விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு39

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒலிபெயர்ப்புக் கையேடும் ஒலித்தல் பற்றிய விளக்கங்களும்[தொகு]

கடந்த சில நாள்களாக ஒலிபெயர்ப்பு பற்றிய விவாதத்தில் கலந்துகொள்ள இயலாமற்போயிற்று. மீண்டும் வந்துள்ளேன். :)

இ.பு.ஞானப்பிரகாசன் ஒலிபெயர்ப்பு பற்றிய ஐயப்பாடு எழுப்பவும், அதைத் தொடர்ந்து நானும் சில விளக்கங்கள் கேட்டேன். செல்வாவும் மயூரநாதனும் தெளிவான பதில் தந்தார்கள். உசாத்துணைகளைப் பரிந்துரைத்தார்கள் (குறிப்பாக, விக்கிப்பீடியா: ஒலிபெயர்ப்புக் கையேடு). ஒலிபெயர்ப்பு பற்றிய விரிவான விவாதம் பல தெளிவுகளைக் கொணர்ந்தது.

அத்தெளிவுகளை உள்ளடக்கி மாதிரி அடைவு (model table) ஒன்றினை உருவாக்கி அளிக்க முடியுமா?

இங்கே, செல்வா செருமானியம், பிரான்சியம், இடாய்ச்சு, இலாத்திரன் போன்றவை பற்றிக் கூறியதைக் குறிப்பிடுகிறேன். கிரந்த ஒலிகளுக்கு செல்வா தரும் குறியீடுகள் சிலவற்றை மெருகூட்டலாம்.

தமிழில் ka, kha, ga, gha ஆகிய நான்கு வேறுபாடுகளையும் காட்டலாம். நம் ககரம் ககரமாகவே இருக்க வேண்டும் என்றாலும், அந்த நான்கு வேறுபாடுகளையும் "க "க: 'க 'க: என்று குறிக்கலாம். அதாவது வேற்றுமொழி எழுத்து என்று க்ட்டகானா போல் தெளிவாகக் காட்ட எல்லா வல்லினத்திலும் ஏதேனும் திரிப்புக் குறி காட்டலாம். இப்போதைக்கு என் பரிந்துரை கூடிய மட்டிலும், தமிழ் முறைக்கு ஏற்ப திரித்து எழுதலாம். கூடிய மட்டிலும் கிரந்த எழுத்துக்களைக் குறைத்தோ தவிர்த்தோ எழுதலாம். கூடிய மட்டிலும் கலைச்சொற்களை மொழிபெயர்த்தோ, புத்தாக்கமாகவோ செய்யலாம். என்று செல்வா 19 நவம்பர் 2008 இடுகையில் குறிப்பிட்டிருந்தார். ரவி போன்றோரும் அக்கருத்துக்கு ஏற்புத் தெரிவித்திருந்தனர்.

அதன் பிறகு செல்வா போன்றோர் மாற்றுக் கருத்துகள் தெரிவித்திருக்கலாம். அவற்றை நான் அறியாமலும் இருக்கலாம்.

இருப்பினும், உருவாக்கப்பட வேண்டிய மாதிரி அடைவில் கீழ்வரும் அளவீடுகள் (criteria) கடைப்பிடிக்கலாம் என்பது என் கருத்து:

1) கூடிய மட்டிலும் தமிழ் எழுத்துகளைக் கையாள வேண்டும்; கிரந்த எழுத்துகளைத் தவிர்க்க வேண்டும்.


2) ka, kha, ga, gha ஆகியவற்றிற்கு "க, "க:, 'க, 'க: என்று செல்வா தருவது குழப்பம் வளைவிக்கும். ஏனென்றால் ", ', : என்னும் குறிகளுக்குக் குறிப்பிட்ட பொருள் ஏற்கெனவே உள்ளது. அப்பொருள் குறிக்கப்படுகிறதா என்னும் ஐயம் எழுந்துவிடும். பொதுவாக உள்ள குறியீடுகள் எண்கள் ஆகும். எனவே ka, kha, ga, gha, (ha) என்பவை முறையே க, க1,க2, க3, (க4) என அமைந்தால் பொதுமைப் பண்பு காக்கப்படும், குழப்பம் எழாது. கிரந்த எழுத்துகள் அனைத்தையும் இவ்வாறு வகைப்படுத்திவிடலாம். (செல்வா, அல்லது யாராவது அதற்கான பட்டியல் செய்துகொடுங்கள்! :)).


3) நாடுகளின் பெயர்களைத் தமிழ்ப்படுத்துவதற்கும் மேற்கூறிய அளவீட்டைக் கையாளலாம். எ.டு.: உருசியா, எசுப்பானியா, ஓலாந்து, செருமனி...


4) மொழிப் பெயர்கள் பெரும்பாலும் "அம்" ("இயம்") என்று முடிகின்றன. ஏற்கெனவே வழக்கில் இருப்பவை: மலையாளம், சிங்களம், ஆங்கிலம், வங்காளம், சமசு(ஸ்)கிருதம், பிராகிருதம், சீனம், கிரேக்கம்; இத்தாலியம், எசுப்பானியம், பிரான்சியம், போன்றவை. "இடாய்ச்சு", "இலத்தீன்" போன்ற விதிவிலக்குகள் தமிழ் முறைக்குள் அடங்கும். நெதர்லாந்து நாட்டில் பேசும் மொழி "டச்சு" என்று (ஆங்கிலப் பாணியில்) அழைக்கப்பட்டது வழக்கம். அதை இனிமேல் "நெதர்லாந்தியம்" என்பதே பொருந்தும். எனவே தமிழ் விக்சனரியில் வருகின்ற "dove" என்னும் சொல்லுக்கு "இடாய்ச்சு" மொழியில் பொருள் தருவது தவறு. அது "நெதர்லாந்திய"த்தில் "செவிடு" என்னும் பொருள்தரும்; "இடாய்ச்சு" (செருமானியம்) மொழியில் அல்ல. காண்க: dove


5) தமிழ் சொல் வடிவத்தையும் ஒலி அமைப்பையும் கூடிய மட்டிலும் மருத்துவம், வேதியியல், இயற்பியல் போன்ற துறைக் கலைச்சொல்லாக்கத்திலும் கடைப்பிடிப்போம்.


6) செல்வா போன்றோர் இங்கே வழிகாட்டலாம். பிறருடைய கருத்துகளை வரவேற்க வேண்டும். ஆனால் முதல் தேவை model table (மாதிரி அடைவு) உருவாக்கல் ஆகும் என்னும் கருத்தை முன்வைக்கின்றேன். நன்றி!--பவுல்-Paul 03:48, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

பல்லோரும் ஏற்கக்கூடிய, தரமான அட்டவணையைத் தர இருக்கின்றேன்.இது பற்றிக் கலந்துரையாடலாம். நான் கா'ந்தி, பா'பு என்று எழுதுவதி பொதுப்பயன்பாட்டுக்கு. மேலொட்டு, கீழொட்டு எழுத இயலாத பொது வழக்குக்கு. இந்திய மொழிகளின் ஒலிகளுக்கு இங்கே நான் தந்துள்ளது ஏற்கனவே இருப்பதின் சிறு மாற்றமே. இன்னும் விரிவாக அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்குக்கு ஈடான், இங்கு வழங்கக்கூடிய அட்டவணையை இட இருக்கின்றேன் (இங்கும் விக்சனரியிலும்). இதுபற்றி நாம் யாவரும் உரையாடுவது முக்கியம் என நான் சில ஆண்டுகளாகக் கூறிவந்துள்ளேன். இக்குறியீடுகள் பொது மொழிக்கு அல்ல. ஒலிப்புகளைக் காட்ட ஒரு சில இடத்தில் மட்டுமே. ஆக்சிசன் என்பதும், ஐதரசன் என்பது அப்படியேதான் வழங்கும் ஆனால் பிறமொழி ஒலிப்புகளைக் காட்ட வேண்டியிருப்பின் பரிந்துரைக்க வல்ல முறையை IPA குறியீடுகளுக்கு அருகே, நமக்குப் புரியுமாறு எழுதலாம். --செல்வா 15:11, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
ஞானப்பிரகாசம் கருத்தை கண்டேன். மேற்கூறிய உங்களது கருத்தையும் கண்டேன். நாம் பிறமொழி சொற்களுக்கு அல்லது அறிவியல் சொற்களுக்காக அதன் ஒலிப்பை அறிவதற்காக மட்டுமே அவ்வாறான நான்கு ககரங்களை பயன்படுத்துகிறோம் என்றால், அதற்கு கிரந்த எழுத்துகளையே பயன்படுத்தலாமே. ஏன் புதிதா பல ஒலிப்பு முறையை உருவாக்கி பழையதை மாற்ற வேண்டும். ஒலிப்பை காட்டுவதற்கு மட்டும் கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தலாம். அது வேண்டாம் என்றால் நான்கு காவும் வேண்டாம் ஐந்து காவும் வேண்டும். நம்மொழிக்கு ஏற்றாற்போல் ஒரு கா போதுமானது. எதிர்கால தமிழர்கள் தங்கள் மொழியில் பிறமொழி ஒலிப்பு இல்லை என்று ஒன்றும் வெட்க படமாட்டார்கள். தமிழ் தனித்து இருக்கிறது என்று பெருமைதான கொள்வார்கள். தமிழ் மொழி மட்டும் தான் உருப்படியாக எனக்கு தெரியும். நீங்கள் எத்தனை கா குறிப்பிட்டாலும் என்னைப் போன்ற பிற மொழி அறிவு இல்லாதவர்கள் ஒரே 'கா'வில் தான் ஒலிப்பார்கள். --இராஜ்குமார் 15:52, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
என்னைப் போன்றோருக்கு க வில் பக்கத்தில் ஒன்று இரண்டு என்று எழுதினால் எங்களால் காவை மாற்றி ஒலிக்க தெரியாது. அவ்வாறு மாற்றி ஒலிக்க எதிர்கால தமிழர்களை கட்டாயப் படுத்த வேண்டும் என்றால், அவ்வாறு குறிப்பிட வேண்டாம் என்றே சொல்வேன். --இராஜ்குமார் 16:02, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

