உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு08

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரிமைகள் பற்றிய சொல்லாடல்கள் தமிழ்ப்படுத்தப்பட வேண்டும்.

[தொகு]

Creative Commons, Wikipedia Commons, Copyleft, GNU GPL, PL, Copyrighted, etc... தமிழ்படுத்தப்பட்டு நியமப்படுத்தப்பட வேண்டும்.

(standard = தரம் ?, நியமம் ?, சீர் ???)

--Natkeeran 19:01, 29 ஜனவரி 2007 (UTC)

  • standard = சீர்தரம்? நியமம் - ஏற்கனவே புழக்கத்தில் உள்ளது.
  • PL - பொது உரிமம்
  • copyright - காப்புரிமை
  • copyleft - அளிப்புரிமை

--Ravidreams 06:55, 3 பெப்ரவரி 2007 (UTC)

Jimbo in Chennai

[தொகு]

Jimbo Wales is visiting Chennai to attend a Wikicamp, an unconference to discuss Wikipedia and Wikis in general. The event is scheduled for the 25th of February, and will take place at the Tidel Park, in Chennai. Here is a blog post from the person organizing it. I am on a vacation to India around that time and am planning to attend this one. Interested? Please do register as a participant. Regards, Ganeshk 01:08, 4 பெப்ரவரி 2007 (UTC)

சென்னை விக்கிபீடியர்கள் srinivasan, vinodh ஆகியோர் இதில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இதில் மாநில மொழி விக்கிபீடியாக்கள் பற்றியும் கலந்துரையாடல் இருக்கிறது. அதில் தமிழ் விக்கிபீடியா சார்பாக சிறப்பாக பிரதிநிதிப்படுத்துவது நலம். இது தொடர்பாக தனி ஒரு விக்கிபீடியா திட்டப் பக்கத்தில் அறிக்கை போல் ஒன்றை உருவாக்கலாம். இதற்கு முன் தமிழ் விக்கிபீடியா தரக்கண்காணிப்பு, வளர்ச்சி, போக்குகள், பிரச்சினைகள் குறித்த உரையாடல்களை அந்த அறிக்கையில் தொகுத்தும், சுருக்கியும் தர முயலலாம்--Ravidreams 09:58, 7 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ் விக்கிபீடியா Suggestion, விக்சனரி Suggestion,விக்கிபீடியா பகடை(random) தொடுப்பு கருவியை - தமிழூற்று வலைப்பதிவுகளில் இணைப்பது குறித்து பேச சிறிது நேரம் ஒதுக்கித்தர சம்மதித்துள்ளார்கள்.
அத்துடன் gmail chat (or gchat) லிருந்தே விக்கிபீடியா தொடுப்புகள், suggestions பெறுவது எப்படி என்றும் விளக்க இருக்கிறேன். அதற்கான மின்னஞ்சல் thamizhootru@gmail.com. உதா. மேற்கண்ட மின்னஞ்லை சேர்த்துவிட்டு அதில் சேட் விண்டோவில் "/news" (without quotes) என்று டைப் செய்து பாருங்கள். இது 24x7 online சர்வீஸ்....(சிறிது bug இருக்கிறது. ஒரிருநாளில் அறிவிக்கிறேன்.) --மாஹிர் 6:44,9 பெப்ரவரி 2007(IST)

மகிழ்ச்சி மாஹிர். உங்களை போன்றவர்கள் தமிழ் விக்கிபீடியாவை நல்ல முறையில் முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழூற்று போன்ற கருவிகள் வருவது தமிழ் இணையம், தமிழ் விக்கிபீடியா வளர்ச்சி நிலைகளை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. --Ravidreams 14:02, 9 பெப்ரவரி 2007 (UTC)

விக்கிபீடியா logo காப்புரிமை பற்றி

[தொகு]

விக்கிபீடியா கட்டுரைகளுக்கு துறை சார் வல்லுநர்களை/பங்களிப்பாளர்களை கவருவதற்காக தமிழூற்று logo வை கலராக்கி அதிலிருந்து விக்கிபீடியாவிற்கு பகடையாக தொடுப்பு கொடுக்க விரும்புகிறேன். இதில் விக்கிபீடியா logo வையும் சிறிதாக்கி சேர்த்திருக்கிறேன்.

விக்கிபீடியா logo வை இதுபோன்ற வகையில் பயன்படுத்துவதால் விக்கிபீடியா கொள்கைகளுக்கு எதிரானதா? தயவு செய்து விளக்கவும்.

நன்றி
மாஹிர்
7 பெப்ரவரி 2007

விக்கிபீடியா சின்னத்தை இணைப்பது குறித்து விக்கிமீடியா உறுதியான நிலைப்பாடுகளை கொண்டுள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்காக விக்கிபீடியா கட்டுரைகளை இறுவட்டில் முதல் முறை வெளியிட்டபோது கூட விக்கிபீடியா சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. எனக்கென்னவோ கட்சி சாயத்தை கலக்காமல் இருப்பது தமிழூற்று, விக்கிபீடியா இரண்டுக்குமே நல்லது என்று நினைக்கிறேன். விக்கிபீடியா சின்னத்தை நீக்க கேட்டுக் கொள்கிறேன்--Ravidreams 09:55, 7 பெப்ரவரி 2007 (UTC)
எனக்கென்னவோ கட்சி சாயத்தை கலக்காமல் இருப்பது தமிழூற்று, விக்கிபீடியா இரண்டுக்குமே நல்லது என்று நினைக்கிறேன்
நன்றி ரவி, அப்படியே ஆகட்டும் --மாஹிர்

7 பெப்ரவரி 2007


Creative Commons - மொழிபெயர்ப்பு தேவை

[தொகு]
  • Create - உருவாக்கு, தோற்று, படை, உற்பத்தி, ஆக்கு
  • Creativity - ஆக்குதிறன், படைக்கும் திறன், உண்டாக்கவல்ல,
  • Commons - பொது
  • Licence - உரிமம்
  • Some Rights Reserved - சில கட்டுக்களுடன்
  • பொது ஆக்குரிமை
  • ஆக்குதிறன் பொது உரிமை

--Natkeeran 17:19, 11 பெப்ரவரி 2007 (UTC)

ஆக்குதிறன் பொதுமம் என்று எழுதலாமா? Mayooranathan 18:30, 11 பெப்ரவரி 2007 (UTC)
நேரடி மொழிபெயர்ப்பாக தெரிகின்றது. இங்கே creative commons என்பது, ஒருவர் ஒரு ஆக்கத்தை creative ஆக பயன்படுத்த முடியும் என்பதையே குறிக்கின்றது. creative ஆக என்பதை விளக்க பெயர்யுரிச் சொல் ஒன்று தேவை. ஆக்குதிறனை எப்படி பெயர்யுரிச் சொல்லாக மாற்ற முடியும்? பொதுமம் நன்று. --Natkeeran 18:50, 11 பெப்ரவரி 2007 (UTC)

கோப்பு பதிவேற்று பக்கத்தை எப்படி தொகுப்பது?

[தொகு]

--Natkeeran 17:20, 11 பெப்ரவரி 2007 (UTC)

நீங்கள் கேட்டது சிறப்புப் பக்கத்தை அல்லவா? :-) தவறாக விளங்கிக் கொண்டேன். --கோபி 17:33, 11 பெப்ரவரி 2007 (UTC)

ஆமாம், அந்த சிறப்பு பக்கத்தை எப்படி தொகுப்பது?--Natkeeran 18:13, 11 பெப்ரவரி 2007 (UTC)

மீடியாவிக்கி:Uploadtext என்ற பக்கத்தை தொகுப்பதன் மூலம் இதை செய்யலாம்--Ravidreams 18:32, 11 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி. --Natkeeran 18:51, 11 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ் விக்கிபீடியா வலைப்பதிவு

[தொகு]

தமிழ் விக்கிபீடியாவுக்கான வலைப்பதிவு ஒன்று தொங்கப்பட்டிருக்கிறது. தற்போது நானும் நற்கீரனும் பங்களிப்பாளர்களாக இணைய இருக்கிறோம். தமிழ் விக்கிபீடியா பிறருக்கு அறிவிக்க விரும்பும் செய்திகளை தெரிவிப்பதற்கான அதிகாரப்பூர்வமான ஒரு கருவியாக இது திகழ வேண்டும் என்று கருதுகிறோம்.

தமிழ் விக்கிபீடியா குறித்து அறிய விரும்புபவர்கள் இது குறித்து யாரிடம் கேட்பது, விக்கிபீடியாவில் எந்த பக்கத்தில் கேட்பது போன்ற குழப்பத்துக்கு ஆளாகின்றனர். புதியவர்களுக்கு மீடியாவிக்கி மென்பொருள் அறிமுகம் இல்லாமல் இருப்பதால் சரியான பக்கத்துக்கு வந்தாலும் தொகுக்க முடியாது இருக்கின்றனர். இது போக தமிழ் விக்கிபீடியா பற்றிய தவறான புரிதல்கள் (குறைவான கட்டுரை எண்ணிக்கை, மொழிநடை, முக்கிய கட்டுரைகள் இல்லாதது) சிலவற்றையும் நீக்க வேண்டியது தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கு அவசியம். இவற்றை செய்வதற்கு, தமிழ் இணைய அன்பர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான வலைப்பதிவு ஊடகம் உதவக்கூடும்.

இந்த வலைப்பதிவில் விக்கிபீடியா குறித்த கட்டுரைகள், அறிக்கைகள், விளக்கங்கள், உதவிக்குறிப்புகள், வழிகாட்டிப் பதிவுகள், மயூரனின் விக்கிபீடியா அறிமுகம் போன்ற தொடர்கள், தமிழ் விக்கிபீடியாவின் சிறப்புக் கட்டுரைகள், புள்ளிவிவரங்கள், புள்ளிவிவரப் பகுப்பாய்வுகள் ஆகியவற்றை வெளியிட எண்ணம். இவற்றை பதிப்பிப்பதற்கு முன் விக்கிபீடியா:வலைப்பதிவு இடுகைகள் என்ற பக்கத்தில் விக்கிபீடியர்களின் பார்வைக்கு வைத்து திருத்தங்களை பெற்று பின்னர் வெளியிடலாம் என்று நினைக்கிறேன். நன்றி.--Ravidreams 15:24, 12 பெப்ரவரி 2007 (UTC)

ரவி நல்ல முயற்சியே! தமிழுலகுக்கு வலைப்பதிவு நன்கு அறிமுகம் உள்ள ஊடகம் என்பதால் இம்முயற்சி நிச்சயம் வெற்றிபெற்று பல பயனர்களை ஈர்க்கும். வாழ்த்துக்கள்.--ஜெ.மயூரேசன் 06:36, 13 பெப்ரவரி 2007 (UTC)

படிமங்கள் தொடர்பாக

[தொகு]

இனிவருங் காலங்களில் படிமங்களைப் பதிவேற்றும்போது அதன் மூலம் மற்றும் அதற்கான பொருத்தமான உரிமம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் பதிவேற்றப்படும் படிமங்களை கால அவகாசம் கொடுத்து நீக்கப் பரிந்துரைக்கிறேன். இது தொடர்பான அறிவுறுத்தல் கோப்பைப் பதிவேற்றும் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

மேலும் பிற விக்கிகளில் இருந்து பெற்றுப் பதிவேற்று முன் அதே அல்லது ஒத்த படிமங்கள் விக்கி பொதுவில் இருக்கின்றனவா என்பதைச் சோதித்து அவ்வாறு இருப்பின் பொதுப்படிமத்தை இணைப்பது பொருத்தமானது.

மேலும் இப்பொழுது பாவனையிலுள்ள படிமங்களையும் முடிந்தால் பொதுப்படிமங்களாற் பிரதியீடு செய்வது நல்லது.

தமிழ்ச்சூழலுக்குரிய fairuse படிமங்களும் தமிழ்ச்சூழலுக்குப் பிரத்தியேகமான பொருத்தமான உரிமங்களுடைய படிமங்களும் மாத்திரமே த.வி.யில் இருப்பது ஆரோக்கியமானது. நன்றி. கோபி 17:40, 12 பெப்ரவரி 2007 (UTC)

பரிந்துரையை ஆமோதிக்கிறேன். கட்டுரை உருவாக்கத்துக்கு உள்ள தரக்கட்டுப்பாடுகள் போல் படிமங்களுக்கும் தொடக்கத்திலேயே செய்வது பின்னர் ஒட்டுமொத்தமாகத் துப்புரவுப்பணி செய்ய வேண்டிய சுமையை குறைக்கும்--Ravidreams 18:29, 12 பெப்ரவரி 2007 (UTC)

கூகிள் சாட்டில் தமிழ் விக்கிபீடியா suggestions

[தொகு]
  1. இந்த செய்தி பற்றி அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் அநேகமாய் விக்கிபீடியா, சாட் விண்டோவில் வருவது முதல்முறையாய் கூட இருக்கலாம். அத்துடன் மற்ற மொழிகளைவிட முதன்முதலாய் வருவதும் நமக்கு பெருமைதான்.(atleast after english, if this feature is exist for english)
  2. இதில்(இந்த முகவரியில்) இன்னொரு சிறப்பும் உண்டு, அது கூகிள் சாட்டிற்கு சைனீஸிற்கு அடுத்தபடியாக தமிழில் தான் குரூப் சாட் (or conference chat) அறிமுகம் செய்கிறேன்.
  3. இது கூகிளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பல்ல, ஆயினும் இது போன்று செய்வதை கூகிள் ஊக்கப்படுத்துவதாக அதன் தளத்திலிருந்து என்னால் அறிய முடிகிறது.
  4. thamizhootru@gmail.com என்கிற இந்த மின்னஞ்சலை கூகிள் சாட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் "வணக்கம்" என்று டைப் செய்யுங்கால் இந்த conference ல் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் உங்கள் "வணக்கம்" என்கிற செய்தி செல்லும்.இன்னொரு சிறப்பு ஜிமெயில் விண்டோவிலிருந்து கூட சாட் செய்யலாம்.
  5. /help என்று டைப் செய்ய, சாட்டில் என்ன என்ன கட்டளைகள் கொடுக்கலாம் அதன் syntax போன்றவை கிடைக்கப்பெறுவீர்கள்.
  6. /wiki [wikitext in tanglish] கொடுக்க முதல் பத்து விக்கிபீடியா கட்டுரைகளுக்கான தொடுப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். உதா. /wiki ampuli என்று கொடுத்து எண்டர் கீயை அடிக்க \[அம்புலிமாமா\] - http://techtamil.in/show_wiki.php?id=2047
  7. இன்னும் பல வசதிகள் இருப்பினும் இடம் கருதி இவற்றை இங்கு பதிய வேண்டாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளை அன்புடன் எதிர்பார்க்கிறேன். என்னுடைய மின்னஞ்சல் mahir78@gmail.com --மாஹிர், 13 பெப்ரவரி 2007 10:45 (IST)

தமிழூற்று கூகிள் சாட் கட்டளைகள் (/help):


தமிழூற்று கூகிள் சாட் விக்கிபீடியா கட்டளை (/wiki [text in tanglish]):

மாஹிர், இதை பயன்படுத்திப் பார்த்தேன். மிகவும் அருமை. suggestionகளை வினவ தமிழிலேயே தட்டச்சுவது போல் இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்--Ravidreams 12:01, 13 பெப்ரவரி 2007 (UTC)

ரவி, தமிழ் உள்ளீடு இப்பொழுது கொடுக்கலாம். உதா. /wiki தமிழ்நாடு --மாஹிர் 28 பெப்ரவரி 2007

ஒரு நல்ல வாசிப்பு

[தொகு]

--Natkeeran 22:47, 15 பெப்ரவரி 2007 (UTC)

தொகுப்புக்கள்

[தொகு]

தொகுப்புக்கள் பற்று சுருக்கம் தருதல் நன்று. வெறுமே 1,2,3,4 என்று உறியில் கட்டி வைப்பது நல்ல தகவல்கள் கவனம்பெற வாய்ப்புக்களைக் குறைக்கின்றது. --Natkeeran 18:07, 16 பெப்ரவரி 2007 (UTC)

நற்கீரன், இப்பொழுது பெரும்பாலும் தொகுப்புகளை கால வரிசைப்படி தொகுத்து வைக்கிறோம். எல்லா விசயங்களையும் கருப்பொருள் படி தொகுப்பது சிரமமான நேரம் பிடிக்கும் வேலை. ஆனால், நல்ல யோசனை. ஆங்கில விக்கியில் நுட்பம், செய்திகள், கொள்கைகள் போன்ற தலைப்புகளில் தொகுத்து வைக்கிறார்கள். சொற் தேர்வுப் பக்கத்தில் நீங்கள் செய்திருந்த தொகுப்பு நன்று. (உறியில் கட்டி வைப்பது என்று உவமை நன்று :) எங்க இருந்து பிடிக்கிறீங்க, இது போன்ற உவமைகளை ;))--Ravidreams 20:40, 16 பெப்ரவரி 2007 (UTC)

AVG, JVP போன்ற சுருக்கங்களைத் தமிழில் எழுதுதல்

[தொகு]

AVG, JVP போன்ற சுருக்கங்களைத் தமிழில் எழுதும்போது ஏ.வி.ஜி., ஜே.வி.பி. என்றவாறாக அதாவது முற்றுப்புள்ளியிட்டு ஆனால் இடைவெளிவிடாது எழுதினால் என்ன? முற்றுப்புள்ளியில்லாமல் எழுதும்போது அவற்றை இணைத்து வாசிக்க நேரிடலாம். --கோபி 17:03, 17 பெப்ரவரி 2007 (UTC)

தமிழில் பெயர்ச் சுருக்கங்கள் (:en:Abbreviation) தருவது பற்றி நாம் இன்னும் தெளிவு இல்லாம்தான் இருக்கின்றோம். ஒரு நபரின் பெயருக்கு முன்னால் என்றால் வெளி விட்டு தருவது வழக்கம். எடுத்துக் காட்டாக கா. சிவத்தம்பி. வேறு சுருக்கங்களுக்கு புள்ளி போட்டு தருவதே நன்று. ஏன் என்றால் ஆங்கிலத்தில் அவர்கள் capitalization முறையை பயன்படுத்துவதால் இலகுவில் வேறுபடுத்த முடிகின்றது. ஆனால் தமிழில் அப்படி இல்லை. எனவே நீங்கள் சுட்டிய படி ஜே.வி.பி., த.வி. என்று எழுதலாம். இதில் கடைசி எழுத்திலும் ஒரு புள்ளி போட வேண்டுமா என்பது குறித்து மற்ற பயனர்களின் கருத்து அறிய ஆவல். அதாவது ஜே.வி.பி, த.வி என்று எழுதுவது நன்றா அல்லது ஜே.வி.பி., த.வி. என்று எழுதுவது நன்றா? --Natkeeran 17:15, 17 பெப்ரவரி 2007 (UTC)

ஆம், ஆட்கள் பெயருக்கு முற்றுப்புள்ளிக்கு அடுத்து இடைவெளி விட்டும், பிறப் பெயர்களுக்கு இடைவெளி இல்லாமலும் எழுதலாம். தமிழ்நாட்டில் தி.மு.க - அ.தி.மு.க என்று எழுதுவது வழக்கம் என்று நினைக்கிறேன். கடைசி எழுத்துக்கு அடுத்து புள்ளி வைக்க மாட்டார்கள்--Ravidreams 19:11, 17 பெப்ரவரி 2007 (UTC)

