எனக்கென்னவோ, அது தான் விக்கிப்பீடியாவின் வெற்றிக்குக் காரணமான ஒன்றாகத் தோன்றுகிறது. தமிழ் விக்கிப்பீடியா தற்போது நன்றாகச் செல்கிறது. இது போன்ற திட்டங்களால் நாளை தேவையில்லாத குழப்பங்கள் வரக்கூடாது என்பது என் கவலை. இன்று அனைவரின் விருப்பதுக்கு உரிய சிறப்பானவர்கள் பெயரால் பரிசு வழங்க விரும்புகிறோம். நாளை சில தன்னலக்காரர்கள் தங்கள் விளம்பரத்துக்காக கூட இதே போல் செய்ய முற்படலாமே? இந்தப் பரிசுகள் கூடாது என்று சொல்ல வரவில்லை. தற்போது தேவையில்லை என்பதே என் கருத்து.
தமிழ் விக்கிப்பீடியாவில் தன்னலம் பாராமல் உழைக்கும் அனைவரும் தமிழ்ச் சமூகத்தின் நன்றிக்கு உரியவர்களே. இவர்களுக்கு மட்டுமல்ல வேறு பல புலங்களில் இவ்வாறு உழைக்கும் த. உழவன், பொள்ளாச்சி நசன், தமிழா முகுந்த், நூலகம் திட்ட நண்பர்கள் போன்ற பலரும் பெருமைப்படுத்தப்பட வேண்டியவர்களே. இலக்கியத்துக்கான பரிசு வழங்கும் அமைப்புகள் போல உண்மையான தமிழ்ப் பணிகள் செய்வோரைக் கண்டு பெருமைப்படுத்த ஓர் அமைப்பு வேண்டும்.
தகைமை மிக்கவர்களைப் பெருமைப்படுத்தும் பண்பு நம் அனைவருக்குமே உண்டு. அதை விக்கிப்பீடியாவுக்கு வெளியேயான ஒரு களத்தில் செய்யலாம் என்பதே என் வேண்டுகோள்.
கூகுள் திட்டம், இன்னும் ஓர் அடிப்படைத் தரத்தையே எட்டவில்லை. அந்தத் தரத்தை எட்டுவது அவர்களது தொழிற் கடமை. இந்த அடிப்படைத் தரம் வராததற்கு கூகுளின் சில நடைமுறைகளும் காரணம். இது பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன். கூகுள் பங்களிப்பாளர்களும் வழமையான விக்கிப்பீடியர்கள் போல் ஒருங்கிணைந்து செயல்பட்டு அடிப்படைத் தரம் மிக்க கட்டுரைகளைத் தரும் நிலை வரும் எனில் ஊக்கப் பதக்கங்கள் அளிக்கலாம். அராப்பத், தானியல் பாண்டியன் போன்றோர் மிக அருமையான மொழிபெயர்ப்புகளை வழங்கியுள்ளார்கள். மொழிபெயர்ப்பும் படைப்பிலக்கியத்தின் ஒரு முக்கியப் பகுதி. எனவே, மொழிபெயர்ப்புக் கலையை ஊக்குவிக்கும் நோக்கில் அனைவருக்குமே கூட இது போன்ற சிறப்புப் பதக்கங்கள் வழங்கலாம். இது குறித்து எனக்கு இறுகின நிலைப்பாடு ஏதும் இல்லை. எனினும், எனது கருத்தைச் சீர்தூக்கிப் பார்த்துச் செயற்பட வேண்டுகிறேன். நன்றி--ரவி 14:38, 1 மே 2010 (UTC)[பதிலளி]
  • சிறந்த கூகுள் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பரி்சு எனும் தலைப்பில் செல்வாவின் அறிவிப்பு கண்டேன். இது எனக்கு மகிழ்ச்சிக்குரியதாயில்லை. எனக்கு இது உடன்பாடுமில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி பங்களித்து வருபவர்கள் பலர் இருக்க கூகுள் நிறுவனத்திடம் பணம் பெற்று பயனடைபவர்களுக்குத் தங்கள் பரிசு என்பது சரியான ஒன்றல்ல. பரிசு சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எவ்வித பயனும் பெறாமல் உதவுபவர்களுக்கானதாக இருப்பின் அது வரவேற்கத்தக்கது. தங்கள் பரிசுகளான மயூரநாதன் பரிசு, சிறிதரன் பரிசு எனும் பரிசுத் தொகையும் சான்றிதழ்களும் தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்களுக்கே அளிக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

தங்களின் இரு பரிசுகளையும் கீழ்காணும் வகையில் பிரித்து அளிக்கலாம்.

மயூரநாதன் பரிசு

ஒவ்வொரு வருடமும் புதிதாக இணைந்த பயனர்களில் அதிகமான புதிய கட்டுரைகள் பங்களிப்புகள் செய்தவருக்கு அளிக்கலாம்.

சிறிதரன் பரிசு

ஒவ்வொரு வருடமும் புதிதாக இணைந்த பயனர்களில் அதிகமான பங்களிப்புகள் செய்தவருக்கு அளிக்கலாம்.

சிறப்பு

தங்களது பரிசு அறிவிப்புகளால் கீழ்காணும் பயனும் சிறப்புகளும் கிடைக்கலாம்.

  1. ஒவ்வொரு ஆண்டும் புதிய பயனர்கள் அதிக ஆர்வத்துடன் பங்களிக்க முன் வருவார்கள்.
  2. இவர்களுக்குப் பரிசை விட சான்றிதழ் அதிக மகிழ்ச்சியளிக்கக் கூடும்.
  3. பரிசுக்குரியவரை விக்கிப்பீடியாவின் புள்ளிவிபரத்தின் வழியாகவே கணக்கிட்டு விடலாம். பரிசுக்குரியவரைத் தேர்வு செய்வதில் எவ்வித சிக்கலுமிருக்காது.

மேலும் பல பயன்கள் விளையலாம்.

ஆனால் கூகுள் மொழி பெயர்ப்பாளர்களுக்கு தங்களின் பரிசோ, பணமோ எவ்வித மகிழ்ச்சியும் அளிக்கப் போவதில்லை. எனவே தங்களின் பரிசு குறித்த செய்தி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.--Theni.M.Subramani 01:34, 2 மே 2010 (UTC)[பதிலளி]

தமிழால் முடியுமா

[தொகு]

தமிழால் முடியுமா? - மாணவியின் பேச்சு --Natkeeran 03:58, 2 மே 2010 (UTC)[பதிலளி]

கூகுள் தமிழாக்கப் பயனர்களுக்கான பயிற்சிப் பட்டறை

[தொகு]

நாளை பகல் 2.30 (இந்திய நேரம்) அளவில் சென்னையில் உள்ள கூகுள் தமிழாக்கப் பயனர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று நடைபெறுகிறது. ஆர்வமுள்ள அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியர்களும் கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு, என்னுடைய எண் 99431 68304ஐத் தொடர்புகொள்ளலாம். நன்றி--ரவி 13:17, 3 மே 2010 (UTC)[பதிலளி]

சிறப்பாக நடந்தேற வாழ்த்துகள்!!--மணியன் 05:09, 4 மே 2010 (UTC)[பதிலளி]
ரவி, பொனொபோ போன்ற சிறப்பான மொழிபெயர்ப்புகளை எடுத்துக் காட்டுங்கள். -- சுந்தர் \பேச்சு 09:15, 4 மே 2010 (UTC)[பதிலளி]
மிகவும் நல்லது, ரவி. வாழ்த்துக்களும் பாராட்டும். பயிற்சிப் பட்டறை நிகழ்வுகள் பற்றி நேரம் இருக்கும் போது எழுதுங்கள்.--சிவக்குமார் \பேச்சு 20:25, 4 மே 2010 (UTC)[பதிலளி]
கூகிள் தமிழாக்கப் பயனர்களுக்கான பயிற்சிப் பட்டறை என்பதால், அதற்கு வரவேற்பும், அதன் விளைவுகளையும் பற்றி அறிய நானும் ஆவலாக உள்ளேன்.--கலை 21:56, 4 மே 2010 (UTC)[பதிலளி]

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள Park View விடுதியில், நேற்று பகல் 2.30 முதல் 5.30 வரை பட்டறை நன்றாக நடந்தது. சென்னையைச் சார்ந்த மூன்று மொழிபெயர்ப்பு நிறுவனங்களில் இருந்து 15க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் சிலர் முழுநேரப் பணியாளர்கள். சிலர் பகுதி நேர அல்லது விருப்பப் பணியாளர்கள் (freelancers). மொழிபெயர்ப்பு நிறுவனங்களில் இருந்து இத்திட்டத்துக்கான மேலாளர்களும் கலந்து கொண்டார்கள். முதலில், இத்திட்டம் தொடங்கிய கதை, இதில் உள்ள முட்டுக்கட்டைகள் பற்றி விளக்கினேன். அடுத்து, மொழிபெயர்ப்புகளில் காணப்படும் சில குறைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினேன். இத்தகைய குறைகள் திருத்தப்பட வேண்டியவையே என்று ஏற்றுக் கொண்டார்கள். பிறகு, எப்படி நேரடியாக விக்கிப்பீடியாவில் தொகுப்பது, பேச்சுப்பக்கங்களைக் கவனிப்பது போன்ற அடிப்படை விசயங்களைச் சுட்டிக் காட்டினேன். நடைக் கையேடு குறித்த பல்வேறு ஐயங்களையும் எழுப்பினார்கள். இயன்றவரை அக்கேள்விகளை நேரடியாக தமிழ் விக்கிப்பீடியாவில் ஒத்தாசை பக்கம், கலைச்சொல் ஒத்தாசைப் பக்கங்களில் எழுப்புமாறு கேட்டுக் கொண்டேன். கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுமே ஒரே பயனர் கணக்கின் கீழ் பல மொழிபெயர்ப்பாளர்களின் கட்டுரைகளைப் பதிவேற்றுவதை அறிய முடிந்தது. இது விக்கி நடைமுறைகளுக்கு முரணானது என்பதால், அனைவரும் நேரடியாகவே விக்கியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினேன். நேற்றைய சந்திப்புக்கு அடுத்து இன்று சிலர் நேரடியாகப் பங்கு கொள்வதைக் காண முடிகிறது. ஆலமரத்தடியில் நாம் உரையாடியதற்கு ஏற்ப ஆகத்து 15க்கு முதல் ஏற்கனவே இருக்கும் அனைத்துக் கட்டுரைகளையும் உரை திருத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளேன். --ரவி 13:29, 5 மே 2010 (UTC)[பதிலளி]

கூகிள் மொழிபெயர்ப்பாளர்களின் கட்டுரைகளில் குறைகள் இருந்திருப்பினும், அவை அதிக தகவல்களுடன், முழுமையான கட்டுரைகளாக அமைந்திருக்கின்ற என்பதில் எந்த ஐயமுமில்லை. தற்போது பயிற்சிப் பட்டறையின் பின்னர், குறைகளும் நீக்கப்பட்ட பின்னர், முழுமையான தரமான கட்டுரைகள் தமிழ் விக்கிக்கு கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி. பயிற்சிப் பட்டறையை திறம்பட நடத்திய ரவிக்கு வாழ்த்துக்கள்.--கலை 14:04, 5 மே 2010 (UTC)[பதிலளி]

தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

[தொகு]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்த அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா வெளியிட்ட அறிவிப்புகளில் இரண்டு தமிழ் விக்கிப்பீடியாவுடன் தொடர்புடையது.

