விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு83

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இன்றைய நாளில்[தொகு]

தமிழ் விக்கிபீடியாவிற்கு என் முதற்க்கண் வணக்கம். நான் தினமும் முகநூலில் இந்நாளில் சரித்திரம் என்னும் பாணியில் பிறப்பு/இறப்பு மற்றும் நிகழ்வுகளை பதிவு செய்கிறேன். இதில் தமிழ் மற்றும் ஆங்கில விக்கிபீடியா இரண்டிற்கும் நிறைய பேதங்கள் உள்ளன. சரி செய்து பதிவுகளை போடவும்.

உதாரணமாக..நவம்பர் 2 என்ற பக்கத்தில்

2006 - பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது.

என போடப்பட்டுள்ளது. ஆனால் நவம்பர் ஒன்றாம் தேதியே இந்தப் பெயர் மாற்றம் அமுலுக்கு வந்தது. இது போல தமிழ் பிரபலங்கள் பலரின் பிறப்பு மற்றும் இறப்பு தேதி நாளின் பக்கமும் அவங்களை பற்றிய தேதியும் வேறாக பதிவாகி உள்ளது.

நன்றி. அன்பன். ஆனந்த், ஷார்ஜா, ஐக்கிய அரபு அமீரகம்

வணக்கம் ஆனந்த், இவற்றை இற்றைப் படுத்தி 3-4 ஆண்டுகள் ஆகி விட்டன. மீண்டும் ஒரு முறை இவற்றை மீள்பார்வையிட வேண்டும். நீங்கள் காணும் தவறுகளை அந்த அந்த நாட்கள் பக்கங்களின் உரையாடல் பக்கங்களில் பதிவு செய்யுங்கள். கவனிக்கிறோம். நன்றி.--Kanags \உரையாடுக 20:17, 1 நவம்பர் 2012 (UTC)

அரசுத் தகவல்கள் ஆதாரம்?[தொகு]

தமிழ்நாடு அரசுத் திட்டங்கள்/ செயல்பாடுகள் தொடர்பான கட்டுரைகளுக்கான தகவல்களை நாம் அரசு அலுவலகங்களில் கேட்டுப் பெற்று விடலாம். இவற்றை நாம் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளீடு செய்யும் நிலையில் அதற்கு ஆதாரம் என்று எதைக் குறிப்பிட முடியும்? உதாரணமாக, தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களாகத் தேர்வு செய்யப்பட்ட நூல்கள், நூலாசிரியர்கள்/பதிப்பகம் கொண்ட பட்டியலை 1972 ஆம் ஆண்டிலிருந்து வழங்கும்படி கேட்டுள்ளேன். இந்தப் பட்டியல் அரசிடமிருந்து கிடைக்கும் போது ஒவ்வொரு ஆண்டுக்கும் தேர்வு செய்யப்பெற்ற நூல்கள், அந்நூலின் நூலாசிரியர், நூல் வெளியிட்ட பதிப்பகம் போன்றவற்றைக் கொண்ட தனிக்கட்டுரைகளாக உருவாக்கும் நிலையில் இதற்கு ஆதாரம் தேவைப்படுமா? ஆதாரம் என்று குறிப்பிட்டு தமிழ் வளர்ச்சித் துறையில் நேரடியாகக் கேட்டுப் பெறப்பட்ட தகவல் என்பதை எப்படி குறிப்பிடலாம்? விளக்கம் தேவை...--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:23, 2 நவம்பர் 2012 (UTC)

தமிழ் வளர்ச்சித்துறை அலுவல் எண்ணுடன் அளிக்கும் தகவலைச் சான்றாகக் காட்டலாம். en:Template:Federal_Register என்ற வார்ப்புருவைப் போல தமிழக அரசின் வெளியீடுகள், அரசாணைகள், பதிவுகள், அலுவல் மடல்கள் போன்றவற்றுக்கும் வார்ப்புருக்களை உருவாக்கலாம். இத்தகைய ஆவணங்களில் ஒன்றைப் படம் பிடித்துப் போட்டால் அதிலுள்ள தகவல்களை வைத்து தகுந்த மேற்கோளை வடிவமைக்கலாம். -- சுந்தர் \பேச்சு 17:36, 3 நவம்பர் 2012 (UTC)
நன்றி சுந்தர். அப்படியே செய்து விடுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:38, 3 நவம்பர் 2012 (UTC)

விக்கி பல்கலைக்கழகம்[தொகு]

விக்கிப்பீடியாவின் தொடர்திட்டங்களில் ஒன்றான விக்கி பல்கலைக்கழகத்திலும் சேர்ந்து விக்கியை மேலும் வலுப்படுத்த வேண்டுகிறேன். விக்கி பல்கலைக்கழகத்திற்கான சோதனை முதற்பக்கம். நன்றி.-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:34, 3 நவம்பர் 2012 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை 2012[தொகு]

கடந்த ஆண்டுகளில் தமிழ் விக்கிப்பீடியாவின் ஆண்டு அறிக்கையை முன்னின்று எழுதிவந்துள்ளேன். 2012 ஆண்டு அறிக்கையை சண்முகம், மதனாகரன், பார்வதிஸ்ரீ போன்ற புதிய தலைமுறைப் பயனர்களில் யாரவது ஒருவர் முன்னின்றோ அல்லது கூட்டாகவோ எழுதுவது பொருத்தம் என்று எண்ணுகிறேன். ஆண்டு அறிக்கையின் நோக்கங்கள், உள்ளடக்கம் பற்றிய எனது கருத்துக்கள் சிலவற்றைக் கீழே பதிகிறேன்.

ஆண்டு அறிக்கையின் முதன்மை நோக்கம் அந்த ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியையும் செயற்பாடுகளையும் பதிவுசெய்து, அடுத்த ஆண்டு திட்டமிடலுக்கு உதவுதல் ஆகும். ஆண்டு அறிக்கையின் அறிக்கை ஆவணப் பதிவாகவும், உரையாடல்கள் திட்டமிடல் பகுதியாகவும் பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

த.வி ஆண்டு அறிக்கையின் உள்ளடக்கத்தைப் பின்வருமாறு பிரிக்கலாம்.

