உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு03

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் பொங்கல் வாழ்த்துக்கள்

[தொகு]

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பப்படு திட்டமிட்டபடி நெல்லை அறுவடை செய்துள்ளார்; நானும் என் பங்கிற்கு புதுப்பானை செய்துள்ளேன். எவரேனும், கரும்பு வெட்டினால் பொங்கல் சமைத்து பொங்கல் திருநாளைக் கொண்டாடலாம். :-) -- Sundar \பேச்சு 08:51, 13 ஜனவரி 2006 (UTC)

அனைவருக்கும் என் இனிய தமிழ் பொங்கல் நல்வாழ்த்துக்கள். கரும்பு இப்பொழுதுதான் நடப்பட்டுள்ளது. கடையில் வாங்கித்தான் வெட்ட வேண்டும். பப்படு மற்றும் பிற பயனர் பயிரை மேலும் வளப்பார்கள். சுந்தர், நல்ல கற்பனை, ரசனை. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.--Natkeeran 16:51, 13 ஜனவரி 2006 (UTC)
நன்றி நற்கீரன். -- Sundar \பேச்சு 11:10, 18 ஜனவரி 2006 (UTC)

இலங்கை தமிழ் இலக்கியம் பகுப்பை நூலக திட்டத்துடன் இணைந்து வகைப்படுத்தல்

[தொகு]

நற்கீரன், விக்கிபீடியாவுடன் தொடர்புடைய ஏனைய உறுப்பினர்கள் கவனத்திற்கு..

எமது நூலகம் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஈழத்து எழுத்தாளர்கள், ஈழத்து இலக்கியம் பற்றிய ஆவணப்படுத்தல்களை விக்கிபீடியாவில் பங்களிப்பாக ஆவணப்படுத்துவதாக முடிவெடுத்திருந்தோம்.

அதன்படி நூலகம் திட்டத்தில் இதற்கான தனிப்பக்கமும் ஆரம்பிக்கப்பட்டது.

விக்கிபீடியாவின் ஒவ்வொரு இற்றைப்படுத்தலுக்கும் எமது பக்கத்தை இற்றைப்படுத்திக்கொண்டிருப்பது சாத்தியமற்றதென உணர்கிறேன். எனவே இதற்கான ஒழுங்குமுறை ஒன்றினை கண்டறிய வேண்டியுள்ளது.

விக்கிபீடியாவில் பக்கங்கள் பகுக்கப்படுகின்றன. இவ்வாறு பகுக்கப்படும்போது குறிப்பிட்ட பகுப்புக்குரிய பக்கத்திற்கு செல்லும்போது அதற்கு கீழ்வரும் அத்தனை தலைப்புக்களையும் பார்வையிடக்கூடியதாக இருக்கும்.

இதனை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என நம்புகிறேன்.

ஈழத்து இலக்கியம் என்ற பகுப்பு இப்போது விக்கிபீடியாவில் இல்லை. இவ்வாறனதொரு பகுப்பை உருவாக்கி அதன்கீழ் கட்டுரைகளை ஒழுங்குபடுத்தினால், ஈழத்து இலக்கியம் பகுப்பு பக்கத்தையே எமது விக்கிபீடியாவுக்கான பங்களிப்பு பக்கமாக கருதிக்கொள்ளலாம்.

இதுபற்றிய ஆலோசனையை இங்கே வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது இந்த விடயம் தொடர்பாக விக்கிபீடியாவ்ல் உள்ள கட்டுரைகளை ஈழத்து இலக்கியம் என்ற பகுப்பின் கீழ் கொண்டுவர நற்கீரன் தயவு செய்து உதவவும். அதற்காக கட்டுரைகளில் சேர்க்கவேண்டிய பகுப்பு விபரத்தை, syntax ஐ இங்கே அனுப்பினால் நன்றாக இருக்கும்.

-மு.மயூரன்.


மயூரன் மற்றும் நூலக திட்ட ஆர்வலர்களுக்கு:

பகுப்புக்களை யாரும், எப்பொழுதும் விக்கிபீடியாவில் ஏற்படுத்தலாம், அது ஒரு பிரச்சினை இல்லை. நீங்களே [[பகுப்பு:ஈழ இலக்கியம்]] என்று உங்கள் கட்டுரையின் இறுதியில் சேர்த்து விட்டு, பின்னர் அப்பகுப்பிற்கு சென்று, நீங்கள் தேர்ந்த மேற் பகுப்புக்களுடன் சேர்த்து கொள்ளலாம். உதாரணமாக ஈழத்து இலக்கியத்தை [[பகுப்பு: இலக்கியம்]], [[பகுப்பு:தமிழ் இலக்கியம்]], [[பகுப்பு:இலங்கை]] ஆகிய பொருத்தமான மேற்பகுப்புக்களுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

ஈழத்து இலக்கியத்தின் கீழ் என்ன என்ன பகுப்புக்கள் தேவை என்பதை நீங்கள் சற்று ஒழுங்கே தந்தீர்களானால், அப்பகுப்புக்களை உருவாக்கி கொள்ளலாம். தற்சமயம் துணைப்பகுப்பாக ஈழத்து எழுத்தாளர்கள் என்ற பகுப்பு ஒன்று மட்டுமே உண்டு. எனது கணிப்பில் மேலும் சில துணைப்பகுப்புக்களையும் உருவாக்கலாம். அவையானவை:

(குறிப்பு: ஈழ இலக்கியம் என்னும் பொழுது ஈழ தமிழ் இலக்கியத்தையே குறிப்பிடுகின்றேன். ஈழ தமிழ் இலக்கியத்தில் மலைய தமிழ் இலக்கியம், முஸ்லீம் தமிழ் இலக்கியம், புலம் பெயர் ஈழ தமிழ் இலக்கியம் அடங்குமா என்பதில் தெளிவு இல்லை. இலங்கை தமிழ் இலக்கியம் என்று பொது பெயர் தருவது நன்று. மேலும், இலக்கியம் என்னும் பொழுது சமூக விஞ்ஞானம், மற்றும் தமிழில் எழும் விஞ்ஞான படைப்புக்களையும் சார்ந்தே நீங்கள் குறிக்கிறீர்களோ என்றும் எண்ண தோன்றுகின்றது. அப்படி ஆகினும் அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை.)

  • தமிழ் இலக்கியம், இலங்கை (ஆகிய மேற்பகுப்புக்களின் கீழ்)
  • இலங்கை தமிழ் இலக்கியம் (மேற்பகுப்பின் கீழ்)
  • ஈழ தமிழ் இலக்கியம் (மேற்பகுப்பின் கீழ்)
  • ஈழத்து எழுத்தாளார்கள் (ஏற்கனவே நீங்கள் சுட்டியது)
  • ஈழத்து இலக்கிய நூலக திட்டம்
  • ஈழ இலக்கிய வரலாறு
  • ஈழ போராட்ட இலக்கியம்
  • ஈழத்து தலித் இலக்கியம்
  • (இலங்கை) மலையக தமிழ் இலக்கியம்
  • (இலங்கை) முஸ்லீம் தமிழ் இலக்கியம்
  • புலம்பெயர் தமிழ் இலக்கியம் (புலம் பெயர் தமிழ் இலக்கியம் வெவ்வேறு

நாடுகளை துணை பகுப்புகளாக கொன்டிருக்கலாம். உ+ம்: கனேடிய தமிழ் இலக்கியம்)

நாங்கள் கலந்துரையாடி ஒரு ஒழுங்கிய, விரிவான வகைப்படுத்தலை ஏற்படுத்திய பின்னர் அதை விக்கிபீடியாவில் இடுவது சிரமம்மற்ற ஒரு வேலை.

விக்கிபீடியாவிலும் வேறு ஒரு தளத்திலும் சேர்ந்து ஒரேதகவலை ஒருங்கமைக்க முடியுமா? அப்படி முடிந்தாலும் அதை செயல்படுத்த வேண்டிய நுட்ப அறிவை எங்கு பெறுவது? முக்கியமாக இது தேவையா? அகிய கேள்விகள் இன்னும் விடை காண வேண்டும்.

என் கணிப்பில் நீங்கள் பகுப்புக்களுக்கு நூலக தளத்தில் சுட்டிகள் நல்கினால் தொகுத்தலை விக்கி தரவு தளத்தில் மேற்கொள்ளுதல் நன்று, தற்போதைக்கு நல்ல இடைக்கால தீர்வு என்று கருதுகின்றேன். அதற்கு நீங்கள் சுட்டியது போல ஒரு ஒழுங்கிய வகைப்படுத்தல் தேவை. மேலும், விக்கிபீடியாவில் இப்படிப்பட்ட தகவல்களை சேர்பது உங்கள் வழங்கியின் சேமிப்பு தேவைகளையும் மட்டுப்படுத்தும்.