  1. செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ளது.​ மாநாட்டின் கீழ்,​​ இந்தத் திட்டத்துக்கு ஏற்ற தகவல் பக்கங்களை மெருகூட்டும் வகையில் கல்லூரி மாணவ-மாணவியர்,​​ பொது மக்களிடம் இருந்து போட்டி தகவல் பக்கங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.​ இணையதளத்தில் அதிக அளவில் தமிழ் தகவல் பக்கங்களை ஏற்படுத்திட இதுபோன்ற ஆன்லைன் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட உள்ளன.
  2. அகராதிகளை இணையத்தில் இலவசமாக உபயோகிப்பதற்கான திட்டம் விக் ஷ்னரி எனப்படுகிறது.​ பன்னாட்டுத் தமிழ்ப் பயிற்சி இணையத்தால் வெளியிடப்பட்ட கலைச் சொல் பேரகராதியை அனைவரும் பயன்பெறும் வகையில்,​​ விக் ஷ்னரியில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி நாளிதழில் வெளியான இச்செய்தி

  • இதன்படி தமிழ் விக்கிப்பீடியாவிற்கான தகவல் பக்கங்கள் அளிக்கும் போட்டி ஆண்டு தோறும் நடத்த முன் வந்துள்ளதற்கும், விக்சனரியில் கலைச்சொல் அகராதியைச் சேர்க்க முடிவெடுத்தமைக்குமாக தமிழ்நாடு அரசுக்கு தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பில் நம் நன்றியைத் தெரிவிக்கலாம். --Theni.M.Subramani 01:24, 4 மே 2010 (UTC)[பதிலளி]
தமிழக அரசின் இந்த வளர்முக அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இச்செய்தியை பகிர்ந்த தேனி சுப்பிரமணிக்கு நன்றிகள் ! நமது நன்றியை தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்க அமைப்பு சார்ந்த தொடர்பார்களாக போட்டி திட்டத்தில் பங்காற்றுபவர்கள் ஆவன செய்திடல் வேண்டும்.--மணியன் 05:08, 4 மே 2010 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சியான செய்தி. மடல் எழுதி விக்கிப்பீடியர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றேன்.--செல்வா 17:02, 4 மே 2010 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சியான செய்தி, மேலும் தமிழக அரசு ஒருங்குறியை ஆதரிக்கப்போவதாக கூறியுள்ளது. --குறும்பன் 17:22, 4 மே 2010 (UTC)[பதிலளி]

Signpost covers Tamil Wikipedia contest

[தொகு]

Wikipedia Signpost covered the Tamil Nadu government's contest to promote content in the Tamil Wikipedia. See it here. Ganeshk 22:15, 4 மே 2010 (UTC)[பதிலளி]

Thank you, Ganesh! --செல்வா 03:06, 5 மே 2010 (UTC)[பதிலளி]
Thanks for the tip, Ganesh. Interesting to see people taking note of it. Another interesting bit leading from there was this item which tells that new registrations double with news coverage. -- சுந்தர் \பேச்சு 05:34, 5 மே 2010 (UTC)[பதிலளி]

கட்டுரைகளில் தமிழ் சொற்கள்

[தொகு]

சில கட்டுரைகளுக்கு எளிமையாக தமிழில் தலைப்பு கொடுக்கப்பட்ட பின்னரும், உப தலைப்புக்கள், மற்றும் கட்டுரையின் உள்ளே, அந்த குறிப்பிட்ட சொல்லானது பயன்படுத்தப்படும்போது, ஆங்கிலச் சொற்களே தமிழில் எழுதப்பட்டிருப்படதைக் காணக் கூடியதாக உள்ளது. இதுபற்றி இரு கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். பார்க்க, பேச்சு:தூக்கமின்மை, பேச்சு:இரத்தப் புற்றுநோய். இதைத் தவிர்த்து, தமிழில் தலைப்பிடப்பட்ட பின்னர், குறிப்பிட்ட அந்தச் சொல்லையே கட்டுரையின் முழுமைக்கும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.--கலை 11:56, 5 மே 2010 (UTC)[பதிலளி]

இக்கட்டுரைகள் முதலில் ஆங்கிலத் தலைப்பு கொண்டிருந்து, பிறகு தமிழ்த் தலைப்புகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு நகர்த்துவோர், கட்டுரை முழுவதும் அதே சொல்லே வருமாறு உரை திருத்துவது நன்று. ஆனால், நேரமின்மை காரணமாக சில வேளை இவ்வாறு செய்யாமல் விடுவதுண்டு. இக்குறை காணப்படும் கட்டுரைகளில் தயங்காமல் தமிழ்ச் சொல்லையே ஒரே சீராகப் பயன்படுத்தலாம். ஒரு கட்டுரையின் தலைப்பு நகர்த்தப்பட்டதா என்பதை அப்பக்கத்தின் வரலாறு மூலம் அறியலாம்--ரவி 13:29, 5 மே 2010 (UTC)[பதிலளி]
இப்போது காரணம் புரிகிறது. விளக்கத்துக்கு நன்றி ரவி.--கலை 14:00, 5 மே 2010 (UTC)[பதிலளி]

நூறாண்டுப் பழமை மிக்க தமிழ் நூல்களின் தொகுப்பு

[தொகு]

நூறாண்டுப் பழமை மிக்க தமிழ் நூல்களின் தொகுப்புப் பணி. இந்த அரிய, மதிப்புமிக்க பணியை மேற்கொண்டு இருக்கும் நண்பர் குமரேசனுக்கு வாழ்த்துகளும் நன்றியும்--ரவி 20:12, 5 மே 2010 (UTC)[பதிலளி]

தமிழ் இணைய மாநாட்டில் விக்கிப்பீடியா விளக்கம்

[தொகு]

தமிழ் இணைய மாநாட்டுக் கண்காட்சியில் ஒரு இடம் எடுத்து தமிழ் விக்கிப்பீடியா பற்றி விளக்கிக் கூற வாய்ப்புண்டு. ஆனால், மாநாடு நடக்கும் மூன்று நாள்களும் மாற்றி மாற்றி இதனைக் கவனித்துச் செய்வதற்கான விக்கிப்பீடியர்களின் எண்ணிக்கையை உறுதி செய்தால் தான் இது குறித்த முயற்சிகளை முன்னெடுக்க முடியும். மூன்று நாட்கள், நாளுக்கு இருவர் என்று பார்த்தாலும் ஆறு தமிழ் விக்கிப்பீடியர்களாவது மாநாடு நடக்கும் மூன்று நாள்களும் இது குறித்த பணிகளில் ஈடுபட வேண்டி வரும். ஒரு வேளை, போதுமான விக்கிப்பீடியர்கள் மாநாட்டு நேரத்தில் வர இயலாவிட்டால், சில தேர்ந்தெடுத்த மாணவர்கள் / பதிவர்கள் ஆகியோருக்கு விக்கிப்பீடியா குறித்த பயிற்சி அளித்து உதவக் கோரலாம். இது குறித்து யார் யார் எத்தனை நாட்கள் உதவ முடியும் என்று தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி--ரவி 22:46, 5 மே 2010 (UTC)[பதிலளி]

ஆள் பற்றாக்குறை இருந்தால், நானும் பங்களிக்க அணியமாக உள்ளேன். நான் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றேன். தேர்ந்தெடுத்த மாணவர்களுக்குப் பங்களித்து அவர்களை ஈடுபடுத்துதல் நல்லது (வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்). --செல்வா 15:03, 6 மே 2010 (UTC)[பதிலளி]
நானும் கலந்து கொள்ள உள்ளேன். ஓரிரு நாட்கள் பங்கேற்கலாம். en:User:Sodabottle என்ற ஆங்கில விக்கிப்பயனரும் பங்கேற்க உள்ளார். அவர் தமிழர் தான். அவரால் சிறிது உதவ முடியுமா எனக் கேட்டுப் பார்க்கலாம். வேறு யார் யார் கலந்து கொள்கிறோம்? -- சுந்தர் \பேச்சு 15:06, 6 மே 2010 (UTC)[பதிலளி]
:-) என்ன செய்ய வேண்டுமென சொல்லுங்கள். என்னைத் தயார் செய்து கொள்ள ஏதுவாக இருக்கும். --Sodabottle 18:14, 6 மே 2010 (UTC)[பதிலளி]
நானும் கலந்து கொள்வேன் என்று நினைக்கிறேன். கலந்து கொள்ளும் பட்சத்தில் ஓரிரு நாட்கள் ஒத்தாசையாக இருக்கிறேன். -- மாஹிர் 16:51, 6 மே 2010 (UTC)[பதிலளி]

நன்றி சுந்தர், செல்வா, மாகிர். தமிழகத்தில் உள்ள தமிழ் எழுத, பேசத் தெரிந்த ஆங்கில விக்கிப்பீடியர்கள் உதவியையும் பெறுவது நல்ல ஆலோசனை. பணிப்பளு காரணமாக இம்முயற்சியில் என்னால் முழுமையாக ஈடுபட முடியாமல் இருக்கிறது. யாராவது இது தொடர்பாக ஒருங்கிணைக்க முன்வந்தால் உரியவர்களிடம் கூறி தொடர்புளை ஏற்படுத்த முடியும். நன்றி--ரவி 13:31, 7 மே 2010 (UTC)[பதிலளி]

கட்டுரைகளில் உபயோகப்படுத்த (localisation) தேதி க்கென வார்ப்புருக்கள் உள்ளனவா?

[தொகு]

அமெரிக்காவில் வாசிக்கபடும் தேதி முறைக்கும் மே 5,2010 என்றும், இந்தியாவில் 5-மே-2010 என்றும் படிக்கும் வழக்கம் உள்ளது. இதனை வேறுபடுத்த விக்கிபீடியாவில் வார்ப்புருக்கள் உள்ளனவா? அதுமட்டுமல்லாது ஒரே கட்டுரைகளில் வெவ்வேறு பார்மட் களை உபயோகிக்கின்றோம். உதாரணமாக உமரு_யராதுவா கட்டுரை.

//16 ஆகஸ்ட் 1951 – 5 மே 2010

2010 மே 5 இல் யராதுவா இரவு 09:00 மணிக்கு இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது// --மாஹிர் 08:48, 6 மே 2010 (UTC)[பதிலளி]

நீங்கள் தந்துள்ள இரண்டு எடுத்துக்காட்டுகளும் வெவ்வேறானவை. இரண்டாவது எடுத்துக்காட்டில் முழு வசனம் ஒன்றில் தேதி வருகிறது. இங்கு ”2010 ஆம் ஆண்டு மே 5 ஆம் நாள் இவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது” என்று எழுதலாம். முதற் பந்தியில் அவ்வாறல்ல. அது ஒரு முழுமையான வசனம் இல்லை. 5 மே 2010 அல்லது மே 5, 2010 என எழுதலாம். மே 5, 2010 என எழுதுவதையே நான் விரும்புகிறேன். இந்தியாவில் ஒரு பொது முறை இருக்கிறதா என நான் அறியேன். ஆனாலும் இந்திய முறைப்படி எழுதுவதற்கு வேண்டுமானால் வார்ப்புரு ஒன்று உருவாக்கலாம். ஆனால் அது தேவையற்றது என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:24, 6 மே 2010 (UTC)[பதிலளி]
தயவு செய்து, இது போன்ற கேள்விகளை நடைக்கையேட்டின் பேச்சுப் பக்கம், ஒத்தாசைப் பக்கம் போன்றவற்றில் கேட்க வேண்டுகிறேன். நன்றி--ரவி 13:31, 7 மே 2010 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி முன்தேர்வு

[தொகு]

கட்டுரைப் போட்டிக்கான கட்டுரைகள் வந்துள்ள நிலையில், அக்கட்டுரைகளை பார்வையிட்டு, போட்டிக்கு பொருந்தாத கட்டுரைகளை அகற்றி, மிகுதியானவற்றை நடுவர்களுக்கு அனுப்புவதற்கு சிலரின் உதவி தேவைப்படுவதாக ரவி விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரைப் போட்டி முன்தேர்வு பக்கத்தில் கேட்டிருந்தார். நான் என்னால் உதவ முடியும் எனக் கூறியிருந்தேன். தற்போது, பயனர்:Karthickbala, பயனர்:Kurumban, பயனர்:Arafath.riyath ஆகியோரும் இப்பணியில் உதவ இணைந்துள்ளனர். இன்னும் சிலர் சேர்ந்தால், வேலைப்பளுவைக் குறைக்கலாம் எனத் தோன்றுகிறது. தயவுசெய்து முடியுமானவர்கள் இங்கே குறிப்பிடுங்கள். நன்றி.--கலை 23:14, 7 மே 2010 (UTC)[பதிலளி]

நீங்கள் இதில் உதவ முன்வந்தமைக்கு நன்றி. கூடிய விரைவில் இது தொடர்பாக உங்களைத் தொடர்பு கொள்கின்றேன். நன்றி.--கலை 22:53, 9 மே 2010 (UTC)[பதிலளி]
தங்களுக்கு ஒரு சோதனை மடல் அனுப்பியுள்ளேன். கிடைத்ததா இல்லையா என்ற விவரத்தை தெரிவிக்கவும். வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:17, 10 மே 2010 (UTC)--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 10:29, 10 மே 2010 (UTC)[பதிலளி]
உங்கள் மடல் கிடைத்தது. நானிருக்கும் நாட்டின் நேரவேறுபாடு காரணமாகவே எனது பதில் உங்களுக்கு தாமதமாகியுள்ளது. தற்போது பதிலைப் பார்த்து, தொடருங்கள். --கலை 13:15, 10 மே 2010 (UTC)[பதிலளி]

மலேசியாவில் தமிழ்மணம் இருக்கிறது! நிலைக்குமா?