 • தரவுகள், தரவு ஒப்பீடுகள் (கடந்த ஆண்டோடு, இந்திய விக்கிகளோடு, அனைத்து விக்கிகளோடும்)
 • தமிழ் விக்கிப்பீடியாவின் பயன்பாடுகள் (குறிப்பாக எந்த எந்த வழிகளில் பயன்படுத்தப்பட்டது.)
 • தமிழ் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகள் (பயனர் பங்களிப்புகள், பட்டறைகள், அறிமுகங்கள், போட்டிகள்.. போன்றவை)
 • உள்ளடக்க விரிவாக்கம் (குறிப்பாக எந்த எந்தத் துறைகள் இந்த ஆண்டு சிறப்பாக விரிவுபெற்றன)
 • நுட்பம்/துப்பரவு/நிர்வாகிகள்/
 • ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா
 • எதிர்கொண்ட விமர்சனங்கள், விமர்சனங்களுக்கான தமிழ் விக்கிப்பீடியாவின் பதிலுரைகள்
 • பிற தமிழ் விக்கியூடகத் திட்டங்கள் பற்றிய குறிப்புகள்
 • சவால்கள், வாய்ப்புக்கள்
 • வழமையான விக்கி கொள்கைகள்/நடைமுறைகள் பற்றிய கூற்றுக்கள்
 • படங்கள்
 • மேற்கோள்கள்

டிசம்பரின் நடுப்பகுதியில் அல்லது இறுதிப்பகுதியில் பூரணமாகுமாறு எழுதிமுடித்தால் சிறப்பு. பேச்சுப் பக்கத்தில் அடுத்த ஆண்டு நாம் என்ன என்ன மாதிரிச் செயற்பாடுகளில் ஈடுபடலாம் போன்ற ஒரு கருத்துதிர்ப்பு (brainstorming) செய்யலாம். கடந்த இரு ஆண்டுகள் வேறு களங்கள் இதற்கு இருந்த வகையால் இவ்வாறு செய்யப்படவில்லை என்று எண்ணுகிறேன். இதை மீள்விப்பது உதவியாக அமையும். இவை எனது தனிப்பட்ட கருத்துக்களே. நன்றிகள். --Natkeeran (பேச்சு) 17:08, 3 நவம்பர் 2012 (UTC)

கடந்த 2011 ஆம் ஆண்டுக்கான அறிக்கையினை மாதிரியாகக் கொள்ளலாம். அல்லது இதைவிடச் சிறப்பாகவும் செய்யலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:42, 3 நவம்பர் 2012 (UTC)
செய்யலாமே, கூட்டாகச் செய்தால் எளிதாக இருக்கும் என நினைக்கிறன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 03:10, 4 நவம்பர் 2012 (UTC)

குறுங்கட்டுரை[தொகு]

குறுங்கட்டுரை பற்றி ஏற்கெனவே பலமுறை உரையாடப்பட்டுள்ளது. மேலதிக விளக்கத்திற்காக, இங்கு பொருத்தமான உடையாடலின் இணைப்பிணையோ அல்லது கருத்தினையோ தெரிவித்தால், குறுங்கட்டுரைகளை தொகுக்கும்போது அதன் வார்ப்புருவினை நீக்கிவிடலாம். --Anton (பேச்சு) 09:29, 4 நவம்பர் 2012 (UTC)

கைப்பாவை[தொகு]

த.வி.யில் உள்ள இரு பயனர் கணக்குகளை விக்கிமீடியாவில் ஆராய்ந்ததில், அவை கைப்பாவை கணக்குகளாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளது (Possible) என பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரங்கள் இங்கே. மேலதிக நடவடிக்கைக்காக இங்கே பதிவு செய்யப்படுகின்றது. இங்கே பதிவு செய்வது பொருத்தமில்லையெனில் தகுந்த இடத்திற்கு நகர்த்தவும். --Anton (பேச்சு) 09:44, 4 நவம்பர் 2012 (UTC)

நானும் சந்தேகித்தேன். அதே இருவரையே! பயனர் பக்கங்களை பார்த்தாலே தெரிந்துவிடும். அன்றன் கருத்தை வழிமொழிகிறேன்-தமிழ்க்குரிசில்
தொடர்ந்து கண்காணிப்போம்.--Kanags \உரையாடுக 20:12, 4 நவம்பர் 2012 (UTC)

சந்தேகம் ஒரு மனிதனின் இறுதியான கொடிய எண்ணம், மற்றும் கொடிய நோய். இதற்க்கு மருந்து இல்லை! காலம் பதில் சொல்லும்!--சிவம் 00:06, 5 நவம்பர் 2012 (UTC)

இவ்வாறு மறைமுகமாக கொடிய எண்ணம் மற்றம் நோய் உள்ளவர்களாக மற்றவர்களை உவமிப்பவர்கள் விடயத்தில் த.வி. தகுந்த நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதை வலியுறுத்துகின்றேன். மேலும், இவ்வாறான உரையாடல்கள் மேற் கொள்பவர்களால் மேற்கொண்டு தொகுத்தலில் ஈடுபடுவதும் தடைப்படுகின்றது. --Anton (பேச்சு) 11:42, 5 நவம்பர் 2012 (UTC)

பயனர் பக்கம் நீக்கல்[தொகு]

விக்கிப்பீடியாவில் பயனர் பக்கம் என்பது, விக்கி சார்ந்த திட்டங்களில் சக விக்கிப்பீடியர்களுடன் ஒருவருக்கொருவர் கருத்தாடுவதற்கும் தொடர்புகொள்வதற்குமானது. இங்கே ஒரு பயனர் பக்கம் பயனர்:விடியல் விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையை சேர்ந்தவை. குறித்த தொகுப்பாளரின் நோக்கம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பங்களிப்பதல்ல; மாறாக தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு இடைமுகமாக, சுயவிளம்பரத்திற்கான களமாக கொண்டியங்குவது தெளிவாகத் தெரிகிறது. அதுவும் எந்த சான்றுகளும் மேற்கோள்களும் அற்ற சுயவிளம்பரம். எந்த ஒரு பயனர் பக்கத்தையும் விக்கி திட்டம் தொடர்பில்லாதவற்றை ஆவணப் படுத்திவைக்கும் இடமாகவோ, சுயவிளம்பரத்திற்கான இடைமுகமாகவோ பயன்படுத்த முடியாது. (Wikipedia is not a general hosting service, so your user page is not a personal website.) பார்க்க: [1] இப்பக்கம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். இதற்கு முன்னரும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. எவரும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எதிர்காலத்தில் இவ்வாறான பயனர் பக்கங்கள் உருவாக்கப்படுவதற்கும் இடமளிக்கமால் எச்சரிக்கையாயிருத்தல் வேண்டும்.--HK Arun (பேச்சு) 16:16, 4 நவம்பர் 2012 (UTC)

உங்கள் அங்கலாய்ப்பு நியாமானதே. எனினும் முன்முடிவுகளை எடுக்காமல் பயனரோடு உரையாடிப் பார்ப்போம். நன்றி. --Natkeeran (பேச்சு) 16:24, 4 நவம்பர் 2012 (UTC)
விக்கியில் இதற்கு முன்னரும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. உள்ளடக்கம் "விடியல்" எனும் அமைப்பு சார்ந்ததாகவும் இல்லை. அவ்வாறு இருந்தால் வேறு பயனர்களாவது சான்றுகொள்கள் சேர்த்து தொகுத்து வைக்கலாம். ஆனால் உள்ளடக்கம் முழுக்க முழுக்க தன் விபரத்தையும், தனது எதிர்கால கொள்கை பற்றியதுமாகவே உள்ளது. அதுவும் தானே தன்னை பற்றி விக்கியில் ஆவணப்படுத்துவதற்கும் விக்கி கொள்கையில் இடமில்லை.--HK Arun (பேச்சு) 16:42, 4 நவம்பர் 2012 (UTC)
HK Arun கருத்துடன் இணைகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:44, 4 நவம்பர் 2012 (UTC)