ஜே.வி.பி என்று இறுதியில் புள்ளியில்லாமல் எழுதுவதே பொருத்தமானது. ஏனெனில் இறுதியிலும் புள்ளியிருந்தால் வசனம் முற்றுப் பெற்றதான மயக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால் ஜே.வி.பி.யினர் என்று எழுதுவதே ஜே.வி.பியினர் என்று எழுதுவதை விடப் பொருத்தமானது. கோபி 09:12, 18 பெப்ரவரி 2007 (UTC)
உடன்படுகிறேன்--Ravidreams 09:30, 18 பெப்ரவரி 2007 (UTC)
நல்ல தீர்வு. இதுவரை எனக்கு குழப்பமாக இருந்தது. --Natkeeran 13:00, 19 பெப்ரவரி 2007 (UTC)

வெளி இணைப்புக்கள் தொடர்பாக

[தொகு]

இப்போது பல பக்கங்களிலும் வெளி இணைப்புக்கள் பெருமளவில் ஆங்கிலப் பக்கங்களுக்குச் செல்பவை. இது ஆரோக்கியமானதா? ஆங்கில வெளி இணைப்புக்களைத் தேடும் ஒருவருக்கு ஆங்கில விக்கிபீடியாவுக்குப் போனால் போதுமானது. த.வியில் எதற்கு? உத்தியோகபூர்வ வலைத்தளம் போன்ற ஓரிரண்டுக்கு மேல் ஆங்கில வெளியிணைப்புக்கள் வழங்குவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றினால் என்ன? தமிழ் இணைப்புக்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தமிழில் இணைய உள்ளடக்க உருவாக்கத்தைத் தூண்டி நிற்பதாக இருக்குமல்லவா? கோபி 09:12, 18 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ் இணைப்புகளை வரிசையில் முதலில் தரலாம். ஆனால், பயனுள்ள இணைப்புகளாக இருக்கும்பட்சத்தில் ஆங்கில இணைப்புகளை எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம் என்பது என் எண்ணம்--Ravidreams 09:30, 18 பெப்ரவரி 2007 (UTC)

ரவி, இவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். நான் இவ்வாறு எண்ணுவது விஜயின் உரையாடல்களை வாசித்த பின்னரே. ஓரிடத்தில் ஜாதி என்று இருந்தால் அதனை சாதியாக்கி விடுவதில் தீவிரம் காட்டும் நாம் பெருமளவு பக்கங்களில் ஆங்கில உள்ளடக்கமிருப்பது தொடர்பில் எந்த குழப்பமுமின்றியிருக்கிறோம். எத்தனை வெளியிணைப்புக்கள் ஆங்கிலப் பக்கங்களுக்குச் சென்றாலும் சரியாகவே படுகிறது. ஒரு காலத்தில் வடமொழியும் தமிழில் இதே செல்வாக்கையே செலுத்தியது. இனியொரு காலத்தில் சீனர் பொருளாதார வல்லமை பெற்று அதனால் சீன மொழி முக்கியமானதொன்றாக வளர்ந்தால் நாம் எந்த வெட்கமுமின்றி சீன இணைப்புக்களக் கொடுப்போம். ஏனென்றால் தமிழரது மனநிலை அப்படி. இத்தனை காலம் இந்த மொழி தப்பிப் பிழைத்திருப்பது அதன் சிறப்பேயன்றி அதனைப் பேசுவோரால் அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஒரு சீன நகரத்தைப் பற்றிய அல்லது பிரெஞ்சு எழுத்தாளரைப் பற்றிய அல்லது அரபிக் கவிஞரைப் பற்றிய வெளியிணைப்புக்கள் நிச்சயம் அந்தந்த மொழிகளில் சிறப்பாக இருக்கும். ஆனால் நாம் ஆங்கில வெளியிணைப்புக்களை அடுக்கி வைப்போம். இதன் மூலம் ஆங்கிலத்தில் வாசிக்கச் சொல்லி விக்கிபீடியாவைப் பயன்படுத்துவோர் மீது திணிப்போம். அதையிட்டு எந்த மனச் சஞ்சலமும் எமக்கு இருப்பதில்லை... ஆங்கில வெளியிணைப்புக்கள் இருக்கத்தான் வேண்டுமானால் நாம் ஆங்கில விக்கிபீடியாவுக்கே பங்களிக்கலாமே. த.வி.க்கு வருமொருவர் தமிழில் தகவலறியத் தானே வருகிறார்? பொருத்தமான ஆங்கில விக்கியிணைப்புக்கு மேலதிகமாக மற்றைய இணைப்புக்கள் எதற்கு? ஆங்கில இணைப்புக்களே வேண்டாம் என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் முக்கியமான ஓரிரு இணைப்புக்கள் போதும் என்கிறேன்.

தமிழின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு இணையத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முடியும். தமிழில் உள்ளடக்க உருவாக்கம் ஊக்குவிக்கப்படல் வேண்டும். வலைப்பதிவுகள், இணையத்தளங்களில் எழுதுவோரெல்லாம் த.வி.க்கு வர வாய்ப்பில்லை. ஆனால் அவர்களில் தரமான உளடக்கத்தை உருவாக்குவோருக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களது பக்கங்களுக்கு இணைப்புக் கொடுப்பது அவர்களை மேலும் பங்களிக்கத் தூண்டக்கூடும். தமிழில் இன்னொரு இணையக் கலைக்களஞ்சியம் உருவாவதும் உடனடிச் சாத்தியமில்லை. அவ்வாறிருக்கையில் த.வி.யை ஒரு கட்டுக்கோப்பான கலைக்களஞ்சியமாகத் துப்புரவாக்கிச் சீரமைப்பது எங்கள் கைகளிற்தான் இருக்கிறது. கோபி 13:22, 18 பெப்ரவரி 2007 (UTC)

கோபி, அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள், படத்தளங்கள், நிகழ்படத்தளங்கள் ஆகியவை ஆங்கிலத்தில் இருந்தாலும் இணைப்பு தரலாம். இத்தளங்கள் தமிழில் அமையும் வழக்கம் இன்னும் வராத வேளையில் இவற்றை ஒதுக்கி விடவும் முடியாது என்பது கவனிக்கப்பட வேண்டும். ஆங்கில இணைப்புகளை பெரிதளவும் குவிக்கும் போக்கை தவிர்க்க வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். எனினும், தமிழர், தமிழ் தொடர்புடைய பல தகவல்களுக்கு கூட இணைப்புகள், உசாத்துணைகள் ஆங்கிலத்திலேயே கிடைக்கின்றன. இந்த கட்டுரைகள் ஆங்கில விக்கிபீடியாவில் இருக்குமென்றோ இல்லை இந்த இணைப்பை இடுவதற்காக ஒரு கட்டுரையை அங்கு தொடங்க வேண்டுமென்றோ எதிர்ப்பார்க்க முடியாது. அப்படிப்பட்ட வேளைகளில் ஆங்கில இணைப்புகளை பொருத்தமானவற்றை அளவோடு அனுமதிக்க வேண்டும். முழுக்க ஆங்கில இணைப்பு கூடாது என்ற இறுக்கமான கொள்கையில் உடன்பாடு இல்லை. இதை நீங்கள் பரிந்துரைப்பதற்கான நோக்கோடு உணர்வளவில், கொள்கை அளவில் உடன்படும் வேளை, இதை ஒரு பெரிதும் விரும்பத்தக்க ஒரு விக்கி நடைமுறையாகவோ வழிகாட்டுதலாகவோ தான் சுட்ட முடியும். கண்டிப்பான விதியாக அல்ல.--Ravidreams 18:10, 18 பெப்ரவரி 2007 (UTC)

அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு எந்தமொழியையும் நாடலாம். தமிழில் பொருத்தமான கட்டுரைகள் இருந்தால் அவற்றுக்குத் தான் முன்னுரிமை கொடுத்துவருகிறோம். இல்லாதவிடத்து ஆங்கில மொழிக் கட்டுரைகளை இணைப்புச் செய்வது பொருத்தமானதே. மற்றமொழிக் கட்டுரைகளை வாசித்து அறிவைப் பெறுவதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? பிற மொழிக்கட்டுரைகளில் வரக்கூடிய அனைத்து விடயங்களும் தமிழில் வரும்வரை பிறமொழிக் கட்டுரைகளின் தேவை இருக்கத்தான் செய்யும் அது இன்றியமையாததும்கூட. தமிழில் கட்டுரைகள் எழுதுவதற்கும் பெருமளவில் ஆங்கிலமொழிக் கட்டுரைகளிலும் நூல்களிலும்தான் நாம் பெரிதும் தங்கியிருக்கிறோம். அதில் பிழையேதும் கிடையாது. தமிழ் எழுதும்போது பிற மொழிச் சொற்களைத் தவிர்ப்பதும், பிறமொழிகளிலிருக்கும் விடயங்களையே வாசிக்கக்கூடாது என்று கண்ணை மூடிக்கொள்வதும் ஒன்றல்ல. தமிழ், தமிழர் சம்பந்தப்பட்ட விடயங்களில்கூட நாம் பிற மொழிக் கட்டுரைகளை வாசிக்கவேண்டியது முக்கியமானது. இதன்மூலம்தான் மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளமுடியும். Mayooranathan 19:15, 18 பெப்ரவரி 2007 (UTC)

அறிவைப் பெற எம்மொழிக் கட்டுரைகளி வாசிப்பதும் நல்லதுதான். நான் இங்கு குறிப்பிட்டது ஆங்கில இணைப்புக்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் தொடர்பானது. ஆங்கிலத்தில்தான் தேடவேண்டியிருப்பின் இணையான ஆங்கில விக்கிக் கட்டுரைக்குப் போனால் போதுமே. ஆங்கில விக்கியிலிருந்து வெளி இணைப்புக்களைப் பிரதியெடுத்துவந்து த.வி.யில் நிரப்பி வைப்பதால் ஆகப்போவது என்ன? கோபி 19:38, 18 பெப்ரவரி 2007 (UTC)

மயூரநாதன், இரவி அவர்களின் கருத்துக்களுடன் முழுதும் உடன்படுகின்றேன். நல்ல அறிவான கருத்துக்கள் எங்கிருந்தாலும் எம்மொழியில் இருந்தாலும், யார் சொன்னாலும் நாம் ஊன்றி கற்றறிவது நல்லதே. எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் நன்றே! எம்மொழியில் இருந்து கற்றாலும் நன்றே. நம் மொழியில் ஆக்குவதும், நம்மொழியில் ஆக்கும் பொழுது சிறப்பு கூட்டுவதும் நம் கையில் உள்ளது. மேலும் பிறமொழிச் சுட்டுகள் இருந்தால், அங்கிருந்து தேவைக்கேற்ப கருத்துக்கள் பெறவும் ஒப்பிட்டுப் பார்க்கவும், மேலும் பின்னர் செப்பமாகத் தமிழில் செய்யவும் பயனுடையதாக இருக்கும். சில காப்புரிமம், எழுத்துரிமம் பெற்றதாக இருக்கலாம் எனவே த.வி.யில் இடவோ மொழி பெயர்க்கவோ கூடாததாக இருக்கலாம். ஆனால் கருத்தறிய, பயன் பெற அவை முக்கியமானதாக இருக்கலாம். எனவே பிற மொழி வெளி இணைப்புகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆங்கிலம் மட்டுமில்லை, ஜப்பான் மொழி, சீன மொழி ஆகிய எம்மொழியாயினும் வரவேற்பு அளிக்க வேண்டும். பலரும் ஆங்கில அறிந்திருப்பதால், ஆங்கில இணைப்புகள் அதிகமாக இருக்க நேரிடலாம்.--செல்வா 19:49, 18 பெப்ரவரி 2007 (UTC)
கோபி, தமிழில் ஒருவர் ஒரு கட்டுரையைப் படித்த பின் அதன் வெளியிணைப்புகளை அவர் சொடுக்கிப் பார்க்க ஏதுவாய் இருக்கும். இதற்காக ஒருவர் ஆங்கில விக்கிக்குப் போக வேண்டியதில்லை. மேலும், அந்த இணைப்பில் என்ன உள்ளது, எது பற்றியது என்னும் செய்திகள் தமிழில் கொடுக்கப் பட்டுள்ளன. --செல்வா 19:49, 18 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, பெருமளவு கட்டுரைகளில் வெளி இணைப்பு விளக்கங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன. இது வெறுமனே ஆங்கில விக்கியிலிருந்து பிரதி செய்ததன் விளைவு. அவ்விணைப்புக்கள் தமிழ்ச் சூழலுக்குத் தேவையானவையா என்பது கவனத்திலெடுக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புக்கள் இல்லை. வெளி இணைப்பு எம்மொழியிலிருப்பினும் அம்மொழி என்ன என்பதைத் தெரிவிப்பதோடு இணைப்பை விளக்கும் தலைப்பு தமிழாக்கப்பட்டே இருக்க வேண்டும் என்பதை கொள்கையாக்கினால் என்ன? கோபி 19:53, 18 பெப்ரவரி 2007 (UTC)

அறிவைப் பெற எம்மொழிக்கும் செல்லலாம் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. வெளி இணைப்புக்களுக்காக ஆங்கில் அல்லது பிற மொழி விக்கிபீடியாக்களுக்குப் போக வேண்டியிருக்காமல் தமிழிலேயே இருப்பது பொருத்தப்பாடானது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் சில பக்கங்களைப் பார்க்கும்போது இது தமிழ் விக்கிபீடியா என்பதே மறந்து போய்விடுகிறது. ஆதலால் கொடுக்கப்படும் வெளி இணைப்பு விளக்கங்கள் தமிழில் இருப்பதே பொருத்தமானது. இல்லையா? கோபி 19:56, 18 பெப்ரவரி 2007 (UTC)

விக்கி என்பதே ஒரு கூட்டு முயற்சிதானே. முதலில் படியெடுத்து பதித்தவர் ஆங்கிலத்திலேயே விட்டுருந்தாலும். நீங்களோ நானோ வேறு ஒருவரோ, ஏற்றவாறு குறிப்புகளையும், தலைப்புகளையும் தமிழ்ப் படுத்தலாமே. இதற்கு ஒரு கொள்கை வேண்டுமா? கொள்கையாக இருந்தாலும், பின்பற்றாமல் விட்டோர் செய்ததை கொள்கைக்கு உட்படுத்துவது நம் எல்லோரின் கடமையும்தானே? --செல்வா 20:03, 18 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, நீங்கள் சொல்வதை மறுப்பதற்கில்லை. த.வி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் திட்டம். ஆனால் பாருங்கள் translate வார்ப்புரு இட்ட கட்டுரைகள் ஆண்டுக் கணக்கில் அப்படியே கிடக்கின்றன. இவ்வாறேதான் ஆங்கில இணைப்புக்களும். கொள்கை என்று உருவாக்கி ஆங்கிலத்தில் உள்ளவை எல்லாவற்றையும் நீக்க வேண்டும் என்பதல்ல என் வேண்டுகோள். இனிப் புதிதாக உருவாகும்போது நாம் கவனமாகச் செய்ய வேண்டும். பச்சைக்கிளி முத்துச்சரம் போன்று கட்டுரைகள் உருவாவதோ உரிமங்கள் தரப்படாமல் படிமங்கள் பதிவேற்றப்படுவதோ தொடர்ந்தால் அது த.வி.யின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் பாதிக்கும். ஒரு நம்பகமான தரமான கலைக்களஞ்சியமாக இது வளர்த்தெடுக்கப்படல் வேண்டுமென்றால் ஓரளவு இறுக்க்மான நிலைப்படு எடுக்கப்பட வேண்டும் என்பது என் நிலைப்பாடு. இப்போதுள்ளநிலையே தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் துப்புரவுப் பணியென்பதே சாத்தியமற்றதாகி விடும். கோபி 20:20, 18 பெப்ரவரி 2007 (UTC)

கோபி, மேற்கண்ட உரையாடலை அடுத்து பின்வரும் பரிந்துரைகளை தெரிவிக்கிறேன். அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  • தமிழ் வெளி இணைப்புகளுக்கு இணைப்பு வரிசையில் முன்னுரிமை.
  • இணைப்பு தமிழா ஆங்கிலமா என்று {{ஆ}}, {{த}} போன்ற வார்ப்புருக்கள் கொண்டு சுட்டிக்காட்டுதல் அவசியம்.
  • இணைப்பை விளக்கும் சொற்றொடரும் இணைக்கப்படும் சொற்றொடரும் தமிழில் இருக்க வேண்டும். இணைப்பு சுட்டும் பக்கம் ஆங்கிலமாக இருக்கலாம் என்பதைத் தவிர அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். இணைப்பு குறித்த தகவல்கள் ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழ் வாசகர் அந்நியப்பட்டு விடக்கூடாது. இணைப்பை அழுத்துவதா வேண்டாமா என்ற முடிவை எடுக்க வாசகருக்கு தமிழறிவு மட்டும் போதுமானதாக இருக்க வேண்டும்.
  • பொருத்தமான பிற மொழிகள் இணைப்புகள் ஏற்புடையனவே. ஆனால், ஆங்கில விக்கியில் இருந்து அப்படியே வெளி இணைப்புகளை வெட்டி ஒட்டத் தேவை இல்லை. இணைப்புச் சொற்றொடர்களை தமிழாக்கும்போதே அவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து மிகச் சிறந்தவற்றை தர வேண்டும். ஆங்கில விக்கியின் வெளி இணைப்புகளில் ஏகப்பட்ட எரிதங்கள் உண்டு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவற்றை கழித்துக் கட்ட முயல வேண்டும். இணைப்புகளை தமிழாக்காமல் சும்மா வெட்டி ஒட்டி விட்டுப் போவது பெரிதும் விரும்பத்தகாத தமிழ் விக்கி பண்பாக கருதலாம்.
  • ஏற்கனவே தமிழாக்காமல் கிடக்கும் வெளி இணைப்புகள் பெரும் சுமை தான். அந்தந்த கட்டுரைகளின் முதன்மையான ஆசிரியர்கள் இவற்றை தமிழாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். அடுத்தவர் விட்டுச் சென்ற பிழையை நாம் களைவது விக்கிப் பண்பு தான் என்றாலும் கோபி, என் போன்று துப்புரவுப் பணியில் குறைவாகவே ஈடுபடும் பங்களிப்பாளர்களுக்கு இவற்றை தமிழாக்குவது பெரும் சுமை என்பதும் தொடர்ச்சியாக செய்யும்போது ஒவ்வொரு இணைப்பாக கவனித்துத் திருத்துவது கடினம் என்பதும் உணரப்பட்ட வேண்டும். சில சமயங்களில் கவனிக்காமல் ஆங்கில இணைப்புக்களை ஒட்டு மொத்தமாக நீக்குவதற்கான சூழலையும் இது ஏற்படுத்துக்கூடும். எனவே, பழைய கட்டுரைகளின் முதன்மை ஆசிரியர்கள் இதில் பொறுப்பெடுத்துக் கொள்வது நலம். குறைந்தது 10, 000 கட்டுரை இலக்கை அடையும் முன் இந்த பணி கொஞ்சம் கொஞ்சம் செய்து முடிக்கப்பட்டிருக்க வேண்டும். அது வரை தமிழாக்கப்படாத இணைப்புகள், உசாத்துணைக் குறிப்புகள் ஆகியவற்றை துப்புரவுப் பணியில் நீக்குவதற்கும் தேவைப்படலாம்.
  • பச்சைக்கிளி முத்துச்சரம் போன்று முழுமையான ஆங்கில கட்டுரைகள் இன்றைய தமிழ் விக்கிக்கு தேவை இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக கட்டுரையை உருவாக்கினாலும் தமிழிலேயே செய்து விடுவது நன்று.

--Ravidreams 22:52, 18 பெப்ரவரி 2007 (UTC)


இந்த உரையாடலை பார்த்துவிட்டு எழுமாற்றாக சீன, ஸ்பானிய, பிரேஞ்சு, ஜப்பானிய விக்கிபீடியாக்களை பார்வையிட்டேன். ஆங்கில இணைப்புக்கள் எதுவும் காணப்படுவதாக தெரியவில்லை. அத்தோடு ஆங்கில விக்கிபீடியாவிலும் தமிழ், ஜப்பானிய வெளி இணைப்புக்கள் காணப்படுவதாக தெரியவில்லை.

