உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு02

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Suggestions for wikipedia development

[தொகு]

Article development

[தொகு]

இன்று ஒரு தகவல்

[தொகு]

தமிழ் விக்கிபீடியாவில் கவனிக்கப்படாமல் புதைந்திருக்கும் கட்டுரைகளை பங்களிப்பாளர்கள் மற்றும் பயனர்களின் பார்வைக்கு கொண்டுவரும் வகையில் முதற் பக்கத்தில் இன்று ஒரு தகவல் என்று ஒரு பகுதியைக் கொண்டு வரலாம். ஆங்கில விக்கியில் உள்ள en:Wikipedia:Did you know போலவே ஆனால், புதிய மற்றும் பழைய கட்டுரைகளில் இருந்தும் தகவல்களைத் தரலாம். தகவல் ஏதேனும் ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே தேவை, அது ஆர்வமூட்டுவதாக இருந்தால் கூடுதல் நலமே ஒழிய இன்றியமையாதது இல்லை. இதற்கென விக்கிபீடியா:தகவல் காத்திருப்பு வரிசை ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் எவர் வேண்டுமானாலும் தகவல்களை வரிசையின் இறுதியில் இணைக்கலாம். ஒவ்வொரு நாளும் யாராவது வரிசையின் முதலில் இருக்கும் தகவலை முதற்பக்கத்திலிருந்து இணைப்பு கொடுக்கப்பட்ட ஒரு வார்ப்புருவில் (வார்ப்புரு:இன்று ஒரு தகவல்) இற்றைப்படுத்தலாம். இந்த திட்டத்தைப் பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும். -- Sundar \பேச்சு 12:41, 4 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

சுந்தர், இது குறித்து முன்னரே நினைத்திருக்கிறேன். நீங்கள் சிவகுமாரின் பேச்சுப் பக்கத்தில் சொன்னது மாதிரி உங்களுக்கு தெரியுமா என்ற தலைப்பில் இதை தொடங்கலாம். இப்படி செய்வதால் தினந்தோறுமோ வாரந்தோறுமோ கட்டாயம் இற்றைப்படுத்த வேண்டிய அவசியத்தை தவிர்க்கலாம். சுவையுள்ள தகவல்களும், வழமையாக இற்றப்படுத்தும் அளவுக்கு பங்களிப்பாளர் எண்ணிக்கையும் அவர்களின் பங்களிப்பு நேரமும் கூடும் போது அவரவர் வசதிக்கு ஏற்ப அடிக்கடி முதற் பக்கத்தை இற்றைப்படுத்திக்கொள்ளலாம். விக்கிபீடியா:தகவல் காத்திருப்பு வரிசை பக்கத்தை உருவாக்குவது நல்ல ஆலோசனை. அப்புறம், ஆலமரத்தின் படம் நன்றாக உள்ளது :)--ரவி (பேச்சு) 09:55, 5 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

மறைந்து, மறந்து இருக்கின்ற கட்டுரைகளைப் பயனர்கள் கவனத்துக்குக் கொண்டுவர இந்தத் திட்டம் உதவும். ரவி குறிப்பிட்டதுபோல் தினமும் இற்றைப்படுத்த முடியாவிட்டால்கூடப் பரவாயில்லை. அவசரப்பட்டு மாற்றினாலும் போதியளவு கவனத்தைப் பெறாமல் போய்விடக்கூடும். நல்ல திட்டம். Mayooranathan 13:48, 5 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

wikipedia maintenance

[தொகு]

நான் சில தகவல்களை மாற்றி மாற்றி கொடுத்திருப்பேன் கூடிய விரைவில் சரி செய்கிறேன் அல்லது தாங்ளே செய்து விடுங்கள்

என்னார்

Announcements

[தொகு]

Translate category names

[தொகு]

ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து கட்டுரைகளை இங்கு paste செய்யும்போது, குறைந்த பட்சம் முதலில் பக்கவகைகளை மொழிபெயர்க்க முயலலாம். இல்லாவிட்டால், பக்கவகைகள் அட்டவணை பக்கத்தில் ஏகப்பட்ட சிகப்பு இணைப்புகள் உருவாகின்றன. பின்னர், அவற்றை அழிப்பது ஒரு தனி வேலையாகிவிடக் கூடும் :( மொழிபெயர்க்க இயலாத பக்கவகைகளைப் பற்றி உரையாடல் பக்கத்தில் ஆலோசனை கேட்கலாம். --ரவி (பேச்சு) 15:49, 27 மே 2005 (UTC)[பதிலளி]

Technical issues

[தொகு]

(suggestions from previous discussions added in appropriate help pages)

Software upgrade

[தொகு]

I find that the mediawiki software that we use here is at least two versions behind that of the English 'pedia. Mayooranathan, how to do software upgrade etc? Talk to Brian or Angela? Also, when we do the software upgrade, we can include the Javascript editor as an opt-in feature. Before that, we need to test it out thoroughly. -- Sundar 08:45, 8 ஏப் 2005 (UTC)

சுந்தர், நீங்களும் மற்றும் பலரும் விக்கி நிர்வாக நுட்ப விடயங்களிலும் கவனம் செலுத்திவருவது நன்று. எனக்கு PHP and XML இன்னும் பரிச்சியம் இல்லை. (நேரம் வரும்பொழுது படிப்பதாகத்தான் தீர்மானம்.) ஆங்கில விக்கிபீடியாவிற்கு இணையாகவே நாமும் இன்றைப்படுத்துவது நல்லதாகவே படுகின்றது. மேலும், தமிழ் விக்கிபீடியாவின் இன்றைய நிலையை குறுவட்டில் சேமித்து யாரவது பெற்று கொண்டாலும் நன்று. --Natkeeran 04:17, 20 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]
The software is now up-to-date. However, we can add some Tamil specific features as we get time. And, I currently do not have a CD writer. Let's at least download the archive from en:Wikipedia:Download. -- Sundar \பேச்சு 10:26, 21 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

