உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:நவம்பர் 14, 2010 சென்னை விக்கிப்பீடியா பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கித்திட்டங்களை அறிமுகப்படுத்தும் logicwiki
செங்கை பொதுவன்
மாகிர், தமிழ் விக்கித் திட்டங்களை அறிமுகம் செய்கிறார்

நவம்பர் 14, 2010 சென்னை விக்கிச் சந்திப்பில் இருந்து சில படங்கள்

பட்டறை பற்றிய விபரங்கள்

[தொகு]

நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள்

[தொகு]

சென்னையில் இந்நிகழ்வை நடத்துவதற்கான முனைப்பை மலையாள விக்கியரான தீனு செரியன் தூண்டி விட்டார். அதனை அடுத்த logicwiki நிகழ்வுக்கான இடத்தைப் பெறுவது தொடங்கி அனைத்து ஒருங்கிணைப்புகளையும் செய்தார்.

நிகழ்வு, காலை 10 தொடங்கி மாலை 5 வரை நடந்தது. முதலில் ஒரு சிறிய அறிமுகத்தை அடுத்து 1 மணி வரையில் விக்கி மாரத்தான் நடைபெற்றது. பிற்பகலில் விக்கி பற்றிய பொதுவான அறிமுகம், தமிழ் விக்கித் திட்டங்கள் பற்றிய அறிமுகம், மலையாள விக்கித் திட்டங்கள் பற்றிய அறிமுகம், பொதுவான கலந்துரையாடல் இருந்தது.

சென்னை, சேலம், வேலூரில் இருந்து மாணவர்கள், இலினக்சு ஆர்வலர்கள், ஆங்கில விக்கிப்பீடியர்கள் கலந்து கொண்டார்கள். மொத்தம் 45 பேர் வந்திருந்தனர். தமிழ் விக்கித் திட்டங்களில் இருந்து மணியன், மாகிர், logicwiki, செங்கை பொதுவன், சூர்யபிரகாசு, கி. கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.

75வது நிறைந்த செங்கை பொதுவன், தனது மனைவியுடன் வந்து நாள் முழுதும் நிகழ்வில் பங்கு கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது. பல அடிப்படையான விக்கி நுட்பக் கேள்விகளைக் கேட்டுத் தெளிந்து கொண்டார். பலருக்கும் விக்கிப்பீடியா, விக்கிநூல், விக்கிமூலம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு புரிவதில்லை. நாம் பக்கங்களை அழித்தாலோ நகர்த்தினாலோ அதற்கான காரணத்தை இனங்காண இயலாது திகைக்கிறார்கள். எனவே, புதுப்பயனர்களிடத்தில் நாம் இன்னும் கவனமாகவும் கனிவாகவும் இருக்க வேண்டியது புரிகிறது.

தமிழ் விக்சனரி 1,90,000+ சொற்களைச சேர்த்து உலக விக்சனரிகளில் ஒன்பதாவது இடத்தை எட்டியுள்ளதைப் பெருமையுடன் அறிவித்தோம். தமிழ் விக்கி செய்தி போன்ற திட்டங்களும் முனைப்புடன் இயங்குவது கண்டு மலையாள விக்கிப்பீடியர்கள் வியப்புற்றனர். புதிய பயனர்கள் தமிழ் விக்கியில் இலகுவாகப் பங்களிப்பதற்கான தங்களுடைய அனுபவம், தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வதாக மலையாள விக்கிப்பீடியர்கள் ஆர்வம் தெரிவித்தனர். வந்திருந்த அனைவருக்கும் இந்திய விக்கிமீடியா செய்தி இதழை அச்சிட்டு வழங்கினோம்.