உங்கள் கருத்துக்களுடன் மாறுபடவில்லை. புதுப்பயனர் போல் தெரிகிறது, உரையாடிப் பார்ப்போம். இலாவிடின், மேற்கொண்டு செயற்படலாம். --Natkeeran (பேச்சு) 16:51, 4 நவம்பர் 2012 (UTC)

ஒரு பயனர் தன்னை பற்றிய தகவல் தருவது நன்றே. அதை சந்தேகத்தின் அடிப்படையில் விளம்பரம் என்று கூறுவது தவறு! அது அவரின் பயனர் பக்கம். அது ஒன்றும் பொது கட்டுரை இல்லை! பயனர் பக்கத்தில் அவர் விருப்பிய அனைத்து தகவலையும் உள்ளடக்கலாம் என்று விக்கி சொல்கிறது.! கட்டுரையில் மட்டும் விளம்பரம் வேண்டாம் என்பது உண்மைதான். அதற்காக விடியல் என்பது அவருடைய புனைப் பெயராகவும் இருக்கலாம் அந்த பயனர் அரசு என்ற பெயரில், இல்லை சொந்த பெயரிலோ அடையாளம் காடுவது நன்று. --சிவம் 01:27, 5 நவம்பர் 2012 (UTC)

இந்தப் பயனர் ஏற்கனவே பயனர் பேச்சு:Vidialswtrust என்றொரு கணக்கை தொடங்கியிருந்தார், மேலும் ஏற்கனவே பயனர் பக்கம் விளம்பரம் காரணமாக நீக்கப்பட்டிருந்தது , மீண்டும் அந்தப் பக்கத்தை உருவாக்கியதும் அல்லாமல் பல சுய விளம்பர படங்களையும் பதிவேற்றி இருந்தார் சிறப்பு:Log/Vidialswtrust, மீண்டும் இப்பொழுது பயனர்:விடியல் என்று தொடங்கியுள்ளார், அதிலும் அதே சுய விளம்பரம் மட்டுமே, போதுமான எச்சரிக்கைக்குப் பின் இரு பக்கங்களும் நீக்கப்பட்டு, தடை செய்யப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. @சிவம் விக்கிப்பீடியா:பயனர் பக்கம் இந்தப் பக்கத்தில் உங்களுக்கான விளக்கம் உள்ளது .--சண்முகம்ப7 (பேச்சு) 11:13, 5 நவம்பர் 2012 (UTC)

வணக்கம் சண்முகம். நன்றி உங்கள் தகவலுக்கு, இப்போது எனக்கு நன்றாக புரிந்துவிட்டன, இதை நான் முதலில் அறியவில்லை, என்னை மன்னிக்கவும்.--சிவம் 11:20, 5 நவம்பர் 2012 (UTC)

விக்கிப்பீடியா நிரலாக்குனர் கூடல் பகுதி அறிக்கை[தொகு]

தற்போது பெங்களூரில் நடந்து கொண்டிருக்கும் விக்கி நிரலாக்குனர் கூடலில் நானும், சிரீகாந்தும், சண்முகமும் கலந்து கொண்டுள்ளோம். தமிழ் மென்பொருள் ஆர்வலர்கள் கிரேசும், விக்கினேசும், யுவியும், அருண் கணேசும் கலந்து கொண்டிருக்கிறார்கள். விக்கிமீடியா மென்பொருளாளர்கள் பிரையன் விபர், அமீர் அகரோனி போன்றோரின் அறிமுக உரைகளும் தனிப்பட்ட பயிற்சிகளும் மிகவும் உதவியாய் உள்ளது. சண்முகம் நரையத்துக்கான சோதனை நிரல் எழுத உதவி வருகிறார். அமீரின் பயிற்சியின் பயனாக சிரீகாந்தும் நானும் தமிழில் வேற்றுமை உருபுகள் வரும் மீடியாவிக்கி செய்திகளை கலை-ஐ, செல்வா-ஐ, சண்முகம்-ஐ, சுந்தர்-ஐ என்பது போல் வராமல் புணர்ந்து வருமாறு செய்யும் நிரலொன்றை எழுதத் தொடங்கியுள்ளோம். அத்துடன் புணர்ச்சி விதிகளை நன்னூலில் இருந்து பெற்று சாவாக்கிறிட்டில் விக்கினேசு உருவாக்கி வருகிறார். அனைத்து புணர்ச்சி விதிகளையும் பின்னர் பயனர்களுடைய உதவியோடு சேர்த்துக் கொள்ளலாம். இப்போது அதற்கான கட்டமைப்பை மட்டும் நிரலாக்கம் செய்து விடலாம் என எண்ணுகிறோம். தனித்திட்டப் பக்கத்தில் நிலைமொழியீற்றில் எவ்வெவ் எழுத்துக்கள் வந்தால் வேற்றுமை உருபுகள் எவ்வாறு புணரும் என பார்வதி, செல்வா, மதன் போன்றோர் குறித்துத் தந்தால் பொங்கலுக்குள் செயல்படுத்தி விடலாம். இந்த வசதியை வார்ப்புருக்களிலும் பகுப்புக்களின் தலைப்பிலும் தன்னியக்கமாகச் சேர்க்கப்படும் கட்டுரைகளிலும்கூடப் பயன்படுத்தலாம் என அறிகிறோம். மேலும் தகவல்களை சிரீகாந்தும் சண்முகமும் சேர்ப்பார்கள் என நம்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 09:30, 10 நவம்பர் 2012 (UTC)

 1. 👍 விருப்பம் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:09, 10 நவம்பர் 2012 (UTC)
 2. 👍 விருப்பம்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:33, 10 நவம்பர் 2012 (UTC)
 3. பெருமகிழ்வாக இருக்கிறது. வேற்றுமையுருபு பயன்பாடுகளை அகரமுதலி இணையத்தில் செய்திருக்கிறார்கள். ஆனால், மிகக் குறைந்த சொற்களுக்கே செய்துள்ளனர். மேலும், விக்சனரியில் மயூரநாதன், 2007 ஆம் ஆண்டு பல முயற்சிகள் எடுத்தார். அவைகளை இங்கு தொகுத்து வைத்துள்ளேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையினரும் இம்முயற்சியைக் கையாண்டுள்ளனர். உங்கள் நோக்கம் மேலும் சிறக்க, இவைகளை ஒருமுறைக் காணவும்.-- உழவன் +உரை.. 02:48, 11 நவம்பர் 2012 (UTC)

