விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு71

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் செய்யாத தொகுப்பை நான் செய்ததாகக் காட்டுகின்றதே அது எப்படி???!!!![தொகு]

இங்கே பார்க்கவும். இம்மாற்றத்தை நான் செய்யவில்லை!! ஆனால் இதை நான் அண்மைய மாற்றங்களைக் கண்டபோது தெரியவந்ததால், வியந்து நான் மீளமைத்தேன்! இப்படியும் நிகழுமா என வியப்பு எனக்கு!! அறிந்தவர்கள் விளக்க வேண்டுகின்றேன்.--செல்வா 14:22, 21 பெப்ரவரி 2012 (UTC)

செல்வா, தவறுதலாக முன்னிலையாக்கும் இணைப்பை அழுத்தியிருந்தால் அவ்வாறு நிகழலாம், சில வேளைகளில் பக்கம் முழுமையாக உலாவியில் தெரிவதற்கு முன்னர் மௌசை அழுத்திவிட்டாலும் இவ்வாறு நேரக்கூடும். இல்லை என உறுதியாகத் தெரிந்தால் உங்கள் கடவுச்சொல்லை உடனே மாற்றிவிடுங்கள். -- சுந்தர் \பேச்சு 14:26, 21 பெப்ரவரி 2012 (UTC)
மிக்க நன்றி சுந்தர். என் கடவுச்சொல்லை மாற்றி இருக்கின்றேன்!--செல்வா 14:55, 21 பெப்ரவரி 2012 (UTC)

என்னுடைய பயனர் பக்கத்தில் இவ்வாறான மாற்றம் ஏன் செய்யப்பட்டது என உங்களிடம் நானும் கேட்க வேண்டுமென்றிருந்தேன். இப்போது விளக்கமளித்து விட்டீர்கள். நன்றிகள்! --மதனாஹரன் 13:31, 22 பெப்ரவரி 2012 (UTC)

கருத்துக்களையும் பங்களிப்புகளும் வரவேற்க்கிறேன்.நன்றி ஸ்ரீகாந்த் 19:13, 22 பெப்ரவரி 2012 (UTC)

வணக்கம் ஸ்ரீகாந்த் நான் தமிழ் விக்கியில் பங்களிக்க துவங்கும் முன்னரே translatewiki.net ல் மொழிபெயர்க்க துவங்கிவிட்டேன். அதனால் சில மொழிபெயர்ப்புகளுக்கு சரியான (த. விக்கியில் உபயோகப்படுத்தும்) வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருக்க மாட்டேன்.. அவற்றையெல்லாம் எவ்வாறு சரிபார்ப்பது.. இப்போதும் அவ்வப்போது மொழிபெயர்த்து வருகிறேன். translatewiki.netல் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறினால் என்னால் இயன்றவரை செய்து தருகிறேன்.நன்றி--shanmugam 09:44, 23 பெப்ரவரி 2012 (UTC)
சண்முகம், விக்கிப்பீடியா வாசனையில்லாமல் மீடியாவிக்கி மொழிபெயர்ப்பது தப்பில்லை(சொல்லப்போனால் சரியாக செய்திருந்தால் கூடுதல் நன்மையே), ஆனால் செய்யப்படும் மொழிபெயர்ப்புகள் இடைமுகத்தில் எங்கு வரும் என்றறிந்து தமிழ் சொற்களை எழுத்துப்பிழையின்றி மொழிபெயர்த்தால் சிக்கலில்லை. எவ்வாறு இருப்பினும் இத்திட்டத்தினபோது அனைத்து செய்திகளையும் அனைவரும் சரிபார்க்கலாம். விரைவில் ஒரு கூகிள் ஆவணம் ஒன்றை பகிர்கிறேன், அதில் உங்களால் ஆன பங்களிப்புகளை செய்யுங்கள். நன்றி. ஸ்ரீகாந்த் 19:40, 23 பெப்ரவரி 2012 (UTC)


Medicine project[தொகு]

Dear All

I would like to introduce a special wikiproject to you. I am writing to share with you a very inspiring initiative regarding health and medicine articles on Wikipedia. Crores of Wikipedia readers read up about health related issues either when they or their loved ones fall ill or before or after they have consulted doctors or when they are curious about a particular disease or drug. In fact, quite a few doctors and nurses also read up these articles to improve their knowledge.

Wikipedia's medical articles have 15-20 crore page views every month. The top 300 articles are viewed more than 1 lakh times every month. The challenge is that the majority of these articles are only available in English.

This initiative (http://en.wikipedia.org/wiki/Wikipedia:WikiProject_Medicine/Translation_task_force) has been conceptualised by WikiProject Medicine, Wikimedia Canada and very interesting organisation called Translators Without Borders. It seeks to translate a set of 80 of the most important health care articles into as many languages as possible.

Given the state of our health care system as well as the increasing readership of Indic language projects, there is huge positive impact that we can have if we participate in this initiative and have these articles in all Indic languages. The project page (referenced above) includes an outline of the project, FAQs, useful links and a sign up for interested volunteers.

Tamil Wikipedians can join this effort by creating a wikiproject for this in Tamil wikipedia. Remember, you don't have to be a health care professional to help out. All you have to do is simply care. I know dr.karthi from tamil Wikipedia already joined this project. If there are users from Medical background it will be great if they can manage this project.

I am really happy to note that 5 editors from 5 Indic languages have already signed up for this wonderful project. Of these 2 languages - Assamese and Malayalam - have already started wiki project and started working on articles (really big comprehensive articles) related to Medicine.

Assamese wikipedia medicine project page: as:ৱিকিপিডিয়া:ৱিকিপ্ৰকল্প চিকিৎসাবিজ্ঞান

Some of the articles created:

Malayalam wikipedia biology project page: ml:വിക്കിപീഡിയ:വിക്കിപദ്ധതി/ജീവശാസ്ത്രം

Some of the articles created:

Please note that this project do not involve machine translation or bots. It is really happy to note that both in Assamese and Malayalam wiki these projects are run by doctor (or medicine students) wikipedians :) Yes, Indic wikipedias has editors from all wakes of life.

There is so much potential on these articles. I encourage interested wikipedians to join this project by starting a Wiki project in Tamil wikipedia for this. Please let me know if you require any support for this.--Shiju Alex (WMF) 10:31, 24 பெப்ரவரி 2012 (UTC)

Shiju, thanks indeed! I'm sure there will be a strong participation from Tamil Wikipedia. Dr. Karthi, Dr. Senthi, Professor Nandakumar. Kalaiarasy and many others are there. I have my own interest too. It sounds like a great project!--செல்வா 14:20, 24 பெப்ரவரி 2012 (UTC)
Thank you so much for the information you have shared with us. I cordially welcome this project and want to put my step on this. Yes, It seems like a great project, by which we can have a lot of essential medical articles. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 09:11, 25 பெப்ரவரி 2012 (UTC)
Thanks for the information--Nan 10:39, 25 பெப்ரவரி 2012 (UTC)

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்[தொகு]

மேலே Shiju Alex (WMF) ஆல் குறிப்பிடப்பட்ட திட்டத்தை கருத்தில் கொண்டு செயற்பட விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம் தேவையானது. இதுவரையில் மருத்துவம் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல் மற்றும் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நலவியல் ஆகியவற்றின் ஒரு கூறாகவே இருந்து வந்துள்ளது. ஆங்கில விக்கியைப் போன்று மருத்துவத் திட்டத்தையும் புறம்பாகக் கையாளுதல் இன்றியமையாதது எனக் கருதுகிறேன். இத்திட்டம் தொடங்கிய பிற்பாடு மொழிபெயர்ப்புத் திட்டப் பக்கம் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு உருவாக்கல் தேவை என்பதால் இதற்குரிய பக்கங்களை உருவாக்க அனுமதி கோருகின்றேன். இது தேவை இல்லை, உயிரியலின்/நலவியலின் கீழேயே இதனைக் கொண்டு நடத்தலாம் எனும் பட்சத்தில் குறிப்பிட வேண்டுகின்றேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 09:29, 25 பெப்ரவரி 2012 (UTC)

செந்தி, "உருவாக்க அனுமதி" எல்லாம் ஏதும் தேவை இல்லை. வேண்டிய திட்டப் பக்கங்களை நீங்களே தொடங்கலாம். நானும் உங்களுடன் இணைந்து என்னால் ஆன உதவிகளைச் செய்கின்றேன். மருத்துவம் ஒரு மாபெரும் கடல். அதற்கு வலைவாசல், அதற்குள் வலை வாசல் என்று செய்ய ஆயிரம் உள்ளன. கட்டாயம் தேவை!! இத் திட்டத்தை ஒட்டி, இதையே ஓர் உந்துகோலாகக் கொண்டு, நாம் இத்துறையை விரிவு படுத்துவது மிகவும் நல்ல. உடல்நலம் உளநலம் இரண்டையும் கருத்தில் கொள்வோம். "பின்னர்" விலங்குகளின் உடல்நல, உள நலங்களையும் கொள்வோம். நீங்களும், கார்த்தியும், நந்தகுமாரும், கலையும் சேர்ந்து முதலணியயகக் கொண்டு தொடங்குங்கள். நானும் சேர்கின்றேன்--செல்வா 13:47, 25 பெப்ரவரி 2012 (UTC)
நிச்சியமாகத் தொடங்கலாம். அவசியமானது. நன்றி. --Natkeeran 14:16, 25 பெப்ரவரி 2012 (UTC)
மிக முக்கியமான துறை. பெருமளவு உள்ளடக்கங்களைச் சேர்க்கவேண்டிய தேவை உள்ளது. இதற்கு ஒரு விக்கித்திட்டம் தொடங்குவது உதவியாக இருக்கும். தொடங்குங்கள். -- மயூரநாதன் 17:19, 25 பெப்ரவரி 2012 (UTC)

எது சரி?[தொகு]

கீழ்காண்பனவற்றில் 'எது சரி' என்பதனை நாம் முடிவு செய்தல் நலம். ஏனெனில் விக்கியின் பல்வேறு தளங்களில் பல்வேறு விதமாக எழுதப்பட்டுள்ளது. விடை கிடைத்தால் வாய்ப்பு கிடைக்கும்போது திருத்தங்கள் செய்யலாம்.

