விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு82

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காமிக்ஸ் கதாபாத்தரங்களை எழுதுவதில் சிறுஐயம்[தொகு]

பேட்மேன், ஸ்பைடர்(ஒரு உதாரணத்திற்கு) என்ற பெயர்களின் அப்படியே கட்டுரையை தொடங்கலாமா? இல்லை தமிழாக பெயர்த்து வவ்வால் மனிதன், சிலந்தி மனிதன் போன்று தலைப்பிட வேண்டுமா? காமிஸ் என்பதற்கு தமிழாக்கம் சித்திரக்கதை என்பதை விக்கியில் அறிந்தேன். சிலந்திமனிதன் (சித்திரக்கதை) என்று கட்டுரை தொடங்க வேண்டுமா? ஐயத்தினை தீர்த்தீர்களானால் சிறுகட்டுரைகளை தொடங்கி எழுத உதவியாக இருக்கும். நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:06, 28 செப்டெம்பர் 2012 (UTC)

அதே பெயரில் இருப்பதே சிறந்தது. பார்க்க: பேட்மேன், பகுப்பு:வரைகதை.--Kanags \உரையாடுக 09:13, 28 செப்டெம்பர் 2012 (UTC)
மாயாவி (சித்திரக்கதை) என்ற கட்டுரையைப் பார்த்தேன். சிறுஐயம் பிறந்தது. தீர்த்துவிட்டீர்கள். நன்றி. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:52, 28 செப்டெம்பர் 2012 (UTC)
ஃபாண்டம் தமிழில் வெளிவந்தபோது மாயாவி என்ற பெயரில் அச்சில் வந்தது. அதேபோல ஏதேனும் அச்சிடப்பட்ட மொழிமாற்றப் பதிப்பு சிலந்தி மனிதன் என வந்திருந்தால் அதே பெயரில் எழுதலாம். மேலும் சித்திரகதைக்கு வரைகதை விரும்பப்படுகிறது.--மணியன் (பேச்சு) 09:58, 28 செப்டெம்பர் 2012 (UTC)
சிலந்தி மனிதன் என்று புத்தகம் வந்திருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் சூப்பர் மேன், சூப்பர் டாக் போன்றவற்றிக்கு தமிழ்ப்பதிப்பினை பார்த்தில்லை. விடையளித்தமைக்கும் அலோசனைகளுக்கும் நன்றி. சில கட்டுரைகளை எழுதியபின் ஏதாவது சந்தேகம் என்றால் மீண்டும் வருகிறேன். -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:39, 28 செப்டெம்பர் 2012 (UTC)
மணியன், சித்திரக்கதை என்பதை விடுத்து நாம் ஏன் வரைகதை என எடுத்து ஆண்டோம்/ஆண்டேன் எனத் தெரியவில்லை. வரைகலை, வரைகதை என்றுபடியாலோ!! சித்திரக்கதை கூடிய புழக்கத்தில் உள்ள ஒரு நல்ல சொல்லாகத் தெரிகிறது. --Natkeeran (பேச்சு) 14:16, 28 செப்டெம்பர் 2012 (UTC)
நீண்டகாலமாக செய்திதாள்களில் கூட படக்கதை என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. படத்தினை சித்திரமாக மாற்றி சித்திரக்கதை என்று அழைப்பதையும், வரைகதை என்று மாற்றி அமைப்பதும் சற்று புதியதாகவே உள்ளது. எனினும் புழக்கம் அதிகமாகும் போது இந்த உணர்வு மறைந்துவிடும் என்று எண்ணுகிறேன். சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:05, 28 செப்டெம்பர் 2012 (UTC)
கூகிளின் படி நீங்கள் படக்கதை கூடுதலாகப் பயன்படுவது போன்றே தெரிகிறது. --Natkeeran (பேச்சு) 16:28, 28 செப்டெம்பர் 2012 (UTC)
முன்பு ராணி காமிக்சில் 'முழு நீள படக்கதை என்று கூறப்பட்டிருக்கும்', அது நன்கு அறியப்பட்ட சொல்--சங்கீர்த்தன் (பேச்சு) 16:52, 28 செப்டெம்பர் 2012 (UTC)
சித்திரத்தில் வடமொழிக் கலப்பு உள்ளதாகத் தெரிகிறது. படக்கதை என்பதும் வரைகதை என்பதும் வெவ்வேறு அர்த்தமுள்ளவை. படக்கதை என்பது பொதுவாக ஒரு படத்தைப் பற்றிய கதையாகவும் எடுத்துக் கொள்ளலாம். காமிக்சுகள் என்பது வரைந்த படங்களே. வரைகதையே சிறந்ததாகக் கருதுகிறேன். --Kanags \உரையாடுக 22:43, 28 செப்டெம்பர் 2012 (UTC)

வார்ப்புரு:Superherobox உருவாக்கம்[தொகு]

ஆங்கிலத்தில் இருக்கும் இந்த வார்ப்புருவினை தமிழ்விக்கியில் பயன்படுத்த இயலவில்லை. வரைகதை குறித்தான தமிழ் வார்ப்புருக்களை உருவாக்கி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். பேட்வுமன், ஸ்பைடர்மேன், வொன்டர் வுமன், எக்ஸ் மேன் போன்ற கட்டுரைகளை உருவாக்கவும் எண்ணியுள்ளேன். அலோசனைகளையும் வழிகாட்டல்களையும் தரவேண்டுகிறேன். நன்றி. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:25, 28 செப்டெம்பர் 2012 (UTC)

இவ்வாறான தேவைகளுக்கு ஒத்தாசைப் பக்கத்தை நாடவும். நன்றி! --Anton (பேச்சு) 15:27, 28 செப்டெம்பர் 2012 (UTC)

மேற்கோளா? சான்றா?[தொகு]

கட்டுரையில் கூறப்படும் செய்தியை உறுதிப்படுத்துவதற்காகக் சுட்டப்படும் சான்றை மேற்கோள் என குறிக்கப்படுகிறது. மேற்கோள் என்னும் தமிழ்ச் சொல் Quotation என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையானது. அதாவது ஒரு கூற்றை எவ்வித மாற்றமும் இன்றி கட்டுரைக்குள் கையாள்வதே மேற்கோள் ஆகும். மாறாக, கட்டுரையில் கூறப்படும் கருத்தானது கற்பனையாகக் கூறப்படவில்லை; சான்றோடுதான் கூறப்படுகிறது என்பதனை சுட்டும் குறிப்பே சான்றாகும். எடுத்துக்காட்டாக, 'பரலி சு. நெல்லையப்பர் 1889ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 18ஆம் நாள் பிறந்தார்' என்கிறார் வெ. சாமிநாத சர்மா என கட்டுரையில் எழுதினால் அது மேற்கோள். மாறாக 'பரலி சு. நெல்லையப்பர் 1889ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 18ஆம் நாள் பிறந்தார்' எனக் கட்டுரையாளர் தன்கூற்றாக எழுதிவிட்டு அச்செய்தியை உறுதிப்படுத்த வெ. சாமிநாத சர்மா தன்னுடைய நான் நால்வர் நூலில் 84ஆம் பக்கத்தில் கூறியிருக்கிறார் என அடிக்குறிப்பில் தகவல் கொடுத்தால், அது சான்று. எனவே, தற்பொழுது தமிழ்விக்கிப்பீடியா கட்டுரைகளில் சான்றை மேற்கோள் எனத் தவறாகக் குறித்துக்கொண்டிருக்கிறோம். இதனைத் திருத்த வேண்டும் என நான் நினைக்கிறேன். மற்றவர்களின் கருத்து என்ன?--அரிஅரவேலன் (பேச்சு) 15:44, 28 செப்டெம்பர் 2012 (UTC)

உங்களது மேற்படி கூற்றுச் சரியானதே. நன்றி, அரிஅரவேலன்.--பாஹிம் (பேச்சு) 16:48, 28 செப்டெம்பர் 2012 (UTC)
சரியான வரையறை என்னவென்று தெரியவில்லை, மேற்கோள் என்பது இரு பொருள்களில் வழங்கும் என நினைக்கின்றேன்.மேலே குறிபிட்ட Quotation என்பதாக மற்றொருவர் கூற்றை இடுவது ஒன்று, மற்றொரு பொருள் சான்றாக மற்றொரு இடத்தில் குறிப்பிட்டிருப்பதைக் குறித்தல். அதற்கான தொடுப்புகள் தருதல். இதனைச் சான்றுகோள் என்று குறிப்பிடுகின்றோம். அடிக்குறிப்புகள், உசாத்துணை, மேற்கோள்நூல்கள் (ஒரு கருத்தைக் குறிப்பிடும் இடம், அதனை மேற்கொண்டு பார்க்கத்தக்க நூல்/ஆவணம்), துணைநூல்கள், சான்றுகோள், ஆதாரம், நூலோதி (இச்சொல்லைத் தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் கலைக்களஞ்சியம் பயன்படுத்துகின்றது), போன்று பற்பல சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒரு சீரான வரையறை செய்து இங்கு ஆள்வது நல்லது. அரிஅரவேலன் சொல்வது போல சான்றுகோள் என்பதைப் பயன்படுத்தலாம். மேற்கோள் என்பதை ஒரு கூற்றின் மாற்றமில்லாத, நேரடியான, எடுத்துக்கூறலாகக் கொள்ளலாம். --செல்வா (பேச்சு) 20:52, 30 செப்டெம்பர் 2012 (UTC)

பிழை வருகிறது வழுவாக இருக்கலாம்[தொகு]

நகர்த்தப்பட்டுள்ளது: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(தொழினுட்பம்)

இளந்தமிழர் இலக்கியப் பட்டறை[தொகு]

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 22-09-2012 முதல் 28-09-2012 வரை தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் தேர்வு செய்யப் பெற்ற 106 மாணவர்/மாணவியர்களுக்கு இளந்தமிழர் இலக்கியப் பட்டறை எனும் தலைப்பில் எழுத்து, பேச்சுப் பயிற்சிகள் அளிக்கப் பெற்றன. ஏழு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் 42 வகையான தலைப்புகளில் அத்துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் 28-09-2012 அன்று நடைபெற்ற நிகழ்வுகளில் எனக்கு “இணையத் தமிழ் படைப்பாக்கம்” எனும் தலைப்பில் பயிற்சியளிக்கும் வாய்ப்பு அளிக்கப் பெற்றது. இந்நிகழ்வில் இணையத்தில் தமிழ் மடலாடற் குழுக்கள், தமிழ் வலைப்பூக்கள், தமிழ் இணைய இதழ்கள், தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ் விக்சனரி போன்றவற்றில் பங்களிப்பு செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன. தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்து ஆர்வத்துடன் மாணவ/மாணவியர்கள் கேட்டறிந்தனர். இப்பயிற்சியில் திருச்சி, கல்லூரிப் பேராசிரியர் முனைவர் துரை. மணிகண்டன் வழியாக இளந்தமிழர் இலக்கியப் பட்டறை கட்டுரை உருவாக்கப்பட்டு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:10, 29 செப்டெம்பர் 2012 (UTC)

உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள், 👍 விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:18, 29 செப்டெம்பர் 2012 (UTC)
வாழ்த்துகள் தேனியார்.--Kanags \உரையாடுக 22:12, 29 செப்டெம்பர் 2012 (UTC)
சிறப்பாக நடந்ததாக, அங்கு உரையாற்றிய நாக இளங்கோவன் என்பவர் கூற அறிந்தேன். மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி! வாழ்த்துகள்!--செல்வா (பேச்சு) 20:57, 30 செப்டெம்பர் 2012 (UTC)

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான தனி அரட்டை அரங்கு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான தனி அரட்டை அரங்குக்கு, வாருங்கள் ! #wikipedia-taconnect மிக குறைந்த வேக இணையத்திலும் செயற்படும். இந்த அரட்டை அரங்கில் இன்று முதல் காத்திருப்போம். புதுபயனர்களுக்கு உதவும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று. விக்கியில் தொகுக்கத் துவங்கும் நம் ஒவ்வொருவரும் இதில் உரையாடிக்கொண்டே செயல்பட இது ஒரு எளியவழிமுறை ஆகும்.-- உழவன் +உரை.. 04:18, 30 செப்டெம்பர் 2012 (UTC)