[தொகு]

--Natkeeran 04:13, 9 மே 2010 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா குறித்த எவ்விதத் தகவல்களுமில்லாத செய்திகள், அவற்றிற்கான இணைப்புகள் போன்றவற்றை விக்கிப்பீடியாவின் ஆலமரத்தடியில் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறதா?--Theni.M.Subramani 03:01, 9 மே 2010 (UTC)[பதிலளி]

வணக்கம் சுப்பிரமணி. இந்த இணைப்பைப் பகிர்ந்து கொண்டது நானே. மலேசியாவில் இருந்து இதுவரை எந்த தமிழ் விக்கிப்பீடியர்களும் தொடர்ந்து பங்களிக்கவில்லை. ஏன் இப்படி என அறிய இந்த இணைப்பு ஓரளவு உதவுகிறது. மொழி, கட்டுரையாக்கம் தொடர்ப்பான இணைப்புகள் எமக்கு திட்டத்துக்கு பயன்படுவதாக உணர்வதால் அவற்றை இங்கு அவ்வப்போது பகிர்வதுண்டு. --Natkeeran 04:13, 9 மே 2010 (UTC)[பதிலளி]

வணக்கம் நக்கீரன், மலேசியாவில் இருந்து நான் பங்களித்திருக்கிறேன்.தொடர்ந்து பங்களிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். பங்களிக்கவேண்டும் என்ற என் ஆர்வம் குறையவில்லை.ஆனால் இங்கு(மலேசியாவில்)தமிழில் எழுத்துத்திறமையுள்ளவர்கள் ஏராளமாக இருந்தும் ஏன் பங்களிக்கவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது! --மீனா 09:46, 18 மே 2010 (UTC)

the word ‘Tamil' was a synonym for the word language

[தொகு]

"Malayalam, the memorandum said, is as ancient as Tamil, Telugu and Kannada as it belonged to the Proto Dravidian family of languages. It was the language of the ancient ‘Chera' Kingdom, which underwent gradual transition like its sister languages, Tamil, Kannada and Telugu. For long, the word ‘Tamil' was a synonym for the word language. ‘In fact this served as a misty curtain to hide the antiquity of Malayalam Language,' the memorandum said and added that it was significant that Malayalam versions and commentaries of Sanskrit works were mentioned as ‘Tamil Kuttu' (Tamil book), an important example being the Malayalam annotation of the famous Sanskrit Lexicon, ‘Amarakosham' which was mentioned as ‘Amaram Tamill Kuttu'." Panel to go into Kerala's appeal

விக்கிப்பீடியாவின் புதிய அடையாளத்தில் தமிழ்!

[தொகு]

பன்மொழி விக்கிப்பீடியாக்களில் பயன்படுத்தும் அடையாளச் சின்னமும், இடைமுகமும் எழில்படுத்தப்பட்டுள்ளன. புதிதாய் வரவுள்ள சின்னத்தில் மேலும் பல மொழிகளுடன் தமிழ் எழுத்தும் சேர்க்கப்பட்டுள்ளது. :) -- சுந்தர் \பேச்சு 05:41, 13 மே 2010 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சியான செய்தி!! உண்மையில் பார்க்கப்போனால், உலக மொழிகளிலேயே தனித்தன்மையான எழுத்து முறைகளிலும், தொன்மையான முறைகளிலும் குறிப்பிடத்தக்க ஒரு சில மொழிகளில் தமிழும் ஒன்று. இப்பொழுது தமிழ் இந்த அடையாளச் சின்னத்தில் இருப்பது மகிழ்ச்சியான செய்தி. தெரிவித்தமைக்கு நன்றி சுந்தர்!.--செல்வா 00:18, 15 மே 2010 (UTC)[பதிலளி]

பங்களிப்பில் மாற்றம் காட்டா கூகுள் பயனர் கணக்குகள் மீதான நடவடிக்கை

[தொகு]

முன்பு ஆலமரத்தடியில் உரையாடியபடி கூகுள் தமிழாக்கப் பங்களிப்பாளர்களுக்கு மூன்று வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன. சிலர் தங்கள் பங்களிப்பில் மாற்றம் காட்டத் தொடங்கியுள்ளனர். சில நிறுவனங்களில் பலரின் கட்டுரைகளை ஒருவரே ஒரு கணக்கில் பதிவேற்றி வந்தமையால், தற்போது தான் அனைவரும் புதிதாக கணக்கு தொடங்கிச் செயற்படுகின்றனர். எனினும், ஒரு சில பயனர் கணக்குகளில் இன்னும் தேவையான பங்களிப்பு மாற்றம் வரவில்லை. ஒரு சிலர் மாற்றங்களைச் செய்யாமல் புதிய கட்டுரைகளை மட்டும் பதிவேற்றிக் கொண்டே இருக்கிறார்கள். மற்றவர்கள் ஏற்கனவே இப்பணியில் ஈடுபட்டுத் தற்போது பொறுப்பில் இருந்து விலகியவர்களாக இருக்கலாம். இத்தனைக்கும், இப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மொழிபெயர்ப்பு நிறுவனங்களுக்கும் மின்மடல் மூலமாகத் தேவையான நினைவூட்டல்களை அனுப்பி உள்ளோம். புதிய கட்டுரைகளைச் சேர்க்க இயலாமல் மற்ற வகை தொகுப்புகள் மட்டும் செய்யுமாறு ஒரு புது பயனர் குழு உருவாக்க இயலும் என்று Steward ஒருவரிடம் கேட்டு உறுதிப்படுத்தி உள்ளோம். எனவே, யாருக்கும் மறுப்பு இல்லை எனில், இக்கணக்குகள் மூலம் மேலும் புதிய கட்டுரைகளைச் சேர்க்கா வண்ணம் நடவடிக்கை எடுக்கலாம். ஒரு சில மொழிபெயர்ப்பாளர்கள் நல்ல மாற்றங்களைச் செய்யத் தொடங்கி இருந்தாலும், தரக் கண்காணிப்பிலும் அதற்கான இலக்குத் தேதிகளும் உறுதியுடன் இருக்கிறோம் என்று அறிந்தாலே இப்பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் விரைந்தும் பொறுப்புடனும் செயலாற்றுவார்கள் என்று நம்புகிறேன். --ரவி 10:58, 13 மே 2010 (UTC)[பதிலளி]

வழிமொழிகிறேன். சொல்லிய வண்ணம் செயலாற்றுதலே, நமக்கு மதிப்பளித்து திருத்தங்கள் செய்யும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு நாமளிக்கும் பாராட்டாக அமையும். மென்மையான அரசுகள் போலன்றி எண்ணித் துணிந்தவற்றை எண்ணியவாங்கு நிகழ்த்தலே சிறப்பு.--மணியன் 05:01, 14 மே 2010 (UTC)[பதிலளி]
ஆம் ரவி. உங்கள் முடிவு சரியே. இந்த விசயத்தில் கொஞ்சம் உறுதியுடன் இருப்பதும் நல்லதே. உங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன். --அராபத்* عرفات 15:38, 14 மே 2010 (UTC)[பதிலளி]

ஆமாம் ரவி. இது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று சுமார் பத்திற்கும் மேற்ப்பட்ட கட்டுரைகள் பதிவேற்றப்பட்டுள்ளது:( மேலும் நான் கவனித்து வருவதில் "சுந்தரவன காடுகள்" தவிர்த்து வேறு எந்த கட்டுரையும் திருத்தப்படுவதாக தெரியவில்லை.--கார்த்திக் 16:18, 14 மே 2010 (UTC)[பதிலளி]

மணியன், அராப்பத், கார்த்திக் - கருத்துகளுக்கு நன்றி. இது வரை திருத்தம் செய்யத் தொடங்கியுள்ள கூகுள் பங்களிப்பாளர்கள் பட்டியலைக் காணலாம். மேற்கண்ட வேண்டுகோள் தொடர்பாக புதிய பயனர் குழுவை உருவாக்குவதற்கான வாக்கெடுப்பு நடைபெறுகிறது. --ரவி 18:53, 14 மே 2010 (UTC)[பதிலளி]

இன்று இது தொடர்பாக ஒரு கடைசி மின்மடல் நினைவூட்டல் அனுப்பிய பிறகு, இப்பட்டியலில் உள்ள சில கணக்குகள் தங்களின் "கட்டுரைப் பதிவேற்றக் கணக்குகள்" என்றும் அவற்றைத் தடை செய்ய வேண்டாம் என்றும் ஒரு நிறுவனத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிறுவனத்தின் குழுவில் உள்ள பலரும் மொழிபெயர்க்க அவற்றை இந்த ஒரு சில கணக்குகளின் மூலம் நிறுவன மேலாளர்கள் பதிவேற்றி வந்துள்ளனர் என்றே புரிந்து கொள்ள முடிகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் சிலர் திருத்தங்கள் செய்யவும் தொடங்கி உள்ளனர். என்ன செய்யலாம்? மற்ற பயனர்கள் செய்யும் திருத்தங்களைக் குறிப்பிட்ட பயனர் கணக்குகளின் கட்டுரைகளோடு தொடர்பு படுத்திக் கண்காணிப்பது சிரமம் என்பது ஒரு புறம். இப்படி ஒரு சில பயனர் கணக்குகள் கூட்டாகச் செயல்படுவது, ஒரு கணக்கின் பங்களிப்புகளை இன்னொரு கணக்குக்கு ஈடாகக் கொள்வது, ஒரே கணக்கில் இருவர் செயல்படுவது, பல கணக்குகளை ஒருவரே இயக்குவது போன்றவ நல்ல முற்காட்டுகள் அல்ல. இது போன்ற நடைமுறை ஆங்கில விக்கியில் தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு கணக்குக்கு ஒருவர் மட்டுமே பொறுப்பேற்பது, ஒருவர் ஒரே கணக்கில் மட்டுமே இயங்குவது ஆகியவையே சமூகத்தின் செயல்பாட்டுக்கு உதவும் என நினைக்கிறேன்.

