கர்சன் பிரபு
Appearance
கர்சன் பிரபு (George Curzon, 1st Marquess Curzon of Kedleston) (11 சனவரி 1859 - 20 மார்ச் 1925), 6 சனவரி 1899 முதல் 18 நவம்பர் 1905 முடிய பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனராக பணியாற்றியவார்.[1][2]
பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்களில், வெல்லெஸ்லி பிரபு, டல்ஹவுசி பிரபு ஆகியோரின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் கர்சன் பிரபு ஆவார். அவர் ஒரு முழுமையான பேரரசு கொள்கையாளர். ஆட்சியை திறமையாக நடத்தும் நோக்கத்துடன் கர்சன் பிரபு ஆட்சியமைப்பை நன்கு சீரமைத்தார்.
இவர் 1905ல் வங்காள மாகாணத்தை இரண்டாக பிரித்ததால், இந்தியாவில் பெரும் கிளர்ச்சிகள் நடைபெற்றது. இவருக்குப் பின் வந்த இந்தியத் தலைமை ஆளுநர் மிண்டோ பிரபு 1905ல் பிரிக்கப்பட்ட வங்காள மாகாணத்தை மீண்டும் 1911ல் ஒன்றிணைத்தார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]