விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு72
விக்கிப்பீடியா வெளியுறவு தொடர்பாளர்கள் - 2012
[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவின் மீது அக்கறையுடனும் பொறுப்புடனும் இயங்கி வருபவர்களில் சிலரை கடந்த 2010 ஆம் ஆண்டில் விக்கிப்பீடியா வெளியுறவு தொடர்பாளர்கள் எனும் பெயரில் தேர்வு செய்யப்பட்டனர்.
- பார்க்கவும்: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள்.
அடுத்த ஆண்டுக்கு 2010 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களே 2011 ஆம் ஆண்டிலும் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
- பார்க்கவும்: விக்கிப்பீடியா வெளியுறவு தொடர்பாளர்கள்.
இதற்கென தனியாக
என இரு பக்கங்களும் தனியாகத் தொடங்கப்பட்டன.
தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது பல புதிய பயனர்கள் இணைந்துள்ளனர். அவர்களின் தொடர் பங்களிப்புகளும் சிறப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் 2012 ஆம் ஆண்டுக்கான “விக்கிப்பீடியா வெளியுறவு தொடர்பாளர்கள்” தேர்வு செய்யப்படுவதும் அவசியமாகிறது. எனவே இத்தேர்வுக்கான கருத்துக்களையும், அதற்கான வாக்கெடுப்பு முறைகள் குறித்த விவரங்களையும் விளக்கும் முறையிலான அறிவிப்பை வெளியிட வேண்டுகிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:21, 22 மார்ச் 2012 (UTC)
- சுப்பிரமணி, கட்டுரைப் போட்டி நடந்த சூழலில் முறையாக இத்தகைய பொறுப்புகளை அறிவிப்பதற்கான தேவை இருந்தது. இப்போது அத்தகைய சூழல் ஏதும் இல்லை என்பதால் இப்பொறுப்புகளை வலியுறுத்த விரும்பவில்லை. எனினும், ஊடகங்கள் / அரசுத் துறைகளை அணுகும் போது இப்படி ஒரு பொறுப்பு இருப்பது உதவும் எனில், வரும் ஆண்டுக்கான தொடர்பாளர்களைத் தெரிவு செய்யலாம். தமிழகம் (3), இலங்கை (3), உலகம் (4) என்று மொத்தம் பத்து பொறுப்பாளர்களை முன்மொழிந்து மொத்தமாகத் தெரிவு செய்யலாம் என நினைக்கிறேன். கடந்த முறை செயல்பட்டவர்களில் சிலர் தற்போது முனைப்பாக இயங்க வில்லை. சிலர் பல்வேறு பொறுப்புகளைச் சுமக்கின்றனர். பல புதிய பங்களிப்பாளர்களும் பரப்புரைகளில் ஈடுபட்டு வருவதை முன்னிட்டு, அவர்களில் பலரையும் இப்பொறுப்பேற்கச் செய்யலாம். ஆனால், இவ்வாறு தெரிவு செய்யும் முன், முதலில் இவர்களின் பொறுப்புகள், கடமைகள், செயல்படும் நடைமுறைகள் என்ன என்பதைப் பற்றியும் தெளிவாக வரையறுக்க வேண்டும். நன்றி--இரவி (பேச்சு) 06:57, 28 மார்ச் 2012 (UTC)
கார்ட்டே பிலாஞ்சு பட்டறை
[தொகு]தற்போது சூரியாவால் இணையத்துக்கு வர இயலாததால் இந்தச் செய்தியை அவர் சார்பாகப் பதிகிறேன். (-: கார்ட்டே பிலாஞ்சு என்பது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டற்ற ஆக்கங்களின் ஆர்வலர்கள் ஆண்டு தோறும் நடத்தும் கருத்தரங்கு, பட்டறை, கண்காட்சி நிகழ்ச்சி. சிரீகாந்து தந்த இணைப்பை அடுத்து, சென்ற ஆண்டு விக்கிமீடியா சார்பாக நான் துவக்கவுரையாற்றினேன். கண்காட்சித்திடலில் தமிழ் விக்கிப்பீடியா காட்சிக்கூடம் அமைத்து மாகிர், சூரியா, மணியன், பரிதிமதி, செங்கைப்பொதுவன் ஐயா, சரவணன், நான் ஆகியோர் தமிழ் விக்கித்திட்டங்களைப் பற்றி விளக்கினோம். தனியாக பட்டறையும் நடந்தது. இந்த ஆண்டு கார்ட்டே பிலாஞ்சு நிகழ்ச்சி மார்ச்சு 24, 25 நாட்களில் நடக்கிறது. அங்கு விக்கிப்பட்டறைக்கான ஏற்பாடும் உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இம்முறை நுழைவுக்கட்டணம் உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் மட்டும் காட்சிக்கூடத்துக்கும் பட்டறைக்கும் வருவார்கள் என்பதால் பயனுள்ளதாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 07:02, 23 மார்ச் 2012 (UTC)
அறிக்கை