--மா. செல்வசிவகுருநாதன் 05:29, 27 பெப்ரவரி 2012 (UTC)

எனது அறிவுக்குத் தெரிந்த வரையில் இவை அனைத்துமே தவறு தான். மக்கட்டொகை என்பதே சரி. எனினும் இங்கு பொருட்பிழை இல்லாததால் 'மக்கட்தொகை' என்பதை மாற்றத் தேவையில்லை என எண்ணுகின்றேன். மக்கள்தொகை (இடைவெளி இல்லாமல்) என்பதை நீக்குவது அவசியம். 'மக்கள் தொகை' இருக்கும் இடத்தைப் பொறுத்து அனுமதிக்கலாம். விக்கியில் உள்ள தமிழறிஞர்களின் கருத்தை அறிவது நலம். --சிவகோசரன் 06:12, 27 பெப்ரவரி 2012 (UTC)
தேவையான விவாதமே. அவர்கட்கு என்பது அவர்களுக்கு எனவும் நாட்கள் என்பதை நாள்கள் எனவும் சில இடங்களில் வழங்கப்படுகின்றது. மொழி மக்களை இலகுவாக புரிதலுக்குள்ளாக்க வேண்டும் என்பது முக்கியமான அடிப்படை. விக்கிப்பயன்பாட்டுக்கு மட்டுமன்றி பொதுவில் இதுபற்றிய முழுமையான விளக்கத்தை யாரும் தந்தால் பயனுடையதாயிருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் 07:00, 27 பெப்ரவரி 2012 (UTC)

மக்கட்தொகை, மக்கள் தொகை என்பவற்றைப் பயன்படுத்துவதே நல்லது. மக்கள்தொகை என்பதை மக்கள் தொகை அல்லது மக்கட்தொகை என மாற்ற வேண்டும். --மதனாஹரன் 13:11, 27 பெப்ரவரி 2012 (UTC)

மதன் சொன்னவை சரி. மக்கள் தொகை என்று பிரித்து (இடம் விட்டு) எழுதுவதும், மக்கட்டொகை என்று சேர்த்து எழுதுவதும் சரி, ஆனால் மக்கட்தொகை என்று நிலைமொழியில் (முன் நிற்கும் சொல் - இங்கே "மக்கள்") மட்டும் மக்கட் என்று புணர்ச்சி விதிப்படி மாற்றியும், வருமொழி ஆகிய "தொகை" என்பதை அப்படியே (டொகை என்று முழுதும் இணக்கமாக வரவேண்டும் என்று இலக்கணவிதி உரைப்பது போல் மாற்றாமல்) மக்கட்தொகை என்று எழுதுகின்றார்கள் இக்காலத்தில். இது புது வழக்கு. மக்கள் தொகை, மக்கட்டொகை ஆகிய இரண்டும் சரி என்பதில் ஐயம் இல்லை. மக்கட்தொகை என்பதையும் இலக்கணம் சார்ந்த புது வழக்கென்று கொள்ளலாம்.--செல்வா (பேச்சு) 14:54, 5 மார்ச் 2012 (UTC)

கருத்தினைப் பகிர்ந்து, தெளிவுபடுத்திய அனைவருக்கும் நன்றி! 'மக்கள்தொகை' என எங்காவது எழுதப்பட்டிருந்தால்....அதனை மக்கள் தொகை என மாற்றி விடுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:04, 6 மார்ச் 2012 (UTC)

செல்வசிவகுருநாதன், தமிழறிஞர் முன்னாள் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் எழுதிய "தமிழில் நாமும் தவறில்லாமல் எழுதலாம்" என்னும் சிறிய நூலில், பக்கம் 57 இல் 9.1 என்னும் பகுதியில் விதி-57 என்பதாகக் கூறியுள்ளார். "லகர ளகர ஈற்றுப் பெயர்களும் வருமொழியில் வல்லினத்தைக் கொண்ட பெயர்களும் சேர்ந்து அமைந்த தொகைகளில் , இன்றைய செந்தமிழில் சந்தி மாற்றம் நிகழ்வதில்லை " என்று கூறி அதற்கு எடுத்துக்கட்டாக "அறிவியல் தமிழ், மக்கள்தொகை" ஆகிய இரண்டையுமே கொடுத்துள்ளார். அறிவியற்றமிழ் என்றும் மக்கட்டொகை என்றும் இன்றைய தமிழில் எழுதுவதில்லை என்கிறார். "மக்கட்தொகை என்று சிலர் எழுதக் காண்கிறோம். இதை இன்றைய அறிஞர்கள் சரியென்று ஏற்கமாட்டார்கள்" என்றே கூறுகின்றார்!! (இலங்கையில் இப்படி எழுதும் வழக்கம் இன்றும் உண்டு என்று நினைக்கின்றேன்) --செல்வா (பேச்சு) 15:35, 6 மார்ச் 2012 (UTC)

ஆம். கல்வியியற் துறை என்பது போன்று எழுதப்படுவதுண்டு. --மதனாஹரன் (பேச்சு) 10:56, 8 மார்ச் 2012 (UTC)

பதிவேற்றக் கருவி error[தொகு]

When i try to upload files (Ex: Ordinary Conch - Archaeological Museum, Jaffna.JPG), I received the following message. There is another file already on the site with the same content. --Anton 17:43, 28 பெப்ரவரி 2012 (UTC)

Anton, did you try uploading with a different name ? --செல்வா 17:45, 28 பெப்ரவரி 2012 (UTC)

No, I use same name. It works now after renaming the files. Thanks! --Anton 17:51, 28 பெப்ரவரி 2012 (UTC)

The error remains in uploading progress. I tried to upload a file (Chithambara_College,_Valvettithurai.JPG) and received the error message - [api-error-internal_api_error_UploadStashFileNotFoundException] However, I checked with ‘my uploads’ in Wikimedia and I found the file was successfully uploaded. --Anton 00:59, 29 பெப்ரவரி 2012 (UTC)

சுட்டிக்காட்டிதற்கு நன்றி அன்டன். மீடியாவிக்கி நிரலாளர்களுக்கு தெரியப்படுத்திவிடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:30, 29 பெப்ரவரி 2012 (UTC)

தமிழில் உள்ள அறிவியல் பயன்பாட்டு அறிவியல் நூல்கள்[தொகு]

  1. 20-ஆம் நூற்றாண்டில் தமிழில் வெளி வந்துள்ள மருத்துவநூல்கள் ஏறத்தாழ 150 நூல்கள் இருக்கலாம். எல்லா வகையான மருத்துவ நூல்களும் எனில் இவ்வெண்ணிக்கை 3199 என்று கன்னிமரா நூலகம் காட்டுகின்றது இதனைத் தீர ஆயவில்லை).
  2. கன்னிமரா நூலகம் காட்டும் துறைவாரியாகத் தமிழ் நூல்கள்
    1. மருத்துவம் 3199
    2. வேதியியல் 254
    3. இயற்பியல் 308
    4. கணிதம் 437
    5. உயிரியல் 201
    6. பொறியியல் 1066
    7. வேளாண்மை 347

தமிழில் களஞ்சியங்களில் வெளிவந்துள்ள மருத்துவக் கட்டுரைகள் மட்டும் ஏறத்தாழ 2,000 கட்டுரைகள் ஆகும். அறிவியல்-பயன்பாட்டு அறிவியல் நூல்கள் ஏறத்தாழ 5812 உம், இவை தவிர 12-தொகுதிகள் மருத்துவக் கலைக்களஞ்சியமும் வெளிவந்துள்ளன. அறிவியல் சார்ந்த எல்லா கட்டுரைகளையும் சேர்த்தால் 30,000-ஐத் தாண்டும் (குத்து மதிப்பாக, வெளியான சில கலைக்களஞ்சியகளை மட்டும் கருத்தில் கொண்டு சொன்னால்).

--செல்வா (பேச்சு) 04:47, 1 மார்ச் 2012 (UTC)--செல்வா (பேச்சு) 14:01, 1 மார்ச் 2012 (UTC)

செல்வா, உங்கள் குறிப்பு தந்த ஆர்வத்தால் கன்னிமரா நூலகத்தின் நூல் விபரப்பட்டியலில் நூலகவியல் எனும் துறை தொடர்பில் மேலோட்டமாகத் தேடினேன். 49 நூல்களை அடையாளங் காண முடிந்தது. அந்தப்பட்டியலில் இல்லாத 7 நூல்களை இவ்வாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் கண்டடைந்தேன். மேலும் ஈழத்து நூல்கள் கன்னிமாராவில் அதிகம் இல்லை. இத்தகவல்களைக் கருத்திற்கொண்டால் துறைசார் நூல்களின் எண்ணிக்கை குறைந்தது 20% ஆல் அதிகம் இருக்கும் எனலாம். இரு மடங்குகூட இருக்கலாம். இவற்றில் நம்பகமான நூல்கள் எவ்வளவு என்பது இன்னொரு தளத்தில் கவனிக்க வேண்டிய விடயமாகிறது. நன்றி. கோபி (பேச்சு) 15:18, 1 மார்ச் 2012 (UTC)
நன்றி கோபி, 20-ஆம் நூற்றாண்டில் தமிழில் வெளி வந்துள்ள மருத்துவநூல்கள் என்னும் பக்கத்தில் உள்ள நூல்களில் 90% ஏறத்தாழ பல்கலைக்கழகத் தரத்தில் இருப்பவை. அதில் இலங்கையைச் சேர்ந்த திரு. சின்னத்தம்பி அவர்களின் நூல்களும் உள்ளன. தஞ்சை தமிழ்ப்பல்கலைகழகத்தின் 34-தொகுதி அறிவியல்-வாழ்வியல் கலைக்களஞ்சியத்தில் உள்ளவையும் உயர்தரம் உடையவை. தரம் என்பதை வளர்முகமாக அணுகி, ஒழுக்கம், சீர்மையில் அக்கறை கொண்டு, கருத்துகளை ஆழப்படுத்தியும் படிப்படியாக வளர்த்தெடுத்தால் கட்டாயம் எட்டலாம். --செல்வா (பேச்சு) 15:36, 1 மார்ச் 2012 (UTC)

கடந்த மூன்றரை மாதங்களாக நடைபெற்ற தமிழ் விக்கி ஊடகப் போட்டி நேற்று இரவு 23:59 UTC முடிவுபெற்றது. மொத்தம் 15,217 கோப்புகள், சுமார் 300 பயனர்களால் பதிவேற்றப்பட்டுள்ளது. பரிசுகள் மார்ச் 25, 2012 அன்று அறிவிக்கப்படும். அதற்குப்பின்னர் போட்டி அறிக்கை,புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 08:09, 1 மார்ச் 2012 (UTC)

வியத்தகு சாதனை ! போட்டியை சிறப்பாக ஒருங்கிணைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள். இத்தனை கோப்புகளையும் எப்படி மதிப்பிடப் போகிறீர்கள் என்பது மலைக்க வைக்கிறது.. உதவி தேவையெனில் மேலும் சிலர் இணைந்து கொள்ள முன்வருவர் என நினைக்கிறேன்--இரவி (பேச்சு) 08:26, 1 மார்ச் 2012 (UTC)
அருமையான செய்தி. தமிழர் நிலத்தையும் பண்பாட்டையும் பற்றிய எண்ணற்ற கட்டுரைகளுக்கு இனி விளக்கப்படம் கிடைக்கும். பல நூறு தமிழ்ச் சொற்களுக்கான ஒலிக்கோப்புகளும் பதிவேற்றப்பட்டுள்ளன. போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களையும் பங்களித்தவர்களையும் பாராட்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 08:49, 1 மார்ச் 2012 (UTC)
தமிழ் விக்கி ஊடகப் போட்டியினைச் சிறப்பாக நடத்தி 15217 கோப்புகளைச் சேர்த்திட்ட சோடாபாட்டில் மற்றும் அவருடனான குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:54, 1 மார்ச் 2012 (UTC)
தமிழ் விக்கி ஊடகப் போட்டிக் குழ்விற்கு வாழ்த்துக்கள்.. நன்றிகள்.. --எஸ்ஸார் 10:20, 1 மார்ச் 2012 (UTC)
விக்கிமூலம், விக்கிநூல்கள் முதலான பிற திட்டங்களில் போட்டிக்கான அறிவிப்புப் பதாதை அகற்றப்படாதுள்ளது. அருள்கூர்ந்து அகற்றி உதவவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:36, 1 மார்ச் 2012 (UTC)

நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு மிக அருமையாக பங்களிப்புகள் செய்து மிக நன்றாக நடந்தேறியது! ஏறத்தாழ 13,000 கோப்புகள் இருந்தபொழுது அவை அனைத்தையும் (சில ஒலிக்கோப்புகள், நிகழ்படங்களைத் தவிர) நான் நன்கு பார்வையிட்டேன். மிக அருமையான படைப்புகள் இதில் உள்ளன. கடைசி சிலநாட்களில் 15,000 ஐத் தாண்டிவிட்டது! இதுவே அருமை! இடாய்ச்சு விக்கிப்பீடியாவின் இறுவட்டுத் திட்டத்தை ஃவெர்சாண்டு எனப்படும் (ஆங்கிலத்தில் டைரக்டுமீடியா என்னும்) வெளியீட்டகம் 10,000 படங்களைச் சேர்த்து வெளியிட்டது. அதை எண்ணிக்கையில் வென்றுள்ளது (50% கூடுதல்!) தமிழ் விக்கிப்பீடியாவின் ஊடகப் போட்டி. இடாய்ச்சு விக்கிப்பீடியாவின் நோக்கமும் திரட்டும் சற்று வேறானது. மீண்டும் வாழ்த்துகள்!--செல்வா (பேச்சு) 13:49, 1 மார்ச் 2012 (UTC)

