உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு27

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புறப்பெயர் (exonym)

[தொகு]

பிறமொழிப் பெயர்களை ஒரு மொழியினர் தம் மொழியுள் வழங்கும் பொழுது தம் மொழி வழக்கத்தின் படி திரித்து (மொழிக்கு ஏற்றவாறு மாற்றி) வழங்குதல் இயற்கை. இவற்றுக்கு பல்வேறு வரலாற்றுக் காரணங்களும் இருக்கும். மொழி இயல்புகளையும் வழக்கங்களையும் அறியாமல் பல தமிழர்கள் இணைய உலகிலே தாறுமாறாகத் தமிழை பழித்து எழுதுகின்றார்கள். ஆங்கிலத்திலே exonym (புறப்பெயர்) என்னும் முறையையும் இவர்கள் அறியாமல் பேசுகின்றார்கள். விண்டோசு (windows) என்றோ இலண்டன் (London) என்றோ எழுதுவது தவறில்லை. இவ்வுண்மைகளை வேண்டுமென்றே சிலர் உணர/ஏற்க மறுக்கின்றனர் என்று நினைக்க வேண்டியுள்ளது. ஆங்கிலத்தில் London என்பதை, உரோமன்/இலத்தீன் எழுத்துக்களிலேயே எழுதும் பிற மொழியாளர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று பாருங்கள் (அதுவும் இவற்றுள் பெரும்பாலானவை ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள்): ஆங்கில விக்கியில் (exonym)

For example, London is known as Londres in French, Spanish and Portuguese, Londino (Λονδίνο) in Greek, Londen in Dutch, Londra in Italian, Romanian and Turkish, Londýn in Czech and Slovak, Londyn in Polish, Lundúnir in Icelandic, and Lontoo in Finnish.

மேலும் அதே மேற்கோள் கட்டுரையில் "An example of a translated exonym is the name Soviet Union." என்கிறார்கள். நாம் சோவியத் ஒன்றியம் என்றோ, சோவியத்து ஒன்றியம் என்றோ எழுதினால் ஒரு தவறும் இல்லை. தமிழை, தமிழ் இலக்கணத்தை, தமிழ் மரபுகளை அறவே மதிக்காதவர்கள் செய்யும் பரப்புரைகளால் மயங்காமல் நாம் கூடியவரை நல்ல முறைகளையே பின்பற்ற வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். நம் எழுத்தும் நடையும் முன்னெடுத்துக்காட்டாக இருக்க முயல வேண்டும். எளிமையாகவும், அதே நேரத்தில் நல்ல தரமுடையதாகவும் இருக்க வேண்டும். இந்த புறப்பெயர் (எக்ஃசோனிம்) பற்றியும் நம் விக்கிக் கொள்கைகள் அல்லது பரிந்துரைகளில் எழுதி வைத்தால் பின்னர் அறியாதவர்களுக்குச் சுட்டிக்காட்ட உதவக்கூடும்.--செல்வா 16:13, 10 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

தினமலர் முதற்பக்கத்தில்

[தொகு]

தினமலர் முதற்பக்கத்தில் "இன்று.." என்ற புதிய பகுதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே எடுக்கப்பட்டுள்ளன. விகி தாலிபான்கள் எனக் குற்றம் சொல்வோரின் கவனத்துக்கு: சோவியத் ஒன்றியம், விடுதலைக் குடியரசு போன்ற சொற்களை இப்போது எமது ஊடகங்களும் எழுத ஆரம்பித்து விட்டன.--Kanags \பேச்சு 11:59, 11 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

பிறந்தநாள் குழுமம்

[தொகு]

வணக்கம்! புதியதாய், பிறந்தநாள் குழுமத்தை தொடங்கி உள்ளேன். பிறந்தநாள் குழுமம்

அனைவரும் அங்கு வருக! Vatsan34 14:35, 12 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

கோப்பைப் பதிவேற்றும் பொத்தானைக் காணவில்லை.--Mbmrameez 06:57, 13 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரைகள்

