விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு58

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாடுகள் வாரியாக, துறைகள் வாரியாக எதிர் நாடு வாரியாக, துறை வாரியாக[தொகு]

ஆங்கிலத்தில் by country, by subject என்றே கூறுகிறார்கள். அதுவே இங்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். எனவே

 • நாடு வாரியாக தமிழ் xxx
 • துறை வாரியாக xxx

இங்கு நாடு வாரியாகத் என்றுமா ??!!

நன்றி. --Natkeeran 02:35, 2 சூன் 2011 (UTC)

”கள்” வராது என்றே எனக்குப் படுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 08:42, 6 சூன் 2011 (UTC)
தமிழைப் பொறுத்தவரை வெளியிடப்படும் பக்கத்தினை ஒட்டி பன்மையில் நாடுகள் வாரியாக, துறைகள் வாரியாக என்றே வரும் என எண்ணுகிறேன். தமிழகத்தில் "கள்" வராமல் இருக்கலாம், தமிழில் வரும் என்று எண்ணுகிறேன் :)) --மணியன் 13:45, 10 சூன் 2011 (UTC)


ம்ம்...முடிவு என்ன??? --Natkeeran 04:26, 11 சூன் 2011 (UTC)

தமிழ் நூல்கள் எதிர் தமிழ் நூற்கள் எது சரி, எது கூடப் பொருத்தம் ??[தொகு]

தமிழ் நூல்கள் எதிர் தமிழ் நூற்கள் எது சரி, எது கூடப் பொருத்தம் ??--Natkeeran 22:15, 11 சூன் 2011 (UTC)

நான் அறிந்தவரை தமிழ் நூல்கள் என்பதே பொருந்தும். இரண்டுமே பெயர்சொற்கள். நூற் என்ற உரிச்சொல், நூற்குறிப்பு என பெயர்ச்சொல்லுக்கு முன்னர் தான் அமைவது வழமை.00:31, 12 சூன் 2011 (UTC) உழவன்+உரை..
நற்கீரனுக்கு அவரது பயனர் உரையாடல் பகுதியில் நான் எழுதிய கருத்து மற்றவர்களின் கருத்துக்காக இங்கும் தருகிறேன். நற்கீரன், சரியாக எழுதுவதென்றால் 1972-ஆம் அல்லது 1972ம் அல்லது 1972-ம் என வர வேண்டும். பொதுவாக விக்கிப் பகுப்புகளில் 1972 திரைப்படங்கள் மற்றும் 1972 தமிழ்த் திரைப்படங்கள் எனப் பகுப்பிட்டால் போதும். 1972ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் என நீட்டி முழக்கி எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இவ்வாறே பகுப்புகளைத் தொடங்கியிருக்கிறார்கள். இது போலவே 1972 நிகழ்வுகள், 1972 பிறப்புகள், 1972 இறப்புகள் என வரும். 1972 ஆம் ஆண்டில் இறந்தவர்கள் என எழுதத் தேவையில்லை. எனவே இவற்றை முழுவதுமாக மாற்றுவதானால் உங்கள் தானியங்கி அணுக்கம் பெற்று மாற்றுவது நல்லது. நேற்று அண்மைய மாற்றங்கள் பகுதியில் சில விசமத் தொகுப்புகள் கவனிக்கப்படாமலேயே போய் விட்டன.--Kanags \உரையாடுக 00:59, 12 சூன் 2011 (UTC)
நன்றி. உங்கள் பரிந்துரைகள் படியே நிறைவேற்றுகிறேன். --Natkeeran 01:44, 12 சூன் 2011 (UTC)
பின்வருவற்றுக்கும் உங்கள் பரிந்துரையைக் கூறவும்:
 • வகைப் படி தமிழ்த் திரைப்படங்கள்
 • வகைகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்
 • வகை வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்
* ஆண்டு வாரியாகத் எதிர் ஆண்டுகள் வாரியாகத்

--Natkeeran 01:50, 12 சூன் 2011 (UTC)

இது போன்ற உரையாடல்களை விக்கிப்பீடியா பேச்சு:நடைக் கையேடு பக்கத்தில் மேற்கொண்டால் பிற்காலத்தில் தேடி அடைய உதவும். தனித்தனிப் பேச்சுப் பக்கங்கள், கையேட்டுப் பக்கங்களில் இட வேண்டிய அனைத்தையும் ஆலமரத்தடியில் இடுவதால் இங்கு நெரிசலைக் குறைக்கலாமே :) --இரவி 09:13, 25 சூன் 2011 (UTC)

வேண்டிய பக்கங்கள் இற்றைப்படுத்தல்[தொகு]

சிறப்புப் பக்கங்களில் வேண்டிய பக்கங்களில் உள்ள தரவுகள் கடைசியாக 00:58, 23 அக்டோபர் 2009 இல் இற்றைப்படுத்தப்பட்டுள்ளன. இதனை எங்ஙனம் இற்றைப்படுத்துவது ? மேலும் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பக்கங்களும் "வேண்டிய பக்கங்களாக" காட்டப்பட்டுள்ளன. யாரேனும் விக்கிமீடீயா வல்லுனர்கள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.--மணியன் 07:36, 16 சூன் 2011 (UTC)

