விபூதி யோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விபூதி என்றால் “மகிமை அல்லது பெருமை” என்று பொருள். பகவத் கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் கிருஷ்ணரிடம், அருச்சுனன் அவரது விபூதிகள் (பெருமைகள்) பற்றி கேட்டான். அதற்கு கிருஷ்ணர் தன் பெருமைகளை அருச்சுனனுக்கு விரிவாக கூறினார். அவைகள் பின்வருமாறு:

  • நான் அனைத்து சீவராசிகளின் ஆத்மா; நண்பன்; தலைவன். அனைத்து சீவராசிகளின் படைப்பு-இருப்பு-அழிப்புக்கு காரணமாக இருப்பவன் நானே.
  • நான் உலகப் படைப்புக்கு முன், பகவானிடம் ஒடுங்கி இருக்கும் பிரகிருதியின் ’சம்யா’ அவஸ்தையாக இருந்தேன். முக்குணங்களில் தடுமாற்றம் ஏற்பட்டதும் கிரியா சக்தி மேலோங்கியுள்ள ‘சூத்ராத்மா’ எனப்படும் பிரம்மதேவன் நானே. ஞான சக்தி மேலோங்கியுள்ள ’சமஷ்டி புத்தி’ என்ற ’மஹத்’ தத்துவம் நானே. வெல்ல முடியாதவைகளில், நான் மனமாக இருக்கிறேன்.
  • வேதத்தை அறிந்தவர்களில் நான் ஹிரண்யகர்பன்; மந்திரங்களின் மூன்று எழுத்துகளுடன் கூடிய “ஓம்” என்ற ’பிரணவ மந்திரம் ’நானே. (அ+உ+ம என்ற) எழுத்துக்களில் நான் ’அ’காரம்; சந்தங்களில் மூன்று பாதங்களை கொண்ட ’காயத்ரீ’ ஆக உள்ளேன்.
  • சித்த புருஷர்களில் நான் ’கபிலர்’; பறவைகளில் ’கருடன்’; பிரசாபதிகளில் ’தட்சப் பிரசாபதி; பித்ருக்களில் ’அர்யமா’ ஆக இருக்கிறேன்.
  • சிறப்பு மிக்க யாணைகளில் நான் ஐராவதம்; வெளிச்சமும் வெம்மையும் தருபவைகளில் நான், சூரியன்; குதிரைகளில் நான் உச்சைசிரவஸ்; உலோகங்களில் தங்கம்; தண்டனை கொடுப்பவர்களுள் யமன்; விஷமுள்ள நாகங்களில் ‘வாசுகி’ எனும் நாகம்.
  • விஷ்ணு பக்தர்களால் பூஜிக்கத்தக்க வாசுதேவர், சங்கர்ஷணர், பிரத்யும்னர், அநிருத்தர், நாராயணர், ஹயக்கிரீவர், வராகர், நரசிம்மர், வாமனர், என்ற ஒன்பது மூர்த்திகளில், நான் வாசுதேவ மூர்த்தியாக உள்ளேன்.
  • பேரொளி வீசுபவைகளில் நான் சூரியன், சந்திரன், அக்னி மற்றும் நட்சத்திரங்களாக உள்ளேன்.
  • வேதங்களில் சாமவேதமாக இருக்கிறேன். உயிரினங்களில் ஞான சக்தியாக உள்ளேன். நீர் நிலைகளில் பெருங்கடலாகவும், கந்தவர்களுள் சித்ரரதன் ஆகவும், ஆயுதங்களில் வச்சிராயுதம் ஆகவும், சாஸ்திர முறையில் மகப்பேற்றுக்குக் காரணமான மன்மதன் ஆகவும், நீர்வாழ் உயிரினங்களுக்கும், நீர் தேவதைகளுக்கும் நான் வருணன் ஆகவும், பறவைகளில் கருடன் ஆக உள்ளேன்.

ஆதார நூல்[தொகு]

பகவத் கீதை, அத்தியாயம் 10, விபூதி யோகம், சுலோகம் 20 முதல் 39 முடிய.

வெளி இணைப்புகள்[தொகு]

  • விபூதி யோகம் தமிழில் கேட்க [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விபூதி_யோகம்&oldid=2120517" இருந்து மீள்விக்கப்பட்டது