இப்படிக்கு, நற்கீரன் --Natkeeran 20:55, 15 ஜனவரி 2006 (UTC)

Interwiki

[தொகு]

நான் English Wikipedia உலாவிய போது interwiki இணைப்புகளை மொழிகளுக்கிடையில் அளவிட ஓரு கருவி இருந்தது. ஆயினும் அதில் தமிழ் மொழி இருக்கவில்லை. அங்கு இருந்த இணைப்பின் மூலம் அங்கு ஓரு செய்தியை விட்டு வந்தேன். அச்செய்திக்குப்பதிலும் கிடைத்தது. அதில் இக்கருவியை குறைந்தது ஐந்து பேர் பயன்படுத்துவதாயின் தமிழ் மொழியையும் உத்புகுத்துவதாக உள்ளது. இது முக்கியமான தேவையாயின் நக்கீரன்,சுந்தர்,ரவி அல்லது யாராவது கவனம் ஏடுக்கவும். If it is must leave a message using the link in that page. Thanks --ஜெ.மயூரேசன் 10:04, 22 ஜனவரி 2006 (UTC)

ஆனால், இவ்வாறு செய்வதற்கு ஒரே தலைப்பு இருக்க வேண்டுமல்லவா? நமது கட்டுரைகளில் தமிழில் தலைப்பு உள்ளது, பிற மொழிகளில் வேறு தலைப்பு இருக்குமே. நாமாக இந்தத் தகவலைத் தர முடியுமென்றால் பயனிருக்கும். -- Sundar \பேச்சு 03:55, 14 பெப்ரவரி 2006 (UTC)
ஆ....அப்படியா--ஜெ.மயூரேசன் 11:31, 14 பெப்ரவரி 2006 (UTC)

TWpedia Recent Changes page is very CLUTTERED.

[தொகு]

TWpedia Recent Changes page is very cluttered (at the top, not the listing). That may off put some readers. Perhaps, someone could re word it more effectively, and reformat with an aim for clarity and aesthetic presentation. Of course, all the details need to be included. --Natkeeran 00:46, 4 பெப்ரவரி 2006 (UTC)

Let's do something about it soon. -- Sundar \பேச்சு 03:55, 14 பெப்ரவரி 2006 (UTC)

விக்கி மூலம் தமிழ் படுத்தப்பட்டு, பழந்தமிழ் நூல்கள் அங்கு இடப்படவேண்டும்

[தொகு]

அன்புடன் நற்கீரன்,

நான் விக்கி செயற்றிட்டத்துடன் அதிகம் பரிச்சயமானவனல்ல. என்னிடம் நிரந்தர இணைய இணைப்பு இல்லாததால் விக்கிக்கு எந்தப் பங்களிப்பும் செய்தவனுமல்ல. நூலகம் திட்டத்தில் நூல்களை வெளியிடுயும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன் என்பது மட்டும் தான் இணையத் தமிழுக்கு என்னாலான சிறு பங்களிப்பு . ஆயினும் விக்கித் திட்டம் தொடர்பான பிரமிப்பு ஆர்வமும் என்னிடம் சில காலமாக இருந்து வருகிறது. விக்கிபீடியா , விக்சனரி, விக்கிபுக்ஸ் மற்றும் விக்கிசோஸ் ஆகிய நான்கையும் தமிழில் நன்கு வளர்த்தெடுப்பது மிகவும் பயனுடையதாக இருக்கும் என்றே கருதுகிறேன் . இவ்விடத்தில் எனக்கு ஒரு பெரும் குழப்பம் இருக்கிறது. அது விக்கிபுக்ஸ் இல் பழந்தமிழ் நூல்கள் தொகுக்கப்படுவது . நேற்று மதுரைத்திட்டத்துக்கு வந்திருந்த மடல் என் குழப்பத்தை மேலும் அதிகமாக்குகிறது. மதுரைத் திட்ட நூல்களை விக்கிபுக்ஸ் உடன் இணைக்கலாமா என்று மதுரைத்திட்டத்தின் கல்யாணசுந்தரத்தை கேட்டிருக்கிறார்கள். ஆனால் பழந்தமிழ் நூல்கள் இணைக்கப்பட வேண்டிய சரியான இடம் விக்கிசோஸ் தானே ? அங்கு தானே மூல ஆவணங்கள் தொகுக்கப்படுவது பொருத்தமானது? ஆங்கில விக்கித் திட்டங்களை பார்க்கும் போது நான் நினைப்பது சரியெனவே எனக்குப் படுகிறது. விக்கிபுக்ஸ் பகுதியில் நாம் உருவாக்க வேண்டியவை கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் edit செய்யக்கூடிய கட்டற்ற நூல்கள் மற்றும் கையேடுகள் அல்லவா? திருக்குறளில் மாற்றங்கள் செய்வது எவ்விதம் பொருத்தமானது ? விக்கிசோஸ் மற்றும் விக்கிபுக்ஸ் ஆகியவை தமிழைப் பொறுத்தவரை மிகவும் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன. ஆரம்பத்திலேயே தவறான பாதையில் செல்வது பொருத்தமானதல்ல் . விக்கிப்பீடியாவுக்கு தொடர்ந்து பங்களிப்பவராக அறிந்தே உங்களுக்கு இந்தமடலை எழுதுகிறேன் . இம்மடலை மயூரானந்தம், ரவி, சிவகுமார், சுந்தர் ஆகியோருக்கும் forward செய்து விடுங்கள். விக்கிபுக்ஸ் பகுதியில் தமிழுக்குத் தேவையான நிறையக் கையேடுகள் மற்றும் நூல்களை உருவாக்கிக் கொள்ள முயல வேண்டும் . கணினித் தொழினுட்பம் நன்கு தெரிந்தவர்களுக்கு தமிழ்மொழியில் போதிய பரிச்சயம் இல்லாமையால் யுனிக்கோட்டில் உள்ள குழப்பங்கள் மற்றும் ர் க்கு கால் காணாமற் போனது போன்றவை ஏலவே ஏற்பட்டுள்ளன . இத்தகைய மோசமான விபத்து விக்கிச் செயற்றிட்டத்திலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த மடலை எழுதுகிறேன். விக்கித் திட்டத்தில் தொடர்ந்து விவாதிக்க தேவையான இணைய இணைப்பு என்னிடமில்லை. இதே காரணத்தால் விக்கிசோஸ் மற்றும் விக்கிபுக்ஸ் என்பன பற்றி நான் முழுமையாகத் தவறாக விளங்கிக் கொண்டும் இம்மடலை எழுதியிருக்கக்கூடும் . ஆதலால் உஙகளிடமிருந்து சிறு பதில் ஒன்றைப் பெற ஆவலாயுள்ளேன்.

தோழமையுடன், கோபி


அன்புடன் கோபிக்கு:

மடலகுக்கும் ஆர்வத்துக்கும் நன்றிகள். நூலகம் திட்டத்தில் உங்களின் அமைதியான, பொறுமையான பணியை நான் நன்கு அறிவேன். நன்றிகள். நான்கு விக்கி ஆக்க மார்கங்களை வளர்ப்பது மிகவும் பயனுடையது என்பதே என் கருத்தும்.


விக்கிநூல்கள் திட்டத்தில் எந்தவகை புத்தகங்கள் இணைக்கலாம், இணைக்கவேண்டும் என்பது குறித்து பரந்த கலந்துரையாடல் நடைபெறவில்லை என்பது உண்மைதான். ஸ்ரீஹரி என்னும் அன்பர் விக்கிநூல்கள் திட்டத்தில் அண்மையில் சற்று அதிகம் அக்கறை காட்டி வருகின்றார். பழந்தமிழ் நூல்களை விக்கி மூலத்தில் சேர்ப்பதுதான் சரி என்றும் எனக்கும் தோன்றுகின்றது. நீங்கள் சுட்டியது படி, விக்கிநூலகள் நாம் உருவாக்கும் கட்டற்ற நூல்களுக்கு உரிய இடம் என்பது சரி என்றே தோன்றுகின்றது.


