விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு21

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிமேனியா 2009[தொகு]

ஆண்டுக்கொருமுறை நடக்கும் விக்கிமேனியாவில் பங்கேற்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இம்முறை நான் பங்கேற்க விண்ணப்பிக்கவுள்ளேன். தமிழ் விக்கியின் வளர்ச்சி நிலைகள், எதிர்கொண்ட எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள், தமிழ் விக்சனரி தானியங்கித் திட்டம், இப்போது நாம் நடத்தி வரும் பட்டறைகள் போன்றவற்றிலிருந்து சிலவற்றைப் பொறுக்கி ஒரு கட்டுரை படிக்கலாமென்று நினைக்கிறேன். பயண உதவித்தொகை 50% கிடைத்தால் செல்வேன். மற்றவர்களும் இயன்றால் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 06:36, 13 மார்ச் 2009 (UTC)

முயற்சிக்கு வாழ்த்துகள், சுந்தர். தொடக்கத்தில் இருந்தே தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் பிற விக்கிமீடியா திட்டங்களுக்கும் இடையில் ஒரு பாலமாக நீங்கள் செயல்படுவது பயனுள்ளதாக இருக்கிறது--ரவி 02:38, 15 மார்ச் 2009 (UTC)
Scholarship என்பதைச் சொல்லுகிறீர்களா. கட்டாயம் செய்யுங்கோ. வாழ்த்துக்கள். --Natkeeran 02:43, 15 மார்ச் 2009 (UTC)
வாழ்த்துகளுக்கு நன்றி ரவி, நற்கீரன். ஆம், scholarship உதவியைத்தான் குறிப்பிட்டேன். நம்மில் சிலருக்காவது பங்களிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். நேரடியாகப் பங்களிக்க இயலாவிட்டாலும் நாம் கட்டுரைகளைப் பதிவேற்றுவோம். -- சுந்தர் \பேச்சு 04:18, 15 மார்ச் 2009 (UTC)
கட்டுரையின் தலைப்பை பற்றிக் கூறுங்கள்....முடிந்தால் சில கருத்துக்கள் பங்களிக்கிறேன். --Natkeeran 12:13, 15 மார்ச் 2009 (UTC)
  • Wikipedia promotion in Indian Languagues
  • The barriers to Indian Wikipedias growth
  • Wikipedia and Indian languagues content development
  • Longnow perspective for Indian Wikipedias
--Natkeeran 12:20, 15 மார்ச் 2009 (UTC)
நன்றி நற்கீரன். என்னுடைய திட்டம் தமிழ் விக்கிப்பீடியா துவக்க நாட்களில் இருந்து இன்றுவரை வளர்ந்த விதத்தையும், சந்தித்த சிக்கல்களையும், வருங்காலத் திட்டங்களையும் விரித்து "Tamil Wikipedia: A Case Study"போன்றதொரு தலைப்பில் கட்டுரை படிப்பது. இந்திய விக்கிகளுக்குப் பொதுவாக செய்வதை ஒரு panel உரையாடலாகப் பரிந்துரைக்கலாமோ? -- சுந்தர் \பேச்சு 12:10, 17 மார்ச் 2009 (UTC)
பாக்க: விக்கிப்பீடியா பேச்சு:Tamil Wikipedia: A Case Study--Natkeeran 16:28, 28 மார்ச் 2009 (UTC)

புகழ் பெற்ற இந்தியர்களின் பட்டியல்[தொகு]

த.வி. நேயர்களனைவருக்கும் வணக்கம். புகழ்பெற்ற இந்தியர்களின் பட்டியல் கட்டுரையில் பற்பல பெயர்களை சேர்த்திருக்கிறேன். பெயர்கள் சேர்ப்பது எளிது. இப்பொழுது 165 பெயர்கள் உள்ளன. இன்னும் சேர்த்துக்கொண்டே போகலாம். சேர்க்கவும் வேண்டும். ஆனால் என்னுடைய கனவு என்னவென்றால் அங்கிருக்கும் ஒவ்வொரு பெயருக்கும் குறைந்த பட்சம் ஒரு ஆழமான பரந்த கட்டுரை த. வி. யில் தேவை. அவரவருக்கு பிடித்தமான பெயரை எடுத்துக்கொண்டு கட்டுரைகள் எழுத அனைவரையும் வேண்டுகிறேன். ஏற்கனவே சில பெயர்களைப்பற்றி கட்டுரைகள் உள்ளன. அவைகளை விரிவாகவும் இன்னும் ஆழமாகவும் ஆக்கவேண்டும். த. வி. யின் வளர்ச்சிக்கு இது பெரிதும் வழிகோலும். --Profvk 15:37, 2 ஏப்ரல் 2009 (UTC)