உள்வரும் இணைப்புகளைப் பற்றிய புள்ளி விவரங்கள்

[தொகு]

இந்த இணைய வசதியைக் கொண்டு தமிழ் விக்கிபீடியாவிற்கு வரும் இணைப்புகளைப் பார்த்தேன். பெரும்பாலும் பிறமொழி விக்கிபீடியாக்களிலிருந்தே இணைப்புகள் வந்தாலும், பல வலைப்பதிவுகளிலிருந்து இணைப்பு வருதல் கண்டு மகிழ்ச்சி. இதில் சந்தோஷ்குருவின் முயற்சி ஒரு மையப் பணி ஆற்றியிருக்கிறது. மொத்த பக்கங்கள் 43,489 என்று கண்டு அதிர்ந்தேன். பின்னர் தான் சிவப்பு இணைப்புகளையும் சேர்த்து என்று புரிந்தது. நமக்கு இன்னும் எவ்வளவு பணியிருக்கிறது என்பதை இது உணர்த்தும்.

இந்த பயணியில் நம் தளத்திலிலுள்ள அனைத்து பக்கங்களையும் பட்டியலிடச் செய்து ஒவ்வொரு தனிக் கட்டுரைக்கு அருகிலும் உள்ள இணைப்பினூடே சென்றால் அந்த கட்டுரைக்கு மட்டுமான புள்ளி விவரங்களைப் பார்க்கலாம். அதன்மூலம் அந்த கட்டுரைக்கு யாரேனும் இணைப்பு தந்திருக்கிறார்களா எனவும் அறியலாம்.

இதன் மூலமும் நாம் ஒவ்வொரு பக்கத்திற்கும் உள்ளிணைப்புகளைப் பார்க்கலாம், ஆனால் மொத்த தளத்திற்கும் பார்ப்பது எப்படி எனத் தெரியவில்லை. -- Sundar \பேச்சு 04:59, 30 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

மீடியாவிக்கி தொழில்நுட்ப விபரம் - பக்க வரலாறை வெட்டி ஒட்டும் நகர்த்தல் வசதி

[தொகு]

முதன் முறையாக பக்க வரலாறை வெட்டி ஒட்டும் நகர்த்தல் வசதியை பயன்படுத்திப் பார்த்துள்ளேன். பார்க்க: [1], en:Wikipedia:How to fix cut and paste moves. -- Sundar \பேச்சு 05:21, 17 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

மீயுரைத் துண்டுகளை உட்புகுத்துவது எப்படி

[தொகு]

கட்டுரையை தொகுக்கும்போது html code-களை எழுத வேண்டும். இதனை விக்கிக்கு தொந்தரவில்லாமல் இணைப்பது எப்படி? --முஃப்தி 20:01, 6 டிசம்பர் 2005 (UTC)

எடுத்துக்காட்டிற்காக மீயுரைத் துண்டுகளைத் (HTML segments) தர விரும்பினால் <pre> </pre> என்ற குறியீட்டைப் பயன்படுத்தவும். இந்த துண்டுகளுக்கிடையே நீங்கள் உட்புகுத்தும் எவையும் விக்கி மென்பொருளால் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது உள்ளபடி தென்படும். எடுத்துக்காட்டு:
<html>
<b>Hai</b>
</html>
மற்றபடு, செயல்படக்கூடிய மீயுரைத் துண்டுகளை இணைக்க வேண்டாம். -- Sundar \பேச்சு 05:09, 7 டிசம்பர் 2005 (UTC)

தமிழ் விக்கிபீடியா மேன்படுத்தல் - சில சிந்தனைகள்

[தொகு]

நான் இங்கு பலர் உரையாடுவதை பற்றி கவனித்துகொண்டுதான் வருகின்றேன். சில சிந்தனைகளை குவியவைத்து பகிரலாம் என்று இருந்தேன், எனினும் சில பகிர்வுகள்.


நீங்களும் பங்களிக்கலாம் பக்கத்தில்: எப்படி கணக்கு ஏற்படுத்தல் என்பதை பற்றி தெளிவாக குறிப்பிடல் வேண்டும். புதிய விக்கி பயனாளர்களின் செயல்பாடுகளை பின்வருமாறு கூறலாம்:

  1. விக்கி சென்று உலாவுதல்
  2. பயனர் கணக்கு ஏற்படுத்தல்
  3. கட்டுரை தொகுத்தல், வகுத்தல்
  4. கலந்து உரையாடல்
  5. உதவி, பயன்பெற்று மகிழ்தல்

எல்லோரும் கணக்கு ஏற்படுத்தி பங்களிக்கமாட்டார்கள். சிலர் தமது உண்மை அடையாளங்களை தர விரும்ப மாட்டினர். அவை விக்கிக்கு உடன்பாடான செய்ல்பாடுகளே என்பதையும் தெரியபடுத்தலாம்.


விக்கியின் பயனையும், தரத்தையும் உயர்த்த பின்வருவன ஒவொரு கட்டுரையிலும் சேர்க்கபட்டால் நன்று.