[தொகு]

ஏற்கனவே முதற்பக்கத்தில் வந்த கட்டுரைகள், இனி இடம்பெறக்கூடிய தரம் உள்ள கட்டுரைகளைத் தொகுத்து பகுப்பு:முதற்பக்கக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் அவ்வப்போது தாங்கள் இனங்காணும் தரமான கட்டுரைகளை இத்தொகுப்பில் சேர்த்து வந்தால் நன்றாக இருக்கும். இது அடுத்தடுத்த வாரங்களில் முதற்பக்கத்தை இலகுவாக இற்றைப்படுத்த உதவும். முதற்பக்கக் கட்டுரைத் தரப் பரிந்துரை:

  • கட்டுரையில் ஒரு படம் இருக்க வேண்டும் அல்லது படம் இணைக்கத்தக்க கட்டுரையாக இருக்க வேண்டும்.
  • குறைந்தது மூன்று பந்தி அளவாவது இருக்க வேண்டும்.
  • கட்டுரை சிறிதாக இருந்தாலும் முழுமையானதாக இருக்க வேண்டும். பயனுள்ள தகவல்களைத் தர வேண்டும்.
  • காட்சிப்படுத்தும் முன்னர் தேவையான உரை திருத்தங்களைச் செய்வது நன்று.
  • நடு நிலைமை மீறல் அறிவிப்பு, பேச்சுப் பக்கச் சர்ச்சைகள் உள்ள கட்டுரைகள் வேண்டாம்.
  • சிறியவர்களும் பள்ளி மாணவர்களும் காணத்தகுந்ததாக இருக்க வேண்டும்.
  • நடப்பு நிகழ்வுகள் குறித்த விரிவான கட்டுரைகள்.
  • தாங்களே கூடிய அளவு பங்களித்த கட்டுரைகளைப் பரிந்துரைப்பதைத் தவிர்க்கலாம்.

இப்பகுப்பில் உள்ள கட்டுரைகளை உரை திருத்தி, விரிவாக்கி, இற்றைப்படுத்தி, தொடர்ந்து தரம் கண்காணித்து வந்தால் வருங்காலத்தில் தமிழ் விக்கி நூல்கள், தமிழ் விக்கி மின்னூல்கள் வெளியிடவும் தமிழ் விக்கியின் தரத்தைச் சுட்டிக் காட்டவும் மிகவும் உதவும்--ரவி 11:42, 15 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

செய்திகளுக்கு கீழே பயனர் அறிமுகம்

[தொகு]

செய்திகளுக்கு கீழே, அல்லது சிறப்புப் படத்துக்கு ஈடாக பயனர் அறிமுகத்தைத் தரலாம். இதர பயனர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. --Natkeeran 00:05, 17 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

நற்கீரனின் கருத்தை வரவேற்கிறேன்.--Kanags \பேச்சு 02:25, 17 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
இக்கருத்தை நானும் வரவேற்கிறேன். --மணியன் 07:02, 17 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
அருமையான திட்டம்.பயனாளர்களின் பங்களிப்புகளுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு.--Shameermbm\பேச்சு 07:14, 17 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
கருத்துக்களுக்கு நன்றி. ரவி விக்கி விடுப்பில் இருப்பதாகவும், பொருத்தமான் மாறு மாற்றங்கள் செய்யுமாறும் மடல் விருத்திருக்கிறார். --Natkeeran 12:35, 17 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
செய்திகளுக்குக் கீழே தந்திருக்கிறேன்.--Kanags \பேச்சு

புதிய தத்தல்

[தொகு]

கட்டுரையைத் தொடங்குவதற்கான தத்தலுடன் தேடுவதற்கான தத்தலையும் இணைப்பது பயனாளர்களுக்கு கூடுதல் பயனளிக்கும்.

