இளந்தமிழர் இலக்கியப் பட்டறை

இளந்தமிழர் இலக்கியப் பட்டறை என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டு தோறும் இளம் படைப்பாளர்களுக்கு அவர்களுடைய படைப்பாற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஒரு வார காலத்திற்கு அளிக்கும் ஒரு பயிற்சித் திட்டமாகும். இத்திட்டத்திற்கு தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 2012 ஆம் ஆண்டில் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் இத்திட்டம் பள்ளி மாணவர்களுக்கும் சேர்த்து விரிவாக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஆண்டொன்றுக்கு ரூபாய் பத்து இலட்சம் செலவிடுகிறது. சென்னை, வேலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் சுழற்சி முறையில் துறை சார்ந்த வல்லுநர்களை அழைத்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
முதல் பயிற்சிப் பட்டறை[தொகு]
2012 ஆம் ஆண்டில் முதல் பயிற்சிப் பட்டறை திருச்சிராப்பள்ளியில் திருவரங்கம் எனுமிடத்தில் 22-09-2012 முதல் 28-09-2012 வரை நடத்தப் பெற்றது. இந்த பட்டறையில் தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 106 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். ஏழு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் 42 வகையான தலைப்புகளில் கீழ் அத்துறையின் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தினமும் காலையில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மாலையில் கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இப்பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் பத்து இலட்சம் செலவிட்டது.
முதல் பட்டறையின் படத் தொகுப்பு[தொகு]
இணையத் தமிழ்ப் படைப்பாக்கம் எனும் தலைப்பில் பயிற்சியளித்த தேனி மு. சுப்பிரமணிக்கு பணிபாராட்டுச் சான்றிதழ் அளிக்கும் மாணவர். உடன் திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கான தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் முனைவர் சந்திரா.
இரண்டாம் பயிற்சிப் பட்டறை[தொகு]

2013 ஆம் ஆண்டில் இரண்டாம் பயிற்சிப் பட்டறை சென்னை, அடையாறு, இந்திராநகரிலுள்ள இளைஞர் விடுதியில் 01-08-2013 முதல் 07-08-2013 வரை நடத்தப் பெறுகிறது. இந்த பட்டறையில் தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவ மாணவியர் 100 பேர்களும், கல்லூரி மாணவ மாணவியர்கள் 100 பேர்களும் என 200 பேர் கலந்து கொண்டனர். ஏழு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் 34 வகையான தலைப்புகளில் கீழ் அத்துறையின் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டது.[1] இப்பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் பத்து இலட்சம் செலவிட்டது.
இரண்டாம் பட்டறையின் படத் தொகுப்பு[தொகு]
பட்டறை நிகழ்வில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ. விஜயராகவன், தேனி மு. சுப்பிரமணி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள்
பட்டறை நிகழ்வில் மொழி பெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந. அருள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ. விஜயராகவன் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள்
இணையத் தமிழ் எனும் தலைப்பில் தேனி மு. சுப்பிரமணி உரை
மேற்கோள்கள்[தொகு]
- ↑ அரசின் செய்திக் குறிப்பு (பிடிஎப் வடிவில்)