விக்கிப்பீடியா:கோயிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

தலைமையுரையாற்றும் பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி
தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்க வரவேற்புப் பதாகை

நோக்கம்[தொகு]

கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்துதல், தமிழ் விக்கிப்பீடியா குறித்த செய்முறை விளக்கம் அளித்தல், ஐயங்களைதல் என்னும் அடிப்படையில் இந்நிகழ்வு 11 அக்டோபர் 2013 (11.10.2013), வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 200 மாணவர்கள் பங்கேற்ற தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் கருத்தரங்கக்கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்வு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது, முதலாமாண்டு மாணவர் அருள் பிரான்சிஸ் வரவேற்புரை நிகழ்த்தினார், அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரிமுனைவர்.ச. மணி, முதல்வர் சிறப்புரை ஆற்றினார், சேலம், பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்து தலைமையுரை நிகழ்த்தினார், முதலாமாண்டு மாணவர் ப.சிவராமன் நன்றியுரை நிகழ்த்தினார், நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி மாலை 5.00 மணியளவில் நிறைவுற்றது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு[தொகு]

அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித்தொடர்பியல் துறை இப்பயிலரங்கை ஒருங்கிணைத்து.

படக்காட்சியகம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. தமிழகம்.வலை அறிவிப்பு
  2. விக்கி செய்தியில் வெளிவந்துள்ள செய்தி