என்னால் இப்பகுதியில் #wikipedia-taconnectதட்டச்சிட இயலவில்லை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:33, 30 செப்டெம்பர் 2012 (UTC)

connect என்பதனூடாகவா முயன்றீர்கள்?--Anton (பேச்சு) 05:50, 30 செப்டெம்பர் 2012 (UTC)

த. உழவன் கொடுத்த connect என்ற பச்சை இணைப்பை அழுத்தி பெயரையும், captchaவையும் அளியுங்கள். அடுத்து வரும் அரட்டையில் Firefox https://addons.mozilla.org/en-US/firefox/addon/tamilvisai-tamilkey/ நீட்சி மூலம் தமிழில் எழுத முடிகிறது--இரவி (பேச்சு) 08:18, 30 செப்டெம்பர் 2012 (UTC)

த. உழவன், தக்க நேரத்தில் இந்த ஓடை குறித்து நினைவூட்டினீர்கள். இன்று முழுவதும் இதில் கலந்துரையாடிப் பயன் பெற முடிந்தது. சில நிமிடங்கள் முன்பு தொடங்கவிருந்த கூகுள் கூடல் போதிய பயனர்கள் இல்லாததால் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மீண்டும் உலக நேரம் 15:30க்குப் பயனர்கள் யாரும் வருகிறார்களா என்று பார்த்துத் தொடங்கலாம். ஆர்வமுடைய பயனர்கள் மேலுள்ள ஐ. ஆர். சி. ஓடையிலோ ravidreams at gmail.com என்ற முகவரிக்கோ தெரிவிக்கலாம். நன்றி--இரவி (பேச்சு) 14:50, 30 செப்டெம்பர் 2012 (UTC)
இதனுடைய தேவை என்னவென்று புரியவில்லையே?--செல்வா (பேச்சு) 20:40, 30 செப்டெம்பர் 2012 (UTC)
செல்வா, எதனுடைய பயனைக் கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு நாளை வெறுமனே கடந்து செல்லாமல் இது போன்ற ஒரு மாரத்தான் நிகழ்வைச் செய்வது பரப்புரைக்கு உதவும். ஒவ்வொரு மாதமும் கூகுள் கூடல்கள் செய்வது தமிழ் விக்கிப்பீடியா பயனர்களிடையே கூடுதல் பிணைப்பை ஏற்படுத்த உதவும். மாரத்தான் அன்று நிகழ்ந்த IRC உரையாடல் அதனை ஒட்டிய அரட்டைக்கும் ஒத்தாசைக்கும் உதவியது.--இரவி (பேச்சு) 08:49, 4 அக்டோபர் 2012 (UTC)
ஆம் இரவி சொல்வது சரியனது. IRC உரையாடல் மூலம் விக்கியர்கள் தம் தனிப்பட்ட அறிமுகத்தையும் கூட தங்களுக்கிடையில் சிறப்பாக ஏற்படுத்தமுடிந்ததை அவதானிக்க முடிந்தது. பயனர்களிடையில் கூடுதல் பிணைப்பு ஏற்படுவது விக்கியை வளப்படுத்தும் என கருதுகின்றேன். பலருக்கு IRC தொடுப்பு புதிதாய் இருந்ததால் ஆரம்பத்தில் சிறு சிக்கல் இருந்தது பின் சுமுகமான உரையாடல் நிகழ்ந்தது. ஒருசிலர் மட்டுமே இணைந்தார்கள் என்பது குறைபாடே.மாதத்தில் ஒரு நாள் இத்தகைய சந்திப்புகள் பயனளிக்கும். மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையாகக் கூட இதை வசதிப்படுத்தலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:30, 4 அக்டோபர் 2012 (UTC)

பரப்புரை[தொகு]

ஃபேஸ்புக்கில் முடிந்த அளவு பகிரல்களை (shares)மேற்கொள்ளவும். நான் தமிழ் விக்கிப்பீடியாவின் பக்கத்திலும் எனது பக்கத்திலும் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான குழுவிலும் செய்தியைப் பகிர்ந்துள்ளேன். நீங்கள் ஏதேனும் ஒன்றை உங்கள் பக்கத்திலும் உங்கள் குழுவிலு பகிர்ந்து இந்த நாளில் பல பயனர்களை ஈர்க்க உதவுங்கள்..

 1. TamilWikipedia
 2. suryaceg
 3. tamilwiki

நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 06:47, 30 செப்டெம்பர் 2012 (UTC)

👍 விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:11, 30 செப்டெம்பர் 2012 (UTC)

விக்கிநூல் எழுத விருப்பம்[தொகு]

நகர்த்தப்பட்டுள்ளது: விக்கிப்பீடியா:ஒத்தாசை--Anton (பேச்சு) 16:29, 30 செப்டெம்பர் 2012 (UTC)

பொன்னியின் செல்வன் கதைமாந்தர்கள் குறித்து[தொகு]

நகர்த்தப்பட்டுள்ளது: விக்கிப்பீடியா:ஒத்தாசை --Anton (பேச்சு) 16:31, 30 செப்டெம்பர் 2012 (UTC)

பயனர் ஈழநாதன் மறைவு[தொகு]

சிறிது காலம் தமிழ் விக்கியில் பங்களிப்புச் செய்த ஈழநாதன் நேற்று சிங்கப்பூரில் அகால மரணமானார் என்ற செய்தி இணையம் வழியே கிடைக்கப்பெற்று மிக்க அதிர்ச்சியடைந்தேன். எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.--Kanags \உரையாடுக 13:07, 1 அக்டோபர் 2012 (UTC)

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..--சிவம் 13:58, 1 அக்டோபர் 2012 (UTC)
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்/நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:24, 1 அக்டோபர் 2012 (UTC)
இத்தனை இளமையில் இறப்பு என்பது மிகவும் வருத்தமான செய்தி. :( -- சுந்தர் \பேச்சு 16:33, 1 அக்டோபர் 2012 (UTC)
மரணச் சேதிகேட்டு வருத்தமடைகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:43, 1 அக்டோபர் 2012 (UTC)
எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நூலகத் திட்டத்தின் எண்ணக் கரு அவரிடம் இருந்தே உதித்தது, அது தொடங்கி செயற்படுவதற்கும் தனது உழைப்பை வழங்கினார். தமிழ் வலைப்பதிவின் தொடக்க காலத்தில் ஈழத்து நூல்களை பற்றிய வலைப்பதிவில் பகிர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கல்கள். --Natkeeran (பேச்சு) 17:14, 1 அக்டோபர் 2012 (UTC)
மிகவும் வருத்தம் தரும் இழப்பு. அவர்தம் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! தமிழ் விக்கிப்பீடியாவில் 2006 பங்களித்து இருந்தார்.--செல்வா (பேச்சு) 19:04, 1 அக்டோபர் 2012 (UTC)

மிகவும் வருத்தம் தரும் செய்தி. அவரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். --- மயூரநாதன் (பேச்சு) 19:12, 1 அக்டோபர் 2012 (UTC)

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 22:10, 1 அக்டோபர் 2012 (UTC)
மிகவும் வருத்தமான செய்தி. பதிவுலகில் அறிமுகமானவர். அவரது அகால மரணம் இணையத்தமிழ் உலகிற்கு பெரும் இழப்பு. அவரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.--மணியன் (பேச்சு) 02:56, 2 அக்டோபர் 2012 (UTC)
 • நூலகம் என்னும் பயன்மிகு திட்டம் உருவெடுக்க ஈழநாதன் பங்களித்தார் என இப்போதுதான் அறிந்தேன். அன்னாரின் மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.--பவுல்-Paul (பேச்சு) 03:30, 2 அக்டோபர் 2012 (UTC)

+1 நூலகம் திட்டத்திலுள்ள நூல்கள் நான் வரலாறறிய மிகவும் உதவியாய் இருந்தவை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:18, 2 அக்டோபர் 2012 (UTC)

 • அவரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:37, 2 அக்டோபர் 2012 (UTC)

அவர் இல்லாதது தமிழுலகுக்கு பேரிழப்பு. :( அன்னாரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:02, 2 அக்டோபர் 2012 (UTC)

எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 12:28, 2 அக்டோபர் 2012 (UTC)
வருத்தம் தரும் செய்தி. அவரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.--கலை (பேச்சு) 12:58, 2 அக்டோபர் 2012 (UTC)
 • இணைய எண்ணிம நூலக வரலாற்றில், அவரது பெயர் என்றும் நிலைக்கும்.இவரைப் பற்றிய ஒரு ஆவணத்தை நாம் உருவாக்குதல் வேண்டும்.நூலகத்தளத்தில் பங்களிப்பு செய்தும், இதுவரை இவரைப்பற்றி அறியாது இருந்தேன். ஆழ்ந்தவருத்தம். எனது இரங்கலை, இங்குத்தெரிவித்துக் கொள்கிறேன்.நற்கீரன்!ஆவணமாக்கலை உங்களால் தான் சிறப்பாக செய்ய இயலும்.வணக்கம்.-- உழவன் +உரை.. 07:14, 4 அக்டோபர் 2012 (UTC)

நூலகம் திட்டத்தில் இவரது பங்கு குறித்து இப்போது தான் அறிகிறேன். இவரின் சமூகப் பங்களிப்புகளைச் சரியாக ஆவணப்படுத்தி அவரது குடும்பத்தாருக்குத் தெரிவிப்பதே நம்மால் செய்யக்கூடிய மரியாதை. ஆழ்ந்த இரங்கல்கள்--இரவி (பேச்சு) 08:46, 4 அக்டோபர் 2012 (UTC)+1-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:52, 9 அக்டோபர் 2012 (UTC)

இணையத்தில் பெரும் பங்களிப்பை ஈந்து மறைந்திருக்கும் அன்னாரின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்--அரவிந்த் (பேச்சு) 05:17, 29 அக்டோபர் 2012 (UTC)

ஆங்கில எழுத்துக் கலப்பு[தொகு]

ஏற்கனவே [[1]] முறையிட்டிருந்தேன். படிக்காதவர்கள் படிக்கவும்.

தற்போது தமிழ் விக்கி மிகவும் பிரபலமாகி வருவதால், பல விசமிகள் வேண்டுமென்றே தமிழ்ப் பெயர்களுடன் ஆங்கில எழுத்துகளை தலைப்பிட்டு எழுதி தமிழை சிதைக்கின்றனர். இது வன்மையாக கண்டித்தக்கது. நிர்வாகிகள் கூடுதல் கவனம் எடுத்து, ஐபி முகவரிகளால் தொகுக்கப்படும் தொகுப்புகளை கவனத்திற்கொள்ளுமாறு வேண்டுகிறேன். தமிழ் விக்கியில் எழுதுவது சரியாக இருக்குமென்ற எண்ணத்தில் பொதுமக்களும் ஆங்கிலத் தலைப்பிட்டு வழக்கமாகக் கொள்ளும் அபாயம் உண்டு. மேலும், தமிழ்த் தட்டச்சு தெரியாத ஒருவர், s எனத் தேடல் பெட்டியில் தட்டச்சிட்டால், s. புத்தூர் என வருகிறது. பார்ப்பவர்கள் தமிழில் ஆங்கிலங்கலந்து எழுதலாம் தவறில்லை, விக்கியிலே அப்படித்தானுள்ளது என்று எண்ணவும் வாய்ப்புள்ளது. கூடிய விரைவில் முடிவெடுக்கவும். நற்றமிழை வளர்ப்போம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:15, 2 அக்டோபர் 2012 (UTC)

தமிழ்க்குரிசில், நீங்கள் குறிப்பிடும் பிரச்சினைக்குச் சில எடுத்துக்காட்டுத் தொகுப்புகள் தர இயலுமா? இவர்கள் விசமிகள் என்றோ வேண்டுமென்றே செய்கிறார்கள் என்றோ கருத இயலாது என நினைக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியா / தமிழ் முறைமை அறியாமையினால் பொது வழக்கில் உள்ளது போலவே எழுத முனைந்திருக்கலாம். குறிப்பிட்ட பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் பெயரிடல் மரபைச் சுட்டிக்காட்டி அறிவுறுத்தினால் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். தேவைப்படும் மாற்றங்களை அனைத்துப் பயனர்களும் மேற்கொள்ளலாம். --இரவி (பேச்சு) 06:52, 4 அக்டோபர் 2012 (UTC)