ka, kha, ga, gha ஆகியவற்றிற்கு ஆகிய உச்சரிப்புகளை போலவே ta, tha, da, dha, ca, cha, ja, za, போன்ற எழுத்துக்களையும் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இந்த எழுத்துக்களுக்கு இணையான உச்சரிப்புகளை உருவாக்க குறியீடுகளையோ அல்லது வடிவங்களை மாற்றவோ தேவையில்லை. ஆங்கில அகராதியில் குறிப்பிடுவதைப் போல தமிழில் ஒவ்வொரு வார்த்தையின் உச்சரிப்பை அருகே கொடுக்கலாம். அவ்வாறு செய்வது நீண்ட கால அடிப்படையில் மக்கள் இந்த உச்சரிப்பு வித்தியாசங்களை வேறுபடுத்தி அறிந்துகொள்வார்கள். பெருமாள், மும்பை.

கருமுத்து தியாகராசர் கட்டுரை[தொகு]

கருமுத்து தியாகராசர் கட்டுரையில் வரவேண்டிய பல தகவல்கள் அதன் உரையாடல் பக்கத்தில் இடம் பெற்று வருகின்றன. தவறுதலாகப் பதிவிடப்பட்டு வருகிறதென்று நினைக்கிறேன். இது குறித்து கவனிக்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி. 04:24, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

பாஞ்சாலை என்பவர் இத்தகவல்களை உரையாடல் பகுதியில் சேர்த்து வருகிறார். இப்பகுதியில் உள்ள கட்டுரையில் இடக்கூடிய பகுதிகளை கட்டுரையில் இடுமாறு அவர் முன்னரே கேட்டுக் கொண்டிருக்கிறார். என்வே உங்களால் முடியுமானால் அவற்றை கட்டுரைப் பகுதியில் இட்டு விடுங்கள்.--Kanags \உரையாடுக 10:15, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

விக்கித்திட்டம் பேச்சு விக்கிப்பீடியா[தொகு]

ஆங்கில விக்கியில் சில சிறப்புக் கட்டுரைகள் மற்றும் பிரபலமான கட்டுரைகள் ஒலிவடிவிலும் வழங்கப்படுகின்றது. அதைப்போல தமிழிலும் ஆரம்பிதால் என்ன??

இப்பவே சிறிதாக ஆரம்பித்தால் எதிர்காலத்தில் கையேடுகள் என்பவற்றை மொழிபெயர்த்து பல பயனர்களும் பங்குபெற வழிசமைக்காலாம். அண்மைக் காலமாக அலுவலகத்தில் Accessibility Testing இல் ஈடுபடுவதால் கண்தெரியாதோர் போன்றோருக்கு இவ்வகையான ஒலி எவ்வளவு முக்கியம் என்று அறிகின்றேன்.

இது பற்றி விக்கி அன்பர்களின் விமர்சனங்கள் வேண்டும். அனுமதி கிடைத்தால் இத்திட்டத்தை மெல்ல மெல்ல தொடங்கி நடத்த விரும்புகின்றேன். ஆங்கிலத்தில் Trincomalee எனும் கட்டுரையை ஆங்கில மொழியில் பேசி பதிவெற்றினேன். மிகவும் இலகுவான் செயல். --ஜெ.மயூரேசன் 07:14, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

நல்ல முயற்சி மயூ. இதற்கு எதற்கு ஒப்புதல் :) நானும் ஒரு சில ஆண்டுகள் முன்பே இதை முயன்று விட்டு விட்டேன். தமிழ், இந்தியா, இலங்கை போன்ற அதிகம் பார்வையிடப்படும் கட்டுரைகளை முதலில் ஒலி வடிவில் தர முயலலாம். --ரவி 17:14, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
மயூரேசன், இதைப்பற்றி நானும் யோசித்திருக்கிறேன். நல்ல தொடக்கம். நல்ல கட்டுரைகளில் முடிந்த அளவு இந்த பணியை தொடங்கலாம். நிறுத்தி வாசிப்பதும், இடையூறுகளில்லாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த திட்டம் தொடரும்போது, பெரிய கட்டுரைகளின் ஒலிபெயர்ப்பு கிடைத்தவுடன் தன்னார்வலர்கள் audacity போன்ற மென்பொருளை பயன்படுத்தி வார்த்தைகளை வெட்டி விக்சனரிக்கு தேவையான வார்த்தைகளையும் தனித்தனி கோப்புகளாக சேகரிக்க முடியும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்துவிடும். -- மாஹிர் 18:01, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
நல்ல சிந்தனையாக உள்ளது. நானும் இதில் பங்கு கொள்ள எண்ணுகிறேன். எப்படி செய்வது என்றும் கூறுங்கள். இது போன்ற புதிய முயற்சியில் ஈடுபடுத்து மிகவும் ஆனந்தமானது. --இராஜ்குமார் 18:55, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
விக்கிச்செய்தியில் மாதிரி ஒலிக்கோப்பு ஒன்று முன்னர் தயாரித்திருந்தேன். கேளுங்கள்: 130 ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த பிஜி கடல்பறவைகள் திரும்பின.--Kanags \உரையாடுக 23:11, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
பலரிற்கும் ஆர்வம் இருக்கும் காரணத்தால் இவ்வார இறுதியில் விக்கித் திட்டத்திற்கான பக்கத்தை ஆரம்பிக்கின்றேன். சிறுக சிறுக வேலையைத் தொடங்கலாம். நன்றி --ஜெ.மயூரேசன் 09:35, 6 ஆகஸ்ட் 2010 (UTC)
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பேச்சு விக்கிப்பீடியா எனும் பக்கத்தில் திட்டத்தை ஆரம்பித்துள்ளேன். அடிப்படை வார்ப்புருக்களும் தயாராகிவிட்டது. கையேட்டை விரிவாக்கி விக்கியர்களிடம் கையளிக்கும் பணி இன்னமும் பாக்கி.

{{விக்க்கித் திட்டம் பேச்சு விக்கிப்பீடியா}}

இந்த விக்கித் திடத்தில் மொழி மாற்ற விரும்பும் கட்டுரைகளின் பேச்சுப் பகுதியில் இந்த வார்ப்புருவைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கின்றேன். இனி மிகுதியை திட்ட பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம்.

வார்ப்புரு:விக்க்கித் திட்டம் பேச்சு விக்கிப்பீடியா --ஜெ.மயூரேசன் 12:12, 6 ஆகஸ்ட் 2010 (UTC)

திரு. பவுலுக்குப் பதில்.[தொகு]

அன்பிற்குரிய திரு. பவுல் அவர்களுக்கு நேச வணக்கம்!