ஆங்கில விக்கி கூட 2009 அக்டோபர் வரையே இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இது சற்று சிரமமானதாக இருக்கலாம். எனினும் தமிழ் விக்கியை இற்றைப்படுத்தினால் எழுத்துப்பிழை அல்லது மாற்று முறைமை (தமிழக வழக்கு/இலங்கை வழக்கு போன்றவை) காரணமாக சிவப்பு இணைப்புகளாகத் தோன்றும் சொற்களைச் சரிசெய்வது போன்ற பராமரிப்பு வேலைகளுக்கு மிக மிக உதவியாக இருக்கும். --சிவகோசரன் 09:12, 16 சூன் 2011 (UTC)

This Is A Music: Reclaiming an Untouchable Drum[தொகு]

--Natkeeran 03:44, 17 சூன் 2011 (UTC)

 • பறை (இசைக்கருவி) இணைக்க வேண்டியது. தமிழக கிராமக் கோவில்களில், இந்த இசை, இன்றும் துடிப்போடு வாழ்கிறது. அதன் மேன்மையைப் பற்றி, சில துளிகள் உங்கள் தொடுப்பில் அறிந்தேன். அதற்கு ஆடாதோரும், அழுகாதோரும் இவ்வுலகில் இருக்க முடியாது. மனதை வெல்லும் இசைஞர்களுக்கு தான், மானத்தில் பாங்கு. என்று இந்நிலை மாறும்?07:05, 21 சூன் 2011 (UTC)உழவன்+உரை..

விக்கிப்பீடியாவை உலகப்பாரம்பரியக் களமாக்கல்[தொகு]

விக்கிப்பீடியாவை உலகப் பாரம்பரியக் களமாக்கும் மனுவில் கையெழுத்திட இங்கு சொடுக்குங்கள்! படிவத்தை நிரப்பியதோடன்றி உங்கள் அஞ்சல் பெட்டிக்கு வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பை சொடுக்கி கையொப்பமிட்டதை உறுதி செய்யுங்கள். நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 18:41, 20 சூன் 2011 (UTC)

 1. உங்களின் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி. ஓரிருநிமிடங்கள் தான் ஆகியது. பலரையும் செய்யத்தூண்டுகிறேன்.06:47, 21 சூன் 2011 (UTC)உழவன்+உரை..

கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம்[தொகு]

Google Translate welcomes you to the Indic web

கூகிளின் இந்திய மொழிகள் மொழிபெயர்ப்புத் திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கு காரணம் புலனாகிறது. ஏன் திருத்த மறுத்து புதிய கட்டுரைகள் மட்டும் எழுதுவோம் என்று அடம் பிடித்ததற்கும் காரணம் புலனாகிறது. அவர்கள் வேண்டியது கிடைத்து விட்டது. முடித்து விட்டுப் போய்விட்டார்கள். திட்டத்தின் எதிர்காலம் பற்றி ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பபட்ட மின்னஞ்சல்களுக்கும் ஒரு பதிலும் இல்லை. இவர்களை நம்பி திட்டத்தைத் தொடர்ந்திருந்தால், மேலும் பல ஆயிரம் கட்டுரைகள் அரைகுறை பாழ்நிலையில் இருந்திருக்கும்.

இனி நாம் தான் உள்ள கட்டுரைகளை சீராக்கத் தொடங்க வேண்டும். மிக மோசமான மொழிபெயர்ப்புகள் உள்ள கட்டுரைகளைக் குறுங்கட்டுரைகளாக்கவதிலிருந்து தொடங்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 03:47, 22 சூன் 2011 (UTC)

அம்மொழிபெயர்ப்பு குப்பைகள் அதிகம் சேராவண்ணம் தடுத்த, பலரது உழைப்பும்(குறிப்பாக இரவி, சுந்தர்) மிகவும் பாராட்டுக்குரியது. இனி இங்கிருப்பதை செம்மையாக்குவோம்.04:20, 22 சூன் 2011 (UTC)உழவன்+உரை..
மருத்துவத் துறை சார் கட்டுரைகள் சிலவற்றைத் திருத்தலாம் என்று படித்துப் பார்த்தால் தலையே சுற்றுகிறது. இருந்தாலும் சில நல்ல கட்டுரைகள் இருக்கின்றன. பெரிய கட்டுரைகளை ஐந்து ஆறாய்ப் பிரித்து குறுங்கட்டுரைகளாக்கலாம் என இருக்கிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 04:34, 22 சூன் 2011 (UTC)
அதே நிலைமைதான் எனக்கும், கார்த்திகேயன். சில கட்டுரைகளோ மிகவும் பிழையானதாக உள்ளது, சிலவற்றைத் திருத்த முற்பட்டால் சினம்தான் உண்டாகின்றது, திருத்துவதை விட அதே கட்டுரையை முதலில் இருந்து எழுதலாமோ எனத் தோன்றுகிறது. உயிர்ச்சத்து ஏ எனும் கட்டுரை பல மாதங்களாகத் திருத்திக்கொண்டு உள்ளேன்!! இதைவிடப் பலமடங்கு "குப்பையான" மருத்துவக் கட்டுரைகள் உள்ளன. கூகிள் மொழிபெயர்ப்பு மருத்துவக் கட்டுரைகள் என்று ஒரு வார்ப்புரு உருவாக்கினால் அனைத்து கூகிள் மருத்துவக்கட்டுரைகளையும் ஒருங்கிணைக்கலாம் எனக் கருதுகிறேன்.--செந்தி//உரையாடுக// 13:22, 22 சூன் 2011 (UTC)


