உறவினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உறவினர் என்பவர், ஒருவருடைய குடும்பத்தை சேர்ந்தவராகவோ அல்லது ஒரே குடும்பத்தில், பெண் எடுத்தவராகவோ அல்லது பெண் கொடுத்தவர்களாகவோ இருப்பார்கள். இவர்களுக்கு மத்தியில், இரத்த பந்தம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கும்.[1][2]

உறவுமுறை[தொகு]

உறவுமுறை பற்றி மேலும் பார்க்க உறவுமுறை

ஒரு மனிதன் பிறக்கும்போதே தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் எனப் பல உறவினர்கள் இருப்பார்கள். அந்த மனிதன் மணம் செய்யும்போது அவனின் துணைவர்கள் வழியிலும் புதிய உறவுகள் சேர்கின்றன. பிள்ளைகள் பிறக்கும்போது உறவினர் வட்டம் விரிந்து கொண்டு செல்கின்றது. ஆயினும், ஒருவரைப் பொறுத்து அமையும் உறவுகள் எல்லாமே ஒரே விதமானவை அல்ல. சில மற்றவற்றை விட முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. சில உறவுகள் மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. வேறு சில உறவுகள்மே ம்போக்கானவையாக இருக்கின்றன.

நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்[தொகு]

நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள் பற்றி மேலும் பார்க்க நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்

ஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகின்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன. அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர்களையும் மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்பெயர்களில் காணலாகின்றது. மேலும் தமிழ்ச்சொற்கள் தக்கபடி இணைவு பெற்று முறைப்பெயர்கள் உருவாக்கப்பெற்றுள்ளன. இப்பெயர்களைப் பொதுப் பெயர்கள், குடும்பப்பெயர்கள், நெருங்கிய உறவினர் பெயர்கள், தூரத்து உறவினர் பெயர்கள் என்ற நிலைகளில் பகுத்துக்காண இயலுகின்றது.

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "உறவினர்". http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8. பார்த்த நாள்: அக்டோபர் 17, 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "உறவினர் சிகாகோ தளத்தில்". http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&table=winslow. பார்த்த நாள்: அக்டோபர் 17, 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறவினர்&oldid=3235570" இருந்து மீள்விக்கப்பட்டது