ஒலிபெயர்ப்புக்கான மாதிரி அடைவு ஒன்றை முன்மொழிந்திருக்கிறீர்கள். நல்லது! அதில் பிற கருத்துகளெல்லாம் எனக்கு இசைவானவைதாம். ஆனால் வடமொழியில் இருப்பது போல் நான்கு 'க' , நான்கு 'ச' முதலானவற்றைத் தமிழிலும் கொண்டு வர நீங்கள் முன்வைத்திருக்கும் பரிந்துரைகள்தாம் எனக்கு அதிர்ச்சியளிக்கின்றன! அவை திரு. செல்வா அவர்களின் பரிந்துரைகள்தாம்; அவற்றை வெறுமே மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைத்தாம் நீங்கள் இங்கே கூறியிருக்கிறீர்கள் என்றாலும் இம்முறை தமிழுக்கு நல்லதில்லை நண்பரே! இந்த நான்கு வகைக் 'க' ஒலிப்புகளை முன்மொழிந்த அதே செல்வாதான் இதே முறையை எதிர்த்து 'விக்கிப்பீடியா: ஒலிபெயர்ப்புக் கையேடு' பக்கத்தின் 'உரையாடல்' பகுதியில் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார். மிகவும் அருமையான முழுமைத்தனம் வாய்ந்த கட்டுரை அது. அதை நீங்கள் படிக்காமலிருந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை படிக்காவிட்டால் கனிவு கூர்ந்து இப்பொழுதே படித்துப் பாருங்கள். கூடவே 'விக்கிப்பீடியா நோக்கிய விமர்சனங்கள்' பகுதியில் திரு. தெரன்சு அவர்கள் எழுதியுள்ள கருத்தையும் பாருங்கள்!

கூடியவரை கிரந்த எழுத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறீர்கள். ஐயா கிரந்த எழுத்துகளைப் புறக்கணிக்கச் சொல்வதே அவை தரும் ஒலி தமிழ் ஒலிப்பு முறைக்குப் புறம்பானது என்பதால்தானே! அவற்றின் வரி வடிவம் கருதியா அவற்றைப் புறக்கணிக்கச் சொல்கிறோம்? உண்மையில் கிரந்த எழுத்துகளின் வரிவடிவமே தமிழ் வரிவடிவம்தான். அவற்றின் ஒலி மட்டும்தான் தமிழில்லை. கிரந்த எழுத்துகள் மட்டுமில்லை வடமொழியின் வரிவடிவமே -அதாவது எல்லா வடமொழி எழுத்துகளுமே- தமிழின் கொடைதான்! நாம் அயல்மொழிகளின் ஒலிப்பு முறைகளுக்கேற்றவாறு தமிழை மாற்றுவதாக இருந்தால் கிரந்த எழுத்துகளைப் புறக்கணிக்க வேண்டிய தேவை என்ன?

ஐயா! உலகில் எத்தனையோ மொழிகள் இருக்கின்றன. எத்தனையோ ஒலிப்பு முறைகள் இருக்கின்றன எல்லாவற்றுக்கும் ஏற்றவாறு தமிழை மாற்றிக் கொண்டிருந்தால் கடைசியில் தமிழ் தமிழாக இருக்காது! தமிழுக்குரிய தனித்தன்மையென்று எதுவும் மிச்சமிருக்காது! வேறு எந்த மொழி மக்களும் இப்படிப் பிற மொழி ஒலிப்பு முறைகளுக்கேற்றவாறு தம் மொழியின் ஒலிப்பு முறைகளை மாற்றிக் கொள்வதில்லை. பிற மொழிச் சொற்களைத் தம் மொழியில் கையாள வேண்டி வரும்பொழுது தம் மொழி ஒலிப்பு முறைக்கேற்ப அந்தச் சொல்லைத்தான் மாற்றுகிறார்கள். ஆனால் தமிழர்கள் நாம் மட்டும்தான் இப்படிச் சிந்திக்கிறோம். இதுவும் ஒருவகைத் தாழ்வு உளப்பான்மைதான் என்னும் உளவியல் மருத்துவ உண்மையை உணர்ந்து கொண்டால் நாம் இப்படிச் செய்ய மாட்டோம். இதற்கான மருத்துவ அறிவியல் அத்தாட்சியை யாராவது தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவேற்றினால் அவர்களுக்கு என் பதிநூறு கும்பிடுகள் உரித்தாகுக!

நீங்கள் கூறிய பரிந்துரை நம் மொழிக்கு எந்த அளவு தீங்கானது என்பதை விளக்கவே மேற்கண்ட அனைத்தையும் எழுதியிருக்கிறேன். ஒருவேளை அதில் ஏதாவது உங்கள் உள்ளம் வருந்தும்படி எழுதப்பட்டிருந்தால் அன்பு கூர்ந்து என்னை மன்னியுங்கள்!

உங்கள் அன்பன்: --இ.பு.ஞானப்பிரகாசன் 14:48, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

கவலை கொள்ளாதீர்கள். ஒலிப்புமுறை பொது வழக்குக்கு அல்ல. நாம் ஐதரசன், ஆக்சிசன் (aakchisan) என்றுதான் எழுதுவோம், படிப்போம். பாரதி என்றுதான் எழுதுவோம் paaradhi என்றுதான் சொல்லுவோம். ஆனால் சிறப்பு இடங்களில் (பொது வழக்குக்கு இல்லை), ஒலிப்பைக் காட்ட IPA அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்கு எழுத்துகளோடு தமிழ் வழியதான எழுத்துகளிலும் எழுதும் வகையைப் பற்றிப் பேசுகிறோம். भारत என்று இருந்தால் நாம் தமிழில் பாரத (paaradha) என்றுதான் எழுதுவோம், ஒலிப்போம், ஆனால் அதன் ஒலிப்பு பா4ரத1 என்று குறிக்க வகை இருந்தால் தவறில்லை (இதனைக் கட்டுரையின் நெடுகிலும் பயன்படுத்த அல்ல. தலைப்பில் தேவநாகரி எழுத்திலோ, அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்குக் குறியீட்டிலோ குறிப்பது போலவே, தமிழ் எழுத்துகளிலும் குறிப்போம் (தமிழர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளவும்). இதற்கான தேவை இருக்கின்றது என்பது என்கருத்து --செல்வா 15:36, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
நன்றி.செல்வா இவ்வாறு பொது வழக்குக்கு இல்லை என்று அனைவரும் எண்ணினால் நன்று. ஆனால் எனக்கு தெரிந்த வரையில் ஒவ்வொருத்தரும் தமிழனை தன் ஒலிப்பு முறைக்காக இழிவு படுத்தி தான் பார்க்கிறார்கள். அதனால் தான் இவ்வாறு ஒலிப்பை வைத்து படித்தவன் படிக்காதவன் , பட்டிக்காட்டான் , அறிந்தவன் அறியாதவன் என்று வேறுபடுத்தி சொல்வார்களோ என்று ஐயமுருகிறேன். --இராஜ்குமார் 16:09, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
இராச்குமார், ஆமாம், ஆனால் தமிழர்கள் தங்கள் வருங்காலத்தைத் தாங்கள்தான் தீர எண்ணி செயல்படுத்த வேண்டும். ஆங்கிலேயர்கள் தமிழைப் பற்றியும், உலகின் பல்வேறு மொழிகளைப் பற்றியும் அதன் இலக்கியங்களைப் பற்றியும் தங்கள் உரோமன் எழுத்துமுறையிலேயே படிக்கின்றார்கள், ஆய்வு செய்கின்றார்கள். அவர்கள் நம் ழகரத்தையோ, ஞகரத்தையோ எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் குறிக்க வழி வைத்திருக்கின்றார்கள். எல்லாவற்றையும் அலசுகிறார்கள். இராச்குமார், வருங்காலத்தில் தமிழில் படிக்காதவனே இருக்கக்கூடாது. அதுமட்டுமல்ல, தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவன் உலகின் அத்தனை செய்திகளையும் நடப்புகளையும், நுணுக்கங்களையும் அறியும்படியாக தமிழ்மொழியில் அறிவுவளம் இருக்க வேண்டும்., நாளும் வளர்த்தெடுக்க வேண்டும். அறியாதவரே இல்லாமல் ஆக்குவது எல்லோருடைய கடமையும் ஆகும். --செல்வா 16:39, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
  • தலைப்பு, பொருளடக்கம் போன்ற பகுதிகளிலோ அதுபோன்ற பிற பகுதிகளிலோ ஓர் அயல்மொழிச் சொல்லின் பக்கத்தில் அடைப்புக்குறிக்குள்ளோ அல்லது அதற்கான அடிக்குறிப்பிலோ இந்தப் பன்னாட்டு ஒலிப்பு முறை பயன்படுத்தப்படுமானால் உண்மையிலேயே மகிழ்ச்சிதான் செல்வா அவர்களே! இது உண்மையிலேயே தமிழின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக் கூடியது. இலங்கைத் தமிழுக்கும் தமிழ்நாட்டுத் தமிழுக்கும் இடையிலான தமிழ் ஒலிப்பு முறை வேறுபாடு முதற்கொண்டு எல்லா தமிழ் ஒலிப்பு முறை வேறுபாடுகளுக்கும் சிறந்ததொரு பாலமாக விளங்கக் கூடியது இது. ஆங்கிலத்திலும் இம்முறை கடைப்பிடிக்கப்படுவது நீங்கள் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. ஆனால் இப்படியில்லாமல் நேரடியாகவே இப்படிப்பட்ட சொற்களைப் பயன்படுத்துவதுதான் தவறு. அதாவது 'பாரத்' என்ற சொல் இடம்பெற வேண்டிய ஓர் இடத்தில் தமிழ் ஒலிப்பு முறைப்படிப் 'பாரதம்' என மாற்றி எழுதிவிட்டு அதன் பக்கத்தில் அடைப்புக்குறிக்குள்ளோ அடிக்குறிப்பிலோ அதற்கான பன்னாட்டு ஒலிப்பு முறைப்படியான சொல்லைக் குறிப்பிட வேண்டும். அப்படிச் செய்யாமல் 'பாரதம்' என்று எழுத வேண்டிய இடத்திலேயே அதற்கான பன்னாட்டு ஒலிப்பு முறைப்படியான சொல்லை எழுதிவிடுவதுதான் தவறு. அப்படி மட்டும் யாரும் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கு கடைப்பிடிப்பதற்காக மட்டும் நான் இதைச் சொல்லவில்லை. தமிழ் வரிவடிவத்தைச் சார்ந்திருக்கும் எல்லா ஊடகங்களுக்கும் சேர்த்துத்தான் அதுவும் ஒரு வேண்டுகோளாகத்தான் சொல்கிறேன்.

