அறுகு
Jump to navigation
Jump to search
அறுகு [Scutch Grass] | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்குந்தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | Commelinids |
வரிசை: | Poales |
குடும்பம்: | Poaceae |
பேரினம்: | Cynodon |
இனம்: | C. dactylon |
இருசொற் பெயரீடு | |
Cynodon dactylon (லி.) பெர். |
அறுகம்புல் [Scutch Grass] என்பது 'Cynodon dactylon புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அறுகம்புல்லுக்கு மூதண்டம், தூர்வை, மேகாரி, பதம், அறுகை போன்ற வேறு பெயர்கள் உண்டு.[1]
விளக்கம்[தொகு]
அறுகம்புல்லானது கூர்மை மழுங்கிய இலை நுனியுடனும், குறுகலான இலையின் மேல் ரோமவளரிகள் தென்படுவதாய் பல்லாண்டு வாழும் புல் வகையினமாக உள்ளது.
வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்தாக இது காணப்படுகிறது. குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது.[2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ டாக்டர் வி. விக்ரம்குமார் (2018 மே 26). "அறுகம் புல் = ஆரோக்கியம்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 2 சூன் 2018.
- ↑ அறுகம்புல்லின் அற்புத மருத்துவ குணங்கள்
- ↑ அறுகம் புல்லின் மகிமை