வழிமொழிகிறேன். நானும் இயன்றவாறு எழுதி உதவுகின்றேன். சர் சி. வி. இராமன் உடன் பணியாற்றிய இயற்பியல் அறிஞர் கே. எசு. கிருட்டினனைப் பற்றி கட்டுரை எழுதுகிறேன். மிகவும் கட்டாயம் அறிய வேண்டிய மக்கள் அன்பு கொண்ட நல்லறிவாளர்களில் இவர் ஒருவர்.--செல்வா 15:48, 2 ஏப்ரல் 2009 (UTC)
இப்போதைக்கு சுருக்கமாக கே. எசு. கிருட்டிணன் பற்றி ஒரு கட்டுரை துவக்கி உள்ளேன். கட்டாயம் பின்னர் விரிவாக்குகிறேன். தமிழ், சமசுக்கிரும், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ந்த அறிஞர். அடக்கமும் அன்பும் கொண்ட பெருந்தகை. ஒவ்வொரு இந்தியரும் அறிந்திருக்க வேண்டிய ஆனால் இன்னமும் அறியாத நல்மாணிக்கம், இயற்பியலாளர் கரியமாணிக்கம் சினிவாச கிருட்டிணன்.--செல்வா 18:25, 2 ஏப்ரல் 2009 (UTC)
நல்ல முயற்சி. இதே போல புகழ்பெற்ற தமிழர்கள் பட்டியல், உலகளவில் துறை வாரியாகப் புகழ்பெற்றவர்கள் பட்டியல்கள் ஆக்கலாம்--ரவி 18:03, 2 ஏப்ரல் 2009 (UTC)


Wikipedia: Exploring Fact City[தொகு]

Wikipedia: Exploring Fact City --Natkeeran 03:32, 3 ஏப்ரல் 2009 (UTC)

’அனைத்துலக’, ’அனைத்திந்திய’ ஏற்புடையதா?[தொகு]

இச்சொற்கள் குறித்து பேச்சு: அனைத்துலக முறை அலகுகள் பக்கத்தில் நிகழும் உரையாடலில் அனைவரும் பங்குபெற அழைக்கிறேன்.--தாமரைப்பூ 23:49, 3 ஏப்ரல் 2009 (UTC)

SOIL SALINIZATIONக்கு தமிழாக்கம்[தொகு]

SOIL SALINIZATION என்பதற்கு மண் உவர்ப்பாதல் பொருத்தமானதா?--கார்த்திக் 05:30, 4 ஏப்ரல் 2009 (UTC)

Biome தமிழ் என்ன?[தொகு]

en:Biome --Natkeeran 14:26, 4 ஏப்ரல் 2009 (UTC)

அ.கி.மூர்த்தியின் அகரமுதலி இதற்கு "உயிர்வாழ்பகுதி" என்றும், விக்சனரி "நிலையான உயிரினம் வாழும் பகுதி" என்றும் கலைச் சொற்கள் தருகின்றன. ஆனால், இவை Biome என்பதன் வரைவிலக்கணத்துக்குச் சரியாகப் பொருந்துவதாகத் தெரியவில்லை. Biome என்பது "ecosystems with ecologically similar climatic conditions" எனப்படுகின்றது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது முன்காட்டிய இரண்டுமே பொருத்தமாக இல்லை. அச்சொற்கள், ecosystem என்பதையோ அல்லது similar climatic condition என்பதையோ குறித்துக் காட்டவில்லை. ecosystem என்பதை "சூழல்மண்டலம்" அல்லது "சூழல்தொகுதி" என்னும் சொற்களால் குறிப்பிடுகிறோம். ஆகவே Biome என்பதற்குச் "சீர்சூழல்தொகுதி" (முறைப்படி எழுதுவதானால் "சீர்சூழற்றொகுதி" என எழுதவேண்டும்) அல்லது "சீர்சூழல்மண்டலம்" எனலாம் என்பது எனது கருத்து. ஏனையோரின் கருத்தையும் அறியலாம். மயூரநாதன் 14:54, 4 ஏப்ரல் 2009 (UTC)
Biome என்பது சூழியியல் ரீதியில் ஒரு பகுதியை குறிப்பதாகும், ஆதாவது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பருவநிலையையும் அது சார்ந்த தாவர மற்றும் விலங்குகளையும் ஒருசேர விளக்குவதாகும். மயூரநாதன் கூறியது போல "உயிர்வாழ்பகுதி" அல்லது "நிலையான உயிரினம் வாழும் பகுதி" என்ற இரண்டும் மேற்கூறிய பொருளை உணர்த்தவில்லை. "சீர்சூழற்றொகுதி" என்பதை சீர்+சூழல்+தொகுதி என்று பிரித்தால் சீர் = ஒத்த சூழல்; சூழல் = சூழல்; தொகுதி = பருவ மற்றும் உயிரினத் தொகுதி என்று பொருள்படுவதால் "சீர்சூழற்றொகுதி" என்பது சரி எனக்கருதுகிறேன்--கார்த்திக் 16:44, 4 ஏப்ரல் 2009 (UTC)