அன்புடன்: --இ.பு.ஞானப்பிரகாசன் 17:44, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

  • உங்கள் கனிவார்ந்த விளக்கத்துக்கு மிக்க நன்றி செல்வா அவர்களே!

அன்பன்: --இ.பு.ஞானப்பிரகாசன் 17:54, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

ஞானப்பிரகாசனின் கருத்துக்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டியவை. அவரது கருத்துக்கள் பலவற்றோடு எனக்கு உடன்பாடு உண்டு. ஒலிப்புச் சுத்தம் கட்டாயம் தேவை எனக்கருதும் இடங்களில் மட்டும் குறியீடுகளுடன் கூடிய எழுத்துக்கள் பயன்படுத்தவேண்டும். "பாரதம்" போன்ற சொற்களுக்கெல்லாம் பயன்படுத்தக்கூடாது. பாரதம் என்று எழுதினால் அதுதான் தமிழ். அதை paaratham என்றுதான் உச்சரிக்கவேண்டும் அதற்குப் பக்கத்தில் அடைப்புக் குறிக்குள் பா4ரத1 என்று எழுதினால் நாம் ஏதோ எழுத்து இல்லாக்குறையினால் தான் இப்படி எழுதியிருக்கிறோம் ஆனால் உண்மையில் இப்படித்தான் உச்சரிக்கவேண்டும் என்று சொல்வதுபோல இருக்கிறது. "ஹனுமந்த்ராஜ்" என்ற பெயரைத் தமிழில் அனுமந்தராசு என்று எழுதுவதுதான் மரபு என்றால் அப்படித்தான் உச்சரிக்கவும் வேண்டும். அடைப்புக்குறிக்குள் க4னுமந்ராச் என்று எழுதவேன்டுமானால் அதை "ஹனுமந்த்ராஜ்" என்றே நேரடியாக எழுதிவிடலாம். ஆங்கிலத்திலும் மொழியியல், பிறமொழியில் எப்படி ஒரு சொல்லை உச்சரிக்கிறார்கள் போன்றவற்றைக் காடுவது போன்ற சிறப்புத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். Thiruvannamalai என்றால் அடைப்புக்குறிக்குள் Thiruvan3n3amalai என்று எழுதமாட்டார்கள்.

தவிர, க1, க2, க3 என்று எழுதுவோமானால் பார்த்தீர்களா நாங்கள் சொன்னோமே தமிழில் எழுத்துக்கள் பற்றக்குறையால் தமிழ் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று புதிய எழுத்துக்கள் உருவாக்கச் சீர்திருத்தக்காரர்கள் புறப்படுவார்கள். அப்போது அவர்கள் பக்கம் கூடிய நியாயம் இருக்கும்.--மயூரநாதன் 19:26, 5 ஆகஸ்ட் 2010 (UTC)


அனைவருக்கும் வணக்கம்.

மயூரநாதன் அவர்களின் கருத்துக்களை நான் முழுதாக ஆதரிக்கிறேன். தமிழில் வடமொழியில் உள்ளது போல் 4 வகையான 'க, ச, ட, த, ப' இல்லை. ஆனால் அதற்காக க1, க2, க3, க4 --- என்று எழுத வேண்டியது இல்லை.


இந்தியைத் தமிழ் மூலம் கற்றுக்கொள்வற்காக புகுத்திய முறை இதுவாகும். ஒன்று, வடமொழியில் நாம் முன்பே உபயோகிக்கும் எழுத்துக்களை பயன்படுத்துதல் நலம். க1, க2, க3, க4 --- என்று புது கண்டுபிடிப்புக்கள் தேவையில்லை.


அப்படி அவசியப்பட்டால் புது எழுத்துக்களை கண்டுபிடியுங்கள். ஆனால் இது தமிழ் மரபுக்கு ஒத்துவராத கருத்தாகும். ஆகவே நாம் முன்பே அறிந்துள்ள வடமொழி எழுத்துக்களை பயன்படுத்துவதில் தவறு இல்லை.


தமிழின் தனித்தன்மையை காப்பாற்ற வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமே. ஆனால் அது ஒரு சில இடங்களில் முடியாத போது, முன்பே தெரிந்த, பழக்கத்தில் உள்ள எழுத்துக்களை பயன்படுத்துவது நலம். அதற்காக புதிய முறைகளை புகுத்துவதைவிட, அந்த சொற்களுக்கு அடைப்பு குறியில் ஆங்கிலத்தில் தெரிவிப்பது நலம். உதாரணம் --- காந்தி (Gandhi), பாரதம் (Bharath).


இந்தியில் பாரத் (Bharath) என்பதனை பாரதம் என்று எழுதுவதினால் எந்த விதமான தவறும் இல்லை. அவர்கள் இந்தியில் அப்படி எழுதுகிறார்கள். நாம் தமிழில் தமிழ் மரபு படி எழுதுகிறோம். இவ்வையெல்லாம் மற்றவர்களுக்கு புரிகின்றதா என்பதே முக்கியக்குறிக்கோளாக இருக்கவேண்டும்.

நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:11, 6 ஆகஸ்ட் 2010 (UTC)


அகரமுதலியில் பயன்படுத்துதல்[தொகு]

இங்கு எனது கருத்தையும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். உதாரணமாக இரசிய மொழியை எடுத்துக்கொள்ளும் போது, அவர்கள் கையாளும் விதம் குறிப்பிடத்தக்கது. மாதங்களை எடுக்கும் போது “June” என்பதன் ஒலி வடிவம் ‘ஜூன்’ என்னும் கிரந்த எழுத்தில் ஒரு சாராரும் சிலர் ‘யூன்’ என்றும் குறிப்பிட்டு இப்போது ‘சூன்’ ஆக மாறி நிற்கிறது; இரசியர்களிடம் கூட “J” எழுத்து இல்லை, அவர்கள் அழைப்பது ‘இயூனியா’ என்றே. மேலும் இரசிய மொழியில் “J” என்பதனை உச்சரிக்க அவர்கள் கையாளும் விதம் இரு வெவ்வேறு இரசிய எழுத்துக்களைச் (Д, Ж = DZ = J) சேர்த்தே. இங்கு ஒன்று குறிப்பிடவேண்டும், இவ்வாறு ДЖ பயன்படுத்தி அவர்கள் june எழுதலாம் ஆனால் அவர்கள் பிற மொழிச்சொற்களை தமக்கேற்றவாறு அமைத்துள்ளனர். மேலும் ஒரு உதாரணம் : January = யன்வாரியா

எனவே கிரந்த மொழியோ அல்லது இலக்கமிடுகையோ பயன்படுத்தாமல் எழுதிடல் தமிழைத் தாழ்த்தாது. இலக்கமிடுதல் முறைமையை அகரமுதலியில் மட்டும் வைத்துக்கொள்ளலாம், எனவே புதிதாகப் படிப்போரும், ஆசிரியர்களும் அந்தச் சொற்களின் உச்சரிப்பை அறிந்து கொண்டு வாசிக்கும் போது அவ்வாறு உச்சரிப்பர், இதன் படி,
அகரமுதலியில்:
  • Gollum (கோ3ளம்) : பேராசிரியர் இடோக்கியன் உருவாக்கிய கற்பனைப் பாத்திரம்.
கட்டுரையில்:

கோளம் மோதிரத்தை தொட்டுப்பார்த்துக் கூறியது.....