[தொகு]என்னால் கலந்துகொள்ள முடியாததால் அஸ்வினும் முஸ்தஃபாவும் முழுப் பட்டறைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு வெற்றிகரமாக நடத்திமுடித்தனர். நான் சேலத்திலிருந்தபடி டீம்வியூவர் வழியாக அவர்களைத் தொடர்பு கொண்டு காமன்ஸ் பற்றிய ஒரு சிறு அறிமுகவிளக்கம் கொடுத்தேன். மீதி அனைத்து செயல்பாடுகளையும் அவர்கள் இருவருமே பார்த்துக்கொண்டனர். காலையில் விக்கிப்பீடியா பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை முஸ்தஃபா அளித்தார். அதன்பின் அஸ்வின் ஆங்கில விக்கிப்பீடியா குறித்த தொகுப்புப் பயிற்சியினை முன்னெடுத்து நடத்தினார். மதிய வேளையில் நானும் முஸ்தஃபாவும் காமன்ஸ் குறித்த சிறு தொகுப்பைச் செய்தோம். முஸ்தஃபா கோப்புப் பதிவேற்ற முறையை அங்கு விளக்கினார். பின்னர், அஸ்வினும் முஸ்தஃபாவும் இணைந்து தமிழ் விக்கிப்பீடியா குறித்து பலவற்றையும் விளக்கினர். கிட்டத்தட்ட 60 பேர் கலந்துகொண்ட பட்டறை இது. பரிதிமதியால் கலந்துகொள்ளாமல் போனபோதிலும் இவர்கள் இருவருமே முழுப் பட்டறையையும் நடத்தி முடித்தனர். இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்!!! கண்டிப்பாக இச்செய்தியைப் பார்ப்போர் பாராட்டத்தவற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். (மூவரும் இயந்திரவியல் மாணவர்கள்! Mech Rocks!) -- சூர்யபிரகாஷ் உரையாடுக 10:59, 24 மார்ச் 2012 (UTC)
- அறுபது ஆர்வலர்களுக்கு விக்கிப்பீடியாவைப் பற்றி அறியத் தந்தமைக்கு அசுவினுக்கும் முசத்தஃபாவுக்கும் உங்களுக்கும் பாராட்டுகள். இயந்திரவியல் மாணவர்களின் ஊக்கமும் இயக்கும் சிறப்பு. :) -- சுந்தர் \பேச்சு 11:23, 24 மார்ச் 2012 (UTC)
- 2005 வாக்கில் ஒரே அறையில் வாழ்ந்த சுந்தர், சந்தோசுகுரு, அரி கிசோரு ஆகிய நண்பர்கள் தமிழ் விக்கிப்பீடியாவை வளர்க்க முனைந்தது நினைவுக்கு வருகிறது :) பயிற்சிப் பட்டறைகள் நடத்தும் அளவுக்குத் தேறும் விக்கிப்பீடியர்களின் முனைப்பு கூடுவதும் பிற விக்கிப்பீடியர்களுடன் இணைந்து செயல்படும் பாங்கு கூடுவதும் கண்டிருக்கிறேன். அசுவின், முசுத்தப்பா, சூரியா ஆகிய மூவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள். இது போல் இன்னும் நிறைய பேர் வர வேண்டும். --இரவி (பேச்சு) 13:20, 26 மார்ச் 2012 (UTC)
- இரவி, அந்நாட்களை நினைவூட்டியதற்கு நன்றி. :) -- சுந்தர் \பேச்சு 16:19, 28 மார்ச் 2012 (UTC)
- சரியாக இந்த நேரத்தில் சென்னையில் இல்லாமற் போனதிற்கு வருந்துகிறேன். இந்த நிலையில் அசுவின், முஸ்தஃபா முழுப் பொறுப்பேற்க சூரியா தொலைவிலிருந்து ஒருங்கிணைத்த இந்தப் பட்டறை மிகவும் பாராட்டற்குரியது. மூவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள் !! வருங்காலம் இளைஞர்களிடம் வளமாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது ;)--மணியன் (பேச்சு) 13:39, 26 மார்ச் 2012 (UTC)
- சூர்யா....நானும் mech தான்... ஆனா கொஞ்சம் வயசாயிடுச்சு! (அனுபவப் பாடம் கற்றுவரும் நானும் ஒரு மாணவனே!) உங்களுடன் இணைந்து பணியாற்றும் நாளுக்காக காத்திருக்கிறேன்! நட்புடன்... --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:47, 26 மார்ச் 2012 (UTC)
அஸ்வினுக்கும் முஸ்தஃபாவுக்கும் சிறப்பு பாராட்டுகள். சூர்யாவிற்கும் தான். --குறும்பன் (பேச்சு) 19:22, 30 மார்ச் 2012 (UTC)
மொழிபெயர்ப்பு விக்கி மொழிபெயர்ப்புக்கள் தாமதமாகத் தெரியும்
[தொகு]மீடியாவிக்கி பயன்படுத்தும் பதிப்புக்_கட்டுப்பாடு சப்வேர்சனிலிருந்து கிட் க்கு மாற்றப்பட்டுள்ளதால் மொழிபெயர்ப்பு விக்கியில் செய்யப்படும் மொழிபெயர்ப்புக்கள் சில நாட்களுக்கு இற்றைப்படுத்தாமல் இருக்கக்கூடும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 10:08, 23 மார்ச் 2012 (UTC)
பட்டியல் வடிவமைப்பில் தவறா ?