ஆனால் இந்த நிலையை இட்டு கவலைப்படலாம். இந்த நிலையை மாற்றுவதற்கான புறச்சூழல்களை எவ்வாறு உருவாக்கலம என்பதுபற்றி ஆக்கபூர்வமாக சிந்திக்கலாம். ஆனால், சட்டங்கள், ஒழுக்காற்று உருவாக்கம் போன்றவற்றின் மூலம் இச்சூழலை மாற்ற முடியும் என்று நன நம்பவில்லை.

இதை விக்கிபிடியாவுக்கு வெளியே நின்று தான் பார்க்கமுடியும்

இது ஒரு வரலாற்றுக்காலகட்டம். நாம் இன்னமும் மேற்கின் மேலாதிக்கத்தின்கீழ் அடிமையாகத்தான் இருக்கிறோம். இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. ஒருகாலத்தில் சுதந்திரம் சாத்தியப்படுமானால் ஏதாவது செய்யலாம். அடிமைச்சமூகம் தனது இந்த தலைவிதி காரணமாக இப்படி வெளியிணைப்புக்களை வேறு வழியின்றி கொடுக்கிறது. இதை சட்டம்போட்டு தடுக்க முனைவது வ்ரலாற்று ஓட்டத்தை வேலிபோட்டு தடுப்பது போன்றது. பாசிசம் என்று சொல்லலாமா?

இந்த அடிமைத்தனம் தொடர்பான பிரக்ஞை கொண்டவர்கள் மேற்கு மொழி இணைப்புக்களை தவிர்க்கலாம். தரமான உள்ளடக்கங்களைத் தமிழில் உருவாக்கலாம். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கலாம். ஆனால் இந்த மனமாற்றங்கள் எல்லாம் பெரிதாக எதையும் சாதிக்கப்போவதில்லை. அரசியற் புறச்சூழல் மாறும்வரை.

--மு.மயூரன் 11:17, 19 பெப்ரவரி 2007 (UTC)

தமிழர்களுக்கு தமிழ் மட்டும்தான் தெரிய வேண்டும் என்று நினைப்பது குறுகிய பார்வை. இன்று நாம் குறைந்தது இரண்டு மொழிகள்ளூடாக பயணிக்கின்றோம். இது ஒரு வரலாற்று நிர்ப்பந்தம்தான். பல்லினப்பண்பாட்டை மறுக்க முடியாமல் ஏற்றவர்கள் நாங்கள் என்று ஆசிஸ் நாண்டி குறிப்பிடுவார். தாய் மொழியில் கல்வி நன்றுதான். ஆனால் ஆங்கிலமும், பிற மொழி அறிவும் எமக்கு அவசியம். சிங்களம், இந்தி, பிற ஐரோப்பிய மொழிகளிலும் வெளி இணைப்புகளைத் தரலாம். --Natkeeran 12:34, 19 பெப்ரவரி 2007 (UTC)

நற்கீரன், சிங்களம், இந்தி, சீன மொழிகளிலும் வெளி இணைப்புக்கள் தரலாம் என்ற கூற்று தன்னளவிலேயே தோற்று தன்னைப்பார்த்து சிரிக்கிறது ;-) பேரினவாதத்தின் இப்படியான ஆயிரம் கூற்றுக்களை நம கேட்டிருக்கிறோம். உலகமயமாதலை நியாயப்படுத்தும்போது அமெரிக்க ரசு கூறும், நீங்கள் இங்குவந்தும் வியாபாரம் செய்யலாம், முதலிடலாம் என்று.

ஒரு பெரிய சக்கரத்தின் சுழற்சியில் ஒத்துச்சுழலும் சின்னஞ்சிறிய வெளிப்பாடுதான் இந்த வெளியிணைப்பு விவகாரம். விக்கி ஒழுக்காறுகள் என்ன சொல்கின்றன என்று பார்த்து அதன்படி செய்வதுதான் இதற்கு ஒரேயொரு தீர்வு.

1. ஆங்கில விக்கிபீடியாவில் பிரேஞ்சு, சீன, தமிழ் பக்கங்களுக்கு இணைப்பு தரலாமா? அப்படி தரலாம் என்றால் இங்கேயும் ஆங்கில பக்கங்களுக்கு இணைப்பு தரப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம். விக்கி சட்டதிட்டங்களுக்கு மாறாக செயற்படத்தேவையில்லை.

எனவே நற்கீரன், ஆங்கில விக்கிபீடியாவில் ஏனைய மொழி வலைப்பகக்ங்களுக்கு கட்டுரைகளுக்கு இணைப்பு தரலாமா என்பதை ஆராய்ந்து சொல்லுங்கள்.

--மு.மயூரன் 13:21, 19 பெப்ரவரி 2007 (UTC)

இதில் சிரிக்க ஒன்றுமில்லை. ஐரோப்பாவில் ஆங்கிலம் அறியாதா ஆனால் தமிழ் தெரிந்த தமிழர்கள் பல உண்டு. இந்தியாவில் ஆங்கிலம் அறியாத ஆனால் இந்தி போன்ற பிற மொழிகள் தெரிந்த நிறைய தமிழர்கள் உண்டு. ஆங்கில மொழியில் அவர்கள் மொழியிலேயே சிறப்பாக இங்க முடிகின்றது. வேற்று மொழிகளுக்கு அவர்கள் விக்கி உள் இணைப்புகள் ஊடாக செல்ல முடிகின்றது. இங்கும் அப்படியும் செய்து, வேற்று மொழிகளில் உள்ள சிறந்த சுட்டிகளை இங்கு சுட்டலாம், தமிழர் தெரிவாக. இது சிறந்த நடைமுறையாக எனக்கு தெரிகின்றது. மேலும், ஆ.வி.யிலும் பிற மொழிக்கு இணைப்புகள் வழங்குவது தடைசெய்யப்படவில்லை. --Natkeeran 13:28, 19 பெப்ரவரி 2007 (UTC)

ஆ.வி.யில் யப்பானிய மொழி பற்றிய கட்டுரையைப் பார்வையிட்டேன். அதனை எழுதுவது தொடர்பான pdf கோப்பொன்று மட்டுமே யப்பானிய வெளி இணைப்பென்ற கொள்ளக் கூடியதாக இருக்கிறது. த.வி.யில் தமிழ் பற்றிய கட்டுரையைப் பார்த்தேன். அது translate வார்ப்புருவுடன் இருக்கிறது. என்னத்தைச் சொல்ல? --கோபி 16:07, 19 பெப்ரவரி 2007 (UTC)

இது இணையத்தில் ஒருமொழிச்சார்பைக் காட்டுகிறது கோபி. ஆங்கிலம் அளவிற்கு தமிழ்ப் பக்கங்கள் இணையத்தில் இல்லவே இல்லை என்பது வருத்தத்திற்குறிய உண்மை. அதனால்தான் ஓரளவு தொடர்பிருந்தாலும் வலைப்பதிவானாலும் தமிழில் இருந்தால் இணைப்பு தந்து வருகிறோம். ஆனால் தற்போதுள்ள நிலையில் ஆங்கில வெளியிணைப்புகளை அறவே நீக்க முற்படுவது சரியல்ல என்றே தோன்றுகிறது. சில ஆங்கில வெளியிணைப்புக்கள் ஆங்கில விக்கி கட்டுரைகள் இல்லாது இங்கு மட்டும் இருக்க வாய்ப்புண்டு. அதனால் அங்கு சென்று பார்த்துக் கொள்வர் என்று விடமுடியாது. துவக்கத்தில் மௌ டம் தமிழ் கட்டுரையில் இருந்த சில இணைப்புகளும் மேற்கோள்களும் ஆ.வி. கட்டுரையில் இல்லாமல் தான் இருந்தன. -- Sundar \பேச்சு 16:21, 19 பெப்ரவரி 2007 (UTC)

ஆங்கில இணைப்புக்களை நீக்க வேண்டியதில்லை. ஆனால் ஆங்கில இணைப்புக்களைக் கொடுக்கும்போது பொறுப்புணர்வுடன் நாம் செயற்பட வேண்டும் என்பதையே வலியுறுத்திகிறேன். ஆங்கிலம் என்பதற்காக அப்படியே எடுத்தாளப்பட்ட இணைப்புக்களே இங்கு அதிகம் தேவை தானா என்பது தொடர்பில் சிந்திக்கப்படுவதில்லை. நான் தமிழ் கட்டுரையில் சுட்டிக் காட்டியது சிறியதொரு உதாரணம். மிகப்பெருமளவில் பார்வைய்டப்படும் ஒரு கட்டுரைய் தொடர்பில் எவ்வளவு கவனக் குறைவாக இருக்கிறோம்? வேலை மினக்கெட்டு மொழிபெயர்த்து வேறு வைத்திருக்கிறோம் :-( ஆரம்பத்தில் நான் கூறிய கருத்துக்களை விடுத்து இப்பொழுது வலியுறுத்துவது யாதெனில் இனிக் கொடுக்கப்படும் வெளி இணைப்புக்கள் எம்மொழியாயினும் அம்மொழி எதுவென்பது குறிப்பிடப்பட்டு இணைப்பு விளக்கமும் தமிழில் இருக்க வேண்டும். இதுவரை அவ்வாறில்லாதவற்றைப் படிப்படியாகத் திருத்தலாம். ஆனால் இனியும் அவ்வாறு உருவாக்கப்படுவது அனுமதிக்கபடுவது ஆரோக்கியமானதல்ல. கோபி 16:36, 19 பெப்ரவரி 2007 (UTC)

கோபி, மேலே உள்ள உங்கள் நிலைப்பாடுடுன் முழுக்க உடன்படுகிறேன். இதையே தான் கொஞ்சம் இறுக்கமாக என் பரிந்துரைகளாகத் தந்தேன். மயூரன், தமிழ் குறித்த சில முக்கிய இணைப்புகளை அவை ஆங்கிலம் என்பதற்காக மட்டுமே ஒதுக்க முடியாது. எடுத்துக்காட்டுக்கு, தமிழ் செம்மொழி ஆக அறிவிக்கப்பட்டது குறித்த கட்டுரைகளில் பேராசிரியர் ஹார்டின் ஆங்கிலக் கடிதம் பெரிதும் உசாத்துணையாக காட்டப்படுகிறது. ஆங்கிலம் என்பதற்காக அதை ஒதுக்கவும் முடியாது. இது போன்று எண்ணற்ற முக்கிய இணைப்புகளை உடனடியாகத் தமிழாக்கவும் விக்கிபீடியர்களிடம் நேர, உழைப்பு வளம் இல்லை. நாம் ஆங்கில இணைப்புகளை ஒதுக்குவதால் விக்கிக்கு வெளியே இதனால் தமிழ் இணைப்புகள் பெருகப் போவதில்லை. மாறாக, வெளியே தமிழிணைப்புகள் பெருகப் பெருக விக்கியில் அது பிரதிபலிக்கும் என்பது உண்மை. ஒரு வேளை நாமே கூட இப்படி இணைப்புகள், ஆக்கங்கள் விக்கிக்கு வெளியே உருவாக தூண்டுகோலாக இருக்கலாம். திறமான தமிழிணைப்புகள் பிற மொழிகளால் புறந்தள்ளப்படும் போக்கு இருந்தால் தான் கவலைப்படத் தக்க போக்காக கருத முடியும். நற்கீரன் போன்றோர் முக்கியமான தமிழிணைப்புகளை வெளியிணைப்புகள் பகுதியிலும் தமிழ் தொடர்பான பிற மொழி இணைப்புகளை பேச்சுப் பக்கங்களிலும் குவித்து வருகின்றனர். இது மிக முக்கியமான தலைப்பு வாரியாகத் தமிழ்த் தகவல்களை ஒருங்கிணைக்கும் பணி ஆகும். இன்று இந்தியத் தமிழர்கள் இந்தியாவெங்கும் ஈழத் தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கையில் அவரவர் மொழியில் உள்ள எண்ணற்ற பயனுள்ள இணைப்புகளை ஓரிடத்தில் வழங்குவது பயனுள்ளதே. ஜெர்மனி, பிரெஞ்சு போன்ற நாடுகளில் வளரும் தமிழ்க் குழந்தைகளுக்கு அந்தந்த மொழி இணைப்புகள் பயனுள்ளதாக இருக்கும் என்றால் அவற்றை கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. இந்த இணைப்புகளை சேர்ப்பதற்காக நாம் ஒவ்வொரு மொழி விக்கிக்கும் சென்று வரவும் முடியாது. ஆகவே, எக்காலத்திலும் பிற மொழி இணைப்புகளை தவிர்ப்பது என்பது இணையத்தின் சாத்தியங்களை சுருக்கிக் கொள்வதாகத் தான் அமையும். இவ்விணைப்புகளை தருவதிலும் தமிழாக்குவதிலும் கவனம் தேவை என்பதில் முழுக்க உடன்படுகிறேன்--Ravidreams 20:02, 19 பெப்ரவரி 2007 (UTC)


//நாம் ஆங்கில இணைப்புகளை ஒதுக்குவதால் விக்கிக்கு வெளியே இதனால் தமிழ் இணைப்புகள் பெருகப் போவதில்லை. மாறாக, வெளியே தமிழிணைப்புகள் பெருகப் பெருக விக்கியில் அது பிரதிபலிக்கும் என்பது உண்மை//

இதைத்தான்

//ஆனால் இந்த நிலையை இட்டு கவலைப்படலாம். இந்த நிலையை மாற்றுவதற்கான புறச்சூழல்களை எவ்வாறு உருவாக்கலம என்பதுபற்றி ஆக்கபூர்வமாக சிந்திக்கலாம். ஆனால், சட்டங்கள், ஒழுக்காற்று உருவாக்கம் போன்றவற்றின் மூலம் இச்சூழலை மாற்ற முடியும் என்று நன நம்பவில்லை. //

// ஒரு பெரிய சக்கரத்தின் சுழற்சியில் ஒத்துச்சுழலும் சின்னஞ்சிறிய வெளிப்பாடுதான் இந்த வெளியிணைப்பு விவகாரம். விக்கி ஒழுக்காறுகள் என்ன சொல்கின்றன என்று பார்த்து அதன்படி செய்வதுதான் இதற்கு ஒரேயொரு தீர்வு. //

என்று சொன்னேன்.

சட்டம் போட்டு வரலாற்று இயங்கியலை மாற்ற முடியாது.

--மு.மயூரன் 00:25, 20 பெப்ரவரி 2007 (UTC)

தமிழர் அறிவியல் இயல்கள்

[தொகு]

தமிழர்கள் உலகின் இயல்பை நோக்கி எப்படிப்பட்ட ஒரு வகைப்படுத்தலையும் கண்ணோட்டத்தையும் கொண்டிருந்தார்கள், கொண்டிருக்கின்றார்கள். தமிழர்களின் உலகப் பார்வை எவ்வாறு எவ்வளவு அமைகின்றது, வேறுபடுகின்றது போன்ற தகவல்கள் தந்தால் நன்று. இலக்கியம், சமயம் ஆகிய களங்களில் மட்டுப்படுத்தாமல், வேறு களங்களில் வெளிப்படும் தகவல்களை சுட்டினாலும் நன்று. குறிப்பாக வாய்வழி, வாழ்வியல், தொழிற்கலை, செயல்பாட்டு களங்களில் இருந்து. மேலும், இன்று இத்தகவல்கள் பயன்படக்கூடியவையா? பேணத்தக்க வேண்டியவையா? மீட்டெக்கப்படவேண்டியவையா? மீளுருவாக்கம் செய்யப்படவேண்டியவையா? எவ்வாறு பொது அறிவியலுடன் ஒத்துப் போகும்? எப்படி தமிழர் அறிவியல் அணுகுமுறை இன்று இருக்க வேண்டும்.

ஆரம்பத்தில், இவற்றைப் பற்றி எழுதுவதே ஒருவிதத்தில் வேண்டா வேலை போன்றே தோன்றியது. ஏன் என்றால் அறிவியல் என்பது ஒன்றுதானே, அதிலென்ன தமிழர் அறிவியல் - ethnic science என்று தோன்றியது. அதிக பட்சம் local knowlege என்று சிறுமைப்படுத்தி விடுவர். ஏற்கனவே எல்ல அறிவியலும் வேததில் இருந்துதான் வந்தது போன்ற ஒரு போலி தோற்றத்தைபோல தமிழர் அறிவியல் என்ற கருத்துரு தோன்றிவிடுமா என்ற அச்சமும் இருந்தது.

தமிழர் அறிவியலில் இருந்து புது தொழில்நுட்பங்கள் சாத்தியம் என்பதற்கு சில நல்ல உதாரணங்கள் உண்டு. எ.கா biological pestacides, medicinal plants போன்றவை. இங்கு நான் இயற்கை அறிவியல் - natural sciences கவனம் தருகின்றேன்.

இவற்றை பற்றி ஏன் கவனம் தேவையென்று எண்ணினால், ஒரு பாடத்தை படிக்கும் பொழுத் எல்லாமே ஐரோப்பிய மையப் பார்வையில் இருந்தே வருகின்றது. அறிவியல் அணுகுமுறையும், அறிவியலை முறையாக தொழில்நுட்ப ஆக்கத்துக்கு பயன்படுத்தியதும் ஐரோப்பியரின் அரிய பங்களிப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், தமிழில் அறிவியல் எழுதும் பொழுது எமக்கான சூழமைவு (context), பின்புலம் (background), சிந்தனையூற்று (roots), சிந்தனைவளம் ஒன்று அவசியமாகின்றது. நாம் வெறும் empty minds, always borrowing போன்ற தோற்றப்பாடு தவிர்த்தல் நலம்.

இவை பற்றி பயனர்களின் கருத்துக்கள் பரிந்துரைகள் அறிய ஆவல். நன்றி.

Science: a window open on culture Elena Caovilla, Stefano Girola Can ancient knowledge efficiently answer modern problems? http://www.scientificambitalia.org/bulletin/assets/f97.pdf


--Natkeeran 17:57, 18 பெப்ரவரி 2007 (UTC)

7000 கட்டுரை மகிழ்ச்சி

[தொகு]

தொடர்ந்து நிகழும் சில இறுக்கமான உரையாடல்களுக்கு இடையே, 7000 கட்டுரைகள் எண்ணிக்கையை தமிழ் விக்கிபீடியா அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு கட்டுரையாவது வருமா என்று 2005 தொடக்கத்தில் நான் அண்மைய மாற்றங்களை பார்த்துக்கொண்டிருந்த காலம் போய் இப்பொழுது மாதம் 500 கட்டுரைகள் என்ற வேகத்தில் தமிழ் விக்கி வளர்ந்து வருகிறது. வரும் நவம்பருக்குள் 10,000 கட்டுரை இலக்கை அடைவோம் என்று நம்புகிறேன். இந்த நேரத்தில் மொத்தத் தொகுப்புகள் எண்ணிக்கையில் 1,00,000 என்ற எண்ணிக்கையை தொட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. மொத்தத் தொகுப்புகள் எண்ணிக்கையும் தர அளவுகோள்களில் ஒரு பங்கு வகிக்கிறது. 1,000 கட்டுரைகளை அடைந்தபோது 10,000 கட்டுரைகள் என்ற இலக்கை சுந்தர் வைத்தார். அந்த இலக்கை அடையும் நாள் நெருங்குகையில், அப்பொழுது நினைத்துப் பார்த்திராத தர அளவுகளை மேம்படுத்திக் கொள்ளவும் நாம் முனைய வேண்டும். பெரிதும் கவனிக்கப்படாத அதே வேளை முக்கியமான துப்புரவு மற்றும் பகுப்புச் சீர்மை பணிகளில் ஈடுபடும் கோபி, நற்கீரன் ஆகியோருக்கு இந்த நேரத்தில் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்..(இதுக்கு மேல எழுதினா அரசியல் அறிக்கை மாதிரி ஆகிடுமோ :)) --Ravidreams 23:08, 18 பெப்ரவரி 2007 (UTC)


மகிழ்ச்சி ரவி. இவ்வளவு விரைவாக இந்த இலக்கை எட்டுவோம் என்று 2005 யாருமே ஊகிக்கவில்லை என்பது உண்மை. --Natkeeran 23:57, 18 பெப்ரவரி 2007 (UTC)

1000 கட்டுரைகள் - பெப்ரவரி 22, 2007 முதல் மார்ச் 19, 2007 க்குள் !!