போட்டி ஒருங்கமைப்பாளர்கள், போட்டிக்கு உதவியோர், போட்டியில் பங்கேற்றோர் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்...--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 14:11, 1 மார்ச் 2012 (UTC)
மிக எடுப்பான விளம்பரப் பட்டைகள் அளித்திருந்தீர்கள் செந்தி! தாரீக்கும் மிக அருமையாக ஆக்கி இருந்தார் இவற்றை.--செல்வா (பேச்சு) 14:26, 1 மார்ச் 2012 (UTC)
மிகச் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, கட்டுமானம், உதவிகள் வடிவமைக்கப்பட்டு, பரப்புரை ஆற்றப்பட்டு நடத்தப்பட்ட ஓர் சிறந்த தமிழ் விக்கி முனைப்பு. இதன் ஒருங்கமைப்பாளர்களுக்கும் போட்டிக்கு பதாகைகள், பிற பரப்புரை உதவிகள் புரிந்தோருக்கும் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றுச் சிறப்பித்தவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் !!--மணியன் (பேச்சு) 01:35, 2 மார்ச் 2012 (UTC)
  • இத்திட்டத்தை உருவாக்கி மிக்க திறமையோடு செயல்படுத்திய அனைவருக்கும், போட்டியில் பங்கேற்ற பயனர்களுக்கும் உளமார்ந்த பாராட்டினைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் விக்கிக்கு ஓர் அருமையான பரப்புரை கூட!--பவுல்-Paul (பேச்சு) 02:21, 2 மார்ச் 2012 (UTC)
வாழ்த்துகள். இப்பெரிய போட்டியின் ஒரு சிறு பங்களிப்பு என்னுடையதும் என்று கருதும்போது பெருமையாக உள்ளது. :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 16:28, 2 மார்ச் 2012 (UTC)
ஊடகப் போட்டி மிகச் சிறப்பாகவும், வெற்றியாகவும் நிறைவேறியுள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி. இதற்காக உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 15,000க்கு மேற்பட்ட ஊடகங்களை மதிப்பிட்டு மிகச் சிறந்தவற்றைத் தெரிவு செய்வது என்பது இலகுவானதல்ல. அதுவும் எல்லோருடைய ஒத்துழைப்புடனும் நிறைவேறும் என நம்பலாம். ---மயூரநாதன் (பேச்சு) 19:33, 2 மார்ச் 2012 (UTC)

உதவி:அவ்வூடகங்களை மேம்படுத்த கூட்டுமுயற்சி தேவை[தொகு]

  • இம் முதல்முயற்சி, இனிது நடக்க, இயங்கியவர்களுக்கு, என்சிரம் தாழ்ந்த வணக்கங்கள். மிக்க நன்றி.
  • இந்த நிகழ்படம், காமென்சின் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.இன்னும் பல சிறப்பாக உள்ளது.
  • வேடிக்கைப் பார்க்க சென்ற என்னை, வேலை செய்யுமாறு, அவ்வூடகங்கள் தூண்டின.

நீங்களும் வருக! மேம்படுத்துக!!

  1. பெயரிடல்:இம்முயற்சியில் பதிவேறிய கோப்புகளில் பல, பொருத்தமற்ற பெயர்களுடன் பதிவேறியுள்ளது. (இப்படி : நிழற்படக்கருவியிடும் எண்கள், பதிவேற்றிய நபரின் பெயரில், தமிழ் சொத்து34...). சில கோப்புகளை இங்கு காணலாம்.
  2. பகுப்பாக்கம்:உரிய பகுப்புகளை இட வேண்டும்.
  3. ஊடக வர்ணனை: ஊடகத்தினை கண்டு உரிய வர்ணனையை இணைத்தால், பிறமொழியினரும் பயன்படுத்த ஏதுவாகும்.

மேலதிக உதவிக்கு எனது உரையாடற் பக்கத்தினை அணுகவும்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

தகவலுழவன், முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி. ஆம் நாம் எளிதாக துப்புரவு செய்ய நிறைய இருக்கு. இந்த ஆவணத்தில் விவரங்களை சேகரித்து வருகிறேன். கூடிய விரைவில் நானும் இம்முயற்சியில் ஈடுபடுகிறேன். ஸ்ரீகாந்த் (பேச்சு) 08:03, 8 மார்ச் 2012 (UTC)
கூகுள் ஆவணம் கண்டேன்.நீங்கள் தமிழில் தட்டுவது, பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.தொடர்க உமது விக்கி பங்களிப்புகள். முடிந்தவரை உங்களுடன் இணைகிறேன்.வணக்கம்பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

தேனி எம்.சுப்பிரமணி பேச்சு - செய்தி[தொகு]

தேனியில் நடைபெற்ற உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கக் கூட்டத்தில் நான் பேசிய பேச்சு குறித்த செய்தி தினமணி நாளிதழில் மதுரை பதிப்பில் தேனி மாவட்டத்திற்கான செய்திப் பக்கத்தில் மாணவர்களுக்கு இலவச குறுந்தகடு: விக்கிப்பீடியா திட்டம்எனும் தலைப்பில் வெளியாகியுள்ளது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:40, 1 மார்ச் 2012 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பற்றிய தகவலைப் பரப்பியதற்கு நன்றி, தேனி.எம்.சுப்பிரமணி. -- சுந்தர் \பேச்சு 08:50, 1 மார்ச் 2012 (UTC)
நல்ல பரப்புரை தேனி. சுப்பிரமணி. பகிர்வுக்கு நன்றி!--செல்வா (பேச்சு) 13:54, 1 மார்ச் 2012 (UTC)
+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:26, 1 மார்ச் 2012 (UTC)
+1 உங்கள் இனிய பரப்புரைக்கு நன்றி, தேனியாரே! --மணியன் (பேச்சு) 01:39, 2 மார்ச் 2012 (UTC)
சுப்பிரமணி, பல்வேறு களங்களில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி எடுத்துரைத்து வருவதற்கு நன்றி. இரண்டு குறிப்புகள்: 1. மாணவர்களுக்கான 500 கட்டுரைகளை வெளியிடும் திட்டம் கிடப்பில் உள்ளது. தற்போதைய திட்டத்தில் 200 முதற்பக்கக் கட்டுரைகளை மட்டும் குறுந்தட்டாக வெளியிடுகிறோம். இவற்றை மாணவர்களும் படித்துப் பயனுறலாம் என்றாலும் இவை மாணவர்களின் கல்வி, அறிவுத் தேவைகளை முன்வைத்துத் தெரிவு செய்யப்பட்டவை அல்ல. ஏற்கனவே நன்கு வளர்ந்த 200 கட்டுரைகளைச் செப்பனிடுவதற்குத் தேவைப்படும் உழைப்பை நோக்கும் போது, மாணவர்களுக்கான 500 கட்டுரைகளை வெளியிட இன்னும் பெரும் அளவில் உழைப்பு தேவைப்படும். 2. குறுந்தட்டை யாரும் படி எடுத்து வழங்கலாம். ஆனால், நாம் நேரடியாக வழங்கும் ஒவ்வொரு குறுந்தட்டும் கண்டிப்பாக இலவசமாகத் தான் இருக்கும் என்பதற்கு இன்னும் உத்தரவாதம் இல்லை. ஒரு சில நூறு குறுந்தட்டுகளை இலவசமாகத் தரக்கூடும். அதற்கு மேல் ஆயிரக்கணக்கில் என்றால் குறுந்தட்டை அச்சிடல், வழங்கல் ஆகியவற்றுக்கான அடக்க விலையையாவது வைக்க வேண்டி வரலாம். செம்மொழி மாநாட்டில் இலவசமாக வழங்கிய பொருட்களுக்கு நேர்ந்த கதியைப் பார்த்திருப்பீர்கள்... !--இரவி (பேச்சு) 18:56, 5 மார்ச் 2012 (UTC)
இரவி, தங்கள் தெளிவுபடுத்தலுக்கு நன்றி. பரப்புரைகளில் இது போன்ற செய்திகளை அளிப்பது வழக்கம்தான். தமிழ் விக்கிப்பீடியா குறித்த செய்திகளை வெளியிட பல தமிழ்ச் செய்தித்தாள்கள், காலமுறையிலான இதழ்கள் தயக்கம் காட்டுகின்றன. இந்தச் செய்தியைக் கூட தினமணி நாளிதழ் மட்டுமே வெளியிட்டது. பிற நாளிதழ்களெல்லாம் தமிழ் விக்கிப்பீடியா ஒரு லாப நோக்குடைய நிறுவனம் என்பது போலவும், விளம்பரம் பெற்றுக் கொண்டு செய்தியை வெளியிட வேண்டும் என்கிற நோக்கில் இருக்கின்றன. தமிழ் விக்கி ஊடகப் போட்டி குறித்த செய்தியை நானும் பல செய்தித்தாள்களுக்கு அனுப்பிவிட்டு (ஒருங்கிணைப்பாளரான சோடாபாட்டிலுக்கு பிரதியாக ஒன்றும் அனுப்பினேன்), அங்கு பணியாற்றும் என் நண்பர்களிடம் வெளியிடக் கோரிய போது, அதை விளம்பரமின்றி செய்தியாக வெளியிட ஆசிரியர் மறுக்கிறார் என்கிற பதில்தான் கிடைத்தது. தினமலர் கம்ப்யூட்டர் மலரில் வெளியிடக் கோரி அதன் பொறுப்பாசிரியர் நண்பர் டாக்டர் சந்திரபோஸ் அவர்களிடம் தெரிவித்த போதும், இதை நிர்வாகத்தினர் வெளியிட மறுப்பார்கள் என்றார். டாக்டர் பெ. சந்திரபோஸிடம் அப்போது கனடாவிலிருந்து சென்னை வந்திருந்த செல்வாவும் இதை வெளியிடக் கோரினார். ஆனால் வெளியிடப்படவில்லை. புதிய தலைமுறையில் மட்டும் மாலனிடம் பேசி செய்தி வெளியிட முடிந்தது. தங்களுடைய செய்திகளுக்கு ஆதாரமாக விக்கிப்பீடியாவைப் பயன்படுத்திக் கொள்ளும் நாளிதழ்கள், காலமுறையிலான இதழ்கள் விக்கிப்பீடியாவைப் பற்றிய செய்திகளை வெளியிட தயக்கம் காட்டித்தான் வருகின்றன. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:27, 6 மார்ச் 2012 (UTC)

சுப்பிரமணி, நீங்கள் சுட்டும் ஊடகச் சூழல் அறிந்தது தான். செய்தி வெளியிட்டால் கூட, இணைய முகவரியை வெளியிட மாட்டர்கள் :) மாலன், இணையம் பற்றிய நல்ல புரிதல் உள்ளவர் என்ற வகையில் தமிழ் இணையத் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பது வழமை. தீனு செரியன் என்கிற மலையாள விக்கிப்பீடியரின் தொடர் முயற்சி காரணமாக, இந்திய ஆங்கில செய்தி ஊடகங்களே இப்போது தான் விக்கிப்பீடியாவைப் புரிந்து கொண்டு செய்தி வெளியிடத் தொடங்கி உள்ளன. எனவே, உங்கள் இதழியல் துறை நண்பர்கள் மூலம் தொடர் விழிப்புணர்வூட்டும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 16:19, 6 மார்ச் 2012 (UTC)