[தொகு]- |-
- ! குறுந்தலைப்பு 1
- ! குறுந்தலைப்பு 2
- ! குறுந்தலைப்பு 3
- |-
- | கிடைவரிசை 1, செங்குத்து வரிசை 1
- | கிடைவரிசை 1, செங்குத்து வரிசை 2
- | கிடைவரிசை 1, செங்குத்து வரிசை 3
- |-
- | கிடைவரிசை 2, செங்குத்து வரிசை 1
- | கிடைவரிசை 2, செங்குத்து வரிசை 2
- | கிடைவரிசை 2, செங்குத்து வரிசை 3
பழய பட்டியல் வடிவமைப்பு சுலபமாக இருந்தது மீளமைத்து உதவுங்கள் --ஸ்ரீதர் (பேச்சு) 15:45, 23 மார்ச் 2012 (UTC)
- எந்த கட்டுரையில் இச்சிக்கல் என்று சொன்னால் சரி செய்ய முயலுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:05, 24 மார்ச் 2012 (UTC)
- எஸ். முத்துசெல்வி கட்டுரை தொகுப்பின்போது மேம்பட்ட வடிவமைப்பு பட்டியல் சரியாக இல்லை
எனவே முந்தய பட்டியல் வடிவமைப்பை பயன்படுத்தியுள்ளேன். இக்குறைபாடு பொதுவாக அனைத்து பக்கங்களிலும் உள்ளது. --ஸ்ரீதர் (பேச்சு) 05:49, 24 மார்ச் 2012 (UTC)
- முந்தய பட்டியல் வடிவமைப்பு
குறுந்தலைப்பு | குறுந்தலைப்பு | குறுந்தலைப்பு |
---|---|---|
கிடைவரிசை | கிடைவரிசை | கிடைவரிசை |
கிடைவரிசை | கிடைவரிசை | கிடைவரிசை |
தற்போது உள்ள பட்டியல் வடிவமைப்பு
;-
|
--ஸ்ரீதர் (பேச்சு) 09:16, 24 மார்ச் 2012 (UTC)
ஒத்தாசைப் பக்கம்
[தொகு]ஆலமரத்தடி போன்று ஒத்தாசைப் பக்கத்தையும் அதிகம் தெரியுமாறு செய்யவேண்டும். (ஆலமரத்தடி, நிர்வாகிகளின் பேச்சுப்பக்கத்தில் உதவிகள் கோருவதிலிருந்து) பயனர்களின் உதவிக்கு அந்தப் பக்கத்தை அதிகம் பயன்படுத்துமாறு செய்யவேண்டும். -- மாகிர் (பேச்சு) 04:40, 24 மார்ச் 2012 (UTC)
ஃபேஸ்புக்
[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவிற்கென்று ஃபேஸ்புக்கில் இந்தப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை like செய்து பலரிடம் கொண்டு செல்லவேண்டுகிறேன். ஊடகப்போட்டி முடிவுகளை அறிவிக்கும் முன்னர் அதிகம்பேருக்கு இப்பக்கம் தெரியும்படி செய்யவேண்டும். உரலி இங்கே! -- சூர்யபிரகாஷ் உரையாடுக 11:02, 24 மார்ச் 2012 (UTC)
- ஏற்கனவே ஒரு முகநூல் பக்கம் உள்ளதே! --மதனாஹரன் (பேச்சு) 13:14, 24 மார்ச் 2012 (UTC)
ஏன் விக்கி பூட்டப்பட்டது?
[தொகு]திடீரென தரவுதளம் பூட்டப்பட்டதாக விக்கியில் காட்டியது மறைந்தும் விட்டது. எதனால்? அதில் கொடுக்கப்பட்ட காரணங்கள் எனக்கு புரியவில்லை? --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:10, 27 மார்ச் 2012 (UTC)
- அதில் கூறப்பட்டுள்ளபடி பராமரிப்புக்காக இருக்கலாம். --Natkeeran (பேச்சு) 18:14, 27 மார்ச் 2012 (UTC)
- 24X7 ஒடவேண்டிய வழங்கிகளும், தரவுதளமும் அவ்வப்போது இப்படி “மக்கர்” செய்வதுண்டு. மிகப்பெரும்பாலும் ஓரிரு நிமிடங்களில் சரியாகிவிடும். இவ்வாறான தடங்கல்களின் காரணம் பற்றி அறிய தொழில்நுட்ப அணியின் டிவிட்டர் கணக்கை பின்பற்றுங்கள், அவர்கள் வலைப்பதிவையும் பார்க்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 18:56, 28 மார்ச் 2012 (UTC)
- மேல் குறிப்பிட்டுள்ள டிவிட்டர் கணக்கு பெரும்பாலும் மணிக்கு 4-5 முறை வழங்கி பதிகைகளை(உ.தா "cmjohnson1: replacing msw-d1-pmtpa per rt2639") கீச்சும், என்னைக்கேட்டால் பயனற்றது :) ஸ்ரீகாந்த் (பேச்சு) 21:01, 28 மார்ச் 2012 (UTC)
Wikipatrika: Next Issue
[தொகு]Dear friends, I just sent an email to the Tamil mailing list regarding Wikipatrika. It's a fantastic way of celebrating the wonderful work of your community. I'm trying to help bring out the next issue in April 2012. Can i request you to create a page on the Tamil wikipedia and start adding content, and share this page with everyone else? You can create your stories in Tamil or in English. (Someone can then help translate it before it can move to wikimedia.in Please do refer to my email for further details and please reach out to me if you need any help. Noopur28 (பேச்சு) 10:37, 28 மார்ச் 2012 (UTC)
ஊடகம் -பதிவேற்றக்கருவி
[தொகு]ஊடகப்போட்டிக்கான பதிவேற்றக் கருவி (தமிழில்)படங்களைப் பதிவேற்ற மிகவும் உதவியாக இருந்தது. அதனை ஏன் தமிழ் விக்கியில் நிரந்தமாக்கக்கூடாது? -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:35, 28 மார்ச் 2012 (UTC)
- செய்யலாம் பார்வதி. முதன் முதலில் அக்கருவியை சென்ற வருடம் காமன்சில் அறிமுகப்படுத்தினார்கள். இப்பொழுது மெதுவாக பிற விக்கித்திட்டங்களிலும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். இடைமுகத்தைத் தமிழாக்கம் செய்து விட்டு வழு பதிய வேண்டுமென நினைக்கிறேன். கொஞசம் கூடுதல் வேலைகளும் (இடைமுகத்தில் இப்பொழுதுள்ள கருவியினையும் தேர்ந்தெடுக்கும் வண்ணம் செய்ய வேண்டும்) உண்டு. விசாரித்துப் பார்த்து விட்டு இங்கு விவரங்களைப் பதிகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 18:49, 28 மார்ச் 2012 (UTC)
- காமன்சில் இருக்கும் பதிவேற்றக் கருவி வேறு, ஆங்கில விக்கியிலுள்ளது வேறு, நாம் ஊடகப்போட்டிக்கு பயன்படுத்தியது வேறு. இவை அனைத்துக்கும் பயன்பாட்டு அடிப்படை(usecase) வேவ்வேறு. விவரமாக,
- காமன்சில் இருக்கும் பதிவேற்றக் கருவி பயன்படுத்துவது பதிவேற்ற மீடியாவிக்கி நீட்சி. இது usability initiative மூலம் செய்யப்பட்ட ஒன்று. இதன் நோக்கம் பதிவேற்றுவதை எளிமையாக்குவதும், அதன் மூலம் காமன்சில் பங்களிப்புகளை அதிகப்படுத்தவதும். இந்த நீட்சி காமன்சில் மட்டும் தான் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு முன் இருந்த இடைமுகப்பில் உரிமம் தேர்வு செய்தல், பகுப்பு சேர்த்தல் போன்றவை விக்கிமொழில் நிறப்ப வேண்டியிருந்தது, இப்பிரச்சனையை இந்த புதிய இடைமுகம் எளிமையாக்கியது. இது தமிழிலும் உள்ளது உரலி. விருப்பத்தேர்வில் தமிழ் மொழி தேர்ந்தெடுக்காமல் ஆங்கிலம் பயன்படுத்தினால் இது தெரியாது. நமது மீடியாவிக்கி:Uploadtext பக்கத்திலுள்ள காமன்ஸ் பற்றிய பதாகையில் இந்த உரலி கொடுத்தால் விருப்பத்தேர்வு பற்றி அறியாத புதுப்பயனர்களுக்கு உதவும். இது நீட்சி என்பதால் வழு பதிந்தே பெற முடியும். (காமன்ஸ் தவிற பிற விக்கிகளில் இந்த நீட்சி நிறுவப்படுமா என்பது தெரியாது.)