  1. துணை நூல்கள்
  2. வெளி இணைப்புகள் (அதே தலைப்பை கூகிளில் இட்டு, தெரிந்து, இணைப்புக்களை தரலாம்.)
  3. வகைப்படுத்தல் (குறுங்கட்டுரையோ, கட்டுரை எழுதும் பொழுதே பக்க வகை செய்தல் சிறப்பு)


விக்கி நடை, நடுநிலமை பற்றிய வழிகாட்டல்கள் விரிவுபடுத்தப்படவேண்டும். உள் இணைப்புக்களின் முக்கித்துவம் பற்றியும் பரந்த புரிதல் வேண்டும். காலப்போக்கில் ஆங்கில விக்கி போன்று, மேலோட்டமான கட்டுரைகளையும் (over view), நுட்பமான கட்டுரைகளையும் (detail content) வேறுபடுத்தி உள் இணைப்புக்களின் எண்ணிக்கை, மற்றும் கட்டுரை உள்ளடக்கம், நோக்கம் அமைய வேண்டும். உதாரணமாக, இலங்கை பற்றிய ஒரு பரந்த அறிமுக கட்டுரை இயன்றவரை தமிழ் விக்கியில் உள்ள பல இலங்கை பற்றிய தகவல்களுடன் ஒரு இணைப்பை தொடர தக்கவாறு எழுதப்பட்டிருந்தால் நன்று.


பின்வருவன விக்கி நல்நடத்தைகள் அல்லது சிறந்த செயல்பாடுகள் எனலாம்:


நடு நிலமை இல்லை என்று வார்ப்புருவை கட்டுரையில் இட்டுவிட்டு, விளக்கம் தரமால் போனால் அதை எவ்வாறு அணுகுவது. விளக்கம் கோரி பார்க்கலாம், அப்படியும் கிடைக்கவிட்டால் அந்த வார்புருவை எடுத்துவிடலாம் தானே?


தலைப்பை மாற்றும் பொழுது, விளக்கம் தந்து மாற்றுவது நன்று.


தமிழில் பல் துறை தகவல் சேமிப்புக்கு, பகிர்வுக்கு என முன்னெடுக்கப்பட்ட பல முயற்சியகளின் பின்னடைவில்தான் தமிழ் விக்கிபீடியா கட்டமைக்கப்படுகின்றது என்பது தெளிவு படுத்தப்படவேண்டும். இது ஒரு கூட்டு செயல்பாடு, கூட்டு மதிநுட்ப உருவாக்கம், பகிர்வு, பாதுகாப்பு என்பது தெளிவுபடுத்தபட வேண்டும்.


சில செயல்பாடுகள் பலர் பங்கு பெறும் பொழுது தரம் குறைந்து, நோக்கம் சிதறி போய்விடும். அனால், பலரின் பயன்பாட்டில், பங்களிப்பில் தமிழ் விக்கிபீடியா முன்னோக்கி செல்லும் என்பதை மற்றய விக்கிபீடியாக்களின் அனுபவங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.


இறுதியாக, மேலே சில குவியப்படாத, ஒழுங்குபடுத்தப்படாத சிந்தனைகளையே பகிர்ந்தேன். இவை பற்றி உங்களின் கருத்துக்கள் எதுவும் இருந்தாலும், தெரிவியுங்கள். --Natkeeran 21:26, 29 ஆகஸ்ட் 2005 (UTC)

நல்ல கருத்துக்கள்.
கணக்கு ஏற்படுத்தாமலும்கூட பங்களிக்கலாம். இருப்பினும் "கவனிப்புப் பட்டியல்", "வாக்களிக்கும் உரிமை" போன்ற வசதிகள் தேவையெனில் நீங்கல் கணக்கும் ஏற்படுத்தலாம் என்று ஆங்கில விக்கியின் இந்த வார்ப்புருவில் உள்ளதைப்போல் கூறலாம்.
இங்கே நீங்கள் குறிப்பிட்ட அனைத்து கருத்துக்களுடனும் எனக்கு உடன்பாடு உண்டு. -- Sundar \பேச்சு 13:44, 30 ஆகஸ்ட் 2005 (UTC)


நற்கீரன், கட்டுரைகள் எழுதுவதோடு நில்லாமல் விக்கிபீடியாவின் ஒட்டு மொத்த முன்னேற்றத்தில் நீங்கள் காட்டும் முனைப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி. நீங்கள் சொன்னதற்கேற்ப புதுப்பயனர் பக்கத்தையும் எப்படி பங்களிக்கலாம் பக்கத்தையும் விரிவு படுத்த முயல்கிறேன். நீங்களும் செம்மைபடுத்தலாம். இது குறித்து பிற பயனர்களின் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன். ஆதாரம் உள்ள பட்சத்தில் அல்லது ஆதாரம் அவசியம் தேவைபடும் கட்டுரைகளில் அவற்றை சேர்க்க வேண்டியது அவசியம் தான். இது குறித்து நடைக்கையேட்டிலும் சிறந்த கட்டுரை எப்படி எழுதுவது கட்டுரையிலும் சேர்ப்போம். ஆனால், மிக மிகப் பயனுள்ளதாயும் அதிகாரப்பூர்வாமானதாயும் இல்லாத வெளி இணைப்புகளை தருவதில் எனக்கு உடன்பாடில்லை. இணையம் பயன்படுத்தும் அனைவருக்கும் தேடு பொறிகளை பரிச்சயமான ஒன்றே. ஆகவே அத்தேடு பொறிகள் தரும் முடிவுகளை மெனக்கெட்டு நாம் வெளி இணைப்புகளில் சேர்க்க அவசியமில்லை எனக் கருதுகிறேன். பிறகு, உங்கள் மற்றும் சுந்தரின் ஆலோசனைக்கேற்ப template:anonymous வார்ப்புருவை செம்மைப்படுத்தியுள்ளேன். பயனர் கணக்குள்ள வழமையான பயனர்களை தவிர்த்த மற்ற அனாமதேய பயனர்களிடம் நாம் விக்கி நன்னெறிகளை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, அவர்கள் விளக்கம் தராமல் செய்யும் விமர்சனங்கள், திருத்தங்களை அதிகம் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்கள் செய்த விமரிசனத்தில் உண்மை இல்லை என்று உறுதி செய்யு கொள்ளும் பட்சத்தில் அவர்கள் செய்த தொகுப்புகளை முன்னிலைப்படுத்தலாம். எப்படி அந்த விமரிசனத்தில் உள்ள பொய் அல்லது மெய்யை உறுதி செய்தீர்கள் என்பதை எடுத்துக்கூறி பேச்சுப்பக்கத்தில் தன்னிலை விளக்கம் அளிக்கலாம். (சரியான விளக்கம் அளிக்காமல் கதிர்காமர் பற்றிய கட்டுரையில் ஒருவர் சில மாற்றங்களை செய்தார். அது குறித்து தான் நீங்கள் இந்த கருத்தை பகிர்ந்து கொண்டீர்கள் என நம்புகிறேன்). இது வரை வருகை தந்துள்ள பயனர்களால் விக்கிபீடியாவின் தரம் அதிகரித்து உள்ளது என்பது தான் என் கணிப்பு. அவசியப்படும் போது பிழையான திருத்தங்களை கண்காணித்து நீக்கி வருகிறோம் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்--ரவி (பேச்சு) 17:31, 4 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