இரவி, தமிழக ஊடகத்துறையில் மாலன் போன்று பலரும் தமிழ் இணையத் திட்டங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதாலேயே சில செய்திகளாவது வெளியாகிறது என்பது முற்றிலும் உண்மை. தமிழ் இணையத் திட்டங்களுக்கு சிலர் உதவ முன்வரும் நிலையிலும் அந்த நிர்வாகத்தின் கட்டுப்பாடுகள் அவர்களைத் தடுத்து விடுகிறது என்பதும் உண்மையே. கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு சிறிது பரிவு காட்டப்பட்டது. இந்த ஆட்சியிலிருப்பவர்களுக்கும் நாம் தமிழ் விக்கிப்பீடியாவை எடுத்துச் செல்வோம். தொடர்ந்து முயற்சிப்போம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:13, 7 மார்ச் 2012 (UTC)

ஆத்திரேலியப் பழங்குடி மொழிகளோடு தமிழ், திராவிட மொழிகள் தொடர்பு[தொகு]

ஆர்வார்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் விட்ஃசெல் (Michael Witzel) அண்மையில் பகிர்ந்த மடலில் உள்ள செய்தி குறிப்பிடத் தகுந்தது:
Vaclav Blažek,
Was there an Australian substratum in Dravidian?
Mother Tongue XI, 2006.
சுருக்கம்
The matter of immigration from Africa via S. India to Indonesia and
Australia (via Flores around 50,000 BCE) is complex: earliest skeletons
from that period in Australia at Lake Mungo, some "Australian" genes have
been detected in Tamil Nadu a few years ago, and apparently some "modern"
(Homo Sap. sap.) Paleolithic tools in the same area go back some 74,000
years. More on all of this if you ask…

மேலும் பார்க்க: தமிழ் மன்றம் கூகுள் குழுமத்தில் மணி மணிவண்ணன் பகிர்ந்த செய்தியைப் பார்க்கவும்

--செல்வா (பேச்சு) 01:32, 5 மார்ச் 2012 (UTC)

இதற்கு வலுசேர்ப்பது போல் மவோரி (Maories) என்ற நியூசிலாந்து பழங்குடி மொழி மற்றும் தமிழ் மொழிக்கு பொதுவாக உள்ள 50 அடிப்படை சொற்களை ஒருவர் பட்டியல் வெளியிட்டதாக படித்திருந்தேன். மீண்டும் அதைப்பார்த்தால் இங்கு கூறுகிறேன்.

நீங்கள் கொடுத்த வெளியிணைப்பில் நியூ குருப்சிற்கு செல்லுமாறு கூறுகிறது. அவ்விணப்பு[1] மேலும் நீங்கள் கூறிய இதே வாசகங்களை குமரிக்கண்டம் பற்றிய புத்தகங்களில் கண்டுளேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:14, 8 மார்ச் 2012 (UTC)

தென்காசி சுப்பிரமணியன், குமரிக்கண்டம் பற்றி தேவநேயப்பாவாணரும் பிறரும் எழுதியதைப் பல நானும் இடங்களில் படித்திருக்கின்றேன். அக்கருத்துகளைப் பொதுவாக உலக அறிஞர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மாவோரியில் உள்ள 50 சொற்கள் தமிழ்ச்சொற்களோடு தொடர்பு இருப்பதாகக் காட்டினாலும், அவை தக்கவாறு மொழியியல் அடிப்படையில் நிறுவப்பட்டால்தான் ஏற்பு பெறும். சுசுமோ ஓனோ என்னும் சப்பானியர் சப்பான் மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையேயான சொற்களை நூற்றுக்கணக்கிலும், மிக நுணுக்கமாகவும் (வேளாண்மைச் சொற்கள் போன்று துறை சார்ந்தவற்றைக் குறிப்பிட்டும்) கூறியும் இன்றளவும் பொது ஏற்பு இல்லை. தமிழ் மன்றம் கூகுள் குழுமத்தில் மணிவண்ணன் பதிவு செய்துள்ள ஆர்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக்கேல் விட்ஃசெல் என்பவர் அத்தனை எளிதாக எதையும் ஏற்பவர் அல்லர். ஆனால் அண்மையில் அவர் தொல்காப்பியத்தைப் பற்றிக் குறிப்பிட்ட கருத்துகளும், அவர் இங்கே குறிப்பிட்ட கருத்துகளும் என் போன்றவர்களுக்கு மிகவும் வியப்பை அளிக்கின்றன. தேவநேயப்பாவாணரின் கருத்தை (குமரிக்கண்டம் பற்றி அல்ல, பிற சொற்பிறப்பியல் கருத்துகளை) பிற மேற்கு நாட்டு அறிஞர்களும் மெதுவாக சிறிதளவு ஏற்கத் தொடங்கி இருப்பதாகவே உணர்கின்றேன். இங்கு இது பற்றி விரிவாக உரையாட வேண்டாம். --செல்வா (பேச்சு) 16:30, 8 மார்ச் 2012 (UTC)

Survey invitation[தொகு]

First, I apologize that part of this message is in English. If you can assist by translating it for your local community, I would greatly appreciate it.

The Wikimedia Foundation would like to invite you to take part in a brief survey.

2012 பணம் விநியோகித்தல் முன்னுரிமை வழங்குதல் குறித்த கணக்கெடுப்பிற்கு உங்கள் நேரத்தை செலவு செய்தமைக்கு நன்றி. இந்த கணக்கெடுப்பு மூலம் அறக்கட்டளையால், விக்கிமீடியர்களுக்கு என்ன வளங்கள் தேவைப்படுகிறது என்பதையும் மற்றும் என்ன முன்னுரிமையில் என்பதையும் கணிக்க முடியும் (சிலருக்கு நிதி தேவைப்படலாம்). அனைத்து அறக்கட்டளை நிகழ்ச்சிகளும் இங்கே இருக்காது (அடிப்படை செயல்பாடுகள் குறிப்பாக விலக்கப்படுகின்றன) – தனிப்பட்ட பங்களிப்பாளர்கள் அல்லது அத்தியாயங்கள் (chapters) போன்ற விக்கிமீடியாவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் கேட்கும் வளங்கள் மட்டும். நீங்கள் (அல்லது அத்தியாயங்கள் அல்லது சங்கங்கள் போன்ற குழுக்கள்) எதில் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை அறிந்துகொள்வது, மற்றும் விருப்பத்தேவுகளை உங்கள் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துதல் ஆகியவையே இங்கு முக்கிய நோக்கங்களாகும். நாங்கள் இந்த பட்டியலில் "சேவகன்களை செயல்பாட்டில் வைத்திரு" போன்றவைகளை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை, ஏனெனில் அவை தனிப்பட்ட பங்களிப்பாளர்கள் அல்லது தன்னார்வ நிறுவனங்களின் பொறுப்பு அல்ல. இந்த கணக்கெடுப்பின் நோக்கம் எந்த பணம் வழங்குதல் முன்னுரிமையை பங்களிப்பாளர்கள் ஒத்துக்கொள்வார்கள் அல்லது ஒத்துக்கொள்ளமாட்டர்கள் என்பதை எங்களுக்கு சொல்வதே ஆகும்.

To read more about the survey, and to take part, please visit the survey page. You may select the language in which to take the survey with the pull-down menu at the top.

This invitation is being sent only to those projects where the survey has been translated in full or in majority into your language. It is, however, open to any contributor from any project. Please feel free to share the link with other Wikimedians and to invite their participation.

If you have any questions for me, please address them to my talk page, since I won’t be able to keep an eye at every point where I place the notice.

Thank you! --Mdennis (WMF) (பேச்சு) 21:55, 5 மார்ச் 2012 (UTC)

சொல்வரலாறுகள்[தொகு]

ஒரு சொல்லின் வரலாற்றை (எப்பொழுதில் இருந்து என்ன பொருள்களில் ஆளப்பட்டது, எப்படி மாறி வந்தது) என்று அறிய நல்லதோர் அகரமுதலியைப் பார்ப்பது வழக்கம். ஆனால் சில அறிவியல், கணிதவியல் போன்ற துறைகளில் வழங்கும் சொற்களையும் சொற்கோவைகளையும் பற்றிய அறிய கீழ்க்காணும் இரண்டு வலைப்பக்கங்கள் உதவலாம் என்னும் கருத்தைப் பகிர்கின்றேன்:

(அண்மையில் "time domain" "frequency domain" என்னும் சொல்லாட்சிகள் எப்பொழுதில் இருந்து வழக்கில் இருக்கின்றன என்று அறிய முனையுபோது கண்டேன். தமிழிலும் இப்படியானவற்றைத் தொகுத்து வந்தால் பயனுடையதாக இருக்கும்.

--செல்வா (பேச்சு) 15:22, 6 மார்ச் 2012 (UTC)

கோவிந்த குமார் எனும் பக்கத்தின் பெயரை மாற்றக் கோரிக்கை[தொகு]

அன்பார்ந்த நண்பர்களே! உங்கள் பழைய நண்பனான நான் நீண்ட காலம் கழித்து மீண்டும் வந்துள்ளேன். உங்களுக்கு என்னை நினைவிருக்கும் என நம்புகிறேன்.

நண்பர்களே! இன்று எழுத்தாளர் திரு.மதன் அவர்கள் பற்றி நம் தமிழ் விக்கிப்பீடியாவில் பக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறதா என்று தேடினேன். இருந்தது. ஆனால் அஃது அவருடைய இயற்பெயரான கோவிந்த குமார் என்னும் பெயரில் இருக்கிறது. அவருடைய இயற்பெயர் யாருக்குத் தெரியும்? அவரைப் பற்றி அறிந்து கொள்ளத் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வருபவர்கள் மதன் எனும் அவருடைய புனைபெயரில்தான் தேடுவார்கள். எனவே அந்தப் பக்கத்தை மதன் என்று பெயர் மாற்றி அமைக்க வேண்டும்! எனக்கு அஃது எப்படி எனத் தெரியவில்லை. எனவே நீங்கள் யாராவது அதைச் செய்யக் கோருகிறேன்! மேலும் இப்படித் தவறாகப் பெயரிடப்பட்ட பக்கங்களின் பெயர்களைத் திருத்துவது எப்படி என்றும் யாராவது விளக்கினால் மகிழ்வேன்!!