இந்தப் பதிவேற்றக் கணக்குகளைத் தொடர்ந்து அனுமதிப்பதன் மூலம், நிறுவனத்தின் மற்ற பயனர்களின் மேல் எடுக்கக்கூடிய எந்த நடவடிக்கையும் நிறுவனத்தைப் பாதிக்காமல் தொடர்ந்து செயற்பட முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். --ரவி 19:31, 18 மே 2010 (UTC)[பதிலளி]

எழுதிய கட்டுரைகளில் எத்தனை கட்டுரைகளை அல்லது எந்தந்த கட்டுரைகளை திருத்தத் தொடங்கியுள்ளனர் என்பது பற்றி அவர்கள் தெரிவித்தால் நலம். காட்டாக பயணர் கணக்கு 1-லிருந்து 50 கட்டுரைகள் பதிவேற்றப்பட்டிருந்தால் அவற்றில் 25ல் ஆவது திருத்தங்கள் செய்யத்தொடங்கியிருக்க வேண்டும். அந்தக்கணக்கிலிருந்து பதிவேற்றப்பட்ட கட்டுரைகளில் எதிலும் திருத்தங்கள் இல்லை எனில் அந்த கணக்கை தடை செய்வது தான் முறை என்பது என் கருத்து. ஒரே கணக்கை பலர் பயன்படுத்துவது விக்கியில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதையும் அவர்களுக்கு தெரிவிக்கவேண்டும். --குறும்பன் 22:22, 18 மே 2010 (UTC)[பதிலளி]

குறும்பன், தங்கள் கருத்துக்கு நன்றி. என்னென்ன கட்டுரைகளில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்பது தொடர்பான ஆவணப்படுத்தலைக் கோரி இருக்கிறோம்.

மேலே உரையாடியபடி சில பயனர் கணக்குகளை மட்டுறுத்த, பக்சில்லாவில் வழு அறிக்கை ஒன்று பதியப்பட்டுள்ளது. தயவு செய்து, அனைவரும் அங்கு சென்று வாக்களித்தால் விரைவில் இந்த முடிவினைச் செயற்படுத்த உதவியாக இருக்கும். --ரவி 06:02, 25 மே 2010 (UTC)[பதிலளி]

வார்ப்புருக்கள்- பிழைகள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சில வார்ப்புருக்களில் எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. உதாரணமாக குறுங்கட்டுரைக்கான வார்ப்புருவைப் பயன்படுத்தும் பொழுது, "இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்." என்கிற செய்தி பார்வைக்குக் கிடைக்கிறது. இதில் "இந்த குறுங்கட்டுரையை தொகுத்து" என்பதில் "இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து" என்று இருப்பதே சரியானது என்று நான் கருதுகிறேன். இது போன்ற சிறு சிறு எழுத்துப் பிழைகள் வார்ப்புருக்களில் சரி செய்யப்பட வேண்டும் என்பது எனது கருத்து. --Theni.M.Subramani 17:38, 13 மே 2010 (UTC)[பதிலளி]

நீங்கள் குறிப்பிட்ட வார்ப்புருவைத் திருத்தியுள்ளேன். மயூரநாதன் 17:46, 13 மே 2010 (UTC)[பதிலளி]
சுட்டிக் காட்டியதற்கு நன்றி, சுப்பிரமணி. வார்ப்புரு உட்பட உங்களுக்கு அணுக்கம் உள்ள எந்தப் பக்கத்திலும் உள்ள பிழைகளைத் தயங்காமல் நீங்களே திருத்தலாம். நன்றி--ரவி 18:42, 13 மே 2010 (UTC)[பதிலளி]
சில வார்ப்புருக்களில் நானும் சில பிழைகளை அவதானித்துள்ளேன். அவற்றை நான் திருத்த முடியாதென எண்ணி விட்டுச் சென்றிருக்கிறேன். வார்ப்புருவிலுள்ள பிழைகளை எவரும் திருத்தலாமா?--கலை 19:10, 13 மே 2010 (UTC)[பதிலளி]
ஆம். யாரும் திருத்தலாம். வார்ப்புருவின் தொகுப்புப் பக்கத்துக்குச் சென்று பிற பக்கங்களைத் திருத்துவது போலவே திருத்த முடியும். மயூரநாதன் 19:21, 13 மே 2010 (UTC)[பதிலளி]
வார்ப்புருவைத் திருத்துபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: வார்ப்புருக்களில் {{{ }}} என்ற அடைப்புக்குறிகளுக்குள் உள்ளவற்றைத் திருத்த வேண்டாம். அவற்றைத் திருத்தினால் அவ்வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுரைகளையும் திருத்த வேண்டியிருக்கும். மேலும் வார்ப்புரு ஒன்று எந்தக் கட்டுரைகளில் இணைக்கப்பட்டுள்ளது என்றறிவதும் கடினம்.--Kanags \உரையாடுக 22:59, 14 மே 2010 (UTC)[பதிலளி]

கட்டுரை போட்டி

[தொகு]

கட்டுரை போட்டிக்கு அனுப்பிய கட்டுரைகளை தவறுதலாக சிலர் இங்கு பதித்துள்ளனர். அதுவும் ஒருங்குறியில் இல்லை அதனால் அவற்றை நீக்குவதே சிறந்த முடிவு. --குறும்பன் 20:01, 14 மே 2010 (UTC)[பதிலளி]

இவை பாமினியில் பதியப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் பயனர் கணக்கு ஆரம்பிக்காமல் இங்கு பதிந்துள்ளதால் அவர்களுக்கு இது குறித்து அறிவிக்கவும் முடியாது. எனவே நீக்குவது நல்லது.--Kanags \உரையாடுக 22:52, 14 மே 2010 (UTC)[பதிலளி]
கட்டுரைகளைப் போட்டி இணையத்தளத்தில் சேர்க்குமாறு, நேற்று இங்கு கட்டுரையைப் பதிந்தவர்கள் அனைவருக்கும் குறுந்தகவல் மூலமும் நேரடியாகப் பேசியும் தகவல் தெரிவித்து உள்ளேன். போட்டி இணையத்தளம் chrome, சில உலாவிகளில் வேலை செய்யாமல் இருக்கிறது போலும். இதனாலும் இங்கேயே இட்டுள்ளார்கள். நேற்று ஒரு நாளில் மட்டும் 200 கட்டுரைகள் போட்டி இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. கடைசி நாளான இன்றும் இது போல் சில கட்டுரைகள் வரலாம். கட்டுரையில் பெயர், தொடர்பு விவரங்கள் இருக்கும்பட்சத்தில், அவற்றை உடனே அழித்து விடாமல் ஒருங்குறிக்கு மாற்றிப் போட்டியில் சேர்க்கலாம்--ரவி 06:10, 15 மே 2010 (UTC)[பதிலளி]

திரு.ரவி அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.--இ.பு.ஞானப்பிரகாசன் மாலை 06:12, 15 மே 2010 (IST)

அப்படியானால் அழிக்கப்பட்ட கட்டுரைகளை மீள்விக்கலாம்.--Kanags \உரையாடுக 14:15, 15 மே 2010 (UTC)[பதிலளி]
கட்டுரைகளை மீள்வித்து அவற்றை ஒருங்குறிக்கு மாற்றியுள்ளேன். இவற்றைத் தனிப்பெயர்வழிக்கு மாற்றி விடலாமா?--Kanags \உரையாடுக 23:29, 15 மே 2010 (UTC)[பதிலளி]
ஒருங்குறிக்கு மாற்றியதைக் கோப்பு வடிவில் கலைக்கு அனுப்பி வைத்தால், அவர் கட்டுரைத் தெரிவுக் குழு நண்பர்களுக்கு அனுப்பலாம். அதன் பிறகு இங்கிருந்து நீக்கி விடலாம்--ரவி 12:29, 16 மே 2010 (UTC)[பதிலளி]

செம்மொழி மாநாட்டுப் பாட்டில் தமிழ் விக்கிப்பீடியா

[தொகு]

செம்மொழித் தமிழ் மாநாட்டுக்காக வெளியிடப்பட்டுள்ள பாடலில் தமிழ் விக்கிப்பீடியா திரைக்காட்சியும் வருகிறது. http://www.youtube.com/watch?v=QWOEJSj_qeE பக்கத்தில் உள்ள நிகழ்படத்தில் 1:52 ஆவது நிமிடத்தில் காணலாம்--ரவி 12:27, 16 மே 2010 (UTC)[பதிலளி]

அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளவேண்டிய செய்தி!மிகவும் மகிழ்ச்சி! --மீனா 10:12, 18 மே 2010 (UTC)

மெல்லுடலிகள் பற்றிய கட்டுரைகளைத் தானாகப் பதிவேற்றல்

[தொகு]

விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கிகள்#மெல்லுடலிகள் தானியங்கி - இங்கு அனைவரது கருத்துக்களையும் வரவேற்கிறேன். முதலில் ஆலமரத்தடியில் இட வேண்டாம் என்று தொடர்புடைய பக்கத்தில் மட்டும் இட்டேன். ஆனால், பல்வேறு திட்டங்களுக்கிடையே பயனர்கள் கவனிக்கத் தவறியிருக்கலாம் என்பதால் இங்கு இடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 12:18, 19 மே 2010 (UTC)[பதிலளி]

நுட்பப் பணிகள் ஒருங்கிணைவுத் திட்டம்

[தொகு]

நமக்குத் தேவையான நுட்பப் பணிகளில் பங்களிக்க பல பயனர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். திட்டமிட்டுச்செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளதால் ஈடுபட விரும்புபவர்கள் நுட்பப் பணிகளுக்கானத் திட்டப்பக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட அழைக்கிறேன். :) -- சுந்தர் \பேச்சு 13:18, 19 மே 2010 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:நுட்ப நெறிப்படுத்தல் பக்கம் ஏற்கனவே இருப்பதை மறந்து போய் புதிதாய்த் தொடங்கி விட்டேன். இரண்டையும் விரைவில் ஒன்றிணைத்து விடுவோம். இப்போதைக்கு, நுட்பப் பணிகளில் ஈடுபட விரும்புபவர்கள் தங்கள் பெயரை திட்டப் பக்கத்தில் இணைத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன். தெரன்சு, உமாபதி, நற்கீரன், பெரியண்ணன், மாகிர், த*உழவன், கணேசு உட்பட பலர் இப்பணிகளில் ஆர்வம் தெரிவித்திருந்ததாக நினைவு. இன்னும் பங்களிக்கக் கூடியவர்கள் பலரும் இணைந்து பல பணிகளை நிறைவேற்றுவோம். -- சுந்தர் \பேச்சு 07:59, 21 மே 2010 (UTC)[பதிலளி]

கவனத்திற்கு

[தொகு]

பேச்சு:திரிசூர்_பூரம் இப்பக்கத்தை கவனித்து தங்களின் கருத்துக்களை பதியவும்.--கார்த்திக் 18:06, 19 மே 2010 (UTC)[பதிலளி]

தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய இடுதல்கள்

[தொகு]

பெயர் குறிப்பிடாத ஒருவர் தமிழ் திரைப்படங்கள் பற்றிய கட்டுரை வடிவில் இல்லாத தகவல்களை தடித்த எழுத்தில் இட்டு வருகிறார். பிற விக்கிப்பீடியர்களைத் இவற்றில் ஒரு சிலவற்றை மேம்படுத்தி உள்ளார்கள். இப்படியே விட்டால் பெரும்பான்மையானவை இந்த நிலையிலேயே இருக்கும். இவை வாக்கியங்களாவோ, கட்டுரை வடிவிலோ இல்லை. வரைவிலக்கணம் தருவதாகவும் இல்லை. எங்கேயே இருந்து வெட்டி ஒட்டும் வேலையாகவே தெரிகிறது.