சுந்தர், ரவி கருத்துக்களுக்கு நன்றி. எனது பதில் கருத்துக்களை பின்னர் பகிர்கின்றேன். --Natkeeran 21:04, 4 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]


கொள்கைப் பக்கங்கள்

[தொகு]

நான் ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து சில கொள்கைப் பக்கங்களை இங்கு பதிவேற்றியுள்ளேன். அவற்றை நாம் மொழிபெயர்க்கவும் தெளிவாக்கவும் வேண்டும். அதே நேரம்,

  • விக்கிபீடியா:நடுநிலைக் கோட்பாடு போன்ற சிலவற்றைத் தவிர எந்த ஒரு கொள்கையும் இறுதியானதல்ல; நம் பொதுஅறிவைப் பயன்படுத்தி சூழலுக்கேற்ப அக்கொள்கைகளைப் பயன்படுத்த வேண்டும்.
  • ஆங்கில விக்கிபீடியவில் உள்ள பல கொள்கைகள் தமிழ் மொழிக்கும் இங்குள்ள பண்பாடுகளுக்கும் பொருந்தாது. அவ்வாறு இருப்பின் அவற்றை நாம் வசதிக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
  • மேலும் பல கருத்துக்கள் இருக்கலாம். மற்ற பயனர்களின் கருத்துக்களை எதிர் நோக்குகிறேன்.

-- Sundar \பேச்சு 10:02, 12 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]


விக்கிபீடியா கொள்கைகள் - உறுதியான சில உண்டு


விக்கிபீடியா இறுதியான கொள்கைகள் அற்றது என்பது முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அல்ல. ஆங்கில விக்கிபீடியா பிரிற்ரானிக்கா, என்காற்ரா, IEEE தகவல் தரவு தளங்கள் போன்ற கட்டண தரவு தளங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, மாறுபாட்டை அலசி, கொள்கைகள் எதை நோக்கி அமைகின்றன என்பதை எடுத்துரைக்கலாம்.


எனது அவதானிப்பில் பின்வருவன தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள் என கொள்ளலாம்.

1. நடு நிலமை (NPOV)
2. அனைவருக்கும் அழைப்பு, அதாவது யாரும் தகுந்த மேன்படுத்தலை செய்யலாம் (inclusiveness)
3. கட்டற்ற படைப்புக்கள் (Free Creations)
4. திறந்த செயல்பாடுகள், உரையாடல்கள், நல் நம்பிக்கை (Open or Transparant Processes)
5. கூட்டு மதிநுட்ப உருவாக்கம், செயல்பாடுகள் (Co-creation, Co-intelligence)
6. தனித்துவம்: தமிழ் விக்கிபீடியாவின் தனித்துவம் (Originality)
7. பன்முக தன்மை அல்லது பண்பு (Universal Spirit)

--Natkeeran 18:35, 13 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

வரவேற்கத்தக்க கருத்துக்கள். இவற்றின் முன்வடிவுகளை விரைவில் உருவாக்க வேண்டும். -- Sundar \பேச்சு 07:22, 14 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

நற்கீரனுடைய அவதானிப்புகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவை. அவற்றை நாங்கள் செயல் படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டுமென்பதிலும் ஐயம் இல்லை. சுந்தர் முன்னர் குறிப்பிட்டபடி ஆங்கில விக்கிபீடியாவின் எல்லாக் கொள்கைகளும் தமிழ் விக்கிபீடியாவுக்கு அச்சொட்டாகப் பொருந்தா என்பதும் சரிதான். அத்தகையவற்றையும் இனங்கண்டு எங்களுடைய நிலைமைகளுக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ளவும் வேண்டும். Mayooranathan 18:08, 14 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

தன்னிச்சையான கட்டுரைத் தலைப்பு மாற்றங்கள்

[தொகு]