விசமத் தொகுப்புகள்: (ஆங்கிலக் கலப்பு):

 1. அகமுடையார் (ஐபி முகவரி),
 2. சிவத்தையாபுரம் (ஐபி முகவரி),
 3. நாயக்கர் (Premloganathan)

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:59, 6 அக்டோபர் 2012 (UTC)

நீங்கள் கூறுவது போல் இவர்கள் தமிழ் விதிகளை அறியாமல், தவறான பொது வழக்கைப் பயன்படுத்துகிறவர்களே! நாம் கூறும் பெயரிடல் மரபை கேட்காவிடில் என்ன செய்வது? ஆயினும் ஐபி பேச்சுப் பக்கத்தில் தெரிவித்தாலும் அவர்களுக்கு போய்ச் சேராதே! :( மேலும், நான் என் வீட்டருகேயுள்ள பலருக்கு எடுத்துக் கூறியும் அவர்கள் மாறவேயில்லை. நாள்தோறும் நான் சென்னையில் பயணிக்கும்போது நிகழும் தமிழ்ச் சிதைவை எண்ணி வருந்தியே ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். எங்கே பொதுவழக்கு என்ற பெயரில் அம்முறை விக்கியில் நுழைந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன். இனி பெயரிடல் மரபை எடுத்துக் கூறி விளக்குகிறேன். அச்சத்தைப் போக்கியமைக்கு நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:48, 4 அக்டோபர் 2012 (UTC)

ஒரு பயனருக்கு ஒரு முறை சுட்டிக் காட்டலாம். நமது நினைவூட்டல்களுக்குப் பதிலே இல்லாவிட்டால், நாமே தகுந்த மாற்றத்தைச் செய்யத் தயங்க வேண்டாம். அவர்களுக்குப் பெயரிடல் மரபு குறித்து மாற்றுக் கருத்து இருந்தால் அக்கொள்கையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். உங்கள் ஆதங்கம் புரிகிறது. தமிழ் நோக்கில் மட்டும் இதனைப் பாராமல் உலக அளவில் மொழிகளுக்கு ஏற்பட்டு வரும் நிலை, அவற்றை மீட்பதற்குச் செய்யப்படும் வழிவகைகளை அறிந்து கொள்வதன் மூலம் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த இயலும். --இரவி (பேச்சு) 12:27, 6 அக்டோபர் 2012 (UTC)

நீங்கள் கூறியபடியே சுட்டிக் காட்டுகிறேன். பதிலில்லையெனில் நானே மாற்றுகிறேன். better என்பதை beter என்றோ bater என்றோ எழுதினால் எழுத்துப் பிழை, தவறெனலாம். சம்பந்தமே இல்லாமல் cater என்று எழுதுவதை என்னவென்று சொல்வது?? அதுபோலுள்ளது இது! மக்கள் தமிழில் ஆங்கில எழுத்து வராது என்பதை அறியும் அறிவுகூட இல்லாமல் உள்ளனரா? இந்நிலை தமிழுக்கு வந்தது வருந்தத்தக்கது. விக்கி பொதுக் களஞ்சியம் என்பதால் அதிகப் பயனர்கள் சேர்ந்தால் இவ்வழக்கு இங்கே நுழையக் கூடும். மேற்கூறியவாறு நிர்வாகிகள் சிறப்புக் கவனம் செலுத்துமாறு வேண்டுகிறேன். மொழிகளின் வீழ்ச்சி, இறப்பு குறித்து சிறிதே படித்துள்ளேன். இதில் சிறப்புக் கவனம் செலுத்துகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:59, 6 அக்டோபர் 2012 (UTC).

எரித தானியங்கி[தொகு]

நான் தமிழ் விக்கியில் பங்களிக்கத் தொடங்கியதிலிருந்து இன்றுதான் எரியத் தானியங்கி எனப்படும் (Spambot) கணக்கை (User:Jamaica2020) தமிழ் விக்கியில் இன்றுதான் முதலில் பார்த்தேன் :). இது மேல் விக்கியில் மேலாளர்களினால் சரிபார்க்கப்பட்டு உலகளவில் கணக்கு மூடப்பட்டுள்ளது. இங்கேயும் தடை செய்துள்ளேன். ஆனால் இது போன்ற கணக்குகள் தொடர்ந்து உருவானால் நமக்கு பெரும் தலைவலியாக முடியும் :)--சண்முகம்ப7 (பேச்சு) 02:21, 3 அக்டோபர் 2012 (UTC)

சண்முகம், இது என்ன வகை தானியங்கி. ஈமெயில் முகவரிகளை திருடும் வகையா?. --எஸ்ஸார் (பேச்சு) 13:33, 3 அக்டோபர் 2012 (UTC)
இல்லை, சில மென்பொருட்கள் துணை கொண்டு விளம்பரத்திற்காக எரித இணைப்புகளை/ கட்டுரைகளை சேர்ப்பவை . மேலும் இந்த நபர்கள் ஒரே நேரத்தில் பல கணக்குகளை உருவாக்கி விடுவர், பல கட்டுரைகளையும் உருவாக்கி விடுவர். பெரும்பாலும் ஆங்கில மொழியை உள்ளடக்க மொழியாக கொண்ட விக்கி தளங்களில் தான் இது போன்ற தானியங்கிகள்/ பயனர் கணக்குகள் உருவாக்கப்படும். இன்று தமிழ் விக்கியில் முதன் முதலாக பார்த்தேன், அதனாலேயே இங்கு தெரிவித்தேன் :). --சண்முகம்ப7 (பேச்சு) 17:44, 3 அக்டோபர் 2012 (UTC)

பொதுவன் வேண்டுகோள்[தொகு]

தமழ்விக்கி மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களையும், பங்கேற்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்களையும் அகவையில் மூத்தவன் என்ற முறையில் வாழ்த்துகிறேன்.

அறிவுத் தொண்டு புரிவது விக்கிப்பீடியா. அறிவியல், வாழ்வியல் சார்ந்த பல்வேறு துறைகள் பற்றிய கட்டுரைகளும் படங்களும் இதில் உள்ளன. தமிழில் இவை வளரவேண்டும் என்னும் நாட்டம் கொண்ட நல்லவர்களும் வல்லவர்களும் இணைந்து செயல்படுகிறோம்.

பலர் அவரவர் கண்ணோட்டத்தில் இணைக்கப்படவேண்டிய கட்டுரைகள் என்று 5000-க்கு மேல் தந்துள்ளனர். இவற்றின் இணைப்பால் தமிழ் வளம்பெறும். தமிழர் மாண்புறுவர். முனைவோருக்குப் பாராட்டுகள்.

எளியேனின் நோக்கம் தமிழின் இருப்புகளைப் பதிவு செய்வது.

 • தமிழிலுள்ள இலக்கியம், இலக்கணம்
 • தமிழரின் வரலாறு, வாழ்வியல் (கலை, பண்பாடு, நாகரிகம் முதலானவை)

இந்தக் கோணத்தில் பல நல்ல கட்டுரைகளை எனக்கு முன்பே பலர் உருவாக்கியுள்ளனர். என் கட்டுரைகள் அவர்களைப் பின்பற்றுகின்றன.

எளியேனுக்கு அவ்வப்போது பலர் உதவுகின்றனர். உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் என் வணக்கம்.

அறிவியலில் வளரும் கட்டுரைகள் ஆங்கிலத்தின் மொழிபெயர்ப்பாக அமைவதைத் தவிர்க்க இயலாது. தமிழ், தமிழர் பற்றிய கட்டுரைகளில் இதனைத் தவிர்க்கவேண்டும்.

முனைவோம். தெரிந்ததைச் சான்றுகளுடன் எழுதுவோம். தெளிந்தவர்கள் செப்பம் செய்வார்கள்.

அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 23:08, 29 செப்டெம்பர் 2012 (UTC) 👍 விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:10, 30 செப்டெம்பர் 2012 (UTC) 👍 விருப்பம் -- சுந்தர் \பேச்சு 03:37, 8 அக்டோபர் 2012 (UTC) நான் அறிவியலில் ஆர்வம் கொண்டவன் எனினும், பகுப்பு:தேவநேயப் பாவாணர் படைப்புகள் என்ற பகுப்பை தங்களின் உந்துதலால் வளர்த்தெடுக்கிறேன்.வணக்கம்.-- உழவன் +உரை.. 16:18, 7 அக்டோபர் 2012 (UTC)

சோழ அரசர்கள் வார்ப்பு அமைக்க யோசனை[தொகு]

வார்ப்புரு பேச்சு:சோழர் இற்கு இடமாற்றப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 20:20, 6 அக்டோபர் 2012 (UTC)

பயனருக்கான செய்தியில் பிழை[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் பயனருக்கான உரையாடல் பகுதியில் பிற பயனர்கள் கருத்து தெரிவிக்கும் போது, அந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் பார்வையிடும் பக்கங்களில் அது குறித்த தகவல் இடம் பெற்று வருகிறது. இந்தத் தகவலில் “உங்களுக்குப் ஒரு புதிய செய்தி உள்ளன (கடைசி மாற்றம்)” என்று உள்ளது. இந்தத் தகவலில் “உங்களுக்கு” என்பதுடன் சேர்ந்துள்ள “ப்” நீக்கப்பட வேண்டும். மேலும் இத்தகவலில் “ஒரு புதிய செய்தி” என்றிருப்பதால் “உள்ளன” என்பதை மாற்றி உள்ளது என்று இருக்க வேண்டும். இந்தத் தகவலை “உங்களுக்கு ஒரு புதிய செய்தி உள்ளது (கடைசி மாற்றம்)” என்று பிழைகள் இல்லாமல் மாற்றம் செய்ய வேண்டும்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:54, 8 அக்டோபர் 2012 (UTC)

நானும் இதை ஏற்கனவே தெரிவித்திருந்தேன். மொழிபெயர்ப்பு வேண்டுகோளில் சேர்க்க சொன்னார் ஒருவர். இன்னொருவர், மீடியாவிக்கியில் மாற்றம் செய்து இரண்டு வாரங்களாகியும் மாற்றம் தெரியவில்லை என்று கூறியதாக நினைவு. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:35, 8 அக்டோபர் 2012 (UTC)

பயனருக்கான உரையாடல் பகுதியின் தலைப்பில் உள்ள வரிகளிலும் ஒற்றெழுத்துகள் தேவையற்ற இடங்களில் சேர்க்கப்பட்டும் ( உ-ம் : நிரலற்றக் கவனிப்பு ) சில இடங்களில் விடுபட்டும் ( உ-ம் பட்டியலை பார்த்து ) காணப்படுகின்றன. இவையும் விரைவில் மாற்றம் செய்யப்பட வேண்டும் --அரவிந்த் (பேச்சு) 05:15, 29 அக்டோபர் 2012 (UTC)

பயனர் பெயர் தடை குறித்து[தொகு]

ஒருவருடைய பெயரில் வேறொருவர் கணக்குத்தொடங்குவது தவறே, ஆயினும், இது பயனரின் பெயராக இருந்தால் அதை மாற்றம் செய்யத்தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. பிற பயனர்களின் கருத்தினையும் அறிய ஆவல் பதியவும். பார்க்க பயனர் பேச்சு:வைகோ.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:49, 9 அக்டோபர் 2012 (UTC)

பொதுவான பெயர் என்றால் தடை செய்ய வேண்டியதில்லை தினேஷ், ஆனால் வைகோ என்பது அவருடைய புனை பெயர் போன்றது (பெரும்பாலும் அவர் மட்டுமே பயன்படுத்துகிறார் அல்லது அவரை மட்டுமே குறிக்கும்), ஆனால் கருணாநிதி, வை. கோபால்சாமி என்பது போன்ற பெயர்கள் பொதுவானவை, அவற்றை பயனரின் பெயராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தடை செய்ய இயலாது--சண்முகம்ப7 (பேச்சு) 15:53, 9 அக்டோபர் 2012 (UTC)

எங்கள் ஊரில் வைகோவின் தொண்டர் ஒருவர் தன் மகனுக்கு வைகோ சண்முகம் என்று பெயர் வைத்துள்ளாரே! அப்படியானால் சண்முகத்தை தடை செய்ய இயலுமா? :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:15, 9 அக்டோபர் 2012 (UTC)

