பயனர் பேச்சு:Apthevan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள், Apthevan!

வாருங்கள் Apthevan, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--ரவி 06:11, 5 செப்டெம்பர் 2009 (UTC)


Apthevan, உங்களுடைய மல்டி லெவல் மார்க்கெட்டிங்‎ என்னும் கட்டுரை நன்றாக உள்ளது. ஆனால் இதன் தலைப்பைத் தமிழில் இடுங்கள். கட்டுரையின் உள்ளேயும் சில இடங்களில் ஆங்கிலத்தை அப்படியே ஒலி பெயர்த்து எழுதியுள்ளீர்கள் அவற்றையும் மொழிபெயர்த்தால் நல்லது. மயூரநாதன் 17:09, 21 நவம்பர் 2009 (UTC)

வணக்கம், நீங்கள் யாருக்காக மொழி பெயர்க்கிறோம்? என்ற தலைப்பில் எழுதியவற்றை ஆலமரத்தடிக்கு மாற்றியுள்ளேன். அங்கு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 08:56, 12 ஆகஸ்ட் 2010 (UTC)

வணக்கம். தேவரின் திருக்குறள் அஷ்டாவதானம் போன்ற ஆக்கங்களை தகுந்த ஆதாரத்துடன் (எந்த நூல், பதிப்பு, பக்கங்கள்) விக்கிமூலத்தில் இடலாம். அதுவும் இந்த ஆக்கம் காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்டிருந்தால் மட்டுமே. கலைக்களஞ்சியக் கட்டுரைகள் அல்லாதவை தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படும்--இரவி (பேச்சு) 18:55, 8 ஆகத்து 2012 (UTC)

உங்கள் கட்டுரை விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமற்றது என்பதால் உங்கள் பயனர் பெயர்வெளிக்கு நகர்த்தியுள்ளேன்.

பார்க்க: பயனர்:Apthevan/தேவரின் திருக்குறள் அஷ்டாவதானம்--இரவி (பேச்சு) 13:43, 9 ஆகத்து 2012 (UTC)

கலைக்களஞ்சியக் கட்டுரை[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியக் கட்டுரைகளை மட்டுமே உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. எனவே தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கிய “புத்தரும் புளிப்பு திராட்சையும்‎” என்கிற புத்தர் கதை என்னால் நீக்கப்பட்டது. புதிய தலைப்புகளில் நல்ல கட்டுரைகளை உருவாக்க முயற்சியுங்கள். தங்கள் முயற்சிக்கு என் இனிய வாழ்த்துகள்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:21, 9 ஆகத்து 2012 (UTC)

அமைதியாக இருக்கும் திறமை - ஓஷோ[தொகு]

வணக்கம் Apthevan, நானே அது பற்றி உங்களுக்கு கூற வேண்டும் என இருந்தேன், அதற்குள் வேறு வேளைகளில் மறந்து விட்டேன். விக்கி ஒரு கலைக்களஞ்சியம் ஆதலால் கலைக்களஞ்சியக் கட்டுரைகளை மட்டும் எழுதவும், கதை சொற்பொழிவு போன்றவைகள் கலைக்களஞ்சியத்திற்கு ஏற்றவை அல்ல. வேண்டுமெனில் ஓஷோ கட்டுரையில் சிறு குறிப்புகளை இது போன்ற சொற்பொழிவு நடந்தது என ஆதாரத்துடன் குறிப்பிடலாம், மேலும் ஏதேனும் உதவி தேவைப்படின் கேட்கவும்,நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 18:28, 28 ஆகத்து 2012 (UTC)

திரு சண்முகம் அவர்களே,

ஒருவரது பேச்சு கட்டுரையாக அமையாதா? கட்டுரையில் சொல்லப்படும் விஷயங்களை ஒருவர் தன் பேச்சில் சொல்ல முடியாதா?−முன்நிற்கும் கருத்து Apthevan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

கலைக்களஞ்சியம் என்றால் என்ன என்பதை இக்கட்டுரையில் அறியலாம். விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும் இதில் விக்கிப்பீடியா தொடர்பான கொள்கைகள் உள்ளன. விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று இதில் தமிழ் விக்கிப்பீடியா எவை அன்று என உள்ளது. விக்கிப்பீடியா தகவல்களின் களஞ்சியமே தவிர தனிப்பட்ட ஒருவரின் பேச்சையே கருத்தையோ சேமித்து வைக்கும் இடமல்ல. மேலும் கட்டுரை எனில் நாம் அனைத்து கட்டுரைகளையும் விக்கியில் எழுதுவதில்லையே, கலைக்களஞ்சியத்திற்கேற்ற கட்டுரைகளை மட்டும் எழுதுகிறோம். அருள்கூர்ந்து கொள்கைப் பக்கங்களை ஒரு முறைப் படித்து பார்க்கவும். மாதிரிக் கட்டுரைகளுக்கு விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள் பார்க்கவும், மீண்டும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்கவும், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 18:46, 28 ஆகத்து 2012 (UTC)


திரு சண்முகம் அவர்களுக்கு நன்றி,

நான் கொள்கைகள் பக்கத்தை பார்க்கிறேன். Apthevan (பேச்சு) 19:03, 28 ஆகத்து 2012 (UTC)

மேலே இரவி குறிப்பிட்டது போல பெரியோர்களின் உரைகள் போன்றவற்றை மூல வடிவம் மாறாமல் விக்கிமூலத்தில் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 21:15, 28 ஆகத்து 2012 (UTC)

படிம வழிகாட்டல்[தொகு]

--AntanO 09:15, 17 செப்டம்பர் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Apthevan&oldid=1918443" இருந்து மீள்விக்கப்பட்டது