விக்கிப்பீடியா:லீலாவதியின் மகள்கள்
Appearance
அண்மையில் இந்திய அறிவியற் கழகம், “லீலாவதியின் மகள்கள்” என்ற நூலை வெளியிட்டது. இதில் இந்தியாவின் முதன்மையான 50 பெண் அறிவியலாளர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆங்காங்கில் நடைபெற்ற விக்கிமேனியா கருத்தரங்கில், இந்திய விக்கிப்பீடியர்கள் கூடிப் பேசி, இந்நூலில் உள்ளோரைப் பற்றிய கட்டுரைகளை இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் ஆக்கலாம் என்று தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். இது தொடர்பாக அறிய, மேல்-விக்கியைப் பார்க்கவும். இத்திட்டம் இதுவரையில், இந்தி, தெலுங்கு மொழி விக்கிப்பீடியாக்களில் தொடக்க நிலையில் உள்ளது.