அப்பவும் வைகோவின் தொண்டர் தானே அவ்வாறு பெயர் வைத்துள்ளார், பொதுவாக யாரும் அப்பெயர் வைப்பதில்லையே. சண்முகத்தை எப்போது வேண்டுமானாலும் தடை செய்யலாம், நான் ரெடி :D--சண்முகம்ப7 (பேச்சு) 03:15, 10 அக்டோபர் 2012 (UTC)
இதைப்பற்றி எனக்கும் தெளிவில்லை. வேண்டுமென்றே அவதூறாகப் பொதுவாழ்வு நபரொருவரின் பெயரை மாற்றி வைத்துக் கொண்டால் தடுக்கலாம். மற்றபடி பெயரை வைப்பதால் மட்டுமே தடுக்க வேண்டாமென நினைக்கிறேன். அதிலும் வைகோ போலன்றி மற்ற பெயர்கள் பொதுவில் பலரால் வைக்கப்படுபவைதாம். -- சுந்தர் \பேச்சு 13:06, 16 அக்டோபர் 2012 (UTC)

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையமாநாடு, 2012, திசம்பர் 28,29,30[தொகு]

 • பதினொன்றாவது தமிழ் இணைய மாநாடு என்ற பக்கம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற நிகழ இருக்கும் தகவற்பக்கத்தினை, அந்நிகழ்வு முடியும் வரை ஆலமரத்தடியில் இடுதலே சிறப்பு. இனி அங்ஙனம் கடைபிடிக்கக் கோருகிறேன். இதனால் ஒரே நோக்கத்தினை, பலர் செய்வதைத் தடுக்கலாம்.-- உழவன் +உரை.. 16:23, 24 அக்டோபர் 2012 (UTC)
உழவன் ஆலமரத்தடியில் இடுவது விக்கியில் பங்களிப்பவர்களை ஈர்ப்பதற்காகவும் கட்டுரைப் பக்கம் நிகழ்ச்சி குறித்த பொதுத்தகவலை விக்கியில் உலாவல்/தேடுதல் நிகழ்த்துவோருக்கும் ஆகும். இவை தனித்தனிப் பயன்பாடுகள். கூகுள் தேடுதல்களில் ஆலமரத்தடி உரையாடல்கள் வராது என எண்ணுகிறேன்.--மணியன் (பேச்சு) 03:52, 25 அக்டோபர் 2012 (UTC)
அந்நிகழ்வு அரங்கில், தமிழ் விக்கித் திட்டங்களைப் பற்றிய அறிமுகத்திற்கு, இடம் தருவரென்று எண்ணுகிறேன். அப்படி தரும் போது, இங்குள்ள தமிழ் விக்கியருக்கு அறிவிக்க இந்த ஆலமரத்தடி உகந்த இடம் என்றே நான் கருதுகிறேன்.வணக்கம்.-- உழவன் +உரை.. 06:20, 25 அக்டோபர் 2012 (UTC)

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும்(உத்தமம்), அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கினை அண்ணாமலை நகரில்(சிதம்பரம்,தமிழ்நாடு)நடத்துகின்றன(2012,திசம்பர் 28-30). இதில் ஆய்வரங்கம், கண்காட்சி, மக்கள் அரங்கம் என்ற மூன்று பிரிவு உண்டு. மக்கள் அரங்கில் தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல் அனுப்புவது, தமிழ் இணையதளங்கள், வலைப்பூ உருவாக்கம், விக்கிப்பீடியா அறிமுகம், விக்கியில் கட்டுரை வரைவது, சமூக வலைத்தளங்கள் குறித்து இணைய ஆர்வலர்களுக்குப் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விக்கி ஆர்வலர்கள் இதில் கலந்துகொண்டு தமிழ் விக்கிப்பீடியா குறித்து அறிமுகம் செய்யலாம். விக்கியில் கட்டுரை வரைவது பற்றியும் செயல் விளக்கம் அளிக்கலாம். இணைய ஆர்வலர்கள் இணைந்து தமிழ் இணையத்தை மக்களிடமும் மாணவர்களிடமும் கொண்டு சேர்ப்போம்.

மேற்கண்ட இணைய மாநாட்டுத் தகவல்கள், என்னால் தரப் பட்டதே.முன்பு கையொப்பமிட மறந்துவிட்டேன்.மீண்டும் சந்திப்போம். --முனைவர் மு.இளங்கோவன் (பேச்சு) 16:41, 12 அக்டோபர் 2012 (UTC)

உத்தமத்தின் இணைப்புப் பக்கத்தில் மேலும் விரிவான செய்திகள் உள்ளன. --செல்வா (பேச்சு) 04:01, 12 அக்டோபர் 2012 (UTC)
 1. அழைப்புக்கு நன்றி.முனைவர்.மு.இளங்கோவன் அவர்களே! பெரும்பாலும் நான் கலந்து கொள்வேன்; வணக்கம்.-- உழவன் +உரை.. 03:08, 12 அக்டோபர் 2012 (UTC)

அய்யய்யோ ஒரு பிரச்சனை[தொகு]

 • தமிழ் விக்கியில் ஒருசில கட்டுரைகளில் நீலமாக இருக்கும் இடங்களில் அழுத்தும் போது அது பிழையான கட்டுறையை இணைக்கின்றன.
 • அது போன்று தமிழ் விக்கியில் இருக்கும் மாற்று மொழி இணைப்பை அழுத்தும் போது வேறு சில மொழிகளின் பிழையான கட்டுரையை காட்டுகின்றன.
 • அது போன்று தமிழ் கட்டுரைகள் ஒரு சில ஒரே அர்த்தம் கொண்ட பலவேறு கட்டுரைகள் உள்ளன. அதாவது மாறு பட்ட தலைப்பைக் கொண்டு.
உதாரணம்: மீன் பெயர் சீலா , (Ω) ஓம், அருகம் புல், அறுகு . இது போன்று பல உள்ளன ஆனால் இப்போது மீதி நினைவில் இல்லை.--சிவம் 11:01, 13 அக்டோபர் 2012 (UTC)

அப்படி என்றால் அய்யய்யோ பல பிரச்சினை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:42, 13 அக்டோபர் 2012 (UTC)

முதல் பிரச்சினைக்கு தீர்வு: நாம் சில வேளைகளில் உள்ளிணைப்புகளை இணைக்கும் போது இரு வேறு கட்டுரைகள் இருந்தால், சரி பார்க்காமல் இணைத்தால் இவ்வாறு நிகழும், பார்க்கும் இடங்களில் மாற்றி விடுங்கள். எகாவாக மின்னியல் தொடர்பான ஓம் கட்டுரைக்கு ஓம் கட்டுரை இணைப்பு இருந்தால் ஓம் (மின்னியல்) கட்டுரைக்கான இணைப்பை மாற்றி விடுங்கள்.
இரண்டாவது: பொதுவாக தானியங்கிகள் சரி செய்து விடும். ஆனால் வேறு மொழியிலோ அல்லது இங்கேயோ கட்டுரைகளில் தவறான இணைப்புகள் இருக்கும் போது, தானியங்கி அப்படியே சேர்த்துவிடுகிறது, நாம்தான் பார்க்கும் இடங்களில் சரி செய்ய வேண்டும்.
மூன்றாவது: இவாறான கட்டுரைகளில் {{merge to}} மற்றும் {{merge from}} வார்ப்புருக்களை சேர்த்து விடுங்கள்--சண்முகம்ப7 (பேச்சு) 13:03, 13 அக்டோபர் 2012 (UTC)

காப்புரிமை மீறப்பட்ட பகுதிகளை நீக்கும்போது[தொகு]

காப்புரிமை மீறப்பட்ட பகுதிகளை நீக்கும்போது வரலாற்றை நீக்க வேண்டுமா? அவ்வாறாயின் எவ்வாறு நீக்குவது? --Natkeeran (பேச்சு) 21:14, 13 அக்டோபர் 2012 (UTC)

வரலாறு நீக்கத் தேவையில்லை என நினைக்கிறேன். வரலாறு கட்டாயம் இருக்க வேண்டும். இவ்வாறு பலர் பங்குபற்றிய பகுதியை அவ்வாறு நீக்குவது சுலபமுமல்ல.--Kanags \உரையாடுக 21:44, 13 அக்டோபர் 2012 (UTC)
பக்க வரலாற்றை மிக அரிதாக, உறுதியாகத் தேவைப்படும் இடங்களில் மட்டுமே செய்ய வேண்டும். காப்புரிமை மீறலைப் பொருத்தவரை நீக்க வேண்டாம். சொல்லப்போனால் அங்கே பக்க வரலாறு தேவையும் கூட. -- சுந்தர் \பேச்சு 06:49, 15 அக்டோபர் 2012 (UTC)

ஆம் கண்டிப்பாக தேவை. அவை இருந்தால் தான் காப்புரிமை மீறி எழுதியவரை அப்படி எழுதக்கூடாது என வழியுறுத்தலாம். ஆனால் வரலாற்றை ஒப்பீட்டு பார்க்க முடியாமல் செய்யலாம். பேச்சு:போதி தருமன் வரலாற்றைப் பார்க்கவும். சோடாபாட்டில் இதை செய்திருக்கார். நீங்கள் எதற்கு கேட்கிறீர்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:42, 16 அக்டோபர் 2012 (UTC)

Upcoming software changes - please report any problems[தொகு]

Wikimedia Foundation RGB logo with text.svg

(Apologies if this message isn't in your language. Please consider translating it)

All Wikimedia wikis - including this one - will soon be upgraded with new and possibly disruptive code. This process starts today and finishes on October 24 (see the upgrade schedule & code details).

Please watch for problems with:

 • revision diffs
 • templates
 • CSS and JavaScript pages (like user scripts)
 • bots
 • PDF export
 • images, video, and sound, especially scaling sizes
 • the CologneBlue skin

If you notice any problems, please report problems at our defect tracker site. You can test for possible problems at test2.wikipedia.org and mediawiki.org, which have already been updated.

Thanks! With your help we can find problems fast and get them fixed faster.

Sumana Harihareswara, Wikimedia Foundation Engineering Community Manager (talk) 03:14, 16 அக்டோபர் 2012 (UTC)

P.S.: For the regular, smaller MediaWiki updates every two weeks, please watch this schedule.

Distributed via Global message delivery. (Wrong page? Fix here.)

Fundraising localization: volunteers from outside the USA needed[தொகு]

Please translate for your local community

Hello All,

The Wikimedia Foundation's Fundraising team have begun our 'User Experience' project, with the goal of understanding the donation experience in different countries outside the USA and enhancing the localization of our donation pages. I am searching for volunteers to spend 30 minutes on a Skype chat with me, reviewing their own country's donation pages. It will be done on a 'usability' format (I will ask you to read the text and go through the donation flow) and will be asking your feedback in the meanwhile.

The only pre-requisite is for the volunteer to actually live in the country and to have access to at least one donation method that we offer for that country (mainly credit/debit card, but also real-time banking like IDEAL, E-wallets, etc...) so we can do a live test and see if the donation goes through. All volunteers will be reimbursed of the donations that eventually succeed (and they will be low amounts, like 1-2 dollars)

By helping us you are actually helping thousands of people to support our mission of free knowledge across the world. Please sing up and help us with our 'User Experience' project! :) If you are interested (or know of anyone who could be) please email ppena@wikimedia.org. All countries needed (excepting USA)!

Thanks!
Pats Pena
Global Fundraising Operations Manager, Wikimedia Foundation

Sent using Global message delivery, 17:20, 17 அக்டோபர் 2012 (UTC)

Thank you[தொகு]

Please excuse my posting in English, and please feel free to translate my text if others may be interested.

This morning I received a letter from a happy reader - a college student from Sri Lanka - who wanted us to know that he and his family really benefit from Wikipedia, in English and Tamil. He says, "We really benefit from you guys" and wants us to know that he will support Wikipedia until the very end.

I wanted to say thank you for making a difference in his life and in so many other lives. I hope you feel good about what you do. You rock. :) --Mdennis (WMF) (பேச்சு) 12:35, 19 அக்டோபர் 2012 (UTC)

I am happy to say that i learnt many things about computers, languages, technology in both tamil and english wikipedia. Thaks for making a difference in my life!