தீபாவளி நல் வாழ்த்துகள்

[தொகு]

அனைத்து விக்கிபீடியா சமுதாயத்தினைச் சேர்ந்த அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும், பயனாளர்கள்,நிர்வாகிகள் அனைவருக்கும் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வழ்த்துகள்.--Shameermbm \பேச்சு 07:29, 17 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]


online , offline தமிழ் என்ன

[தொகு]

நான் தேடிப்பார்த்த வரையில் இதற்க்கு தமிழில் கிடைக்க வில்லை இருந்தால் சொல்ல வேண்டுகிறேன் ...

online- offline-

நானோ , மீட்டர் போன்று இதையும் அப்படி பயன்படுத்துவதா ?

இப்போ நான் ஆன்லைல இருக்கேன் என்பதை இப்போ நான் இணைப்பில் இருக்கேன் எனலாம்.

ஆன்லைன் மாகசீன் என்பதை இணைய இதழ் அல்லது இணைய வழி இதழ் எனலாம். ஆவ்' லைன் என்பதை இணைப்பில் இல்லை எனலாம்; ஆவ்'லைன்ல சாட் பண்ணலாம் என்பதை இணையத்துக்கு வெளியே பேசுவோம் என்பது போல சொல்லலாம். --செல்வா 21:14, 19 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

openwetware

[தொகு]

http://openwetware.org/wiki/Main_Page

புள்ளி விபரம்

[தொகு]

மற்ற இந்திய விக்கிகளுடன் த.வி யை ஒப்பிட்ட புள்ளி விபரம் எங்கு கிடைக்கும்? அது செப்டம்பர் மாத விபரமாக இருந்தால் மிகவும் நல்லது. செல்வா அந்தகைய புள்ளிவிபர அட்டவணையை இங்கு பதித்து பார்த்துள்ளேன் --குறும்பன் 13:32, 22 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

மடல் அனுப்பி உள்ளேன் பாக்கவும். இதையும் பாக்க: http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias . --Natkeeran 00:51, 23 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

குறும்பன் நீங்கள் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு என்னும் பக்கத்தில் ஆகத்து மாதம் (2009) வரையிலான ஒப்பீடுகள் காணலாம். பழைய தர அளவீடு பற்றிய ஒப்பீடுகளும் அங்குள்ளன. பார்ககவும்.--செல்வா 19:31, 24 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

Famine தமிழ் என்ன?

[தொகு]

--Natkeeran 03:15, 23 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

பஞ்சம் மயூரநாதன் 03:55, 23 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

வேண்டிய பக்கங்கள்

[தொகு]

சிறப்பு:WantedPages பக்கங்களில் கீழ்வரும் பக்கங்கள் எழுதப்படாதனவாகக் காட்டப்படுகின்றன.

  1. விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் கவனத்திற்கு ‎(1,238 இணைப்புக்கள்)
  2. விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம் ‎(1,238 இணைப்புக்கள்)
  3. விக்கிப்பீடியா:மணல்தொட்டி ‎(1,237 இணைப்புக்கள்)
  4. விக்கிப்பீடியா:தொகுத்தல் ‎(1,237 இணைப்புக்கள்)
  5. விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி ‎(1,237 இணைப்புக்கள்)

ஆயின்,அப்பக்கங்கள் த.வீயில் உள்ள பக்கங்கள்.இணைத்தப் பக்கங்களுக்கும் சென்று சோதித்தால் இணைப்புகள் சரியான பக்கங்களுக்கு எடுத்துச் செல்கின்றன.இதிலுள்ள வழுவை ஆய்ந்து நீக்குமாறு வேண்டுகிறேன்.--மணியன் 14:30, 24 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

இந்த வாரம் வலைப்பதிவை sitenotice இடலாமா? அத்தோடு எழுத்துப்பெயர்ப்பை ஏதுவாக்க வேண்டும்

[தொகு]

--Natkeeran 16:36, 25 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

தமிழ்மண நட்சத்திரமாக தமிழ் விக்கிப்பீடியா வலைப்பதிவு

[தொகு]