ஆங்கில அகராதியில் ஒலிப்புகள் குறிப்பிடப்படுவது போல நாமும் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தும் போது செல்வா அவர்கள் கூறிய முறைகளைக் கையாளலாம், ஆனால் அகரமுதலியிலேயே! கட்டுரையில் அல்ல. --சி. செந்தி 21:06, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

பிற மொழிச் சொற்களை ஒலிப்பதற்குத் தமிழ் எழுத்துகளை/கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தல் பற்றி ஒரு கருத்து - திரு. ஞானப்பிரகாசம் அவர்களின் மடல் குறித்து[தொகு]

1) நல்ல தமிழில் எழுதவேண்டும் என்று நீங்கள் கூறுவதை நான் உளமார வரவேற்கின்றேன். தமிழின் தனித்தன்மையைப் பொன்னேபோல் போற்றவேண்டும் என்பதிலும் உங்களோடு முற்றிலும் உடன்படுகின்றேன். தமிழ் விக்கி, விக்சனரி, விக்கிமூலம் ஆகிய தளங்களில் பங்களிக்க வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தரமான, நம்பகமான, நடுநிலையான முறையில் தரவேற்றங்கள் செய்திட முனைகின்றேன். ஆகவே, ஒத்த கருத்தோடு நாம் எல்லோரும் செயல்படுகின்றோம் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகின்றது.

2) முன்னால் நீங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் தரும் விதத்தில் செல்வாவும் மயூரநாதனும் "ஒலிபெயர்ப்புக் கையேடு" பற்றிக் குறிப்பிட்டனர். அதை நான் வாசித்தேன். ஒருவேளை வெவ்வேறு பக்கங்களில் முரண்பாடான முன்மொழிதல்கள் தரப்பட்டனவா என்பதை அறியேன். சில என் கண்களுக்குத் தென்படாமற் போயிருந்தாலும் வியப்பில்லை. எனவே "நான் வாசித்துத் தெரிந்துகொண்ட அளவில்" என்றொரு முன்னீட்டையும் இணைத்தே என் கருத்துகளை முன்வைக்கின்றேன்.

3) தமிழ்ச் சொற்களை எழுதுவதிலும் அவற்றை ஒலிப்பதிலும் எந்தவொரு மாற்றமும் புகுத்த வேண்டியதில்லை என்பது என் உறுதியான, பிடிப்பான கருத்து. இதிலே உங்களோடும் பிறரோடும் எனக்கு முழு உடன்பாடே. "வடமொழியில் இருப்பது போல் நான்கு 'க' , நான்கு 'ச' முதலானவற்றைத் தமிழிலும் கொண்டு வர நீங்கள் முன்வைத்திருக்கும் பரிந்துரைகள்தாம் எனக்கு அதிர்ச்சியளிக்கின்றன!"என்கிறார் ஞானப்பிரகாசம். இராஜ்குமாரும் அவ்வாறே கூறுகிறார். நான்கு 'க', நான்கு 'ச' போன்றவற்றைத் தமிழிலும் கொண்டுவர வேண்டும் என்று நான் கூறவில்லை. தமிழ் விக்சனரியில் பல மொழிச் சொற்கள் தரப்படுகின்றன. அவற்றைச் சரியாக ஒலிக்க வேண்டும், பயனர்களுக்கு ஒலிப்புப் பற்றி ஐயப்பாடு விளைத்தல் ஆகாது என்பதுதான் நம் முன் இருக்கின்ற விவாதப் பொருள் என்றுதான் நான் இதுவரை நினைத்திருந்தேன். இதில் குழப்படி ஏற்பட்டிருந்தால் பொறுத்தருள வேண்டுகிறேன்.

4) விக்சனரியில் பிற மொழிச் சொற்களுக்குத் தமிழில் பொருள் தரும்போது அச்சொற்களுக்கு ஒலிப்பும் தமிழ் எழுத்திலேயே கொடுக்க முடிந்தால் மிக்க நன்று. கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று ஞானப்பிரகாசம் கூறுகிறார். அவரது கருத்தை நான் மதிக்கிறேன். பலர் அவரோடு உடன்படுவர் என்பதில் ஐயமே இல்லை. மயூரநாதனும் இதையே கூறினார். இராஜ்குமாரும் உடன்படுவதுபோல் தெரிகிறது.

5) கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி தமிழ் ஒலிப்பு குறிப்பதற்குப் பதிலாக, தமிழ் எழுத்துகளையே பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. இதிலிருந்து சிலர்/பலர் மாறுபடுவர் என்பதை அறிவேன். குறிப்பாக, மேல் எண் (superscript) இட்டு ஒலி உருவாக்கும் முறை சிலருக்குப் பிடிக்கவில்லை. நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், அம்முறை அவ்வளவு மோசமானதல்ல என்பது எனது இற்றைய கருத்து. பழகப் பழக அதைக் கற்றுக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

6) பழ.கந்தசாமி, த*உழவன் போன்றோர் விக்சனரில் இடுகின்ற பல சொற்களுக்கு தமிழில் ஒலிப்புமுறை தருகிறார்கள். நான் இன்னும் அதைக் கையாளவில்லை. அவர்களும், செல்வா போன்றோரும் சிறப்பான பணி ஆற்றுகிறார்கள் எனக் கூறிக்கொள்ள விழைகின்றேன். அப்பணி தொடர வேண்டும்.

7) கிரந்த எழுத்தைப் பயன்படுத்துவது பெரிய சிக்கலாக இருக்க வேண்டியதில்லை என முன்னரே பலரும் கருத்துத் தெரிவித்தனர். இருப்பினும், தமிழ் எழுத்துகளே (மேல் எண் குறிகளோடு) போதுமே என்பது எனது சிந்தனை. இது கிரந்த எழுத்து மட்டிலுள்ள வெறுப்பினாலோ, அவ்வெழுத்து தமிழுக்கு அன்னியமானது என்னும் கருதுகோள் காரணமாகவோ எழுந்த சிந்தனையல்ல என்பதை நண்பர் ஞானப்பிரகாசத்திற்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ் பற்றிய தாழ்வுமனப்பான்மை என்றொரு கருத்தை எப்பொருளில் ஞானப்பிரகாசம் வெளியிட்டார் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அந்த எண்ணம் எனக்கு இல்லை.

8) தமிழ் மொழியின் சிறப்பு குறித்து யாரும் ஐயுற வேண்டியதுமில்லை, தமிழ் வழியே பிற மொழிச் சொற்களை ஒலிக்கும் முறை உருவாக்க இயலும் என்பதை ஏற்றிடத் தயங்கவேண்டியதுமில்லை. ஆங்கிலச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் தமிழில் ஒலிப்புமுறையாக எடுத்து எழுதாமல் விட்டுவிடலாம் என்பதும் ஒரு கருத்தே. அப்படியானால் அந்த ஒலிப்பைக் கேட்கும் வகை செய்வது துணையாயிருக்கும். இணைய அகரமுதலிகள் (Webster போன்றவை) வழி பயனர் சரியான ஒலிப்பைக் கேட்டு அறிந்துகொள்ளலாம். இதற்கு தமிழ் விக்சனரி இணைப்பு கொடுக்கலாமா? --பவுல்-Paul 21:18, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

  • குறிப்பு: மேலே காணும் இடுகைக்குப் பின்னர் சி.செந்தி-யின் இடுகை கண்டேன். அவர்தம் கருத்து சிறப்பாக உளது.--பவுல்-Paul 21:18, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
சி.செந்தி சொன்ன கருத்து அருமையானது. அவர் சொல்வது போல் தான் பல தமிழ் ஒலிப்பியல் அகராதியில் பார்த்திருகிறேன். அதெல்லாம், தமிழ் அகராதியில் pronounciation ஒலிப்பியல் பகுதியில் இடம்பெறும். இதை ஒன்றும் நாம் புதிதாக கண்டறியவில்லை. பழைய அச்சுப் பதிப்புகளில் உள்ளதுதான். இலங்கையில் உள்ள புத்தகங்கள் ஞானபிரகாசம் எழுதிய தமிழ் ஒலிப்பியல் சொற்பிறப்பியல் அகராதியிலும் நான் கண்டேன். அதைப் போன்று விக்சனரியிலும் இருந்தால் நன்று. அது மிகவும் அவசியம். ஆனால் கட்டுரை எங்கும் இதேபோன்று ஒலிப்பு முறைக்கு எழுதுதல் போன்று எழுதிவிடுவார்களோ என்பது தான் எனது ஐயம். மேலும் இந்த உரையாடல் விக்சனரியில் இடம்பெற்றால் இவ்வளவாக நீண்டிருக்காது. கிரந்த எழுத்துக்கள் முற்றிலும் நீக்க வேண்டும் என்பது தான் என் கருத்து. இவ்வாறு ஒலிக் குறிப்பு எண்களால் கிரந்த எழுத்துக்களை முற்றிலும் நீக்கலாம். கணினிகளில் இவ்வெழுத்துக்கள் பிறகு தேவைப்படுவதும் இல்லை. நன்று. விக்சனரியில் இவ்வாறான ஒலிப்புமுறை பகுதியை சேருங்கள். நான் ஆதரிக்கிறேன். ஆனால் இது பிற மொழிக்கான ஒலிப்பு முறைதான் அது. அதை பிற மொழியில் பேசும் பொழுது தான் பயன்படுத்த வேண்டும். சும்மா தமிழர்களுக்கு இப்படி எல்லாம் ஒலிக்க வேண்டும் இது போன்று 4 க என்றெல்லாம் பிற்காலத்தில் கட்டாயப் படுத்திவிடக் கூடாது. மதராசப் பட்டினத்தினத்தில் வருவது போல் ஆங்கிலம் என்றாலும் சரி எந்த மொழியாக இருந்தாலும் சரி எங்களுக்கு ஒரே க தான் ஒரே ச தான். அதில் குறில் நெடில் வெருண்டு.