I hope and wish that tamil wikipedia will reach great hieghts. Thank you Users and WMF! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:17, 19 அக்டோபர் 2012 (UTC)

Wonderful to know! All of us who edit here feel very happy to hear from someone who likes Tamil Wikipedia so much to write a letter to the foundation. Thanks for letting us know, Maggie! -- சுந்தர் \பேச்சு 15:50, 19 அக்டோபர் 2012 (UTC)

வாசகர் கருத்துகள்[தொகு]

இன்று காலையில் எனக்கு ஒர் சிந்தனை தோன்றியது. மேற்குறிய தலைப்பிற்கு தொடர்புடையதே!! வாசகர்கள் பலர் தமிழ் விக்கிப்பீடியாவை விரும்பி படிப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பலருக்கு (முன்பு எனக்கும்) விக்கிப்பீடியாவில் தொகுப்பது குறித்த அறிவு இல்லை. Front end(readers) மற்றும் Back end(COntributors) க்கான இடைவெளி அதிகமிருப்பதாய் தோன்றுகிறது. பலருக்கு தாங்களும் தொகுக்க முடியும் என்று தெரிந்திருக்கவில்லை. பின்னர் நீங்களும் கட்டுரை எழுதலாம் என்று கூறி எழுத வைத்தீர்கள். அதே போன்று என்ன தான் சொல்லிப் புரிய வைத்தாலும் புரிந்து கொள்ளும் திறன் அவர்களுக்கு இருக்குமா எனத் தெரியவில்லை. இன்னும் பலர் விக்கிஅ=யை படித்தாலும் கட்டுரை தொகுப்பது சரியாகத் தெரியாது என ஒதுங்குகிறனர். எனவே, விக்கிப்பீடியா:பயனர் கருத்துகள் என்றோ விக்கிப்பீடியா:வாசகர் கருத்துகள் என்றோ ஒரு பக்கத்தைத் தொடங்கி, அனைத்துப் பக்கங்களின் மேலும் வைக்கப்படும் பதாகைகளுக்கு பதிலாக, விக்கிப்பீடியா குறித்த உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள் என்று வைத்தால் பலர் முன்வந்து தங்களுக்கு உண்டான பிரச்சனைகளை கூறுவார்கள். இந்த இணைப்பு மேற்கூறிய பக்கத்திற்கு இட்டுச் செல்லும். கருத்துகளை தெரிவிப்பார்கள் இதற்கு ஆலமரத்தடி பொருத்தமான இடமாக இருக்காது. அடிக்கடி தொகுப்புகள் நிரம்பி வழிகின்றன . என்ன சொல்லவருகிறேன் என யாருக்காவது புரிகிறதா? குழப்புகிறேனா?? மறுமொழியிட்டு உதவுங்கள்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:17, 19 அக்டோபர் 2012 (UTC)

நீங்கள் கூறுவதற்கு இக்கருவி விக்கிப்பீடியா:நுட்ப மாற்ற வாக்கெடுப்பு/கட்டுரைப் பின்னூட்டக் கருவி நிறுவுதல் மிகவும் பொருந்தும், ஆனால் இது இன்னும் ஆங்கில விக்கியிலேயே முழுமையாக செயல்படுத்தப்படாமையாலும், சோதனை நிலையில் உள்ளமையாலும், மற்ற மொழி விக்கிகளில் இக்கருவியை நிறுவ ஆரம்பித்த பிறகு மீண்டும் வழுவை திறக்குமாறு கூறியுள்ளார்கள்--சண்முகம்ப7 (பேச்சு) 13:25, 19 அக்டோபர் 2012 (UTC)
தற்போதைக்கு கருவி இல்லையென்றாலும், நாமே இப்படி ஓர் பக்கத்தை உருவாக்கி, கருத்திடுமாறு பதாகைகள் வைத்து கேட்கலாம் அல்லவா? தொழில்நுட்பம் தொடர்பாக அல்ல. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:49, 19 அக்டோபர் 2012 (UTC)

நானும் ஏற்கனவே இது போன்று கருத்தளித்துள்ளேன். சில வாரங்களாக நீங்கள் (சண்முகம்) பகுப்பு:aftv5test என்ற பகுப்பைச் சேர்த்ததைக் கண்டேன். அது இதுதான் என்று இப்போது புரிகிறது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:23, 19 அக்டோபர் 2012 (UTC)

தமிழ்க்குரிசில், தமிழ் விக்கிப்பீடியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சி குறித்த உங்கள் ஆர்வம் கண்டு மகிழ்கிறேன். உங்கள் எண்ணத்தை மீடியாவிக்கி:Sitenotice பக்கத்தில் செயற்படுத்தியுள்ளேன். வாசகர்கள் என்ன தான் சொல்கிறார்கள் என்று பார்ப்போமே :)--இரவி (பேச்சு) 20:03, 19 அக்டோபர் 2012 (UTC)

புற சான்றுகள் தேவைப்படும் கட்டுரைகள்[தொகு]

புற சான்றுகள் தேவைப்படும் கட்டுரைகள் பகுப்பில் 590+ கட்டுரைகள் இருக்கும் நிலையில் மேலும் மேலும் வார்ப்புரு மட்டும் இணைப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு சான்று சேர்க்கும் பணியில் கவனம் செலுத்தலாம். --இரவி (பேச்சு) 13:15, 20 அக்டோபர் 2012 (UTC) (தொடர்புடைய உரையாடல்: பயனர் பேச்சு:மதனாஹரன்/தொகுப்பு ௪#சான்று சேர்க்கும் திட்டம்.)

பயனர் இரவியின் கருத்தை வழிமொழிகின்றேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 13:43, 20 அக்டோபர் 2012 (UTC)
இரவி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என்றென்னுகிறேன். இருப்பினும் நினைவூட்டுவதை என் கடமையாகக் கருதுகிறேன். நீங்கள் கூறியுள்ள பகுப்பில் பல கட்டுரைகளுக்கு அதனுடைய ஆசிரியர்களால் கூட சரியான ஆதாரங்களை திரட்ட முடியவில்லை. அப்படியிருக்க அவ்வாறான கருத்துகளை எதற்காக கட்டுரையில் இணைக்கப்படுகிறது. அது மட்டுமின்றி கூகிள் மொழிபெயர்ப்பு திட்டத்தில் உருவாக்கப்பட்ட பல கட்டுரைகளிலும் இவ்வார்ப்புரு சேர்க்கப்படுள்ளது. சான்று சேர்க்கும் பணி என்பது கட்டுரையை எழுதியவரல்லாத மற்றவருக்கு காலம் அதிகம் பிடிக்கும். ஒரு வேளை நான் பத்து மணி நேரம் அக்கருத்தினை உண்மை என நிரூபணம் செய்ய செலவிடுகிறேன்; என்னால் கண்டு பிடிக்க இயலவில்லை, உடனே அக்கருத்து விக்கிப்பீடியாவில் இருந்து அழிக்கப்படுமா? ஒரு வேளை அவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் அவற்றை 0 கட்டுரையாக்க முயற்சி செய்கிறேன். பிற பயனர்களின் கருத்து தேவை. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:38, 20 அக்டோபர் 2012 (UTC)
அது சான்று தேவைப்படும் கருத்தை பொறுத்து மாறும் என நினைக்கிறேன், அது சுந்தர் கூறியது போல பொது கருத்தாயின் நீக்க தேவையில்லை, ஆனால் கண்டிப்பாக சான்று தேவைப்படும் கருத்துகள் எனில் சான்றில்லையெனில் உடனே நீக்கலாம், எகாவாக இந்த மருந்தை சாப்பிட்டால் இந்த நோய் குணமாகும் எனக் கூறுவதற்கு சான்றில்லை எனில் உடனே நீக்கலாம், அதே நேரம் இந்த ஊர், இந்த மாவட்டத்தில்/மாநிலத்தில் உள்ளது என்று மட்டுமே உள்ள கட்டுரைக்கு (இது ஒரு உதாரணம் மட்டுமே) சான்று தேவை எனக் கேட்பதும், சான்று சேர்ப்பதும் சரியாகப் பொருந்தாது என நினைக்கிறேன். --சண்முகம்ப7 (பேச்சு) 15:37, 20 அக்டோபர் 2012 (UTC)
எல்லாக் கட்டுரைகளுக்கும் சான்றுகள் வலுவேற்றும் என்றாலும் இப்போது வெகுசில சான்றுகளே உள்ள நிலையில் சிறிது முன்னுரிமை தேவை:
 1. நம்பகத்தன்மை கேள்விக்குறியதாக உள்ள செய்திகளுக்கு முன்னுரிமை தந்து சான்று தேவை வார்ப்புரு இடலாம். அதைக் காட்டிலும் இயன்றால் நாமே இணைக்கலாம்.
 2. பழைய கட்டுரைகளில் நம்பகத்தன்மை சிக்கல் இல்லாமல், மேல்விளக்கத்துக்காகத் தேவைப்படும் இடங்களை இரண்டாம் கட்டமாகப் பின்னர் எடுத்துக் கொள்ளலாம்.
 3. புதிய கட்டுரைகளை எழுதும்போது இயன்றவரை போதிய அளவு சான்றுகளை இணைத்து எழுதுமாறு அனைத்து பங்களிப்பாளர்களையும் கேட்டுக் கொள்ளலாம்.

-- சுந்தர் \பேச்சு 15:45, 20 அக்டோபர் 2012 (UTC)

தமிழ் கட்டுரைகளில் வேற்று மொழி விக்கி இணைப்புகளை இணைக்கும் போது சற்று கவனமாக இருக்கவும்.[தொகு]

சோடியம் என்ற கட்டுரை போல பல கட்டுரைகளை யேர்மனிய கட்டுரையுடன் இணைக்கும் போது வேறு படுகின்றன Natrium என்று காட்டுகின்றன --சிவம் 13:40, 22 அக்டோபர் 2012 (UTC)

என்ன தவறு சிவம், ஜெர்மன் மொழியில் de:Natrium என்பது சோடியம் (Na) என்றே உள்ளது, மேலும் நாம் ஆங்கில விக்கி கட்டுரையை சேர்த்தால் தானியங்கிகள் தானாக மற்ற மொழிப் பெயர்களை சேர்த்து விடும், தவறுகள் இருந்தாலும் மாற்றிவிடும், எனினும் பிழைகள் நேர்வது சகஜமே, ஏதும் பிழைகள் தென்பட்டால் தயவுசெய்து திருத்திவிடுங்கள், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 14:00, 22 அக்டோபர் 2012 (UTC)

நட்ரியம் என்பது சோடியத்தின் ஜெர்மானிய பெயரென நினைக்கிறேன். சரியாகத்தான் காட்டுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:04, 22 அக்டோபர் 2012 (UTC)

இப்போது சரியாக காட்டுகிறது. முன்பு நீரில் உள்ள Natrium காட்டியது.--சிவம் 14:13, 22 அக்டோபர் 2012 (UTC)

கோரப்படும் படங்கள்[தொகு]

விக்கியில் கோரப்படும் கட்டுரைகள் போல் கோரப்படும் படங்கள் என்பதற்கு பக்கமுருவாக்கினாலென்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:36, 23 அக்டோபர் 2012 (UTC)

நல்ல சிந்தனை.--சிவம் 18:45, 23 அக்டோபர் 2012 (UTC)
உருவாக்குங்கள் தென்காசி.--Kanags \உரையாடுக 20:59, 23 அக்டோபர் 2012 (UTC)+1-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:01, 24 அக்டோபர் 2012 (UTC)
👍 விருப்பம் சிறந்த யோசனை தென்காசியாரே! பிறரும் எங்காவது இப்படங்கள் கிடைத்தால் பதிவேற்றுவர். படங்கள் கருத்தை சிறப்பாக சொல்ல உதவுவன! எனவே விரைந்து உருவாக்குங்கள். இப்பக்கத்தை கோரப்படும் கட்டுரைகள் பக்கத்திற்கு இணைத்துவிடுங்கள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:34, 24 அக்டோபர் 2012 (UTC)

பக்கம் ஆக்கப்பட்டது. இருந்தாலும் மேலும் பக்க உள்ளடக்கங்களை மெருகேற்றலாம். விக்கிப்பீடியா:கோரப்படும் படங்கள்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:18, 25 அக்டோபர் 2012 (UTC)