அண்மைக் காலங்களில் சில கட்டுரைகளின் தலைப்புகள் தன்னிச்சையாக மாற்றப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாண அரசு என்ற கட்டுரையின் தலைப்பு, யாழ்ப்பாண இராஜதானி என்றும், இலங்கை வம்சாவழித் தமிழர் என்ற கட்டுரை இலங்கை தமிழர் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது உரிய முறையில் செய்யாததால், கட்டுரையின் பழைய வரலாறு எதுவும் புதிய பக்கத்துக்கு மாற்றப்படாமல் பெயர்மாற்றம் செய்தவர் இக்கட்டுரையைப் புதிதாக எழுதியது போல் உள்ளது. இவ்வாறு பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்ற கருத்து உடையவர்கள் ஒரு முறையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். கட்டுரைகளின் தலைப்புப் பிழையானது அல்லது வேறு தலைப்புப் பொருத்தமானது என்று கருதினால், தயவுசெய்து அதைப் பேச்சுப் பக்கத்தில் கலந்துரையாடுங்கள். ஏற்றுக்கொள்ளப்பட்டால் நிர்வாகி தரத்திலுள்ளவர்கள் அதை உரிய முறையில் வரலாற்றுடன் சேர்த்து மாற்றுவார்கள். யாழ்ப்பாண அரசு என்ற தலைப்பு காரணத்துடன் தான் கொடுக்கப்பட்டது. இராஜதானி என்பது தமிழ்ச் சொல் அல்ல. வேறு தமிழ்ச் சொல் இருக்கும்போது பிறமொழிச் சொற்களைத் தவிர்த்தல் என்ற தமிழ் விக்கிபீடியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையின் அடிப்படையில்தான் அரசு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இது போலவே இலங்கையில் குடியுரிமை உள்ள அனைத்துத் தமிழரும் இலங்கைத் தமிழரே. ஆனால், இலங்கையில் வம்சாவழியாக வாழும் தமிழருடையதும், பதிவுமூலம் குடியுரிமை பெற்ற தமிழர்களினதும், வரலாறு, பிரச்சினைகள், வாழிடம் போன்ற பல அம்சங்களில் வேறுபாடுகள் இருப்பதனால் இரண்டு பிரிவினரைப் பற்றியும் தனித்தனி கட்டுரைகள் எழுதப்படவேண்டும் என்பதனாலேயே அதிகாரபூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப் படுகின்றபடி வம்சாவழி என்னும் சொல் சேர்க்கப்பட்டது. எனவே இனி மேல் இவ்வாறு செய்யுமுன் உரிய முறையைக் கடைப்பிடிக்கவும். Mayooranathan 18:58, 14 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

மயூரநாதன் உங்களுடைய அவதானிப்புகள் சரி. லைடன் தீவு ஏன் உபயோகிக்கப்பட்டது என்பது உரையாடல் பக்கத்தில் விளக்கப்பட்டிருந்தும், யாரோ வேலணைத்தீவு என்று விளக்கம் தரமால் மாற்றி விட்டனர். உத்தியோக பூர்வமாக அவ்வாறு வழங்கப்படுவதால், அதைப்பற்றி நான் எதுவும் கூறவில்லை. ஆனால், அந்த உரையாடல் பகுதிகள் விக்கியின் நினைவகத்தில் சிக்கி விட்டது. தகுந்த விளக்கம் தந்து மாற்றுவதில் ஆட்சோபனை இல்லை. தமிழ் விக்கிபீடியா நற்பண்புகளில் ஒன்றாக இதை முன் நிறுத்த வேண்டும். --Natkeeran 20:05, 14 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

இப்படி மாற்றுவது புதிய அனுபவமில்லாத பயனர்கள்தான். யாரும் ஒரு வழுவை கண்டவுடன் உடனேயதை திருத்தவே முட்படுவர், ஆனால் புதிய பயனர்களுக்கு திருத்தும் விதம் தேரியாது. அதனால் கிலேசம் கொண்டுபயனில்லை. அப்படி கொள்வதால் அவர்கள் மனம் புன்பட்டு அவர்கள் மேலும் பங்களிப்பு செய்யாமல் விட்டுவிடுவர். இதனால் கேடு விக்கிபீடியாவுக்கு தான் (எனக்கு விக்கிபீடியாவில் 1வருடத்துக்கு மேற்பட்ட அனுபவம் உள்ளதால் நான் அறிவேன்.). இரத்தினவேலு பயனர் விவகாரம் ஒரு உதாரணம். மேலும் விக்கிபீடியா கலைக்களஞ்சியம் இதில் விளக்கம் தேடுபவர்கள் தங்களுக்கு தெரிந்த தமிழிலேயே தேடுவர், இதனால் நாம் தமிழ்ச் சொல் அல்ல என்று சுத்த தமிழ் என்று கூறி எழுதினால் அது தமிழுக்கே பாதகம். தமிழில் இல்லாத சொல்லுக்கு தமிழ் சொல் கண்டுபிடிப்பது நன்று, ஆனால் ஏற்கனவே உள்ள தமிழ்+வடமொழி கலப்பு சொல்லுக்கு புதிய சொல் காணமுயல்வது அபத்தம். தனி வடமொழி சொல்லுக்கு புதிய சொல் காணபதை நான் ஏற்கிறேன். - சுரேன்

Thoughts on Co-Intelligence

[தொகு]

“In a species equipped with language, an intuitive psychology, and a willingness to cooperate, a group can pool the hard-won discoveries of members present and past and end up far smarter than a race of hermits. Hunter-gathers accumulate the know-how to make tools, control fire, outsmart prey, and detoxify plants, and can live by this collective ingenuity even if no member could re-create it all from scratch. Also, by coordinating their behavior (say, in driving game or taking turns watching children while others forge), they can act like a big multi-headed, multi-limbed beast and accomplish feats that a die-hard individual could not. And an array of interconnected eyes, ears, and heads is more robust than a single set with all its shortcomings and idiosyncrasies. There is a Yiddish expression offered as a reality check to malcontents and conspiracy theorists: The whole world isn’t crazy.” Steven Pinker – “The Blank Slate” (page 63)

Tamil Wikipedia is “multi-headed, multi-limbed beast”, with “an array of interconnected eyes, ears, and heads.” Still, you might wonder what is the need for Tamil Wikipedia when there is the Wikipedia. I believe Tamil Wikipedia offers a Tamil World View which has its unique set of perspectives, experiences, knowledge and history that to loose it would be a loss to humanity.