👍 விருப்பம் நெடுநாள் பிரச்சனை தீரப்போகிறது. தீபாவளிக்கான மகிழ்ச்சிச் செய்தியாக எடுத்துக்கொள்கிறேன்-தமிழ்க்குரிசில்

பல ஆண்டுகளுக்கு முன் வையாபுரிப்பிள்ளை அவர்கள் தமிழ் அகரமுதலி ஒன்றில் இருக்க வேண்டிய அம்சங்கள் எவை என்பது குறித்து எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். அதில் அவர், தமிழ்ச் சொற்களுடன் வேற்றுமை உருபுகள்; பால், காலம் முதலியன காட்டும் விகுதிகள் என்பன சேரும்போது அவை அடையும் மாற்றங்களும் அகரமுதலிகளில் இருப்பது தமிழ் படிப்பதில் ஆர்வமுள்ள பிற மொழியாளருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று எழுதியிருந்தார். இதை மனதில் வைத்து, விக்சனரியில் சொற்களுடன் வேற்றுமை உருபுகளும், காலம் காட்டும் விகுதிகளும் சேரும்போது உருவாகும் சொல்வடிவங்களை ஒரு அட்டவணையாகக் கொடுக்கும் வகையில் வார்ர்புருக்களை உருவாக்கிச் சில சோதனைகளை "மணல்தொட்டி" பக்கத்தில் செய்தேன். பல்வேறு காரணங்களால் அம் முயற்சியைத் தொடர முடியவில்லை. அவற்றைத் தொகுத்து வைத்திருக்கும் தகவலுழவனுக்கு நன்றிகள். --- மயூரநாதன் (பேச்சு) 18:12, 13 நவம்பர் 2012 (UTC)]
தமிழ் கற்றல் கற்பித்தலில் இது ஒரு பெரும் சிக்கலாக இருக்கிறது. ஒரு சொல் வேற்றுமை உருபுகளால் என்ன என்ன வகைகளில் மாறும் என்பது தொடர்பான விதிகளில் தெளிவு இல்லை, அல்லது அவை தெளிவாக எடுத்துரைக்கப்படவில்லை. சொற்கள் வேற்றுமை உருபுகளால் மாறுவதில் சீர்மை இருக்கிறதா? தானியங்கிப் படுத்தினால் நிச்சியம் தெளிவு கிடைக்கும். --Natkeeran (பேச்சு) 20:45, 13 நவம்பர் 2012 (UTC)

உகர ஈற்றுக்கு விதிகளை உருவாக்கும்போது குற்றியலுகரம், முற்றியலுகரம் ஆகியவை தொடர்பிலுங் கவனஞ் செலுத்த வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 09:41, 17 நவம்பர் 2012 (UTC)

தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்[தொகு]

 • தீபாவளி கொண்டாடும் அனைத்து பயனர்களுக்கும் நல்வாழ்த்துகள். --Natkeeran (பேச்சு) 15:48, 12 நவம்பர் 2012 (UTC)
 • விக்கி பயனர்களுக்கு ஒளித்திருநாள் நல்வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:06, 12 நவம்பர் 2012 (UTC)
 • தீபாவளி விழா அனைத்துப் பயனருக்கும் ஒளிமயமான காலம் விடிந்திட வழியாகுக!--பவுல்-Paul (பேச்சு) 18:29, 12 நவம்பர் 2012 (UTC)
 • தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் --சிவகோசரன் (பேச்சு) 01:09, 13 நவம்பர் 2012 (UTC)

நேரடியாகச் சேகரிக்கும் தகவல்களுக்கு மேற்கோள்கள்[தொகு]

நான் சில எழுத்தாளர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையாக உருவாக்கம் செய்து வருகிறேன். இது போன்ற கட்டுரைகள் பொதுவான சில தகவல்களை மட்டுமே கொண்டுள்ளது. இக்கட்டுரைகளுக்குச் சில பயனர்கள் மேற்கோள்கள் தேவை என வார்ப்புருகளை இட்டு வருகின்றனர். பார்க்க. மேற்கோள்கள் கட்டுரைக்கு வலு சேர்க்கும் என்பது உண்மைதான். ஆனால், இதுபோன்ற கட்டுரைகளுக்கு மேற்கோள்களாக எதைச் சேர்ப்பது? இவர்களில் பலர் கணினி பயன்படுத்தும் திறனில்லாதவர்கள். எனவே இவர்கள் எழுதிய நூல்கள் குறித்த தகவல்களைக் கொண்டு வலைப்பூக்களைக் கூட இவர்கள் உருவாக்கிக் கொள்ள இயலாது. மேலும், புத்தகங்கள் வெளியிடும் பல பதிப்பகங்களுக்கு இணையதளங்கள் இல்லை. எனவே, அவர்கள் எழுதும் புத்தகங்களுக்கு இணையதளங்களை மேற்கோள்களாகக் காட்டவும் இயலாது. உதாரணமாக, நான் எழுதிய தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையச் சிற்றிதழ்கள் எனும் நூல்களை வெளியிட்ட மெய்யப்பன் பதிப்பகத்திற்கான இணையதளம் இல்லை. இந்நூல்களுக்கு இணையதளத் தகவல் இல்லை என்பதற்காக இது மேற்கோள்கள் இல்லாத கட்டுரை என்று அடையாளப்படுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. இது போன்ற கட்டுரைகளுக்கு என்ன செய்யலாம்? கருத்து தேவை...!--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:28, 17 நவம்பர் 2012 (UTC)

எல்லாக் கட்டுரைகளுக்கும் மேற்கோள் வேண்டும் என்ற வார்ப்புருவைச் சேர்ப்பதில் எனக்கும் உடன்பாடில்லை. அவ்வாறு ஆயின் 90% தமிழ் விக்கி கட்டுரைகளுக்கு அவ்வாறு செய்ய வேண்டும். மாற்றாக மேற்கோள் போதுமாக இருக்கும் கட்டுரைகளை அடையாளம் காணுவது இலகு!!. சர்ச்சைக்குரிய தகவல்களுக்கு மட்டும் மேற்கோள் தேவை என்ற வார்ப்புருவைச் சேர்ப்பது நன்று. நபர்கள் தொடர்பான கட்டுரைகளில் அவர் ஏன் குறிப்படத்தக்கவர் என்று நிறுவும் வகையில் தகவல் இருப்பது முக்கியமானது. இரா. ரெங்கசாமி என்பவரின் ஆக்கங்கள் தொடர்பாக இணையத்தில் மேற்கோள்கள் கிடைக்கின்றன. --Natkeeran (பேச்சு) 02:15, 17 நவம்பர் 2012 (UTC)