OPAC[தொகு]

தமிழக அரசின் OPAC தளம் உள்ளது. ஆசிரியர்கள், நூல்கள் குறித்த சில தகவல்களை இத்தளத்தில் பெறலாம். இதன் மூலம், நன்கு அறியப்படாத, ஆனால் பல நூல்களை எழுதியவர்கள் பற்றிய தகவல் இதில் கிடைக்கும். ஆனால், நூலும், ஆசிரியரும் பெயர் மட்டுமே கிடைக்கும். எழுத்தாளர்கள், கவிஞர் போன்றோருக்கு இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:25, 24 அக்டோபர் 2012 (UTC)

சாதி பற்றிய கட்டுரைகளும் தற்போதைய நிலைமைகளும்[தொகு]

பல சாதி பற்றிய கட்டுரைகள் சாதி x இச் சமயம், சாதி x இத் தொழில் என்று எழுதப்படுகின்றன. இன்றைய நிலையில் கணிசமானவர்கள் சாதி x தொழில்களில் ஈடுபடுவதில்லை. பலர் சமயம் கிறித்தவத்துக்கோ, பெளத்தத்துக்கோ, இசுலாக்கோ சமயம் மாறி இருப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. எனவே எழுதும் போது "மரபுவழியாக இத் தொழில்களில் மட்டும் ஈடுபடுமாறு சாதியக் கட்டமைப்பால் கட்டுப்படுத்தப்பட்டார்கள்" போன்று தெளிவுபடுத்தப்பட வேண்டும். --Natkeeran (பேச்சு) 16:08, 24 அக்டோபர் 2012 (UTC) 👍 விருப்பம் -- Dineshkumar Ponnusamy

பயனர் NSS IITM tamil குறித்து[தொகு]

அண்மையில் பயனர்:NSS-IITM-tamil கணக்கிலிருந்து Bulk translations அளிக்கப்படுகின்றன. இது கருவி வழியானதா எனத் தெரியவில்லை. மேலும் இது ஒரு கல்லூரியின் தேசிய சேவைக் குழு உறுப்பினர்கள் பலர் இணைந்து பங்களிக்கிறார்களா எனத் தெரியவில்லை. பிற நிர்வாகிகள் இந்தப் பங்களிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.--மணியன் (பேச்சு) 09:01, 26 அக்டோபர் 2012 (UTC)

ஒரு கல்லூரியின் மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் முறையாகப் பங்களிக்கிறார்கள் என்பது நல்ல விசயம். இந்தக் கணக்கின் பங்களிப்புகளைப் பொறுத்திருந்து பார்த்து நேரடியாக பேசிப் புரிய வைத்த பிறகு தேவைப்படும் நடவடிக்கையை எடுக்கலாம்--இரவி (பேச்சு) 12:21, 26 அக்டோபர் 2012 (UTC)

ஆயிரத்தில் ஒருவர்[தொகு]

49000 கட்டுரைகளை எட்டியுள்ளோம். 50000 கட்டுரைகளுக்கு இன்னும் 1000 கட்டுரைகளே உள்ளன. இந்த 1000 கட்டுரைளை எழுத வருமாறு "ஆயிரத்தில் ஒருவர்" என்பது போல் விக்கிப்பீடியா பரப்புரைகளை மேற்கொண்டால் பயனளிக்கும் என நினைக்கிறேன். விளையாட்டுக்கு இரு ஊகப் போட்டிகளை வைக்கலாம் என்று இருக்கிறேன் :) போட்டி போட்டு குதூகலத்துடன் பங்களிக்க உதவுமே...

 • 50 ஆயிரமாவது கட்டுரையை எழுதப் போவது யார்?
 • எந்த நாளில் இந்த மைல்கல்லை அடைவோம்?

 • என்னுடைய கணிப்பு: 1) நான் தான் :) 2) திசம்பர் 2, 2012.--இரவி (பேச்சு) 12:26, 26 அக்டோபர் 2012 (UTC)
குறி தப்பிடுச்சே.. தீயா வேலை பார்க்கணும் குமாரு :)--இரவி (பேச்சு) 13:36, 2 திசம்பர் 2012 (UTC)

 • 👍 விருப்பம் மகிழ்ச்சியளிக்கும் செய்தி இரவி ! இன்னும் ஊக்கமுடன் செயல்படுவோம். :) விரைந்து பரப்புரை செய்வோம்.
 • 50,000 மாவது கட்டுரையை எழுதப் போவது நான் தான்! ;) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:43, 26 அக்டோபர் 2012 (UTC)\\பார்த்துக்கொண்டே இருங்கள் அது நான்தான்.\\

 • நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தால் நீங்கள் தான் 50,000 மாவது எழுதுவீர்கள். வேண்டுமானால் நீங்கல்லாம் பாத்துக்கொண்டே இருங்கள். நான் 50,000 மாது எழுதுகிறேன். :)---தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:57, 26 அக்டோபர் 2012 (UTC)

 • 50000ஆவது கட்டுரையுடன் விக்கிக் கொள்கைகள் (வடிவமைப்பு, பிறமொழிச் சொற்கள், கிரந்த எழுத்துக்கள்) தொடர்பிலுங் கவனஞ் செலுத்த வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 03:27, 27 அக்டோபர் 2012 (UTC)

எந்த நாளில் இந்த மைல்கல்லை அடைவோம்?: திசம்பர் 20


 • 50 ஆயிரமாவது கட்டுரையை எழுதப் போவது யார்?: ********* (குறியாக்கம் 50,000வது கட்டுரையுடன் குறிவிலக்குக்குக்கு (decode) உள்ளாகிவிடும்) :)--Anton (பேச்சு) 03:38, 27 அக்டோபர் 2012 (UTC)

 • ஐம்பதாயிரமாவது கட்டுரையை எழுத இவ்வளவு போட்டியா? எனக்கு அந்த வாய்ப்பு கிடைப்பது போல் தெரியவில்லை... எனவே, நான் ஒரு இலட்சமாவது கட்டுரைக்கு இப்போதே முன்பதிவு செய்து கொள்கிறேன்... எப்படி என் ... முன் யோசனை?--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 04:57, 27 அக்டோபர் 2012 (UTC)

 • விட்டுக் கொடுத்ததற்கு நன்றி, சுப்பிரமணி. ஒரு இலட்சமாவது கட்டுரையை நீங்களே எழுதுங்கள். இப்ப ஒரு 900 கட்டுரைகள் எழுதிக் கொடுத்தீர்கள் என்றால் உதவியாக இருக்கும் :)--இரவி (பேச்சு) 15:25, 27 அக்டோபர் 2012 (UTC)

 • கட்டுரைகள் எண்ணிக்கை: 50,016 ஐம்பதாயிரமாவது கட்டுரையை எழுதியது யார்?
(:http://en.wikipedia.org/wiki/Main_Page:) ஆங்கில விக்கிபீடியாவின் முதல் பக்கத்தில் மொழிவாரி பட்டியலில்
More than 50,000 articles: български · eesti · Ελληνικά · English (simple) · euskara · galego · עברית · hrvatski · norsk (nynorsk)‎ · slovenščina · srpskohrvatski / српскохрватски · ไทย
தமிழ் இடம்பெறுவது எப்போது?--ஸ்ரீதர் (பேச்சு) 05:16, 18 திசம்பர் 2012 (UTC)

போட்டிகள் மூலம் பரப்புரை[தொகு]

இணையப் பயனாளர்களுக்கு விக்கிப்பீடியாவினை அறிமுகம் செய்துவைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பலரும் வாசிப்பதோடு நிறுத்திக் கொள்கின்றார்கள். அவர்களை விக்கிப்பீடியாவில் பங்கேற்க வைக்க வேண்டும். முகநூல் போன்ற சமூக தளங்களில் இதற்கான முயற்சிகள் பெரிதும் நடைபெற்றால் புதிய பங்களிப்பார்கள் கிடைப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. தமிழ் மீது பற்றுள்ள வலைப்பூ எழுத்தாளர்களையும், சமூக சிந்தனையாளர்களையும் விக்கியின் பக்கம் திருப்ப சிறு போட்டியொன்றினை வைத்து புத்தக பரிசுகளை அறிவிக்கலாம். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:13, 27 அக்டோபர் 2012 (UTC)

இத்தகைய போட்டிகள் நிச்சயம் புதிய பயனர்களைக் கவர்ந்திழுக்கும். தமிழ் விக்கி ஊடகப் போட்டியால் பல ஊடகங்களும் தொடர்பங்களிப்பாளர்களும் கிடைத்துள்ளது மகிழ்ச்சியான ஒன்றே.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:25, 27 அக்டோபர் 2012 (UTC)
இதைப்பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் பரப்பினால் என்ன? ஒவ்வொரு துறையிலும் தமிழ் கட்டுரைகளை எழுதச்சொல்லி ஒவ்வொரு பிரிவுக்கும் பரிசு வழங்கலாமே? அப்படியே அனைத்து ரகக்கல்விப்பரிவுக்கும் செய்து பார்க்கலாமே? மேலும் அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங்கில் வந்த் மாணவர்களுக்கு இலவச கணினி வழங்குவதாக ஒரு திட்டம் வந்ததே அது என்னாயிற்று--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:06, 27 அக்டோபர் 2012 (UTC)
நல்ல பரிந்துரை, செகதீசுவரன். செம்மொழி மாநாட்டை ஒட்டிய கட்டுரைப் போட்டி அனுபவத்தை வைத்துப் பார்க்கையில் மாணவர்களை மட்டும் முன்வைக்கும் போட்டியில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, பொதுவாகவே ஒரு கட்டுரைப் போட்டி வைக்கலாம். கடந்த இரு போட்டிகளின் வேலைப்பளுவைக் கருத்தில் கொண்டு இதனை மிகச் சிறிய, எளிய போட்டியாக வைக்கலாம். 50,000 கட்டுரைகளை எட்டுவதனை முன்னிட்ட பரப்புரை முயற்சியாகவும் இதனைக் கொள்ளலாம். எனது முன்வரைவு:
 • நவம்பர், திசம்பரில் புதிதாக பங்களிக்கத் தொடங்குவோரை மட்டும் கணக்கில் கொள்ளலாம்.
 • கட்டுரைகள் குறைந்தது 15 வரிகளும் தகுந்த ஆதாரமும் உடையனவாக இருக்க வேண்டும்.
 • மிகச் சிறந்த கட்டுரை எழுதுவோர் மூவருக்குப் பரிசு.(எண்ணிக்கை மாறலாம்)
 • அதிக எண்ணிக்கையில் தரமான கட்டுரைகள் எழுதும் இருவருக்குப் பரிசு. (எண்ணிக்கை மாறலாம்)
இதற்கு என்று தனியே ஏதும் போட்டியில் பெயர் பதிவு செய்ய வேண்டாம். புதிதாக எழுதத் தொடங்குவோரை நாமே கண்காணித்து போட்டிப் பட்டியலில் சேர்க்கலாம். பரிசுகளைப் புத்தகங்களாக வழங்கலாம். இந்த முன்வரைவில் உடன்பாடு என்றால், தமிழ் பதிப்புலக / தமிழ் இணைய நண்பர்கள் எவரேனும் இதற்குப் புரவலர்களாக இருப்பார்களா என்று அணுகிப் பார்க்கலாம். ஒரு குறிப்பிட்ட தொகை அளவுக்கான பரிசுச் சீட்டு பெற்று வெற்றி பெற்றோருக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கலாம். இல்லாவிட்டால், விக்கிமீடியாவிடம் இருந்து நல்கை பெற முடியுமா என்று பார்க்கலாம். இதற்கு ஏகப்பட்ட ஆவணப்படுத்தல் தேவைப்படும் என்பதால் முந்தைய வழியே இலகுவாக இருக்கும்--இரவி (பேச்சு) 22:52, 27 அக்டோபர் 2012 (UTC)

சான்றுகோள் வழங்குவதன் முக்கியத்துவம்[தொகு]

