சப்வேர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சப்வேர்சன் (Subversion) ஒரு கட்டற்ற திருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருள். இதை லினிக்ஸ், யுனிக்ஸ், விண்டோஸ் ஆகிய இயங்கு தளங்களில் பயன்படுத்தலாம். இதனை ஆங்கில எழுத்தின் சுருக்கமாக எசுவிஎன் (SVN) என்று அழைப்பார்கள். உருவாக்கி கொண்டிருக்கும் பதிப்பின் மூல நிரல்களை சேமிக்கவும் பழைய பதிப்புகளின் மூல நிரல்களை சேமிக்கவும் இது பயன்படுகிறது. ஒப்பீட்டளவில் சப்வேர்சன் பயன்படுத்துவதற்கு எளியது, சிறந்த வசதிகளைக் கொண்டது. எனவே இது அதிக பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது.

2000ஆம் ஆண்டு கொலப்நெட் (CollabNet ) நிறுவனம் மூலம் இது உருவாக்கப்பட்டது. அப்பாச்சி திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் இது உயரிய இடத்தை பிடித்துள்ளது.

வரலாறு[தொகு]

2000ஆம் ஆண்டு கொலப்நெட் சிவிஎசு (CVS) என்ற திருத்தக்கட்டுப்பாடு போன்று அதில் இல்லாத சில வசதிகளை கொண்டு திறமூல திருத்தக் கட்டுப்பாடு ஒன்றை உருவாக்கியது. இதிலுள்ள வலுக்களையும் சரி செய்து உடனுக்குடன் வெளியிட்டது. 2001 அளவில் போதுமான மூல நிரல்களை கொண்டு வளர்ச்சி பெற்றது. 2004 பிப்ரவரியில் இதன் 1.0 பதிப்பு வெளியிடப்பட்டது. 2009 நவம்பரில் அப்பாச்சி திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது. 2010 பிப்ரவரி முதல் அப்பாச்சி திட்டத்தின் முன்னனி திட்டங்களில் ஒன்றாக உள்ளது.

முதல் பதிப்பு வெளியிடப்பட்ட தேதி இறுதி பதிப்பு வெளியிடப்பட்ட தேதி நிலை
Old version, no longer supported: 1.0 2004-02-23 1.0.9 2004-10-13 முற்றாக ஆதரவில்லை
Old version, no longer supported: 1.1 2004-09-29[1] 1.1.4 2005-04-01 முற்றாக ஆதரவில்லை
Old version, no longer supported: 1.2 2005-05-21[2] 1.2.3 2005-08-19 முற்றாக ஆதரவில்லை
Old version, no longer supported: 1.3 2005-12-30[3] 1.3.2 2006-05-23 முற்றாக ஆதரவில்லை
Old version, no longer supported: 1.4 2006-09-10[4] 1.4.6 2007-12-21 முற்றாக ஆதரவில்லை
Old version, no longer supported: 1.5 2008-06-19[5] 1.5.9 2010-12-06 முற்றாக ஆதரவில்லை
Old version, no longer supported: 1.6 2009-03-20[6] 1.6.23 2013-05-30 முற்றாக ஆதரவில்லை
Old version, no longer supported: 1.7 2011-10-11[7] 1.7.22 2015-08-12 முற்றாக ஆதரவில்லை
Old version, no longer supported: 1.8 2013-06-18[8] 1.8.19 2017-08-10 முற்றாக ஆதரவில்லை
Older version, yet still supported: 1.9 2015-08-05[9] 1.9.7 2017-08-10 சிறிதளவு ஆதரவுண்டு
Current stable version: 1.10 2018-04-13[10] 1.10.0 2018-04-13 முழு ஆதரவுண்டு
Legend:
Old version
Older version, still supported
Latest version
Latest preview version
Future release


சிறப்புகள்[தொகு]

 • ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே ஒப்புவி (commit) செய்ய முடியும். இருவர் ஒரே நேரத்தில் முயன்றாலும் ஒருவர் மட்டுமே ஒப்புவி செய்யமுடியும்.
 • பெயர்மாற்றப்பட்ட\பிரதியெடுக்கப்பட்ட\வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட கோப்புகள் முழுதாக சீராய்வு செய்யப்பட்ட வரலாற்று பக்கத்தில் இருக்கும்
 • அப்பாச்சி எச்டிடிபி வழங்கி வலையமைப்பின் வழங்கியாக இருக்கும்.
 • இணைக்கப்பட்ட கோப்புகளின் சுவடுகளை அறியமுடியும்
Visualization of a very simple Subversion project.

இவற்றையும் பார்க்க[தொகு]

 1. "Subversion 1.1 Release Notes". பார்க்கப்பட்ட நாள் 2015-09-21.
 2. "Subversion 1.2 Release Notes". பார்க்கப்பட்ட நாள் 2015-09-21.
 3. "Subversion 1.3 Release Notes". பார்க்கப்பட்ட நாள் 2015-09-21.
 4. "Subversion 1.4 Release Notes". பார்க்கப்பட்ட நாள் 2015-09-21.
 5. "Subversion 1.5 Release Notes". பார்க்கப்பட்ட நாள் 2015-09-21.
 6. "Apache Subversion 1.6 Release Notes". பார்க்கப்பட்ட நாள் 2015-09-21.
 7. "Apache Subversion 1.7 Release Notes". பார்க்கப்பட்ட நாள் 2015-09-21.
 8. "Apache Subversion 1.8 Release Notes". பார்க்கப்பட்ட நாள் 2015-09-21.
 9. "Apache Subversion 1.9 Release Notes". பார்க்கப்பட்ட நாள் 2015-09-21.
 10. "Apache Subversion 1.10 Release Notes". பார்க்கப்பட்ட நாள் 2018-04-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்வேர்சன்&oldid=2522768" இலிருந்து மீள்விக்கப்பட்டது