கட்டாயமாக மேற்கோள்கள் சேர்க்கப்படவே வேண்டும். ஆயினும் இணையத்தள மேற்கோள்களை மட்டுந் தான் இணைக்க வேண்டுமென்றில்லை. நூல்களையும் மேற்கோள்களாகக் குறிப்பிடலாமே. நீங்கள் குறிப்பிட்ட கட்டுரையில் நூல்களை மேற்கோள்களாக இணைக்கலாம். தமிழ் விக்கிப்பீடியா நூலைப் பற்றிய கட்டுரைக்கு அந்நூலையும் அந்நூலைப் பற்றி வெளிவந்த செய்தித்தாள்களையும் மேற்கோள்களாகக் குறிப்பிடலாம். --மதனாகரன் (பேச்சு) 03:28, 17 நவம்பர் 2012 (UTC) 👍 விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:52, 17 நவம்பர் 2012 (UTC)

நக்கீரன் கருத்தே என்னுடையதாகவும் இருக்கிறது. நக்கீரன் குறிப்பிடுவது போல் சர்ச்சைக்குரிய தகவல்களுக்கு அல்லது முக்கியமான தகவல்களுக்கு மேற்கோள்களை அவசியமாகக் கொள்ளலாம். பொதுவான சில தகவல்களுக்கு இதில் விலக்களிக்கலாம். மதனாகரன் குறிப்பிடுவது போல் சில தகவல்களுக்கு மேற்கோள்களாகவோ அல்லது ஆதாராமாகவோ நூல்கள் அல்லது அரசுக் குறிப்புகள் இணைக்கப்பட்டாலும் இணையத்தில் ஏதாவது உசாத்துணை இருக்கிறதா என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது. விக்கிப்பீடியா: முதற்பக்கக் கட்டுரைக்காகப் பரிந்துரைக்கப்பட்ட தமிழ்நாட்டில் சொத்து வரி எனும் கட்டுரைக்கு “மேம்பாடு தேவைப்படும் பயனர் பரிந்துரைகள்” எனும் தலைப்பில் “கூடுதல் உசாத்துணை, மேற்கோள் தர இயலுமா? இணையத்தில் அணுகக் கூடிய உசாத்துணைகளாக இருந்தால் நன்று” என இரவி குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் சொத்து வரி கட்டுரைக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட தமிழ்நாட்டின் புதிய சொத்து வரிச் சீர்திருத்தத்தின் சிறப்புக் கூறுகள் கையேடு (வெளியீடு-1998) ஆதாரமாக இருந்த போதிலும் அது புறக்கணிக்கப்பட்டது ஏன்? --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 08:23, 17 நவம்பர் 2012 (UTC)

முரண்பாட்டுக்குரிய தகவல்களைக் குறிப்பிடும்போது நூன்மேற்கோளுடன் இணையத்தள மேற்கோளையுந் தருவது அனைவரும் அத்தகவலை உறுதிப்படுத்த உதவும். ஏனென்றால், பழைய நூல்களைப் பெற்றுக் கொள்வது சிக்கலான ஒன்றாகவே உள்ளது. --மதனாகரன் (பேச்சு) 09:34, 17 நவம்பர் 2012 (UTC)

அடிப்படையில் விக்கிப்பீடியாவில் இருக்கக்கூடிய ஒரு கட்டுரை தரமானதாகக் கணிக்கப்பட வேண்டுமானால் அதில் இடம்பெறும் தகவல்களுக்கு மேற்கோள்கள் அவசியம். தமிழ் விக்கியில் தற்போதைய சூழ்நிலையில் இதை இறுக்கமாகக் கடைப்பிடிப்பதில் இடர்ப்பாடுகள் உள்ளன என்பது உண்மைதான். முக்கியமாக நமது சமுதாயத்தோடு தொடர்பான மிகச் சில துறைகளில் மட்டுமே போதிய அளவுக்கு உசாத்துணைகள் கிடைக்கக்கூடியதாக உள்ளன. பல்வேறு அடிப்படை விடயங்கள் பற்றி எவரும் எழுதுவது கிடையாது. இதனால், மேற்கோள்கள் கட்டாயமாக வேண்டும் என்ற கொள்கையை இறுக்கமாகக் கடைப்பிடிக்க முயன்றால், முக்கியமாக இடம்பெற வேண்டிய பல விடயங்கள் இடம்பெற முடியாமல் போகலாம் இதனால், மேற்கோள்கள் பெறுவது கடினமாக இருக்கக்கூடிய விடயங்களில் இக் கொள்கையை இறுக்கமாகக் கடைப்பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், மேற்கோள் இல்லாமலே கட்டுரைகளை எழுதலாம் என்ற நிலைக்குப் போவது ஒரு தரமான கலைக்களஞ்சியத்தை வளர்த்தெடுக்க உதவாது. கூடியவரை எல்லாக் கட்டுரைகளுக்கும் மேற்கோள்கள் தர முயற்சி செய்யவேண்டும். மேலும், மேற்கோள் கேட்டு வார்ப்புரு இடுவது தவறான ஒன்று அல்ல. இது குறிப்பிட்ட விடயம் தொடர்பில் மேற்கோள்கள் கொடுப்பதற்குத் தூண்டுதலாக இருக்கும். குறிப்பிட்ட விடயத்தைச் சேர்த்தவருக்கு மேற்கோள் இருப்பது தெரியாமல் இருக்கலாம், வேறு யாருக்காவது தெரிந்திருக்கக்கூடும். சர்ச்சைக்கு உரிய தகவலாக இருந்தாலேயன்றி மேற்கோள் இல்லை என்பதற்காக எவரும் குறிப்பிட்ட தகவலை நீக்கமாட்டார்கள். வார்ப்புரு இடுபவர்கள், பெருமளவு மேற்கோள்கள் தேவைப்பட்டாலேயொழியப் பொத்தாம் பொதுவாக மேற்கோள் இல்லாத கட்டுரை என்ற வார்ப்புரு இடாமல், அவசியமான இடங்களில் மட்டும் "மேற்கோள் தேவை" என்ற வார்ப்புருவை இடுவது நல்லது. --- மயூரநாதன் (பேச்சு) 12:45, 17 நவம்பர் 2012 (UTC)
கடைசி வரியைத் தவிர நீங்கள் கூறியுள்ள அனத்து விடயங்களிலும் எனக்கும் முழு உடன்பாடு உண்டு. இறுக்கமாக என்று இல்லாமல் வலுக்கூட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம். பொத்தாம் பொதுவாக என்று கூறியிருப்பது, எவ்வித மேற்கோள்களோ, உசாத்துணைகளோ அல்லது குறிப்புகளோ இல்லாத கட்டுரையில் சான்று தேவை வார்ப்புரு இடுவதை குறிக்கிறதா? அவ்வாறானால் அக்கருத்தில் ஒரு விழுக்காடு கூட எனக்கு உடன்பாடில்லை. ஒரு கருத்து சர்ச்சைக்குறியதாகவதற்கான முதல் காரணம் ஆதரமற்றிருப்பதே. கலைக்களஞ்சியத்தில் உள்ள தகவலை பல்வேறு தரப்பினர் பல்வேறூ பயன்பாட்டிற்காக பயன்படுத்துகின்றனர்; தவறான அல்லது எவ்வித மேற்கோளின்றி இருந்தால் அவ்விடத்தில் நம்பகத்தன்மை குறைகிறது. ஏதாவது ஒரு வகையில் எனக்கு ஒரு தகவல் தெரிகிறது என்று வைத்துக்கொள்வோம், ஆனால் அவற்றை விக்கிப்பீடியாப் போன்ற கலைக்களஞ்சியத்தில் தெரிவிக்கும்போது ஆதாரம் அல்லது சான்று தேவை என்பதே என் கருத்து. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:35, 22 நவம்பர் 2012 (UTC)