எழுதப்படும் கட்டுரைகளில் சான்றுகோள்கள் மேற்கோள்கள் வழங்குவதனை ஒரு முக்கியப் பண்பாக கொள்வது நன்று. தமிழ் விக்கியில் 90% கட்டுரைகள் சான்றுகோள்கள் அற்ற நிலையில் இருப்பதையே காணக்கூடியதாக உள்ளது. (என்னால் ஏற்கெனவே எழுதப்பட்ட ஆக்கங்கள் கூட எனக்கே உவப்பாக இல்லை.) சான்றுகோள்கள் வழங்கப்படாத கட்டுரைகள் கேள்விக்குறியாவதுடன், அதனை ஆய்வு நோக்கில் அணுகுவோருக்கு நம்பகத் தன்மையானதாக ஏற்றுக்கொள்ள முடியாமலும் போகும். முடிந்தவரை இதன்பிறகு எழுதும் கட்டுரைகளையாவது சான்றுகளுடனே எழுத முனைவது விக்கிக்கு சிறப்பைத் தரும்.--HK Arun (பேச்சு) 19:46, 27 அக்டோபர் 2012 (UTC)

அருண், முன்பு நாம் வளரும் விக்கியாக இருந்ததால் உள்ளடக்க அளவைப் பெருக்குவதில் (அகல உழுதல்) கவனமாய் இருந்தோம். தற்போது ஐம்பதாயிரத்தை எட்டும் நிலையில் இருப்பதால் தரத்தில் அதிக கவனஞ் செலுத்த வேண்டியோராய் (ஆழ உழுதல்) இருக்கிறோம். நான் அவ்வப்போது மற்ற சில இந்திய மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளுக்குச் சென்று பார்ப்பதுண்டு. இந்தி விக்கிப்பீடியாவில் ஒரு வரிக்கட்டுரைகள் அதிகம். முழுமையடையாத கட்டுரைகள் அதை விட அதிகம். உதாரணம் - [[hi:पागकटारा, कोश्याँकुटोली तहसील]], [[hi:बार्तिन]] [[hi:हाजीपुर_गाँव,_खैर_(अलीगढ़)]] தெலுங்கு விக்கிப்பீடியாவிலோ பல ஆங்கில விக்கிக் கட்டுரைகள் மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே இடப்பட்டுள்ளன. உதாரணம் - [[te:టెనొఫవిర్]]. மலையாள விக்கியில் குறைந்த அளவே கட்டுரைகள் இருந்தாலும் அவை நல்ல கருத்தாழம் மிக்கவையாய் உள்ளன. நம் தமிழ் விக்கிப்பீடியாவில் அதிக கட்டுரைகள் உள்ளதோடு நல்ல தரக்கண்காணிப்பும் உள்ளது. வரிக்கு வரி சான்றளிக்க வேண்டும் என்றில்லாமல் தேவையான இடங்களில் சான்று, வெளியிணைப்பு, உசாத்துணை ஆகியவற்றை அவசியம் அளிப்போம். சான்றில்லாத் தகவல்களை நீக்கும் முன் அவற்றுக்கு சான்று சேர்க்க முடியுமா என்றும் முயல்வோம். ஐம்பதாயிரம் கட்டுரைகளை எட்டிய பின் கிரந்த எழுத்து குறித்த கொள்கை முடிவை எடுக்க வேண்டிய மிகப்பெரிய சவாலும் நமக்கு உள்ளது. இவை குறித்து இனி நடக்க இருக்கும் அனைத்து உரையாடல்களிலும் மற்ற பயனர்களுக்கு உரிய மதிப்பளித்து அவர் தம் கருத்துகளுக்கும் மதிப்பளித்து பண்புநயத்தோடு உரையாடுவோமாக! நன்றி !--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 20:17, 27 அக்டோபர் 2012 (UTC)

சான்றில்லா தகவல்களை நீக்கும் போது அதை பிரதி பண்ணி கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் சான்று இல்லா தகவல்கள் எனும் தலைப்பின் கீழ் இடலாம் எப்போதாவது நல்ல சான்று கிடைத்தால் மீண்டும் கட்டுரையில் சேர்க்கலாம், வெறுமனே பேச்சுப்பக்கத்தில் இடாமல் சான்றில்லா தகவல்களை நீக்குதல் பல நல்ல தகவல்கள் இழக்கப்படக்கூடிய அபாயத்தை உண்டு பண்ணும்--சங்கீர்த்தன் (பேச்சு) 07:22, 29 அக்டோபர் 2012 (UTC)

சங்கீர்த்தன், நீக்கப்பட்ட தகவல்களை அதனுடைய வரலாற்றுப்பக்கத்தில் பார்க்கலாம். தேவையற்ற தகவலை பேச்சுப் பக்கத்தில் இணைக்கத்தேவையில்லை.-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:39, 29 அக்டோபர் 2012 (UTC)
தினேஷ், நீக்கப்பட்ட தகவல்களை வரலாற்றுப்பக்கத்தில் பார்க்கலாம் என்பதை நான் அறிவேன். எனினும் எத்தனை பேர் இவ்வாறு வரலாற்றை ஒப்பிட்டு கட்டுரைகளை பார்த்துக்கொண்டிருக்க போகிறார்கள்? ஆனால் அதே நீக்கப்பட்ட தகவலை பேச்சுப்பக்கத்தில் இட்டால் அனைவரும் இலகுவாக பார்க்கமுடியும், அப்படிப்பார்ப்பவர்களில் யாரேனும் ஆதாரம் சேர்க்கக் கூடும்.--சங்கீர்த்தன் (பேச்சு) 12:46, 29 அக்டோபர் 2012 (UTC)
விக்கிப்பீடியா என்பது ஒரு மூன்றாவது தரவுத் தளம். நூல்கள், ஆவணங்கள், இணையத்தளங்கள் போன்றவற்றில் இருந்து ஏற்கத்தக்க சான்றுகோள்களும் மேற்கோள்களும் வழங்கி தொகுக்கப்பட்டு வைக்கும் ஒரு இடம். இதில் எத்தகைய நல்ல தகவல்கள் இருந்தாலும் அவை சான்றுகளற்ற நிலையில் (இன்றில்லாவிடினும் நாளை) கேள்விக்குற்படுவதுடன் அழிக்கப்படுவதை தடுக்க முடியாது. //எப்போதாவது நல்ல சான்று கிடைத்தால் மீண்டும் கட்டுரையில் சேர்க்கலாம்// என சான்றுகள் வழங்காமல் கட்டுரைகளை தொகுத்து வைப்பதும் சரியானதாக படவில்லை. இன்று எமது தமிழ் விக்கிப்பீடியர் வட்டம் நாளை மாறும். அல்லது அடுத்த தலைமுறையினரின் கைகளுக்கு செல்லும். அப்போது அவர்களுக்கு இன்றைய பயனர்களின் பங்களிப்புகள் வழிகாட்டியாக இருக்க வேண்டும். இல்லையெனில் நாளை சான்றுகளற்ற நிலையில், உள்ளடக்கங்களின் தகவல்களை ஏற்கமுடியாத நிலையில் வெறும் இணையக் குப்பைகளாக அகற்றும் நிலை ஏற்படலாம். அதனை இன்றே உணர்ந்து செயல்படுவது தொலைநோக்குப் பார்வையில் சிறந்தது. --HK Arun (பேச்சு) 12:37, 29 அக்டோபர் 2012 (UTC)

அவசியமான இடங்களில் சான்றுகள் வழங்குவது முக்கியம்தான். அதே நேரம் சான்றில்லாத் தகவல்களை நீக்கும்போது, முக்கியமான சில தகவல்களும் நீக்கப்பட்டு விடுகின்றன. அவற்றை நீக்குவதற்குப் பதிலாக சான்று தேவை என்ற வார்ப்புருவுடன் கட்டுரையிலேயே இருக்க விடலாம் என்பது எனது கருத்து. சான்றில்லா விட்டாலும், அவற்றை எழுதுவதற்கு ஒருவர் எடுத்த முயற்சி, நேரத்தையும் கருத்தில் கொள்ளல் நல்லதென நினைக்கின்றேன். சங்கீர்த்தன் கூறியிருப்பதுபோல் கட்டுரையை பார்க்கும் அனைவரும் வரலாற்றில் என்ன நடந்தது என்றோ, என்ன நீக்கப்பட்டுள்ளது என்றோ பார்ப்பதில்லை. எனவே சான்று தேவை என்ற வார்ப்புருவுடன், தகவல் அங்கேயே இருந்தால், அதனைப் பார்ப்பவருக்கு அந்தத் தகவல் நம்பத் தகுந்ததா என்பதை ஆராய முடியும். அவ்வாறில்லையெனில், அந்தத் தகவல் பற்றி வேறொருவர் சான்றுடன் எழுதும்வரை (எவரும் அதனை நினைக்காமலும் போகலாம்), குறிப்பிட்ட தகவல் அங்கே இடம் பெற வாய்ப்பில்லை. நான் சில சமயங்களில் சான்றில்லாமல் இருந்த சில தகவல்களுக்கு சான்று தேடி இணைத்திருக்கின்றேன். அந்தத் தகவல் அங்கே இல்லாதிருந்தால், அதனைப் பற்றி சிந்தித்திருக்கவும் மாட்டேன். எடுத்துக்காட்டுக்கு இன்று ஒரு கட்டுரையில், இன்று உலகில் இருக்கும் 6000 வரையான மொழிகளில் 5400 வரையான மொழிகள் 2100 ஆண்டளவில் அழிந்து போய்விடும் என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது[ஆதாரம் தேவை]. என்ற வரிகள் நீக்கப்பட்டிருந்தன. அந்த வரிகள் அங்கேயே இருந்தால், அதனை வாசிக்கும் ஒருவர், அது உண்மைதானா என்று மேலும் ஆராயக் கூடும். சான்றுகள் கிடைக்கும்போது அதனை இணைக்கவோ, அல்லது அந்தத் தகவல் திருத்தப்படக் கூடியதெனின் திருத்தவோ கூடும். எனவே தயவு செய்து சான்றற்ற தகவல்களை நீக்கும்போது, தகவலின் முக்கியத்துவம், அதனை எழுத ஒருவர் எடுத்த நேரம், உழைப்பையும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 16:16, 29 அக்டோபர் 2012 (UTC) +1--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:28, 29 அக்டோபர் 2012 (UTC) +1-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:02, 29 அக்டோபர் 2012 (UTC)

நானும் கலையின் கருத்தை வழிமொழிகிறேன். தமிழ் கட்டுரைக்கே சான்று தேவை என்று கேட்கபட்டதை பார்த்துதான் நான் சான்றிணைத்தேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:41, 29 அக்டோபர் 2012 (UTC)

சர்ச்சைக்குரிய, கட்டுரையின் நடுநிலைத்தன்மை / நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் தகவலை முற்றிலும் நீக்கலாம். ஓரளவு பொது அறிவுக்குட்பட்ட, துறை சார்ந்தவர்கள் ஆதாரம் கிடைக்கக்கூடும் என்று எண்ணும் தகவலை "சான்று தேவை" அறிவிப்பு இட்டு அப்படியே விட்டு வைக்கலாம். இவ்விரண்டுக்கும் இடைப்பட்டவற்றைப் பேச்சுப் பக்கத்தில் சேர்த்து வைக்கலாம்.