இத்தனை நாளுக்கு அந்தப் பயனர் த.வி பற்றி புரிந்து கொள்ளவில்லை என்று நான் கருதவில்லை. எனவே அவற்றை விரைந்து நீக்கும் வார்ப்புருக்களை இட்டு வருகிறேன். குறிப்பிட்ட காலத்துக்குப் (2 கிழமைகள்) பிறகு அவை நீக்கப்படும். மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் கீழே குறிப்பிடவும். நன்றி. --Natkeeran 15:35, 29 மே 2010 (UTC)[பதிலளி]

நக்கீரன் நீங்கள் சொல்வது சரிதான். பல மாத காலமாகவே மேற்படி பயனர் இது போலவே எழுதி வருகிறார். நானும் சில பக்கங்களைத் திருத்தினேன். ஆனால், இது போன்ற அதிகம் பயனில்லாத கட்டுரைகளில் பிற பயனர்கள் நேரத்தைச் செலவு செய்வது தேவையற்றது. ஒரு முறை இருமுறைகள் திருத்தியதைப் பார்த்தாகிலும் புதிய கட்டுரைகளை முறையாக எழுத முயன்றிருக்கலாம். ஆனால் அப்பயனர் அச்சொட்டாக முன்னர் செய்ததுபோலவே தொடர்ந்து செய்து வருகிறார். எனவே இக்கட்டுரைகளை நீக்கலாம் என்பதே எனது கருத்தும். -- மயூரநாதன் 18:01, 30 மே 2010 (UTC)[பதிலளி]
நீக்கல் வார்ப்புருவை இடுங்கள். அல்லது அவை எவையென அடையாளம் காட்டுங்கள். 2 வாரங்களுக்குள் அவற்றைத் திருத்த முயற்சிக்கிறேன்.--Kanags \உரையாடுக 21:08, 30 மே 2010 (UTC)[பதிலளி]

இத்தகைய பக்கங்களில் உள்ள தகவல்களை ஏதேனும் ஒரு பக்கத்தில் குவித்து வைத்து விட்டு, தனிக்கட்டுரைகளை நீக்கலாம். உரிய கட்டுரை வடிவத்தில் இல்லாவிட்டாலும் இவற்றில் உள்ள தகவல்கள் பயனுள்ளவையே--ரவி 17:18, 31 மே 2010 (UTC)[பதிலளி]

மேலே நீங்கள் குறிப்பிடுபவரும் நானும் வெவ்வேறு ஆட்கள்:

நான் விக்கிபீடியாவிற்குள் நுழைந்து பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். ஆனால் எனக்கு தமிழ் எழுத்துரு சிக்கலே பெரிதாக உள்ளது! அதனால் நான் கூகுள் பெயர்ப்பியைப் பயன்படுத்தி அதில் தமிழில் தட்டச்சு செய்து, பின் அதனை வெட்டி ஒட்ட வேண்டி உள்ளது! அதனால் நான் சோர்ந்து விட மாட்டேன்! என் பங்களிப்பை தொடர்ந்து விக்கிபீடியாவிற்கு கொடுத்துக் கொண்டேதான் இருப்பேன். யாரவது மிக எளிதாக எப்படி விக்கியில் தமிழைப் பயன்படுத்துகிறீர்கள் என்று எனக்குக் கூறினால் நன்றாக இருக்கும். இன்னும் விரைவாக என்னால் என் பங்கைக் கொடுக்க முடியும். எனக்கு இயன்றோர்உதவுங்கள்! --Surya Prakash.S.A. 15:30, 1 ஜூன் 2010 (UTC)

உதவுவீர்!!

[தொகு]

மதிப்பிற்குரிய விக்கியக் கிளைஞர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! தனது பங்களிப்புகளை அழித்து விட வேண்டுமென்று கருத்துக் கூறப்பட்டிருப்பதைப் பார்த்தும் வெறுப்போ சலிப்போ அடையாமல் தொடர்ந்து தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்க உறுதி பூண்டுள்ள திரு. எஸ். ஏ. சூர்யப்பிரகாஷ் அவர்களின் தீவிர ஆர்வம் உண்மையில் வரவேற்பிற்குரியது! மேலும், யாராவது பிழையின்றி எழுதக் கற்பித்தால் கற்றுக் கொள்ளவும் தன்னைத் திருத்திக் கொள்ளவும் அவர் தயாராயிருக்கிறார். எனவே பிழையின்றிப் பங்களிக்க அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு மூத்த விக்கியர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!--இ.பு.ஞானப்பிரகாசன் 12:21, 4 ஜூன் 2010 (UTC)

ஞானப்பிரகாசன், சூரியப்பிரகாஷ் அவர்களின் எந்தக் கட்டுரை அழிக்கப்பட்டது என்பதைக் கோடி காட்டுவீர்களானால் உதவ முடியும்.--Kanags \உரையாடுக 12:30, 4 ஜூன் 2010 (UTC)

நற்கீரன் குறிப்பிட்ட திரைப்படக் கட்டுரைகளை சூரியப் பிரகாசு தான் பயனர் கணக்கு இல்லாமல் எழுதியுள்ளார் போல் இருக்கிறது. சூரியப் பிரகாசு, நீங்கள் இந்தியாவில் இருந்தால் 99431 68304 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் நான் உதவுகிறேன். இவரது கட்டுரைகளை அழிக்காமல் சற்றுப் பொறுத்துச் செய்யலாம்--ரவி 13:00, 4 ஜூன் 2010 (UTC)

நன்றி ரவி, இப்போது தான் கவனித்தேன். பயனர் Surya Prakash.S.A. ஆலமரத்தடியில் மேலே தனது திரைப்படக் கட்டுரைகள் பற்றி கருத்துக் கூறியிருக்கிறார். சேலத்தில் இருப்பவராம். ரவி உங்களால் அவருக்குக் கட்டாயம் உதவ முடியும். அவரது பயனர் பேச்சுப் பக்கத்தில் உங்கள் செய்தியைத் தெரிவியுங்கள்.--Kanags \உரையாடுக 13:24, 4 ஜூன் 2010 (UTC)
சூரியப்பிரகாஷ், உங்கள் கட்டுரைகளை நீக்கிவிடலாம் என்று கருத்துக் கூறியவர்களில் நானும் ஒருவன். புதியவர்கள் எழுதும் கட்டுரைகளை அவை ஓரளவுக்கேனும் தகுதியாக இருக்குமாயின் அவற்றை நாங்கள் உடனடியாக நீக்குவதில்லை. முடிந்தவரை பிற பயனர்கள் அவற்றைத் திருத்தி விக்கிப்பீடியாவின் வடிவத்துக்கு மாற்றி விடுவார்கள். உங்களுடைய கட்டுரைகள் பலவற்றை நானும் உரிய வடிவத்துக்கு மாற்றியிருக்கிறேன் என்பதை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் உங்களைப் பதிவு செய்துகொண்டால் உங்கள் பேச்சுப் பக்கங்களூடாகப் பிற பயனர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைக் கூற முடியும். அதற்கும் வழியில்லாமல் இருந்தது. நீங்களும் தொடர்ந்தும் உங்கள் பழைய பாணியிலேயே எழுதியதால்தான் உங்கள் கட்டுரைகளை நீக்கும் பேச்சு எழுந்தது. இப்போது உங்களைப் பதிவு செய்திருக்கிறீர்கள். மற்றப் பயனர்களுடன் தொடர்புகளைப் பேணிக் கொள்ளுங்கள். விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்கு நீங்கள் தீவிர ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புக்களைத் தொடருங்கள். வாழ்த்துக்கள். -- மயூரநாதன் 04:34, 5 ஜூன் 2010 (UTC)


நன்றி

[தொகு]

எனக்கு இவ்வளவு ஆலோசனைகள் வழங்கியதற்கு நன்றி! ஆனால் நீங்கள் குறிப்பிட்டபடி திரைப்படக் கட்டுரைகளை நான் எழுதவில்லை! மணல்தொட்டியில் என் கருத்தைத் தலைப்பின்றிப் பதிந்ததால் வந்த சிக்கலிது! நீங்கள் அதை அழித்துக் கொள்ளலாம். எனக்கும் அதற்கும் தொடர்பில்லை. நான் விக்கியில் கட்டுரைகளை எழுத, என் தனிப்பட்ட முயற்சியின் மூலமே கற்றுக் கொண்டேன்! எனக்கு உதவி தேவைப் படின் நான் இணையத்திலோ தங்களில் ஒருவரிடமோ கேட்டுக் கொள்கிறேன்! --ச.அ. சூர்ய பிரகாஷ். 05:23, 5 ஜூன் 2010 (UTC)

நன்றி சூரியப்பிரகாசு, உதவி தேவையானால் ஒத்தாசைப் பக்கத்தில் தயங்காமல் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 11:33, 7 ஜூன் 2010 (UTC)

ஓர் அழைப்பு

[தொகு]

அன்புடையீர்! விக்கிபீடியாவுக்கு மடிப்பாக்கத்திலிருந்து பங்களிப்பவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா? இருந்தால் அன்பு கூர்ந்து தொடர்பு கொள்க! நன்றி! வணக்கம்!--இ.பு.ஞானப்பிரகாசன் 02:30, 5 ஜூன் 2010 (UTC)

விக்கிபீடியா மேலாண்மையினர் ( நிர்வாகிகள் ) கவனத்திற்கு!

[தொகு]

விக்கிபீடியா மேலாண்மையினருக்கு அன்பு வணக்கம்!

" ஆலமரத்தடி " , விக்கியர்களின் " பேச்சு "ப் பக்கங்கள் போன்றவற்றில் " + " அல்லது " Add Topic " என்று ஒரு பொத்தான் இருக்கிறது. இது அவ்வப் பக்கங்களில் உரையிடுவதற்குப் பயன்படுகிறது. ஆனால் " ஒத்தாசை " பகுதியில் இப்படி எந்தப் பொத்தானும் இல்லாததால் ஒவ்வொரு முறையும் அந்தப் பக்கத்தைப் -பகுதியாகவோ முழுமையாகவோ- அப்படியே தொகுத்தல் பக்கத்துக்கு எடுத்துச் சென்று நம் உரையைச் சேர்க்க வேண்டியதாக உள்ளது.

இதனால் சிரமம் எதுவும் இல்லைதான் எனினும் மற்ற பகுதிகளிலெல்லாம் உரையிடுவதற்கென்று ஒரு தனி வசதி இருக்கும்பொழுது இந்த ஒரு பகுதியில் மட்டும் அஃது இல்லாதது குறையாக உள்ளது. எனவே கனிவு கூர்ந்து அந்தக் குறையைச் சரி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

பி.கு: மதிப்பிற்குரிய விக்கியக் கிளைஞர்களே! இதை விக்கிபீடியா நிர்வாகம் என்ற பகுப்பில்தான் இட வேண்டும் என்பதை நான் அறிவேன் ஆயினும் அங்கே எந்தத் துணைப் பகுப்பில் இதைச் சேர்க்க வேண்டும் என்பது தெரியவில்லை. எனவே கனிவு கூர்ந்து இதை யாராவது உரிய இடத்திற்கு நகர்த்தி விடுமாறு கோருகிறேன்!