[தொகு]

என் பேச்சுப் பக்கம் பார்க்கவும். இன்று இப்பொழுது 8232 கட்டுரைகள்--செல்வா 00:25, 24 மார்ச் 2007 (UTC)

தமிழில் இல்லாத தமிழ் தொடர்பான தளங்கள்

[தொகு]

தமிழ் நாட்டு பல்கலைக்கழக தளங்கள் தமிழில் இல்லை

[தொகு]

--Natkeeran 07:57, 20 பெப்ரவரி 2007 (UTC)

செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் தளம் தமிழில் இல்லை

[தொகு]

--Natkeeran 07:57, 20 பெப்ரவரி 2007 (UTC)

ஆம், நற்கீரன் தமிழ் தொடர்பில் கூட எதுவும் தமிழிலில்லை. அதனாற்தானே விக்கிபீடியா போன்றவற்றை நாம் மிகவும் கவனத்துடன் வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது. சுற்றி வளர்க்காமல் சொல்ல வருவதை நேரடியாகச் சொல்லலாமே :-) கோபி 12:33, 20 பெப்ரவரி 2007 (UTC)

செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் இணையத்தள வடிவமைப்பாளருக்கு கடிதம் எழுதி உள்ளேன். மறுமொழியோ மாற்றமோ வந்தால் சொல்கிறேன் :) :(--Ravidreams 13:32, 20 பெப்ரவரி 2007 (UTC)

இவ்வளவு எதற்கு, தமிழை செல்லரிக்காமல், கடல்கொள்ளாமல் காப்பாற்றப்போகும் மதுரைத்திட்டத்தின் மடலாடல் ஏதாவது தமிழில் நிகழ்ந்திருக்கிறதா? சிவத்தம்பி சொன்னதாயு ஒரு கூற்று பிரபலம் "தொன்மையில் இல்லை தொடர்ச்சியில்". தொன்மையிலும் இல்லை, தொடர்ச்சியைப்பற்றியும் தெரியாது. நிகழ்காலத்தில் அன்றாடம் தமிழை பயன்படுத்துவதில் தான் இந்த பாவப்பட்ட மொழிக்கு வாழ்வு இருக்கிறது. --மு.மயூரன் 15:48, 20 பெப்ரவரி 2007 (UTC)

//செல்லரிக்காமல், கடல்கொள்ளாமல்//

-)

--கோபி 15:57, 20 பெப்ரவரி 2007 (UTC)

ஆமாம், மயூரன் - தமிழை காக்கிறோம் வளர்க்கிறோம் என்று செயல்படுகிறோம் என்ற திட்டங்கள் பலவற்றிலும் ஆங்கில வழி செயற்படுத்தலே இருக்கிறது. தமிழ் விக்கிபீடியாவிலும் தொடக்கத்தில் நான் உட்பட பலர் ஆங்கிலத்தில் மறுமொழி இட்டு வந்தோம். இப்பொழுது அது அறவே ஒழிந்திருப்பது ஒரு முன்மாதிரியான செயற்பாடு.--Ravidreams 15:59, 20 பெப்ரவரி 2007 (UTC)

செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் தள வடிவமைப்பாளரிடம் இருந்து வந்த மறுமொழி கீழே:--Ravidreams 11:35, 22 பெப்ரவரி 2007 (UTC)

Dear Sir,

Thank you very much for your valuable feedback.Our focus is on Projecting Classical Tamil to the International Community.But at the same time we had already prepared our website in Tamil Unicode also.Its under the Validation and Testing process.Tamil version of Our website will be available Shortly.We will notify you about it immediately.

Regards,

Web development Team,Centre of Excellence for Classical Tamil,Central Institute of Indian Languages,Manasagangotri, Mysore - 570006,India

நானும் எழுதியிருந்தேன். மேற்கண்ட அதே மறுமொழிதான் தந்துள்ளனர். பலரும் இப்படி எழுதுவது பயன் தரலாம். --செல்வா 14:37, 22 பெப்ரவரி 2007 (UTC)

தொகுத்தல் வழு

[தொகு]

எந்த ஒரு பக்கத்தின் தொடக்கத்திலும் முதல்பத்தியில் வலப்பக்கம் அமைந்துள்ள தொகு இணைப்பை அழுத்தினால் முதற்பக்க தொகுப்புப் பார்வைக்குப் போகிறது?? இதை எப்படி சரி செய்வது? ருசியப் பயனர் எட்வர்டின் ஆலோசனைப்படி சுந்தர் இந்த மாற்றத்தை monobook.jsல் செய்தார் என்று நினைக்கிறேன்--Ravidreams 11:00, 21 பெப்ரவரி 2007 (UTC)

Google reader வழியாக அண்மைய மாற்றங்கள்

[தொகு]

Google readerல் அண்மைய மாற்றங்கள் பக்கத்தின் ஓடையை பெற்று கண்காணிக்க முடியும். இதன் மூலம் பல மாற்றங்களை தாமதமின்றி பார்த்து வாசிக்க முடிகிறது. பல சமயங்களில் விக்கிபீடியாவில் அண்மைய மாற்றங்கள் பக்கத்தை கண்காணிக்கையில் ஒவ்வொரு பக்கமாய் செல்வது நேர விரயம் ஆகிறது. விக்கிபீடியா வழங்கியும் அவ்வளவு வேகமாய் இல்லை. Google readerல் ஏற்கனவே உள்ள தொகுப்பலிருந்து உள்ள வேறுபாடு மட்டும் எடுப்பாக காட்டப்படுவது சிறப்பு. என்ன குறை என்றால் விக்கி markupகள் கூகுள் ரீடரில் வேலை செய்யாது. அதனால் படிப்பதில் சிரமம் இருக்கும். ஆனால், ஒரு பக்கத்தில் என்ன மாற்றம் என்பதை மேலோட்டமாக பார்க்க உதவும். தவிர, தமிழ் விக்கிபீடியா அண்மைய மாற்றங்கள் பக்க சிறப்புப் பார்வையில் ஒரு பக்கத்திற்கான தொகுப்புகளை ஒரே வரியில் காட்டும். ஆனால் கூகுள் ரீடர் ஒவ்வொன்றாக காட்டுகிறது. அவரவர் வசதிக்கேற்ப சோதித்துப் பார்த்து கூகுள் ரீடரிலோ தளத்திலோ அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் பார்க்கலாம். அண்மைய மாற்றங்கள் பக்கத்துக்கு சிறப்புப் பார்வை ஒன்று உள்ளது என்பதை இங்கே பயனர்கள் கவனத்துக்கு தருகிறேன். இதன் மூலம் பதிகைகள், மற்றும் ஒரே பக்கத்தில் ஏற்படும் பல மாற்றங்களையும் சிரமமின்றி ஒரே வரியில் படிக்கலாம். --Ravidreams 13:02, 21 பெப்ரவரி 2007 (UTC)

நற்கீரன் - பிளாக்குகள் (Blogs)/வலைப்பதிவு

[தொகு]

நாம் தனிநபர் பிளாக்குகளை கட்டுரைக்கு பயன்படுத்த வேண்டாம். பிளாக்குகள்

1. அனாமதேயமாக எழுதப்படலாம்

2. பிளக்கு எழுத்துனர்களுக்கு ஒரு அறிவுத்தறம் வைப்பதில் ஒரு நிர்பந்தமும் இல்லை. தாங்கள் உணர்சிகளையும், மனத்திற்க்கு தோன்றியவற்றையும் எழுதாலாம்.

3.உண்மையைத்தான் சொல்லவேண்டும் என்று கட்டாயமே இல்லை.

4.பிளாக்குகளின் குறியே, ஒரு நபர் எந்த விஷயத்தை ப்ற்றியும் தன் பெயர் கொடுக்காமல் எழுதலாம்

5.இதெல்லாம் பிளாக்குகள் பற்றி விமரிசனம் இல்லை. பிளாக்குகளின் நோக்கமே, தனிநபர் சுதந்திரமாக கட்டுப்பாடின்றி எழுதுவ்துதான்

6. பிளாக்குகளின் நிலைமை அப்படியிருக்கும் போது, அவைகளை விக்கி கட்டுரைக்கும், உரையாடலுக்கும் சுட்டிக் காடுவது தரமானது இல்லை --விஜயராகவன் 20:33, 21 பெப்ரவரி 2007 (UTC)

நீங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் வலைப்பதிவுகளில் உண்டு என்றாலும் அதற்காக பொத்தாம் பொதுவாக வலைப்பதிவு இணைப்புகளை ஒதுக்க முடியாது. இணையத்தில் தமிழ் உள்ளடக்கம் உள்ள ஆதாரங்கள் குறைவு. எனவே, ஓரளவு தரமாக எழுதப்பட்டுள்ள வலைப்பதிவு இணைப்புகளை தரலாம். அடையாளம் காட்டாத பதிவர்களின் பதிவுகளை யாரும் இங்கு இணைக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்--Ravidreams 20:43, 21 பெப்ரவரி 2007 (UTC)

ரவி, once we allow something, we are on a slippery path to allow all sorts of blogs, which can be cleverly written with part facts, part trolling, part flaming,with all kinds of sexist, racist and casteist inflammatory language. Tamil Wiki should not allow itself to become transmitters of such language.--விஜயராகவன் 21:27, 21 பெப்ரவரி 2007 (UTC)

விஜயராகவன், விக்கிபீடியாவில் அனைத்து உரையாடல்களையும் தமிழில் தான் மேற்கொள்கிறோம். தயவு செய்து தமிழில் தொடரவும். எதையும் பொத்தாம் பொதுவாக ஒதுக்க முடியாது. ஏதேனும் இணைப்புகள் part trolling, part flaming,with all kinds of sexist, racist and casteist inflammatory language ஆக இருந்தால் அந்தந்த பேச்சுப் பக்கங்களில் சுட்டிக் காட்டுங்கள்.--Ravidreams 21:52, 21 பெப்ரவரி 2007 (UTC)


பொதுவாக வலைப்பதிவுகள் தொடர்பான உங்கள் அலசல் சரியே. ஆனால் சில வலைப்பதிவுகள் விதிவிலக்குகளாகவும் அமைவதுண்டு. இராம.கி. அவர்களின் சில தகவல்களையும்/கருத்துக்களையும் பேச்சுப் பக்கத்தில் சேர்த்ததை குறித்தே இந்தப் பதிவு என்று நினைக்கின்றேன். இராம.கி. அவர்கள் நன்கு அறியப்பட்ட நுட்பியலாளர். அவருடைய கருத்தை சில துறைகளில் ஒரு துறைசார் வல்லுனரின் மதிப்பீடாக கொள்ளலாம். அதாவது expert evaluation. வேற்று மொழி துறைசார் வல்லுனர்களின் கருத்துக்களை ஏற்கும் நாம், பயன்படுத்தும் நாம் ஏன் தமிழ் மொழி துறைசார் வல்லுனர்களின் மதிப்பீடுகளுக்கு இடமளிக்ககூடாது. நான் அவர் சுட்டிய தகவல்களை தெரிந்தே சேர்த்துள்ளேன். அவரின் தனிப்பட்ட கருத்துக்கள் சிலவும், ஒரு துறை சார் வல்லுனரின் கருத்து என்ற நோக்கில் சேர்த்துள்ளேன். இது கட்டுரை எழுதுவதில் பயன்படும் என்று நான் கருதுபவற்றை தேர்ந்தே சேர்த்துள்ளேன். அந்தக் கட்டுரைகளை அனேகமாக நான்தான் ஆரம்பிப்பேன் என்று ஊகிக்கின்றேன். அத்தோடு, நீங்கள் தரமான தகவல்கள் செறிந்த 5 தமிழ் இணையத் தளங்களை சுட்டினால், இனி அவற்றில் இருக்கும் தக்வல்களுக்கு முக்கியம் தருவேன். திருவள்ளுவரை ஒருக்கா கூப்பிட தோன்றுகின்றது :-)
உங்களின் இரண்டாவது கருத்தை கவனத்தில் எடுத்துக்கொள்கின்றேன். --Natkeeran 21:31, 21 பெப்ரவரி 2007 (UTC)

//அத்தோடு, நீங்கள் தரமான தகவல்கள் செறிந்த 5 தமிழ் இணையத் தளங்களை சுட்டினால், இனி அவற்றில் இருக்கும் தக்வல்களுக்கு முக்கியம் தருவேன். திருவள்ளுவரை ஒருக்கா கூப்பிட தோன்றுகின்றது :-) //

)--Ravidreams 21
52, 21 பெப்ரவரி 2007 (UTC)

ரவி, எல்லா உரையாடலும் தமிழிலிருக்க் வேண்டியது என சொன்னபின், ஏன் ஆங்கிலப் பகுதி வருகிரது? அதற்கு தமிழ் எழுதமுடியவில்லையா?. அது இருக்க , கட்டுப்பாடு என்று போட்டால் அது எல்லோராலும் எளிதாக பின்பற்றுவதாக இருக்க வேண்டும்.அதனால் நீங்கள் சுட்டிக்காட்டும் வளைத்தடங்கள் 'நல்லவை' , மற்றவர்கள் சுட்ட்க் காட்டுபவை 'தறமற்றவை' என சொல்ல முடியாது.

நற்கீறன், இராம.கி. என்பவர் எந்த துறையில் நிபுணர்? அவர் பல்கலைக் கழகங்களில் மாணவர்களுக்கு சொல்லித்தரும் போல் புத்தகம் எழுதிவிட்டாரா? அல்லது அந்த துறையில் உள்ள பேராசிரியர்கள் புகழும்படி புத்தகம்/ஆய்வு ஏடுகளை எழுதிவிட்டாரா? அப்படியானல் அவர் புத்தகங்களையே சுட்டிக் காட்டலாமே, பிளாக்கை தவிற?

பிளக்குகளை சுட்டிக்காட்ட ஆரம்பித்தால், ஒரு கட்டுரையாசியருக்கு வேண்டிய எல்லா பிளாக்குகளையும் அனுமதிக்க வேண்டும். ஏன் சிலருக்கு மட்டும் சலுகை காட்ட வேண்டும்?--விஜயராகவன் 00:06, 22 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ்த் தளங்களில் விக்கியின் பயனர் வருகை நிலவரம்

[தொகு]

அலெக்சா நிறுவனத் தகவல்படி தமிழ்த் தளங்களில் பயனர் வருகை நிலவரப்படி தமிழ் விக்கிபீடியா 30வது இடத்தில் உள்ளது. 20வது இடத்தில் தமிழ்மணம் உள்ளது. ஏனையவை அனைத்தும் தினமலர் போன்று செய்தித் தாள்களின் தளங்கள் அல்லது sify tamil போன்று செய்தியை முக்கியமாகத் தரும் வலைவாசல்கள். விக்கி போன்று தகவல் தளம் ஏதும் இல்லை. விக்கியின் வளர்ந்து வரும் தன்மையை முன்னிட்டு வருங்காலத்தில் இந்த வருகை நிலவரத் தர வரிசை இன்னும் முன்னேறும் என்று எதிர்ப்பார்க்கலாம். தவிர, இணையத் தமிழ் வாசகர்கள் செய்திகளை அதிகம் எதிர்ப்பார்ப்பதை கருத்தில் கொண்டு நடப்பு நிகழ்வுகள் குறித்த கட்டுரைகளை எழுதுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். விக்கியிலும் முதற்பக்கத்துக்கு அடுத்து நடப்பு நிகழ்வுகள் பக்கமே அதிகம் பார்க்கப்படுவது கவனிக்கத்தக்கது.--Ravidreams 21:58, 21 பெப்ரவரி 2007 (UTC)

த.வி பற்றி மயூரனனின் அருமையான கட்டுரை ஒன்று

[தொகு]

--Natkeeran 01:59, 25 பெப்ரவரி 2007 (UTC)

விக்கிமுகாம்

[தொகு]

நானும் கணேசும் விக்கிமுகாமில் உள்ளோம். அவ்வப்போது தகவல்களை இற்றைப்படுத்துகிறேன். -- Sundar \பேச்சு 04:02, 25 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி நற்கீரன். நீங்கள் மேலே சுட்டியுள்ள கூட்டறிக்கையிலிருந்து குறிப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஊடகங்களுக்கு இந்த அறிக்கையைச் சுட்டி விடுகிறேன்.

மாகிரைக் கண்டிப்பாகச் சந்திக்கிறேன். - Sundar \பேச்சு 04:36, 25 பெப்ரவரி 2007 (UTC)

A quick update on the Wikicamp. The camp was a success in promoting Tamil Wikipedia. Sundar made a presentation on the Tamil wiki and it was well received. Press had questions regarding the Tamil wikipedia. The plan is to publish the the press release link on the Wikicamp website and send it to press too. Sundar will work on it once he gets back to Madurai. Regards, Ganeshk 15:16, 26 பெப்ரவரி 2007 (UTC)

விக்கிமுகாமில் தமிழூற்று demonstration கொடுத்தேன். குறிப்பாக ஜிமெயில் அரட்டையில் தமிழ் விக்கிபீடியா/விக்சனரி பற்றி விளக்கும் பொழுது நல்ல வரவேற்பு கிடைத்தது. தங்கிலிஷ் முறையில் விக்கிபீடியா தொடுப்புகள் பெறுவதை சொன்னபோது ஏன் தமிழில் இல்லையா என்றனர். (இன்று அதையும் சரி செய்து விட்டேன் eg. /wiki தமிழ்நாடு). ஒருவர் மொழிமாற்றி (translation service) இருக்கிறதா என்று வினவினார். சுந்தர், கணேஷ் இருவரையும் சந்தித்தது மகிழ்ச்சியாயிருந்தது. -மாஹிர் 28 பெப்ரவரி 2007 (IST)

ஆர்வலர்கள் த.வி. தொகுக்க நுட்ப உதவி தேவை

[தொகு]
  • SP.VR. சுப்பையா
  • ஞானவெட்டியான்

இவர்கள் த.வி. தொகுப்பதற்கு ஆர்வமாயுள்ளார்கள். ஆழ்ந்த அனுபவமும் புலமையும் உள்ளவர்கள். ஆனால் நுட்பம் இன்னும் தடையாக உள்ளது. பார்க்க Comments: http://classroom2007.blogspot.com/2007/02/3.html

சில வழிகாட்டல்களை இட்டுள்ளேன். அவர்களை பின்தொடர்ந்து த.வி விற்கு பங்களிக்க பிற பயனர்களும் உதவ வேண்டும். நன்றி. --Natkeeran 17:09, 25 பெப்ரவரி 2007 (UTC)

நினை தொடர்கள் - Mnemonics (தமிழ் சொல் என்ன?)