இன்னொரு கூகுள் தலைவலி[தொகு]

முந்தைய பகுதியில் குறிப்பிட்டது போல கூகுள் மொழி பெயர்ப்புக் கருவியின் ஆல்ஃபா மொழிபெயர்ப்பு சேவையின் ஆல்ஃபா பதிப்பு வெளியாகியுள்ளதால், அதைப்பயன்படுத்தி, தரக்குறைவான (குப்பை என்றே சொல்லலாம்) கட்டுரைகள் வரத்தொடங்கியிருக்கின்றன. அவற்றைக் கண்டவுடன் நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 12:35, 22 சூன் 2011 (UTC)

 • My name is Natkeeran. - என் பெயர் Natkeeran உள்ளது.
 • I am from Toronto. நான் டொராண்டோ இருக்கிறேன்.
 • The weather is great today. காலநிலை இன்று நன்றாக உள்ளது.
 • My mother tounge is Tamil. என் தாய்மொழி தமிழ் உள்ளது.

--Natkeeran 13:06, 22 சூன் 2011 (UTC)

நிர்வாகிகள் கண்டவுடன் நீக்கலாம். மேலும், இந்தக் கட்டுரைகளைக் கண்டறிய வார்ப்புரு:கூகுள் ஆல்ஃபா எனும் வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடுப்பிணைப்பியிலும் இணைத்துள்ளேன். பயனர்கள், இதனைப் பயன்படுத்தி கட்டுரையை நீக்கக் கோரலாம். மிகச்சிறிய கட்டுரைகளை நிர்வாகிகளும் பயனர்களும் உரைதிருத்தி வடிவாக்க முயன்றாலும் சரி, அது அவரவர் விருப்பம். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:08, 22 சூன் 2011 (UTC)
கொஞ்சம் சிரிக்க -- என்ன_கொடுமை_சரவணன்_இது? கட்டுரையின் மொழிபெயர்ப்பு இதோ #EKSI #meta ஸ்ரீகாந்த் 18:58, 22 சூன் 2011 (UTC)

பல வேடிக்கையாக இருந்தாலும், பிழையான சொற்களைச் சொடுக்கினால், எளிதாகத் திருத்த வசதி உள்ளது எடுத்துக்காட்டாக நற்கீரன் தந்த "I am from Toronto" என்பதற்கு "நான் டோரன்டோவிலிருந்து வருகிறேன்" என்றும் தரச்செய்யலாம். நான் "I went to Kovai" என்று இட்டேன் அது "நான் கோவை செய்ய சென்றேன்" என்கிறது!! ஆனால் "செய்ய" என்னும் சொல்லைச் சொடுக்கினால், தொங்குபட்டியலில் "க்கு" என்பதும் வருகின்றது, அதனைத் தேர்ந்தால் "நான் கோவை க்கு சென்றேன்" என்று மாற்றிக்கொள்கின்றது ஆனால் அதற்குத் தேவைப்படும் உழைப்பு பயனுடையதா என்பது முகனையான வேறு ஒரு கேள்வி. ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து ஒருசிலவற்றை ஒற்றி ஒட்டி மொழிபெயர்த்துப் பார்த்தேன். சரியாக இல்லைதான், எனினும் ஒரு கட்டுரையை நேரடியாக மொழிபெயர்க்க எவ்வளவு நேரம் ஆகும், இந்த மொழிப்பெயர்ப்பியைப் பயன்படுத்தி அதைத் திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று கணித்தால் பயனுடையதாக இருக்கும். இது வெப் 2.0 போன்று தரவுகள் உள்ளீடு செய்ய வசதி உள்ள ஒன்று. எனவே போகப்போக முன்னேறுமா என்றும் பார்க்க வேண்டும். த.வி-யைப் பொருத்த அளவிலே, இப்படியான மொழிபெயர்ப்புகளை, மிகவும் கவனமாகக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். உடனுக்குடன் நீக்கவும் தேவைப்படலாம். --செல்வா 22:14, 23 சூன் 2011 (UTC)