நன்றி! வணக்கம்!--இ.பு.ஞானப்பிரகாசன் 13:19, 6 ஜூன் 2010 (UTC)

இது போன்ற இடர்களை கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி, ஞானப்பிரகாசன். தேவைப்பட்ட மாற்றத்தைச் செயல்படுத்தியுள்ளேன். எந்த ஒரு விக்கிப் பக்கத்திலும் __NEWSECTIONLINK__ என்ற ஆணைச்சொல்லைச் சேர்த்தால் நீங்கள் கேட்ட '+' வசதி கிடைக்கும். மேலும் தகவலுக்கு en:Help:Magic words#Behavior switches என்ற உதவிப்பக்கத்தைப் பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 14:32, 6 ஜூன் 2010 (UTC)

ஆத்திரேலிய தமிழ் ஒலிபரப்பு நிறுவனத்தில் தமிழ் விக்கி குறித்த நேர்காணல்

[தொகு]

04 சூன் 2010 அன்று மாலை இந்திய நேரம் ஏழு மணி அளவில் ஆத்திரேலிய தமிழ் ஒலிபரப்பு நிறுவனத்தில் ஒலிபரப்பான தமிழ் விக்கி குறித்த நேர்காணல். --ரவி 17:35, 6 ஜூன் 2010 (UTC)

நல்ல உரையாடல். நம் தளத்தைப் பற்றி எளிமையாகவும் அருமையாகவும் விளக்கியுள்ளீர்கள், ரவி. அத்தோடு பொதுப் பண்டங்களைக் காட்டி நீங்கள் விளக்கியதை மிகவும் விரும்பினேன். கேட்டு மகிழ்ந்தேன். :-) -- சுந்தர் \பேச்சு 03:06, 7 ஜூன் 2010 (UTC)
கேட்டேன். சிறந்த நேர்காணல். வாழ்த்துக்கள்.--Kanags \உரையாடுக 11:37, 7 ஜூன் 2010 (UTC)
மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. நிதானமாகவும், தெளிவாகவும் பேசி விடயங்களை விளக்கினீர்கள். வாழ்த்துக்கள். மயூரநாதன் 19:10, 7 ஜூன் 2010 (UTC)
இப்பொழுதுதான் கேட்டேன், இரவி. அருமையாக அமைந்துள்ளது. பாராட்டுகள்! 11 மணித்துளிகளில் இத்தனை விளக்கமாகவும் தெளிவாகவும் கூறியுள்ளீர்கள். ஆத்திரேலிய ஒலிபரப்பு நிகழ்ச்சியில் நேர்காணல் நிகழ்ந்திய கலைஞர் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் கேள்விகளைக் கேட்டு சிறப்பாக நடத்தினார். உங்கள் இருவரையுமே மிகவும் பாராட்ட வேண்டும். நல்ல பயனுடைய ஒலித்தொகுப்பு.--செல்வா 22:15, 7 ஜூன் 2010 (UTC)
  • தமிழ் விக்கி பற்றிய ஆத்திரேலிய வானொலி நேர்காணல் கேட்டு மகிழ்ந்தேன். ரவி மற்றும் நேர்காணல் நிகழ்த்தியவர் இருவருக்குமே பாராட்டுகள்! இந்த நேர்காணலுக்கு இன்னும் அதிக விளம்பரம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். இது பற்றிய தகவலைத் தமிழ் விக்கியின் முதல் பக்கத்தில் அறிவித்தால் நன்றாயிருக்குமே! இவ்வாறு புதுப் பயனர்களும் பயன்பெற வாய்ப்பாகும்.--George46 00:09, 8 ஜூன் 2010 (UTC)

தெளிவான விளக்கங்கள் ரவி! இது போன்ற கோப்புகளை ஒத்தாசைப் பக்கம் மற்றும் புதுப் பயணர் உதவிப் பக்கங்களில் சுட்டலாம்.--அராபத்* عرفات 06:43, 8 ஜூன் 2010 (UTC)

பாராட்டிய அனைவருக்கும் நன்றி. தமிழ் இணையம், வலைப்பதிவுச் சூழலை நன்கு அறிந்த கானா பிரபா என்பவரே இந்தப் பேட்டியை நடத்தினார். எனவே, நல்ல பொருத்தமான கேள்விகளைக் கேட்டார்.--ரவி 06:31, 9 ஜூன் 2010 (UTC)

இந்த ஒலிபரப்பை இங்கே எழுதப்படுவதற்கு முன்னரே கேட்டுவிட்டேன். ஆனால் விக்கிப் பக்கமே வர முடியாத வேலைப்பளு. இங்கே இதுபற்றி எழுதபட்டிருப்பதையே யாரும் சொல்லித்தான் வந்து பார்க்க வேண்டிய நிலமை. நன்றாக இருந்தது கேள்விகளும், பதில்களும். பாராட்டுக்கள் ரவி. --கலை 22:15, 9 ஜூன் 2010 (UTC)

விக்கிமேனியா 2010

[தொகு]

விக்கிமேனியா மாநாட்டில் வழங்குவதற்காக முன்வைத்திருந்த,

"A Review of Google Translation project in Tamil Wikipedia: Role of voluntarism, free and organically evolved community in ensuring quality of Wikipedia"

என்ற தலைப்பிலான ரவியின் முன்மொழிவும்,

"Tamil Wikipedia: A Study of Challenges and Potentials in Relation to the Socio-Cultural Context of the Tamil Community"

என்ற தலைப்பிலான எனது முன்மொழிவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மயூரநாதன் 17:30, 8 ஜூன் 2010 (UTC)

மகிழ்வளிக்கும் செய்திக்கு நன்றி, மயூரநாதன். விசா உறுதியான பிறகு அனைவருக்கும் தெரிவிக்கலாம் என்று இருந்தேன்--ரவி 06:32, 9 ஜூன் 2010 (UTC)

இருவருக்கும் வாழ்த்துக்கள். கட்டுரையை இங்கு இட்டால், நாம் கருத்துக் கூறி உதவ முடியும். சுந்தர் எழுதியது போல. --Natkeeran 00:10, 10 ஜூன் 2010 (UTC)
நல்வாழ்த்துகள் மயூரநாதன் இரவி! --செல்வா 00:18, 10 ஜூன் 2010 (UTC)

நன்றி செல்வா, நற்கீரன். உரையாடலுக்கான தொடுப்பை மேலே கொடுத்துள்ளேன். இது குறித்து முழுமையான கட்டுரை உருவாக்கும் எண்ணமில்லை. Powerpoint உரையாடலாக நிகழ்த்தவே விருப்பம். நன்றி--ரவி 10:59, 10 ஜூன் 2010 (UTC)

மயூரநாதன், ரவி -- உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். த.வி.யை நிலைநிறுத்த இருவரின் சார்பாண்மை (representation) மிகவும் உதவும். உங்கள் கட்டுரைகளோ அல்லது power point காட்சியளிப்போ எதுவாகினும் சிறப்பாக இருக்க என் வாழ்த்துகள். இயன்றால் என் ஆலோசனைகளைக் கூறுகிறேன். --பரிதிமதி 02:47, 11 ஜூன் 2010 (UTC)

நற்கீரன், செல்வா உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. நானும் முழுமையான ஒரு கட்டுரை எழுதுவதா வேண்டாமா என்று முடிவு செய்யவில்லை. என்றாலும் நான் தலைப்பில் உள்ளடக்கவிருக்கும் விடயங்களை இன்னும் ஓரிரு நாட்களில் சுருக்க வடிவில் உங்கள் ஆலோசனைக்காக முன்வைப்பேன். மயூரநாதன் 16:10, 10 ஜூன் 2010 (UTC)

கட்டாயம், தவறாமல் எழுதுங்கள் மயூரநாதன். நீங்கள் எழுதினால் அது பல வகைகளில் சிறப்பாக இருக்கும். --செல்வா 17:36, 10 ஜூன் 2010 (UTC)
பரிதிமதி, வாழ்த்துக்களுக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவை அனைத்துலக விக்கிப்பீடியா மட்டத்தில் நிலைநிறுத்துவதற்கு என்னாலனவரை முயல்வேன். மயூரநாதன் 06:52, 11 ஜூன் 2010 (UTC)

வார்ப்புரு உருவாக்குபவர்கள் கவனத்திற்கு

[தொகு]

வார்ப்புரு உருவாக்குபவர்கள் அநேகமாக ஆங்கில வார்ப்புருக்களை நகலெடுத்து த.வி யில் உருவாக்கிறோம். அதில் ஆங்கில விக்கியில் தமிழ் வார்ப்புரு தொடுப்பை அங்கு சேர்த்துவிட்டால் த.வியில் ஒன்றுக்கும் மேற்பட்ட வார்ப்புருக்கள் உருவாக்கி நேரத்தை வீண்டிப்பதை தவிர்க்க முடியும். இது எனது அனுபவம். உதா. Infobox Indian Jurisdiction. semi protected வார்ப்புருக்களில் doc பக்கத்தில் தொடுப்புகளை கொடுக்கலாம். -- மாஹிர் 06:53, 9 ஜூன் 2010 (UTC)

பகிர்வுக்கு நன்றி. இனி கருத்தில் கொள்கிறேன், மாகிர். -- சுந்தர் \பேச்சு 07:52, 10 ஜூன் 2010 (UTC)
நல்ல யோசனை மாகிர். நானும் பல முறை எந்த வார்ப்புரு தமிழ் விக்கியில் இருக்கிறது என்று குழம்பி உள்ளேன்.--ரவி 10:59, 10 ஜூன் 2010 (UTC)

செம்மொழி மாநாட்டில் காட்சிப்படுத்த சிறப்பு பக்கங்கள்

[தொகு]

செம்மொழி மாநாட்டில் அதிக அளவில் அரசு அலுவலர்கள் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். அதனால் தமிழகம் தொடர்பான சிறப்பு பக்கங்களை உருவாக்கினால் பயனளிக்கும். உதாரணமாக வலைவாசல்:தமிழ்நாடு பக்கத்தை மேம்படுத்தலாம். அதுபோல் அறிவியல், சமயம் மற்றும் வரலாறு தொடர்பான வலைவாசல்களும் உருவாக்கினால் காட்சிப்படுத்தலாம். அநேக பொதுசனம் களைக்களஞ்சியங்களுக்கு இதுபோன்றவற்றிற்காக வருவார்கள் என்பது எனது கணிப்பு. -- மாஹிர் 08:05, 10 ஜூன் 2010 (UTC)

நல்ல யோசனை மாகிர். நீங்களோ யாருமோ பொறுப்பெடுத்துச் செய்தால் நன்று--ரவி 10:59, 10 ஜூன் 2010 (UTC)

கூகுள் திட்டத்துக்குக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர்கள் தேவை

[தொகு]

வணக்கம், கடந்த நான்கு மாதங்களாக சுந்தரும் நானும் கூகுள் திட்டத்தில் பொறுப்பேற்று வருகிறோம். ஆனால், பல்வேறு விக்கிப்பணிகள், தொழிற்பணிகள் காரணமாக தொடர்ந்தும் முன்பைப் போல் முனைப்பாகச் செயல்பட முடியவில்லை. யாராவது கூடுதல் பொறுப்பேற்க விரும்பினால் இணைந்து செயல்பட விரும்புகிறோம். நன்றி--ரவி 10:59, 10 ஜூன் 2010 (UTC)

இவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டுமா, என்ன வகையான உதவி, தொலைபேசியிலா,

மின்னஞ்சல் வழியிலா, நேரிலா, என்னவகையான பொறுப்புகள் என்று தெளிவுபடுதினால் மற்ற பயனர்கள் எண்ணிப்பார்ர்க்க உதவியாக இருக்கும். --செல்வா 19:17, 11 ஜூன் 2010 (UTC)

கூகுள் திட்ட ஒருங்கிணைப்புப் பணிகள்:

  1. கட்டுரைகளுக்கு கூகுள் தமிழாக்கக் கட்டுரை வார்ப்புரு இடுவது (இதைத் தானியக்கமாகச் செய்யலாம் / மொழிபெயர்ப்பாளர்களையே செய்யக் கோர வேண்டும்)
  2. மொழிபெயர்ப்பு செய்யும் பயனர் கணக்குகளை ஒரு பகுப்பில் இடுவது.
  3. மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை விக்கிபக்கங்களிலும், அவசர நேரத்தில் மின்மடல் / மின்னரட்டை மூலமாகவும் வழங்குவது.
  4. மொழிபெயர்க்கத் தகுதியான கட்டுரைகள் பட்டியைச் சரி பார்த்து ஒப்புதல் அளிப்பது.
  5. கூகுள் பொறியாளர்களுடன் மின்மடல் தொடர்பில் இருப்பது. தேவைப்பட்டால் தொலைபேசி உரையாடல்களில் ஈடுபடுவது.
  6. திட்டத்தை நெறிப்படுத்த தேவைப்படும் நுட்ப வசதிகளைச் செய்ய முயல்தல்
  7. திருத்தம் முடிந்த கட்டுரைளைச் சரி பார்த்து, பின்னூட்டம் வழங்கல்
  8. கட்டுரைகள் திருத்தப்படும் வேகத்தைக் கண்காணித்தல்
  9. குறிப்பிடப்பட்ட பணிகள் போக, இத்திட்டம் நல்ல முறையில் செயல்படத் தேவையான முன்மொழிவுகளை வைத்து முடிவு எடுத்துச் செயற்படுத்துதல்

மேற்கண்ட பல பணிகளை நாம் பகிர்ந்தே செய்கிறோம். எனினும், பொறுப்பாளர்கள் என்று முறையாக ஓரிருவர் இணைந்தால் கூகுளுடன் பேசவும் இங்கு பணிகளை பொறுப்பெடுத்து முடுக்கவும் தோதாக இருக்கும். ஒருங்கிணைப்பாளர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. இருந்தால் வசதி. --ரவி 15:17, 12 ஜூன் 2010 (UTC)

சுந்தருக்கு நன்றிகள்!