[தொகு]
  • 'வந்த கிழவன் தென்னை மேலே' - வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு

--Natkeeran 06:54, 28 பெப்ரவரி 2007 (UTC)


No Orginal Research vs Research for Content

[தொகு]

இங்கு ஒரு விடயத்தை தெளிவு படுத்த விரும்புகின்றேன். ஆ.வி விலும் சரி, த.வி விலும் சரி ஆதாரபூர்வமான தகவல்களே சேர்க்கப்படவேண்டும். அவை மெய்யறிதன்மையை கொண்டிருக்க வேண்டும். ஆ.வி No Original Research என்ற ஒரு கொள்கை உண்டு. அதாவது உறிதிப்படுத்தப்படாத தகவல்களை அல்லது கட்டுரைகளை அது சேர்ப்பது இல்லை. அதற்கு அர்த்த ஆய்வு இல்லாமல் கட்டுரை எழுதுவது இல்லை என்பது தெளிவுபடுத்தப்படவேண்டும்.


த.வி பொறுத்தவரை ஆய்வுக்கான குறிப்புகளை கட்டுரைப் பேச்சு பக்தில் இடுவதில் நாம் பின்னிற்க தேவையில்லை என்றே நினைக்கின்றேன். ஒரு புதிய தலைப்பில் கட்டுரை எழுதுவது Original Research ஆகாது. Original Research என்பது மிகவும் சிரமமான ஒரு பணி. விபுலானந்தர் எழுதிய யாழ் நூல், மகாதேவன் மேற்கொண்ட தமிழ் எழுத்து வரலாற்று ஆய்வுகள் போன்றவையை எடுத்து காட்டலாம். அறிவியலில் அதன் கோட்பாட்டை முன்னோக்கி செலுத்தக்க வகையில் பங்களிப்பு செய்யப்படவேண்டும்.


இங்கே நாங்கள் முதன்மையாக செய்வது தகவல் சேர்ப்பு. அத்தோடு அந்த தகவல்களுக்கான ஒரு சூழமைவு, பின்புலம், சிந்தனை சூழலையும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. காரணம் தமிழ் மொழியில் பல துறைகளில் இந்த சிந்தனை சூழலோ அல்லது புலமோ இல்லாமல் இருப்பது ஒரு கசக்கும் உண்மை. அப்படி இருந்தாலும் அது பரந்து பொதுவாக அறியப்படவில்லை.


இலங்கையில் வெளிவரும் சில சிறப்பான உளவியல் சார்பான ஏடுகள் தமிழகத்துக்கு செல்வதில்லை. தமிழகத்தில் வேளாண்மைத் துறையில் மேற்கொள்ளப்படும் மரபு ரீதியான சில ஆராய்ச்சிகள் இலங்கைக்கு எட்டுவதில்லை. சித்த மருத்துவமும், நாட்டு மருத்துவமும் சும்மா ஒரு சாக்கு போக்கான ரீதியில்தான் அரசுகளால் ஆதரவுதரப்படுகின்றன.


'அறிவியல் அறிவியலுக்கா' என்பதிலோ அல்லது 'கலை கலைக்கா' என்பதிலோ அர்த்தம் இல்லை. 'அறிவியல் மக்களுக்காக' 'கலை மக்களுக்கா' என்பதில் தெளிவு வேண்டும். அதற்காக குறிகிய நோக்கிலோ அல்லது கால எல்லையிலோ சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.


அறிவியல் ஏடுகள் தமிழில் சாத்தியமா. சாத்தியம். கோள்வி அதுவல்ல. அது தமிழருக்கு தமிழில் தேவையா என்பதுவே. இன்றைய உலகில் இரண்டு மொழிகளையாவது தெரிந்து வைத்திருப்பது ஒரு தெரிவு இல்லை. அது ஒரு அத்யாவசய தேவை. ஆனால் எமது புரிதல்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை சரிபார்த்து கொள்ள அறிவியல் ஏடுகள் தமிழில் இருந்தாலும் நன்று.


மேலும், பின்வரும் தலைப்புகள் தேவையா?

தற்கால தொழில்நுட்பம்

[தொகு]

--Natkeeran 18:14, 28 பெப்ரவரி 2007 (UTC)

தமிழில் இயல் தலைப்புகள் பட்டியல் தேவை

[தொகு]
  • தமிழில் Subject Headings Lists என்று சொல்லப்படுகின்ற இயல் தலைப்புகள் பட்டியல் தேவை. குறைந்த பட்சம் ஒவ்வொரு மேல் நிலை இயல்களிலுமாவது இது ஆக்கப்படவேண்டும். இயல் தலைப்புகள் இருந்தால் அதைப் பாத்து கட்டுரைகள் எழுத, எழுதி தர பயனர்கள் முன்வருவார்கள்.
  • இயல் தலைப்புகள் ஆக்குவதில் பயனர்களின் தேவைகளும், துறைசார் வல்லுனர்களின் பங்களிப்பும் தேவை. இது த.வி முன் இருக்கும் ஒரு முக்கிய பணி.

--Natkeeran 17:30, 1 மார்ச் 2007 (UTC)

தமிழில் இணையத்தில் மாணவர்களுக்கான இலவச பாடங்கள்

[தொகு]

--Natkeeran 04:31, 6 மார்ச் 2007 (UTC)

கட்டற்றது எதிர் கட்டற்றவை

[தொகு]

எது நன்றாக உள்ளது. --Natkeeran 04:04, 8 மார்ச் 2007 (UTC)

கட்டற்றது - ஒருமை; கட்டற்றவை - பன்மை !!--Ravidreams 15:50, 8 மார்ச் 2007 (UTC)

உரை திருத்தத் தேவை.

[தொகு]

அனைவரும் 10, 000 கட்டுரை இலக்கை நோக்கி நகர்கையில், ஏற்கனவே உள்ள பல கட்டுரைகளுக்கு உரை திருத்த தேவை இருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பல கட்டுரைகளில் மிகுதியான எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் உள்ளன. குறைந்தபட்சம் எளிதில் தவிர்க்கப்படக்கூடிய இச்சிறு பிழைகளை களைய அனைவரும் கவனம் எடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். கட்டுரை உருவாக்கம் ஒரு பக்கமும் உரை திருத்தம் இன்னொரு பக்கமும் நடைபெற வேண்டும். குறிப்பில்வழிப் பக்க வசதியைப் பயன்படுத்தி இந்த திருத்தங்களை மேற்கொள்ளலாம். 10, 000 கட்டுரை இலக்கை அடைந்த பின் ஓரளவாவது தமிழ் விக்கியை விளம்பரப்படுத்த முனைய வேண்டும். அப்பொழுது வந்து பார்ப்பவர்களுக்கு தமிழ் விக்கியில் எழுத்துப் பிழைகள் மலிந்திருந்தால் நம் மீது உள்ள நம்பகத் தன்மை குறையும்.

உரை திருத்தும் போது நான் மிகவும் கவனிக்கும் இரண்டு:

1. தேவையற்ற இடங்களில் சொற்களை பிழையாக சேர்த்து எழுதுவது. எடுத்துக்காட்டுக்கள் - வந்துசென்றான், முதலாவதுபெயர். 2. தேவையற்று சொற்களை மிகுதியாக இணைத்து எழுதுவது. எடுத்துக்காட்டுக்கள் - சொல்லலாமென்றாலும்கூட. இப்படி எழுதுவது பள்ளிக் குழந்தைகள் உட்பட்ட பலருக்கு கட்டுரைகளை வாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இயன்ற அளவு, சொற்களை பிரித்து எழுதுவது நன்று என்று தோன்றுகிறது.

இவை என் ஆலோசனைகளே. நன்றி.

நன்றி

[தொகு]

ஒரு மாத விடுமுறையை முடித்துவிட்டு இன்று இலங்கையிலிருந்து யப்பான் திரும்பிவிட்டேன். எனக்கு நிர்வாக அணுக்கத்துக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாக்களிப்பில் வாக்களித்து கருத்து கூறிய அனைவருக்கும் நன்றிகள். உங்கள்து எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில் எனது பணியை தொடர முயற்சிக்கிறேன். எனது இலன்கை பயணம் பற்றிய கருத்துக்களை தனி இ-கடித்ததில் தருகிறேன்.--டெரன்ஸ் \பேச்சு 09:21, 10 மார்ச் 2007 (UTC)

Discussion for deletion on English Wikipedia

[தொகு]

There is a discussion on [[1]] about whether en:Category:Tamil Americans should be deleted. The nomination was made by a Tamil. His argument, and that of those who support him, is that it is wrong to elevate a linguistic group to the level of national and religious immigration. He's been strongly opposed by other editors who argue that Tamils are a single transnational ethnic group just like the Basques, Irish and others who have their own categories, but others have challenged this. At the moment the discussion's been going around in circles, and I think it would be useful to have a wider range of views. If any of you are also contributors to the English Wikipedia, could you please consider making your views and arguments for either side known.

Sorry for typing this in English, and I hope I've come to the right place! -- 66.199.252.58 10:53, 15 மார்ச் 2007 (UTC)

பாராட்டுப் பதக்கங்கள்

[தொகு]

பாராட்டுப் பதக்கங்களை பேச்சுப்பக்கத்தில் இடுவதை விட பயனர் பக்கத்திலேயே இட்டால் நன்றாக இருக்கும். ஆ. விக்கியில் இவ்வாறே செய்கின்றனர். --Sivakumar \பேச்சு 16:01, 16 மார்ச் 2007 (UTC)

த.வி அடிப்படைக் கட்டமைப்பு - எங்கே இருக்கின்றோம், என்ன செய்ய வேண்டும் - மேலோட்ட அலசல்

[தொகு]

ஆக்கம்

[தொகு]

10 000 இலக்கு அண்மையில் தெரிகின்றது. த.வி தரத்தைப் பேணிய வண்ணம் இந்த இலக்கை அடைய பலரும் பல்வேறுவழிகளில் பங்களித்துவருகின்றார்கள். மெய்ப்பார்த்தல், தரம் பிரித்தல் ஆகிய செயற்பாடுளிலும் இனி கூடிய கவனம் செலுத்தலாம். எப்படி ஆதாரங்களை, மேற்கோள்களை, அடிக்குறிப்புகளை சேர்ப்பது பற்றிய கையேடும் விரிவாக்கப்படவேண்டும்.

நுட்பம்

[தொகு]

இங்கு நாம் சற்று பின் தங்கியே இருக்கின்றோம். இன்றைப்படுத்தவில்லை. தமிழை நேரடியாக உள்ளிட த.வி வில் வசதிகளை ஏதுவாக்கலாம்...நுட்பம் உண்டு. ஆனால் செயலாக்கப்படவில்லை. சுந்தர், கணேஸ் போன்றவர்களின் தொழிற்பாடு இங்கு தேவைப்படுகின்றது. நுட்பம் தொடர்பான பரந்துபட்ட அறிவை நாம் ஆவணப்படுத்த வேண்டும். அது இவர்களை அவர்களின் பணிச்சுமையின் நடுவே நாம் இடையூறு செய்யாமல் இருக்க உதவும். இடைமுகம் தமிழ்ப்படுத்தல் முதல் பல்வேறு நிலைகளில் இந்த ஆவணப்படுத்தல் செய்யப்பட வேண்டும்.

சமூகம்

[தொகு]

இங்கு நாம் ஒரு சில முனைகளில் தேக்கம் கண்டாலும், நல்ல ஆரோக்கியமான சூழலையே தொடர்ந்து பேணி வருகின்றோம். குறிப்பாக புதுப் பயனர்களை தமிழ் விக்கிபீடியாவின் நடையையும், பரந்துபட்ட (அறிவியல்) நோக்கையும் புரிந்து செயல்பட வேண்டும் என்று த.வி எடுக்கும் முயற்சிகள் நன்று.

கொள்கை

[தொகு]

Wikipedia:மெய்யறிதன்மை மற்றும் No Orginal Research vs Research for Content இன்னும் விபரிக்கப்படவேண்டும். அத்தோடு எளிய முறையில் நல்ல தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி எழுதல் நன்று என்பதை ஒரு அடிப்படை கொள்கையாக ஏற்று, அதற்குரிய வழிகாட்டல்களையும் ஏற்படுத்தல் வேண்டும்.

படிமங்கள்

[தொகு]

பல பயனர்கள் முன்வைத்த கருத்துகளை உள்வாங்கி, கோபி படிமங்களை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார். உரிமமும் மூலமும் தரப்படவேண்டு; இதுவே தாரக மந்திரம். கட்டற்ற படிமங்களை இயன்றவரையில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும்.

உதவி

[தொகு]

இது தான் இப்பொழுது எமக்கு முன் இருக்கும் ஒரு முக்கிய பணி. பல உதவி பக்கங்கள் இருந்தாலும், அவை ஒரு பூரண தன்மையை அடையவில்லை. எல்லாம் எங்கோ அங்கோ இருக்கு என்ற நிலைதான். இதில் கூடிய தெளிவு வேண்டும். ரவி/மயூரன் ஒரு பக்கத்தில் உதவி போன்றவை நன்று.

களை எடுப்பது

[தொகு]

பொருத்தமற்ற பக்கங்களை நீக்குவது, விக்கியாக்கம், வகைப்படுத்தல் போன்றவை த.வி தொடர்ந்து தேவை.

இன்றைப்படுத்தல்

[தொகு]

பொறுப்பை சவாலக ஏற்று, சுமையை முன்கூட்டியே பிரித்து முயன்று பார்க்கலாமா. சிக்கல் என்னவென்றால் அவரவர் முன்வரவேண்டும். இதை நீங்கள் செய்ய வேண்டும் என்று சொல்ல முடியாது. முன்பக்கத்தில் இரு புதிய கட்டுரைகள் ஒவ்வொரு நாளும்...இதை ஒருவரே தொடர்ந்து செய்வது சாத்தியமில்லை. அலுப்புத்தரக் கூடியது. (இந்த விடயத்தில் கனக்ஸ், ரவி ஆகியோருக்கு மிக்க நன்றி.) எனவே ஒரு சுழற்சி முறை தேவை. ஒருவர் ஒரு கிழமைக்கு என்ற மாதிரி...

இது வரை நான் கண்டதில் வாரத்துக்கு ஒருவர் என்று பொறுப்பு எடுத்துச் செய்வது போன்றவை, தற்போது உள்ள சூழலில் தொடர்ந்து செய்யகூடியதாகத் தோன்றவில்லை. எனினும் தமிழ் விக்கிபீடியாவின் பல பணிகளிலும் அனைவரும் கூடிய முனைப்புடன் செயல்பட வலியுறுத்த வேண்டும். புதியவர்கள் கட்டுரை ஆக்கப் பணிகளில் ஈடுபட, பழைய பயனர்கள் கட்டமைப்பை மேம்படுத்தல், உதவிப் பக்கங்கள், உரை திருத்தம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். --ரவி 17:42, 17 மார்ச் 2007 (UTC)

காட்சிப்படுத்தல்

[தொகு]

பயனர் தெரிவுக் கட்டுரைகள் - தொகுப்பு 03 போன்று பிறரும் தெரிவு செய்தால் நன்று. முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தாத கட்டுரைகளை தெரிதல் நன்று. இதன் நோக்கம் ஓரளவு பூர்த்தியான நல்ல கட்டுரைகளை அடையாளம் காண்பதே. பொதுப் பயனர்களை மனத்தில் நிறுத்தி.

வரைபடங்களும்/அழகியலும்

[தொகு]

தமிழில் வரைபடங்கள் சேர்த்தல் நன்று. த.வி தனித்துவமான icons உருவாக்க வேண்டும்.

தொடர்புகள்

[தொகு]

நூலகம் பங்களிப்பார்களுடான இணைச்செற்பாடு மிகச்சிறப்பாக இருக்கின்றது. அங்கு இருக்கும் ஒவ்வொரு நூலுக்கும் இங்கும் ஒரு பக்கம் இருத்தல் நன்று. அதே போல் உபுண்டு, லினக்ஸ், கட்டற்ற இயக்கம் ஆகியவர்களின் பங்களிப்பும் த.வி வலு சேர்க்கும். பல தமிழ் எழுத்தாளர்கள் தங்களை ஆக்கங்களை த.வி அனுப்பி வைத்துள்ளார்கள், அவர்களின் ஆக்கங்களும் விரைவாக சேர்க்கப்படவேண்டும்.

மருத்துவம், சட்டம் போன்று துறைகளில் இயங்குபவர்களை இங்கு அழைத்து வருவது முக்கியம். மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா ஆகிய தமிழர் புலங்களில் இருந்தும் ஆக்கர்களை இங்கு அழைத்து வருதல் வேண்டும். --Natkeeran 21:42, 16 மார்ச் 2007 (UTC)

நூலகம் திட்டத்தில் இணைக்கப்படும் அனைத்து நூல்களும் முக்கியமானவை என்றில்லை. ஆதலால் அனைத்திற்கும் தனித்தனிக் கட்டுரைகள் உருவாக்குவது அவசரமானதல்ல. ஆனால் பயனுள்ளதாகப் பயனர்கள் கருதும் நூல்கள் தொடர்பான கட்டுரைகள் உருவாக்கப்படுவது பரந்த பயன்பாட்டுக்கு வழிவகுக்கும். கோபி 16:03, 17 மார்ச் 2007 (UTC)

பகுப்பு:தமிழர் என்ற பகுப்பை தாய்ப் பகுப்பு ஆக்கலாமா? த.வி பொறுத்தவரையில் இங்கு வருபவர்களுக்கு அது ஒரு முக்கிய தலைப்பாக/பகுப்பாக அமையும். அந்தப் பகுப்புக்குள் உள்ளடக்கமும் ஓரளவு கனதியானது. இதை நோக்கி பிற பயனர்களும் கருத்துக்கள் முன்வைத்தால் நன்று. இரண்டு நிலைய்யில், தாய்ப் பகுப்பு ஆக்கலமா, இப்ப - அல்லது பின்னர். --Natkeeran 21:42, 16 மார்ச் 2007 (UTC)

பகுப்பு:தமிழ் என்பதை முதன்மைப் பகுப்புக்களில் ஒன்றாக்குவது பொருத்தம் என்றே நானும் கருதுகிறேன். அவ்வாறு ஆக்கும்போது பகுப்பு:இலக்கியம் முதன்மைப் பகுப்பாக இருக்க வேண்டியதில்லை. பகுப்பு:தமிழ் இலக்கியம் தமிழ்ப்பகுப்பின் பகுதியாக அமையும். தமிழ்ச் சூழலில் இலக்கியத்திற்கான முக்கியத்துவமே அதனை முதன்மைப் பகுப்புக்களிலொன்றாகத் தக்கவைத்து வந்துள்ளது. ஆதலால் தமிழ் முதன்மைப் பகுப்பாகும்போது அதனை முதன்மைப் பகுப்புக்களிலிருந்து நீக்கலாம். கோபி 16:00, 17 மார்ச் 2007 (UTC)

தமிழர் பகுப்புக்கு பதில் தமிழ் பகுப்பை முதன்மைப்படுத்துவது பொருத்தமாக இருக்கும். இலக்கியப் பகுப்பின் பெரும்பகுதி கட்டுரைகள் தமிழிலக்கியத்தில் வரக்கூடும் என்பதால் தமிழ்ப் பகுப்பு மட்டும் முதற்பக்கத்தில் வைத்தால் போதுமானதாக இருக்கும். இலக்கியப் பகுப்பை நீக்கி விடலாம்--ரவி 17:44, 17 மார்ச் 2007 (UTC)

விக்சனரி என்று ஒன்று !!