ஆங்கில விக்கிப்பீடியாவில் bluebird என்னும் கட்டுரையின் ஒரு பகுதி இதில் குற்றம் குறைகள் பல இருந்தாலும், நொடிப்பொழுதில் இதனை ஆக்கித் தருகின்றது. இது தரமுடைய ஒரு கலைக்களஞ்சிய கட்டுரையாக கட்டாயம் இருக்காது என்பது வியப்பில்லை, ஓரளவுக்கு என்ன ஏது என்று அறிவிக்கும் ஒரு "மொழிபெயர்ப்பாய்" உள்ளது. எடுத்துக்காட்டாக நீலப்பறவை பற்றிய உருசிய மொழிக் கட்டுரையின் ஒரு பத்தி என்ன சொல்லுகின்றது என்று பார்கக்லாம். இது தெளிவாக இல்லாமல் இருந்தாலும், ஓரளவுக்கு எதைப்பற்றி என்று சிறிது அறிய உதவுகின்றது. மேலும், "தலைவலி", "குப்பை" போன்ற மதிப்பீடுகள் செய்வதும் சரியான முறையாகாது (என் கணிப்பில்). "நிறைவுதரவில்லை", இன்னும் "மிகவும் வளர்ச்சியடைய வேண்டிய நிலை" என்பது போன்று கூறுவது நல்லதாக இருக்கும் என நினைக்கின்றேன். பலர் உழைப்பில் உருவான ஒரு மொழிபெயர்ப்பி இது. அதற்காக உழைத்தவர்களைப் பழிப்பது போன்ற மதிப்பீடுகள் செய்வது சரியல்ல என்பது என் தனிக்கருத்து (நம்முடைய வலைப்பதிவில் என்னவேண்டுமானாலும் சொலல்லாம்). (தன்னிலை விளக்கம்: நான் கூகுள் பங்குதாரன் அல்லன் :) )--செல்வா 22:35, 23 சூன் 2011 (UTC)
”மேலும், "தலைவலி", "குப்பை" போன்ற மதிப்பீடுகள் செய்வதும் சரியான முறையாகாது”. என்னைப் பொறுத்தவரை இம்மதிப்பீடுகள் மிகப் பொறுத்தமானவையே. ஆல்ஃபா பதிப்பு மென்பொருள் கொண்டு செய்யப்படும் ஆக்கங்கள் எந்தவொரு திட்டத்திலும் பயன்படுத்த தகுதியற்றவை. சோதனைக் களத்தில் வேண்டுமென்றால் குப்பையென்று சொல்ல முடியாது. ஆனால் விக்கிப்பீடியாவின் பொதுவெளி தளத்தில் அவற்றை குப்பையென்றே கருத வேண்டும், குப்பைகளைப் போலவே நடத்த வேண்டும். “தலைவலி” என்பதற்கு கடந்த சில நாட்களின் நீக்கல் பதிவினைப் பாருங்கள் சுமார் 50 கட்டுரைகள் இரு நாட்களில் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன (அவற்றுள் சில முடிந்தவர்களால் மீட்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளன). உழைப்பவர்களைப் பழிப்பதன்று நோக்கம். அவர்கள் தான் ஆல்ஃபா பதிப்பென்று தெளிவாகச் சொல்லிவிட்டார்களே. இம்மதிப்பீடுகள் முழுக்க முழுக்க தமிழ் விக்கியின் சூழலில் இருந்தே வைக்கப்படுகின்றன. தமிழ் விக்கிப்பீடியா இயங்கு சூழலில் - இக்கட்டுரைகளின் தரம் குப்பையே, இவற்றால் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தலைவலியே. இதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. நான் இங்கு வைக்கும் விமர்சனங்கள் தனிப்பட்டவை அல்ல, விக்கிப்பீடியாவுக்கு பொருத்தமானவற்றையே வைக்கிறேன். (தன்னிலை விளக்கம்: நான் கூகுள் எதிர்ப்பாளனோ வெறுப்பாளனோ அல்ல)
 • கூகுள் வழி மொழிபெயர்ப்பு முழுமையாக இல்லாமல் பல பிழைகளுடன் இருந்தாலும் செல்வா கூறுவது போல் குறிப்பிட்ட மொழிபெயர்ப்பின் வழியாக பிற மொழி ஆக்கங்கள் குறித்து ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் இது போன்று மொழிபெயர்ப்பி உதவியுடன் இடம் பெறும் கட்டுரைகளை உடனுக்குடன் நீக்கம் செய்யாமல் “இது மொழிபெயர்ப்பி மூலம் உருவாக்கப்பட்ட கட்டுரை. இதில் கருத்து, நடை, எழுத்துப் பிழைகள் போன்றவை இருக்கலாம். இந்தக் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவிற்கேற்ப மாற்றம் செய்வதற்காக குறைந்தது 10 நாட்கள் இடம் பெற்றிருக்கும். இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தால் அதன் பின்னர் இக்கட்டுரை நீக்கப்படும்” என்கிற அறிவிப்பைக் கொண்ட வார்ப்புருவை வெளியிடலாம். இது நல்ல பயனுடைய சில கட்டுரை இடம் பெறுவதற்கு உதவியாக இருக்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:27, 24 சூன் 2011 (UTC)