விக்கிதரவு[தொகு]

அணமையில் விக்கிதரவு ஆரம்பிக்கப்பட்டதை அறிவீர்கள், அதன் முதற்பக்கத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன், பார்க்க wikidata:Wikidata:முதற்_பக்கம் பிழை இருந்தால் திருத்தவும் :)..காமன்ஸ் ஊடகங்களுக்கு பொதுவானது என்பது போல இது தரவுகளுக்கானது, இதில் இப்போதைக்கு விக்கியிடை இணைப்புகள் மட்டும் சேமிக்கப்படுகிறது, விரைவில் infobox தகவல்கள் போன்ற பொதுவான புள்ளிவிவர தகவல்களும் அங்கு சேமிக்கப்படும் என கருதுகிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 12:01, 21 நவம்பர் 2012 (UTC)

தளத்தின் தோற்றம் அழகாக உள்ளது. மொழி மாற்றம் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள் சண்முகம். பெயரை விக்கித்தரவு என மாற்றக் கோரலாமோ? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:08, 21 நவம்பர் 2012 (UTC)
சரியா? தவறா என்று ஒரு சிறு குழப்பம், அதனாலேயே அப்படியே விட்டு விட்டேன் :), விக்கித்தரவு என்பது சரி என உறுதிப்படுத்தினால் மாற்றிவிடலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 13:38, 21 நவம்பர் 2012 (UTC)

விக்கி தரவு என்றால் விக்கி முறையில் தொகுக்கப்படும் தரவு என்று பொருள் தரும். விக்கித்தரவு என்றால் விக்கியைப் பற்றிய தரவு என்று பொருள் தரும். விக்கிதரவு என்று சேர்த்து எழுதினால் vikkidharavu என்றே ஒலிக்க முடியும். ஆனால், wikidata என்பது ஒரே பெயர் என்பதால் தமிழில் பிரித்து எழுதலாமா என்று தெரியவில்லை.--இரவி (பேச்சு) 15:27, 21 நவம்பர் 2012 (UTC)

 • புணர்ச்சி விதிகளையும் மதித்து, விக்கியின் சொல்லாக்க முறையையும் கருத்தில் கொண்டு பார்த்தால், "விக்கித்தரவு" என்று ஒரே சொல்லாகப் போடுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.--பவுல்-Paul (பேச்சு) 15:45, 21 நவம்பர் 2012 (UTC)

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு[தொகு]

விக்கி அன்பர்களுக்கு வணக்கம். தமிழ்ச் சமூகத்தில் ஆவணப்படுத்தல் துறைக்கு கவனம் கொடுத்து ஒரு மாநாட்டை நூலக நிறுவனம் ஒழுங்குசெய்துள்ளது. 'தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் பேணிப் பாதுகாத்தலும்' என்ற தலைப்பில் வரும் ஏப்பிரல் 27-28, 2013 திகதிகளில் கொழும்பு, இலங்கையில் நடைபெறவுள்ளது. இதற்கு உலகெங்கும் இருந்தும் ஆதரவும் பங்களிப்பும் வேண்டப்படுகிறது. குறிப்பாக தமிழகப் பயனர்கள் இந்த மாநாட்டில் நேரடியாகப் பங்களிப்பது சுலபமானது. தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலில் தமிழ் விக்கியூடகங்களின் பங்களிப்பு குறித்தும் நாம் ஆய்வுக்கட்டுரைகள் சமர்பிக்க முடியும்.

 • வலைவாசல் - http://noolahamfoundation.org/wiki/index.php?title=Tamil_Documentation_Conference
 • முகநூல் - http://www.facebook.com/Tdc2013 (எம்மை விருப்புச் செய்யுங்கள், நண்பர்களோடு பகிருங்கள்.)
 • தொடர்பு - noolahamfoundation@gmail.com (பல வழிகளில் பங்களிக்க முடியும், எ.கா ஆய்வுக் கட்டுரைப் பங்களிப்பு, பரப்புரை, கட்டுரைத் தொகுப்பாக்கம், ஒருங்கிணைப்பு...)

தமிழ் ஆவண மாநாடு 2013 - ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு[தொகு]

பல்வேறுபட்ட துறைசார்ந்த விடயங்களையும் ஆவணப்படுத்தல், பேணிப்பாதுகாத்தல் மற்றும் அறிவைப்பகிர்தல் ஆகிய பணிகளில், இதுவரைகாலமும் அடையப்பட்ட இலக்குகளையும் அடையத் தவறவிடப்பட்ட இலக்குகளையும் அடையாளம் கண்டு, வெளிப்படுத்துதலை இம் மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது. இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்தும் பல கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பங்குபற்றும் இம் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க விரும்புவோரிடமிருந்து கீழ்வரும் விடயப்பரப்புகளுக்கு அமைவான ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப் படுகின்றன. இக்கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருத்தல் வேண்டும்.

ஆய்வுக்கட்டுரைகளுக்கான விடயப்பரப்புகள்[தொகு]

 1. வரலாறு, தொல்லியல் ஆவணங்களும் மரபறிவுப் பதிவுகளும்
 2. ஒலி, ஓளி, புகைப்பட ஆவணங்கள்
 3. தனிமனித ஆளுமைகள், நிறுவனங்கள்
 4. சமூகத்தை ஆவணப்படுத்தல்
 5. மொழி இலக்கியப் பதிவுகள்
 6. அறிவுப்பகிர்வும் கல்வியும்
 7. ஆவணப்படுத்தலில் தொழினுட்பப் பயன்பாடுகள்
 8. எண்ணிம நூலகங்கள் [Digital Libraries], இணையத் தளங்கள், தரவுத் தளங்கள்
 9. நூல் விபரப்பட்டியலும் நூலகவியலும்
 10. கலை பண்பாடு நினைவுகளும் ஆவணப்படுத்தலும்