- ஆங்கில விக்கியில் பயன்படுத்துவது en:MediaWiki:FileUploadWizard.js, ஒரு யாவாசிகிரிப்டு கருவி, இதனை நாம் யார் அனுமதியுமின்றி பெறலாம். (சூர்யாவை விட்டால் நாளைக்கே கூட மொழிபெயர்த்து சேர்த்துவிடுவார் ;) ) ஆ.விக்கியில் விக்கிப்பீடியா:நியாயப் பயன்பாடு கொண்ட கோப்புகள் மட்டும் பதிவேற்ற வேண்டுமென்பதால் இதில் சில பல கேள்விக்கணையைக் கேட்டு அதன் பின் அனுமதிக்கும்.இங்கும் விக்கிப்பீடியா:நியாயப் பயன்பாடு கொண்ட கோப்புகள் மட்டுமே என்றாலும், ஆங்கில விக்கியில் பல வகைப்பட்ட கோப்பிற்கும் நியாயப் பயன்பாடு தத்துவங்கள் தெளிவாகவும், கடுமையாகவும் உள்ளது, அதனை அப்படியே மொழி பெயர்ப்பு செய்வதில் பயனில்லை. நியாயப் பயன்பாடு கொள்கை அடிப்படையில் நாம் சீரான கொள்கை வகுக்க வேண்டும், அதற்கு முன், அப்பக்கத்தின் முக்கிய அம்சங்களை மொழிபெயர்க்க வேண்டும் :) அதற்குப் பின் இது பற்றி சிந்திக்கலாம்.
- ஊடகப் போட்டிக்கு நாம் பயன்படுத்திய இடைமுகம்,காமன்சிலுள்ள பதிவேற்ற மீடியாவிக்கி நீட்சியின் தனிப்பட்ட பிரச்சார இடைமுகம். இது பதிவேற்ற மீடியாவிக்கி நீட்சியின் இடைமுகப்பை மேலும் எளிமையாக்கும் வகையில் விருப்பிற்கேற்ற மாற்றிக் கொள்ளலாம். ஊடகப் போட்டிக்கு உரிமம் தானாக கொடுக்கப்பட்டது, பகுப்பு நிரப்பப்பட்டது, முதலில் காமன்ஸ் பற்றி வரும் விளக்கப்படம் வராது. இது ஊடகப் போட்டி போல் குறிப்பிட்ட சில முனைப்பிற்கு உதவியாக இருக்கும், ஆனால் பொதுவாக இது நல்லதில்லை. This defaults many options and restricts users in option of licensing in order to make the upload process faster without many questions, which is suitable for contest, but not otherwise. ஸ்ரீகாந்த் (பேச்சு) 20:45, 28 மார்ச் 2012 (UTC)
- தெளிவுபட விளக்கியமைக்கு நன்றி.ஸ்ரீகாந்த். நீங்கள் கூறியது போல, பதிவேற்று வேகத்திற்காக, இதன் தெரிவுகளில் சில பயன்பாட்டு எல்லைகள் இருப்பினும், புதியவர்கள் அதிகம் காமென்சில் ஈடுபட, அப்பதிவேற்றுக்கருவி, காமென்சில் அவசியமென்றே எண்ணுகிறேன்.மேலும், இங்கு ஊடகம் குறித்த விதிகள் மேலாட்டமானவையே.எனவே, காமென்சில் நாம் மொழிபெயர்ப்புப் பணிகளைச்செய்ய வேண்டும்.ஒரே ஒருபக்கம் மொழிபெயர்த்தேன்.அதோடு சரி.மற்றவரின் பங்கும் அங்கிருந்தால், எதிர்காலத்தில் நமது பல சிறப்பான ஊடகங்கள் பல மொழியின் விக்கிகளிலும் பயன்படுத்த நிறைய வாய்ப்புண்டு. எனவே, அங்கும் மொழிபெயர்த்திட வருக! என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். வணக்கம். பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
- கடந்த வாரம் ஸ்ரீகாந்த் ஏற்பாடு செய்திருந்த Hackaton போது ஸ்ரீனிவாசன் உருவாக்கிய கருவியை இன்று பார்த்தேன். மிகவும் உபயோகமானது. [1] -- மாகிர் (பேச்சு)
நானும் கண்டேன்.மகிழ்ச்சி.அதனை எப்படி கணினியில் நிறுவி, பயன்படுத்த வேண்டும் என்பதனை, அதேபோல ஒரு நிகழ்படமாக உருவாக்கினால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.எதிர்நோக்கும்..பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
ஊடகப் போட்டி முடிவுகள்
[தொகு]நாளை ஊடகப் போட்டி முடிவுகளை அறிவிக்க வேண்டிய தினம்! ஊடகப் போட்டி முடிவுகள் எங்கே அறிவிக்கப்படும்? --மதனாஹரன் (பேச்சு) 11:53, 29 மார்ச் 2012 (UTC)
- இப்பக்கத்தில். முடிவுகளை சேர்த்துவிட்டு, இங்கு குறிப்பொன்றை இட்டு விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:25, 29 மார்ச் 2012 (UTC)
- ஆயிற்று. அறிவிக்கப்பட்டு விட்டன. இப்பக்கத்தில் காணலாம். போட்டி பற்றிய முழு அறிக்கை ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும்.