[தொகு]

அண்மைக் காலங்களில் விக்கிபீடியாவுக்கு ஈடாக தமிழ் விக்சனரி மீதான கவனமும் கூடி வருகிறது. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக புதிதாக 100 சொற்கள் கூடச் சேர்க்கப்படாமல் ஈயோடிக் கொண்டிருக்கிறது தமிழ் விக்சனரி. இருக்கும் ஒன்றிரண்டுப் பயனர்களுக்கும் துப்புரவுப் பணிக்கே நேரம் சரியாக இருக்கிறது. தமிழ் விக்கிபீடியா தொடர்ந்து 70வது இடத்தில் இருக்கையில் தமிழ் விக்சனரி ஒரு வருடமாக 30வது இடத்தைத் தக்க வைத்திருப்பதுடன் இந்திய மொழி விக்சனரிகளில் முதலாவதாகத் தொடர்ந்து இருக்கிறது. விக்கிபீடியா 10,000 கட்டுரை இலக்கை நோக்கி நகர்கையில் விக்சனரியையும் மேம்படுத்த அனைவரையும் அழைக்கிறேன். நாளுக்கு 5 சொற்கள் என்று ஒருவர் சேர்த்தால் கூட நன்றாக இருக்கும். அங்கு துப்புரவுப் பணிகள் நிறைய இருப்பதால் இங்கிருந்து விக்கி அனுபவம் உடையோர் வருவதும் அவசியம்.--ரவி 18:57, 23 மார்ச் 2007 (UTC)

எனக்கு விக்சனரி தொடர்பில் நிறைய ஆர்வம் இருக்கிறது. சிறப்பாக, தமிழ்க் கலைச் சொற்கள் தொடர்பில் நிறையச் செய்வதற்கு எண்ணம் உள்ளது. அதைவிடப் பழந்தமிழ் நூல்களிலிருந்து சொற்களை நூல்வாரியாகத் தொகுப்பதற்கும் எண்ணியுள்ளேன். இன்னும் சிறிதுகாலம் விக்கிபீடியாவில் கூடிய நேரம் செலவிட எண்ணியுள்ளேன். அதன் பின் விக்சனரிக்கும் நேரம் ஒதுக்குவேன். Mayooranathan 21:34, 23 மார்ச் 2007 (UTC)
ரவி, எனக்கு விக்சனரியில் ஆர்வம் இருந்தாலும், அங்கு இருக்கும் அமைப்பு முறை எனக்கு சரியானதாகப் படவில்லை. இன்னும் நிறைய எளிமைப்படுத்தவேண்டும். சொற்களுக்கு ஒரு வார்ப்புரு போல ஒன்று பொதுவாக வைத்திருக்கலாம். பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், முதலியன. இப்பொழுதிருக்கும் முறை, சொல்லுக்குச் சொல் மாறுபடுகின்றது. படிப்பதற்கும், ஆக்குவதற்கும் தேவை இல்லாமல் கடினமாக உள்ளது (தொகுப்பதை இன்னும் மிக எளிமையாக்கலாம் என்னும் பொருளில் கூறுகிறேன்). மேலும் ஒரு சொல்லுக்கு பெயர்ச்சொல் வடிவம், வினைசொல் வடிவம், ஆங்கிலச்சொல் தொடர்பு (பிறமொழித் தொடர்பு) எல்லாம் ஒரு அழகான அட்டவணையாக வரச்செய்யலாம். அழகான நிறமும் கூடத்தரலாம். படங்களும் கூடச் சேர்க்கலாம். வீணை என்றால் வீணையின் படம் காட்டலாம். தமிழ் விக்கிக்கு இணைப்புத் தரலாம். சில நாட்களில் 1000 சொற்கள் தொகுக்க இயலும். 100,000 சொற்களை நாம் எட்டுவது முறைப்படி செய்தால் விரைந்து அடையலாம். எல்லாவற்றுக்கும் மேலாக யார் பொருள் சரியா எனப் பார்ப்பது? இதுவே முதல் கடமை. பல சொற்களுக்கு மிகத்தவறாக பொருள் கொடுக்கப்பட்டுளன. ஒரு சிலவற்றை அங்கே குறித்துள்ளேன்.--செல்வா 22:23, 23 மார்ச் 2007 (UTC)

மயூரனாதன், செல்வா - நீங்கள் சொல்லும் அனைத்தும் செய்யப்படக்கூடியவை. செய்யப்பட வேண்டியவை. உங்களைப் போன்று ஆர்வமும் திறமும் உள்ளவர்கள் பலரும் இன்னும் வர வேண்டி இருப்பதால் இவை தாமதப்படுகின்றன. மயூரனாதன், சில தமிழ்ச் சொற்களுக்கு ஏற்கனவே சில வார்ப்புருக்கள் செய்துள்ளார். ஒரு சில கட்டுரைகளுக்கு ஏற்கனவே படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ் விக்கிக்கும் இணைப்பு தரப்பட்டுள்ளன. பலப் பயனர்களும் வந்தால் இது போல் விக்கியாக்கப் பணிகள் செய்யலாம். நானும் சிவாவும் இயன்றவரை தளத்தைப் பராமரித்துக் கொண்டு இருக்கிறோம். எவ்வளவு அடிப்படைச் சொற்களுக்கு பொருள் சேர்க்க முடியுமோ அவ்வளவையும் சேர்ப்பது என்ற நோக்கில் தற்போது செயல்படுவதால் ஒரு அகராதிக்கான கட்டமைப்பில் ஈடுபட முடியவில்லை. தமிழ் விக்கிபீடியாவிலும் தொடக்கத்தில் இப்படித் தான் இருந்தது. 2006க்குப் பிறகு பல பங்களிப்பாளர்கள் வர வர இங்கு ஒரு ஒழுங்கு, நேர்த்தி வந்திருக்கிறது. அது போல் பிறரும் விக்சனரியில் கூடிய விரைவில் (இங்கு 10,000 கட்டுரைகள் வந்த பிறகாவது) இணைவதை எதிர்ப்பார்க்கிறோம்.--ரவி 23:48, 23 மார்ச் 2007 (UTC)

Tamil Language Under Review

[தொகு]

en:Tamil language in Wikipedia is under review. Please help edit and keep the a FA. --Natkeeran 05:54, 26 மார்ச் 2007 (UTC)

The above article is clearly under attack from vandals. I can assure that the quality of the article was much better before. But, now it be being down graded little by little. Ravi, Sundar, etc. Please look into this.

--Natkeeran 06:43, 26 மார்ச் 2007 (UTC)


இந்து தத்துவ, கர்நாடக தீவரபோக்காளர்களால் ஆங்கிலத் தமிழ் கட்டுரை சிதைவு

[தொகு]

சென்று பார்க்க. எங்கே முதன்மைக் கட்டுரை ஆக்காளர்கள் என்று தெரியவில்லை. சுந்தர், கணேஸ் போன்றோரும் தற்போது இல்லை. தனியே மல்லு கட்டுதல் முடியாது. தீவர போக்காளர்கள் அதிகம். --Natkeeran 18:37, 26 மார்ச் 2007 (UTC)

நீங்கள் சொல்வது உண்மையெனத் தான் எனக்கும் தோன்றுகிறது. Though it might not be within the scope of Vandalism as far as the WP policy is concerned, some calculated edits seem to have been made that have caused significant changes to the article. Several 'weasel' sentences have been used, the information in the article has been compromised and that worries me. நீங்கள் கூறுவது போல், தீவிர போக்காளர்கள் அதிகம்.. மல்லுக் கட்டுதல் கடினம். நான் யோசிப்பதற்கு காரணம் என்னிடம் தகுந்த ஆதாரங்களோ ஆதாரங்களை பெறுவதற்கான வழிகளோ இல்லை. Adequate references are the only way in which we can set right this article. I am not worried about the FAR as of the moment, we can worry about it later. --மது 19:34, 26 மார்ச் 2007 (UTC)
ஆதாரங்கள் கொடுத்து ஒன்றும் பிரயோசனம் இல்லை. கட்டுரையின் வரலாற்றை போயி பருங்கள். தமிழ் ஒரு செவ்வியல் மொழி என்று இன்திய அரசு மேற்கொண்டதை சருவக்னியவும் ஞானபிதியும், நான் ஆதார்ங்கள் கொடுத்தப்பினும் எப்படி மரைத்துக்கொள்ள முயற்சி செய்கிரார் என்று தெரிகிரதா? -- அரவிந்தன் 21:43, 28 மார்ச் 2007 (UTC)
அரவிந்தன், த.வி-யில் உங்கள் குறிப்பைப் பார்த்து மகிழ்கின்றேன். சர்வஞ்ய வின் தமிழ் எதிர்ப்பு நிலையை பார்க்க en: Carnatic Music போன்ற பல இடங்களில் பார்கலாம். ஆதாரங்கள் தந்தும் பயன் இல்லை. அவர்கள் கூட்டாக இயங்கி அநியாயம் செய்கின்றனர். விக்கியின் குறிக்கோளை உணரவில்லை. உங்களைப் போல துல்லியமான ஆதாரங்கள் தருபவர்கள் மிகக் குறைவு, அப்படியிருந்தும் அவர்கள் இப்படிச் செய்வது வருந்தத்தக்கது. சர்வஞ்ய, ஸ்ரீகிரிஸ், கே.என்.எம் போன்ற 5-6 பேர் கூட்டாக இயங்கி தமிழ்-தொடர்பான பல கட்டுரைகளை வளரவிடாமலும் கெடுத்தும் தொல்லை தருகின்றனர். எத்தனை அழகாக இவைகளை வளர்க்கலாம்!!--செல்வா 23:55, 28 மார்ச் 2007 (UTC)
செல்வா, நீங்கள் சொல்வது சரி. இவர்களோடு இழுப்பறி செய்வது கடினம். அவர்களின் பங்களிப்பை பார்த்தால், வெறுமே தமிழர்கள் பற்றிய தகவல்களை பொதுக் கட்டுரைகளிலும் (எ.கா இந்தியா), தமிழர்களுக்கு மட்டுமே பயன்படக்கூடிய தமிழ் நாட்காட்டி போன்ற கட்டுரைகளில் கூட போய் அட்டூளியம் செய்கின்றார்கள். இவர்களோடு சிறுபிள்ளைத் தனமாக மல்லுக்கட்டுவது...விரக்தி. விக்கி செயற்பாட்டையே என்னை மீள் ஆய்வு செய்ய இவர்கள் உட்படுத்துகின்றார்கள். --Natkeeran 01:30, 29 மார்ச் 2007 (UTC)
நற்கீரன், விக்கியின் செயற்பாட்டில் இது தெரிந்த ஒன்று. இவர்களைப் போல் ஆயிரக்கணக்கானவர்களின் தொல்லைகளைக் கடந்துதான் விக்கி இன்றைய நிலைக்கு வளர்ந்துள்ளது. அவர்கள் நிலைக்குத் தாழ்ந்து செல்லாமலும், அதே நேரத்தில் 5-10 பேர்கள் சரியானவற்றை விடாது எடுத்துரைத்து, முறையிட்டால், அவர்களின் கெடுக்கும் முயற்சிகளைத் தடுக்கலாம். தடுக்க வேண்டும். சுந்தர், அரவிந்தன், பார்த்தி போன்ற மிக அருமையான பயனர்கள் எத்தனை பண்போடு இவர்களுடன் 'போராடி' இருக்கிறார்கள். இன்னும் பல தமிழர்களும் உங்களைப்போல அவர்களுடன் இணைந்து மருப்பு எதிர்ப்பும் தரவேண்டும். உழைப்பவர்களுக்கே உலகம் (கெட்டவர்களாக இருந்தாலும், நல்லவர்களாக இருந்தாலும்). ஊக்கம் உடைமை, உடைமை. எருதுகளும் ஒரு சிங்கமும் கதை படித்திருப்பீர்கள். அதே போலத்தான் - ஒற்றுமையில் தான் வலிமையும், தற்காப்பும், தாம் விரும்பும் முன்னேற்றமும் அடையமுடியும். --செல்வா 03:01, 29 மார்ச் 2007 (UTC)

நற்கீரன், எக்கச்சக்கமாக பொய்ப் பரப்பு வேலைகள் நடந்திருக்கிறது. இதைக் கவனத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. ஆதாரங்களைத் திரட்டிப் போக வேண்டி இருக்கிறது. --ரவி 20:43, 26 மார்ச் 2007 (UTC)

I primarily contribute to Tamil Wikipedia. There we are working on a Language Article Prototype. We have discussed the following structure.

--Natkeeran 21:50, 26 மார்ச் 2007 (UTC)

http://en.citizendium.org/wiki/Main_Page

--Natkeeran 14:05, 27 மார்ச் 2007 (UTC)

ஆங்கில விக்கியில் ஒரு ஆள்மாறாட்டம்

[தொகு]

பார்க்க - http://nanbanshaji.blogspot.com/2007/03/blog-post_16.html

பிற்காலத்தில் தமிழ் விக்கிக்கு இது ஒரு முன்னெச்சரிக்கை பாடமாக இருக்கலாம். நம் விக்கி வளர வளர பொய்த் தகுதிகளுடன் சிலர் பங்களிக்க வருவதற்கு வாய்ப்புண்டு--ரவி 12:20, 28 மார்ச் 2007 (UTC)

கட்டுரைகளில் நேரடி ஆதாரங்களைத் சேர்த்தல் அவசியமாகின்றது

[தொகு]

அண்மைக் காலத்தில் ஆங்கிலத்தில் தமிழ் பற்றிய கட்டுரை ஆதாரங்கள் அற்ற தன்மைக்காக மிகவும் விமர்சிக்கப்பட்டது. இதற்கு காரணம், எழுதியவர்கள் நேரடியாக ஆதாரங்களைத் தராமல் விட்டதாகும். இங்கும் இனிவரும் காலங்களில் நேரடியான ஆதாரங்களைத் தருவதை வழக்கத்தில் கொண்டுவந்தால், எதிர்வரும் காலங்களில் பல இழுப்பறிகளை தவிர்க்க முடியும். --Natkeeran 18:07, 28 மார்ச் 2007 (UTC)

அனைத்து விக்கிபீடியா புள்ளிவிவரப் பக்கத்தில் depth என்ற ஒரு அளவுகோல் இருக்கிறது. இது குத்துமதிப்பாக, ஒரு விக்கிபீடியா எந்த அளவு இற்றைப்படுத்தப்படுகிறது, தரமுடன் இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது. கட்டுரைகளின் அளவை கணக்கில் கொள்ளமால் தொகுப்புகள் எண்ணிக்கை, கட்டுரை எண்ணிக்கை, மொத்தப் பக்கங்கள் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கில் கொள்கிறது. ஆங்கில விக்கியின் ஆழம் 200க்கும் மேல். தமிழ் விக்கியின் ஆழம் ஒரு காலத்தில் 30ஐ ஒட்டி இருந்து இப்போது 20க்கு கீழ் வந்திருக்கிறது. கட்டுரை எண்ணிக்கை கூடுதலுக்கு ஏற்ப ஏற்கனவே உள்ள கட்டுரைகள் இற்றைப்படுத்தப்படாவிட்டால் இந்த ஆழம் இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறது. 10,000 கட்டுரை அளவைத் தொடும்போது குறைந்தபட்ச ஆழமாக 15ஆவது இருக்கும்படி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல், 10, 000 எண்ணிக்கைக்கு அடுத்து தொடர்ந்து 25,000 - 50,000 - 1,00, 000 என்று எண்ணிக்கையை குறியாக வைத்து ஓடிக் கொண்டிருப்பதில் பொருள் இருக்காது. 10, 000 கட்டுரை எண்ணிக்கைக்குப் பிறகு கட்டுரைத் தரத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குவது, உரை திருத்துவது, ஆதாரங்கள் சேர்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும். நாடு, மொழி, இனம் போன்று கலைக்களஞ்சிய முக்கியத்துவம் உள்ள தலைப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து சேர்க்க வேண்டும். 2008 தொடக்கத்துக்குள் எய்தத்தக்க உயர்ந்தபட்ச ஆழமாக 35ஆவது இருக்கும்படி நாம் கவனித்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி--ரவி 11:01, 30 மார்ச் 2007 (UTC)

Embalam Knowledge centre India

[தொகு]

முடியுமானால், எல்லாரும் ஒருக்காலவது பார்க்கவும்.

பயனுள்ள சுட்டி. நன்றி--ரவி 10:02, 6 ஏப்ரல் 2007 (UTC)

--Natkeeran 04:14, 5 ஏப்ரல் 2007 (UTC)

ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து SVG படிமம்

[தொகு]

ஓப்பிண் ஆபிஸ் கட்டுரைக்காக ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து SVG கோப்பைத் தமிழ் விக்கிபீடியாவில் பதிவேற்றமுயன்றேன் அங்கே படிமத்தில் ஒன்றும் தெரியவில்லை. நாம் பயர்பாக்ஸ் பாவிக்கின்றேன். யாராவது சரிசெய்துவிடவும். ஆங்கில இணைப்பு http://en.wikipedia.org/wiki/Image:OpenOffice.org_Logo.svg த --Umapathy 13:11, 5 ஏப்ரல் 2007 (UTC)

தானியங்கி கட்டுரைகளுக்கு பொருத்தமான கட்டுரைப் புலங்கள்

[தொகு]

பரிந்துரைகள் வேண்டப்படுகின்றது. --Natkeeran 01:45, 6 ஏப்ரல் 2007 (UTC)

என்ன கேட்கிறீர்கள் என்று புரியவில்லை--ரவி 10:02, 6 ஏப்ரல் 2007 (UTC)
அதாவது எந்த எந்த பொதுத் தலைப்புகளில் தானியங்கிகள் பயன்படுத்தினால் நல்லது (இயலும், வேண்டும், போதும்) என்று பிறர் நினைக்கிறார்கள் என்று கேட்கிறார். ஊர்களைப்பற்றி கனேஷ்பாட் செய்த்தது போல பிற பொதுத் தலைப்புகள் (செய்யக்கூடிய) தலைப்புகள் உள்ளனவா? எடுத்துக்காட்டாக, திரைப்படங்கள் பற்றிய குறிப்புகள் தக்க வடிவில் எங்கும் தொகுப்பாக இருந்தால் அதனைப் பயன்படுத்தி சிறு விளக்கங்களை சேர்த்து தானியங்கி வழி கட்டுரைகள் ஆக்கலாம். இதில் கதைச் சுருக்கம் முதலியன தனித்தனியாக நம்மால்தான் சேர்க்க முடியும், ஆனால் பெயர், நடிகர்கள், இயக்குனர்கள், வெளியான ஆண்டு முதலியன (செய்திக்குறிப்புகள் முறையான வடிவில் வேறு எங்கும் இருந்தால்) தானியங்கி வழி கட்டுரைகள் ஆக்கலாம். எங்கேனும், உலகில் உள்ள ஆறுகள், அல்லது மலைகள் முதலியன பற்றி தொகுப்புகள் (தரவு அணியாக, தரவுப் பொதியாக) ஒரு மொழியில் இருந்தால், அதனைத் தமிழ் மொழியில் தனித்தனி கட்டுரையாக தானியங்கிவழி ஆக்கலாம். இந்தி மொழியில் தரவுகள் ஏதும் இல்லாமலே தானியங்கி வழி ஒவ்வொரு ஆண்டுகளுக்கும் (கி.பி 1376, 1377, 1378 என்று !!) ஒரு கட்டுரை வீதம் வெற்றாக (குறிப்பேதும் இல்லாமல்), கட்டுரைகள் ஆக்கியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டுக் கட்டுரையிலும் உள்ளே சனவர்-மார்ச், ஏப்ரல்-ஜூலை என்று உள் தலைப்புகள் வேறு!! பின்னர் செய்திகள் சேர்த்துக்கொள்ளலாம் என்பது அவர்கள் நினைப்பாக இருக்கலாம், ஆனால் இப்போதைக்கு கட்டுரை எண்ணிக்கையை கூட்டுவதன்றி ஒரு சிறிதும் செய்திகள் இல்லா வெற்றுக் 'கட்டுரைகள்தாம் இவை. --செல்வா 12:44, 6 ஏப்ரல் 2007 (UTC)
ஆமாம் ரவி, செல்வாவின் புரிதல் சரி. அந்த முயற்சியில் நான் ஈடுபடலாம் என்று இருக்கின்றேன். இப்பொழுது automation நிரலாக்கம் தொடர்பாக ஈடுபாடு இருப்பதால், இதையும் முயலலாம் என்று கேட்டிருந்தேன். --Natkeeran 14:54, 6 ஏப்ரல் 2007 (UTC)

dictionary.com கடவுச்சொல்

[தொகு]

பல சமயங்களில் ஆங்கிலச் சொற்களின் துல்லியமான பலுக்கல் அறிய வேண்டியிருக்கிறது. என்னிடம் dictionary.com கட்டணச்சேவைக்கான கடவுச்சொல் இருக்கிறது. இதில் பலுக்கல்களைக் கேட்கலாம். யாருக்காவது தேவையென்றால் ravidreams_03 at yahoo dot com க்கு எழுதுங்கள்--ரவி 09:39, 6 ஏப்ரல் 2007 (UTC)

எந்தவிதமான கடவுச்சொல்லும் தேவை இல்லாமல் புகழ்பெற்ற மெர்ரியம்-வெ'ப்~ச்ட்டர் அகரமுதலியைப் பயன்படுத்தலாம். அதில் சில சொற்களுக்கு 4 வெவ்வேறு பலுக்கல் ஒலி மாறுபாடுகள் கூட காட்டியுள்ளனர். சொற்களின் வேர்களையும் காட்டுகின்றனர். பார்க்கவும்] இடம்: http://www.m-w.com/

--செல்வா 12:29, 6 ஏப்ரல் 2007 (UTC)

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

ஆங்கில விக்கியில் பயனர் கணக்கு உள்ளவர்கள் விழிப்பாக இருக்கவும். வாக்கு அளிக்கும் பொழுது keep என்று உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். பலர் வந்து சிறப்புக் கட்டுரை வரிசையில் இருந்து நீக்கவும் என மொழிவர்-அவற்றுள் எப்பக்கமும் சாராதவ்ர்களும் இருப்பர், தமிழ்மீது காழ்ப்பு உள்ளவர்களும் இருப்பர். வேண்டும் என்றே தமிழ்க்கட்டுரையை சீர் குலைத்தார்கள், என்றாலும் இப்பொழுது சற்று கடினமான எதிர்பார்ப்புகள் உள்ளன. உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கத் தவறாதீர்கள்.--செல்வா 21:13, 10 ஏப்ரல் 2007 (UTC)

உறவுமுறைகள்

[தொகு]

தமிழ்_முஸ்லிம்கள்_அன்றாடம்_பயன்படுத்தும்_வார்த்தைகள் என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்று (முதன்முதலாய்) தொடங்கியிருக்கிறேன். அதில் முஸ்லிம்களின் உறவுமுறைகள் என்கிற வகையில் இன்னும் நீண்டுகொண்டே செல்லும் என்று எண்ணுகிறேன். இவற்றை (உறவு முறைகள்) பொதுவான வேறொரு பக்கத்திற்கு மாற்றினால் என்ன?