சீர்சூழல் என்று மட்டும் சொன்னால் பொருள் கெடாமல் இருக்குமா? சூழல் என்பதே ஒரு தொகுப்பு / தொகுதி தானே? இயன்ற அளவு சுருக்கமான கலைச்சொற்களை ஆக்கலாம். கலைச்சொல் குறித்த கேள்விகளை விக்கிப்பீடியா:பொதுவான மொழிபெயர்ப்பு கலந்துரையாடல்கள் பக்கத்திலோ குறித்த கட்டுரைகளுக்கான பக்கங்களிலோ கேட்கலாம்--ரவி 05:32, 5 ஏப்ரல் 2009 (UTC)

சூழல் என்ற சொல்லை Environment என்பதைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம். இது சற்றுப் பரந்த பொருள் கொடுக்கும் சொல். ஆனால் நாங்கள் குறிக்க முற்படுவது சற்று வேறுபட்ட கருத்துருவான "ecological space" பற்றியது. இதனை வேறுபடுத்திக் காட்டவேண்டியது அவசியம். சொற்களை எளிமைப்படுத்துவது அவசியமானாலும், பொருளும் கூடியவரை துல்லியமாக இருக்கவேண்டும். மயூரநாதன் 16:02, 5 ஏப்ரல் 2009 (UTC)
மயூரநாதன், Biome என்னும் சொல்லில் (சொல் வடிவில்), "ecosystems with ecologically similar climatic conditions" என்னும் பொருள் சுட்டு ஏதும் இல்லை, வரையறை இருக்கலாம். Biome என்னும் சொல்லில் Bio = உயிர் என்ற சொல் உள்ளது மற்றும் மொத்தம், கூட்டு, தொகை என்னும் பொருளைச் சுட்டுமாற்று -ome பின்னொட்டு உள்ளது. genome, proteome முதலியனவும் இப்பபடிப்பட்டதாம். நாம் Biome என்பதை உயிர்ச்சூழகம் என்று கூறலாம். இப்பெயர் பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள், மேலும் ஒரு 5-10 சொற்களை உரசிப் பார்க்கலாம். --செல்வா 16:41, 5 ஏப்ரல் 2009 (UTC)


IT superpower India sees internet users drop by 3 million[தொகு]

"According to the JuxtConsult survey, only 13% internet users in India prefer to read content in English." [1] --Natkeeran 04:57, 5 ஏப்ரல் 2009 (UTC)

வெளி எழுத்தாளர்கள்[தொகு]

வெளி எழுத்தாளர்கள் சிலர் தமிழ் விக்கிக்கு தமது கட்டுரைகளை தர முன்வந்துள்ளனர். எல்லாக் கட்டுரைகளும் பொருந்த விட்ட்டாலும் பல பொருந்தும். அவற்றை நாம் இயன்ற அளவு பதிவது, வளர்ச்சிக்கு உதவும். பேச்சுப் பக்கத்தில் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்று குறித்தல் வேண்டும். மு. இளங்கோகவன், வெங்கட் போன்றோர் ஏற்கனவே அனுமதி தந்துள்ளார்கள். இப்படி உதவி செய்ய விரும்பினால் எனக்கு மின்னஞ்சல் செய்யவும். பயனர்:தமிழ் எழுத்தாளர்கள் என்ற பெயரில் செய்யலாம். --Natkeeran 00:42, 7 ஏப்ரல் 2009 (UTC)


துண்டுப் பிரசுரம்[தொகு]

