உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:சென்னை தமிழ் விக்கிப்பீடியா அறிவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுக்கு வழி:
WP:2009Chennai

சென்னை விக்கிப்பீடியா அறிவகம் (Chennai Wikipedia Academy) பற்றி அறிந்திருப்பீர்கள். அறிவகம் (Academy) என்பது அந்த அமைப்பையும், அவர்கள் நடத்து நிகழ்வையும் ஒருங்கே குறிக்கிறது. சென்னையில் விக்கிப்பீடியா நுட்பம் பற்றியும், அதில் பங்களிப்பது எப்படி என்பது பற்றிய அறிவையும் பரப்ப இந்த அமைப்பு முனைகிறது. இந்திய விக்கியூடகப் பிரிவை அமைப்பதிலும் அக்கறை காட்டுகிறது.

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பார்களில் ஒருவர் கிருபா சங்கர். அவரைத் தொடர்பு கொண்டோம். அவருடன் உதவியுடன் தமிழ் விக்கிப்பீடியா அறிவகம் (Tamil Wikipedia Academy) ஒன்றை சென்னையில் ஏற்பாடு செய்தோம். இதில் விக்கி பயனர்கள் ரவி, அருநாடன் ஆகியோர் கலந்து கொண்டு 15 பேருக்கு பட்டறை நடத்தினர். பட்டற்றை நன்றாக நடைபெற்றது.

படங்கள்

[தொகு]

பட்டறை பற்றிய விபரங்கள்

[தொகு]

நிகழ்ச்சி நிரல் (வரைவு)

[தொகு]
  • தமிழ் விக்கிப்பீடியா இதுவரை
  • தமிழ் விக்கிப்பீடியா இனி
  • தமிழ் தட்டச்சு (குறிப்பிடத்தக்க நேரம் இதற்கு ஒதுக்கப்பட தேவைப்படலாம்.)
  • விக்கிப்பீடியாவில் பயனர் எப்படி பங்களிக்கலாம்?
  • கட்டுரையாக்கம்
  • கட்டுரை மேம்படுத்தல்
  • மொழிபெயர்ப்பு
  • விக்கியாக்கம்
  • மேற்கோள் சேர்த்தல்
  • வகைப்படுதல்
  • இன்றைப்படுத்தல்
  • நிர்வாகம்
  • அறிமுகப்படுத்தல், தொடர்பாடல்
  • நிரலாக்கம்
  • வரைகலை
  • படம் சேர்த்தல்
  • கருத்து பகிர்வு
  • மெய்ப்பு பார்த்தல்
  • தமிழில் எழுதுதல்
  • கலைச்சொற்கள்
  • தமிழ் விக்சனரி - 100 000 சொற்கள்
  • தமிழ்க் கணிமையும் தமிழ் விக்கிப்பீடியாவும்
  • விக்கிப்பீடியாவை தம்மொழியாக்குதல் (Localization)
  • இந்தி பொறிமுறை மொழிபெயர்ப்பு, தமிழில் முடியுமா? (உள்ளடக்க உருவாக்கத்தில் இது உதவும்)
  • தமிழ் விக்கிப்பீடியா மீது விமர்சனங்கள்
  • ரவியின் கிற்றார் இசை :-)

பட்டறையில் நேரடியாக பங்குபெறும் தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள்

[தொகு]
  • ரவி
  • சுந்தர் (சில வேளை)
  • மயூரநாதன் (சில வேளை)
  • கணேஷ் (அருநாடன்)
  • பிரகாஷ்

நிகழ்வு பற்றிய கருத்துக்கள்

[தொகு]

இன்று மாலை, சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறையில் அருநாடனுடன் இணைந்து கலந்து கொண்டேன். வந்திருந்தார். 15 பேர் அளவில் வந்திருந்தனர். முதலில் விக்கிப்பீடியா என்றால் என்ன என்ற அறிமுகத்தில் தொடங்கி, ஒரு கட்டுரையை எப்படி எழுதுவது, திருத்தவது என்பது போன்ற அடிப்படை விதயங்களில் 2 மணி நேரம் பட்டறை நடந்தது. தமிழ்த் தட்டச்சு குறித்த பயிற்சிக்கு அரை மணி நேரம் எடுத்தது. படங்கள் கிடைத்தவுடன் இணைக்கிறேன்.

பட்டறை தந்த பாடங்கள்:

