விக்கிப்பீடியா:நுட்ப மாற்ற வாக்கெடுப்பு/கட்டுரைப் பின்னூட்டக் கருவி நிறுவுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைப் பின்னூட்டக் கருவி (Article Feedback Tool) என்பது விக்கிப்பீடியாவை படிப்பவர்கள் கட்டுரைகளை மேம்படுத்த உதவும் வகையில் பின்னூட்டம் அளிக்க ஒரு வாய்ப்பை அளிக்கும் கருவி.

பார்க்க:

சிறப்புகள்[தொகு]

  • பக்கங்களில் பயனர் (படிப்பவர்) எதிர்பார்த்த தகவல் இருந்ததா, இல்லையெனில் என்ன குறை என்பதைத் தெரிவிக்க உதவுகிறது.
  • பின்னூட்டங்களைச் சிறப்பு பக்கம் வாயிலாகத் தான் பார்க்க இயலும். எனவே, வலைப்பதிவு பின்னூட்டத்திலிருந்து இது வேறுபடுகிறது.
  • பின்னூட்டங்கள் கட்டுரைப் பங்களிப்பாளர்களுக்கு கட்டுரையை மேம்படுத்த துருப்புச் சீட்டுகளைத் தரும்.
  • விசமப் பின்னூட்டங்களை மறைக்க / நீக்கிவிட வசதியுண்டு.
  • படிப்பவரின் நேரடிப் பின்னூட்டம் பெறுவது மட்டுமின்றி இறுதியில் அவரைக் கட்டுரையைத் தொகுக்கவும் அழைக்கும்.
  • மொழிபெயர்ப்புகள் தயார் (நன்றி சண்முகம் :))

பரிந்துரை[தொகு]

ஆங்கில விக்கியில் இப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட 10% கட்டுரைகளுக்கு 95% பக்கப்பார்வைக்கு இந்த கருவி தென்படும். நம் தமிழ் விக்கியில் பகுப்பு:முதற்பக்கக்_கட்டுரைகள் (~1% கட்டுரைகளுக்கு) 100% பக்கப்பார்வைக்கு இந்தக் கருவியை இயங்க செய்ய வேண்டும் என பரிந்துரைக்கிறேன். மூன்று வரிக் கட்டுரைகளுக்கு இந்தக் கருவி தற்சமயம் பெரிதும் பயனளிக்காது. நன்கு தகவலுள்ள கட்டுரைகளில் (முதற்பக்கக்_கட்டுரைகள்) எவ்வாறு பின்னூட்டம் வருகின்றன என சோதனை செய்து பார்த்துவிட்டு பின்னர், 40 KB மேலான கட்டுரைகளுக்கும், பிற கட்டுரைகள் என நீட்டிக்கலாம்.

கருத்துக்கள்[தொகு]

//நம் தமிழ் விக்கியில் பகுப்பு:முதற்பக்கக்_கட்டுரைகள் (~1% கட்டுரைகளுக்கு) 100% பக்கப்பார்வைக்கு இந்தக் கருவியை இயங்க செய்ய வேண்டும் என பரிந்துரைக்கிறேன்.//

இயலுமானால், கூடுதலாகப் பார்க்கப்படும் முதல் 1000 (~2% )கட்டுரைகளுக்கும் இந்தக் கருவியை இடலாம். இதன் மூலம் பெருவாரியான வாசகர்களிடம் கருத்து கேட்கவும் அதன் மூலம் அதிகம் பார்வையிடப்படும் பக்கங்களை மேம்படுத்தவும் வாய்ப்பாக இருக்கும். இதை பரெட்டோ விதி அடிப்படையில் அணுகலாம். --இரவி (பேச்சு) 08:18, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]

வாக்கெடுப்பு[தொகு]

  • துவக்கம் : 20 ஜூலை 2012 09:30 UTC.
  • நிறைவு  : 27 ஜூலை 2012 09:30 UTC.

 ஆதரவு

 எதிர்ப்பு

குறிப்புகள்[தொகு]

  • முதற்பக்க கட்டுரைகளுக்கு பயனர்:Shanmugambot ஆல் இடப்பட்டுள்ளது. Y ஆயிற்று
  • இரவியின் கருத்தின்படி முதல் 1000 பக்கங்களுக்கும் விரைவில் பகுப்பு இடப்படும். http://stats.grok.se/ta/top பக்கத்தில் உள்ள கட்டுரைப் பக்கங்கள் மட்டும்.
  • படிப்பவர்களுக்கு (பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு) இந்த புதிய வசதி பற்றி எளிமையாக ஒரு உதவிப் பக்கம் உருவாக்க வேண்டும், தள அறிவிப்பில் இட வேண்டும்.
  • bugzilla:38774 பதியப்பட்டது.