விக்கிப்பீடியா பற்றி துண்டுப் பிரசுரம் ஒன்றைத் தயார் செய்தால், இங்குள்ள சில வணிக நிறுவனங்களில் வைக்க முடியும். இதற்கு முக்கியத்துவம் தந்து நிறைவேற்றினால் நன்று. --Natkeeran 15:44, 18 ஏப்ரல் 2009 (UTC)

ஆம் நற்கீரன், செய்ய வேண்டிய ஒன்று. துண்டறிக்கை ஒன்று செய்வோம்.--செல்வா 13:07, 23 ஏப்ரல் 2009 (UTC)
ஆம், செய்ய வேண்டியதுதான். விக்கிப்பீடியா:தமிழ்_விக்கிப்பீடியா_அறிமுகப்படுத்தல் பக்கத்தில் உள்ள துண்டு அறிக்கையை பேச்சுப் பக்கத்தில் மேம்படுத்தி பயன்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 14:08, 23 ஏப்ரல் 2009 (UTC)
கண்டிப்பாக செய்வோம். இப்பிரசுரத்தை இணைய மையங்களில் கொண்டு சேர்க்க முடிந்தால் இன்னும் அருமை! யோசிப்போம்--கார்த்திக் 14:26, 23 ஏப்ரல் 2009 (UTC)

நகர்பேசியில் தமிழ் விக்கிப்பீடியா[தொகு]

முன்னொரு முறை வாப்பீடியா என்ற தளத்தில் தமிழ் விக்கி இல்லை என்று உரையாடியது போல் நினைவிருக்கிறது. அதன் நடத்துனருக்கு ஒரு மின்னஞ்சல் கூட அனுப்பினேன். இப்போது அவர்களாகவே தமிழைச் சேர்த்துள்ளனர். இங்கே பாருங்கள். கார்த்தியின் நகர்பேசியில் தமிழ் நன்றாக வருகிறது, எனது Nokia N72 பேசியில் வரவில்லை. :-( -- சுந்தர் \பேச்சு 12:08, 23 ஏப்ரல் 2009 (UTC)

அருமை! அருமை! :) --செல்வா 13:05, 23 ஏப்ரல் 2009 (UTC)

18,000 கட்டுரைகள்[தொகு]

இரண்டொரு நாளில் த.வி. 18,000 கட்டுரைகளை எட்டிவிடும்! உழைத்த அனைவருக்கும் உடன்பங்களிபாளன் ஆகிய என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! 20,000 கட்டுரைகளை எட்டும் நாளும் வெகு தொலைவில் இல்லை. விடாது உழைப்போம்!--செல்வா 19:02, 23 ஏப்ரல் 2009 (UTC)

ஏப்ரல் 26, 2009 அன்று 18,000 கட்டுரைகளை த.வி எட்டியது. இதனை விக்கிப்பீடியா:மைல்கற்கள் என்னும் பக்கத்திலும் குறித்துள்ளேன். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி வீதம் பற்றிய என் கருத்துகள் சிலவற்றை விக்கிப்பீடியா பேச்சு:மைல்கற்கள் என்னும் பக்கத்திலும் குறித்துள்ளேன். ஏப்ரல் 26, 2007 இல் நாம் 10,000 கட்டுரைகள் இலக்கை அடைந்தோம். சரியாக இரண்டாண்டுகளில் 18,000 கட்டுரைகள் இலக்கை அடைந்துள்ளோம். இவ்வளர்ச்சி இன்னும் கூடுதலாக இருக்க இயலும். நாளொன்றுக்கு ஏறத்தாழ 30 கட்டுரைகள் எழுதுதல் வேண்டும். இதற்கு பதிவு செய்துள்ள 8353 பயனர்களில் இன்னும் பலர் வந்து உதவ வேண்டும். இப்பொழுது தொடர்ந்து பங்களிப்பவர்கள் 8-12 பேர்தான். குறைந்தது ஒரு 50 பேராவது வந்து தொடர்ந்து பங்களிக்க வேண்டும். கூட்டுழைப்பு நல்கிய அனைவருக்கும் உடன் பங்களிப்பாளனாகிய நான் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாளொன்றுக்கு 30 கட்டுரைகள் எழுதினால் 20,000 கட்டுரைகளை ஏறத்தாழ இரண்டு மாதங்களில் எட்டிவிடலாம். வாருங்கள் கலக்கிடலாம்!--செல்வா 19:25, 26 ஏப்ரல் 2009 (UTC)