--இரவி 07:12, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

சென்னை விக்கி சந்திப்பு தொடர்பான மேற்படி அறிக்கையையும் படங்களையும் பார்க்கும்போது விக்கித் திட்டங்களில் பலர் ஆர்வம் கொண்டிருப்பது புலனாகிறது. இத்தகைய சந்திபுக்களை மேலும் கூடிய ஆர்வலர்களுடன் ஒழுங்கு செய்யக்கூடிய வாய்ப்பும் தெரிகிறது. செங்கை பொதுவன் ஐயா அவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றிப் பங்களித்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி. இது தமிழ் விக்கிக்கு நல்ல உத்வேகத்தைக் கொடுக்கும். இக்கூட்டத்தை ஒழுங்கு செய்வதில் முனைப்புக்காட்டிய தினு செரியனுக்கும், "லாஜிக்விக்கி"க்கும், தமிழ் விக்கி சார்பில் பங்கு கொண்டு விளக்கங்கள் அளித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். -- மயூரநாதன் 08:36, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
45 பேர் வரை கலந்து கொண்டதை அறிந்து மகிழ்ச்சி. அதிலும் வெளியூர்களில் இருந்தெல்லாம் வந்திருப்பது விக்கிப்பக்கம் பலரும் ஆர்வம் செலுத்துவதை உணர்த்துகிறது. இனி தமிழ்நாட்டிலிருந்து இன்னும் பல நூறு பங்களிப்பாளர்கள் வருவதற்கு இது போன்ற சந்திப்புகள் மிகவும் பயன் அளிக்கும். இதை நடத்துவதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள். -- சுந்தர் \பேச்சு 10:52, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
மலையாள விக்கி எழுத்துரு,தட்டச்சு முறைகள் பற்றி கூறிய ஷிஜு. நிற்போர்: பிரதீக்,ரவி,ஸ்ரீகாந்த்

சற்று தாமதமாக தொடங்கினாலும் காலை வேளையிலேயே நிறைய பேர் வந்துவிட்டனர். சிலர் மடினி இல்லாமல் வந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. பெங்களூரில் சந்திப்புகளில் நிறைய பேர் மடினி கொண்டு வருவது போல சென்னையிலும் கொண்டு வருவார்கள் என எண்ணியது தவறு. ஏதேனும் ஓர் கல்லூரி சோதனை கூடத்தில் ஒருங்கினைந்திருந்தால் இதனை செய்திருக்கலாம்.சந்திப்பிற்கு முன்னர் தமிழ் பேப்பர் க்கு எழுதுவதாக எண்ணிய அறிவிப்பும், தமிழ் நிலப்படம் செய்வதற்கான வேலைகளும் அலுவலக பணிகளால் செய்ய இயலவில்லை.

என்னுடைய அறிமுக பேச்சை தொடர்ந்து மாகிர் அளித்த பேச்சு குறிப்பாக அனைவராலும் அறியப்படாத விக்கிசனரி,விக்கிமூலம்,விக்கிசெய்தி மற்ற விக்கி திட்டங்களை அறிமுக படுத்தியது மிகவும் நன்றாக அமைந்தது. என்னிடம் "ஏன் நீங்கள் / உங்களை போல் ஆங்கில விக்கியர்கள் தாய் மொழி விக்கிகளில் பங்களிப்பதில்லை?" என ரவி கேட்டார். பதிலுக்கு பின் சிறு விவாதம் நடைபெற்றது.காப்புரிமை,ஏனைய விக்கி கொள்கைகள் பற்றிய தெளிவு புது பயனர்களுக்கு வர, கண்டிப்பாக நாம் அதை எளிதில் புரியும் போல் அமைக்க வேண்டும், இதன் தேவை சந்திப்பில் அத்யாவசியம் என உணரப்பட்டது. தமிழ் விக்கிப்பீடியாவை பார்வையறோரும் பயன்படுத்துகிறார்கள் என ஒருவர் பகிர்ந்து கொண்டார்.

கூட்டம் முடிந்த பின் பெங்களூர் பயனர்கள்(டினு,சிசு,திசு,நான்) காரில் மற்றோரு சிறு கூட்டம் போட்டோம்.நள்ளிரவு வரை நீண்ட பயணத்தில் ஷிஜு தன் பெயரை ஏன் சிசு என த.விக்கியில் எழுதப்படுகிறது என கேட்டார்.நான் அவருக்கு கிரந்த எதிர்ப்பு கொள்கை,சமீப கிரந்த சர்ச்சை முதலியவை பற்றி விளக்கினேன்.அவர் அப்படியும் பெயர்களை மாற்றி எழுதுவதில் உடன்பாடு இல்லை என்றார். (தற்பொழுது எனக்கும் அதே உடன்பாடுதான்).சென்னையில் இருக்கும் ஆங்கில விக்கியர்கள்,சற்று ஏமாற்றம் தான், தமிழ் விக்கியர்களின் எண்ணிக்கை அதிகம் போல் இருக்கின்றது.விரைவில் அடுத்த கூட்டம் நடக்கும் என எதிர்பார்கிறேன். ஸ்ரீகாந்த் 19:51, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]