ஏன் இப்படி செய்ய முயற்சிக்கின்றார்கள் என்பதற்கு ஒரு காரணத்தை என்னால் ஊகிக்க முடியும். விக்கி மூலத்தின் இடைமுகம் இன்னும் தமிழ் படுத்தப்படவில்லை, மற்று விக்கி மூலத்திற்கான தமிழ் பிரிவை இன்னும் ஆரம்பிக்ககூட இல்லை. ஆகவே பழம்தமிழ் மூல நூல்களும் தற்சமயம் விக்கி நூல்களுக்குள் இடுவதை பொருத்தம் என்று அவர்கள் கருதலாம். இதனால், தொலை நோக்கில் இன்னுமொரு இடப்பெயர்ச்சி செய்ய வேண்டி வரலாம். அடடிப்படையில் நான்கு விக்கிகளுக்கும் உபயோகிக்கும் மென்பொருள் ஒன்றே. விக்கிபீடியாவிற்கே பிரத்தோயகமாக வடிவமைக்கப்பட்டு பிற திட்டங்களுக்கும் உபயோகிக்கப்படுகின்றது. ஒரு இடைமுகத்தை இன்றைப்படுத்தும் பொழுது பிற இடைமுகம்களும் இன்றைப்படுத்கூடியதாக இருக்கலாம். அப்படி ஒரு வழு இன்னும் பதிய பட வரிசையில் நிற்கின்றது. இதைப்பற்றி பிற பயனர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.


நீங்கள் சுட்டிய கருத்து கவனத்தில் எடுக்கப்படவேண்டிய ஒன்றே. இதைப்பற்றி பிறருடன் பகர முற்படுவேன். மேலும், விக்கி மூலத்தின் தமிழ் பதிப்பையும் தொடக்க வேண்டும். எல்லோரும் தன்னாவலர்கள் என்பதால் உடனுக்குடன் செயல்பட முடிவதில்லை.


விக்கிபீடியாவில் எப்படிப்பட்ட தகவல்கள் பகிரப்படவேண்டும் என்பதில் சற்று தெளிவு இருக்கின்றது. அங்கு எப்படி ஒன்றை செய்வது என்பது பற்றி விளக்கமானமான செய்கை விளக்கங்கள் இடுவது குறைவு. அதற்கு விக்கி நூல்களே சிறந்த இடம். மேலும், விக்கிபீடியா ஒரு சராசரி கல்லூரி மாணவனை நோக்கியே எழுதப்படுகின்றது எனலாம். எனவே, சிறுவர்களுக்கு தேவையான ஆரம்ப நூல்களையும் விக்கி நூல்களில் பதியலாம். மேலும், த.வி. சற்று நேர்த்தியான, விடய நோக்க அல்லது புறந்திட, எளிய, கருவிமூல தமிழ் நடையை கையாள முயற்சிகின்றோம். விக்கி நூல்களின் நடை அப்படி இல்லாமல், தன்னிலையிலோ, முன்னிலையிலோ அமையலாம் என்று நினைக்கின்றேன்.


விக்சனரியின் ஆக்க கட்டமைப்பு இன்னும் ஆரம்ப நிலையில் இருக்கின்றது. அதை முன்னின்று மேற்கொள்ளு ரவி தற்சமயம் தனிப்பட்ட பிற வேலைகளில் ஆழ்ந்து இருப்பதால், அதன் வளர்ச்சி சற்று மந்தமாக இருக்கலாம். என்ன மாதிரி விளக்கங்கள் ஒரு சொல்லுக்கு சேர்க்கப்படவேண்டும், எப்படி நுட்பகட்டுமானத்தை மேம்படுத்தி பயனர்களுக்கு சொற்கள் பதிவதை இலகுவாக்கலாம் போன்ற விடயங்கள் குறித்து உரையாடல்கள் அவ்வப்பொழுது இடம்பெறும்.


இப்படியான உரையாடல்கள் ஆலமரத்தடியில் இடம்பெறுவது வழமை. சுட்டி கீழே:


விக்கிபீடியாவின் சமுதாய வாசலுக்கு சென்றீர்களானால், அங்கு உங்களுக்கு மேலும் தகவல்கள் கிடைக்கலாம். விக்கி தொகுப்பது தொடர்பான எந்த சந்தேகளையும் ஒத்தாசை பக்கத்தில் கேளுங்கள். அல்லது எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள், இயன்றவரை உதவ முற்படுவேன்.


விக்கியின் நுட்ப கட்டமைப்பு முக்கியமானது. ஆனால், அதன் முதுகெலும்பு சமூக மற்றும் ஆக்க கட்டமைப்புக்களே. இதை நாம் கூட்டாகவே கட்டமைக்கின்றோம். பல த.வி. பயனர்களின் கருத்து என்னவென்றால், பல தரப்பட்ட தகவல்களை தமிழில் குவிக்க விக்கிபீடியா ஒரு சிறந்த மார்க்கம். பலருடைய கூட்டு முயற்சியே இது. ஆகையால், த.வி. பிறருக்கும் அறிமுகப்படுத்தவேண்டும். முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் த.வி. அறிமுகப்படுத்தி பங்களிக்க உந்துங்கள். மேலும், நேரமும் வசதியும் கிடைக்கும் பொழுது உங்கள் பங்களிப்பும் த.வி.யாவை மேன்படுத்தும்.

இறுதியாக, நூலகத்தின் பல புத்தகங்களை அவ்வப்பொழுது படிப்பேன். புத்தக தெரிவு நன்று. பல தகவல் சார் நூல்கள் இருக்கின்றன. மேலும், உங்கள் மடலின் பிரத்யோக, கருத்து சரியே, பிறரின் கவனத்துக்கு கொண்டு வர முயற்சிப்பேன். விக்கி மூலத்தின் தமிழ் பிரிவை ஆரம்பித்து, அங்கு பழந்தமிழ் நூல்களை இடுவதுவே மிகவும் பொருந்தும். நன்றி.


இப்படிக்கு, நற்கீரன்


பி.கு:(இவ் இரு மடல்களையும் பொதுவில் (ஆலமரத்தடியில்) இடவிருக்கின்றேன், தனிப்பட்ட விடயங்கள் எதுவும் இல்லையென்பதால், ஆட்சோபிக்க மாட்டீர்கள் என கருதுகின்றேன்.)

மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது பழந்தமிழ் நூல்களுக்கு விக்கிமூலமே சரியெனத் தோன்றுகிறது. விக்கிநூல்கள் பங்களிப்பாளர்களால் தொகுக்கப்படுபவை. மற்றபடு இந்த முயற்சி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள். -- Sundar \பேச்சு 03:58, 14 பெப்ரவரி 2006 (UTC)
தமிழ் விக்கிபீடியா இடைமுகத்தை பிற தமிழ் விக்கி திட்டங்களிற்கு ஏற்றுவதில் நுட்ப அடிப்படையில் எந்த சிக்கலும் இருக்காது என்று நினைக்கிறேன் Special:Prefixindex/மீடியாவிக்கி:, Special:Prefixindex/வார்ப்புரு போன்ற சில பெயர்வெளிகளை இங்கிருந்து அங்கு பதிவேற்ற வேண்டும். இதற்கு வழு பதியலாம். அல்லது அவர்களால் முடியாது என்றால் ஒரு தானியங்கியை ஏவி இதைச் செய்யலாம். -- Sundar \பேச்சு 04:06, 14 பெப்ரவரி 2006 (UTC)

மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்திற்கு நான் அனுப்பிய மடலின் காரணமாக எழுந்துள்ள இந்த கலந்துரையாடல் எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது. அன்பர் கோபியின், விக்கிமூலத்தில் பழந்தமிழ் நூல்கள் உள்ளிடும் கருத்தை, நானும் ஆமோதிக்கிறேன். விக்கி புத்தக தள முகப்பு மற்றும் நுட்பம் ஓரளவு முழுமையாக இருந்தபடியால் தற்போதைக்கு அங்கு உள்ளீடு செய்து வருகின்றேன். விக்கி மூல தளம் இற்றைப்படுத்தப்பட்ட பிறகு வி.பு தொகுப்பில் உள்ள பழந்தமிழ் நூல்களை இடப்பெயற்சி செய்யலாம் என்றிருக்கிறேன். எனக்கு விக்கி மூலம் மற்றும் விக்கி புத்தக தளங்களின் நிர்வாக உரிமை கிடைத்தாலோ அல்லது தற்போதைய நிர்வாகிகளின் ஒத்துழைப்பு கிடைத்தாலோ இன்னும் விரிவாகவும் சிறப்பாகவும் செய்ய இயலும். முக்கியமாக தமிழ் விக்கி மூல தளத்தின் சுட்டி "ta.wikisource.org" எனத் தொடங்காதது ஏன் என்று விளங்கவில்லை. ஏனைய தமிழ் விக்கி தளங்களின் சுட்டிகள் அனைத்தும் "ta.wikixxxx.org" எனத் தொடங்குகிறது. --ஸ்ரீஹரி 05:41, 14 பெப்ரவரி 2006 (UTC)

