விக்கிப்பீடியா:குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரும் திங்களன்று குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் பன்மொழி விக்கிப்பட்டறை ஒன்று நடைபெறவுள்ளது. இதில் நான் கலந்து கொண்டு தமிழ் விக்கித்திட்டங்களைப் பற்றிய அறிமுகத்தைத் தர விரும்புகிறேன். இதற்குத் தேவையான அண்மைய பரப்புரைக் கோப்புகளைச் சுட்டினால் பயனுள்ளதாக இருக்கும். வேறு பயனர்கள் கலந்து கொள்ள முடிந்தாலும் சிறப்பாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 07:01, 1 ஆகத்து 2012 (UTC)Reply[பதிலளி]


வணக்கம் சுந்தர். விக்கித் திட்டங்களை கூட்டாக்கத்துக்கு எடுத்துக்காட்டாக செய்யப்பட்ட ஒரு ppt உள்ளது. உங்களோடு பகிரப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். பார்க்க. --Natkeeran (பேச்சு) 13:08, 1 ஆகத்து 2012 (UTC)Reply[பதிலளி]


என்னிடம் பழைய கோப்பு ஒன்று உள்ளது. சிரீகாந்தும் ஒரு கோப்பைப் பகிர்ந்துள்ளார். இரண்டும் ஒன்றுதான் என நினைக்கிறேன். நன்றி நற்கீரன். -- சுந்தர் \பேச்சு 13:45, 1 ஆகத்து 2012 (UTC)Reply[பதிலளி]
மன்னிக்கவும். நான் தமிழில் தேவை என்று நினைத்துவிட்டேன். நான் கூறியது இங்கே: https://docs.google.com/presentation/d/1oa32y4NYhES494-f5qXiw5VWEsHT3gwnTQKeHZmg5LU/edit#slide=id.p

--Natkeeran (பேச்சு) 15:26, 1 ஆகத்து 2012 (UTC)Reply[பதிலளி]

நன்றி நற்கீரன். -- சுந்தர் \பேச்சு 17:18, 1 ஆகத்து 2012 (UTC)Reply[பதிலளி]
இங்குள்ளது போல நாமும் தொகுத்து வைத்தால் நல்லது. -- சுந்தர் \பேச்சு 13:33, 5 ஆகத்து 2012 (UTC)Reply[பதிலளி]
நற்கீரன், தமிழில் தான் வேண்டியிருந்தது. நீங்கள் பகிர்ந்த கோப்பு மிகவும் உதவும். முதல்பகுதி ஆங்கிலத்திலும் பிற்பகுதி தமிழ்/தெலுங்கு/கன்னட மொழிகளிலும் நடைபெறவுள்ளது. -- சுந்தர் \பேச்சு 13:40, 5 ஆகத்து 2012 (UTC)Reply[பதிலளி]
உங்கள் அறிமுகக் கோப்பை சிறு திருத்தங்களுடன், சற்றே இற்றைப்படுத்தி இங்கு இட்டுள்ளேன் நற்கீரன். -- சுந்தர் \பேச்சு 14:43, 5 ஆகத்து 2012 (UTC)Reply[பதிலளி]