தமிழ்மணம் இணையத்தளத்தின் நட்சத்திர வலைப்பதிவராக இந்த வாரம் (அக்டோபர் 26 - நவம்பர் 2) தமிழ் விக்கிப்பீடியா வலைப்பதிவு விளங்குகிறது. இதை முன்னிட்டு site noticeல் தமிழ் விக்கிப்பீடியா வலைப்பதிவுக்கான தொடுப்பு சேர்க்கப்பட்டுள்ளது. நண்பர்கள் அனைவரும் அங்கு நிகழும் உரையாடல்களில் கலந்து கொண்டு பங்களிக்குமாறு வரவேற்கிறோம். நன்றி--ரவி 04:37, 26 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

State of Tamil Schools In Malaysia

[தொகு]

தமிழில் நலவியல் பற்றிய விபர மடல்கள்

[தொகு]
  • நலவியல் பற்றிய விபர மடல்கள் பல இணையத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக கனடா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து இவை கிடைக்கின்றன. இவை அரசாங்களாக் உருவாக்கப்படுவதால், நம்பத்தகுந்தவை, பொதுவில் இருப்பவை. இவற்றை நாம் இங்கு தகுந்தவாறு பதிவேற்ற வேண்டும்.

--Natkeeran 16:00, 31 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

Cholestero

[தொகு]

Cholesterol என்பதனையும் கொழுப்பு (Fat) என்றே தவறாக அழைக்கின்றோம்\புரிந்துகொண்டுள்ளார்கள். Cholesterol என்பதன் தமிழ் பதம் என்ன? --குறும்பன் 00:16, 1 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

நிருவாகிகள் தேர்தல்

[தொகு]

தற்போது விக்கிப்பீடியா நிருவாகிகள் தேர்தல் நடைபெறுகிறது. நிருவாகிகள் மட்டும் தான் வாக்களிக்கலாமா என அராப்பத் கேட்டிருந்தார். அப்படி இருந்தால் அதற்குப் பெயர் தேர்தல் இல்லை :) அனைத்து பங்களிப்பாளர்களும் வாக்களிக்க வேண்டுகிறேன். --ரவி 06:14, 1 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

புதிய தலைமுறை இதழில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

[தொகு]

புதிய தலைமுறை (நவம்பர் 12, 2009) இதழில் பக்கம் 46, 47, 48ல் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் வெளிவந்துள்ளது. --ரவி 16:32, 6 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

நல்ல செய்தி--மணியன் 07:09, 7 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

அண்மைய மாற்றங்கள் பக்கம்

[தொகு]

இங்கு காணும் மெனுப்பட்டையில் முதற் சுட்டியான முதற்பக்க உள்ளடக்கம் தவறாக முதற்பக்கத்தின் வார்ப்புருவிற்கு இட்டுச் செல்கிறது. சிறப்புப் பக்கங்களை தொகுப்பது எப்படி ? --மணியன் 07:09, 7 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

தவறுதலாக இல்லை. வேண்டும் என்றே தான் :) முதற்பக்கம் பூட்டப்பட்டிருப்பதால், வழமையான பயனர்களும் அண்மைய மாற்றப் பக்கத்தில் உள்ள இந்த வார்ப்புருவின் மூலம் தேவையான மாற்றங்களைச் செய்வதற்காக இந்த வசதி. தெரியாத்தனமாக முதற்பக்கத்தில் கை வைக்கும் புதுப் பயனர்கள், விசமிகளிடம் இருந்து முதற்பக்கப் பூட்டு காக்கும்.--ரவி 12:16, 10 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

புதிய பதாகை

[தொகு]

Wikipedia Forever என்ற புதிய banner அனைத்து மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை எப்படி எங்கே தமிழாக்குவது? "விக்கிப்பீடியா என்றென்றும்" என்று தமிழ்ப்படுத்தலாமா?--Kanags \பேச்சு 11:51, 11 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

"என்றென்றும் விக்கிப்பீடியா" என்று தமிழ்ப்படுத்தலாம்.--Ragunathan 14:38, 11 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிபீடியர்களின் கவனத்துக்கு