விக்கிநூல்கள் புதிய பாடப் புத்தகங்களை (Text Books) உருவாக்குவதற்கான இடம் என்றுதான் வாசித்ததாக ஞாபகம். பழந்தமிழ் நூல்களுக்கு உரிய இடம் விக்கிமூலம்தான். ஆரம்பத்தில் எல்லாமொழிகளுக்கும் உரிய விக்கிமூலப் பக்கங்களும் தனித்தனியான முதல் பக்கங்களுடன் ஒரே தளத்தில், ஆங்கில இடைமுகங்களுடன்தான் இருந்தன. அதனால் தான் தமிழுக்கும் 2004 ஆம் ஆண்டில் அவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுது சில மொழிகளுக்குத் தனி domains உள்ளன. தமிழுக்கும் தனி domain கோர முடியும். இந்தப் பக்கத்துக்குப் போய் இதற்கான கோரிக்கையை வைக்கலாம். அதற்கும் ஆதரவு எதிர்ப்பு வாக்குகள் பதியப்படுவதற்காகக் காலம் ஒதுக்கப்படுகிறது. இதனால் தனி domain கிடைப்பதற்குச் சிறிது காலம் ஆகும்போல் தெரிகிறது. ஸ்ரீஹரி, உங்களுக்கு விக்கிமூலம், விக்கிநூல்கள் போன்றவற்றுக்கான நிர்வாகிதரம் பெறுவதில் ஆர்வம் இருந்தால் இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள். விக்கிமூலத்தைப் பொறுத்தவரை தனித் தளம் தொடங்கப்பட்டபின்பே இதனைச் செய்யமுடியும். தனி domain கோரிக்கை வைக்குமுன் சில வேலைகளும் செய்யவேண்டும் போல் தெரிகிறது. இதை வாசித்துப் பர்க்கவும்.Mayooranathan 17:10, 14 பெப்ரவரி 2006 (UTC)


சுந்தர், ஸ்ரீஹரி, மயூரநாதன் கருத்துக்களுக்கு நன்றி. ஸ்ரீஹரி, நீங்கள் ஏற்கனவே விக்கி நூல்கள் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நீங்கள் விக்கி மூல திட்டதில் Bureaucrat வசதிகளை பெறுவது நன்று. நீங்கள் சரியென்றால், ஒரு வேண்டுகோளையும் எமது ஆதரவையும் மயூரநாதன் மேலே சுட்டிய பதிவில் இட்டுவிடலாம். --Natkeeran 01:31, 15 பெப்ரவரி 2006 (UTC)

தனி domain கோருமுன், ஏற்கெனவே இருக்கும் முதற் பக்கத்தை சிறிது முன்னேற்றுவதுடன், வேறு சில நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும் நிதானமாகச் ஆரம்பிக்கவும். Mayooranathan 09:48, 15 பெப்ரவரி 2006 (UTC)
நற்கீரன் கூரியபடி விக்கிநூலின் Bureaucrat பொறுப்பிற்கு மீட்டாவிக்கியில் விண்ணப்பித்துள்ளேன். விக்கிபீடியா நிறுவனர்களின் ஆதரவிற்கு நன்றி. --Srihari 19:25, 16 பெப்ரவரி 2006 (UTC)

ஸ்ரீஹரி தமிழ் விக்கிமூலம் திட்டத்துக்கான அதிகாரி தரத்தைத் தான் கோரப்போவதாக எண்ணியிருந்தேன். விக்கிநூல்கள் பக்கங்களில் தற்போது நிகழும் நடவடிக்கைகள் எல்லாமே அநேகமாக விக்கிமூலம் பக்கங்களுக்குச் செல்ல வேண்டியவைதான். எனவேதான் மூல நூல்களின் பதிவுகளில் ஆர்வம் காட்டும் ஸ்ரீஹரி விக்கிமூலத்துக்குத்தான் அதிகாரி தரம் பெற விரும்புகிறார் என எண்ணியிருந்தேன். நிற்க, மீட்டா விக்கியில் நிர்வாகி அல்லது அதிகாரி தரங்களுக்கு விண்ணப்பிக்குமுன் சில பணிகளைச் செய்யவேண்டியிருக்கும். ஸ்ரீஹரி விண்ணப்பித்த பக்கத்திலேயே விபரங்களைத் தந்திருக்கிறார்கள். வாசித்து அதன்படி செய்யவும். தமிழ் விக்கிபீடியாவிலும் ஆரம்பத்தில் இவ்வாறுதான் செய்தோம். தமிழ் விக்கிபீடியாவில் நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தைப் பார்க்கவும் இதைப் போன்ற ஒரு பக்கத்தைத்தான் நீங்கள் அங்கே உருவாக்கவேண்டும். மீட்டா பக்கத்தில் இதற்கு ஒரு இணைப்பும் கொடுக்க வேண்டும். தமிழ் விக்கிபீடியாவில் காணும் பக்கத்தையே நீங்கள் அங்கே பிரதிசெய்து தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.

நற்கீரன் என்னுடைய பயனர் பக்கத்தில் இது தொடர்பாகச் சில குறிப்புக்களை விட்டிருந்தார். விக்கிமூலத்துக்கு தனி Domain கோருவதில் தாமதம் (wait) செய்யுமாறு நான் குறிப்பிடவில்லை. நிதானமாக ஆரம்பிக்குமாறுதான் கூறுகிறேன். இப்போது ஸ்ரீஹரியின் விண்ணப்பத்துக்குக் கிடைத்த பதில் போன்ற பதில்களைத் தவிர்ப்பதற்காகத் தான் அவ்வாறு கூறினேன். விக்கிமூலம் விடயத்தில் தனி domain கிடைக்கக் காலம் ஆகும்போல் தெரிகிறது. எட்டு மாதங்களுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களும் அப்படியே இருப்பதைக் காண முடிகிறது. தொகுதி தொகுதியாகத் தான் தனி Domain கள் வழங்கப்படுகிறது போல் தெரிகிறது. ஆரம்பத்தில் சில மொழிகளுக்குக் கொடுத்தபின் ஒரேயொரு தடவை இன்னும் சில மொழிகளுக்குக் கொடுத்துள்ளார்கள். எனவே ஒரு முறை reject செய்தால் மீண்டும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதால்தான் உரிய பக்கங்களில் தரப்பட்டுள்ள எல்லா நிபந்தனைகளையும் வாசித்து அவற்றைப் பூர்த்தி செய்த பின்னர் கோரிக்கையை முன்வைக்கலாம் என்று கூறுகிறேன். இதை விரைவாகச் செய்யவேண்டும். அக் கோரிக்கையிலேயே அதிகாரி தரத்துக்கான பெயரையும் கொடுக்கவேண்டும். நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் தமிழ் விக்கிசோர்ஸ் முதற்பக்கத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன். இன்னும் செய்யவேண்டும். சில பக்கங்களையும் சேர்த்துள்ளேன். விக்கிமூலத்துக்கான அதிகாரி தரத்தை யார் பெறவிரும்புகிறீர்கள்? அவ்வாறு விரும்புபவர்கள் தங்கள் முகத்தை அங்கேயும் அடிக்கடி காட்டவும். அதிகாரி தரம் கோருவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகளுக்கான நிபந்தனைகளையும் நீங்கள் பூர்த்தி செய்கிறீர்கள் என்பதை நிச்சயம் செய்து கொள்ளுங்கள். என்னுடைய ஆதரவு என்றும் உண்டு. Mayooranathan 07:28, 17 பெப்ரவரி 2006 (UTC)


ஸ்ரீஹரி இந்த process தொடர்பாக எனக்கு சற்று தெளிவு இல்லாமல் இருக்கின்றது. மயூரநாதன் தந்திருக்கு இணைப்புகளை விரிவாக படித்து விட்டு மேலும் விடயங்களை பின்னர் பகிர்கின்றேன். என் ஆதரவும் உங்களுக்கு என்றும் உண்டு, ஆனால் அதை எங்கே formal தெரிவிப்பது என்று தெரியவில்லை. --Natkeeran 18:25, 18 பெப்ரவரி 2006 (UTC)

