உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:பதிப்புரிமை/கேள்விகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1.புகைப்படத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமையை எங்கிருந்து அறிந்து கொள்வது? அல்லது பெற்றுக்கொள்வது? --Chandravathanaa 11:03, 27 ஆகஸ்ட் 2008 (UTC)

காப்புரிமை என்ன என்பதை படிமத்தின் காப்புரிமைக் கொண்டவர் தான் நிர்ணயிக்க வேண்டும். விக்கிப்பீடியா:காப்புரிமை வார்ப்புருக்கள் பக்கத்தில் பட்டியலிடப்ப்ட்டுள்ள காப்புரிமை வகைகளில் உங்களுக்கு பொருத்தமானதை தெரிவுச் செய்து அதற்கான வார்ப்புருவை படிமபக்கத்தில் இட்டுக்காட்டலாம்.

2. புகைப்படங்களின் காப்புரிமை யாருக்குள்ளது?

புகைப்படங்களின் உரிமை படிமங்களை எடுக்க பயன்படுத்திய கருவியின் உரிமையாளருக்கு உரியதாகும். உங்கள் கமெராவில் எடுத்த படங்களின் காப்புரிமை உங்களுக்கு உரியதாகும்.

3. எனது புகைப்படங்களை என்ன காப்புரிமையில் பகிர்வது?

  1. க்னூ தளையறு ஆவண உரிமம்
  2. எட்ரிபியுசன் செயார் எலைக் பதிப்பு 3.0,2.5,2.0,1.0[1]
என்ற் காப்புரிமைகள் பொருத்தமாக இருக்கும். பின்வரும் வார்ப்புருக்களை படிம பகத்தில் இடுவதன் மூலம் காப்புரிமையை {{GFDL}},{{cc-by-sa-3.0}} சுட்டிக்காட்டலாம். மேலுள்ள இரண்டையோ அல்லது ஏதவது ஒன்றையோ நீங்கள் தெரிவுச் செய்யலாம்.

4. படிமங்களில் தோன்றும் நபருக்கு படிமத்தில் காப்புரிமை உள்ளதா? அவற்றை விக்கியில் பகிரலாமா?

படிமத்தில் தோன்றுபவருக்கு படிமத்தின் காப்புரிமை தொடர்பில் எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது. புகைப்படங்களின் உரிமை படிமங்களை எடுக்க பயன்படுத்திய கருவியின் உரிமையாளருக்கு உரியதாகும். ஆனால் அவரது படிமத்தை விக்கியில் பயன்படுத்த அவரிடம் அனுமதி பெறப்பட வேண்டும்.

5. எனது கருவியால் எடுத்த புகைப்படத்தின் பயனர் பெயர் வோறொன்றாக (SwiftRakesh) இருக்கிறதே. எப்படி பயனர் பெயர் மாற்றுவது? இந்த படத்தை நான் எடுத்தது. படிமம்:GovernmentHospitalChennai.JPG - மாஹிர் 19:31, 8 ஏப்ரல் 2010 (UTC)

மாஹிர், இந்த ஒளிப்படம் செப்டம்பர் 26,2005 அன்று SwiftRakeshஆல் பொதுக்கோப்பகத்தில் தரவேற்றப்பட்டுள்ளது.இது நீங்கள் எடுத்தப்படமானால் அங்கு முறையிட்டு அந்தப் படிமத்தை முதலில் நீக்க வேண்டும். பின்னர் உங்கள் படிமத்தை தரவேற்றலாம். தரவேற்றிய பயனர் பெயரை மாற்ற இயலாது. --மணியன் 05:09, 9 ஏப்ரல் 2010 (UTC)

6. பதிப்பபுரிமை இல்லாத புத்தகங்களில் இருந்து அல்லது காப்புரிமை இல்லாத புகைப்படத்தை உரிமையாளர் யார் என்ற விபரம் இல்லாத சூழலில், அவரிடம் அனுமதி பெற வழி இல்லாதபோது நியாயப்பயன்பாடு காரணம் கருதி அந்த படிமத்தை விக்கியில் மீண்டும் பயன்படுத்த சிறப்பு அனுமதி தேவை.
(உ-ம்)

  1. படிமம்:பி. கக்கன்.jpg
  2. படிமம்:ஜெயச்சாமராஜா உடையார் பகதூர்.jpg
  3. படிமம்:TVS iyyengar.jpg
    --ஸ்ரீதர் /பேசுக 05:47, 7 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

7. படிமம்:Dhenuga.jpg படிமம் என்னால் மின்னஞ்சல் வழியாகப் பெறப்பட்டது. அவருடைய நூல்கள் பற்றிய விவரங்கள் தெளிவிற்காக கேட்கப்பட்டபோது அவரிடமிருந்து இப்படம் பெறப்பட்டது. இப்படம் என்னால் எடுக்கப்படவில்லை (This photograph was not taken by me). மேற்கொண்டு நான் செய்யவேண்டியவற்றைக் கூறவேண்டுகிறேன். தங்களின் வழிகாட்டலுக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:16, 24 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]