- அனைத்து பங்களிப்புகளுமே சிறப்பாக இருந்தவேளையில் எவ்வாறு முடிவெடுப்பார்கள் என்று வியந்திருந்தேன். வெற்றி பெற்ற ஆக்கங்கள் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளன. நடுவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்..வாழ்த்துகள்!!
- போட்டியில் தொடர் பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கும் இறுதி வெற்றியை எட்டியவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் !! --மணியன் (பேச்சு) 21:56, 29 மார்ச் 2012 (UTC)
- ஊடகப் போட்டியில் பங்கேற்ற அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டி முடிவுகளைச் சரியாகக் குறிப்பிட்ட தேதியில் அறிவித்த போட்டிக்குழுவினருக்கும், ஒத்துழைப்பு நல்கிய அனைத்துப் பயனர்களுக்கும் என் இனிய நல்வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:41, 30 மார்ச் 2012 (UTC)
- சிறப்பான பணி. இப்போட்டியைத் திறமையாக நடத்திய ஊடகப் போட்டிக் குழுவினருக்கும் நடுவர்களுக்கும் பாராட்டுக்கள். எதிர்பாத்ததிலும் கூடுதலானவர்கள் பங்களித்திருக்கிறார்கள், ஏராளமான புதிய ஊடகங்கள் கிடைத்திருக்கின்றன. வெற்றி பெற்றவர்களுக்கும். பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த ஊடகங்களைப் பயன்படுத்திப் புதிய கட்டுரைகளை எழுதுவதற்கும், ஏற்கெனவேயுள்ள கட்டுரைகளை மேம்படுத்துவதற்கும் நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. பயனர்கள் இந்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். --- மயூரநாதன் (பேச்சு) 04:31, 30 மார்ச் 2012 (UTC)
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை எப்படி தெரிவிப்பது. அவர்களுக்கென்று தனிப்பேச்சுப்பக்கம் கிடையாதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:40, 30 மார்ச் 2012 (UTC)
- ஐந்து பயனர்கள் (எஸ்ஸார், அன்டன், அருணன்கபிலன், தமிழ்ப்பரிதிமாரி, பார்வதிஸ்ரீ) தமிழ் விக்கியில் இயங்குவோர் அவர்களுக்கு இங்கு அவர்களது பேச்சுப்பக்கத்தில் வாழ்த்தலாம். ஏனையோருக்கு காமன்சில் உள்ளபேச்சு பக்கத்தில் செய்தி இடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 04:45, 30 மார்ச் 2012 (UTC)
- அருமையான படங்கள். திட்டத்தை நடத்திய, பங்களித்த அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள். --சிவக்குமார் \பேச்சு 08:34, 30 மார்ச் 2012 (UTC)
- பங்களிப்புச் செய்த அனைத்து பயனர்களுக்கும் வெற்றி பெற்ற அனைத்து பயனர்களுக்கும் வாழ்த்துக்கள். மிக மிக பெரும் பங்களிப்புக் கிடைத்தது. இத் திட்டத்தை முதலில் திட்டமிட்டதில் இருந்து, படிப் படியாக பணிகளை முன்னின்று திறனான நடத்தி முடிந்தது சோடாப்பாட்டிலே. அவருக்கு எமது நன்றிகள். இந்தப் போட்டி முடிவுகளை தமிழ் விக்கியூடக பதாகைகளிலும், முகநூலிலும், வலைப்பதிவிலும், மின்னஞ்சல்கள் இருக்கும் பிற ஊடகங்களுக்கும் அனுப்பி வைப்பதி சிறந்தது. இந்தப் போட்டியில் கற்றுக் கொண்ட பாடங்கள், பரிந்துரைகளையும் தொகுத்தலும் நன்று.