நற்கீரன், ஸ்ரீஹரி உங்களுக்கு இந்த விடயத்தில் குழப்பம் இருக்குமானால் நானும் என்னால் இயன்ற பங்களிப்பைச் செய்வேன். இரண்டு மூன்று தினங்களுக்குள் விக்கிநூல் இல் நிர்வாகி தரம் கோருவதற்கான பக்கத்தை உருவாக்கிவிடுகிறேன். ஸ்ரீஹரி நீங்கள் அதிகாரி தரம் கோர இருப்பதால் கொஞ்சம் கூடுதலாகத் தொகுப்பு வேலைகளைச் செய்யுங்கள். உங்கள் பெயரில் 250 க்கு மேற்படத் தொகுப்புகள் இருந்தால் நல்லது. விக்கிமூலத்திலும் என்னால் முடிந்ததைச் செய்து விடுகிறேன். விக்கிமூலத்தில் அதிகாரி தரம் பெறுவதற்குத் தமிழ் விக்கிமீடியாத் திட்டங்களில் ஆர்வமாகப் பணிபுரியும் யாராவது முன்வந்தால் நான் முன்மொழிந்து தனி domain க்கான கோரிக்கையையும் பதிந்து விடுகிறேன். Mayooranathan 19:18, 18 பெப்ரவரி 2006 (UTC)
விக்கிநூலில் நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தை உருவாக்கியிருக்கிறேன். Mayooranathan 18:40, 21 பெப்ரவரி 2006 (UTC)
I have also voted for srihari and nominated him at metawiki. Hopefully he get beureacrat access soon. Regarding the discussion about including old tamil poems / books at wiki books or source, I would say that including them at wikibooks is not a bad idea as most of the time people don just want to see the poem but also would like to know the meaning of the poem. so it would be an ideal place to develop a திறந்த உரை நூல் which would include the original poem along side the உரை. But I do understand and emphasise the need that the original poem should not be tampered. Some mechanism to watch this tampering should be eveolved. --ரவி 09:21, 1 மே 2006 (UTC)[பதிலளி]

சிறப்பு கட்டுரைப் படைப்பாளர்

[தொகு]

சில நாட்கள் முன்பு பெர்கிளி தமிழ் அன்பர் (ஏற்கெனவே எனக்கு அறிமுகமானவர் தான்) ஒருவர் கேண்டரின் குறுக்குக்கோடு சார்பின்மாறியைப் பற்றிய என்னுடைய வலைப்பதிவைப் பார்த்துவிட்டு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டார். பேராசிரியர். ஹார்ட் போன்ற பல தமிழறிஞர்கள் மற்றும் அறிஞர் குழுக்களுடன் அவருக்கு நல்ல அறிமுகம் உண்டு. அவர் தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கும், ஆங்கில விக்கிபீடியாவில் தமிழைப் பற்றிய கட்டுரைகளின் வளர்ச்சிக்கும் என்ன உதவி தேவை என்று கேட்டார். அப்பொழுது எண்ணிப் பார்க்கையில், மேலும் பயனர்கள் வர வேண்டும்; அதிலும் குறிப்பாக துறை வல்லுநர்கள் முதலில் வந்து பங்களித்து ஒரு நல்ல அடித்தளம் அமைத்துத் தந்தால், பொதுப் பயனர்கள் அவற்றின் மீது ஒரு நல்ல கலைக்களஞ்சியத்தை உருவாக்க முடியும் என்று தோன்றியது. இதற்கு வகை செய்ய, துறை வல்லுநர்களில் இருந்து வாரம் ஒருவரை அழைத்து சில கட்டுரைகளைப் பதியுமாறு கோரலாம். அவர்களின் கட்டுரைகளை விக்கிப்படுத்த நாம் உதவலாம். இதன் மூலம் பல துறைகளிலும் நல்ல கட்டுரைகள் வருவது மட்டுமின்றி தமிழ் விக்கிபீடியாவைப் பற்றிய செய்தி அறிஞர்களிடையே பரவவும் வழி ஏற்படும். இவ்வல்லுநர்கள் இணைய அறிமுகம் இல்லாதவராயின், கையெழுத்தாக வாங்கி நம்மில் எவரேனும் பதிவேற்றம் செய்யலாம். இந்த சிறப்பு விருந்தினர்களைப் பற்றிய சிறு குறிப்பை கட்டுரைப் பெயர்வெளியில் அல்லாமல் [[விக்கிபீடியா:]] பெயர்வெளியில் ஒரு சிறப்புப் பக்கத்தில் தரலாம். மற்றபடி அவர்களின் பங்களிப்பு காப்புரிமை விலக்கப்பட்டதாகவும், எவர் வேண்டுமானாலும் தொகுக்கப்படக்கூடியதாகவும் விக்கிபீடியாவின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதை அவர்களிடம் முன்கூட்டியே தெளிவு படுத்திவிடலாம். இந்தத் திட்டத்தைப் பற்றி மற்ற பயனர்களும் தங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள். -- Sundar \பேச்சு 08:13, 23 பெப்ரவரி 2006 (UTC)

இந்த முயற்சி பாராட்டத்தக்கது. தெளிவான துறை சார் கட்டுரைகள் இருப்பது இப்பக்கம் மீதான ஏனைய பயனரின் கவனத்தை ஈர்ப்பதாக அமையும் அத்துடன் பல புதிய பயனர்களை ஈர்ககவும் உதவும்.--ஜெ.மயூரேசன் 09:47, 23 பெப்ரவரி 2006 (UTC)

திட்டம் மிகவும் நன்று. நம்பகத்தன்மையை பன்மடங்கு அதிகரிக்க செய்யும். விக்கி நடைபற்றி சற்று முன்கூட்டியே தெரிவித்து விட்டீர்கள் என்றால் அவர்கள் அதற்கு ஏற்ற மாதிரி எழுதி தர முடியும்.

மேலும், மருத்துவ சமூகத்தையும் நாம் அணுகவேண்டும். மருத்துவ துறை தமிழின் ஒரு மரபு சார்ந்த துறை. தமிழில் அத்துறையில் பல்கலைக்கழக கல்வியே கற்கலாம் என்ற நிலையில் ஒரு சமயம் இருந்த துறை. பல நல்ல பழைய புதிய நூல்கள் தமிழில் உள்ளன. எனவே, அச்சமூகத்தையும் நாம் நாட வேண்டும். --Natkeeran 14:14, 23 பெப்ரவரி 2006 (UTC)

கண்டிப்பாக. மருத்துவத் துறை சார்ந்த கட்டுரைகள் விக்கிபீடியாவிற்கு மிகவும் தேவையானவை. பிற பயனர்களுக்கு இந்தத் திட்டத்தில் உடன்பாடு உண்டென்றால், இதற்கென ஒரு கொள்கைப் பக்கமும், அழைப்பிதழ் ஒன்றும், துறை வல்லுநர்களின் பட்டியல் ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும். -- Sundar \பேச்சு 04:04, 24 பெப்ரவரி 2006 (UTC)
சுந்தர், உங்களின் "சிறப்பு கட்டுரைப் படைப்பாளர்" திட்டம் தமிழ் விக்கிபீடியாவை பொறுத்தவரை, நீங்கள் குறிப்பிட்டபடி ஒரு நல்ல அடித்தளம் அமைக்கும் செயல்பாடாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ் விக்கிபீடியா சூழலுக்கும், ஆங்கில விக்கிபீடியா சூழலுக்கு அடிப்படையில் சில வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன. ஆங்கில விக்கிபீடியாவை காட்டிலும் ஆக்கங்களின் உள்ளடக்கத்தை நோக்கி நாம் சற்று கூடிய பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகவும், செயல்படவேண்டிய தேவை இருப்பதாகவும் உணர்கின்றேன். இதையே மயூரநாதன், ரவி மற்றும் பிற பயனர்களும் பல சந்தர்ப்பங்களில் உறிதிப்படுத்தியுள்ளனர்.


ஆங்கில உலகில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருதப்படும் "என்சைக்லோபீடியா ஒஃ பிரிற்-ரானிக்கா"விற்கு துறை வல்லுநர்களின் நேரடி பங்களிப்பே அடித்தளமாக அமைந்தது. அதே வகையில் உங்கள் திட்டமும் நம்பிக்கை பெற்று தரும் என்று நம்பலாம். அந்த பெர்கிளி தமிழ் அன்பரின் உதவி அடித்தளமாக அமையகூடும். --Natkeeran 13:16, 24 பெப்ரவரி 2006 (UTC)

இந்த திட்டத்திற்குத் தேவையான கோட்பாடுகளை எவரேனும் உருவாக்குங்கள். விரைவில் செயல்படுத்தலாம். -- Sundar \பேச்சு 11:30, 1 மே 2006 (UTC)[பதிலளி]

See also related discussion at பயனர் பேச்சு:மு.மயூரன்#expert contributors--ரவி 11:40, 1 மே 2006 (UTC)[பதிலளி]

சில கூறுகள்

[தொகு]
  • இவ்வார சிறப்புக்கட்டுரையாளர் (முதல் பக்கம்)
  • பெயர், இடம், துறை உட்பட்ட சிறு அறிமுகம்
  • விரும்பினால் பட இணைப்பு
  • கட்டுரையாளர் தனது ஆக்கங்கள் () கீழ் த.வி. சேர்க்கப்படுகின்றன என்பதை தெளிவுபடுத்தல்.
  • குறைந்தது மூன்று கட்டுரைகள், பிற குறுங்கட்டுரைகளாகவும் இருக்கலாம் ?!
  • த.வி. மேம்படுத்தல் நோக்கி கட்டுரையாளரின் கருத்துக்கள்
  • முடிந்தால் நேரடி கருத்து பரிமாற்றம், தொடர் பங்களிப்பு