நேற்றைய பட்டறையில் விக்கிப்பீடியாவைப் பற்றிய பரவலான அறிமுகத்தை ஏற்படுத்த முடிந்தது. தெலுங்கு விக்கியர்கள் அருச்சுனா இராவும், இராதாகிருட்டிணாவும், கன்னட விக்கியர் ஓம்சிவப்பிரகாசும் நானும் கலந்து கொண்டோம். காலையில் நடைபெற்ற பொது அறிமுகத்தில் துணை வேந்தரில் தொடங்கி ஏறத்தாழ ஐம்பது அறுபது ஆசிரியர்களும் ஆய்வர்களும் கலந்து கொண்டனர். தேர்வுகள் நடைபெற்று வந்ததால் மாணவர்கள் பெரிய அளவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், கலந்து கொண்ட பலர் மிகுந்த ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்டனர். பிற்பகல் முப்பது பேருக்கான ஏற்பாடு இருந்தது. பெரும்பாலானோர் தெலுங்கு விக்கிப் பயிற்சிக்காக வந்தனர். மூவர் (முனைவர்கள் செல்வம், பத்மநாபன், அருள்மொழி ஆகியோர்) ஆர்வத்துடன் கலந்து கொண்டு தொகுப்புக்களைச் செய்தனர். அருள்மொழிக்கு கணக்கு ஏற்படுத்தும் முன்னர் ஐ.பி. வரம்பை எட்டிவிட்டோம். வேறு வழி இருந்தாலும் அவர் பின்னர் கணக்கு ஏற்படுத்ததாகச் சொன்னார். மூவருமே சிறப்பான துறைகளில் (தமிழ்-தெலுங்கு மொழிபெயர்ப்பியல், தமிழ்-கன்னட இலக்கிய ஒப்பீடு, கணிப்பான் மொழியியல்) தேர்ச்சி பெற்றவர்கள். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான கு.பத்மநாபன் தமிழ் விக்கிப்பீடியாவை இ-சுப்பீக்கு (அதோடு மற்றொரு) மென்பொருளின் துணையுடன் பயன்படுத்துவதாக மகிழ்ச்சியுடன் சொன்னார். அவர் சில குழுமங்களில் பகிர்ந்தும் வருகிறார். இலக்கிய ஒப்பீட்டுக்காக அவர் தன்னார்வலர்களின் வாய்மொழிப் பதிவுகளைச் சேர்த்து வருகிறார். அவற்றை பொதுக்கோப்பகத்தில் சேர்க்கும்படி வேண்டியுள்ளேன். அவர் பங்களிப்பதற்கு வசதியாக மின்னஞ்சல் வழியாகக் கட்டுரைகளைப் பெற்று நாம் பதிவேற்றலாம். புதுக்கட்டுரை எழுதும்போது விக்கிநிரல்ச்சிக்கல் எழாது என்பதையும் விளக்கினேன். நான் அவருக்குத் தந்த (சிறப்பு) விளக்கத்தைத் தனது செல்பேசியில் பதிந்து அவரைப் போன்ற மற்ற பயனர்களுடன் பகிர உள்ளார். இவர்களைத் தவிர கன்னடத்துறையில் இருந்து தமிழ் மொழியை ஒப்பீடு செய்து வரும் முனை.செயலலிதா (யாப்பருங்கலக்காரிகையைக் கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார்), தெலுங்குத் துறையில் இருந்து தமிழ் மொழியை ஒப்பீடு செய்து வரும் முனை.சத்தியவாணி ஆகியோரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர். நாட்டாரியல் துறைத் தலைவர் பேரா.சுப்பாச்சாரியும், துணை வேந்தரும் பல வழிகளில் திராவிட மொழி விக்கிக்களுக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளனர். மிகவும் அன்பாக வரவேற்றனர். வாய்ப்பிருந்தால் ஏதும் திட்டத்தை முன்வைக்கலாம். நுட்ப அளவில் இப்போதுதான் வளர்ந்து வரும் கல்வி நிறுவனமாக இருந்தாலும் மொழியியலில் (குறிப்பாக ஒப்பீட்டு மொழியியலில்) செறிவான வளம் கொண்ட கல்வி நிறுவனம் திராவிடப் பல்கலைக்கழகம் எனத் தெரிகிறது. -- சுந்தர் \பேச்சு 15:47, 7 ஆகத்து 2012 (UTC)Reply[பதிலளி]

சுந்தர், நிறைவளிக்கும் பயிலரங்கு முயற்சி. இது போன்று மொழியை முதன்மையாக வைத்து இயங்கும் களங்களில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பரப்புதல் வேண்டும். நேரம் எடுத்து இதனைச் செய்தமைக்கு மிக்க நன்றியும் பாராட்டுகளும்--இரவி (பேச்சு) 19:00, 8 ஆகத்து 2012 (UTC)Reply[பதிலளி]
நன்றி இரவி. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மைசூர் - இந்திய மொழிகளுக்கான நடுவண் கழகம், சென்னை இரோசா முத்தையா நூலக ஆய்வு மையம், புதுச்சேரி பிரெஞ்சுக் கழகம் போன்ற அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்துதல் நல்லது. -- சுந்தர் \பேச்சு 11:27, 9 ஆகத்து 2012 (UTC)Reply[பதிலளி]