--இ.பு.ஞானப்பிரகாசன் (பேச்சு) 15:59, 6 மார்ச் 2012 (UTC)

அதே பெயரில் மற்றொரு நபரிருந்ததால் பக்கவழி நெறிப்படுத்தியாயிற்று. தற்போது மதன் பக்கத்தைப் பார்க்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:10, 6 மார்ச் 2012 (UTC)

பார்க்க: பேச்சு:கோவிந்த குமார். ஆலமரத்தடியில் தகவல் இடும்போது அதன் அடிப்பகுதியில் இடுவது வழமை. குறிப்பிட்ட கட்டுரைகள் குறித்த கருத்துகளை அவற்றின் உரையாடல் பக்கங்களிலேயே இட வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 16:16, 6 மார்ச் 2012 (UTC)

சிறப்புக் கட்டுரைகள்...?[தொகு]

விக்கிப்பீடியாவில் தற்போது ஏதும் சிறப்புக்கட்டுரைகள் உருவாகவில்லையா? அது நின்று போனதற்கான காரணம் ஆள்பலக்குறையா அல்லது வேறேதும் காரணங்கள் உண்டா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:44, 7 மார்ச் 2012 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கக் காலத்தில், ஆங்கில விக்கி நடைமுறைகளை பின்பற்றி சிறப்புக் கட்டுரை தெரிவைத் தொடங்கினோம். சிறப்புக் கட்டுரைக்கான தர அளவீடுகள் கடுமையானவை என்பதாலும், பரிந்துரை - வாக்கெடுப்பு போன்ற கூடுதல் நடைமுறைகளாலும், முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்குப் போதுமான கட்டுரைகள் கிடைக்காததாலும் சிறப்புக் கட்டுரைத் தெரிவு தேக்கம் அடைந்தது. தமிழ் விக்கிப்பீடியாவின் தற்போதைய நிலையில், ஒரு சில கட்டுரைகளைச் சிறப்புக் கட்டுரைகளாக்கி அறிவிப்பதை விட, கூடுதலாக இன்னும் பல முதற்பக்கக் கட்டுரைகளை உருவாக்குவது நல்லது என்று தோன்றுகிறது. தமிழ் விக்கிப்பீடியா செப்டம்பர் 2013ல் பத்தாண்டு நிறைவைக் கொண்டாடும். அப்போது முதற்பக்கக் கட்டுரைத் தரத்தில் ஆயிரம் கட்டுரைகளோ திருக்குறளைப் போல் 1330 கட்டுரைகளோ இருந்தால் சிறப்பாக இருக்கும். --இரவி (பேச்சு) 16:00, 7 மார்ச் 2012 (UTC)

then now 451 first page essays are there. is it correct?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:17, 7 மார்ச் 2012 (UTC)

ஆம், 453 கட்டுரைகள். --இரவி (பேச்சு) 20:38, 9 மார்ச் 2012 (UTC)

451 என்பதே சரியானது. விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள், விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள் பரிந்துரைப்பு ஆகிய இரு கட்டுரைகளையும் சேர்த்துக் கொள்ள முடியாது. --மதனாஹரன் (பேச்சு) 04:10, 10 மார்ச் 2012 (UTC)

451 தான். கணக்கில் புலியாக இருக்கிறீர்களே :)--இரவி (பேச்சு) 07:12, 10 மார்ச் 2012 (UTC)
அனைவரும் இணைந்து ஒரு சிறப்புக் கட்டுரையை, மிகச்சிறப்பாக எழுத இயலுமா?பயனர்:தகவலுழவன்/கையொப்பம்


அன்புள்ள விக்கிபீடியா ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் , என் பெயர் ஜே .இளங்கோவன். திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலே 1983 -1985 பொருத்துநர் பிரிவில் படித்தேன். தற்சமயம் நான் படித்த திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலேயே பொருத்துநர் ஆசிரியராக பணிபுரிகிறேன்.உங்களது விக்கிபீடியாவின் உதவி கேட்டதும் கொடுக்கும் கடவுள் போல தகவல்களை உடனே கொடுக்கிறது.உங்கள் பணி இன்னும் பல்லாண்டுகள் தொடரவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.எனக்கு இதுவரை தேவையான தகல்கள் அனைத்தையும் விக்கிபீடியாவின் உதவியால்தான் பெற்றேன் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்ளுகிறேன்.மேலும் மேலும் இதற்கு என்னால் முடிந்த தகவல்களை என்னுடைய கருத்துகளை அளிக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துகோள்ளுகிறேன். நன்றி. ஜே .இளங்கோவன் .--Jelangovan (பேச்சு) 07:36, 17 மார்ச் 2012 (UTC)

List_of_Greek_and_Latin_roots_in_English[தொகு]

ஆங்கில/இலத்தீன்/கிரேக்க hyper, meta, micro, bio, hydr போன்ற மூல/வேர்ச் சொற்களுக்கு தமிழில் மொழிபெயர்க்கும் போது பொருந்தும் இடங்களில் ஒரே வேர்ச்சொற்களைப் பயன்படுத்துவது கலைச்சொல் ஒருமுகமாக்கலுக்கு உதவும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் இந்தப் பட்டியலில் தமிழ் வேர்ச் சொற்களை இணைத்து இங்கு ஆக்கலாம் என்று நினைக்கிறேன்: en:List_of_Greek_and_Latin_roots_in_English. --Natkeeran (பேச்சு) 16:57, 9 மார்ச் 2012 (UTC)

மிகவும் தேவையானது. அனைத்தும் ஒரே இடத்தில் இவ்வாறு இருப்பது புதிய சொற்களை உருவாக்குவதற்கு அவசியம் தேவையானது, இதை முன்கொண்டுவந்ததுக்கு நன்றி.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 20:22, 9 மார்ச் 2012 (UTC)
இவற்றையும் தமிழில் பெயர்க்கலாம். அறிவியற் பெயர்க் கூறுகளை அண்மையில் பெயர்த்து இருக்கின்றோம். பார்க்கவும்: இலத்தீன் கிரேக்க அறிவியற்பெயர்ப் பட்டியல் --செல்வா (பேச்சு) 20:30, 9 மார்ச் 2012 (UTC)
👍 விருப்பம் மிகத் தேவையான நல்ல பரிந்துரை. கலைச்சொல் ஒருமுகமாக்கலும் சீர்தரப்படுத்தலும் விக்கியில் மட்டுமன்றி பிறவெளிகளிலும் மிகவும் தேவையானதாகும்.--மணியன் (பேச்சு) 03:19, 10 மார்ச் 2012 (UTC)
நன்றி. நாம் தொடங்கலாம். கனடா சொற்கோவைக் குழுவின் உதவி பெற்று இறுதிப் படுத்திக் கொள்ளலாம். --Natkeeran (பேச்சு) 16:23, 10 மார்ச் 2012 (UTC)

வாழ்த்துக்கள்: இரவியின் ஏழு ஆண்டுகள் விக்கிப்பணி நிறைவு பெற்று எட்டாவது ஆண்டுத் தொடக்கம்[தொகு]

  1. தொடக்க நாட்களில் இருந்து ஏறத்தாழ இடையறாது பங்களித்து வரும் இரவின் விக்கிப்பணி இன்றோடு ஏழாண்டுகள் நிறைவு அடைந்து, எட்டாவது ஆண்டு தொடங்குகின்றது. அவருடைய அரிய பல பணிகளுக்கு நன்றியும் நல்வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய நாட்களில் மயூரநாதன் முதலிலும் பின்னர் இரவி, சுந்தர், சிவக்குமார், உமாபதி, கோபி, நற்கீரன், கனகு சிறீதரன் முதலோனோர் கூடி உழைத்துப் பின்னர் பலரும் வந்து பலவாறு வளர்ந்துள்ளது தமிழ் விக்கிப்பீடியா இன்று. அடித்தளம் அமைத்தவர்கள் இன்றும் உடன் இருந்து பங்களிப்பது பேருவகை அளிப்பது. தனி வாழ்வில் நல்வெற்றியும் உயர்ச்சியையும் எட்டவும், விக்கிப்பீடியா, அதன் உறவுத்திட்டங்களிலும் தொடர்ந்து உங்கள் பங்களிப்பு மேன்மேலும் செழிக்க வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன். --செல்வா (பேச்சு) 20:29, 10 மார்ச் 2012 (UTC)--செல்வா (பேச்சு) 02:45, 11 மார்ச் 2012 (UTC)
  2. இரவியின் விக்கிப்பணி ஏழு ஆண்டுகள் முடிந்து, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறதா? மகிழ்ச்சி. எட்டாம் ஆண்டில் மேலும் பல விக்கிப் பணிகளை மேற்கொண்டு பல்வேறு சிறப்புகளைப் பெற்றிட வாழ்த்துகிறேன். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:16, 11 மார்ச் 2012 (UTC)
  3. வாழ்த்துக்கள்! --மதனாஹரன் (பேச்சு) 02:33, 11 மார்ச் 2012 (UTC)
  4. வாழ்த்துக்கள்! மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்! --Anton (பேச்சு) 02:57, 11 மார்ச் 2012 (UTC)
  5. வாழ்த்துக்கள் இரவி! தங்கள் பணி மேன்மேலும் தொடர்ந்து, மேலும் பல சிறப்புகளையும் பெற இறைவனை வேண்டுகிறேன்.--பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:00, 11 மார்ச் 2012 (UTC)
    +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:32, 11 மார்ச் 2012 (UTC)
  6. விக்கிதிட்டங்களில் ஓரளவு நான் செயல்படுகிறேன் என்றால், அதற்கு முதன்மைகாரணம் இரவி. ஒருவேளை இரவி இல்லையென்றால், நான் கணினி, இணையம் என்பதனை பற்றி அறியாமலேயே, என் வாழ்க்கையைக் கடந்திருப்பேன். என்னையும் தொடர்ந்து அணுகி, என்னை மேம்படுத்தியமைக்கு நன்றி கூறி ,வாழ்த்த விரும்புகிறேன். வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
  7. வாழ்த்துக்களும் வணக்கங்களும் --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 06:32, 11 மார்ச் 2012 (UTC)
  8. ஒரு புத்தகம் வெளியிட்டுவிட்டு வெட்டி விளம்பரம் தேடிக்கொள்ளும் நம்மவர்களுக்கு மத்தியில் வெளி உலகிற்கு தெரியாமலே ஏழு வருடம் தமிழ் தொண்டாற்றிவரும் ரவி அவர்களுக்கும் அவர் போன்ற இன்னம் பல ஜாம்பவான்களுக்கும் கண்டிப்பாக இந்த தமிழ் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது. ரவி அவர்களுக்கு இணையத் தமிழ் தாத்தா என்று கூட பட்டம் தரல்லாம். :P வாழ்த்துக்கள் ரவிக்கு.. --எஸ்ஸார் 10:45, 11 மார்ச் 2012 (UTC)👍 விருப்பம்:)
  9. இரவி தங்கள் விக்கிப் பணி தொடர என் நல்வாழ்த்துகள்--shanmugam (பேச்சு) 10:52, 11 மார்ச் 2012 (UTC)
  10. வாழ்த்துக்கள் இரவி. தங்கள் பணி தொடரட்டும். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:56, 11 மார்ச் 2012 (UTC)
  11. வாழ்த்துக்கள்! உங்கள் பணி மேலும் சிறக்கட்டும். --கிருஷ்ணபிரசாத் /உரையாடுக 11:12, 11 மார்ச் 2012 (UTC)
    ஆலமரத்தடியில் எதற்கு? இரவியின் பேச்சுப் பக்கத்திலேயே வாழ்த்தலாமே?--Kanags \உரையாடுக 11:15, 11 மார்ச் 2012 (UTC)
    நல்ல நடைமுறை.இனி அப்படியே வாழ்த்துக்களைத் தெரிவித்து, தொடுப்பினை இங்கு தரலாம். பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
  12. வாழ்த்துக்கள் இரவி. ஏழாண்டுகள் என்பது கணிசமான காலம். இந்த ஏழாண்டு காலத்திலும் பல முனைகளிலிருந்தும் தமிழ் விக்கிக்குக் காத்திரமான பங்களிப்புச் செய்தவர்களுள் இரவி மிகவும் முக்கியமானவர். விக்கியின் நடைமுறைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு யாராயிருந்தாலும், தனக்குச் சரியென்று பட்டதை நேரடியாகவே எடுத்துக்கூறும் துணிவும், அதேபோல, மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்புக்கொடுத்து ஏற்றுக்கொள்வதிலும் பிற பயனர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர். பல ஆண்டுகளுக்கு முன்பே இணையத்துக்கு வெளியேயான தமிழ் விக்கிப் பணிகளில் ஈடுபட்டுத் த.வி.க்குப் புதிய பயனர்களை ஈர்ப்பதில் முன்னோடியாகத் திகழ்பவர். அவருடைய பணி நீண்டகாலம் தொடர வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 17:58, 11 மார்ச் 2012 (UTC)

அனைவரின் வாழ்த்துகளுக்கும் என உளமார்ந்த நன்றி. சுந்தர், மயூரநாதன் ஆகியோர் ஏற்கனவே எட்டு ஆண்டுகளைக் கடந்து அருமையான பங்களிப்புகளை அளிக்கிறார்கள். 2005/2006 ல் பங்களிக்கத் தொடங்கிய சிவக்குமார், உமாபதி, கோபி, நற்கீரன், கனகு சிறீதரன் முதலிய பலரும் இந்த மைல்கல்லை விரைவில் கடந்து விடுவார்கள். 2013 செப்டம்பரில் தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவைக் கொண்டாடும் போது, அனைவரின் பங்களிப்புகளையும் முறையாக ஆவணப்படுத்திச் சிறப்பிப்பது, அடுத்து வரும் பங்களிப்பாளர்களுக்கும் ஊக்கமூட்டுவதாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 19:55, 11 மார்ச் 2012 (UTC)