பொறுத்து நீக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. மொழிபெயர்ப்பியோ கையினால் உருவானதோ, ஒரு தரமற்ற குப்பைக் கட்டுரையை எவ்வாறு கையாளுவாமோ அதே போலத் தான் கையாள வேண்டும். பத்து நாட்கள் பொறுப்போமென்பது மேலும் மேலும் இது போன்ற கட்டுரைகள் குவிவதையே ஊக்குவிக்கின்றன. கடந்த சில நாட்கள் கிடைத்த அனுபவங்களை கொண்டு பார்க்கும் போது, இக்கருவியினால் உருவாக்கி அப்படியெடியே படியெடுத்துப் போட்டுப் பழகியவர்கள் மீண்டும் கட்டுரையை உள் சென்று திருத்தும் வேலைகளில் ஈடுபதுவதில்லை. மீண்டும் மீண்டும் புதிய கட்டுரைகளை உருவாக்கும் வேலைகளில் தான் ஈடுபடுகின்றனர். முற்காலச் சோழர்கள் கட்டுரையில் நீக்கல் பதிவைப் பாருங்கள். கட்டுரையாளரின் பேச்சு பக்கத்தையும் பாருங்கள். இப்பழக்கத்தை ஊக்குவித்தால் மேலும் நூற்றுக்கணக்கில் தரமற்ற கட்டுரைகள் குவிவதைத் தவிர வேறு எதுவும் விளையாது. நிருவாகிகள் மற்றும் உரை திருத்துனர்களின் பணிச்சுமை அதிகரிப்பதுடன் புதிய கட்டுரைகளின் தரமும் குறைகிறது. கருவி ஆல்ஃபா பதிப்பு (பீட்டாவுக்கும் கீழ், சோதனைக் கூடத் தரம்). ஒரு வேளை கருவி முன்னேறி பொது வெளியீடு அளவுக்கு தரமாகி கூகுள் அதனை வெளியிட்டு அதிலிருந்து கட்டுரைகள் உருவானால், திருத்தலுக்கு நேரமளிப்பது பற்றி யோசிக்கலாம். நீக்கபட்ட கட்டுரைக்கு ஒரு எ.கா கீழே தரப்பட்டுள்ளது. இது போன்றவைக்கு பத்து நாட்கள் இடமளிப்பதென்பது தேவையற்றது.
கூகிள் தமிழ் மொழிபெயர்ப்பி, பிற மொழிகளில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பதற்கான தொழில் நுட்ப முயற்சிகளில் ஏற்பட்ட ஒருபடி முன்னேற்றம் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், தற்போதைய நிலையில், கூகிள் கருவியின் மொழிபெயர்ப்பு, முறையான மொழி பெயர்ப்பொன்றைத் தானாகச் செய்வதற்கு ஏற்றதாக இல்லை. இதனால், இக் கருவி மூலம் மொழிபெயர்ப்புச் செய்து தமிழ் விக்கியில் கட்டுரைகளை இட விரும்புபவர்கள் உடனடியாகவே திருத்தங்களைச் செய்து விடவேண்டும். பின்னர் செய்யலாம் என்று விட்டுவிட்டால் அது நடக்காது என்றே கூறிவிடலாம். இக் கருவியில் சொற்களைச் சொடுக்கி மாற்றம் செய்ய வழியிருப்பது உண்மையானாலும், பல சமயங்களில் திருத்தம் செய்வது நேரடியாக மொழிபெயர்ப்பதிலும் கடினமானதாகக் காணப்படுகிறது. அத்துடன் தவியில் இட்ட பின்னர் மாற்றம் செய்வதற்குக் கருவியின் உதவி கிடைக்காது. கருவியால் மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரைகளில் பல இடங்களில் பொருள் விளக்கம் அறவே இல்லாமல் இருக்கிறது. எனவே திருத்தம் செய்ய விரும்புபவர்கள் பிற மொழியில் உள்ள மூலக் கட்டுரையையும் பார்த்துப் புரிந்துகொண்டு ஒவ்வொரு வசனமாகச் சரி செய்ய வேண்டும். இது வேலையைப் பல மடங்கு கூட்டுகிறது. இதனால் இத் திருத்த வேலைகளைப் பிற பயனர்கள் செய்ய விரும்ப மாட்டார்கள். 10 நாட்கள் நேரம் கொடுத்தாலும், அவ்வாறான கட்டுரைகளைத் திருத்துகிறார்களா என்று கவனிப்பது எல்லாம் பிற பயனர்களுடைய நேரத்தைத் தேவையில்லாமல் செலவு செய்வதற்கே வழி வகுக்கும். எனவே அத்தகைய கட்டுரைகளை உடனடியாக நீக்குவதே நல்லது. --மயூரநாதன் 06:41, 24 சூன் 2011 (UTC)