--Natkeeran (பேச்சு) 13:11, 30 மார்ச் 2012 (UTC)
- ஊடகப்போட்டியை வடிவமைத்து நடத்தியவர்களுக்கும், பங்கேற்று அழகிய படிமங்களை உருவாக்கிப் பதிவேற்றியவர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுகள்! மிகச் சிறப்பான முயற்சி!--பவுல்-Paul (பேச்சு) 13:33, 30 மார்ச் 2012 (UTC)
ஊடகப்போட்டியில் பங்கெடுத்தவர்கள் , நடத்தியவர்களுக்கு பாராட்டுகள் --குறும்பன் (பேச்சு) 19:23, 30 மார்ச் 2012 (UTC)
- விக்கி ஊடகப் போட்டி வெற்றி பெற உழைத்த அனைவருக்கும், குறிப்பாக ஒருங்கிணைப்பாளர் சோடாபாட்டிலுக்கு எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 22:07, 30 மார்ச் 2012 (UTC)
- இப்போட்டியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்த சோடாபாட்டில் மற்றும் குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். வெற்றிபெற்றவர்கள், போட்டியில் பங்குபெற்றவர்கள் தமிழ்விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். -- மாகிர் (பேச்சு) 02:01, 31 மார்ச் 2012 (UTC)
- இந்த ஊடகப் போட்டியைச் சிறப்பாக நடத்திய ஒருங்கிணைப்பாளர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும், பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். கட்டுரைப் போட்டி நமக்கு ஒரு சோடாபாட்டிலைத் தந்தது போல ஊடகப் போட்டியும் சிறப்பான பங்களிப்பாளர்களைத்தர வேண்டும். -- சுந்தர் \பேச்சு 02:23, 31 மார்ச் 2012 (UTC)
ஆதாரம் தேவை
[தொகு]வணக்கம். நம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் பெரும்பாலான கட்டுரைகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை. ஆங்கில விக்கிப்பீடியாவுடன் ஒப்பிடுகையில், ஆதாரமற்ற சிறு பதிவும் உடனடியாக நீக்கப்படும். ஆனால் நம்முடைய தமிழ் கட்டுரைகளில் முக்கியமான கட்டுரைகளில் கூட போதுமான ஆதாரம் இல்லை. ஏற்கனவே அதிக கட்டுரைகளை (45,000+) பெற்றுவிட்ட தமிழ் விக்கியில், இப்பொழுதே கட்டுரைகளை செம்மைபடுத்த தனி குழுவோ அல்லது குறிப்பிட்ட சில அறிஞர்களோ பொறுப்பெடுத்து இப்பணியை விரைந்து முடித்தல் நலம். கூட்டுக் கட்டுரை தொகுப்பு போன்று இதனையும் முதல் பக்கம் அல்லது, கவனிப்புப் பட்டியல் காட்டும்போது போன்ற இடங்களில் காட்டினால், தமிழ் விக்கியும் ஆங்கில விக்கிப்பீடியாவிற்கு இணையாகவும், பிற்காலத்தில் அதைவிட அதிகமாகமான தகவல்கள் ஆதாரத்துடன் கொண்டு விளங்கும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி, 30, மார்ச்சு, 2012.
- [சான்று தேவை] என்ற வார்ப்புரு இடப்பட்ட வசனங்கள் நீண்ட காலமாக அப்படியே இருக்கின்றன. அவை பற்றியும் கவனத்தில் கொள்வது நன்று. --மதனாஹரன் (பேச்சு) 13:02, 30 மார்ச் 2012 (UTC)
- {{சான்று தேவை}} அறிவிப்பை இட்டு இரண்டு மாதங்கள் கடந்த தகவல்களை நீக்கலாம். நீக்குவதற்கு முன்னர் ஏதாவது சான்று கிடைக்கிறதா என நாம் தேடிப் பார்த்து விடுவது நல்லது. கட்டுரைகளின் சான்றுப் பின்புலத்தை அளப்பதற்கு ஒரு தானியங்கி செய்ய வேண்டும் என முன்பு நான் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தேன். விரைவில் செய்யப் பார்ப்போம். -- சுந்தர் \பேச்சு 02:31, 31 மார்ச் 2012 (UTC)
- "சான்று தேவை" என்ற வார்ப்புரு சில சமயங்களில் ஆங்கில விக்கியிலிருந்து தமிழாக்கும் போது வந்ததும் உண்டு. ஒருவேளை முழுக் கட்டுரைக்கும் ஆதாரம் இருக்கக் கூடும். ஒரு குறிப்பிட்ட தகவலுக்கு மட்டும் போதிய ஆதாரம் இல்லை என்று ஒரு பயனர் எண்ணி "சான்று தேவை" என்று இட்டிருக்கக் கூடும். எனவே, "சான்று தேவை" என்று குறிப்பிடப்பட்ட தகவலை நீக்குவது என்றால் அவ்வாறு நீக்குவதற்கும் போதிய "ஆதாரம்" வேண்டும் என்றே கூறுவேன். சில வேளைகளில் அத்தகவல் கட்டுரையில் இருப்பதில் தவறு இல்லை என்று கண்டால், தகவலைக் கட்டுரையிலிருந்து நீக்காமல் "சான்று தேவை" என்பதை மட்டும் நீக்குவதும் பொருத்தமாகலாம். எனவே இந்த விடயத்தில் கவனமாகச் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். சர்ச்சைக்குரிய கருத்தாக இருந்து அதில் "சான்று தேவை" இடப்பட்டிருந்தால், அக்கருத்தை அகற்றுவதற்கு முன் "உரையாடல்" பக்கத்தில் குறிப்பிட்டாலும் பொருத்தமாகலாம்.
ஆக, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் தகவல்களைத் தருகின்ற கட்டுரைகளுக்கு ஆதாரங்கள் தேடிச் சேர்ப்பதை முதன்மையான பணியாகச் செய்தால் நல்லது என்பது என் கருத்து.--பவுல்-Paul (பேச்சு) 03:44, 31 மார்ச் 2012 (UTC)
- கட்டுரைகளை செம்மைபடுத்த தனி குழுவோ அல்லது குறிப்பிட்ட சில அறிஞர்களோ பொறுப்பெடுத்து இப்பணியை விரைந்து முடித்தல் நலம். எனவே விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/நிலுவையில் உள்ள பணிகள் பக்கத்திற்கு இவ்விவாதத்தை நகர்த்தலாம் என எண்ணுகிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 04, ஏப்ரல், 2012.