இதில் ஊர் வாரியாக பிரிக்க வேண்டும் என்பது என் அவா..

--மாஹிர் 10 ஏப்ரல் 2007

போதிய அளவு தகவல்கள் இருக்குமானால் தனித்தனிக் கட்டுரைகளாக எழுதலாம். Mayooranathan 18:16, 10 ஏப்ரல் 2007 (UTC)

9,000 கட்டுரைகள்; 10,000 எப்போது?

[தொகு]

இன்று த.வி கட்டுரை எண்ணிக்கை ஒன்பதாயிரத்தை எட்டியிருக்கிறது. செல்வா முன்மொழிந்தபடி முடிந்தளவு விரைவாக பத்தாயிரத்தை எட்ட நாம் இணைந்து செயலாற்ற வேண்டும். பத்தாயிரம் வரைக்குமாக என்று எல்லோருமிணைந்து தினம் 50 கட்டுரைகள் இணைத்தால் இம்மாத முடிவிலேயே பத்தாயிரத்தை எட்டலாம். வழக்கமான மித வேகத்தில் சென்றால் மேலும் ஒரு மாதம் எடுக்கும். தெலுங்கு விக்கிபீடியா மீண்டும் வேகம் எடுக்கிறது. தமிழைத் தாண்டி முதலிற் பத்தாயிரத்தைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தி விக்கிபீடியா பத்தாயிரத்தை தாண்டிய பின் சற்று நின்று நிதானித்துப் பல கட்டுரைகளை நீக்கி முன்னேறுவதாகத் தெரிகிறது. --கோபி 17:37, 10 ஏப்ரல் 2007 (UTC)

கோபி, தெலுங்கில் ஏற்கனவே 20,000+ கட்டுரைகள் உள்ளன. மராட்டி மொழியை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தமிழ் விக்கிபீடியா துவக்க காலத்தில் நம்முடன் இணையான வேகத்தில் வளர்ந்த கன்னட விக்கிபீடியா இப்பொழுதும் 5000க்கு குறைவான கட்டுரைகளுடன் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. எவ்வளவு விரைவாக 10, 000 கட்டுரை இலக்கை அடைந்தாலும் நன்று தான். ஆனால், ஒரு நாளைக்கு இவ்வளவு என்று எண்ணிக்கை இலக்குடன் கூடிய பங்களிப்பில் எனக்கு உடன்பாடில்லை. இது குறித்து செல்வா அவர்களின் பக்கத்திலும் ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். எண்ணிக்கை உயர்வு ஒரு by product and coincidenceஆக இருப்பதே நல்லது. அதை இலக்காக வைத்தால் தரத்தைக் கோட்டை விட்டு விடுவோம் என்பது என் கவலை.--ரவி 17:55, 10 ஏப்ரல் 2007 (UTC)

நாம் இன்னும் ஒரு மாதத்திற்குள் 10,000 அடைவோம் என்பது என் கணிப்பு. என் கணிப்பு தவறாக இருக்கலாம். மே மாதம் 10 நாளுக்குள் அடைய முற்படவேண்டும். பங்குகொள்வோர் எண்ணிக்கையை வரும் மாதங்களில் குறைந்தது 50% பெருக்க வேண்டும், ஏற்கனவே பங்களிப்பவர்கள் 10% கட்டுரை எண்ணிக்கை கூட்ட வேண்டும் (3 நாளில் 9 கட்டுரை எழுதுவோர் 10 கட்டுரை எழுதலாம்). இவை எல்லாம் எவ்வளவு நடக்க கூடும் என்பது நம் கையில் தான் உள்ளது. நாம் இரண்டு இடம் பின் தள்ளப்பட்டுள்ளோம். இப்பொழுது 62 -> 64. இன்னும் சுறுசுறுப்பாக எழுத வில்லை என்றால் மீண்டும் 70க்கு மிக எளிதாக தள்ளப்படுவோம். நாடுகள் பற்றி, தனிமங்கள் பற்றி, பறவைகள் பற்றி, என்று ஆயிரக்கணக்கில் தலைப்புகள் உள்ளன எழுத. 9,000 கட்டுரை அடைவதற்கு பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!--செல்வா 19:23, 10 ஏப்ரல் 2007 (UTC)

தமிழ் விக்கிமூலம்

[தொகு]

தமிழ் விக்கிமூலத்துக்கான கோரிக்கை மீண்டும் வேறொரு இடத்தில்... கோபி 20:12, 10 ஏப்ரல் 2007 (UTC)


புத்தாண்டு வாழ்த்துக்கள்

[தொகு]

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் இன்று கொழும்பு வருகின்றேன். வேண்டுமென்றால் விக்கிபீடியர்களின் ஒன்றுகூடல் கூட நிகழ்த்தலாம்.--Umapathy 05:39, 12 ஏப்ரல் 2007 (UTC)

புத்தாண்டைக் கொண்டாடும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். --டெரன்ஸ் \பேச்சு 05:41, 12 ஏப்ரல் 2007 (UTC)

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். --Natkeeran 05:44, 12 ஏப்ரல் 2007 (UTC)

அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். --Sivakumar \பேச்சு 06:25, 12 ஏப்ரல் 2007 (UTC)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்--mahir

அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.--கலாநிதி 17:23, 12 ஏப்ரல் 2007 (UTC)

வரும் புத்தாண்டு எல்லோருக்கும், தமிழ் விக்கிபீடியாவுக்கும் சிறந்த ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்கள். Mayooranathan 17:36, 13 ஏப்ரல் 2007 (UTC)

Phonetic typing on the edit window

[தொகு]

Hello all, I am back after a long break. Belated Tamil New Year wishes. I found an exciting feature on Bengali wiki that might useful here. On their edit windows, they have this check box that says "Phonetic Bangla Typing. Check/Uncheck box or use Esc as a toggle key to activate/deactivate. Go to WP:Typing for help". The edit window lets the user type in english and the text gets translated to Bengali. This is similar to how E-kalappai works except there is no need for a install. It works for everyone even IP addresses. I asked Ragib Hassan on how they implemented this. To make this work, I need help translating something. Please see பயனர்:Ganeshk/translate. The text in Bengali needs to be translate. I think it is all the keystrokes that are possible. Lot of people find it difficult to start typing in tamil and so hesitate to join. It would be great if this works here. And sorry for the English. :) Regards, Ganeshk 21:52, 16 ஏப்ரல் 2007 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா இயல் சின்னங்கள்

[தொகு]

தமிழ் விக்கிபீடியாவிற்கு தனித்துவமான சில இயல் சின்னங்களை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இது தொடர்பாக பிற பயனர்களின் கருத்துக்களை brainstrom செய்தால் நன்றாக இருக்கும். நன்றி. --Natkeeran 21:13, 21 ஏப்ரல் 2007 (UTC)

கட்டற்ற முறையில் தமிழ் சூழமைவுக்கு ஏற்ற மாதிரி cliparts ஆக்குதல், அதற்கான வழிகளை ஆராய்தல் நன்று. இத்துறையில் இருப்போர் இதற்கு உதவ முன்வர வேண்டும். தமிழ் சூழமைவை என்ன சின்னங்கள் பிரதிபலிக்கின்றன என்று பட்டியலிட்டு, பின்னர் வரைகலை கலைஞர்களின் உதவியுடன் வடிவமைக்கப்படவேண்டும். --Natkeeran 15:40, 12 மே 2007 (UTC)[பதிலளி]

வழிமாற்றுப் பொத்தான்

[தொகு]

தொகுப்புச் சட்டத்தில் உள்ள பொத்தான்களில் #REDIRECT பொத்தானை இணைக்க முடியுமா? ஆங்கில விக்கியில் உள்ளது போல்.--Sivakumar \பேச்சு 17:04, 24 ஏப்ரல் 2007 (UTC)

பேச்சுப் பக்க வார்ப்புரு

[தொகு]

டெரன்ஸ், அழகி பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள வார்ப்புருவின் தேவை என்ன? இது போல் அனைத்துப் பக்கங்களிலும் சேர்க்க எண்ணமா?--ரவி 09:54, 25 ஏப்ரல் 2007 (UTC).


ரவி இந்த வார்ப்புரு தேடல் பொறிகளின் மூலம் ஒரு கட்டுரைக்கு நேரடியாக வரும் பயனருக்கான வழிகாட்டல் பக்கமாக இருக்கும் என்று எண்ணிதான் இட்டேன். இது ஆங்கில விக்கியில் இருந்து பெறப்பட்ட கருத்துதான். அங்கே கூடுதலான பேச்சு பக்கங்களுக்கு இட்டுள்ளார்கள். மேலும் நாம் எல்லா பயனுனர்களையும் கணக்குகளை ஆக்கி எல்லாவற்றையும் தெரிந்த பின் கட்டுரைப் பக்கத்துக்கு வருவார்கள் என்க் கருத முடியாது தானெ.மேலும் பேச்சுக்கள் இடம்பெறாத பக்கங்கள் சிவப்பு இணைப்பாக இருப்பது பொருத்தமாக இருக்காது என்பது என் கருத்தாகும். இரண்டாவது கேள்விக்குப் பதில் ஆம் முடியுமானவரை, உங்கள் கேள்வி ஏதோ ஆட்சபனைப் போல ஒலிக்கிறது??? ஏதாவது எதிர்ப்பு உண்டா?--டெரன்ஸ் \பேச்சு 10:10, 25 ஏப்ரல் 2007 (UTC)


மன்னிக்கவும். இந்த வார்ப்புரு தேவை என்று தோன்றவில்லை. அதுவும் எல்லா பக்கங்களிலும் என்பது தேவையற்று உரையாடல் பக்க எண்ணிக்கைகளை அதிகரிக்கும். வேண்டுமானால் இது குறித்து ஆலமரத்தடியில் உரையாடி பின்னர் முடிவு எடுக்கலாம்.--ரவி 11:45, 25 ஏப்ரல் 2007 (UTC)


பேச்சுப் பக்கங்கள் அதிகரிப்பதால் என்ன பிரச்சினை ரவி. எனது கருத்துப்படி பேச்சுப்பக்கங்கள் அதிகரிப்பது ஒரு தடையாக கருத தேவையில்லை. ஆங்கில விக்கி தளத்தை உதாரணமக எடுத்தால் கட்டுரை எண்ணிக்கையைப் போல 4 மடங்கு கட்டுரை அற்றப்பக்கங்கள் காணப்படுகின்றன. அங்கே கட்டுரை அனைத்தினதும் பேச்சுப்பக்கங்களில் ஒரு வார்புருவை இட்டுள்ளதைக் கவணிக்கலாம். எல்லாவற்றுக்கும் ஆங்கில விக்கியை உதாரணமாக கொள்ளத்தேவையில்லை என்றாலும் இந்தவிடயத்தில் பரவாயில்லைப் போலத்தான தோன்றுகிறது. தமிழ் விக்கியின் depth குறைந்து காணப்படுவதற்கு மொத்தபக்கங்களில் குறைவும் ஒரு காரணம் என்பதை மீடியாவிக்கி பக்கத்தைப் பார்த்தால் தெளிவாகும். எதிர்ப்பின் காரணமாக தற்போதைக்கு வார்ப்புருக்கள் இடுவதை தள்ளிவைக்கிறேன். ஆலமரத்தடியில் உரையாடிப்பார்ப்போம்.--டெரன்ஸ் \பேச்சு 11:59, 25 ஏப்ரல் 2007 (UTC)

இவ்வாறு எல்லாப் பேச்சுப் பக்கங்களிலும் இடுவது அவசியம்தானா என்பது எனக்கும் விளங்கவில்லை. depth அதிகரிக்க வேண்டுமென்பதற்காக இடத் தேவையில்லை. --கோபி 12:23, 25 ஏப்ரல் 2007 (UTC)

10,000 கட்டுரைகள்

[தொகு]

பத்தாயிரம் கட்டுரைகள் அளவைத் தாண்டி விட்டோம். எதிர் பார்த்ததை விட விரைவாகவே இது நடைபெற்றதற்கு கணேஷ், நிரோஜன் ஆகிய இருவரதும் பங்களிப்பு முக்கியமானது. இவர்களுக்கு எனது நன்றிகள். அடுத்தது என்ன? கட்டுரை எண்ணிக்கையைக் கூட்டுவதைத் தொடர வேண்டும் எனினும், ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகளை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். புதிய கட்டுரைகளைப் பல்வேறு துறைகளையும் சார்ந்தவையாக விரிவாக்கம் செய்யவேண்டும். அறிவியல், கணினியியல் போன்ற பல்வேறு நவீன துறைகளில் இடம் பெறுகின்ற வளர்ச்சிகளை உடனுக்குடன் தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் செய்வது மிகவும் அவசியமானது. தமிழ் விக்கிபீடியாவில் கட்டாயம் இடம்பெற வேண்டிய தலைப்புக்கள் தொடர்பிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகின்றது. கணிதம், வேதியியல், இயல்பியல், பொறியியல், மருத்துவம், பொருளியல், புவியியல், சூழலியல், மேலாண்மை, கல்வியியல் போன்ற பல்வேறு துறைகளிலுமுள்ள அடிப்படையான கருத்துருக்கள் அனைத்தையும் பற்றிய கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் இருக்க வேண்டும்.

தமிழ் விக்கிபீடியாவின் ஆழம் (Depth) ஒவ்வொரு கட்டுரை அதிகரிப்புப் பாய்ச்சலின் போதும் கீழ் நோக்கிச் செல்வது தவிர்க்க முடியாதது எனினும் இதனை மேம்படுத்த முயற்சிகள் தேவை. இதற்காகச் செயற்கையான முறைகளைக் கைக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஆழத்தை அதிகரிப்பது தொடர்பில் நியாயமான தேவைகள் பல உண்டு அவற்றை இனங்கண்டு அவை தொடர்பில் முயற்சிகள் செய்யலாம். எடுத்துக்காட்டாக, நிறைய வழிமாற்றுப் பக்கங்கள், Disambiguiation பக்கங்கள் என்பவற்றுக்கான தேவை உள்ளது. பல கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் உள்ளன இவற்றைத் திருத்துவதன் மூலம் ஆழம் அதிகரிக்கும். இவற்றைவிடக் கட்டுரைகளுக்கு வெளியிணைப்புக்களைச் சேர்த்தல், உள்ளிணைப்புக்களை உருவாக்குதல், புதிய தகவல்களைச் சேர்த்தல், கட்டுரைகளை விரிவாக்கல், படிமங்கள் குறைவாக உள்ள கட்டுரைகளுக்குப் படிமங்களைச் சேர்த்தல், போன்ற பல நடவடிக்கைகள் ஆழம் அதிகரிக்க உதவக்கூடியன.

கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரிப்புத் தேடு பொறிகளில் தமிழ் விக்கி அகப்படுவதற்கான வாய்ப்புக்களைக் கூட்டும் என்பதிலும், இதனால் தமிழ் விக்கி மக்களுக்குக் கூடுதலாக அறிமுகமாகும் என்பதிலும் ஐயம் இல்லை. ஆனால் இவ்வாறு அறிமுகமாகுபவர்களை மீண்டும் மீண்டும் வரத் தூண்டுவதற்கும், தொடர்புகளை நீண்டகாலம் தக்கவைத்துக் கொள்வதற்கும் கட்டுரைகளின் தரமும், அவற்றின் பல்வகைமையும் மிக மிக அவசியம். இதன் மூலமே தமிழ் விக்கி தொடர்பான நல்லெண்ணத்தை வளர்க்கமுடியும். எனவே வருங்காலத்தில் தரத்தைக் கூட்டுவதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுவோம். Mayooranathan 07:52, 27 ஏப்ரல் 2007 (UTC)

மயூரநாதன், உங்கள் கருத்துக்களுடன் முழுமையாக ஒத்துப் போகிறேன். எண்ணிக்கை இலக்கை விரைவில் எய்த உதவிய கணேஷ், நிரோ, கோபி மற்றும் அனைவரிடமும் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆகஸ்ட் 2005ல் 1000 கட்டுரைகள் இலக்கை அடைந்தபோது 10000 கட்டுரை இலக்கு எண்ணிக்கையை சுந்தர் முன்மொழிந்தார். இவ்வளவு விரைவாக அடைவோம் என்று எண்ணவில்லை. அடுத்த இலக்கு 100000 கட்டுரைகளாகத் தான் இருக்க முடியும் :) அதே வேளை கட்டுரைகள் தரம், ஆழம், பயன், விக்கிபீடியா கட்டமைப்பு ஆகியவற்றில் நாம் பெரிதும் முன்னேற வேண்டும்.--ரவி 08:37, 27 ஏப்ரல் 2007 (UTC)
மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு கருத்துடனும் உடன்படுகிறேன். விரைவில் 25,000 கட்டுரைகளையும் (ஆ.வி. முதல்பக்கத்தில் இணைப்பு பெறும்பொருட்டு) அதன்பின் ரவி குறிப்பிட்டதுபோல் 1,00,000 கட்டுரைகளையும் விரைவில் அடைய வேண்டும். அதே வேளையில் ஆழமும், பல்வகைமையும் பலமடங்கு முன்னேற வேண்டியுள்ளது. நாம் ஒவ்வொருவரும் நாளொன்றிற்கு மூன்று குறிப்பில்வழிப் பக்கங்களையாவது துப்புரவு செய்தால் தரம் மிகும். உள்ளிணைப்புகள் பக்கவகைப்படுத்துதல் பயன் பெருக்கும். தரமான மேற்கோள்கள் நமது மதிப்பைக் கூட்டும். -- Sundar \பேச்சு 10:50, 27 ஏப்ரல் 2007 (UTC)

மயூரநாதன் சொன்ன அத்தனைக் கருத்துக்களும் எண்ணி, முனைப்புடன் செயல்படுத்த வேண்டியவை. உண்மையிலேயே எழுத ஆயிரக்கணக்கான தலைப்புகள் உள்ளன. பங்களிபாளர்கள் வரிசை இன்னும் பன்மடங்கு கூடவேண்டும். கூட்ட இயலும். அண்மையில் Profvk போன்ற பட்டறிவுமிக்கவர்கள் வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கின்றது. காயத்திரி, அரசன், மது போன்ற நல்ல எழுத்தாளர்கள் இன்னும் பலரும் வந்து தொடர்ந்து பங்களிக்க வேண்டும். நம் வருங்கால வளர்ச்சியின் அடிப்படையான கூறுகளில் ஒன்றானது நல்ல அறிவும் திறமும் கொண்ட பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதில் உள்ளது. நாம் 10-15 பேராக உழைத்தால் மிக மிக மெதுவாகவே நகர இயலும் (வெறும் கட்டுரை எண்ணிக்கையைக் கொண்டு கூறவில்லை). ஏன் நம்மால் ஒரு 100 பங்களிப்பளர்களைக் கூட பெற முடியவில்லை என்று, திருத்தும் முகமாக சிந்த்தித்தல் வேண்டும். பயனர்கள் 1,600 இருக்கலாம், ஆனால் வந்து தொடர்ந்து பங்களிப்பவர்கள் அதில் 100 கூட இல்லாதது வியப்பாக உள்ளது. மயூரநாதன் எத்தனை கடுமையாக உழைத்துள்ளார் எனினும் அவர் ஏறத்தாழ 600-650 நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளார் நான் வந்து இன்னும் ஓராண்டு ஆகவில்லை (ஆண்டு நிறைவு நெருங்குகிறது), என்னாலும் 300-350 கட்டுரைகள்தான் எழுத இயன்றது. டெரன்ஸ் ஏறத்தாழ 400 கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆக பெரும்பாலும் ஆர்வம் உடையவர்கள் குறுங்கட்டுரையாக எழுதினாலும் ஆண்டொன்றுக்கு 200-400 தான் எழுத இயலும். நிரோ, கோபி போன்றோர் இதற்கு விதி விலக்கு (முறையும் வேறானது). எனவே 10 பேர் உழைத்தால் ஆண்டொன்றுக்கு 2000-3000 தான் எட்ட முடியும். எனவே நல்ல பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது மிக மிகத் தேவையானது. கட்டுரை எண்ணிக்கை ஒரு புறம் இருக்க ஆழப்படுத்துவதிலும், ஒழுங்குப்படுத்துவத்லும் ஏராளமான உழைப்பு தேவைப்படுகின்றது. நமக்கு நிறைய உதவி தேவை, நிறைய பங்களிப்பாளர்கள் தேவை, நல்ல எழுத்தாளர்கள் தேவை. நிரோ போன்றவர்கள் இவ்வளவு அதிகமாக உழைக்கத்தான் வேண்டுமா? உழைப்பை பகிர்ந்து கொண்டால் இன்பமும் பயனும் பெருகும் அல்லவா?--செல்வா 14:25, 27 ஏப்ரல் 2007 (UTC)

"தமிழ் விக்கிபீடியாவில் கட்டாயம் இடம்பெற வேண்டிய தலைப்புக்கள் தொடர்பிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகின்றது. கணிதம், வேதியியல், இயல்பியல், பொறியியல், மருத்துவம், பொருளியல், புவியியல், சூழலியல், மேலாண்மை, கல்வியியல் போன்ற பல்வேறு துறைகளிலுமுள்ள அடிப்படையான கருத்துருக்கள் அனைத்தையும் பற்றிய கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் இருக்க வேண்டும்." என்று மேலே மயூரநாதன் சுட்டியது மிக்க சரி. அறிவுக்கூர்மையான சிந்தனைப் பின்புலத்தை உறுதியுடன் கட்டமைப்பது எமக்கு முன்னிருக்கும் ஒரு முக்கிய பணி. இதற்கு நாம் பல் துறைசார் பங்களிப்பாளர்களையும் உள்வாங்கி இன்னும் வேகமுடன் செயற்பட வேண்டும். --Natkeeran 01:26, 28 ஏப்ரல் 2007 (UTC)

Nayanar

[தொகு]
It is very nice to see tamil wikipedia above the 10k threshold. Congrats on the achievement. What tamil wikipedia is lacking however, is pages on the Nayanar saints of Tamil Nadu. Pages on Sundaramoorthy and Appar are in good condition on hindi wiki, and all 63 saints have pages there in category:Nayanar. It seems fitting to create these pages as a testament to the achievements in Saivism brought upon by our ancestors.Kingram 02:49, 28 ஏப்ரல் 2007 (UTC)
Kingram, Thanks for pointing this issue. I have coined some of the articles in the Tamil wikipedia and I do agree that wikipedia indeed have more articles related to in category:Nayanar than Tamil as of this time of writing. I hope it won't take much time to complete rest of the articles. By the way do you have article in Hindi related to en:Chandeshvara Nayanar if so could you please link to the English wikipedia article. Thanks in advance.--Umapathy 14:18, 28 ஏப்ரல் 2007 (UTC)
I have added the hindi interwiki to chandesuvara nayanar on the page you linked to. Most of the hindi pages (on nayanar saints) are placeholder stubs, but the pages on Appar and Sundarar have a good amount of content because they are the two major figures of the nayanar movement.ராஜா ராம் 02:12, 29 ஏப்ரல் 2007 (UTC)
Selva, Kanags and myself are on the process of creating and enhancing the articles. Hopefully we will achieve this goal at some point depending on the availability of spare time  . --Umapathy 04:39, 10 ஜூலை 2007 (UTC)
Umaapathy, Thanks for the note. T The articles are now taking good shape and it can be further improved, I guess. I'll also pitch in whenever i can.--செல்வா 19:58, 10 ஜூலை 2007 (UTC)

இந்தியாவின் அதிகாரப் பூர்வ மொழிகள்

[தொகு]

இந்தியாவின் அதிகாரப் பூர்வமொழிகள் 15ஆ 23ஆ தயவு செய்து யாராவது சரிபார்க்கவும். Official languages of India ஆங்கில் விக்கிபீடியாவில் 23 மொழிகள் என்றுள்ளது. இவற்றைச் சரிசெய்யவேண்டும். தவிர யாராவது மொழிகளைத் தெரிந்தவர்கள் ஆகக்குறைந்தது ஒரு சில உரையாடல்களைக் குறிப்பிட்டால் நன்று. எடுத்துக்காட்டாக மலையாளம் கட்டுரையைப் பார்க்க. --Umapathy 14:02, 28 ஏப்ரல் 2007 (UTC)

மேற்கோள்கள்

[தொகு]

தற்போது இணையத்திலும் இணையத்திற்கு அப்பாலும் தமிழ் பதிப்புகள் பெருகுவது போன்று தோன்றுகிறது. அவற்றை மேற்கோள்களாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் நம்தளத்தின் நம்பகத்தண்மை கூடும் மற்றும் சொந்தக் கருத்துக்களைப் புகுத்துவதைத் தடுக்கலாம். இதன் பக்கவிளைவாக நாம் மேற்கோள் சுட்டும் பதிப்புகளின் நுகர்வும் கூட வாய்ப்புள்ளது. செய்திகளுக்கு பிபிசி தமிழ் ஒரு மேற்கோளாக இருந்து வந்துள்ளது. தற்போது சிஃபி, யாஹூ, எம்.எஸ்.என். போன்ற வலைவாசல்களும் தமிழ் கட்டுரைகளைத் தொகுத்தளிக்கத் துவங்கியுள்ளன. கிழக்கு பதிப்பகம் போன்றவை ஆளுமைகளைப் பற்றியும் பல தரப்பட்ட விடயங்கள் மீதும் வாங்கத்தக்க விலைகளில் புத்தகங்களை வெளியிடத் துவங்கியுள்ளன. இவையனைத்தையும் காட்டியும் பெரிய அளவில் பிரிட்டானிகாவின் தமிழ் பதிப்பை விகடன் பதிப்பகம் வெளியிட உள்ளது. இவற்றையும் ஏற்கெனவே உள்ள பழம்பெரும் பதிப்புகளையும் நாம் இனி மேற்கோள்களாகப் பயன்படுத்தத் துவங்க வேண்டும். -- Sundar \பேச்சு 07:24, 30 ஏப்ரல் 2007 (UTC)

VolkovBot

[தொகு]

பயனர்:VolkovBot-க்கு 'பாட் தகுதி வழங்கலாம். கடந்த சில நாட்களாகவே இதன் பணி நன்றாகவே உள்ளது.--Sivakumar \பேச்சு 18:23, 3 மே 2007 (UTC)[பதிலளி]

en:History of Tamil Nadu ஆங்கில விக்கிப்பிடியாவின் இன்றைய முதற்பக்கத்தில், சிறப்புக் கட்டுரையாக. ஆக்கர்களுக்கு வாழ்த்துக்கள். --Natkeeran 14:45, 5 மே 2007 (UTC)[பதிலளி]

விக்கிமூலம்

[தொகு]

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக இழுத்தடித்து இப்போது விக்கிமூலம் உருவாக்கப்பட்டுள்ளது நிறைவு அளிக்கிறது. ஏற்கனவே, விக்கி நூல்களில் உள்ள பொருத்தமான பக்கங்களை இங்கு நகர்த்தப் பார்ப்போம். இதற்குத் தானியங்கி முறை ஏதும் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு விக்கி திட்டித்திலும் மீடியா விக்கி தகவல்களை மொழிபெயர்ப்பது வேலைப்பளுவை அதிகரிக்கிறது. தற்போது தமிழ் விக்கிபீடியாவில் உள்ள மீடியாவிக்கி தகவல்களை po கோப்பாக மாற்றி அங்கு இற்றைப்படுத்த முடியுமா? சுந்தர், கணேஷ் இது குறித்து விளக்கினால் நன்று.

விக்கி மூலம் என்ற பெயரைப் பயன்படுத்துவோமா? இல்லை, வேறு பொருத்தமான பெயர்கள் இருக்கின்றனவா? விக்கி ஊற்று என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா? மூலம் தமிழ்ச் சொல் தான் என்று உறுதிப்படுத்திக் கொள்ள இயன்றால் நன்றாக இருக்கும்.

விக்கி மூலத்தில் இடப்படும் பக்கங்களை விசம வேலை, தவறான தொகுப்புகளில் இருந்து காக்க பூட்டி வைக்க வேண்டியது அவசியம். இது குறித்த அணுக்க உரிமைகளைப் பெற விரைவில் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும். விக்கி மூலத்தில் பெரிதும் ஆர்வம் காட்டி வரும் கோபி, நற்கீரன் இதற்குப் பொருத்தமானவர்கள்.--ரவி 11:30, 10 மே 2007 (UTC)[பதிலளி]

விக்கிமூலம் உருவாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி.
  1. கோப்பாக மாற்றி எப்படி செய்வது எனத் தெரியவில்லை, ஆனால் ஒரு தானியங்கியைக் கொண்டு கண்டிப்பாக செய்ய முடியும். கணேசின் தானியங்கியோ அல்லது AWBயோ உதவக்கூடும். இல்லையெனில் நான் ஒரு தானியங்கி எழுத முயல்வேன்.
  2. விக்கி ஊற்று என்ற பெயரில் எனக்கு உடன்பாடு உண்டு.
  3. கோபி, நற்கீரன் ஆகியோர் உடனடியாக நிர்வாகிகளாக்கப்பட வேண்டும்.
திருக்குறள் உள்ளிட்ட எண்ணற்ற காப்புரிமை விலக்குடைய ஆக்கங்களை விரைவில் விக்கிமூலத்தில் பதிவேற்ற வேண்டும். தேடுபொறிகள் மூலம் அங்கு பலர் வரக்கூடும் என்பதால் அங்கிருந்து தமிழ் விக்கிபீடியாவிற்கு தக்க வகையில் இணைப்புக்கள் ஏற்படுத்தப் போதிய வார்ப்புருக்கள் உருவாக்கப்பட வேண்டும். -- Sundar \பேச்சு 09:47, 11 மே 2007 (UTC)[பதிலளி]

சுந்தர், தானியங்கி எழுதுவது வரவேற்கக்கக்கூடிய தற்காலிகத் தீர்வு. ஆனால், அனைத்து மீடியாவிக்கித் தளங்களுக்கும் உதவும் வகையில் இத்தமிழாக்கங்களை ஒரு கோப்பாகப் பதிவிறக்கி நிறுவ வழி இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள். விக்கி நூலகம் என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டு தமிழ் wikisource தள ஆலமரத்தடியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் அங்கு வந்து கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்--ரவி 16:27, 11 மே 2007 (UTC)[பதிலளி]

மிக்க மகிழ்ச்சி. மேலும் கருத்துக்களை அங்கேயே பகிர்ந்து கொள்கின்றேன். --Natkeeran 15:25, 12 மே 2007 (UTC)[பதிலளி]

இந்திய மொழிகளுக்கான தமிழ் எழுத்துப்பெயர்ப்பு கருவி

[தொகு]

இனியன் என்பவரின் இப்பக்கத்தில் பல இந்திய மொழிகளில் இருந்து தமிழுக்கு எழுத்துப் பெயர்ப்பு செய்ய வசதியுள்ளது. பிற மாநில ஊர்ப்பெயர்கள், மற்ற பெயர்ச்சொற்கள் எவ்வாறு பலுக்கப் படுகின்றன என அறிய உதவலாம். எடுத்துக்காட்டாக Jog Falls என்பது ஜாக் அருவியா ஜோக் அருவியா என ஆங்கிலத்தில் இருந்து அறிதல் இயலாது. ಜೋಗ - இதனை அப்பக்கத்தில் கொடுக்கையில் தெரிந்தது.--Sivakumar \பேச்சு 16:00, 15 மே 2007 (UTC)[பதிலளி]

ஆமா சிவா, இந்த ஊர்ப்பெயர் பயன்பாட்டைக் குறித்து நான் யோசித்துப் பார்க்கவில்லை. அப்புறம், அந்தக் கருவியின் பெயர் தான் இனியன். அதை உருவாக்கியவர் ஜெகத். இனியன் அவரது மகனின் பெயர்.--ரவி 03:51, 16 மே 2007 (UTC)[பதிலளி]

இது ஒரு பயனுடைய மென்பொருட்கருவி. குறிப்பாக திராவிட மொழிக்கட்டுரைகளை (கன்னடம், தெலுங்கு, மலையாளம்) எழுத்துப் பெயர்ப்புச் செய்து பார்த்தால் 40-80% புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். இக்கருவி மிகச் சிறப்பாக இயங்குகின்றது. ஊர்ப்பெயர், பெயர்சொற்கள் மட்டும் இல்லாமல் கட்டுரை முழுவதையுமே, ஓரளவிற்குப் படித்துப் பொருள் கொள்ள உதவுவது. நல்ல முயற்சி. யூனிக்கோட்டில் இருப்பதால் எழுத்துப் பெயர்ப்புச் செய்வதும் எளிதாகவே இருந்திருக்கும். எடுத்துக்காட்டிய சிவாவுக்கு நன்றி.--செல்வா 03:59, 16 மே 2007 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிபீடியா நிரல் பற்றியும் சில விளக்கங்களும்

[தொகு]

தமிழ் விக்கிபீடியா சமீபத்தில் 10000 தலைப்புகளை தாண்டி சாதனைப் படைத்து வரும் வேளையில் என்னால் இயன்ற அளவிலான சிறிய பங்களிப்பு.

இதில் தமிழ் விக்கிபீடியா பகடை தொடுப்பு நிரலியும் மற்றும் 12552 தலைப்புகளுக்கான sql table, php source codes சேர்த்து க்னூ உரிமையின் கீழ் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.

விளக்கம் தேவை: இந்த sql query க்கு காப்புரிமை அல்லது என்னுடைய பெயரை போடுவதில் ஏதாவது விக்கிபீடியாவின் காப்புரிமை பிரச்சினை வருமா என்பதை அறியத்தரவும்.

பதிவிறக்கம் செய்ய: http://techtamil.in/wikipedia/wikipedia.zip

<iframe src="http://techtamil.in/wikipedia/wikipedia.php" width="250px" height="250px" vspace="0" hspace="0" allowtransparency="true" frameborder="0"></iframe>

மாஹிர்

இல்லை என்பதே என் அனுமானம். காரணம் நீங்கள் க்னூ உரிமையின் கீழ் வழங்குவதால். கட்டற்ற என்பதன் அர்த்தமே பகிர்வு தானே, ஆக்கர்களை தகுந்த முறையில் அடையாளம் காணுவது பிர்ச்சினை தரது என்றே நினைக்கிறேன்.
http://techtamil.in/ மிகவும் நன்றாக இருக்கின்றது. உங்களால் அந்த தளத்தை பல முனைகளில் நுட்ப முறைகளில் மேலும் வளர்த்தெடுக்க முடியும் என்று நினைக்கின்றேன்.
உங்களுடைய செயலியைப் பற்றி த.வி ஒரு கட்டுரையும், அறிமுகப்பக்கதில் மேலும் விளக்கங்களும் சேர்க்கப்படவேண்டும்.

--Natkeeran 18:54, 20 மே 2007 (UTC)[பதிலளி]

நன்றி Natkeeran...

--மாஹிர் 21 மே 2007(IST)

நகர்பேசியில் தமிழ் விக்கிபீடியா

[தொகு]

http://wapedia.mobi/ta/ - இந்தத் தளத்தை நிறுவியுள்ளவர் இங்குள்ள தலைப்புக்களுக்கான மொழிபெயர்ப்பைக் கேட்டிருக்கிறார். பல்லூடகங்களுக்கும் தமிழ் விக்கிபீடியாவை எடுத்துச் செல்ல நாம் உதவ வேண்டும். -- Sundar \பேச்சு 09:21, 16 மே 2007 (UTC)[பதிலளி]

தமிழியல் மாநாடு 2007: இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்

[தொகு]

தொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் தென்னாசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்” என்ற இரண்டாவது தமிழியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. 2007ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி முதல் ஜூன் 2ம் திகதி வரை மூன்று நாட்கள் மாநாடு நடைபெறும்.

வட அமெரிக்கா, ஐரோப்பா, தென்னாசியா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களைச் சேர்ந்த தமிழியல் புலமையாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்கிறது. மானுடவியல், தொல்லியல், புலம்பெயர் கல்வி, வரலாறு, மொழியியல், இலக்கியம், அரசியல், உளவியல், பொது சுகாதாரம், சமயம், சமூகவியல், அரங்கக் கல்வி ஆகிய துறைகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பேராளர்கள் மாநாட்டில் கட்டுரைகள் படைக்கின்றனர்.

http://www.chass.utoronto.ca/~tamils/

இந்த தளத்தில் த.வி. அறிமுகப்படுத்தல் ஆக்க பூர்வமாக இருக்கும்.

--Natkeeran 02:24, 19 மே 2007 (UTC)[பதிலளி]