[தொகு]

'ஒத்தாசை' பக்கத்தில் ' + ' குறி இல்லையென்று நான் சொன்னதைக் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்காக நண்பர் திரு.சுந்தருக்கு நன்றி! வெறுமே குறைபாட்டைச் சரி செய்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்தக் குறைபாட்டைச் சரி செய்வது எப்படியென்று எனக்கும் கற்றுக் கொடுத்ததற்காக அவருக்கு என் உளமார்ந்த நன்றிகள் பற்பல!! வணக்கம்!-- இ.பு.ஞானப்பிரகாசன் 08:22, 11 ஜூன் 2010 (UTC)

FlaggedRevs update week of June 14

[தொகு]

Hi everyone! As part of the Pending Changes feature rollout on en.wikipedia.org on the week of 2010-06-14, we'll need to update the implementation of FlaggedRevs plugin that is in use on this wiki. To be clear, we're not altering this wiki's configuration of FlaggedRevs, merely updating the code that is shared between this site's Flagged Revisions configuration and the new configuration that we're implementing on en.wikipedia.org. We don't anticipate any problems or any reduction in functionality, but as with any new software, there may be unanticipated bugs. If you discover any problems or have further concerns, please report them at the Pending Changes issue page. Thanks! (and apologies for the non-localized notice) -- RobLa 18:15, 11 ஜூன் 2010 (UTC)

பொதுக் கோரிக்கை

[தொகு]

மதிப்பிற்குரியீர்!

திரு.ரோப்லா அவர்களின் இந்த அறிவிப்பைத் தமிழ் தவிர வேறெந்த மொழியும் அறியாத என்னைப் போன்ற விக்கியர்களுக்காக யாராவது தமிழாக்கி வைக்குமாறு கோருகிறேன்! அன்புடன்--இ.பு.ஞானப்பிரகாசன் 07:05, 12 ஜூன் 2010 (UTC)

விக்கிமேனியா மாநாட்டுக் கட்டுரை

[தொகு]

விக்கிமேனியா மாநாட்டில் நான் வழங்குவதற்கு எண்ணியுள்ள தலைப்புக் குறிப்புக்களை இங்கே இட்டுள்ளேன். பார்த்து உங்கள் கருத்துக்களைக் கூறவும். கட்டுரை எழுதியதும் இப்பக்கத்தில் இடுகிறேன். மயூரநாதன் 08:00, 12 ஜூன் 2010 (UTC)

    • மயூரநாதன், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நான் புதியவன். விக்கிக்குப் பங்களிக்கத் தொடங்கி இரு மாதங்களே ஆகின்றன. எனினும், எனது குறுகிய கால அனுபவத்திலிருந்து சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன். விக்கிமேனியாவில் கலந்துகொள்ளும்போது கீழ் வரும் இரு கருத்துக்களையும் நீங்கள் விளக்கினால் நலமாயிருக்கும்:

1) தமிழ் விக்கியின் நம்பகத்தன்மை: தமிழ் விக்கியில் எழுதப்படும் கட்டுரைகள் உண்மையான தகவல்களைத் தர வேண்டும். கட்டுரையாசிரியரின் விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் சென்று, நம்பகமான தரவுகளை அளிக்க வேண்டும். ஆதாரங்கள் காட்ட வேண்டும். ஒரு பொருள் பற்றி ஆதரவான மற்றும் எதிரான கருத்துக்கள் இருந்தால் இரண்டையுமே நடுநிலை நின்று வழங்கவேண்டும். ஆக, தமிழ் விக்கியின் நம்பகத்தன்மையை உயர்த்துவது எப்படி?

அண்மையில் நிகழ்ந்த "தமிழ்ச் செம்மொழி - தமிழ் விக்கி கட்டுரைப் போட்டி" பற்றி வெளியிடப்பட்ட ஒரு கருத்து இதோ: "ஆயுர்வேதம்" பற்றிய கட்டுரை அறிவியல்-திறனாய்வு அடிப்படையில் அமையவில்லை எனவும், வடமொழிக் கலப்பு அளவுக்கு மிஞ்சி இருந்தது எனவும், கட்டுரையை வாசிக்கும் பயனர் தவறான விதத்தில் மருந்து உண்ணும் ஆபத்து எழுகிறது எனவும் கட்டுரை நடுவர் ஒருவர் கூறினார். எனவே, அறிவியல் முறைப்படி அமைந்த கட்டுரைகள் தமிழ் விக்கியில் வெளிவர என்ன செயலாம்?

2) அடுத்த கேள்வி கூகுள் மொழிபெயர்ப்புப் பற்றியது. அதன் தரம் பற்றி இங்கே விவாதம் நிகழ்ந்தது அறிவீர்கள். நான் எழுப்பும் கேள்விகள் இரண்டு: முதலில், ஆங்கில விக்கியிலிருந்து தமிழாக்கம் பெறும் கட்டுரைகள் மூல மொழியில் நிகழும் இற்றைப்படுத்தல்களை எவ்வாறு உள்வாங்கப் போகின்றன? ஆங்கிலம் தவிர, பிற மொழி விக்கிகளில் உள்ள கட்டுரைகளைத் தமிழில் கொணர முயற்சிகள் உளவா?

நன்றி!--George46 00:18, 15 ஜூன் 2010 (UTC)

முக்கியமான கேள்விகள் பவுல். கட்டுரைகளின் நம்பகத்தன்மை குறித்து இது வரை நாம் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. 2011 ஆண்டு தமிழ் விக்கி செயல்திட்டத்தில் இதற்கு முக்கியத்துவம் தந்து முழு ஆண்டும் இப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறேன். (ஆதாரங்கள் சேர்த்தல், தகவல் பிழை திருத்தம் முதலியவை). கட்டுரைகளின் உரையைச் செப்பனிட்டு எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளையும் களைய வேண்டும். ஏனெனில் உளவியல் அடிப்படையிலும் சீரான நடையில் இல்லாத கட்டுரையின் நம்பகத்தன்மை குன்றும்.

கூகுள் திட்டத்தைப் பொறுத்தவரை, ஆங்கில விக்கியின் இற்றைப்படுத்தல்கள் தமிழ் விக்கிக்கும் வருவதற்கான வாய்ப்புகள் குறைவே. வழமையான பயனர் மொழிபெயர்த்து எழுதும் கட்டுரையிலும் இப்பிரச்சினை உண்டு. ஆனால், அங்கு அவர் ஆர்வத்தின் பெயரில் ஒரு கட்டுரையை எழுதுவார் என்ற நோக்கில் ஓரளவாவது தகவல்களை இற்றைப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். கூகுள் திட்டத்தைத் திறனாய்கையில் இப்பிரச்சினையையும் கணக்கில் கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் கூகுளின் முக்கிய நோக்கங்களில் ஒன்று கூகுளின் ஆங்கிலம் - தமிழ் மொழிமாற்றியை வளர்ப்பது. வேறு மொழி - தமிழ் மொழி மாற்றித் திட்டங்கள் ஏதும் அதனிடம் இருப்பதாகத் தற்போது தெரியவில்லை. எனவே, பிற மொழி மூலங்களில் இருந்து தமிழாக்கங்கள் வர வாய்ப்பு குறைவே--ரவி 06:46, 15 ஜூன் 2010 (UTC)

பவுல், உங்களது கருத்துக்களுக்கு நன்றி. கட்டுரையை எழுதும் போது உங்கள் கருத்துக்களையும் கவனத்தில் கொள்வேன்.
தமிழ் விக்கியின் நம்பகத்தன்மையை உயர்த்துவது என்பது மிகவும் முக்கியமானதும் அடிப்படையானதுமான ஒரு தேவை. சில முக்கியமான கட்டுரைகளையாவது சீராக்க வேண்டும். துறை அறிவு கொண்ட பயனர்கள் பெரிய அளவில் பங்களிப்புச் செய்ய முன்வரும்போதுதான் இவ்விடயத்தில் முழுமை அடையமுடியும்.
ஆங்கிலம் தவிர்ந்த பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்புச் செய்வது தொடர்பில் முறைப்படியான முயற்சிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வருவதாலும். அந்நாடுகளின் மொழிகளில் அவர்களுக்குப் பரிச்சயம் இருப்பதனாலும், அத்தகையவர்களைப் பயனர்களாகச் சேர ஊக்குவிப்பதன் மூலம் அந்நாட்டு மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்புகள் வரக்கூடிய வாய்ப்புக்களைக் கூட்டலாம். மயூரநாதன் 18:58, 15 ஜூன் 2010 (UTC)

உலகத் தமிழ் இணைய மாநாட்டுக் கட்டுரைப் போட்டி

[தொகு]

இன்றைய ஹிந்துவில் வெளியாகி உள்ள செய்தி - 1,200 articles selected to Tamil Wikipedia upload. ஏற்கனவே கட்டுரைகள் வலையேற்றம் தொடங்கி விட்டதாக போட்டிருக்கிறார்கள். இங்கு ஒன்றும் காணோம். என்னுடைய பல (52) கட்டுரைகள் இதில் உள்ளன. அவற்றில் நிறைய விக்கிபடுத்தும் வேலைகள் (வார்ப்புரு, உள்ளிணைப்பு, படங்கள், interwiki இணைப்பு, சான்றுகள் சேர்த்தல் முதலியன) மீதமிருக்கின்றன. வலையேற்றம் செய்து விட்டால் அவ்வேலைகளைத் தொடங்கலாம் என காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த வலையேற்ற வேலை எப்போது நடக்கும், எப்படி நடக்கும் (எனது பயனர் கணக்கு வழியாக நானே ஏற்றி விடலாமா? அல்ல இதற்கென தனி பயனர் கணக்கு வழியாகத் தான் ஏற்றப்படுமா?) போன்ற எனது ஐயங்களைத் தீர்க்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.--Sodabottle 04:00, 15 ஜூன் 2010 (UTC)

சோடாபாட்டில், எங்களுக்கே இது புதிய செய்தி தான். :) பதிவேற்றுவதற்கான முறை ஒன்றை வகுப்போம் அதுவரை நீங்கள் பதிவேற்ற வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 04:25, 15 ஜூன் 2010 (UTC)
சோடா பாட்டில், இந்து செய்தியில் சில தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதை விடுவோம். நீங்கள் விக்கி முறைகள் நன்கு அறிந்தவர் என்பதால் உங்கள் கட்டுரைகளை நீங்கள் இப்போதே பதிவேற்றிச் செப்பனிடத் தொடங்கலாம். மற்றவர்களின் கட்டுரைகளைப் பதிவேற்றுவதற்கான வழிமுறையை வகுக்கும் போது, அதிலும் நீங்கள் இணைந்து உதவலாம். 52 கட்டுரைகளைப் பதிவேற்றிய உங்கள் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகள். நன்றி. (கட்டுரைப் போட்டி உலகத் தமிழ் இணைய மாநாட்டை ஒட்டி நடைபெறுகிறது. செம்மொழி மாநாட்டுடன் இணைந்து அல்ல. இதன் காரணமாக இப்பகுதியின் தலைப்பை மாற்றி உள்ளேன்)--ரவி 05:56, 15 ஜூன் 2010 (UTC)
நன்றி ரவி, சுந்தர். தற்போது userspace இல் என் கட்டுரைகளைத் தயார் செய்து கொள்கிறேன். நீங்கள் மொத்தமாக முடிவு எடுக்கும் போது அப்படியே mainspace க்கு மாற்றி விடுகிறேன்.--Sodabottle 06:18, 15 ஜூன் 2010 (UTC)
கட்டுரைகளைப் பதிவேற்ற தனிக் கணக்கு ஒன்றைத் தொடங்கலாம் என்று எண்ணியிருந்தேன். அதன்வழி கட்டுரைகளை உள்ளபடி பதிவேற்றலாம் என்றும் அதன்பின் நமது வழமையான விக்கிப்படுத்தல் தொகுப்புகளை நமது கணக்குகளின் வழியாகச் செய்யலாம். இத்தகைய கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரைப் போட்டிக்குப் பதிவேற்றப்பட்டது என்றும் பதிவேற்றியவர் பெயரையும் குறிப்பிடலாம். சோடாபாட்டில் விக்கிப் பயனராகவும் இருப்பதால் அவரது கணக்கில் பதிவேற்றுவதில் எனக்கு பெரிதாகத் தயக்கம் இல்லை. இருந்தாலும் ஒருமுறை மேலே குறிப்பிட்ட முறையை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். எப்படியாகினும் அறிவிப்பு வெளிவரும் வரை பதிவேற்ற வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 06:54, 15 ஜூன் 2010 (UTC)
சோடாபாட்டில், உங்கள் பயனர் வெளியில் நீங்கள் பதிவேற்றுவதில் எந்தத்தயக்கமும் இல்லை. -- சுந்தர் \பேச்சு 07:01, 15 ஜூன் 2010 (UTC)