(எளிமையாக ஆரம்பிக்கலாம், தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பை விரிவாக்கி கொள்ளலாம்)--Natkeeran 13:06, 2 மே 2006 (UTC)[பதிலளி]

Forgive me if iam pessimistic or harsh but I have lot of second opinions about the suggestions made above. I am completely against featuring the expert's photo, profile etc., or whatsoever in the main page or in any wikipedia namespace page. I think this is against the wiki philosophy and donno whether similar things have been done in other language wikis. I understand there are unique ways to make things work in tamil society and this is one such thing but doesnt go well with how wikipedia works. Natkeeran's suggestion might make experts feel important and happy in contributing to wiki but I think it will divert our attention and make wikipedia like a regular online tamil magazine. There are more regular useful contributors working here and giving spotlight to new comer experts may be unfair. And then comes the next tough question of determining who is an expert in what field. If we want to apprecaite contributors specially in a separate page, then we can do so surely. But it should take into account the quality and quantity of user's wiki activity and nothing else.
If the expert himselves created an user account here, then he can include whatsoever he wants about himself in his user page. I don object it. Also, implementing natkeeran's suggestion would be time consuming and not sustainable in the long run. Sundar's idea that we can receive articles by email and post them here is fine. We can just mention in the article's talk page that the basic content was received from so and so, though its really not necessary. Its just a token of gratitude for participating in tamil wikipedia in someway.
The best thing is to spread the awareness about the importance of tamil wikipedia and the need for expert involvement and wait for such people to come and participate in wiki. I think thats how en wiki or any other successful wiki works. Once wiki becomes a significant resource the experts would automatically chip in to add thier contribution. If they are computer illiterate or reluctant to learn the way wiki works, then we can just receive content through email or writing and post it here. Credit can be mentioned in the talk page. If the content is from a previous published work, then we can cite it as source in the article page. I feel anything more we do about regularisig this expert contributions will distract us. --ரவி 13:28, 2 மே 2006 (UTC)[பதிலளி]
Ravi, you raise some important points. In retrospect, I agree with many of your comments. Perhaps, we can do some limited version in a separate page and notify in the Community Pages or Current Events pages!. I am not sure what are the best guide lines, but no one was responding to Sundars repeated requests, that’s why I forwarded few notes. Sundar, what sort of structure are you looking for? --Natkeeran 14:37, 2 மே 2006 (UTC)[பதிலளி]
Yes, I agree with Ravi. Their contributions would merit a mention in the Talk page at best. The structure I'm looking for is this a policy page explaining that they release their contributions under GFDL and anyone can edit it in anyway and with introductory material addressing the guest contributor. Some of them might eventually become regular contributors. -- Sundar \பேச்சு 06:55, 3 மே 2006 (UTC)[பதிலளி]

Tamil Wikipedia Country Project

[தொகு]

We are all aware that unlike any other Indian language and most other languages of the world Tamil does have a global spread. We must take advantage of that fact in developing information about Geographic regions, cultures, literature and other information. This will provide truly first hand, direct, tacit and local information that would be otherwise hard to amaze in Tamil. Also, original photographs can be added without license worries. Information that of special interest to Tamils about Tamil people, Tamil organizations, temples, and Tamil media and literature from those countries can be collected.

We can start with already committed members who live world wide. For instance, பயனர்:Kanags about Australia, பயனர்:Chandravathanaa about Germany, பயனர்:Ravidreams about Netherlands, பயனர்:Mayooranathan about UAE, பயனர்:Natkeeran about Canada, Eelanathan about Singapore etc. Most of us can also contribute to developing articles about India, Tamil Nadu, and Sri Lanka, the traditional home lands.

I am sure this has been in the mind of many Tamil Wikipedians, and I thought this would be of natural consequence of we all living world wide. But, I think we can accelerate this process, and develop fully if we actively purse this in a focused manner.

I propose this as a research project of sorts. This project is comparable to http://www.tamilnation.org/diaspora/, but the direct participation and open forum for contribution makes this project different, dynamic, and wider in scope. Further, the information will be available in Tamil, and will adhere to neutral point of view.

All comments regarding this initiative are welcomed. (I will post the Tamil version later). --Natkeeran 02:48, 23 ஏப்ரல் 2006 (UTC)

Natkeeran, u stole the words out of my mouth :) as u knew, i already left such requests in user pages of kanags and chandravathana. I promise to add info detail info about not only netherlands but also europe which will also help me gain knowledge about the region as i am gonna live here for the next few years. Global spread of tamil population is a plus in this aspect. Definitely as an encyclopedia, we need to write atleast stubs about all countries, languages, races, elements etc., Also, notable is that the country pages linked at http://www.tamilnation.org/diaspora/ all give links to tamil wikipedia country pages. This reveals the growing popularity of tamil wikipedia as a credible information source in online tamil forums and also reminds us about the need to maintain quality--ரவி 19:49, 24 ஏப்ரல் 2006 (UTC)

Thank you for your comments Ravi. I will formulate a minimum common list of items that we may want to include. The following is just a start:

Some items to include:
General Info – Country, Culture, Political Parties etc.

Tamil Related Info:

  • Researchers actively studying this topic (perhaps we can interest them in this project)
  • Tamil Population Numbers (with statistical proof from country sources) and locations
  • Tamil Immigration History
  • Tamils status and position within the country
  • List of Tamil Civil and Media organizations
  • List of Temples, Churches, Moseques
  • Status of Tamil language and Tamil culture at present, future trends
  • Country Tamil Literature

Original GPL, PD Photography I really would like to encourage some original photography, released under GPL or PD to be added. This would add tremendous value and interest.

Country Portal --Natkeeran 21:28, 24 ஏப்ரல் 2006 (UTC)


இது நல்ல திட்டம். நான் வாழும் UAE இல் தமிழர்களைப் பற்றி எழுதுவதற்கு அதிகம் இல்லாவிட்டாலும், வேறு நிறைய விடயங்கள் உள்ளன. இது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு நாடு. புதிய புதிய திட்டங்களை அறிவித்துச் செயற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்ப் பயனர்களுக்குப் பயனுள்ள வகையில் எழுதவேண்டும். ஆரம்பத்தில் UAE ஐப் பற்றிச் சில கட்டுரைகள் எழுதினேன். பெரும்பாலானவை குறுங்கட்டுரைகள்தான். சில Original Photographs கூட இருக்கின்றன. அண்மைக்காலங்களில் இது பற்றி நான் எழுத முயற்சிக்கவில்லை. மீண்டும் எழுத முயல்கிறேன். இந்த விடயத்தில் இந்தியாவிலும், இலங்கையிலும்கூட செய்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன. முக்கியமாக இவ்விரு நாடுகள் தொடர்பிலும் நல்ல படங்கள் மிகவும் குறைவு. மிக முக்கியமான கட்டுரைகளிற்கூட படங்கள் பற்றாக்குறையாகவே உள்ளது. அந்த நாடுகளில் வாழும் பயனர்கள் கவனம் எடுத்தால் நல்லது. Mayooranathan 17:26, 27 ஏப்ரல் 2006 (UTC)

Regular things to do list

[தொகு]

Along the lines of suggestion made by natkeeran in main page talk page, we need to have an idea about the frequency of doing some things in administering tamil wikipedia. I feel its important to have regular downloads of tamil wikipedia files. anyone can do this whenever they wish but the admin members can take care and share the responsibilty to do it often (once in 2 weeks atleast) to see that the hard work done by the wiki editors is not lost at any time due to technical faults, server crashes.