நிச்சயமாக முடியக்கூடியது தான். இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் 25,000 கட்டுரைகளை எட்டமுடியும். தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாற்றில் சில காலகட்டங்களில் நாளொன்றுக்கு 30 கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். இன்னும் சில புதிய முனைப்பாகச் செயல்படக்கூடிய பயனர்கள் இணைந்தால் இது சுலபமாக முடியும். நமது கூட்டு முயற்சியில் 18,000 கட்டுரைகள் எழுதப்பட்டு இருப்பதையிட்டு மகிழ்ச்சி. இதற்காக உழைத்த எல்லாப் பயனர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மயூரநாதன் 19:41, 26 ஏப்ரல் 2009 (UTC)

Elam avalam[தொகு]

indha 21-am nootraandin peravalam. I felt like useless when I see that the people how ignorant and arrogant like rajapakshe. I hope there is a justice which will be served...−முன்நிற்கும் கருத்து 76.217.217.15 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

We all understand this extremely sad situation. Tamils in many countries are protesting the large scale killing and they are expressing their anguish, and they are urging their governements to do something to stop this "war". On the first page of Wiki, in the news section, we regularly report the key events relating to this.--செல்வா 19:33, 26 ஏப்ரல் 2009 (UTC)

வார்ப்புரு தமிழாக்கம்[தொகு]

அண்மையில் வல்லநாடு வெளிமான் காப்பகம் கட்டுரையில் வார்ப்புரு சிக்கல் ஏற்பட்டது. அதைச் சரி செய்யும் பொருட்டு வார்ப்புரு:Infobox_Indian_Jurisdiction என்ற வார்ப்புருவை ஆங்கில விக்கியிலிருந்து இற்றைப்படுத்தினேன். ஆனால் இதன் விளைவாக ஏற்கெனவே நாம் செய்திருந்த தமிழாக்கம் அழிந்து விட்டது. இது போன்ற சிக்கல் மீண்டும் ஏற்படாமல் எப்படி தடுப்பது? இப்போது இந்த வார்ப்புருவை விரைந்து தமிழாக்க வேண்டும் அல்லது மதுரை போன்ற கட்டுரைகளில் parameters-ஐ ஆங்கிலத்தில் தல வேண்டும். :-( -- சுந்தர் \பேச்சு 04:26, 28 ஏப்ரல் 2009 (UTC)

சுந்தர், ஏற்கெனவேயிருந்த வார்ப்புரு:Infobox_Indian_Jurisdiction வார்ப்புருவில் parameters தமிழில் இருந்ததால் கட்டுரைகளை எழுதுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், அண்மையில் நான் துவங்கிய மாவட்டங்கள் தொடர்பான கட்டுரைகளுக்காக வார்ப்புரு:Infobox_Indian_Jurisdiction-2 என்னும் வார்ப்புருவை உருவாக்கினேன். புதிய கட்டுரைகளுக்கு இதனைப் பயன்படுத்தலாம். ஆனால் ஏற்கெனவே இருந்தது 1000க்கும் மேலான கட்டுரைகளுக்கு இணைக்கப்பட்டுள்ளதால் அவை எல்லாவற்றிலும் உள்ள parameter களை ஆங்கிலத்துக்கு மாற்றுவது கடினம். மயூரநாதன் 17:14, 28 ஏப்ரல் 2009 (UTC)
அப்படியானால் இனி வரும் கட்டுரைகளுக்கு தேவைப்படும் இடங்களில் இந்த இரண்டாம் வார்ப்புருவை பயன்படுத்தலாம். முதலாவது வார்ப்புருவை நான் இற்றைப் படுத்தி ஓரளவு தமிழாக்கியுள்ளேன். அதன் மீ்தத்தையும் மொழிபெயர்க்க முயல்வோம். இயலாதென்றால் நான் அண்மையில் செய்த மாற்றங்களை நீக்கி விட்டு அவற்றை இந்த இரண்டாம் வார்ப்புருவில் செயல்படுத்த வேண்டும். -- சுந்தர் \பேச்சு 17:29, 28 ஏப்ரல் 2009 (UTC)
நீக்கியதை மீட்டெக்க முடியாதா.....பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் பல கட்டுரைகள் தங்கி உள்ளதாக தெரிகிறது.
நான் அண்மையில் செய்த மாற்றங்களை நீக்கியுள்ளேன். இப்பொழுது சரியாக உள்ளனவா எனப் பார்க்கவும். -- சுந்தர் \பேச்சு 04:38, 29 ஏப்ரல் 2009 (UTC)