ஒத்துழைப்பு நல்கா கூகுள் பயனர்கள் கணக்குகள் உரிமை மாற்றம்

[தொகு]

nocreate என்ற புதிய பயனர் குழு உருவாக்கியுள்ளோம். இக்குழுவில் உள்ளோர் புதிதாக கட்டுரைகள், வார்ப்புருக்கள் போன்றவற்றை உருவாக்க இயலாது. ஆனால், ஏற்கனவே உள்ள கட்டுரைகளைத் தொகுக்க முடியும். பேச்சுப் பக்கங்களை உருவாக்க முடியும். இதுவரை எந்த வித மறுமொழியும் அளிக்கா 30 பயனர் கணக்குகள் இவ்வாறு குழு மாற்றப்பட்டுள்ளன. மேலே உள்ள உரையாடலில் குறிப்பிட்ட படி சில பயனர் கணக்குகள் "பதிவேற்றக் கணக்குகள்" எனக் கருதி விலக்கு அளிக்கக் கோரி இருந்தனர். ஆனால், இதுவரை கூகுள் பதிவேற்றி உள்ள கட்டுரைகளில் வெறும் 13% மட்டுமே திருத்தத் தொடங்கி உள்ளனர் (147 / 1123 கட்டுரைகள்). நாம் வைத்துள்ள ஆகத்து 15 இலக்குக்குள் (60 நாட்கள்) இன்னும் 976 கட்டுரைகளைத் திருத்தத் தொடங்க வேண்டும். இந்நிலையில் ஒத்துழைப்பு நல்கா பயனர்கள் மேலும் மேலும் கட்டுரைகள் ஏற்ற உரிமை இருப்பது சரி இல்லை. தவிர, அடுத்த 60 நாட்களுக்குப் புதிதாகத் தொடங்கப்படும் எந்தக் கணக்கும் கூகுள் கட்டுரைகளைப் பதிவேற்றாமல் இருப்பது நல்லது. மீறி ஏற்றப்பட்டால் அக்கணக்குகளையும் nocreate குழுவுக்கு மாற்ற வேண்டி வரும். மொத்தத்தில், இது வரை ஒத்துழைப்பு நல்கி செயல்பட்டு வரும் பயனர் கணக்குகள் திருத்தங்களை மேற்கொள்வதுடன் புதிய கட்டுரைகளை ஏற்றலாம். மற்ற கணக்குகள் திருத்தங்களில் கவனம் செலுத்துமாறு நெறிப்படுத்த வேண்டும். இதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி--ரவி 22:01, 14 ஜூன் 2010 (UTC)

ஏற்கனவே திருத்தம் செய்யத் தொடங்கியுள்ள கணக்குகளை எந்த விதத்திலும் தடை செய்யாமல் செயல்படுத்துவதில் உடன்படுகிறேன். இது பற்றி அவர்களுக்கு மடலனுப்பி அவர்கள் ஏதேனும் சலுகைகள் கேட்டால் (அண்மைய கட்டுரைகளை முதலில் சரி செய்கிறோம் என்பது போல) அதைக் கருத்தில் கொள்ளலாம். -- சுந்தர் \பேச்சு 03:42, 15 ஜூன் 2010 (UTC) பி.கு. இந்த கருத்து வேண்டலை ஆலமரத்தடியில் கீழே இட்டால் அனைவரும் பார்க்க ஏதுவாகும்.

பகுப்பு நீக்கம் தொடர்பாக

[தொகு]

பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் பகுப்புகளை நீக்கிவிடலாமா?. உதா தமிழ்நாடு நகராட்சிகள், அல்லது விழுப்புரம் மாவட்டம் என்று ஏற்கெனவே உள்ள பகுப்புகள் கொண்ட பக்கத்திற்கு மேற்கண்ட பகுப்பு அவசியமா?. அதிக கட்டுரைகள் கொண்ட பகுப்புகளை பிரிப்பதை ஆங்கில விக்கியில் கடைபிடிப்பதாக அறிகிறேன். எனது தானியங்கி மூலம் அவற்றை அழிக்க முடியும். கருத்திடுக -- மாஹிர் 18:50, 15 ஜூன் 2010 (UTC)

மாகிர், இப்பகுப்பினை முற்றாக நீக்கி விடச் சொல்லுகிறீர்களா அல்லது சில கட்டுரைகளை இப்பகுப்பில் இருந்து நீக்கச் சொல்கிறீர்களா? எது எப்படியிருப்பினும் இந்தப் பகுப்பு இருப்பது அவசியம். அனைத்து ஊர்களையும் இந்தப் பகுப்பினுள் இடுவது நல்லது என்றே நான் நினைக்கிறேன். அத்துடன் அந்தந்த ஊர்களை அந்தந்த மாவட்ட அல்லது நகராட்சிப் பகுப்புக்குள்ளும் இடுவது அவசியம்.--Kanags \உரையாடுக 11:11, 18 ஜூன் 2010 (UTC)
மாகிர், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனிப்பகுப்புகளை உருவாக்கி அவற்றுள் இக்கட்டுரைகளை இட்டுவிட்டு அப்பகுப்புகளின் தாய்ப்பகுப்பாக இப்பகுப்பை அமைக்க வேண்டும். இதற்கு தானியங்கிகளைப் பயன்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 13:09, 18 ஜூன் 2010 (UTC)

திரு.ஜார்ஜ் அவர்களின் கருத்து பற்றி

[தொகு]

அனைவருக்கும் அன்பு வணக்கம்!

திரு.ஜார்ஜ் அவர்களின் கருத்தை இப்பொழுதுதான் படித்தேன். அவருடைய கூகுள் மொழிபெயர்ப்பு பற்றிய கருத்து இணைய உலகிற்குப் புதியவனான எனக்குப் புரியவில்லை. ஆனால் ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழ் விக்கிபீடியாவிற்கு மொழிபெயர்க்கப்படும் கட்டுரைகளின் பிற்காலம் குறித்து அவர் எழுப்பியுள்ள கேள்வி மிகவும் முதன்மையானது. அதைப் பற்றி மூத்த விக்கியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்!

அடுத்து, த.வி-யிலுள்ள பிழைகள் பற்றிய அவருடைய கருத்தோடு நான் முற்றிலும் உடன்படுகிறேன். த.வி-க்கு நான் வந்தவுடனே இங்குள்ள ஒரே குறையாக எனக்குப் பட்டது இங்குள்ள இலக்கணப் பிழைகளும் உரைநடைப் பிழைகளும்தாம். என்னால் முடிந்தவரை நான் அவற்றைத் திருத்தி வருகிறேன். ஆனால் அந்த அளவுக்கு நான் தமிழிலக்கணம் படித்தவனல்லனாதலால் திருத்துகிறேனென்ற பெயரில் நானும் சில தவறுகளைச் செய்து விடுகிறேன். தமிழிலக்கணம் நன்கறிந்தவராகத் தென்படும் திரு.செல்வா போன்றவர்கள் எனக்கு உதவியாக இருந்தால், இப்படி இலக்கணப் பிழைகளைத் திருத்துவதற்கென்றே நாம் சிலர் ஒன்றிணைந்து ஒரு குழுவாகச் செயல்பட்டால் மிக விரைவில் எல்லா இலக்கணப் பிழைகளையும், உரைநடைப் பிழைகளையும் திருத்தி விட முடியும். ஆர்வமுள்ளவர்கள் இக்கருத்தைப் பரிசீலிக்கக் கோருகிறேன்!

நன்றி! வணக்கம்!--இ.பு.ஞானப்பிரகாசன் 09:54, 18 ஜூன் 2010 (UTC)

உங்கள் ஆர்வத்துக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் கூறியவாறு நம்மில் பலரும் சேர்ந்து திருத்தினால், சரியாகிவிடும். கருத்து ஓட்டத்தையும், சொற்றொடர்களையும் எளிமைப்படுத்த வேண்டும். நானும் இலக்கணம் நன்கு கற்றவன் அல்லன், என்றாலும் கூடியமட்டிலும் எனக்குத் தெரிந்த அளவு சரியான தமிழில் எழுத முயல்கிறேன். எனக்குத் தெரிந்ததை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ளவும், இயன்றவாறு உதவவும் முன்வருவேன். கூகுள் கட்டுரைகளைச் செப்பம் செய்தால் பயனுடைய ஒரு பங்களிப்பாக இருக்கும். நாம் செய்யும் திருத்தங்களையும் கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் கருத்தில் கொண்டால் பயன் பெருகும். --செல்வா 10:28, 18 ஜூன் 2010 (UTC)
  • இ.பு.ஞானப்பிரகாசன், மேலே கூறியபடி, தமிழ் விக்கியின் தரம் உயரவேண்டும் என ஆர்வத்தோடு செயல்படுகிறீர்கள். பாராட்டுகள்! என் திரைப்பெயர் பவுல். அவ்வாறே அழையுங்கள். (சிறு குறிப்பு: பிற மொழி விக்கிகளுக்கும் பங்களிப்பதால் அடையாள எளிமை கருதி George46 என்று கையெழுத்திடுகிறேன். அவ்வளவே). நன்றி!--George46 13:40, 19 ஜூன் 2010 (UTC)

சிவப்பு இணைப்பு நீக்கல் தானியங்கி

[தொகு]

கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில் நிறைந்துள்ள தேவையற்ற சிவப்பு இணைப்புகளை நீக்குவதற்கான தானியங்கிக்கு ஒப்புதல் அளிக்கும் முன்னர் இது பற்றி எவருக்கும் மாற்றுக் கருத்து இருந்தால் இங்கு தெரிவிக்கவும். எவருக்கும் மறுப்பு இல்லையென்றால் திங்கட்கிழமை அணுக்கம் வழங்கலாம். அதில் பயன்படுத்தும் நிரலில் ஒரு பகுதி நான் எழுதியது என்பதால் இறுதி முடிவை வேறு ஒருவர் எடுப்பது நல்லது. -- சுந்தர் \பேச்சு 13:06, 18 ஜூன் 2010 (UTC)

சில கட்டுரைகளில் இணைப்புக்கள் நீக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில் மட்டும் இது பயன்படுத்தப்படுமானால் வரவேற்கத்தக்கதே. மயூரநாதன் 13:20, 18 ஜூன் 2010 (UTC)
ஆம், அதைக் கட்டாயம் வலியுறுத்த வேண்டும். பயனர்கள் சேர்க்கும் இணைப்புகள் பயன் கருதியே இருக்கும். -- சுந்தர் \பேச்சு 13:25, 18 ஜூன் 2010 (UTC)