இதற்கு குழு அமைப்பது சரிப்பட்டு வராது. அந்தந்த துறை சார்ந்தோரே ஆதாரங்களைத் தேடிப் பிடிக்க முடியும். அதற்கும் கடும் உழைப்பும் நிறைய நேரமும் தேவைப்படும். எனவே, இந்தத் தர அளவீடு குறித்த விழிப்புணர்வு இருக்கும் அதே வேளை, பொறுமையான நடவடிக்கையும் தேவை--இரவி (பேச்சு) 09:04, 4 ஏப்ரல் 2012 (UTC)
- பொறுமையான நடவடிக்கைக்கு என்னுடைய முழுமையான ஆதரவு இருப்பினும், ஆரம்பத்திலேயே இப்பணியை தொடங்கினால் பின்னாட்களில் எளிதாக இருக்கும். குழு அமைக்கும் போது, துறைக்கு ஒருவர் அல்லது சிறு குழுக்கள் அமைக்கலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 04, ஏப்ரல், 2012.
கல்ஃப் நியூஸ்
[தொகு]ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளிவரும் கல்ஃப் நியூஸ் நாளேட்டின் இன்றைய பதிப்பில் விக்கிப்பீடியா பற்றிய கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. அதன் இணையப் பதிப்பில் உள்ள கட்டுரைக்கான இணைப்பைக் கீழே தருகிறேன்.
Should teachers and students embrace Wikipedia or shun it?
---மயூரநாதன் (பேச்சு) 19:02, 30 மார்ச் 2012 (UTC)
- தொடுப்புக்கு நன்றி.மானுட அறிவை, அனுபவத்தை, வணிக நோக்கற்று வளர்க்கும் நம் விக்கி, மேலும் வளரும். எதிர்காலத்தில், மேலும், பல வணிகர்களை, எதிர்காலத்தில் முடக்கும். வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
ஏப்பிரல் 7, 2012 இல் நூலகம் கனடா: அறிமுக நிகழ்வுல் தமிழ் விக்கி
[தொகு]வணக்கம்: வரும் சனிக்கிழமை ஏப்பிரல் 7, 2012 இல் இசுகார்புரோவில் நடைபெறவுள்ள நூலகம் கனடா: அறிமுக நிகழ்வில் "தமிழ் விக்கியூடகங்கள் - கூட்டாசிரியப் பொதுமங்கள்" என்ற தலைப்பில் செயல்முறை விளக்கம் ஒன்றை செல்வா தரவுள்ளார். கனடிய விக்கி பயனர்களை அந்த நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 00:46, 3 ஏப்ரல் 2012 (UTC)
நிறுவனப் பெயரிடல்
[தொகு]Hindustan Insecticides Limited என்ற நிறுவனத்திற்கு தமிழில் எப்படி பெயர் வைப்பது என்று உதவுங்கள். தேடியவரை ஹிந்துஸ்தான் பூச்சிக் கொல்லி மருந்து நிறுவனம் என்றுதான் வழஙகப்படுகிறது. 'Limited' என்பதற்கு ஒப்பான சொல் எது என்றும் கூறுங்கள். நன்றி --நீச்சல்காரன் (பேச்சு) 03:55, 3 ஏப்ரல் 2012 (UTC)
- இந்துசுத்தான் பூச்சி மருந்து வரம்பியம். ஏதோ எனக்குத் தெரிந்தது.:)---தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:25, 3 ஏப்ரல் 2012 (UTC)
- Limited என்பது பங்குகள் வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனத்தைக் குறிக்கும் அதாவது இதன் பங்குகள் கூட்டுப்பங்குகளாக இருக்கும். தனியார் மட்டும் பங்குதாரர்களாக இருப்பின் அந்நிறுவனம் Private limited என்றும் அரசும் குறிப்பிட்ட விகிதத்தில் பங்குகள் வைத்திருப்பின் public Limited என்றும் வழங்கப்படுகிறது. Limit என்பது வரம்பு எனப் பொருள்படினும் Limited என்பது பொதுவாக நிறுவனம் என்றே வழங்கப்படுகிறது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:14, 3 ஏப்ரல் 2012 (UTC)
- தலைப்பில் இந்துத்தான் பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனம் என்றும், கட்டுரையினுள்ளே இந்துத்தான் பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனம் (வரையறுக்கப்பட்டது) என்றும் குறிப்பிடலாம்.--Kanags \உரையாடுக 12:38, 3 ஏப்ரல் 2012 (UTC)
- கனகுடன் உடன்பட்டாலும் மருந்து என்ற விளக்கம் தேவையா என எண்ணுகிறேன். பூச்சிக்கொல்லி என்றாலே போதாதா ? அல்லது இந்த நிறுவனம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் நுண்ணுயிரிகளை வழங்குவதை தனது நிறுவன முற்போக்கு வணிகத் திட்டமாகக் கொள்ளவில்லை எனில் பூச்சி மருந்து நிறுவனம் என்று கூறலாம்--மணியன் (பேச்சு) 13:20, 3 ஏப்ரல் 2012 (UTC)
- தலைப்பில் இந்துத்தான் பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனம் என்றும், கட்டுரையினுள்ளே இந்துத்தான் பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனம் (வரையறுக்கப்பட்டது) என்றும் குறிப்பிடலாம்.--Kanags \உரையாடுக 12:38, 3 ஏப்ரல் 2012 (UTC)
- Limited என்பது பங்குகள் வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனத்தைக் குறிக்கும் அதாவது இதன் பங்குகள் கூட்டுப்பங்குகளாக இருக்கும். தனியார் மட்டும் பங்குதாரர்களாக இருப்பின் அந்நிறுவனம் Private limited என்றும் அரசும் குறிப்பிட்ட விகிதத்தில் பங்குகள் வைத்திருப்பின் public Limited என்றும் வழங்கப்படுகிறது. Limit என்பது வரம்பு எனப் பொருள்படினும் Limited என்பது பொதுவாக நிறுவனம் என்றே வழங்கப்படுகிறது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:14, 3 ஏப்ரல் 2012 (UTC)