--Natkeeran 23:26, 19 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

வார்ப்புரு-நகரம்

[தொகு]

நகரங்களுக்கு என்று ஒரு வார்ப்புரு உள்ளதா? இருப்பின் தெரியப்படுத்துங்கள்.--சிவகுமார் 16:17, 28 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]


விக்சனரிக்கு வாருங்கள்

[தொகு]

விக்கிபீடியா நல்ல முறையில் உரு பெற்று வருவதை மகிழ்வுடன் கவனிக்கும் வேளையில் உங்கள் அனைவரையும் தமிழ் விக்சனரிக்கும் வந்து பங்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தற்பொழுது அங்கு புதுப் பக்கங்களை உருவாக்குவது மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு நீங்கள் 5 நிமிடம் செலவிட்டாலே குறைந்தது 15 பக்கங்களை உருவாக்கிவிடலாம். இந்தப் பக்கத்தை பார்த்தால் நம்புவீர்கள் :) தற்பொழுது ஆங்கிலம்-தமிழ் அகராதி உருவாக்குவதில் நானும் சிவக்குமாரும் முனைந்துள்ளோம். காலப் போக்கில் பிற மொழி அகராதிகளும் உருவாக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கிறேன். அங்குள்ள இடைமுகத்தை இங்குள்ளது போல் இற்றைப்படுத்திய பின் விக்சனரி தளத்தையும் விக்கிபீடியாவை போல aggressiveஆக promote செய்ய வேண்டும் என்பது என் எண்ணம். விக்கிபீடியாவை விட விக்சனரி அதிக பங்களிப்பாளர்களை ஈர்க்கும் என்பது என் கணிப்பு. ஏனெனில் அங்கு பின்பற்றப்பட வேண்டிய நடை நெறிகள் மிகவும் குறைவு. குறைந்த பட்ச பக்க அளவுகளும் கிடையாது.--ரவி (பேச்சு) 20:31, 12 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

ஆம், விக்சனரியும் மிகவும் முக்கியமான ஒன்றுதான். புதிய புதிய பொருட்களும், கருத்துருக்களும், மிக வேகமாக நாளாந்தம் உருவாகிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில் அவற்றுக்குரிய தமிழ்ச் சொற்கள் உருவாவதில்லை. அவற்றுக்குரிய பிற மொழிச் சொற்களையே நாங்கள் சுலபமாக ஏற்றுக் கொண்டு விடுகிறோம். தமிழிலே புழங்கும் பிற மொழிச் சொற்களின் எண்ணிக்கை கன வேகத்தில் அதிகரித்து வருகிறது. விரைவில் நாங்கள் பேசும், எழுதும் தமிழில் 5%, 10% தமிழ்ச் சொற்களே இடம் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆகவே நிறையத் தமிழ்ச் சொற்கள் புதிதாக உருவாக வேண்டும். சொல்லாக்கத்துக்கான அடிப்படைகளையும் உருவாக்கவேண்டும். விக்சனரி இதற்கான தளமாக உருவாவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. ஆரம்பத்தில் தமிழ் விக்சனரியைத் தொடங்கி அதன் முதற்பக்க இடைமுகத்தை உருவாக்கியது நான் தான். என்னாலியன்றளவு சில சொற்களையும் சேர்த்திருக்கிறேன். அத்துடள் தமிழ் இணயப் பல்கலைக் கழகத்தின் (TVU) கலைச் சொல் அகராதி இல்லாதிருந்த அல்லது என்னால் அறியப்படாதிருந்த காலத்தில் விக்சனரியில் கலைச் சொல் அகராதி ஒன்றைத் தொடங்க எண்ணி சில ஆரம்ப நடவடிக்கைகளையும் எடுத்தேன். ஆனால் பின்னர் தமிழ் விக்கிபீடியாவில் அதிக நேரம் செலவு செய்ததால் விக்சனரியை அதிகம் கவனிக்க முடியவில்லை. இப்பொழுதும் தமிழ் விக்கிபீடியாவுக்காகக் கலைச் சொற்கள் தேடும் போதெல்லாம் விக்சனரியைப் பற்றி எண்ணுவதுண்டு. வரும் நாட்களில் அங்கும் சிறிது நேரம் ஒதுக்கலாம் என எண்ணியுள்ளேன். பார்ப்போம். Mayooranathan 08:43, 13 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

Firefox- விக்கிபீடியர்களுக்கான உலாவி....!!!!

[தொகு]

இன்றைக்கு மிக முக்கியமான ஒரு firefox நீட்சியினை கண்டுபிடித்தேன். இவ்வளவுகாலமும் விக்கிபீடியாவின் தொகுத்தலை இலகுவாக மேற்கொள்வதற்கு எதாவது மென்பொருள் கிடைக்குமா என தேடிவந்தேன். இன்றைக்குதான் அவ்வாறானதொரு மென்பொருள் firefox நீட்சியாக கிடைத்திருக்கிறது. எவ்வாறு நீங்கள் உரைச்செயலி ஒன்றில் இலகுவாக வடிவமைப்புக்குக்களை தொகுக்கிறீர்களோ அவ்வளவு இலகுவாக இந்த நீட்சியினை பயன்படுத்தி விக்கிபீடியாவின் தொகுத்தல்களை செய்யலாம். தமிழ் விக்கிபீடியாவுக்கும் இது அநுசரணை வழங்குகின்றது.