ஆவணப் படுத்துங்கள். நம்மை பற்றி நாம் தெரிந்து கொள்ளாமல் இருத்தல் சிறப்பல்லவே.முதல் இந்திய விக்கி மாநாட்டில்(மும்பை) சில தமிழ் விக்கிப்பீடியர்களைப் பற்றி பேசச்சொன்ன போது, விழித்தேன்.காரணம். அறியாமையே. இனி அவ்வறியாமைக்கு, நீங்கள் உருவாக்கப்போகும் ஆவணம் உதவுக்கூடும்.வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

அண்மைய மாற்றங்களை நாம் நிறைய பயன்படுத்துவதால் இது நமக்கு பயனளிக்குமென நினைக்கிறேன். இதனை default ஆக மாற்றுவதைப் பற்றி உங்கள் கருத்துக்களை பேச்சுப் பக்கத்தில் இடுங்கள். நன்றி ஸ்ரீகாந்த் (பேச்சு) 16:59, 11 மார்ச் 2012 (UTC)

நல்ல Gadget ஸ்ரீகாந்த். இதன் மூலம் அனைத்துப் பக்கங்களையும் திறந்து பார்க்க வேண்டிய வேலை இருக்காது. இது தளப்பராமரிப்பு பணிகளுக்கு மிக உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்... default ஆக மாற்றுவது நல்லது என கருதுகிறேன்..விக்கிப்பீடியா:விக்சனரி பார் போன்றதுதானே..:)--shanmugam (பேச்சு) 17:17, 11 மார்ச் 2012 (UTC)
இதனை மொழிபெயர்த்து உதவுங்கள் :) பயனர்:Logicwiki/strings-ta.js‎‎ . நன்றி ஸ்ரீகாந்த் (பேச்சு) 18:38, 11 மார்ச் 2012 (UTC)

வேறு பயனர் ஒருவரின் தனிப்பட்ட அமைப்புகள் காணப்படுவதால் இந்த JavaScript பக்கத்தை தொகுக்க உங்களுக்கு அனுமதி கிடையாது--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 19:17, 11 மார்ச் 2012 (UTC)

சுட்டியமைக்கு நன்றி பயனர்:Logicwiki/Navpops/ta பக்கத்தில் இட்டுள்ளேன். நன்றி ஸ்ரீகாந்த் (பேச்சு) 19:21, 11 மார்ச் 2012 (UTC)

சிறீக்காந்த், இதனை இயல்பிருப்பாக மாற்ற வேண்டாம். சில வாரங்களுக்கு முன்பு இதனைச் சோதித்துப் பார்த்த போது தளத்தை உலாவிப் பார்ப்பதற்கு மிகுந்த இடையூறாகவும் எரிச்சல் ஊட்டுவதாக இருந்தது. popups, tool tips போன்றவற்றைப் பயனர் தெரிவாகத் தருவதே நன்று. இயல்பிருப்பாகத் தருவது நல்ல வலைத்தள வடிவமைப்பு அன்று. 1% தளப் பராமரப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதற்காக 99% வாசகர்களுக்குத் தேவைப்படாத வசதியைத் திணிக்கக்கூடாது--இரவி (பேச்சு) 19:55, 11 மார்ச் 2012 (UTC)

இரவியின் நிலைப்பாடு சரியானதாகவே எனக்குத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 20:11, 11 மார்ச் 2012 (UTC)

விக்கிமேனியா 2012[தொகு]

  • தமிழ் விக்கிப்பீடியர்கள் யாரேனும் கலந்துகொண்டு கட்டுரை ஏதும் படிக்கின்றீர்களா? நான் தமிழ் விக்கிப்பீடியா பற்றியும் அதன் உறவுத்திட்டங்கள் பற்றியும் ஒரு கட்டுரை படிக்கலாமா என சிந்தித்து வருகின்றேன் (செல்வதாயின் இன்னும் 5-6 நாட்களுக்குள் சுருக்கம் அனுப்பவேண்டும்!).
  • ஏனோ விக்கிமேனியா 2012 அறிவிப்பு தமிழ் விக்கிப்பீடியாவில் இப்பொழுது காணோம் (ஆனால் பிற தமிழ் விக்கிப்பீடியா உறவுத் திட்டங்களில் தெரிகின்றது). ஏதும் வழுவா?

--செல்வா (பேச்சு) 02:55, 12 மார்ச் 2012 (UTC)

  • கலந்துகொள்வது ஊக்கத்தொகை,பயணம் பொருத்தே முடிவாகும், வாசிப்பதும் தேர்வு செய்யப்பட்டவுடனே தான் சொல்ல முடியும். பரப்புரை பற்றி நான் படிக்க நினைக்கும் wm2012:Submissions/Digital_Outreach_and_Physical_Outreach கட்டுரையில் தமிழ் விக்கியின் விக்கிப்பீடியா:தள அறிவிப்பு பற்றி பேச நினைக்கிறேன். சிறு விக்கிகளுக்கு தொழிற்நுட்ப உதவி என்னும் தலைப்பில் மற்றொரு கட்டுரையும் படிக்க நினைக்கிறேன். பார்க்கலாம் இவை ஒருங்கிணைப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப் படுகின்றதா என்று.
  • meta:Special:BannerAllocation யில் எதோ மாற்றியுள்ளார்கள். ஏனென்று தெரியவில்லை. ஸ்ரீகாந்த் (பேச்சு) 06:30, 12 மார்ச் 2012 (UTC)
நன்றி. நானும் ஒரு கட்டுரையை அனுப்ப இயலுமா என்று சிந்திக்கின்றேன். நான் கருதி இருந்ததும் ஒரு சிறிது உங்கள் கட்டுரையின் கருப்பொருள் போன்றதே (ஆனால் பல நாடுகளில் நேரடி அணுக்கம் -அறிமுகம் என்று எண்ணியிருந்தேன்). இப்பொழுது சற்று மாற்றி வடிக்க முயல்கின்றேன். இங்கும் தொடுப்பைத் தருகின்றேன். --செல்வா (பேச்சு) 14:42, 12 மார்ச் 2012 (UTC)
நானும் ஒரு கட்டுரைச் சுருக்கம் தந்துள்ளேன். தமிழ் விக்கிப்பீடியாவும் உறவுத்திட்டங்கள் சிலவும் வளர்ந்து வந்துள்ள பாதையையும், எதிர்கொண்ட சிக்கல்களையும் பற்றி சுருக்கமாக உரைத்து, எப்படி முன்னேறலாம் என்றும் கருத்துரைக்க உள்ளேன் (வாய்ப்புக் கிடைத்தால்) wm2012:Submissions/Tamil_WikiCulture_and_Outreach_Experience --செல்வா (பேச்சு) 21:37, 18 மார்ச் 2012 (UTC)
wm2012:Submissions/Helping_smaller_wikis_with_Mediawiki_Wikimedia_Technology_support என்ற மற்றொரு முன்மொழிவை இட்டுள்ளேன். (@செல்வா : வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம் :) ) ஸ்ரீகாந்த் (பேச்சு) 08:07, 19 மார்ச் 2012 (UTC)
ஆம், வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் சந்திப்போம்! :) இன்னொரு உதவியும் வேண்டும். விக்கிப்பீடியா ஊடகப் போட்டியைப் பற்றி நீங்களோ, வேறு யாரேனுமோ கட்டாயம் விக்கிமேனியாவில் பதிவு செய்ய வேண்டும். நீங்களோ பிறரோ பதிவு செய்யவில்லை எனில், நான் ஓரிரண்டு சிலைடில் (காட்சியுரைப் பக்கத்தில்) முன்னின்று நடத்தியவர்கள் பெயர்களோடு குறிப்பிட விரும்புவேன் (அதாவது என் கட்டுரை தேர்வு பெற்றால்). சோடாபாட்டிலோ, நீங்களோ (அல்லது கலை, நற்கீரன், த.உழவன், சூர்யா போன்று யயரேனுமோ) இந்த 1-2 காட்சியுரைப் பக்கம் (சிலைடு) தந்தால் நல்லது. நன்றி.--செல்வா (பேச்சு) 20:05, 19 மார்ச் 2012 (UTC)
ஊடகப் போட்டி அறிக்கை வந்தவுடன் இரு காட்சியுரைப் பக்கங்களில் அதைப் பற்றி எளிதாக விவரிக்க இயலும். கண்டிப்பாக முடியும். 06:56, 20 மார்ச் 2012 (UTC)

Updates from India Program Team[தொகு]

This is the first post from the India Program team regarding the team. I have been posting updates on the various mailing lists - but am acutely aware that the majority of our community is on village pumps or project pages and hence this post. Do excuse me for posting something which is not solely focused on this project, but the work we are doing has learnings that you might find useful for your project.

  • There is an India Program page on meta - which has links to a number of important workstreams (on the right of the page)
  • Here is your India Program team. Feel free to reach out for any help or to provide any suggestion - or just to say hello!
  • I submitted the following mid-year report to the community on January 15th 2011 - outlining the activities for 2011 and the priorities for 2012. Strictly speaking, this wasn't a mid-year report because it covered all of 2011, but going forward, I intend to make it a half-yearly affair. Please add your comments or suggestions here, or below this post.
  • I have recently started monthly updates. The monthly update for February is available here. Please add your comments or suggestion here. The areas of emphasis for March are here. Please add your comments or here. This is really useful for us to ensure that we are doing what you need most.
  • I have also started a new tab on the India Program page for Learnings, called Gyan. I think it is going to be a pretty cool place for us to put together a whole host of learnings, lessons, heartbreaks, Eureka moments and inspirations - gathered from all over the community. Stay tuned for more!
  • One of the essential things that India Program needs to constantly work out is keeping our community informed of the work that we are doing - so that this work is clearer but also to help cross-pollinate ideas amongst a wider set of community members who might not have been engaged on specific village pump / talk page discussion or involved in particular activities (e.g. outreach events) or wikiprojects. I propose to have a fortnightly IRC for the community with India Program. (For those who are not familiar with IRC, it is an Internet messaging system similar to a regular chat room. It's very simple to use and you can join in by clicking on the following link. This would be done on the 1st and 3rd Thursdays of every month at 9pm IST (which is GMT + 0530) - THOUGH NOT THIS MONTH - BECAUSE I HAVE MISSED THE TIMELINE. Just for March, we will do it on March 15th and March 29th (both at 9pm IST which is GMT + 0530). I suggest that these chats are focused on specific work streams. As with many community meet-ups - folks will give time to attend a meet-up or participate in an IRC only if there is a topic of relevance to them. Therefore, we will do one IRC on Indic languages and one on Outreach & Communications. The March 15th one will be focused on Indic Languages and the one on March 29th will be on Outreach & Communications. (All IRCs will start with a re-cap of India Programs activities.) There is quite a bit of overlap on these topics - so feel free to join both. Please do also invite anyone who is interested to know more about India Program or - even more importantly - interact with fellow Wikimedians. As always, the logs will be put up on meta for the benefit of those who can't attend and for the record.

Please feel free to translate this post for the benefit of the larger audience. In fact, I'd be really grateful if you did!