Next, with increasing article counts and the temptation to do it, i feel we sometimes overlook the need to wikify, expnad, improve the existing articles. I suggest that all the active editors / admins set aside two months in a year just to improve the existing articles and check the correctness of the info. This can be done once in 6 months, say in June and december. Improving can be of any sort, namely, killing the stub and translate templates (there are alarmingly growing number of stubs and translate notices even for important article topics), wikifying, adding credible source, images etc.,However this is just a suggestion in good spirit and may not go down well with the wiki spirit of the freedom to do anything u want the way u like. We may just invite volunteers to do this task in selected two months, so those volunteers will resist the temptation to create new articles and instead focus on improving the quality of already existing ones, either created by them or others. I look forward to others opinions regarding this and any other suggestion to keep a watch on Tamil wikipedia quality--ரவி 13:27, 27 ஏப்ரல் 2006 (UTC)

ரவி, நாம் சமீபகாலமாக பல கையேடுகளையும், வழிமுறைகளையும் பரிந்துரை செய்து வருவதால், கூடிய தேவையற்ற கட்டுப்பாடுகளை அல்லது சிக்கலை (red tape) கொண்டு வருகின்றோமோ என்றும் தோன்றுவதுண்டு. அதே சமயம் ஒழுங்கிய கட்டமைப்பு தேவை என்றும் தோன்றுகின்றது. wikipedia:தமிழ் விக்கிபீடியா தர கண்காணிப்பு (Tamil Wikipedia Quality Watch) என்ற தலைப்பின் கீழ் நீங்கள் இட்ட கருத்துக்கள் நன்று. அதற்கென்று ஒரு பக்கம் உருவாக்கினால் என்ன என்று கூட தோன்றுகின்றது. நீங்களும், மயூரநாதனும் இதைப்பற்றி பல இடங்களில் எழுதி வருகின்றீர்கள்.


wikipedia:பக்க வடிவமைப்பு கையேடு (Layout Guide) ஒன்றும் தேவை என்று தோன்றுகின்றது. உதாரணமாக, வெளி இணைப்புகள் என்றே அனைத்து பக்கங்களிலும் குறித்தல், குறிப்புக்கள் இடும் முறைகள், இடவெளி பரிந்துரைகள் போன்றவற்றை நோக்கி சில பரிந்துரைகளை அல்லது வழிகாட்டல்களை ஏற்படுத்தினால் நன்று.


மேலும், இன்றைப்படுத்தல் பட்டியல் அல்லது அது போன்று ஒன்று நன்று, ஆனால் அது முதற் பக்கத்துக்கே வசியம் என்று எனக்கு தோன்றியது. அங்கு செயல்படுத்தி விரிவாக்கலாம்.


ரவி, குறுங்கட்டுரைகள் உருவாக்குவது நன்று என்றே தோன்றுகின்றது. சிவகுமார் உருவாக்கிய பல குறுங்கட்டுரைகள் உள் இணைப்புகள் குடுக்கும் பொழுது, விரிவாக்கம் செய்ய நான் நினைத்த பொழுது மிகவும் உதவியது. குறிப்பாக அவர் பல மிருகங்கள், நாடுகள், இடங்கள், கடவுள்கள் பற்றி பல குறுங்கட்டுரைகள் எழுதியுள்ளார். குறிப்பாக ஆங்கில விக்கிபீடியாவிற்கும் இணைப்பு தந்தால், அப்படிப்பட்ட குறுங்கட்டுரைகள் நன்றே.


இரண்டு மாத யோசனை, தற்போதைக்கு பொருந்தாது. தற்போதைய கட்டுரைகளின் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று மடங்கு பெருகையில், அவசியமாகலாம். எனினும், விக்கியாக்கம், ஆங்கில விக்கி இணைப்பு, உள் விக்கி இணைப்பு, வகைப்படுத்தல் நாள் விடமால் செய்ய வேண்டும். இல்லா விட்டால் ஆபத்து. நீங்களும் பிறரும் சீக்கிரம் இப்பணியில் இணைவீர்கள் என நம்புகின்றேன். --Natkeeran 14:15, 27 ஏப்ரல் 2006 (UTC)

(விரியும்)

விக்கிபீடியா தமிழ் பக்கங்களைப் பதிவிறக்கி வைப்பது பற்றி நானும் யோசனை செய்துதான் வந்தேன். செய்யத்தான் வேண்டும். ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகளை விரிவாக்குதல், படிமங்கள் முதலியவற்றைச் சேர்த்துக் கட்டுரைகளின் தரத்தைக் கூட்டுதல் போன்றவை மிகவும் முக்கியமானவை. இது விடயத்தில் ரவியின் கருத்துக்களோடு நான் உடன்படுகின்றேன். தமிழ் விக்கிபீடியாவைக் கட்டுப்பாடாக வளர்க்க முற்படுதல் விக்கிபீடியாவின் அடிப்படைடைகளுக்கு எவ்வகையிலும் முரணானது அல்ல. ஓரளவு கட்டுப்பாடும் தரப்படுத்தலும் நிச்சயம் தேவை என்பதே எனது கருத்து. இருக்கும் கட்டுரைகளைத் தரம் உயர்த்துவதற்கு நேரம் ஒதுக்குவது பற்றிய ரவியின் கருத்துப்பற்றி ஆராயலாம். Mayooranathan 17:41, 27 ஏப்ரல் 2006 (UTC)

Natkeeran, I wanna make one thing clear. Either this two months idea or any other suggestion in order to maintain the quality, we are not forcing anyone. New users and eperienced users are all free to do things the way they like. We just point out how things can be done better. If they feel its ok and fine, let them do the corrections themselves. Or anyone else can make those corrections if it is agreed that the correction improves the article. This way all users are free to contribute and at the same time we can improve the article. I am very sure that all current active editors , admins in Tawiki have good rapport and I hope we keep this trend for ever. In that case no one would feel any red tapism like thing. Who ever likes this idea of setting aside time for quality improvement can volunteer to take part. thats all. It can be like a mini project within Ta wikipedia community. Ofcourse this project should be continous but at times we all (including me) tend to keep creating new articles whereas we still could contribute to our own old articles.

I don oppose creation of stubs. Many times, it seems nice to see new articles coming up and it keeps the community motivated. I just propose that we should take care not to let them stubs for ever. Atleast on imporatant topics like countries we should kill the stubs and should work to kill the translate stubs.

The current manual of style touches many aspects of layout design. Still the separate guide u have mentioned could be worked on.--ரவி 18:48, 27 ஏப்ரல் 2006 (UTC)

banyan tree image removal?

[தொகு]

Sundar, can we remove the banyan tree image in this picture or atleast keep it as a thumb. I feel it hinders the readability of the page and takes time to download. Sorry, just a trivial question--ரவி 18:48, 27 ஏப்ரல் 2006 (UTC)

Definitely. Not a problem. -- Sundar \பேச்சு 06:17, 28 ஏப்ரல் 2006 (UTC)

கலைச்சொற்கள்

[தொகு]

துறைசார்ந்த கலைச்சொற்களைப் பொறுத்தவரை www.tamilvu.org தளத்தின் நூலகத்தில் கிடைக்கும் கலைச்சொல் அகராதிகளைப் பயன்படுத்தலாம் என்று கருதுகிறேன்.குறிப்பாக தமிழ்நாட்டுப் பாடநூல் கழக அகராதியைப் பயன்படுத்தினால் தமிழ் வழியில் பயின்றோர்க்கு துறைசார்ந்த கட்டுரைகளைப் படிக்கும்போது ஒரு தொடர்ச்சி இருக்கும். புரிதல் எளிதாகும்.விக்கியில் எதைப் பின்பற்றி வருகிறீர்கள் என்பது குறித்து என்னை ஆற்றுப்படுத்தவும். Paramatamil 17:27, 30 ஏப்ரல் 2006 (UTC)

பொதுவாக www.tamilvu.org அகராதியே பயன்படுத்தப்படுகின்றது. எனினும், இலங்கையிலும் நன்கு விரிவான கலைச்சொல் அகராதிகள், மற்றும் கலைச்சொற்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. மேலும், www.tamilvu.org சில இடங்களில் இரு பொருள்களை தருவதோடு, எல்லா சொற்களுக்கும் பொருத்தமான பரிந்துரைகளை தருவதாக சொல்லமுடியாது. மேலும், www.tamilvu.org இன்றைப்படுத்தப்படுகின்றதா, அல்லது விரிவுபடுத்தப்படுகின்றதா என்று தெரியவில்லை. பக்கங்களை Redirect செய்வதன் ஓரளவுக்கு இப்பிரச்சினையை கையாளலாம்.
எனினும், ஒவ்வொரு துறைக்கும் ஒரு தரப்படுத்தப்பட்ட கலைச்சொல் பட்டியலை விக்கிபீடியாவில் சேர்ப்பது நன்று என்றே எனக்கு படுகின்றது. அப்பட்டியல் www.tamilvu.org அடிப்படையாகவும், இலங்கை வழக்கங்களை உள்வாங்கியும், நல்ல கலைச்சொல்களை முன்னிறித்தியும் ஏற்படுத்தினால் நன்று. கட்டுரைகள் மேலும் மேலும் தமிழ் விக்கிபீடியாவில் இணைக்கப்படுமிடத்து, தேவைக்கேற்ப இப்பட்டிலை விரிவாக்கி கொள்ளலாம். இலத்திரனியல் துறைக்கு பின் வரும் பக்கங்களை கவனிக்க:
* இலத்திரனியல் நுட்பியல் சொற்கள்
* இலத்திரனியல் எண்ணுதிகள் பட்டியல்
மேலும், பின்வரும் அம்சமும் கலைச்சொல் குழப்பங்களுக்கு தீர்வின் ஒரு பகுதியாக அமையும். http://ta.wiktionary.org/wiki/electronics
--Natkeeran 21:53, 30 ஏப்ரல் 2006 (UTC)