[தொகு]

நிதி திரட்டும் விளம்பரங்களை தமிழில் நாம் காண இன்னும் ஒரே கட்டம் மட்டுமே உள்ளது! இங்கே சென்று நான் செய்த மொழிபெயர்ப்பை செரிபார்த்த பின்பு, "done" என்பதை இந்த பக்கத்தில் உள்ள மேல் கட்டத்தில் உள்ள தமிழ செய்தியின் பக்கத்தில் சேருங்கள்.மொழிபெயர்க்கப்பட்ட பக்கம் இதோ . நன்றி. -- Vatsan34 12:09, 14 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

வரலாறு

[தொகு]

எப்படி வரலாறு பகுதியில் நாம் செய்தவற்றை சொல்வது? சில கட்டுரைகளில் எழுத்துப்பிழையை சரி செய்தால் வரலாற்றில் எழுத்துப்பிழை சரி செய்தல் என்று எவ்வாறு பதிவது?--−முன்நிற்கும் கருத்து Kurumban (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

குறும்பன், ஒரு கட்டுரையைத் தொகுக்கும் போது "சுருக்கம்" என்ற பெட்டிக்குள் எதற்காக அக்கட்டுரையைத் தொகுத்தீர்கள் என்பதைச் சுருக்கமாக எழுதி சேமித்தால் போதும். அது வரலாற்றில் பதிவாகிவிடும்.--Kanags \பேச்சு 03:53, 17 நவம்பர் 2009 (UTC) குறும்பன், தொகுக்கும்பொழுது பக்கத்தைச் சேமிக்கவும் என்னும் பொத்தானுக்கு[பதிலளி]

மேலேயே "சுருக்கம்" என்று ஓர் எழுத்திடும் பெட்டி இருக்கும், அதில் குறிப்பை இடுவது மிகவும் நல்ல பழக்கம். --செல்வா 22:53, 17 நவம்பர் 2009 (UTC).[பதிலளி]

நன்றி கனகு & செல்வா --குறும்பன் 01:50, 18 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

Discovery தொலைக்காட்சி - தமிழில்

[தொகு]

டிசுக்கவரி தொலைக்காட்சி தமிழில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதாக அறிகிறேன். யாரேனும் காண இயன்றால், அதில் பயன்படும் கலைச்சொற்களைத் தொகுத்து வழங்க வேண்டுகிறேன். நன்றி--ரவி 20:28, 17 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

ரவி, எங்கள் ஊரில் டிசுக்கவரி தமிழில் வருகிறது. கடந்த ஒரு மாதமாக. நான் ஐந்தாறு நிகழ்ச்சிகள் பார்த்தேன். உயிரியல் தொடர்பில் நல்ல தமிழ். தமிழ்த் தொலைக்காட்சிகளை விட நல்ல தமிழ் :). பொறியியல் தொடர்பில் கலைச்சொற்களை குறைவாகவே இருந்தது. பனிச்சீவல் என்பது நான் கேட்ட ஒரு நல்ல சொல். ஆங்கில இணைச்சொல் அறியேன். ஒரு பக்கத்தை உருவாக்கி இச்சொற்களைத் தொகுக்கலாம்.--சிவக்குமார் \பேச்சு 20:48, 19 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]
ஆம் நானும் அண்மையில் ஈரோட்டில் பார்த்தேன். எதிர்பார்த்ததை விட மிக நல்ல தமிழ். நம் தமிழ் ஊடகங்கள் இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம். இம்மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ளோரைத் தொடர்பு கொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 17:40, 18 டிசம்பர் 2009 (UTC)

Internet access 'can be matter of life and death' - Only 100 of the world's 7,000 languages existed in cyberspace,

[தொகு]

Internet access 'can be matter of life and death' --Natkeeran 06:10, 18 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

Vancouver's Winter Games broadcast in South Asian languages too - Bangla, Gujarati, Hindi, Tamil, Urdu, Punjabi

[தொகு]