ஊடகப் போட்டி பணம் மறுபயன்பாடு
[தொகு]ஊடகப் போட்டி வரவு செலவு கணக்கினை முடித்து விட்டேன். போட்டி செலவுகள் போக 695665 இந்திய ரூபாய்கள் என்னிடம் மீதமுள்ளன. (முழு கணக்கு அறிக்கை நாளை வெளியாகும்). விக்கிமீடியா அறக்கட்டளைக்கு அறிக்கை அளிக்கும் போது திட்டத்தில் எஞ்சிய பணத்தை மறுபயன்பாடு (repurpose) செய்வதற்கு ஒரு தெரிவு உள்ளது. இதனைப் பயன்படுத்தி இந்த 695665 ரூபாயை குறுந்தொடுப்பு வழங்கிக்கான (tawp.in) இவ்வாண்டு சந்தாவுக்கு ஒதுக்கக் கோரலாம் என எண்ணுகிறேன். (ஓராண்டு சந்தா 12.99 $ - செலவு பொருந்தி வருவதால் இந்த யோசனை உண்டானது). தற்போது இச்செலவினை ஸ்ரீகாந்த் ஏற்று வருகிறார். குறுந்தட்டுத் திட்டம் முடிவடைந்தால் இதே வழங்கி குறுந்தட்டின் ISO பிம்பத்தையும் வழங்கும். இந்த மறுபயன்பாட்டுப் பரிந்துரைக்கு ஏதேனும் மறுப்பிருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன். (மறுபயன்பாடு கோரவில்லையெனில் எஞ்சிய பணத்தை அறக்கட்டளைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்) --சோடாபாட்டில்உரையாடுக 08:56, 4 ஏப்ரல் 2012 (UTC)
- +1. 695 இந்திய ரூபாயைத் திருப்பி அனுப்பினால், நாணய மாற்றுக்கே பத்தாது :) இந்தப் பணம் தளப் பெயரைப் புதுப்பிக்கத் தான் போதுமானதாக இருக்கும். ISO கோப்பு வழங்க ஏகப்பட்ட bandwidthம் செலவும் ஆகுமே? இதற்கு விக்கிமீடியா வழங்கியிலேயே இடம் கிடைக்குமா என்று பார்க்கலாம். அல்லது, இயன்ற அளவு torrents வழங்கலைப் பயன்படுத்தலாம்--இரவி (பேச்சு) 09:04, 4 ஏப்ரல் 2012 (UTC)
- சிறு திருத்தம், சந்தா வழங்கிக்கு அல்ல இணைய முகவரிக்கு(Domain Name). அளவில்லா bandwidth கொண்ட நட்புதிட்டங்களின் வளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் :) ஸ்ரீகாந்த் (பேச்சு) 09:13, 4 ஏப்ரல் 2012 (UTC)
- ஆதரவு --மணியன் (பேச்சு) 12:50, 4 ஏப்ரல் 2012 (UTC)
- ஆதரவு -- சுந்தர் \பேச்சு 14:50, 4 ஏப்ரல் 2012 (UTC)
- ஆதரவு பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
- ஆதரவு--பவுல்-Paul (பேச்சு) 22:11, 4 ஏப்ரல் 2012 (UTC)
- ஆதரவு--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:00, 5 ஏப்ரல் 2012 (UTC)
- ஆதரவு-- மாகிர் (பேச்சு) 03:04, 5 ஏப்ரல் 2012 (UTC)
- ஆதரவு--shanmugam (பேச்சு) 04:17, 5 ஏப்ரல் 2012 (UTC)
- தமிழ் விக்கிபிடியாவில் இதே முறையை பொருத்தலாம். அதற்குரிய தொழில்நுட்பத்தை விக்கிபீடியாவிலே பொருத்துவது நீண்ட கால நோக்கத்தில் சிறந்தது. tawp.in இதே தொழில் நுட்பத்தை விக்கிபீடியாவில் பொருத்தினால் வேலை செய்யாது என்று கூறினால்/இருப்பின் tawp.in-யை குறுந்தொடுப்புக்கு உபயோகம் செய்யலாம்.--Pitchaimuthu2050 (பேச்சு) 06:35, 5 ஏப்ரல் 2012 (UTC)
- இது பல காலமாக (வெறும் 7 ஆண்டுகளாகத் தான்) முயற்சி செய்யப்ப்ட்டு வருகிறது. பார்க்க bugzilla:1450. இது வந்தால் நன்றாகத் தான் இருக்கும், ஆனால் அதுவரை(எவ்வளவாண்டுகளாயினும்), tawp.in பயன்படும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 08:05, 5 ஏப்ரல் 2012 (UTC)
இனி யாருக்காவது மறுப்பு இருந்தால் மட்டும் தெரிவிக்கவும் :) இது போன்று பொதுக்கருத்து ஒருமித்து இருக்கும் நிலை தெளிவாக இருக்கும் போது, கூடுதல் ஆதரவைத் தெரிவிக்கத் தேவையில்லை :) --இரவி (பேச்சு) 05:12, 5 ஏப்ரல் 2012 (UTC)
ஊடகப் போட்டி நல்கை அறிக்கை
[தொகு]meta:Grants:Tamil_Wikimedians/TamilWiki_Media_Contest/Report தயார். தமிழ் விக்கிக்கான அறிக்கை இன்னும் சில நாட்களில் தயாராகும்(தாமதத்திற்கு வருந்துகிறோம்). போட்டி முழுவதும் அனைவரின் ஆதரவு, உதவி, பங்களிப்புகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் ஸ்ரீகாந்த் (பேச்சு) 08:05, 5 ஏப்ரல் 2012 (UTC)
- தமிழ் அறிக்கை - விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி/அறிக்கை--சோடாபாட்டில்உரையாடுக 03:02, 13 ஏப்ரல் 2012 (UTC)
புனித வெள்ளி வாழ்த்துகள்
[தொகு]அனைத்து விக்கிப் பயனர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இனிய புனித வெள்ளி, மற்றும் உயிர்த்த ஞாயிறு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 01:28, 6 ஏப்ரல் 2012 (UTC)