திருத்தம் செய்யப்படாமல், கூகுள் தமிழாக்கத்தை அப்படியே இட்டுள்ள கட்டுரைகளை உடனுக்குடன் நீக்க வேண்டும். ஒரு பயனர் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவாரெனில் இரண்டு கட்ட பேச்சுப்பக்க எச்சரிக்கைக்குப் பின் பயனர் கணக்கைத் தற்காலிகமாக முடக்கலாம்--இரவி 07:31, 24 சூன் 2011 (UTC)

தனிநபர் எழுதியதோ, மொழிபெயர்ப்பி வழியாக வந்ததோ, எப்படியாகினும் நமது குறைந்த அளவு தரத்தையும் நடையையும் கொண்டிராவிட்டால் நீக்கிவிடலாம் என்ற மயூரநாதனின் கருத்துடன் ஒப்புகிறேன். நாளடைவில் தானியங்கி மொழிபெயர்ப்பியின் தரம் மேம்பட்டால் ஏற்கலாம். இப்போதைய நிலையில் தானியங்கி மொழிபெயர்ப்பில் உள்ள வழுக்களைத் திருத்துவது பல மடங்கு வேலையைக் கூட்டுகிறது. அத்துடன் தவறான முற்காட்டாகவும் அமைந்து விடும். -- சுந்தர் \பேச்சு 09:17, 24 சூன் 2011 (UTC)
தலைவலி, குப்பை போன்ற சொற்பயன்பாடுகளை நாம் இயன்றவரை தவிர்க்க வேண்டுமென்றே கருதுகிறேன், சோடாபாட்டில். அதே தகவலை நீங்களே இரண்டாவது பத்தியில் வேறு சொற்களால் விளக்க முடிந்துள்ளதே. இது கூகுள் என்ற நிறுவனமானாலும் தனிநபர் பங்களிப்பானாலும் பொருந்தும். விரைவு நீக்கல் காரணங்களில் கூட அந்தக் காரணத்தை இயன்றவரை தவிர்க்க வேண்டும். அதைக் காட்டிலும் தரமற்ற நடை, இலக்கணப்பிழை மலிவு, போன்று சொன்னால் உணர்வடிப்படையில் இல்லாமல் கருத்தடிப்படையிலும் (objective) குறிப்பாகவும் (specific) இருக்கும். நல்லிணக்கமும் மேம்படும். (உங்கள் கருத்து எந்தக் காழ்ப்புணர்வும் இல்லாமல் ஏற்பட்டது என்பதை அறிவேன்.) -- சுந்தர் \பேச்சு 09:25, 24 சூன் 2011 (UTC)
மன்னிக்கவும் சுந்தர். குப்பை + தலைவலி என்பன கூகுளின் முந்தையத் திட்டத்தை விவரிக்கையின் தொடர்ச்சியாக இதில் புகுந்து விட்டன. கூகுளை பொறுத்தவரை ஆங்கில விக்கியில் சொல்லப்படும் ”நல்லெண்ண நம்பிக்கை ஒரு தற்கொலை உடன்பாடு அல்ல” (AGF is not a suicide pact) என்பதையே என் நிலைப்பாடாக ஆகியுள்ளது. நீங்களும் செல்வாவும் சொல்வதை கருத்தில் கொண்டு (கொள்கையளவில் உடன்பாடு இல்லையெனினும்) இத்துடன் இப்பேச்சினை முடித்துக் கொள்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 15:53, 24 சூன் 2011 (UTC)
உங்கள் எரிச்சலுக்கான காரணம் புரிகிறது. இங்கு AGF அடிப்படையில் அல்ல objectivity பொருட்டே அவ்வாறு வலியுறுத்தினேன். உங்களுக்கு முழு உடன்பாடு இல்லாத போதிலும் ஏற்றுக் கொண்டமைக்கு மிக்க நன்றி. -- சுந்தர் \பேச்சு 18:01, 24 சூன் 2011 (UTC)
கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்ட கட்டுரைகளைத் திருத்துவது என்பது திருத்துபவருக்கு மனதளவில் களைப்பையும் சலிப்பையும் உருவாக்கக் கூடியதே. இத்தகைய கட்டுரைகள் தக்க வைக்கப்படுமாயின் அது நமது தரத்தைக் குறைத்து விடும். ஆகவே இக்கருவியை உருவாக்கி கட்டுரைகளை உருவாக்குவோர் இவற்றை நேரடியாகப் பொதுவெளியில் இடாமல் பயனர் வெளியில் வைத்துக் கொண்டால் நல்லது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 14:01, 24 சூன் 2011 (UTC)

தமிழ் விக்கியில் செயற்படு பயனர்களின் (Active Users) வீழ்ச்சி (33% கீழே)[தொகு]

தமிழ் விக்கியில் செயற்படு பயனர்களின் (Active Users) எண்னிக்கை கடந்த ஆண்டு காலம் 1/3 விழுக்காடு அல்லது 100 (293 -> 191) பயனர்களால் வீழ்ச்சி கண்டது. இது மிகவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டிய விடயம் ஆகும். எமது வளர்ச்சி தொடர்வதால் இதை நாம் கவனிக்கமால் விட்டு விட்டோம் என்று நினைக்கிறேன். இதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் கண்டைய வேண்டும். --Natkeeran 13:46, 23 சூன் 2011 (UTC)