Hmundol (பேச்சு) 03:59, 12 மார்ச் 2012 (UTC)

சென்னையில் வரும் சனிக்கிழமை mw:Chennai_Hackathon_March_2012[தொகு]

குழுப்படம்
நினைவுப்படம்

விக்கி தொழிற்நுட்பம் சார்ந்து பங்களிக்க ஆர்வமிருந்தால் பதிவு செய்யவும். உங்களது யோசனைகளையும் mw:Chennai_Hackathon_March_2012/Ideas தெரிவிக்கவும். பி.கு :- இது பட்டறை / சந்திப்பு போல் அல்லாமல் இருக்கும்(பேச்சு குறைவு,செயல் அதிகம் என்பதே நோக்கம்). உங்களால் தொழிற்நுட்பம் சார்ந்து பங்களிக்க இயலாமல் இருந்தால் கூட, உங்கள் விக்கிப்பீடியா அனுபவம் கருவிகளை உருவாக்குவோருக்கு உதவியாக இருக்கும், முடிந்தால் வந்துதவவும். நன்றி ஸ்ரீகாந்த் (பேச்சு) 09:48, 14 மார்ச் 2012 (UTC)

நல்ல முயற்சி ஸ்ரீகாந்த், முடிந்தால் ஐஆர்சி அரட்டை ஒன்றை உருவாக்கி தவியில் பயனர்கள் சந்திக்கும் தொழில்நுட்பப் பிரச்சினைகள், பயனர்கள் விரும்பும் வசதிகள் போன்றவற்றை அங்கு கலந்துரையாடவும் அழைக்கலாம். -- மாகிர் (பேச்சு) 09:54, 14 மார்ச் 2012 (UTC)

அறிக்கை[தொகு]

நிரல் திருவிழா இனிதே நடைப்பெற்றது. சுமார் 20 பேர், 13 க்கும் மேற்பட்ட நிரலாக்கப்பணிகளில் இடுபட்டு தங்கள் ஆக்கங்களை நாளின் இறுதியில் செயல்முறை விளக்கம் தந்தனர். முழு விவரங்கள் இங்கே. தமிழ் விக்கித்திட்டங்களுக்காக / தொடர்பாக செய்யப்பட்ட ஆக்கங்களின் பட்டியல் இதோ.

  • பயனர்:Bharathkaush விக்கிப்பீடியா:குறுந்தொடுப்பு நிரலிலுள்ள பயனர்-இடைமுக(UI) வழுக்களைக் களைந்து, மேலும் சில முன்னேற்றங்கள் செய்தார். இது சில நாட்கள் சோதித்த பின்னர், பயன்படுத்தப்படும்.
  • பயனர்:Tshrinivasan தமிழ் விக்கிப்பீடியாயின் தரவுதளத்தை ஆய்வு செய்து தமிழ் சொற்களின் தொகுப்பு ஒன்று உருவாக்கும் முயற்சிகளில் இடுபட்டார். நிரல். நாம் மொத்தம் 1.3 மில்லியன் தனித்த சொற்களை(unique words) இத்தளத்தில் இட்டுள்ளோம். :)
  • பயனர்:Tshrinivasan சொற்களின் ஒலிக்கோப்புகளை எளிதாக பதிவு செய்து, பதிவேற்ற ஒரு பைத்தான் நிரல் எழுதியுள்ளார். நிரல்
  • ரஸ்ஸல் - சொற்களின் ஒலிக்கோப்புகளை எளிதாக பதிவு செய்ய ஆண்ட்ராய்டு மென்பொருளுக்கான நிரலை எழுதத் தொடங்கினார்.
  • பயனர்:Surya Prakash.S.A. தமிழ் விக்கிப்பீடியாவில் மேற்கோள்களை எளிதாக சேர்க்க ProveIT! கருவியையும், பெரிய பக்கங்களை இதழ் வடிவில் விரைவுப் படிப்பான் கருவியையும் நிருவியுள்ளார்

இவர்களுக்கு நமது சிறப்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்வோம் :) ஸ்ரீகாந்த் (பேச்சு) 18:26, 20 மார்ச் 2012 (UTC)

நிரல் திருவிழா. நன்றாக உள்ளது. நன்றிகள். நல்ல முன்னெடுப்பு. --Natkeeran (பேச்சு) 19:41, 20 மார்ச் 2012 (UTC)
தனித்துவம் வாய்ந்த சிறப்பான முயற்சி. குறிப்பாக, யுவி, அருண்மொழி, சீனிவாசனுக்கும் ஒருங்கிணைத்த சிறீக்காந்துக்கும் நன்றி. மீடியாவிக்கி உலகில் தமிழ் நிரலாளர்களின் புகழ் ஓங்க வாழ்த்துகள் :)--இரவி (பேச்சு) 03:37, 21 மார்ச் 2012 (UTC)
அருமையான செய்தி, சிரீகாந்து! நிகழ்வை ஒருங்கிணைத்தவர்களுக்கும் பங்களித்தவர்களுக்கும் வாழ்த்துகள். மீடியாவிக்கியில் வேறெந்த விக்கியையும் விடக் கூடுதலாக தமிழ் விக்கித் திட்டங்களுக்கு நுட்பப் பங்களிப்புகள் வர விரும்புகிறேன். அதற்கான வாய்ப்பும் தெரிகிறது. -- சுந்தர் \பேச்சு 03:47, 21 மார்ச் 2012 (UTC)

45,000 கட்டுரைகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகள் 45,000 தொட்டுவிட்டது. விரைவில் நம் நெடுநாளைய இலக்கான 50,000 தொட்டுவிடும். விக்கிப்பீடியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:33, 15 மார்ச் 2012 (UTC)

நல்ல செய்தி. விக்கிப்பீடியா:மைல்கற்கள் பார்த்தால், சனவரி 2011 முதல் சனவரி 2012 வரை, அதாவது 27000 கட்டுரைகள் முதல் 44000 கட்டுரைகளை வரை, மாதம் ஆயிரம் அல்லது அதற்குக் கூடுதலான கட்டுரைகள் ஆக்கி வந்துள்ளோம். இந்தக் கடைசி ஆயிரம் கட்டுரைகளுக்கு மட்டும் ஏறத்தாழ 50 நாட்கள் எடுத்துள்ளோம். சூலை 2010 முதல் சனவரி 2011 வரையும் கூட இதே நிலையில் இருந்தோம். ஆனால், தற்போது ஊடகப் போட்டி, குறுந்தட்டுத் திட்டம், பல்வேறு விக்கித் திட்டங்கள் காரணமாக, தொகுப்பு எண்ணிக்கை கூடியுள்ளதும் கட்டுரைகள் ஆக்கும் வேகம் குறைந்துள்ளதும், தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைக் கூட்ட உதவும். 50000 கட்டுரைகளை அடையும் முன் ஏற்கனவே உள்ள கட்டுரைகளின் தரத்தை உயர்த்துவதில் அனைவரும் கவனம் செலுத்தி உழைத்தால் நன்றாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 07:46, 15 மார்ச் 2012 (UTC)

எனக்கும் அது தோன்றியது. நான் தரப்படுத்துதல் பணியை இன்னும் ஒரிரு மாதங்களில் துவங்கிவிடுவேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:54, 15 மார்ச் 2012 (UTC)
👍 விருப்பம் --ஸ்ரீதர் (பேச்சு) 01:25, 17 மார்ச் 2012 (UTC)

குறுங்கட்டுரைகள்...?[தொகு]

தற்போது ஒரு வரிச் செய்திகள் அல்லது இரண்டு வரிச் செய்திகளெல்லாம் கட்டுரைகளாக இடம் பெற்று வருகின்றன. இப்படி ஓரிரு வரிச் செய்திகளைக் கட்டுரைகளாக ஏற்றுக் கொண்டால் ஒரே நாளில் ஆயிரம் கட்டுரைகளைக் கூட உருவாக்கி விடலாம். இது சரியா? குறுங்கட்டுரை என்றால் என்ன? அதற்கென ஏதாவது வரைமுறை இருக்க வேண்டும். இப்படியே சென்றால் கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகமாகலாமே தவிர... தரம் குறைந்து போய் விடும் என்பதை உணராமல் பலரும் இருந்து வருகின்றனர். இது போன்ற கட்டுரைகளை உடனுக்குடன் நீக்க வழி வகை செய்ய வேண்டும். ஒரு மாத கால இடைவெளி கொடுத்து நீக்கலுக்கான அறிவிப்பு என்பது அவசியம் எனக் கருதும் சில முக்கியத் தலைப்புகளுக்கு மட்டுமே இருக்க வேண்டும். பிற கட்டுரைகளை உடனுக்குடன் நீக்கம் செய்வதே சரியானது என கருதுகிறேன். இது குறித்த ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:09, 17 மார்ச் 2012 (UTC)

நீங்கள் குறிப்பிடுவது இதையா?. மன்னிக்க இது எனது பயனர்வெளியில் அல்லவா இருக்கிறது? -- மாகிர் (பேச்சு) 12:33, 17 மார்ச் 2012 (UTC)
சில எடுத்துக்காட்டுக் கட்டுரைகளைக் குறிப்பிட முடியுமா? ஒரு சில பயனர்களே இவ்வாறு தொடர்ந்து பங்களித்தால் அவர்கள் பேச்சுப் பக்கத்தில் விளக்கி வேண்டுகோள் விடுக்கலாம். நன்றி--இரவி (பேச்சு) 15:38, 17 மார்ச் 2012 (UTC)
பரம்பரை, உறவினர், மாலை‎ போன்ற சில கட்டுரைகள் ஓரிரு வரிகளில் இடம் பெற்றுள்ளன. இது போன்ற கட்டுரைகள் நல்ல தலைப்புகளாக இருந்தாலும் இதைத் தொடங்கியவர் பின்னர் விரிவாக்கம் செய்யாமல் இருந்தால் இது துணுக்குச் செய்தியாகவே தொடர்ந்து இருக்கும். இது போன்ற கட்டுரைகளை சோதனை முயற்சியாகக் கருதி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்பதுதான் என் கருத்து. இக்கட்டுரைகளை உள்ளடக்கம் போதாது என்று நீக்கவும் முடியவில்லை. குறுங்கட்டுரை என்பதற்கு ஏதாவது ஒரு அளவீடு இருக்க வேண்டும். அப்போதுதான் சிறப்பான கட்டுரைகளை உருவாக்க முடியும். சில குறுங்கட்டுரைகளை நானே கூட தொடங்கிவிட்டு அதை விரிவாக்கம் செய்யாமல் இருக்கிறேன். சில குறுங்கட்டுரைகளை உருவாக்கியவர் மட்டுமே விரிவாக்கம் செய்வதாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது இடம் பெற்றுள்ள அனைத்துக் குறுங்கட்டுரைகளும் விரிவாக்கம் செய்ய ஏதாவது முயற்சிக்க வேண்டும். தாங்கள் இப்போது அனைத்துப் பக்கத்திலும் ”கீழ்க்காணும் முக்கிய கட்டுரைகளை உருவாக்கி உதவிடுங்கள்.” எனும் தலைப்பில் சில ஆங்கில விக்கிப்பீடியாக் கட்டுரைத் தலைப்புகளை இடுவது போல் தமிழ் விக்கிப்பீடியாவிலிருக்கும் அனைத்துக் குறுங்கட்டுரைகளையும், தினசரி ஐந்து கட்டுரைகள் வீதம் விரிவாக்கம் செய்து உதவிடுங்கள் என செய்தி இடலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:15, 17 மார்ச் 2012 (UTC)

எனக்கொரு ஐயம். பொதுவாக சில கட்டுரைகளைப் பற்றிய தரவுகள் சிலவே இருக்கும். அவற்றை மேம்படுத்த முடியாத பட்சத்தில் அவற்றை எவ்வாறு மேம்படுத்துவது. அளவில் சிறிதாக இருந்தாலும் நிரம்ப தகவல்கள் இருப்பின் அதை எப்படி குறுங்கட்டுரையாக்க முடியும். உதாரணம் குலசேகர பாண்டியன் (புராணம்)--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:17, 18 மார்ச் 2012 (UTC)

நீங்கள் குறிப்பிட்ட கட்டுரையில் //வம்சாவளி கூறும் பாண்டியர் இலக்கியங்களிலும் புராணங்களிலும் குறிப்பிடப்படும் தொன்பியல் பாண்டியர்களுள் ஒருவன்// எனத் தரப்பட்டிருக்கிறது. எந்த இலக்கியம், புராணம், மற்றும் இலக்கியங்களில் உள்ள வரிகள் போன்றவற்றைத் தந்தால் கட்டுரை முழுமை பெறும்.--Kanags \உரையாடுக 08:34, 18 மார்ச் 2012 (UTC)

அதைக்கொடுத்து முழுமையாக்கினாலும் ஒரு வரி மட்டுமே கூடும். நான் கேட்பது என்னவெனில் 5 வரிகள் இருந்தாலும் அவற்றில் நிரம்ப தகவல்கள் இருப்பின் அவற்றை குருங்கட்டுரை ஆக்குவீர்களா என்பதே?