உங்களுக்கு தெரியாது நண்பர்களே வேற்று மொழியாளர்கள் எவ்வளவு இழிவு செய்கிறார்கள் நம் மொழி ஒலிப்பை பற்றி. எனது பெயரையே எடுத்துக் கொள்ளுங்களே ராஜ்குமார் என்பதை ராசக் குமாரன் என்று சொல்லுங்கள் பட்டிக்காட்டான் village guy என்று கூறி இளிப்பார்கள். அதற்காக என்னால் நீங்கள் சொல்வது போல் ராச்2குமார் என்றெல்லாம் எழுத முடியாது. எழுதினால் ராச குமாரன் அல்லது ராச் குமார் (இங்குள்ள ச வில் ஒரு ஒலிதான் நான்கு ஒலிலாம் இல்லை, செல்வா இப்படி எழுதுவார். எனக்கு அது பிடிக்கும்) என்று எழுதுவேன் இல்லை என்றால் ராஜ்குமார் என்றே எழுதுவேன். --இராஜ்குமார் 22:09, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

வேற்றுமொழி ஒலிப்புகளைத் தமிழில் ஆள்வது பற்றி[தொகு]

மேலே கருத்து கூறிய ஞானப்பிரகாசம், மயூரநாதன், பவுல், இராச்குமார்,செந்தி ஆகிய அனைவருக்கும் மிக்க நன்றி. என் கருத்துகளும் உங்களுடையதோடு ஏறத்தாழ ஒன்றுதான். தமிழில் எழுதும்பொழுது தமிழ் முறைக்கு ஏற்பவும், இணங்கவும் பிறமொழி சொற்களைத் திரித்தும் வழங்குவதுதான் சிறந்த முறை. இதனால் விளையும் நன்மைகள் பல. தமிழ் எழுத்துமுறை எளிய முறை. மூச்சு வீணாகாத முறை. தமிழில் வழங்க ஏற்ற முறை. ஒலித் திரிபுகளும் சிதைவுகளும், எல்லா மொழிகளிலும் உண்டு. உலகில் எந்த மொழியிலும் பிற எல்லா மொழிகளின் ஒலிப்புகளையும் காட்ட முடியாது. IPA என்னும் அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்காலும் கூட முழுதும் காட்ட முடியாது. ஏன், நுட்பமாய் நோக்கின் தங்கள் மொழியில் உள்ள எல்லா ஒலிகளையும் குறிக்கவும்கூட முடியாது. விக்கிப்பீடியாவில் வரும் கட்டுரைகளில் பொதுநடையில் வழங்குவதற்காக அல்ல, இந்த க1,க2 முதலியன. தமிழ் எழுத்தை மாற்றும் முயற்சியும் அல்ல இவை. பிறமொழிச் சொல்லை அவர்கள் மொழியில் எப்படி ஒலிக்கின்றார்கள் என்பதனை எழுதிக்காட்ட தமிழ் எழுத்துகளைக் கொண்டும் சில குறியீடுகளைக் கொண்டும் நாம் காட்டும் ஒரு முறை. Jan Łukasiewicz என்னும் போலந்திய மெய்யியலாளரின் பெயரை நாம் தமிழில் யான் வுக்காசியெவிக்ஃசு என்றால் போதும் ஆனால் அவருடைய பெயரை போலந்திய மொழியில் யான் வுகா1செ5வ்யீட்5ச்8 என்று ஒலிக்கும் என்று குறிப்பிடலாம். இதில் வரும் புரியாத குறியீடுகளை (எ.கா ச்5 = ɕ, ச்8 = ʂ )அவ்வவ் மொழிக்கான அட்டவணையில் விளக்கலாம். இதனை அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்கில் (அஒநெ, IPA) [ˈjan wukaˈɕɛvʲitʂ] என்று குறிப்பர். ஏன் அஒநெ போதுமே என்றால், அதனைப் புரிந்துகொள்வதைவிட தமிழ் எழுத்துகளின் இருந்தால் புரிந்து கொள்வது சற்று எளிது. புரியாத மேலொட்டு கீழொட்டு முதலானவற்றை விட்டுவிட்டுப் படித்தாலும் ஓரளவுக்காவது புரியும். Coffee என்பதை நாம் காப்பி (இங்கும் இலங்கையில் கோப்பி) என்று எழுதியும் ஒலித்தும் வந்தாலும் ஆங்கிலத்தில் இதனை காவி' அல்லது காவ்'வி' என்கிறார்கள் என்று குறிக்க உதவும். கட்டுரையில் காவ்'வி' என்று எழுதப்போவதில்லை. --செல்வா 02:33, 6 ஆகஸ்ட் 2010 (UTC)

இன்னொன்று. தமிழில் வழங்கும் கிரந்த எழுத்துகள் நேர்மையற்றவை!! ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,முதலியன ஒரு சாய்வுடையன. சகன்னாதன் என்பதற்கு மாறாக ஜகன்னாதன் என்று எழுத வேண்டும் என்போர் காந்தியை மட்டும் ஏன் kaandhi என்றும், பாரதியை paaradhi என்றும் ஒலிக்க வேண்டும்? சகன்னாதன், காந்தி, பாரதி என்று சீராக (எல்லாவற்றையும் தமிழ் எழுத்துகளால்) எழுதினால் அது நேர்மையான முறை. யாருக்கும் தனிச்சாய்வு காட்டவில்லை. எனவே கிரந்தம் கூடாது என்பது இன்னொரு கருத்துக்கோணம். காந்தியை (kaandhi) கா3ந்தி3 என்று எழுதச்சொல்லவில்லை. அதற்காகப் புதிய கிரந்த எழுத்தைக் கொண்டு வரச்சொல்லவில்லை. நான் கூறுவதெல்லாம், தமிழ் எழுத்துகளை மட்டும் கொண்டு எழுதுவது எளிய முறை. ஒலித்திரிபுகளைப் பற்றிக் கவலைப்படுவது, பல மொழிகளின் இயல்பை அறியாமையாலும், தமிழ் மொழியை, அதன் முறைகளை மதியாமையாலும் எழுவது. --செல்வா 02:52, 6 ஆகஸ்ட் 2010 (UTC)
ஒரு ஷ போதாது என்று தமிழ் முறைக்கு எதிராக இயங்குவோர் இன்னொரு புதிய கிரந்த "ஷ2" ஒன்றையும் ஒருங்குறியில் (யூனிக்கோடில்) நுழைத்துள்ளார்கள். [இங்கே பாருங்கள் (வ என்னும் எழுத்துக்குக் கீழே உள்ள 0BB6 என்னும் குறியீட்டைக் கொண்ட எழுத்து). தமிழ் எழுத்துமுறைக்கு எதிராக இயங்கிய இவர்கள் செயலால், தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ள புதிய TACE16 இலும் இந்த புதிய 0BB6 "ஷ2" சேர்ந்திருக்கின்றது!! --செல்வா 03:04, 6 ஆகஸ்ட் 2010 (UTC)
  • செல்வா, கடந்த காலத்தில் மணிப்பிரவாளம் என்ற பெயரில் கிரந்த எழுத்துகள் தமிழில் புகுந்து, தமிழின் தனித்தன்மையை மழுங்கடித்த வரலாற்றை நினைவுகூர வேண்டாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் நீங்கள் அந்தப் பேச்சைத் தொடங்கியுள்ளீர்கள். ஆங்கில விக்கி தரும் கட்டுரைக்கு இணைப்பு இதோ: கிரந்த எழுத்து முறை.