விக்கிபீடியா தொகுத்தலை மேலும் வினைத்திறன்மிக்கதாக்க அனைவருக்கும் இந்த நீட்சியினை பரிந்துரைக்கிறேன். --மு.மயூரன் 12:40, 22 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]


வகைப்படுத்தப்படாத பக்கங்கள்

[தொகு]

வகைப்படுத்தப்படாத பக்கங்கள் சமீபத்தில் இன்றைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை குறைந்திருக்கின்றன, நல்ல முன்னேற்றம் என்றே கருதுகின்றேன். எனினும், நன்கு அனுபவப்பட்ட பயனர்கள்கூட சில சமயங்களில் தங்கள் பதிப்புக்களை வகுக்க தவறிவிடுகின்றனர். இயன்றவரை சரியான பகுப்பில் சேர்க்க முனைவது வரவேற்கபடவேண்டியதொன்று. பகுப்புக்கள் இல்லாத சமயம் அவற்றை தகுந்தவாறு ஏற்படுத்தி கொள்ள் வேண்டும். குறைந்த பட்சம் ஒரு பொது பகுப்பில் சேர்பதும் நன்று. --Natkeeran 02:20, 23 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

300 பயனர்கள்

[தொகு]

தற்போது தமிழ் விக்கிபீடியாவில் மொத்தம் 300 பயனர்கள் உள்ளனர். :-) -- சிவகுமார் 07:37, 14 டிசம்பர் 2005 (UTC)

நன்று. இவற்றில் பலர் பங்களிப்புப் பிரமிடின் அடுத்தடுத்தக் கட்டங்களை அடைவர் என நம்புவோம். -- Sundar \பேச்சு 08:01, 14 டிசம்பர் 2005 (UTC)

யாரும் கலண்டர்களை தமிழ் படுத்த முடியுமெனின் முயற்சித்து பார்க்கலாம்!

[தொகு]

நான் மொழி பெயர்த்துள்ளேன். டிசம்பரை மட்டும் எழுத்துப்பெயர்ப்பு செய்துள்ளேன். ஏனெனில், 21 டிசம்பர், 2005 என்பதும் 21 மார்கழி, 2005 என்பதும் இருவேறு தேதிகளைக் குறிக்கும் அல்லவா? -- Sundar \பேச்சு 08:29, 21 டிசம்பர் 2005 (UTC)

சிறந்த விக்கிபீடியா வடிவமைப்பு எடுத்துகாட்டுகள்

[தொகு]
The above design templates look cool :) Please let us know if there is any mention of the excellence of these designs in any of the mediawiki pages. When article numbers and active contributors number grow, we shall also strive to achieve excellence in site design and make the look and feel of this site more professional.--ரவி 18:18, 23 டிசம்பர் 2005 (UTC)


எழுத்து தமிழ் பிளவுபட கூடுமா? - ரவிக்கு விரிவான பதில்

[தொகு]
பொதுவாக தமிழ் பேசப்படும் முறை வெவ்வேறாக இருப்பினும் உரைநடை வழக்கில் தூய்மையும் ஒரே மாதிரியையும் பின்பற்றுவது தமிழ் மொழியின் குணமாக இருக்கிறது. எனினும், தமிழர் பல்வேறு தேசப்பகுதிகளில் சிதறி வாழும் போது இம்மாதிரி நவீன சொற்களிலும் எழுத்துக்கூட்டல்களிலும் ஒருங்கிணைப்பு இல்லாமல் போகிறது. ஒவ்வொரு முறையும் இவ்வாறு இரு நாட்டுத் தமிழரும் கலந்து பேசி அனைத்துலக்க் கலைச்சொற்களை இறுதியாக்குவது நேரம் எடுப்பதாகவும் முடிவில்லா process ஆகவும் இருக்கிறது. இதனைத் தவிர்க்க வருங்காலத்தில் UK English, US English என்பது போல் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஈழத்தமிழ், தமிழ்நாட்டுத் தமிழ் என்பது போன்ற இரு வேறு எழுத்துக்கூட்டல் முறைமைகள், நாட்காட்டி முறைமைகள், கலைச்சொற்கள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? இது, ஏற்றுக் கொள்ளக் கூடிய முறைமை தானா என்பதில் தெளிவில்லை--ரவி 10:29, 28 டிசம்பர் 2005 (UTC)


தமிழ் உரைநடையில் ஒருபோக்கு இருக்கவேண்டும் என்பதில் வேற்று கருத்து இல்லை. வெவ்வேறு சொற்கள் இருப்பது தமிழின் பலமே, குறை அல்ல. எனினும் எங்கு தரப்படுத்தல் தேவைப்படுகின்றதோ, அங்கு தமிழ் நாட்டு அரசு வழிப்படுத்தல்/நெறிப்ப்படுத்தல் செய்வது தகும். தமிழ் நாட்டு அரசும் பிற தமிழ் அமைப்புகளும் சேர்ந்து நெறிப்படுத்தலே நன்று, அதுவே வழமை என்றும் நினைக்கின்றேன் (உ+ம்: லை, ளை ... எழுத்துமுறை தரப்படுத்தல்).


பெரும்பாலன தமிழர்கள் தமிழகத்தில் வசிக்கும் பொழுதும், பிற தமிழர்கள் தமது பண்பாட்டின் ஊற்று என்று தமிழகத்தை கொண்டிருக்கும் பொழுதும் தமிழ் நாட்டு அரசே இதற்கு தலைமைத்துவம் தர வேண்டும். எனினும், தமிழக பொது ஊடக துறை எழுத்து நடையையோ, அல்லது தமிழக பொது தமிழ் பயன்பாட்டு மொழி வழக்கங்களையோ எடுத்த போக்கில் பிற நாட்டு தமிழர்கள் ஏற்றுகொள்வது எவ்வளவு நல்லது என்பது தெரியவில்லை. காரணம் தமிழகத்தில் தமிழின் நிலை இழுக்காக இருக்கின்றது போன்ற ஒரு கருத்து ஈழத்தில் இருக்கின்றது. உண்மை நிலை அறியமுடியவில்லை.