பல கட்டுரைகளை எழுதிய பயனர்கள் இப்போது முனைப்பாக இல்லாமல் இருக்கலாம். முனைப்பாக இருக்கும் பயனர்களாலும் ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான கட்டுரைகளில் சான்று சேர்க்க முடியாது. எனவே, சான்று இல்லை என்று நீக்குவதற்கு முன் தகுந்த சான்றுகளைச் சேர்ப்பதற்கான முயற்சி எடுக்க வேண்டும். வெறுமனே சான்று தேவை அறிவிப்பை இட்டுப் பிறகு சிறிது காலத்துக்குப் பின் நீக்கிச் செல்வது முறையாக தெரியவில்லை. --இரவி (பேச்சு) 19:30, 29 அக்டோபர் 2012 (UTC)

கட்டுரை நீக்கல் வேண்டுகோள்[தொகு]

இசுலாம் குறித்த விமர்சனங்கள் பக்கத்தில் ஏகப்பட்ட பிணக்குகள் உள்ளன. இப்பக்கத்தினை விரைந்து நீக்க வேண்டுகிறேன். ஒரு வேளை இக்கட்டுரை தேவைப்பட்டால் நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் பிறகு உருவாக்கலாம். பிற பயனர்களின் கருத்து தேவை. நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:01, 29 அக்டோபர் 2012 (UTC)

ஆங்கில விக்கியில் உள்ளதை மொழி பெயர்ப்பது நன்று. நீக்கத் தேவையில்லை. ஆனால், தற்போது உள்ள உள்ளடக்கம் தேவையற்றது. --Anton (பேச்சு) 01:14, 30 அக்டோபர் 2012 (UTC)
Yes check.svgY ஆயிற்று-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:27, 4 நவம்பர் 2012 (UTC)

நட்டம்[தொகு]

எம்மவர்கள் உலகத்தில் பல இடங்களில் வாழ்கின்றார்கள். அவர்களால் விக்கி நினைப்பதுபோல் அனைத்து செயல்களையும் உடனே செய்ய முடியாமல் உள்ளன. வேலை , வீடு, குடும்பம் , இதையும் தாண்டி விக்கியில் சிறிது பங்களித்தால் அதையும் நீக்குகிறார்கள். அப்போது மனவெறுப்பு வருகின்றன. இதனால் தமிழ் விக்கி பங்களிப்பை சிலர் நிறுத்தி உள்ளனர்! காரணம்: ஒரு சில துறைகளில் அந்த துறைகளை சேர்ந்தவர்கள் பங்களிக்கும் போதும். வேறு சிலர், அதாவது அந்த துறையை சேர்ந்தவர் அற்றவர், நீக்குவதையே குறியாக உள்ளனர் அதனால் நீக்க பட்ட ஒரு படத்துக்கு பல நேரம் செலவழித்து ஆதாரம் குடுக்க வேண்டி உள்ளன இது தேவையா?? ஒரு துறை சார் கட்டுரையில் பிழை இருப்பின் பேச்சுப்பக்கத்தில் கேள்வி கேக்கலாம்!! அதை விட்டு தன்னிச்சை செயல்பாடு!! இது போன்று ஒருத்தர் சான்று போதும் என்கிறார், இன்னும் ஒரு அதிகாரி சான்று போதாது என்கிறார்!! இங்க என்னதான் நடக்குது?? தமிழ் மேல் ஆசை இருப்பதனால் விக்கிக்கு வந்தால். இங்கே குரங்கின் கையில் பூமாலை குடுத்த கதையாக இருக்கிறது எமது கட்டுரைகள்!!. பிரதேச வாதம் என்று சொல்லாமலே இங்கே பிரதேச வாதம் நடக்கிறது அதுதான் உண்மை!! இதுதான் நடுநிலைமை?? இது தனி மனிதர் தாக்குதல் இல்லை!! இதையும் தனி மனிதர் தாக்குதல் என்று பொய் உரைக்கவேண்டாம்.!! இதற்குத்தான் நான் கேக்கிறேன் இங்கே தலைவர் யார்?? ஒரு சிலருக்கு இப்போதான் கண் விழித்திருக்கிறது அதற்க்கு நன்றி! ஒரு கட்டுரையை கேக்காமல் அளிக்கும் போது அதன் வலியை நான் மட்டும் இல்லை பலர் அந்த வேதனையை அனுபவித்திருப்பார்கள். நன்றி இல்லை!--சிவம் 01:08, 30 அக்டோபர் 2012 (UTC)

நீங்கள் தெரிவிக்க விரும்புவது தெளிவற்று உள்ளது. என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? //குரங்கின் கையில் பூமாலை....// இது தேவையற்ற உவமிப்பு. மறைமுகத் தாக்குதல் என்றுகூட அழைக்கலாம். --Anton (பேச்சு) 01:18, 30 அக்டோபர் 2012 (UTC)
வணக்கம் அன்டன் நான் எழுதியது உங்களுக்கு புரியவில்லை ஆனால். //குரங்கின் கையில் பூமாலை....// இது மட்டும் உங்களுக்கு சரியாக உவமிப்பு தாக்குதல் என்று புரிகிறதே இதுவே சான்று!! --சிவம் 01:38, 30 அக்டோபர் 2012 (UTC)
மீண்டும் தெளிவற்று உள்ளது.--Anton (பேச்சு) 04:32, 30 அக்டோபர் 2012 (UTC)

குருடனுக்கு எப்போதும் பகலும் இருட்டுத்தான் இதை நான் சொல்லவில்லை மூர்றோர் சொன்னது!(பழமொழி)--சிவம் 06:34, 30 அக்டோபர் 2012 (UTC)

எனக்கும் பல பழமொழிகள் தெரியும். உள் குத்தல் இல்லாது கருத்துடன் உரையாடுவது நன்று. --Anton (பேச்சு) 06:43, 30 அக்டோபர் 2012 (UTC)

அன்டன் இது உங்களுக்கு சொன்னதில்லை. பொதுவான பழமொழிதான் சொன்னேன். நட்டம் என்பதற்கான பழமொழி.--சிவம் 06:56, 30 அக்டோபர் 2012 (UTC)

//அதை விட்டு தன்னிச்சை செயல்பாடு!! இது போன்று ஒருத்தர் சான்று போதும் என்கிறார், இன்னும் ஒரு அதிகாரி சான்று போதாது என்கிறார்!! இங்க என்னதான் நடக்குது?? //

சிவம், விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி. ஒருவர் சான்று போதும் என்பதும் மற்றவர் போதாது என்பதுமே இங்கு தன்னிச்சையான செயற்பாடுக்கு இடம் இல்லை என்பதற்கான சான்று. கலந்துரையாடி இணக்க முடிவு எடுப்பதற்கான துவக்கமே இது போன்ற உரையாடல்கள். கருத்துகளின் அடிப்படையிலேயே முடிவெடுக்கிறோமே தவிர, கருத்தைச் சொல்லும் பயனர் புதியவரா நிருவாகப் பயனரா என்று பார்ப்பதில்லை.

//பிரதேச வாதம் என்று சொல்லாமலே இங்கே பிரதேச வாதம் நடக்கிறது அதுதான் உண்மை!!//

ஆதாரமற்ற குற்றச்சாட்டு.

// இதற்குத்தான் நான் கேக்கிறேன் இங்கே தலைவர் யார்??//

ஒரு புறம் தன்னிச்சையான செயல்பாடு என்கிறீர்கள். மறுபுறம் தலைவர் யார் என்கிறீர்கள். முரணாக உள்ளது.

//ஒரு கட்டுரையை கேக்காமல் அளிக்கும் போது அதன் வலியை நான் மட்டும் இல்லை பலர் அந்த வேதனையை அனுபவித்திருப்பார்கள்.//

ஏற்கனவே புதிய பயனர்களை அரவணைத்துச் செல்லும் நோக்கில் மிக இளக்கமாகவே நடந்து வருகிறோம். போதுமான அறிவிப்புகள், பேச்சுப் பக்க நினைவூட்டல்கள் தரப்படுகின்றன. இதற்கு மேலும் இளகிச் சென்றால் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியமாக இருக்காது. அதன் நம்பகத் தன்மை பாதிக்கப்படும். துப்புரவுப் பணியில் ஈடுபடுவோருக்கு சுமை கூடும். குறிப்பிட்ட செய்கையில் பிரச்சினை என்றால் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். தகுந்த மாற்றங்களைச் செய்யலாம். பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவது உதவாது.

//இதையும் தாண்டி விக்கியில் சிறிது பங்களித்தால் அதையும் நீக்குகிறார்கள். அப்போது மனவெறுப்பு வருகின்றன. இதனால் தமிழ் விக்கி பங்களிப்பை சிலர் நிறுத்தி உள்ளனர்!//

துப்புரவுப் பணிகள் காரணமாக யாரும் விலகியதாகத் தெரியவில்லை.

நீங்கள் விக்கிக்கு வந்த புதிதில் விக்கி நடைமுறைகளைச் சரி வரப் புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துகளை முன்வைக்கிறீர்கள் என்று எண்ணினேன். ஆனால், இத்தனை நாட்களுக்குப் பிறகும் புரிந்து கொள்ள மறுத்துச் செயற்படுவது ஏற்புடையதாக இல்லை.

//குரங்கின் கையில் பூமாலை குடுத்த கதையாக இருக்கிறது//

போன்ற கடுமையான சொல்லாடல்களைத் தவிர்த்து பயனுள்ள பங்களிப்புகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்களிடம் இருந்து தொடர்ந்து இது போன்ற போக்கு காணப்பட்டால், விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு உட்பட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். தங்களின் மேலதிக உரையாடல்களுக்குப் பதிலை எதிர்பார்க்க வேண்டாம். நன்றி--இரவி (பேச்சு) 08:31, 30 அக்டோபர் 2012 (UTC)

பயனர் ரவி அவர்களே வணக்கம். நான் எழுதியது உங்களுக்கு புரிந்துள்ளது என்று மகிழ்ச்சி அடைகிறேன். மீதியை உங்கள் பயனர் பக்கத்தில் தெரிவிக்கிறேன். நன்றி.--சிவம் 08:55, 30 அக்டோபர் 2012 (UTC)

பொருள் ஆதாரம்[தொகு]

பிற மொழியில் உள்ள சொல்லுக்கு பொருள் ஆதாரம் தேவையா? வேடுவர் கட்டுரையிலுள்ள "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்ற சொல்லுக்கு "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" அல்லது "காட்டிலுள்ள மக்கள்" என்பது பொருள் என்பது சிங்களம் தெரிந்தவர்களுக்குத் தெரியும். இதற்கு ஆதாரம் தேவையா? எ.கா: அப்படியானால் சத்யமேவ ஜெயதே கட்டுரையில் சத்யமேவ ஜயதே என்பதை தமிழில் வாய்மையே வெல்லும் என்று அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. ஆகவே ஆதாரம் கேட்க வேண்டுமா? பல இலத்தீன் சொற்கள் உயிரியல் கட்டுரைகளில் உள்ளது என்பதையும் கவனிக்க. --Anton (பேச்சு) 04:32, 30 அக்டோபர் 2012 (UTC)

தேவைப்பாடு கருதித் தொடங்கப்படும் வாதங்களும் உரையாடல்களும் தனிப்பட்ட தாக்குதல்களாக மாறுவதும் திரிபடைவதும் வேதனை அளிக்கின்றது. அதை நாம் தவிர்ப்பது முக்கியம். வேடுவர் கட்டுரையின் பேச்சுப்பக்கம் குறித்து இதைக் கூறினேன்.

மற்றும், ஆதாரம் கொடுக்கப்பட வேண்டியதான பெரிதும் தமிழர்சூழலில் பரீட்சயமில்லாத மொழிகளாயின் ஆதாரத்தை வழங்கலாம். ஆதாரம் உடனடியாகக் கிடைக்கவில்லை என்பதற்காக அல்லது தரமுடியவில்லை என்பதற்காக அறியவேண்டிய கருத்தைக் கூறாமல் இருக்கமுடியாது. ஐயுறவு உள்ள கருத்துக்களைக் கூட முறைப்படி பதிவுசெய்வது முக்கியம். மேலுள்ள கட்டுரையில் ////"வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்ற சொல்லுக்கு "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" அல்லது "காட்டிலுள்ள மக்கள்" என்பது பொருள்/// என்று கூறினாலே அது போதும். அத்துடன் எடுத்ததற்கெல்லாம் அகரமுதலி ஒன்றை ஆதார இணைப்பாகத் தரவும் முடியாது. பயனர்கள் தம் கருத்துக்களை வலுப்படுத்த கருதும் போது ஆதாரம் தருவது நயமே. நன்றி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:51, 30 அக்டோபர் 2012 (UTC) 👍 விருப்பம்--சிவம் 07:37, 30 அக்டோபர் 2012 (UTC)

சொல்லுக்கான பொருளை இணையத்தில் தேடிக் கண்டு கொள்ளுமாறு இருந்தால் போதுமானது. ஒவ்வொரு சொல்லுக்கும் ஆதாரம் தரத் தேவை இல்லை--இரவி (பேச்சு) 08:33, 30 அக்டோபர் 2012 (UTC)

சொல்விளக்கம்[தொகு]

நகர்த்தப்பட்டுள்ளது: பேச்சு:வேடுவர்

சோழ மன்னர்களின் கால பங்கிட்டில் சில குழப்பங்கள்[தொகு]

நகர்த்தப்பட்டுள்ளது: விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்