கிரந்த ஆதரவாளர்கள் அம்முறையிலுள்ள எல்லா எழுத்துகளையும் பயன்படுத்தக் கூறவில்லை என்றே நினைக்கின்றேன். எப்படியாயினும், தமிழ் எழுத்தமைப்பின் எளிமையைப் போற்றுவோம்; அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்கை (IPA) நம் மொழியின் தனித்தன்மைக்கு ஏற்பத் தழுவியமைப்போம்; அம்முறையில் தமிழில் பிற மொழிச் சொற்களுக்கு ஒலிப்பு எழுத்து வடிவம் தருவோம். அதுவே விக்கியின் உலகளாவிய பண்புக்கும் இயைந்ததாக இருக்கும் என்பது என் பணிவான கருத்து.--பவுல்-Paul 03:49, 6 ஆகஸ்ட் 2010 (UTC)

தங்களது கருத்துக்கள் அருமையானதே! நான் ஆதரிகிறேன். இது அவசியமானதே. விரைவில் அந்த பட்டியலை தயாரிங்கள். கிரந்த எழுத்துக்கள் எனக்கும் பிடிக்காது. இம்முறையில் எழுதுவது அவற்றை முற்றிலும் புறக்கணிக்கும் என்று எண்ணுகிறேன். தேவை அற்ற புதிய கிரந்தங்கள் வராது. நன்றி.--இராஜ்குமார் 04:31, 6 ஆகஸ்ட் 2010 (UTC)
எல்லோருக்கும் அடைப்படையில் கருத்து ஒன்றுதான் என்று புரிகிறது. எனவே, ஒலிக்குறிப்பிப் பட்டியலையும் அதற்குரிய வழிகாட்டல்களையும் உருவாக்கத் தொடங்கலாம். மேலும் கலந்துரையாடல்களை அவ்வப்போது நிகழ்த்தலாம். --மயூரநாதன் 05:31, 6 ஆகஸ்ட் 2010 (UTC)

எல்லோருக்கும் நன்றி. (1) முதலில் விக்கிப்பீடியாவில் மாதங்களைத் தமிழில் எழுத யாராவது மாற்றங்களைச் செய்ய வேண்டுகிறேன் (சுந்தர் அல்லது மயூரநாதன் போன்றவர்கள் செய்ய இயலும்). (2) அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்கைத் (அஒநெ, IPA) தமிழ் வ்ழியில் செய்ய சில இடர்கள் உண்டு எனினும், அதற்கான நல்ல தீர்வுகளும் உண்டு. அஒநெ என்பது உயிரும் மெய்யுமான எழுத்துகளை மட்டும் கொண்டு செய்வது போன்ற நெடுங்கணக்கு, தமிழோ உலகில் பிற எழுத்துமுறைகளில் இல்லாத தனி எழுத்துமுறை கொண்டது (இதனை நான் ஆய்வரங்கில் நிறுவியுள்ளேன்). தமிழில் எழுத்தென்னும் கருத்துரு நன்கு வரையறை செய்யப்பட்ட ஒன்று (பிறமொழிகளில் இல்லாதது). இவை நான்கு வகையாவன உயிர், மெய், உயிர்மெய், சார்பெழுத்துகள். இவற்றில் உயிர், மெய், உயிர்மெய், சார்பெழுத்துகளில் ஒன்றாகிய ஆய்தம் போன்றவற்றுக்குத் தனி வரிவடிவமும் கொண்டது தமிழ் நெடுங்கணக்கு முறை. ஆகவே ஆங்கிலத்தில் bed என்று எழுதினால் நாம் தமிழில் be என்பதற்கு உயிர்மெய் வடிவம் கொண்டே எழுதுகிறோம். நாம் பெ3ட்6 என்று குறிக்கலாம் (இதில் ட்6 என்பது நுனிநாக்கு மென் டகரம் ட1, ட2, ட3, ட4 ஆகிய நான்கும் நாவளையொலி மேலண்ண டகரங்கள் (retroflex)). ஏற்கனவே இரண்டாண்டுகளுக்கு முன்னர் நான் ஆங்கில ஒலிப்புக்கு உருவாக்கிய பக்கத்தை சிறிது திருத்தி நிறைவு செய்கிறேன். புதிய உயிர் எழுத்துகளுக்கும், அவை மெய்யுடன் புணரும் உயிர்மெய் வடிவங்களும் வேண்டும் (தீர்வு உள்ளது). அஒநெ-யில் மொத்தம் 35 உயிர் எழுத்துகளுக்கான வாய்ப்புக் கூறுகள் உள்ளன , ஆனால் அவர்கள் இப்பொழுதே 30 தனி உயிர்க்குறிகள் கொண்டுள்ளார்கள். இவை அனைத்தையும் நாம் செய்ய முடியும் எனினும் வேண்டும் என்பதில்லை. எனினும் செய்வது நமக்கு நல்லது. அஒநெ மிகவும் கடினமானது (ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை). நம் முறையும் கடினமானதுதான், எனினும் தமிழ் எழுத்துகளாலும் குறிகளாலும் குறிப்பதால் ஓரளவுக்கு நமக்கு எளிதாக இருக்கும். அஒநெ இலத்தீன், கிரேக்க எழுத்தின் அடிப்படையிலேயே மிகப்பெரும்பாலான குறிகள் உருவாக்க்கப்பட்டன என்று அவர்களே தங்கள் சாய்வை ஒப்புக்கொண்டுள்ளார்கள். இந்த அஒநெ (IPA) குறிகளோடு தமிழில் நாம் புரிந்துகொள்ளுமாறு குறிமரபுகள் கொண்டு எழுதுவது நல்லது. பிற்காலத்தில் தானியங்கியாய் அஒநெ நம்முறைக்கும், நம்முறை அஒநெ வாகவும் எளிதாகக் காட்டச் செய்யலாம். எனவே நாம் புரிந்து கொள்வதும், நம் பயனுமே முதன்மை பெறுதல் நல்லதாக அமையும் என்று கருதுகிறேன்.--செல்வா 15:23, 6 ஆகஸ்ட் 2010 (UTC)

  • செல்வாவும் பிறரும் கூறுவதைக் கண்டபோது, புயலுக்குப் பின் அமைதி என்னும் உணர்வுதான் ஏற்பட்டது! செல்வா கூறுவதுபோல, அஒநெ (IPA) முறையைத் தமிழ்முறைப்படித் தழுவியமைத்து ஒலிப்புப் பட்டியல் உருவாக்கும் நேரம் வந்துவிட்டது என்றே கருதுகிறேன். பணி தொடர்க! நன்றி! --பவுல்-Paul 15:41, 6 ஆகஸ்ட் 2010 (UTC)

நிரிவாகிப் பொறுப்புக்கான நடப்பு வேண்டுகோள்[தொகு]

--Natkeeran 03:02, 8 ஆகஸ்ட் 2010 (UTC)

தமிழில் பல்லூடக ஆவணப்படுத்தல்[தொகு]

தமிழில் பல்லூடக ஆவணப்படுத்தல் --Natkeeran 01:56, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

யாருக்காக மொழி பெயர்க்கிறோம்?[தொகு]

பொதுவாக மொழிபெயர்க்கும்போது அதனை படிக்கக் கூடியவர் யார் என்பதை நாம் மனதில் கொண்டு அதற்கு ஏற்ப மொழி பெயர்ப்பதே சிறந்தது என்பது என் கருத்து. ஏனென்றால் ஒரு வர்த்தக ரீதியான மொழி பெயர்ப்பாளரான என்னால் கூட சில சமயங்களில் சுத்த தமிழிலில் எழுதப்பட்ட வார்த்தைகள் புரிந்து கொள்ள முடியவில்லை. குறிப்பாக இலங்கையை சேர்ந்த எழுத்தாளர்கள் எழுதும் சொற்களை சிலசமயம் ஆழ்ந்து யோசிக்க வேண்டியுள்ளது.

உதாரணமாக இணைய தளங்களில் பயன்படுத்தப்படும் செவ்வி, காணொளி போன்ற வார்த்தைகள் தமிழக ஊடகங்களில் பயன்படுத்தப் படுவதில்லை. சிறிது யோசனைக்கு பிறகே இவை ஆங்கிலத்தின் ஆடியோ, வீடியோ வார்த்தைகளுக்கான மொழி பெயர்ப்புக்கள் என்று புரிந்து கொண்டேன்.

அதே போல பங்களிப்பு என்ற வார்த்தையும் எனக்கு புதியதே. பொதுவாக பங்களிப்புக்கு நான் புரிந்து கொண்ட அர்த்தம் பங்கு + அளிப்பு என்பதே. இது எந்த ஒரு பொருளையும் அளிப்பதை குறிக்கும். அதே வேளையில் நன்கொடை என்பதற்கும் பங்களிப்பு என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. இது போல மேலும் பல வார்த்தைகள் உள்ளன.