தமிழ் கலைச்சொற்களைப் பொறுத்தவரை இணையத்திலுள்ள அகராதிகளில் சிறந்ததும், விரிவானதும் www.tamilvu.org இல் உள்ள அகராதியே என்பதில் சந்தேகம் கிடையாது. நானும் இதையே கூடிய அளவுக்குப் பயன்படுத்தி வருகிறேன். ஆனாலும் புதிய சொற்கள் இதில் சேர்க்கப்படுவதாகத் தெரியவில்லை. அடிக்கடி இற்றைப்படுத்தப்படக்கூடிய கலைச்சொல் அகராதியொன்று தமிழில் மிக அவசியமாகத் தேவைப்படுகிறது. விக்கி திட்டங்களில் ஒன்றில் இதனைச் செய்வது இலகுவானது என்பது எனது கருத்து. ஆனால், விக்கிபீடியாவில் சொற்பட்டியல்களைச் சேர்ப்பது அவ்வளவு நல்லதாக எனக்குப் படவில்லை. விக்சனரியில் இதனைச் செய்யலாம். (இங்கே_பார்க்கவும்)அதுதான் பொருத்தமானது. தேவைப்படும்போது விக்கிபீடியாவிலிருந்து விக்சனரிக்கு இணைப்புக் கொடுக்கமுடியும். Mayooranathan 18:12, 1 மே 2006 (UTC)[பதிலளி]

விக்கிபீடியா ஒரு அகராதி இல்லை என்பதை நான் அறிவேன். சொற்பட்டியல்களை விக்கிபீடியாவில் சேர்க்க நான் பரிந்துரை செய்யவில்லை. எண்ணக்கரு பட்டியல்கள், அதாவது விக்கிபீடியாவில் கட்டுரையாக்கப்படவேண்டிய துறைசார் எண்ணக்கருக்கள்/சொற்கள்/தலைப்புகள் பட்டியலைதான் குறிக்க முனைந்தேன். இதை ஒரு தற்காலிக ஏற்பாடக கூட செய்து கொள்ளலாம். விக்சனரியின் கட்டமைப்பு தற்போது புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது. --Natkeeran 18:45, 1 மே 2006 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்சனரி ஒரு பன்மொழி அகரமுதலி போலவே கட்டமைக்கப்பட்டுள்ளது. என்னுடைய கருத்துப்படி ஆங்கில விக்சனரிகூட அமைப்பிலும் உள்ளடக்கத்திலும் இன்னும் முதிர்வு நிலையை அடையவில்லை என்றே கூறுவேன். எனவே தமிழ் விக்சனரியின் கட்டமைப்பில் விளக்கம் போதாமல் இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனாலும், தமிழ் விக்சனரியின் கட்டமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அவ்வளவு சிரமமானதாக இருக்காது என்றே நான் கருதுகிறேன்.

தமிழ் விக்சனரியின் கட்டமைப்பில் அடிப்படையாக இருக்கவேண்டியது ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய தனித்தனிப் பக்கங்கள். ஒவ்வொரு பக்கமும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்குரிய பொருள்களையும், அவற்றின் பல்வேறு பயன்பாடுகளுக்குரிய இலக்கண விதிகள், எடுத்துக்காட்டுகள் மற்றும் வேறு விபரங்களையும் கொண்டிருக்கும். இச் சொற்களைத் தேடுவதற்காக இரண்டு வகையான வழிகள் இருக்கும்.

  1. அகர வரிசைத் தேடல்
  2. விடயம் சார்ந்த தேடல்

இதில் விடயம் சார்ந்த தேடலுக்காகப் பல்வேறு சொற் பட்டியல்கள் பின்னிணைப்புகள் என்ற தலைப்பில் இருக்கும்.

தற்போதைய தமிழ் விக்சனரியின் அமைப்பு ஏறத்தாள இவ்வாறுதான் உள்ளது. எனினும் தனித்தனிச் சொற்களுக்கான பக்கங்கள் விரிவான வளர்ச்சி அடையவில்லை என்பதுடன், இதன் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதிலும் அவற்றில் அடங்கவேண்டிய விபரங்கள் பற்றியும் தெளிவான தீர்மானத்துக்கு நாம் இன்னும் வரவில்லை. கலைச் சொற்கள் தொடர்பில், சில துறைகள் சார்ந்த தேடல் பட்டியல்கள்தான் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சொல்லுக்குமான தனித்தனிப் பக்கங்கள் இனிமேல்தான் உருவாகவேண்டும். கலைச் சொற்களைப் பொறுத்தவரை இப் பக்கங்கள் தமிழில் ஒரு புதிய முயற்சியாக இருக்கும். ஏனெனில் கலைச்சொற்கள் தொடர்பில், தமிழில் இப்போது பட்டியல்கள் தவிர வேறெதுவும் இல்லை. ஆனால் மேற் குறிப்பிட்ட தனித்தனியான விபரப் பக்கங்கள் பல பயனுள்ள விபரங்களை உள்ளடக்கியிருக்கலாம். சில எடுத்துக்காட்டுகள்:

  • சொல்லுக்கான வரைவிலக்கணம் (வெவ்வேறு துறைகளில் அவற்றுக்குரிய வேறுபாடுகளுடன்),
  • பல்வேறு பிரதேசங்களிலும் புழக்கத்திலுள்ள மாற்றுச் சொற்கள்,
  • அவற்றின் பொருத்தம் பொருத்தமின்மை பற்றிய விளக்கங்கள்,
  • குறியீடுகள் இருப்பின் அவைபற்றிய விபரம் (எகா: ஒளிவேகம் - c),
  • சமன்பாடுகள் அல்லது தொடர்புகள் (எகா: அடர்த்தி = திணிவு / கன அளவு)
  • விளக்கப் படங்கள்.

மேலே குறிப்பிட்டவாறு பல வகையான மாதிரிப் பக்கங்களை உருவாக்கவேண்டும். இதன் மூலம் இது பற்றிய புரிதலையும் அதிகரித்துக்கொள்ளலாம். Mayooranathan 18:47, 3 மே 2006 (UTC)[பதிலளி]

நல்ல கருத்து. பொருத்தமான இடங்களில் சொல் மூலத்தையும் இணைக்கலாம். -- Sundar \பேச்சு 06:25, 4 மே 2006 (UTC)[பதிலளி]

There is a bug in மீடியாவிக்கி:Nogomatch --சிவகுமார் 10:40, 29 மே 2006 (UTC).[பதிலளி]

Fixed. Check out. -- Sundar \பேச்சு 12:00, 29 மே 2006 (UTC)[பதிலளி]

வார்ப்புருக்கள்

[தொகு]

--Natkeeran 01:55, 31 மே 2006 (UTC)[பதிலளி]

For list of templates currently available in TWpedia see the special page--ரவி 08:32, 31 மே 2006 (UTC)[பதிலளி]


Manual of style proposals

[தொகு]

Please read the recent proposals for manual of style at Wikipedia பேச்சு:நடைக் கையேடு and give ur comments. Based on consensus within a week, let them be made official and included in the MOS main page. I also recomment viewing the MOS page onregular intervals to update oneself with the current MOS--ரவி 15:40, 1 ஜூன் 2006 (UTC)

விரைவில் எனது கருத்துக்களை பதிவு செய்வேன். --Natkeeran 17:02, 1 ஜூன் 2006 (UTC)

ஜூன் எதிர் யூன்

[தொகு]

ஜூன் எதிர் யூன், எது நன்றாக படுகின்றது? --Natkeeran 16:49, 2 ஜூன் 2006 (UTC)

ஜூன், என் தேர்வு. தமிழ்நாட்டில, யூன் என்றால் ஒருவருக்கும் புரியாது--ரவி 11:33, 9 ஜூன் 2006 (UTC)

??--Natkeeran 00:16, 17 ஜூன் 2006 (UTC)

தமிழில் நூல் வடிவில் விரிவான தமிழ் கலைக்களஞ்சியங்கள் உண்டு.

[தொகு]
1)Vaazhiviyar Kalanjiyam ( Encyclopedia )published by Tamil University  It is in 13 volumes and it costs Rs 700/= each.( Rs 9100/=.) 

2)Ariviyar Kalai Kalanjiyam also published by Tamil University. This is also in 13 volumes and costs Rs Rs 5700/=. 

--Natkeeran 14:19, 23 ஜூன் 2006 (UTC)