பதினொன்றாவது தமிழ் இணைய மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதினொன்றாவது தமிழ் இணைய மாநாடு 2012, டிசம்பர் 28 ஆம் நாளிலிருந்து டிசம்பர் 30 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற உத்தமம் அமைப்பு இவ்விணைய மாநாட்டை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடத்துகிறது.

மாநாட்டு அரங்கத் தலைப்புகள்[தொகு]

கீழ்க்கண்ட தலைப்புகளில் மாநாட்டின் அரங்குகள் நடைபெற உள்ளது;

  1. கைபேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில், முக்கியமாக ஐ. ஓ. எஸ், ஆண்டிராய்டு தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.
  2. மின் புத்தகங்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.
  3. திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.
  4. இயன்மொழிப் பகுப்பாய்வு: பிழைதிருத்தி, தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி உணர்தல், தேடுபொறிகள், இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.
  5. தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.
  6. தமிழ் தரவுத்தளங்கள்.
  7. கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
  8. தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்
  9. கணினி வழி தமிழ்மொழி பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்

வெளி இணைப்புகள்[தொகு]