என்னுடைய கருத்து என்னவென்றால் இந்த வார்த்தைகளை தமிழ் ஆர்வலர்கள் மற்றும் படித்தவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் தமிழை வாசிக்க மட்டுமே தெரிந்தவர்களால் இவற்றை புரிந்துகொள்ள முடியுமா என்பது சந்தேகமே. அவர்களுக்கு இந்த வார்த்தைகள் ஆங்கிலத்தை விட வினோதமானதாக தெரியலாம்.

எனவே நன்கு அறியப்பட்ட மற்றும் பொதுமக்களின் புழக்கத்தில் உள்ள ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவதில் தவறில்லை என்பது என் கருத்து. மேலும் அதுவே அனைவருக்கும் புரிவதாகவும் மொழி பெயர்ப்பின் அவசியமாகவும் இருக்கும் என்று நான் கருதுகிறேன்.--−முன்நிற்கும் கருத்து Apthevan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வணக்கம் நண்ப, நீங்கள் கூறுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் புதிய தமிழ்ச் சொற்களுக்கான வேர்ப்பொருளையும் அறிந்தே மொழிபெயர்க்க வேண்டும் என்பது பழைய மரபு. எந்தச் சொல்லாயினும் தமிழ் மரபுக்கேற்பதான் மொழிபெயர்க்க வேண்டும் என்பது மூதறிஞர் கருத்தாம். அதனால் நாம் மரபோடு ஓடுவது நம் பிறங்கடைகளுக்குத் தான் நல்லது என்பது எனது கருத்து.--ச.உதயன்

Tamil Language Camp Gets the Thumbs Up[தொகு]

Tamil Language Camp Gets the Thumbs Up --216.123.169.252 16:57, 12 ஆகஸ்ட் 2010 (UTC)

கட்டற்ற தமிழ்க் கணிமை செயல்திட்டக் கருத்தரங்கம்[தொகு]

அனைவரின் பார்வைக்கும்! யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளையும் MIT-யின் கணினிச் சங்கமும் இணைந்து நடத்தும் கட்டற்ற தமிழ்க் கணிமை செயல்திட்டக் கருத்தரங்கத்தைப் பற்றிய விவரங்களும் கட்டற்ற தமிழ்க் கணிமை தொடர்பான தலைப்புகளில் பங்களிக்க விருப்பமுள்ளோர் காண வேண்டிய இணைப்பும் இங்கு தரப்பட்டுள்ளன. த.வி.யில் பங்களிக்க / பார்க்க வருவோரிடம் இத்தகவலைச் சேர்ப்பிக்குமாறு வேண்டுகோள் இன்று நம்மிடம் விடப்பட்டது. கடைசித் தேதி நாளை ( 15 ஆகத்து 2010 ).

இந்த இணைப்பில் அனைத்துத் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன: [1] --பரிதிமதி 17:34, 14 ஆகஸ்ட் 2010 (UTC)

தலைப்பு மாற்றக் கோரிக்கை[தொகு]

முதுமை மறதி என்னும் தலைப்பில் இருக்கும் கட்டுரையின் தலைப்பை மாற்றலாமா எனக் கேட்டு பேச்சு:முதுமை மறதி இங்கே எழுதியிருக்கிறேன். பார்த்து உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள். --கலை 14:37, 16 ஆகஸ்ட் 2010 (UTC)

பஞ்சாபி மொழியும், பஞ்சாபி விக்கிப்பீடியாக்களும்[தொகு]

பஞ்சாபி மொழியும், பஞ்சாபி விக்கிப்பீடியாக்களும் --Natkeeran 02:06, 17 ஆகஸ்ட் 2010 (UTC)

தேவையற்ற பகுப்புகள்[தொகு]

அண்மைக் காலமாக பயனர்:TRYPPN‎ ஆர்வத்துடன் பல பகுப்புகளை உருவாக்கி வருகிறார். இது பாராட்டிற்குரியதுதான். ஆனால், பல பகுப்புகள் தேவையற்ற தலைப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படியே போனால் கட்டுரைகளின் எண்ணிக்கையை விட பகுப்புகளின் எண்ணிக்கை அதிகமாகி விடும். இந்தப் பகுப்புகள் உருவாக்கத்தை நிர்வாகிகள் மட்டும் மேற்கொள்ளலாமே...? இதற்கென தனிக் கொள்கைகள் உருவாக்க வேண்டும். தற்போதிருக்கும் தேவையற்ற பகுப்புகளை நீக்கவும் நிர்வாகிகள் முன்வர வேண்டும். --தேனி.எம்.சுப்பிரமணி. 01:54, 22 ஆகஸ்ட் 2010 (UTC)


உங்கள் அவதானிப்பு சரியே. அவரை தற்காலிகமாக பகுப்புகளை ஆக்க வேண்டாம் என்று கோரி உள்ளேன். மேலும்

ஆங்கிலத் தலைப்பிலான, உறுப்புகள் அற்ற, ஒத்த தலைப்புடைய பகுப்புகள் பல நீக்கப்பட்டுள்ளன. இந்த பகுப்புகள் துப்பரவு தொடரும். நன்றி. --Natkeeran 19:39, 28 ஆகஸ்ட் 2010 (UTC)

ஆப்பிரிக்க மொழிகளின் விக்கிப்பீடியாக்கள்[தொகு]

ஆப்பிரிக்க மொழிகளின் விக்கிப்பீடியாக்கள் --Natkeeran 15:50, 22 ஆகஸ்ட் 2010 (UTC)

கட்டுரை எண்ணிக்கை வேறுபாடு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை 24000 ஐத் தாண்டி 24001 ஆகியுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவின் அண்மைய மாற்றங்கள் பகுதியில் "கட்டுரைகள் எண்ணிக்கை: 24001" என்று உள்ளது. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் தமிழ்க் கட்டுரைகள்: 23999 ஆக உள்ளது. இரண்டிற்குமிடையில் இரண்டு வித்தியாசங்களுடன் இருவேறு எண்ணிக்கை இருப்பது சரியானதா? இப்படி இடம் பெறுவதற்குக் காரணமென்ன? இரண்டில் எது உண்மை? இரண்டு எண்ணிக்கையும் ஒன்றாகத் தோன்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? --தேனி.எம்.சுப்பிரமணி. 17:51, 22 ஆகஸ்ட் 2010 (UTC)

இயற்படுத்தப்பட நேரம் ஆகியுள்ளதாகத் தெரிகின்றது. இப்போது முன் பக்கத்திலும் 24001 கட்டுரைகள் என்று காட்டுகின்றது. 24,000 கட்டுரை எழுதிய தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு வாழ்த்துக்கள். --ஜெ.மயூரேசன் 17:57, 22 ஆகஸ்ட் 2010 (UTC)
இந்த மாதம் கட்டுரை எண்ணிக்கை விரைவாகக் கூடியுள்ளது. இப்படியே தொடர்ந்தால் சில மாதங்களுக்குள் 30,000 ஐ எட்டிவிடலாம். --மயூரநாதன் 19:12, 22 ஆகஸ்ட் 2010 (UTC)
ஆம். முதலில் 25,000 ஐக் கொண்டாடுவோம் :) கட்டுரைகளின் தரங்களை மீள்பார்வை இடவேண்டும். பல நல்ல தலைப்புகளில் நெடிய கட்டுரைகள் உருவாகி இருந்தாலும், அவற்றை விரிவாகவும் ஆழமாகவும் திருத்த வேண்டிய நிலையில் உள்ளது. எனினும் செய்தே ஆகவேண்டும்!--செல்வா 15:49, 23 ஆகஸ்ட் 2010 (UTC)
ஆம் செல்வா, மயூரநாதன். கட்டுரைகளின் எண்ணிக்கையும் தகவல் செறிவும் நன்கு வளர்ந்து வருகின்றன. நடையையும் தரத்தையும் கண்காணித்துப் பேண வேண்டும். -- சுந்தர் \பேச்சு 04:38, 24 ஆகஸ்ட் 2010 (UTC)
தேனி.சுப்பிரமணி, இற்றைப்படுத்தாமல் இருந்தால் இங்குள்ள இணைப்பை ஒருமுறை அழுத்திப் பாருங்கள். விரைவு பொருட்டு பக்க உள்ளடக்கங்கள் வலைவழங்கிகளில் சிறிது நேரம் சேமிக்கப்பட்டிருக்கலாம். -- சுந்தர் \பேச்சு 04:38, 24 ஆகஸ்ட் 2010 (UTC)