நிலை எவ்வாறாகினும், இரு வேறு எழுத்துகூட்டல் முறைமைகள் தகவல் சார் எழுத்து தமிழில் இருப்பது இயன்றவரை தவர்க்கப்பட வேண்டும். தமிழ் உச்சரிப்பு சார்பு மொழி, ஆகையால் வெவ்வேறாக எழுத்துகூட்டினால் வெவ்வேறு கருத்துகளை சுட்டி நிற்கலாம்.


இத்தருணத்தில் சீன மொழியை ஒப்பிடுவது நல்லது. சீன மொழி உச்சரிப்பில் பல வகைப்படும். ஒரு பிரதேச மக்கள் உச்சரிப்பை வேற்று பிரதேச மக்கள் முற்றாக புரிந்து கொள்ளாத நிலையும் உள்ளது. எனினும் அவர்களது எழுத்து முறை அனைவராலும் புரிய கூடியது, தரப்படுத்தப்பட்டது. இது சீன மக்களின் கருத்து பரிமாற்றத்துக்கு முக்கியம்.


அவர்களது எழுத்து முறை தமிழ் போல் ஒலியமைப்பை அடிப்படையாக கொள்ளவில்லை. ஒப்பீட்டில் இது ஒரு முக்கிய வேறுபாடு, எனினும் தேவை ஒன்றுதான், சீரான கருத்து பரிமாற்றம் இடம்பெற வேண்டும். எனவே, எழுத்து தமிழ் மொழியை பிளப்பது எந்நிலையிலும் விரும்பத்தக்கது இல்லை, அப்படியான ஒரு சூழலோ தேவையோ இல்லை. தமிழ் எழுத்து மொழி ஒருங்கிணைப்புக்கு இணையம் மற்றும் தமிழ் விக்கிபீடியா ஆயுதங்களாக திகழும்.


தமிழ் விக்கிபீடியாவை பொறுத்தவரை ஸ்ரீநிவாசன் கருத்தையே முன்வைக்க விரும்புகின்றேன். யார் கட்டுரையை எழுதுகின்றார்களோ, அவர்களது எழுத்துகூட்டலை ஒருமையோடு பின்வற்றுவது தகும். தேவைப்படும் தருணங்களில் கலந்துரையாடியும் முடிவு செய்து கொள்ளலாம்.


மொழி என்பதே ஒரு முடிவில்லா செயல்பாடுதான், அதை தவிர்க்க முடியாது. அதை தவிர்க்க முற்பட்டு புது மொழிகளை தோற்றுவிப்பது சற்று முரணாக தோன்றுகின்றது. ரவி, தமிழ் இடம், காலம், சமயம், சாதி, அரசியல், வர்க்கம், இனம் கடந்து நிற்கின்றது, நிற்க வேண்டும். அதுவே அதற்கு அழகு. --Natkeeran 15:22, 28 டிசம்பர் 2005 (UTC)

இணையத்தில் துறைசார் தமிழ் புத்தகங்கள்

[தொகு]
இணைப்புகளுக்கு மிக்க நன்றி, நற்கீரன். இது போன்று அவ்வப்போது நீங்கள் திரட்டித் தருவன மிக்கப் பயனுள்ளவாய் இருக்கின்றன. இது போல் தமிழ்நாட்டு முழுப் பாடப் புத்தகமும் இணையத்தில் இடம் பெற்றால் அனைத்துலகத் தமிழருக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.

எழில்நிலா தளத்தில் விக்கிபீடியா கட்டுரைகள்

[தொகு]

எழில்நிலா தள முதற் பக்ககத்தில் யுனிக்கோடு குறித்த தமிழ் விக்கிபீடியா கட்டுரைகள் பிரதானமாய் தரப்பட்டுள்ளன. தமிழ் விக்கிபீடியா (த.வி) வளர வளர அது ஒரு நம்பகத் தன்மை கொண்ட தமிழ் மொழி மூலமான reference sourceஆக இருக்க வேண்டும் என்ற நம் விருப்பத்தையும் நோக்கையும் இங்கு கண்கூடாக காண இயல்கிறது. த.வி அதன் பிறப்பு நிலையில் இருந்து முன்னேறி அனைவரும் கவனிக்கவல்ல வளர்நிலையை எட்டியுள்ளதை உணர்ந்து அவரவர் துறை சார் கட்டுரைகளை உருவாக்குவதுடன் அவற்றின் தரத்தையும் பேண வேண்டிய அவசியத்தையும் இது உணர்த்துகிறது. வருங்காலத்தில் அறிவு புகட்டும் பல்வேறு தமிழ் ஊடகங்களுக்கும் த.வி ஓர் அறிவூற்றாக விளங்கும் என்ற நம்பிக்கையை இது பலப்படுத்துகிறது.--ரவி 14:46, 7 ஜனவரி 2006 (UTC)

தமிழ் பொங்கல் வாழ்த்துக்கள்

[தொகு]

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பப்படு திட்டமிட்டபடி நெல்லை அறுவடை செய்துள்ளார்; நானும் என் பங்கிற்கு புதுப்பானை செய்துள்ளேன். எவரேனும், கரும்பு வெட்டினால் பொங்கல் சமைத்து பொங்கல் திருநாளைக் கொண்டாடலாம். :-) -- Sundar \பேச்சு 08:51, 13 ஜனவரி 2006 (UTC)


அனைவருக்கும் என் இனிய தமிழ் பொங்கல் நல்வாழ்த்துக்கள். கரும்பு இப்பொழுதுதான் நடப்பட்டுள்ளது. கடையில் வாங்கித்தான் வெட்ட வேண்டும். பப்படு மற்றும் பிற பயனர் பயிரை மேலும் வளப்பார்கள். சுந்தர், நல்ல கற்பனை, ரசனை. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.--Natkeeran 16:51, 13 ஜனவரி 2006 (UTC)