  • இணையம், விக்கிப்பீடியா, வலைப்பதிவுகள் மூலம் செய்த விளம்பரத்தில் 3,4 பேரே வந்திருந்தனர். கிருபாசங்கர் அவருடைய தொடர்புகள் மூலம் உள்ளூர் பத்திரிகையில் (வடபழனி டைம்சு என்று நினைக்கிறேன்) அறிவிப்பு விட்டிருந்தார். அதைக் கண்டே ஆர்வமுடைய நிறைய பேர் வந்திருந்தனர். அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு அச்சு ஊடகங்கள் மூலம் விரிவான அறிவிப்பும், விக்கிப்பீடியா sitenotice அறிவிப்பை நன்கு முன்கூட்டியும் பெரிய எழுத்துகளிலும் இட வேண்டும்.
  • 15 பேர் மட்டும் வந்தது பிரச்சினையில்லை. இருந்த இடம், கணினி வசதிகளுக்கு சரியாக இருந்தது. குறைவான பேர் என்பதால் ஊடாட்டம் நன்றாக இருந்தது. நிறைய பேர் என்றிருந்தால் சொற்பொழிவு மாதிரி ஆகி இருக்கும். ஒவ்வொரு பத்து பங்கேற்பாளர்களுக்கும் ஒரு பயிற்சியாளராவது இருந்தால் தான் நன்றாக இருக்கும். இன்று நானும் அருநாடனும் ஆளுக்கு சிலராகச் சொல்லிக் கொடுத்தோம். அப்படி இல்லாத பட்சத்தில் நிகழ்வைச் சிறிய அளவில் விளம்பரப்படுத்த வேண்டும்.
  • கிருபா அவரது அலுவலக இடத்தையே இதற்குப் பயன்படுத்தினார். இது போன்ற நிறைய சிறிய பயிற்சிப் பட்டறைகளை ஒவ்வொரு ஊரிலும் உள்ள பங்களிப்பாளர்கள் தாங்களே ஒருங்கிணைத்தால் நன்றாக இருக்கும்.
  • எல்லாரும் எழுதும் விக்கிப்பீடியா எப்படி நம்புவது என்ற கேள்வியே திரும்பத் திரும்ப கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி. இதற்கு நாம் ஒரு நல்ல பதிலைத் தயார் செய்து கொண்டு போக வேண்டும் :)
  • IIT மாணவர், நிதி நிறுவனத்தில் வேலை செய்பவர், அச்சுத் தொழிலில் இருப்பவர், குடும்பத் தலைவி, தகவல் தொழில்நுட்ப ஊழியர், கூட்டுறவுத் துறை ஊழியர், பொறியியல் கல்லூரி மாணவர் என்று பல வகையினரும் கலந்து கொண்டார்கள். --ரவி 17:30, 18 ஜனவரி 2009 (UTC)
  • சில கருத்துக்கள்:
  • விருப்பம் உடைய அனைவருக்கும் ஒரு கணக்கு ஏற்படுத்தி, சில அடிப்படைத் தகவல்களைப் பகிரலாம்.
  • தமிழ் தட்டச்சுக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது தேவை என்பது தெரிகிறது.
  • தகுந்த மேற்கோள் சுட்டுதல், பிறபயனர் திருத்தம் இவையே நம்பிக்கைக்கு ஆதாரம். ஆனால் சற்று அவதானத்துடனே பயன்படுத்த வேண்டும் எனபதைக் குறிப்பிட வேண்டும். நடுநிலமை கொள்கை என்றாலும் Bias, Imbalance இருக்கு என்பதை குறிப்பிடவேண்டும்; குறிப்பகா அரசியல்/சமூக அறிவியல்/சமயம் சார்த தலைப்புகளில்.
  • பிரசுரம் (pamplet) எதவாது விநியோகித்தீர்களா? (த.வி என்ன என்பதோடு, எப்படி என்பதை விளக்கி அமைந்தால் சிறப்பு)
  • நிகழ்த்துதல் பயன்பட்டதா?
  • அவர்களுக்கு மேலதிக உதவிகள் தேவைப்பட்டால், உங்களை அணுகக்கூடியதாக இருக்குமா?
  • அருநாடன் கலந்துகொண்டது சிறப்பு. --Natkeeran 17:49, 18 ஜனவரி 2009 (UTC)

15 பேர் கலந்து கொண்டது நல்ல தொடக்கம் என்பதில் ஐயமில்லை. கலந்து கொண்ட ஒவ்வொருவரும் மேலும் பலருக்குச் சொல்வார்கள் அல்லவா. இதனால் விக்கிப்பீடியாவின் அறிமுகம் பெருக வாய்ப்புக்கள் உண்டு. 15 பேருக்குத் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய அறிமுகம் ஏற்பட்டது ஒருபுறம் இருக்கப் பரப்புரை தொடர்பிலும் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு ஒரு தொடக்க அனுபவமாக இது அமைந்திருக்கும் என எண்ணுகிறேன். மயூரநாதன் 18:09, 18 ஜனவரி 2009 (UTC)

ஆம், அதி்லும் பல துறைகளில் இருந்து வந்திருந்தனர் என்று அறிந்து மகிழ்ச்சி. இப்பட்டறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டவற்றை இனிவரும் பரப்பு முயற்சிகளில் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். -- சுந்தர் \பேச்சு 04:51, 19 ஜனவரி 2009 (UTC)

நற்கீரன், மிகச் சிறிய பயிற்சி என்பதால் informalஆ, நண்பர்களுக்கு அருகில் இருந்து சொல்லித் தருவது போல் தான் கூட்டம் அமைந்தது. அதனால், powerpoint presentation, pampletகள் பயன்படுத்தவில்லை. அடுத்த முறை இவற்றை கவனத்தில் எடுப்போம். கலந்து கொண்டவர்கள் தொடர்பு விவரங்கள் பெற்று வந்துள்ளேன். கூடுதல் உதவிக்கு அவர்களை மின்மடல் மூலம் தொடர்பு கொள்வேன்.

மயூரனாதன், ஆம் நீங்கள் சொன்னது போல் அடுத்தடுத்த நிகழ்வுகளில் நாம் என்னென்ன கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு முன்னோட்டமாக இருந்தது. --ரவி 04:54, 19 ஜனவரி 2009 (UTC)


இவற்றையும் பாக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]