ஆய்வரங்குகளில் பங்குபெற்ற விரும்பும் ஆய்வாளர்கள், தாம் சமர்ப்பிக்க விரும்பும் ஆய்வுக் கட்டுரையின் சுருக்கமான முன்வரைவை 400 சொற்களுக்கு மேற்படாதவாறு அனுப்பி வைக்க வேண்டும். இம் முன்வரைவு 15-01-2013 அன்று அல்லது அதற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவை தமிழ் ஒருங்குறி [Unicode] எழுத்துருக்களில் தட்டச்சிடப்பட்டு மின்னஞ்சலில் noolahamfoundation@gmail.com அனுப்பப்படுவது விரும்பத்தக்கது. அதேவேளை தபால் மூலமாகவும் அனுப்பலாம். அனுப்பப்படும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான முன்வரைவுகள், நியமிக்கப்பட்ட ஆய்வறிஞர்களைக் கொண்ட குழுவால் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட முன்வரைவுகள் பற்றிய விபரம் இரு வாரங்களுக்குள் அவற்றை அனுப்பியவர்களுக்கு அறிவிக்கப்படுவதோடு மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை சமர்ப்பிப்பதற்கான அழைப்பும் பதிவுசெய்தல் பற்றிய விபரங்களும் அறிவிக்கபடும்.

தெரிவு செய்யப்பட்ட முன்வரைவுகளுக்கான ஆய்வுக் கட்டுரைகள் தமது இறுதி வடிவத்துடன் 01-03-2013 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளின் இறுதிவடிவம் 5000 சொற்களுக்கு மேற்படாததாக இருத்தல் வேண்டும்.

மாநாட்டு அமர்வுகளில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் நூலக நிறுவனம் மாநாட்டின் ஆரம்ப நாள் அன்று வெளியிட உள்ள மாநாட்டுச் சிறப்பு மலரில் இடம்பெறும். கட்டுரையாளர்கள் மற்றும் பதிவு செய்த பங்குபெறுவோர் அனைவருக்கும் மாநாடு நடைபெறும் நாட்களில் மாநாட்டு சிறப்பு மலர், வெளியீடுகள், கோப்புக்கள் போன்றவை வழங்கப்படும். முழுப்பெயர், மின்னஞ்சல், வதிவிட முகவரி ஆகிய விபரங்களுடன் ஆய்வுக்கட்டுரைகளுக்கான முன்வரைவுகள், கட்டுரைகள் ஆகியவற்றை அனுப்புதலுக்கும் பிற தொடர்புகளுக்குமான முகவரி:

Noolaham Foundation
No 7, 57th Lane, (Colombo Tamil Sangam)
Colombo-06, Sri Lanka
Phone (Land): 0094 112363261

--Natkeeran (பேச்சு) 01:44, 26 நவம்பர் 2012 (UTC)

தமிழ்ச்சூழலில் கூட்டாக்கத்தின் பயனாகச் சிறந்த பயனை நல்கி வரும் திட்டங்களில் குறிப்பிடத்தக்கதான நூலகம் திட்டத்தின் இம்மாநாட்டுக்கு வாழ்த்துகள். தமிழ் விக்கிப்பீடியாவின் மைய நோக்குடன் நெருங்கிய தொடர்புடையதாதலால் நம்மில் சிலராவது கட்டுரை எழுத வேண்டும். -- சுந்தர் \பேச்சு 07:09, 26 நவம்பர் 2012 (UTC)

The impact of Wikipedia[தொகு]

http://www.youtube.com/watch?v=3Knv6D6Thi0 . --இரவி (பேச்சு) 19:29, 27 நவம்பர் 2012 (UTC)

👍 விருப்பம்--Anton (பேச்சு) 01:15, 28 நவம்பர் 2012 (UTC)
அடடா, இந்த நிகழ்படத்தில் உள்ள தமிழ் விக்கிப்பீடியரை இன்னும் யாரும் கண்டுகொள்ளவில்லையா :) ?--இரவி (பேச்சு) 05:54, 28 நவம்பர் 2012 (UTC)
2:34 பயனர்:Booradleyp என நினைக்கிறேன். (0:15, 2:19, 3:07 இடங்களிலும் ஒரு இந்திய பயனர் தென்படுகிறார். --HK Arun (பேச்சு) 07:33, 28 நவம்பர் 2012 (UTC)👍 விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 12:29, 28 நவம்பர் 2012 (UTC)
பயனர்:Booradleyp ஆக இருக்கலாம் என்றே நானும் நம்புகிறேன். ஆனால் அது அருண் கூறிய இடத்திலுள்ளவரா என்பது சந்தேகமே.--Kanags \உரையாடுக 20:22, 28 நவம்பர் 2012 (UTC)

எனக்கும் சந்தேகமே! இரண்டு இந்திய (திராவிட) முகங்களில் ஒருவராக இருக்கவேண்டும். நன்றியுரையில் Viswaprabha எனும் மலையாளப் பயனரின் பெயரும் வருவதால் குறிப்பிட்டு கூறமுடியவில்லை.பயனர்:Booradleyp பதிலளிக்க வேண்டும். அல்லது புதிர் போட்ட இரவி உடனடியாக விடையளிக்க வேண்டும். :) --HK Arun (பேச்சு) 05:26, 29 நவம்பர் 2012 (UTC)

பயனர்:Booradleyp யே தான். வாசிங்டன் விக்கிமேனியா கூடலில் கலந்துகொண்ட போது இப்பேட்டியளித்துள்ளார் என நினைக்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:01, 29 நவம்பர் 2012 (UTC)

0:15, 2:19, 3:07 இடங்களில் தோன்றுபவர் தான் பயனர்:Booradleyp என நினைகிறேன், 2:34 இல் தோன்றுபவர் மலையாளப் பயனர் போல் தெரிகிறது..:)--சங்கீர்த்தன் (பேச்சு) 12:54, 29 நவம்பர் 2012 (UTC)

உங்கள் ஊகம் சரிதான். அது நான்தான்.--Booradleyp (பேச்சு) 14:21, 29 நவம்பர் 2012 (UTC) 👍 விருப்பம்👍 விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 13:39, 30 நவம்பர் 2012 (UTC) பங்குபெற்ற அனைத்து பயனர்களின் பெயர் பட்டியல். விக்கிப்பீடியா நிதிதிரட்டல் பயனர் வேண்டுகோள் காணொளி--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:57, 29 நவம்பர் 2012 (UTC)

பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி வித்திட்ட கணித்தத் துறையை Booradleyp அவர்கள் அதே வீச்சில் வளர்த்தெடுத்து வருகிறார். பிரமிக்க வைக்கும் ஆழமான கணிதக் கட்டுரைகள். நன்றிகள். மாணவர்களுக்கு நாம் இவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். --Natkeeran (பேச்சு) 16:17, 29 நவம்பர் 2012 (UTC)
👍 விருப்பம் --கிருஷ்ணா (பேச்சு) 16:21, 29 நவம்பர் 2012 (UTC)
👍 விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:36, 30 நவம்பர் 2012 (UTC)
வாழ்த்துகள் Booradleyp.--Kanags \உரையாடுக 19:40, 29 நவம்பர் 2012 (UTC)
வாழ்த்துகள் !! உங்களது சிறப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்வுற்றிருந்தேன். இன்று எதிர்நோக்காத நிலையில் தங்களைக் கண்டதும் அது இரட்டிப்பாயிற்று ;) வெளிப்படுத்திய இரவிக்கு நன்றிகள் !!--மணியன் (பேச்சு) 04:58, 30 நவம்பர் 2012 (UTC)
வாழ்த்துகள் பூ! தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் மணம் பரப்புங்கள். :) -- சுந்தர் \பேச்சு 11:22, 30 நவம்பர் 2012 (UTC)
👍 விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:36, 30 நவம்பர் 2012 (UTC)

வாழ்த்துக்கள் Booradleyp. தமிழ் விக்கிப்பீடியர்கள் பல விதங்களிலும் கவனத்தை ஈர்த்து வருவதையிட்டு மகிழ்ச்சி. --- மயூரநாதன் (பேச்சு) 12:41, 30 நவம்பர் 2012 (UTC)

 • Booradleyp, யூட்யூப் பார்த்து, தமிழ் விக்கியர் பங்களிப்பு சிறப்பாய் அமைந்துள்ளது கண்டேன். பாராட்டுகள்!--பவுல்-Paul (பேச்சு) 15:21, 30 நவம்பர் 2012 (UTC)

பொராட்லிபீ என்பவர் பயனரா! நான் என் கட்டுரையை எழுதி முடித்தவுடன் வரலாற்று பக்கம் சென்று பார்ப்பது வழ்க்கம். புதிதாக இயற்றியவுடனேயே இதே பெயர் கொண்ட பயனர் நான் விட்ட எழ்ழுத்துப்பிழைகளை எல்லாம் திருத்துவார். அதனால் திருத்தும் வேகம் கண்டு இது ஏதோ தானியங்கி என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். இவர் ஒரு பயனர் என்பதேஅதிர்ச்சியாக உள்ளது. இருந்தாலும் வாழ்த்துக்கள்.:)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:37, 30 நவம்பர் 2012 (UTC)

மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட விக்கி நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

எனது தனிப்பட்ட நேர்காணல்:

மிக அருமையான நேர்காணல். உங்களைப் பற்றி இதுவரை நாம் எதுவுமே அறிந்திருக்கவில்லை. இப்போது அந்த வாய்ப்பைத் தந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.--Kanags \உரையாடுக 05:08, 1 திசம்பர் 2012 (UTC) 👍 விருப்பம் --குறும்பன் (பேச்சு) 20:03, 4 திசம்பர் 2012 (UTC)
 • முதற்பக்க அறிமுகத்திற்காக கேட்டபோது மறுத்த தாங்களா?.....!!!!.... 'தோன்றிற் புகழொடு தோன்றுக' என்பதனால் இருக்குமோ...!!!!!. ரவிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். தமிழ் விக்கியின் சிறந்த பயனரை அறிமுகம் செய்ததற்கு... தங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி பூ. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:53, 1 திசம்பர் 2012 (UTC)
 • மிக மகிழ்ச்சியான செய்தி!! வாழ்த்துகளும் நன்றிகளும் Booradleyp! --செல்வா (பேச்சு) 08:48, 18 திசம்பர் 2012 (UTC)
 • நிறைய செய்பவர்கள், தங்களை வெளிக்காட்டுவதில்லை! இவர் அதனை உறுதி செய்தார்!! இவர், நமக்குக் கிடைத்த புதையல்!!! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:03, 20 திசம்பர் 2012 (UTC)

அடுத்தப் புதிர்[தொகு]

விக்கிமீடியா வலைப்பதிவில் Booradleyp பற்றிய இடுகை. இந்த ஆண்டு நிதி வேண்டலிலும் அவரது வேண்டுகோளை இடப் போவதாகத் தெரிவித்து உள்ளார்கள். பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. வாழ்த்துகள். பி. கு. - இந்த இடுகையிலும் ஒரு புதிர் உள்ளது. அதை இன்னொரு நாள் அவிழ்ப்போம் :)--இரவி (பேச்சு) 16:20, 4 திசம்பர் 2012 (UTC)

இரவி அவிழ்க்கப்போகும் புதிர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இடுகையில் //...started editing Wikipedia at the urging of her son.// என்றுள்ளதே; யார் அந்த son? சோடாபாட்டில் இவரை அழைத்து வந்ததாக ஒரிடத்தில் கூறியிருந்தார்!!! --HK Arun (பேச்சு) 19:34, 4 திசம்பர் 2012 (UTC).👍 விருப்பம்--Kanags \உரையாடுக 19:54, 4 திசம்பர் 2012 (UTC)

சோடாவின் தமிழில் பல குறைகளை கண்டு சொன்னவர் இவர் அதனால் சோடா இவரை தமிழ் விக்கிக்கு இழுத்து விட்டார் (இதை முன்பொரு முறை சோடாவே சொல்லியிருக்கிறார்) சோடா தவிக்கு செய்த பல நல்ல செயல்களில் இவரை தவிக்கு கொணர்ந்ததும் ஒன்று. இப்ப புதிர் விலகறமாதிரி தெரியுதா :) --குறும்பன் (பேச்சு) 19:59, 4 திசம்பர் 2012 (UTC)

:-) --சோடாபாட்டில்உரையாடுக 00:49, 5 திசம்பர் 2012 (UTC)

சோடாவின் பிழைகள் மட்டுமல்ல என் போன்ற இன்னும் பல தமிழ் சிகாமணிகள் என்று கூறிக்கொள்(ல்)பவர்களின் எழுத்துப்பிளைகளையும் இவர் தான் கலைந்து வருகிறார். நான் ஆரம்பிக்கும் கட்டுரைகளில் என்னுடைய பங்களிப்பை விட பொராட்லீ அவர்களின் எழுத்துப்பிழை திருத்தும் பங்களிப்புகள் தான் அதிகமாக இருக்கும். :-) --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:31, 5 திசம்பர் 2012 (UTC)

தேமதுர தமிழோசை..[தொகு]

அன்னைத்தமிழுக்கு, இவ்வன்னையின் மாபெரும் பங்களிப்புகள். அவரின் தமிழ் குரல் வளமையில் அமைந்த நெடும், கடும் முயற்சியில் அமைத்த பதிவுகளை இங்கு காணலாம். அங்கு ஏறத்தாழ 5000க்கும் மேற்பட்ட தமிழ் சொற்களின் ஒலிப்புக்கோப்புகளை, விக்சனரித் திட்டங்களுக்காக உருவாக்கி உள்ளார்.-- உழவன் +உரை.. 10:10, 8 திசம்பர் 2012 (UTC)