//:நீங்கள் குறிப்பிட்ட கட்டுரையில் //வம்சாவளி கூறும் பாண்டியர் இலக்கியங்களிலும் புராணங்களிலும் குறிப்பிடப்படும் தொன்பியல் பாண்டியர்களுள் ஒருவன்// எனத் தரப்பட்டிருக்கிறது. எந்த இலக்கியம், புராணம், மற்றும் இலக்கியங்களில் உள்ள வரிகள் போன்றவற்றைத் தந்தால் கட்டுரை முழுமை பெறும்.//

இதற்கான பதில் அக்கட்டுரையிலேயே உள்ளதே..! --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:06, 18 மார்ச் 2012 (UTC)

நாம் அனைவருமே ஏதோ ஒரு கட்டத்தில் குறுங்கட்டுரைகள் உருவாக்கியுள்ளோம். அவற்றில் பல அப்படியே உள்ளன என்பதும் உண்மை. ஆகவே, குறுங்கட்டுரைகளைச் சோதனை முயற்சியாகவோ எண்ணிக்கையை உயர்த்துவதற்கு என்றே செய்வதாகவோ எண்ணிவிட முடியாது. புதுப்பயனர்களின் கட்டுரைகளை நீக்கினாலோ குறுங்கட்டுரைகளைத் தவிர்க்கச் சொல்லி கடுமையாக வலியுறுத்தினோலோ அவர்களின் ஊக்கம் குன்றவும் வாய்ப்புண்டு. இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேம்படுத்த வாய்ப்பே இல்லாத, கூடுதல் தரவுகளே இல்லாத குறுங்கட்டுரைகளை விட்டு விடலாம். இவற்றில் ஒரே துறை, கரு தொடர்புடைய பல குறுங்கட்டுரைகள் இருந்தால் அவற்றை இணைத்துப் பட்டியல் பக்கமாக்குவது குறித்து உரையாடலாம். மேம்படுத்த வாய்ப்புள்ள குறுங்கட்டுரைகளை நாம் அவ்வப்போது விரிவாக்கி வந்தால் அவற்றைக் காணும் புதுப்பயனர் உள்ளிட்ட மற்றவர்களும் உந்துதல் பெற்று கட்டுரைகளை விரிவாக்கக்கூடும். முக்கியமான குறுங்கட்டுரைகளை விரிவாக்கச் சொல்லி அண்மைய மாற்றத் தூண்டல்கள் இடுவது நல்ல வழி. தற்போது அங்கு, குறுந்தட்டுத் திட்டம், முக்கிய கட்டுரைகள், இவ்வாரக் கூட்டு முயற்சி என்று ஏகப்பட்ட வேண்டுகோள்கள் இருப்பதால் கவனம் சிறத வாய்ப்பு உள்ளது. எனவே, இவற்றில் சிலவற்றை முடித்துக் கொண்ட பிறகோ சுழற்சி முறையிலோ இவ்வேண்டுகோள்களை இடுவோம். மொத்தத்தில், மேம்படுத்த வாய்ப்பில்லாத, தனிக்கட்டுரையாக இருக்கத் தேவையில்லாதவற்றை மட்டுமே நீக்குதல் நன்று. --இரவி (பேச்சு) 07:54, 19 மார்ச் 2012 (UTC)

அடிப்படை விதிகளுக்கு உட்பட்ட குறுங்கட்டுரைகளில் எந்தத் தவறும் இல்லை. அவை வரவேற்கப்படுகின்றன. --Natkeeran (பேச்சு) 19:43, 20 மார்ச் 2012 (UTC)
மிகவும் சிறிதாக இருக்கிறது என்பதற்காக எல்லாக் கட்டுரைகளையுமே நீக்க வேண்டும் என்பதில்லை. குறிப்பாகப் புதுப்பயனர்கள் எழுதும் கட்டுரைகளை நீக்கும்போது கவனம் தேவை. புதுப் பயனர்கள் பழக்கத்துக்கு வரச் சிறிது காலம் எடுக்கக்கூடும். பொதுவாகக் குறுங் கட்டுரைகள் குறித்துச் சில அடிப்படையான புரிதல்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.
1. குறுங் கட்டுரைகளை எழுதுவது தவறு அல்ல.
2. குறுங்கட்டுரைகள் பயனுள்ள தலைப்புக்களில் இருந்தால் அவற்றை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
3. பிற்காலத்தில் விரிவாக்கக்கூடிய வகையில் விடயங்கள் கிடைக்கக்கூடிய தலைப்பாக இருத்தல் நல்லது.
4. குறுங்கட்டுரையாக இருந்தாலும் அந்த அளவில் பயனுள்ளதாகவும் சரியான தகவல்களைக் கொண்டதாக இருக்கவேண்டும்.
பல குறுங்கட்டுரைகள் நீண்ட காலத்துக்குப் பின்னர் கூட விரிவாக்கம் பெற்றுள்ளன. எனவே, கட்டுரைகளைத் தனித்தனியாகப் பார்த்து முடிவு செய்வது நல்லது. --மயூரநாதன் (பேச்சு) 04:44, 24 மார்ச் 2012 (UTC)

Animation மொழிபெயர்ப்பு[தொகு]

Animation-ஐ எவ்வாறு தமிழாக்கம் செய்வது? அனிமேஷன், அசைவூட்டம், இயக்கமூட்டம் என்று சில இடங்களில் பார்த்திருக்கிறேன். இவற்றை விட சிறந்த தமிழாக்கம் உள்ளதா?--அஸ்வின் (பேச்சு) 02:28, 18 மார்ச் 2012 (UTC)

அசைவூட்டம் என்பதே பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது. அதனையே பயன்படுத்துவது நல்லது. --மதனாஹரன் (பேச்சு) 02:31, 18 மார்ச் 2012 (UTC)
நன்றி மதனாஹரன். அசைவூட்டம் என்றே பயன்படுத்துகிறேன். --அஸ்வின் (பேச்சு) 04:32, 18 மார்ச் 2012 (UTC)
அசைபடம் என்பது நல்ல சொல். ஏனெனில் ஊட்டம் என்னும் பின்னொட்டு பொருந்திவரவில்லை. திரைப்படமும் அசைபடம்தானே எனில், ஆம். எனினும் அக்குழப்பம் animation என்பதிலும் உண்டு. வழக்கு பற்றியே பொருள் உறுதிப்படும். நிகழ்படம் = video, அசைபடம் = animation. இயங்குபடம் என்றும் இன்னொரு சொல் அசைபடத்துக்கு உண்டு (பார்க்கவும் animation. இக்கேள்விகளைக் கலைச்சொல் ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கலாம்.--செல்வா (பேச்சு) 19:54, 18 மார்ச் 2012 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் இயங்குபடம் என்ற பெயரில் தான் கட்டுரை உள்ளது. --மயூரநாதன் (பேச்சு) 18:46, 19 மார்ச் 2012 (UTC)

கொண்டல் மலர்[தொகு]

கொண்டல் மலர்?

படத்தில் காட்டியுள்ளது சரியான மலரா? இலக்கிய மேற்கோள் தருக.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

கொண்டல் மலரா? கொன்றை (Cassia fistula) மலரா? அல்லது இரண்டும் சரியா? இரண்டும் ஒன்றுதான் என்றால் படம் சரியானது தான். சிவபிரான் கொன்றை மலரைச் சூடுபவராக சைவசமயம் கூறுகிறது. இதனால் தேவாரங்களில் பல இடங்களில் இது வருகிறது. எடுத்துக்காட்டு: "பொன்னார் மேனியனே .....மின்னர் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே ...." சங்க இலக்கியங்களில் இருப்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. விக்கிப்பீடியாவில் கொன்றை--மயூரநாதன் (பேச்சு) 18:29, 19 மார்ச் 2012 (UTC)

---

கொண்டல் என்பது கிழக்கில் இருந்து வீசும் காற்றின் பெயர். மேகம் எனவும் பொருள் தரும் கொண்டல் வண்ணன் -திருமால்; கொன்றை என்பதே சரி. கொண்றை என்பது தவறு
சான்று
  • காயா கொன்றை நெய்தல் முல்லை(ஐங்குறுநூறு 412 , பேயனார், முல்லைத் திணை – தலைவன் சொன்னது)
  • கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை
    (ஔவையார், கொண்றை வேந்தன்)
  • ”பொன்னெனமலர்ந்த கொன்றை மணியென(ஐங்குறுநூறு 420, பேயனார், முல்லை திணை – தலைவன் சொன்னது)
  • கதுப்பில் தோன்றும் புதுப்பூங் கொன்றை(குறுந்தொகை 21 – ஓதலாந்தையார், முல்லை திணை – தலைவி தோழியிடம் சொன்னது)
  • காசி னன்ன போது ஈன் கொன்றைகுருந்தோடு அலம் வரும் ( குறுந்தொகை 148, -இளங் கீரந்தையார், முல்லை திணை )
  • புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ
    பொன் எனக் கொன்றை மலர மணிஎன (நற்றிணை 242 விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார், முல்லை திணை – தலைவன் சொன்னது)
  • காயாங் குன்றத்துக் கொன்றை போல(நற்றிணை 371 – ஒளவையார், முல்லைதிணை – தலைவன் சொன்னது)
  • பைங்காற் கொன்றை மெல்பிணி அவிழ(அகநானுறு 4, பாடியவர் – குறுங்குடி மருதனார், திணை -முல்லை, தோழி தலைவியிடம் சொன்னது)

--பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:59, 19 மார்ச் 2012 (UTC)

விக்கிப்பீடியா திட்டம் சாராத பொதுவான கேள்விகளுக்கு விக்கிப்பீடியா:உசாத்துணைப் பக்கம் உள்ளது. உரையாடலை அங்கு தொடரலாமா? நன்றி--இரவி (பேச்சு) 19:09, 19 மார்ச் 2012 (UTC)


நன்றி பார்வதிஸ்ரீ, இப்பொழுதான் பார்த்தேன். கலித்தொகையிலும்: "மெல்லிணர்க் கொன்றையும் மென்மலர்க் காயாவும்" முல்லைக்கலி மூன்றாம் பாடல். ---மயூரநாதன் (பேச்சு) 19:12, 19 மார்ச் 2012 (UTC)

இந்தப் பூவின் பெயர் சரக்கொன்றை. :) மன்னன் போரில் வெற்றி பெற்றால் இந்த மலரால் அவனுக்கு மாலை அணிவிப்பர். வெறும் கொன்றை மலர் என் கல்லூரியில் நிறைய உள்ளது. கூடியவிரைவில் படம் எடுத்து அனுப்புகிறேன். :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 09:34, 21 மார்ச் 2012 (UTC)
விளக்கங்களுக்கு நன்றி. இங்கும் உரையாடப்பட்டுள்ளது. இனி உசாத்துணைப் பக்கமே வினவுகிறேன்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்