ஆசுத்தல்
ஆசுத்தல் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 28°38′02″N 77°03′11″E / 28.634°N 77.053°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
மாவட்டம் | மேற்கு தில்லி மாவட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,76,877 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | டிஎல்4 |
ஆசுத்தல் கிராமம் (Village Hastsal) என்பது இந்தியாவின் தில்லி மாநிலத்தின் மேற்கு தில்லி மாவட்டத்திலுள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊராகும்.
புராணக் கதை
[தொகு]இந்த பகுதி ஒரு காலத்தில் நீரில் குழித்து யானைகள் ஓய்வெடுக்கும் இடமாக இருந்ததாக ஒரு கதை இருக்கிறது. யானைகள் "ஆத்தி" என்றும், இடம் "தலம்" என்றும் இந்தியில் அழைக்கப்படுகிறது. எனவே, இந்த இடத்துக்கு ஆசுத்தல் - யானைகள் தங்கும் இடம்- என பெயர் வந்திருக்கலாம்.[1]
17 ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் ஷாஜகான் இங்கு ஒரு வேட்டையாடும் விடுதியை வைத்திருந்தார். 1650இல், அவர் தனது வேட்டை விடுதிக்கு அருகில் சிறு குதுப் மினாரை கட்டினார். [2] 55-அடி (17 மீ) உயரமுள்ள அதன் மினார் உள்ளூரில் ஆசுத்தல் கி லாத் அல்லது ஆசுத்தல் மினாரெட் என பிரபலமாக அறியப்படுகிறது. இது இப்போது கிராமத்தின் மூலையில் அமைந்துள்ளது. மேலும், லாத் (தூண்) என்றும் அறியப்படுகிறது. மினாரெட்டும் வேட்டையாடும் விடுதியும் இன்றும் உள்ளன. ஆனால் கைவிடப்பட்டு இடிந்து கிடக்கின்றன. மினாரட் வடிவமைப்பில் குதுப் மினாரை ஒத்திருக்கிறது.[2]
மக்கள்தொகையியல்
[தொகு]2001[update] India census,[3] கிராமத்தில் 176,877 என்ற அளவில் மக்கல் தொகை இருக்கிறது. இதில் 55% ஆண்களும், 45% பெண்களும் உள்ளனர். இதன் கல்வியறிவு விகிதம் 83.71 % ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 90.51% எனவும், பெண்களின் கல்வியறிவு 75.84% எனவும் இருக்கிறது. இதன் 18% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.
சான்றுகள்
[தொகு]- ↑ "Standing not so tall". The Hindu. 9 July 2010. http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/standing-not-so-tall/article507724.ece.
- ↑ 2.0 2.1 "Hastsal Minar: Capital's 'mini Qutub Minar' may soon get a much-needed facelift". indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 21 September 2018.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
வெளி இணைப்புகள்
[தொகு]- Hastsal Minar - 9 July 2010