நவம்பர் 2010 முதல் செயற்படு பயனர் (கடந்த முப்பது நாட்களில் குறைந்தபட்ச 1 தொகுப்பினைச் செய்தவர்) எண்ணிக்கை 200 க்கு அருகே உள்ளதாகவே நான் கண்டு வந்துள்ளேன். சில சமயங்களில் 220 வரை போகும் சில சமயங்களில் 175 வரை குறைவதுண்டு (base effect ஐப் பொறுத்து). இந்த 293 என்ற எண்ணிக்கை எந்த மாதத்துக்கு உரியது? ஜூன் 2010 ஆக இருப்பின் சென்ற ஆண்டு செம்மொழி மாநாட்டுக்காக ஏற்பட்ட தற்காலிக அதிகரிப்பாக இருக்கலாம். சென்ற ஜூன் ஜூலை மாதங்களில் மாநாட்டினால் கிடைத்த பரப்புரையால் எண்ணிக்கைகள் அதிகமாயின்; ஆகஸ்ட் 2010 முதல் இந்த மீண்டும் குறைந்து போயின.
http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm. தற்போது மாதத்துக்கு குறைந்தபட்ச x எண்ணிக்கை தொகுப்புகள் செய்யும் பயனர்கள் எண்ணிக்கையில் பெரிய வேறுபாடுகள் எனக்கு புலப்படவில்லையே. < 25 தொகுப்புகள் செய்பவர் எண்ணிக்கை இரு வருட காலமாக சமநிலையில் உள்ளது. அதற்கு மேல் செய்பவர்கள் எண்ணிக்கை கூடியுள்ளது. <100, <250 தொகுப்புகள் அளித்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது. எனவே தொகுப்புகளின் எண்ணிக்கையும் இரு மடங்காகியுள்ளது. தரவுகளைப் பார்க்கும் போது driveby தொகுப்பாளர்களின் எண்ணிக்கையில் மாற்றமின்றியும் தொடர் தொகுப்பாளர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது போலவும் எனக்குத் தோன்றுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 14:18, 23 சூன் 2011 (UTC)
ஓராண்டுக்கு முன் 293 என்ற கணக்கு சரியல்ல என்று தோன்றுகிறது. செயற்படும் பயனர்களின் மொத்த எண்ணிக்கை எப்போதும் 240 க்கு மேல் போனதில்லை. சூன் 2010 கால கட்டத்தில்தான் இந்த எண்ணிக்கை இருந்தது. சோடாபாட்டில் குறிப்பிட்டிருப்பதுபோல அப்போது ஏற்பட்டது ஒரு தற்காலிகமான ஒரு உயர்ச்சி என்றுதான் கொள்ளவேண்டும். ஆனாலும், நற்கீரன் கருத்தையும் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்றே நான் கருதுகிறேன். புள்ளிவிபரங்களைப் பார்த்தால், புதிய பயனர்களின் எண்ணிக்கை கடந்த 2009 நவம்பருக்குப் பின்னர் சென்ற மாதத்திலேயே மிகவும் குறைவாக உள்ளது. அத்துடன் 2009 நவம்பருக்குப் பின்னர், கடந்த ஐந்து மாதங்களில் இரண்டு தடவை புதிய பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை 10க்கும் கீழே சென்றுள்ளது. 100க்கு மேல் தொகுப்புக்கள் செய்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து உள்ளது நல்ல வளர்ச்சிதான். இது பெரும்பாலும் கடந்த ஆறுமாதங்களுக்கு முற்பட்ட ஒன்று, ஒன்றரை ஆண்டுக்காலத்தில் பங்களிக்கத் தொடங்கியவர்களின் தொடர் பங்களிப்பின் மூலமே இது நிகழ்ந்தது. அண்மைக் காலத்தில் பயிற்சிப் பட்டறைகள் போன்ற பரப்புரை நடவடிக்கைகள் மிகவும் குறைந்து விட்டதே அண்மைக்காலத் தேக்க நிலைக்குக் காரணம் எனலாம். -- மயூரநாதன் 19:14, 23 சூன் 2011 (UTC)

ஆமாம், எனது தரவுகள் பிழையே. நீங்கள் இருவரும் சுட்டியபடி நாம் 240 (222 - ஆகத்து 2010) வரை சென்று தற்போது 200 கீழே இறங்கி உள்ளோம். மலையாள விக்கியில் 300 வரையான செயற்படு பயனர்கள் இருக்கிறார்கள். --Natkeeran 19:30, 23 சூன் 2011 (UTC)

ஆம். இதை நானும் சுட்டிக்காட்ட எண்ணியிருந்தேன் மறந்து விட்டேன். மலையாள விக்கியில் நீண்டகாலமாகவே செயற்படும் பயனர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்து வருகிறது. தமிழில் புதிய பயனர்கள் பங்களிப்பதை ஊக்குவிக்க வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். -- மயூரநாதன் 06:12, 24 சூன் 2011 (UTC)

கடந்த ஆண்டு கட்டுரைப் போட்டி நடந்ததும், கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் பெருமளவில் ஒருங்கிணைக்கப்பட்டதும் பங்களிப்பாளர்கள், தொகுப்புகளின் எண்ணிக்கையைக் கூட்டியது. கூகுள் திட்டத்தில் ஒரே ஆட்கள் வெவ்வேறு பயனர் கணக்கில் பங்களித்தது, சில கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் சொந்த ஆர்வத்தில் பங்களித்தது ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். எனவே, அது ஒரு தற்காலிக பங்களிப்பு உயர்வே.

எனினும், நாம் பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கான வலுவான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், இத்தனை கட்டுரைகள் என்று இலக்கு வைப்பதை விட இத்தனை பங்களிப்பாளர்கள் எண்ணிக்கையை அடையவேண்டும் என்று இலக்கு வைத்துச் செயற்படுவது பல்வேறு வகையான பங்களிப்பாளர்களின் மூலம் மாறுபட்ட கட்டுரைப் புலங்களில் செறிவான கட்டுரைகளைப் பெற உதவும். கட்டுரை எண்ணிக்கையைப் போலன்றி, கூடுதல் பங்களிப்பாளர்களின் வருகை தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியையும் தொடர்ச்சியையும் உறுதிப்படுத்தும்.

தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்பாளர் எண்ணிக்கை, பங்களிப்பு விகிதம் நீளமான வால் தன்மையைப் பின்பற்றுகிறது என நினைக்கிறேன். மிகவும் முனைப்பான 20+ பங்களிப்பாளர்களே பெருமளவு பங்களிப்புகளை நல்கியுள்ளனர். ஆனால், இவர்கள் எண்ணிக்கையை நாம் திட்டமிட்டு உயர்த்த முடியுமா தெரியவில்லை. பொதுவான பங்களிப்பாளர் எண்ணிக்கையை உயர்த்தி அதில் சிலர் தாமாக மிக முனைப்பான பங்களிப்பாளர்களாக மாறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

பயிற்சிப்பட்டறைகள் நன்றே. ஆனால், அவை உடனடியாக பெருமளவிலான பங்களிப்பாளர்களைக் கொண்டு வருவதில்லை. எனவே, பட்டறைகளைத் தாண்டியும் வேறு வழிகளை நாம் சிந்திக்க வேண்டும்.

ஏற்கனவே தமிழக அரசுடன் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது. ஆட்சி மாறி, சில அதிகாரிகளும் மாறி உள்ள நிலையில் இந்த அறிமுகத்தைப் புதுப்பித்துக் கொண்டு தமிழ் விக்கிக்குத் தேவையான வளங்களை எப்படிப் பெற்றுக் கொள்வது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

மலையாள விக்கிப்பீடியர் வெளியிட்டுள்ள மலையாள விக்கிப்பீடியா, விக்கி மூலம் இறுவட்டுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் நல்ல விளம்பரமும் இணையத்துக்கும் வெளியே உள்ள வாசகர்களை அணுகும் வழியும் கிடைத்துள்ளது. வருமாண்டுகளில் தமிழகத்தில் இலட்சக்கணக்கான மடிக்கணினிகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்தக் கட்டத்தில் நான் முனைப்பாகச் செயல்பட்டுத் தமிழ் விக்கித் திட்டங்களுக்கான இறுவட்டுகள், செயலிகளை உருவாக்கினால் புதிய வாசகப் பரப்பை அடையலாம். எனவே, இம்முயற்சிக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகளை முடுக்கி விடலாம் என நினைக்கிறேன். இது தொடர்பாக ஏற்கனவே தொடங்கி உள்ள இறுவட்டுத் திட்டத்தில் நானும் இணைந்து செயல்பட எண்ணியுள்ளேன்.

இவ்வாறான பல்வாறான தேவைகள், செயல்பாடுகளை முறையாக திட்டமிட்டு தமிழ் விக்கிமீடியா திட்டங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதில் கூடிய அளவு தமிழ் விக்கியர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டி இருக்கும். இது தொடர்பாக தொடர் IRC சந்திப்புகளை நடத்தலாமா என்று எண்ணுகிறேன். ஒவ்வொரு மாதமும் மூன்றாம் (அல்லது ஏதாவது ஒரு) சனி இந்தச் சந்திப்புகளை நடத்தலாம். உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். நன்றி. --இரவி 09:06, 25 சூன் 2011 (UTC)

இரவியின் கருத்துக்கள் செயல்படுத்தப்பட வேண்டியவை..இருப்பினும் தமிழக அரசினை நாடுவது இன்றைய அரசியல் சூழலில் எந்தளவு தமிழ் விக்கிப்பீடியாவின் நடுநிலையில் தாக்கமேற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்றளவில் மட்டுமே தொடர்பு கொள்வதே நல்லது. --மணியன் 06:18, 26 சூன் 2011 (UTC)
இரவி, பொதுவாகவே இணைய பங்களிப்புகள் நீள்வால் பண்புடையவை தாம். நிற்க.
மடிக்கணினித் திட்டத்தின் செயல்பாட்டின்போது கூடவே தமிழ்99, தமிழ் மென்பொருட்கள் போன்றவற்றைத் தர வகை செய்ய வேண்டுமென நமது பழைய பயனர் மரு.புருனோவின் முனைப்பில் இன்னும் சிலரும் முயன்று வருகிறோம். அத்துடன் தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி உள்ளடக்கங்களையும் சேர்த்து அக்கணிகளில் நிறுவ வழி செய்தால் நமது தளத்துக்கான வரத்தும் பங்களிப்பும் நன்கு உயரும். மணியனின் கவலை புரிகிறது. இயன்றவரை அரசு அதிகாரிகள் மட்டத்தில் பணி செய்தால் நாம் அரசியலில் இருந்து விலகி இருக்கலாம். -- சுந்தர் \பேச்சு 07:06, 26 சூன் 2011 (UTC)
இரவி, நீங்களும் இறுவட்டுத் திட்டத்தில் இணைந்து பணியாற்ற விரும்புவதால் விறுவிறுப்பு கூடும். நீங்கள் சொன்னது போல ஒரு சனிக்கிழமை திட்டத்தில் ஈடுபாடுள்ள அனைவரும் பேசுவோம். -- சுந்தர் \பேச்சு 08:05, 26 சூன் 2011 (UTC)

────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────தற்போதைய தகவல் தொழில்நுட்ப செயலாளரிடம் தவிக்கி சார்பில் முறையாக பேசினால் உதவுவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்போதைய எல்காட் செயலாளராக இருந்தபோது விக்கி போட்டிகள் நிறைய நடத்துங்கள் என்று உற்சாகமூட்டியதை இங்கு நினைவு கூறுகிறேன். -- மாகிர் 09:22, 1 சூலை 2011 (UTC)